இன்றைய உலகில் திருச்சபை ஏட்டின் தோற்றம் இரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளியிட்ட16 ஏடுகளிலும் அளவில் பெரியது இன்றைய உலகில் திருச்சபை என்னும் ஏடுதான். 1962இல் சங்கம் கூடியபோது இத்தகைய ஓர் ஏடு வெளியிடும் எண்ணம் இருக்கவில்லை. சங்கம் நடந்து கொண்டிருந்த போது கருவாகி, படிப்படியாக உருவாகி வளர்ந்தது இந்த ஏடு. அதன் வளர்ச்சியைத் சற்றே விரிவாகக் காணல் நலம். 1959 சனவரி 25ஆம் நாள் திருத்தந்தை 23ஆம் யோவான் பொதுச்சங்கம் கூட்டப்போவதாக அறிவித்த நாளிலிருந்து சங்கம் கூடிய நாள் வரை (அக்டோபர் 11, 1962) 70 விவாத நகல்கள் தயாராகி இருந்தன. அவற்றுள் 7ஆம் நகல் சமூக ஒழுங்கமைப்பு என்ற தலைப்பில் அமைந்தது. பொதுநிலையினரின் திருத்தூதுப்பணி பற்றிய இன்னொரு நகலும் சமூகப் செயல்பாடு பற்றி அமைந்திருந்துது. எனினும் இந்த நகல்களின் பார்வை பெரும்பாலும் திருச்சபையின் உள்பிரச்சனைகள் பற்றியே இருந்தன. இந்நிலையில் பிரேசில் நாட்டைச் சார்ந்த ரியோ டி ஜெனரோ மறைமாவட்டத்துணை ஆயர் ஹெல்டர் கமாரா ஒர முற்போக்குக் கருத்தை முன்வைத்தார். குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதுபோலத் திருச்சபை தன்னுடைய சொந்தப் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே விவாதிப்பதற்கு மாறாகப் பரந்த உலகை வாட்டி வதைக்கும் முக்கியப் பிரச்சனைகளாகிய வறுமை, சமனற்றப் பொருள் பங்கீடு போன்றவை பற்றி ஆய்ந்து அவற்றிற்குத் தீர்வுகாணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவது இன்றையத தேவை என அவர் வலியுறுத்தினார். இதே பாணியில் சங்கத் தந்தையர் வேறு சிலரும் கருத்துத் தெரிவித்தனர். அவர்களுள் முக்கியமானோர் பெல்ஜிய நாட்டவரான கர்தினால் லெர்க்காரோ மற்றும் பிற்காலத்தில் 6ஆம் பவுல் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் மொந்தீனி ஆகியோர். உலகப் பிரச்சனைகள் பற்றித் திருச்சபை கூறுவது என்னவென்பதை விவாதிக்கும் நோக்குடன் ஒரு விவாத நகல் உருவாக்க 60பேரை உள்ளடக்கிய கலப்புக் குழு 1962 டிசம்பரில் ஏற்படுத்தப்பட்டது. முதலில் இக்குழுவில் பொதுநிலையினர் யாரும் இடம் பெறவில்லை. சில மாதங்களுக்குபின் 14 ஆண் பொதுநிலையினருக்கு இடம் அளிக்கப்பட்டது. பார்வையாளர்களாக அழைக்கப்பட்ட மூவரில் ஒரே ஒரு பெண் மட்டுமே இடம்பெற்றார். அவர்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திருமதி ரோஸ்மேரி கோல்டி என்பவர். உலகில் நிலவும் நடைமுறைப் பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதில் இவர்கள் பங்கேற்றனர். ஆனால் இறையியல் போதனை மற்றும் ஆய்வு பற்றிய பகுதியை விவாதிக்க அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அது திருப்பணி நிலையினருக்கு மட்டுமே என ஒதுக்கப்பட்டிருந்தது. |
ஒன்றன் பின் ஒன்றாக 6 நகல்கள் தயாரிக்கப்பட்டுச் சங்க அவையிலும் குழுக்கள் அளவிலும் விவாதிக்கப்பட்டன. 6ஆம் நகலில்கூடத் திருத்தம் செய்வதற்காகச் சுமார் இருபது ஆயிரம் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. காரசாரமாக விவாதிக்கப்பட்ட பொருள்கள் மூன்று: இறைமறுப்புக் கொள்கை, பிறப்புக் கட்டுப்பாடு, போர்.
கடவுளை மறுக்கும் பொதுவுடைமைக் கொள்கையைச் சங்கம் ஆடம்பரமாகக் கண்டனம் செய்ய வேண்டினர் சில ஆயர்கள். எப்பொதும் பிறரை குறைகூறுவதும் மனப்பான்மையைக் களைய வேண்டும் என்னும் கருத்து வென்றது. எனவே கண்டனப் போக்குத்தவிர்க்கப்பட்டு, நல்லெண்ணம் கொண்ட அனைவரோடும் உரையாடி ஒத்துழைப்பதற்கான மனநிலையைச் சங்கம் உயர்வாகப் போற்றியுரைத்தது.
பிறப்புக் கட்டுபாட்டைக் கண்டனம் செய்ய வேண்டினர் சில ஆயர்கள். அதற்கும் சங்கம் இணங்கவில்லை மாறாக, திருத்தந்தை ஏற்படுத்தியிருந்த ஓர் ஆய்வுக்குழு தன் முடிவுகளைத் தெரிவித்த பிறகு பிறப்புக் கட்டுப்பாடு முறைகள் பற்றி விரிவாகப் பேசலாம் எனச் சங்கம் முடிவெடுத்தது.
போர் பற்றிய விவாதமும் சங்கத்தில் முக்கிய இடம் பெற்றது. சங்கம் போருக்கு எதிராக கூறியக் கருத்துகளுக்குத் தகுந்த வரலாற்று ஆதாரம் இல்லை என்றுரைத்தனர் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் சிலர். ஆனால் சங்க அவையில் தக்க விளக்கம் அளிக்கப்பட்ட பிறகு, அதிலும் குறிப்பாகச் சங்கம் முடிவுறுவதற்கும் இருமாதங்களுக்கு முன்னால், திருத்தந்தை 6ஆம் பவுல் நியுயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றி வேண்டவே வேண்டாம், போரே இனி வேண்டாம்; அமைதி மட்டுமே மனித குலத்துக்கு வழிகாட்டியாக இருக்கமுடியம்! என உருக்கமாக உலைத்த வார்த்தைகளும் அமைதி பற்றிய அழுத்தமான செய்தி இன்றைய உலகில் திருச்சபை என்னும் ஏட்டில் இடம்பெற வழிகோலின.
இன்றைய உலகின் திருச்சபை என்னும் ஏடு முதலில் 17ஆம் விவாதத் தொகுப்பு என்ற பெயர் பெற்றிருந்தது. சங்கத்தின் இரண்டாம் அமர்வு முடிவுற்ற காலக்கட்டத்தில், 17 விவாதத் தொகுப்புகளில் திருவழிபாடு, சமூகத் தொடர்புக் கருவிகள் ஆகிய இரண்டும் வெளியிடப்பட்டன மரியா, அருள்பணி ஆகிய விவாதத் தொகுப்புகள் முறையே திருச்சபை, ஆயர்கள் பற்றிய விவாதத் தொகுப்புகளுடன் சேர்க்கப்பட்டன. எனவே இன்றைய உலகில் திருச்சபை 13ஆம் விவாதத்தொகுப்பு எனப் பெயர் பெறலாயியற்று. இப்பெயரே சங்க இறுதிவரை நிலைக்கவும் செய்தது.
சங்கத்தின் முதல் அமர்விலிருந்த நான்காம் அமர்வுரை வேவ்வேறு வடிவங்களில் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டது இந்த ஏடு. நான்காம் அமர்வில் 1965 செப்டம்பர் 20 ஆம் நாள் முதல் அக்டோபர் 8ஆம் நாள் வரை பரபரப்பான விவாதம் நிகழ்ந்தது. பல மாற்றங்களுக்குப்பின், பகுதி பகுதியாக நவம்பர் 15முதல் 20 வரைச் சங்கத் தந்தையரின் வாக்கெடுப்புக்கு இந்த ஏடு விடப்பட்டது; டிசம்பர் 6ஆம் நாள் நடைபெற்ற 168ஆம் பொதுக்கூட்டத்தில் (இதுவே சங்கத்தின் இறுதிப் பொதுக்கூட்டம்) 2111 வாக்குகள் பெற்றுத் தந்தையரின் ஒப்புதல் பெற்றது. எதிர் வாக்குகள் 251, செல்லா வாக்குகள் பெற்றுக் கொள்கைத் திரட்டாகப் பிரகடனம் செய்யப்பட்டது. எதிர்வாக்குகள் 75, செல்லா வாக்குகள்7.
புதிய அணுகுமுறை
இன்றைய உலகின் திருச்சபை என்னும் ஏடு புதியதொரு போதனையை வலையறுத்திட எழுதப்படவில்;லை, மாறா, சமூக வாழ்க்கை பற்றித் திருச்சபை வழங்கும் போதனையை ஒரு புதிய பார்வையில் விளக்கியுரைப்பது அதன் நோக்கம். மனித குலத்தின் எல்லப் பிரிவினைரையும் அழைத்துப் பேசுவதும் அவர்களோடு உரையாடலில் ஈடுபட்டு ஒத்துழைப்பை வளர்ப்பதும் அதன் அணுகுமுறை. மனித உலகத்தை இழிந்ததாகக் கருதுவதோ, மனித வாழ்க்கை அழிவை நோக்கிச் செல்கிறது என எண்ணுவதோ இச்சங்க ஏட்டின் பார்வையன்று. மாறாக, ஏட்டின் முன்னுரைப் பகுதியில் மனித மாண்பு விளக்கப்படுகிறது. மனிதர் ஒவ்வொருவரும் தனித்து இயங்காமல் ஒருவித கூட்டுப் பிணைப்பால் இணைந்திருத்தல், மனித உழைப்பும் செயல்பாடும் தன்னிலே பொருள் செறிந்ததாக இருத்தல், உலகில் திருச்சபை ஆற்ற வேண்டிய பணியின் தன்மை ஆகியவை எடுத்துரைக்கப்படுகின்றன.
ஏட்டின் இரண்டாம் பகுதியில் அவசரப் பிரச்சனைகள் சில அலசப்படுகின்றன. இப்பிரச்சனைகள் குடும்பம்-திருமணம், மனிதப்பண்பாடு, சமூக பொருளாதார வாழ்க்கை அரசியல் வாழ்க்கை, உலக அமைதியும் அதற்கு எதிரான போரும் ஆகியவை.
இந்த ஏடு மனித உலகைப் புதிய பார்வையில் நோக்குவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அதன் அணுகுமுறையில் புதிய இறையியல் பார்வையும் உண்டு. கிறிஸ்துவை மையமாகக் கொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயல்வதும், விலிய அடிப்படைக்கு முதன்மை கொடுப்பதும் இந்த ஏட்டின் ஓரு தனிப்பாணி மேலும், உலகப் பிரச்சனைகள் வளர்ந்து முற்றியதற்குத் திருச்சபையும் ஒருவிதத்தில் பொறுப்பாகும் என்பதை இந்த ஏடு ஏற்றிடத் தயங்கவில்லை . உலகில் கடவுள் நம்பிக்கை குறைவதற்குத் திருச்சபை உறுப்பினரும் ஒருவிதத்தில் பொறுப்பாவர் என இந்த ஏடு கூறுவது கவனிக்கத் தக்கது (காண் இதி19) ஆக, திருச்சபை மனித உலகை அணுகுவது வெற்றி மமதையோடு அல்ல, மாறாகத் தன் தலைவரும் வழிகாட்டியுமாகிய கிறிஸ்துவைப் பின்பற்றி உலகுக்குப் பணிபுரிவதே திருச்சபையின் நோக்கம் (காண் இதி 3).
மனித அனுபவம் மையமாகிறது
இன்றைய உலகில் திருச்சபை என்னும் ஏடு மனிதர் வாழும் உலகத்தை அதன் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு நிலைகளோடு இணைத்து ஆய்கின்றது. இத்தகைய ஆய்வுக்த் தேவையான கண்கள் இரண்டு. அவைதான் நற்செய்தியும் மனித அனுபவமும் (எண் 46). இன்றைய உலகு தேக்கநிலைக் கண்ணோட்டத்தை விட்டுவிட்டு இயக்காற்றல் கண்ணோட்டத்தைத் தழுவியுள்ளது (எண் 5). உலகைப் புதுப்பிக்கும் ஆவியின் ஆற்றலால் இயக்கப்படும் நாம் காலத்தின் குறிகளைத் துழாவி அறிந்து, நற்செய்தி மற்றும் மனித அனுபவ ஒளியில் அவற்றைப் புரிந்து செயல்பட அழைக்கப்படுகிறோம்.(எண்கள் 4,11).
இத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றுவதால் பல விளைவுக்ள ஏற்படுகின்றன. முதன்முதலில், வரலாற்றில் கடவுளின் வெளிப்பாடு தொடர்ந்து நிகழ்கிறது என்னும் உண்மை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும்,கடவுளின் ஆவியால் திருச்சபையும் மனித குலமும் வழிநடத்தப்படுகின்றன என்னும் உண்மை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் கடவுளின் ஆவியால் திருச்சபையும் மனித குலமும் வழிநடத்தப்படுகின்றன என்னும் அடிப்படையில் அவை தமக்குள்ளே இணைந்து பிணைந்திருக்கின்றன என்னும் உண்மை வெளிப்படுத்துகிறது. எனவேதான், திருச்சபை உலகிடமிருந்தும் மனித வரலாற்றிலிருந்தும் பலவற்றை கற்றுக் கொள்கிறது. உலகுக்குப் போதிப்பதுதான் தன் பணி என்னும் நிலை மாறி, கற்பதும் தன் கடமையே எனத் திருச்சபை உணர்ந்துகொண்டிருப்பதை இன்றைய உலகில் திருச்சபை தெளிவாகக் காட்டுகிறது(எண் 44)
மைய ஆய்வுப் பொருள்கள்
இந்த ஏட்டில் ஆயப்படுகின்ற பொருள்கள் பல. அவற்றுள் முக்கியமான சிலவற்றைக் கீழே குறிப்பிடுகிறோம். மதல் பொருள் பண்பாட்டு ஆய்வு எனலாம். காலத்தின் அறிகுறிகள் என்ற பெயரில் வரலாற்று நிலை விவரிக்கப்படுகிறது. மனித மாண்பு இந்த ஏட்டில் விளக்கம் பெறுகிறது. எல்லா மனிதரும் கடவுளின் உருவிலும் சாயலிலும் ஆக்கப்படட்வர்கள் என்பதால், கடவுள் அளக்கும் சுதந்திரம் அவர்களது பிறப்புரிமை. அறிவு, அறநெறி உணர்வு, அனைத்திலும் ஆழ்பொருள் தேடும் ஆர்வம், உள்ளத்தில் ஒளிரும் மனச்சான்று ஒளியில் வழிநடக்க முயற்சி- இவை எல்லாம் மனித மாணபின் கூறுகளும் வெளிப்பாடுகளும் ஆகும்.
மாண்புடன் ஆக்கப்பட்ட மனிதர்களின் இன்னொரு மக்கிய பண்பு அவர்களது சமூக வாழ்க்கை ஆகும். எவருமே தனித்த மரமாக வளர்ந்து தழைத்திட இயலாது; தனித்தீவாகக் கடலில் மிதப்பதும் இயலாது. மனிதலின் சமூகப் பண்பிலிருந்து பிறக்கும் முக்கிய விளைவு அவர்கள் அனைவரும் சமம் என்பது. மனித சமத்துவம் பற்ற்p இன்றைய உலகில் திருச்சபை விரிவாகப் பேசுகிறது. மனிதரின் அடிப்படை உரிமைகளைப் பொறுத்தவரையில், பால் இனம், நிறம். சமூகநிலை,மொழி, சமயம் ஆகியவை காரணமாகப் பாகுபாடு காட்டும் எந்த முறையையும் - அது சமூக அடிப்படையில் எழுந்ததாயினும் சரி, பண்பாட்டு அடிப்படையில் எழுந்ததாயினும் சரி வெறுத்து ஒதுக்கித் தள்ள வேண்டும்; அது கடவுளின் திட்டத்திற்கே எதிரானது(எண்29). பால் வேறுபாடு மற்றும் இன வேறுபாடு இவண் கண்டிக்கப்படுவது கருதத்தக்கது.
ஏட்டின் இரண்டாம் பகுதியிலும் வரலாற்று உணர்வு வெளிப்படுவதைப் பார்க்கிறோம். திருமணம் மற்றும் குடும்பம் இன்றைய உலகில் எவ்வாறு உள்ளன என் ஆயுமிடத்து, அவற்றைச் சட்ட அடிப்படையில் பார்ப்பதா, மனித உறவுகள் அடிப்படையில் பார்ப்பதா, என்ற விவாதம் எழுந்தது. திருமணம் என்றால் ஒரு சட்ட ஒப்பந்தம் என்னும் பார்வைதான் முற்காலத்தில் மேலோங்கியிருந்தது. ஆனால் சங்கம் திருமணத்தை அன்பச் சமூகம் என் வரையறுத்து, அதில் ஆள்நிலை அன்புறவு இன்றியமையா இடம் பெறுவதை ஏற்றது. இது திருமணம் மற்றும் குடும்பம் பற்றிய இறையியல், மற்றும் அறவியலில் ஒரு புதிய அணுகுமுறை எழ வழியாயிற்று.
பண்பாடு பற்றி இந்த ஏடு முதன் முறையாக விரிவாகப் பேசியுள்ளது(எண்கள் 53-62). உலகில் வாழும் அனைத்து மனிதரும் பண்பாட்டு வளர்ச்சி பெற உரிமை கொண்டுள்ளார்கள். ஆனால், அரசு ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் மக்கள்மீது திணிக்காமல், மக்கள் எல்லாரும் தங்களுக்கே இயல்பான விதத்தில் பண்பாட்டு வளர்ச்சிபெற வழிவகுக்க வேண்டும்.''பண்பாட்டு முறைகள் எத்தன்மை உடையனவாய் அமையவேண்டும் எனத் தீர்மானிப்பது பொது அதிகாரிகளின் வேலை அல்ல... பண்பாடு தனக்குரிய குறிக்கோளிலிருந்து பிறழ்ந்து அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்திற்கு எவ்விதத்திலும் அடிமையாக ஆக்கப்படாதிருக்கக் கவனமாய் பார்து;துக்கொள்ள வேண்டும்'' (எண் 59).
சமூக பொருளாதார வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை மற்றும் உலக அமைதி பற்றிப் பேசும் இந்த ஏடு உலகில் நிலவும் அநீதிகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறது. வளமை ஒருபுறம் இருக்க வறுமை மறுபுறும் வளர்ந்துகொண்டே செல்கிறது(எண்63); நாடுகளுக்கிடையே அநீதியான வணிக ஒப்பந்தங்கள் நிலவுவதால் ஏழை நாடுகள் பாதிக்கப்படுகின்றன (எண் 83); கடவுள் படைத்த உலகின் செல்வமும் வளமும் எல்லா மனிதருக்கும் கிடைக்க வேண்டும் (எண்69); சமூகப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் சாக்காகத் தனிச் சொத்துரிமையைப் பயன்படுத்தல் தவறு (எண் 69); பொருளாதாரத் துறையில் மதலீடடை விடவும் உழைப்புக்கே முன்னுரிமை தர வேண்டும் (எண்67); சிறுபான்மையினரின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் (எண் 73); அரசியலில் ஈடுபட முன்வருபோர் ''அநீதி அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தனியொருவருடைய அல்லது அரசியல் கட்சியினுடைய சர்வதிகாரப் போக்கு மற்றும் கொடுங்கோலாட்சிக்கு எதிராகவும் நேர்மையான் நடத்தையால், முன்மதியோடு போராட வேண்டும்'' (எண் 75); உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றால் மனிதரிடையே நீதி தழைத்தோங்க வேண்டும்; அமைதியைக் குலைக்கும் போர் என்னும் பீடை ஒழிய வேண்டும் என்றால் அதைப் புதுமுறையில் அணுக வேண்டும்(எண் 80).
ஏட்டின் வலுவான கூறுகளும் நலிவுக் கூறுகளும்
இந்த ஏட்டில் காணப்படும் வலுவான கூறுகள் சில ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டன. திருத்தந்தையர் 23 ஆம் யோவான் மற்றும் 6ஆம் பவுல் மனித குலத்தோடு இணைந்து பயணம் செய்யத் திருச்சபையை அழைத்தனர். அந்த அழைப்பு இன்றைய உலகில் திருச்சபை என்னும் ஏட்டில் தெளிவாக வெளிப்படுகிறது. இந்த ஏட்டின் தொடக்கச் சொற்றொடரே இதைக் காட்டுகிறது: ''மகிழ்வும் எதிர்நோக்ககும், ஏக்கமும் கவலையும், இன்றைய மனிதரின் வாழ்வில், குறிப்பாக ஏழைகள் மற்றும் கவலையும், இன்றைய மனிதரின் வாழ்வில், குறிப்பாக் ஏழைகள் பற்றும் துன்புறுபோர் அனைவரின் வாழ்விலும் உள்ளன. இம்மனிதரின் மகிழ்வும் எதிர்நோக்கும், ஏக்கமும் கவலையும், இன்றைய மனிதரின் வாழ்வில் குறிப்பபாக ஏழைகள் மற்றும் துன்புறுவோர் அனைவரின் வாழ்விலும் உள்ளன. இம்மனிதரின் மகிழ்வும் எதிhநோக்கும், ஏக்கமும் கவலையும் கிறிஸ்தவர்க்கும் முற்றிலும் உரியனவே; கிறிஸ்துவைப் பின்பற்றும் இவர்களின் இதயத்திலே உண்மையான மனிதக்கூறுகள் யாவும் எதிரொலிக்கத்தான் செய்கின்றன''(எண்1). திருச்சபை உலகின் ஓர் அம்சம், எனவே உலக மக்களின் நம்பிக்கையிலும் கவலையிலும், மகிழ்விலும் துயரத்திலும் திருச்சபையும் பங்கேற்கிறது. கிறிஸ்தவைப் பின்பற்றி உலகுக்கு பணிபுரிவதே திருச்சபையின் குறிக்கொள். ''இத்திருச்சபை மணணுலகப் புகழார்வம் எதுவாலும் உந்தப்படவில்லை; மாறாக,ஒரே ஒரு குறிக்கோளையே கொண்டுள்ளது: தேற்றுகிறவராகிய ஆவியார் காட்டம் வழியில், உண்மையை எடுத்துரைக்கவும், தண்டனை அளிப்பதற்கு மாறாக மீட்கவும். தொண்டு ஏற்பதற்கன்றி தொண்டு ஆற்றுவதற்குமே உலகிற்கு வந்த கிறிஸ்தவின் பணியைத் தொடர்ந்து நடத்துவதே அக்குறிக்கோள்''.(எண்3)
இந்த இரு மேற்கோள்களும் திருச்சபை பணிபுரியவும் உலகோடு உரையாடவும் மனமுவந்து முன்வருவதைத் தெளிவாக்குகின்றன. இங்கே வெற்றி மமதையும் இல்லை, குறைகாணும் போக்கும் இல்லை.
சமூக வாழ்க்கை பற்றித் திருச்சபை வழங்கும் அறநெறிப் போதனை வரலற்று உணர்வில் தோய்ந்ததாக, உலகப் போக்கின் உட்பொருளை அறிய முயல்வதாக, மனிதரின் ஆள்தன்மையை மதித்துச் செயல்படுவதாக அமைய வேண்டும் என்னும் அளவுகோலுக்கு இன்றைய உலகில் திருச்சபை என்னும் ஏடு ஓர் அரிய சான்று. மனித அனுபவத்திலிருந்தே தொடங்கி, இறைவார்த்தை ஒளியில் உலகப் பிரச்சினைகளையும் காலத்திக் அறிகுறிகளையும் ஆய்ந்து உணர்ந்து செயல்பாட்டுக்கான நெறிகளை வகுக்கும் புதிய முறை இந்த ஏட்டில் தெளிவாகக் காணக்கிடக்கிறது.
அனைத்து மனிதரும் சமம் என்னும் உண்மையையும் மனித வரலாறு தொடர்ந்து நிகழும் ஒரு பயணம் என்னம் உண்மையையும் கடவுள் எளியோர் மட்டில் தனி அன்பு கொண்டுள்ளார் என்னும் உண்மையையும் அடிப்படையாகக் கொள்ளும் போதும் இறையியல் ஏழைகளின் பார்வையிலிருந்து செயலாக்கம் பெறவேண்டும் என்பது புலனாகும். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாத விடுதலை இறையியல் என்னும் பெயரில் உருவான சிந்தனைக்கு இன்றைய உலகில் திருச்சபை ஏடும் ஓர் உந்துதலாக அமைந்தது. அதுபோலவே, மனிதரிடையே ஏற்றத் தாழ்வு பாராட்டுதல் தவறு என்னும் தத்துவத்தை வலியுறுத்தியதன் மூலம், இந்த ஏடு பெண்ணிய இறையியல் தோன்றி வளர ஓரளவு வழிவகுத்தது. மேலும், சங்கம் நடந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் இனம், சமயம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் மனிதரிடையே வேறுபாடுகள் கற்பிப்பது தவறு என்ற விழிப்புணர்வு கூர்மையடைந்து மனித உரிமைகள் எல்லா மனிதருக்குமே என்னும் இயக்கமும் உலக அளவில் வளரலாயிற்ளு.
இன்றைய உலகில் திருச்சபை என்னும் ஏட்டில் சில நலிவான கூறுகளம் உள்ளன என்பதை நாம் மறுக்கமுடியாது. உலக வரலாற்றிலும் மனித அனுபவத்திலும் நல்லவை பல உண்டு என்பதை வலியுறுத்தும் ஏடு, மனிதரிடையே நிலவும் தீமைகளையும் அநீதிப்போக்குகளையும் போதிய அளவு சுட்டிக்காட்டவில்லை என்பது ஒரு கறைபாடு. மனிதரிடையே வேறுபாடுகள் காண்பிப்பது தவறு என்பதை இந்த ஏடு பல இடங்களில் குறிப்பிடுகிறது(எண்கள் 29, 66); சமூக மாற்றம் தேவை எனவும் கூறுகிறது (எண்கள் 26, 42, 66, 85, 86). ஆயினும், மனிதர்கள் மாறிவிட்டால் சமூகம் மாறிவிடும் என்பது போன்ற ஒரு சிந்தனை ஆங்காங்கே தெரிகிறது. சமூகப் பாவம் பற்றியும் அநீதியான் அமைப்புகள் பற்றியும் அவற்றை ஒழித்து நீதியான அமைப்புகளை உருவாக்குவதன் தேவைபற்றியும் ஏட்டில் போதிய அழுத்தம் காணப்படவில்லை என்பது மற்றொரு குறைபாடு.
பெண்களின் உரிமை பற்றியும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் பற்றியும் இந்த ஏடு அதிகம் பேசவில்லை. அது போவவே திருச்சபையின் அமைப்புகளுக்குள்ளே பெண்களின் உரிமை எந்த அளவு மதிக்கப்படுகிறது என்பது பற்றியும் போதிய ஆய்பு இல்லை.
சமூக நீதி பற்றிப் பெசும்போதும் இந்த ஏட்டில் ஐரோப்பிய மற்றும் வட அடிமரிக்கப் பார்வைதான் மேலோங்குகிறது. பின்தங்கிய நாடுகளின் பார்வை அதிகம் இடம் பெறவில்லை.
மனித குலத்தை வாட்டுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்றால் மனித உள்ளங்கள் மாறவேண்டும், கிறிஸ்தவ மதிப்பீடகள் ஆங்கே வேரூன்றித் தழைக்க வேண்டும் என்தில் ஐயமிலிலை. என்றாலும். இத்தகைய வளர்ச்சிப் போக்கு மட்டும் போதாது,விடுதலைப் பார்வையும் வேண்டும். அதாவது , மனித சமுதாயத்தை ஒடுக்கிவருகின்ற அநீதியான அமைப்புகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த முற்போக்குச் சிந்தனை ஓரளவுக்குத்தான் இந்றைய உலகில் திருச்சபை என்னும் ஏட்டில் காணக்கிடக்கிறது. இந்த ஏடு வெளியான மூன்று ஆண்டுகளுக்குப் பின், 1968 இல் இலத்தீன் அமெரிக்கா ஆயர்கள் மெதயீன் நகரில் கூடி விடுதலை இறையியல் சிந்தனைக்கு உயிர் கொடுத்தர்கள். அச்சிந்தனை 1971ஆம் ஆண்டு உரோமை நகரில் நிகழ்ந்த ஆயர் மன்றப் பேரவைக் கூட்டத்தில் உலகளாவிய சிந்தனையாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.
இந்த இறையியல் சிந்தனை வளர்ச்சிக்கு வித்திட்டு உரமிட்ட பெருமை இரண்டாம் வத்திக்கான் சங்கத்தையும் அது வெளியிட்ட மிகப்பெரும் போதனைத் தொகுப்பாகிய இன்றைய உலகின் திருச்சபை என்னும் ஏட்டினையும் சாரும்.
பணி. வ.பவுல் லியோன்
கிறிஸ்தவ அறவியல் பேராசிரியர்
பப்ஃலே, நியுயார்க்
மே 2001
இன்றைய உலகில் திருச்சபை
பற்றி
இறை அடியாருக்கு அடியார் ஆயர் பவுல்
திருச்சங்கத் தந்தையரோடு இணைந்து
நினைவில் என்றும் நிலைக்குமாறு அருளிய
அருள்பணிக் கொள்கை விளக்கம்
முன்னுரை
1. மனித குடும்பம் முழுவதோடு திருச்சபை கொண்டுள்ள நெருங்கிய பினைப்பபு
மகிழ்வும், எதிர்நோக்கும்,ழூழூ ஏக்கமும் கவலையும், இன்றைய மனிதரின் வாழ்வில் குறிப்பாக ஏழைகள் மற்றும் துன்புறுவோர் அனைவரின் வாழ்வில் உள்ளன. இம்மனிதரின் மகிழ்வும் எதிர்நோக்கும், ஏக்கமும் கவலையும் கிறிஸ்தவர்க்கும் முற்றிலும் உரியனவே; கிறிஸ்துவைப் பின்பற்றும் இவர்களின் இதயத்தில் உண்மையான மனிதக் கூறுகள் யாவும் எதிரொலிக்கத்தான் செய்கின்றன. ஏனெனில் கிறிஸ்துவில் ஒருமிக்கப்டிபற்று, தந்தையின் ஆட்வியை நாடிச் செல்லும் பயணத்திலே தூய ஆவியால் வழிநடத்தப் பெறுபவர்களும், மனிதர் அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டிய மீட்பின் செய்தியைப் பெற்றுள்ளவர்களுமான மனிதர்களால் ஆகியதே கிறிஸ்தவ சமூகம். எனவேதான் கிறிஸ்தவ சமூகம், மனித குலத்தோடும் மனித குல வரலாற்றோடும் உண்மையிலே தான் நெருங்கி இணைக்கப்பெற்றுள்ளது என்பதை உணர்கிறது.
2. சங்கம் அனைத்துலக மக்களையும் அழைத்துப் பேசுகிறது
இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபையின் மறைபொருளை ஆழ்ந்து ஆராய்ந்த பின்னர், திருச்சபையின் பிள்ளைகளையும் கிறிஸ்துவின் பெயலைக் கூவியழைக்கும் அனைவரையும் மட்டுமன்றி, ஈண்டு உலக மனிதர் எல்லாரையும் அழைத்துப் பேசத் தயங்காது முன்வருகிறது. இன்றைய உலகில் திருச்சபையின் உடனிருப்பு மற்றும் செயல்பாடு பற்றிய தன் கருத்தைச் சங்கம் அனைவருக்கும் விளக்க விழைகின்றது.
சங்கம் இவ்வாறு தன் கண்முன் கொண்டுள்ளது மனிதர் வாழும் உலகமேயாகும்; மனிதப் குடும்பத்தையும் அது வாழ்ந்துவரும் அனைத்துச் சூழமைவுகளையும் இந்த மனித உலகு உள்ளடக்கும். உலகம்தான் மனிதகுல வரலாறு நிகழும் அரங்கு; அதுவே மனித குலத்தின் ஆற்றல், வெற்றி, தோல்வி ஆகியவற்றின் அடையாளங்களைத் தாங்கி நிற்பது. இவ்வுலகுதான் படைத்தவரின் அன்பால் ஆக்கப்பெற்றுக் காப்பாற்றப்பட்டு வருகிறது எனக் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இவ்வுலகு பாவத்தின் அடிமைத்தனத்திற்கு உள்ளாயிற்று என்பது உண்மையே; ஆனால் கிறிஸ்து தம்முடைய சிலுவை வழியாகவும், உயிர்த்தெழுதல் வழியாகவும் தீயோரின் வல்லமையை முறியடித்தார்; இவ்வுலகம் கடவுளின் திட்டப்படி மாற்றுருப் பெற்று நிறைவை அடையும் பொருட்டுக் கிறிஸ்து அதற்கு விடுதலையளித்தார்.
3. மனிதருக்குப் பணி செய்தல்
நாம் வாழும் இக்காலத்தில் மனித குலம் தன்னுடைய கண்டுபிடிப்புகளையும், தன் வல்லமையையும் கண்டு வியப்படைந்து நிற்கின்றது; ஆயினும் அதே மனித குலம் உலகின் இன்றைய வளர்ச்சிப்போக்கு, அனைத்துலகில் மனிதர் வகிக்கும் இடம், ஆங்குச் செயல்படுத்தவேண்டிய அவர்தம் பொறுப்பு, தனியாகவும் குழுவாகவும் அவர்கள் ஆற்றறும் செயல்களின் பொருள், இந்த உலகு மற்றும் மனிதரின் இறுதிக்கதி ஆகியவை பற்றிய கேள்விகளைக் கவலையுடன் அவ்வப்போது எழுப்புகிறது. இப்பொதுச் சங்கம் கிறிஸ்துவால் ஒன்று சேர்க்கப்பட்ட இறைமக்கள் அனைவரின் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்து அதை விளக்கிக் கூறுகிறது. இறைமக்களோ அனைத்துலக மனித இனத்தின் பகுதியாக வாழ்கின்றனர். ஆகவே, இம்மனித இனம் அனைத்தின் மட்டிலும் இறைமக்கள் கொண்டிருக்கும் பிணைப்பு, மதிப்பு, அன்பு ஆகியவற்றை எண்பித்திட, மேலே ஏற்கெனவே கூறிய வௌ;வேறு பிரச்சினைகள் பற்றி மனித குலத்துடன் உலையாடுவதே சிறந்த வழி எனச் சங்கம் கூறுகிறது. இப்பிரச்சினைகளுக்கு நற்செய்தியிலிருந்து பிறக்கும் ஒளியின் துணையால் பொதுச்சங்கம் விளக்கம் தரும்; மேலும் தூய ஆவியால் வழி நடத்தப்பட்டுத் தன்i நிறுவியவரிடமிருந்து திருச்சபை பெறும் மீட்பு ஆற்றலையும் இச்சங்கம் மனிதகுலத்தின் முன்வைக்கும். ஏனெனில் காப்பாற்றப்பட வேண்டியவர்கள் மனித ஆள்கள்; புதுப்பிக்கப்பட வேண்டியது மனித சமுதாயம். ஆகவே, இவண் நாம் அளிக்கவிருக்கின்ற விளக்கம் அனைத்திற்கும் மையமாக இருப்பவர்கள் மனிதரே ஆவர்; இம்மனிதரை அவர்தம் ஒருங்கிணைந்த நிலையிலுமமுழுமை நிலையிலும் அவண் காண்போம்; உடலும்; ஆன்மாவும், இதயமும் மனச்சான்றும், சிந்தனையும் உளமும் பொண்டவர்களாகக் காண்போம்.
ஆகவே இச்திருச்சங்கம் மனிதரின் மாண்புயர் அழைத்தலை அறிக்கiயிடுகிறது; இவ்வாறு, இவ்வழைத்தலுக்கு ஏற்ற முறையில் அமைந்த ஒரு சகோதரத்துவச் சமுதாயத்தை அனைத்து மனிதர் நடுவிலும் நிலைநாட்டுவதற்குத் திருச்சபையின் நேர்மையான அத்துழைப்பை இச்சங்கம் மித குலத்திற்கு வாக்களிக்கிறது. இத்திருச்சபைமண்ணுலகப் புகழார்வம் எதுவாலும் உந்தப்படவில்லை; மறாக, ஒரே ஒரு குறிக்கோளையே கொண்டுள்ளது; தேற்றுகிறவராகிய ஆவியார் காட்டும் வழியில், உண்மையை எடுத்துலைக்கவும்,1 தண்டனை அளிப்பதற்குமாறாக மீட்கவும், தொண்டு ஏற்பதற்கன்றி தொண்டு ஆற்றுவதற்குமே உலகிற்கு வந்த கிறிஸ்துவின்2 பணியைத் தொடர்ந்து நடத்துவதே அக்குறிக்கோள்.
தொடக்க விளக்கவுரை
இன்றைய உலகில் மனிதரின் நிலைமை
4. எதிர்நோக்கும் கவலையும்
மேலே குறிப்பிட்ட கிறிஸ்துவின் பணியைச் செயல்படுத்துவதற்குக் காலத்தின் குறிகளைத் துளாவி அறிந்து, நற்செய்தியின் ஒளியில் அவற்றின் பொருளை எல்லாக் காலக் கட்டங்களிலும் விளக்கி உரைப்பது திருச்சபையின் கடமையாகும். இவ்வாறு இக்கால வாழ்வு மற்றும் வரவிருக்கும் வாழ்வு ஆகியவற்றின் பொருள் பற்றியும், இவை இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும் மக்கள் என்றும் எழுப்பும் கேள்விகளுக்கு திருச்சபையால் ஒவ்வொரு தலைமுறைக்கும் அதற்கு ஏற்ற முறையில் விடையிறுக்க முடியும் எனவே, நாம் வாழும் உலகையும் பார்ப்புகளையும் ஏக்கங்களையும் பன்முறையும் உயிர்துடிப்புடன் வெளிப்படும் அதன் இயல்புப் பண்பையும் நாம் அறிந்து உணரவேண்டும். இன்றைய உலகின் முக்கிய கூறுகளுள் சிலவற்றைக் கீழ்வருமாறு விவரிக்கலாம்.
இன்று மனித சமுதாயம் தன் வரலாற்றிலேயே புதியதொரு காலக்கட்டத்தில் வாழ்ந்து வருகிறது; இக்காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த, விரைவான மாற்றங்கள் படிப்படியாக உலகனைத்திலும் பரவி வருகின்றன. மனிதர்களின் கூர்மையான அறிவாலும், ஆக்கும் ஆற்றலாலும் தூண்டப் பெற்றவையே இம்மாற்றங்கள்; ஆயினும், இவை மனிதரையேத் திருப்பித் தாக்குகின்றன் மனிதர்கள் எடுக்கின்ற முடிவுகளிலும், அவர்கள் தனியாகவும் குழுவாகவும் வெளிப்படுத்தும் ஏக்கங்களிலும் உலகு பற்றியும் தம்மைப் பற்றியும் அவர்கள் எண்ணுகின்ற மற்றும் செயல்படுகினற முறையிலும் தாக்கம் கொணர்கின்றன. ஆக, சமூகம் மற்றும் பண்பாடுகளில் உண்மையாக ஓர் உருமாற்றமே நிகழ்ந்து வருகிறது என நாம் கூற முடியும். இதன் விளைவாக மனிதரின் சமய வாழ்வுகூட தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
எந்த வளர்ச்சியிலும் ஒரு திருப்பம் இருப்பது போலவே மேற்கூறிய உருமாற்றமும் பல பெரும் இடர்ப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. எவ்வாறெனில், தமது ஆற்றலை இத்துணை விரிவாகப் பரப்பும் அதே நேரத்தில் மனிதர்கள் அந்த ஆற்றலை என்றும் தம் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவர இயலாது நிற்கின்றனர். தம் உள்ளத்தினுள் புதைந்து கிடப்பனவற்றை ஆழ்ந்து ஆய முயலும் அதே மனிதர்கள் பன்முறையும் தம்மைப்ப பொறுத்த மட்டில் பெரிதும் உறுதியற்றவர்களாகக் காணப்படுகின்றனர். சமூக வாழ்வின் விதிகளைப் படிப்படியாகவும் அதிகத் தெளிவுடனும் கண்டறிந்துள்ள அதே மனிதர்கள் அவ்வாழ்வை நெறிப்படுத்துவது பற்றித் தயங்கி நிற்கின்றனர்.
மனிதகுலம், இன்றிருக்கும் செல்வங்களையும் பொருளாதார ஆற்றலையும் முன்பு என்றுமே இத்துணைச் செழிப்பாகக் கொண்டிருந்ததில்லை; ஆயினும் கூட உலக மக்களுள் பெரும் பகுதியினர் இன்னும் பசியினாலும் வறுமையினாலும் கடும் வேதனைப்படுகின்றனர்; எண்ணிறந்த மக்கள் எழுதப்படிக்க அறியாதிருக்கின்றனர். மனிதர்களின் சுதந்திர உணர்வு இன்றுபோல் என்றுமே கூர்மையடைந்திருக்கவில்லை; எனினும் அதே நேரத்தில், சமூக மற்றும் உளநிலை சார்ந்த அடிமைத்தனங்கள் பல்வேறு புதிய உருவங்களில் தோன்றுகின்றன. உலகம் தன் ஒருமைக்கபாடு குறித்துக் கூரிய உணர்வடைந்துள்ளது. ஒருவலை ஒருவர் சார்ந்தநிலை கூட்டுணர்வோடு செயல்படவேண்டியதின் தேவையையும் தௌ;ளத் தெளிவாய் அறிந்துள்ளது. இருப்பினும் அதே உலகம் ஒன்றிற்கொன்று முரண்படும் சக்திகளால் இன்று எதிரெதிரான் திசைகளில் மிகவும் வருந்தத்தக்க முறையில் பிளவுபட்டு நிற்கிறது; ஏனெனில், அரசியல், சமூகம் பொருளாதாரம், இனம் கருத்தியல் ஆகியவற்றில் பெரும் முரண்பாடுகள் இன்றும் தொடர்ந்து நிலவுகின்றன். மேலும் அனைத்தiயும் அடியோடு அழிக்கவல்ல போரின் அபாயமும் விட்டபாடில்லை. கருத்துப் பரிமாற்றம் இன்று அதிகரித்துள்ளது; ஆயினும் முக்கியமான கருத்துகளை எடுத்துரைக்க உதவும் சொற்கள் வேறுபட்ட கருத்தியல்களில் மிகவும் வௌ;வேறான பொருட்களை தருகின்றன். இறுதியக, பொருள்வளம் செறிந்த உலகைக் கொணர்வதில் கருத்தூன்றிக் கவனம் செலுத்தப்படுகிறது; அருள்நெறிசார்ந்த வளர்ச்சியிலோ அதற்கொத்த முன்னேற்றம் ஏற்படுவதில்லை.
இத்தகைய சிக்கல் நிறைந்த சூழிநிலைகளால் பாதிக்கப் பெற்ற நம் காலத்தவருள் பலர் நிலையான மதிப்பு நலன்களை வேறுபடுத்திப் பகுத்துணர அறியா நிலையில் உள்ளனர். அவைகளைப் புதிய கண்டுபிடிப்புகளுடன் சரியாக இணைத்துப் பொருள் காணவும் இயலாதிருக்கின்றனர். இதன் விளைவாக, எதிர்நோக்கு ஒருபுறம் கவலை மறுபுறம் என்னும் இக்கட்டான நிலையில், தற்போது நிகழும் வளர்ச்சிப் போக்கைப் பற்றித் தங்களையே வினவிக்கொண்டு, மக்கள் அமைதியின்;மையால் அல்லல்படுகின்றனர். இந்த வளர்ச்சிப் போக்கு மனிதர்களுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது; ஏன் பதில் வழங்குமாறு அவர்களை வற்புறுத்தவும் செய்கிறது.
5. மிகவும் மாறிவிட்ட நிலைமைகள்
இன்று மனிதரின் மனத்தில் எழும் குழப்பமும், அவர்களது வாழ்க்கைச் சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றமும், உலகின் நாம் காணும் மிகப் பரந்த மாற்றத்தோடு இணைந்துள்ளன. இப்பரந்த மாற்றத்தின் விளைவாக, கணக்கியல், இயற்கை அறிவியல், மனிதரைப்பற்றிய அறிவியல் போன்ற துறைகள் மனித உள்ளத்தை உருவாக்கி வறர்பபதில் முக்கிய இடம் பெற்றுள்ளன் மேற்கூறிய துறைகளிலிருந்து பிறக்கும் தொழில் நுட்பத்துறைகள் மனித செயல்முறை அறிவைச் சார்ந்த மட்டில் நாளும் அதிக முக்கியத்துவம் அடைந்து வருகின்றன. இந்த அறிவியல் மனப்பான்மை முன்னாள்களில் இருந்ததைவிட வேறுபட்ட முறையில் பண்பாட்டுப் பாணியையும், சிந்நிக்கும் முறையையும் உருவாக்கியுள்ளது. உலகின் புறத் தோற்றத்தையே மாற்றியமைத்து, விண்வெளியையுங்கூட கட்டுப்படுத்தும் அளவுக்குத் தொழில் நுட்பத்துறை முன்னேறிக் கொண்டிருக்கிறது.
மனித அறிவு காலத்தின் மேலும் ஒரு விதத்தில் தன் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறது; வரலாற்றின் அறிவால் கடந்த காலத்தின் மேலும் முன்னோக்கிக் கணித்துத் திட்டம் வகுப்பதால் எதிர்காலத்தின் மேலும், முன்னோக்கி கணித்துத் திட்டம் வகுப்பதால் எதிர்காலத்தின் மேலும் மனித அறிவு தன் கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது. உயிரியல் ,உளவியல், சமூகவியல் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மனிதர்கள் தம்மைப் பற்றி இன்னும் அதிகம் அறிந்து கொள்வதற்கு உதவுகின்றது; மேலும், மேற்கூறிய துறைகள் தொழில்நுட்பம் தரும் செயல்முறைகளின் துணைகொண்டு சமூகக் குழுக்களின் வாழ்விலும் மனிதர்கள் நேரடியாகத் தம் ஆற்றலைச் செலுத்த உதவுகின்றன. அதே நேரத்தில் மனித சமுதாயம் தன் மக்கள் பெருக்கை முன் அறிந்து அதனைக் கட்டுப்படுத்துவது குறித்து அதிகக் கவனம் செலுத்துகிறது.
வரலாற்றின் போக்கு எத்துணை விரைவாகச் செல்கிறதென்றால் தனிமனிதர்களால் அதை எட்டிப்படிப்பது கடினமாகிறது. மனித சமுதாயத்தின் கதி முற்காலத்தில் இருந்தது போல் வௌ;வேறு மக்களின் தனிப்பட்ட வரலாறுகளாகச் சிதறுண்டிருக்கவில்லை; மாறாக ஒரே கதியாக மாறிவிட்டது. இவ்வாற மனித குலம், இயற்கை அமைப்புறை பெரும்பாலும் தேக்கநிலையானது என்னும் தத்துவத்தை விட்டுவிட்டு, இயக்காற்றல் தத்துவத்தையும் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தையும் அதிகமதிகமாக ஏற்றுக்கொள்கிறது. இதன் விளைவாக எண்ணிறந்த புதிய சிக்கல்கள் தோன்றுகின்றன் இவை புதிய கருத்துப் பகுப்புகளையும் கருத்துத் தொகப்புகளையும் உருவாக்கத் தூண்டுதலாக அமைகின்றன்.
6. சமூக அமைப்பின் மாற்றங்கள்
இதனால், தந்தைவழிக் குடும்பங்கள், குலங்கள், இனங்கள், சிற்றூர்கள் போன்ற வௌ;வேறு மரபுவழிச் சமூகங்கள் நாளுக்குநாள் மிகுந்த மாற்றம் அடைந்துவருகின்றன் மேலும் கூட வேறுபட்ட குழுக்களிலும் சமூக உறவுகளிலும் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தொழில் துறைச் சமூகம் சிறிது சிறிதாக வளர்ந்துகருகிறது. மேலும் அது சில நாடுகளைப் பொருளாதாரச் செழிப்பிற்கு இட்டுச் செல்கிறது; அதே சமயத்தில் பன்னூறாண்டுகளாக நிலைத்துநின்ற கருத்துகளையும் சமூக வாழ்வுச் சூழ்நிலைகளையும் அது அடியோடு மாற்றி வருகிறது. இவ்வாறே நகரங்களும் நகர்வாழ்க்கைப் பண்பாடும் அது தோற்றுவிக்கும் கவர்ச்சியும் தீவிரமாகி வருகின்றன.
புதியனவும், சிறந்தனவுமான சமூகத் தொடப்புக் கருவிகள் நிகழ்ச்சிகளை அறியவும், கருத்துகளையும் உணர்வுகளையும் மிக விரைவாகவும் பரவலாகவும் பரப்பவும் துணைசெய்கின்றன. இதன் பயனாக, தொடர் விளைவுகள் பல ஏற்படுகின்றன.
எத்தனையே பேர் பல்வேறு காரணங்களை முன்னிவிட்டு இடம்பெயர வேண்டியிருப்பதால், தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, மனிதர்கள் பிறரோடு கொள்ளும் பிணைப்புகள் இடையறாது பெருகுகின்றன. மேலும் சமூக மயமாக்கல் இன்னும் புதிய பிணைப்புகளைப் புகுத்துகிறது; இருப்பினும் அது ஆளுமைக்குரிய முழுமையான வளர்ச்சியையும், ஆளுக்குரிய உண்மையான உறவுகளையும்(''ஆள்மயமாக்கலையும'') எப்போதும் தகுந்த முறையில் மேம்படுத்துவதில்லை.
பொருளாதார முன்னேற்றம், தொழில் நுட்பத்துறை முன்னேற்றம் ஆகியவற்றின் பயனை ஏற்கெனவே நுகரும் நாடுகளில் இத்தகைய வளர்ச்சி அதிகத் தெளிவாகக் காணப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் தொழில் துறையும் நகரவாழ்வும் கொணரும் பலன்களைத் தங்கள் நாடுகளுக்காகப் பெற விழையும் மக்களையும் மேற்கூறிய இம்மக்கள், குறிப்பாகப் பழங்கால மரபுகளைப் பற்றி நிற்பவர்கள், இன்னம் அதக முதிர்ந்த தன்மையுடனும் தன்னியல்போடும் சுதந்திரத்தைச் செயல்படுத்துமாறு முனைகின்றனர்.
7. உளவியல், அறிவியல், சமயம் சார்ந்த மாற்றங்கள்
சிந்தனை முறையிலும் அமைப்புகளிலும் ஏற்படும் மாற்றம் ஏற்கெனவே வழிவழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மதிப்பு நலன்களைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. இது இறைஞர்களைப் பொறுத்தமட்டில் மிகவும் பொருந்தும். இளைஞர்கள் பலகாறும் பொறுமையற்றவர்களாய் உள்ளனர்; ஏன், இடர்கள் எழும்போது கிளர்ச்சி செய்பவர்களாய்க்கூட மாறுகின்றனர். சமூக வாழ்வில் தங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் தம் பங்கை விரைவில் ஏற்றிட விழைகின்றனர். இதன் காரணமாக, பெற்றோர்களும் ஆசிரியர்களும் தத்தம் கடமைகளை நிறைவேற்றுவதில் நாளுக்குநாள் அதிகப் பெரும் இடையூறுகளைச் சந்திக்க நேரிடுவது சாதாரணமாகிவிட்டது.
முன்னோரிடமிருந்து வழிவழியாக வந்த அமைப்பு முறைகள், சட்டங்கள், சிந்திக்கும் மற்றும் உணரும் முறைகள் ஆகியவை இன்றைய சூழ்நிலைகளுக்கு எப்போதும் நன்கு ஒத்தனவாகத் தோன்றவில்லை. எனவே, நடத்தை முறையிலும் அது பற்றிய ஒழுங்குகளிலும்கூட ஒரு பெரும் குழப்பநிலை தோன்றியுள்ளது.
இறுதியாக, புதிய சூழ்நிலைகள் சமய வாழ்வையும் பாதிக்கின்றன. ஒருபுறம், நுட்பமாக வேறுபடுத்தி உணரும் ஆற்றலானத உலகை ஏதோ மாய வித்தையாய்க் காண்பதிலிருந்தும் சமய வாழ்வைத் தூய்மைப்படுத்துகின்றது; நாறும் தாமாகவும் செயல் முறையிலும் நம்பிக்கையை அதிகமதிகமாய்ப் பற்றி நிற்கக் கோருகிறது. இதன் விளைவாக, பலரும் அதிக உயிரோட்டமான இறையுணர்வு பெறுகின்றனர். மற்றொருபுறம், சமய வாழ்வை நடைமுறையில் கைவிட்டுவரும் மக்கள் தொகை நாளும் பெருகி வருகின்றது. முன்னாள்களைப் போல் அல்;லாது, கடவுளையோ சமயத்தையோ மறுப்பது அல்லது அவைபற்றிக் கவலைப்படாதிருப்பது வழக்கத்துக்கு மாறானதாகவோ, ஒருசில தனிமனிதர்களின் செயலாகவோ இன்று இருப்பதில்லை. இத்தகைய போக்கு இன்று அறிவியல் முன்னேற்றத்திலுருந்தும் புதியதொரு மனிதநலக் கொள்கைகளிலிருந்தும் பிறக்கும் இன்றியமையாத கோரிக்கைபோல் பலகாறும் பாண்பிக்கப்படுகின்றது. மேற்கூறிய கருத்துகள் எல்லாம் பல இடங்களில் மெய்யியலாரின் கோட்பாடுகளில் மட்டும் காணப்படுவனவன்று.மாறாக இலக்கியம், கலை, மனித அறிவியல் மற்றும் வரலாறு பற்றி அளிக்கப்படுகின்றன பொருள் விளக்கம் ஆகியவற்றிலும், ஏன் குடியுரிமைச் சட்டங்களிலும் அதிகம் இடம் பெறுகின்றன. இதன் விளைவாக, பலரும் குழப்பத்திற் ஆளாகியுள்ளனர்.
8. இன்றைய உலகில் நிலவம் ஏற்றத் தாழ்வுகள்
இத்துணை விரைவாகவும், பெரும்பாலும் ஒழுங்கற்ற முறையிலும் நடைபெறும் இம்மாற்றமும், அஃதோடு உலகில் நிலவும் பிறவுகளைப் பற்றி மனிதர்பெற்றுள்ள கூரிய உணர்வும், முரண்பாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளைப் பிறப்பிக்கின்றன அல்லது அவற்றைப் பெருக்குகின்றன.
இன்றைய செயல்முறை அறிவுக்கும், கருத்துகளின் இணைப்பதை; தன் ஆதிக்கத்தின்கீழ் கொணரவோ அதை ஒழுங்கான தொகுப்பாக அமைக்கவோ இயலாத கருத்துமுறை அறிவுக்கும் இடையே தனி மனிதருக்குள்ளேயே முரண்பாடு அடிக்கடி எழுகின்றது. இவ்வாறு செய்முறைத் திறமைமேல் உள்ள ஆர்வத்திற்கும் அறநெறி சார்ந்த மனச்சான்றின் கோரிக்கைகளுக்கும் அடையே சமமற்ற நிலை எழுகின்றது; சமூக வாழ்க்கையின் சூழ்நிலைகளுக்கும் மனிதர்களின் சொந்த எண்ணம் மற்றும் ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றின் தேவைகளுக்கும் இடையே பன்முறை சமநிலை இருப்பதில்லை. இறுதியாக மனித ஈடுபாட்டைத் தனித்தனித துறைகளாகப் பிரித்து ஆழ்ந்து ஆய்பு செய்யும் முறைக்கும் எல்லாப் பொருள்களையும் ஒருங்கிணைத்து நோக்கும் கண்ணோட்டத்திற்கும் இடையே சமமற்றத தன்மை ஏற்படுகிறது.
குடும்பத்திலும் வேறுபாடுகள் எழுகின்றன. இவற்றிற்குக் காரணம் மக்கள்தொகை மற்றும் பொருளாதார சமூக நெருக்கடி நிலைகள் வழிவழி வரும் தலைமுறைகளுக்கிடையே எழும் இக்கட்டுகள்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே தோன்றியுள்ள புதிய சமூக உறவுகள் ஆகியனவாகும்.
பல்வேறு மக்களினங்களிடையேயும், ஏன் ஒரே சமூகத்திலேயே வௌ;வேறு நிலையில் உள்ள குழுவினரிடையேயும் பெரும் வேறுபாடுகள் தோன்றியுள்ளன் செல்வம் பொழக்கும் நாடுகஃளுக்கும், செல்வம் குறைவுள்ள மற்றும் வறுமையில் வாடும் நாடுகளுக்கும் இடையேயும் இத்தகைய வேறுபாடுகள் உழுந்துள்ளன் இறுதியாக அமைதியின்மேல் மக்கள் கொண்டுள்ள ஏக்கத்தலர் விறந்த அனைத்துலக நிறுவனங்களுக்கும், மறுபுறம், தம் சொந்தக் கருத்தியலகளை பரப்பவேண்டும் என்னும் ஆவல், மற்றும் நாடுகளிலும் மக்கள் குழுக்களிலும் காணப்படு; கூட்டுப்பேராசை ஆகியவற்றிற்கும் இடையேயும் மேற்கூறிய வேறுபாடுகள் தோன்றியுள்ளன.
இவற்றின் காரணமாக ஒருவரையெருவர்நம்பாத நிலையும், மக்களிடையே பகைகையும் பிணக்கும் கசப்புத் தன்மையும் உண்டாகின்றன. இவற்றின் காரணமும் மனிதரே, இவற்றிற்கு இரையாவதும் மனிதரே.
9. மனித குலத்தின் பரந்த நாட்டங்கள்
இதற்கிடையே, மனிதகுலம் படைப்பின்மேல் தன் ஆதிக்கத்தை நாளம் வலுப்படுத்த முடியும், இவ்வாறு வலுப்படுத்தவும் வேண்டும் எனும் உறுதிப்பாடு வளர்ந்து வருகிறது;
இதன் விளைவாக, தாம் பெறயவேண்டிய நலன்கள் நீதியின்மையாலும் சமமற்ற பங்கீட்டாலும்தம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதாகத் திட்டவட்டமாகக் கருதுபவர் பலர் அந்நலன்களைப் பெறத் தீவிரமாய்க் கோருகின்றனர்.முன்னேற்ம் அடைந்து வரும் நாடுகளம் அஒ;மையில் சுதந்திரும் பெற்ற நாடுகளும் இன்றையப் பண்பாட்டில் நல்விளைவுகளை அரசியல் துறையில் மட்டுமின்ற, பொருளாதாரத் துறையிலும் பெறவும், உலக அரங்கில் சுதந்தரத்தோடு பங்கு பெறவும் விரும்புகின்றன. எனினும், இந்நாடுகளுக்கும் விரைவாக முன்னெறிக் கொண்டிருக்கும் செல்வம் கொழிக்கும் நாடுகளுக்கும் விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கும் செல்வம் கொழிக்கும் நாடகளுக்கம் இடையே இடைவெளி நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதெ நேரத்தில் அந்நாடுகள் பொருளாதாரத் துறை உட்பட பிறவற்றிலும் செல்வம் பொழிக்கும் நாடுகளைச் சாந்திருக்கும் நிலையும் வளர்நது வருகிறது. பசியால் அவதியுறும் மக்கள் செலவர்களை இடைமறித்து முறையிடுகின்றனர். ஆண்களோடு பெண்களுக்கும் சம் உரிமை இன்னம் கொடுக்கப்பபடாத இடங்களில் சட்டத்தின் முன்பும் நடைமுறையிலும் சம உரிமை பெற பெண்கள் கோருகின்றனர். தொழிலாளரும் விவசாயிகளும் தாங்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையானவற்றைத் தேடுவதோடு நில்லாது, உழைப்பின் வழியாகத் தம் ஆளமை சார்ந்த திறமைகளை வளர்த்துப் பொருளாதார, சமூக, அரசியல், எண்பாட்டு வாழ்வை ஒழுங்குபடுத்துவதில் பங்கேற்க விரும்புகின்றனர். பண்பாட்டிலிருந்து பிறக்கும் நல்விளைவுகள் உண்மையில் அனைத்து மனிதருக்கும் கிடைக்க முடியும். அவ்வாறு கிடைக்கவும் வேண்டும் என்பதை இன்று மனித வரலற்றிலே முதன் முறையாக எல்லா மக்களும் உறுதியாக நம்புகின்றனர்.
