இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள்

 

திருச்சபையின் நற்செய்திப் பணி

உட்புகுமுன்

''தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்'' (யோவா 20:21) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின்படி, திருச்சபை தன் இயல்பிலேயே அனுப்பப்ட்ட ஓர் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில், இறைத் தந்தையின் திட்டப்படி மகன் அனுப்பப்ட்டதிலிருந்தும், தூய ஆவியார் அனுப்பப்ட்டதிலிருந்கும் தோன்றியதே திருச்சபை. அனுப்பப்பட்டு நற்செய்தி அறிவிக்கின்ற திருச்சபையின் நற்செய்திப் பணிப்பற்றித் தனியாக ஓர் ஏடு கொள்கைவிளக்கமாக இப்பொழுதுதான் திருச்சபை ஆவிரியத்தால் வெளியிடப்படுகிறது. நற்செய்திப் பணியின் செயல்முறைக் கூறுகள் பற்றி திருத்தந்தை 14ஆம் பெனதித்து 'மாக்ஸிமும் இல்லுத்' (1919), திருத்தந்தை 11ஆம் பீயு 'எவாஞ்ஞெலியி ப்ரெகோனேஸ்' (1951), திருத்தந்தை 23ஆம் யோவான் 'ப்ரின்செப்ஸ் பாஸ்தோரும்' (1959) முதலிய சுற்றுமடல்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தனர்.

1959, சனவரி 25ஆம் திருத்தந்தை 23ஆம் யோவான் பொதுச்சங்கத்தைக் கூட்டப் போவதாக அறிவித்து, அது விவாதிக்க எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் பற்றிய பரிந்துரைகளை வரவேற்றபோது, மிகப்பெரும்பான்மையோர் அனுப்பியிருந்த பரிந்துரைகளுன் ஒன்று ''நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகள்'' பற்றியதாகும். 1962ஆம் ஆண்டு பொதுச்சங்கம் கூடியபோது, முதல் அமர்வில் (அக். 11-டிச. 8, 1962) ''நற்செய்தி அறிவிப்புப் பணி'' பற்றிச் சங்க அவையில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன. நற்செய்திப் பணிபற்றித் தனியாக ஓர் ஏடு தேவையில்லை; அந்த ஏட்டில் கூறப்படவிருக்கும் கருத்துகளைத் 'திருச்சபை' பற்றிய சங்க ஏட்டிலேயே சொல்லிவிடலாம் என்றெல்லாம் சங்கத் தந்தையர் பேசினர்.

இதைத் தொடர்ந்து 1964ஆம் ஆண்டு நவ. 6இல் சங்கத்தின் மூன்றாம் அமர்வில் நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகள் பற்றிய சங்கப் பணிக்குழு 6 பக்கங்களில் 14 பரிந்துரைகள் அடங்கிய விவாதத் தொகுப்பைத் தந்தையர் முன் வைத்தது. அப்போது சங்க அவையில் திருத்தந்தை 6ஆம் பவுல் நேரில் வந்து தலைமை தாங்கினார். 2ஆம் வத்திக்கான் சங்கம் நடைபெற்ற காலம் முழுவதிலும் இந்த ஒருமுறை மட்டுமே திருத்தந்தை சங்க அமர்விற்குத் தலைமைத் தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. வாசித்தளிக்கப்பட்ட விவாதத் தொகுப்பு மிக நன்றாக உள்ளது எனவும், அதை அதிகம் மாற்றமின்றித் த்நதையர் ஏற்பர் எனத் தாம் நம்புவதாகவும் திருத்தந்தை கூறினார்.

ஆனால், பெரும்பாலான சங்கத் தந்தையர் இந்த விவாதத் தொகுப்பை எதிர்த்து வாக்களித்தனர். ''சதையில்லாத எலும்புக்கூடு'' என்றுகூட இந்த விவாதத் தொகுப்பு விவரித்தார் ஒரு தந்தை. அவர்கள் அந்த விவாதத் தொகுப்பில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளில் சில் போதிய இறையியல் அடிப்படையில்லை; நற்செய்தி அறிவிப்பில் ஈடுபடுவோர்க்குத் தெளிவான வழிமுறைகள் வழங்கப்படவில்லை; நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான அழைத்தலுக்குப் போதிய ஊக்கம் தருவதில்லை. மேற்கூறப்பட்ட குறைபாடுகளின் அடிப்படைகளே விவாதத் தொகுப்பு புதுவடிவம் பெற்றது. இறுதியாக, 'திருச்சபையின் நற்செய்தி பணி' என்ற தலைப்பில் அமைந்த இவ்விதித் தொகுப்பு சங்கத் தந்தையர்களின் மிகப்பெரும்பான்மையான வாக்குகள் பெற்று 1965, டிச.7இல் சங்கம் முடிவுறுவதற்கு முந்தினநாள் வெளியிடப்பட்டது. வத்திக்கான் சங்கம் அமுலாக்கிய 16 ஏடுகளுக்குள்ளும் அதிக வாக்குகள் பெற்ற ஏடு இதுதான். 2394 ஆயர்கள் இந்த ஏட்டை ஏற்றும் 5பேர் மட்டுமெ எதிர்த்தும் வாக்களித்தனர்.

''நற்செய்திப் பணி'' பற்றிய கருத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிச் சிறிது ஆராய்வோம். 'மிஷன்' (ஆளைளழைn) என்ற ஆங்கிலச் சொல் கத்தோலிக்கத் தமிழ் வழக்கில் ''விசுவாசப் பரம்புதல்'' என்று பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சங்க ஏடுகளில் முன்னைய மொழி பெயர்ப்பில் 'மிஷன்' என்ற சொல் 'மறை அறிவிப்புத் தளம் ஃ நாடு' எனவும் வழங்கப்பட்டுள்ளது. அதையே இப்போது முறையே 'நற்செய்திப் பணி', 'நற்செய்தி அறிவிக்கப்படும் தளம்ஃநாடு' எனத் திருத்திய மொழிபெயர்ப்பில் வழங்குகிறோம். இத்தகைய சொல் வழக்கைப் புரிந்துகொள்ள 'மிஷன்' என்ற சொல் வரiலாற்றில் தோன்றி வளர்ந்த விதத்தை நாம் அறிய வேண்டும்.

கிறிஸ்தவம் ஏற்கனவே வேரூன்றி இருந்த தளங்களுக்கு வெளியே சென்று அச்சமயத்தை அறிவிக்கும்பணியைக் குறிக்க மிஷன் என்ற சொல் 16-17ஆம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்படலாயிற்று. எனினும் மிஷன் என்ற சொல்லின் மூலப்பொருள் ''அனுப்புதல்'', ''அனுப்பப்படுதல்''. ''தூதுக்குழு'', ''இறையருள் கட்டளைப் பணி'' என்பதாகும். தூய லொயோலா இஞ்ஞாசி நற்செய்தியை வெளிநாடுகளில் சென்று போதிக்க ''அனுப்பப்படுவதற்கு'' இயேசு சபைத் திருப்பணியாளர்கள் எப்போதுமே தயாராக இருக்க வேண்டுமென்று வழிவகுத்தார். குறிப்பாக, எந்தவித இன்னல் இக்கட்டுகளையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் அவர்கள் முழுமையான ''பணியுடையவர்களாக'' இருந்து இந்த இறையருள் கட்டளைப் பணியைக் கீழ்ப்படிதலோடு ஏற்கவேண்டுமென்று அவர் விரும்பினார்.

இக்காலக் கட்டத்தில் ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற நாடுகள் அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களில் பல பகதிகளைக் குடியேற்ற ஆதிக்க நாடுகளாகக் கொண்டிருந்தன. அக்குடியேற்ற நாடுகளில் நற்செய்தியை அறிவிக்கப் பெறும்பாலும் திருப்பணியாளர்களும், துறவியரும் சென்றார்கள். இவர்களுள் பெரும்பான்மையோர் ஒருவிதமான உயர்வு மனப்பான்மையோடு பிற நாடுகளுக்குச் சென்றனர் என்பதை மறுக்கமுடியாது. ஐரோப்பிய பண்பாடும் ஐரோப்பாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கிறிஸ்தவச் சமயமும் பிறநாடுகளின் பண்பாடுகளையும் அங்கு நிலவிய சமயங்களையும் விட உயர்ந்தவை என்ற மனநிலை பலரிடையே நிலவியது என்பதையும் மறுக்கமுடியாது.

தொடக்கத்தில் ஸ்பெயின், போர்த்துகல் அரசுகளின் ஆதரவில் நற்செய்தி அறிவிப்பாளர்கள் பணியாற்ற அனுப்பப்பட்டவர்கள். 1622 இலிருந்து நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு ஆள்களை அனுப்பும் பொறுப்பை 'நற்செய்தி அறிவிப்புத் திருப்பேராயம்' (Pசழியபயனய குனைந) மேற்கொண்டு செயல்படத் தொடங்கியது. அவ்வமயம் கிறிஸ்தவம் இன்னும் பரவாத நாடுகளில் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும் பொறுப்பைத் துறவற சபைகளிடமும் நிறுவனங்களிடமும் இப்பேராயம் ஒப்படைத்தது.

இவ்வாறு, நற்செய்திப் பணி அல்லது 'மிஷன்' என்றால் கிறிஸ்தவச் சமயம் இன்னம் ஆழ வேரூன்றாத இடங்களில் அதை அறிக்கையிட்டு, மக்களை மனம் திருப்பி, கிறிஸ்தவச் சபையை நிறுவுவதே ஆகும் என்ற கண்ணோட்டம் எழலாயிற்று.

நற்செய்திப்பணி பற்றிய இந்தக் கருத்து வத்திக்கான் சங்கத்தில் எல்லாத் தந்தையராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்களுள் பலர் இக்கண்ணோட்டம் மிகக் குறுகிய ஒன்று என்று உரைத்தனர். நற்வெய்திப் பணி என்பது கிறிஸ்தவச் சமயம் முழுமையாக அறிவிக்கப்படாத நாடுகளில் மட்டும் நிகழ்வதன்று; மாறாக, திருச்சபை தன் இயல்பிலேயே நற்செய்திப்பணியை ஆற்றும் பொறுப்புக் கொண்டது என்ற விரிந்த கண்ணோட்டம் சங்கத்தில் எழலாயிற்று. இக்கண்ணோட்டத்தை இத்திருத்தூதுப்பணி பற்றிய விதித் தொகுப்பில் காண்கிறோம். எனவே, தந்தை மகனை மனுப்பியதுபோல், மகன் தூய ஆவியாரை அனுப்பியது போல, திருச்சபையுடன் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்கென்றே அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சபை இவ்வாறு அனுப்பப்படுவது கிறிஸ்துவின் நற்செய்திப்பணியைத் தொடர்ந்து ஆற்றுவதற்கே ஆகும். இது உலகனைத்திலும் எக்காலத்திலும் எல்லாச் சூழல்களிலும் நிகழ வேண்டிய ஒன்று.

இந்தப் பரந்த கண்ணோட்டமானது நற்செய்திப்பணி பற்றிய சங்க ஏட்டில் முழுமையாக இறுதிவரை கண்முன் கொள்ளப் படவில்லை என்றே கூறவேண்டும். காணரம், மிஷன் அல்லது திருத்தூதுப் பணி பொதுவதகக் குறுகிய பொருளிலேயே ஆங்காங்குக் கையாளப்பட்டுள்ளது (காண் எண் 6 பிற்பகுதி). எனினும், நற்செய்திப் பணியை விளக்குகிற போது, அது கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்துதல், அதாவது அத்திட்டத்தை உலகிலும் அதன் வரலாற்றிலும் தெரியப்படுத்தி நிறைவுக்கு கொணர்தல் (எண் 9) என்ற தெளிவு இருக்கிறது. கிறிஸ்தவர்களின் வாழ்வுச் சான்றும் அவர்கள் மற்ற சமயத்தினரோடு தொடரும் உரையாடலும் நற்செய்திப் பணியின் செயல்முறையாகப் பேசப்படுகிறது. உரையாடலில் நாம் திறந்த உள்ளம் கொண்டிருக்க வேண்டும். கிறிஸ்தவத்தைச் சாராத பிறசமயத்தவர்களிடம் அல்லது சமயம் சாராதவர்களிடம் காணப்படுகின்ற பழக்கவழக்கங்கள், சடங்கு முறைகள், மரபுகள், இறையியல் பார்வைகள், அடிப்படைகள் முதலியவற்றில் வெளிப்படும் உண்மையும் போற்றி அழகும் வாய்ந்த அனைத்தையும் நேர்மையுடன் மதித்துப் போற்றி நல்லனவற்றை ஏற்கிற ஒரு வளர்ந்த மனநிலை கிறிஸ்தவர்களிடம் இருக்கவேண்டும்.

இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் புளிப்பு மாவாக இருந்து நம் வாழ்வுச் சான்றாலும், உரையாடல் மூலமும் இயேசுவின் நற்செய்தியை அறிவித்த இறைத்திட்டத்தை எடுத்துரைத்து இறையாட்சியை மலரச் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். எனவே, கிறிஸ்தவர்களாகிய நம்முடைய வாழ்வு நேரிய, நீதியான, அன்புறவு வாழ்வாக அமைய வேண்டும். நமது சொல்லும் செயலும் உண்மை, நன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது நமது வாழ்வு கிறிஸ்துவைப் பிரதிபலிக்கின்ற வாழ்வாகத் திகழும் இக்காலச் சூழலில் ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், உரிமை இழந்து தவிப்போரோடு தோழமைகொண்டு, அவர்களுடைய விடுதலைப் பெருமூச்சை நமதாக்கி, அவர்களோடு சேர்ந்து விடுதலைக்குப் போராடுகின்றபோதுதான் இயேசுவின் நற்செய்திப்பணி இன்னும் நம் வழியாக நிகழ்கிறது எனலாம.;

பணி. சோசப் செபாஸ்டியன்
தொகுப்பு இறையியல் பேராசிரியர்
தூய பவுல் இறையியல் கல்லூரி
திருச்சி
பிப்ரவரி, 1996

திருச்சபையின் நற்செய்திப் பணி

பற்றி இறை அடியாருக்கு அடியார் ஆயர் பவுல்
திருச்சங்கத் தந்தையரோடு இணைந்து
நினைவில் என்றும் நிலைக்குமாறு அருளிய

அறிக்கை

முன்னுரை

1. ''அனைவருக்கும் மீட்பின் அருளடையாளமாய்''1 விளங்கக் கடவுளால் மக்களினத்தார்க்குழூ அனுப்பப்பட்ட திருச்சபை தன் இயல்பான பொதுமைத் தன்மையின் உள்ளார்ந்த கோரிக்கைகளுக்கு ஏற்பவும், தன்னை நிறுவியவரின் கட்டளைக்குப் பணிந்தும்2 எல்லா மனிதர்களுக்கும் நற்செய்தியை பறைசாற்ற முயல்கிறது. இத்திருச்சபை திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. திருத்தூதர்களோ கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ''உண்மையின் செய்தியைப் பறைசாற்றிச் சபைகளைத் தோற்றுவித்தனர்''3 இப்பணியைத் தொடர்ந்து செய்வது அவர்களுடைய வார்த்தை உங்களிடையே விரைந்து புகழ் பெறட்டும் (2 தொச 3:1); அஃதோடுகூட இறையாட்சி பறைசாற்றப்பட்டு உலகெங்கும் நிலைநாட்டபபடும்.

இன்றைய வரலாற்றுச் சூழமைவு குலத்தைப் புதியதொரு நிலைக்கு இட்டுச் செல்கின்றது. இப்பின்னணியில் மண்ணுலகிற்கு உப்பும், ஒளியுமான4 திருச்சபை எல்லாப் படைப்புகளையும் மீட்டுப் புதுப்பிக்க உடனடியாக அழைக்கப்படுகிறது. இதனால் அனைத்தும் கிறிஸ்துவில் புத்துயிர் பெற்று அவரில் எல்லா மனிதரும் ஒரே குடும்பமும் கடவுளின் ஒரே மக்களினமுமாக அமைவர்.

எனவே, திருச்சபை முழுவதின் தாராள முயற்சியால் இத்துறையில் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள சீரிய பணிகளுக்காக இத்திருச்சங்கம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறது. அதே வேளயில், நற்செய்திப் பணியின் அடிப்படைக் கொள்கைகளை வரையறுக்கவும், இப்பணிக்காக நம்பிக்கை கொண்டோர் அனைவரின் ஆற்றல்களை ஒன்றுதிரட்டவும் சங்கம் விழைகிறது. இதன் மூலம் கடவுளின் மக்கள் அனைவரும் சிலுவையின் குறுகிய பாதையில் நடந்து, கால்களை எல்லாம் மேற்பார்வை செய்து ஆள்பவராகிய5 கிறிஸ்துவின் ஆட்சியை எல்லா இடங்களிலும் பரப்புவார்கள்; வரவிருக்கும் அவருக்காக வழிகளை ஆயத்தமாக்குவார்கள்.

இயல் 1
கோட்பாட்டு அடிப்படைகள்

தந்தையின் திட்டம்

2. இறைத் தந்தையின் திட்டபடி6 மகன் அனுப்பப் பட்டதிலிருந்தும் தூய ஆவி அனுப்பப்பட்டதிலிருந்தும், திருச்சபை தோன்றியது. எனவே, நற்செய்தி அறிவிப்பதே பயணம் செய்யும் திருச்சபையின் இயல்பான பணி.

இறைத் தந்தையின் இத்திட்டம் ''அன்பின் ஊற்றிலிருந்து'', அதாவது இறைத் தந்தையின் பரம அன்பிலிருந்து உருவாகிறது. தொடக்கமில்லாத் தொடக்கமானவராகிய இவரிடமிருந்தே புறப்படுகிறார். ஆகவே, அதே இறைத்தந்தை தமது அளவற்ற இரக்கமிகு கருணையால் தாமே விரும்பி நம்மைப் படைத்துத் தமது வாழ்விலும் மாட்சியிலும் தம்மோடு பங்குபெற நம்மைத் தம் பரந்த அருள் பெருக்கால் அழைக்கிறார். இவ்வாறு அவர் தம்முடைய நலன்களை நம்மீது தாராளமாகப் பொழிந்துள்ளார்; அவற்றைப் பொழிந்திட அவர் தவறுவதுமில்லை. அனைத்தையும் படைத்தவராகிய அவர் ''அனைத்திலும் அனைத்துமாய்'' (1 கொரி 15:28) ஆகிடவும், தமக்கு மாட்சியும் நமக்குப் பேரின்பமும் ஒருங்கிணைய அளிப்பதற்குமே இவ்வாறு செய்யலானார். ஒருவருக்கொருவர் தொடர்பு ஏதுமற்ற முறையில் மனிதர்கள் தனித்தனி ஆள்களாகவே தம் வாழ்வில் பங்கு கொள்வதன்று கடவுளின் விருப்பம்; மாறாகப் பிரிந்து சிதறிக் கிடந்த தம் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்த்து7 ஒரு மக்கள்குழுவாக நிறுவுவதே கடவுளுக்கு விருப்பமாய் இருந்தது.

மகன் அனுப்பப்படுதல்

3. மனித குலத்தின் நிறைவாழ்வுக்காகக் கடவுள் வகுத்த இப்பொதுத் திட்டமானது மனிதரின் உள்ளத்தில் மறைவான முறையில் மட்டுமே செயல்படுத்தப் படுவதில்லை; ''நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ள கடவுளைத் தட்டித் தடவியாவது கண்டுகொள்ளவேண்டும் என்பதற்காக'' (திப 17:27), சமயம் தொடர்பான முயற்சிகளில் மட்டமே அத்திட்டம் நிறைவுறுவதில்லை. காத்திடும் கடவுளின் கனிவுறு திட்டத்திற்கு இசைய, சில வேளைகளில் இத்தகைய முயற்சிகள் உண்மைக் கடவுளை அடைய இட்டுச் செல்கின்றன மற்றும், நற்செய்திக்குத் தயாரிப்பாக உள்ளன என நாம் கூறலாம்.

எனினும், இத்தகைய முயற்சிகள் ஒளிபெற வேண்டிய, நலம் பெறவேண்டிய நிலையில் உள்ளன. தம்மோடு அமைதியையும் ஒன்றிப்பையும் நிலைநாட்டவும், பாவியராக இருக்கும் மனிதர் நடுவில் சகோதர நட்புறவை உருவாக்கவும் கடவுள் மனித வரலாற்றிலே ஒரு புதிய, திட்டவட்டமான முறையில் நுழையத் திருவுளம் கொண்டார். எனவேதர்ன கடவுள் தம் மகனை நம்மைப் போல மனிதராய் அனுப்பினார். இருள், அலகை ஆகியவற்றின் வலிமையிலிருந்து நம்மைத் தம் மகன் வழியாக விடுவிக்கவும்9 அவரில் உலகைத் தம்மோடு ஒப்புரவாக்கவுமே10 அவர் இவ்வர்ற செய்தார். எனவே கடவுள் யார் வழியாக உலகைப் படைத்தாரோ11 அவரில் எல்லாவற்றையும் புதுப்பிக்க அவரையே எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார்.12

கிறிஸ்து இயேசு கடவுளுக்கும் மனிதருக்கும் நடுவே உண்மை இணைப்பாளராக உலகிற்கு அனுப்பப்பட்டார். கிறிஸ்து கடவுள் என்பதால், ''இறைத்தன்மையின் முழுநிறைவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது'' (கொலோ 2:9); கிறிஸ்து மனித இயல்பைக் கொண்டவர் என்பதால், ''அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய'' (யோவா 1:14) புதிய ஆதாமாக இருக்கின்றார்; அதனால், புதுப்பிக்கப் பெற்ற மனிதகுலத்தின் தலையாக ஏற்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு, மனிதர்களை இறை இயல்பில் பங்குபெறச் செய்வதற்காக இறைமகள் உண்மையிலேயே மனிதரானார்; அவர் செல்வராகுமாறு நமக்காக ஏழையானார்.13 மானிட மகன் தொண்டு ஏற்பதற்கல்ல, தொண்டு ஆற்றுவதற்கும், தம் உயிரைப் பலருடைய அதாவது அனைவருடைய மீட்புக்கு ஈடாகக் கொடுப்பதற்கும் வந்தார்.14 கிறிஸ்துவால் ஏற்றுக் கொள்ளப் பட்டவையே நலம் பெறும் என்று திருச்சபைத் தந்தையர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.15 பாவம் தவிர,16 வறியவர்களும் ஏழைகளுமான நமது முழுமனித இயல்பையும் உண்மையிலேயே கிறிஸ்து, ஏற்றுக் கொண்டார். ஏனெனில் ''தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட'' (யோவா 10:36) கிறிஸ்து தம்மைப் பற்றிக் கீழ்வருமாறு கூறுகிறார்: ''ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பர்hவை பெறுவர் என முழுக்கமிடவும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்'' (லூக் 4:18-19); மேலும் அவர், ''இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்'' (லூக் 19:10) என்றார்.

அன்று ஆண்டவர் எதைப் போதித்தாரோ, மனிதகுல நிறைவாழ்வுக்காக அவரில் எது நிறைவு பெற்றதோ, அதுவெல்லாம் எருசலேம் தொடங்கி17 உலகின் கடையெல்லை வரைக்கும்18 பறைசாற்றப்பட்டுப் பரப்பப்பட வேண்டும். இவ்வாறு, எல்லாருடைய நிறைவாழ்வுக்காக அன்று நிறைவேறியது காலப்போக்கில் ஒவ்வொருவருக்கும் பயன்தரும்.

