இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள்

 

கிறிஸ்தவக் கல்வி
பற்றிய அறிக்கை

உட்புகுமுன்

திருத்தந்தை 23-ஆம் யோவான், தாம் பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் தூய ஆவியாரின் தூண்டுதலால் திருச்சபை அனைத்திற்கும் மறுமலர்ச்சி கொணரும் எண்ணத்துடன் ஒரு பொதுச்சங்கம் கூட்ட முடிவுசெய்தார்.

குறுகிய மரபுக் கண்ணோக்குடன் தயாரிக்கப்பட்டிருந்த இவ்வேட்டின் முதல் விவாதத் தொகுப்பு ''கத்தோலிக்கப் பள்ளிகள்'' என்ற தலைப்புப் பெற்றிருந்தது. சங்கத்தின் மூன்றாம் அமர்வின்போது இத்தலைப்பு ''கிறிஸ்தவக் கல்வி'' என்று மாற்றப்பட்டது. பல திருத்தங்கள் செய்யப்பட்டு, கடைசி விவாதத் தொகுப்பின் எட்டாவது வரைவு 1965, அக்டேபாபர் 10 ஆம் நாள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. வந்திருந்த 2325 தந்தையாரில் 2290 பேர் ஆதரவாகவும் 35 பேர் மட்டுமே எதிராகவும் வாக்களித்தனர்.

அளவிலே சிறியதாக இருந்தாலும் கிறிஸ்தவக் கல்வியின் ''பேராவணம்'' (ஆயபயெ ஊhயசவய) என இவ்வேட்டைக் குறிப்பிட்ட மோன்ட் ரெயால் கர்தினால் லெகர், விவாதத்தின்போதுள பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குப் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்டுள்ளனர் எனவும் தனியார் பள்ளிகளுக்குத் தேவையான அளவுக்கு அரசு தன் ஒத்துழைப்பையும் நிதியுதவியையும் தரக் கடமைப்பட்டது எனவும் அடிமரிக்கர் ஆயர் அழுத்திக் கூறினார். பெற்றோரின் தலையாய கடமைகளையும் அறநெறி வாழ்வைச் சார்ந்த வழிமுறைகளையும் தாங்கியதாக இவ்வறிக்கை அமைய வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. உயிரோட்டமுள்ள நம்பிக்கை வாழ்வு வளம் பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு கிறிஸ்தவக் கல்வி அமைய வேண்டும்: ஆராய்ச்சியில் ஈடுபட்டு முன்னோக்குப் பார்வையுடன் பீடுநடைபோடத் தடையாயிருக்கும் அடக்குமுறைகளை அகற்றிவிட்டு, தற்கால தேவைகளுக்கும் சமயம் அறிவியல் ஐயப்பாடுகளுக்குத் தீர்வுகாண முழு சுதந்திரத்தோடு பல்கலைக்கழகத்தினர் உழைக்க திருச்சபை வழிகாட்ட வேண்டும் என்றும் சில தந்தையர் கூறினர்.

அடிமட்ட மக்கள் கல்விபெற வாய்ப்பு உள்ளதா? கிறிஸ்தவப் பள்ளிகளில் பயிலாக் கிறிஸ்தவர்களின் நிலையென்ன? கிறிஸ்தவப் பள்ளிகளில் பயிலும் கிறிஜஸ்தவரல்லாதாரின் நிலையென்ன? கிறிஸ்தவக் கல்விக் கூடங்கள் திருத்தூதுப் பணிக்கு உதவுகின்றனவா? - இவை போன்ற வினாக்களைத் தொடுத்தனர் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வந்த ஆயர்கள்.

மனிதரின் மண்ணுலக வாழ்வு விண்ணுலக அழைப்போடு தொடர்பு கொண்டுள்ளதால் இம்மண்ணுலக வாழ்க்கையிலும் கூட கிறிஸ்து நிறுவிய திருச்சபை அதிகக் கவனம் செலுத்த வேண்டும். எனவே, அனைத்து மக்களுக்கும் கல்வித் தொண்டாற்றுவது திருச்சபையின் சிறப்பானதொரு பொறுப்பு என்கின்றது இந்த ஏடு. தனிமனிதருக்கும் குழுக்களுக்கும் கல்வி பல நலன்களைக் கொணர்கிறது. ஒவ்வொரு மனிதரின் உடல், உள வளர்ச்சிக்கும் அறநெறிவாழ்வுக்கும் உதவும் வகையில் கல்வி அமைய வேண்டும் என இவ்வேடு விளக்குகிறது.

எல்லாவிதக் கல்வியும் மனிதரைச் சமூக வாழ்வில் பங்கெடுக்கத் தயாரிக்கிறது; ஒழுக்க நெறியின் மதிப்புகளை மனச்சான்றின் ஒளியில் ஆய்ந்து வாழ்வில் கடைப்பிடிக்க வரிகாட்டுகிறது. எனினும், கிறிஸ்தவக் கல்வி தனிச்சிறப்பு பெற்றுத் துலங்கவேண்டும் என்று இந்த ஏடு கூறுகிறது. கிறிஸ்தவர்கள் தாம்பெற்றுக்கொண்ட நம்பிக்கை எனும் கொடையை அதிக ஆழமாகப் புரிந்து உணர்ந்து செயல்படுவதற்குக் கிறிஸ்தவக் கல்வி துணைபுரிய வேண்டும்; கிறிஸ்துவிடம் காணப்படும் நிறைவைப் பெறும் அளவிற்கு முதிர்ச்சியடைந்து, மறையுடலின் வளர்ச்சிக்கும் நல்வாழ்விற்கும் தம் பொறுப்பான பங்கினை அளிக்க கிறிஸ்தவர் முன்வரவேண்டும் என்பது இந்த ஏடு விடுக்கும்வேண்டுகோள்.

நம் நாட்டில் கிறிஸ்தவச் சபைகள் எண்ணிறந்த கல்விக் கூடங்களை நிறுவி அவற்றை நடத்திவருகின்றன. பலரும் இப்பணியைப் பாராட்டுகின்றனர். என்றாலும் நம் கல்விப் பணியின் தரத்தைத் திறனாய்வு செய்வது தேவை. சிறுபான்மையினருக்கு உள்ள உரிமைகளின் அடிப்படையில்ந hம் கல்விப் பணி செய்வதால் நம் உரிமைகளைக் காப்பதில் குறியாயிருக்கிறோம். ஆனால், ஊழல்களுக்கு வித்திடும் மற்ற கல்விக் கூடங்களைப் போன்றே நம் பள்ளிகளும் அமைந்து, அரசு ஊழியர்களாகவே திருச்சபையாளர் பள்ளிகளில் அலுவல் புரிந்தால் அது கிறிஸ்தவ நற்செய்திக்கு எதிர்சாட்சியாக அமைந்துவிடும். பணம் ஈட்டும் குறிக்கோளோடு ஏழைகள் படிக்கமுடியா விதத்தில் பள்ளிகளைத் துவக்கி நடத்துவொரும்இன்று கிறிஸ்தவச் சபைகளில் உள்ளனர். இவர்களது ''பணி'' உண்மையான பணியாகுமா என்னும் கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். முறைசாராக் கல்வியும், விழ்ப்புணர்வுக் கல்வியும் நமது பள்ளிகளில் இடம் பெறுவது இன்றைய தேவையாகும்; ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கும், குறிப்பாகப் பள்ளிகளுக்குச் சென்று கல்வி அறிவு பெறமுடியாத அனைவருக்கும் அறிவினைப் புகட்டும் ஆக்கப்பணியில் தியாகத்தோடு ஈடுபடுவதுடன், பல மறைமாவட்டங்கள் ஒன்றிணைந்து, துறவியரின் ஒத்துழைப்போடு, தொழில்கல்லூரிகள், உயர்வுநிலை ஆய்வுமையங்களை அமைத்துக் கிறிஸ்தவர்களின் திறமைகளை வளர்க்கக் கவனம் செலுத்த வேண்டும்.