இந்த உரிமைக் கோரிக்கைகளுக்கெல்லாம் அடித்தளமாக இருப்பது அவற்றைவிடவும் ஆழ்ந்த பரந்ததொரு நாட்ம் ஆகும். அதாவது, இன்றைய உலகம் இவ்வளவு மிகுதியக அளிக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் தங்களது நன்மைக்ககாக மாற்றி மனிதருக்கு ஏற்ற, முழுமையான, சுதந்திரமிக்க ஒரு வாழ்வு பெறத்தனிதனிதரும் சமூகங்களும் தவிக்கின்றன. மேலும் நாடுகள் ஒருவகை அனைத்துவகச் சமூகமொன்றை ஆக்க நாளும் அதிகமாக முனைந்து நிற்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில், இன்றைய உலகம் ஆற்றல் நிநை;ததாகவும், அதே வேளையில் செயலற்றதாகவம் காட்சி அளிக்கினறது; மிகச் சிறந்த காரியங்களையோ மிக இழிவானவற்றையோ செய்யவல்லதாகத் தோற்றம் அளிக்கினறது. சுதந்திரம் அல்லது அடிமைத்தளை, முன்னேற்றம் அல்லது பின் தங்கிய நிலை, சகோதரத்துவம் அல்லது பகைமை ஆகியவறிறிற்கு இட்டுச் செல்லும் சகோதரத்துவம் அல்லது பகைமை ஆபியவற்றிற்கு இட்டுச் செல்லும் பாதை இவ்வுலகுக்கு முன் திறந்து கிடக்கின்றது. மேலும் மனிதர், தாம் தூண்டிவிட்ட ஆற்றல்கள் தம்மையே அடிமைப்படுத்தவும் கூடும், தமக்குச் சேவை செய்யவும் இயலும் என்பதால் அவற்றைச் சரிவர ஆற்றறுப்படுத்தும் பொறுப்பு, தம்மைச் சார்ந்தது என் உணருகின்றனர்; எனவேதான் மனிதர் தம்மைப் பற்றியே கேள்விகளை எழுப்புகின்றனர்.
10. மனித குலம் எழுப்பும் ஆழ்ந்த வினாக்கள்
இன்று உலகைப் பிடித்துள்ள முரண்பாடுக்ள உண்மையிலேயே மனிதரின் இதயத்தினுள் வேரூன்றி நிற்கும் இன்னும் அதிக அடிப்படையான ஒரு முரண்பாட்டின் எதிரொலியே. ஏனெனில், மனிதருக்குள்ளேயே பல கூறுகள் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன. படைக்பப்பட்டவர்என்ற முறையில் வலவிதங்களில் தாம வரம்பிற்குட்பட்டவர் என மனிதர் காண்கின்றனர் ஒருபுறம். மறுபுறமோ, தம்முடைய நாட்டங்களில் வரம்பற்றவராகவும் உயர்ந்ததொரு வாழ்விற்கு அழைக்கப்பட்டவராகவும் தாம் இருப்பதை ஒபர்கின்றனர். பற்பல கவர்ச்சிகளால் ஈர்க்கப்படும் மனிதர் அவற்றில் சிலவற்றைத் தேர்ந்து கொள்ளவும், சிலவற்றை நீக்கவும் வேண்டியவராகின்றனர். மேலும், வலுவற்றவரும் பாவியருமாகிய அவர்கள் பல தடவைகளிலும் தாம் விரும்பாததைச் செய்கின்றனர்; செய்ய வரும்புவதைச் செய்யத் தவறுகின்றனர்.3 ஆக தம்மிலே மனிதர் பிளவுபட்டு நிற்கின்றனர்; இப்பிளவுகளிலிருந்துதான் சமூகத்தில் பல பெரிய முரண்பாடுகள் எழுகின்றன. நடைமுறைப் பொருள் முதல் கொள்கையால் ;வாழிவில் ஆழப் பாதிக்கப்பட்ட பலர் மேற்கூறிய பரபரப்பூட்டும் நிலைமையைத் தெளிவாகக் காண மறுக்கின்றனர். என்பது உண்மைதான். மறுபுறமோ, இழிநலையால் நசுக்கப்பட்ட அவர்களால் இதைப்பற்றி சிந்திக்க இயலுவதில்லை உலகு பற்றிப் பல்வேறு முறைகளில் அளிக்கப்படும் விளக்கங்களில் அமைதி காணலாம என எண்ணுகின்றனர் பலர். மனித குலத்தின் உண்மையான, முழுமையான விடுதலை மனிதரின் முயற்சியால் மட்டும் கிடைத்துவிடம் என்று எதிர்பார்க்கின்றனர் சிலர். அவனியின் மேல் மனிதர் இனி செலுத்தப்போகும் ஆட்சி அவர்களது உள்ளத்தின் எல்லா ஆவல்களையும் நிறைவேற்றிவிடும் என்பது இவர்களது கொள்கை. வாழ்வு பொருள் பொண்டது என்ற நம்பிக்கையை இழந்து, மனிதராய் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்ற கரத்தின் அடிப்படையில் அதற்குத் தம் திறனால் மட்டும் முழுப்பொருளும் அளிக்க முனைவோரின் துணிவைப் புகழ்கின்ற மனிதரும் இல்லமல் இல்லை. எவ்வாறிருப்பினும், உலகத்தின் இன்றைய மற்ற வளர்ச்சியினூடே மிகவும் அடிப்படையான கேள்விகளை எழுப்புவோர், அல்லது அக்கேள்விகளைப் புதிய முறையிலே கூர்மையோடு எணர்வோர் எண்ணிக்கையில் பெருகிவருகின்றனர். இத்தகைய அடிப்படைக் கேள்விகளாவன் மனிதர் என்றால் யார்? இவ்வளவு பாடுபட்டுப் பெற்ற வெற்றிகளின் பயன் என்ன? சமுதாயத்திற்கு மனிதர் என்ன அளிக்க முடியும்? அதனிடமிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கலாம்? இம்மண்ணுலக வாழ்விற்குப்பின் நிகழ்வது யாது?
அனைவருக்காகவும் இறந்து உயிர்பெற்றெழுந்த இயேசு4 தம்முடைய ஆவி வழியே மனிதர் த் மிக உயர்ந்த அழைப்பிற்குச் செவிமடுக்க இயலுமாறு அவர்களுக்கு ஒளியையும் வலிமையையும் அளிக்கிறார்; மனிதர் மீட்புப் பெறுமாறு வேறுபெயர் இவ்வுலகில் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை,5 இது திருச்சபையின் நம்பிக்கை. இவ்வாறே தன் ஆண்டவரும் ஆசிரியரமாக விளங்கும் கிறிஸ்துவில் மனித வரலாறு முழுவதின் விளக்கமுக் மையமும் முடிவும் காணக் கிடக்கின்றன எனவும் திருச்சபை நம்புகின்றது. மாற்றங்கள் அனைத்தினூடே, நேற்றும் இன்றும் என்றுமே மாறதவராய் இருக்கின்ற கிறிஸ்துவையே6 தம் அடிப்படையாகக் கொண்டுள்ள மாறாதவை பல உண்டு என அது உறுதியாகக் கூறுகிறது. எனவேதான், கட்புலனாகக் கடவுளின் சாயலாகவும், படைப்பனைத்திலும் தலைப்பேறாகவுமுள்ள7 கிறிஸ்துவின் ஒளியில், மனிதர் என்னும் மறைபொருளை விளக்குவதற்காகவும், இனறைய முக்கிய சிக்கல்களுக்குத் தீர்வுகாண மனிதக் குலத்திற்கு உதவுவதற்காகவும் சங்கம் எல்லாரையும் அழைத்துப் பேச விரும்புகிறது.
முதற்பகுதி
திருச்சபையும் மனிதரின் அழைப்பும்
11. ஆவியின் தூண்டுதலுக்கு அமைந்து நடத்தல்
உலகனைத்தiயும் நிரப்பும் ஆண்டவரின் ஆவியால் தாம் நடத்தப்படுவதாக நம்புகின்றனர் இறைமக்கள். எனவே இவர்கள், நம்பிக்கையால் உந்தப்பட்டு, இன்றைய பிற மனிதரோடு தாமும் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகளிலும், கோரிக்கைகளிலும், நாட்டங்களிலும், கடவுளின் உடனிருப்பiயும் அவரது திட்டத்தையும் காட்டும் உண்மையான அறிகுறிகள் யாவை என வேறுபடுத்திக் கண்டறிய முனைகின்றனர். ஏனெனில் நம்பிக்கை யாவற்றையும் ஒரு புதிய ஒளியில் தெளிவுபடுத்துகிறது; மனிதருடைய முழு அழைப்பையும் பற்றிய கடவுளின் திட்டத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது; இவ்வாறு முற்றிலும் மனிதப் பண்பு வாய்ந்த தீர்வுகளைக் காண்பதற்குச் சிந்தனையை ஆற்றுப்படுத்துகிறது
இன்று மிகவும் உயர்வாகப் போற்றப்படுகின்ற மதிப்பு நலன்களை மேற்கூறிய புதிய ஒளியில் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றின் தெய்வீக ஊற்றுடன் அவற்றைத் தொடர்பு படுத்தச் சங்கம் முதன்முதலில் விரும்புகிறது. கடவுள் மனிதருக்கு அளித்த திறமைகளிலிருந்து தோன்றுகின்றன என்னும் முறையில் இம்மதிப்ப நலன்கள் மிகவும் நல்லவை. இருப்பினும், மனித இதயத்தின் சீரழிவால் தமக்கு உரிய ஒழுங்கு முறையிலிருந்து பலகாறும் திசைதிரும்பிவிடுவதால் இவை தூய்மையாக்கப்படவேண்டிய நிலையிலுள்ளன.
மனிதலைப் பற்றித் திருச்சபை எண்ணுவதென்ன? இன்றைய சமுதாயத்தைக் கட்டியெழுப்பப் பரிந்துரைக்கபடபட வேண்டியவவையாகத் தோன்றுவன யாவை? உலகனைத்திலும் மனிதர் ஆற்றும் செயல்களின் இறதிப் பொருள் யாது? இவ்வினாக்களுக்கு விடை கண்டுபடிக்கப்பட வேண்டும். அப்போது மனித குலமும் அதனுள் வாழும் இறைமக்களும் ஒருபருக்கொருவர் துணை நிற்கின்றனர் என்பது அதகத் தெளிவுடன் வெளிப்படும். இவ்வாறு திருச்சபையின் பணியின் சமயப் பண்பும் அதன் வழியே அப்பணியின் சீரிய மிதப் பண்பும் வெளிப்படையாகத் தெரியும்.
இயல் 1
மனிதரின் மாண்பு
12. மனிதர் கடவுளின் சாயல்
உலகில் உள்ள யாவும் மனிதலையே தம் மையமாகவும் உச்சநிலையாகவும் கொண்டிருக்கும் வண்ணம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பதை இறைநம்பிக்கை கொண்டோரும் அறைநம்பிக்கை இல்லாதவரும் ஏறக்குறைய ஒரே மனதயாய் ஒப்புக்கொள்வர்.
ஆனால் 'மனிதர்' என்றால் யார்? தம்மைப் பற்றிய பல்வேறுபட்ட கருத்துகளை, ஏன் முரண்பட்ட கருத்துகளையுங்கூட அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்; வெளிப்படுத்தியும் வருகின்றனர்: இக்கருத்துகளின் அடிப்படையில் மனிதர் ஒன்றிலே அனைத்திற்கும் தனிமுதல் அளவாகத் தம்மையே உயர்த்துகின்றனர், அல்லது நம்பிக்கையற்ற நிலைக்கு வருமளவிற்குத் தம்மையே தாழ்த்துகின்றனர்; இதன் விளைவாக அவர்கள் ஐயமும் கலக்கமும் கொள்கின்றனர். இச்சிக்கல்களைத் திருச்சபை மிக ஆழமாக உணர்கிறது;. கடவுளின் வெளிப்பாட்டால் அறிவு பெற்றுள்ள திருச்சபை இச்சிக்கல்களுக்கு விடையளிக்க முடியும்; இவ்விடையால் மனிதரின் உண்மைநிலை தெளிவாகும்; அவர்தம் வலுவின்மை விளக்கம் பெறும்; அதே நேரத்தில் அவர்களுடைய மாண்பையும் அழைப்பையும் சரியாக அறியவும் முடிவும்.
மனிதர் ''கடவுளின் உருவில்''படைக்கப்பட்டவர்கள்; தம்மை படைத்தவரை அறிந்து அவருக்கு அன்பு செய்ய அவர்களால் இயலும்; கடவுளின் மாட்சிக்காக மண்ணில் உள்ள அனைத்தையும் அவர்கள் ஆளவும் பயன்படுத்தவும்1 அவை யாவற்றின் தலைவர்களாகக் கடவுள் அவர்களை ஆக்கினார்2; ''மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? ஆயினும் அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளிர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்'' (திபா8:4-6) எனத் திருமறை நூல்கள் கற்பிக்கிறது.
ஆனால் கடவுள் மனிதரைத் தனியராகப் படைக்கவில்லை; ஏனெனில், தொடக்கத்திலிருந்தே ''ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்'' (தொநூ 1:27). அவர்களுடைய கூட்டு வாழ்க்ககை மனித ஆள்களிடையே எழும் ஒன்றிப்பின் முதல் வெளிப்பாடாகும். ஏனெனில், மனிதர் தம் ஆழ்ந்த இயல்பிலேயே சமூகப் பண்புடையவர்கள்; பிறரோடு உறவு கொள்ளாமல் அவர்களால் வாழவோ தம் திறமைகளை வளர்த்துக் கொள்ளவோ முடியாது. எனவேதான், மீண்டும் விவிலியத்தில் நாம் படிப்பதுபோல் ''கடவுள் தாம் உருவாக்கிய அனைத்ததையும் நோக்கினார், அவை மிகவும் நன்றாய் இருந்தன''(தொநூ1:31).
13. பாவம்
கடவுளால் அருள் நிலையில் படைக்கப்பட்டிருந்த மனிதர்கள் தீயோனின் தூண்டுதலால் வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே தம் சுதந்திரத்தைத் தவறான வழியில் பயன்படுத்திவிட்டனர். அவர்கள் கடவுளுக்கு எதிராகத் தம்மையே நிறுத்தி, அவருக்குப் புறம்பாகத் தம் குறிக்கோளை அடைய நாடினர். கடவுளை மக்கள் அறிந்திருந்தும் கடவுள் என்ற முறையிலே அவருக்குரிய மகிமையை அவருக்கு அளிக்கவில்லை; மாறாக உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று; படைத்தவரை விட்டுப் படைப்புப் பொருள்களுக்கே அவர்கள் பணி செய்தார்கள்.3 இறைவெளிப்பாட்டிலிருந்து இவ்வாறு நாம் தெரிந்து கொள்வது நம்முடைய அனுபவத்திற்கும் ஒத்திருக்கிறது. ஏனெனில் தம் உள்ளத்தைக் கூர்ந்து நோக்கினால் மனிதர்கள் தீய நாட்டத்தையும் அங்குக் காண்கின்றனர்; தம்மைப் படைத்த நல்லவரிடமிருந்து வந்திருக்க இயலாப் பல தீமைகளுக்குள் தாம் ஆழ்ந்திருப்பதையும் அவர்கள் பார்க்கின்றனர். பல தடவைகளில், கடவுளே தமது தொடக்கம் என்பதை ஏற்க மறுத்து, அவர்கள் தமது இறுதிக் கதிக்கு வழிகாட்டும் ஒழுங்கு முறையை மீறி விட்டனர்; அதே நேரத்தில் தம்மோடும், பிற மனிதர்களோடும், படைப்பு அனைத்தோடும் தாம் கொள்ளவேண்டிய தொடர்பு முழுவதையும் அறுத்துவிட்டனர்.
இவ்வாறு, மனிதர் தமக்குள்ளேயே பிளவுற்றிருக்கின்றனர். இதன் விளைவாக அவர்களுடைய வாழ்வு முழுவதும், தனிவாழ்வானாலும் சரி, குழு வாழ்வானாலும் சரி, தீமைக்கும் நன்மைக்கும் இடையே, இருளுக்கும் ஒளிக்கும் இடையே நிகழும் ஒரு பரபரப்பான போராட்டமாகத் தோன்றகிறது. மேலும, தீமையின் தாக்குதல்களைத் தம் சக்தியால் மட்டுமே வெற்றிகரமாக எதிர்த்துப் போராடத் தம்மால் இயலாது என மனிதர் காண்கின்றனர். இதனால் ஒவ்வொரு மனிதரும் தாம் விலங்கிடப்பட்டவர் போல இருப்பதை உணர்கின்றார். ஆனால் மனிதர்களைப் பாவத்திற்கு அடிமையாக வைத்திருந்த4 இவ்வுலகின் தலைவனை (காண்யோவா12:31) வெளியே துரத்தி, மனிதரை விடுவிக்கவும் வலுப்படுத்தவும் உள்;ரப் புதுப்பிக்கவுமே ஆண்டவர் வந்தார். பாவம்தான் முழுமையை அடைவதிலிருந்து மனிதரைத் தடுக்கிறது; அவர்களைத் தாழ்நிலைக்கு தள்ளுகிறது.
மனிதர்கள் எள்;ர உணரும் உயர்ந்த அழைப்பும் மற்றும் ஆழ்துயர் நிலையும் இந்த இறைவெளிப்பாட்டின் ஒளியிலே தங்கள் இறுதிப் பொருள்களைப் பெறுகின்றன.
14. மனிதரின் அழைப்பு
உடலையும் ஆன்மாவையும் ஒருங்கே கொண்டவரே மனிதர்கள். இவர்கள் தமது உடல் சார்ந்த நிலை மூலமாக பருப்பொருள் உலகிலுள்ள மூலப்பொருள்களைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு, அப்பொருள் தம் உச்சநிலையை அவர்கள் வழியே அடைகின்றன் அவர்கள் வழியே தம்மைப் படைத்தவரின் புகழைச் சுதந்திரமாபப் பாடுகினறன.5 ஆகவே மனிதர் தம் உடல் வாழ்வை வெறுக்கலாகாது; மாறாக, கடவுளால் தம் உடல் படைக்கப்பட்டதாலும் இறுதிநாளில் அது மீண்டும் உயிர் பெறப் போவதாலும், அதனை அவர்கள் நல்லதாகவும் மதிப்பிற்குரியதாகவும் கருதவேண்டும். இருப்பினும், பாவத்தினால் புண்பட்டிருப்பதால் மனிதர் தம் உடலில் தமக்க எதிராக உழும் எதிர் உணர்ச்சிகளைக் காண்கின்றனர். மனிதர் தம் உடல் வழியே கடவுளுக்குப் பெருமைச் சேர்க்கவேண்டும்6 என்பது,தம் உடலை இதயத்தின் இழிந்த நாட்டங்களுக்குப் பணிய அனுமதிக்கக் கூடாது என்பதும் மனிதரின் மாண்பிலிருந்து பிறக்கும் ஒரு கோரிக்கையாகும்.
மனிதார் பருப்பொருள்களுக்கு மேலாகத் தம்மை உயர்ந்தவர் எனக் கருதுவது சரியே ஆகும்; தாம் இயற்கையின் ஒரு துகளோ, மனித உலகில் பெயரில்லா ஓர் அம்சமோ மட்டுமல்ல என அவர்கள் நினைப்பதும் முறையே ஏனென்றால், ஆழ்ந்த உள்நிலையை அவர்கள் கொண்டிருப்பதால்பொருள்கள் அனைத்தiயும் அவர்கள் கடந்து நிற்கின்றனர். தம் இதயத்துள் நுழையும் பொழுது அவர்கள் இத்தகைய அடித்தளமான ஆழ்ந்த உள்நிலைக்குத் திரும்புகின்றனர். இதயச் சிந்தனைகளை ஆய்ந்தறியும் கடவுள்7 அங்கு அவர்களுக்காகக் காத்திருக்கிறார். அங்குதான் மனிதரும் கடவுளின் திருமுன் தமது வாழ்வின் கதியைத் தீர்மானிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தம்முள் பருப்பொருள் சார்பற்ற, அழிவுறா ஓர் ஆன்மா இருப்பதாக ஊற்றுக்கொள்ளும்போது பருப்பொருள்கள் மற்றும் சமூகச் சூழ்நிலைகளிலிருந்து எழும் போலியான மாயைகளால் அவர்கள் அலைக்கழிக்கப்படுவதில்லை. மாறாக, பொருள்களின் ஆழ்ந்த உண்மையை அறிகின்றனர்.
15. புத்தியின் மாண்பு, உண்மை, ஞானம்
இறை அறிவின் ஒளியில் பங்குபெறும் மனிதர்தம் புத்தியால் எல்லாப் பொருள்களையும் தாம் கடந்து நிற்பதாக மதிப்பிடுவது சரியே ஆகும். ஓய்வின்றித் தம் அறிவுத் திறமைகளை ஊக்கமுடன் பயன்படுத்தியதால், அவர்கள் செய்முறை அறிவயல்களிலும் தொழில் நுட்பத் துறைகளிலும் மற்றும் அறிவுவளத் துறைகளிலும் உண்மையாகவே முன்னேறியுள்ளனர். இன்று குறிப்பாக, பருப்பொருள் உலகை ஆய்ந்தறிவதிலும் அதனைத் தமக்குக் கட்டுப்படுத்துவதிலும், மாபெரும் வெற்றிகளை அவர்கள் கண்டுள்ளனர். எப்பொழுதுனே அவர்கள் மிக ஆழ்ந்த உண்மைகளைத் தேடி, அவற்றைக் கண்டடைந்துமிருக்கின்றனர். உண்மையில், மனிதரின் கூரறிவு வெறும் புலனறிவால் உணரத்தக்கவற்றின் வரம்புகளுக்குக் கட்டுப்பட்டதன்று; மாறாக, பாவத்தின் விளைவாக மனிதரின் கூரறிவு ஓரளவு மங்கி, வலுவற்றிருந்தாலும், அறிவுக்கு எட்டும் உண்மைகளை மெய்யானதோர் உறுதியுடன் அறிய அக்கூரறிவால் இயலும்.
ஆளுமை படைத்த மனிதரின் அறியும் இயல்பை ஞானம் நிறைவுபடுத்துகிறது; அவ்வாறே நிறைவுபடுத்தவேண்டும்; அவ்வாறே நிறைவுபடுத்தவும் வேண்டும்; உண்மையையும் நன்மையையும் விருப்புடன் தேடிட மனிதரின் மனத்தை ஞானம் இனிமையாய் ஈர்க்கிறது; ஞானத்தால் ஊட்டப்பெறும் மனிதர் காணக்கூடியவற்றினின்று காணக் கூடாதனவற்றிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
மனிதர் புதிதாகக் கண்டுபிடிப்பன எவையாக இருப்பினம் அவை எல்லாவற்றையும் மாற்றுவதற்கு இந்த ஞானம் மற்காலங்களைவிட இக்காலத்திற்குத் தேவை. ஞானத்தில் சிறந்த மனிதர்கள் தோன்றாவிட்டால் உலகின் எதிர்கலம் இடருக்குள்ளாகும். மேலும்,பொருளாதாரச் செல்வத்தைக் குறைவாகக் கொண்டிருப்பினும், அருள்நெறிச் செல்பத்தை அதிகமாகக் கொண்டுள்ள பல நாடுகளுக்கு மிகச் சிறந்த உதவி அளிக்க முடியும் என்பதையும் இவண் குறிப்பிடவேண்டும்.
தூய ஆவியின் கொடையால் மனிதர் நம்பிக்கையின் வழியே இறைத் திருவுளத்தின் மறைபொருளைச் சிந்திக்கவும், அதைச் சுவைத்துணரவும் பயில்கின்றனர்.8
16. அறநெறி மனச்சான்றின் மாண்பு
தாமே தமக்கென விதித்துக்கொள்ளாத, ஆனால் தாம் கீழ்ப்படிய வேண்டிய ஒரு சட்டத்தைத் தம்முடைய மனச்சான்றின் ஆழத்தில் மனிதர் கண்டுபிடிக்கின்றனர். நல்லதை எப்பொழுதும் விரும்பித்தேடி மனிதர் கண்டுபிடிக்கின்றனர். நல்லதை எப்பொழுதும் விரும்பித்தேடி அதைச்செயல்படுத்தவும், தீமையை அகற்றவும் அவர்களுக்கு அறிவுறுத்தும் இம்மனச்சான்றின் குரலொலி, தேவையானபொழுது அவர்கள் இதயச் செவிகளுக்கு, இதைச் செய்,அதைத் தவிர்த்துவிடு என உரைக்கிறது. ஏனெனில்,கடவுளே எழுதிய சட்டமொன்றே மனிதர் தம் உள்ளத்தில் கொண்டுள்ளனர்; அதற்குக் கீழ்ப்படிவதே அவர்களுக்குரிய மாண்பு; அதற்கேற்பவே அவர்களுக்குத் தீர்ப்பளிக்கப்படும்.9 மனச்சான்று மனிதர் கடவுளோடு தனித்திருக்கும் மிக மறைவான மையமும் தூயகமும் ஆகும்; அங்கே கடவுளுடைய குரல் எதிரொலிக்கிறது.10 கடவுளிடமும் பிறரிடமும் செலுத்தும் அன்பால்11 நிறைவுறும் கட்டளையை மனச்சான்று வியத்தகு முறையிலே அறிவிக்கிறது. மனச்சான்றுக்கு உண்மையாயிருப்பதன் வழியாகக் கிறிஸ்தவர்கள் பிறமனிதர்களோடு ஒன்றித்து உண்மையை நாடித் தேடவும், தனிப்பட்டவரது வாழ்க்கையாலும் சமூகத் தொடர்புகளாலும் எழும் அறநெறி சார்ந்த சிக்கல்களுக்கு உண்மையின் அடிப்படையில் விடை காணவும் வேண்டும். எவ்வளவுக்கதிமாக மனச்சான்று நேர்மையானதாக உளதோ அவ்வளவுக்கதிமாகத் தனி மனிதரும் குழுக்களும் குருட்டுப் போக்கிலிருந்து விலகி, அறநெறியின் உண்மை விதிகளின்படி அமைந்து நடக்க முயல்கிறார்கள். எனினும், தவிர்க்க முடியாத அறியாமையினால் பல வேளைகளில் மனச்சான்று தவற நேரிடலாம்; அப்போதுகூட அது தன் மாண்பை இழப்பதில்லை. ஆனால், உண்மையையோ நன்மையையோ தேடுவதில் சிறிதும் கவலை கொள்ளாத ஒருவரைப்பற்றியோ, பாவப் பழக்கத்தால் படிப்படியாக ஏறக்குறைய குருடாகிவிடும் மனச்சான்றைப் பற்றியோ மேற்கூறியவாறு சொல்ல முடியாது.
17. சுதந்திரத்தின் மேன்மை
மனிதர் சுதந்திரத்தோடு இருந்தால்தான் நல்லதை நாடிச் செல்ல முடியும். இந்தச் சுதந்திரத்தை இன்றைய மக்கள் பெரிதும் மதித்து அதனை அடைய ஆர்வத்துடன் முயலுகின்றனர். இது மிகவும் சரியானதே. ஆனால் தமக்கு இன்பம் தரும் எதையும், தீமையையுங்கூட, செய்வதற்கான ஒரு கட்டுப்பாடற்ற உரிமையைப் போல சுதந்திரத்தைத் தவறான முறையில் பல வேளைகில் அவர்கள் கருதுகின்றனர். மாறாக, உண்மையான சுதந்திரம் என்பது மனிதர் தம்மில் கொண்டிருக்கும் இறைஉருவின் ஒரு சிறந்த அடையாளம். ஏனெனில் மனிதர் தம்மைப் படைத்தவரைத் தாமாகவே தேடி, அவரைப் பற்றிக்கொண்டிருப்பதாலே மகிழ்ச்சியான முழுநிறைவைச் சுதந்திரமாக அடைய வேண்டும் என்பதற்காகவே அவர்களை அவர்களுடைய விருப்புரிமையின்படியே விட்டுவிடக்12 கடவுள் விரும்பினார். ஆகவே உள்ளிருந்தெழும் குருட்டுத் தூண்டுதலாலோ வெறும் வெளிக்கட்டாயத்தினாலோ அன்றித் தானாக அதாவது உள்ளிருந்து இயக்கப்பட்டும் தூண்டப்பட்டும், அறிவோடும் சுதந்திரத்தோடும் முடிவெடுத்துச் செயலாற்றுவதில்தான் மனிதரின் மாண்பு உள்ளது. அனைத்து உணர்ச்சிகளின் அடிமைத் தளையிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, சுதந்துpரமாக நன்மையைத் தேர்ந்துகொண்டு தமது கதியை அடைய முயலும்போதும், செயல்முறையிலும் திறமையோடும் ஈடுபட்டு அக்கதியை அடைவதற்குத் தகுந்த உதவிகளைத் தேடிப் பெற்றுக் கொள்ளும்போதும் இத்தகைய மாண்பை மனிதர் அடைந்து கொள்கின்றனர். பாவத்தால் புண்பட்டதாகிய மனிதச்சுதந்திரம்; கடவுளின் அருள் உதவியால் மட்டுமே இந்த ஒழுங்கு முறையைக் கடவுளுக்குப் பணிநதவிதத்தில் முழுமையாகச் செயலாக்க முடியும். ஒவ்வொருவரும் தாம் செய்த நன்மை தீமைக்குக் கடவுளின் நடுவர் இருக்கைமுன் நின்றாக வேண்டும்.13
18. சாவு என்னும் மறைபொருள்
சாவின் முன்னிலையில் மனிதநிலையின் புதர் மிகவும் புரியாததாகின்றது. வேதனையும் படிப்படியாக வருகின்ற உடல்சிதைவும் மட்டுமல்ல மனிதலை நோகப்பண்ணுபவை; மாறாக, அவற்றைவிடவும் அதிகமாக, நிரந்தரமாக அழிந்துவிடுவோம் என்ற அச்சம் மனிதரை வதைக்கின்றமு. தம் ஆளுமை நிலை முழுமையாக அழிந்துவிடும் என்ற கருத்தையும அது மீட்சியின்றி மாய்ந்து போய்விடும் என்ற கருத்தையம் அவர்கள் ஏற்க மறுத்து உள்ளது ; இவ்வாறு செய்யும்போது தம்முடை இதய உணர்வின் அடிப்படையிலேயே அவர்கள் சரியாகத் தீர்ப்பிடுகின்றனர். மனிதர் ஒவ்வொருவரும் தம்முள் கொண்டுள்ள நிலை வாழ்வின் ஆற்றல் வெறும் பருப்பொருள் நிலைக்கு ஒடுக்கப்பட முடியாததால் அது சாவை எதிர்த்து எழுகின்றது. தொழில் நுட்பத்துறையின் சாதனைகள் எவற்றாலும், அவை வெகு பயனுடையவையாயிருப்பினும் கூட மனிதரின் கவலையைத் தணிக்க இயலாது; ஏனெனில் உடல்சார்ந்த உயிரை நெடுங்காலம் நீடிக்கச் செய்தாலும் கூட அதன்பின் வரும் வாழ்விற்காக மனிதரின் இதயத்தில் மாய்த்திட முடியாத விதத்தில் உறைந்திருக்கும் தாகத்தை அதனால் தணிக்க முடியாது.
சாவு எவ்வித கற்பனைக்கும் எட்டாத விதத்தில் உளது. ஆயினும், இவ்வுலக அவலநிலையின் எல்லைகளுக்கு அப்பால் ஒரு பேரின்ப இலக்கிற்காக மனிதரைக் கடவுள் படைத்துள்ளார் எனத் தருச்சபை இறைவெளிப்பாட்டின் படிப்பபினையால் உறுதியோடு கூறுகிறது. மனிதர் பாவம் செய்யாமல் இருந்திருப்பின் உடல்சார்ந்த சாவினின்று விடுக்கப்பெற்றிருப்பார்கள்,14 தாம் செய்த பாவத்தால் அவர்கள் மீட்பை இழந்தனர்; இந்த மீட்பை எல்லாம் வல்ல இரக்கம் நிறைந்த மீட்பர் மனிதருக்கு மீண்டும் அளிக்கும்போது உடல்சார்ந்த சாவும் தோற்கடிக்கப்படும்; இது கிறிஸ்தவ நம்பிக்கை. ஏனெனில், மனிதர் அழிவில்லா இறைவாழிவில் ஆடிவின்றி ஒன்றிததுத் தம் முழு இயல்போடு கடவுளுடன் இணைய வேண்டுமென்று அவர் அவர்களை அழைத்துள்ளார்; அழைத்துக் கொண்டுமிருக்கிறார். கிறிஸ்து தம்முடைய சாவினால் மனிதரைச் சாவினின்று மீட்டு வாழ்வுக்கு உயிர்த்தெழுந்ததால் இந்த வெற்றியை நிலைநாட்டினால்.15 இவ்வாறு சிந்திக்கம் ஒவ்வொரு மனிதருக்கும், அவர்களது வருங்காலத்தைப் பற்றிய கவலைகளுக்கு உறுதியான விளக்கச் சான்றுகளுடன் விடை பகர்கின்றது நம்பிக்கை. அதே நேரத்தில் சாவினால் ஏற்கெனவே பிரிக்கப்பட்ட அன்புச் சகோதரர் சகோதரிகளோடு கிறிஸ்துவில் ஒன்றிக்க இந்த நம்பிக்கை ஆற்றல் தருகின்றது; அவர்கள் கடவுளோடு உண்மை வாழ்வைப் பெற்றுவிட்டார்க்ள என்னும் உறுதிநிலையையும் அளிக்கின்றது.
19. கடவுள் மறுப்புக் கொள்கையின் பல வகைகளும், மூலக் காரணங்களும்
கடவுளோடு ஒன்றித்து உறவாடுவதற்கு மனிதர் அழைக்கப்பட்டிருக்கினறனர்; இந்த அழைப்பில்தான் மனிதருடைய மாண்பின் மிகச் சிறப்பான அம்சம் அடங்கியுள்ளது. மனிதர் தாம் தோன்றியதிலிருந்தே, கடவுளோடு உரையாட அழைக்கப்பட்டுள்ளனர். கடவுளின் அன்பால் படைக்கப்பட்டு, என்றும் அதே அன்பால் காப்பாற்றப்படுவதால்தான் மனிதர் உலகில் இருந்து வருகின்றனர்; அந்த அன்பைச் சதந்திரமாக ஏற்று, படைத்தவருக்குத் தம்மையே கையளிக்காவிடில் அவர்கள் உண்மையின்படி முழுமையாக வாழமுடியாது. எனினும் நம் காலத்தில் வாழும்மக்கள் பலர் மனிதர்கள் கடவுளோடு கொண்டுள்ள இந்த உள்ளார்ந்த உயிரோட்டமுள்ள ஒன்றிப்பைக் கண்டுகொள்வதில்லை, அல்லது அதனை வெளிப்படையாக மறுத்துத் தள்ளிவிடுகிறார்கள். ஆக, கடவுள் மறுப்புக் கொள்கை நம் காலத்தில் மிகத் கவலைதரும் காரியங்களுள் ஒன்றாக இருந்த வருகிறது. எனவே கருத்தூன்றி அதுபற்றி ஆராய வேண்டும்.
'கடவுள் மறுப்புக் கொள்கை' எனும் சொற்றறொடரால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்ட கூறுகள் குறிக்கப்படுகின்றன. சில் கடவுள் இல்லை என வெளிப்படையாக மறுக்கின்றனர். வேறுசில் மனிதரால் அவரைப்பற்றி ஒன்றும் திண்ணமாகக் கூற இயலாது எனக் கருதுகின்றனர். இன்னும் சிலர் கடவுளைப்பற்றி ஆய்வதற்குப் பின்பற்றும் ஆய்புமுறை கடவுளைப் பற்றிய சிக்கலையே அவர்களுக்கும் பொருளற்றதாக தோன்றச்செய்கிறது. பொருண்மை அறிவியல்களின் செயல் எல்லையை மிதமிஞ்சிய முறையில் தாண்டிச் சென்று பலர், அறிவியல் முறைப்படியே அனைத்தையும் விளக்கிவிடலாம் என வாதாடுகின்றனர், அல்லது நிலையான உண்மை எதுவும் இருப்பதையே மறுக்கின்றனர். சிலர் கடவுளின் மேல் தாங்கள் கொண்ட நம்பிக்கை தளர்வடையும் அளவுக்கு மனிதரை உயர்த்திப் புகழ்கின்றனர்; இவர்கள் கடவுளை எவ்வாறு உருவகிக்கிறார்கள் என்றால், அவர்கள் ஒதுக்கித் தள்ளுகின்ற இநதக் கற்பனைக் கடவுளுக்கும் நற்செய்தி எண்பித்துநிற்கும் கடவுளுக்ம் யாதொரு தொடர்புமில்லை. சிலர் கடவுளைப் பற்றிக் கேள்வி எழுப்புவதே இல்லை, சமயத்தை கைவிட நேர்ந்தால் மன அமைதி மறைந்து போகும் என்பதை அவர்கள் உணர்ந்ததாகத் தோன்றவில்லை; சமயம் பற்றி ஏன் தாங்கள் கவலைப்படவேண்டும் என்பதும் அவர்களுக்குப் புரிவதில்லை. இன்னும் இவ்வுலகிலுள்ள தீமையைத் தீவிரமாகக் கண்டனம் செய்வதிலிருந்தும் கடவுள் மறுப்புக் கொள்கை பன்முறைகளில் எழுகிறது; அல்லது முழுமுதல் பொருளுக்குரிய பண்புகளைத் தவறாக ஒருசில மனித இலட்சியங்களுக்கு ஏற்றிப் பொருளுரைத்துவிடுவதால் இவையே கடவுளின் இடத்தைப் பெறும் அளவுக்கு வந்துவிடுவதாலும் கடவுள் கறுப்புக் கொள்கை பிறக்கிறது. இன்றைய பண்பாடும் கூட, தன்னியல்பிலேயே இல்லாவிடினும், மண்ணுலகக் காரியங்களில் மிகவும் உழன்றுவிடுவதால் கடவுளை மனிதர் அணுகிச் செல்வதைப் பல வேளைகளிலும் கடினமாக்கக் கூடும்.
மனச்சான்று விடுவிக்கும் கட்டளையைப் பின்பற்றாது தங்கள் இதயத்திலிருந்து கடவுளை மனம் பொருந்தி அகற்றிவிட்டு, சமயம் சார்ந்த கருத்தாய்வுகளைத் தட்டிக்கழிக்க முனைபவர்கள் குற்றமற்றவர்கள் அல்லர் என்பது தெளிவு. இருப்பினும், இத்தகைய நிலை எழுவதற்கும் நம்பிக்கை கொண்டோரும் ஓரளவு பொறுப்பாளிகளே. ஏனெனில், கடவுள் மறுப்புக் கொள்கையை முழுமையாகப் பார்த்தோம் என்றால் அது தன்னியல்பாகத் தோன்றும் ஒன்றன்று; மாறாக அது பல காரணங்களைக் கொண்டு தோன்றுகின்றது. சமயங்களுக்கு எதிராக, அதிலும் சில பகுதிகளில் முக்கியமாகக் கிஙிஸ்கவ சமயத்திஙற்கெதிராகக் கூறப்படும் குறைகள் மேற்கூறிய காரணங்களுள் ஒன்றாகும். எனவே கடவுள் மறுப்புக் கொள்கை தோன்றுவதற்கு நம்பிக்கை கொண்டோரும் பெரும் பொறுப்பாளிகளாக முடியும்; ஏனெனில் தங்கள் நம்பிக்கைக் கல்வியை நெகிழ விடகதாலோ, சமயப் படிப்பினையைத் தவறாக விளக்குவதாலோ, தம் சமய அறநெறி, சமூக வாழ்க்கை முறைகளில் குறைகளைக் கொண்டிருப்பதாலோ சமயம் மற்றும் கடவுளுடைய உண்மையான உருவை இவர்கள் மறைத்து விடுகிறார்களேயன்றி அதை வெளிக்காட்டவில்லை என்றே கூற வேண்டும்.
20. கோட்பாட்டு அமைப்பப் பெற்ற கடவுள் மறுப்புக் கொள்கை
இன்றைய கடவுள் மறுப்புக் கொள்கை பல வேளைகளில் கோட்பாட்டு அமைப்புப் பெற்ற ஒன்றாகவும் உருக்கொண்டுள்ளது. இந்தக் கோட்பாட்டு அமைப்பு எடுத்துரைக்கும் பிற கருத்துகளை நாம் கருதாது விடுப்பினம், இது மனிதரின் தன்னாட்சி உரிமை பற்றிய வேட்கையை அளவுக்கு மிஞசி வலியுறுத்துகிறது; இதன் விளைவாக, கடவுள்மேல் நாம் கொள்ளும் உத்தகைய சார்புக்கும் எதிராக இக்கோட்பாட்டு அமைப்பு தடைச்சுவர் எழுப்புகிறது. இத்தகைய கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்போர், மனிதர் தாமே தம் இறுதி கதியாகவும், தாம் மட்டுமே தம் வரலாற்றின் சிற்பியாகவும் அதை ஆக்கியோராகவும் இருப்பதில்தான் சுதந்திரம் அல்லது தன்னுரிமை அடங்கி உள்ளது என வாதிடுவர். இத்தகைய கண்ணோட்டமும், மற்றும் யாவற்றையும் ஆக்கி அவற்றின் இறுதி கதியாய் விளங்கும் ஆண்டவலை ஏற்றுக் கொள்ளம் பார்வையம் ஒன்றுக்கொன்று முரணானவை என்பது இவர்களது வாதம்; அல்லது அக்கண்ணோட்ம் படைப்பின் கடவுள் பற்றிய பார்வையைத் தேவையற்ற ஒன்றாகவாவது ஆக்கிவியடகிறது என இவர்கள் கருதுகின்றனர். இன்றைய தொழில் நுட்பத் துறையின் முன்னேற்றம் மனிதருக்கு அளிக்கும் ஆற்றல் உணர்வு மேற்கூறிய கொள்கையை ஆதரிக்கக் கூடும்.
இன்றைய கடவுள் மறுப்புக் கொள்கையின் பல வடிவங்களில் இன்னொரு வடிவத்தை இவண் குறிப்பிடாமல் இருக்க முடியாது; மனித விடுதலை என்பது சிறப்பாக அவர்களது பொருளாதார, சமூக விடுதலையின் வழியாக நிகழ்ந்துவிடும் என இக்கண்ணோட்டம் எதிர்பார்க்கிறது. சமயம் கானல் நீர் போன்றதொரு வருங்கால வாழ்வில் மனிதரை நம்பிக்கை கொள்ள வைத்து, மண்ணக நகரைக் கட்டியெழுப்புவதிலிருந்து அவர்களை எந்த அளவுக்குத் தடுத்துவிடுகிறதோ அந்த அளவுக்கு அது மேற்கூறிய மனித விடுதலைக்குத் தன்னியல்;;;பிலேயே தடையாயிருக்கிறது எனவும் வாதாடுகிறது இவ்வகைக் கொள்கை. எனவேதான் இத்தகைய கொள்கையயை ஆதரிப்பவர்கள் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும்பொழுது சமயத்தை கடுமையாகத் தாக்குகினறனர். அரசின் கைவசமுள்ள வற்புறுத்தல் முறைகளை முக்கியமாக இளைஞர் கல்வியில் பயன்படுத்தி கடவுள் மறுப்புக் கொள்கையைப் பரப்புகிறார்கள்.
21. கடவுள் மறுப்புக் கொள்கை பற்றித திருச்சபையின் கருத்து
கடவுளுக்கும் மனிதருக்கும் நம்பகமாக நடந்துகொள்ளும் திருச்கபை மனிதரின் பகுத்தறிவுக்கும் பொது அனுபவத்திற்கும் முரணானவையும், மனிதரின் இயல்புக்குரிய மேன்மையை அழிக்கத் தேடுபவையுமான இத்தகைய பெருந்தீங்கிழைக்கவல்ல கொள்கைகளையும் செயல்களையும் ஏற்கெனவே வெறுத்து ஒதுக்கியதைப்போல, வருத்தத்தோடும் மிக்க உறுதியோடும் வெறுத்து ஒதுக்காதிருக்க முடியாது.16
ஆயினும் திருச்சபை, கடவளை மறுப்போரின் மனதில் மறைந்திருக்கம் இம்மறுப்பின் காரணங்களை அறிய முனைகிறது. கடவுள் மறுப்புக் கொள்கை எழுப்பும் வினாக்கள் எவ்வளவு கனமானவை என்பதை உணர்ந்து மனிதர் அனைவர்மீதும் அன்பால் தூண்டப்பெற்று, மேற்கூறிய காரணங்களைக் கருத்தோடும் மிக ஆழ்ந்தும் ஆராயவேண்டுமென திருச்சபை நம்புகிறது.
மனிதரின் மாண்ப கடவுளையே அடிப்படையாகக் கொண்டிருப்பதாலும், அவரிலேயே அது நிறைவ பெறுவதாலும், கடவுளை ஏற்பது எவ்வகையிலும் மனிதரின் மாண்பிற்கு எதிரானதல்ல என்பது திருச்சபையின் கொள்கை. ஏனெனில், படைப்பின் கடவுள் மனிதர்களை அறிவுள்ளவர்களாகவும் தன்னுரிமையுள்ளவர்களாகவும் சமூகத்திலே நிலை நிறுத்தினார். சிறப்பாக, கடவுளின் பிள்ளைகள் என்னம் முறையில் அவரோடு ஒன்றித்து உரையாடவும்,அவரது பேரின்பத்தில் பங்குபெறவும் அவர்கள் அழைக்கப் பெறுகின்றனர். நிறைவுக்கால எதிர்நோக்கின்மேலும் கொண்டுள்ள உறுதி மண்ணுலப் பணிகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில்லை; மாறாக இந்த எதிர்நோக்கு மண்ணுலகப் பணிகளை நிறைவேற்ற மனிதருக்குப் புதிய செயல் நோக்கங்களை அளித்துத் தூண்டுகிறது என திருச்சபை கற்பிக்கிறது. அதற்கு மாறாக, கடவுளை அடிப்படையாகக் கொள்ளாமலும் நிலை வாழ்வை எதிர்நோக்கமலும் இருக்கும்போழுது, இக்காலத்தில் பல வேளைகளில் நாம் காண்பதுபோல, மனிதரின் மாண்பு பெரிதும் புண்படுத்தப்படுகிறது; மேலும் வாழ்வு, சாவு குற்றம் துன்பம் அகியவை தீர்வ காணவியலாப் புதிர்களாகி விடுகின்றன் இவ்வாறு மனிதர்கள் பல வேளைகளில் எதிர்நோக்கை இழந்திடவும் நேரிடுகிறது.
இவ்வாறு இருக்க, ஒவ்வொரு மனிதரும் தமக்குத்தாமே தெளிவாக உணரப்படாத, விடை காணப் பெறாத ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றனர். உண்மையில், சில குறிப்பிட்ட நேரங்களில், சிறப்பாக வாழ்வின் முக்கியமான நிகழ்ச்சிகளின்போது நாம் முன்பு குறிப்பிட்ட கேள்விகளிலிருந்து எவருமே முழுமையாகத் தப்பித்துவிட முடியாது. அதிக ஆழ்ந்த சிந்தனைக்கும் மிகுந்த தாழ்ச்சியோடு கூடிய ஆய்வுக்கும் மனிதரை அழைக்கும் கடவுள் ஒருவரே இந்த வினாக்களுக்கு முழுமையான உறுதியோடுகூடிய விடையளிக்கிறார்.
பொருத்தமான முறையில் வழங்கப்படுகினற திருச்சபைப் படிப்பினையிலிருந்தும், மற்றும் திருச்சபையினுடையவும் அதன் உறுப்பினருடையவும் நேரிய வாழ்விலிருந்தும் தான் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு அளிக்கப்பட வேண்டிய தீர்வனை எதிர்பார்க்க வேண்டும். தூய ஆவியின் வழகாட்டுதலின் கீழ் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துத் தூய்மைப்படுத்தக் கொண்டு,17 இறைத்தந்தையையும், மனிதராகப் பிறந்த அவருடைய மகனையும் நம்மிடையே ஒருவித்தில் காணக்கூடிய முறையிலே இருக்கச் செய்வது திருச்சபை பெற்றுள்ள பணியாகும் இப்பணியை நிறைவேற்ற வேண்டுமானால், முதன்முதலில் உயிரோட்டமுள்ளதும் முதிர்ச்சிடைந்ததுமான நம்பிக்கைச்சான்று தேவைப்படுகிறது; அதாவது, சிக்கல்களைத் தெளிவாகக் கண்டுணர்ந்து, அவற்றிற்குத் தீர்வுகாண்ப பயிற்றுவிக்கப்பட்ட நம்பிக்கை தேவைப்படுகிறது. எத்தமையோ மறைச் சாட்சிகள் இந்த நம்பிக்கை தேவைப்படுகிறது; எத்தனையோ மறைச் சாட்சிகள் இந்த நம்பிக்கைக்கு மிகச் சிறந்த சான்று பகர்ந்துள்ளார்கள்; பகர்ந்தும் வருகிறார்கள். இந்த நம்பிக்கை, நம்பிக்கை கொண்டோரின் உவகசார் வாழ்வு உட்பட, முழுவாழ்வையும் ஊடுருவி, அவர்கள் நீதியையும் அன்பையும் கழைப்பிடிக்கத் தூண்டுவதன் மூலமாகத் தன் வளமையை வெளிப்படுத் வேண்டும். இறுதியாக, நற்செய்தியின் மேலுள்ள நம்பிக்கைக்காக ஒருமனதோடு போராடி,18 ஒற்றுமையின் வெளி அடையாளமாகத் தம்மையே எண்பிக்கும் நம்பிக்கை கொண்டோரின் அடையாளமாகத் தம்மையே எண்பிக்கம் நம்பிக்கை கொண்டோரின் சகோதர அன்வே கடவுளின் உடனிருப்பை அனைவருக்கும் வெளிக்காட்;ட மிகச் சிறப்பாக உதவும்.
திருச்சபை கடவுள் மறுப்புக் கொள்கையை அடியோடு தள்ளிவிடினும், எல்லா மனிதரும், கடவுள் நம்பிக்கை கொண்டோரும் கடவுள் நம்பிக்கையில்லாதவரும், தாங்கள் ஒருங்கிணைந்து குழுவாக வாழும் இந்த உலகசை; செவ்வனே வளர்ச்சியுறச் செய்ய உழைக்கவேண்டுமென முழுமனதோடு அறிக்கையிடுகிறது; நேர்மையுடனும் முன்மதியுடனும் கூடிய உரையாடலினாலன்றி மேற்கூறிய குறிக்கோளை அடைய முடியாது. எனவே நாட்டு ஆட்சியாளர் சிலர் மனிதரின் அடிப்படை உரிமைகளை ஏற்காதவராய் கடவுள் நம்பிக்கை கொண்டோரையும் கடவுள் நம்பிக்கையில்லாதவரையும் அநீதியாக வேறுபடுத்திக் காட்டுவது பற்றிக் திருச்சபை வருத்தம் தெரிவிக்கிறது. இவ்வுலகிலேயே கடவுளுக்குக் கோவில் எழுப்புவதற்கான நடைமுறைச் சுதந்திரம் கடவுள் நம்பிக்கை கொண்டோhருக்கு அளிக்கப்பட வேண்டுமெனத் திருச்சபை கோரிக்கை விடுவிக்கிறது. கிறிஸ்துவின் நற்செய்தியைத் திறந்த மனதோடு ஆராயுமாறு கடவுளை மறுப்பவரைப் பணி;வன்புடன் அழைக்கிறது.
ஏனெனில் உயர்வாழ்வு தமக்கு கிடைக்கும், எனும் எதிர்நோக்கை இழந்துவிட்டவர்களுக்கு மீண்டும் உறுதியூட்டி, மனித அழைப்பின் மாண்பை நிலைநாட்டுங்கால், மனித உள்ளத்திலே ஆழ்ந்து மறைந்து கிடகக்கும் ஏக்கங்களுக்குப் பொருத்தமாகலே தன் தூதுச் செய்தி இருப்பதை திருச்சபை நன்கு அறிந்துள்ளது திருச்சபையின் அத்தூதுச் செய்தி மனிதரைத் தாழ்நிலைக்குக் கொணரும் ஒன்றன்று; நேர் மாறாக, அது அவர்களது வளர்ச்சிக்கு ஒளியும், உயிரும் சுதந்திரமும் தருகிறது. அத்தூதுச் செய்தி மனிதரைத் தாழ்நிலைக்குக் கொணரும் ஒன்றன்று; நேர்மாறாக அது அவர்களது வளர்ச்சிக்க ஒளியும், உயிரும், சுதந்திரமும் தருகிறது. அத்தூதுச்செய்தியைத் தவிர்த்து வேறெதுவும் மனிதரின் இதயத்தை நிறைவு செய்ய இயலாது; ஆண்டவரே நீர் எங்களை உமக்காகவே உண்டாக்கினீர்; எங்கள் இதயம் உம்மில் அமைதியுறும்வரை அதற்கு அமைதியில்லை19.
22. புது மனிதர் கிறிஸ்து
மனிதராகவும் பிறந்த வாக்கின் மறைபொருளில்தான் மனிதரின் மறைபொருள் உண்மையாகவே விளக்கம் பெறுகிறது. உண்மையிலே, முதல் ஆதாம், வரவிருப்பவராக எதிர்பார்க்கப்பட்ட ஆண்டவர் கிறிஸ்துவின் முன் அடையாளமாக இருந்தார்.20 புதிய ஆதாம், கிறிஸ்து, தந்தையுடையவும் அவருடைய அன்பினுடையளவும் மறைபொருளை வெளியிடுவதின் வழியாக மனிதரை மனிதருக்கே முழுதும் வெளிப்படுத்தி, அவர்களுடைய உயரிய அழைப்பை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். ஆகவே, மேலே விளக்கிய உண்மைகளெல்லாம் கிறிஸ்துவைத் தமது ஊற்றாகவும், கொடுமுடியாகவும் கொண்டிருக்கின்றன என்பதில் வியப்பு ஒன்றுமில்லை.
''கட்புலனாகாத கடவுளது சாயலான'' (கொலோ1:15)21 இவரே நிறைவு பெற்ற மனிதராவார். முதல் பாவத்தினால் உருக்குலைந்த இறைச் சாயலை ஆதாமில் மக்களுக்கு அவர் மீண்டும் அளித்தார். மனித இயல்பை அவர் தம்மில் ஏற்றுக்கொண்டாரேயொழிய, அது அமிழ்ந்துவிடவில்லை22 ஆகவேதான் மனித இயல்பு மாண்புமிகு சீரிய நிலைக்கு உயர்த்தப் பெற்றுள்ளது. ஏனெனில், இறைமகனாகிய அவர் தாம் மனிதராக பிறந்தால் ஒவ்வொரு மனிதரோடும் ஒருவகையில் தம்மையே ஒன்றித்துள்ளார். அவர் மனிதக் கைகளால் வேலை செய்தார்; மனித உள்ளத்தால் செயல்பட்டார்; மனித இதயத்தால் அன்பு செய்தார். கன்னிமரியாவிடடமிருந்து பிறந்து அவர் உண்மையில் நம்மில் ஒருவரானார்; பாவம் தவிர மற்றெல்லாவற்றிலும் நம்மைப்போல் ஒருவரானார்.24
மாசற்ற ஆட்டுக்குட்டியான அவர், தாமாகவே விரும்பித் தம் இரத்தத்தைச் சிந்தி நமக்கு வாழ்வைப் பெற்று தந்தார். அவர் வழியே கடவுள் நம்மைத் தம்மோடும், நமக்குள்ளும் ஒப்புரவாக்கியுள்ளார்;25 பேயினுடையவும் பாவத்தினுடையவும் அடிமைத்தளையினின்று நம்மை விடுவித்தார். இதனால் இறைமகன்''என்மீது அன்பு கூர்ந்தார்; எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்'' (கலா 2:20) எனக்கூறும் திருத்தூதர் பவுலோடு நாம் ஒவ்வொருவரும் கூறமுடியும் நமக்காக துன்புற்ற அவர் நாம் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்ற26 முன்மாதிரி வைத்துச் சென்றதோடு மட்டும் நின்றுவிடவில்லை; முன்மாதிரி வைத்துச் சென்றதோடு மட்டும் நின்றுவிடவில்லை; மாறாக புதியதொரு வழியையும் திறந்துவைத்தார். இப்பாதையில் நாம் வழிநடக்கும்போது, வாழ்வும் சாவும் தூய்மையாக்கப்பெற்று, ஒரு புதிய பொருள்விளக்கம் பெறுகின்றன.
பலருள் தலைப்பேறானவராகிய27 இறைமகனின் சாயலுக்கு ஒத்தவர்களாக மாற்றப்பட்ட கிறிஸ்தவர் ''முதல்கொடையாகத் தூய ஆவியை''(உரோ8:23) பெறுகின்றனர். இதனால் அவர்கள் அன்பின்புதிய கட்டளையை நிறைவேற்ற வல்லவராகின்றனர்.28நாம் உரிமைப் பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிற'' (எபே 1:14) இதே ஆவியின் வழியே ''நம் உடலை விடுவிக்கும் நாள்வரை'' (உரோ8:23) முழுமனிதருமே உள்;ரப் புதுப்பிக்கப்படுகிறார்; இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செயதவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்nருக்கும் தம் ஆவியினாவே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்''(உரோ8:11). துன்பங்கள் பல அடைய நேரிடினும் தீமையை எதிர்த்துப் போராடுவதும், சாவுக்கு ஆளாவதும் கிறிஸ்தவரால் தவிர்க்க முடியாதவையே; அவை அவர்கள் கடமையும்கூட் ஆனால் அவர்கள் பாஸ்கா மறைபொருளில் பங்குகொண்டு கிறிஸ்துவின் சாவின் சாயலை ஏற்று எதிர்நோக்கால் உறுதி உயிர்த்தெழுதலை நாடிச் செல்கின்றனர்.30
இது கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்துவதன்று; மாறாக நல்மனம் கொண்ட அனைத்து மனிதருக்கும் பொருந்தும்; இவர்களின் இதயங்களில் இறையருள் கட்புலனாகாவண்ணம் செயலாற்றுகிறது.31ஏனெனில், கிறிஸ்து அனைவருக்காகவும் இறந்தார்; மேலும் மனிதருடைய இறுதி அழைப்பும் உண்மையில் ஒன்றே: அத தெய்விக அழைப்பே, எனவே, கடவுளுக்கே தெரிந்த முறையில் இந்த பாஸ்கா மறைபொருளில் இணைக்கப்பட தூய ஆவி எல்லோருக்கும் வாய்ப்பளிக்கிறார் என நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இத்துணை சீரும் சிறப்பும் மிக்கதே மனிதரின் மறைபொருள். இம்மறைபொருள் கிறிஸ்தவ வெளிப்பாட்டின் வழியாக நம்பிக்கை கொண்டோருக்குத் தெளிவாகின்றது. ஆக, துன்பம், சாவு ஆகியவற்றின் புதிர் கிறிஸ்துவின் நற்செய்திக்குப் புறம்பே இப்புதிர் நம்மைத் திணறடித்துவிடும். சாவைத் தம் சாவால் அழித்தக் கிறிஸ்து உயிர்த்தெழந்துவிட்டார்,33 நமக்கு வாழ்வை வளமாக வழங்கியுள்ளார். இவ்வாறு மகனாகிய அவரில் நாமும் பிள்ளைகளாகியிருக்கிறோம்; எனவே நாமும் தூய ஆவியில் ''அப்பா, தந்தையே''34 என அழைக்கப்பேறுபெற்றோம்.
இயல் 2
மனித சமூகம்
23. சங்கத்தின் நோக்கம்
மனிதர் ஒருவர் ஒருவரோடு கொண்டுள்ள பிணைப்புகள் பெருகிவருதல் இன்றைய உலகின் முக்கிய கூறுகளுள் ஒன்றாகும். இப்பிணைப்புகளை அதிகரிக்க இன்றைய தொழில் நுட்பத்துறையின் முன்னேற்றம் மிகவும் உதவுகிறது.உனினும், மனிதரிடையே நிகழும் சகோதர உரையாடல் இம்முன்னேற்றத்தில் நிறைவடைந்து விடுவதில்லை; மாறாக, ஆள்கள் என்ற முறையில் மனிதர்கள தங்களுக்குள் கொள்ளும் ஒன்றிப்பிலேயே மிக ஆழ்ந்த முறையில் இவ்வுரையாடல் தன் முழுமையை அடைகிறது. இத்தகைய ஒன்றிப்பு ஏற்பட வேண்டுமானால் மனிதர்களின் முழு ஆன்மீக மாண்பை ஒருவருக்கொருவர் மதிக்கவேண்டும். மனிதாகளுள் இந்த ஆள்நிலை உறவை வளர்ப்பதில் கிறிஸ்தவ வெளிப்பாடு மிகவும் உதவுகிறது; மேலும், படைப்பின் கடவுள் மனிதரின் ஆன்மீக மற்றும் அறநெறி சார்ந்த இயல்பிலேயே பொதிந்துள்ள சமூக வாழ்வுக்கான ஒழுங்குகளை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் இவ்வெளிப்பாடு நம்மை நடத்திச் செல்கிறது.