தூய ஆவியை அனுப்புதல்

4. இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, உள்ளிருந்து நிறைவாழ்வுப் பணியைத் தொடர்ந்து ஆற்றவும், திருச்சபையைப் பரவச் செய்யும் தூய ஆவியைக் கிறிஸ்து தந்தையிடமிருந்து அனுப்பினார். கிறிஸ்து மாட்சி பெறுமுன்பே தூய ஆவி இவ்வுலகில் பணியாற்றிக் கொண்nருந்தார் என்பதில் ஐயமில்லை.19 ஆனால், அவர் சீடர்களோடு என்றும் இருக்கும்படி20 பெந்தகோஸ்து நாளில் அவர்கள்மேல் இறங்கி வந்தார். எல்லாரும் அறியும்வகையில் திருச்சபையும் மக்கள் திரள்முன் காட்சியளிக்கலாயிற்று; மேலும், பறைசாற்றலின் மூலமாகப் பிற இனத்தாரிடையே நற்செய்தி பரவத் தொடங்கியது; இறுதியாக, புதிய உடன்படிக்கையிலிருந்து பிறக்கும் திருச்பை வழியாகப் பொது நம்பிக்கையின் மூலம் மக்கள் அனைவரும் ஒன்றிப்பு அடைந்திடுவர் என்னும் உண்மை முன்னுணர்த்தப் பெற்றது. இத்திருச்சபையோ எல்லா மொழிகளையும் பேசுகிறது; எல்லா மொழிகளையும் அன்பால் புரிந்துகொண்டு அணைத்துக் கொள்கிறது; இவ்வாறு பாபேலினால் உண்டான சிதறிய நிலையை வெல்கிறது.21 தூய ஆவியின் வருகையால் கிறிஸ்து கன்னிமரியாவின் வயிற்றில் உருவானதுபோலவும், அவர் கடவுளை வேண்டிக் கொண்டிருந்த போது அவர் மீது அதே ஆவி இறங்கிவந்ததால் அவர் தம் பணி வாழ்வைத் தொடங்கத் தூண்டப்பெற்றது போலவும்22 பெந்தகோஸ்து நாளிலிருந்து ''திருத்தூதர் பணிகளும்'' தொடங்கலாயின. உலகிற்காகத் தம்முயிரைத் தாமே விரும்பிக் கையளிப்பதற்கு முன்னர் ஆண்டவராகிய இயேசு திருத்தூதுப் பணிக்கான ஏற்பாட்டையும் தூய ஆவியை அனுப்புவது பற்றிய உறுதிமொழியையும் எவ்விதத்தில் அளித்தார் என்றால், நிறைவாழ்வுப் பணியைச் செயல்படுத்திட அப்பணியில் இவை இரண்டும் எப்போதும் எங்கும் ஒன்றித்து இயங்கும்.23 எக்காலங்களிலும் தூய ஆவி திருச்சபை முழுவதிலும் ''ஒன்றிப்பாலும் பணியாலும் ஒற்றுமை விளைவிக்கிறார். இன்னும் பலதரப்பட்ட திருஆட்சி அமைப்பு சார்ந்த கொடைகளையும் அருங்கொடைகளையும் அதற்கு அளிக்கிறார்.''24 ஏனெனில் அவரே திருச்சபையின் அமைப்புகளுக்கு ஆன்மா போல் இருந்து, அவைகளுக்கு உயிரூட்டுகிறார்;25 கிறிஸ்துவைத் தூண்டிய அதே நற்செய்திப்பணி உணர்வை நம்பிக்கை கொண்டோரின் இதயங்களிலும் எழுப்புகிறார். பல்வேறு வழிகளில் திருத்தூதுப் பணியை இடைவிடாது உடனிருந்து நடத்துகின்ற26 தூய ஆவி, சில வேளைகளில் அப்பணியைக் கட்புலனாகும் வண்ணம் முன்வந்து செய்கிறார்.27

கிறிஸ்து திருச்சபையை அனுப்புதல்

5. ஆண்டவர் இயேசு தொடக்கத்திலிருந்தே ''தாம் வியம்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார்... தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும்... அவர் பன்னிருவரை நியமித்தார்'' (மாற் 3:13-15).28 இவ்வாறு, திருத்தூதர்கள் புதிய இஸ்ரயேலின் வித்துக்களாகவும், அதே சமயத்தில் திருச்சபை ஆட்சி அமைப்பின் தொடக்கமாகவும் இருந்தனர். பின்னர், தம் இறப்பாலும் உணிர்த்தெழுதலாலும் நமக்கு நிறைவாழிவளித்து, எல்லாவற்றையும் புதுப்பிக்கும் மறைத்திட்டத்தை ஒரேமுறை தம்மில் நிறைவேற்றிய ஆண்டவர் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் கொண்டவராய்,29 தாம் விண்ணேற்றம் அடைவதற்குமுன்30 திருச்சபையை நிறைவாழ்வின் அருளடையாளமாக நிறுவினார். தந்தையால் தாம் அனுப்பப்பட்டதுபோலவே31 அவரும் திருத்தூதர்களை உலக முழுவதற்கும் அனுப்பினார். அவ்வாறு அனுப்பும்போது, ''நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைபிடிக்கும்படி கற்பியுங்கள்'' (மத் 28. 19-20) என்று கட்டளையிட்டார். ''உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்திப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்'' (மாற் 16:15-16) எனவே, கிறிஸ்து தரும் நம்பிக்கையையும், நிறைவாழ்வையும் பரப்புகின்ற கடமையானது கிறிஸ்துவின் வெளிப்படையான கட்டளையால் திருச்சபையின்மேல் சுமத்தப்பட்டுள்ளது. இக்கடமையை ஆயர் குழுவானது பேதுருவின் வழித்தோன்றலான திருச்சபையின் தலைமை ஆயரோடு இணைந்து, தன் திருப்பணியாளர் உதவிகொண்டு, திருத்தூதிடமிருந்து மரபுரிமையாகப் பெறுகிறது. மேலும், கிறிஸ்து தம் உறுப்புகளுக்கு வழங்கியுள்ள வாழ்வின் காரணமாகவும் இக்கடமை திருச்சபையின்மேல் சுமத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், ''அவரால்தான் முழுஉடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னி;முள்ள தசை நார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பால் கட்டமைப்புப் பெற்று வளர்ச்சியடைகிறது'' (எபே 4:16). எனவே கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, தூய ஆவியின் அருளாலும் பரறசாற்றாலும், அருளடையாளங்களாலும், இன்னும் பிற அருள்வழி வகைகளாலும் எல்லா மனிதரையும் மக்களினங்களையும் கிறிஸ்துவின் நம்பிக்கைக்கும் விடுதலைக்கும் அமைதிக்கும் கொண்டுவர அவள்கிளடையே முழுமையாய் உடனிருப்பதன் மூலம் திருச்சபை தனது நற்செய்திப் பணியை நிறைவேற்றுகிறது. இவ்வாறு கிறிஸ்துவின் மறைத்திட்டத்தில் அவர்கள் முழுமையாகப் பங்கேற்றிடத் தடையில்லாத, நிச்சயமான வழி திறந்து விடப்படும்.

இந்த நற்செய்திப்பணி தொடர்கிறது. ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பெற்ற கிறிஸ்துவின் பணியையே ஆற்றுவதாலும் அதை வரலாற்றுப் போக்கில் வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துவின் ஆவியானவரின் தூண்டுதலால் திருச்சபையும் கிறிஸ்து சென்ற அதே வழியில் நடந்து செல்ல வேண்டும். கிறிஸ்து சென்ற வழியோ ஏழிமை, கீழ்படிதல், பணிவிடை புரிதல், சாவுக்கு இட்டுச் சென்ற தற்கையளிப்பு. இச்சாவிலிருந்து அவர் உயிர்த்தெழுந்து வெற்றி வீரராக வந்தார். இத்தகைய எதிர்நோக்கோடுதான் எல்லாத் திருத்தூதர்களும் வழி நடந்தனர்;; தங்களது பெருந்துயரங்கள் மற்றும் துன்பங்கள் மூலம் கிறிஸ்து தம்முடைய உடலாகிய திருச்சபைக்காக அனுபவித்த வேதனையில் குறைவுபட்டதை அவர்கள் நிறiவு செய்தனர்.32 மேலும், பலதடவைகளில் கிறிஸ்தவரின் இரத்தமே நற்செய்திப்பணியின் வித்தாகவும் அமைந்தது.33

நற்செய்திப் பணி

6. பேதுருவின் வழித் தோன்றலைத் தலைவராகக் கொண்ட ஆயர் குழுவால் அனைத்துத் திருச்சபையின் இறைவேண்டலோடும் ஒத்துழைப்போடும் இந்த அலுவலானது நிறைவேற்றப்பட வேண்டும். வெவ்வேறு சூழ்நிலைகளில் இது ஒரே விதமாக நிறைவேற்றுப் படுவதில்லை என்றாலும், எங்கும் எல்லாச் சூழ்நிலைகளிலும் மாறாக ஒன்றாகவே உள்ளது. திருச்சபையினது இப்பணியில் நாம் ஒத்துக் கொள்ளவேண்டிய இவ்வேறுபாடுகள் நற்செய்திப் பணியின் உள்ளார்ந்த இயல்பிலிருந்தே தோன்றுவனவன்று. மாறாக, இப்பணி செயல்படுத்தப்படும் சூழ்நிலைகளிலிருந்தே இவ்வேறுபாடுகள் தோன்றுகின்றன.

மேற்கூறப்பட்ட சூழ்நிலைகள் திருச்சபையைப் பொறுத்தனவாக இருக்கலாம், அல்லது நற்செய்திப் பணி ஆற்றப்பெறுகின்ற மக்களினங்களை, குழுக்களை, நாடுகளை, மனிதர்களைப் பொறுத்தனவாகவும் இருக்கலாம். உண்மையிலேயே, திருச்சபை நிறைவாழ்வு வழிவகைகள் யாவற்றையும் தன்னிலே முழுமையாக, அதாவது நிறைவாகக கொண்டிருந்தாலும்கூட, அவ்வழிவகைகள் ஒவ்வொன்றையும் அது எப்பொழுதும் ஒரே காலத்தில் செயல்படுத்திவிடுவதில்லை, செயல்படுத்தவும் முடியாது. மாறாக, கடவுளின் திட்டத்தைச் செயல்படுத்தத் திருச்சபை முனையும்போது அச்செயலில் தொடக்கநிலை மற்றும் வளர்ச்சிப்படிகளை அது கண்டுணரும். சில வேளைகளில் தொடக்கம் வெற்றிகரமாக அமையலாம்;; ஆனால் அதன்பின்னர் ஏதாவது தோல்வி ஏற்பட்டு வருந்த நேரிடலாம்;; அல்லது முழு நிறைவையடையாது பற்றாக்குறையான ஒரு நிலையில் இருந்து விடுவதும் உண்டு. தனிமனிதர்கள், குPக்கள், மக்கள் குலத்தினர் ஆகியோரைத் திருச்சபை படிப்படியாகத்தான் சென்றடைந்து ஊடுருவுகின்றது;; இவ்வாறு இவர்களைப் பொதுமைப் பண்பின் முழுமைக்குக் கொண்டு வருகிறது. ஆகவே, ஒவ்வொரு சூழ்நிலைக்கும் நிலைமைக்கும் ஏற்றார்போல் பொருத்தமான டிசயல்முறைகளும் தகுந்த வழிவகைகளும் பின்பற்றப்பட வேண்டும்.