சமயச் சுதந்திரத்தைப் பெரிதும் போற்றி, தத்தம் சமய, அறநெறிக் கோட்பாடுகளின்படி மாணவர்கள் வளரக் கல்வி அதிகாரிகள் ஏற்பாடு செய்யவேண்டும், என்று பணிக்pன்ற சங்கத் தந்தையரின் விருப்பப்டி, கத்தோலிக்கப் பள்ளிகளிலே பயிலும் கத்தோலிக்கரல்லாதார் நிலைபற்றியும்பிற பள்ளிகளிலே பயிலும் கிறிஸ்தவர்கள் நிலைபற்றியும் அக்கறை கொண்டு, மனித மாண்பினை அனைவரிடமும் வளர்க்க திருச்சபை பாடுபட வேண்டும். ''வயதில் வளர வளர ஞானத்திலும் முதிர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் மென்மேலும் உகந்தவராயிருந்த இயேசுவைப் போல'' (லூக் 2:52) நம் கிறிஸ்தவக் கல்விக் கூடங்களில் பயில்பவர் அனைவரும் உருவாக இவ்வறிக்கை அடித்தளமாக அமையவேண்டும்.

பணி.சா.செசுதாசன்
பேராசிரியர்
திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி
திருச்சி
ஏப்ரல், 1998

கிறிஸ்தவக் கல்வி
பற்றி
இறை அடியாருக்கு அடியார் ஆயர் பவுல்
திருச்சங்கத் தந்தையரோடு இணைந்து
நினைவில் என்றும்நிலைக்குமாறு அருளிய அறிக்கை

முன்னுரை

கல்விக்கு மனிதருடைய வாழ்வில் இருக்கும் மாபெரும் முக்கியத்துவத்தையும்ழூ இன்றைய சமூக முன்னேற்றத்தில் பெருக்கிக் கொண்டேவரும் அதன் செல்வாக்கையும் தூய பொதுச்சங்கம் கவனத்தோடு ஆய்ந்துள்ளது.1 உண்மையாகவே இக்காலச் சூழமைவில் இளைஞர் கல்வியும் அஃதோடு வயது வந்தோருக்கு அளிக்கக்கூடுமான ஒருவித தொடர்பயிற்சியும் அதிக எளிதில் கைகூடுவனவாகவும் அதே நேரத்தில் அதிக தேவையானவையாகவும் மாறிவிட்டன. மனிதர் தம் மாண்பையும் பொறுப்பையும் அதிகமாக உணர உணரச் சமூக வாழ்வில் - குறிப்பாக பொருளாதார, அரசியல் துறைகளில் - நாளுக்கு நாள் அதிகமாகச் செயல்முறையில் பங்குகொள்ள விழைகின்றனர்.2 தொழில் நுட்பக்கலை, அறிவியல் ஆராய்ச்சி இவற்றின் வியத்தகு வளர்ச்சியும், நவீன சமூகத் தொடர்புக் கருவிகளும் அதிக ஓய்வு நேரத்தைக் கொண்டிருக்கும் இன்றைய மனிதர்களுக்குப் பண்பாட்டுக் கருவூலமும் அருள்நெறி வாழ்வு சார்ந்த வளங்களும் அதிக எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பை வழங்குகின்றன. குழுக்கள் மத்தியிலும் நாடுகள் மத்தியிலும் நிலவும் நெருங்கிய உறவில் மக்கள் ஒருவரை ஒருவர் நிறைவு செய்யக்கூடிய வாய்ப்பினையும் அவை அவர்களுக்கு வழங்குகின்றன.

எனவே, எங்கும் கல்விப் பணியை மேன்மேலும் வளர்க்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. கல்வியைப் பொறுத்த மட்டில் மக்கள், குறிப்பாகக் குழந்தைகளும் பெற்றோர்களும் கொண்டிருக்கும் அடிப்படை உரிமைகள் அறிக்கையிடப்படுகின்றன் பொது ஏடுகளிலும் பொறிக்கப்படுகின்றன.3 மாணவர் எண்ணிக்கை விரைவாக வளர வளர, பள்ளிகள் பரவலாகப் பெருகுகின்றன் முன்னேற்றம் அடைகின்றன. பிற கல்வி நிலையங்களும் நிறுவப்படுகின்றன. புதிய பரிசோதனைகள் வழியாகக் கல்வி முறைகளும் பயிற்சி முறைகளும் வளர்ச்சியுறுகின்றன. ஆனால் அதே நேரத்தில் எண்ணிறந்த குழந்தைகளும் இளைஞர்களும் இன்னும் பலரும், ஆரம்பக்கல்வி கூடப் பெறாதிருக்கின்றனர்; அநேகர் உண்மையையும் அன்பையும் ஒருங்கே வளர்க்கும் உகந்த கல்வி இல்லாதிருக்கின்றனர் என்பதும் உண்மையெனினும், மேற்கூறிய வசதிகளை எல்லா மனிதருக்கும் அளிக்கத் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்படுகினற்ன.

நிறைவாழ்வின் இறைத்திட்டத்தை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவும், அனைத்தையும் கிறிஸ்துவுக்குள் ஒன்று சேர்க்கவும் தன்னை நிறுவிய கடவுளிடமிருந்து கட்டளை பெற்றுள்ளது தூய தாய்த் திருச்சபை. இக்கட்டளையை நிறைவேற்ற அது மனிதரின் தாய்த் வாழ்க்கை முழுவதிலும் கவனம் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.4 மனிதரின் மண்ணுலக வாழ்வு விண்ணுலக அழைப்போடு தொடர்பு கொண்டுள்ளதால் இம்மண்ணுலக வாழ்க்கையிலும்கூட அது அதிகக் கவனம் செலுத்தவேண்டும். எனவே, கல்வி வளர்ச்சியிலும் விரிவாக்கத்திலும் திருச்சபைக்குத் தனிப்பட்டதொரு பொறுப்பு உண்டு. ஆகவே திருச்சங்கம் கிறிஸ்தவக் கல்வி பற்றிய, சிறப்பாகப் ப ள்ளிகளில் அளிக்கப்பெறும் கிறிஸ்தவக் கல்விப் பற்றிய, சில அடிப்படை தத்துவங்களை அறிக்கையிடுகின்றது. இத்தத்துவங்களைச் சங்கத்திற்குப் பின் அமைக்கப்படவிருக்கும் தனிப்பட்டதொரு பணிக்குழு இன்னும் அதிகமாக விரிவுபடுத்தும்; அவற்றை ஆயர் பேரவைகள் வெவ்வேறு இடங்களின் சூழ்நிலைக்கேற்பச் செயல்படுத்தும்.

கல்வி பெறுவதற்கான உரிமை அனைவருக்கும்உ ண்டு என்பதன் பொருள்

1. எந்த இனத்தையும் நிலையினையும் வயதினையும் சார்ந்த எல்லா மனித ஆளுக்குரிய மாண்புடையவர்கள் ஆதலால் கல்வி பெற விட்டுக் கொடுக்கமுடியாத ஓர் உரிமை கொண்டுள்ளார்கள்.5 இக்கல்வி அவர்களது வாழ்க்கை இலக்கிற்குப் பொருந்தியதாக இருக்கவேண்டும்;6 அவர்கள் பண்பிற்கும், பால் வேறுபாட்டிற்கும், அவர்களது நாட்டின் பண்பாட்டிற்கும் மரபுகளுக்கும் ஒத்ததாகவும் அமைதல் வேண்டும்; அஃதோடு இக்கல்வி உலகில் உண்மையான ஒற்றுமையையும் அமைதியையும் வளர்க்கும் வண்ணம் மக்கள் பிற நாட்டவரோடு சகோதர உறவு கொள்ள வழி வகுப்பதாகவும் இருத்தல் வேண்டும். உண்மையான கல்வியின் நோக்கம் யாதெனில், அது மனிதரின் இறுதிக் குறிக்கோளைக் கண்முன் கொண்டு அவர்களை உருவாக்கவேண்டும்; அஃதோடுகூட, எந்தச் சமூகங்களில் அவர்கள் உறுப்பினராக உள்ளாரோ, வ யது வந்தபின் எந்தச் சமூகங்களில் அவர்கள் பணிப்பொறுப்புகளை ஏற்கவிருக்கின்றார்களோ அந்தச் சமூகங்களின் நலனையும் கண்முன் கொண்டு மனிதரை கல்வியானது உருவாக்கவேண்டும்.