மனித சமுதாயத்தைப் பற்றிய கிறிஸ்தவப் படிப்பினையைத் திருச்சபை ஆசிரியத்தின் அண்மைக்கால ஏடுகள் விரிவாக விளக்கியுள்ளன.1எனவே, மிக முக்கியமான சில உண்மைகளை மட்டும் ஈண்டு நினைவிற்குக் கொணர்ந்து,அவற்றின் அடிப்படைகளை இறைவெளிப்பாட்டின் ஒளியில் விளக்குகின்றது இச்சங்கம். பின்னர், இக்காலத்திற்கு மிகவும் முக்கியமான விளைவுகள் சிலவற்றை அது கோடிட்டுக் காட்டும்.
24. இறைத் திட்டத்தில் மனித அழைப்பின் சமூக இயல்ப
அனைவரிடத்திலும் தந்தைக்குரிய அக்கறை கொண்டுள்ள கடவுள், எல்லா மக்களும் ஒரே குடும்பமாக அமைந்து, ஒருவர் ஒருவரைச் சகோதர மனப்பான்மையோடு நடத்த வேண்டுமென விரும்பினார். ''ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அமைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின் மீது குடியிருக்கச் செய்த'' (திப17:26) கடவுளின் சாயலாக படைக்கப்பட்டுள்ள மக்களைனைவரும் கடவுள் என்னும் ஒரே கதியை அடைந்திடவே அழைக்கப்பட்டள்ளனர்.
இதன் காரணமாகவே கடவள் மீதம் பிறர்மீதும் அன்பு செய்வது முதன்னையான, மிகப் பெரிய கட்டளையாகும். இறையன்பை அடுத்வரன்பிலிருந்து பிரிக்க இயலாது என்பதை விவிலியம் நமக்குக் கற்பிக்கின்றது; ''பிற கட்டளைகளும் உன் மீது அன்பு கூர்வாயாக' என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு''(உரோ(13:19-10; காண் 1 யோவா 4:20) இன்று மனிதர்கள் ஒருவர் ஒருவர்மேல் நாளும் அதிகமதிகம் ஒன்றித்து வருகிறத் இப்பின்னணியில் மேற்கூறிய உண்மை ஆழ்ந்த பொருளுடைத்ததாக உள்ளது.
இது மட்டுமன்று ''நாம் ஒன்றாய் இருப்பதுபோல் எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக'' (யோவா17:21-22) என ஆண்டவர் இயேசு தந்ததையிடம் மன்றாடும்போது மனித அறிவுக்கு எட்டாத ஒன்றை பார்வை தருகிறார்;: அதாவது இறை ஆள்களுள் நிலவும் ஒன்றிப்பிற்கும் இடையே உள்ள ஒருவித ஒற்றுமையையே இங்குக் குறிப்பிடுகிறார். மண்ணில் மனிதர்கள் என்ற படைப்பை மட்டும் கடவுள் அவர்கள் பொருட்டே படைக்கத் திருவுளம் கொண்டார்; படைக்கப்பட்ட இம்மனிதர் தம்மையே உளமார்ந்த கொடையாக அளிப்பதன் மூலமாகவே தம்மையே முழுமையாய்க் கண்டடைய முடியும்2 என்பதை மேற்கூறிய ஒற்றுமை எடுத்துக் காண்பிக்கிறது.
25. மனிதரும் மனித சமுதாயமும் ஒன்னையொன்று சார்ந்திருக்கின்றன
மனிதரின் முன்னேற்றமும் சமூகத்தின் வளர்ச்சியும் ஒன்றின் மேல் ஒன்று சார்ந்திருக்கின்றன என்பது மனிதரின் சமூகப் பண்பிலிருந்து தெளிவாக விளங்குகிறது. ஏனெனில், மனிதருக்குத் தம் இயல்பிலேயே சமூக வாழ்வு முற்றிலும் இன்றியமையாதது. இம்மனிதரே எல்லாச் சமூக வாழ்வு முற்றிலும் இன்றியமையாதது. இம்மனிதரே எல்லாச் சமூக நிறுவனங்களின் முதலும், பொருளும், முடிவுமாக இருக்கின்றனர்; அவ்வாறே இருக்கவும் வேண்டும். இச்சமூக வாழ்க்கை மனிதருக்கு புறம்பேயிருந்து வரும் ஒன்றன்று; மாறாக மற்றவரோடு தாம் கொள்ளம் தொடர்பாலும்,ஒருவர் ஒருவருக்கான கடமைகளை ஆற்றுவதாலும், சகோதர உரையாடலாலும் தம் திறமைகள் அனைத்தையும் அவர்கள் வளர்கின்றனர்; இவ்வாறு, தம் அழைத்தலுக்கு உகந்த பதில் மொழியை வழங்க அவர்களால் இயலுகிறது.
மனிதரின் வளர்ச்சிக்குத் தேவையான சமூகப் பிணைப்புகளில் குடும்பம், மற்றும் அரசியல் சமூகம் போன்றவை அவர்களுடைய ஆழ்ந்த இயல்போடு உடனடியாக இசைந்து போவனவாகும்; மற்றவை ஒருவிதத்தில் அவர்களுடைய சொந்த விருப்பத்திலிருந்தே பிறக்கின்றன. இன்று பல காரணங்களால் ஒருவர் ஒருவரோடு கொண்டுள்ள பிணைப்புகளம் சார்புகளும் நாளும் அதிகரித்து வருகின்றன. இதனால், தனிப்பட்ட அல்லது பொதுவான சட்ட உரிமைகளின் அடிப்படையில் பலவிதக் குழு அமைப்புகளும் நிறுவனங்களும் தோன்றுகின்றன. இந்நிகழ்வு 'சமூகமயமாக்கல்' என்றழைக்கப்படுறது. இதில் ஆபத்துக்கள் இல்லையென்று சொல்லமுடியாது; என்றாலும் மனித ஆள்களின் பண்புகளை உறுதிப்படுத்தி வளர்க்கவும், அவர்களுடைய உரிமைகளைக் காக்கவும் சமூகமயமாக்கல் பெருந்துணையா உளது4
சமய வாழ்வையும் உள்ளடக்கிய தம் அழைத்தலைச் செயல்படுத்துவதற்கு மனிதர்கள சமூக வாழ்விலிருந்து பெரிதும் பயன்பெறுகிறார்கள்: ஆயினும், தங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே எந்தச் சமூகச் சூழ்நிலைகளில் அமிழ்ந்து வாழ்கின்றார்களோ அந்தச் சூழ்நிலைகளால் அவர்கள் பல வேளைகளிலும் நன்மையை நீக்கித் தீமையைத் தேட உந்தப்படுகிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. பன்முறையும் சமூக ஒழுங்கைக் குலைக்கும் முறைகேடுகள் ஓரளவிற்குப் பொருளாதாரம், அரசியல், சமூக அமைப்புகளிடையே நிலவுகின்ற இழுபறியிலிருந்தே ஏற்படுகின்றன என்பது உறுதி. ஆனால் இன்னும் ஆழ்ந்து நோக்கின், இம்முறைகேடுகளுக்குக் காரணம் சமூகச் சூழமைவையே சீர்குலைக்கும் மனிதரின் தற்பெருமையும் தன்னலமுமே ஆகும். பாவத்தின் விளைவுகளால் உலகப் பொருள்களின் ஒழுங்குமுறை சீர்குலைந்திருக்குமிடத்து, பிறப்பிலிருந்தே தீமையில் நாட்டமுள்ளவர்களாகத் துலங்கும் மனிதர்கள் இன்றும் பாவத்திற்கான புதிய தூண்டுதல்களைக் காண்கின்றனர்; அருளின் துணையோடு சேர்ந்த கடின முயற்சியின்றி இவற்றின்மேல் அவர்கள் வெற்றி கொள்ளமுடியாது.
26. பொதுநலனை வளர்த்தல்
மனிதர் ஒருவர் ஒருவரோடு கொள்ளம் சார்பு மேன்மேலும் நெருங்கியும் படிப்படியாகப் பாரெங்கும் பரவியும் வருகின்றது. இதன் விளைவாகப் பொதுநலன் இன்று மேன்மேலும் அனைத்துலகத் தன்மை கொண்டதாக மாறிவிட்டது; இதன் காரணமாக அது மனித குலம் முழுவதையும் சார்ந்த உரிமைகளையும் கடமைகளையும் உள்ளடக்குகிறது. குழுக்களும் தனி உறுப்பினர்களும் தத்தம் நிறைவை அதிக முழுமையோடு அதிக எளிதாகவும் அடைவதற்கு உதவுகின்ற சமூக வாழ்வுச் சூழ்நிலைகளின் தொகுப்பே பொதுநலன் என்றழைக்கப்படுகிறது. மற்ற குழுக்களின் தேவைகளையும் முறையான ஆவல்களையும், ஏன் மனிதக் குடும்பம் முழுவதின் பொதுநலனையும் ஒவ்வொரு குழுவும் தன் கண்முன் கொள்ளவேண்டும்.5
அதே நேரத்தில் மனிதருக்கு உரித்தான உயரிய மாண்பு பற்றிய விழிப்புணர்வு அதிகமதிகமாக இன்று வளர்நது வருகிறது. மனிதர்கள் எல்லாப் பொருள்களுக்கும் மேலானவர்கள்; அவர்களுடைய உரிமைகளும் கடமைகளும் அனைவருக்கும் பொதுவானவையாகவும் மீறக் கூடாதவையாகவும் உள்ளன. ஆகையால், உண்மையிலேயே மனிதத் தன்மையோடு வாழத் தேவையானவையெல்லாம் அவர்களுக்குக் கிடைக்குமாறு செய்ய வேண்டும்; இவை உணவு உடை, உறைவிடம், தம் வாழ்க்கை நிலையைச் சுதந்திரமாகத் தேர்ந்து கொள்ளவும் குடும்பம் அமைக்கவும் உரிமை, கல்வி உரிமை, தொழில் உரிமை, நன்மதிப்பு உரிமை, மரியாதை உரிமை, சரியான தகவல் உரிமை, தம் மனச்சான்றின் முறையான கட்டளைக்கு அமைந்து நடக்க உரிமை, தனி வாழ்வுப் பாதுகாப்ப உரிமை, சமயம் சார்ந்தவை உட்பட எல்லாவற்றிலும் நீதிக்குகந்த சுதந்திரம் கொண்டிருக்க உரிமை ஆகியவையாகும்.
சமூக அமைப்பும் அதன் வளர்ச்சியும் மனித ஆள்களின் நலனுக்கே பயன்படுவனவாக இருத்தல் வேண்டும். ஏனென்றால் மனித ஆள்களின் ஒழுங்கமைப்புக்குக் கீழ்ப்பட்டே பொருள்களின் ஒழுங்கமைப்பு இருக்க வேண்டுமேயன்றி மாறாக அல்ல. ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை என்று சொல்லிக் காட்டியதின் வழியாக6 ஆண்டவரே இதை நமக்கு வளர வேண்டும்; உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்; நீதியின்மேல் கட்டப்பட்டிருக்க வேண்டும்; அன்பால் உயிரோட்டம் பெற வேண்டும்; மேலும், சுதந்திரதின் வழியாக மேன்மேலும் அதிக அளவில் மனிதப் பண்பு துலங்குகின்ற ஒரு சமன்பாட்டு நிலையை அது கண்டடைய வேண்டும்.7 இவை அனைத்தும் நடைமுறையில் வரவேண்டுமென்றால் சிந்தனை அளவில் ஒரு மறுமலர்ச்சியும், சமூக அளவில் பற்பல மாற்றங்களும் புகுத்தப்பட வேண்டும்.
காலப்போக்கை வியத்தகு பராமரிப்போடு நடத்தி, உலகைப் புதுப்பித்து வரும் கடவுளின் ஆவியார் இந்த வளர்ச்சியில் உடனிருந்த வருகிறார். மனிதரின் மாண்பு ஏற்கப்ப்படவேண்டும் என்னும் கட்டுப்படுத்தமுடியா வேட்கையை மனிதரின் உள்ளத்தில் நற்செய்தி என்னும் புளிப்புமாவு எழுப்பியது; எழுப்பியும் வருகிறது.
27. மனித ஆளுக்குச் செலுத்த வேண்டிய மரியாதை
உடனடியாக கருத்தில் கொள்ளப்பட வேண்டிய நடைமுறை விளைவகளைப் பார்க்க வருமிடத்து, மனிதருக்குக் காட்டவேண்டிய மரியாதையைச் சங்கம் வலியுறுத்துகிறது; அதாவது, மனிதர் ஒவ்வொருவரும், எவ்வித விதிவிலக்குமின்றித் தமக்கு அடுத்திருப்பவரைத்தம் 'மறு உருவாகக் கருத வேண்டும்' அடுத்திருப்பவரது வாழ்க்கை, மற்றும் அவ்வாழ்க்கையை மாண்புறு வகையில் நடத்த அவருக்குத் தேவையான வழிவகைகள் ஆகியவற்தை; தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ளவேண்டும்;8 இவ்வாறு செய்யவிடில், ஏழையான இலாசர் மட்டில் எவ்வித அக்கறையும் காட்டாதிருந்த செல்வரைப் பின்பற்றியவர்கள் ஆகிவிடுவார்.9
நமக்க அடுத்திருப்பவர், அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு முதியோராக இருக்கலாம்; முறையற்ற சேர்க்கiயிலிருந்து பிறந்து, தான் செய்யாத பாவத்திற்காக அநீதியாகத் துயருறும் ஒரு குழந்தையாக இருக்கலாம்; அல்லது, ''மிகச் சிறியோராகிய என் சகோரர் சகோதரிகளுக்கு நீங்கள் செய்ததையெல்;லாம் எனக்கே செய்தீர்கள் என் ஊறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்(மத் 25:40) என்ற ஆண்டவரின் குரலை நம் நினைவிற்குக் கொண்டு வந்த நம் மனச்சான்றுக்கு அறைகூவல் விடுக்கின்ற பசியால் வாடுகின்ற ஒருமனிதராய் இருக்கலாம்: யாராயிருப்பினும் சரி, எல்லா மனிதர்களுக்கும் நம்மையே அடுத்திருப்பவர்களாக ஆக்கிக்கொண்டு நாம் எதிர்கொள்ளும் மனிதருக்குச் செயலமுறையில் பணிபுரியும் கடமை, சிறப்பாக இக்காலத்தில் அவசரமான ஒன்றாகும்.
உயிருக்கு எதிராகச் செல்லும் அனைத்து வகைகளையும் சார்ந்த கொலை, இன ஒழிப்பு, கருச்சிதைவு, தீரா நோயின்போது உயிர்மாய்த்தல், எண்ணித் துணியும் தற்கொலை போன்றவையும், மனித முழுமையைக் கெடுக்கம் அனைத்து வகைகளையும் சார்ந்த உறுப்புச் சிதைவு, உடல் அல்லது உள்ளத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகள், உள்ளததைக் வன்முறையால் மாற்ற முயலுதல் போன்றவையும், மனிதமாண்புக்கு ஏற்காத அனைத்து வகைகளையும் சார்ந்த உறுப்புச் சிதைவு, உடல் அல்லது உள்ளத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகள், உள்ளத்தைக் வன்முறையால் மாற்ற முயலுதல் போன்றவையும், மனித மாண்புக்கு ஏற்காத அனைத்து வகைகளையும் சார்ந்த மனிதத் தன்மைக்குக் கீழான வாழ்;க்கை நிலைகள், காரணமின்றிச் சிறைப்படுத்தல், நாடு நடத்தல், அடிமைநிலை, பரத்தமை,பெண்களையும் இளைஞரையும் விற்றல் போன்றவையும், தன்னுரிமையையும் பொறுப்புணர்ச்சியும் நிறைந்த ஆள்களென உழைப்பாளர்களை மதியாது ஊதியத்திற்கான வெறும் கருவிகளாகவே அவர்களை நடத்தும் இழிந்த வேலைச் சூழ்நிலைகள் ஆகியவையும், இன்ன பிறவும் வெட்கக் கேடானவையாகும்: மேலும், இவை மனித நாகரிகத்ததைக் கறைப்படுத்துகின்றன. இத்தீமைகளால் துன்புறுவோரைவிட,இவற்றைச் செய்பவருக்கே இவை அதிகச் சீர்குலைவைக் கொணர்கின்றன் படைப்பின் கடவுளது மாட்சிக்கு இவை முற்றிலும் எதிரானவை ஆகும்.
28. பகைவரும் அன்பும் மரியாதையும் காட்டுதல்
சமூகம், அரசியல் ஆகிய துறைகளிலும், ஏன் சமயம் சார்ந்த காரியங்களில் கூட நம்மிடமிருந்து கருத்து மாறுபட்டு, வேறு விதமாய்ச் செயல்படுவோர்மீதும் நாம் அன்பும் மதிப்பும் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் சிந்திக்கும் முறைகளை அன்போடும் பண்போடும் எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொள்கிறோமா அவ்வளவு எளிதாக அவர்களோடு உரையாடலைத் தொடங்கமுடியும்.
இவ்வன்பும் கனிவும் நம்மை உண்மையின்மீதும் நன்மையின் மீதும் பற்றற்றவர்களாக ஒருபொழுது ஆக்கலாகாது. ஏன் மீட்பளிக்கம் உண்மையை எல்;லா மக்களுக்கும் அறிவிக்குமாறு கிறிஸ்துவின் சீடர்களைத் தூண்டுவது அதே அன்புதான். ஆனால் தவற்றிற்கும் தவறு புரிகின்ற மனிதருக்கும் உள்ள வேறுபாட்டை நாம் உணர வேண்டும். தவற்றை எப்பொழுதம் வெறுத்து ஒதுக்கவேண்டியதுதான்; ஆனால் தவறு செய்பவரோ உண்மையில்லாத அல்லது குறைபட்ட சமயக் கருத்துக்களின் காரணமாக நெறி பிறழ்ந்தாலும்கூட மனித ஆளக்குரிய மாண்பை எப்பொழுதும் கொண்டிருக்கிறார்.10 கடவுள் ஒருவரே ஆய்ந்தநிந்து நீதியளிப்பவர் ஆவார். எனவேதான் ஒருவரின் உள்ளரங்கக் குற்றப் பொறுப்பைப் பற்றி நாம் தீர்ப்பிட வேண்டாம் எனக் கடவுள் தடுத்த விலக்குகினறார்.11
நமக்கு எதிராக இழைக்கப்படும் தீங்குகளையும் நாம் மன்னிக்க வேண்டுமென்று கிறிஸ்துவின் போதனை கோருகிறது; மேலும், நம் பகைவர் அனைவரிடமும் நாம் அன்பு காட்டவேண்டும் என்ற சட்டத்தையும் கிறிஸ்துவின் போதனை தருகிறது; இதுவே புதிய ஏற்பாட்டின் கட்டளை: ''உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக'' ''பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக'' எனக் கூறியிருப்பதைக கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் ஊங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள் உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்''(மத் 5;:43-44).
29. மனிதர் எல்லாருக்குமிடையே நிலவும் அடிப்படை சமத்துவம், சமூக நீதி
எல்லா மனிதருக்கும் பகுத்தறிவு கொண்ட ஆன்மா உண்டு; அவர்கள் அனைவரையும் கடவுள் அனைவரையும் கடவுள் தம் சாயலாகப் படைத்தார். இவ்வாறு, எல்லா மனிதரும் ஒரே இயல்பைக் கொண்டுள்ளனர்; அவர்களது தொடக்கமும் ஒன்றேயாகும். மேலும் மனிதர் கிறிஸ்துவால் மீட்கப் பெற்றுள்ளனர்; கடவுளிடமிருந்து வரும் ஒரே அழைப்பையும் ஒரே பயணக் குறிக்கோளையும் கொண்டுள்ளனர். ஆகவே, எல்லா மனிதரும் ஒரே இயல்பைக் கொண்டுள்ளனர்; ஆகவே, எல்லா மனிதரும் அடிப்படையில் சமநிலையினரே என்பதை நாம் மேன்மேலும் தெளிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உடல் திறமைகளைப் பொறுத்தமட்டிலும், வேறுபட்ட அறிவு, அறநெறி ஆற்றல்களைப் பொறுத்த மட்டிலும் மனிதர் நடுவே வேறுபாடுகள் இருப்பதால் அவர்கள் அனைவரும் சரிநிகர் நிலையில் இல்லை என்பது உண்மைதான். இருப்பினும், மனிதரின் அடிப்படை உரிமைகளைப் பொறுத்த வரையில், பால், இனம், நிறம், சமூக நிலை, மொழி, சமயம் ஆகியவை காரணமாகப் பாகுபாடு காட்டும் எந்த முறையையும்- அது சமூக அடிப்படையில் உரிமைகளாகிய இவை எல்;;லா இடங்களிலும் இன்னும் நன்முறையில் மதிக்கப்படவில்லை என உண்மையிலேயே வருந்த வேண்டியிருக்கிறது: தன்னுரிமையுடன் தன் வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்கவோ, தன் வாழ்க்கை நிலையைத் தழுவவோ, ஆடவர்க்கு கிடைக்கக்கூடுமான அதே பண்பாட்டு வளர்ச்சியும் கல்வியும் பெறவோ பெண்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது ஓர் எடுத்துக்காட்டு.
மேலும், முறையான வேறுபாடுகள் மனிதருக்குள்ளே நிலவுவது உண்மைதான்; இருந்தபோதிலும் அதிக மனிதப் பண்பும் நீதியும் வாய்ந்த வாழ்க்கை நிலையை மனிதர்கள் அடைந்திட வேண்டும்: இது மனித ஆள்கள் சம் மாண்பு கொண்டவர்கள் என்ற உண்மையிலிருந்தே பிறக்கும் கோரிக்கை ஆகும். உண்மையில், ஒரே மனித குடும்பத்தின் உறுப்பினர்களாக விளங்கும் மனிதரிடையேயும், மக்களினங்களிடையேயும் நிலவுகின்ற மிகைப்பட்ட பொருளமேலும், மேற்கூறிய ஏற்றத்தாழ்வுகள் வெட்கக் கேடாக உள்ளன் மேலும் மேற்கூறிய ஏற்றத்தாழ்வுகள் சமூக நீதி, நடுநிலை, நேர்மை, மனித மாண்பு,சமூக மற்றும் அனைத்துலக அமைதி ஆகியவற்றிற்கு எதிரக உள்ளன.
தனியார் முயற்சியிலோ பொது அதிகாரிகள் முயற்சியிலோ நிறுவப்பட்டுள்ள மனித அமைப்பகள் மனிதரின் மாண்புக்கும் அவர்களது வாழ்க்கை குறிக்கோளுக்கும் உகந்த சேவை செய்ய முனைந்திட வேண்டும். அதே நேரத்தில் இந்த அமைப்புகள் எல்லாவிதச் சமூக, அரசியல் அடிமைத்தளைகளுக்கும் எதிராக ஊக்கமுடன் போராடவேண்டும்; எவ்வித அரசு ஆட்சிகளின் கீழும் அவை மனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். எதிர்பார்க்கும் குறிக்கோளை அடைய சிலவேளை நீண்ட காலம் தேவைப்படலாம் என்பது உண்மையே, இருப்பினும், மேற்கூறிய மனித அமைப்பகள், எல்லாவற்றையும் விட உயர்ந்தவையான அருள்வாழ்வு நலன்களுக்கு இசைந்து செயல்படம்படித் தங்களைத் தாமே படிப்படியாக மாற்றியமைத்தக்கொள்ள வேண்டும்.
30. தன்னல நடத்தையைத் தாண்டிச்செல்ல வேண்டும்
மிக ஆழ்ந்த விதத்திலும் தீவிரமாகவும் உலகில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இம்மாற்றங்கள் விடுக்கும் அவசரக்கோரிக்கை இதுவே: இவ்வளர்ச்சிப் போக்கைக் கவனியாமல் அல்லது உணர்ச்சியற்ற மந்தநிலையுடையவராகத் தன்னலத்தையே அடிப்படையாகக் கொண்டதொரு வாழ்க்கை நெறியை மனம்பொன போக்கில் எவருமே பின்பற்றலாகாது. ஒவ்வொரு மனிதரும் தம் ஆற்றலுக்கு ஏற்றவாறும் மற்றவரின் தேவைகளுக்குப் பொருத்தமாகவும் பொது நன்மைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்; மனிதரின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகப் பாடுபடுகின்ற பொது அமைப்புகளையும் தனியார் அமைப்பகளையும் ஆதரித்து அவைகளக்குத் துணை நிற்க வேண்டும்: இவ்வழிகளால்தான் நீதியிலிருந்தும் அன்பிலிருந்தும் பிறக்கும் கடமையை மனிதர் நாளும் அதிகமாகச் செயல்படுத்துகின்றனர். ஆனால் பரந்த நோக்குடைய பெருந்தன்மையான கருத்துகளைப் பேசிவிட்டு உண்மையிலேயே சமுதாயத்தின் தேவைகளைப் பற்றி ஒருவிதத்திலும் கவலைப்படாதவர்களாக வாழ்பவர்கறும் இருக்கத்தான் செய்கிறார்கள். மேலும், பலர் பல்வேறு நாடுகளில் சமூக சட்டங்களையும் விதிமுறைகளையும் மதிப்பதில்லை. பலர் பலவகையான ஏமாற்று வழிகளையும் சூழ்ச்சிகளையும் கையாண்டு, நீதியான வரி செலுத்துவதிலிருந்தும் தப்பிக்க அஞ்சுவதல்லை. மற்றும் பலர் சமூக வாழ்க்கைக்கான ஒருசில விதிகளை எடுத்துக்காட்டக, உடல்நலப் பாதுகாப்பு, ஊர்திகள் ஓட்டுதல் பற்றிய விதிகளைப் பொருட்படுத்துவதில்லை; இத்தகைய கவலையற்ற தன்மை தம் உயிருக்கும் பிறர் உயிருக்கம் தீங்கு விளைவிக்கும் என்பதைச் சற்றும் அவர்கள் கவனிப்பதில்லை.
சமூக வாழ்விலிருந்து எழுகின்ற கடமைகளை இன்றைய மனிதரின் தலையாய கடமைகளுள் உள்ளடங்குவனவாக அனைவரும் கருதி அவற்றைக் கடைபிடித்தல் ஒரு தூய செயலாகும். ஏனெனில், உலகம் அதிகமதிகமாக ஒன்றிக்க ஒன்றிக்க மக்களின் கடமைகள் தனிப்பட்ட குழுக்களைச் சார்ந்தனவாக மட்டும் இல்லாமல், படிப்படியாகவும் வெளிப்படையாகவும் உலகம் முழுவதையும் சார்ந்தனவாக மாறுகின்றன. ஆனால் மேற்கூறியவாறு நிகழ வேண்டுமாயின் தனிமனிதரும் அவர்தம் குழுக்களும் அறநெறி மற்றும் சமூக நற்பண்புகளைத் தம் வாழ்வில் கடைபிடித்து, சமுதாயத்தில் அவற்றை ஊடுருவச் செய்வதாக வேண்டும்: இவ்வாறு செய்தால், அவர்கள் இறையருள் உதவியால் உண்மையிலேயே புது மனிதர்களாகவும் புது மனித குலத்தை உருவாக்கும் சிற்பிகளாகவும் திகழ்வர்.
31. பொறுப்புணர்வும் பங்கு கொள்ளலும்
தம் மனச்சான்று பணிக்கும் பொறுப்புகளை மனிதர்கள் தம்மைப் பொறுத்த மட்டிலும் சரிவர நிறைவேற்ற வேண்டும். இது நிகழவேண்டுமாயின் மனிதர்கள் இன்னும் பரந்ததொரு பண்பாட்டுநிலையை அடையும் வகையில் கவனமுடன் பயிற்றுவிக்கப்பட வேண்டும்; இதற்கு இன்று மனித குலத்திடமுள்ள பெரும் வசதிகளை பயன்படுத்துவது பொருத்தமாகும். அனைத்திற்கும் மேலாக, அறிவு சார்ந்த பண்பாடு மட்டுமன்றி, பரந்த ஆளுமைப் பண்புடைய ஆடவரையும் பெண்டிரையும் தோற்றுவிக்கும் வகையில் ஒவ்வொரு இளைஞருக்கும் - அவர்கள் எத்தகைய சமூகநிலையினராயினும் சரி - கல்வியும் அளிக்கப்பெற வேண்டும். இத்தகைய மக்களே இக்காலத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
ஆனால், மனிதர் தம்முடைய மாண்பை உள்;ர உணரவும் கடவுளுக்கம பிறருக்கும் தம்மையே கையளிப்பதன் வழியாகத் தம் அழைத்தலுக்குச் செவிமடுக்கவும் அவருடைய வாழ்க்கைச் சூழ்நிலைஅவர்களை அனுமதிப்பதாக இருத்தல் வேண்டும். அவ்வாறில்லா விடில், மேற்கூறிய பொறுப்புணர்வு பற்றிய பார்வையை அவர்கள் பெறுதல் கடினமாகவே இருக்கும். உண்மையிலே, கொடிய வறுமையின் பிடியில் உழலகின்ற மனிதரின் சுதந்திரம் வலுவிழந்ததாகத்தான் இருக்கும்; அதேபோன்று, வாழ்வில் பல இன்ப நலன்களில் மனம்போன போக்கிற்குத் தம்மைத்தாமே பிணைத்துக் கொள்ளும் மனிதரின் சுதந்திரமும் வாடி வதங்கி விடும். நேர்மாறாக, சமூக வாழ்வின் தவிர்க்கமுடியாக் கடமைகளை ஏற்று, மனிதக் குழுவாழ்வின் பலவிதக் கோரிக்கைகளைத் தமதாக்கி, மனித சமுதாயத்திற்குச் சேவை புரிவதில் மனிதர் தம்மையே ஈடுபடுத்தும்பொழுது அவர்களது சுதந்திரம் வலுப்பெறுகிறது.
எனவே, பொது முயற்சிகளில் தங்களுக்கான ஒத்துழைப்பை நல்க மக்கள் உள்ளத்தில் ஆவலைத் தூண்ட வேண்டும். பொது முயற்சிகளில் உண்மையான சுதந்திரத்தோடு கூடுமான மட்டும் பெரும் அளவில் குடிமக்கள் பங்கு கொள்ள வாய்ப்பிருக்கும் நாடுகளின் செயல் முறை போற்றதற்குரியது. எனினும், ஒவ்வொரு மக்களினத்தின் நடைமுறைச் சூழ்நிலையையும் மற்றும் அங்குள்ள அரசு அதிகாரத்தின் உறுதி நிலையையும் மனத்தில் கொள்ள வேண்டும். சமூகத்தை உருவாக்கும் பற்பல குழுக்களின் வாழ்வில் எல்லாக் குடிமக்களும் பங்குகொள்ள முன்வரவேண்டுமென்றால், அவர்களை ஈர்த்து, அடுத்துவருக்குச் சேவை செய்யத் தூண்டும் நல்ல கூறுகளை அக்குடிமக்கள் அக்குழுக்களில் காணவேண்டும். வரவிருக்கும் தலைமுறைகள் வாழவும் எதிர்நோக்குக் கொள்ளவும் தூண்டுதல் அளிக்க வல்லவர்களின் கைகளிலேயே மனிதகுலத்தின் எதிர்காலம் உள்ளது என நாம் உண்மையிலேயே கூறலாம்.
32. மனிதராகப் பிறந்த வாக்கும் மனித ஒற்றுமையும்
கடவுள் மனிதர்களை உண்டாக்கியது அவர்கள் தனிமையில் வாழவேண்டும் என்பதற்காக அன்று, மாறாக அவர்கள் சமூக ஒன்றிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே, அவ்வாறே ''தனித்தனியாக ஒருவருக்கொருவர் தொடர்பு ஏதும் அற்ற முறையில் மக்களைப் தூய்மைப்படுத்தவும் ஈடேற்றம் கடவுள் விரும்பவில்லை. மாறாக, தம்மை உண்மையில் ஏற்றுக் கொண்டு தூய்மையாய்த் தமக்கு ஊழியம் செய்யும் ஒரு மக்கள் குலமாக அவர்களை நிறுவ விழைந்தார்''.13 மீட்பின் வரலாற்றுத் தொடக்கமுதலே, மனிதரைத் தனித்தவராக மட்டுமன்றி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உறுப்பினர்கள் என்ற முறையிலும் அவர் தேர்ந்தெடுத்து வந்துள்ளார். தாம் தேர்ந்தெடுத்து வந்துள்ளார். தாம் தேர்ந்தெடுத்த இவர்களுக்குக் கடவுள் தம்முடைய திட்டத்தை வெளிப்படுத்தி இவர்களைத் தம் மக்கள் (விப3:7-12) என்று அழைத்தார்; சீனாய் மலைமேல் இவர்களோடு ஓர் உடன்படிக்கையும் செய்து கொண்டார்.14
இந்தச் சமூகப் பண்பு இயேசு கிறிஸ்துவின் செயல்களில் நிறைவு பெற்றுத் தன் முழுமையை அடைகிறது. ஏனெனில் மனிதர் ஆன வாக்காகிய அவர்தாமே மனிதச் சமூக வாழ்க்கை நிலையில் பங்குகொளளத் திருவுளங்கொண்டார். கானாவில் நிகழ்ந்த திருமணத்தில் பங்கெடுத்தார்; சக்கேயுவின் வீட்டுக்குச் சென்றார்; பாவிகளோடும் வரி தண்டுபவர்களோடும் விருந்துண்டார். சாதாரண பேச்சு, உருவகம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் அவர் தம் தந்தையின் அன்பையும் மனிதரின் உயரிய அழைப்பையும் வெளிப்படுத்தினார்.மனிதத் தொடர்புகளை அவர் தூய்மைப்படுத்தினார்; தம் நாட்டின் சட்டங்களுக்கு உளமாரக் கீழ்படிந்தார். தம்காலத்திற்கும் இடத்தில் ஏற்ப அவர் ஒரு தொழிலாளிக்குரிய வாழ்க்கை நடத்தத் திருவுளங்கொண்டார்.
அதே கிறிஸ்து தம்முடைய படிப்பினையில், ஒருவர் ஒருவரைச் சகோதரர் சகோதரிகளாக நடத்தும்படி கடவுளின் பிள்ளைகளுக்குத் தெளிவான கட்டளை அளித்தர். அவர் தம்முடைய சீடர் அனைவரும் 'ஒன்றாய்' இருக்கும்படீ கடவுளை நோக்கி வேண்டிக்கொண்டார். ஏன், அனைவரின் மீட்பராகிய அவர் அனைவருக்காகவும் சாவுமட்டும் தம்மைத் தாமே கையளித்தார்: ''தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை'' (யோவா15:13)யன்றோ!. சட்டத்தின் நிறைவு அன்பெனக் கொண்டு வாரும். கடவுளின் குடும்பமாக மனிதகுலம் மாறும் பொருட்டு நற்செய்தயை எல்லா இனத்தாரு;ககும் அறிவிக்குமாறு தம் திருத்தூதர்சளைப் பணித்தார்.
சகோதரர், சகோதரிகள் பலருள் தலைப்பேறானவர் என்ற முறையில் கிறிஸ்து தம் சாவுக்கும் உயிர்த்தெழுதலுக்கம் பின், தம் ஆவியின் கொடையால், நம்பிக்கையும் அன்பும் கொண்டு தம்மை ஏற்கும் அனைவரையும் ஒரு புதுச் சதோதரர், சகோதரிகளின் சமூகமாய் ஏற்கடுத்தினார்: இச்சமூகம்தான் அவரது உடலாகிய திருச்சபை. இத்திருச்சபையில் ஒருவர் ஒருவருக்கு உறுப்பினராய் இருந்து, யாவரும் தங்களுக்கு அருளப்பட்டுள்ளன வௌ;வேறு கொடைகளின்படி ஒருவருக்கொருவர் பணிபுரிவர்.
இத்தகைய ஒற்றுமையானது தன்னுடைய நிறைவைக் காணும் கடைசி நாள்வரை இடையறாது வளர வேண்டும். அந்த நாளில்தான் அருளால் ஈடேற்றப் பெற்ற மனிதர்கள் கடவுளுடையவும் தங்கள் சகோதரராம் கிறிஸ்துவினுடையவும் அன்பார்ந்த குடும்பமாகக் கடவுளுக்கு நிறைவான மாட்சி நல்குவார்.
இயல் 3
உலகம் அனைத்திலும் மனிதரின் ஈடுபாடு
33. ஆய்வுப்பொருள்
மனிதர் தம்முடைய உழைப்பாலும் திறமையாலும் தம் வாழ்வை மேன்மேலும் வளமாக்க என்றும் முயன்று வந்தள்ளனர். இன்றோ, சிறப்பாக அறிவியல், தொழில் நுட்பத்துறை ஆகியவற்றின் துணை கொண்டு அவர்கள் தம்முடைய ஆளுகையை ஏறக்குறைய இயற்கை முழுவதின் மேலும் பரப்பியுள்ளனர். தொடர்ந்து பரப்பிக்கொண்டே வருகின்றனர். சிறப்பாக நாடுகளிடையே பல வகைகளில் தொடர்பு கொள்ள உதவும் வாய்ப்புகளின் வளர்ச்சியைப் பயன்படுத்தி மனித குடும்பம் தான் உலக முழுவதிலுமுள்ள ஒரே சமூகம் என்பதைப் படிப்படியாகப் புரிந்துகொண்டு, தன்னை அத்தகைய சமூகமாக ஆக்கிக் கொண்டும் வருகிறது. இதன் விளைவாக, ஒருகாலத்தில் மனிதர் தமக்க மேலான சக்திகளிடமிருந்து பெரும்பாலும் எதிர்நோக்கிய பல நலன்களை இன்று தம் உழைப்பாலே பெற்று வருகின்றனர்.
மனித குலம் முழுவதும் ஏற்கெனவே ஈடுபடுத்தியுள்ள இப்பெரும் முயற்சியின் விளைவாக மனிதர்களிடையே எழுகின்ற கேள்விகள் பற்பல: இந்த கடின உழைப்பின் பொருளும் மதிப்பும் என்ன? இவை யாவற்றையும் கையாளும் முறை யாது? தனிமனிதர்களின் மற்றும் சமூகங்களின் முயற்சிகளின் எந்தக் குறிக்கோளை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன? அறநெறி, மற்றும் சமயம் பற்றிய அடிப்படைத் தத்துவங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள இறைவாக்கின் கருவூலத்தை காத்துவரும் திருச்சபை ஒவ்வொரு தனித்தனி வினாவுக்கும் எப்பொழுதும் உடனடியாகப் பதில் தரும் நிலையில் இல்லை: இருப்பினும், மனிதகுலம் இந்நாட்களில் மேற்கொண்டுள்ள வழிப்பயணத்திற்கு ஒளி வழங்கும் பொருட்டு அது மனித குலத்தின் அனுபவத்தோடு இறைவெளிப்பாட்டு ஒளியை இணைக்க விழைகிறது.
34. மனித ஈடுபாட்டின் மதிப்பு
தனியாகவும் குழுவாகவும் மனிதர் ஆற்றும் செயல்கள், அதாவது நூற்றாண்டுகளின் வரலாற்றுப் போக்கில் தம் வாழ்க்கை நிலைமைகளை நல்லதொரு நிலைமைக்கு மாற்றியமைக்க மனிதர் செய்து வந்துள்ள மாபெரும் முயற்சிகள் தன்னிலே கடவுளின் திட்டத்திற்கு ஒத்திருக்கின்றது: கடவுள் நம்பிக்கையுடையோர் இதை உறுதியாக ஏற்றுக் கொள்கின்றனர். ஏனென்றால் கடவுளின் உருவாகப் படைக்கப்பட்டவர் மனிதர்; எனவே அவர்கள் மண்ணையும் அதில் அடங்கிய அனைத்;ததையும் தம் கீழ்க் கொணர்ந்து உலகை நீதியோடும் தூய்மையோடும் ஆளவும்,1 அஃதோடுகூட அனைத்தையும் படைத்தவராக கடவுளை ஏற்று, தமமையும் எல்லாப் பொருள்களையும் அவரோடு தொடர்புபடுத்தவும் ஆணை பெற்றுள்ளனர்: இவ்வாறு, மனிதருக்கு அனைத்தும் கீழ்ப்பட்டிருக்க, உலகெங்கும் கடவுளின் பெயர் மேன்மையாய் விளங்கும்.2
மேற்கூறியது மிகவும் சாதாரணமான அன்றாட அலுவல்களுக்கும் பொருந்தும், ஆண்களும், பெண்களும் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தமக்கும் தம் குடும்பத்திற்கும் சம்பாத்த்துக் கொள்ளம் பொழுது சமூகத்திற்கும் நன்முறையில் உதவிபுரியும் விதத்தில் தம் உழைப்பில் ஈடுபடவேண்டும்; இவ்வாறு செயல்பட்டால் இவர்கள் தம் உழைப்பால் கடைத்தவரின் அலுவலை நீடித்து வறரச் செய்வதாகவும் தம் சகோதரர் சகோதரிகளுக்குப் பணி செய்வதாகவும் இறைத் திட்டம் வரலாற்றில் நிறைவேறத் தம் சொந்த உழைப்பால் உதவுவதாகவும் உரிமையோடு கருத முடியும்.3
மனிதர் தம் திறமையாலும் ஆற்றலாலும் அடைந்துள்ள வெற்றிகள் கடவுளின் வல்லமைக்கு எதிராக நிறகின்றன என்றோ பகுத்தறிவுள்ள படைப்பாகிய மனிதர் படைத்தவருக்கு ஒருவிதத்தில் எதிரியாக உள்ளனர் எனவோ கிறிஸ்தவர்கள் எண்ணுவதில்லை: நேர்மாறாக, மனிதகுலத்தின் வெற்றிகள் கடவுளது மாட்சிமையின் அடையாளம் எனவும், அவருடைய சொற்கடந்த திட்டத்தின் வறைவு எனவும் அவர்கள் உறுதியாக நம்புகினறனர். ஆனால் மனிதரின் ஆளுகை எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்குத் தனிமனிதருடையவும் சமுதாயத்தினுடையவும் பொறுப்புகள் விரிவடைகின்றன. கிறிஸ்தவ நற்செய்தி உலகைக் கட்டியெழுப்புவதிலிருந்து தெளிவாகிறது; தம்மைப் போன்றோரின் நலனில் அக்கறை கொள்ளாதிருக்க மனிதரைத் தூண்டுவதுமில்லை; மாறாக இவற்றைச் செயல்படுத்துவதில் இன்னும் அதிகமான கண்டிப்புடன் அவர்களை ஈடுபடத் தூண்டுகிறது.4
35. மனித ஈடுபாட்டை ஒழுங்குபடுத்தல்
மனிதரின் ஈடுபாடு அவர்களிடமிருந்தே வெளிப்படுகிறது; அது அவர்களுக்காகவே உள்ளது. ஏனெனில், மனிதர் உழைக்கும்பொழுது பொருள்களையும் சமூகத்தையும் மாற்றுவதோடு மட்டுமன்றி, தம்மையும் நிறைவு செய்கின்றனர். உழைப்பின் மூலம் அவர்கள் வரவற்றைக் கற்றுக் கொள்கின்றனர்; தம் ஆற்றல்களை வளர்க்கின்றனர்; தமக்கு வெளியேயும் தம்மை விஞ்சியும் செல்கின்றனர். சரியாகப் புரிந்து கொண்டால், இத்தகைய வளர்ச்சி ஒருவர் சேர்க்கக்கூடிய வெளிச் செல்வங்களைவிட அதிக மதிப்பு வாய்ந்தது. மனிதரின் மதிப்பு அவர்கள் எதைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைவிட அவர்கள் எத்தகையவர்களாய் இருக்கினறனர் என்பதில் இருக்கிறது.5இவ்வாறே, நீதி அதிகமாக நிலவ வேண்டும், சகோதரத்துவம் அதினமாகப் பரவ வேண்டும், சமூக உறவுகளில் அதிக மனிதத் தன்மை வாய்ந்த ஒழுங்குமுறை நிலவ வேண்டும், சகோதரத்துவம் அதிகமாகப் பரவ வேண்டும், சமூக உறவுகளில் அதிக மனிதத் தன்மை வாய்ந்த ஒழுங்குமுறை நிலவ வேண்டும் என்னும் நோக்கத்தோடு மனிதர்கள் செய்வதனைத்தும் தொழில் நுட்பத்துறையின் முன்னேற்றங்களை விட அதிக மதிப்பு வாய்ந்ததாய் உள்ளது. ஏனெனில் தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றங்கள் மக்களின் மேம்பாட்டுக்கான ஒருவித அடித்தளமாக அமைய முடியுமே தவிர, தாமாகவே மனித மேம்பாட்டைக் கொணர அவைகளால் இயலாது.
ஆகவே மனிதரின் ஈடுபாட்டின் அளவுகோல் இதுதான்: மனித ஈடுபாடு கடவுளின் திட்டத்திற்கும் திருவுளத்திற்கும் ஏற்ப மனித குலத்தின் உண்மையான நலனோடு கொருந்திப் போவதாக இருத்தல் வேண்டும்; தனி மனிதர் என்ற முறையிலும் சமூகத்தின் உறுப்பினர் என்ற முறையிலும்தம் முழு அழைப்பையும் பேணி அதை நிறைவேற்றவும் அவர்களது ஈடுபாடு அனுமதிக்க வேண்டும்.
36. மண்ணகப் பொருள்களுக்கு உரித்தான நியாயமான தம்மாட்சி உரிமை
ஆனால், மனித ஈடபாட்டிற்கும் சமயத்துக்கும் இடையே நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திவிட்டால் மனிதர்களுடையவும் சமூகங்கள், அறிவியல் துறைகள் ஆகியவற்றினுடையவும் தம்மாட்சி உரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமென நம்காலத்து மனிதர்கள் பலர் அச்சமுறுவதாகத் தோன்றுகிறது.
படைக்கப்பட்ட பொருள்களும் சமூகங்களும் தத்தம் ஒழுங்குகளையும் மதிப்பு நலன்களையும் கொண்டுள்ளன் இவற்றை மனிதர் படிப்படியாக அறிந்துகொள்ள வேண்டும், பயன்படுத்த வேண்டும், ஒழுங்குபடுத்த வேண்டும்; இந்த பொருளில் மண்ணகப் பொருள்களின் தம்மாட்சி உரிமையை நாம் புரிந்துகொண்டால், இத்தகைய தம்மாட்சி உரிமையைக் கோருவது மற்றிலும் சரியே ஆகும். இது இன்றைய மனிதரின் கோரிக்கை மட்டுமன்றி, படைத்தவரின் திருவுளத்திற்கும் கொருந்திப்போவதே ஆகம். ஏனென்றால், படைக்கப்பட்டவை என்ற காரணத்தாலேயே பொருள்கள் அனைத்தும் தங்களுக்கான உறுதிநலை, உண்மை, நன்னயம், சட்டங்கள், ஒழுங்குமுறை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இவற்றையெல்லாம் மனிதர் மதிக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்; மேலும் தனித்தனி அறிவியல்களுக்கு அல்லது கலைத்துறைகளுக்கு உரித்தான செய்முறைகளையும் அவர்கள் ஏற்றக் கொள்ளவேண்டும் உலகு சார்ந்தவையும் நம்பிக்கையைச் சாhந்தவையும் ஒரே கடவுளிடமிருந்தே புறப்படுகின்றன் எனவே, எல்லா அறிவுத் துறைகளிலும் முறையான ஆய்வ உண்மையிலேயே அறிவியலுக்குரிய முறையிலும் அறநெறி விதிகளின்படியும் நடத்தப்பட்டால் அது இறைநம்பிக்கைக்கு ஒரு பொழுதும் எதிராக இராது. ஏன், தாழ்மையான, ஊறுதியான உளத்தோடு இயற்கையின் இரகசியங்களை ஊடுருவி அறிய முயலும் ஒருவர் அவர் அறியாதிருந்தபோதிலும், இறைவனின் கரத்தாலேயே ஒருவிதத்தில் இட்டுச் செல்லப்படுகிறார்; ஏனெனில் கடவுளே அனைத்துப் பொருள்களையும் பாதுகாத்து அவற்றின் அயல்புப்படி அவைகளை நிலைத்திருக்கச் செய்கிறார். இஃதில்லாதிருக்க, அறிவியலின் முறையான தன்னாட்சி உரிமையைப் போதிய அளவுக்குக் கண்டுணராததால், கிறிஸ்தவர்களுக்கிடையிலும் கூட சில வேளைகளில் காணப்பட்ட மனப்பான்மைகளைக் கண்டு நாம் வருந்தாமலிருக்க முடியாது. இம்மனப்பான்மைகளின் விளைவாக உருவாகிய இழுபறிகளும் கருத்து வேறுபாடுகளும் பல மனிதரின் உள்ளங்களில் நம்பிக்கையும் அறிவியலும் தங்களுக்கிடையே எதிரிடையானவை என்ற எண்ணத்தை எழச் செய்துவிட்டன.7
மாறாக, படைக்கப்பட்டவை கடவுளைச் சார்ந்திருக்கவிலலை, படைத்தரைத் தொடப்புபடுத்தாமல் அவற்றை மனிதர் பயன்படுத்தலாம் என்னும் அர்த்தத்தில் உலகப் பொருள்களின், தம்மாட்சி உரிமையைப் புரிந்து கொள்வதாயிருந்தால் அது எவ்வளவு தவறான கொள்கை என்பது கடவுளை ஏற்கும் எவருக்கும் கண்கூடு ஊனெனில் படைத்தவரின்றிப் படைப்பு இல்லை. மேலும் எச்சமயத்தைச் சர்ந்தவராயினும், கடவுள் நம்பிக்கையுடையோர் அனைவரும் கடவுளின் குரலொலியையும் அவரது வெளிப்பாடடையும் படைப்புகள் பேசும் பொழியில் எப்பொழுதும் கேட்டு வந்துள்ளனர். ஏன் கடவுளை மறந்துவிடுவதால் படைப்பே விளங்காத ஒன்றாகிவிடுகிறது.
37. பாவத்தால் சீர்கெட்ட மனிதச் செயல்
மனித முன்னேற்றம் மனிதருக்கு மிக நன்மையான ஒன்றுதான்; இருப்பினும் தீமைக்கான ஒரு பெரும் தூண்டுதலும் அதில் இருக்கக்கூடும்; இந்த உண்மையை விவிலியம் மனிதர்களுக்குக் கற்பிக்கிறது; பல நூற்றாண்டுகளாகப் பெற்ற அனுபவமும் இமையே உணர்த்துகின்றது. ஏனெனில், மதிப்பீட்டு நலன்களின் ஒழுங்குமுறை குலைந்ததாலும், தீமை நன்மையோடு கலந்துவிட்டதாலும், தனிமனிதர் முற்றும் குழுக்கள் தத்தமக்கு உரியனவற்றை மட்டுமெ பார்க்கிறார்களே தவிர, பறர் நலனைக் கருத்தில் கொள்வதிலிலை. இதன் விளைவாக, உலகம் உண்மையான சகோதரத்துவத்தின் நலைக்களமாக இல்லை; அதே நேரத்தில், மனித குலத்தின் ஆற்றல் வளர்ச்சி மக்கள் குலத்தையே அழிப்பாதாக அச்சுறுத்துகிறது.
இருளின் வல்லமைக்கு எதிராக நிகழ்கின்ற கடினப் போராட்டம் மனிதரது வரலாறு முழுவதையுமே ஊடுருவியுள்ளது. உலகின் தொடக்கத்திலேயே மூண்ட இப்போர், ஆண்டவர் கூறியுள்ளது போல்,8 இறுதி நாள்வரை தொடர்ந்து நீடிக்கம். இப்போரிலே ஈடுபட்டுள்ளனர் மனிதர்; ஆகவே நன்மையைப் பற்றிக் கொள்ள வேண்டுமானால் அவர்கள் இடைவிடாது போர்புரிய வேண்டியுள்ளது. மேலும், கடுமுயற்சியும் கடவுளின் அருழுமன்றி அவர்களால் தம்மிலே அகச்சார்பான அஐங்கிசைவை அடைந்திட இயலாது.
எனவேதான் படைத்தவரின் திட்டத்தில் நம்பிக்கை வைத்துக் கிறிஸ்துவின் திருச்சபையானது மனித முன்னேற்றம் மனிதருடைய உண்மையான உண்மையான மகிழ்ச்சிக்கு உதவமுடியும் என்பதை ஏற்றுக்கொள்கிறது; என்றாலும் ''இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள்''(உரோ 12:2) என்றுரைத்த திருத்தூதரின் கூற்றைத் திருச்சபை எதிரொலிகக்காமல் இருக்கமுடியாது. அவரது கூற்றின் பொருள். கடவுளுக்கும் மனிதருக்கும் பணிபுரிவதற்கென்றே மனித ஈடுபாடு உள்ளது; இந்த ஈடுபாட்டையே பாவத்தின் கருவியாக மாற்றிவிடுகிற வீண் தற்பெருமை கொண்ட தீய உளப்பாங்கின்படி நடவாதீர்கள்.
ஆகவே இந்த அவல நிலையை வெல்வது எவ்வாறு என்னும் கேள்விக்குக் கிறிஸ்தவர்கள் அளிக்கும் பதில் இதுதான்: மனிதரின் தற்பெருமையாலும் முறையற்ற தன்னன்பாலும் நாளும் ஆபத்திற்குள்ளாகும் மனித ஈடுபாடுகள் அனைத்தும் கிறிஸ்துவின் சிலுவையாலும் உயிர்த்தெழுதாலாலும் தூய்மை பெற்ற நிறைவுக்கு இட்டுச் செல்லப்பட வேண்டும். கிறிஸ்துவால் மீட்கப் பெற்றுத் தூய ஆவியால் புதுப்படைப்பாக்கப் பெற்ற மனிதர், கடவுள் படைத்த பொருள்கள்மேல் அன்பு கொள்வரு முறையே ஆகும்; ஏன் இவ்வாறு அவர்கள் அன்பு கொள்ளவும் வேண்டும்; ஏனெனில், மனிதர் கடவுளிடமிருந்தே அவற்றைப் பெறுகின்றனர்; அவரது கையிலிருந்தே வழிந்தோடும் கொடையாக அவற்றைக் கருத் மதிக்கின்றனர்; இக்கொடைகளை அளித்த நன்கொடையாளருக்கு நன்றி கூறுகின்றனர்; மன் ஏழ்மையோடும் சுதந்திரத்தோடும் அவற்றைப் பயன்படுத்தி நுகர்கின்றனர். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் எல்லாவற்றையும் பெற்றவர்களாய்9 உலகை உண்மையிலேயே உடைமையாய் அடையும் நிலையை அவர்கள் பெறுகிறார்கள்: ''அனைத்தும் உங்களுக்குரியவைகளே. ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளக்குரியவர்'' (1கொரி3;:22-23).
38. பாஸ்கா மறை நிகழ்ச்சியில் மனித ஈடுபாடு நிறைவு பெறுகிறது
கடவுளின் வாக்கு வழியாக பாவும் படைக்கப்பட்டன் இந்த வாக்கு மனிதராகி மனிதர்தம் உலகில் வாழ்ந்திட வந்தார்;10 நிறைவுபெற்ற மனிதராகிய அவர் உலக வரவலற்றில் புகுந்தார்; அவ்வரலாற்றைத் தம்மேல் ஏற்றுக்கொண்டு அதைத் தம் தலைமையில் ஒன்று சேர்த்தார்.11 ''கடவுள் அன்பாயிருக்கிறார்'' (1 யோவா 4:8) என்பதே அவரே நமக்க வெளிப்படுத்துகிறார்; அதே வேளையில் அன்பு செய்யவேண்டுமென்றே புதிய கட்டளையே மனிதரின் அடிப்படைச் சட்டம் எனவும் அவர் நமக்குக் கற்பிக்கிறார். எனவே, அன்பின் பாதை எல்லா மனிதருக்கம் திநற்து இருக்கின்றது எனவும், அமைத்துலகச் சகோதரத்துவத்தை நிறுவும் முயற்சி வீணானதல்ல எனவும் அவர் இறையன்பில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு உறிதியளிக்கின்றார். மேலும், இவ்வன்பு பெரிய காரியங்களில் மட்டும் பின்பற்ற வேண்டிய ஒன்றல்ல் மாறாக, முக்கியமாக, வாழ்க்கையின் சாதாரணச் சூழ்நிலைகளில் நாம் பின்பற்ற வேண்டியதொன்று என அவர் சுட்டடிக்காட்டியுள்ளார். பாவிகளாகிய நம் அனைவருக்காகவும் தம் உயிரைக் கொடுத்த12 அவர், நீதியையும் அமைதியையும் நிலைநாட்டப் பாடுபடுவர்களின் தோள்மேல் ஊனியல்பும் உலகமும் சுமத்தும் அச்சிலுவையை நாமும் தாங்கவேண்டுமென தம் முன்மாதிரியானால் நமக்கு கற்பிக்கின்றனர். தமது உயிர்த்தெழுதலால் ஆண்டவராக ஏற்படுத்தப்பட்ட கிறிஸ்து விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் பொற்றுள்ளார்,13 தம் ஆவியின் வல்லமையால் மனிதரின் உள்ளங்களில் அவர் செயல்புரிந்து வருகிறார்; வரவிருக்கும் உலகின் மீது விருப்பத்தைத் தூண்டியெழுப்புவதோடு அவர் நின்றுவிடுவதில்லை; மாறாக மனித குடும்பத்தின் பிற சீரிய விருப்பங்களுக்கும் அவர் உயிரோட்டம் அளித்து அவற்றைத் தூய்மையாக்கி வலுப்படுத்துகின்றார்; மனித குடும்பம் தன் வாழ்வை அதிக மனிதப் பண்புடையதாக்கும் நோக்குடன் செயல்பட்டு அந்நோக்கத்தின் கீழ் மண்ணுலகனைத்தையும் கொணர்வதற்குத் தூண்டுதல் அளிப்பவையெ இவ்விருப்பங்கள்: ஆவியின் அருள்கொடைகளோ பலவகையானவை: விண்ணக வீட்டின்மீது எழும் விருப்பத்திற்கத் தெளிவான சான்று பகரவும் அச்சான்றினை மனித குடும்பத்தில் உயிரோட்டத்தோடு காத்திடவும் சிலரை அவர் அழைக்கின்றார்; மனிதரின் இவ்வுலக் பணிக்குத் தங்களையே கையளித்து, இப்பணிமூலம் இறையாட்சி கோன்றுவதற்குத் தேவையான அடித்தளமிட பிறரை அழைக்கின்றார். அனைவரும் தன்னலத்தைத் தள்ளிவிட்டு, மண்ணுலக சக்திகளையெல்லாம் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்காக ஒன்று திரட்டி, வருங்காலத்தை நோக்கி விரைந்து சென்றிட அவர் அவாகளைச் சுதந்திரமுடையவர்களாக்குகினறார். அந்த வருங்காலத்தில் மனுக்குலமே கடவுளுக்குகந்த காணிக்கையாக மாறும்.14
ஆண்டவர் இந்த எதிர்நோக்கின் உறுதிப்பாட்டையும் பயணத்திற்கான வழி உணவையும் தம்மவர்களுக்கு நம்பிக்கையின் அருளடையாளமாக விட்டுச் சென்றிருக்கிறார்; இந்த அருளடையாத்தில், மனிதரால் பண்படுத்தப்பெற்றுள்ளன இயற்கைப் பொருள்கள் மாட்சிமை அடைந்த ஆண்டவருடைய உடலாவும் இரத்தமாகவும் மாறுகின்றன. இது சகோதர ஒன்றிப்புக்கான உணவாகவும் விண்ணக விருந்திற்கு முன்சுவையாகவும் உள்ளது.