நற்செய்தியைப் பறைசாற்றவும் கிறிஸ்துவை இன்னும் நம்பாத நாடுகள், குழுக்கள் நடுவே திருச்சபையை நிறுவவும், அனைத்துலகிற்கும் திருச்சபையால் அனுப்பப்பட்ட நற்செய்தித் தூதர்களின் தனிப்பட்ட முயற்சிகள் ''நற்செய்திப்பணி'' எனப் பொதுவழக்கில் அழைக்கப்படுகின்றன. இம்முயற்சிகள் நற்செய்திப் பணியின் மூலம் நிறைவாக்கம் பெறுகின்றன்; திருச்சபை ஆட்சிப் பீடத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சில நிலப்பகுதிகளில் பெரும்பாலும் செயலாற்றப்படுகின்றன. திருச்சபை இன்னும் வேரூன்றா நாடுகள் அல்லது குழுக்கள் நடுவே அதை நிறுவுவதும், நற்செய்தியைப் பறைசாற்றுவதும் இந்த நற்செய்திப் பணிக்குரிய குறிக்கோள் ஆகும்.34 இவ்வாறு, உலகம் முழுவதும், அந்தந்த இடத்தின் தாயகத் தன்மைக்கேற்றத் தனித் திருச்சபைகள் கடவுளின் வார்த்தை எனும் வித்திலிருந்து முறையாக நிறுவப்பட்டு வளர்ந்தோங்கவும், தமது சொந்தப் பலமும் முதிர்ச்சியும் கொண்டு விளக்கவும் இயலும்;; மேலும், நம்பிக்கை கொண்டோரோடு சொந்தத் திருச்சபை ஆட்சியாளரையும் இன்னும் கிறிஸ்தவ வாழ்வை முழுமையாக வாழ்வதற்கான தகுந்த வழிவகைகளையும் போதிய அளவில் கொண்டு, இத்தனித் திருச்சபையை இவ்வாறு நிறுவுவதற்கு முதன்மையான வழி இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்றலாகும். இந்த நற்செய்தியைப் பறைசாற்றவே ஆண்டவர் உலகம் முழுவதும் தம் சீடர்களை அனுப்பினார். கடவுளின் வார்த்தையால் மனிதர் புதுப் பிறப்பு அடைந்து35 திருமுழுக்கின் வழியாகத் திருச்சபையில் சேர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். இத்திருச்சபையோ மனிதரான வாக்கின் உடலாக உள்ளது; கடவுளின் வார்த்தையாலும் நற்கருணை அப்பத்தாலும் ஊட்டம் பெற்று வாழ்ந்து வருகிறது.36

சில வேளைகளில் திருச்சபையின் இந்நற்செய்திப் பணியில் பல்வேறுபட்டட நிலைகள் கலந்து காணப்படுகின்றன.ன முதலாவது அதன் தொடக்கத்தில் அல்லது அது நிறுவப்படும் நிலை; அடுத்து அதன் புதுமைநிலை அல்லது இளமை நிலை. ஆனால், இந்நிலைகளை எய்தியவுடன் திருச்சபையின் நற்செய்திப் பணி நின்றுவிடுவதில்லை; மாறாக, இப்பணியைத் தொடர்ந்து நடத்தும் கடமையும், இன்னும் திருச்சபைக்கு வெளியே இருப்போருக்கு நற்செய்தியை பறைசாற்றும பணியும் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள தனித் திருச்சபைகளுக்கு உண்டு.

மேலும், திருச்சபை எக்குழுக்களுள் நிலைபெற்றுள்ளதோ அக்குழுக்கள் பல்வேறு காரணங்களால் பலகாறும் அடிப்படை மாற்றம் பெறுவதால் முற்றிலும் புதிய சூழ்நிலைகள் உருவாக்கக்கூடும். அவ்வமயம் இச்சூழ்நிலைகளின் தன் நற்செய்திப் பணி மீண்டும் தேவைப்படக் கூடுமோ என்பதைத் திருச்சபை ஆராயவேண்டும். மேலும், நற்செய்தியை நேரடியாகவும் உடனடியாகவும் சிறிது காலத்திற்குப் போதிக்க இயலாத முறையில் இச்சூழ்நிலையில் நற்செய்தி வேளைகளில் அமைந்துவிடுகின்றன. இந்நிலையில் நற்செய்தி பணியாளர் பொறுமையோடும், முன்மதியோடும், பெரும் நம்பிக்கையோடும் அன்புச் செயல்கள் மற்றும் இரக்கச் செயல்கள் வழிpயாகவாவது கிறிஸ்துவுக்குச் சான்று பகர முடியும்; பகரவும் வேண்டும். இவ்வகையில் அவர்கள் ஆண்டவரின் வருகைக்கு வழிகளை ஆயத்தம் செய்வர்; ஒருவகையில் அவரையே அங்கு உடனிருக்கும்படிச் செய்வர்.

திருச்சபையின் உள்ளியல்பிலிருந்தே நற்செய்திப்பணி பிறக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இப்பணியானது திருச்சபையின் மீட்பளிக்கும் நம்பிக்கையைப் பரப்புகிறது; திருச்சபையை விரிவாக்குவதன் மூலம் அதன் பொது ஒற்றுமையை நிறைவுபடுத்துகிறது; திருச்சபையின் திருத்தூதுத் தன்மையினால் பேணப்படுகிறது; திருச்சபையினுடைய ஆட்சியமைப்பின் குழு உணர்வைச் செயலாக்குகிறது; திருச்சபையின் தூய்மைநிலைக்குச் சான்று பகர்ந்து அ தைப் பரப்பி வளர்க்கிறது. இங்ஙனம், மக்களினங்களிடையே, திருச்சபை ஆற்றிவுரும் இந்த நற்செய்திப் பணியானது நம்பிக்கை கொண்டோருக்காக ஆற்றப்படும் அருள்பணியிலிருந்தும், கிறிஸ்தவ ஒன்றிப்பை மீண்டும் நிலைநாட்டும் நோக்குடன் மேற்செய்யப்படும் முயற்சிகளிலிருந்தும் மாறுபடுகின்றது எனினும், இவ்விரண்டும் திருச்சபையின் நற்செய்திப் பணியோடு நெருங்கிய தொடர்புடையன.37 காரணம், கிறிஸ்தவர்களிடையே உள்ள பிளவானது படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டிய தூய்மைமிகு பணிக்கு இடையூறாக அமைகிறது;38 அஃதோடு நம்பிக்கையை பலர் அடைய முடியாதவாறு தடை செய்கிறது. எனவே, நற்செய்தி அறிவிக்கும்கடமை இருப்பதனால், திருமுழுக்குப் n பற்ற எல்லாரும் ஒரே மக்கள் குழுவாக ஒன்றுகூடி:, தம் ஆண்டவரான கிறிஸ்துவுக்கு மனிதர் அனைவர் முன்பாகவும் ஒரு மனப்பட்ட சான்று பகர அழைக்கப்படுகின்றனர். ஒருவேளை இன்னமும் அவர்கள் ஒரே நம்பிக்கைக்கு முழுமையாகச் சான்று பகர இயலாதவர்களாயிருந்தால், ஒருவருக்கொருவர் அன்பும் மதிப்பும் காட்டும் உள்ளத்தையாவது பெற்றிருக்க வேண்டும்.

நற்செய்திப் பணிக்கான காரண்ஙகளும் அதன் தேவையும்

7. கடவுளின் திருவுளமே இந்த நற்செய்திப் பணிக்குக் காரணம். ''எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். ஏனெனில் கடவுள் ஒருவரே கடவுளுகு;கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் அவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர், அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்'' (1 திமொ 2 :4-6). ''இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை'' (திப 4:12). எனவே, ஒவ்வொருவரும் திருச்சபையின் பறைசாற்றலால் அறிவிக்கப்படும் கிறிஸ்துவை மனந்திரும்பி ஏற்று, திருமுழுக்கினால் அவரோடும், அவருடைய உடலாகிய திருச்சபையோடும்ஓருடலாக இணைக்கப் பெறவேண்டும். ஏனென்றால், ''நம்பிக்கை, திருமுழுக்கு ஆகியவற்றின் தேவையைக் கிறிஸ்துவே தௌ;ளத்தெளிவாக வழியுறுத்தியிருக்கிறார்.39 வாயில் வழியாக நுழைவதுபோல் திருமுழுக்கின் வழியாக மக்கள் வந்துசேரும் திருச்சபையின் அவசியத்தையும் அவர் உணர்த்தியிருக்கிறார். எனவே கத்தோலிக்கத் திருச்சபையானது இயேசு கிறிஸ்துவின் வழியாக அத்தியாவசியமான ஒரு சபையாக இறைவனால் நிறுவப்பட்டது என்பதை தெரிந்திருந்தும், திருச்சபையின் சேரவோ, அல்லது அதில் நிலைத்து நிற்கவோ விரும்பாதவர்கள் மீட்புப் பெறமுடியாது.''40 தங்களுடைய தவறாலெயல்லாது நற்செய்தியை அறியாமலிருக்கும் மனிதரையும் கடவுள் தமக்கே தெரிந்த வழிகளில் நம்பிக்கைக்கு இட்டுச் செல்லமுடியும்: இந்நம்பிக்கையினாலன்றி யாரும் அவருக்கு உகந்தவாக இருக்க இயலாது:41 இருப்பினும் நற்செய்தி அறிவிக்க வேண்டிய தேவையும் தூய உரிமையும் திச்சபைக்கு உண்டு.42 எனவே நற்செய்திப் பணியின் ஏற்புடைத் தன்மையும் தேவையும் என்றும்போல் இன்றும் முழுமையாய் நிலைநிற்கின்றன.

நற்செய்திப் பணியால் கிறிஸ்துவின் அறையுடல் தன் ஆற்றல்களை இடைவிடாமல் ஒன்று திட்டி அவற்றைத் தனது சொந்த வளர்ச்சிக்காகப் பயன்படுத்துகிறது.43 திருச்சபையின் உறுப்பினர் கடவுளுக்குக் காட்டும் அன்பாலும், இன்றைய வாழ்வு, வருங்கால வாழ்வு ஆகியவற்றின் அருள் நலன்களை எல்லா மனிதரோடும் பகிர்ந்து கொள்ள விரும்பும் அன்பாலும் இந்நற்செய்திப் பணியில் ஈடுபட உந்தப்படுகின்றனர்.

இறுதியாக, இதே நற்செய்திப் பணியால் கடவுள் முற்றிலும் மாட்சிப்படுத்தப்படுகிறார். ஏனென்றால், கிறிஸ்துவில் கடவுள் நிறைவேற்றிய நிறைவாழ்வுப் பணியை மனிதர் முழுமையாகவும் தன்னுணர்வோடும் ஏற்றுக் கொள்கின்றனர். இங்ஙனம், இப்பணியின் மூலம் கடவுளின் திட்டம் நிறைவு பெறுகிறது. மனித குலம் முழுவதும் கடவுளின் ஒரே மக்களாக உருவாகவும் கிறிஸ்துவின் ஒரே உடலாக மாறிடவும், தூய ஆவியின் ஒரே கோவிலாக எழும்பவும் தம்மை அனுப்பிய தந்தையின்44 மாட்சிக்காக அவருடைய இத்திட்டத்திற்குக் கிறிஸ்து கீழ்ப்படிதலோடும் அன்போடும் பணிந்தார். உண்மையிலேயே, இது சகோதர உள ஒன்றிப்பை வெ ளிப்ப டுத ;து வN த h டு , மக்களனைவரின் ஆழ்ந்த விருப்பத்திற்கும் உகந்ததாக இருக்கிறது. இவ்வாறு, இறுதியாக, மனித இயல்பில் பங்குகொண்ட அனைவரும் தூய ஆவியால் கிறிஸ்துவின் புதுப்பிறப்படைந்து கடவுளின் மாட்சியை ஒருமிக்கக் கண்டு அவரை ''எங்கள் தந்தையே''45 ன அழைக்கும் அந்நாளில் தம் சாயலிலும், உருவிலும் மனிதரைப் படைத்தவரின் திட்டமானது உண்மையில் நிறைவேறும்.