உளவியல், கல்விமுறைஇயல், செயல் முறைப் போதனை இயல் ஆகியவற்றின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு சிறுவரும் இளைஞரும் தங்கள் உடல், ஒழுக்க, அறிவுப் பண்புகளைப் பொருத்தமான முறையில் வ ளர்க்க அவர்களுக்குஉதவிட வேண்டும். துணிச்சலுடனும் விடாமுயற்சியுடனும் தடைகளை வென்று, தொடர்ந்து முயன்று தங்களது வாழ்வைத் தக்;கமுறையில் மேம்படுத்தவும், உண்மைச் சுதந்திரததை நாடவும் தேவையான முதிர்ந்த பொறுப்புணர்வைப் படிப்படியாகப் பெற அவர்களுக்குத் துணைபுரிய வேண்டும். ஆக்ப்பூர்வமாகவும் கவனத்தோடும் அளிக்கப்படும் பாலியல் கல்வியினை வயதில் வளர வளர அவர்கள் பெறவேண்டும். மேலும், அவர்கள் சமூக வாழ்வில் பங்கு கொள்ளத் தயாரிக்கப்படவேண்டும். அப்போதுதான் அவர்கள் தேவையான, பொருத்தமான வழிவகைகளில் முறையாகப் பயிற்சி பெற்றுச் சமுதாய வாழ்வின் பல்வேறு துறைகளில் செயல்முறையில் ஈடுபடமுடியும்; மற்றவர்களோடு கலந்துரையாடும் திறந்த மனங்கொண்டவர்களாக முடியும்; பொதுநல வளர்ச்சிக்காக விருப்புடன் செயலாற்றவும் முடியும்.

இதேபோல், சிறுவரும் இளைஞரும் ஒழுக்க மதிப்பு நலன்களை நேரிய மனச்சான்றோடு சீர்த்தூக்கிப்பார்க்கவும், உள்ளார்ந்த விதத்தில் அவற்றைப் பற்றுடன் தழுவவும், கடவுளை ஆழ்ந்து அறிந்து அன்பு செய்யவும் தூண்டப்பெறுவதற்கு உரிமை பெற்றுள்ளார்கள் எனத் திருச்சங்கம் அறிக்கையிடுகிறது. எனவே இளைஞர்கள் இத்தூய உரிமையை ஒருக்காலும் இழந்துவிடாதபடி பார்;த்துக்கொள்ள வேண்டுமென மக்களை ஆண்டு நடத்தும் தலைவர்களையும், கல்வித்துறை அதிகரிகளையும் திருச்சங்கம் உளமார வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. மேலும் கல்வி, பயிற்சி இவற்றிலிருந்து பிறக்கின்ற நல் விளைவுகள் உலகம் எக்கணுமுள்ள எல்லா மக்களையும் அதிக விரைவில் எட்டவேண்டும்7 என்னும் நோக்கத்தோடு கல்வித்துறை முழுவதிலும் திருச்சபையின் மக்கள் தாராள மனப்பான்மையோடு உழைக்குமாறு அவர்களுக்குத் திருச்சங்கம் அறிவுறுத்துகிறது.

கிறிஸ்தவக் கல்வி

2. கிறிஸ்தவக் கல்வி பெறும் உரிமை ல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் உண்டு; ஏனெனில் அவர்கள் தண்ணீராலும் தூய ஆவியாலும் மறுபிறப்புப் பெற்றதனால் புதிய படைப்பாகி,8 கடவுளின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறார்கள்; உண்மையிலேயே கடவுளின் பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள். இக்கல்வி இதுகாறும் விளக்கப்பட்ட மனித ஆளுக்குரிய முதிர்ச்சியை மட்டும் தன் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, கீழ்வரும் முக்கிய நோக்கங்களையும் கொண்டுள்ளது: திருமுழுக்குப்பேற்றோர் நிறைவாழ்வின் இறைத்திடடம் பற்றிய அறிவிற்குப் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பெறும்போது, தாம் பெற்ற நம்பிக்கை எனும் கொடையை நாளுக்கு நாள் அதிகமாக உணர்தல் வேண்டும். உண்மையாய் வழிபடுவோர் இறைத் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழபடக் கற்கவேண்டும் (காண் யோவா 4:23). மேலும், இறைத் தந்தையை, சிறப்பாகத் திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தின் வழியாக ஆராதிக்கக் கற்றுக்கொண்டு, கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பிற்கேற்ப உண்மையான நீதியும் தூய்மையும வெளிப்படும் (காண் எபே 4:22-24) வகையில் தங்கள் வாழ்வை அமைக்கப் பயிற்சி பெறவேண்டும். இவ்வாறு கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெருமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம் (காண் எபே 4:13) அவர்கள் மறையுடலின் வளர்ச்சிக்குத் தங்கள் பங்கினை அளித்து உதவவேண்டும்; மேலும் அவர்ள் தங்கள் அழைத்தலை உணர்ந்தவர்களாய், தாங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள் (காண் 1 பேது 3:15) உலகிற்குக் கிறிஸ்தவ உருக்கொடுக்க உதவவும் பழக வேண்டும். இவ்வாறு கிறிஸ்தவ உருக்கொடுப்பதால் இயற்கை மதிப்பு நலன்கள் கிறிஸ்துவால் மீட்கப்பட்ட மனிதரைப் பற்றிய முழுமையான அறிவுக் கண்ணோட்டத்தில் புரிந்துக்கொள்ளப்பட்டு, சமூகம் முழுவதற்கும் நலன் விளைவிப்பனவாக மாறும்.9 எனவே நம்பிக்கை கொள்வோர் எல்லோரும் சிறப்பாகத் திருச்சபையின் நம்பிக்கையாக உள்ள இளைஞரும்10 இந்தக் கிறிஸ்தவக் கல்வியைப் பெறுவதற்கு அனைத்து வழிவகைகளையும் செய்யவேண்டியது மக்களின் அருள்பணியாளர்களின் அதிமுக்கிய கடமை என்பதை அவர்களுக்கு இத்திருச்சங்கம் நினைவுப்படுத்துகிறது.