39. புதிய மண்ணகமும் புதிய விண்ணகமும்
மண்ணகமும் மனிதகுலமும் எந்நாளில் நிறைவுறும் என்று நாமறியோம்; அனைத்துலகும் அடையவிருக்கும் உருமாற்றத்தின் முறையும் நமக்குத் தெரியாது. பாவத்தால் உருச்சிதைந்துள்ள இவ்வுலகு இப்போது இருப்பதால் நெடுநாள் இராது; 16ஆனால் புதியதொரு வீட்டையும் புதிய உலகையும் கடவுள் தயார் செய்து கொண்டிருக்கிறார். அங்கே நீதி குடிகொண்டிருக்கும்; அவ்வீடபேறுஅமைதியைத்தேடி மனித அதயத்தினின்று உதித்தெழும் எல்லா ஆவல்களையும் நிறைவு செய்வது மட்டுமன்றி, அவற்றை விஞ்சியும் திகழும் என்று நாம் பயின்றுள்ளோம்.18பின்னர், சாவு முறியடிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகள் கிறிஸ்துவில் உயிர்பெற்றெழுவர்; அப்பொழுது, வலுவற்றதாயும் அழிவுக்குரியதாயும் விதைக்ப்பட்டது அழியாமையை அணிந்து கொள்ளும்; அன்பும், அன்பின் கனிகளும் நிலைத்து நிற்கும்; மனிதருக்காக கடவுள் படைத்துள்ள படைப்பனைத்தும் பயனற்ற நிலை என்னம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும்.21
உண்மையிலேயே, ஒருவர் உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குப் பயனேதும் இல்லை என நாம் அறிவுறுத்தப் பெறுகிறோம்.22 இருப்பினும், புதிய மண்ணகத்தை நோக்கும் நம் எதிர்பார்ப்பு இம்மண்ணகத்தை வளப்படுத்தும் அக்கறையை நம்மில் தளர்ச்சியுறச் செய்வதற்கு நேர்மாறாக, அவ்வக்கறையைத் தூண்டிவிடவேண்டும்: ஏனெனில், இங்குதான் மற உலகின் ஒருவகை முற்காட்சியாகத் திகழக் கூடுமான புதியமனித குடும்பம் என்னும் உடல் வளருகிறது. ஆதலின், அண்ணுலக முன்னேற்றத்தைக் கிறிஸ்துவினுடைய ஆட்சியின் வளர்ச்சியினின்று கவனமாக வேறுபடுத்தல் தேலை என்றாலும், இம்மண்ணுலக முன்னேற்றம் மனித சமுதாயத்தை நன்முறையில் ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் அளவுக்கு கடவுளாட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.23
ஏனெனில், மனிதரின் மாண்பு, சகோதர ஒன்றிப்பு, சுதந்திரம் முதலிய நலன்களை, அதாவது நம் இயல்பு மற்றும் நம் உழைப்பு ஆகியவற்றின் சிறப்பான இந்தப் பலன்கள் அனைத்தையும் ஆண்டவரின் ஆணையின்படியும் அவருடைய ஆவியிலும் பாரஙெ;கும் நாம் பரப்பியிருந்தோம் என்றால், கிறிஸ்து தந்தையிடம் நிலையான அனைத்துலக ஆட்சியை கையளிக்கும்போது, அந்நலன்களை எல்லாம் முற்றிலும் மாசற்றவையாக, ஒளி பெற்றவையாக, உரமாறியவையாக மீண்டும் நாம் காண்போம்: கிறிஸ்துவின் ஆட்சி''உண்மையின் ஆட்சி, அன்பின் ஆட்சி, அமைதியின் ஆட்சி''24அந்த ஆட்சி ஏற்கெனவெ இம்மண்ணில் மறைபொருளாக உள்ளது; ஆண்டவர் மீண்டும் வரும் பொழுதோ அது தன் முழுமையை அடையும்.
இயல் 4
இன்றைய உலகில் திருச்சபையின் பணி
40. திருச்சபையின் உலகும் ஒன்றோடு ஒன்று கொண்டுள்ள தொடர்பு
மனித ஆளின் மாண்பு, மனித சமூகம், மனித ஈடபாட்டின் ஆழ்ந்த பொருள் அகியவை பற்றி மேலே நாம் கூறியவை யாவும் திருச்சபைக்கும் உலகிற்கும் இடையேயுள்ள உறவுக்கு அடித்தளமாகவும், அவை ஒன்றோடு ஒன்று உரையாடுவதற்கு1 அடிப்படையாகவும் அமைகின்றன. எனவே, திருச்சபையின் மறைபொருளைப் பற்றி ஏறகெனவே திருச்சங்கம் வரையறுத்துள்ள அனைத்துக் காரியங்களையும் பொருத்தமானவையே என ஏற்றுக்கொண்டு, இப்போது இவ்வுலகில் நிலைத்திருந்து, உலகோடு வாழ்ந்து செயல்படும் அதே திருச்சபையைப் பற்றி இவ்வியலில் ஆராயவிருக்கின்றோம்.
திருச்சபை என்றும் வாழும் தந்தையின் அன்பிலிருந்து பிறந்து, காலப்போக்கிலே மீட்பர் கிறிஸ்துவால் நிறுவப்பட்டு, தூய ஆவியில் ஒன்று சேர்க்கப்பட்டதாகும்.3 இத்திருச்சபையின் குறிக்கோள் ஈடேற்றத்தையும் நிறைவுக் காலத்தையும் சாந்ற்ததாகும்: இக்குறிக்கோளை வரவிருக்கும் யுகத்தில் தான் அரு முழுமையாக அடையமுடியும். ஆனாலும் திரச்சபை இப்பொழுது இவ்வுலகில் இருந்து வருகிறது; திருச்சபையில் இருப்பவர்களோ மண்ணுலக நகரின் உறுப்பினர்களாகிய மனிதர்களே; இவர்கள் மனித குலத்தின் வரலாற்றில் இப்பொழுது கடவுளது பிள்ளைகளின் குடும்பத்தை உருவாக்க அழைக்பப்பட்டுள்ளனர்; இக்குடும்பம் ஆண்டவர் வரும்வரை இடையறாது வளரவேண்டியதாகும். விண்ணக நலன்களை முன்னிடடு ஒன்றுசேர்க்கப்பட்டு, அந்நலன்களால் ஏற்கெனவே வளம்பெற்றுள்ள இந்தக் குடும்பத்தை''இவ்வுலகில் நிறுவப்பெற்றதும் ஒழுங்கு முறையில் அமைந்துள்ளதுமான ஒரு சமூகமாக''4கிறிஸ்து ஏற்படுத்தினார். ''கட்புலனாகின்ற சமுதாய அளவிலான ஒன்றிப்பிறகுத் தேவையான வழிவகைகளை''5 அவர் அதற்குத் தந்துள்ளார். இவ்வாறு ''கண்களுக்குப் புலப்படும் குழுவாகவும் ஞனச் சமூகமாகவும்''6ஒரே நேரத்தில் அமைந்துள்ள திருச்சபை மனித குலம் அனைத்தோடும் வழி நடக்கிறது; உலகத்தோடுகூட ஒரே மண்ணக வரலாற்றில் பங்கேற்கிறது. கிறிஸ்துவில் புதுப்பிக்கப்படுவதற்காகவும் கடவுளின் குடும்பமாக உருமாற்றப்படுவதற்காகவும் அழைக்கப்பெற்றுள்ள இம்மனித சமுதாயத்தில் திருச்சபை புளிப்பு மாவு போல் உள்ளது; ஏன், ஒருவிதத்தில் இம்மனத சமுதாயத்தின் ஆன்மாவாகவே திருச்சபை அமைந்தள்ளது.7
மண்ணுலக நகரும் விண்ணுலக நகரும் ஒன்றை ஒன்று ஊடுருவி நிறிகின்றன என்பதை உண்மையிலே நம்பிக்கையால் மட்டும் நாம் உணர முடியும். ஏன், கடவுளின் பிள்ளைகளின் மகிமை முழுவதும் வெளிப்படும்வரை, பாவத்தினால் அலைக்கழிக்கப்ட்டுவரும் மனித வரலற்றின் ஒரு மறைபொருளாகவே இவ்வுறவ இருந்துவரும். தன்கு உரித்தான நிறைவாழ்வுக் குறிக்கோளை அடையச் செயல்படும் திருச்சபை உண்மையிலே மனிதரோடு இறைவாழ்வைப் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், ஒரு வகையில் உலகம் முழுவதிலும் அவ்வாழ்வு பிரதிபலிக்கம் ஒளியைப் பரப்புகிறது; முக்கியமாக, மனிதரின் மாண்பை நலப்படுத்தி மேன்மையுறச் செய்வதாலும், மனித சமுதாயத்தின் பிணைப்புகளை உறுதிப்படுத்துவதாலும், மனிதரின் அன்றாடச் செயல்களுக்கு ஆழ்ந்த பொருளையும் சிறப்பையும் அளிப்பதாலும், அறைவாழ்வ வீசும் ஒளியைத் திருச்சபை பரப்புகிறது. இவ்வாறு தன் தனித்தனி உறுப்பினர்கள் வழியாகவும் தன் முழுச் சமூகத்தின் வழியாகவும் மனித குலத்தையும் அதன் வரலற்றையும் அன்னும் அதிக மனிதத்தன்மை வாய்ந்ததாய் ஆக்குவதற்குத் தன்னால் பொருமளவில் உதவ முடியும் எனத் திருச்சபை நம்புகிறது.
மேலும், அதே பணியை நிறைவேற்ற மற்ற கிறிஸ்தவச் சபைகளோ மற்றும் திருச்சபைச் சமூகங்களோ அளித்துவந்துள்ள ஒத்துழைப்பையும் இன்னும் செய்துவரும் உதவியையும் கத்தோலிக்கத் திருச்சபை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறது. அதே நேரத்தில், நற்செய்திக்கு வழியை ஆயத்தப்படுத்துவதில் உலகம் தனி நற்கெய்திக்கு வழியை ஆயத்தப்படுத்துவதில் உலகம் தனி மனிதருடையவும் மனித சமூதாயத்தினுடையவம் திறமைகள் மற்றம் உழைப்பு மூலம் பெருமளவிலும் வௌ;வேறு முறைகளிலும் தனக்கு உதவி செய்ய முடியும் எனத் திருச்சபை ஊறதியக நம்புகிறது. திருச்கபைக்கும் உலகுக்குமிடையே நிகழும் பரிமாற்றமும், அவை இரண்டிற்கும் ஒருவிதத்தில் பொதுவாக இருக்கும் துறைகளில் அவை ஒன்றுக்கொன்று ஆற்றும் உதவயும் நன்முறையில் பேணப்பட வேண்டும்; இதற்கான பொதுத் தத்துவங்கள் சில கீழே விளக்கப்படுகின்றன.
41. ஒவ்வொரு மனிதருக்கும் திருச்சபை அளிக்க விழையும் உதவி
இன்றைய மனிதர்தம் ஆளுமையை முழுமையாய் வளர்ப்பதிலும் தம் உரிமைகளை நாளுக்க நாள் அதிகமதிகமாகக் கண்டுபிடித்து, அவற்றை நிலைநாட்டுவதிலும் முன்னோக்கிச் சென்ற கொண்டிருக்கின்றனர். மனிதரின் இறுதிக் குறிக்கோளான கடவுளின் மறைபொருளை வெளிபிபடுத்தும் பணி திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; அதே நேரத்தில், மனிதர் ஏன் இருக்கின்றனர் என்பதன் பொருளையும் அதாவது அவர்களைப் பற்றிய ஆழ்ந்த உண்மையையும், மனிதருக்குத் திருச்சபை உணர்த்துகிறது. கடவுளுக்குப் பணிபுரிகின்ற திருச்சபை, மண்ணுலக நுகர்க்கிகளில் முழுமையாய் மன நிறைவைக் காண இயலாத மனித அதயத்தின் மின ஆழ்ந்த வேட்கைகளைக் கடவுள் ஒருவரே நிறைவு வெய்ய முடியும் என்பதை நன்கறியும். மேலும், மனிதர் கடவுளின் ஆவியினால் இடையறாது தூண்டப் பெறுவதனால் சமயம் சார்ந்த வினாக்களைக் குகறித்து அவர்கள் ;சிறிதேனும் அக்களையில்லாதவர்களாக ஒருபோதும் இருக்கமாட்டார்கள் என்பதையும் திருச்சபை அறியும். இதைக் கடந்த நூற்றாண்டுகளின் அனுபவம் மட்டுமன்றி, நம்காலத்தைச் சர்ந்த பற்பல சான்றுகளம் எண்பித்து நிற்கின்றன. மனிதர் தமது வாழ்க்கை, தமது ஈடுபாடு,தமது இறப்பு ஆகியவற்றின் பொருளை மங்கலான விதத்திலாவது தெரிந்து கொள்ள எப்போதும் விரும்புவார். திருச்சபையின் இருப்பநிலையே இப்பிரச்சனைகளை அவர்களுக்கு நினைவூட்டுகின்றது. தமது சாயலாக மனிதரைப் படைத்துப் பாவத்தினின்று அவர்களை மீட்ட கடவுள் ஒருவரே இவ்வினாக்களுக்கு முழுமையான விடையளிக்கிறார். மனிதராகப் பிறந்த தம் மகனாகிய கிறிஸ்துவின் வழியாகத் தம்மை வெளிப்படுத்துவதன் மூலம் அவர் இதைச் செய்கிறார். நிறைவு பெற்ற மனிதரான கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் அதிக மனித தன்மையுடையவராகின்றனர்.
இந்த நம்பிக்கையில் ஊன்றி, திருச்சபை மனித உடலை மிகவும் இழிவாகக் கருதுதல், அல்லது அதை மிதமிஞ்சிப் போற்றுதல் முதலிய எல்லாக் கருத்துக் தடுமாற்றங்களிலிருந்தும் மனித இயல்பின மாண்பை காக்க முடியும். திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கிறிஸ்துவின் நற்செய்தியாலன்றி வேறு எந்த மனிதச் சட்டத்தாலும் ஆளுகுரிய மாண்பையும் மனித சுதந்திரத்தையும் இத்துணை நன்றாகப் பாதுகாக்கமுடியாது. இந்நற்செய்தி கடவுளின் பிள்ளைகளுக்குரிய சுதந்திரத்தை அறிவித்துப் பறைசாற்றுகிறது; பாவம் என்னும் ஊற்றிலிருந்து தோன்றும் எல்லா அடிமைத்தளைகளையும் அழிக்கிறது;8 மனச்சான்றின் மாண்பையும் அது சுதந்தரமாக எடுக்கும் முடிவையும் மீறத் தகாதனவாகக் கருதி மதிப்பளிக்கிறது; எல்லா மனிதத்திறமைகளையும் கடவுளின் ஊழியத்திற்காகவும் மற்றும் மனிதர்களின் நலனுக்காகவும் பயன்படுத்துமாறு இடையறாது அறிவுறுத்துகிறது; இறுதியாக, ஒவ்வொருவர் மீதும் அன்புமூற வேண்டும்என அனைவருக்கம் அறிவுரை நல்குகிறது.9 இவையெல்லாம் கிறிஸ்தவ நிறைவாழ்வுத் திட்டத்தின் அடிப்படை ஒழுங்கு முறையோடு ஒத்திருக்கின்றன. ஒரே கடவுளே படைத்தவராகவும் அதே சமயத்தில் மீட்பராகவும் இருக்கின்றார்; எனவே மேற்கூறிய தெய்விக ஒழுங்கமைப்பிலே படைப்புகளின், சிறப்பாக மனிதரின், முறையான தன்னாட்சி உரிமை பறிபோவதில்லை; மாறாக அத்தன்னாட்ச உரிமை தனது மாண்பை மீண்டும் பெற்று, அந்த மாண்பிலேயே உறுதி பெறுகிறது.
எனவேதான் திருச்சபை தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நற்செய்தியின் அடிப்படையில் மனிதரின் உரிமைகளைப் பறைசாற்றுகிறது; இவ்வுரிமைகளை இன்று எங்கும் மேம்படுத்திவரும் இயக்கங்களைத் திருச்சபை பாராட்டிப் பெரிதும் மதிக்கிறது. என்றாலும், இவ்வியக்கங்கள் நற்செய்தி உணர்வால் ஊடுருவப்பட வேண்டும்; தன்னாட்ச் உரிமை பற்றிய தவறான எக்கண்ணோட்டதிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில், இறைச்சட்டத்தின எல்லா பிதிகளிலிருந்தும் நாம் அகன்று சென்றால்தான்நம் சொந்த உரிமைகள் முழுமையாகக் காக்கப்படும் எனும் சோதனை வரக்கூடும். ஆனால், இந்த வழியே சென்று விட்டால் மனிதரின் மாண்பு காக்கப்டுவதற்கு நேர்மாறாக அழந்தே போய்விடும்.
42. திருச்சபை மனித சமுதாயத்திற்கு அளிக்க முயலும் உதவி
கிறிஸ்தவ அடித்தளமாகக் கொண்ட கடவுளின் பிள்ளைகளுடைய குடும்பத்தின் ஒற்றுமையினால்10 மனித குடும்பத்தின் ஒன்றிப்பு பெரிதும் உறுதிப்படுத்தப்பெற்று முழுமை அடைகிறது.
கிறிஸ்து தமது திருச்சபைக்கே உரித்தனதாக ஒப்படைத்த பணி அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளைச் சார்ந்ததன்று என்பது உண்மைதான்: திருச்சபைக்கு அவர் அளித்த குறிக்கோள் சமயத்துறையைச்11சார்ந்ததாகும். ஈவ்வாறிருந்காலும் கடவுளது சட்டத்திற்கேற்ப மனித சமூகத்தை அமைத்து உறுதிப்படுததுவதற்குத் துணைபுரியக்கூடிய பணியும், ஒளியும், சக்தியும் சமயத்துறைச் சார்ந்த இப்பணியிலிருந்தே வருகின்றன. மேலும், தேவைகளைப் பொறுத்தும் கால இடச் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் திருச்சபை தானாகவே முன்வந்து எல்லா மக்களுக்கும் சிறப்பாக ஏழைகளுக்கு, இரக்கச்செயல்கள் மற்றம் இவை பொன்ற உதவிகளைப் புரிவதற்காக அமைப்புகளை உருவாக்கலாம்; ஏன் ஊரவாக்கபும் வேண்டும்.
மேலும், திருச்சபை இன்றைய சமூக இயக்கங்களில் உள்ள நல்லவை அனைத்தையும் மதித்து ஏற்றுக்கொள்கிறது; ஒற்றுமைக்கு இட்டுச் செல்லும் வளர்ச்சி, நலமான சமூக மயமாக்கல், சமூக, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை இந்நலன்களுள் குறிப்பிடத்தக்கவை. உண்மையிலே, ஒன்றிப்பை ஆதரித்து வளர்த்தல் திருச்சபையின் உள்ளார்ந்த பணியோடு நெருங்கிய தொடர்புடையதாகும்; ஏனெனில் ''கிறிஸ்துவின் இத்திருச்சபை ஓர் அருளடையாளம்போல் விளங்குகிறது. அதாவது. கடவுளோடுள்ள நெருங்கிய ஒன்றிப்பிற்குமான அடையாளமும் கருவியுமாய் உள்ளது''12 இவ்விதத்தில் வெளிப்படையான, உண்மையான சமூக உன்றிப்பானது உள்ளங்களின் ஒன்றிப்பிலிருந்தும் இதயங்களின் ஒன்றிப்பிலிருந்தும் பிறக்கிறது என்பதைத் திருச்சபை உலகிற்கு உடுத்துக் காட்டுகிறது: அதாவது, தூய ஆவியில் பிளவுறா முறையில் நிலைபெறும் தனது ஒருமைப்பாடு எந்த நம்பிக்கையின் மேலும் அன்பின்மேலும் கட்டப்பட்டுள்ளதோ அவற்றிலிருந்தெ உண்மையான சமூக ஒன்றிப்பு ஊற்றெடுக்கிறது என் உணர்த்துகிறது. ஏனெனில், இன்றைய மனித சமூகத்தின் மீது திருச்சபை கொண்டுள்ள செல்வாக்கு, வெறும் மனித வழிமுறைகளால் செயல்படுத்தப்பெறும் எந்த வெளிப்படையன ஆதிக்த்திலும் அடங்கிஙிருக்கவில்லை; மாறாக, வாழ்வில் நடைமுறையில் எண்பிக்கப்படுகின்ற இந்நம்பிக்கையிலும்இந்த அன்பிலுமே அடங்கியிருக்கிறது.
மேலும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணி, தன் இயல்பு ஆகியவற்றின் காரணமாகத் திருச்சபை குறிப்பிட்டதொரு பண்பாட்ட அமைப்புக்கோ அரசியல், பொருளாதார, சமூக முறைக்கோ கட்டுப்பட்டதாகாது. ஆதலால் தனது அனைத்துலகத் தன்மையினால், அது பல்வேறு மனித சமூகங்களுக்கம் நாடுகளக்கும் இடையே மிக நெருங்கியதொரு பிணைப்பாகத் திகழ முடியும்; இவ்வாறு திகழ வேண்டுமென்றால் மேற்கூறிய சமூகங்களும் நாடுகளம் திருச்சபையில் நம்பிக்கை வைத்து, அது தன் பணியை நிறைவேற்றுவதற்கான உண்மைச் சுதந்திரத்தை நடைமுறையில் ஏற்றுக் கொள்ள வேண்டும். இக்காரணத்திற்காகவே, கடவுளின் பிள்ளைகள் என்னும் குடும்ப உணர்வோடு நாடுகளுக்கும் இனங்களுக்கும் இடையே நிலவும் பிணக்குகளை முறியடிக்க வேண்டுமெனவும், அதேபோல் முறையான மனித குழுக்களை உறுதிப்படுத்த வேண்டும் எனவம் திருச்சபை தன் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி மக்கள் அனைவருக்கும் அறிவுறுத்துகிறது.
எனவே, மனித குலம் தனக்காக உருவாக்கியுள்ளதும், இன்னம் அயராது உருபாக்கியவரவதுமான பலதரப்பட்ட எத்தனையோ அமைப்புகளில் காணப்படும் உண்மையானவை, நல்லவை, நீதியானவை எல்லாவற்றையும் சங்கம் பெரிதும் மதித்துப் போற்றுகிறது. மேலும், திருச்சபை தன்னைப் பொறுத்தவரையிலும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணியோடு பொருந்தி போகும் அளவிலும் மேற்கூறிய மனித அமைப்புகளை எல்லாம் ஆதரித்து வளர்க்கவும் அவற்றிற்கு உதவி செய்யவும் விரும்புகிறது எனவும் சங்கம் அறிக்கையிடுகிறது. மனிதருடையவும் குடும்பத்தினுடையவும் அடிப்படை உரிமைகளையும் பொது நலக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் எவ்வகை ஆட்சியின் கீழும் தான் சுதந்திரமாக அனைவரின் நலனுக்காக உழைக்கவும் வளர்ச்சியுறவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் திருச்சபை ஆர்வத்துடன் விரும்பிகிறது.
43. திருச்சபை கிறிஸ்தவர் வழியாக மனித ஈடுபாட்டிற்கு அளிக்க முயலும் உதவி
மண் விண் ஆகிய இரு நகர்களின் குடிமக்களாகக் கிறிஸ்தவர்கள் உள்ளனர். எனவே இவர்கள் தத்தம் மண்ணுலகக் கடமைகளை நேர்மையோடு நிறைவேற்ற ஈடுபட வேண்டுமெனச் சங்கம் அறிவுறத்துகிறது; இவ்வாறு செயல்படும்போது அவர்கள் நற்செய்தி மனப்பான்மையால் வழிநடத்தப்பெற வேண்டும். இங்கு நமக்கு நிலையான நகர் இல்லை. வரவிருக்கும் நகர் ஒன்றைத் தேடுகிறோம்13 என்னும் எண்ணத்தில் தங்கள் உலகக் கடமைகளைச் செய்யாமலிருக்கலாம் என நினைப்பவர்கள் தவறு செய்கிறார்கள்; ஏனெனில், ஒவ்வொருவரின் தனி அழைப்பிற்கேற்ப14 மேற்கூறிய உலகக் கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென அவர்களது நம்பிக்கையே அவர்களை இன்னம் அதிகமாகப் பணிக்கின்றது என்பதை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை. மற்றொரு புறத்தில் ஏதோ வழிபாட்டுச் செயல்களையும் அறநெறி சார்ந்த ஒருசில கடமைகளையும் நிறைவேற்றுவதில் மட்டுமெ சமயவாழ்வு அடங்கியிருக்கிறது எனவும், மண்ணுலகக் காரியங்கள் சமயவாழ்வுக்கே முற்றிலும் புறம்பானவை எனவம் கருதி உலகக் காரியங்களிலேயே முழுமையாய் ஈடுபட நினைப்பவர்களும் தவறு செய்கின்றனர். பலரைப் பொறுத்தமட்டில், அவர்கள் அறிக்கையிடும் நம்பிக்கைக்கும் அவர்களது அன்றாட வாழ்வுக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி காணப்படுகிறது; இஃது இன்றைய பெரும் தப்பறைகளுள் ஒன்று எனவெ கருதப்பட வேண்டும். ஏற்கெனவே பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர் இத்தகைய முறைகேட்டை வன்மையாகக் கண்டித்தனர்;15 இன்னும் அதிக உறுதியோடு புதிய ஏற்பாடடில் இயேசு கிறிஸ்துவும் கடுமையான தண்டனைகள் வருவதாகக் கூறி இதைக் கடிந்தார்.16 எனவே, தொழில்களும் சமூகச் செயல்களும் ஒருபுறம், சமயவாழ்வு மற்றொருபுறம் என இவற்றிற்கிடையே எந்த விதத்திலும் ;தவறான முரண்பாடு கற்பித்தல் கூடாது. இவ்வுலகக் கடமைகளைப் பறக்கணிக்கும் ஒரு கிறிஸ்தவர் தமக்கு அடுத்திருப்பவருக்க ஆற்ற வேண்டிய கடமைகளை, ஏன் கடவுளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைக்கூட புறக்கணித்தவர் ஆகிறார்; அதனால் அவர் தனது நித்திய மீட்பையும்கூட ஆதப்துக்கு உள்ளாக்குகிறார். கைவினைஞராக வேலைசெய்த கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, தங்களது மனித, குடும்ப, தொழில் சார்ந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை முயற்கிகளை சமய நலன்களோடு உயிரோட்டமுடன் ஒன்றிணைத்துத் தங்கள் மண்ணுலகச் செயல்கள் அனைத்தையும் தாங்கள் ஆற்றவல்லவாகளாய் உள்ளனர் என்பதில் கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி கொள்வார்களாக: இச்சமய நலன்களின் உயரிய வழிகாட்டல் மூலம் அனைத்தும் கடவுளின் மாட்சிக்காக ஒருமுகப்பபடுத்தப்படும்.
உலகத்துக்கடுத்த கடமைகளும் செயல்களும் பொதுநிலையினருக்கு மட்டுமே உரியன என்றில்லாவிடினும், அவை அவர்களுக்கே சிறப்பான முறையில் உரித்தானவை. எனவே, அவர்கள் உலகின் குடிமக்கள் என்ற முறையில் தனியாகவோ குழுக்களாகவோ செயல்படும் பொழுது ஒவ்வொரு துறைக்கம் உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதோடு மட்டுமல்லாமல், அத்துறைகளில் சீரிய திறபை பெற முயற்சி செய்யவும் வேண்டும். அதே குறிக்கோளை அடைய முனையும் பிற மக்களோடு மனதார அவர்கள் ஒத்துழைக்க வேண்டும். நம்பிக்கையிலிருந்து எழும் பொறுப்புகளை ஏற்று, அதன் ஆற்றலால் வலுப்பெற்று, தேவைப்படும்பொழுது அவர்கள் புதிய திட்டங்களைத் தயக்கமின்றி உருவாக்கி அவற்றைச் செயல்படுத்தவும் வேண்டும். மண்ணக நகரத்தின் வாழ்வில் இறைச் சட்டத்தைப் பதிக்கச் செய்வது முறையாக உருவாக்கப்பட்ட அவர்கள்தம் மனச்சான்றின் பொறுப்பு. திருப்பணிhளர்களிடமிருந்து பொதுநிலையினர் அன்ம ஒளியையும் ஆற்றலையம் எதிர்பார்ப்பார்களாக. எனினும், கனமான பிரச்சனைகள் உள்பட எழுகின்ற எல்லா பிரச்சினைகளுக்கும் அவர்களின் அருள்பணியாளர்கள் உடனடியாக நடைமுறைத் தீர்வுகளை எப்போழுதும் கொடுக்கும் அளவுக்குத் திறமை உள்ளவர்கள் எனவோ, அவர்கள் இதற்காகவே பணி ஏற்றவர்கள் எனவோ கருதக்கூடாது: மாறாக, கிறிஸ்தவ ஞானத்தினால் அறிவொளி பெற்றுத் திருச்சபை ஆசிரியத்தின் படிப்பனையில் கவனத்துடன் கருத்தைச் செயல்படுத்துவார்களாக.
உலகு பற்றிக் கிறஸ்தவக் கண்ணோட்டம் கூறுவதைக் கொண்டு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் திட்டமான முடீவுகள் காண கொதுநிலையினரால் பொதுவாக இயலும். இருப்பினும் பல வேளைகளிலும் கிறிஸ்வர்களுள் சிலர் அதே திறந்த மனப்பான்மையோடு ஒரே பொருள் பற்றி வேற விதமாகச் சிந்திக்கக்கூடும்; இது முறையானதே. எனினம் இவ்விரு திறத்தாருள்ளும் ஒருவர் அல்லது மற்றவரது முடிவுகளை அவைகளை வெளியிட்டவர்களின் உண்ணங்களுக்க மாறாகக்கூட, வேறு பலர் நற்செய்திப் படிப்பனையோடு எளிதில் இணைந்து விடுகின்றனர். இத்தகையோர் நினைவிலிருந்த வேண்டியது என்னவென்றால்: இத்தகைய நிலைமைகளில் திருச்சபையின் அதிகாரம் தம் முடிவுக்கு மட்டுமே ஆதரவளிக்கிறது என்று எவரும் உரிமை பாராட்ட முடியாது. ஒருவர் ஒருவர் மீது அன்பு கூர்ந்து, பொது நலத்தில் எல்லாவற்றிற்கும் மேலான அக்கறை கொண்டவர்களாய், எப்பொதும் நேர்மையான உரையாடுதல் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நம்பிக்கை கொண்டோர் முயல்வார்களாக.
திருச்சபையின் முழுவாழ்விலும் செயல்முறையில் பங்கு கொள்ள வேண்டியவர்கள் பொதுநிலையினர். உனவே அவர்கள் கிறிஸ்தவ மனப்பான்மையை உலகில் ஊடுரவச் செய்யக் கடமைப்பட்டிருப்பதோடல்லாமல், அனைத்துச் சூழமைவுகளிலும் மனித சமுதாயத்தின் நடுவில் கிறிஸ்துவின் சாட்சிகளாக இருக்கவும் அழைக்கப்படடிருக்கிறார்கள்.
கடவுளின் திருச்சபையைக் கண்காணிக்கும் அலுவல் ஆயர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, இவர்கள் நம்பிக்கை கொண்டோரின் மண்ணக ஈடுபாடுகள் அனைத்தும் நற்செய்தியின் ஒளியால் ஊடுருவப் பெற்றுத் தலங்கும்படியாகத் தங்களின் திருப்பணியாளர்களோடு சேர்ந்து கிறிஸ்துவின் திருச்சபையின் செய்திபை; போதிக்க வேண்டும். மேலும் தாங்கள் உலகத்திற்குத் திருச்சபையின் உரவைக் காட்டுவது கங்களது அன்றாட நடத்தையினாலும் அக்கறையாலுமே18என்ததை எல்லா அருள்பணியாளர்களும் மனத்தில் கொள்ள வேண்டும்; அஃதோடுகூட, இவ்வாறு தாங்கள் காட்டும் உருவின் அடிப்படையில்தான் மக்கள் கிறிஸ்தவ நற்செய்தி சக்தி வாய்ந்ததா, உண்மையானதா என்பது பற்றி முடிவு செய்வார்கள் என்பதையும் எல்லா அருள்பணியாளர்களும் கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைய உலகுக்குப் பெரிதும் தேவையான ஆற்றல்களை வழங்குகின்ற வற்றாத ஊற்றாகத் திருச்சபை தனது உடனிருப்பாலும் தன்னள் கொண்டிருக்கம் உல்லாக் கொடைகளாலும் விளங்குகிறது; இந்த உண்மையை அருள்பணியாளர்கள் துறவியரோடும் தம் மக்களோடும் மற்றம் உலகத்தோடும் சேர்ந்து தங்களது வாழ்க்கையாலும் வார்த்தையாலும் எண்ப்த்துக் காட்டவே;ண்டும். எவ்வகைக் கருத்துள்ள மனிதரோடும் உரையாடல் நடத்துவதில் தங்கள் பொறுப்பை நிறைவேற்றும் நோக்ககுடன் அருள்பணியாளர்கள் ஆர்வத்தோடு படிப்பில் ஈடுபட்டுத்தங்களைத் தாயாரித்துக்கொள்ள வேண்டும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் இப்போதுச் சங்கத்தின் சொற்களை உள்ளத்தில் கொள்வார்களாக: ''இன்று மக்களினம் அரசியல், பொருளாதார, சமூக ஒன்றிப்பை நோக்கி மேன்மேலும் விரைந்து கொண்டிருக்கிறது கடவுளது குடும்பத்தில் மக்களினம் முழுவதும் இணையும்படியாக ஆயர்களது, உரோமை ஆயரதும் தலைமையின் கீழ் இணைந்து அக்கறை காட்டி உழைத்து, பிளவுக்கு வழி வகுக்கக் கூடிய யாவற்றையும் திருப்பணிhளர்கள் அழித்து ஒழிப்பார்களாக''19
திருச்சபை தூய ஆவியின் ஆற்றலால் தன் ஆண்டவருக்கு உண்மையான மணமகளாக இருந்து வந்திருக்கிறது; உலகில் மீட்பின் அடையாளமாக இருக்கவும் அது என்றுமே தவறியதில்லை. எனினம் நூற்றாண்டளவான தனது வரலாற்றில் தனது உறுப்பினர்களாகிய20 திருப்பணிநிலையினர் அல்லது பொதுநிலையினரில் சிலர் கடவுளின் ஆவிக்கு உண்மையற்றவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதைத் திருச்சபை நன்கு அறியும். இன்றுகூட, தான் கூறுகின்ற செய்திக்கும் நற்செ;யதி எம்மனிதர்களிடம் ஒப்படைக்கப்படடிருக்கிறதோ அவர்களின் மனித பலவீனத்திற்கம் இடையே எத்துணை இடைவெளி உள்ளதெனத் திருச்சபை நன்கு அறிந்துள்ளது. இத்தகைய குறைகளைப் பற்றி வரலாறு எத்தகைய தீர்ப்ப வழங்கினாலும் சரி, அக்குறைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். இது போலவே, உலகத்தோடுள்ள தனது உறவை வளர்ப்பதில், பல நூற்றாண்டுக் கால அனுபவத்திலிருந்து தொடர்ந்து பயின்று தான் எத்துணை அதிக முதிர்ச்சி அடைய வேண்டுமென்பதையும் திருச்சபை உணருகிறது. தூய ஆவியினால் வழி நடத்தப்பட்டுத் தாய்த்திருச்சபை ''தன் தோற்றத்திலே கிறிஸ்துவின் அடையாளம் சுடர்விட்டு ஒளிருமாறு தூய்மையையும் புதுக்கோலத்தையும் பெற'' தன் மக்களை இடையறாது தூண்டுகிறது.21
44. இன்றைய உலகிலிருந்த திருச்சபை பெறும் உதவி
வரலாற்றில் காணப்படம் ஒரு சமூக அமைப்பாகத் திருச்சபையை ஏற்று, வரலாற்றில் புளிப்பு மாவு போல் இருக்கிறது என் ஒப்புக்பொள்வது உலகுக்கு நன்மை பயப்பதாகும்; அது போலவே மனிதகுல வரலாற்றிலிருந்தும் அதன் வளர்ச்சியிலிருந்தும் தான் எவ்வளவுதூரம் பயனடைந்துள்ளது என்பதைத் திருச்சபையும் மறுக்கமுடியாது.
கடந்த நூற்றாண்டுகளின் அனுபவங்கள், அறிவியல்களின் வளர்ச்சி, பல்வேறுபட்ட மனிதப் பண்பாட்டு முறைகளில் மறைந்திருக்கும் செல்வக் குவியல்கள் ஆகியவற்றால் மனிதரின் இயல்பை அதிக ஆழமாக அறிய முடிகிறது; அவை உண்மையை நோக்கி புதிய வழிகளைத் திறந்துள்ளன: மேலும், திருச்சபைக்கும் பயன்தருவனவாய் உள்ளன. உண்மையில் திருச்சபை தன் வரலாற்றுத் தொடக்கத்திலிருந்தே பல்வேறு மக்களின் சிந்தனை முறைகள், மொழி வழக்குகள் ஆகியவற்றின் துணைகொண்டு கிறிஸ்துவின் செய்தியை வெளிப்படுத்தக் கற்றக்கொண்டுள்ளது; மேலும் மெய்யியலாரின் ஞானத்தால் அதைத் தெளிவுபடுத்தவும் முயன்றுள்ளது; யாவரும் புரிந்தகொள்ளும் வகையில் அறிஞர்களின் தேவைகளுக்கு ஏற்பவும் நற்செய்தியை இயன்ற அளவுக்குத் தழுவியமைக்க வேண்டுமென்ற குறிக்கோளை முன்னிட்டே திருச்சபை இவ்வாறு செய்துள்ளது. வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை இவ்வாறு தழுவியமைத்துப் பறைசாற்றுவதே நற்செய்தி அறிவிப்புப் பணியனைத்தின் விதிமுறையாக என்றும் அமைந்திருக்க வேண்டும். இவ்வகையிலேதான் ஒவ்வொரு நாட்டு மக்களும் தமக்குப் பொருத்தமான முறை கிறிஸ்துவின் செய்திக்கு உருக்கொடுக்க இயலுமாறு தூண்டப்பெறுகின்றனர்; அதே வேளையில் திருச்சபைக்கும் பல்வேறு பண்பாடுகளுக்கும் இடையில் உயிரோட்டமுள்ள பரிமாற்றம் ஊக்குவிக்குப் பெறுகிறது.22 விரைவான மாற்றங்களும், சிந்தனை முறையில் பெரும் வேறுபாடுகளும் நிகழ்ந்துவரும் இக்காலத்தில் சிறப்பாக மேற்கூறிய பரிமாற்றத்தை வளர்க்கத் திருச்சபை தனிப்பட்ட விதத்தில் உதவி வாடி நிற்கிறது; இவ்வுலக நடுவில் வாழ்ந்து அதன் வௌ;வேறு நிறுவன அமைப்புகளிலும் துறைகளிலும் தேர்ச்சி பெற்று, அவற்றின் சிந்தனைப் பாணிகளை ஆழமாகப் புரிந்து கொண்டவர்கள்-அவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவராயினும் சரி, கடவுள் நம்பிக்கையற்றவராயினும் சரி திருச்சபைக்கு உதவ முடியும். தூய ஆவியின் உதவியினால் இன்றைய பல்வேறுபட்ட மொழிவழக்குகளுக்குச் செவி மடுப்பதும், அவற்றை இறைவார்த்தையின் ஒளியில் மதிப்பிடூ செய்வதும் இறைமக்கள் எல்லாருடையவும் கடமையாகும்; இக்கடைமையைச் சிறப்பாக அருள்பணியாளர்கள் மற்றம் இறையியலார் நிறைவேற்ற வேண்டும்; இவ்வாறு, இறைவெளிப்பாட்டு உண்மையை நாளும் ஆழமாக அறியவும், அதிக நிறைவாக அதை புரிந்து கொள்ளவும், அதிகப் பொருத்தமான விதத்தில் அதை எடுத்துரைக்கவும் முடியும்.
காணக்கூடிய சமூக அமைப்பு திருச்சபைக்கு உண்டு. இந்தச் சமூக அமைப்பு கிறிஸ்துவில் திருச்சபை கொண்டுள்ள ஒன்றிப்பின் வெளி அடையாளமாகும். எனவே, சமூக வாழ்வில் ஏற்படுகின்ற வளர்ச்சியால் திருச்சபையும் வளம் பெற முடியும்; வளம் பெறவும் செய்கிறது; இவ்வாறு கூறுவது கிறிஸ்து திருச்சபைக்கு அளித்த அமைப்பில் ஏதோ குறைபட்டிருக்கிறது என்ற பொருளில் அல்ல் மாறாக, இவ்வாறு திருச்சபை தன் அமைப்பை இன்னும் ஆழமாக அறியவும், அதற்குப் பொருத்தமான வெளியுரு கொடுக்கவும், அதை இன்றைய காலத்துக்கு ஏற்ப நலமாக மாற்றியமைக்கவும் இயலும் என்பதே. எல்லாவித வாழ்கதை; தரத்தலும் சூழ்நிலையிலுமுள்ள மனிதர்ளிடமிருந்து பல்வேறான உதவிகளைத் தான் பெறுவதைத் திருச்சபை நன்றியோடு நினைக்கிறது; திருச்சபை குழு என்ற முறையில் மட்டுமன்றி அதன் பிள்ளைகள் ஒவ்வொருவருமே இவ்வதவியைப் பெற்றுக் கொள்கின்றனர். உண்மையிலே, குடும்பம் ,பண்பாடு ஆகிய துறைகளிலும், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையிலும், நாட்டு அரசியல் வாழ்வு மற்றும் அனைத்து நாட்டு அரசியல் வாழ்விலும் மனித சமூக முன்னேற்றத்திற்காக உழைப்பவர்கள் ஒவ்வொருவரும் திருச்சபைச் சமூகத்திற்கும் அது வெளியுலகு சார்ந்த நிபந்தனைக் கூறுகளுக்கும் உட்பட்ட சமூகம் என்ற அளவில் பெரிதும உதவுகிறார்கள்: கடவுளின் திட்டம் அவ்வாறுள்ளது. ஏன், திருச்சபை தனக்கு எதிராக எழுவோர் மற்றம் தன்னைத் துன்புறத்துவோர் ஆகியோரின் எதிப்புகளிலிருந்து கூட தான் பெரிதும் பயனடைந்துள்ளது எனவும், இன்னும் பயனடைய முடியும் எனவும் ஏற்றுக்கொள்கிறது.23
45. அகரமும் னகரமுமான கிறிஸ்து
திருச்சபை உலகிற்கு உதவும் பொழுதும், அதனிடமிருந்து பல உதவிகளைப் பெறும் பொழுதும் ஒரே குறிக்கோளுக்காகவே செயல்படுகிறது; கடவுளாட்சி வரவேண்டும், மனித குலம் முழுவதும் மீட்புப்பெற வேண்டும் என்பதே இக்குறிக்கோள். திருச்சபை ''அனைவருக்கும் மீட்பின் அருளடையாளமாகவும்'' மக்களிடம் கடவுள் கொண்டுள்ள அன்பை nவெளிப்படுத்திச் செயலக்குகினற மறைபொருளாகவும் இயங்குகின்றது. இந்த உண்மையான இறைமக்கள் தமது இம்மண்ணுலகப் பயணத்தின்போது மனித குடும்பத்திற்குச் செய்யக்கூடுமான எல்லா நன்மைகளுக்கும் ஊற்றாக அமைகின்றது.
இறைவாக்கின் வழியாகவே அனைத்தும் ஆக்கப்பெற்றன் இந்த இறைவாக்கு மனிதராகப் பிறந்தார், முழுமை பெற்ற மனிதர் என்ற முறையில், எல்லா மக்களையும் மீட்கவும், அனைத்தையுமே ஒன்று சேர்க்கவுமே அவர் மனிதராகப் பிறந்தார். ஆண்டவரே மனித வரலாற்றின் இறுதிக் குறிக்கோள் ஆவார்; அவரே வரலாறு, பண்பாடு ஆகியவற்றின் ஏக்கங்கள் ஒன்று சேரும் குவிமையம்; அவரே மனித குலத்தின் மையம்; அவரே இதயங்கள் அனைத்தின் மகிழ்ச்சி, இதய ஏக்கங்களின் நிறைவு.25 இவரையே தந்தை இறந்தோரிடமிருந்து எழுப்பினார்; இறந்தோருக்கம் வாழ்வோருக்கம் தீர்ப்பிடுபவராக அவரை நியமித்து, மேன்மைப்படுத்தி, தமது வலப்பக்கத்திலே அமர்த்தினர். அவரது ஆவியில் உயிரூட்டம்பெற்று, ஒன்று கூட்டம்பெற்று நாம் மனித வரலாற்றின் நிறைவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்; இது''விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை, அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்றுசேர்க்கவேண்டும்''(எபே1:10) என்னும் அவரது அன்பின் திட்டத்திற்கு முழுவதும் பொருந்திப் போவது ஆகும்.
ஆண்டவரே கூறுகிறார்; ''இதோ நான் விரைவில் வருகிறேன், அவரவர் செயலுக்க ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது. அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே''(திவெ22:12-13).
இரண்டாம் பகுதி
மிக முக்கியமான சில பிரச்சனைகள்
46. முன்னுரை
மனிதர் எத்தகைய மாண்புடையவர்கள் என்பதையும், உலகம் முழுவதிலும் ஆள் சார்ந்ததும் பொதுவானதுமான எத்தகைய பணியை ஆற்ற அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் சங்கம் இதுவரை விளக்கியது. இப்போது நற்செய்தி, மனித அனுபவம் இவற்றின் ஒளியில், மக்களினத்தை மிகவும் பாதிக்கும் சில முக்கியமான இன்றைய பிரச்சினைகள் குறித்துச் சங்கம் எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கிறது.
எல்லாருக்கும் இன்று கவலை உண்டாக்கும் பல பிரச்சனைகளுள் முக்கியமாகக் கீழ்வருனவற்றைக் குறிப்பிடலாம்: திருமணமும் குடும்பமும்; மனிதப் பண்பாடு; சமூக - பொருளாதார வாழ்வு; அரசியல் வாழ்வு; மனித குடும்பம் ஒன்றிப்பு மற்றம் அமைதி கிறிஸ்துவிடமிருந்து பிறக்கும் அடிப்படைத் தத்துவங்களின் ஒளியால் இப்பிரச்சனைகள் ஒவ்வொன்றும் தெளிவு பெறவேண்டும்; இவ்வாறு இத்தகைய சிக்கலான பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் முயற்சியில் நம்பிக்கை கொண்டோருக்கு வழிகாட்டவும் எல்லா மக்களுக்கும் ஒளி வழங்கவும் இயலும்.
இயல் 1
திருமணம் மற்றும் குடும்பத்தின் மாண்பைப் பேணி வளர்த்தல்
47. இன்றைய உலகில் திருமணமும் குடும்பமும்
மனித ஆள், மனித சமுதாயம், கிறிஸ்தவ சமுதாயம் அகியவற்றின் நலம். திருமண மற்றும் குடும்பச் சமூகத்தின் நன்னிலைமையோடு மிக நெருங்கிய தொடர்புடையதாகும். திருமணம் மற்றும் குடும்பம் என்னும் இந்த அன்புச் சமூகத்தை வளர்ப்பதிலும் மனித உயிரைப் பேணுவதிலும் முன்னேறிட உதவியாக இருப்பவை பல் மணமக்களும் பெற்றோரும் தங்களின் தலைசிறந்த பணியை ஆற்றுவதற்குப் பெறும் உதவிகளும் பல் இந்த வௌ;வேறு உதவிகள் குறித்துக் கிறிஸ்தவர்கள் திருமணம் மற்றும் குடும்பச் சமூகத்தை உயர்வாக மதிக்கும் அனைவரோடும் ஒன்றுசேர்ந்து உண்மையாகவே மகிழ்ச்சி கொள்;கிறார்கள்; இந்த உதவிகளிலிருந்து அவர்கள் இன்னும் அதிக நல்விளைவுகளை எதிர்பார்க்கிறார்கள்; இந்நல்விளைவுகளை மேலும் பலர் பெறும் வண்ணம் அவர்கள் முனைந்து செயல்படுகிறார்கள்.
ஆனால் இந்தத் திருமண மற்றும் குடும்ப அமைப்பின் மாண்பு எல்லா இடங்களிலும் ஒரே விதமாகத் துலங்குவதில்லை; ஏனெனில், பலதாரப்பழக்கம், மணமுறிவு என்னும் பெருங்கேடு, சுதந்திரக் காதல் மற்றும் பிற சீர்கேடுகளால் திருமண மற்றும் குடும்ப அமைப்புகள் மாண்பு மங்கியுள்ளது. மேலும், தன்னலம், இன்பவெறி, தவறான முறைகளைப் பயன்படுத்திப், பிள்ளைப் பேற்றைத் தடுத்தல் போனறவற்றால் திருமண அன்பு பலமுறை இழிவுபடுத்தப்படுகிறது. மேற்கூறியவை தவிர, இன்றைய பொருளாதார, சமூக-உளவியல், அரசியல் வாழ்வுச் சூழ்நலைகள் குடும்பத்தில் பெரும் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன. இறுதியாக, உலகின் சில பகுதிகளில் பெருகி வரம் மக்கள் தொகையிலிருந்து எழும் பிரச்சினைகளும் கவலை தருவனவாக உள்ளன. இவையெல்லாம் மனிதர்களின் உள்ளங்களை உறுத்துகின்றன. எனினும் இன்றைய சமுதாயத்தில் நிகழும் ஆழ்ந்த மாற்றங்கள் எல்லாம், அவற்றிலிருந்து எழுகின்ற இடாகளுக்கு நடுவிலேயும்கூட, திருமண மற்றும் குடும்ப அமைப்பின் உண்மையான இயல்பை பலவழிகளில் பற்பல வேளைகளில் எண்பித்து நிற்கின்றன: இதிலிருந்து இவ்வழைப்பின் ஆற்றலும் உறுதி நிலையும் தெளிவாகத் துலங்குகின்றன.
இவண் சங்கம் நம்பிக்கை கொண்டோருக்கும் மற்றும் திருமண நிலைக்கும் இயல்பாய் உரித்தான மாண்பு அதனுடைய சீர்மிகு தூய மதிப்பு ஆகியவற்றைக் காத்து வளர்க்க முயலும் எல்லா மனிதர்களுக்கும் தெளிவும் ஊக்கமும் அளிக்க கருத்துக் கொண்டுள்ளது; எனவே, திருச்சபைப் படிப்பினையில் சில கூறுகளைச சங்கம் இங்குத் தெளிவாக்கும்.
48. திருமணம் மற்றும் குடும்பத்தின் தூய தன்மை
திருமண வாழ்வு மற்றும் திருமண அன்பினால் உருவாகும் நெருங்கிய உறவுச் சமூகத்தைப் படைப்பின் கடவுள் ஏற்படுத்தினார்; அதற்குரிய ஒழுங்கமைப்புகளையும் அவரே அளித்தர்; இந்த உறவுச் சமூகம் திருமண உடன்படிக்கையில், அதாவது ஆள்நிலை சார்ந்ததும் பின்வாங்கக் கூடாததுமான இசைவின் மேல் கட்டி எழுப்பப்படுகிறது. இவ்வாறு இந்த உறவுச் சமூகமானது மணமக்கள் ஒருவர் ஒருவரை ஏற்றுக்கொள்ளும் மனிதச் செயலின் மூலம்இறைத்திட்டத்திற்கு ஏற்பச் சமுதாயத்தின் முன்னிலையிலும் நீடித்து நிற்கும் ஒரு அமைப்பாக எழுந்துள்ளது. இந்தத் தூய பிணைப்ப மணமக்கள், குழந்தைகள், சமுதாயம் ஆகியோரின் நன்மைக்காக இருப்பது; ஆகவே இது மனிதருடைய விருப்பு வெறுப்பு சார்ந்த தீர்ப்புக்கு உட்பட்டதல்ல. வௌ;வேறு மதிப்பு நலன்களையும் குறிக்கோள்களையும் கொள்டு விளங்கும் திருமணத்தை ஏற்படுததியவர் கடவுளே1 இந்நலன்கள் குறிக்கோள்கள் எல்லாம் மனித இனத்தின் நீடித்த தொடர்ச்சிக்கும் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரின் ஆள்நிலை சார்ந்த வளர்ச்சிக்கும் அவர்களின் நிலைவாழ்வு குறிக்கோளுக்கும் குடும்பத்தினுடையவும் மக்கள் சமுதாயத்தினுடையவும் மாண்பு, உறுதிநிலை, அமைதி, வளமை ஆகியவற்றிற்கும் மிகவும் முக்கியமானவை. திருமண அமைப்புப் திருமண அன்பும் தம் இயல்பிலே பிள்ளைகளைப் பெற்று பயிற்றுவிப்பதற்கு என அமைந்துள்ளன் பிள்ளைகளே ஒருவிதத்தில் அவற்றின் மணிமகுடமாகவும் அமைகின்றனர். மேலும், திருமண உடன்படிக்கையால் ''இனி அவர்கள் இருவர் அல்ல, ஒரே உடல்'' (மத்19:6) என்னும் சொற்களுக்குகேற்ப ஆணும் பெண்ணும் ஆளோடு ஆள் நெருங்கி இணைகின்ற பிணைப்பாலும், தம்முடைய செயல்களை ஒருங்கணைப்பதாலும் ஒருவருக்கொருவர் உதவியம் பணியும் செய்கின்றனர்; இவ்வாறு தங்கள் ஒன்றிப்பு நிலையின் உட்பொருளை உணர்கின்றனர்; நாளுக்குநாள் நிறைவாக அவ்வுணர்வைப் பெறுகின்றனர். ஒருவருக்கொருவர் இரு மனத ஆள்கள் தங்களையே கொடையாக அளித்தலாகிய இந்த நெருக்கமான ஒன்றிப்பும், அஃதோடு கழந்தைகளின் நலனும் மணமக்கள் ஒருவருக்கொருவர் முழுமையான விதத்தில் உண்மையுடைவர்களாகச் செயல்படக் கோருகின்றன் அவர்களது முறிவுபடவியரா ஒன்றிப்புநிலையின் தேவையை வலியுறுத்துகின்றன.2
பன்முகக் கூறுள்ள இந்த அன்பு இறையன்பு எனும் ஊற்றிலிருந்து பிறக்கிறது; நம் ஆண்டவர் கிறிஸ்து திருச்சபையுடன் கொண்டுள்ள ஒன்றிப்பை மாதிரிகையாகக் கொண்டுள்ளது; எனவே இந்த அன்பின்மேல் கிறிஸ்து அளவிறந்த முறையில் ஆசி பொழிந்துள்ளார். நம்பகப் பண்பையும் ;அன்பையும் அடிப்படையாகக் கொண்ட உடன்படிக்கையால் கடவுள் முற்காலத்தில் தம் மக்களைச் சந்தித்தார்,3 அதுபோலவே, இப்போது மனிதரின் மீட்பர், திருச்சபை மீது அன்பு செலுத்தி அதற்காகவே தம்மையே ஒப்புவித்தார்;5 அதுபோலவே மணமக்களும் ஒருவரொருவருக்குத் தங்களை கையளித்து, நிலையான நம்பகப் பண்புடன் அன்பு செய்யவேண்டும் என்பதற்காக அவர் அவர்களோடு தொடர்ந்து தங்கி இருக்கிறார் உண்மையான திருமண அன்பு கடவளின் அன்பால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது; கிறிஸ்துவின் மீட்பு ஆற்றலாலும், திருச்சபையின் நிறை வாழ்வுப் பணியாலும் நெறிப்படுத்தப்பட்டு வளமாக்கப்பட்டுள்ளது: இதன் விளைவாக மணமக்கள் நடைமுறையில் கடவுளிடம் இட்டுச் செல்லப்படுகின்றனர்; தாய் தந்தையர் என்னம் விதத்தில் தங்களது எயரிய பணியை ஆற்ற உதவியும் ஊக்கமும் பெறுகின்றனர்6 ஆகவேதான், கிறிஸ்தவ மணமக்கள் தங்களின் நிலைமையிலிருந்து எழும் கடமைகளையும் மாண்பையும் செயல்படுத்துவதற்குத் தனிப்பட்டதோர் அருளடையாளத்தின் வழியாக வலுப்பெறுகின்றனர்; ஒருவகையில் திருநிலைப்படுத்தப்படுகிறார்கள்.7இந்த அருளடையாளத்தின் ஆற்றலால் அவாகள் தங்களின் திருமண மற்றும் குடும்பக் கடமைகளை நிறைவேற்றுகின்றனர்; நம்பிக்கை, எதிhநோக்கு அன்பு ஆகியவற்றால் தங்களின் வாழ்வு முழுவதையும் நிறைத்த நிற்கும் கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்படுகின்றனர்; அதிகமதிகமாகத் தங்களை நிறைவுடையவர் ஆக்குகின்றனர்; அவ்விதமே ஒருவரொருவரைத் தூய்மைப்படுத்துகின்றனர்; இவ்வாறு அவர்கள் ஒன்று சேர்ந்து கடவுளை மாட்சிப்படுத்துகிறார்கள.
இப்படியாக, குடும்ப இறைவேண்டலாலும் முன்மாதிரியாலும் பெற்றோர்கள் வழிநடத்திச் செல்ல, பிள்ளைகள், ஏன் குடும்ப வட்டத்தினுள் கூடி வாழும் எல்லாருமே, மனித முதிர்ச்சி, மீட்பு தூய்மை ஆகியவற்றிற்கான வழியை அதிக எளிதாகக் கண்டுபிடிப்பார்கள். மணமக்கள் தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் மேன்மையையும் பணியையும் தங்கள் சிறப்புநிலையாகக் கடமையை, முக்கியமாக மறைக்கல்வி புகட்டும் கடமையை, கருத்துடன் நிறைவேற்றுவார்கள்.
குடும்பத்தின் உயிருள்ள உறுப்பினர் என்ற முறையில் குழந்தைகள் தங்கள் பெற்றொர் தூய்மையடையத் தங்களுக்குரிய ககையில் உதவுகிறார்கள். நன்றி உள்ளத்தோடும் கழந்தைகளுக்குரிய மரியாதை உணர்வோடும் நம்பிக்கையுடனும் குழந்தைகள் தம் பெற்றோர் புரியும் நன்மைகளுக்குக் கைம்மாறு புரிவர்; அவர்களின் துன்பங்களிலும் முதுமையின் தனிமையிலும் நல்ல பிள்ளைகளுக்குகந்த முறையில் துணைபுரிவார்கள். திருமண அழைப்பின் தொடர்ச்சியாகத் துணிவுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட கைம்மை, அனைவராலும் மதிக்கப்படும்.8 ஒவ்வொரு குடும்பமும் அதனுடைய அருள் செல்வங்களை ஏனைய குடும்பங்களுடன் தாராளமாகப் பகிhந்து கொள்ளம். கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே உள்ள அன்பு நிறை உடன்படிக்கையின் உருவும் பங்கேற்புமாய் உள்ளதே திருமணம்; இத்திருமணத்திலிருந்து கிறிஸ்தவக் குடும்பம் பிறக்கிறது;9 ஆகவே, மணமக்களின் அன்பு, தாராள உள்ளத்தோடு ஏற்கப்படும் இனப்பெருக்க வளமை, ஒன்றிப்புநலை, நம்பகப் பண்பு மற்றும் எல்லா எல்லா உறுப்பினருடையவும் அன்புநிறை ஒத்துழைப்பு ஆகியவற்றின் வழியாகக் கிறிஸ்தவக் குடும்பமானது மீட்பர் உயிருள்ள முறையில் உடனிரப்பதையும் திருச்சபையின் உண்மையான இயல்பையும் வெளிப்படுத்தும்.
49. திருமண அன்பு
மண உறுதி செய்தவர்கள் மண உறுதி நிலையைக் களங்கமற்ற அன்பினாலும் திருமணத் தம்பதியர் தங்களது திருமண நிலையைப் பிளவுபடாத நட்பாலும் பேணி வளர்க்கக் கடவுளின் வாக்கு இடையறாது தூண்டுகிறது.10கணவருக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உண்மையான அன்பை நம் காலத்தவரில் பலரும் உயர்வாக உள்ள உண்மையான அன்பை நம் காலத்தவரில் பலரும் உயர்வாக மதிப்பிடகின்றனர்; இந்த அன்பு, மக்களுக்கும் காலங்களுக்கும் ஏற்ற நேர்மையான பழக்க வழக்கங்களின்படி பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்படும் ஒன்றாகும். தனிப்பட்ட விதத்தில் மனிதத்தன்மை வாய்ந்தது இந்த அன்பு; ஏனெனில் இஃது ஓர் ஆளிடமிருந்து மற்றொரு ஆளுக்குச் சுதந்திர உள்ளத்திலிருந்து எழும் பாசத்தால் காட்டப்படுகிறது; முழு ஆளின் நன்மையையும் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கிறது; எனவே, உள்ளத்து உணர்வுகளுக்கும் உடல் சார்ந்த செயல்களுக்கம் ஒரு தனிப்பட்ட மாண்பை அளிக்கும் திறன் இவ்வன்புக்கு உண்டு; அஃதோடு கூட மேற்கூறிய வெளிப்பாடுகளைத் திருமண நட்பின் கூறுகளாகவும் தனிப்பட்ட அடையாளங்களாகவும் மேன்மைப்படுத்தவும் இவ்வன்பால் முடிகிறது. தனிப்பட்ட அருள் மற்றும் அன்பக் கொடைகளால் கரணை கூர்ந்து ஆண்டவர் இந்த அன்புக் கொடைகளால் கருணை கூர்ந்து ஆண்டவர் இந்த அன்பை நிலைப்படுத்தினார்; நிறைவு செய்தார்; உயர்த்தினார். இத்தகைய அன்பில் மனித நறன்களும் தெய்வீக நலன்களும் ஒருங்கிணையக் காணக்கிடக்கின்றன. அணமக்கள் பாசமிக்க அன்பின் வழியாகவும் செயல் வழியாகவம் ஒருவர் ஒருபருக்குச் சுதந்திரமாகத் தம்மையே கொடையகாகக் கையளிக்க அவர்களைத் திருமண அன்பு இட்டுச் செல்கிறது; அவர்கள் வாழ்க்கை முழுவதையுமே ஊடுருவி நிற்கிறது; மேலும், திருமண அன்வு தன்னலமின்றிச் செயலாக்கப் பெறும்போது முழுமையடைகிறது, வளாந்தோங்குகிறது. வெறும் காம உணர்ச்சிக்கு மிகவும் அப்பாற்பட்டது இவ்வன்பு; உண்மையிலே, தன்னலத்திற்காகத் தேடப்பெறும் காம உணர்ச்சி அதி விரைவாக இரங்கத்தக்க முறையில் மறைந்து போகும்.