மனித வாழ்விலும் வரலாற்றிலும் நற்செய்திப் பணி

8. மேலும், நறசெய்திப் பணி மனித இயல்போடும் அதன் எதிர்பார்ப்புகளோடும் நெருங்கிய தொடர்புகொண்டிருக்கிறது. கிறிஸ்துவை மனிதர்களுக்கு வெளிப்படுது;தும் அதே நேரத்தில் திருச்சபை மனிதர்களுக்கு அவர்களுடைய உண்மையான நிலையையும், முழு அழைத்தலின் உண்மையையும் வெளிப்படுத்துகிறது. ஏனெனில், எல்லா மனிதரும் விரும்பித்தேடும் சகோதர அன்பு, நேர்மை, அமைதி உணர்வு ஆகியவற்றில் தோய்ந்ததும், புதுப்பிக்கப் பெற்ற துமான மனித குலத்தின் தொடக்கமும் மாதிரியாகவும் கிறிஸ்து விளங்குகிறார். கிறிஸ்துவும், நற்செய்தியை அறிவித்து அவருக்குச் சான்று பகரும் திருச்சபையயும் அந்நியர் எனக் கருதப்பட முடியாது.46 கிறிஸ்துவே உண்மையும் வழியுமாவார். இவற்றை நற்செய்தி அறிவிப்பு எல்லாருக்கும் வெளிப்படுத்துகிறது. ''மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்'' (மாற் 1:15) என்ற அதே கிறிஸ்துவின் சொற்களைத் திருச்சபை எல்லா மனிதரின் செவிகளிலும் ஒலிக்கச் செய்கின்றது. ஆனால், நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர்.47 என்பதால் கிறிஸ்துவின் சொற்கள் ஒரே நேரத்தில் தீர்ப்பின் மொழியாகவும் அ ரு ளின் மொழியாகவும், சாவின் மொழியாகவும் வாழ்வின் மொழியாகவும் இருக்கின்றன. ஏனென்றால்,பழையதைச் சாகடித்தால்தான் வழ்வின் புதுமையை நாம் அடைய முடியும். இவ்வுண்மை முதன்முதரில் ம னி தர்க்கும், அதே நேரத்தில் ம னித h pன் பாவம், கடவுளின் ஆசி இவற்றின் அடையாளத்தைப் பெற்றுள்ளன. பல்வேறு உலகப் n பா ரு ள ; க ளுக் கும் பொருந்தும்; ''ஏனெனில் எல்லாருமே பாவம்செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்'' (உரோ 3:23) தனாகாவும் தன் சொந்த ஆற்றலாலும் எவரும் பாவத்தினின்று விடுதலை பெறுவதில்லை; தனக்கு மேலாக உயர்வதுமில்லை; மேலும் தானாகவே தன் வலுவற்ற நிலையின் அல்லது தனிமை நிலையின் அல்லது அடிமை நிலையின் த ளைகளை முழுமையாகத் தகர்க்கவும் முடியாது.48 மாறாக, எல்லாருக்கும்முன்மாதிரியும், ஆசிரியரும், விடுதலையளிப்பவரும், மீட்பரும், வாழ்வளிப்பவருமான கிறிஸ்து தேவை. உண்மையில், உலகுசார்ந்த மனித வரலாற்றில் கூட, நற்செய்தியானது சுதந்திரம், முன்னேற்றம் இவைகளுக்குச் சாதகமான புளிப்பு மாவாய் இருந்து வந்துள்ளது; மேலும் சகோதரத்துவம், ஒற்றுமை, அமைதி ஆகியவற்றின் புளிப்பு மாவாகவும் அது தொடர்ந்து இருந்துவருகிறது. எனவே, கிறிஸ்துவை ''மக்கள் இனத்தாரின் எதிர்பார்ப்பு என்றும் அவர்களின் மீட்பர்''49 என்றும் நம்பிக்கை கொண்டோர் புகழ்வது காரணத்தோடுதான்.

நற்செய்திப் பணியின் நிறைவுக்காலப் பண்பு

9. இவ்வாறு, ஆண்டவரின் முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலமே நற்செய்திப் பணிக்குரிய காலமாகும். இந்த இரண்டாம் வருகையின் போது ஓர்ன அறுவடைக்கு ஒப்பாக, த pருச்சபை நான்கு திக்கிலிருந்தும் இறையாட்சியாக ஒன்று சேர்க்கப்படும்.50 ஏனென்றால், ஆண்டவர் வருமுன் நற்செய்தி எல்லா இ னத்தார்க்கும் அறிவிக்கப்பட வேண்டும்.51

நற்செய்தி பணி என்பது கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்துதல், அதாவது அத்திட்டத்தை உலகிலும் அதன் வரலாற்றிலும் தெரியப்படுத்தி நிறைவுக்குக் கொணர்தல் ஆகும். இந்த உயரிய செல்கள்தான் நற்செய்திப் பணியேயன்றி, வேறெதுவும் அல்ல. உலக வரலாற்றினோடு கடவுள் நற்செய்திப் பணி மூலமாக மீட்பின் வரலாற்றைத்தெளிவாகச் செயலாக்குகிறார். வார்த்தையை அறிவிப்பதாலும் இன்னும் நற்கருணையை மையம் சிகரமுமாகக் கொண்ட அருளடையாளங்களை நிறைவேற்றுவதாலும் அநற் செய்திப் பணியானது மீட்பை வழங்குபவரான கிறிஸ்துவை உடனிருக்கச் செய்கிறது. மேலும் மக்களினங்களிடையே கடவுளின் மறைந்த உடனிருப்புப் போல் ஏற்கெனவே காணக்கிடக்கின்ற எந்த உண்மையையும் அருளையும் நற்செய்திப் பணியானது தீமைக் கறையினின்று விடுவித்து, அவற்றை வழங்குபவரான கிறிஸ்துவுக்கே அவற்றைத் திரும்ப அளிக்கிறது. உண்மையிலேயே, கிறிஸ்து அலகையின் ஆட்சியை வீழ்த்தி ப h வ த்தி ன் பல்வகைத் தீமைகளையும் வெல்கிறார். இவ்வாறு, மனிதரின்ன இதயத்திலும் மனதிலும் அல்லது மக்களின் சடங்குகளிலும் பண்பாடுகளிலும் விதைக்கப்பட்டுக் காணப்படுகின்ற நன்மையானவை எவையும் அழிந்து போவதில்லை என்பது மட்டுமன்று, மாறாக, அவை நலப்படுத்தப்பெற்று, உயர்த்தப் பெற்று, நிறைவு செய்யப்படுகின்றன் இவ்வாறு கடவுள் மாட்சியடைவார்; அலகை கலக்கமுறும்; மனிதர் பேரின்பமடைவர்52 இங்ஙனம், நற்செய்திப் பணி நிறைவுக் கால முழுமையை நோக்கிச் செல்கிறது.53 அதாவது, இப்பணியின் மூலம் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்கள், காலங்கள் வரைக்கும்,54 கடவுளின் மக்கள் பெருகுகின்றனர். இம்மக்களுக்கு இறைவாக்கு கூறுவதாவது; ''உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு; உன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு'' (எசா 54:2).55 மேலும் நற்செய்திப் பணியின் மூலம், கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெருமளவுக்கு நாம் முதிர்ச்சி அடையும் வரை56 மறையுடலானது வளர்ச்சி அடைகிறது; கடவுளை உண்மையாய் வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுகின்ற57 அருள்கோவில் வளர்கிறது. இது ''திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறது'' (எபே 2:20).

இயல் 2
நற்செய்திப் பணி

முன்னுரை

10. எல்லா மனிதர்க்கும் இனத்தவர்க்கும் இறை அன்பை எடுத்துக்காட்டி, அவர்களோடு அதைப் பகிர்ந்து கொள்ளக் கிறிஸ்துவால் அனுப்பப் பெற்றுள்ள திருச்சபையானது, தான் இன்னும் ஆற்ற வேண்டிய நற்செய்திப் பணியின் அளவு மிகப்பெரிது என்பதை உணர்கிறது. உண்மையிலேயே, நற்செய்தித் தூதுரையை இன்னும் கேட்டிராதவர், அல்லது சிறிதளவே கேடடிருப்போர் இருநூறு கோடிப் பேர் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையோ நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இவர்கள் நிலையான பண்பாட்டுப் பிணைப்புகளாலும், nhன்மையான சமய மரபுகளாலும், உறுதியான சமூக உறவுகளாலும்ன்றுபுட்டுத் தனிப்பட்ட, பெருங்குழுக்களாக வாழ்கின்றனர். இவர்களில் சிலர் உலகப் பெரும் சமயங்களில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்து ஒழுகுகின்றனர்; வேறு சிலர் கடவுள் இருக்கின்றனார் என்பதை வெளிப்படையாக மறுக்கின்றனர்; ஏன் சிலவேளை அந்த உண்மையை எதிர்த்தும் நிற்கின்றனர். மனிதரானதன் மூலம் கிறிஸ்து தாம் கூடிவாழ்ந்த மக்களுடைய சமுதாய, பண்பாட்டுச் சூழ்நிலைகளோடு எவ்வித உணர்வுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டாரோ, அவ்விதமே திருச்சபையும் மீட்பின் மறைத்திட்டம், கடவுளால் வழங்கப்பட்ட வாழ்வு ஆகியவற்றை எல்லாருக்கும் அளிக்க இயலும்; வகையில் இந்த குழுக்கள் அனைத்திலும் நுழைந்து இடம்பெறவேண்டும்.

முதல் பிரிவு
கிறிஸ்தவச் சான்று

வாழ்வுச் சான்றும் உரையாடலும்

11. மேலே கூறப்பட்ட மக்கள் குழுக்களிடையே வாழ்ந்து வருகின்ற அல்லது அவற்றிற்கு அனுப்பப்படுகின்ற தன் பிள்ளைகள் வழியாகத் திருச்சபை அக்குழுக்கள் நடுவே இடம்பெறுதல் வேண்டும். உண்மையிலேயே, வாழ்வின் மாதிரியாலும், வார்த்தையின் சான்றாலும் எல்லாக் கிறிஸ்தவர்களும், அவர்கள் எங்கு வாழ்ந்திடினும் சரி, திருமுழுக்கினால் தாங்கள் அணிந்து கொண்ட புதிய மனிதருக்குரிய இயல்பையும், உறுதிப்பூசுதல் மூலம் தமக்குத் திடம் அளித்த தூய ஆவியின்ன வல்லமையையும் வெளிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுடைய நற்செயல்களைக் கண்டு, பிறமக்களும் தந்தையைப் போற்றிப் புகழ்வதோடு,1 மனித வாழ்வின் உண்மைப் பொருளையும் மனிதரையும் ஒன்றிணைக்கும் பிணைப்பையும் இன்னும் ஆழமாக உணர்ந்து கொள்வார்கள்.

பயனுறு முறையில் கிறிஸ்துவுக்குச் சான்று பகரும் வண்ணம் கிறிஸ்தவர்கள் மேற்கூறிய மக்களோடு அன்பும் மதிப்பும் தோய்ந்த உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; தாங்கள், வாழும் மக்கட் குழுக்களில் தாங்களும் உறுப்பினர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்; மனித வாழ்வைச் சார்ந்த பலவகைப் பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புகள் மூலமாக இக்குழுக்களின் சமூக பண்பாட்டு வாழ்வில் பங்கேற்க வேண்டும்; அவர்களுடைய நாட்டு மரபுகளையும் சமய மரபுகளையும் நன்கறிந்திருக்க வேண்டும்; இம்மரபுகளில் மறைந்திருக்கும் வார்த்தையானவரின் வித்துகளை மகிழ்ச்சியோடும் வணக்கத்தோடும் கண்டுபிடிக்க வேண்டும். அதே நேரத்தில், மக்களினங்களிடையே ஏற்பட்டுவரும் பெரும் மாற்றத்தை அவர்கள் ;கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய மனிதர் தற்கால உலகின் அறிவியலிலும் தொழில் நுட்பத் துறையிலும் மித மிஞ்சி ஈடுபட்டுக் கடவுளைச் சார்ந்தவற்றினின்று விலகிச் செல்லாமலிருக்கவும், உகடவுளால் வெளிப்படுத்தப்பட்ட உண்மை, அன்பு இவற்றின் மீது இவர்களிடையே பேராவலைத் தூண்டவும் பாடுபடவேண்டும். எவ்வாறு கிறிஸ்து மனிதரின் உள்ளங்களைத் துருவி ஆராய்ந்து, உண்மையான மனித உரையாடல் மூலம் இறை ஒளிக்கு அவர்களை அழைத்துச் சென்றாரோ, அங்ஙனம் அவருடைய சீடர்களும் கிறிஸ்துவின் ஆவியால் முற்றிலும் நிரப்பப்பட்டுத் தங்களோடு வாழும் மக்களை அறிந்து, அவர்களோடு உறவாட வேண்டும். இவ்வாறு நேரிய உள்ளத்தோடும் பொறுமை உணர்வோடும் நடத்தப்படும் உரையாடல் ;வழியாக வள்ளலாம் கடவுள் மக்களினங்களுக்கு எத்தகு செல்வங்களை அளித்துள்ளார் என்பதை அவர்களும் கற்றுக்கொள்வர். அதே நேரத்தில், கிறிஸ்துவின் சீடர்கள் நற்செய்தியின் ஒளியில் மேற்கூறிய செல்வங்களை ஒளிர்விக்கவும் விடுவிக்கவும், மீட்பராம் கடவுளின் ஆட்சியின்கீழ்க் கொணரவும் முயல்வார்களாக.