கல்வி அளிக்கப் பொறுப்புள்ளவர்கள்

3. பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு உயிர் அளித்திருக்கிறார்கள் என்பதால் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டியது அவர்களது தலையாய கடமை. எனவே அவர்களே குழந்தைகளின் முதன்மையான, முக்கியமான ஆசிரியர்கள் ஆவர் என்பது ஏற்றுக்கொள்ப்படவேண்டும்.11 பெற்றோர் அளிக்க வேண்டிய இக்கல்விப் பணி எவ்வளவு முக்கியமானதென்றால் அவர்கள் அதை அளிக்காமற் போனால் வேறெதுவாலும் அதை நிறைவு செய்வது மிகக்கடினம். தாய் தந்தையர் தங்களுடைய குழந்தைகள் முழுமையானதொரு கல்வியை - அதாவது தனி மனித மற்றும் சமூக் கல்வியை - அடைந்திடச் சாதகமான குடும்பச் சூழ்நிலையை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். இச்சூழ்நிலையானது கடவுள் மட்டிலும்மனிதர் மட்டிலும் காட்டப்படவேண்டிய அன்பு, மதிப்பு ஆகியவற்றால் உயிரூட்டம் பெற்றதாக அமைதல் வேண்டும். எனவே, குடும்பம்தான் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தேவையான சமூக நற்பண்புகளின் முதற்பள்ளியாகும். திருமணம் என்ற அருளடையாளம் தரும் அருளாலும் பொறுப்பாலும் வளம பெற்றது கிறிஸ்தவக் குடும்பம். இக்குடும்பத்திலேதான் பிள்ளைகள் திருமுழுக்கில் அவர்கள் பெற்ற நம்பிக்கைக்கேற்ப கடவுளைக் கண்டுணரவும், அவரை வழிபடவும், தம்மை அடுத்திருப்போருக்கு அன்பு காட்டவும் குழந்தை பருவத்திலிருந்தே மிகச் சிறப்பானவிதத்தில் கற்பிக்கப்பட வேண்டும்; இங்குதான் பிள்ளைகள் நல்லதொரு மனித சகூகத்தைப் பற்றியும் திருச்சபைப் பற்றியும் முதன்முதலாக அனுபவ முறையில் அறியவருகின்றனர்; இறுதியாக, குடும்பத்தின் வழியாகத்தான் பிள்ளைகள் மனிதரின் சமூகக் கூட்டு வாழ்விற்கும் மக்கள் குழுவிற்கும் படிப்படியாக இட்டுச் செல்லப்படுகின்றனர். எனவே மக்களின் வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் உண்மையான கிறிஸ்தவக் குடும்பம் எத்துணை முக்கியமானது என்பதைப் பெற்றோர் உணர்வார்களாக.12

கல்வி கற்பிக்கும் பொறுப்பு முதல்முதலில் குடும்பத்தையே சார்ந்ததெனினும் அது சமுதாயம் முழுவதன் உதவியை நாடி நிற்கிறது. உலகியல் காரியங்களில் பொதுநலத்திற்குத் தேவையானவை எவையோ அவற்றை வகுத்தளிக்கும், அமைத்துத்தரும் பொறுப்பு அரசியல் சமூகத்திற்கும் உண்டு. எனவே, பொற்றோருடையவும், கல்விப் பணியின் ஒரு பகுதியை அவர்களிடமிருந்து பெற்றுள்ள மற்றோருடையவும் உரிமைகளைத் தவிர அரசியல் சமூகம் சில உரிமைகளையும் கடமைகளையும் கொண்டுள்ளது. இளைஞர் கல்வியை பல்வேறு வழிகளிலும் மேம்படுத்துவது அரசியல் சமூகத்தின் கடமைகளுள் அடங்கும். அவற்றுள் கீழ்வருவனற்றைக் குறிப்பிடலாம்: பெற்றோருடையவும் கல்விப் பணியில் பங்குக் கொண்டுள்ள மற்றோருடையவும் கடமைகளையும் உரிமைகளையும் பாதுகாத்து அவர்களுக்கு உதவி புரிதல்; பெற்றோர்களும் மற்ற சமூக அமைப்புகளும் போதிய அளவு முயற்சிகள் எடுக்காத நிலையில், கீழிருப்போர் செய்யக்கூடியதில் மேலிடம் தேவையின்றி தலையிடக் கூடாது எனும் கொள்கைக்கேற்ப, பெற்றொரின் எதிர்பார்ப்புகளை மதித்துக் கல்விப் பணியை ஆற்றுதல்; மேலும் பொதுநலத் தேவைப்படி பள்ளிகளையும் பயிற்சி நிறுவுனங்களையும் தானே நிறுவுதல்.13

இறுதியாக, கல்வி பயிற்றும் கடமை தனிப்பட்டதொரு முறையில் திருச்சபைக்கு உண்டு. ஏனென்றால் அது கற்பிக்கும் திறன் வாய்ந்தது என்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒருமனித சமூகம் என்பதோடு மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து மக்களுக்கும் நிறைவாழ்வின் வழியை அறிக்கையிடும் பொறுப்பையும், நம்பிக்கை கொண்டோருக்குக் கறிஸ்துவின் வாழ்வை வழங்கிடும் பொறுப்பையும், இவ்வாழ்வின் முழுமையை அவர்கள் அடைய முயலும் வண்ணம்14 இடையறாத அக்கறையோடு அவர்களுகு;கு உதவிடும் பொறுப்பையும் கொண்டிருக்கிறது. தன் குழந்தைகளான இவர்களுக்குத் திருச்சபை ஒரு தாயைப்போல் இவர்களுடைய முழு வாழ்வையும் கிறிஸ்துவின் ஆவியால்நிரப்பிடக்கூடிய கல்வியை அளிக்க கடமைப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் மனிதரின் முழுநிறைவினை ஊக்குவிக்கவும், மண்ணகச் சமுதாய நலத்தைப் பேணவும், இன்னும் அதிக மனிதத் தன்மை வாய்ந்த உலகை உருவாக்கவும் 15 திருச்சபை எல்லா மக்களுக்கும் உதவி அளிக்கிறது.

கிறிஸ்தவக் கல்வியின் பல்வேறு முறகைள்

4. திருச்சபை தன் கல்விப் பொறுப்பை நிறைவேற்றுவதில் பொருத்தமான எல்லா வழிவகைகளையும் பயன்படுத்த அக்கறை கொண்டுள்ளது. எனினும் அது முக்கயமாகத் தனக்கே உரித்தான வழிவகைகiளில் தன் கவனத்தைச் செலுத்துகின்றது. இவற்றில் முதன்மையானது மறைக்கல்விப் போதனையாகும்.16 மறைக்கல்வி போதனை நம்பிக்கையை ஒளிர்வித்து உறுதிப்படுத்துகிறது; வாழ்வைக் கிறிஸ்துவின் மனநிலைக்கு உகந்தவிதத்தில் வளர்க்கின்றது; திருவழிபாட்டு மறைநிகழ்ச்சிகளில் உள்ளார்ந்த விதத்திலும் செயல் முறையிலும் பங்கேற்க இட்டுச் செல்கின்றது;17 திருத்தூதுப் பணியில் ஈடுபடத் தூண்டுகிறது. மேலும் திருச்சபை மனிதரின் பொது மரபுக் கருவூலத்தைச் சார்ந்த வேறுபல வழிகளாகிய சமூகத்தொடர்புக் கருவிகள்,18 உடற்பயிற்சிக் கழகங்கள், பண்பாட்டு வளர்ச்சிக் குழுக்கள், இளைஞர் மன்றங்கள், சிறப்பாகக் கல்விக் கூடங்கள் ஆகியவற்றையும் உள்ளங்களைப் பண்படுத்தவும் மனிதரை உருவாக்கவும் மிகவும்உதவுகின்ற பிற வழிகளையும் பெரிதும் மதித்து, தன் மனநிலையை அவற்றுள் புகுத்தி அவற்றை மேம்படுத்த முனைகின்றது.

கல்விக் கூடத்தின் முக்கியத்துவம்

5. கல்விப் பயிற்சிக்கான எல்லா வழிவகைகளுள்ளும் தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தது கல்விக் கூடம் ஆகும்.19 அறிவு ஆற்றல்களை அயராத அக்கறையோடு பேணி வளர்ப்பது இதன் பணிப்பொறுப்பு. இப்பொறுப்பை ஆற்றும் வேளையில் கல்விக்கூடம் சரியாக மதிப்பீடு செய்யும் ஆற்றலை வளர்க்கிறது; மாணவர்களை முந்திய தலைமுறைகளிடமிருந்து பெற்ற பண்பாட்டு மரபுக் கருவூலத்துள் இட்டுச் செல்கிறது; மதிப்பு நலன்களை உணரும் திறத்தை வளர்க்கின்றது; வாழ்க்கையில் மேற்கொள்ள இருக்கும் தொழிலுக்குத் தயார் செய்கின்றது; பல்வேறு பண்புகள் கொண்டவர்களும் பல்வேறு நிலைமைகளில் இருப்பவர்களுமான மாணவர்கள் மத்தியில் நட்புறவை உருவாக்கி ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் மனப்பான்மையை வளர்க்கிறது; மேலும் குடும்பங்களும், ஆசிரியர்களும், பண்பாட்டு, சமூக, சமய வாழ்வை வளர்க்கும் பல்வேறு கழகங்களும், அரசு சமூகமும், மனித குலம் முழுவதும் ஒன்றாகச் சேர்ந்து கல்விக் கூடத்தின் வேலையிலும் வளர்ச்சியிலும் பங்கெடுக்க வேண்டியிருப்பதால் எல்லாவற்றிற்கும் கல்விக் கூடமே ஒரு மையம்போல் அமைகிறது.