திருமண அன்பு திருமணத்திற்கே உரிய செயலாகிய தாம்பத்திய உறவில் சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்படுகிறது; முழுமையடைகிறது. ஆகையால் எச்செயல்களின் வழியாக மணமக்கள் தூய்மையான முறையில் தமக்குள் நெருங்கி ஒன்றிக்கின்றார்களோ அச்செயல்கள் நேர்மையானவை, மாண்பு பெற்றவை. உண்மையில் மனித இயல்புக்குரிய முறையில் தாம்பத்திய செயல்கள் நடைபெறும் பொழுது, அவை மணமக்கள் ஒருவர் மற்றொருபருக்கு மகிழ்ச்சியோடு நன்றியுணர்வோடு தங்களையே கொடையாக அளித்துவளமுறைச் செய்வதைக் குறிதது காட்டுவதுடன், அக்கொடையயைப் பேணி வளர்க்கவும் செய்கின்றன. திருமண அன்பு ஒருவருக்பொருவர் அளிக்கும் வாக்குறுதியால் முத்திரையிடப்பட்டது; எல்லாவற்றிற்கும் மேலாகக் கிறஸ்துவின் அரளடையாளத்தால் தூய்மைப்படுத்தப்பட்டது; இன்பத்திலும் துன்பத்திலும் உடலாலும் உள்ளத்தாலும் முறிவுபடாமுறையில் நம்பகப் பண்பு கொண்டது; ஆகையால் சார்ந்த மாண்புடையவர்கள் என்பது அவர்கள் ஒருவரொருவர் மட்டில் காண்கின்ற முழுமையான அன்பின் வழியாக எண்பிக்கப்படும்போது, ஆண்டவரால் உறுதிப்படுத்தப் பெற்ற திருமணத்தின் ஒற்றுமைப் பண்பு தெளிவாகத் துலங்கும். இந்த கிறிஸ்தவ அழைப்பின் கடமைகளைத் தளர்ச்சியுறாமல் நிறைவேற்றவேண்டுமாயின் அதற்குப் பெரும் ஆற்றல் தேவைப்படுகிறது. இக்காரணத்தை முன்னிட்டு மணமக்கள், தூய வாழ்வு நடத்துவதற்குரிய அருளால் வலுப்பெற்று, அன்பின் உறுதி, பெருந்தன்மையுடைய உள்ளம், தியாக உணர்வு ஆகியவற்றை விடாமுயற்சியுடன் கடைப்பிடிப்பர். அவற்றை அடைந்திடக் கடவுளை வேண்டுவர்.
கிறிஸ்தவ மணமக்கள் திருமண அன்வில் தங்களின் நம்பகப் பண்புக்கும் உள ஒற்றுமைக்கம் சாட்சிகளாய் இருந்து, தங்கள் குழந்தைகளைப் பயிற்றுவிப்பதில் ஆழ்ந்த அக்கறை காட்டவேண்டும்; திருமணம், குடும்பம் ஆகியவற்றின் மேம்;பாட்டுக்குத் தேiவையான பண்பாட்டு, உளவியல், சமூகச் சீர்திருத்தங்களில் தங்களின் பணியைச் செய்ய வேண்டும்; கிறிஸ்தவ மணமக்கள் ;இவ்வாறு செயல்படுவார்களேயானால் உண்மையான திருமண அன்பின மதிப்பு வளாந்தோங்கும்; அது பற்றிப் பொது மக்களிடம் நல்லெண்ணம் உண்டாகும். திருமண அன்பினடைய மேன்மை, கடமை, செயல்பாடுகள் பற்றிச் சிறப்பாகத் தங்களின் குடும்பத்திலேயே தகுந்த முiறியல், சரியான காலத்தில், இளைஞர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இவ்வாறு கற்பைப் பேணி வளர்ப்பதில் பயிற்சி பெற்றவர்களாய், ஏற்றவயதில், நேர்மையான மண உறுதிக் காலத்துக்குப்பின் திருமணத்தில் புக அவர்களால் முடியும்.
50. திருமணத்தின் இனப்பெருக்க வளம்
திருமணமும் திருமண அன்பும் தம்மியல்பிலேயே பிள்ளைகளைப் பெற்று அவர்களைப் பயிற்றுவிப்பதற்கென்று அமைக்கப்பட்டுள்ளன. ஒண்மையிலலே குழந்தைகள் திருஅணத்தின் மிகச் சிறந்த கொடையாக இருப்பதுடன், பெற்றோரின் நலனுக்கும் அவர்கள் பெரிதும் உதவுகின்றனர். ''மனிதன் தினமையாய் இருப்பது நல்லதன்று'' (தொநூ 2:18) என்று, தொடக்கத்திலேயே ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்த'' (மத் 19:4) கடவுளே தமது படைப்புச் செயலில் மன்தருக்கு ஒரு தனிப்பட்ட பங்கு அளிக்க விரும்பி ''பலுகிப் பெருகி அண்ணுலகை நிரப்புங்கள்'' (தொநூ1:28) என்று கூறி ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆசி வழங்கினார். எனவே, உண்மைத் திருமண அன்பின் செயலாக்கமும், அதன் விளைவாகத் தோன்றும் குடும்ப வாழ்வு நிலை முழுவதும்-திருமணத்தின் ஏனைய நோக்கங்களைப் பிற்பட்டவைகளாகக் கருதாமல் - படைத்தவரும் மீட்பவருமானவருடைய அன்போடு ஒத்துழைக்க மணமக்கள் ஒறுதியான உள்ளம் கொண்டவர்களாக ஆகவேண்டும் என்பதைபோல நோக்கமுமாகக் கொண்டவர்களாக ஆகவேண்டும் என்பதைபோல நோக்கமாகக் கொண்டுள்ளன். படைத்தவரே தமது குடும்பத்தை மணமக்கள் மூலம் பரப்பி வளப்படுத்தி வருகிறார்.
மனித உயிர் அளித்துக் குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கும் கடமையை மணமக்களுக்கே உரித்தான பொறுப்பாகக் கருத வேண்டும்; இப்பணியை ஆற்றுவதில் தாங்கள் படைத்த கடவுளின் அன்போடு ஒத்துழைப்பவர்களாய், ஒருவிதத்தில் அவ்வன்பின் பொருழைள விளக்கி உரைப்பவாகளாய் இருக்கிறார்கள் என்பதை மணமக்கள் அறிந்துள்ளார்கள். ஆகவே, அவர்கள் தங்களின் இப்பணியை மனித, மற்றும் கிறிஸ்தவ பொறுப்புணர்வுடன் நிறைவேற்ற வேண்டும்; கடவுளின் மீது பணிவான வணக்கத்தோடு, பொது ஆலோசனையாலும் முயற்சியாலும் சரியான முடிவு எடுக்க வேண்டும்; அதாவது, மனித உயிர் அளித்துக் குழந்தைகளைப் பயிற்றறுவிக்கும் இக்கடைமையைச் செயல்படுத்தும் போது மணமக்கள் தங்களின் நலத்தைக் கருதுவதுடன் தங்களுக்கு ஏற்கனவே பிறந்துள்ள, மற்றும் வருங்காலத்தில் பிறக்கப் போவதாக எதிர்பார்க்கின்ற குழந்தைகளின் நலத்தையும் கருதவேண்டும்; தாங்கள் வாழும் காலத்தின் நிலைமைகளையும் தங்களின் ஆன்ம, உடல் வாழ்க்கை நிலைமைகளையும் கருத்தில் பொள்ள வேண்டும்; முடிவாக, தங்களின் குடும்பச் சமூகத்தினுடையவும் உலக சமுதாயத்தினுடையவும் திருச்சபையினுடையவும் நலன் மட்டில் கவனம் செலுத்த வேண்டும். இறுதியாகப் பாக்குமிடத்து, இந்த முடிவைக் கடவுளின் முன்னிலையில் மணமக்கள் தாமே எடுக்க வேண்டும். ஆனால் கறிஸ்தவ மணமக்கள் தங்கள் செயல்முறையைப் பொறுத்தமட்டில் கங்கள் சொந்த விருப்பு வெறுப்புப்படி செயல்பn முடியாமு எனவும், இறைச் சட்டத்திற்குச் சரியாக ஒத்திருக்கும் மனச்சான்றினாலேயே எப்போதும் வழிநடத்தப்பட வேண்டும் என்பதையும் அந்த இறைச்சட்டத்திற்கு நற்செய்தியின் ஒளியில் அதிகாரப் பூர்பமாகப் பொருள் விளக்கிக் கூறும் திருச்சபையின் ஆகிசியத்திற்குப் பணிந்து நடக்க வேண்டும் என்பதையும் உணர வேண்டும். அந்த இறைச்சட்டம் திருமண அன்பின் முழுப்பொருளைக் காட்டுகிறது; இதே அன்பைக் காக்கிறது; உண்மையான மனித நிறைவுக்கு அதை இட்டுச் செல்கிறது. இவ்வாறு இறைப் பராமரிப்பில் நம்பிக்கைக் கொண்டு தியாக மனப்பான்மையை வளர்த்து வரும்12 கிறிஸ்தவ மணமக்கள் தாராளப் பண்புடைய மனித, மற்றும் கிறிஸ்தவப் பொறுப்புணர்வோடு குழந்தைகளபை; பெற்றெடுக்கும் பணியை நிறைவேற்றும்போது, படைத்தவரை மாட்சிப்படுத்துகிறார்கள்; மேலும், கிறிஸ்துவில் முழுமை அடைய முனைற்து வரைகின்றனர். கடவள் தங்களிடம் ஒப்படைத்த பணியை இவ்வாறு நிறைவேற்றும் மணமக்களுள் விவேகத்தோடு, பொதுவாகக் கலந்தாலோசித்து எடுத் முடிவின்படி தாராள மன்தோடு தம் குழந்தைகளைஎண்ணிக்கையில் அதிகமாக இருந்hலும் கூட ஏற்றுக்கொண்டு அவர்களதை; தகுந்த முறையில் பயிற்றுவிக்க முன்வருபவர்கள் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர்கள்.13
இருப்பினும், திருமணம் பிள்ளைப் பேற்றுக்காக மட்டும் ஏற்படுத்தப்பட்டதல்ல. மாறாக, மணமக்கள் ஒருவர் ஒருவர்பால் கொள்ள வேண்டிய அன்பும் சரியான முறையில் காட்டப்பட வேண்டும், வளர்ந்து முதிர்ச்சியடைய வேண்டும்; இது ஆள்நிலை சார்ந்த, பிரிக்க முடியாத இயல்புகொண்ட திருமண உடன்படிக்கையும் குழந்தைகளின் நலனும் விடுக்கினற கோரிக்கையினின்று பிறப்பதாகும். ஆகவே, மணமக்கள் பொரும்பாலும் விருப்போடு எத்ர்பார்க்கும் மக்கள்பேறு கிடைக்காமல் போயினும்கூட திருமணம் வாழ்க்கை முழுவதும் தழுவிய சமூகமாகவும் உறவு ஒன்றிப்பாகவம் நிலைத்து நிற்கிறது; தனது மதிப்பையும் பிளவுபடாத தன்மையையும் கொண்டு நிலைக்கிறது.
51. திருமண அன்பும் மனித உயிர்மட்டில் மதிப்பும்
மணவாழ்க்கையை ஒருங்கிசைந்து நடத்த விரும்பும் மணமக்கள் பலதடைவைகளில் இன்றைய வாழ்க்கை நிலைகளில் ஒருசில தடைகளை எதிர்கொள்கின்றனர்; தங்கள் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்ட காலத்திற்காவது அதிகப்படுத் இயலாத நிலைமை அவர்களுக்கு ஏற்படலாம்; அப்போது நம்பகப் பண்போடு அன்பைப் ;பேணுவதும் முழுமையாகக் கூடி வாழ்வதும் அவர்களுக்குக் கடினமாய் இருக்கின்றன: இவை யாவற்றையும் சங்கம் அறிந்திருக்கிறது அ;ணவாழ்வின் நெருக்கமான உறவ எங்கு கைநெகிழப்படுகிறதோ, அங்குப் பலதடவைகளிலும் திருமண நலனாகிய நம்பக பண்பு இடருக்குள்ளாகக் கூடும்; மேலும் குழந்தைகள் நலனும் பாதிப்படையக்கூடும். இச்சூழ்நிலைகளில் குழந்தைகளைப் பயிற்றுவிக்கும் பணியும் இன்னும் அதிகக் கழந்தைகளை ஏற்றுக்கொள்வதற்கான மனத்துணிவும் இடருக்குள்ளாகின்றன.
இந்தப் பிரச்சினைகளுக்கு நேர்மையற்ற தீர்வுகளை;க கொடுக்க முன்வரபவர்களும் உயிரைப் பறிக்கவும்கூடப் பனிவாங்காதவர்களும் உண்டு. ஆனால், உயிர்வழிவழியாக அளிக்கப்பட வேண்டும் என்னும் கடவுளுடைய சட்டத்திற்கும், உண்மைத் திருமண அன்பை வளர்க்க வேண்டும் என்னும் கடமைக்கம் இடையே உண்மையானதொரு மரண்பாடு இரக்க முடியாது என்பதைத் திருச்சபை நினைவூட்டுகிறது.
ஏனெனல், உயிரின் ஆண்டவராகிய கடவுள் உயிரைக் காக்கும் உயரிய பணியை மனிதரிடத்தில் ஒப்படைத்துள்ளார்; இப்பணியை மனிதத்தன்மைக்கு ஏற்ற முறையில் நிறைவேற்ற மனிதர் கடமைப்பட்டுள்ளனர். ஆகவெ, கருவானதிலிருந்த உயிரை மிகக் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்: கருச்சிதைவு மற்மு; குழந்தை; கொலை ஆகியவை கொடிய குற்றங்களாகும். மனிதருடைய 'பால்' பண்பும். அவர்களுடைய இனப்பெருக்க அற்றலும் தழ்நிலைகளில் உள்ள உயிர்களில் இருப்பதைவிட வியத்தகு முறையில் மேம்பட்டு இருக்கின்றன் இதன் காரணமாக மனிதரின் உண்மையான மாண்பிற்கு ஏற்றவகையில் செய்யப்படும் தாம்பத்திய வாழ்வுக்குரிய உறவுச் செயல்கள் மிக்க ;மரியதையுடன் மதிக்கப்பட வேண்டும். பொறுப்ப வாய்ந்த மக்கள்வேற்றைத் தம்தத்திய அன்வுளவோடு ஒருங்கிசைக்க நேரிடும்போது. அறநெறிப் பண்மை வெறும் நல்லெண்ணத்திலிருந்தும கறிக்கொள்களைச் சீர்தூக்கிப் பார்ப்பதிலிருந்தும் மட்டுமே கணித்துவிட முடியாது; மாறாக, மனிதருடைய ஆளமைப் பண்பிலிருந்தும் செயல்களுடைய இயல்பிலிருந்தும் பெறப்படுகின்ற வெளிப்படையான அளவீடுகளால் அது கணிக்கப்பட வேண்டும்; இந்த அளவீடுகள் மணமக்கள் ஒருவர் ஒருவருக்குத் தங்களையே கொடையாக அளித்தலின் முழுப் பொருளையும், மனிதப் பண்போடு நிகழும் பிள்ளைப்பேற்றின் முழுப்பொருளையும் உண்மையானதோர் அன்புச் சூழமைவில் மதிப்பனவாய் இருக்கும். திருமணக் கற்பை நேர்மையான உள்ளத்துடன் போற்றி வளர்த்தாலன்றி மேற்கூறியவாறு செயல்பட இயலாது. மக்கட்பேற்றகை; கட்டுபடுத்தவதில், மேற்கூறிய தத்ததுவங்களை அடிப்படையாகக் கொள்ளவேண்டும்; அஃதோடுக் கடவுளின் சட்டத்தை விளக்கும்போது எவ்வழிமுறைகளுக்குத் திருச்சபை ஆசிரியம் ஒப்புதல் தரவில்லையோ அவற்றைத் திருச்சபையின் பிள்ளைகள் பின்பற்றல் முறையாகாது.14
மனிதரின் உயிரும், உயிரை வழிவழியாக வழங்க அவர்கள் பெற்றிருக்கம் பொறுப்பும் இவ்வுலகை மட்டும் சார்ந்தவையல்ல் அவற்றை இவ்வுலக எல்லைகளுக்குள் மட்டுமே சார்ந்தவையல்ல் அவற்றை இவ்வுலக எல்லைகளுக்குள் மட்டுமெ அளந்து கணிக்கவோபுரிந்து கொள்ளவோ முடியாது; மாறாக, அவை மனிதரின நிலைவாழ்வுடன் எப்போதும் தொடர்பு பொண்டுள்ளன என்பதை யாவரும் அறிந்திருப்பார்பளாக.
52. திருமணத்தையும் குடம்பத்தையும் பேணி வளர்த்தல் யாவருக்கும் உரிய கடமை
குடும்ப மனதப் பண்பை வளமுறச் செய்கின்ற அரு பள்ளி எனலாம். ஆனால், குடும்பத்தின வாழ்வும் அதன் பணியும் முழுமலர்ச்சி பெற வேண்டுமானால் அங்குப் பாச உணர்வோடு கூடிய மன ஒன்றிப்பும், மணமக்களின் கூட்டு ஆலோசனையும், குழந்தைகளைப் பயிற்றுவித்தலில் பெற்றோரின் கருத்தான ஒத்துழைப்பும் தேவை;படுகின்றன. குழந்தைகளைப் பயிற்றுவிக்கும்போது தந்தை செயல்முறையில் உடனிருந்தால் அது மிகப் பயனுள்ளதாய் இருக்கும். அதே நேரத்தில், குழந்தைகளின் பொருட்டு, முக்கியமாக இளவயதினரின் பொருட்டு, வீட்டுச் சூழமைவில் தாயின் அரவணைப்பும் தேவை; பெண்ணிற்குரிய சமூக அளவிலான மேம்மபாட்டைப் பிறிபட்டதாகக் கருதாமல் தாயின் இந்த வீட்டுப் பணிக்குப் பாதுகாப்புத் தரப்பட வேண்டும். குழந்தைகள் முதிர் வயகு அடைந்ததும் தங்கள் அழைப்பை, துறவற அழைப்பையும்கூட முழுக் கடமை உணர்வுடன் பின்பற்றவும் தங்கள் வாழ்க்கை நிலையைத் தேர்ந்து கொள்ளவும் இயலும் வகையில் அவர்களை; பயிற்றுவிக்க வேண்டும்: திருமணத்தை அவாக்ளது வாழ்க்கை நிலையாகத் தேர்ந்து கொண்டால், அவர்கள் தங்களின் குடும்பத்தை வசதியான அறநெறி, சமூக, பொருளாதாரச் சூழ்நலைகளில் அமைக்கும் வகையில் அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். இளைஞர்கள் தங்கள் குடும்பததை அமைக்க இயலும் வண்ணம் பெற்றோர் அல்லது கண்காணிப்பாளர் விவேகமான அறிவுரை அளித்து வழிகாட்ட வேண்டும்: இதில் இளைஞர்களும் விருப்புடன் பெற்றோர் மற்றும் கண்காணிப்பாளர்களுக்குச் செவிமடுக்க வேண்டும்; ஆனால் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றோ, குறிப்பிட்ட ஒருவரையே மணந்து கொள்ள வேண்டும் என்றோ வற்புறுத்தாதிருக்குமாறு இவர்கள் எச்சரிக்கையாயிருக்கவேண்டும்.
இவ்வாறு குடும்பம்தான் சமுதாயத்தின் இடித்தளமாக இருக்கிறது. ஞானத்தை அதிகமாகப் பெறவும், மனிதரின் உரிமைகளைச் சமூக வாழ்வின் மற்ற தேவைகளோடு ஒருங்கிணைக்கவும் பல தலைமுறைகள் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் உதவி புரிந்துகொள்கின்ற இடமாக குடும்பம் உள்ளது. எனவே, சமூகங்களிலும் சமூகக் குழுக்களிலும் செல்வாக்குள்ளவர் யாவரும் திருமணம், குடமபம் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காகச் செயலூக்கத்துடன் உழைக்க கடமைப்பட்டுள்ளார்கள். குடிமக்களின் அதிகாரிகள், திருமணத்தினுடையவும் குடும்பத்தினுடையவும் உண்மை இயல்பை ஏற்றுக்கொண்டு, அவற்றைக காத்து, மேம்படுத்துவதையும், பொது ஒழுக்கத்தைக் காப்பதையும் இல்வாழ்வின் வளமையை வளர்ப்பதையும் தங்களது தூய கடமையாகக் கருதவேண்டும். பிளளைகளைப் பெற்றெடுத்துக் குடும்பத்திலேயே அவர்களைப் பயிற்சியளிப்பதற்குப் பெற்றோர்கள் கொண்டிருக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். குடும்பம் என்னும் நற்பேறு பெற்றிராதவர்களுக்கு, முன்னோக்குடைய சட்டங்களினாலும் பல்வகையான திட்டங்களினாலும் உதவிகள் புரிந்து, பாதுகாப்பு அளிக்கவேண்டும்.
கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் காலத்தை முற்றம் பயன்படுத்தி கொண்டு,15 மாறக்கூடிய தோற்றங்களிலிருந்து நிலையான உண்மைகளை வேறுபடுத்தி உணர்ந்து, தம் சொந்த வாழ்வின் சான்றாலும், நன்மனதுள்ள மக்களோடு ஒத்துழைப்பதாலும், திருமணம், குடும்பம் ஆகியவற்றின் நலனைக் கருத்துடன் மேம்படுத்துவார்களாக. இவ்விதமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு கிறிஸ்தவர்கள் தற்காலத்திற்கேற்பக் குடும்பங்கள் தங்கள் தேவைகளை நிறைவுசெய்யவும் வசதிகளைப் பெறவும் வழிவகுப்பர். இதற்கு நம்பிக்கை கொண்டோரின கிறிஸ்தவ உணர்வும், மக்களின் சரியான மனச்சான்றும் சமயம் சார்ந்த பாடத்துறைகளில் தேர்ச்சி பெற்றவரின் ஞானமும் திறமையும் பொரிதும் உதவியாக இருக்ககும்.
அறிவியல்களில் சிறப்பாக உயிரியல், மருத்துவ இயல், சமூகவியல், உளவியல் போன்றவற்றில் தேர்ந்தவர்கள் தங்கள் கூட்டு ஆய்வுகளின் முடிவுகளைப் பயன்படுத்தி மக்கள் பிறப்பை நேரிய விதத்தில் ஒழுங்குபடுத்துவதற்கு உதவும் பல்வேறு சூழ்நிலைகளைத் துல்லியமாக விளக்கினார்கள் என்றால், அவர்கள் திருமணம், குடும்பம் இவைகளின் நலனிற்கும், மனச்சான்றின் அமைதிக்ககும் பெரிதும் உதவியவர்களாவர்.
திருப்பணியாளர்கள் குடும்பத்தைப் பற்றிய காரியங்களைத் தகுந்த முறையில் கற்றறிந்திடவேண்டும். இறைவாக்கைப் போதித்தல் திருவழிபாட்டுக் கொண்டாட்டம், பிற அருள்வாழ்வு உதவிகள் போன்ற பல்வேறு அருள்பணி வழிமுறைகளால் மணமக்களின் அழைப்பை அவர்களது திருமண, குடம்பவாழ்வில் பேணி வளர்பபது திருப்பணியாளர்களின் கடமை; மேலும், துன்ப வேளைகளில்; இரக்கத்தோடும் பொறுமையோடும் மணமக்களைத் திடப்படுத்துதல், அன்போடு அவர்களதை; தேற்றுதல் ஆகியவற்றையும் திருப்பணியாளர்கள் தங்களது கடமையயெனக் கொள்ள வேண்டும்: இவ்வாறு, உண்மையிலேயே ஒளிமயமான குடும்பங்கள் உருவாகும்.
பல்வேறு சபைகள், சிறப்பாகக் குடும்ப இயக்கங்கள், படிப்பினை மற்றும் செயல் திட்டங்களின் உதவியோடு இளைஞர்களையும் மணமக்களையும் குறிப்பாக அண்மையில் மணமானவர்களையும் உறுதிப்படுத்தி, அவர்களுக்குக் குடும்ப, சமூக திருத்தூது வாழ்க்கையில் பயிற்சி அளிக்க பல்வேறு பணி அமைப்புகள், குறிப்பாக குடும்ப இயக்கங்கள் முயல வேண்டும்.
இறுதியாக மணமக்களே தங்களுக்குள் ஒரே அன்பாலும் மன ஒற்றுமையாலும் ஒரவர் ஒருவரைத் தூய்மைப் படுத்துவதாலும் இணைந்திருப்பார்களாக்16 வாழும் கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட அவர்கள் உண்மை மனித மாண்பைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இவ்விதமாக மணமக்கள் வாழ்வின் ஊற்றான கிறிஸ்துவைப்17 பின்பற்றுவர்; கிறிஸ்து தமது சாவினாலும் உயிர்த்தெழுதலினாலும் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ள அந்த அன்பின் மறைபொருளுக்கு18 மணமக்கள் தங்கள் அழைத்தலின் தகிழச்சி மற்றம் தியாகங்களினூடே அன்பில் நிலைத்திருப்பதன் வழியாகச் சான்று கூறுவார்கள்.
இயல் 2
பண்பாட்ட வளர்ச்சியைத் தகுந்த முறையில் மேம்படுத்தல்
53. முன்னுரை
பண்பாட்டின் வழியாகத்தான், அதாவது இயற்கைப் பொருள்களையும் ஆற்றல்களையும் வளமுறச் செய்வதன் வழியாகத்தான் மனிதர் உண்மையான், முழுமையான மிதப் பண்பை அடைய முடியும். இஃது அவர்களது ஆள்நிலத் தன்தையின் சிறப்புப் பண்பாகும். எனவே, மனித வாழ்வு என்றவுடனேயே ஆங்கு இயற்கையும் பண்பாடும் நெருக்கமாகப் பிணைந்திருப்பதைக் காணலாம்.
பண்பாடு என்ற சொல்லைப் பொதுவான அர்த்தத்தில் எடுத்துக் கொண்டால், அது மனிதர் தம் ஆன்ம, உடல் தொடர்பான பல்வேறு திறமைகளை வளப்படுத்தி மலரச் செயவதற்காக எடுக்கினற எல்லா முயற்சிகளையும் குறிக்கும். இவைதவிர, மனிதர் தம் அறிவாலும் உழைப்பாலும் உலகனைத்தையும் தம் கட்டுப்பாட்டின் கீழக் கொணர்வதற்கு எடுக்கும் முயற்சிகள்; பழக்க வழக்கங்களையும் அமைப்புகளையும் மேம்படச் செய்வதன் வழியாகக் குடும்பத்திலும் சமுதாயத்திலும் சமூக வாழ்க்கையை அன்னும் அதிக மனிதத்தன்மை உள்ளதாக்க மனிதர் எடுக்கின்ற இன்னும் அதிக மனிதத்தன்மை உள்ளதாக்க மனிதர் எடுக்கின்ற முயறிசிகள்; இறுதியாக மனிதர் பலரின் முன்னேற்றத்திற்கு ஏன் மித குலம் முழுவதன் முன்னேற்திற்குமே- உதவும் வகையில் தம் சீரிய அருள்நெறி அனுபவங்களையும் மாபெரும் நாட்டங்களையும் காலப்போக்கில் தாம் உருவாக்கும் படைப்புகளால் வெளிப்படுத்தி, பிறரோடு பகிர்ந்துகொண்டு நிலைநிறுத்திக் காப்பதற்காக எடுக்கம் முயற்சிகள்; இவை அனைத்தும் பண்பாடு என்ற பொதுவான அர்த்தத்தினுள் அடங்குவனவாகும்.
மேற்கூறியவற்றிலிருந்து, வரலாறு மற்றம் சமூகம் சாhந்த கூறுகள் மனிதப் பண்பாட்டோடு இன்றியமையாத விதத்தில்இணைற்துள்ளன என அறிகிறோம்; மேலும் 'பண்பாடு' எனும் சொல பல வேளைகளில் சமூகவியல் பயன்படுத்தப்படுகிறது. இந்த அர்த்தத்தில்தான் பண்பாடுகளைப் பற்றி நாம் பன்மையில் பேசுகின்றோம். ஏனெனில், பொள்களைப் பயன்படுத்துவதிலும், வேலையில் ஈடுபடுபதிலும், எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும், சமயத்தைக் கடைப்பிடிப்பதிலும் ஒழுக்க நெறியை உருவாக்குதரிலும் சட்டங்களைப் படைப்பதிலும் சட்ட அமைப்பபுக்கான நிறுவனங்களை ஏற்படுத்துவதிலுமு;, மனிதர் வௌ;வேறான வழிமுறைகளைக் கையான்டு வருகின்றனர்; இதன் விளைவாக, மனிதரின வாழ்க்கை முறையில் வௌ;வேறு வகைகளும் வாழ்க்கைய்ன் மதிப்பீட்டு நலன்களை ஒழுங்குபடுத்துவதில் வௌ;வேறு அமைப்புகளும் தோன்றுகின்றன. இவ்வாறு, வழிவழி வந்த நிறுவனங்களிலிருந்த ஒவ்வொரு மனித சமூகத்திற்கும் உர்த்தான தன்ப்ட்ட மரபுச் செல்வம் உருவாகிறது. அதுபோலவே, தெளிவாக கரையறுக்கப்பட்ட சரலாற்றுச் சூழமைவு ஒன்றும் உருவாகிறது; எந்த இனத்தையும் சார்ந்த எந்தக் காலத்திலும் வாழ்கின்ற மனிதராயினும் சரி, அவர்கள் இத்தகையதொரு குறிப்பட்ட சூழமைவோடு இணைந்தே காணப்படுகின்றனர்; அதிலிருந்தே மனித நாகரிகத்தை வளர்ச்சியடையச் செய்வதற்குத் தேவையான மதிப்பீட்டு நலன்களைப் பெற்று கொள்கின்றனர்.
பிரிவு 1
இன்றைய உலகப் பண்பாட்டின் நிலைமை
54. புது வாழ்க்கை முறைகள்
சமூக மற்றும் பண்பாட்டுக் கண்ணோட்த்திலிருந்து பார்க்கும்போது இன்றைய மனிதரின் வாழ்;க்கைச் சூழ்நிலைகள் எந்த அளவுக்கு ஆற்ந்த மாற்றங்கள் அடைந்துள்ளனவென்றால், மனித வரலாற்றிலேயே புதயதொரு சகாப்தம் பொடங்கியுள்ளது என் நாம் கூறமுடியும்.1 இதன் பயனாக, பண்பாட்மை முழுமையடையச் செய்யவும் அதனை அதிகமாகப் பரப்பவும் ஏதுவான புதுவழிகள் திறந்திருக்கினறன. இவ்வழிகளை உருவாக்கித் தந்தவை கீழ்பருவனவாகும்: இயற்கை அறிவியல் துறைகள், மனிதரைப் பற்றிய அறிவுத் துறைகள் மற்றம் சமூக அறிவியல் துறைகள் மனிதரைப் பற்றிய அறிவுத்துறைகள் மற்றும் சமூக அறிவியல் துறைகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாபெரும் வளர்ச்சி; தொழில்நுட்பத் துறைசளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்; எனவே இன்றைய பண்பாடு சில பண்புகளைக் கொண்டிருக்கிறது. அவையாகன சரி நுட்பமான அவிவியல்கள் எனக் கூறப்படும் துறைகள் திறனாய்ந்து தீர்ப்பு வழங்கும் சக்தியைப் பெரிதும் வளர்க்கினறன் அண்மைக் காலத்து உளவியல் ஆய்வுக்ள ;மனிதச் செயல்களின் ஆழ்நிலைத் தன்மைகளை விரிவாக விளக்குகின்றன் வரலாற்றுப் பாட இயல்கள் நாம் பொருள்களை அவற்றின் மாறுந் தன்மையையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நோக்குவதற்குப் பெரிதும் துணைபுரிகினறன் வாழ்க்கைப் பழக்கவழக்கங்களும் வாழ்க்கைப் பாணிகளும் நாளுக்கு நாள் அதிகமாக சமச் சீர்நிலையடைந்து வருகின்றன் சமூகவாழ்வு முறைகளை வளர்க்கின்றவையாகிய தொழில்மயமாக்கலும் நகர்மயமாக்கலும் மற்ற காரணங்களும் புதிய பண்பாட்டுப் பாணிகளை (பொதுமக்கள் பண்பாடு) தோற்றுவிப்பதன் விளைவாக, புதிய சிந்தனை முறைகளும் செயல்படு வகைகளும் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகளும் பிறக்கின்றன் பல்வகையான மக்களிடையேயும் சமூகக் குழுக்களிடையேயும் பெருகியுள்ள தொடர்குள்க வேறுபட்ட பண்பாட்டுப் பாணிகளின் கருவூலங்களை அனைவருக்கும், ஒல்வொரு மனிதருக்குமே அகலத்திநற்துள்ளன. இவ்வாறு, சிறிது சிறிதாக அதிக அனைத்துலகத் தன்மை கொண்டதொரு மனிதப் பண்பாட்டுப் பாணி உருவாகி வருகிறது. இந்தப் பண்பாட்டுப் பாணி வௌ;வேறான பண்பாடுகளின் தனித் தன்மைகளை எவ்வளவுக்கு மதித்துப் போற்றுகிறதோ அவ்வளவுக்கு மனித குலத்தின் ஓற்றுமையை வளர்த்து அதை வெளிப்படுத்தும்.
55. பண்பாட்டை உருவாக்கி வளர்ப்பவர்கள் மனிதரே
எந்த ஒரு குழுவையோ நாட்டையோ சார்நதவாகளாயினும் சரி, தாங்களே தங்களது கமூகத்தின் பண்பாட்டை உருவாக்குபவர்கள் எனவும் அதை வளர்ப்பவர்கள் எனவும் உணர்கின்ற ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. உலகமெங்கும் தன்னாட்சி உரிமை உணர்வும் அஃதோடு கூட கடமை உணர்வும் மேன்மேலும் வளர்ந்து வருகினறன் இவ்வளர்ச்சி மனித குலத்தின் அருள்நெறி மற்றம் அறநெறி முதிர்ச்சிக்கு மிகவம் முக்கியமானதாகும். உலக ஒருமைப்பாட்டையும் உயர்ந்ததோர் உலகை உண்மை மற்றம் நீதி ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்புவதற்காக நம்மீது சுமத்தப்பட்டுள்ள கடமையையும் நாம் கண்மன் கொண்டோமென்றால். மேற்கூறிய உண்மை இன்னும் அதிகத் தெளிவாகும். இவ்விதத்தில் நாம் ஒரு புது மனித நல முதன்மைக் கொள்கை எழுவதைக் காண்கின்ற சாட்சிகளாகத் திகழ்கின்றோம்; மனிதர் தம் சகோதரர் சகோதரிகள் மட்டிலும் வரலாற்று மட்டிலும் பொறுப்புடையவர்களாய் இருப்பதே இப்புது மனித நல முதன்மைக் கொள்கையின் தலையாய கூறாக அமையும்.
56. சிக்கல்களும் கடமைகளும்
இத்தகைய சூழ்நிலையில். பண்பாடடை வளர்க்கும் பொறுப்பு நமக்குண்டு என்று உணரும் மனிதர்கள் மிக உயர்ந்த எதிபார்ப்புகளைக் கொண்டிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. அதே நேரத்தில் தாம் தீர்வு காண வேண்டிய பல்வகையான முரண்பாடுகள் அங்கிருப்பதை அவர்கள் கவலையுடன் நோக்குவதிலும் வியப்பு ஒன்றுமில்லை.
நாளும் அதிகரித்து வருகின்ற பண்பாட்டுப் பரிமாற்றங்கள் பல்வேறு குழுக்களுக்கும் நாடுகளுக்குமிடையே உண்மையான, பலன் நல்குகின்ற ஓர் உரையாடல் நிகழ்வதற்கு வழிகோல வேண்டும்; இத்தகைய பண்பாட்டுப் பாரிமாற்றஙகள் சமூகங்களின் வாழ்க்கையில் கலக்கம் விளைவிக்காதிருக்க நாம் செய்ய வேண்டியது என்ன? அவை ஆன்றெர்களின் ஞானத்தை புறக்கணிக்காதிருக்க நாம் செய்ய வேண்டியது என்ன? ஒவ்வொரு மக்களினங்களுடையவும் தனிப்பட்ட பண்புகளை அவை அழித்துவிடாதிருக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
வழிவழியாக வரும் மரபுக் கருவூலத்தின் மேல் கொண்டிருக்க வேண்டிய உயிரூட்டம் நிறைந்த பற்று மறைந்துவிடாத வகையில் புதிய பண்பாட்டின் இயங்குசக்தியையும் வளர்ச்சியையும் மேம்மபடுத்தவது எப்படி? இச்சிக்கல் தனிப்பட்ட விதத்தில் உடனடி ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்: ஏனெனில், அறிவியல் துறைகள் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் ஏற்பட்டுள்ள மாபெரும் முன்னேற்த்திலிருந்து தோன்றுகின்ற பண்பாட்டையும் வௌ;வேறு மரபு வழக்குகளில் காணப்படும் பண்டை வரலாற்றுதத தொடர்புடைய விழுமிய சான்றுகளை ஆய்வதால் ஊட்டம் பெற்றுள்ள பண்பாட்டுப் பாணிகளையும் ஒருங்கிணைப்பத பற்றிய பிரச்சினை அங்குள்ளது.
அதிக விரைவாக வளர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்ற சிறப்பு ஆராய்ச்சித் துறைகள், தனித்தனியாகச் சிதறுண்டிராமல், தமக்குள் ஒருங்கிணைய அமைவது எவ்வாறு? மேற்கூறிய ஆராய்ச்சித் துறைகளை ஞானத்திற்கு மனிதரை இட்டச் செல்லும் அவர்களது ஆழ்நிலைச் சிந்தனை ஆற்றரோடும் வியப்புணர்வு ஆற்றலோடும் இணைப்பது எவ்வாறு?
உயர்மட்மப் புலமை படைத்தோரின் பண்பாடு தொடர்நது அதிகமதிமாக உயர்வடைந்து சென்று, அதிகமளவு பல்கூட்டுநிலை அடைந்து வருகிறது ஒருபுறம்; இந்ந்pலையில், பண்பாட்டு நலன்களில் எல்லா மனிதருமே பங்கடைந்திட நாம் செய்ய வேண்டியது என்ன?
இறுதியாக, வெறம் மண்ணுலகச் சார்பானதும், சமயத்துக்கு எதிரானதுமானதோரு மனித நல முதன்மைக் கொள்கையாக மாறிவிடுவதைத் தவிர்த்து, பண்பாடு தனக்குத் தன்னாட்சி உரிமை கோருவது நியாயமானதே என நாம் ஏற்றுக் கொள்வது எவ்வாறு?
இத்தகைய முரண்பாடகளுக்கு நடுவேதான் மனிதப் பண்பாட இன்று வளர்ச்சியடைய வேண்டியுள்ளது: இந்த வளர்ச்சி எவ்வாறு நிகழ வேண்டுமெனில் மனிதப் பண்பாடு மனிதர்களi முழுமையாக, சம சீரான முறையில் ஒருங்கிசைத்து வளர்த்திட வேண்டும்; மேலும், ஒரே மனிதக் குடும்பத்தில் சகோதரப் பாங்குடன் இணைந்துள்ள எல்லா மக்களும் சிறப்பாகக் கிறிஸ்தவர்கள், தம் பணிகளை நிறைவேற்றுவதற்கும் பண்பாட்டு வளர்ச்சி உதவிட வேண்டும்.
பிரிவு 2
பண்பாட்டை முறையாக மேம்படையச்
செய்வதற்கான சில விதிகள்
57. நம்பிக்கையும் பண்பாடும்
விண்ணக நகரத்தை நோக்கிப் பயணம் செய்யம் கிறிஸ்தவ மக்கள் மேலுலகில் உள்ளவற்றை நாட வேண்டும்; அவற்றின் மீதே மனத்தைச் செலுத்த வேண்டும்.2இது அதிக மனிதப் பண்பு வாய்ந்ததோர் உலகைக் கட்டியெழுப்ப மனிதர் அனைவரோடும் ஒன்றுபட்டு உழைப்பதற்கெனக் கிறிஸ்தவர்கள் பெற்றுள்ள கடமையின் முக்கியத்துவத்தை வலியுத்துகிறதேயன்றி எந்த வகையிலும் அதனைக் குறைப்பதில்லை. உண்மையாகவே இக்கடமையை நிறைவே;றறுவதில் இன்ம் அதிக ஆர்வத்துடன் ஈடுபடக் கிறிஸ்தவ நம்பிக்கை எனும் மறைபொருள் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தூண்டுதலாகவும் உதவியாகவும் இருக்கிறது; மேலும் மனிதரின் முழு அழைப்பில் பண்பாட எந்த உயரிய இடத்தைப் பெறவேண்டுமோ அந்த இடத்தை அதற்கு அளிப்பதற்கான செயல்பாட்டின் முழுப்பொருளைக் கண்டுபிடிக்கவும் துணைநிற்கின்றது.
உண்மையிலே, நிலம் பலன்தரும் பொருட்டும் அது மனித குடும்பம் முழுவதும் வாழ்வதற்கு ஏற்றதோர் உறைவிடமாக அமைந்திடும் பொருட்டும் மனிதார்கள் தம் கையுழைப்பாலோ தொழில் நுட்பத் துறைகளின் உதவியாலே அதைப் பண்படுத்துகினறனர்; மேலும் சமூக குழுக்களின் வாழ்வில் அவர்கள் தன்னுணர்வோடு பொறுப்பேற்கினறனர்; இத்தகைய செயல்களில் மனிதர்கள் ஈடுபடும்போது அவர்கள் கடவுளின் திட்டத்தை அதாவது மண்ணுலகைத் தம் ;ஆற்றலுக்கு உட்படுத்தி,3 படைப்பை நிறைவுக்குக் கொணர வேண்டும் எனக் காலங்களின் தொடக்கத்திலேயே கடவுள் வெளிப்படுத்திய திட்டத்தை செயல்படுத்துகின்றனர்; மேலும் அஃதோடு தம்மையே செலவிட வேண்டுமென்று கிறிஸ்து வழங்கிய பெரும் கட்டளையையும் நிறைவேற்றுகின்றனர்.
மேலும், மனிதர் மெய்யியல், வரலாறு, கணிதம், இயற்கை அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளில் ஈடுபடுகினறனர்; கலைகளை வளர்க்கினறனர்: இவ்வாறு செய்யும் போது, மனித குடும்பம் உண்மை, நன்மை, அடகு ஆகியவற்றைச் சார்ந்த சீரிய தத்துவங்களை அறிவதன் மூலமும் பொது மதிப்பீகளை பற்றித் தீர்வு செய்வத்ன மூலமும் உயர்நலை அடைய மிகச் சிறப்பான முறையில் மனிதர் உதவ முடியும்; அஃதோடு மனித குடும்பம் வியப்புக்ககுரிய ஞானத்தால் அதிகத் தெளிவான விதத்தில் ஒளிபெறும்; இந்த ஞானம் கடவுளோடு என்னும் இருந்தது. அவர் அருகில் அவருடைய சறிபியாய் இருந்தது; பூவுலகில் எங்கும் மகிழ்ந்த செயலாற்றி மனிதரில் இன்பம் கண்டது.4
இப்படியாக மனிதரது மனம், பொருள்களுக்கு அடிமைப்படுவதிலிருந்து அதிகமாக விடுபட்டு, படைத்தவரை வணஙகவம் அவரையே ஆழ்ந்து தியானிக்கவும் அதிக எளிதாக ஈர்க்கப்படமுடியும்; மேலும், மனிதரின் மனம் அருளின் தூண்டுதலினால் இறைவாக்ககை ஏற்றுக்கொள்ளவும் ஆய்வு;படுத்துகிறது. இந்த இறைவாக்கு அனைத்தையுமே மீட்பதற்காகவும் தன் தலைமையில் ஒன்றுசேர்ப்பதற்காகவும் தான் மனிதர் ஆவதற்கு முன்னரே,''அனைத்து மனிதரையும் ஒளிhப்விக்கும் உண்மையான ஒளி'' (யோவா1:9) உலகில் இருந்துது.5
அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் தம்முடைய ஆய்வுமுறைகளின் துணைகொண்டு பொருள்களின் ஆழ்நிலை இயலபை அடைய முடிவதில்லை: இவ்வறிவ தறைகளில் பயன்படுத்தப்படும் ஆய்வுமுறைகள் முழு உண்மையைக் கண்டுபிடிக்க உதவும் உயர்தனிப்பட்ட அளவுகோலகத் தவறபகக் கருதப்படுமாயின், அப்பொழுது இவ்வறிவத் துறைகளின் முன்னேற்ற வளர்ச்சியானது புலன்களுக்கு எட்டுபவை மட்டுமே உண்மை எனும் கோட்பாட்டையும், கடவுளை அறிந்துணர இயலாது எனும் கொள்கையையும் ;ஒருபிதத்தில் ஆதரிப்பதாகிவிடலாம். உண்மையிலேயே, மனிதர்கள் இன்றைய கண்டுபிடிப்பபுகளின் மேல் மிதமிஞ்சிய நம்பிக்கை கொண்டு, தாமே தமக்குப் போதும் என எண்ணிக்கொண்டு, அதற்கும் மேலானவற்றைத் தேடாமல் இருக்கக்கூடியது ஆபத்து இருக்கத்தான் செய்கிறது.
ஆயினும், இத்தகைய தவறான முடிவுகள் இன்றைய பண்பாட்டிலிருந்து கட்டாயமாக எழுவனவன்று; இப்பண்பாட்டின் உண்மை விழுமியங்களை; நாம் ஏற்றுக்கொள்ளாதிருக்க நம்மை மேற்கூறிய விழுமியங்களi நாம் ஏற்றுக்கொள்ளாதிருக்க நம்மை மேற்கூறிய முடிவுகள் தூண்டுதலும் கூடாது. இனறைய பண்பாட்டின் உண்மை விழுமியங்களுள் கீழ்வருவனவற்றைக் குறிபப்பிடலாம்: ஆறிவியல் கல்வி, ஒறிவியல் ஆய்வுகளை நடத்தும்பொழுது உண்மையில் மட்டில் கொண்டிருச்ச வேண்டிய துல்லயமான நம்பகத் தன்மை. சிறப்பாய்வுக் குழுக்களிடையே பிறருடன் சேர்ந்து ஒத்துழைக்கும் பொறுப்பு, அனைத்துலகத் தோழமை உணர்வு; மனிதருக்கு உதவ வேண்டும், ஏன், அவர்களை காக்க வேண்டும் என்னும் பொறுப்பு, பற்றி அறிஞர்கள் நாளுக்கு நாள் பெறும் தெளிவு என்னும் பொறுப்புப் பற்றி அறிஞர்கள் நாளுக்கு நாள் பெறும் தெளிவு எல்லாருக்கும், சிறப்பாகப் பண்பாட்டுக் குறைபாட்டினால் துன்புறுபோருக்கும் சுதந்திரமாகச் செயல்பட உரிமை துன்புறுவோருக்கும் சுதந்திரமாகச் செயல்பட உரிமை மறுக்கப்பட்டோருக்கும், வாழ்;க்கை நிலைமைகளை உயர்த்தி அமைப்பதற்கான துணிச்சல். மேற்கூறிய விழுமியங்கள் யாவும் நற்செய்தியை மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு அவர்களைத் தயாரிக்கும் ஒரு வழியாக இருக்கும்; இத்தாயரிப்பு உலகை மீட்க வந்தவர் வழியாக இறையன்பினால் உயிரூட்டம் பெறவியலும்.
58. கிறிஸ்துவின் நற்செய்திக்கும் மனிதப் பண்பாட்டிற்கும் இடையேயுள்ள தொடர்புகள்
மீட்பு நற்செய்திக்கும் மனிதப் பண்பாட்டுக்கும் இடையே பலவகையான தொடர்புகள் உண்டு. ஏனெனில் கடவுள் தம்மையே தம் மக்களுக்கு வெளிப்படுத்தினார்; இறுதியாக மனிதராகப் பிறந்த தம் மகன் வழியாகத் தம்மை முழுமையாக வெளிப்படுத்தினார்; இவ்வாறு தம்மை வெளிப்படுத்திய கடவுள் வௌ;வேறு காலங்களில் நிலவிய பண்பாட்டு முறைக்கு ஏற்பவே பேசியுள்ளார்.
இது திருச்சபைக்கும் பொருந்தும். எவ்வாறெனில் வரலாற்றில் வௌ;வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்து வந்துள்ள திருச்சபை பல்வேறு பண்பாட்டுக் கருவூலங்களையும் பயன்படுத்தியே செயல்பட்டு வந்திருக்கிறது: இம்முறையைக் கையாண்டு திருச்சபை தன் படிப்பினை வழியாக எல்லா மக்களினத்தார்டையேயும் கறிஸ்துவின் நற்செய்தியைப் பரவச் செய்து விளக்கி வந்தள்ளது; அந்நற்செய்தியை ஆய்வுக்கு உட்படுத்தி ஆழமாகப் புரிந்துகொண்டுள்ளது: திருவழிபாட்டுக் கொண்டாட்டத்திலும் நம்பிக்கை கொண்டோர் குழுவினுடைய பல்வகை வாழ்க்கை முறைகளிலும் ;அதிகச் சிறப்பாக நற்செய்தியை வெளிப்படுத்தி வந்துள்ளது.
ஆனால், அதே வேளையில், திருச்சபை எல்லாக் காலத்தையும் இடத்தையும் சார்ந்த மக்கள் அனைவரிடமும் அனுப்பப் பட்டுள்ளது; ஆகவே திருச்சபை எந்த ஒரு கறிப்பிட்ட இனத்தோடும் நாட்டோடும் தனிப்பட்ட வாழ்;க்கை முறையோடும் பழைய அல்லது புதிய பழக்கவழக்க முறையோடும் அவை தவிர்த்த பிறவற்றைப் புறந்தள்ளம் விதத்தில் பிணைத்நிருக்கவில்லை; பிரிக்கவியலா விதத்தில் இணைந்திருக்கவுமிலிலை. திருச்சபை தனக்க உர்த்தான மரபைக் கைக்கொண்டு, அதே வெளையில் தனது உலகளாவிய பணியையும் கருத்தில் கொண்டு, வௌ;வேறு பண்பாட்டு அமைப்புகளோடு உயிரூட்டமாக உறவு கொள்ளும் சக்தியைப் பெற்றிருக்கிறது. இத்தகைய உறவின் மூலமாகத் திருச்சபையும் மேற்கூறிய வௌ;வேறு பண்பாடுகளும் வளம் பெறுகின்றன.
கிறிஸ்துவின் நற்செய்தி, வீழ்ந்த மனிதரின் வாழ்வையும் பண்பாட்டையும் இடையறாது புதுப்பிக்கின்றது;எப்பொழுதும் தொடாந்து அச்சுறுத்துகின்ற பாவத் தூண்டுதலிலிருந்து விளையும் தவறுகளையும் தீமைகளையும் எதிர்த்து நின்று முறியடிக்கிறது மேலம் கிறிஸ்துவின் நற்செய்தி மக்களின் ஒழுக்க நெறியைத் தூய்மைப்படுத்தி மேம்படுத்துகிறது; ஒவ்வொரு நாட்டினுடையவும் காலத்தினுடையவும் அருள்நெறி வளங்களையும் சிறப்பியல்புகளையும் மேலுலகச் செல்வங்கiளால் ஒரு விதத்தில் உள்ளிருந்N;த வளப்படுத்துகிறது, உறுதியாக்குகிறது, நிறைவுக்குக் கொணர்கிறது, கிறிஸ்துவில் புதுப்பிக்கிறது.6 இவ்வாறு திரச்சபை தனது பணிப்பொறுப்பை நிறைவேற்றுவதினாலேயே,7மனித சமூகப் பண்பாட்டிற்கு, ஊக்கமளித்து அதை வளர்க்கிறது; மனிதர்கள் உள்ளார்ந்த சுதந்திரத்தை அடையுமாறு தனது செயலினால், திருவழிபாட்டுச் செயலினாலுங்கூட பயிற்றுவிக்கிறது.
59. மனிதப் பண்பாட்டுப் பணிகளுள் வௌ;வேறு அம்சங்களை முறையாக ஒருங்கிணைத்தல்
மேற்கூறிய காரணங்களை முன்னிட்டுத் திருச்சபை பின்வருபவற்றை பல்லாருக்கம் நினைவுறுத்துகிறது: பண்பாடு என்பது மனித ஆளின் முழு நிறைவுக்கும் சமூகத்தினுடைய நன்மைக்கும் மித சமுதாயம் அனைத்துடைய நலனுக்கும் பணிபுரிவதாக இருத்தல் வேண்டும். ஆகவே மனித உள்ளம் பண்படுத்ப்பட வேண்டும்: இது எவ்வாறு நகழ வேண்டுமெனில் விய்பபுணர்வு கொள்ளல், உள்;ர அறிதல் ஆழ்ந்து தியானித்தல் சொந்தமாக மதிப்பீடு செய்தல் சமய உணர்வு அறநெறி உhண்வு சமூக உணர்வு ஆகியவற்றை வளர்த்தல் போனறவற்றை ஊக்குவிக்க மனித மனத்தைபை; பண்படுத்ம வேண்டும்.
பண்பாடு என்பது மனிதரின் பகுத்தறிவுப் பண்பிலிருந்தும் அவர்களது சமூக இயல்பிலிருந்தும் நேரடியகப் பிறக்கும் ஒன்று ஆகவே பண்பாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் அதற்கு நியாயமான சுதந்திரம் எப்பொழுதம் தேவை. மேலும் தனது சொந்தத் தத்துவங்களுக்கேற்பத் தன்னுரிமையுடன் செயல்படும் வாய்ப்பும் பண்பாட்டிற்குத் தேவைப்படுகிறது. எனவே பண்பாடு மீறவியலாத் தன்மையுடையது என்று கூடக் கூறலாம்;. இத்தன்மையைப் பாதுகாக்கும்போது, பொது நலனின் எல்லைக்குட்பட்டுத்தனி ஆளுடையவும் தனிப்பட்ட அல்லது அனைத்துலகச் சமூகத்தினுடையவும் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் செயல்பட வெண்டும் என்பது தெளிவு.
முதல் வத்திக்கான் சங்கத்தின் படிப்பினையை நிiவுக்குக் கெணர்ந்து இத்திருச்சங்கம் ''நம்பிக்கை பகுத்தறிவு என்ற இரு வேறுபட்ட அறிவுப் பாதைகள் உள்ளன'' என்று இயம்புகிறது மேலும் ''மனிதக் கலைகளம் ஆய்வுத் துறைகளும் தங்களுக்கே உரிய அடிப்படை விதிகளையும் செய்முறையையும் பயன்படுத்தித் தங்களது எல்லைக்குட்பட்டுச் செல்படுவதற்கு'' திருச்சபை எவிவதத் தடையும் இடுவதில்லை என்றும் இச்சங்கம் அறிக்கையிடுகிறது; எனவே '' இத்தகைய முறையான சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டு'' இச்சங்கம் மனிதப்பாண்பாட்டின், குறிப்பாக அறிவியல்களின், முறையான தன்னாட்சி உரிமையை வலியுறுத்துகிறது.8
மேற்கூறியவை எல்லாம் மனிதர் ஒழக்க நெறியையும் பொது நலனையும் சாந்த ஒழுங்கு முறைக்கு அமைந்து சுதந்திரமாக உண்மையை நாடித்தேடவம் தம் எண்ணத்தை வெளிப்படுத்தவும் அதனைப்பரப்பவும் உந்தக் கலையையும் வளர்க்கவும் உரிமை கொண்டுள்ளனர் என்பதை வலியுறுத்துகின்றன் இறுதியாக பொது நிகழ்ச்சிகளைப் பற்றி உண்மைச் செய்தியைத் தெரிந்துகொள்ளும் உரிமை கொண்டுள்ளனர் என்பதையும் அவை அழுத்தி உரைக்கின்றன.9
பண்பாட்டு முறைகள் எத்தன்னை உடையனவாய் அமையவேண்டும் எனத் தீர்மானிப்பது பொது அதிகாரிகளின் வேலை அல்ல் மாறாக, யவாரிடையேயும் நாட்டில் உள்ள சிறுபான்மையினரிடையேயுங்கூட, பண்பாட்டு வாழ்க்கையை வளர்க்க ஏதுவான சூழ்நிலைகளையும் உதவிகளையும் பொது அதிகாரிகள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.10எனவே. பண்பாடு தனக்குரிய குறிக்கோளிலிருந்து பிறழ்ந்து அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்திற்கு எவ்விதத்திலும் ;அடிமை ஆக்கப்படாதிருக்கக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிரிவு 3
பண்பாட்டைப் பொறுத்தமட்டில் கிறிஸ்தவர்கள்
உடனடியாக ஆற்ற வேண்டிய சில கடமைகள்
60. பண்பாட்டில் நலன்களைப் பெற யாவருக்கும் உரிமையுண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதலும் அவ்வுரிமையைச் செயல்படுத்துதலும்.
அறியமை எனும் அவல நிலையிலிருந்து பெரும்பான்மையான மக்களை விடுவிக்கம் வாய்ப்புகள் இன்றுள்ளன. எனவே நம் காலத்தவர், குறிப்பாகக் கிறிஸ்தவர்கள் ஆற்ற வேண்டிய மாபெரும் பணி ஒன்றுள்ளது. அதாவது, பொருளாதார, அரசியல் துறைகளில் நாட்டளவிலும் அனைத்துவகளவிலும் பண்பாடு சம்பந்தமான அடிப்படை முடிவுகள் படுக்கப்படுவதற்காக அயராது உழைக்க வேண்டியது அவர்களது பணியாகும். இம்முடிவுகள் எவ்வாறு அமைய வேண்டுமெனில் அவற்றின் வழியாக இனம், பால், நாடு சமயம், சமூகச்சூழ்நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடுகள் காண்பிக்காமல் மனித ஆளின் மாண்புக்கு ஏற்ற மனித சமூகப் பண்பாட்டில் பங்குபெற யாவருக்கும் உரிமை உண்டு என்பதை அனைத்துலகும் ஏற்றுக்கொண்டு அவ்வுhமையைச் செயல்படுத்த வேண்டும். எனவே தேவையான பண்பாட்டு நலன்களை அனைவரும் பெறுமாறு வழி செய்ய வேண்டும் குறிப்பபாக அடிப்படைப் பண்பாட்டு நலன்கள் என அழைக்கப்படுவனவற்றை அனைவரும் பெறுமாறு வழிவகுக்க வேண்டும். இதன்வழியாக எழுத்தறிவின்மையாலும் தாமாகவே சொந்தமாக முயற்சியெடுக்க இயலாமையாலும் எண்ணிறந்த மக்கள் உண்மையான மனிதப்பண்போடு பொது நலனுக்காகத் தங்கள் ஒத்துழைப்பை நல்க இயலாத நிலை மாறும்.
ஆகவே உயர் படிப்புக்களுக்குச் செல்லத் தகுதிபடைத்தவர்கள் அத்தகைய படிப்புகளில் ஈடபட இயலுமாறு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இப்படிப்பு வழியாக அவர்கள் தங்கள் திறமைக்கம் தாங்கள் அடைந்துள்ள புலமைக்கும் ஏற்ற கடமைகளையும் அலுவல்களையும் பணிகளையும் மனித சமூகத்தில் தங்களால் கூடுமான அளவு ஏற்றுச் செயல்படுத்த முடியும்.11இவ்வாறு ஒவ்வொரு மனிதரும் மக்களினச் சமூகக் குழுக்களுமத் தங்கள் சிறப்பியல்புகளுக்கும் மரபுகளுக்கும் ஏற்ற விதத்தில் பண்பாட்டு முழுவளர்ச்சியைத் தங்கள் வாழ்வில் அடையமுடியும்.