அன்பினால் உடனிருத்தல்

12. மனித குழுக்களின் நடுவே வாழும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை, கடவுள் நம்மீது காட்டிய அதே அன்பினால் உயிரூட்டப் பெறவேண்டும். ஏனெனில், அதே அன்பினால் நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்பு கொள்ளவேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார்.2

உண்மையிலேயே, இனம், சமுதாய சூழ்நிலை, சமய ஆகிய வேறுபாடு எதுவுமின்றிக் கிறிஸ்தவ அன்பு பரந்து விரிந்து எல்லாரையும் தழுவிக் கொள்கிறது; இது எந்த ஊதியத்தையும் நன்றியையும் எதிர்ப்பார்ப்பதல்ல. எவ்வாறு கடவுள் கைம்மாறு கருதாத விதத்தில் நம்மை அன்பு செய்தாரோ, அவ்வாறு நம்பிக்கை கொண்டோரும் கடவுள் மனிதரைத் தேடிவந்த அதே பாசத்தோடு மனிதர்மேல் அக்கறை கொண்டு அவர்களை அன்பு செய்யவேண்டும். எனவே, எவ்வாறு கிறிஸ்து எல்லா நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் சென்று இறையாட்சியின் வருகையின் அடையாளமாக எல்லா நோய் நொழகளையும் குணமாக்கினாரோ,3 அவ்வாறே திருச்சபையும் தன் மக்களின் வழியாக எத்தகை சூழ்நிலையில் வாழும் மனிதரோடும், இன்னும் சிறப்பாகன வறியவரோடும், துன்புறுவோரோடும் இணைந்து அவர்களுகு;காகத் தன்னையே மனமுவ்து அளிக்கின்றது.4 திருசு:சுஐபு ஊணு:ஐமுயாகுவே அவர்களுடைய இன்பங்களிலும் துன்பங்களிலும் பங்கு கொள்கிறது; வாழ்வின் ஏக்கங்களையும் புதிர்களையும் உணர்கிறது; அவர்களோடு மரண வேதனையில் துன்புறுகிறது. அமைதியைத் தேடுவோருக்குத் திருச்சபை நற்செய்தியின் அமைதியையும் ஒளியையும் அளித்துச் சகோதர உரையாடலால் பதிலளிக்க விழைகிறது.

சமுதாய, பொருளாதாரக் காரியங்களைத் தக்க முறையில் ஒழுங்குபடுத்தக் கிறிஸ்தவர்கள் பாடுபட வேண்டும்; மற்ற அனைத்து மக்களோடும் ஒத்துழைக்க வேண்டும். கிறிஸ்தவ இளைஞர்களை உருவாக்கி வளர்க்கப் பயன்படும் சிறந்ததொரு கருவி என மட்டும் இப்பள்ளிகளைக் கருதாமல், மனிதருடைய மாண்பை உயர்த்தி, மேலும் மனிதத்தன்மை மிக்க சூழ்நிலைகளை உருவாக்க மனித குலத்திற்கு, இன்னும் சிறப்பாக வளரும் நாடுகளுக்கு, பெருமதிப்புள்ள சேவை புரிபவைகளாகவும் இவற்றைக் கருதவேண்டும். மேலும், பசி, அறியாமை, நோய்கள் போன்றவற்றிற்கு எதிராகப் போராடி, வாழ்க்கை நிலையை உயர்த்தவும் அமைதியை உலகில் நிலைநாட்டவும் பாடுபடுகின்ற மக்கள் செய்யும் முயற்சிகளில் கிறிஸ்தவர்களும் பங்கு கொள்ள வேண்டும். நம்பிக்கை கொண்டோர் இப்பணியில் தனி, பொது நிறுவனங்கள், அரசுகள், பன்னாட்டு இயக்கங்கள், பல்வேறு கிறிஸ்தவச் சமூகங்கள் மற்றும் கிறிஸ்தவமல்லாச் சமயங்கள் ஆகியவை செயல்படுத்தும் திட்டங்களோடு தாங்களும் முன்மதியோடு இணைந்து உழைக்க வேண்டும்.

திருச்சபை உலகியல் அமைப்பை ஆட்சிசெய்யும் துறையில் குறுக்கிட எவ்விதத்திலும் விரும்புவதில்லை. கடவுளின் துணையோடு, அன்பாலும் பிரமாணிக்கமான சேவையாலும் மனிதருக்குப் பணிபுரிவதைத் தவிர வேறு எ;நத அதிகாரத்தையும் அது தனக்கெனக் கோருவதில்லை.5

தங்களது வாழ்விலும் தொழிலிலும் மக்களோடு நெருங்கிய உறவு கொண்டுள்ள கிறிஸ்துவின் சீடர்கள் கிறிஸ்துவை முழுமையாகப் போதிக்க முடியாத இடங்களிலும் கிறிஸ்துவுக்கு உண்மைச் சான்று பகர முடியும் எனவும் நம்புகிறார்கள். ஏனென்றால், கிறிஸ்துவின் இச்சீடர்கள் மனிதரின் பொருள்நிலை முன்னேற்றத்தையும் செழிப்பையும் மட்டுமே தேடுவதில்லை. மாறாக, தமது ஒளியால் கிறிஸ்து உணர்த்திக்காட்டிய ஒழுக்க நெறிகளையும் சமய உண்மைகளையும் மனிதர்களுக்கப் போதிப்பதனால், அவர்களுடைய மாண்பையும் சகோதர ஒன்றிப்பையும் வளர்க்க முயல்கிறார்கள்; இங்ஙனம் கடவுளை அடையும் வழியைப் படிப்படியாக மனிதர்களுக்கு அதிக அகலமாகத் திறந்துவிடுகிறார்கள். இவ்வாறு, மனிதர்கள் கடவுளுக்கும் பிறருக்கும் அன்பு செய்து தங்கள் நிறைவாழ்வைக் கண்டடைய இவர்கள் உதவுகிறார்கள். அப்போது கிறிஸ்துவின் மறைபொருள் ஒளிப்பெறத் தொடங்குகிறது. இக்கிறிஸ்துவில் கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதியமனிதர்6 தோன்றியுள்ளார்கள். அவர்களிலே கடவுளின் அன்பு வெளிப்படுகிறது.

இரண்டாம் பிரிவு

நற்செய்திப் பறைசாற்றலும் கடவுளின் மக்களை ஒன்றுசேர்த்தலும்

13. கிறிஸ்துவின் மறைபோருளை எடுத்துரைக்கும் வண்ணம்7 எங்கெல்லாம் கடவுள் வார்த்தையை அறிவிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறாரோ, அங்கெல்லாம் எல்லா மனிதருக்கும்8 உயிருள்ள கடவுளும் அனைவரின் மீட்புக்காக அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவும்9 துணிவோடும் இடையறாதும்10 பறைசாற்றப்பட வேண்டும்.11 இவ்வாறு, தூய ஆவி கிறிஸ்துவரல்லாதவர்களின் உள்ளங்களைத் திறந்துவிட12 அவர்கள் நம்பிக்கை கொண்டு, தாமே விரும்பி ஆண்டவரிடம் மனந்திரும்புவர். மேலும் அவரே ''வழியும் உண்மையும் வாழ்வும் நானே'' (யோவா 14:6) என்று, அவர்களுடைய அருள்வாழ்வு ஆவல்களையெல்லாம் நிறைவு செய்வதோடு மட்டுமல்லாமல், எல்லையற்ற முறையில் அதைவிட அதிகமாகச் செய்வதால், அவர்களும் நேரிய உள்ளத்தோடு அவரைப் பற்றிக் கொள்வர்.

இம்மனமாற்றத்தை ஒரு தொடக்க நிலை என்றே கொள்ளவேண்டும். எனினும், மனிதர் தாம் பாவத்தினின்று விடுபட்டுள்ளதையும், கடவுள் அவர்களைக் கிறிஸ்துவில் தம்மோடு நெருங்கி உறவு கொள்ள அழைக்கும் இறை அன்பின் றைபொருளை நோக்கி தாம் இட்;டுச் செல்லப்படுவதையும் உணர்வதற்கு இம்மனமாற்றம் போதுமானது. உண்மையிலேயே, புதிதாக மனந்திரும்பியவர் இறையருளின் தூண்டுதலினால் ஓர் அருள் பயணத்தைத் தொடங்குகிறார். ஏற்கெனவே இறப்பு, உயிர்த்தெழுதல் ஆகிய மறைபொருளில் நம்பிக்கையால் பங்குபெற்று, இப்பயணத்தின்போது பழைய மனித இயல்பைக் களைந்துவிட்டுக் கிறிஸ்துவில் முழுமையடைந்த புதிய இயல்பு உடைய மனிதர்களாக அவர்கள் மாறுகின்றனர்.13 இம்மாற்றம் மனப்பாங்கிலும் ஒழுக்கத்திலும் படிப்படியான ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவதோடுகூட அதன் சமூக விளைவுகளிலும்வெளிப்படுத்தப்பட வேண்டும்; புகுநிலை காலத்தில் சிறிது சிறிதாக முதிர்ச்சி பெற வேண்டும். நம்பிக்கையால் நாம் ஏற்கும் ஆண்டவர் எதிர்க்கப்படும் அடையாளமாக14 இருப்பதால் மனந்திரும்பிய மனிதரும் பல வேளைகளில் பிளவையும் பிரிவையும் எதிர்கொள்ள வேண்டியவராகின்றனர்; ஆனால் அதே சமயத்தில் கடவுள் அளவின்றின அளிக்கும் மகிழ்ச்சியையும் அடைகின்றனர்.15

கட்டாயமாகத் திணித்தோ, தகுதியற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தித் தூண்டியோ, ஆசை காட்டி ஏமாற்றியோ ஒருவரை நம்பிக்கையை ஏற்க வைப்பதைத் திருச்சபை வன்மையாகக் கண்டிக்கிறது. அதேபோல் கொடிய துன்புறுத்தல்களினால் நம்பிக்கை தடுவுவதிலிருந்து தடுக்கப்படாதிருக்க உரிமை எல்லோர்க்கும் உண்டு என்பதையும் திருச்சபை வலியுறுத்திக் கூறுகிறது.16

திருச்சபையின் மிகப் பழைய மரபுப்படி, எந்நோக்கங்களுக்காக மனந்திரும்புதல் நிகழ்கிறதென்பதை ஆராயவேண்டும். தேவையானால், அவற்றைத் தூய்மையாக்கிக் கொள்ளவேண்டும்.