ஆகவே, பெற்றோர் தங்களுடைய கடமைகளை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு உதவி செய்து, மனித சகூகத்தின் சார்பாகப் பள்ளிகளில் கல்வி பயிற்றுவிக்கும் பணியை ஏற்றுக்கொள்பவர் அனைவரின் அழைப்பு உண்மையிலேஅழகுவாய்ந்தது, அருமையானது, மிகவும் முக்கியானதும்கூட. இவ்வழைப்பைச் செயல்படுத்த வேண்டுமாயின் சிறப்பான அறிவுத்திறன், இதய வளமை ஆகியவையும், மிக கவனமான பயிற்சியும், புத்துணர்ச்சியுற, தழுவியமைக்க எப்போதும் தயாராக இருக்கும் மனப்பான்மையும் தேவைப்படுகின்றன.

பெற்றோரின் கடமைகளும் உரிமைகளும்

6. தம் குழந்தைகளுக்குக் கல்விபுகட்ட முதன்மையான, விட்டுக் கொடுக்கமுடியாத உரிமையும் கடமையும் பெற்றோருக்கு உண்டு. எனவே கல்விக் கூடங்களைத் தேர்ந்தெடுப்பதில் உண்மையான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கவேண்டும். ஆகவே குடிமக்களின் உரிமைகளைக் காத்து ஆதரிக்கவேண்டிய பொறுப்புள்ள பொது அதிகாரிகள், பங்கீட்டு நீதியைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் தம் மனச்சான்றின்படி தங்கள் குழந்தைகளுக்கான கல்விக் கூடங்களை உண்மையான சுதந்திரத்துடன் தெர்ந்தெடுக்க இயலும் வகையில் பொதுநிதி உதவி பங்கிடப்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.20

எல்லாக் குடிமக்களையும் அறிவு வளர்ச்சியில் தகுந்த பங்கடையக் கூடியவர்கள் ஆக்குவதும், அவர்களுடைய கடிமைசார் கடமைகளையும் உரிமைகளையும் தகுந்தமுறையில் நிறைவேற்ற அவர்களைத் தயாரிப்பதும் அரசின் கடமையாகும். எனவேஈ பள்ளியல் கல்வி பெறுவதற்குச் சிறுவர்கள் கொண்டுள்ள உரிமையை அரசு பாதுகாக்கவேண்டும்; ஆசிரியர்களின் திறமையையும் கல்வியின் தரத்தையும் விழிப்பாயிருந்து கவனிக்கவேண்டும்; மாணவர்களின் உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டும். பொதுப்படையாக, பள்ளிகளின் பணி முழுவதையும் அரசு ஊக்குவிக்கவேண்டும். கீழிருப்போர் செய்யக்கூடியதில் மேலிடம் தேவையின்றித் தலையிடக்கூடாது என்னும் கருத்தினை எப்போதும் கண்முன் கொண்டு, கல்விக் கூடங்களை நடத்த தனக்கே முழு உரிமை உண்டென அரசு கருதலாகாது. ஏனெனில் கல்விக் கூடங்களை நடத்த அரசுக்கே முழு உரிமை உண்டென்னும் பார்வை மனிதரின் பிறப்புரிமைகளுக்கும், பண்பாடு வளர்வதற்கும் பரவுவதற்கும், அமைதியுடன் குடிமக்கள் உடடினாத்து வாழ்வதற்கும், எண்ணிறந்த சமூகங்களில் இன்று நிலவும் பன்னோக்குக் கண்ணோட்டத்திற்கும் முரணாக அமைந்துள்ளது.21

எனவே, திருச்சங்கம் உகந்த கல்வி முறைகள், பயிலும் முறைகள் ஆகியவற்றை ஆய்ந்து கண்டுபிடிப்பதிலும்ஈ இளைஞருக்குத் தக்க கல்வி தரவல்ல ஆசிரியர்களை உருவாக்குவதிலும் தாமாக முன்வந்து ஒத்துழைக்கக் கிறிஸ்தவர்களைத் தூண்டுகிறது. மேலும் சிறப்பாகப் பெற்றோர் கழகங்கள் வழியாகப் பள்ளி பணி முழுவதற்கும், முக்கியமாகப் பள்ளி கொடுக்கவேண்டிய ஒழுக்கக் கல்விக்கும் தொடர்ந்து உதவியளிக்கவும் கிறிஸ்தவர்களைத் திருச்சங்கம் தூண்டுகிறது.22

கல்விக் கூடங்களில் அளிக்க வேண்டிய ஒழுக்க மற்றும் சமயப் பயிற்சி

7. திருச்சபை தன் குழந்தைகள் அனைவரின் ஒழுக்க மற்றும் சமயக் கல்வியைத் தளரா ஊக்கத்துடன் கவனிக்க வேண்டிய தன் முக்கியமான பொறுப்பைத் தெளிவாக உணர்ந்து, கத்தோலிக்கப் பள்ளிகளல்லாத மற்ற பள்ளிகளில் கல்வி பயிலும் எண்ணிறந்த தன் பிள்ளைகள் மத்தியில் தனிப்பட்ட அன்பு காட்டி உதவி செய்வதன் மூலம் உடனிருக்க வேண்டும். இவ்வுடனிருப்பு கீழ்வரும் வழிகளில் வெளிப்படும்: இப்பிள்ளைகளின் ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் தம் வாழ்க்கையால் சான்று பகர்தல்; உடன் மாணவர்களின் திருத்தூதுப் பணி;23 குறிப்பாகப் ;பிள்ளைகளின் வயதிற்கும் சூழ்நிலைக்கு;ம ஏற்றவகையில் நிறைவாழ்வுப் போதனையைப் படிப்பித்தும் கால இடச் சூழலுக்கேற்பத் தகுந்த முயற்சிகளால் அருள்வாழ்வு சார்ந்த உதவியளித்தும் வருகின்ற திருப்பணியாளர்கள், பொது நிலையினரது பணி.