பண்பாட்டில் பங்குபெறுவதற்கான உரிமை அனைவருக்குமுண்டு; தங்களையே பண்படுத்திக்கொளவதற்கான கடமையும் அவர்களுக்குண்டு; மேலும், பண்பாட்டில் பிறர் பங்கேற்பதற்கு உதவும் கடமையும் உண்டு; இவற்றையெல்லாம் ஒவ்வொருவரும் நன்கு உணரச் செய்வதற்காக அயராது பாடுபடவேண்டும். ஏனெனில் பண்பாட்டைச் சார்ந்த மனிதச் செயல்பாடுகளுக்குத் தடையாக இருப்பதுமல்லாமல், பண்பாட்டைப் பெறுவதற்காக மனிதர் எடுக்கின்ற முயற்கிகளையே பயனற்றதாகிவிடும் அளவுக்கு வாழ்வுச் சூழமைவுகளும் உழைப்புச் சூழ்நிலைகளும் இன்று ஆங்காங்கு உள்ளன. குறிப்பாக உழவர்கள் மற்றம் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் மேற்கூறிது உண்மையாகும். உழைப்புச் சூழ்நிலைகள் உருவாக்கிக் கொடுக்கபடபட வேண்டும். அவர்கள் ;மனிதமப் பண்பாட்டில் பங்கு பெறுவதற்கு தடையாக இருப்பதற்குப் பதிலாக அதற்கு உறுதுணையாகவும் உந்து சக்தியாகவும் இருக்கும் வகையில் ஏறக்குறைய வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் பெண்கள் இன்று வேலை செய்கிறார்கள்; அவர்கள் தங்களுக்கே உரிய திறமைக்கு ஏற்பத் தங்கள் பணியை முழமையாய் ஏற்றுச் செயல்படுத்த இயலும் நிலை இருத்தல் வேண்டும். பெண்கள் பண்பாட்டு வாழ்வில் தங்களுக்கே உரிய முறையில் பங்கேற்பார்; அவர்களது பங்கேற்பு இன்றியமையாததும்கூட் இதை யாவரும் ஏற்று, இத்தகைய பங்கேற்பை ஊக்குவிக்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.
61. முழுமையான மனிதப் பண்பாட்டுக்கான கல்வி
வௌ;வேறு அறிவுத் துறைகளையும் கலைகளையும் தொகுத்து ஒருங்கிணைத்தல் மந்தைய ஆண்டுகளைவிட இன்று அதிஜகக் கடினமானதொன்றாகும். ஏனெனில். பண்பாட்டின் உட்கூறுகள் மேன்மேலுமு; வளர்ச்சியடைந்து வேறுபடுத்தப்பட்டு வரும் அதே வேளையில், அந்த உட்கூறுகளை அறந்துணரவும் அவற்றைப் பொருத்தமாக ஒருங்கணைக்கவம் தன் மனிதருக்குள்ள திறமை குறைந்துகொண்டு வருகிறது. இந்நிலையில் ''அனைத்துத் துறைகளிலும் புலமைப் பெற்ற மனிதர்'' என்ற கருத்து படிப்படியாக மங்கிக் கொண்டே வருகிறது. இருப்பினம், முழுமைப் பண்புடைத்த மனிதராக இருந்து செயல்படுவது ஒவ்வொரு மனிதருடையவும் கடமையாகும். இவ்வாறு முழுமைப் பண்ப படைத்த மனிதராக இருந்து ஒருவர் செயல்படுங்கால் அவரிடத்தில் புத்தி, உளம், மனச்சான்று, சகோதரத்துவம் ஆகிய மதிப்பீட்டு நலன்கள் மேலோங்கி நிற்கும். இந்நலன்கள் அனைத்தும், படைத்தவரான கடவுளையே தம் அடித்தளமாகக் கொண்டுள்ளன் கிறிஸ்துவில் வியத்தகு விதமாய் நலம் பெற்ற, மேல்நிலைக்கு உயர்த்தப்பெற்றிருக்கின்றன.
மேற்கூறிய பண்பாட்டுக் கல்வியை ஊட்டி வளர்க்கினற தாய் போன்று செயல்படுவது முதன்முதலில் குடுமத்பமே ஆகும். குடும்பத்தில் குழந்தைகள் அன்பல் ஊறித் திளைக்கினறனர்; மதிப்பிட்டு நலன்களின் ஒழுங்கமைப்பை உளிதாக்க கற்றுக் கொள்கின்றனர்; மேலும். நலமான மனிதப் பண்பாட்டுக் கூறுகள், வளரும் பருவத்திலுள்ள இளைஞர்களின் உள்ளத்திலே ஒருவிதத்தில் இயற்கையாகவே பதிந்து விடுகின்றன.
இன்றைய சமதாயங்களில் மேற்கூறிய கல்விக்குச் சிறிப்பான வாய்ப்புகள் கிடைப்பதற்குக் கரதணமாய் அநை;துள்ளன. எல்லா மனிதர்களும் பண்பாட்டில் பங்கேற்பதற்கு இந்த வாய்ப்பகள் துணைபுரியும். வேலைநேலம் பலவிடங்களிலும் குறைக்கப்பட்டிருப்பதால், பெரும்பான்மையான மக்களக்குப் பண்பாட்டு வளாச்சிக்கான வய்ப்புகள் நாளம் பெருகி வருகின்றன. ஓய்வு நேரங்களை இளைப்பாற்றிக்காகவும், உள உடல் நலனை வளப்படுத்துவதற்காகவும் முறையாகப் பயன்படுத்தல் பொருத்தமாவம். தாமாக விரும்பி மேற்கொள்ளும் தொழில்கள் படிப்புகள் மனிதரின உளத்திறனைச் செம்மைப்படுத்தி, அஃதோடு மனிதர் ஒருவர் ஒருவih நன்கு அறிந்துகொள்ள அவர்களுக்குப் பொரிதும் உதவுகின்ற சுற்றுலாக்கள்; உடல் பயிறிசிகள் மேலும் சீரான உளநலத்தைத் தனி ஆளைப் பொறுத்த மடடிலும் சமூகத்தைப் பொறுத்தமடடிலும் பாதுகாத்து, எல்;;;;லா நிலைமைகளையும் நாடுகளையும் இனங்களையும் சார்ந்த மக்களிடையே சகோதர உறவுகளை ஏற்படுத்த உதவுகின்ற விளையாட்டுப் போட்டிகள்; இவை அனைத்தும் ஓய்வு நேரங்களை வளமுறச் செய்யும் வழிகளாகும். ஆக இக்காலத்திற்கு உரித்தான பண்பாட்டுச் செயல்முறைகளும் கூட்டு முயற்சிகளும் மனிதத் தன்மையிலும் கிறிஸ்தவ உயர்விலும் தோய்ந்திருக்கம் விதத்தில் கிறிஸ்தவ மக்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்குவார்களாக.
மேற்கூறிய நலன்கள் எல்லாம் மனிதரக்கு முழுப் பண்பாட்டு வளாச்சியை அளிக்க்க கூடியனவாக மாற வேண்டுமாயின், பண்பாடும் அறிவியலும் மனித ஆளைப் பொறுத்த மட்டில் எத்தகைய பொருளுடைத்தன என்னும் ஆழ்ந்த கேள்வியை நாம் அதே நேரத்தல் உழுப்பாமல் இருக்க முடியாது.
62. மனிதப் பண்பாடடைக் கிறிஸ்தவத்தோடு இசைவ இணைத்தல்
பண்பாட்டு வளர்ச்சிக்குத் திருச்சபை பேருதவி புரிந்துள்ளது என்பது உண்மையே. இருப்பினும் பண்பாட்டைக் கிறிஸ்தவத்தோடு இசைவுற இணைப்பதில் சூழ்நிலைகளின் காரணமாகச் சிக்கல்கள் எழுவதுண்டு; இது ஓர் அனுபவ உண்மை.
இத்தகைய சிச்கல்கள் நம்பிக்கை வாழ்வுக்குக் கட்டாயம் தீங்காகிவிடும் என்றில்லை; மாறாக, அவை நம்பிக்கையை அதிக நுணுக்கமாகவும் ஆழமாகவும் அறிந்துணர்வதற்குத் தூண்டுதலாகவும் இருக்க முடியும். அறிவியல், வரலாறு. மெய்யியல் ஆகிய துநைகளின் அண்மைக்கால ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் புதிய வினாக்களை எழுப்புகின்றன. இவ்வினாக்கள் நடைமுறை வாழ்வு சார்ந்த விளைவுகளைத் தம்முள் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், இறையியலாரைப் புதிதாக ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் தூண்டுகின்றன. தவிர, இறையியலார் இறையியல் துறைகளுக்கு உரித்தான ஆய்வு முறைகளையும் ஒழுங்குகளையும் கடைப்பிடிக்கும் அதே நேரத்தில் தங்கள் கால மக்களுக்குப் போதனையை எடுத்தியம்ப மென்மேலும் பொருத்தமான வழிகளைத் தொடர்ந்து, தேடுவதற்கு அழைக்கப்படுகிறார்கள்; ஏனெனில், நம்பிக்கை களஞ்சியம் அல்லது நம்பிக்கை உண்மைகள் ;ஒன்று அவற்றின் பொருளையும் கருத்தையும் பாதுகாதத்து அவற்றை எடுத்துரைக்கும் முறையோ மற்றொன்று.12அருள்பணியை ஆற்றம்பொத அறையியல் தத்துவங்களை மட்டுமே ஏற்றுப் பயன் படுத்தாமல், உலகுசார் அறிவியல்களின் கண்டபிடிப்புகளையும் போதிய அளவு ஏற்றுப்ப பயன்படுத்த வேண்டும்; இத்தகைய அறிவியலகளில் சிறப்பாக உளவியல், சமூகவியல் அகியவற்றைக் குறிப்பிடலாம். மேற்கூறிய வகையில் செயல்பட்டால் நம்பிக்கைக் கொண்டோர் அதிக நலமான முதிhச்சி நிறைந்த நம்பிக்கை வாழ்வில் பங்கு பெற இயலும்.
இலக்கியமும் கலைகளும் தங்களுக்குரிய வகையில் திருச்சபையின் வாழ்வுக்கு மிக முக்கியமானவையாகும். ஏனெனில், மனிதருக்கே உரிய தனிப் பணிவையும் அவர்களுடைய சிக்கல்களையும் மனிதர் தம்மையும் உலகையும் அறிந்து நிறைவுபடுத்த மேற்கொள்கின்ற முயற்சிகளையும் இலக்கியம் மற்றும் கலைகள் வெளிக்கொணர முயற்சி செய்கின்றன. மேலும், வரலாற்றிலும் உலகம் முழுவதிலும் மனிதர் இடத்தைக் கண்டறிய அவை முனைகின்றன் மனிதர்களுடைய துயரங்கள், மகிழ்ச்சிகள், தேவைகள், ஆற்றல்கள் ஆகியவற்றை விளக்கிட முயற்சி செய்கின்றன் மனிதருக்கு ஒளிமிக்கதோர் எதிர்காலம் வருஅமன்பதை எடுத்துரைக்க அவை பெரிதும் முனைகின்றன. இம்முறையில் இவை காலத்திற்கும் இத்திற்கும் ஏற்பப் பலவகையில் அமந்தறள்ள மனித வாழ்வை வெளிப்படுத்துகின்றன் அவ்வாழ்வை உயாவுறச் செய்யும் திறம் படைத்துள்ளன.
எனவே, இலக்கியத்தையும் கலைகளையும் வளர்ப்பவர்கள் தாங்கள் ஈடுபட்டிருக்கின்ற பணிக்குத் திருச்சபை மதிப்பளிக்கிறது என உணாந்திடவும் ஒழுங்கான சுதந்திரத்தோடு செயல்படவும் அவர்கள் கிறிஸ்தவ சமூகத்தோட அதிக எளிதான முறையில் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இயலுமாறு அனைவரும் மயற்சி செய்ய வேண்டம். மேலம், பல்வேறு நாடுகள் மற்றும் நிலப்பகுதிகளின் பண்பபுகளுக்கு ஏற்ற இக்கால மக்களுக்குப் பொருத்தமான, ஊதுக் கலைப் பாணிகளைத் திருச்சபை ஏற்றுக் கொள்ள வேண்டும். எடுத்துரக்கம் முறைகளில் சரியாய் அமைந்து. வழிபாட்டின் இயல்புக்கு ஏற்ற முறையிலுள்ள் கலைப் பாணிகள் உள்ளத்தைக் கடவுளை நோக்கி எழுப்பத் துணையாக அமையுமென்றால் அவை கோவில் திருவிடத்திற்குள ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.13
இவ்வாறு, இறைவனின் மாட்சி சிறப்பாக வெளிப்படும். நற்செய்தியின் போதனை மனிதரின அறிவிற்கு அதிகத் தெளிவாகப் புலனாகும்; அப்போததை, மனித வாழ்க்கைச் சூழ்நிலைகளோடு தன்னியல்பிலேயே பொருந்திப் போவது துலங்கும்.
எனவே கிறிஸ்தவ மக்கள் தம் காலத்தில் வாழும் பிற மனிதரோடு நெருங்கி ஒன்றித்து வாழவேண்டும்; பண்பாட்டின் வழியாய் அம்மனிதர் வெளிப்படுத்துகின்ற சிந்தனை முறைகளையும் உணர்வுப் பாணிகளையும் ஆழமாகப் புரிந்து கொள்ள முயலவும் வேண்டும். புதிதாக எழுந்துள்ள அறிவியல்கள், கொள்கைகள், மிக அண்மைக் கால கண்டுபிடிப்புகள் அகியவையெல்லாம் எந்த அறிவு வளர்ச்சியைக் கொணர்நதுள்ளனவோ அந்த அறிவு வளர்ச்சிக் கிறிஸ்தவ அறநெறியோடும் கிறிஸ்தவப் படிப்பினையோடும் நெருக்கமாக இணைந்திட நம்பிக்கைக் கொண்டோர் முயல வேண்டும். இவ்வாறு, நம்பிக்கைக் கொண்டோரின் சமய உணர்வும் அறநெறி நேர்மையும், அறிவியல் அறிவு மற்றும் இடையறாது நாளும் வளர்ந்து வருகின்ற தொழில் நுட்பக் கலை முன்னேற்றப் போக்குகளோடு அவர்களது செந்த வாழ்வில் கைகோர்துச் செல்ல முடியும்; இவ்வாறிருந்தால் நம்பிக்கை; கொண்டோர் உண்மையான கிறிஸ்தவக் கூட்டுணர்வோடு எல்லாவற்றையும் திறனாய்வு செய்யவும் விளக்கிப் பொருள் கூறவும் முடியும்.
திருப்பணிப் பயிற்சி நிலையங்களிலும் பல்கலைக் கழகங்களிலம் இறையியல் பாடங்களில் ஈடுபர்டிருப்போர் பிற அறிவுத் துறைகளில் புலமை பெற்ற மனிதர்களோடு தமது திறமைகளையும் கருத்துகளையும் பகிர்ந்த ஒத்துழைக்க முன்வரவெண்டம். இறையியல் ஆய்வ, இறைவெளிப்பாடின் வழியாகத் தெரியவரும் உண்மையைப் பற்றி ஆழந்த அறிவை அடைய முயலும் அதே நேரத்தில், அய்வு நிகழும் காலத்தோடும் தொடர்பு கொண்டிருக்கத் தவறிவிடுதல் ஆகாது; இங்ஙனம் பல்வெறு அறிவுத் துறைகளில் தேர்ச்சி பெற்றோர் கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றி இன்னும் ஆழமாக அறிய அது வழிவகுக்கும், தோழமையோடு கூடிய மேற்கூறிய ஒத்துழைப்பானது திருப்பணியாளரின் பயிற்சியைப் பொருத்தமட்டில் பெருந்துணையாக அமையும்; அதாவத கடவுள், மனிதர். உலகம் ஆகியவை பற்றியைதிருச்சபையின் படிப்பினையை நம் காலத்தில் வாழும் மக்களின் சிந்தனை முறைகளுக்குப் பெரிதும் பொருத்தமான விதத்தில் விளக்கியுரைக்க இவர்களால் இயலும்; இவ்விளக்கத்தை இன்றைய மனிதர்களும் உண்மையிலேயே மனமுவந்து ஏற்றுக்கொள்வர்.14 இது மட்டுமன்று, பொதுநிலையினரும் மிகப் பலர் இறையியல் பாடங்களில் தக்கப் பயிற்சி பெறவெண்டும் என்பத பெரிதும் விரும்பத்தக்கது; இவர்களில் பலர் இத்துறைகளில் நேரடியாக ஈடுபட்டு. அழ்ந்த ஆராய்ச்சிகள் புரிவதும் மிகச் சிறப்பாகும், எனவே, கிறிஸ்தவ மக்கள் அவர்கள் திருப்பணி நிலையினராயினும் சரி, பொதுநிலையினராயினும் சி தங்களுக்குரிய பொறுப்பைத் திறம்பட நிiவேற்ற வேண்டுமெனின் அவர்கள் எந்தெந்தத் துறைகளில் புலமை பெற்றிருக்கிறார்களோ, அந்தந்தத் துறைகளில் ஆய்வ நிகழ்த்தவும் சிந்தனை செய்யவும் தங்கள் கருத்துகளைத் தாழ்மையோடும் துணிபோடும் அறியச் செய்யவும் முறையான சதந்திரம் கொண்டுள்ளனர்; இச்சுதந்திரத்தை அனைவரும் மதிக்க வேண்டும்.15
இயல் 3
சமூகபொருளாதார வாழ்வு
63. பொருளாதரா வாழ்வின் சில பண்புகள்
சமூக பொருளாதார வாழ்விலும்கூட மனித அள்களின் மாண்பு, அவர்களது முழு அழைத்தல், மற்றும் சமுதாயம் அனைத்தினுடையவும் நலன் அகியவற்றை மதித்து. அவற்றை மேம்படைய்ச செய் வேண்டும். ஏனெனில் சமூக பொருளாதரா வாழ்வு அனைத்தின் ஊற்றும் மையமும் முடிவுமாக இருப்போர் மனிதரே.
சமூக வாழ்வின் மற்ற துறைகளைப் போல் இன்றைய பொருளாதராமும் தனிப் பண்புகளைக் கொண்டுள்ளது; மனிதர் இயற்கையின் மேல் அதிக ஆக்கம் பெற்று வருகின்றனர்; குடிமக்கள் குழுக்கள், நாடுகள் இவைகளுக்கிடையே உள்ள உறவுகளும் ஒன்றையொன்று சார்நது இருக்கும் நிலையும் வளர்ந்து உறுதிடைந்த வருகின்றன் பொருளாதாரத்தில். அரசியல் ஆட்சியாளரின் தலையீடும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பொருளாக்க முறைகளிலும், பொருள் நலன்கள் ;மற்றும் பணிகள் ஆகியவற்றின் பரிமாற்றம் சார்ந்த அமைப்பு முறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது; இதன் காரணமாக, மனித குடும்பம் சந்திக்க வேண்டிய பெருகிவரம் Nதைகளை நன்கு நிறைவு செய்யும் ஒரு கருவியாகப் பொருளாதாரம் மாறியுள்ளது.
இருப்பினும், கவலை கொணரும் கூறுகளும் இல்லாமலில்லை. எண்ணிறந்த மனிதர்கள், சிறப்பாகப் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள பகுதிகளில், பொருளாதாரா ஆதிக்கத்துக்கு அடிமையாகி விட்டவர்கள் போலத் தோன்றுகிறார்கள்; அவர்களது தனிவாழ்வு, சமூக வாழ்வு அனைத்தும் பொருளாதார முதன்மை உணர்விலேயே ஊறியிருக்கின்றன எனலாம்; இவ்வுணர்வு கூட்டுப் பொருளாதாரத்தை ஆதரிக்கம் நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் காணப்படுகிறது. நாம் வாழும் இன்று பொருளாதார வாழ்வின் முன்னேற்றம் பகுத்தறிவிற்கேற்ற முறையிலும், மனிதத் தன்மையின் படியும் வழிநடத்தப்பெற்று ஒருமுகப்படுத்தப்பெறின, அது சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முடியும். மாறாக பற்பல வேளைகளில் இவ்வேற்றத்தாழ்வுகளை அது பெருக்கத்தான் செய்கிறது ; ஏன் சிலவிடங்களில் அது எளியோர் சமூகநிலையில் இன்னும் அதி;கமாகப் பின்னோக்கிச் செல்ல காரணமாகிறது. ஏழைகளை இகழ்ச்சியோடு நோக்கத் தூண்டுதலாகிவிடுகிறது. கணக்கிலடங்கா மக்கள் மிக மிக இன்றியமையாதவைகூட இல்லாமல் இன்றும் இருக்க ஒரு சிலர் குறைந்த அளவு வளர்ச்சியடைந்துள்ள பகுதிகளில்கூட பெரும் செலவங்களால் வாழ்வு நடத்துகிறார்கள். பொருட்களை வீணடிக்கிறார்கள். ஆடம்பரமும் வறுமை மிகுந்த அவலநிலையும் அருகருகே நிலவுகின்றன. ஒரு சிலர் மட்டும் தீர்வுகள் எடுக்கும் அதிகாரத்தைப் பெருமளவில் கொண்டிருக்கின்றனர்; அதே நேரத்தில் வெகு பலர் கொந்தமாக முயறசி எடுத்து பொறுப்புடையவர்களாகச் செயலாற்றக்கூட உந்த ஒரு வாய்ப்பும் இல்லாதவாகளாய் உள்ளார்கள் அது தவிர, ஆள்தன்மை கொண்ட மனித நிலைக்கே ஒவ்வாத வாழ்க்கை மற்றும் வேலைச் சூழ்நிலைகளுக்குத் தள்ளப் படுகிறார்கள்.
இது போன்ற பொருளாதார மற்றும் சமூகச் சமநிலையின்மையானது வேளாண்மைத்துறை, தொழிலதுறை, பணித்துறை ஆகியவை இடையே காணப்படுகின்றது; அதுபோலவே, ஒரே நாட்டிலேயே அதன் பல்வேறு பகுதிகளிடையேயும் காணப்படுகின்றது. பொருளாதாரத் துறையில் அதிக வளாச்சி கண்டுள்ள நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்குமிடையே நாளுக்குநாள் அதிக முரண்பாடு வளர்ந்து வருகிறது: இது உலக அமைதிக்கே ஆபத்து விளைவிக்கக்கூடும்.
இத்தகைய சமமில்லா நிலைகளைக் குறித்து நம் கால மனிதர்கள் நாளுக்குநாள் அதிகத் தெளிவாக விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர்; இன்றைய உலகம் தன்னிடம் கொண்டுள்ள தொழில் நுட்ப பொருளாதாரத் துறைகளின் ஆற்றல்களைப் பயண்படுத்தி இந்த இழிநிலையை மாற்ற இயலும். அவ்வாறே மாற்றவும் வேண்டும் என அவர்கள் உறுதியுடன் நம்புகின்றனர்; ஆனால் இது நிகழ வேண்டுமெனில் சமூக பொருளாதார வாழ்க்கையில் பற்பல சீர்திருத்தங்கள் ஏற்பட வேண்டும்; மேலும் அனைவரின் மனப்பாங்கிலும் சிந்தனை முறையிலும் மாறுதல்கள் உண்டாக வேண்டும். இவை நிகழத்திருச்சபை காலப் போக்கிலே நற்செய்தி ஒளியின் துணையால் சரியான பகுத்தறிவிற்கேற்ற நீதி, நடுநிலை நேர்மை இவற்றின் அடிப்படைத் தத்துவங்களைத் தனி வாழ்விற்கும் என வகுத்தளித்துள்ளது. சிறப்பாக அண்மைக் காலத்தில் மேற்கூறிய அடிப்படைத் தத்துவங்களை அறிக்iயிட்டள்ளது. இன்றைய சூழ்நிலைகளைக் கண்முன்கொண்டு, திருச்சங்கம் பொருளாதார வளர்ச்சியின் தேவைகளைத் தனிப்பட்ட முறையில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு மேற்கூறிய அடிப்படை விதிகளை வலியுறுத்தவும், சில வழிவகைகளைச் சுட்டிகாட்டவும் விழைகிறது.1
பிரிவு 1
பொருளாதார வளர்ச்சி
64. பொருளாதார வளர்ச்சி மனிதருக்குப் பணிபுரியவே
வளாந்து வரும் மக்கள் பெருக்கத்தைச் சமாளிக்கும் பொருட்டும் மனுக்குலத்தின் பரந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் பொருட்டும், கடந்த காலங்களைவிட இன்று அதிக அளவில் வேளாண்மைத்துறை வழியாக விளைச்சலைப் பெருக்கவும் தொழிலதுறைப் பொருள்களை அதிகமாக உற்பத்தி செய்யவும் பிற பணித்துறை சார்ந்த சேவையைப் பெருக்கவும் முயறிசிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன் இது முறையே எனவே மேற்கூறிய வளர்ச்சிக்கு உதவுகின்றன அனைத்ததையுnமு ஊக்குவிக்க வேண்டும். இவ்வளர்ச்சிக்கு உதவுகின்ற அனைத்தையுமே ஊக்குவிக்க வேண்டும. இவ்வளர்ச்சிக்கு உதவுகின்றவற்றுள் பின்பருவனவற்றைக் குறிப்பிடலாம்; தொழில் நுட்பத் துறையில் ஏற்படும் முன்னேற்றம், புது முயற்சிகளில் இறய்கும் மனப்பாங்கு, புதிய தொழில் முயற்சிகளை உருவாக்கிப் பெருக்கு வதில் ஆர்வம், உற்பத்தி முறைகளைத் தழுவி அமைத்தல், உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளொரின் ஊக்கமான உழைப்பு, இவையெல்லாவற்றையுமே ஆதரிக்கவேண்டும். இத்தகைய உற்பத்தியலன் அடிப்படைநோக்கம், உருவாக்கப்படும் பொருள்களைப் பெருகச்செய்வத மட்டுமோ, ஊதியமோ, ஆதிக்கமோ அல்ல் மாறாக. மனிதருக்குப் பணிபுரிவதே ஆகும். இப்பணி மனிதரின் முழுமைப் பண்பை கருத்தில் கொண்டு நிகழும்; அதாவது அவர்களுடைய இவ்வுலகத் தேவைகள் அவர்களது அறிவு வாழ்வு அறநெறி வாழ்வு, அருள்நெறி வாழ்வு சமய வாழ்வு ஆகியவற்றின் கோரிக்ககைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்பணி நிகழவேண்டும். இங்கு 'மனிதர்' என நாம் கூறும்போது, ஒவ்வொரு மனிதரையும் எல்லா மனிதக் குழுக்களையும் குறிப்பிடுகின்றொம் இவர்களுக்கிடையே இன அடிப்படையிலோ உலக நிலப்பிரிவு அடிப்படையிலோ யாதொரு வேறுபாடும் காண்பித்தலாகாது. உனவேதான் பொருளாதாரச் செயல்பாடுகள் தமக்கெ உரிய முறைகள் மற்றம் விதிகளுக்கு ஏற்பச் செயல்படுத்தப்பெறும் அதே நேரத்தில், அவை அறநெறி அமைப்பின் எல்லைகளுக்கு உட்பட்டுச் செயல்படுத்தப்படவேண்டம்.2 இவ்வாறு கடவுள் மனிதர்களுக்காக வகுத்துள்ள திட்டம் நிறைவேறும்.3
65. பொருளாதார வளர்ச்சி மனிதருக்குக் கட்டுபட்டதே
பொருளாதரா வளர்ச்சி மனிதருடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே இருக்கவேண்டும். அதனை சிறுபான்மையான ஒருசில மனிதர்களின் சொந்த முடிவுக்கோ, மிதமிஞ்சிய பொருளாதரா ஆற்றல் கொண்டுள்ள குழுக்களின் விருப்பு வெறுப்பு சார்நத தீர்வுக்கோ, அரசியல் சமூகத்தின் தனிப்பெருக்கோ, அதிக சக்தி வாய்ந்த சில நாடுகளின் தனிப்பட்ட முடிவுக்கோ விட்டுவிடக்கூடாது. மாறாக எல்லா மட்டங்களிலும் மிகப் பெரும்பான்மையான மக்களும் பன்னாட்டுத் திட்ங்களைப் பொறுத்தமட்டில் எல்லா நாடுகளுமே பொருளாதார வளர்ச்சியை நெறிப்படுத்துவதில் செயலமுறைப் பங்குகொள்ளுதல் பொருத்தமாகும். இதேபோல் தனி மனிதருடையவும், மக்கள் தாமக விரும்பி ஏற்படுத்தும் ;குழுக்களுடையவும் தன் முயற்சிகளைப் பொது ஆட்சியாளர்களின் செயல்பாடுகளோடு ஒருங்கிணத்து. அவற்றைத் தக்க முறையில் ஒன்றோடொன்று இணக்கமுடன் ஒருமுகப்படுத்த வேண்டும்.
பொருளாதார வளர்ச்சியைத் தனி மனிதர்களின் பொருளாதார ஈடுபாட்டின் ஒருவிதத் தன்னியக்கப் போக்கிற்கு மட்டுமோ, பொது ஆட்சியாளர்களிடம் மட்டுமோ விட்டுவிடக் கூடாது. எனவே, தன்னுரிமைக்குத் தவறான பொருள் கற்பித்து, இன்றியமையது செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்களைத் தடுத்து நிறுத்துகின்ற கொள்கைகளைத் தவறெனக் கண்டிக்க வேண்டும்; அதுபோலவே தனி மனிதருடையவும் குழுக்களுடையவும் அடிப்படை உரிமைகளைக் கூட்டு உற்பத்தி அமைப்பிற்கு அடிபணியச் செய்யும் கொள்கைகளையும் தவறெனக் கண்டிக்க வேண்டும்.4
மேலும், குடிமக்கள் தங்களது சமூகத்தின் உண்மையான வளர்ச்சியில் தம்மால் இயன்ற அளவு உதவுவது தம் உரிமையும் கடமையும் ஆகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; குடிமக்கள் கொண்டிருக்கும் இவ்வுரிமையையும் கடமையையும் அரசியல் ஆட்சியாளர்களும் ஏற்று மதிக்கவேண்டும். குறிப்பாக, பொருளாதார வளாச்சியில் பனிதங்கியுள்ள நாடுகளில், எல்லா ஆற்றல்களையும் வளர்ச்சி பணிக்குழுப் பயன்படுத்தி உடனடியாகச் செயல்பட வேண்டிய இப்பகுதிகளில் தங்கள் செலவங்களைப் பயன்தரா வண்ணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் பொதுநலனை மிகப்பெரும் ஆபத்தக்கு உள்ளாக்குகிறார்கள். அது போலவே, பிறநாடுகளுக்குக் குடிபெயர்வதற்கான சொந்த உரிமை நிற்க தங்கள் சமுதாயத்திற்குத் தேவைப்படுகின்ற பொருளாதார வாய்ப்புகளையும் அருள்நெறி சார்பான உதவி வாய்ப்புகளையும் கிடைக்ககாமற் செய்பவர்களும் பொதுநலனுக்குப் பேராபத்து விளைவிக்கின்றார்கள்.
66. பெரும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும்
நீதியும் நடுநிலை நேர்மையும் எழுப்புகின்ற கோரிக்ககைகளை நிறைவு செய்ய வேண்டுமெனின் தனி மனிதரையும் சமூகங்களையும் அநீதியாகப் பாகுபடுத்துவதற்கு அடிப்படையாயுள்ள மாபெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவிலி ஒழிக்கும்படியாகத் தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும்; இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் ஒழிப்பதற்கு முயற்சியெடுக்கும்போத தனி மனிதரின ஆள்நிலைசார்ந்த உரிமைகளையும் மக்கள் குழுக்களின் தனிப் பண்பினையும் மதிக்கத் தவறிவிடல் தகாது. அதுபோலவே. உழவுத் தொழிலைப் பொறுத்தமட்டில் எழும் தனிப்பட்ட சிக்கல்களையும் கண்முன் கொள்ளவேண்டும்; பற்பல பகுதிகளில் வேளாண்மைப் பொருள்களை விளைவித்தலிலும் அவ்ற்றை விற்பனையாக்குவதிலும் இத்தகையச் சிக்கல்கள் எழலாம். எனவே விளைச்சலைப் பெருக்கி விலையாக்கவும், வேளாண்மை முறையைச் சார்ந்த வளாச்சியையும் புதுப்பணிகளையும் நடைமுறைக்குக் கொணர்ந்திடவும், நீதிக்குகந்த ஊதியம் பெற்றிடவும் உழவர்களுக்கு உதவியளித்தல் வேண்டும். இல்லாவிடின், பலகாறும் நாம் காண்பது போன்று சமூகத்தில் தாழ்ந்தவர்கள் எனும் இழிநிலையில்தான் அவாகள் இருப்பார்கள். உழவர்களும், அவர்களுள் குறிப்பாக இளைஞர்களும், தங்களின் தொழில் திறமையை வளரச்செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். இல்லையெனில், வேளாண்மைத் துறையில் முன்னேற்றம் ஏற்படமுடியாது.5
நீதியும் நடுநிலை நேர்மையும் எழுப்பும் இன்னொரு கோரிக்கை என்னவென்றால்: வளர்ந்துகொண்டே போகும் பொருளாதாரத் துறையோடு ஒருங்கிணைந்து செல்கின்ற இடப்பெயர் பண்பானது தனி மனிதருடையவும் அவர்களது குடும்பங்பகளின் வாழ்வையும் பாதுகாப்பின்றி இடருக்குள்ளாக்காத விதத்தில் முறைப்படுத்தப்படவேண்டும். வேறுநாடு அல்லது மண்டலத்திலிருந்து வந்து தங்கள் உழைப்பு மூலம் ஒரு நாட்டின் அல்லது மண்டலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் தொழிலாளர் பலர் இருக்கின்றார்கள் இவர்களுக்கு எதிராக, அவர்கள் ஊதிய நிலை மற்றும் உழைப்பு நிலைகளில் எந்தவிதமான அநீதியான பாகுபாடும் காட்டாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் சிறப்பாகப் பொது ஆட்சியாளர்கள், இத்தொழிலாளர்களைப் பொருள் உற்பத்தி செய்யும் வெறும் கருவிகளாக் கருதாமல் மனித ஆள்களாக மதிக்க வேண்டும்; அவர்கள் தங்கள் குடும்பத்தைத் தங்களோடு வைத்துக்கொள்ளவும் வழிவகை செய்யவேண்டும். மேலும் இவர்களை ஏற்றுக்கொள்ளும் மக்களினத்தின் அல்லது மண்டலத்தின் சமூக வாழ்வில் இவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்டுவதற்கு உதவி செய்யவேண்டும். இருப்பினும் முடிந்த ;வரையில் அவர்கள் தங்கள் சொந்த நாட்டுப்பகுதிகளிலெயே வேலை செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
பல பொருளாதரா அமைப்புகளில் இன்று மாற்றம் புள்பட்டுக் கொண்டிருக்கிறது. இயந்திரங்களின் துணை கொண்டு பொருள் உற்பத்தி செய்யும் புதிய தொழில்துறைச் சமூகங்களில் இம்மாற்றம் கண்கூடு. நிலைமை இவ்வாறு இருப்பதாலும், ஒவ்வொருவருக்கும் போதுமான மற்றும் பொருத்தமான வேலை அளித்தல், அஃதோடு அந்த வேலையைச சரிவரச் செய்வதற்குத் தேலையான தொழில் நுட்பப் பயிற்சி மற்றும் சிறப்புப் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தல் போன்ற காரியங்களில் கவனம் செலுத்தவேண்டும். மேலும் இக்கட்டான சூழ்நிலைகளில் உழல்வோருக்க, குறிப்பாக நோயாலோ முதிhந்த வயதாலோ இந்நிலையிலிருப்போருக்கு, தேவையான பராமரிப்புக்கம் அவர்களது மனித மாண்புக்கம் ஊறுவிளையா வண்ணம் காப்புறுதி அளிக்கப்பட வேண்டும்.
பிரிவு 2
சமூக-பொருளாதார வாழ்க்கை முழுவதற்குமான
சில தத்துவங்கள்
67. தொழில், தொழில் சூழ்நிலைகள், ஓய்வு
பொருள்களை உருவாக்கிப் பரிமாற்றம் செய்வதற்கு, அல்லது பொருளாதராம் வார்நத பணிகளைச் செய்பதற்குத் தேரல மனித உழைப்பாகும். இவ்வாற செலவிடப்படும் மனித உழைப்பு பொருளாதரல வாழ்வின் னற்ற கூறுகளைவிட மதிப்பு வாய்ந்தது, மற்ற கூறுகள் யாவும் வெறும் கருவிகளே.
மனித உழைப்பு சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்டாலும் சரி அல்லது வேலைவழங்குவோரோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்டாலும் சரி, அது ஆள் தன்மை கொண்ட மனிதரிடமிருந்து நோடியாக ஊற்றெடுக்கிறது. மனிதர் தம் உழைப்பால் இயற்கைப் பொருள்களின் மேல் ஒருவகையில் தம் முத்திரையைப் பதித்து, அவைகளைத் தம் உள விருப்பத்திற்கு அடிபணியச் செய்கின்றனர். பொதுவாக மனிதர் தம் உழைப்பால் தம்மையும் தம் குடும்பத்தாரையும் காப்பற்றுகின்றனர். தம் சகோதர சகோதரிகளாகிய மனிதரோடு தம்மையே இணைத்துக் கொண்டு அவாக்ளுக்குப் பணிபுரிகின்றனர்; இதே உழைப்பால் எண்மை அன்பைச் செயல்படுத்தலாம்; கடவுளது படைப்பை நிறைவுக்கு இட்டுச் செல்லும் பணியில்தம் ஒத்துழைப்பை நல்கலாம். இயேசு கிறிஸ்து நாசரேத்தில் தாமே தமது கைகளால் உழைத்ததனால் உழைப்புக்கு உயர்ந்ததொரு மாண்பைக் கொணர்ந்துள்ளார்; எனவே, மனிதர் தம் உழைப்பைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கும்போது உண்மையில் அதே கிறிஸ்துவின் மீட்புப் பணியுடன் இணைந்துள்ளனர் என் நாம் கொளளுகின்ளொம். இதிலிருந்து ஒவ்வொரு மனிதருக்கும் நம்பகமான முறையில் உழைப்பதற்கான கடமையும் அத்துடன் உழைப்பிற்கான உரிமையும் பிறக்கின்றன் அதுபோலவே மக்கள் போதிய அளவு வேலை வாய்ப்பு அடையச் சமூகத்தில் நிலவும் சூழ்நிலைகளுக்குத் தகுந்த விதத்தில் உதவும் கடமையைச் சமூகம் கொண்டுள்ளது. ஒவ்வொருவருடைய தொழில் வகை, பொருள் உற்பத்தித் திறன், தொழிலகத்தின் சூழ்நிலைகள் பொதுநலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அNது நேரத்தில் உழைப்பிற்கு வழங்கப்படும் ஊதியம் முறையானதாக அமைய வேண்டும்; அதாவது, மனிதர் தாமும் தம்மைச் சார்நதிருப்பவத்களும் தம் வாழ்க்கைக்கத் தேவையான பொருளாதார, சமூக, பண்பாட்டு, அருள்நெறி நலன்களைத் தகுந்த முறையில் பேணுவதற்கு இன்றியமையாதவற்றைப் பெற்றுக் பொள்வதற்க அந்த ஊதியம் போதுமானதாக இருக்க வேண்டும்.26
பொருளாதாரச் செயல்பாடு மனிதர்களின் ஒன்றித்த உழைப்பாலேயே பெரும்பாலும் உருவாவதால், அதை எந்த ஓர் உழைப்பாளிக்கும் கேடு விளைவிக்கும் வகையில் அமைப்பதும் செயல்படுத்துவதும் கேடு விளைவிக்கும் வகையில் அமைப்பதும் செயல்படுத்துவதும் நீதிக்கு ஒவ்வாதது. மனிதத் தன்மையற்றது. ஆனால் உழைப்பாளிகள் தங்கள் உழைப்பிற்கே ஒரு வகையில் அடிமைகள் ஆக்கப்படுவது இன்று கூட அடிக்கடி நாம் காணும் ஒரு நிகழ்ச்சி. பொருளாதார விதிகள் என அழைக்கப்படுபவை மேற்கூறிய பொருள் உற்பத்தி முறை முழுவதுமே மனித ஆள்களின் தேவைகளுக்கம் ஏற்றவிதத்தில் அமைக்கப்பட வேண்டும்; உழைப்போர் எப்பாலவர் என்ததையும், அவர்தம் வயதையும் எப்போதும் கருத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக குடம்பத் தலைவிகளைப் பொறுத்த வரையில் தனிக் கவனம் செலுத்தப்பட வேண்டும். உழைப்பாளிககள் தங்கள் தொழிலைச் செய்வதன் வழியாகவே தம் சொந்தத் திறமைகளையும் தம் ஆளுமையையும் வளாச்சியுறச் செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
68. தொழிலை நடத்துவதிலும் பொதுவான பொருளாதார அமைப்பலும் பங்குகொள்ளல் தொழில் துறையில் ஏற்படும் மோதல்கள்.
பொருளாதார ஆக்க முயற்சிகளில் ஒன்றிணைந்து ஈடுபட்டிருப்பவர் மனித ஆள்களாவர்;; அதாவது, கடவுளின் உரவில் படைக்கப்பட்ட, சுதந்திரமும் தன்னாட்சி உரிமையும் கொண்டு மனிதர்கள் பொருளாதார ஈடுபாடுகளில் ஒன்று சேர்க்கிறார்கள். எனவே உடைமையாளர், வேலை வழங்குவோர், வேலை மேலாளர் மற்றும் உழைப்பாளிகள் ஆகியோர் ஒவ்வொருவரின் தேவையான ஒருமித்த உhயல்பாட்டுக்கு ஊறுவிளைவிக்காமல், தொழில் மேலாண்மையில் யாபரும் செயல் முறையில் பங்கு கொள்வதை ஊக்குவித்து. மேம்படுத்த வேண்டும்;; இத்தகைய பங்கேற்பு எம்முறைகளில் நிகழவேண்டும் என்பது தகுந்த முறையில் நிர்ணயிக்கப்பெற வேண்டும்7. ஆனால் பொருளாதராம் மற்றும் சமூகம் ஆகியவற்றில் தாக்கம் ஏற்படுத்துகின்ற காரியங்களைப் பற்றிய முடிவுகள் பெரும்பாலும் தொழிலகத்தில் எடுக்கப்படுவதில்லை;; மாறாக, அதைவிட உயர்ந்த மட்டத்தில் உள்ள நிறுவன அமைப்புகளாலேயே எடுக்கப்பபடுகின்றன்; இம்முடிவுகள் தொழிலாளர்களுடையவும் அவர்களது பிள்ளைகளுடையவும் எதிர்காலத்தை நிர்ணயிப்பவனவாய் உள்ளன்; எனவேதான், தொழிலாளர்கள் தாமே நேரடியாகவேர் அல்லது காங்கள் சுதந்திரமாகத் தோந்தெடுத்த பதிலாள்கள் வழியாகவோ மேற்கூறிய முடிவுகளை எடுப்பதில் செயளவவில் பங்குபொள்ள வேண்டும்.
தொழிலாளர்கள் சுதந்திரமாகத் தமக்கெனச் சங்கங்கள் அமைக்கும் உரிமை மனித ஆளுக்குரிய அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இச்சங்கஙகள் உண்மையிலேயே தொழிலாளர்களின் கருத்துகளை எடுத்துரைக்க உரிமை கொண்டனவாகவும், பொருளாதார வாழ்க்கையைச் சரியான முறையில் அமைக்க உதவக் கூடியனவாகவும் இருக்க வேண்டும். பழிவாங்கு நடவடிக்கைக்கு ஆளாகா வண்ணம் இச்சங்கங்களின் பணியில் சுதந்திரமாகப் பங்கு கொள்ளவும் தொழிலாளர்களுக்கு உரிமை உண்டு;; இதுவும் மித ஆளுக்கரிய அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சுமூக பொருளாதார வளர்ச்சியோடு மேற்கூறியவாறு அமைப்பு முறையான பங்கேற்பு நிகழுமென்றால் அனைவரும் தங்கள் அலுவல் பற்றியும் கடமை பற்றியும் நாளுக்கு நாள் அதிகமாக விழிப்புணர்சு பெறுவர்;; இவ்வாறு அவர்கள் எல்லாரும் தங்கள் திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ற வகையில் சமூக பொருளாதார முன்னேற்றப் பணி முழவதிலும் அனைத்துலகப் பொது நலனை உருவாக்குவதிலும் தமக்கும் பங்குண்டு என்பதை உணர்ந்து கொள்வர்.
சமூக பொருளாதார மோதல்கள் எழும்போதும் அமைதியான அரு முடிவுக்கு வருமாறு முயற்சிகள் எடுக்க வேண்டும். மோதலில் ஈடுபட்ட திறத்தாருக்கிடையே மனம் திறந்து உரையாடல் நிகழுமாறு எப்போதும் முதன்முதலில் ஆவன செய்யவேண்டும் என்றாலும், தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளைச் செயல்படுத்தும் பொருட்டும் செய்கின்ற வேலைநிறுத்தம் இன்றைய சூழ்நிலைகளில்கூட, கடைசியானதாய் இருப்பினும், தேவையான ஒரு வழவகையாக இருக்கலாம் ஆயினும் ஓர் உடன்படிக்கை அடையும் பொருட்டு, எவ்வறவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில், சமாதான முயற்சிக்கும் உரையாடலுக்கும் ஏற்ற வழிகளை மீண்டும் தொடர வேண்டும்.
69. உலக நலன்கள் அனைத்து மனிதருக்காகவமே உள்ளன.
ஒவ்வொரு மனிதருக்கும், மக்கள் யாவருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகவே கடவுள் மண்ணுலகையும் அதில் உள்ள அனைத்தையும் ஆக்கினார்;; எனவே படைப்பு நலன்கள் அனைத்தும் நீதியை வழிகாட்டியாகவும் அன்பைத் துணையாகவும் கொண்டு, அடிப்படையில் சரிசமமாக எல்லா மனிதருக்கும் சென்றுசேர வேண்டும்.8மக்கள் உடைமைகளைக் கொண்டிருக்கும் முறையில் வேறுபடலாம்;; இவை நாட்டு மக்களின் சட்டப்படியான நிறுவன அமைப்புகளுக்கு இயைந்த விதத்தில், பல்வேறுபட்டதும் மாறுபடக் கூடியதுமான சூழ்நிலைகளின் காரணமாக எழுந்தனவாக இருக்கலாம்;; உடைமையைக் கொண்டிருக்கும் முறை எதுவாயினும் சரி, மண்ணுலகின் நலன்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானலை என்பதை எல்லாரும் கருத்தில் பொள்ளவேண்டும். இந்நலன்களைப் பயன்படுத்தும் மனிதர்கள் முறையான வழியில் தாம் உடைமையாகக் கொண்டிருக்கும் பொருள்களைத் தமக்கே உரியனவாக மட்டுமன்றி எல்லாருக்கும் பொருவானவையாகவும் கருதவேண்டும்;; அதாவது, தமது உடமைகள் தமக்கு மட்டுமன்றி, பிறருக்கும் பயன்படுவதற்காகவே உள்ளன எனக் கொள்ளவேண்டும்.9 மற்றும் உலக நலன்களுள் தங்கள் குடும்பங்களுக்கும் போதுமானதொரு பங்கை உடைமையாகக் கொண்டிருக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. திருச்சபைத் தந்தையர்களும் மற்றும் மறை வல்லுநர்களும் இதே கருத்தையே வெளிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு;; இக்கடமை தமமிடமிருக்கும் தேவைக்கு விஞ்சிய பொருள்களிலிருந்து உதவுவதில் மட்டுமே அடங்கியிருக்கவில்லை என்பது அவர்களது போதனை.10 ஒருவர் மிகப் பெரும் இடாநிலையில் உழன்றால் அவர் மற்றவர்களின் செல்வத்திலிருந்து தமக்குத் தேவையானதை எடுக்கும் உரிமை பெற்றுள்ளார்.11 பட்டினியால் இவ்வுலகில் பல மக்கள் அவதியுறுவதைக் கரத்தில் கொண்டு, திருச்சங்கம் திருச்சபை தந்தையரின் கீழ்வரும் கூற்றைத் தனிமனிதர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நினைவூட்டுகிறது. ''பசியால் மடியும் மனிதருக்கு உணவளி;; ஏனென்றால் அவர்களுக்கு உணவளிக்க விட்டால் நீ அவாகளைக் கொன்றவனாவாய்''12 இக்கூற்றை நினைவில் கொண்டு ஒருவர் ஒருவருக்கு உதவியாக இருந்து தனி மனிதரும் ஆட்சியாளரும் தத்தம் சக்திக்குகேற்ப தமது நலன்களைப் பிறரோடு பகிர்ந்துகொண்டு பிறருக்கு உதவுதம வகையில் அவற்றைப் பயன்படுத்த வேண்டுமெனத் திருச்சங்ம் ஆர்வத்துடன் வலியுறுத்திக் கோருகினறது; இத்தகை உதவியானது, குறிப்பாக தனி மனிதரும் நாடுகளும் தமக்குத் தேவையானவற்றைத் தாமாகவே அடையும் பொருட்டும் முன்னேற்றம் காணும் பொருட்டும் அளிக்கப்பட வேண்டுமெனச் சங்கம் விழைகின்றது.
பொருளாதராத் துறையில் பினதங்கிய சமுதாயங்களில், அவற்றின் ஒவ்வொரு உறுப்பினருடையவும் மிக இன்றியமையாதத் தேவைகள் சமூக உறவுமுறையின் அடிப்படையிலான தனிப்பட்ட பழக்கவழக்கங்களுக்கும் மரபுகளுக்கும் ஏற்பவே பலகாறும் நிறைவு பெறுகின்றன: இவ்வாறு, உலக நலன்கள் அனைவருக்கும் பொதுவானவை என்னும் தத்துவம் இச்சமுதாயங்களில் ஓரளவு செயலாக்கம் பெறுகிறது. இக்காலப் புதுத் தேவைகளை நிறைவு செய்யாத சில பழக்க வழக்கங்கள் மாற்றப்படவே முடியாது என்னும் எண்ணத்தைத் தவிர்க் வேண்டும்;; ஆனால் மற்றொரு புறமோ, மதிக்கத் தக்க பழக்க வழக்கங்கள் உளவாயின் அவற்றிற்கு எதிராக மதியற்ற முறையில் செயல்படலாகாது; ஏனென்றால் இத்தகைய பழக்கவழக்கங்கள் இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொருத்தமான முறையிலவ் தழுவியமைக்க்படுமாயின் அவை மிகவம் பயனுள்ளவையாகத்தான் இருக்கும். இதுபோலவே பொருளாதாரத் துறையில் மிகவும் முன்னேறியிருக்கும் நாடுகளில், காப்பீடு, சமூக இடர் காப்புறுதி ஆகியவற்றிற்கான சமூக நிறுவனங்களைக் கொண்ட ஒரு தொடர் அமைப்பு பொருள் நலன்கள் அனைவருக்கும் பொதுவானவை எனும் தத்துவத்தைக் செயல்படுத்த ஓரளவு துணைபுரிய இயலும். மேலும், குடும்ப, மற்றும் கமூகப் பணிகள் சிறப்பாகப் பண்பாட்டிற்கும் கல்விக்கும் உதவும் அமைப்புகள் இன்னும் அதிகமதிகம் வளர்க்கப்பட வேண்டும். இவ்வமைப்புகளை நிறுவும்போது, சமுதாயத்தைப் பொறுத்தமட'டில் குடிமக்கள் சோம்வேறிகளாய் மாறிவிடாமலும், தாங்கள் ஏற்றுக்கொண்ட அலுவலில் பொறுப்புணர்ச்சியற்றவர்களாய் ஆகிவிடாமலும், பணியேற்க மறுப்பவர்களாய் இராதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
70. பொருள்களை முதலீடு செய்தலும், நிதித்துறையும்
இக்கால மக்களுக்கும் வருங்கால மக்களுக்கும் வேலை வாய்ப்புகளையும், போதிய வருவாயையும் அளிக்கும் முறையில் வளங்கள் முதலீடு செய்யப்படவேண்டம். இம்முதலீடகளையும், பொருளாதாரத் திட்டங்களையும் பற்றிய முடிவுகள் எடுக்கும் எல்லாரும் அவர்கள் தனிமனிதர்களோ, குழுக்களோ, பொது அதிகாரிகளோ எவராயினும் சரி - மேற்கூறிய குறிக்கோள்களைக் கருத்தில் கொள்ள கடமை கொண்டுள்ளனர்;; மேலும் அவர்கள் தங்கள் பெரும் பொறுப்பையும் உணரவேண்டும். இப்பொறுப்பு யாதெனில்: ஒருபுறம் தனிமனிதர்களும் சமூகம் முழவதுமே நலமானதொரு வாழ்வு நடத்த தேவையானவைகளைச் செய்துகொடுப்பதற்கு விழிப்புடன் இருத்தல்;; மறுபுறமோ, வருங்கால நிலைகளை முன்னுணர்ந்து, தனியாருடையவும் குழுக்களுடையவும் இன்றைய பொருள் நுகர்வுத் தேவைகளுக்கும் வருங்காலத் தலைமுறையைக் கண்முன் கொண்டு வளங்களை முதலீடு செய்வதற்கான தேவைகளுக்குமிடையே நேர்மையான சமநிலையை ஏற்படுத்துதல். அதுபோலவே பொருளாதராத் துறையில் அவ்வளவாக முன்னேறாத நாடுகள் மற்றும் மண்டலங்களின் உடனடிக் தேவைகளையும் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டியது இன்றியமையாதது. பணத்துறை சார்ந்த காரியங்களில் தங்கள் சொந்த நாட்டின் நலனுக்கோ, பிற நாடுகளின் நலனுக்கோ ஊறு நேராவண்ணம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் பண மதிப்பில் ஏற்படும் மாற்றங்களால் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் அநீதியாக இழப்புக்கு உள்ளாகாதிருக்குமாறு கவனம் எடுக்க வேண்டும்.
71. சொத்துரிமை பெறாமல் பொருள்கள் மீது தனி ஆதிக்கம், பெரும் பண்ணைகள்
சொத்தும் உலகப் பொருட்களின் மீது மனிதர் கொண்டுள்ள பிற தனி ஆதிக்க முறைகளும் மனித ஆளுமையை வெளிப்படுத்தத் துணை செய்கின்றன்; மேலும் சமூகத்தையும் பொருளாதாத்தையும் சார்ந்த தமது கடமைகளை மனிதர் செயல்படுத்த அவை வாய்ப்பளிக்கின்றன்; இக்காரண்ங்களின் பொருட்டு, தனிமனிதர்களும் சமூகங்களும் வெளியுலகச் சொத்துக்ளின் மீது ஒருவித ஆதிக்கம் பெற வழிபகுப்பது தேவை.
தனிச் சொத்துரிமை அல்லது வெளியுலகப் பொருள்களின் மீது மனிதர் ஓரளவு பெறுகின்ற தனி ஆதிக்கம் ஒவ்வொரு மனிதருக்கம் தனியாகவம் அவரது குடும்பத்திற்கும் இன்றியமையாத தன்னாட்சியுர்மைக்கு உதவுகின்றது;; இத்தகைய தனிச் சொத்தையும் தனி ஆதிக்கத்தையும் மனித சுதந்திரத்தின் நீட்டிப்பாக நாம் கருதவேண்டும். இறுதியாக தனிச் சொத்தும் தனி ஆதிக்கமும் ஒவ்வொருவதம் தத்தம் பணியையும் கடமையையும் நிறைவேற்றத் தூண்டுகோலாய் இருப்பதனால் அவை குடிமை உரிமைகளுக்குத் தேவையான ஓர் அடிப்படையாகவும் அமைகின்றனர்.13
இத்தகைய தனி ஆதிக்கம் அல்லது தனிச் சொத்துமுறை இன்று வௌ;வேறு வடிவங்களில் நிலவுகிறது;; இவ்வடிவங்கள் நாளுக்கு நாள் இன்னம் அதிகமாக வேறுபட்டும் வருகின்றன. சமுதாயம் மக்களுக்கு அளிக்கின்ற சமூக நிதிகள்,உரிமைகள் மற்றும் சேவைகள் ஒருபுறம் இருந்தாலும் சுட மேற்கூறிய தனி ஆதிக்கம் அல்லது தனிச் சொத்து முறையின் எல்லாவித வடிவங்களும் மக்களுப் பாதுகாப்பு அளிக்கச் சிறந்த ஆதாரங்களாகவே கருதப்படுகின்றன. இவண் குறிக்கப்படும் தனிச் சொத்துரிமை வடிவங்கள் பொருள் சார்ந்த சொத்துக்களை மட்டுமன்றி, பொருள் சாராச் சொhத்துக்களாகிய தொழில் திறமை போன்றவற்றையும் துறிப்பனவாகும்.
தனிச் சொத்துரிமை, பல்வேறு வடிவங்களைக் கொண்ட பொதுச் சொத்துரிமைக்கு முரண்பட்டதல்ல. ஆனால் பொத நலன்களின் தேவைகளுக்கு ஏற்பவும், அந்நலன்களின் வரம்வுக்கு உட்பட்டும், நியாயமான இழப்பீடு வழங்கியதற்குப் பிறகுமே தகுதி வாய்ந்த ஆட்சியாளர் மட்டும் பொருள்களைப் பொதுச் சொத்தாக மாற்றல் தகும். மேலும் பொது நலனுக்கு எதிராக யாரும் தனிச் சொத்தைப் பயன்படுத்தாவண்ணம் காப்பதும் பொது ஆட்சியாளர்களைச் சாரும்.14
தனிச் சொத்து தன் இயல்பிலேயே சமூகப் பண்பையும் கொண்டுள்ளது: இச்சமூகப் பண்பு, உலக நலன்கள் எல்லா மக்களுக்கும் பொதுவானவை எனும் தத்துவத்தின் அடிப்படையினின்று பிறக்கின்றது.15 இச்சமூகப் பண்பு மதிக்கப்படாவிட்டால் சொத்து, பேராசை மற்றும் பெரும் பூசல்கள் தோன்றுவதற்குப் பன்முறையும் வாய்ப்பாகி விடலாம்;; இவ்வாறு சொத்துரிமையை எதிர்ப்போருக்கு இவ்வுரிமையில் குற்றம் காண இது ஒரு சாக்குப் போக்காக அமைந்துவிடும்.
பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள பலபகுதிகளில் பெரும்பரப்பளவு கொண்ட அல்லது மிகப் பெருமளவில் பரந்து விரிந்த நாட்டுப்புற நிலங்கள் காணக்கிடக்கின்றன்; ஆனால் அவை குறைவாகவே பயிரிடப்படுகின்றன. அல்லது ஆதாயத்திற்காகப் பயிரிடப்படாமலேயே கிடக்கின்றன. மாறாக, பெரும்பாலான மக்கள் நிலமே இல்லாமலிருக்கினறனர்;; அல்லது குறைந்த அளவு நிலமே அவர்களிடம் உள்ளது. மறுபறம் நிலத்தின் விளைச்சல் பெருக்கம் உடனடியாகத் தேவையானதென்பது தௌ;ளத் தெளிவாக உள்ளது. இப்பெரு நில உடைமைகளால் வேலைக்கு அமர்த்தப்படுவோர் அல்லது நிலத்தின் ஒருபகுதியைக் குத்தகைக்குப் பயிர்செய்வோர் மனிதப் பண்பிற்கேற்காத ஊதியமோ வருவாயோதான் பன்முறையும் பெறுகின்றனர்;; அவர்களுக்குத் தகுந்ததோர் இருப்பிடமில்லை;; இடைத் தரகர்களம் அவர்களைச் சுரண்டுகின்றனர் எவ்வித பாதுகாப்புமின்றி அவர்கள் எந்த அளவுக்கு அடிமைகள் போல வாழ்கின்றனர் என்றால் தாங்களாகவே கடமையுணர்ச்சியோடு செயலாற்றுவதற்கான ஏறக்குறைய எல்லா வாய்ப்புகளும் அவர்களிடமிருந்து பறிக்கப்டுகின்றன்; மனிதப் பண்பாட்டில் எவ்வித வளாச்சியும் அவர்கள் அடைய முடிவதில்லை; சமூக அரசியல் வாழ்வில் பங்கெடுக்கவும் அவர்களுக்குத் கூடுவதில்லை. எனவே வௌ;வேறான சூழ்நிலைகளுக்கேற்பக் கீழ்வரும் சீர்திருத்தங்கள் தேவையாகின்றன்; வருவாயை வளர்க்க வேண்டும்;; வேலைச் சூழ்நிலைகளைச் சீர்திருத்த வேண்டும்;; வேலையைப் பொறுத்த மட்டில் அதிகப் பாதுகாப்பு அளிக்க வேண்டம்;; தாமே விரும்பிச் செயலாற்றத் தூண்டுதல் தரவேண்டும்;; ஏன் போதுமான அளவு பயிரிடப்படா நிலங்களை நல்ல விளைச்சல் நிலங்களாக மந்ற இயல்வோரிடம ;அளிக்க வேண்டுமு; தாமே விரும்பிச் செயலாற்றத் தூண்டுதல் தரவேண்டும்;; ஏன், போதுமான அளவு பயிரிடப்படா நிலங்களை நல்ல விளைச்சல் நிலங்களாக மற்ற இயல்வோரிடம் அளிக்க வேண்டும். இவ்வாறு அளிப்பதாக இருந்தால் அவர்களுக்குத் தேவையான மூலதனமும் கருவி வகைகளும் குறிப்பாகக் கல்வி உதவிகளும் கூட்டுறவுச் சங்கமுறையில் அமைப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் அளிக்கப்பட வேண்டும். தனியார் உடைமைகள் பொதுநலத்திற்காகப் பறிமுதல் செய்யப்படம் போதெல்லாம் எல்லாச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு நடுநிலை நியாயமான இழப்பீடு கணக்கிடப்பட வேண்டும்.