கிறிஸ்தவப் புகுநிலையும் கிறிஸ்தவ வாழ்வைத் தொடங்கலும்

14. கடவுளிடமிருந்து திருச்சபை வழியாகக் கிறிஸ்துவில் நம்பிக்கை பெற்றிருப்பவர்கள்17 திருவழிபாட்டுச் சடங்குகள் வழியாகக் கிறிஸ்துவப் புகுநிலைக்கு அனுமதிக்கப்பட வேண்டும். கிறிஸ்தவப் புகுநிலை என்பது வெறும் மறைக் கோட்பாடுகளையும்கட்டளைகளையும் விளக்கிக் காட்டும் ஒரு நிலையல்ல் மாறாக, இது கிறிஸ்தவ வாழ்வின் முழுமைக்கான உருவாக்கக் காலம். தேவைக்கேற்ப நீடிக்கின்ற பயிற்சி முறை. இவற்றின் உதவியால் சீடர்கள் தங்கள் ஆசிரியராகிய கிறிஸ்துவோடு இணைகிறார்கள். எனவே, நிறைவாழ்வின் மறைபொருளுக்கும், நற்செய்தி ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிப்பதற்கும் புகுநிலைக் கிறிஸ்தவர்கள் தகுந்த முறையில் அறிமுகப்படுத்தப்படவேண்டும்; அஃதோடு, ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டாடப்படுகின்ற திருச்சடங்குள் மூலமாகவும்18 அவர்கள் இறைமக்களின் நம்பிக்கை, திருவழிபாட்டு, அன்பு வாழ்விற்கு இட்டுச் செல்லப்பட வேண்டும்.

பின்னர், கிறிஸ்தவபு புகுமுக அருளடையாளங்கள் வழியாக அவர்கள் இருளின் அதிகாரத்திலிருந்து விடுவிக்கப்பட்டு,19 கிறிஸ்துவோடு இறந்து, அவரோடு அடக்கம் பண்ணப்பட்டு மறுபடியும் அவரோடு உயிர்த்தெழுவார்கள்;20 கடவுளுக்குச் சொந்தமான பிள்ளைகளுக்கு உரிய ஆவியைப் பெற்றுக் கொள்வார்கள்;21 இறைமக்கள் அனைவரோடும்சேர்ந்து ஆண்டவருடைய இறப்பு, உயிர்த்தெழுல் இவற்றின் நினைவைக் ;கொண்டாடுவார்கள்.

பாஸ்கா மறைபொருளின் ஆடம்பரக் கொண்டாட்டங்களின்போது புகுநிலை கிறிஸ்தவர்கள் திருமுழுக்கின் மூலமாகக் கிறிஸ்துவில் புதுப்பிறப்பு அடைகின்றனர். எனவே, இப்பாஸ்கா மறைபொருள் கொண்டாட்டத்தில் பங்கேற்க அவர்களின் உள்ளங்களைப் பக்குவப்படு;தும் வகையில் தக்காலத்தினுடையவும், பாஸ்கா காலத்தினுடையவும் திருவழிபாட்டு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்.

கிறிஸ்துவப் புகுநிலை மூலம் அளிக்கப்படுகின்ற கிறிஸ்தவ வாழ்வு வேதியர்களாலும் திருப்பணியாளர்களாலும் மட்டுமே அறிமுகம் செய்யப்பட வேண்டிய ஒன்றன்று; மாறாக, நம்பிக்கை கொண்டோரின் சமூகம் முழுவதுமே, சிறப்பாக, நம்பிக்கை கொண்டோரின் சமூகம் முழுவதுமே, சிறப்பாக, ஞானப் பெற்றோர்களும் இதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். இதனால் புகுநிலைக் கிறிஸ்தவர்கள் தாங்களும் கடவுளின் மக்களைச் சேர்ந்தவர்களே எனத் தொடக்கத்திலிருந்தே உணர்ந்து கொள்வார்கள். மேலும், திருச்பையின் வாழ்வு திருத்தூது வாழ்வாக இருப்பதால், புகுpலைக் கிறிஸ்தவர்களுள் தங்கள் வாழ்வின் சாட்சியத்தாலும் நம்பிக்கை அறிக்கையாலும் நற்செய்தியை அறிவிக்கவும், திருச்சபையை வளர்ச்சியுறச் செய்யவும் செயலளவில் ஒத்துழைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இறுதியாக, புகுநிலைக் கிறிஸ்தவர்கள் சட்ட முறைமையாக எந்நிலையைச் சார்ந்தவர்கள் என்பது புதிய திருச்சபைச் சட்டத்தொகுப்பில் தெளிவாகக் கூறப்பட வேண்டும். ஏனென்றால், அவர்கள் ஏற்கெனவே திருச்சபையோடு ஒன்றித்தவராய் இருக்கின்றனர்;22 ஏற்கெனவே கிறிஸ்துவின் இல்லத்தைச் சேர்ந்தவராகவுமிருக்கின்றனர்;23 ஏற்கெனவே நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்பில் தோய்ந்த வாழ்வை அவர்கள் பலவேளைகளிலும் வாழ்ந்து ஒழுகுகின்றனர்.

மூன்றாம் பிரிவு
கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்ல்

கிறிஸ்தவ சமூகத்திற்கு உருக்கொடுத்தல்

15. வார்த்தையானவரின் வித்தாலும் நற்செய்தி அறிவிப்பாலும் எல்லா மனிதரையும் கிறிஸ்துவிடம் அழைக்கும் தூய ஆவி, இதயங்களில் நம்பிக்கையால் எழும் கீழ்ப்படிதலைத் தூண்டிவிடுகிறார்; திருமுழுக்குத் தொட்டியெனும் வயிற்றில் அவர் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களைப் புத்துயிர் பெற்றெழச் செய்யும் பொழுது, ''தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்களாக'' (1 பேது 2:9)24 ஒரே இறைமக்கள் குழுவாக அவர்களை ஒன்று கூட்டுகின்றார்.

எனவே, கடவுளின் உடன் உழைப்பாளாகளாகிய25 நற்செய்திப் பணியாளர்கள் நம்பிக்கை கொண்டோரின் சமூகங்களை எத்தகையனவாய் உருவாக்க வேண்டுமெனில், அவை தங்களின் அழைப்பிற்கு ஏற்ப வாழ்ந்து,26 தங்களுக்குக் கடவுள் அருளியுள்ள திருப்பணி, இறைவாக்கு உரைக்கும், அரச அலுவல்களை நிறைவேற்றக் கூடியனவாய் இருத்தல் வேண்டும். இவ்வாறு கடவுள் இவ்வுலகில் உழைகிறார் என்பதற்குக் கிறிஸ்தவ சமூகம் ஓர் அடையாளமாக விளங்கும்: அதாவது இச்சமூகம் நற்கருணைப் பலியில் கிறிஸ்துவோடு இடைவிடாது தந்தையை அணுகிச் செல்கிறது;27 இறைவார்த்தையால் பக்குவமாக ஊட்டம் பெற்று,28 கிறிஸ்துவுக்குச் சான்று பகர்கிறது;29 இறுதியாக அன்பின் வழி நடந்து திருத்தூது உணர்வால் பற்றி எரிகிறது.30

தன் தேவைகளைக் மூடுமானவரை தானே நிறைவு செய்து கொள்ளும் வகையில் கிறிஸ்தவச் சமூகம் தொடக்கத்திலிருந்தே உருவாக்கப்பட வேண்டும்.

தனது நாட்டின் பண்பாட்டுச் செல்வங்களைக் கொண்டுள்ள நம்பிக்கை கொண்டோரின் இத்தகைய குழு மக்களிடையே ஆழமாக வேரூன்றியிருக்க வேண்டும்; நற்செய்தி உணர்வில் தோய்ந்த குடும்பங்கள் செழித்து வளர வேண்டும்,31 இக்குடும்பங்களுகு;குத் தகுந்த கல்விக் கூடங்கள் உதவி புரிய வேண்டும்; பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி நற்செய்தி உணர்வைச் சமுதாயம் முழுவதிலும் ஊடுருவும் வண்ணம், அதற்கு உதவக்கூடிய குழுக்களையும் கழகங்களையும் நிறுவவேண்டும். இறுதியாக, வேறுபட்ட வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் கத்தோலிக்கரிடையே அன்பு துலங்க வேண்டும்.32

புதுக் கிறிஸ்தவரிடையே கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வையும் வளர்க்கவேண்டும். அவர்கள், கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்துள்ள தங்கள் சகோதரரைக் கிறிஸ்துவின் சீடர்கள் என்றும், திருமுழுக்கினால் புதுப்பிறப்பு அடைந்தவர்கள் என்றும், இறைமக்களின் பல்வேறு நன்மைகளில் பங்காளிகள் என்றும் நன்கு மதித்துப் போற்ற வேண்டும். சமயச் சூழ்நிலைகளை; இடந்தரும் அளவுக்குக் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணி வளர்க்கப்படவேண்டும். இவ்வாறு, ஈடுபாடற்ற நிலையையும், குழப்பத்தையும், பொருளற்ற போட்டி மனப்பான்மையையும் விலக்கிவிட்டு, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றிய விதித் தொகுப்பில் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளுக்கு ஏற்பக் கத்தோலிக்க மக்கள் பிற கிறிஸ்தவ சகாதரர், சகோதரிகளோடு சகோதர மனப்பான்மையோடு ஒத்துழைக்க முடியும். அதாவது, கடவுள் மீதும் இயேசு கிறிஸ்துவின் மீதும் தாங்கள் கொண்ட நம்பிக்கையை மக்களினங்களுகு;கு முன் எவ்வளவுக்கு இயலுமோ அவ்வளவுக்கு ஒன்று சேர்ந்து அறிக்கையிடுவதாலும், சமுதாயம், தொழில் நுட்பத்துறை, பண்பாடு, சமயம் இவற்றைச் சார்ந்த காரியங்களில் இணைந்து செயல்படுவதாலும் அவர்கள் இந்த ஒத்துழைப்பை நல்க முடியும். சிறப்பாகத் தங்களின் பொதுத் தலைவராகிய கிறிஸ்துவின் பொருட்டு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும்: அவருடைய திருப்பெயர் அவர்களை ஒன்று சேர்ப்பதாக! இந்த ஒத்துழைப்பு தனிப்பட்டவரிடையே மட்டுமன்றி, அந்தந்தத் தலத் திருச்சபைத் தலைவர் தீர்மானப்படி, சபைகள், சபைச் சமூகங்களிடையேயும், அவைகள் செய்யும் பணிகளிடையேயும் காணப்பட வேண்டும்.

கிறிஸ்தவர்கள் எல்லா மக்களினத்தாரிடமிருந்தும் திருச்சபையில் ஒன்றுகூட்டப் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் ''ஆட்சியாலோ, மொழியாலோ, அரசியல் அமைப்பாலோ பிற மனிதரிடமிருந்து வேறுபட்டவரல்லர்''33 எனவே, இவர்கள் தங்கள் இனத்தவரின் நலமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றி, கடவுளுக்காகவும் கிறிஸ்துவுக்காகவும் வாழவேண்டும்; நல்ல குடிமக்களாயிருந்து நேரிய, செயல்முறையான நாட்டுப்பற்றைப் பேறவேண்டும். பிற இனத்தவர் மேல் வெறுப்பையும், நாட்டு வெறியையும் முற்றிலும் தவிர்த்து, எல்லா மனிதருக்கும் உண்மையாகவே அன்பு செய்யும் பண்பை வளர்க்க வேண்டும்.

இந்நோக்கங்களை அடைவதில் திருமுழுக்கால் கிறிஸ்துவோடு ஓருடலாக்கப்பட்டு இவ்வுலகின் நடுவே வாழும் கிறிஸ்தவர்களாகிய பொதுநிலையினருக்கு முக்கிய இடம் உண்டு; இந்நோக்கங்களை அடைய முயலும் அவர்கள் சிறப்பான கவனத்துக்கு உரியவர்கள். உண்மையிலேயே, கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்பட்டு உலகியல் அமைப்பு எல்லாம் எப்போதும் கிறிஸ்துவுக்கு உகந்தவண்ணம் செயல்படும்படி ஒரு புளிப்புமாவைப்போல் அவற்றின் உள்ளிருந்தே அவற்றிற்று உயிரூட்டி ஒழுங்குபடுத்துவது பொதுநிலையினருக்கே உரிய பணியாகும்.34

எனினும், கிறிஸ்தவர்கள் ஒரு மக்களினத்தாரிடையே ஒரு சமூகமாக இடம் பெறுவதோ, நிறுவப்படுவதோ மட்டும் போதாது; தங்களது முன்மாதிரியை வழியாக திருத்தூதுப் பணியைச் செய்வதும் போதாது. மாறாக, உடன் வாழும் கிறிஸ்தவரல்லாக் குடிமக்களுகு;குச் சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவை அறிவித்து, அவரை முழுமையாக அவர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்யவே இக்கிறிஸ்தவச் சமூகம் அங்கு இடம் பெறுகிறது; அதற்காகவே அது அங்கு நிறுவப்படுகின்றது.