மேலும் பெற்றோர்களது முக்கியமான கடமை ஒன்றினைத் திருச்சபை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறது. அதாவது, தங்கள் குழந்தைகள் மேற்கூறிய வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் உலகியல் கல்விப் பயிற்சியோடு கூடக் கிறிஸ்தவக் கல்விப் பயிற்சியிலும் சேர்ந்து இசையுற முன்னேறவும் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்வதிலும், ஏன் அவற்றை வேண்டிப் பெற்றுக்கொள்வதிலும் பெற்றோரின் இந்த முக்கியக் கடமை அடங்கும். ஆகவேதான் இன்றைய சமுதாயத்தின் பன்னோக்கு நிiயைக் கருத்திற்கொண்டு, நியாயமான சமயச் சுதந்திரத்தை மதித்து, குடும்பங்கள் தங்களது தனிப்பட்ட சய மற்றும் ஒழுக்குக் கோட்பாடுகளின்படி எல்லாப் பள்ளிகளிலும் தம் பிள்ளைகளுகு;குக் கல்வி அளிக்க இயலும் வண்ணம் உதவி செய்கின்ற குழமைச் சமூகங்களையும் அவற்றின் அதிகாரிகளையும் குழுக்களையும் திருச்சபை வெகுவாய்ப் புகழ்கிறது.24

கத்தோலிக்கக் கல்விக்கூடங்கள்

8. கல்வித் துறையில் திருச்சபையின் உடனிருப்பைக் கத்தோலிக்கக் கல்விக்கூடம் சிறப்பாக வெளிக்hட:டகிறது. பண்பாட்டுக் குறிக்கொள்களை அடைவதிலும், இளைஞரை மனிதப் பண்புகளுக்கேற்ற முறையில் உருவாக்குதலிலும் கத்தோலிக்கக் கல்விக்கூடம் பிற கல்விக்கூடங்களுக்குப் பின்தங்கியதல்ல. ஆயினும், கத்தோலிக்கக் கல்விக்கூடத்திற்கே உரித்தான பணிகள் பின்வருமாறு: நற்செய்திப் பண்பில் தோய்ந்த சுதந்திரம், அன்பு ஆகியவற்றினால் உயிரூட்டப்பட்ட ஒரு சூழ்நிலையை பள்ளிச் சமூகத்தில் உருவாக்குதல்; இளைஞர்கள் தங்கள் ஆளுமையை வளர்க்கும் வேளையிலே திருமுழுக்கு தங்களில் உருவாக்கிய புதுப்படைப்பிற்கு ஏற்ப வளர அவர்களுக்கு உதவுதல்; இறுதியாக, உலகம், வாழ்வு, மனிதர் ஆகிய பொருள்கள் பற்றி மாணவர்கள் படிப்படியாக பெறும்அறிவானது நம்பிக்கையால் ஒளி பெறும்படியாக,25 மனிதப் பண்பாடு முழுவதையும் நிறைவாழ்வுச் செய்தியோடு இணைத்துத் தொடர்புபடுத்தல். இவ்வாறு முன்னோக்கிச் செல்லும் காலத்தின் நிலைமைகளுக்குத் தக்காற்போல் மாறவேண்டும் என்னும் நியதிப்படித் தன்னை மாற்றிக் கொண்டு மண்ணக நாட்டின் நலனைப் பயனுள்ள முறையில் வளர்க்கக் கத்தோலிக்கக் கல்விக்கூடம் தன் மாணவர்களைப் பயிற்றுவிக்கின்றது. மாணவர்கள் முன்மாதிரியான திருத்தூது வாழ்க்கை நடத்துவதால் மனித சமூகத்தில் நலம் பொருந்திய புளிப்புமாவு போல் செயல்படும் வண்ணம் அவர்களை இறையாட்சியைப் பரப்பும் பணிக்காகவும் தயாரிக்கின்றது.

எனவே, கடவுளின் மக்களிடம் ஒப்படைக்கப்படட பணியை நிறைவேற்றவும், திருச்சபைக்கும் மனித குலத்pற்கும் இடையே, இவ்விரு சாராருக்கும் நலம் பயக்கக்கூடிய முறையில், உரையாடலை வளர்க்கவும் உதவும் கத்தோலிக்கக் கல்விக்மூடம் நம்முடைய இன்றைய சூழ்நிலையிலும்கூட பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. ஆகவே, எவ்வகையான பள்ளிகளையும், எந்நிலையிலுமுள்ள பள்ளிகளையும் சுதந்திரத்தோடு நிறுவவும் நடத்தவும் திருச்சபைக்கு உள்ள உரிமையை ஏற்கனவே திருச்சபை ஆசிரியம் பல ஏடுகளில் அறிக்கையிட்ட உரிமையை26 மீண்டும் ஒரு முறை இத்திருச்சங்கம் வெளிப்படையாக எடுத்துலைரக்கின்றது. இத்தகைய உரிமையைச் செயல்படுத்துவது மனச்சான்றுச் சுதந்திரத்திற்கும், ஏன் பண்பாட்டு வளர்ச்சிக்குமே பெரிதும் உதவுகிறது என்பதை இத்திருச்சங்கம் நினைவுபடுத்துகிறது.

ஆயினும், கத்தோலிக்கக் கல்விக்கூடம் தன் குறிக்கோள்களையும் திட்டங்களையும் நிறைவேற்ற இயல்வதும் இயலாமல் இருப்பதும்எல்லாவற்றிற்கும் மேலாகத் தங்களையே பொறுத்துள்ளது என்பதை ஆசிரியர்கள் நினைவில் கொள்வார்களாக.27 எனவே, ஆசிரியர்கள் தங்களுடைய பணிக்குத் தனிப்படட அக்கறையுடன் தயாரிக்கப்படுதல் வேண்டும்; அதாவது, உலகியல் அறிவு, சமய அறிவு ஆகிய இரண்டிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அதற்குச் சான்றாகத் தகுந்த பட்டங்களும் பெற்றிருக்க வேண்டும்; தற்காலக் கண்டுபிடிப்புகளுக்கு ஒப்பக் கல்விக் பயிற்றுவிக்கும் கலையிலும் அவர்கள் தெர்ச்சித் திறம் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்களுக்குள்ளும், தம் மாணவர்களோடும் அன்பால் பிணைக்ப்பட்டவர்களாய், திருத்தூது உணர்வில் ஊறித் திளைத்து, தம் வாழ்வாலும்படிப்பினையாலும் ஒரே ஆசிரியரான கிறிஸ்துவுக்குச் சான்று பகரவேண்டும். அனைத்திற்கும் மேலாக, ஆசிரியர்கள் பெற்றோர்களோடு ஒன்றித்து உழைக்கவேண்டும்; அவர்களே, இணைந்து கல்வி அமைப்புத் திட்டம் முழுவதிலும் ஆண் பெண் இரு பாலார்க்கு இடையெ உள்ள வேறுபாட்டையும், இறைப் பராமரிப்பு குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஆணுக்கு என்றும் பெண்ணுக்கு என்றும் அமைத்துத் தந்திருக்கும் தனி நோக்கங்களையும் தக்க முறையில் கவனத்தில் கொள்ளவேண்டும்; தாமாகவே செயலாற்ற மாணவர்களை ஆசிரியர்கள் தூண்ட முனையவேண்டும். மாணவரின் கல்விக்கூட வாழ்க்கை முடிந்த பின்னரும் ஆசிரியர்கள் தம் ஆலொசனையாலும், நட்பாலும், திருச்சபையுணர்வில் ஊறிய தனிவகையான மாணவர் கழகங்களை அமைப்பதாலும் தொடர்ந்து அவர்களுக்கு உதவவும் வேண்டும். இவ்வாசிரியர்களின் பணி ஓர் உண்மையான திருத்தூதுப்பணி எனவும், தற்காலத்திற்கு மிக உகந்தது, தேவையானது எனவும், சமுதாயத்திற்குச் செய்யப்படும் ஓர் உண்மைச் சேவை எனவும், சமுதாயத்pற்குச் செய்யப்படும் ஓர் உண்மைச் சேவை எனவும் திருச்சங்கம் அறிக்கையிடுகிறது. இயன்றபோதும் இயன்ற இடங்களிலும் தங்கள் பிள்ளைகளைக் கத்தோலிக்கக் கல்விக்கூடங்களுகு;கு அனுப்புவதும், தம்மால் இயன்ற அளவிற்கு அவற்றை ஆதரிப்பதும், அவற்றோடு தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக ஒத்துழைப்பதும் கத்தோலிக்கப் பெற்றோரின் கடமை என்பதை அவர்களுக்குச் சங்கம் நினைவூட்டுகிறது.28

பல்வகையான கத்தோலிக்கக் கல்விக்கூடங்கள்

9. கத்தோலிக்கக் கல்விக்கூடம் வெவ்வேறு இடங்களின் சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு வேறுபட்ட வடிவங்களை ஏற்க முடியும் என்றாலும் திருச்சபையை எவ்வகையிலேனும் சார்ந்திருக்கும் அனைத்துக் கல்விக்கூடங்களும் மேலே விவரிக்கப்பட்ட கத்தோலிக்கக் கல்விக்கூடங்களும் மேலே விவரிக்கப்பட்ட கத்தோலிக்கக் கல்விக்கூடத்தின் இலட்சியச் சாயலுக்குத் தம்மால் இயன்ற அளவு ஒத்தமைய வேண்டும்.29 சிறப்பாக, புதுத் திருச்சபைகள் செயல்படும் நிலப்பகுதிகளில் அமைந்துள்ள கத்தோலிக்கரல்லா மாணவர்களும் பயிலுகின்ற கத்தோலிக்கக் கல்விக்கூடங்கள் மிக்க மதிப்பு வாய்ந்தவை எனத் திருச்சபை கருதுகிறது.