72. சமூக - பொருளாதார செயல்பாடும் கிறிஸ்துவின் ஆட்சியும்
இன்றைய சமூக - பொருளாதரா முன்னேற்றத்தில் செயல் முறையில் பங்கு கொண்டு, நீதி அன்பு ஆகியவற்றை வளர்ப்பதற்காகப் போராடும் கிறிஸ்தவர்கள் மனித குலத்தின் வளமைக்கும் உலக் அமைதிக்கும் தாங்கள் பெரிதும் உதவியளிக்க முடியும் என்பதை உணர வேண்டும். இச்செயலகளில் ஈடுபடும் போது தனி மனிதர் என்ற முறையிலும் குழுக்கள் என்ற முறையிலும் அவர்கள் ஒளிமயமான முன்மாதிரி வழங்குவார்களாக, மிகவும் இன்றியமையாத திறமையும் அனுபவமும் அவர்கள் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு, கிறிஸ்துவுக்கும் அவரது நற்செய்திக்கும் உண்மையாயிருந்து, இவ்வுலகு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடும்போது தேசிய ஒழுங்குமுறையை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்;; இவ்வாறு செயல்பட்டால் அவர்களது தனிவாழ்வு, பொதுவாழ்வு முழுவதுமே மலைப் பொழிவின் உள்;ணர்விற்கேற்ப, சிறப்பாக ஏழ்மை உணர்வில் தோய்ந்ததாய் அமைந்திருக்கும்.
எவரெவர் கிறிஸ்துவுக்குச் செவிமடுத்து முதனமுதலில் இறையாட்சியை, தேடுகின்றார்களோ அவர்கள் ஆங்குத் தம் சதோதர சதோதரிகள் அனைவருக்கும் உதவி புரியத் தேவையான அதிக ஆற்றலும் தூய்மையும் கொண்ட அன்பைக் கண்டு கொள்கிறார்கள்;; மேலும், இந்த அன்பின் உந்துலால் தூண்டப்பட்டு நீதிப்பணியை நிறைவேற்றிடவும்16அவர்கள் முன்வருவார்கள்.
இயல் 4
நாட்டு அரசியல் வாழ்வு
73. இன்றைய அரசியல் வாழ்வு
நம் காலத்தில், மக்கள் சமூகங்களில் நிறுவனங்களிலும் மற்றும் அமைப்பு முறைகளிலும்கூட அழ்ந்த ;மாற்றங்கள் ;நிகழ்வதைக் காண்கிறோம்;; இம்மாற்றங்கள் மக்ளளுடைய பண்பாட்டு பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிகளோடு இணைந்து போகின்றன, நாட்டு அரசியல் வாழ்வில் மேற்கூறிய மாற்றங்கள் மாபெரம் தாக்கம் கொணர்ந்துள்ளன்; குறிப்பாக, குடிமைச் சுதந்திரத்தைச் செயல்படுத்தல், பொது நலனை உருவாக்கல் ஆகியவை மீது அனைவருக்குமுள்ள உரிமைகளையும் கடமைகளையும் பொருத்தமட்டிலும், குடிமக்கள் தமக்குள்ளம் ஆட்சியாளர்களுடனும் கொள்ள வேண்டிய உறவை ஒழுங்கு படுத்துவதைப் பொறுத்தமட்டிலும் இம்மாற்றங்கள் கொணரும் தாக்கம் கண்கூடு.
மனித மாண்பு குறித்து மக்கள் கூரிய விழிப்புணர்வு அடைந்துள்ளனர். மனித ஆளின் உரிமைகளை அரசியல் வாழ்வில் அதிகச்சிறப்பான முறையில் பாதுகாக்கும் திறம் படைத்த அரசியல் நீதிமுறை அமைப்பு ஒன்றை நிறுவுவதற்காகா உலகின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முயற்சியானது மேற்கூறிய விழிப்புணர்வின் விளைவே ஆகும். ஆள்கள் என்ற முறையில் மனிதர்கள் சுதந்திரமாகச் செயல்படுத்தக் கூடிய உரிமைகளுள் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்;; குழுவாக் ஒன்றுகூடி வரல் மன்றங்கள் அமைத்தல் தமது சொந்தக் கருத்தை வெளியிடல், தனிமையாகவோ வெளிப்டையாகவோ சமயத்தை அறிக்கையிட்டுப் பின்பற்றல், உண்மையிலேயே குடிமக்கள் தனி நபர்களாகவோ குழுவாகவோ அரசியல் வாழ்விலும் ஆட்சித் துறையிலும் செயல் முறையில் பங்குகொள்வதற்கு ஆள்கள் என்ற முறையில் மனிதர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பது இன்றியமையாத நிபந்தனையாகும்.
பண்பாடு பொருளாதரம் சமூகம் இவற்றில் வளாச்சி ஏற்பட்டு வரவர நாட்டு அரசியல் வாழ்வை முறையாக அமைப்பதில் தாங்களம் அதிக அளிவல் பங்கேற்க வேண்டும் எனும் ஆவல் பெரும்பான்மையான மக்களிடம் வலுவடைந்துள்ளது. ஒரு நாட்டில் வாழும் சிறுபான்மையினர் நம் நாட்டு அரசியல் சமூகத்தைப் பொறுத்தமட்டில் கடமை உடையவர் தாம்;; இச்சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் எனும் விழிப்புணர்வு பலரின் உள்ளத்தில் வளர்ந்து வருகிறது. இது தவிர தம்மிலிருந்து வேறபட்ட கருத்துகளை கொண்ட, அல்லது வேறு சமயத்தைப் பின்பற்றுகிறவர்களான மனிதர்கள் மட்டில் காட்டும் நன்மதிப்பு பலர் நடுவிலும் நாளுக்குநாள் உயர்ந்துகொணடு வருகிறது. மேலும், இன்னம் அதிகமான ஒத்துழைப்பு மனிதர்களிடையே வளர்வதன் காரணமாக, தனிச்சலுகை கொண்ட ஒருசிலர் மட்டுமன்றி, எல்லாக் குடிமக்களும் தங்களுடைய மனித ஆளுக்குரிய உரிமைகளை நடைமுறையில் அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது.
கண்டனத்தக்குரிய அரசியல் ஆட்சி முறைகள் சிலவிடங்களில் இருந்து கொண்டுதான் வருகின்றன்; இவை குடிமை உரிமைக்கு அல்லது சமயச் சுதந்திரத்துக்கத் தடை போடுகின்றன்; அரசியல் ஆதாயம் சார்ந்த கட்டுக்கடங்காப் பேராசைக்கும் இழிச்செயல்களுக்கும் பலரைப் பலியாக்குகின்றன்; அதிகாரத்தைப் பொது நலனுக்கெனப் பயனபடுத்தாமல் ஒருசில குறிப்பிட்ட பிரிவினருடைய அல்லது ஆட்சியாளர்களுடைய வசதிக்கெனவெ திரித்துவிடுகின்றன.
உண்மையான மனிதத் தன்மை வாய்ந்த அரசியல் வாழ்வை நிலைநாட்ட வேண்டுமென்றால்: நீதி அன்பு மற்றும் பொது நல ஈடுபாடு பற்றிய உள்ளுணர்வை வளர்க்க வேண்டும்;; நாட்டு அரசியல் சமூகத்தின் உண்மை இயல்பையும் ஆட்சித்துறை அதிகாரத்தின் குறிக்கோள், முறையான செயல்பாடு அதிகார வரம்புகள் ஆகியவற்றையும் பற்றிய அடிப்படை நம்பிக்கை வலுப்படுத்த வேண்டும்;; இதைவிடச் சாலச் சிறந்ததொரு வழி வேறொன்றும் இல்லை.
74. நாட்டு அரசியல் சமூகத்தின் இயல்பும் அதன் குறிக்கோளும்
நாட்டுக் குடிமக்களாக அமைகின்ற தனிமனிதர்களும் குடும்பங்களும் வௌ;வேறு குழுவினறும் முழுமையான மனிதத் தன்மை வாய்ந்ததொரு வாழ்க்கையை உருவாக்கத் தம் சொந்த ஆற்றலால் மட்டும் முடியாது என்பதை உணர்கின்றனர்;; அனைத்து மனிதர்களும் தங்கள் சக்திகளை எல்லாம் நாளும் உருங்கிணைத்து மென்மேலும் அதிக நிறைவான விதத்தில் பொதுநலனை அடையக்கூடுமானதொரு பரந்த சமுதாயம் தேவை என்பதையும் அவர்கள் உணர்கின்றனர்.1 எனவேதான் மனிதர்கள் வௌ;வேறு அமைப்பு வடிவங்களைக் கொண்ட அரசியல் சமூகங்களான நாடுகளை உருவாக்குகின்றனர். ஆக பொது நலனை முன்னிட்டே நாட்டு அரசியல் சமூகம் உள்ளது;; அரசியல் சமூகமாகிய நாட்டை முழுமையாக நியாயப்படுத்துவதும் அதற்குப் பொருள் வழங்குவதும் பொது நலனே ஆகும்;; நாட்டு அரசியல் சமூகத்துக்கே உரித்தான இயல்பான சட்ட அமைப்புக்கும் பிறப்பிடமும் பொத நலனேயாம். மனிதர்கள், குடும்பங்கள் மற்றும் குழுக்கள் தங்களது நிறைவை அதிக முழுமையாகவும் எளிதாகவும் அடைந்து கொள்வதற்கு உதவுகின்ற சமூக வாழ்வுச் சூழ்நிலைகளின் தொகுப்பே நலன் ஆகும்.2
நாட்டு அரசியல் சமூகத்தில் ஒருங்கிணைக்கின்ற மனிதர் எண்ணிக்கையில் மிகுந்தவர்கள்;; வௌ;வேறானவர்கள்: எனவே அவர்கள் வௌ;வேறு கருத்துக்களைக் கொண்டவர்களாயிருப்பது நியாயமானதே. மேலும், ஒவ்வொருவரும் தம் சொந்தக் கருத்தையே பின்பற்றுவதனால் நாட்டு அரசியல் சமூகம் சிதைவுறும்;; இந்நிலையைத் தவிர்த்து அனைவருடைய சக்திகளையும் பொது நலனின்பால் திருப்பிவிட ஓர் ஆட்சித்துறை அதிகார அமைப்பு தேவைப்படுகிறது. பொது நலனை அடைவதற்காக அனைவருடையவும் சக்திகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும்போது ஆட்சித்துறை அதிகார அமைப்பு ;ஆள்தன்மையற்ற இயற்திரப் பாணியிலோ பொடங்கோல் முறையிலோ செயல்படலாகாது; மாறாக, சுதந்திரம் மற்றும் பொறுப்புணர்வை அடித்தளமாகக் கொண்டு எழுகின்ற ஓர் உள்ளார்ந்த சக்தியாக இருந்து அது செயல்பட வேண்டும்.
ஆகவே நாட்ட அரசியல் சமூகத்துக்கும் ஆட்சித்துறை அமைப்புக்கம் அடித்தளமாக அமைவது மனிதரின இயல்வே ஆகம் என்பது வெள்ளிடை மலை;; எனவே நாட்டு அரசியல் சமூகமும் ஆட்சித்துறை ஒழுங்குமறையைச் சார்ந்தவை என்பது தெளிவு;; அதே நேரத்தில் தங்களுக்குப் பொருத்தமான ஆட்சிமுறையை அமைப்பதும், ஆட்சியாளர்களும் அமர்த்துவதும் குடிமக்கள் சுதந்திரமாக நிர்ணயிக்கும் காரியங்களாகும்.3
அரசியல் சமூகத்திலும் அதன் பதிலாள்களாக இருந்து பணிபுரிகின்ற நியுறுவனங்களிலும் செயல்படுத்தப்பெறும் ஆட்சித்துறை அதிகாரம் எப்போழுதுமே அறநெறி வரம்புகளுக்கு உட்பட்டே செயல்படுத்தப்பெற வேண்டும்;; ஆட்சித்துறை அதிகாரம் இவ்வாறு செயல்படும்போத பொது நலனை உயிரோட்ட இயக்கம் கொண்ட பொது நலனை கருத்தில் கொண்டு சட்ட முறைமையின்படி ஏள்படுத்தப்பட்ட அல்லது ஏள்படுத்தப்பட வேண்டிய சட்ட அமைப்புக்குப் பொருத்தமாகப் பணியாற்றல் தேவை. இவ்வாறு ஆட்சித்துறை அதிகாரம் செயல்படும்போது குடிமக்கள் அதற்குக் கீழ்ப்படிய அவர்களது மனச்சான்றே கட்டளை விதிக்கினது.4இதிலிருந்து ஆட்சியாளர்ளின் பொறுப்பு, மாண்பு மற்றும் முக்கியத்துவம் தெளிவாகிறது.
தான் உரிமையாகப் பெற்றுள்ள ஆற்றலின் வரம்பை மீறிச்சென்ற ஆட்சித்துறை அமைப்ப குடிமக்களை ஒடுக்கும் நிலை ஏற்படலாம். அப்போத குடிமக்கள் பொது நலன் சார்ந்த கடமைகளை நிறைவேற்றத் தங்கள் ஒத்துழைப்பை நல்க மறுத்தலாகாது. மாறாக, ஆட்சித்துறை தன் அதிகாரத்தைத் தவறான முறையில் செயல்படுத்தும் வேளையில் குடிமக்கள் தங்களுடைய உரிமைகளையும் பாதுகாக்க அந்த ஆட்சித்துறை அமைப்பை உதிர்ப்பது முறையே ஆகம்;; இவண், இயற்கை அறநெறி ஒழுங்கும் நற்செய்தி அளிக்கின்ற வரையறைக்கு உட்பட்டுக் குடிமக்கள் செயல்பட வேண்டும்.
வௌ;வேறான மக்களினங்களிடையே அவர்களுக்கே உரித்தான தனிப்பணபுகள் உள்ளன்; அவர்களது வரலற்று வளர்ச்சியும் வேறுபட்டிருக்கலாம்: எனவே ஒரு நாட்டு அரசியல் சமூகம் தனக்குத் தேவையான அமைப்புகளை உருவாக்குவதற்கும் ஆட்சித துறையைச் சீராக அமைப்பதற்கும் எழுகின்ற நடைமுறைச் செயல்பாடுள்ள வேறுபாடுகள் இருத்தல் இயல்பே. எனினும் மேற்கூறிய நடைமுறைச் செயல்பாடுகள் எல்லாம் பண்பாட்டில் சிறந்த, அமைதியை விரும்புகின்ற, அனைவருக்கும் நன்மைபுரிகின்ற மனிதர்களை உருவாக்கத் துணைசெய்வனவாக அமைந்திட வேண்டும் இதனால் மனித குடும்பம் முழுவதுமே பயன்பெறும்.
75. அரசியல் வாழ்வை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைத்தல்
நாட்டு அரசியல் சமூகத்தினுடைய சட்ட முறை சார்ந்த அடிப்படைகளை உருவாக்கும், நாட்டு ஆட்சித்துறையைச் சார்ந்தவற்றை நெறிபப்படுத்தல், வௌ;வேற நிறுவனங்களின் செயல்பாட்டு எல்லைகளையும் குறிக்கோள்களையும் வரையறுத்தல், ஆட்சியாளர்களைத் தோந்தெடுத்தல் ஆகிய இக்காரியங்களில் குடிமக்கள் எவ்விதப் பாகுபாடுகளுக்கும் உட்படுத்தப்படாமல் சுதந்திரத்தோடும் நடைமுறையிலும் பங்கேற்க இயலுமாறு அவர்களுக்குச் செயல்முறையான வாய்ப்புகள் மேன்மேலும் அதிக அளவில் தொடர்ந்து வழங்கிட வேண்டும்;; ஆகவெ இத்தகையச் செயல்முறையான வாய்ப்புகளை அளிக்கவல்ல அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தல் மனித இயல்போடு முற்றிலும் பொருந்திப் போவதே ஆகும்.5 தங்களுக்கிருக்கும் வாக்குரிமையைச் சுதந்திரத்தோடு செயல்படுத்த, எல்லாக் குடிமக்களுக்கம் உரிமை மட்டுமன்று கடமையும் உண்டு. இதை அவர்கள் நினைவில் கொண்டு, பொதுநலனை மேம்படுத்த முன்வர வேண்டும். நாட்டின் நலனுக்காகத் தங்களையே கையளித்து, தங்கள் பணிச்சுமை சார்ந்த பொறுப்புகளை அனைபருடைய நலனுக்காகவும் செயல்படுத்துகின்றவர்களது ஈடுபாட்டைத் திருச்சபை பெரிதும் மதித்துப் போற்றுகிறது.
ஆட்சித்துறை சார்ந்த பொறுப்புகள் மற்றம் நிறுவனங்கள் பொருத்தமான விதத்தில் பகிhவு முறைப்படி அமைபக்கப்பட வேண்டும்;; எந்த ஒரு மனிதருக்கும் தீங்காக அமையாத விதத்தில் அனைவருடையவும் உரிமைகள் செயல்முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்;; இவற்றைச் செயல்படுத்த வேண்டுமாயின் தனிப்பட வரையறுக்கப்பட்ட சட்டமுறை அமைப்பு ஒன்ற தேவையாகும். இந்தஅமைப்பின் துணையோடு குடிமக்கள் பொறுப்பபுணர்வுடன் அளிக்கும் ஒத்துழைப்பு அன்றாட அரசியல் சமூக வாழ்வில் நற்பயன்கள் கொணரும் அனைத்து ஆள்கள், குடும்பங்கள், குழுக்கள் ஆகியோரின் உரிமைகள் மற்றம் இவ்வுரிமைகளின் நடைமுறைச் செயல்பாடுகள் அகியவற்றை ஏற்று, மதித்து, மேம்படுத்தல் வேண்டும்.6 மேலும், அனைத்துக குடிமக்களையும் பிணைக்கின்ற கடமைகளையும் இவ்வாறே ஏற்றறு மதித்து மேம்படுத்தல் தேவை. இறுதியாகக் கூறப்பட்ட கடமைகளுள் ஆளதவிகளை நாட்டு அரசியல் சமூகத்திற்கும் வழங்குதலும் உள்ளடங்கும் என்பதை இவண் குறிப்பிட வேண்டும். ஆட்சியாளர்கள் குடும்ப, சமூக மற்றும் பண்பாட்டுக் குழுக்கள் அவை தவிர இடைநிலை நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் ஆகியவற்றை தடைசெய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இவை சட்டத்திற்கு அமைந்து நடை முறையில் செயல்படுவதற்கும் ஈட்விhளர்கள் தடை விதித்தலாகாது;; மாறாக இக்குழுக்களைத் தாராளாமாக ஒழுங்கான விதத்தில் உயர்வடையச் செய்ய அவர்கள் முனைற்து செயல்பட வேண்டும். குடிமக்களைப் பொறுத்தமட்டில், இவர்கள் தனி மனிதராயினும் சரி, குழுக்களாயினும் சரி, ஆட்சித்துறையின் கைகளில் அளவுக்கு மிஞ்சிய அதிகாரத்தை ஒப்படைக்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் குடிமக்கள் ஆட்சித்துறையிடமிருந்து மிஞ்சிய உதவிகளையும் சலுகைகளையும் தேவையின்றிக் கோரலாகாது: இவ்வாறு செய்தால் ஆள்கள், குடும்பங்கள் சமூகக் குழுக்கள் ஆகியவற்றின் பொறுப்புணர்வைக் குறைப்பது போலாகும்.
நாம் வாழும் இக்காலத்தில் சிக்கல் மிகுந்த சூடிமைவுகள் நிலவுகின்றன. இதன் காரணமாக ஆட்சித்துறை சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரியங்களில் அதிகமாகத் தலையிட வேண்டியுள்ளது. குடிமக்களும் குழுக்களும் மனிதர்களின் முழு நலனைச் சுதந்திரமாக அடைவதற்காகப் பயன்தரு முறையில் ஈடுபடுவதற்கு உதவிபுரியும் வகையில் மிகப் பொருத்தமான சூழ்நிலைகளை உருபாக்கித் தரவே மேற்கூறிய ஆட்சித்துறையின் தலையீட மேரவயாகின்றது. வௌ;வேறு நிலப்பகுதிகளைப் பொறுத்தும், மக்களின் வளர்ச்சிப் போக்கை பொறுத்தும் சமூக மயமாக்கல்,7 மனித ஊளுக்குரிய தன்னாட்சி உரிமையோடு வளர்ச்சி பெறால் ஆகியவ்ற்றிற்கிடையே உள்ள தொடர்புகள் வௌ;வேறு வகைகளில் புரிந்துகொள்ளப்படலாம். ஆனால் பொது நலனைக் கருதி ஒரு குறிப்பிட்ட காலத்திறகு உரிமைகளைச் செயல்படுத்த இயலா நிலை புகுத்தப்பட்டாலும் சூழ்நிலைகள் மாறிய உடனேயெ கூடிய விலைவில் சுதந்திரம் மீணடும் நிலை நாட்டப்பட வேண்டும். எவ்வாறாயினும், மனித ஆள்களுடைய அல்லது சமூகக் குழுக்களுடைய உரிமைகளைக் கடுமையாக மீறக்கூடிய ஏகாதிபத்திய அல்லது சர்வதிகார முறைகளை ஓர் அரசு கையாளுமேயாயின் அது மனிதத் தன்மையற்ற செயலாகும்.
குடிமக்கள் பரந்த உள்ளத்தோடும் நம்பகமான முறையிலும் தம்மில் நாட்டுப் பற்றை வளர்திட வேண்டும்;; ஆனால் அவர்கள் குறுகிய மனப்பான்மையுடையவர்களாய் இருத்தலாகாது; அதாவது அவர்கள் வௌ;வேறு பிணைப்புகளால் இணைந்துள்ள குலங்கள் மக்களினங்கள் நாடுகள் ஆகியவற்றை உள்ளடங்கிய மனித குலம் முழவதின நலனையும் எப்போழுதுமே கருத்தில் கொண்டு அதற்காகவும் செயல்பட வேண்டும்.
நாட்டு அரசியல் சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட அழைத்தலைக் கிறிஸ்தவ மக்கள் அனைவரம் உணர்ந்திருக்க வேண்டும். அவர்கள் பொறுப்புணர்வைத் தங்களிடத்தில் வளர்த்துக் கொண்டு, பொது நலனுக்குத் தங்களை அர்ப்பணிப்பதன் மூலம் எடுத்துக்காட்டாக விளங்கக் கடமைப்பட்டிருக்கிறாhக்ள்;; இவ்வாறு அதிகராத்தைச் சுதந்திரத்தோடும், தனி ஆளுடைய முயறிசிகளைச் சமூகக் குழுவினுடைய ஒருங்கிணைந்த நிலைமை மற்றும் தேவைகளொடும், ஒற்றுமையின் நலன்களை வளம் நிறை வேற்றுமைகளோடும் இசைவுற ஒன்றிணைப்பது எவ்வாறென அவர்கள் தாங்கள் செயல்படும் முறைகளின் வழயாகவே காட்டிட இயலம். உலபு சார்ந்த காரியங்களை ஒழுங்குற அமைப்பது எவ்வாறென அவர்கள் தாங்கள் செயலபடும்முறைகளின் வழியாகவே காட்டிட இயலும். உலக சார்ந்த காரியங்களை ஒழுங்குற அமைப்பது எவ்வாறு என்பதில் தமக்குள்ளே முரண்படுகின்ற கருத்தகள் இருக்கலாம்: இவற்றை நியாயமானவையாகக் கிறிஸ்துவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்;; மேலும் இக்கருத்துகளை நேர்மையாக ஆதரிக்கின்ற குடிமக்களை ஏன் மக்கள் குழுக்களையும் கிறிஸ்தவர்கள் ஏற்று மதித்திட வேண்டும். பொதுநலனை வளர்ப்பதற்குத் தேவைப்படுகின்டறவை யாவை வன அரசியல் கட்சிகள் கணிக்கின்றனலோ அவற்றை அக்கட்சிகள் மேம்மபடுத்தக் கடமைப்பட்டுள்ளன. ஆனால் அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த நலனைப் பொதுநலனுக்கு மேலானதாக ஒருபோதுமே கருதலாகாது.
நாட்டு அரசியல் வாழ்வில் வல்லாக் குடிமக்களும் தங்களுக்கு உரித்தான பொறு;பபைச் செயல்படுத்த இயலும் நிலை உருவாக வேண்டும்;; இக்குறிக்கோளை அடைய வேண்டுமாயின் குடிமைக் கல்வி மற்றும் அரசியல் கலிவியில் மிக ஆழ்ந்த ஈடுபாடு காட்ட வேண்டும்;; இத்தகையத் கலவியானது குறிப்பாக இன்று மிக இன்றியமையாத ஒன்று: எல்லா மக்களுக்கும் சிறப்பாக இளைஞருக்கும் இக்கல்வி தேவையானதாகும். கடினமானதும், ஆனால் அதே வேளையில் மிக்க மாண்புடைத்ததுமான அரசியல் கலையில்8 ஈடுபட அற்றலுள்ளவர்கள் அல்லது அவ்வாறு ஈடுபடும் ஆற்றலைப் பெறக் கூடுமானவர்கள் அதற்காக தங்களைத் தாயரித்திட வேண்டும்;; தங்களது சொந்த நலனையோ பொருளாதார ஆதாயத்தையோ தேடாமல், இவர்கள் அரசியலில் ஆர்வத்தோடு ஈடுபட முனையவேண்டும். மேலும் இவர்கள் அநீதி அடக்குமுறைகளுக்கு எதிராகவம், தனியொருபருடைய அல்லது அரசியல் கட்சியினுடைய சர்வாதிகாரப் போக்கு மற்றும் கொடுங்கோலாட்சிக்கு எதிராகவும் நேர்மையான நடத்தையால், முன்மதியோடு போராடவேண்டும்;; கபடின்றி நடுநிலை நேர்மையோடு ஏன் அரசியல் வாழ்வுக்குரிய அன்போடும் துணிச்சலோடும் அனைவருடைய நலனுக்காகவும் தங்களையே அர்ப்பணிக்க வேண்டும்.
76. நாட்டு அரசியல் சமூகமும் திருச்சபையும்
நாட்டு அரசியல் சமூகம் திருச்சபையோடு எத்தகைய உறவு கொண்டுள்ளது என்பது பற்றி நாம் சரியானதொரு கண்ணோட்டம் கொண்டிருப்பது மிக இன்றியமையாதது. பன்மைநிலை நிலவுகின்ற சமூகங்களைப் பொறுத்தமட்டில் இது மிகவும் பொருந்தும்;; மேலும் ஆங்குக் கிறிஸ்தவ மக்கள் தனியாகவோ குழுவாகவோ குடிமக்கள் என்ற முறையில் தங்கள் பெயராலே தங்கள் கிறிஸ்தவ மனச்சான்றினால் வழிநடத்தப்பட்டு ஆற்றுகினற செயல்படுகளிலிருந்து துல்லியமாக வேறுபடுத்திக் காண்பதும் மிக இன்றியமையாதது.
திருச்சபைக்கென்று ஒரு தனிப்பட்ட பணிப்பொறுப்பும் பணித்தகுதியும் உண்டு. இதனால் அதை நாட்டு அரசியல் சமூகத்தோடு எவ்விதத்திலும் குழப்பல் ஆகாது; திருச்சபை மனித ஆளுடைய நடப்புநிலை தன்மையைக் குறித்துக்காட்டும் அடையாளமாக உள்ளது. அத்தன்மையின் காப்பீடாகவும் விளங்குகிறது. நாட்டு அரசியல் சமூகமும் திருச்சபையும் தத்தம் எல்லைகளுக்குள் ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் நலையுடையனவன்று;; அவை ஒவ்வொன்றும் தன்னாட்சி உரிமை கொண்டனவாகும். ஆனால் ஒவ்வொன்றம் தன்னாட்சி உரிமை தகுதிகளின் nடிப்படையில் என்றாலும், அதே மனிதர்களுடைய தனி ஆள் ;சார்ந்த மற்றம் சமூகப் பண்பு சார்ந்த அழைத்தலுக்கே துணைநிற்கின்றன. கால, இடச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நாட்டு அரசியல் சமூகமும் திருச்சபையும் எவ்வளவு ;நல்ல விதத்தில் தங்களுக்குள் ஒத்துழைக்கின்றனவொ, அவ்வளவு அதிகப் பயன்தரு விதத்தில் அனைவரடையவும் நலனு;காகவும் அவை பணிபுரிய முடியும். உண்மையில், மனிதர்கள் இம்மணுலகின் வரம்புகளுக்கு மட்டுமே உட்பட்டவர்கள் அல்லர் மாறாக வரலாற்றில் வாழும் அவர்கள் காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு முழுமையான அழைப்பைப் பெற்றவர்களாவர். மீட்பரின் அன்பை அடித்தளமாகக் கொண்டுள்ள திருச்சபையோ ஒவ்வொரு நாட்டின் எல்லைகளுக்குள்ளும் நாடுகளுக்கு இடையேயுள்ள நீதியும் அன்பும் விரிவாகப் பரவி ஓங்கிடத்துணைபுரிகிறது;; தனது படிப்பினையாலும் கிறிஸ்தவர்கள் வழங்கும் சான்றினாலும் திருச்சபை மனித ஈடுபாட்டின் அனைத்துத் துறைகளையும் ஒளிர்விக்கிறது;; இவ்வாறு திருச்சபை குடிமக்களின் அரசியல் சுதந்திரம் மற்றும் பொறுப்புணர்வுகளையும் மதித்து ஏற்றுக் கொண்டு மேம்படையச் செய்கிறது.
திருத்தூதர்கள், அவர்கள் வழிவருபவர்கள், இவர்களோடு ஒத்துழைப்பவர்கள் ஆகிய எல்லாரும் உலக மீட்பராகிய கிறிஸ்துவை மனிதருக்கு அறிவிக்க அனுப்பப்பட்டவர்களாவர். இவ்வாறு அனுப்பப்பட்ட இவர்களது திருத்தூதுப் பண் கடவுளின் வல்லமையால்தான் நிகழ்கிறது. கடவுளின் வல்லமையோ சான்று பகர்வோரின் வலுவின்மையில்தான் நற்செய்தியின் வல்லமையைப் பலகாறும் துலங்கச் செய்கிறது. உண்மையிலே இறைவாக்குப் பணிக்கெனத் தங்களை அர்ப்பணிக்கும் அனைவரும் நற்செய்திக்குரிய வழிவகைகளையும் முறைகளையும் கையாள வேண்டும்;; இவை உலகு சார்ந்த முறைகளிலிருந்து பொதுவாக மாறுபட்டனவே.
இவ்வுலகக் காரியங்களும் மனித நிலையைப் பொறுத்த வரையில் இலவுலகைக் கடந்து நிற்கும் காரியங்களும் தம்முள் மிக காரியங்களும் தம்முள் மிக நெருங்கிப் பிணைந்துள்ளன என்பதை மறுக்க முடியாது;; ஏன் திருச்சபையும் தனக்கே உரிய பணியை ஆற்றத் தேவைப்படும் அளவுக்கு இவ்வுலக பொருள்களைப் பயன்படுத்தத்தான் செய்கிறது. ஆனால், திருச்சபையானது அரசியல் ஆட்சித் துறையால் வழங்கப்படும் தனிச்சலுகைகளை நம்பி வாழவில்லை மேலும் நியாயமான முறையில் பெறப்பட்ட தனது ஒருசில உரிமைகளைச் செயல்படுத்தினால் அவண் தான் வழங்கும் சாட்சியம் தூய்மையாக உளதா என்பது பற்றி ஐயப்பாடு எழ நேரிடுமாயின் அல்லது பதிதாகத் தோன்றிய வாழ்க்கைச் சூழமைவுகளின் காரணமாக வேறு வழியில் செயல்படும் தேவை ஏற்படின், மேற்கூறிய நியாயமான உரிமைகளைச் செயல்படுத்தாது விட்டுவிடவும் திருச்சபை முன்வருகிறது. ஆனால் திருச்சபை நற்செய்தியோடு பொருந்திப் போகின்ற, மற்றும் எல்லாருடைய நலனுக்க உகந்த எல்லா இடங்களிலும் கீழ்வரும் செயல்களில் ஈடுபட உரிமை கொண்டிருப்பது நியாயமே; இச்செயல்களாவன: உண்மைச் சுதந்திரத்தோடு கிறிஸ்தவ நம்பிக்கையைப் போதித்தல் சமூகம் பற்றிய தனது படிப்பினையை அளித்தல் தடை செய்யப்பட்டாமல் தனது பணியை மனிதர்களிடையே ஆற்றுதல், மனிதர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஆன்ம மீட்பு ஆகியவற்றில் தாக்கம் கொணர்கின்ற காரியங்கள் பற்றி அவை அரசியல் துறை சார்ந்தனவாயிருப்பனும்கூட அறநெறி சார்ந்த தீர்ப்பபு வழங்குதல்.
மனித சமுதாயத்தில் எதுவெல்லாம் உண்மையானதாக நன்மையானதாக அழகு வாய்ந்ததாகக் காணக்கிடக்கின்றதோ அதையெல்லாம் பேணி வளர்த்து உயர்வுறச் செய்வது திருச்சபைக்கு உரித்தான பொறுப்பாகும்.9 இத்திருச்சபை நற்செய்தியை உண்மையோடும், ஊறுதியோடும் பற்றிக்கொண்டு, தனது பணியை உலகில் ஆற்றுவதன் வழியாக மனிதரிடையே அமைதியை உறுதியக நிலைநாட்டி கடவுளுக்குப் புகழ் சேர்க்கிறது.10
இயல் 5
அமைதியை பேணலும்
அனைத்து நாட்டுச் சமூகததை வளர்த்தலும்
77. முன்னுரை
நாம் வாழும் இந்த ஆண்டுகளில் போர் சீறியெழுந்துள்ளது மற்றும் போர் ஏற்படுகின்ற ஆபத்தும் உள்ளது;; இப்போர்களினால் விளைகின்ற கடுந்துயரமும் பேரிடரும் மனிதர்களைத் தற்பொழுதம் படுமையாகத் தாக்கி வருகின்றன. இச்சூழ்நிலையில் அனைத்துலக மனித குடும்பம் தனது வளர்ச்சிப் போக்கில் அறுதியானதொரு திருப்பத்தை எட்டியுள்ளது. மனித குலம் படிப்படியாக ஒன்றுபட்டு வருகிறது;; தன் ஒற்றுமை பற்றி எங்கும் அதிகமாக விழிப்புணர்வு அடைந்தும் வருகிறது. அதிக மனிதத் தன்மை வாய்ந்ததோர் உலகினை இம்மண்ணுலகின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா மனிதருக்கும் உருவாக்கி அளிப்பது மனித குலம் ஆற்ற வேண்டிய பணியாகும்: எல்லா மனிதரும் புத்துணர்வு பெற்ற உள்ளத்தோடு தம்மையே உண்மையான அமைதிக்கென அர்ப்பணிக்காவிட்டால் மேற்கூறிய பணி செவ்வனே நிகழ முடியாது. மனித குலத்தின் உயரிய நாட்டங்களோடும், எதிர்பார்ப்புகளோடும் இசைவுற இணைத்திருக்கின்ற நற்செய்தித் தூத ''அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்'' (மத்5:9) என அறிவிக்கம் போது, நாம் வாழும் இக்காலத்தில் புதியதேர் ஒளியோடு துலங்கும்.
எனவேதான் திருச்சங்கம் அமைதியின் உண்மையான பொருளை, சீரிய மாண்புடைந்த பொருளை முதலில் விளக்குகிறது;; போரின் மனிதத் தன்மையற்ற கொடூரத்தை கண்டிக்கிறது. பின்னர் சஙகம் கிறிஸ்தவர்களுக்கு ஓர் உருக்கமான அழைப்புவிடுகிறது: அதாவது. அமைதியைக் கொணர்பவராகிய கிறிஸ்துவின் துணையோடு, கிறிஸ்தவர்கள் எல்லா மனிதர்களோடும் சேர்ந்து நீதியையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்ட அமைதியை மனிதர் நடுவில் நிலைநாட்ட ஒத்துழைக்கவேண்டும்;; மேலம் அமைதியைக் கொணர்வதற்கான வழிமுறைகளையும் அவர்கள் வகுக்க வேண்டும்.
78. அமைதியின் இயல்பு
அமைதி என்றால் போர் நிகழாதிருக்கும் நிலைமை மட்டுமல்ல்; ஒன்றையொன்று எதிர்த்து நிற்கும் சக்திகளுக்கிடையே ஒரு சம நிலையைக் கொணர்வதிலும் அமைதியை அடக்கிவிட முடியாது; அடக்கியாளுகின்ற ஆட்சிமுறையிலிருந்து பிறப்பதன்று அமைதி. மாறாக அமைதி என்றால்''நீதியால் விளைவது''(எசா32:17) என்றுரைப்பது மிகப் பொருத்தமானது, சரியானது. மனித சமுதாயத்திற்கு அடித்தளம் அமைத்தவரான கடவுள் அச்சமுதாயத்தில் ஓர் ஒழுங்கு முறையையும் பொறித்து வைத்தார்: இந்த ஒழுங்குமுறையின் முதிர்ந்த கனியாகப் பிறப்பதுதான் அமைதி ஆகும்;; நீதியை என்றும் அதிக நிறைவாக நாடித் தேடுகின்ற மனிதர்களால் மேற்கூறிய ஒழுங்குமுறை செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. மனித இனத்தின் பொது நலனை அதன் nடிப்படைப் பொருளில் நோக்கினோம் என்றால் அது pநலையான சட்டத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என அறியலாம்;; இருப்பினும் பொது நலனின் நடைமுறைத் தேவைகளைப் பொறுத்தமட்டில் அது வரலாற்றின் காலப் போக்குக்கு இசைய, இடையறாத மாற்றங்களுக்கு உட்பட்டே உள்ளது. ஆகவே அமைதி என்பது உறுதியாக அடைந்துவிட்ட ஒன்றாக ஒருபோதும் இருப்பதில்லை;; மாறாக இடையறாது கட்டி எழுப்பப்பட வேண்டிய ஒன்று. மேலும் மனித உள்ளம் வலுவற்றதாகவும் பாவத்தால் புண்பட்டதாகவும் உள்ளது;; இவ்வாறிருப்பதனால் ஒவ்வொருவரும் தத்தம் உணர்ச்சிப் போக்குகளைக் கட்டுபடுத்தினாலன்றி, சட்ட முறையான ஆட்சியாளர்கள் விழிப்பாயிருந்தாலன்றி, அமைதியை நிலைநாட்டுவது இயலாத காரியம்.
இது மட்டும் போதாது. இங்கே நாம் குறிப்பிடுகின்ற அதைதி உலகில் நிலவ வேண்டுமென்றால் மனித ஆள்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும். மனிதர்கள் தங்கள் அருள்நெறி வளங்களையும் படைப்பாற்றல் மிக்க திறமைகளையும் தங்களுக்குள்ளே மனமுவந்து, நம்பிக்கையோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். பிற மனிதர்களையும் மக்களினங்களையும் அவர்களுடைய மாண்மையும் உறதிபடைத்த உள்ளத்தோடு மதித்தல், மற்றும் சகோதர உறவைப் பேரார்வத்துடன் கடைப்பிடித்தல் ஆகியவை அமைதியைக் கட்டியெழுப்ப மிகமிக இன்றியமையாதவை. இவ்வாறு அமைதியானது அன்பின் கனியாகவும் இருக்கிறது. அன்போ நீதியால் எதை வழங்க முடியுமோ அதையும் விஞ்சிடும் தன்மையது.
பிறரன்பிலிருந்து பிறப்பது இவ்வுலகுசார் அமைதி;; இந்த அமைதியானது தந்தையாம் கடவுளிடமிரந்து வருகினற கிறிஸ்து அளித்துள்ள அமைதியின் விளைவு அதன் அடையாளம். மனிதராகப் பிறந்த இறைமகனாகிய கிறிஸ்து அமைதியின் அரசர் ஆவார்;; இவரே தம் ;சிலவையினால் எல்லா மனிதர்களையும் கடவுளோடு ஒப்புரவாக்கினார். இவ்வாறு எல்லலரையும் ஒரே மக்கிளினமாக, ஒரே உடலாக ஒருங்கிணைத்து ஒன்றிக்கச் செய்தார். மேலும் கிறிஸ்து துன்புற்று பகைமையை அழித்துவிட்டார்;;1 தம் உயிர்த்தெழுதலினால் வெற்றிவாகை சூடினார்;; அன்பின் ஆவியை மனிதர்களின் உள்ளத்தில் பொழிந்தார். எனவேதான், கறிஸ்தவர்கள் அன்பின் அடிப்படையில் உண்மை பேசி (எபே4:15), உண்மையிலேயே அமைதி வழியைத் தழுவியுள்ள மனிதர்களோடு ஒன்றுசேர்த்து அமைதிக்காக வேண்டவும் அதை நிலைநாட்டவும் வேண்டுமென வற்புறுத்தி அழைக்கப்படுகிறார்கள்.
பறிபோன உரிமைகளை நிலைநாட்டுவதற்காகச் செயல்படும்போது வன்முறைச் செயல்களை ஒதுக்கிவிட்டு வலுவற்ற நிலையிலுள்ளோருக்கும் கைகூடுமான பாதுகாப்பு வழிகளையே பயன்படுத்தும் மனிதர்களை நாம் மேலே குறிப்பிட்ட உணர்வுகள் புகழத்தான் வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யும்போது பிறருடைய மற்றும் சமூகத்தினுடைய உரிமைகளையும் கடமைகளையும் தீங்குக்கு உட்படுத்தாது பார்த்துக்கொள்ள வேண்டும்.
மனிதர்கள் பாவிகளாய் இருக்கிறார்கள் என்பாதால் போர் ஏற்படும் அபாயம் இரந்து வருகிறது: கிறிஸ்துவின் மறுவருகை வர இந்த அபாயம் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் மனிதர்களை அன்பினால் இணைத்த எந்த உளவுக்குப் பாவத்தின் மீத வெற்றி கொள்வார்களோ அந்த அளவுக்கு வன்முறைஐயயும் முறியடிப்பார்கள். அப்போது கீழ்வரும் வார்த்தைகள் நிறைவேறும்: ''அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள். ஓர் ;இனத்தக்க எதிராக மற்றொரு இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.(எசா2:4).
பிரிவு 1
போர் நிகழாது தடுத்தல்
79. போர்களின் மனிதத் தன்மையற்ற பண்புக்குத் தடையமைத்தல்
அண்மைக் காலத்தில் நடந்து முடிந்த போர்கள் நம் உலகில் மிகக் கொடூரமான பொருள்சார் அழிவுகளையும் அறநெறிசார் அழிவுகளையும் அநநெறிசார் அழிவுகளையும் ஏற்படுத்திவிட்டன்; அப்படியிருந்தும், இப்போதுகூட இவ்வுலகின் ஏதாவது ஒரு பகுதியில் ஒவ்வொரு நாளும் போரினால் அழிவு ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. மேலும், போர்புரிவதற்காக இன்று ஆய்வறிவுசார்ந்த வகைவகையான புது ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன: எனவே, போர் கோரத்தன்மையதாய் உள்ளது. இதனால் கடந்த காலங்களில் நிகழ்ந்ததைவிட இன்னும் மிக அதிகமான கொடூரச் செயல்களில் போராளிகள் ஈடுபடுவதற்கான ஆபத்து உள்ளது. இன்றைய சூழ்நிலை பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. அனைத்துலக் நாடுகளுக்கிடையே நிலவும் உறவுகளும் கடுஞ்சிக்கலான முறையில் பின்னிப் பிணைந்தவனவாய் உள்ளன. இவ்வாறிருப்பதனால், மறைவாகச் சதிசெய்தல் மற்றும் கவிழ்த்து வீழ்த்தல் ஆகிய ஏது முறைகள் பயன்படுத்தப்பட்டு, எதிர்பாராவண்ணம் சிறுகுழுக்களாகத் தாக்கும் போர்கள் நெடுங்காலம் நீடித்துக் கொண்டே போகின்றன. வல வேளைகளில் பயங்கரவாத முறைகளைக் கையாளுதல் புதியதொரு போர் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய இழிநிலையில் உழன்று கொண்டிருக்கிறது மனித குலம். இந்நிலையைக் கருத்தில் கொண்டுள்ள திருச்சங்கம், மக்களினங்களின் வாழ்வை ஒழுங்குபடுத்தும் இயற்கை அறநெறிச் சட்டம், மற்றம் அச்சட்டத்தின் பொதுத் தத்துவங்கள் ஆகியவை நிலையான முறையில் என்றுமே பொருளுள்ளவைதாம் என்பதை முதன்முதலில் நினைவுத்த விரும்புகிறது. மேற்கூறிய தத்துவங்களை மனித குலத்தின் மனச்சான்றே மேன்மேலும் அதிக உறுதியோடு எடுத்துரைக்கிறது. உனவே இத்தத்துவங்களுக்கு எதிராகத் திட்டமிட்டுப் புரியப்படுகின்ற செயல்கள், இச்செயல்களை புரியவேண்டும் என்று கொடுக்கப்டுகின்ற கட்டளைகள் ஆகியவை உண்மையிலேயே படுபாதகங்கள் ஆகும். இக்கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள் குருட்டுத் தனமாகவே கீழ்ப்படிகிறார்கள் என்றுரைத்து அதனால் அவர்களைக் குற்றமற்றவர்கள் என்று சாக்குப்போக்குக் கூற முடியாது. மேற்கூறிய பாடுபதகங்களுள் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை. ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டீ, எந்த வழிமுறையையும் கையாண்டு ஒரு மக்களினத்தையோ நாட்டையோ சிறுபான்மை இனத்தரையோ கூண்டோடு அழிக்கும் செயல்கள். அரக்கத்தனமான படுபாதகங்களாகிய இவை வன்மையாகக் கண்டனம் செய்யப்பட வேண்டியவை. இச்செயல்களைச் செயய்க் கட்டளையிடுவோரை அச்சமின்றி வெளிப்படையாக எதிர்த்து நிற்பவர்களுடைய மனஉறுதியை நாம் வெகுவாகப் பாராட்ட வேண்டும்.
போர் சம்பந்தப்பட்ட காரியங்களைப் பற்றிப் பலவகையான அனைத்து நாட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. போர்ச் செயல்களினுடையவும் அவற்றின் விளைவுகளினுடையவும் மனிதத் தன்மையற்ற பண்பினைச் சிறிதேனும் குறைக்கும் நோக்குடன் எண்ணிறந்த நாடுகள் மேற்கூறிய ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளன. இவ்வொப்ந்தங்கள் போரில் காயமடைந்த வீரர்களைக் கண்காணித்தல் போரில் கைது செய்யப்பட்டோரை நடத்தும் முறை ஆகியவற்றைப் பற்றியனவாகும். மேலும் இவ்வகையான வௌ;வேறு உடன்படிக்கைகளும் இவண் உள்ளடங்கம். இத்தகைய ஒப்பந்தங்களை அனைவரும் கடைப்பிடிக்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள்;; இது தவிர அனைவரக்கும் குறிப்பாக ஆட்சியாளர்களுக்கும், இக்காரியங்களில் வல்லுநரலய் இருப்போர்களும் மற்றுமொரு கடமையுயண்டு: அதாவது இவர்கள் எல்லாரும் போர் சம்பந்தமான மேற்கூறிய ஒப்பந்தங்களை மேலும் செம்மைப்படுத்தத் தங்களால் இயன்ற அளவு முனைய வேண்டும்;; இவ்வாறு இந்த ஒப்பந்தங்களின் உதவியோடு போரின மிதத்தன்மையற்ற பண்பை ஓரளவுக்கு அதிக பயன்துர முறையில் தடுத்து நிறுத்திட வழிபிறக்கும், மேலும், தங்கள் மனச்சான்றின் உந்துதலுக்குக் கீழ்படிந்து போர்க் கருவிகளை ஏந்த மறுப்போர் இருக்கலாம்: மனித சமுதாயத்திற்கு மற்ற வழிகளில் இவர்கள் பணிபுரிய ஏற்றுக் கொள்வார்களேயானல் இவர்களுக்குச் சாதனமாக மிதப் பண்புடைத்த சட்டங்கள் இயற்றப்படுவது இயற்கை நீதிக்கு உகந்ததாகவே தெரிகிறது.
போரானது மனித வாழ்க்கை நிலையினின்று முற்றிலுமாக வேரறுக்கப்படவில்லை என்பது வெள்ளிடமலை. போர் ஏற்படும் ஆபத்து நீடிக்கம் வரையிலும் பணித் தகுதியும் போதிய ஆற்றலும் படைத்த அனைத்துலக ஆட்சி அதிகாரம் ஒன்று இல்லாதவரையிலும் அமைதியான தீர்வு காண்பதற்கு எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளுமே பயனற்றுப் போய்விடின் நியாயமான தற்பாதுகாப்புக்கான உரிமை அரசுகளுக்கு மறுக்கப்டலாகாது. நாட்டு ஆட்சியாளர்களுக்கம் நாட்டு ஆட்சி முறையின் பொறுப்புகளில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கும் தங்களிடம் ஒப்படைக்கபட்டடுள்ள மக்களின் நலனைப் பாதுகாக்கும் கடமை உண்டு;; எனவே மேற்கூறப்பட்ட மிகக் கனமான காரியங்களைப் பொறுத்தமட்டில் பொறுப்போடு செயல்பட அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மக்களின் நியாயமான தற்பாதுகாப்புக்காகப் போர் தொடுப்பதற்கும், பிறநாடுகளைத் தன் ஆதிக்கத்துக்குப் பணிய வைக்க ;முனைவதற்கும் இடையே பெரும் வேறுபாடுண்டு. படைக் கருவிகள் தன்னிடம் உள்ளன என்று காரணம் காட்டி படை பலத்தை தன்னிடம் உள்ளன என்று காரணம் காட்டி படை வாத்தை எவ்வித இராணுவ நோக்கங்களுக்காகவோ அரசியல் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தலை நியாயப்படுதத முடியாது. வருந்தத்தக்க விதமாகப் போர் ஏற்பட்டு விடினும், எதித்த்துப் போரிடும் கட்சியினர் அதையே காரணம் காட்டி போரில் எதையும் செய்யலாம் என முடிவு கட்டிவிடுதல் சரியாகாது.
தாய்நாட்டின் சேவைக்காகத் தங்களையே அர்ப்பணித்துப் படையில் சோந்தவர்கள் இருக்கிறார்கள்;; இவர்கள் மக்களுடைய சுதந்திரத்தைக் காப்பதற்காகப் பணிபுரிகின்றவர்களாகத் தங்களைக் கருத வேண்டும்;; இவர்கள் தங்கள் பணியைச் சரியான விதத்தில் செய்வார்களேயாகில் உண்மையிலேயே அமைதியை நிலை நாட்டத் துணைபுரிபவர்களாவர்.
80. முழு போர்
அறிவியலின் துணை கொண்டு செய்யப்படும் போர்க் கருவிகள் பெருகிக் கொண்டு வருவதால் போரின பயங்கர விளைவுகளும் சீரழிவுகளும் வரம்புகடந்த விதத்தில் அதிகரித்து விட்டன. இத்தகைய போர்க்கருவிளைப் பயன்படுத்திச் செய்யப்படும் போர்ச் செயல்கள் மாபெரும் அழிவுகளையும் எவ்வித வேறுபாடுமின்றி விளைவிக்கப்படும் பெரும் கேடுகளை கொணரவல்லன. இந்தப் பேரழிவுகள் நியாயமான தற்காப்பின் வரம்புகளைப் பெருமளவில் கடந்து செல்வனவாக உள்ளன. இது மட்டுமன்று, வல்லரசுகளின் ஆயுதக் கிடங்குகளில் ஏற்கனவே குவிந்துகிடக்கின்ற இந்தப் போர்கருவிகள் எல்லாம் முழுமையாகக் கையாளப்பட்டனவென்றால் அதன் விளைவாக எதிரிகள் இருதரப்பினரும் ஒருவரையொருவர் ஏறக்குறைய முற்றும் முழுமையுமாகக் கூண்டோடு வேரறுக்கும் நிலைதான் ஏற்படும்;; இவை தவிர உலகில் எண்ணிறந்த பேரழிவுகள் விளையும்;; இந்தப் போர்க கருவிகளைப் பயன்படுத்துவதன் காரணமாக எழுகின்ற பின்விளைவுகளும் உயிரிழப்பில் கொண்டுவிடுவனவாக அமைந்துவிடும்.
மேற்கூறிய அனைத்தும் போரைப் பற்றி நாம் முற்றிலும் புதியதொருகண்ணோட்டத்தோடு சிந்திக்க நம்மைக் கட்டாயப்டுத்துகின்றன.2 தாங்கள் ஈடுபடுகின்றன போர்ச் செயல்கள் பற்றிப் பெரும் கணக்குக் கொடுக்க வேண்டும். என்பதை இன்றைய மனிதர்கள் உணர்ந்திட வேண்டும். ஏனெனில் வரவிருக்கும் காலங்களின் போக்கு இவர்கள் ;இன்று எடுக்கும் தீர்வு முடிவுகளைப் பொறுத்தே பெரிதும் அமைந்திருக்கும்.
இவற்றைக் கருத்தில் கொண்டு இத்திருச்சங்கம் அண்மைக் காலத் திருத்தந்தையர்கள் முழு போர் ஏற்கெனவே உறுதியாத் தெரிவித்துள்ள கண்டனங்களைத் தன்னுடையவையாக்கி; கொண்டு அறிக்கையிடவதாவது;;
முழு நகரங்களையோ பெரும் நிலப்பகுதிகளையோ அவைகளில் வாழும் மக்களோடு எவ்விதப் பாகுபாடுமின்றி அழிக்க முனைகின்ற எந்தப் போhச் செயலும் கடவுளுக்கும் ஏன் மனிதருக்குமே எதிரான பெரும் பாதகம் ஆகும். எவ்வித தயக்கமுமின்றி, உறுதியோடு இக்கொடும் பாதகத்தைக் கண்டனம் செய்யவேண்டும்.
இன்றைய காலத்தில் நிகழக் கூடுமான போர் தனிப்பட்ட ஆபத்தை தன்னுள் கொண்டள்ளது;; இந்த ஆபத்த எதில் அடங்கியிருக்கிறதென்றால், அண்மைக்கால அறிவியலின் துணை கொண்டு செய்யப்படும் போhக்கருவிகளை தம்மிடம் கொண்டிருப்போர் மேற்கூறிய கொடும் பாதகங்களை இழைப்பதற்கு இன்றைய போர் ஒருவிதத்தில் அவர்;களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது; மேலும் எவ்விதத்தலும் தவிர்க்க முடியாத ஒரு தொடர் நிகழ்வுபோல இன்றைய போரானது மிகக் கொடிய முடிவுகளை எடுக்க மனிதர்களைத் தூண்டிவிடக் கூடும். இத்தகைய ஒருநிலை எதிர்காலத்தில் ஒரு போதுமே நிகழலாகாது என்பதற்காகா உலகனைத்திலுமிருந்து வந்து ஒன்றாய்க கூடியுள்ள ஆயர்கள் உல்லா மனிதரையும், சிற்ப்பாக நாட்டு ஆட்சித் தலைவர்களையும் மற்றும் இராணுவ அதிகாரிகளையும் இறைஞ்சி பேண்டுகின்றனர். கடவுளின் முன்னிலையிலும் அனைத்துலக மனித குலத்தின் முன்னிலையிலும் எத்தகைய பெரும் பொறுப்பைத் தாங்கள் தம் தலைமேல் கொண்டுள்ளார்கள் என்பதை இடையறாது கருத்தில் கொண்ட செயல்படுமாறு ஆயர்கள் அவர்களைக் கேட்டுக் கொள்கிறார்கள்.
81. போர்க் கருவிகள் குவிப்பு
போர்க் காலத்தில் பயன்படுத்தும் நோக்கோடு மட்டுமே அறிவியலின் துணைகொண்டு செய்யப்படும் படைக் கருவிகள் குவிக்கப்படவில்லை என்பது தெளிவு. ஒவ்வொரு தரப்பினருடையவும் தற்பாதுகாப்பு ஆற்றல் எதிரியை மின்னல் வேகத்தில் தாக்கிக் ;கீழ்ப்படுத்துவகற்கான சக்தியில் அடங்கியிருக்கிறதென்று கருதப்படுகிறது; ஆகவே ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போகிற இப்படைக் கருவிகள் குவிப்பானது, போர் தொடுப்பார்கள் என்று கருதப்படக்கூடிய எதிரிகளை அச்சுறுத்துவற்காகப் புதிரான ஒரு விதத்தில் பயன்படுகிறது. நாடுகளுக்கிடையே இன்று ஒரு விதத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இவ்வழிதான் பிற எல்லா வழிக்ளையும் விட ஆற்றல் மிக்கது எனக் கருதுவார் பலருளர்.
தாக்குதலைத் தடுப்பதற்காக மேற்கூறிய வழியைப் பின்பற்றுவது பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை; ஆனால் ஒன்றை மட்டும் மனிதர்கள் உறுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதாவது போர்க்கலங்களைக் குவிப்பதில் எண்ணிறந்த நாடுகள் ஈடுபட்டுள்ளனர்; அமைதியை உறுதியாக நிலைநாட்டவதற்கு ஐயத்துக்கு இடம் வகுக்காத வழி போர்க் கலக் குவிப்பு அன்று போர்க் கருவிகளைக் குவிப்பதன் விளைவாக நாடுகளுக்கிடையே ஏற்படக் கூடுமான ஒருவித சமநிலையானது நீடித்து நிற்கின்ற உண்மையான அமைதி ஆகிவிடாது எனவே போர்க்களக் குவிப்பால் எழக்கூடிய சமநிலையானது போர் எழுவதற்கான காரணங்களை வேரறுத்துவிடுவதில்லை; மாறாக இக்காரணங்கள் படிப்படியாக மோசமாகும் ஆபத்து தான் எழும். புதுப்புதுப் போர்க்கருவிகளைத் தயாரிப்பதில் கணக்கிலடங்காச்ட செல்வத்தை வாரி இறைக்கம் ;வரை உலக ஐழுவதிலும் இன்று நிலவுகினற, எல்லையற்ற இழிநிலைகளுக்குப் போதிய தீர்வு காண்பது இயலாத ஒன்று. நாடுகளுக்கிடையெ எழும் பிணக்குக்ளை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்குப் பதிலாக அவற்றை உலகின் பிற பகுதிகளுக்கும் பரப்புகினற நிலை உள்ளது. இந்த இழிநிலை ஒழித்து கவலையால் வதங்கிடும் உலகை அக்கவலையினின்று விடுவித்து, உண்மையானதோர் அமைதியை ஆங்கு நிலைநாட்ட வேண்டும். இக்குறிக்கோளை அடைய வேண்டுமென்றால், சீர்திரந்திய மனித உள்ளங்களிலிருந்து பிறப்பெடுக்கின்ற புதிய வழிகளை மனிதர்கள் தேர்ந்தெடுத்துச் செயல்பட வேண்டும்.
எனவேதான் மீண்டும் ஒருமுறை திருச்சங்கம் அறிக்கையிட்டுக் கூறுவதாவது: படைக்கருவிகள் குவிப்பு மனித குலத்தைப் பீடித்துள்ள புரையோடிய புண்ணாக இருக்கிறது; அது ஏழைகளைத் தாங்கொண்ணாத் துன்பத்திற்கு ஆளாக்குகிறது. படைக் கருவிகள் குவிப்பு தொடர்ந்து நீடிக்குமானால் அது சாகடிக்கும் சக்தி வாய்ந்த அனைத்து அழைவுகளையும் ஒருநாள் ஏற்படுத்திவிடுமோ எனஉண்மையிலேயே அஞ்சவேண்டிய்ருக்கிறது; ஏனென்றால் அத்தகைய அழிவுகளைக் கொணர்வதற்கான கருவிகளை ஏற்கெனவே தயார் செய்துகொண்டிருக்கிறது.