மேலும், கத்தோலிக்கக் கல்விக்கூடங்களை நிறுவதிலும் அவற்றை ஒழுங்குபடுத்துவதிலும் முன்னோக்கிச் செல்லும் இன்றைய காலத்தின் தேவைகளைக் கண்முன் கொள்ளவேண்டும். எனவே, கல்வியின் அடித்தளமாக அமையும் தொடக்கப் பள்ளிகளும் நடுநிலைப் பள்ளிகளும் தொடர்ந்து பேணி வளர்க்கப்படவேண்டும் என்றாலும், இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவைப்படும் கல்விக்கூடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். இப்படிப்பட்ட கல்விக்கூடங்களாவன: தொழிற்பயிற்சிக் கல்லூரிகள்,30 தொழில் நுட்பப் பள்ளிகள், முதியோர் கல்வி நிலையங்கள், சமூக சேவை முன்னேற்றப் பள்ளிகள், இயற்கையால் விளைந்த குறைபாட்டின் காரணமாகத்தனிப்பட்ட உதவி தேவைப்படுவோர்க்கென அமைந்த கல்வி நிறுவனங்கள், மறைக்கல்வி புகட்டுவதற்கும் மற்ற கல்வி வகைகளுக்கும் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் ஆகியனவாகும்.

கத்தோலிக்கக் கல்விக்கூடங்கள் தங்கள் கடமையை நாளுக்கு நாள் இன்னும் நல்ல முறையில் நிறைவேற்ற இயலுமாறும், சிறப்பாக, அவை இவ்வுலகச் செல்வமற்ற ஏழைகள், குடும்ப ஆதரவோ, அன்போ இல்லாதவர்கள், நம்பிக்கை எனும் அருள் கொடையினின்று அகன்றிருப்போர் ஆகியோரது தேவைகளைக் கவனிக்க இயலுமாறும்கல்விக் கூடங்களுக்குத் திருச்சபையின் அருள்பணியாளர்களும் அனைத்துக் கிறிஸ்தவர்களும் எவ்விதத் தியாமும் செய்ய முன்வந்து உதவிட வேண்டுமெனத் திருச்சபை வற்புறுத்தி வேண்டுகிறது.

கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழகத் துறைகளும்

10. இதுபோலவே, உயர்நிலைக் கல்விக்கூடங்கள், சிறப்பாகப்; பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகத் துறைகள் அகியவை பற்றியும் திருச்சபை மிகவும் கருத்தாயிருக்கிறது. இவ்வாறு தனது மேற்பார்வையில் இருக்கும்கல்விக்கூடங்களில் ஒவ்வொரு பாடமும் அதனதன் மூலக் கோட்பாடுகள், செயல்முறைகள் ஆகியவற்றிற்கு ஏற்ற முறையிலும் அறிவியல் ஆராய்ச்சிக்குரிய சுதந்திரத்துடனும் கற்பிக்கப்படுவதை அது தனது திட்டமிட்ட நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் இப்பாடங்களில் நாளுக்கு நாள் ஆழமான புரிதல் ஏற்படுகிறது. முன்னோக்கிச் செல்லும் இக்காலத்தின் புதிய கேள்விகள், ஆய்வுகள் இவற்றை மிகவும் கூர்ந்து கவனித்து, திருச்சபை வல்லுநர்களின், சிறப்பாகத் தூய அக்வீன் தோமாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி,31 நம்பிக்கையும் பகுத்தறிவும் எவ்வாறு ஒரே உண்மையில் இணைவுறுகின்றன என்பதை இன்னமும் தெளிவாக அறிந்து கொள்வும் முடிகிறது. இவ்வாறு, உயர் பண்பாட்டை வளர்ப்பதற்கான முயற்சியனைத்திலும் கிறிஸ்தவ மனப்பாங்கு பொதுவாக, நிலையாக, பரவலாக உடனிருக்கச் செய்யவேண்டும்; இக்கல்வி நிறுவுனங்களின் மாணவர்கள் உண்மையாகவே கல்வி அறிவில் தலைசிறந்தவர்களாயும், சமுதாயத்தில் பளுவான பொறுப்புகளையும் ஏற்கத் தயாராயிருப்பவர்களாயும், உலகில் நம்பிக்கைக்குச் சாட்டி பகருபவர்களாயும் உருவாக்கப் பெறல் வேண்டும்.32

இறையியல் துறை இல்லாக் கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்களின் பொதுநிலை மாணவர்களுக்கும் உகந்த விரிவுரைகள் அளிக்கும் ஓர் இறையியல் பிரிவு அல்லது இறையியலுக்கென ஒரு தனி உயர்மட்டத் துறை இருத்தல்வேண்டும். உயர்ந்த நிலை அறிவியல் முறைப்படி அமைந்த ஆராய்ச்சிகளின் வழியாகத்தான் அறிவியல் துறைகள் பெரும்பாலும் முன்னேற முடியும். எனவே அறிவியல் முறைப்படி அமைந்த ஆராய்ச்சி வளர்ச்சிக்கு முதலிடம்கொடுக்கும் கல்விப் பிரிவுகளைக் கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்களிலும், கல்கலைக்கழகத் துறைகளிலும் பெரிதும் பேணி வளர்க்க வேண்டும்.

கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களும் பல்கலைக் கழகத் துறைகளும் பொருத்தமாக உலகின் பல்வேறு பாகங்களிலும் பரவலாக நிறுவப்படவேண்டும் எனவும், வளர்க்கப்பட வேண்டும் எனவும் திருச்சங்கம் பரிந்துரைக்கிறது. ஆனால் இக்கல்விக் கூடங்கள் தம் எண்ணிக்கையில் அன்று, தம் கல்வித் தரத்தில் சிறந்தவையாக இருத்தல்வேண்டும். வறியோராயினும் முன்னுக்கு வரக்கூடியவர்கள் என்று நம்பப்படும் மாணவர்களுக்கும், சிறப்பாகப் புதிதாக உருவாகி வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்கும் இவற்றில் சேர்வது எளிதாக இருக்கவேண்டும்.