பேரழிவுகளைக் கொணர்கின்ற வாய்ப்பபுகளை மனித குலம் உருவாக்கிவிட்டது; இதிலிருந்து நமக்கு ஓர் எச்சரிப்பும் விடுக்கப்படுகிறது: அதாவது, நாம் நமது சொந்தப் பொறுப்பை இன்னும் அதிகமாக உணர்ந்து, மனித மாண்போடு அதிக அளவு கொருந்திப் போகின்ற விதத்தில் நமது பிணக்குகளுக்குத் தீர்வு காண வழிவகைகளை உருவாக்க வேண்டும்; மேலிருந்து நமக்கு அருளப்பட்டு நாம் பெற்றுக் கொண்ட இடைவேளைக் காலத்தை மேற்கூறிய நோக்கங்களை அடைய நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நெடுங்காலமாக நம்மை அடிமைப்படுத்தி வந்திருக்கினற போரிலிருந்து நம்மை நாமே விடுவித்துக்கொள்ள வேண்டுமென்று இறைப் பராமரிப்பு நம்மிடம் வலியுறுத்தி வேண்டுகிறது. இம்முயற்சிகளை எடுக்க நாம் மறுப்போமேயானால் நாம் நடந்து கொண்டிருக்கம் தவறான வழி நம்மை எங்கு இட்டுச் செல்லுமோ நாமறியோம்.
82. போரை முற்றிலும் தடை செய்தல்: போரைத் தவிhக்க அனைதது நாட்டு முயற்சிகள்
ஆகவே நாடுகளுக்கிடையே உடன்பாடு ஏற்பட்டு எவ்வகைப் போருக்கும் முற்றிலுமாகத் தடை விதிக்கின்ற ஒரு காலம் விரைவில் வரவேண்டுமென முழுமூச்சுடன் முனைந்து செயல்பட வேண்டியது நம் கடமை என்பது வெள்ளிடமலை. போர்களை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டுமென்றால், எல்லாராலும் ஏற்று ஒப்புக் கொள்ளப்ட்ட ஓர் உலகளாவிய ஆட்சியமைப்ப நிறுவப்படுதல் வேண்டும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு நீதிமுறைச் செயல்பாடு உரிமைக்காப்பீடு ஆகியவற்றை உறுதியோடு அளிக்கவல்ல நடைமுறை அதிகராம் அந்த உலகளாவிய ஆட்சியமைப்புக்கு இருத்ல் வேண்டும். ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த ஆட்சியமைப்ப நிறுவப்படுவதற்கு முன்னால் இன்றைய உலகில் செயலபடுகின்ற அனைத்துலக உயர் நிறுவன அமைப்புகள் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்குத் திறம்படைத்த வழிவகைகளைக் கடைப்பிடிக்க ஊக்கமுடன் ஈடுபட வேண்டும். மக்களினங்கள் ஒன்றன்மேல் ஒன்று கொள்ளவேண்டிய நம்பிக்கையிலிருந்துதான் அமைதி பிறக்க வேண்டுமே ஒழிய போர்க்கருவிகளால் பயமுறுத்தி நாடுகளின் மீத அமைதியைத் திணித்தலாகாது; ஆகவே போர்க் கருவிக்குவிப்புக்கு இறுதியாக ஒரு முடிவு கட்டுவதற்கு அனைவரம் பாடுபட வேண்டும். படைக் கலக் குறைப்பு நிகழ்கின்ற காலம் விடிய வேண்டும். ஆனால் ஒரு சார்பாளர் மட்டுமே போர்க் கலங்களைக் குறைக்கக் கட்டுப்பட்டவராயராமல், ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரே சீராக அடியெடுத்து வைத்துப் போhக்கலக் குறைப்பை செயல்படுத்த வேண்டும்; மேலும் உண்மையான நடைமுறை ஆற்றல் வாய்ந்த காப்பீடுகள் போhக் கலக்குறைப்புக்குப் பக்கபலமாக அமைதல் வேண்டும்.4
இதற்கிடையில் போர் ஏற்படும் ஆபத்தை ஒழிப்பதற்காக ஏற்கனவெ செயல்பட்டுள்ள முயற்சிகளையும், இன்னும் ;செய்யப்பட்டு வருகின்ற முயற்சிகளையும் சாம் குறைவாக மதிப்பிடலாகாது அதற்க மறாக சிக்கல் நிறைந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாது விடமுடியாத நிலையிலும் கூட தாங்கள் வெறுத்தொதுக்குகின்ற போரை ஒழித்து விடுவதற்காக முயற்சி செய்கினற உண்ணிறந்த நல்லுள்ளத்தோருக்கு நாம் ஆதரவளிக்கக் கடமைப்பட்டுள்ளோம்; இவர்கள் எல்லாம் தங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ள உயரிய பொறுப்பபுகளைச் சார்ந்த மாபெரும் பணிகளை ஆற்றுபவர்கள் அதே நேரத்தில் மிக் கனமான தங்கள் பொறுப்பை உணர்ந்து போரை ஒழிக்கப் பாடுபடுகின்றவர்கள். ஆக உறுதி கொண்ட நெஞ்சோடு அமைதியைக் கட்டியெழுப்பும் இப்பணியில் விடாமுயற்சியோடும் துணிச்சலோடும் ஈடுபட இவர்களுக்கு ஆற்றலளிக்குமாறு கடவுளை நாம் இறைஞ்சிமன்றாட வேண்டும். அமைதியைக் கட்டியெழுப்பும் இப்பணி உண்மையிலேயே இவர்கள் மனிதர்களுக்குக் காட்டும் உயர்தனி அன்பின் வெளிப்படையாகும். இப்பணி இவர்கள் இன்று ஆற்ற வேண்டுமென்றால் இவர்கள் தங்களுடைய சிந்தனையையும இதயத்தையும் தங்கள் சொந்த நாட்டு எல்லைகளுக்கு அப்பால் செலுத்திடவேண்டும்; சொந்த நாட்டு நலனை மட்டுமே நாடுகின்ற தன்னலத்தைக் கைவிட்டுவிடவேண்டும். பிற நாடுகள் மேல் ஆதிக்கம் செலுத்தவேண்டும் எனும் பேராசையைத் துறந்துவிடவேண்டும்; மேலும் இவர்கள் பல்வேறு இன்னல்களுக்கிடையே நடைபயின்று இன்னம் அதிக ஒற்றமையை நோக்கிச் செல்லுகின்ற மனித குலம் முழுவதின் மேலும் உயர்ந்த மதிப்புக் கொண்டிருக்கவேண்டும்.
அமைதி மற்றும் படைக் கருவி நீக்கம் ஆகியவை சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி ஏற்கெனவெ பல விரிவான ஆய்வுகள் துணிச்சலோடும் விடாமுயற்சியோடும் செய்யப்பட்டுள்ளன் மேலம் அனைத்து நாட்ட மாநாடுகள் பலவும் இப்பொருள் பற்றி ஆய்ந்தள்ளன. இந்த அய்வுகளை எல்லாம் மேற்கூறி பெரும் சிக்கல்களுக்குத் தீர்வ காண்பதற்கான முதற்படி;கள் என் நாம் கொள்ளவேண்டும்; நடைமுறையிலான நல் விளைவுகளைப் பெற வேண்டுமாயின் வருங்காலத்தில் இந்த ஆய்வுகளை இன்னும் அதிக ஊக்கத்தோடு தொடர்ந்த ஆற்றவேண்டும். அதே நேரத்தில் மனிதர்கள் இக்காரியத்தைப் பொறுத்தமட்டில் தங்களது சொந்த மனநிலைகள் எவ்வாறுள்ளன என்பது பற்றிக் கவலையின்றி இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதாவவு இக்காரியங்கள் பற்றி ஒரு சிலர் எடுக்கின்ற முடிவுகளை மட்டுமே மனிதர் நம்பியிரத்தல் ஆகாது. ஏனென்றால் நாட்டுத் தலைவர்கள் பொதுமக்களுடைய கருத்துகளாலும் உள்ளத்து உணர்வுகளாலும் மிகப் பேரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டவர்களாக் உள்ளனர். பகைமை, இகழ்ச்சி , நம்பிக்கையின்மை ஆகிய உணர்ச்சிகள், மற்றும் இன வெறுப்பு, விடாப்பிடியான கருத்தியல் கோட்பாடுகள் ஆகியவையெல்லாம் மனிதர்களப் பிhக்கும்வரை மனிதர்களை ஒருவர் ஒருவருக்கு எதிரிகளாக ஆக்கம் வரை நாட்டுத் தலைவர்கள் அமைதியைக் கட்டியெழுப்ப முனைந்து செயல்பட்டாலும் அதனால் யாதொரு பயனும் காணப்போவதில்லை. எனவேதான் மக்களின் மனநிலைகள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும்; பொதுமக்கள் தெரிவிக்கின்ற கருத்தில் புதியதேர் எழுச்சி துலங்கிட வேண்டும்; இவையெல்லாம் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டிய இன்றிமையத் தேவைகள். யார் யார் கல்வி பணிக்காக் சிறப்பாக இளைஞர்களுக்குக் கல்வியளிப்தற்காகத் தங்களையே அர்ப்பணித்துள்ளார்களோ, அல்லது பொதுமக்கள் கருத்தை உருவாக்குகின்றார்களோ, அவர்களெல்லாம் அமைதியைக் கட்டியெழுப்பத் தூண்டுதலளிக்கும் புதிய உணர்வுகளை எல்லாருக்கும் கற்பிப்பதைத் தங்களின் சீரிய பொறுப்பாகவும் கடமையாகவும் கருத வேண்டும். உண்மையிலேயே, நம் அனைவருக்கும் ஓர் இதய மாற்றம் தேவை; மேலும் உலகம் அனைத்தையும் உற்றுப்பார்த்து, மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக நாம் ஒன்றுகூடி ஈடுபட்டுச் செய்யக்கூடுமானபணிகளை ஆற்றத் தேவையான ஒரு பரந்த கண்ணோட்டமும் நமக்குத் தேவை.
போலியான எதிர்ப்பார்ப்பால் நாம் ஏமாற்றமடைந்து விடக்கூடாது. பகைமையையும் வெறுப்புகளையும் நாம் ஒழித்து விட்டு. உறுதியான நேர்மையான ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதன் வாயிலாக வருங்காலத்தில் உலகளாவிய அமைதி ஏற்பட நாம் வழிவகுக்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால், ஏற்கெனவே பேராபத்திற்கு உட்பட்டிருக்கின்ற மனித குலம், வியக்கத்தக்கதோர் அறிவியலைத் தன்னிடம் கொண்டிருந்த போதிலும் சாவு என்னும் பயங்கர அமைதியை அன்றி வேறோர் அமைதியை அறிய முடியாத ஓர் அழிவுக்காலத்தை எட்டிவிடக்கூடும். ஆனால் நாம் வாழ்கின்ற காலத்தின் கவலைகளில் பங்கேற்கின்ற கிறிஸ்துவின் திருச்சபை மேற்கூறியவற்றை எடுத்துரைக்கின்ற அதே நேரத்தில் ஆழ்ந்த உறுதியோடு எதிh காலத்தில் நம்பிக்கை கொள்வதையும் கைவிட்டு விடவில்லை. திருத்தூதரிடமிருந்து வருகின்ற கீழ்க்காணும் செய்தியை நம் காலத்திற்குத் திரும்பத் திரும்ப, நேரம் வாய்த்தாலும் வாய்க்கவிட்டாலும், எடுத்துரைக்கத் திருச்சபை விரும்புகிறது. இச்செய்தியானது, நம் இதயங்கள் மாற்றமடைவதற்கு ''இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள்''5
பிரிவு 2
அனைத்துநாட்டுச் சமூகத்தை உருவாக்குதல்
83. பிணக்குகளில் காரணங்களும் அவற்றைத் தீர்க்கும் வழிகளும்
அமைதியை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் அதற்கு முதல் நிபந்தனை மனிதர்களிடையே நிலவும் பிணக்குகளுக்கான காரணங்களை வேரறுத்தலாகும். இவையெல்லாம் குறிப்பக அநீதிகள் போரை உரமிட்டு வளர்க்கின்றன. பொருளாதாரத்தில் நிலவுகின்ற பெரும் ஏற்றத்தாழ்வுகளும், இவற்றை ஒழித்திடத் தேவையான வழிவகைகளை விரைவாகச் செயல்படுத்தாமையும் மேற்கூறிய பிணக்குகள் எழுவதற்குப் பலவேளைகளிலும் காரணமாகின்றன் வேறு பணக்குகள் அடக்கி ஆளும் ஆதிக்க மனப்பாண்மையிலிருந்தும் ஆள்களின்மேல் கொள்கின்ற வெறுப்புணர்விலிருந்தும் பிறக்கின்றன் ஆழந்த காரணங்களை ஆய்ந்துபார்த்தோமென்றால் மேற்கூறிய பிணக்குகள் மனிதரின் பொறாமை பிறர்மேல் நம்பிக்கையின்மை, ஆணவம் மற்றம் பிற தன்னல தன்மை எழுச்சிகளின் காரணமாக ஏற்படுகின்றன. இத்துணைச் சீர்கேடுகளை மனிதரால் தாங்கிக்கொள்ள இயலாது. ஆகவே போரின் கொடுமைகளை நிகழாத காலத்திலும் கூட உலகம் மனிதரிடையே எழுகின்ற சண்டை சச்சரவுகளாலும் வன்முறைச் செயல்களாலலும் இடையறாது அல்லல்பட்டுக்கொண்டுதான் வருகிறது. மேலும் இதே தீமைகள் நாடுகளுக்கிடையே நிலவும் தொடர்புகளிலும் கூட காணக்கிடக்கின்றன் எனவே இத்தீமைகளை முறியடிக்கவும் அல்லது அவை நிகழாமல் தடுக்கவும் கட்டுக்கடங்காமல் போகினற வன்முறைகளை ஒடுக்கவும் வேண்டுமென்றால், அனைத்து நாட்டு நிறுவனங்கள் தங்களு;கிடையே ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் இன்னும் அதிகமாக வளர்த்து உறுதிப்படுத்த வேண்டியது மிக மிக இன்றியமையாதது; மேலும், அமைதியை வளர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட நிறுவனங்களை உருவாக்குவதற்கு ஊக்கத்துடன் தூண்டுதல் அளிப்பதும் மிகத் தேவையாகும்.
84. அனைத்து நாட்டுச் சமூகமும் அனைத்துலக நிறுவனங்களும்
இக்காலத்தில் எல்லாக குடிமக்களிடையேயும் மண்ணுலகிலுள்ள அனைத்து மக்களிடையேயும், ஒருவரோருவரோடு கொள்ளுகின்ற நெருக்கமான உறவுகளும் பிணைப்புகளும் வளர்ந்து கொண்டே வருகின்றன் இப்பின்னணியல்தான் உலகளாவிய பொது நலனில் அறிவாhந்த முறையில் ஈடுபட்டு அதை அதிகத் திடபமாக நடைமுறையில் கொணர வேண்டியுள்து; இக்குறிக்கோளை அடையவேண்டுமென்றால் அனைத்து நாட்டுச் சமூகம் இன்றைய உலகின் நடைமுறைத் தேவைகளுக்கேற்பப் பொருத்தமான விதத்தில் தன்னுடைய அமைப்பு முறைகளை இப்பொழுதே ஏற்படுத்திக் கொள்வது தேவை. தாங்கவியலாப் பற்றாக் குறைகளினால் இன்னம் வாடிக்கொண்டிருக்கினற உலகின் எண்ணிறந்த பகுதிகளைச் சிறப்பாகக் கருத்தல் கொண்டு மேற்கூறிய அமைப்பு முறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மேலே கூறப்பட்ட குறிக்கோள்களை அடைய வேண்டுமென்றால் அனைத்;துலகச் சமூக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் மனிதரின வௌ;வேறு தேவைகளை நிறைவுசெய்ய வேண்டும்; இத்தேவைகள் சமூக வாழ்வத் துறைகளைச் சார்ந்தனவாக இருக்கலாம் அல்லது உலகில் ஆங்காங்கே எழக்கூடுமான வௌ;வேறான தனிப்பட்ட சூழ்நிலைகளின் காரணமாகத் தோன்றுவனவாக இருக்கலாம். சமூக வாழ்வுத்துறைகளைச் சார்ந்த தேவைகளுள் உணவு, உடல் உள நலம், கல்வி, உழைப்பு போன்றவை உள்ளடங்கும். தனிப்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக எழுகின்ற தேவைகளை நிறைவு செய்தலுக்குக் கீழ்வரும் எடுத்துக்காட்டுகளைத் தரலாம்; முன்னேறி வரும் நாடுகளின் பொது வளர்ச்சியை மேம்படுத்தல், உலக முழுவதிலும் சிதறிக் கிடக்கின்ற அகதிகளின் அவல நிலையைப் போக்க முன்வருதல் நாடு பெயர்வோருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவுதல்.
உலக அளவலிலும் மண்டல அளவிலும் ஏற்கெனவெ இருந்து வருகினற அனைத்துலக நிறுவனங்கள் மனித குலத்தால் போற்றிப் பாராட்டத்தக்க பணிகளைப் புரிந்துவந்துள்ளன என்பதில் ஐயமில்லை. இந்டத நிறுவனங்கள் நம் ;காலத்தல் எழுமத் மிக முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்குடன் அனைத்து மனிதரையும் உள்ளடக்கும் ஒரு சமூகத்தை அனைத்துலக அளவில் நிறுவ அடித்தளம் அமைப்பதற்கான முதல் முயற்சிகளாக இருந்து வருகின்றன் மேலே குறிப்பிட்ட மிக முக்கியமான பிரச்சனைகள் இவையாகும்: மண்ணுலகின் எல்லாப் பகுதிகளிலும் முன்னேற்த்தை வளர்த்தல்; அனைத்து வகையான போர்களையும் நிகழாது தடுத்தல் இந்த எல்லாத் துறைகளிலும் கிறிஸ்தவரால்லதாருக்கும் இடையே உண்மையான ஒரு சகோதர உணர்வு மேன்மேலும் அதிகமாக உறுதிப்படுத்த முனைகிறது; இத்தகைய சகோதர உணர்வு பற்றி திருச்சபை மகிழ்ச்சியடைகிறது.
85. பொருளாதாரத் துறையில் அனைத்து நாட்டு ஒத்துழைப்பு
மனித குலம் இன்று ஒன்றுபட்டு இணைந்திருப்பதன் காரணமாக பொருளாதராத் துறையிலும் அதிக நெருக்கமான அளவில் அனைத்து நாட்டு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஏறக்குறைய எல்லா மக்களினத்தாரும் ஒரசியல் சுதந்திரம் அடைந்துவிட்டார்கள் என்பது உண்மைதான்; இருப்பினும் மிதமிஞ்சிய ஏற்றத்தாழ்வுகளிலிருந்தும் அளவு கடந்த விதத்தில் பிறரைச சார்ந்திருக்கும் எல்லா முறைகளிலுமிருந்தும், அளவு கடந்த விதத்தில் பிறரைச் சார்ந்திருக்கம் எல்லா முளைகளிலிருந்தும், கடினமாக உள்நாட்டு இடர்பாடுகளிலிருந்தும் அவர்கள் விடுதலை அடைய இன்னம் ;நெடுநாள் ஆகும்.
ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அதற்க மனித வளமும் நிதி வளமும் தேவைப்படுகின்றன. சமூகஈ மற்றம் பொரளாதார நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும் கல்வி மூலமும் தொழில் பயிற்சி மூலமும் தயாரிக்கப்பட வேண்டும். இதற்க வெளிநாட்டு வல்லுநர்களின் உதவி தேவையாகிறது; இவ்வாறு உதவி செயிகின்றவர்கள் ஆதிக்கம் செலுத்துபவர் போல் நடந்து கொள்ளாமல், உதவியாளராகவும் ஒத்துழைப்பராளராகவும்செயல்பட வேண்டும். இன்றை உலகில் நிலவும் வாணிக வழக்கில் அடிப்படையான மாற்றங்கள் நிகழ்ந்தாலொழிய வளர்நதுவரும் நாடுகள் பொருளுதவி பெற இயலாது. மேலும் பிற உதவிகளும் வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்நதுவரும் நாடுகளுக்கு அளிக்க வேண்டும்; இத்தகைய உதவிகள் நன்கொடை வடிவிலோ, கடன் வடிவிலோ பண முதலீட்டு வடிவிலோ இருக்கலாம் இவ்வதவிகளை அளிப்பவர்கள் தாராள மனத்துடனும் ஆதாய ஆர்பமின்றியும் அவற்றை அளிக்க வேண்டும்; பெற்றுக்கொள்பவர்களோமுழ நேர்மையோடு அவற்றைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
உலகளாவிய முறையில் உண்மையானதொரு பொருளாதார அமைப்பை உருவாக்க வேண்டுமென்றால், கொள்ளை ஆதாய வேட்கை, தன்னல மனப்பான்மையோடு தன் சொந்த நாட்டு நலனைத் தேடுதல், அரசியல் ஆதிக்கத்தைப் பிறர்மேல் திணிக்கம் வெறி இராணுவத்தை வலுப்படுத்தும் நேர்ச்சி, ஒரு குறிப்பிட்ட கொள்கைக் கோட்பாட்டைப் பரப்பவோ பிறர்மேல் கிணிக்வே மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி திட்டங்கள் ஆகிய அனைத்தையும் குழிதோண்டிப்புதைக்க வேண்டும். பொரளாதார மற்றும் சமூகத் தறைகளில் பல அமைப்பு முறைகள் பரிந்துரைக்கப்டுவதை நாம் பார்க்கிறோம். இவற்றில் தோச்சிபெற்ற அறிஞர்கள் நலமானதொரு உலக வாணிபத்தை உருபாக்குவதற்கான பொது அடிப்படைகளை மேற்கூறிய வேறுபட்ட அமைப்பு முறைகளில் கண்டுபிடித்தல் பெரிதும் நலம் பயக்கும். ஒவ்வொருவரும் தங்கள் தவறான முற்சாய்வுகளைத் துறந்துவிட்டு, நேர்மையான மனத்தோடு உரையாடலில் ஈடுபட விரைந்து முன்வருவார்களேயானால் இக்குறிக்கோளை எளிதில் அடையலாம்.
86. பயனுள்ள சில வழிமுறைகள்
மேற்கூறிய ஒத்துழைப்பைச் செயல்படுத்துவதற்குக் கீழ்வரும் வழிமுறைகள் பயனுள்ளபையாய் இருக்கும். (அ) வாளர்ந்துவரும் நாடுகள் தங்கள் குமக்களின் முழு மனித வளர்ச்சியே முன்னெற்றத்தின குறிக்கோள் என்பதை உள்ளத்தில் ஆழப் பதித்து அக்குறிக்கோளை அடையப் பாடுபட வேண்டும்: மேலும் முன்னேற்றம் என்பது எத்தகைய குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும் என வெளிப்படையாகவும் ஐயத்திற்கு இடமின்றியும் அவை வரையறுத்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகத் தங்கள் சொந்த நாட்டு மக்களுடைய உழைப்பிலிருந்தும் அவர்களது தொழில் திறமையிலிருந்தும் தான் முன்னேற்றம் தோன்றி வளர்ச்சியுறுகிறது என்பதை வளாந்துவரும் நாடுகள் மறந்தவிடலாகாது. ஏiனென்றால், முன்னேற்றம் என்பது வெளிநாட்டு உதவிகளை மட்டுnமு சார்ந்திருத்தல் ஆகாது; மாறாக அனைத்திற்கும் மேலாக முன்னேற்றமானது வளர்ந்துவரும் நாடுகள் தங்கள் செல்வ வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதின் அடிப்படையிலும் அவ்வளங்களை தங்கள் நாட்டுப் பண்புகளுக்கும் ஏற்ப வளர்ப்பதின் அடிப்படையிலுமே தங்கள் நாட்டப பண்புகளுக்கு ஏற்ப வளர்பபதின் அடிப்படையிலுமே அமைந்தள்ளது. இவ்வாற செயல்படுதில் யார்யார் பிறர்மேல் அதிகச் செல்வாக்குக் கொண்டுள்ளார்களோ, அவர்கள் பிறர்க்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்.
(ஆ) மேற்கூறிய பொறுப்பபுகளை நிறைவேற்றுவதில். வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவுவது வளர்ச்சியடைந்த நாடுகளின் மிக முக்கிய கடமையாகும். எனவே, இந்த உலகளாவிய ஒத்துழைப்பை ஏற்படுது;துவ5தற்காக வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களையே மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, தங்கள் மனநிலைகளிலும் பொருள்சார் நிலைகளிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.
அதாவது, வளர்ச்சியடைந்த நாடகள் வலுக்குறைந்த ஏழை நாடுகளோடு ஒப்பந்த நோக்குடன் கலந்து பேசும்போது இந்நாடுகளுடைய நலனை மிக்க அக்கறையோடு கருத்தில் கொண்டிருக்க வேண்டும்: ஏனென்றால். இந்த ஏழை நாடுகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை விற்பதால் கிடைக்கும் வருவாயைக் கொண்டதான் தங்கள் வாழ்க்கைத் ;தேவைகளை நிறைவசெய்ய வேண்டிய நிலையில் உள்ளன.
(இ) முன்னேற்றத்தை ஒருங்கிணைத்து அதற்கு ஊக்கம் தருவது அனைத்து நாட்டுச் சமூகத்தின் பொறுப்பு இப்பொறுப்பை ஆற்றும்போது முன்னேற்றத்திற்கென ஒதுக்கப்பட்ட செல்;வ வளங்களை இயன்ற அளவ அதிகப் பயன்தரும் விதத்திலும் நீதிக்கு முழுமையாக உகந்த விதத்திலும் பகிர்ந்தளிக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டம். அனைத்து நாட்டுச் சமூகமானது கீழிருப்போர் செய்யக் கூடியதில் மேலிடம் தேவையின்றித் தலையிடக்கூடாது என்னும் தத்துவததை மறந்துவிடாமல் அதே அடிப்படையில் அமைந்த நெறிமுறைகளுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தக் கடமை கொண்டுள்ளது.
நாடுகளின் ஆற்றல்களைப் பார்க்கும்போது மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுக்ள உள்ளன. இந்த ஏற்றத்தாழ்வுகளை ஈடு செய்யும் நோக்குடன் அனைத்து நாட்டு வாணிபத்தை சிறப்பாக வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளோடு நடத்துகின்ற வாணிபத்தை வளர்க்கவும் அதை முறையாக ஒழுங்குபடுத்தவும் ஆற்றல் வாய்ந்த நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அனைத்துலக வாணிபம் சரியான முறையில் அமைக்கப்பட்டு அத்தோடுகூட, தொழில் நுட்பத் துறைகள் உதவிகள், பண்பாடு சார்ந்த உதவிகள். மற்றம் பண் உதவிகள் அகியவை வளாந்து வரும் நாடகளுக்க அளிக்ப்பட வேண்டும்; மேலும் இந்நாடுகள் தங்கள் பொருளாதாரத்தில் இசைவான முறையில் வளாச்சியடையத் தேவையான உதவிகளை வழங்க இயலுவதாக அந்த வாணிப ஒழுங்குமுறை இருக்க வேண்டும்.
பலசூழ்நிலைகளைப் பொறுத்தமட்டில், சமூக மற்றம் பொருளாதார அமைப்புகளை மாற்றியமைக்க வேண்டிய உடனடித் தேவை எழுந்துள்ளது. ஈண்டு, போதிய ஆய்வின்றி வழங்கப்படுகினற தொழில் நட்பத் தீர்வுகள் மட்டில் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். குறிப்பாக, பொருளாதார வசதிகளை மனிதருக்கு அளித்தாலும் அதே சமயம் மனிதருடைய ஆன்மீக இயல்புக்கும் வளர்ச்சிக்கும் எதிராகப் போகும் தொழில் நுட்பத் தீர்வுகள் குறித்து நாம் கவனமாயிருக்க வேண்டும். ஏனென்றால் ''மனிதல் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாககடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்'' (மத் 4:4). உண்மையிலேயே, கடவுள் மனித இனத்திடம் ஒப்படைத்துள்ள அருள்செல்வத்தின் ஒரு பகுதியை இந்த அருள்செல்பம் எங்கிருந்து வரகிறத என்பதைப் பலர் அறியாரிருப்பினும் கூட - மனிதக் குடும்பத்தின ஒவ்வொரு பகுதியினரும் தம்மிலேயும் தம்முடைய நலம் வாய்ந்த மரபுகளிலும் தாங்கி வருகின்றனர்.
87. மக்கள் தொகைப் பெருக்கப் பின்னணியில் அனைத்து நாட்டு ஒத்துழைப்பு
பல நாட்டு மக்கள் பற்பல சிக்கல்களுக்கு நடவே வருந்துகின்றனர்; அச்சிக்கல்களோட கூட குறிப்பாக விரைவாகப் பெருகிவரும் மக்கள்தொகைப் பிரச்சனையாலும் இன்று பல வேளைகளில் அம்மக்கள் மிகவும் அல்லல்படுகிறாhகள்: இப்பிரச்சனையைப் பொறுத்தமட்டில் அனைத்து நாட்டு ஒத்துழைப்பு இன்றியமையாத விதத்தில் தேவைப்படுகிளது. மனிதர்களின் வாழ்க்கைக்குத் தேவையான உணவும் பொருத்தமான கல்வியும் அளிப்பதற்கு எவையெல்லாம் அவசியமோ அவற்றை உருவாக்கி, மனித சமூகம் முழுவதற்கும் பயன்தரும் விதத்தில் அவற்றைப் பகிர்;ந்து கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது உடனடியாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று. இதற்காக எல்லா மனிதர்களும் சிறப்பாக செல்வ செழிப்புள்ள நாடுகள் முழுமையாகவும் ஆர்வத்தோடும் ஒத்துழைக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். மிகப் பல நாடுகள் தங்களது வாழ்க்கைத் தரத்தை நல்ல முறையில் மேம்மபடுத்த முடியும்; வாழ்க்கைத் தரத்தில் இம்மக்கள் வளர்ச்சி காண வேண்டுமென்றால் அவர்களுக்க மதன் முதலில் தகுந்த கல்விப் பயிற்சி மேரவ. இவ்வாறு பயிற்சி பெற்ற அவர்கள் வேளாண்மைத் தொழிலில் பண்டைக் கால முறைகளை விட்டு விட்டுப் புதிய தொழில் நுட்ப முறைகளைக் கையாளுவர்; இவ்வாறு கையாளும்போது அவாகள் தங்களது சூழ்நிலைக்கு உகந்த விதத்தில் தேவையான முன்மதியோடு செயல்படுவர்; அதே நோரத்தில் இவர்கள் அதிகச் சிறப்பானதொரு சமூக ஒழுங்கமைப்பைக் கொணர்வர்; நில உடைமைகளை அதிக அளவு இயற்கை நீதிக்கு உகந்த விதத்தில் பகிர்ந்தளிக்க வழிவகுப்பர். நாடுகளின் மக்கள் தொகைப் பிரச்சனையைச் சார்ந்தவற்றில் அந்தந்த நாட்டு அரசுக்கே உரிமைகளும் கடமைகளும் உண்டு என்பது தெளிவு: ஆனால் இக்காரியங்களைப் பொறுத்தமட்டில் அந்தந்த நாட்டு அரசுகள் பணித்தகுதியின் எல்லைகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, மக்கள் தொகைப் பிரச்சனை பற்றி அரசுக்குரிய உரிமைகளும் கடமைகளும் சமூகத்தையம் குடும்பத்தையும் பற்றி இயற்ற வெண்டிய சட்டங்கள், நாட்டுப்புற மக்கள் நகரங்களில் குடியேறுதல் நாட்டின் நிலை பற்றியம் அதன் தேவைகள் பற்றியும் செய்தி சேகரித்தல் ஆகிய காரியங்களைலெல்லாம் தேர்ச்சி பெற்ற கத்தோலிக்கர்கள், குறிப்பாக பல்கலைக்கழகங்களில், இவை பற்றிற ஆய்வுகளையும் செயல் ஈடுபாடகளையும் ஆர்பத்தோடு மேற்கொண்ட. தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும்.
உலக மக்கள் தொகை வளர்ச்சியை, அல்லது குறைந்தது ஒரு சில நாடகளனி மக்கள் தொகை வளாச்சயையாவது, எல்லாவித வழிமுநைகளையும் பயன்படுத்தி, அரசியல் ஆட்சியாளர்கள் எந்த விதத்திலாயினும் தலையிட்டு அடியோடு குறைத்திட வேண்டும் என்று பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். நிலைமை இவ்வாறிருப்பதனால், பொதுச்சங்கம் எல்லாருக்கும் பின்வரும் அறிவுரையை வழங்குகிறது அதாவது பொரு அரங்கிலோ தனிப்பட்ட விதத்திலோ ஆதரிக்கப்படுக்pன்ற, மற்றும் ஆங்காங்கே திணிக்கப்படுகின்ற அறநெறி பிறழ்ந்த தீர்வுகளைப் பற்றி அனைவரும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். ஏனெனில், திருமணம் செய்தகொள்ளவும் பிள்ளைகளைப் பெற்றெடுப்பது என ஆய்ந்த தீர்மான்க்கும் பொறுப்பு தாய்தந்தையரின் நேர்மையான முடிவைப் பொறுத்ததேயன்றி, பொது ஆட்சியாளரின் தீர்ப்புக் எக்காரணத்தை முன்னிட்டும் விட்டுவிடத் தக்கதன்று. ஆனால், தாங்கள் பெற்றெடுக்க விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதில் தாய்தந்தையர் நன்முறையில் உருவாகியகொரு மனச்சான்றின் அடிப்படையில் செயல்பட வேண்டும். எனவெ அறநெறிக்கு உகந்ததும் உண்மையான மனிதப் பண்புடைத்ததுமான பொறுப்புணர்வை அனைவரும் பெற்றிட வழிவகுக்கப்பட வேண்டும். இந்தப் பொறுப்புணர்வோ, கால இடச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இறைச் சட்டத்தைக் கடைப்பிடிப்பதாக இருந்திடல் தேவை. இந்நிலை ஏற்பட வேண்டுமாயின் கல்விச் சூழமைவுகளும் சமூகச் சூழ்நிலைகளும் ஏறக்குறைய எல்லா இடங்களிலுமே மாற்றப்பட்டு உயர்வுறச் செய்யப்பட வேண்டும்; அனைத்திற்கம் மேலான சம்யம் சார்ந்த பயிற்சி அல்லது குறைந்தது ஒரு முழுமையான அறநெறிக் கல்வியாவது வழங்கப்பட வேண்டும். மேலும் குழந்தைகளின் பிறப்ப எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்குத் திருமணத் தம்பதியருக்கு உதவக்கூடுமான வழிமுறைகளை ஆய்ந்து கண்டுபிடிப்பதில் அறிவியல் சார்ந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன் இத்தகைய வழிமுறைகள் உறுதியாக நிலைநாட்டப்பட்டனவாக இருந்தால், அவை அறநெறி ஒழுங்கமைப்போடு இசைந்து பொதுவானவாக இருந்தால், அவ்வழி முறைகளை ஆய்ந்து கண்டுபிடிப்பதில் ஏற்பட்டுள்ள அறிவியல் சார்ந்த முன்னேற்றங்களை மக்களுக்க விவேகமான விதத்தில் அறிவித்தல் கடமையாகும்.
88. உதவிகள் வழங்கக் கிறிஸ்தவர்கள் கடமைப்படடிருக்கிறார்கள்
அனைத்து நாட்டு உறவுகளை ஒழுங்குபடுத்துகின்ற அமைப்பானது முறையான சுதற்திரங்களை மதிக்கம் அடிப்படையிலும் எல்லாரையும் உடன்பிறப்புக்களாப் பிணைக்கும் நட்பின் அடிப்படையிலும் கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒன்று. இப்பணியை ஆற்றுவதில் கிறிஸ்தவர்கள் ஆர்வத்தோடும் முழு உள்;ளத்தோடும் ஒத்துழைக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் இவ்வாறு செயல்பட வேண்டுமென்பதற்கு இன்னமோர் ஆழ்ந்த காரணம் உண்டு. அதாவது, உலகின் மிகப் பெரும்பான்மையான உகுதிகள் இன்றுகூட எத்துணை அவலநிலையில் உழல்கின்றனவென்றால், கிறிஸ்துவே ஏழைகளின் வடிவில் வந்து தம்முடைய சீடர்களின அன்பு இரக்கத்தை உரத்த குரலிட்டு இறைஞ்சி வேண்டுவதுபோல் உள்ளது. கிறிஸ்தவர் என்னம் பெயரைத் தாங்கியுள்ள மக்களைப் பலகாறம் பெரும்பான்மையினராகக் கொண்டுள்ள ஒருசில நாடுகள் பெரமளவான செல்வச் செழிப்பில் வாழ்ந்து வருகின்றன் மறுபுறமோ, பிற நாடுகள் வாழ்க்கைக்கு இன்;றியமையாதவைகூட மறுக்கப்பட்ட நிலையில் உழன்று. பசி பிணி மற்றம் எல்லா வகையான அவலநிலைகளின் காரணமாகத் துன்புற்றுக் கொண்டிருக்கின்றன் இத்தகைய வெட்கக்கேடான நிலையானது மாறிட வேண்டும். உண்மையிலே, கிறிஸ்துவின் திருச்சபைக்கு மாட்சிமை தருவதாகவும் அடையாளச் சான்றாகவும் இருக்கவேண்டியது ஏழ்மை மனறிலையில் அன்புநிறை உள்ளமுமேயாகும்.
எனவே, பிற மனிதர்களுக்கும் மக்களினங்களுக்கும் உதவிசெய்வதற்காகத் தங்களையே அர்ப்பணித்தள்ள கிறிஸ்தவர்களை, குறிப்பாக இளைஞர்களை நாம் போற்றிப்புகழ கடமைப் பட்டிருக்கின்றோம்; அவர்களுக்கு உற்சாகமூட்டி உதவுவதும் நம் கடமை. மேலும் இக்காலத்தில் நிலவுகின்ற அவலநிலைகளை அகற்றுவத்ற்கு தம்மால் இயன்ற அளவு ஊக்கத்தோடு செயல்படுவது இறைமக்கள் அனைவருடையவும் கடமையாகும். இதில் ஆயர்கள் தம் வார்த்தையாலும் வாழ்க்கை முன்மாதிரியாலும் முன்னொடிகளாகச் செயல்படுவர். திருச்சபையின் தொன்மையுள்ள வழக்கில் இருந்துவந்ததுபோல, ஈண்டும் இறை மக்கள் தமது தேவைக்கு அதிகமாக இருப்பதிலிருந்து மட்டுமல்லாது தம்க்கு தேவையானவறிறிலிருந்துங்கூட உதவி செய்யக் கடமைப்பட்டவர்களாவர் .
மறைமாவட்டங்களிலும் நாடுகளிலும் உலகனைத்திலும் உதவிகளைச் சேகரித்துப் பகரிந்தளிக்கம் முறையானது வளைந்துகொடாத அமைப்புகள் மற்றம் வேறுபடுத்தப்படாமல், நன்முறையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். எங்கெல்லாம் பொருத்தமெனத்தென்படகிறதோ அங்கெல்லாம் கத்தோலிக்கர்கள் இப்பணியில் தங்கள் செயல்பாட்டைப் பிற கிறிஸ்தவர்களின் செயல்பாட்டோடு இணைத்திட வேண்டும். சமூகப் பணியும் அன்புப் பணியும் முற்பார்வையோடு திட்டமிடப்பட்டு ஒழுங்கு படுத்தப்படவேண்டும் என்பதை அன்பு மனப்பான்மையானது தடை செய்வதில்லை; நேர்மாறாக அத்தகைய செயல்பாட்டை அன்ப மனப்பான்மை பணிக்கிறது. எனவேதான் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் பணிபுரிவதற்காகத் தங்ளையே அர்ப்பணிக்க முன்வருபவர்கள் பொருத்தமானதொரு பயிற்சியை, குறிப்பாக இந்நோக்கத்திற்காக அமைந்துள்ள நிறுவனங்கள் வழியாகப் பெற்றுக் கொள்வது இன்றியமையாதது.
89. அனைத்து நாட்டுச் சமூகத்தில் திருச்சபை செயல் முறையில் பணியாற்ற வெண்டும்.
திருச்சபைக்கு கடவுளால் ஒப்படைக்கப்பட்ட பணி ஒன்றுள்ளது. எல்லா மனிதர்களுக்கம் நற்செய்தியைப் போதிப்பதாலும் அவர்களுக்கு அருள்செல்வங்களை பகிர்ந்தளிப்பதாலும் திருச்சபை இப்பணியை ஆற்றிவருகிறது; அதே நேரத்தில், திருச்சபை எல்லா இடங்களிலும் அமைதியை நிலைநாட்டவும், மனிதர்களிடையேயும் மக்களினங்களிடையேயும் சகோதர உணர்வால் உயிரூட்டம் பெறுகின்ற ஒரு வாழ்க்கைச் சமூகத்தை உருவாக்கத் தேவையான உறுதியான அடித்தளம் இடவும் தன் பங்கை நல்குகிறது. இறைச் சட்டத்தையம் இயங்கை அறநெறியையும் பற்றியவை அளிப்பதன் வாயிலாக அது அப்பணியைச் செய்கிறது. எனவெ மனிதர்கிகிடையே ஒத்துழைப்பைத் தூண்டியெழுப்பி வளர்ப்பதற்காத் திருச்சபை அனைத்து நாட்டுச் சமூகத்தில் உடனிருந்து செயல்படுவது திருச்சபையின் பொது நிறுவனங்கள் வழியாகவும் அதை;துக் கிறிஸ்தவர்களின முழுமையான மற்றும் நம்பகமான ஒத்துழைப்பாலும் நிகழும் அனைவருக்கம் பணிபுரிய வெண்டும் என்னும் ஒரே நோக்கத்தால் தூண்டப்பெற்றதாக இந்த ஒத்துழைப்ப அமைய வேண்டும்.
கிறிஸ்தவ மக்கள் தாங்கள் மனிதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்ற முறையில் பெற்றுள்ள பொறுப்பை உணர்நது, தாங்கள் ஏற்கெனவெ வாழ்ந்து வருகின்ற சூழ்நிலைகளுக்கு நடுவில் அனைத்துலகச் சமூகத்தோடு தாராள மனத்துடன் ஒத்துழைப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டியெழுப்ப வேண்டும்: இவ்வாறு செய்தால், அனைத்து நாட்டுச் சமூகத்திலி திருச்சபையின பணி அதிக பயனுள்ளதாய் அமையும். இக்காரியத்தைப் பொறுத்த மட்டில், சமயம் சார்ந்த கல்வி அளிக்கும்போது குடிமைக் கல்வி அளிக்கும் போதும் இளைஞர்களுக்குப் பயிற்சியளிப்பதில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்.
90. அனைத்து நாட்டு நிறுவனங்களில் கிறிஸ்தவர்கள் ஆற்ற வேண்டிய பணி
அனைத்து நாட்டு ஒத்துழைப்பை வளர்த்து விரிவுபடுத்துவதற்காக ஏற்கெனவெ ஏற்படுத்தப்பட்டுள்ள, அல்லது இன்p ஏற்படுத்தப்பட வேண்டிய அமைப்புகளில் கிறிஸ்தவர்கள் - தனி மனிதர்களாகவோ குழுக்களாகவோ - அளிக்கின்ற ஒத்துழைப்பானது அவர்கள்தம் அனைத்து நாட்டு ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்ற மிகச் சிறந்த முறையாக அமைகின்றது என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. மேலும் அமைதியும் சகோதரப் பண்பும் நிலவுகின்ற ஓர் அனைத்து நாட்டுச் சமூகத்தைக் கட்டி எழுப்ப வௌ;வேறு கத்தோலிக்க கழகங்கள் பற்பல பழிகளில் உதவிசெய்ய இயலும். இக்கழகங்களை வலுப்படுத்த வேண்டும். இதற்காக இக்கழகங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கையை அதிகரித்து அவர்களுக்கு நன்முறையில் பயிற்சி அளிக்க வேண்டும்; அவற்றிற்குத் தேவையான பொருள் உதவிகளைப் பெருக்க வேண்டும். அவற்றின் ஆற்றல்களi இசைவாக ஒருமுகப்படுத்த வேண்டும். உண்மையிலே, நாம் வாழும் இக்காலத்தில் கூட்டு முயற்சிகளின் வழியாகத்தான் பயன் நல்கும் செயல்களை ஆற்ற முடியும்; இன்றியமையாத உரையாடலில் ஈடுபட முடியும். மேலும் மேற்கூறிய வகையான கத்தோலிக்கக் கழகங்கள் ஓர் அனைத்துலக உணர்வை வளர்க்கப் பெரிதும் உதவுகின்றன. இவ்வுணர்வு கத்தோலிக்கருக்குப் பொருத்தமான ஒன்றே என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. மேலும், இக்கழகங்கள் உ;ணணையிலேயே உணர்வையும் பொறுப்பபுணர்பையும் தோற்றுவிக்கப் பெரிதும் உதவுகின்றன.
இறுதியாக, கத்தோலிக்கர், தங்களோடு இணைந்து நற்செய்தி அன்பை அறிக்கையிடுகின்ற பிரிந்த சகோதரர் மற்றும் உண்மையானதோர் அமைதியை நாழத் தேடுகின்ற அனைத்து மனிதரோடும் ஆக்கப்பூர்வமான விதத்திலும் ஒத்துழைக்க வேண்டும்.
அளவிலடங்கா இழிநிலை இன்றும்கூட மனித குலத்தின் பெரும் பகுதியைக் கொடுமைக்கு உள்ளாகிக் கொண்டு வருகிறது. இதைப் பொதுச் சங்கம் கருத்தில் கொண்டுள்ளது; மேலும், நீதியையும் ஏழைகள் மட்டில் எல்லா இடங்களிலும் காட்டப்பட வேண்டிய கிறிஸ்துவின் அன்பையும் பெருகச்செய்ய வேண்டும் என்னும் நோக்கத்தோடு பொதுச்சங்கம் அனைத்துலகத் திருச்சபை சிறந்த அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது மிகவும் பொருத்தமானது எனக் கருதுகிறது. வறுமையில் வாடுகின்ற நாடுகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் சமூக நீதியை நாடுகளுக்கிடையே வளர்ப்பதற்கும் கத்தோலிக்க சமுதாயத்தைத் தூண்டியெழுப்புவது மேற்கூறிய நிறுவனத்தின் பொறுப்பாக இருக்கும்.
முடிவுரை
91. ஒவ்வொரு கிறிஸ்தவருடையவும் தனிப்பட்ட சபையினுடையவும் பணி
இதுவரை கூறப்பட்டவை அனைத்தையும் இத்திருச்சங்கம் திருச்சபையின் கொள்கைக் கருவூலத்திலிருந்து எடுத்துரைத்துள்ளது. துணைபுரிய வேண்டும் என்பதே ஆகும். இம்மனிதர்கள் கடவுளில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கலாம், அல்லது வெளிப்படையாக அவரை ஏற்றுக் கொள்hதவர்ளாகவும் இருக்கலாம் இந்த மனிதர்கள் எல்லாரும் தங்கள் அழைத்தலின் முழுமையை அதிகத் தெளிவோடு உணர்ந்து கொள்ளவேண்டும். மனிதரின் சீரிய மாண்புக்கு உகந்த விதத்தில் உலகை மாற்றியமைக்க வேண்டும்; மிக ஆழ்ந்த அடிப்படையின் மேல் எழுகின்ற ஓர் உலகளாவிய சகோதரத்துவத்தை நாடித் தேட வேண்டும்; அன்பினால் தூண்டியெழுப்பப்பட்டு, நம் காலத்தில் எழுகின்ற மிக அவசரமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தாராள உள்ளத்தோடு முன்வந்து கூட்டு முயற்சியை மேற்கோள்ள வேண்டும். இதற்க துணைபுரி;யும் வகையில்தான் சங்கம் மேற்கூறியவற்றை எடுத்துரைத்தது.
மிகவும் வேறுபட்ட சூழ்;நிலைகளும் பண்பாட்டு பாணிகளம் இன்று நிலவுகின்ற. இப்பின்னணியல் பொதுச்சங்கம் இந்த ஏட்டின் மிகப்பல பகுதிகளில் பெரும்பாலும் பொதுப்படையாகவே பேசியுள்ளது. அதவும் வேண்டுமென்றே அவ்வாறு செய்துள்ளது மேலும் திருச்சபையில் ஏற்கெனவே படிப்பினையையே இந்த ஏட்டில்ட சங்கம் எடுத்துரைக்கிறது என்றாலும்கூட, இப்படிப்பனை இன்னம் அதிக ஊழமாக ஆய்வுக்க உட்படுத்தப்படடு விரிவாக்கப்பட வேண்டும். ஏனென்றால், தொடர்நது நிகழ்ந்து வருகின்ற வளர்ச்சிக்கு உட்பட்ட பல ஆய்வுப் பொரள்களைப் பற்றியே இவ்வேட்டின் பல பகுதிகளில் சங்கம் சிந்தனை செய்துள்ளது. இவண் வாங்கள் இறைவனின் வார்த்தையையும் நற்செய்திமனப்பான்மையையும் அடிப்படையாகக் கொண்ட எடுத்துரைத்துள்ள காரியங்களுள் பல எல்லாருக்கம் நிறைந்த நன்மை பயக்கம். இது எங்களது உறுதியான நம்பிக்கை. குறிப்பாக, கிறிஸ்தவ மச்சள் தங்கள் அருள்பணியாளர்களின் வழிநடத்தலின்கீழ் வௌ;வேறு மக்களினங்களுக்கும் சிந்தனைப் பாணிகளுக்கும் பொருத்தமான விதத்தில் மேற்கூறிய சாரியங்களைத் தழுவிமைப்பார்களேயானால் இக்காரியங்கள் எல்லாருக்கம் நிறைந்த நன்மை பயக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
92. எல்லா மனிதரிடையேயும் நிகழ வேண்டிய உரையாடல்
நற்செய்தியின் தூதுரையால் உலகம் அனைத்தையும் ஒளிரச்செய்வதும். ஒரு குறிப்பிட்ட நாடு, இனம், பண்பாட ஆகியவற்றைச் சார்ந்தவர் என்று பாராமல் எல்லா மனிதரையும் ஒரே ஆவிக்குக் கீழ் ஒற்றுமைக்குக் கொணர்வதும் திருச்சபைக்கு உரிய பணி ஆகும். தனது இப்பணியின் காரணமாகத் திருச்சபை ஒரு சகோதரத்துவ உறவின் வெளியடையாளமாகத் திகழும். இநமத சகோரத்துவ உறவோ நேர்மையானதோர் உரையாடவுக்கு வழிவகுத்து அந்த உரையாடலைப் பலப்படுத்துவதாக அமையும்.
மேற்கூறியவாறு திருச்சபை திகழ வேண்டுமென்றால், முதன் முதலில் திருச்சபைக்குள்ளெயே ஒருவர் ஒருவர் மட்டில் கொண்டிருக்கவேண்டிய மதிப்பு, மரியாதை ஒற்றுமை ஆகியவற்றை நாம் வளர்ச்சியுறச் செய்யவேண்டும். இவ்வாறு செய்யம்போது அங்குள்ள நியாயமான வேறுபாடகளை நாம் ஏற்ற மதிக்கவேண்டுமு;. இம்முறையில் செயல்பட்டால் கடவுளின் ஒரே மக்கள் குலமாக அமைந்துள்ள அனைவர் நடுவிலும் - அவர்கள் அரள்பணியாளர்களாயினும் சரி பிற கிறிஸ்தவர்களாயினும் சரி மேன்மேலும் அதிகப் பலன் நல்குகின்ற உரையாடல் தொடர்ந்த நிகழமுடியும். ஏனெனில், நம்பிக்கை கொண்டோரை ஒருங்கிணைக்கின்ற பிணைப்புகள் அவர்களைப் பிரித்து வைக்கின்ற வேறுபாடுகளைவிடவும் அதிக வலிமை வாய்ந்தன. அதாவது, இன்றியமையாதவற்றில் ஒற்றுமை, ஐயத்திற்கிடமானவற்றில் சுதந்திரம் எல்லாவற்றிலும் அன்ப நிலவட்டும்.1
அதே நேரத்தில், நம்மோடு இன்னம் முழமையான அன்புறவால் ஒன்றித்து வாழாத சகோதர, சகோதரிகளையும் அவர்களது சமூகங்களையும் நாம் உள்ளத்தால் அரவணைக்கிறோம். தந்தை, மகன், தூய ஆவி ஆகியோரை நம்பிக்கையால் அறிக்கையிடுவதாலும் அன்புப் பிணைப்பாலம் இவர்களோடு நாம் உண்மையிலேயே இணைந்துள்ளோம். கிறிஸ்துவை நம்பாத மக்கள் நடுவல்கூட பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்களின் ஒன்றிப்பை இன்று விரும்பி எதிர்நோக்கியிருக்கின்றனர் என்பதையும் நாம் நினைவில் கொண்டுள்ளொம். உண்மையிலேயே, தூய ஆவியின் வல்லமைமிக்க செயலாற்றலினால் எந்த அளவுக்குக் கறிஸ்தவ ஒன்றிப்பு உண்மையிலும் அன்பிலும் வளர்ச்சியடைகிறதோ, அந்த உளவுக்கு அது உலகம் அனைத்துக்குமே ஒற்றுமையினுடையவும் அமைதியினுடையவும் முன்னோடியாக மாறும். உனவே நமது சக்திகளை ஒருங்கணைப்போம்; மேலே குறிப்பிட்ட குறிக்கோளை நடைமுறையில் இன்று செயல்படுத்துவதற்கு மேன்மேலும் அதிகப் பொரத்தமான வழிகளைப் பயன்படுத்துவோம்; நற்செய்திக்கு நாளும் உண்மையுள்ளவர்களாலய் வாழ்வோம்; துணிச்சலோடும் சகோதர உணர்வோடும் மனித குடும்பத்திற்கு கிறிஸ்து இயேசுவிலட் கடவுளுடைய பிள்ளைகளை உள்ளடக்கிய ஒரு குடும்பமாக மாறிட அழைக்கப்பட்டுள்ள மனித குடும்பத்திற்க பணி செய்ய ஒத்துழைப்போம்
எனவே கடவுளை ஏற்றுக்கொள்கின்ற அனமத்து னம்தர் மட்டிலும் அடுத்படியாக நம் எண்ணத்தைத் திருப்புகின்றோம். இவர்கள் நம் மரபுகளிலெ சம்யம் சார்ந்த மற்றும் மனிதரைச் சார்ந்த விலைமதிப்பற்ற பல அம்சங்களைப் பாதுகாத்து வந்துள்ளனர். இவண், திறந்த உள்ளத்தோடு நாம் நடத்துகின்ற உரையாடல் ஆவியாரின் தூண்டுதல்களைப் பற்றுறதியோடு ஏற்றுக்கொண்டு அவற்றை ஆர்வமுடன் செயல்படுத்துவத்ற்கு நம் அனைவரக்கும் வழிகாட்டவேண்டும் என்பதே நம் பேராவல்.
மேற்கூறிய வகையில் உரையாடல் நிகழவேண்டுமென நாம் விரும்புகிறோம். உண்மையை நாடித் தேடவேண்டும் என்ற அன்பார்வத்தால் மட்டுமே தூண்டப்பட்டு நிகழ்த்தப்படுகின்ற இந்த உரையாடல், தகுந்த முன்மதிN;யாடும் நிகழ்த்தப்பட வேண்டும். நம்மைப் பொறுத்தமட்டில், இத்தகைய உரையாடலை எந்த ஒரு விதிவலக்குமின்றி எல்லா மனிதரோடும் நடத்த நாம் முன் வருகிறோமத். சீரிய மனித மதிப்பீட்டு நலன்களை ஆற்றிய பரம்பொரளை இன்னும் ஏற்றுக்கொள்ளாதவராக இருந்தாலும் சரி, திருச்சபைக்கு எதிராக உழந்த அதைப் பலவகைகளில் துன்புறுத்துவோராக இருந்தாலும் சரி இவர்களுடனும் உரையாடல் நடத்த நாம் விருப்;பம் கொண்டுள்ளோம். எல்லா மனிதரின் முதலும் முடிவுமாக இருப்பவர் தந்தையாம் இறைவனே; ஆகவே நம் எல்லோரும் உடன்பிறப்புகளாக இருந்திட அழைக்கப்பட்டள்ளோம். உண்மையில் நம் அனைவரக்கும் பொதுவான அழைத்தல் ஒன்றே. இது இறைப் பண்மையும் மிதப் பண்பையும் ஒருங்கிணையக் கொண்டள்ளதாகும். இக்காரஒத்தின் அடிப்படையில், நாம் வன்முறையையும் சூதுவாதுகளையும் தவித்த்துவிட்டு உண்மையான அதைதி நிலவும் உலகினைக் கட்டியெழுப்ப ஒன்றுபட்டு உழைக்க முடியும், உழைக்கவும் வேண்டும்.
93. உலகைக் கட்டியெழுப்பி, அதை நினைவுக்கு இட்டு செல்லல்.
''நீங்கள் ஒருவர் மற்நவரக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்''(யோவா13:35) இது ஆண்டவரது கூற்று. இச்சொற்களைக் கிறிஸ்தவர்கள் நினைவில் கொண்டிருக்க வேண்டம். அவ்வாறு செய்யும்போது. கிறிஸ்தவர்கள் தாங்கள் வாழ்கின்ற இக்காலத்தைச் சார்ந்த மக்களுக்கு மேன்மேலும் அதிகத் தாராளத்தோடு பயன்தரு முறையிலும் பணிசெய்வதைவிட வேறு எதையும் அதிக ஆவலோடு விரும்பிட முடியாது. கிறிஸ்தவர்கள் நற்செய்தியைப் பற்றுறுதியோடு ஏற்றுக்கொண்டு, அதன் ஆற்றலினால் திடம்பெற்று, நீதியை விருப்புடன் ஏற்பதோடு கூட அதைத் கடைப்பிடிக்கவும் செய்கின்ற அனைத்து மனிதரோடும் நம்மைப் பிணைத்தக்கொண்ட வாழும் அதே நேரத்தில் இவ்வுலகில் மாபொரும் பணியொன்றை நிறைவேற்ற வேண்டிய கடமையைத் தம்மேல் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இப்பணியை நிறைவேற்றியது பற்றி அவர்கள் இறுதி நாளில் அனைத்து மனிதரக்கம் தீர்ப்பு வழங்கவிருக்கின்ற ஆண்டவர் முன்னிலையில் கணக்கு ஒப்புவிக்க வேண்டியுள்ளது.''ஆண்டவரே, ஆண்டவரே'' எனச்சொல்பவர் எல்லாம் விண்ணரசுக்குள் செல்பதில்லை; தந்தையின் திருவுளத்தின்படி செய்யவும்,2ஊக்கமுடன் உழைப்பவர்களே அங்குப் போய்ச் சேர்வார்கள். தந்தைய்pன் திருவுளம் இதுவே. நம் சகோதரராகிய கிறிஸ்துவை நாம் சொல்லாலும் செயலாலும் நடைமுறையில் அன்புசெய்ய வேண்டும். இவ்வாறு உண்மைக்கு நாம் சான்று பகர வேண்டும்; வானகத் தந்தையினது அன்பின் மறைபொருளைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளவேண்டும். மேற்கூறியவாறு நாம் செயல்படும்போது, உலகனைத்திலும் வாழும் மனிதர்கள் உயிரோட்டமான ஓர் எதிர்நோக்கால் உந்தப்படுவார்கள். இந்த எதிர்நோக்கு தூய ஆவியின் ஒரு கொடையே; ஆண்டவரின் மாட்சியால் ஒளிரும் தாய்நாட்டில் இறுதியாக ஒருநாள் முழுமையான அமைதியையும் மகிழ்ச்சியையம் டைந்த கொள்வோம் என்பதே இந்த எதிர்நோக்கு.
நம்மில் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கு நினைப்பதற்கம் பேமலாக அனைத்தையும் செய்ய வல்லருமான கடவுளுக்கே திருச்சபையால் இயேசு கிறிஸ்து வழியாக தலைமுறை தலைமுறையாக என்றென்னும் மாட்சி உரித்தாகுக! ஆமென்! (எபே 3:20, 21).
இந்த அருள்பணி கோட்பாட்டு விளக்கத்தில் அவை ஒவ்வொன்றும் திருச்சங்கத் தந்தையின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும், கிறிஸ்து நமக்கு அளித்துள்ள திருதூதர் ஆணையுரிமையால் வணக்கத்துக்குரிய தந்தையருடன் இணைந்து, தூய ஆவியல் அவைகளை ஏற்றுக்கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிலைநாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டிய இவை யாவையும் கடவுளின மாட்சிமைக்காக பிரகடனப்படுத்துதம்படி ஆணையிடுகிறோம்.
| தூய பேதுரு பேராலயம் | பவுல். |
| உரோமை | கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர், |
| டிசம்பர் 7, 1965 |
கீழே தந்தையாரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.,