சமுதாயத்தின் எதிர்காலமும் அஃதோடு மட்டுமல்லாமல் திருச்சபையின் எதிர்காலமும்கூட மேல்நிலைக் கல்வி பயிம் மாணாக்கரின் வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.33 ஆகவே, திருச்சபையின் அருள்பணியாளர்கள் கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களின் அரு;ள வாழ்வில் ம ட்டும் அ திக அக்கறை காட்டினால் போதாது. மாறாகத் தங்களுடைய எல்லாப் பிள்ளைகளின் அருள்நெறி சார்ந்த பயிற்சியையும் கருத்தில் கொண்டு ஆயர்கள் தமக்குள் கலந்தாலோசிப்பதின் அடிப்படையில் - கத்தோலிக்க மதச் சார்பற்ற பல்கலைக் கழகங்களிலும் கத்தோலிக்க விடுதிகள், நடுநிலையங்கள் ஆகியவை அமைக்கப்பட ஏற்பாடு செய்ய வேண்டும். இவற்றில் கவனமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தயரிக்கப் பெற்ற திருப்பணியாளர்களும் துறவிகளும் பொதுநிலையனரும் பல்கலைக்கழக இளைஞர்களுக்கு நிலையான அருள்வாழ்வு மற்றும் அறிவுசார் உதவிகளை அளிக்க வேண்டும். கல்வி கற்பிக்கவோ ஆராய்ச்சி செய்வதற்கோ தகுதி உடையவர்கள் என்று கருதப்படக் கூடிய திறமை படைத்த இளைஞர்களிடம் - அவர்கள் கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் ஆனாலும் சரி, மற்ற பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் ஆனாலும் சரி. தனிப்பட்ட அக்கறைக் காட்ட வேண்டும்; பேராசிரியப் பணியை அவர்கள் மேற்கொள்ள அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

இறையியல் கல்வித் துறைகள்

11. இறையியல் பாடங்களைப் பயிற்றுவிக்கும் கல்வித் துறைளின் பணியிலிருந்து திருச்சபை அதிகம் எதிர்பார்க்கிறது.34 ஏனென்றால் தன் சொந்த மாணவர்களைத் திருப்பணிநிலை சார்ந்த அலுவலுக்காக மட்டுமின்றிச் சிறப்பாகத் திருச்சபையின் உயர்நிலைக் கல்விக் கூடங்களில் அசிரியப் பணி ஆற்ற அல்லது தங்கள் சொந்த உழைப்பால் அறிவு வளர்ச்சிக்கு உதவ அல்லது இன்னும் கடினமான அறிவுசார் திருத்தூதுப் பணிகள் மேற்கொள்ளத் தயாரிக்கும் மிகப்பளுவான பொறுப்பைத் திருச்சபை அவற்றிடம் ஒப்படைக்கிறது. அஃதோடு இறையியல் பாடங்களின் பல்வேறு பகுதிகளை இன்னும் அதிக ஆழமாகத் துருவி ஆராய்வதும் இக்கல்வித் துறைகளின் கடமையாகும். இவ்வாராய்ச்சியின் நோக்கம் இறை வெளிப்பாடு பற்றி நாளுக்கு நாள் ஆழ்ந்த அறிவு பெறுவதும், முந்திய தலைமுறைகளால் அளிக்கப் பெற்ற கிறிஸ்தவ மெய்யறிவு மரபுக் கருவூலத்தை இன்னும் அதிகமாக அறிதலும், பிற கிறிஸ்தவச் சபையினரோடும் கிறிஸ்தவரல்லாதாரோடும் உரையாடலை ஊக்குவித்தலும், அறிவியல் வளர்ச்சியினால் எழும் வினாக்களுக்கு விடையளித்தலும்ஆகும்.35

எனவே திருச்சபை சார்;ந்த கல்வித் துறைகள் தங்கள் விதிமுறைகளைத் தகுந்த முறையில் திருத்திக்கொண்டு, இறையியல் பாடங்களையும் அவற்றோடு இணைந்த இதரப் பாடங்களையும் அதிக ஆர்வத்துடன் வளர்க்கவேண்டும். இன்றைய ஆய்வு முறைகளையும் கற்பிக்க உதவும் துணைகளையும் பயன்படுத்தி இன்னும் ஆழ்ந்து ஆய்வதற்கு மாணவர்களைப் பயிற்றுவிக்கவேண்டும்.

கல்வித் துறையை ஒருங்கிணைப்பதன் தேவை

12. மறைமாவட்ட அளவிலும் நாட்டளவிலும் அனைத்து நாடுகள் அளவிலும் ஒத்துழைப்பு நாளுக்கு நாள் அதிகமாகத் தேவைப்பட்டு வருகிறது; அதிக பலனும் விளைவிக்கிறது. இவ்வொத்துழைப்பு கல்வித் துறையிலும் மிகவும் தேவைப்படுகிறது. எனவே கத்தோலிக்கக் கல்விக் கூடங்களிடையே தகுந்த ஒருங்கிணைப்பை வளர்க்கவும், இவற்றிற்கும் மற்ற கல்விக் கூடங்களுக்கும் இடையெ மனிதச் சமூகம் முழுவதின் நலனுக்குத் தேவைப்படுகிற ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் எல்லா முயற்சிகளும் செய்யப்படவேண்டும்.36

இன்னும் அதிக அளவில் ஒருங்கிணைவதாலும், சேர்ந்து செயல்படுவதாலும் மிகுந்த பலன்கள் குறிப்பாக உயர்நிலைக் கல்விக் கூடங்களைப் பொறுத்தமட்டில் கிடைக்கும். எனவே ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள பல்வேறு கல்வித் துறைகள் அவற்றின் பாடப்பொருளுக்குத் தக்கவாறு ஒன்றோடொன்று ஒத்துழைக்கவேண்டும். இவ்வாறே பல்கலைக்கழகங்களும் அனைத்துலக மாநாடுகளுக்குச் சேர்ந்து ஏற்பாடு செய்தல், தங்களுக்குள் அறிவியல் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளுதல், தங்களுடைய கண்டுபிடிப்புகளைத் தெரிவித்துக் கொள்ளுதல், பேராசிரியர்களைச் சில காலத்திற்குப் பரிமாறிக் கொள்ளுதல், இன்னும் தங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வழிவகைகளை ஊக்குவித்தல்ஆகியவற்றில் இணைந்து ஈடுபா வேண்டும்.

முடிவுரை

கல்விப் பணியின் மேன்மையை உணர்ந்து, குறிப்பாக ஆசிரியர்களின் எண்ணிக்கைக் குறைவால் இளைஞரின் கல்விக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய இடங்களில் அப்பணியைத் தாராள மனத்துடன் ஏற்கத் தயாராயிருக்குமாறு திருச்சங்கம் இளைஞர்களை மிகுந்த அக்கறையுடன் தூண்டுகிறது.

மேலும் நற்செய்தி அடிப்படையில் எழும் அர்ப்பண உணர்வால் கல்வித் துறையிலும், வெவ்வேறு வகை, வெவ்வேறு நிலை பள்ளிகளிலும் பணியாற்றுகின்ற திருப்பணியாளர்க்களுக்கும் ஆண் துறவியர்க்கும், பெண் துறவியர்க்கும், பொதுநிலையினருக்கும் தன் ஆழ்ந்த நன்றியை இத்திருச்சங்கம் தெரிவிக்கிறது. அவர்கள் ஏற்றுக்கொண்ட பணியில் தாராள உள்ளத்தோடு நிலைத்திருக்கவும், மாணவர்களைக் கிறிஸ்துவின் உணர்வினால் நிரப்புவதிலும் கற்பிக்கும் கலையிலும் அறிவுத்துறை ஆராய்ச்சியிலும் முன்னிற்க முயலவும் அவர்களைத் திருச்சங்கம் தூண்டுகிறது. அவர்கள் இப்படிச் செய்யும்போது அவர்கள் திருச்சபையினுள் மறுமலர்ச்சியை ஊக்குவிப்பர்; அஃதோடு, இன்றைய உலகில், சிறப்பாக அறிவுலகில், திருச்சபையின் நலம் பயக்கும் உடனிருக்கு தொடர்ந்து வெளிப்படவும் வளர்ச்சியுறவும் செய்வர்.

இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள யாவும், அவை ஒவ்வொன்றும், திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும் கிறிஸ்து நமக்கு அளித்துள்ள திருத்தூது அதிகாரத்தால் வணக்கத்துக்குரிய தந்தையருடன் இணைந்து தூய ஆவியில் அவைகளை ஊற்றுக்கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிலை நாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டிய இவை யாவையும் கடவுளின் மாட்சிக்காகச் செயல்படுத்துமாறு ஆணையிடுகிறோம்.

தூய பேதுரு பேராலயம் பவுல்.
உரோமை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்
அக்டோபர் 28,1965.  

கீழே தந்தையரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.