ஓரிடத்தில் திருச்சபை நிறுவப்படுவதற்கும், ஒரு கிறிஸ்தவ சமுதாயமாக அது வளர்ச்சியுறுவதற்கும் பல்வேறு பணிகள் தேவைப்படுகின்றன. இப்பணிகள் எல்லாம் நம்பிக்கை கொண்டோரின் இக்குழுக்களிலிருந்தே இறை அழைத்தலினால் பெறப்படுகின்றன் இவற்றை ஒவ்வொருவரும் கருத்தோடும் கவனத்தோடும்பேணி வளர்ப்பதுஅவசியம். திருப்பணியாளர், திருத்தொண்டர், வேதியர் ஆகியோரின் அலுவல்களும், 'கத்தோலிக்க சேவை'யும் இப்பணிகளுள் அடங்குவனவாகும். இதைப்போலவே துறவு பூண்ட ஆண் துறவியரும்n பண் துறவியரும் தங்கள் இறைவேண்டலாலும் ஆர்வமுள்ள உழைப்பாலும் மனித உள்ளங்களிலே கிறிஸ்துவின் ஆட்சியை நிறுவவும், உறுதிப்படுத்தவும், அதனை இன்னும் பரவச் செய்யவும் ஈடிணையற்ற உதவி செய்கின்றனர்.

அந்தந்த நாட்டைச் சார்ந்த திருப்பணி நிலையினரை உருவாக்குதல்

16. கிறிஸ்துவிடம் புதிதாய் மனந்திரும்பிய மக்களினங்களிடையே எத்தனையோ இளைஞர்களுக்குக் கடவுள் திருப்பணி அழைத்தல் என்னும் விலைமதிக்கப்படாத கொடையை வழங்கியுள்ளார். இக்கொடைக்காலத் திருச்சபை மகிழ்ச்சியோடு நன்றி செலுத்துகிறது. ஏனென்றால் நம்பிக்கை கொண்டோரின் பல்வேறு சமூகங்கள் மீட்பின் பணியாளர்களை, அதாவது தம் சகோதரர், சகோதரிகளுக்குப் பணிபுரியும் ஆயர்கள், திருப்பணியாளர்கள், திருத்தொண்டர்கள் என்னும் திருநிலைகளில் உள்ளவர்களைத் தம் சொந்த உறுப்பினர்களிடமிருந்தே பெறும்போது, ஒவ்வொரு குழுவிலும் திருச்சபை இன்னும் அதிகன ஆழமாக வேரூன்றுகிறது. இவ்வாறு, இந்த இளஞ் சபைகள் தங்கள் சொந்தத் திரு;பணியாளர் குழுவின் துணையால் படிப்படியாக மறைமாவட்ட அமைப்பைப் பெறுகின்றன.

திருச்சபையானது முதன்முறையாக நிறுவப்படுகின்ற இடங்களிலும், இளஞ் சபைகளிலும் திருப்பணி அழைத்தல், திருப்பணிப் பயிற்சி ஆகியவை பற்றி இப்பொதுச்சங்கம் வரையறுத்துக் கூறியுள்ளவை அனைத்தும் துல்லியமாய்க் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அருள்வாழ்வுப் பயிற்சியானது கோட்பாட்டுப் பயிற்சியோடும் அருள்பணிப் பயிற்சியோடும் நெருங்கிப் பிணைந்திருக்க வேண்டியது பற்றியும், தனக்கோ தனது குடும்பத்திற்கோ சாதகமானவற்றை நாடாது நற்செய்திக்கு ஒத்த வாழ்க்கை நடத்தவேண்டியது பற்றியும், திருச்சபையின் மறைபொருளைக் குறித்து ஆழ்ந்த நல்லுணர்வைப் பேணுவது பற்றியும் சங்கம் கூறியவற்றை உயர்வாக மதிக்கவேண்டும். இவ்வாறு, திருப்பணிப் பயிற்சி பெறுவோர் கிறிஸ்துவின் உடலுக்குச் சேவை செய்வதற்கும் நற்செய்திப் பணிபுரிவதற்கும் தங்களையே முழுவதும் கையளிக்கச் சிறுப்புறுவகையில் கற்றுக் கொள்வர்; நம்பிக்கையுள்ள ஒத்துழைப்பாளராகத் தங்கள் ஆயரைச் சார்ந்திருக்கவும், தங்கள் உடன் சகோதரர் சகோதரிகளோடு ஒத்துழைக்கவும் கற்றுக்காள்வர்.35

இப்பொதுக் குறிக்கோளை அடையும்பொருட்டு, திருப்பணி மாணவரின் முழுப்பயிற்சியும் விவிலியத்தில் எடுத்துரைக்கப்படும் நிறைவாழ்வு மறைபொருளின் ஒளியில் அமைக்கப்பட வேண்டும். கிறிஸ்துவையும் மனித நிறைவாழ்வையும் பற்றிய இந்த மறைபொருளை அவர்கள் திருவழிபாட்டில்க ண்டுணர்ந்து, வாழ்வில் காட்டவேண்டும்.36

பொதுச் சங்கம் காட்டிய வழிமுறையைப் பின்பற்றி,37 அருள்பணிப் பயிற்சி, செயல்முறைப் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திருப்பணிப் பயிற்சி ஒவ்வொரு மக்களினத்தின் சிந்தனை, செயல்முறைப் பாணிகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையோடு இசைவுற இணைக்கப்பட வேண்டும். எனவே, தங்களது நாட்டு மக்களின் பண்பாட்டை நன்கு அறிந்திடவும் அதை மதிப்பீடு செய்யவும் இயலும் வகையில் திருப்பணி மாணவர்கள் திறந்த, கூரிய உளமுடையவராதல் வேண்டும். மெய்யியல், இறையியல் பாடங்களில் அவர்கள் தங்கள் நாட்டு மரபுகள், சமயங்கள் ஆகியவற்றிற்கும் கிறிஸ்தவ சமயத்துக்கும் இடையே உள்ள உறவுகளை38 ஊன்றி அறிந்திட வேண்டும். அதுபோலவே, திருப்பணிப் பயிற்சியும் அந்தந்த நிலப்பகுதியின் அருள்பணித் தேவைகளைக் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்; திருச்சபையினுடைய நற்செய்திப் பணியின் வரலாற்றையும் குறிக்கோளையும் வழிவகைகளையும் தம் சொந்த மக்களின் தனிப்பட்ட, சமூக, பொருளாதார பண்பாட்டு நிலைமைகளையும் திருப்பணி மாணவர்கள் கற்றுணர வேண்டும். கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வில் பயிற்சி பெற்று, கிறிஸ்தவரல்லாதவரோடு சகோதர உறவுடன் உரையாடத் தக்கமுறையில் அவர்கள் தயாரிக்கப்படவேண்டும.;39 இவை எல்லாவற்றையும் நோக்குங்கால்? திருப்பணி மாணவர்கள் முடிந்தவரை தங்களது சொந்த நாட்டின் சூழ்நிலையிலேயே இருந்து தம் நாட்டவரின் பழக்கவழக்கங்களைக் கைக்கொண்டு திருப்பணிக் கல்வி பெறல் சிறப்பு.40 இறுதியாகத் திருச்சபை நிர்வாகத்திலும், பொருளாதார நிர்வாகத்திலும் அவர்களுக்குத் தகுந்த பயிற்சியளிப்பதில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், தகுதிவாய்ந்த திருப்பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து சிறிதுகால அருள்பணிக்குப் பின் உயர்கல்விக்காக அவர்களை வெளிநாடுகளில், சிறப்பாக, உரோமையில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கும் மற்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைப்பது தேவை. இவ்வாறு, பொருத்தமான அறிவும் தேர்ச்சியும் பெற்ற இவர்கள் அந்தந்த இடத்துப் புதிய சபைகளின் திருப்பணிநிலையினராய் அதிகக் கடினமான திருச்சபை அலுவல்களை நிறைவேற்ற இயலும்.

திருத்தொண்டர் நிலை தேவையானதென ஆயர் பேரவைகள் கருதினால், திருச்சபை பற்றிய கோட்பாட்டு விளக்கத்தில் குறித்துள்ள ஒழுங்குகள்படி41 இத்திருத்தொண்டர் நிலையை ஒரு நிலையான வாழ்க்கை முறையாகத் திரும்பவும் கொண்டுவரல் நன்று. வேதியராக இருந்து இறைவார்த்தையைப் பறைசாற்றுபவர்கள் தொலைவிலுள்ள கிறிஸ்தவச் சமூகங்களைப் பங்குத் திருப்பணியாளருடையவும் அயருடையவும் பெயரால்நடத்தி வருபவர்கள்; சமூகச் Nசுவை மற்றும் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டு அன்பைச் செயல்படுத்துபவர்கள். இவர்கள் உ;ணமையிலேயே திருத்தொண்டர் நிலைக்குரிய பணிகளை ஆற்றுபவர்கள்தாம். எனவே, திருத்தொண்டர் நிலைக்குரிய பணிகளை ஆற்றுபவர்கள்தாம். எனவே, திருத்தூதரிடமிருந்து மரபாக வரும் தலைமேல் கை வைக்கும் சடங்கின் மூலம் இவர்களைத் திருத்தொண்டராக உறுதிப்படுது;திப் பலிப் பீடத்தோடு இன்னும் அதிகமாக நெருங்கியிருக்கச் செய்வது நலம் பயக்கும். இவ்வாறு, திருத்தொண்டருக்குரிய அருளடையாள அருளின் துணைக்கொண்டு இவர்கள் தம் பணியை அதிகப் பயன்தருமுறையில் நிறைவேற்ற இயலும்.

வேதியருக்குப் பயிற்சி அளித்தல்

17. மக்களினங்களிடையே நற்செய்திப் பணி நிகழப் பெரிதும் துணைபுரிந்துள்ள வேதியர் குழுவினர் போற்றுதற்குரியவர்கள் ஆவர். இவர்கள் ஆண்களாயினும், சரி பெண்களாயினும் சரி, திருத்தூது உணர்வால் நிரப்பப்பட்டுக் கடினமாக உழைத்து, தனிச்சிறப்பு மிக்க இன்றியமையாத பேருதவியை நம்பிக்கை வளர்ச்சிக்கும் திருச்சபை பரவுவதற்கும் மனமுவந்து வழங்கியுள்ளனர்.

எண்ணிறந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், அருள் பணியை நிறைவேற்றவும் ;தேவையான திருப்பணியாளர்கள் மிகச் சிலரே உள்ள நமது காலத்தில், வேதியரின் பணி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, வேதியர் திருப்பணியாளர்களோடு சீரிய முறையில் ஒத்துழைப்பவர்களாக இருந்து, பெருகிவரும் புதிய பொறுப்புகளைக் கொண்ட தங்கள் பணியை மிகச் சிறந்த முறையில் மேற்கொள்ளும் வகையில் அவர்களது பயிற்சி அமையவேண்டும்; மேலும், பண்பாட்டு வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் அப்பயிற்சி தழுவியமைக்கப்படவும் வேண்டும்.

எனவே, கருங்கால வேதியர்கள் கத்தோலிக்க கோட்பாடுகளிலும், சிறப்பாக விவிலியம் மற்றும் திருவழிபாட்டுத் துறைகளிலும், மறைக்கல்வி புகட்டும் முறை, அருள்பணிச் செயல்முறை ஆகியவைகளிலும் நன்கு பயிற்சிப் பெறுவதற்கான மறைமாவட்டப் பள்ளிகள், வட்டாரப் பள்ளிகள் ஆகியவற்றின் எண்ணிக்கiயைப் பெருக்க வேண்டும். இப்பள்ளிகளில் அவர்கள் கிறிஸ்தவ ஒழுக்க நெறிகளுக்கு ஏற்பத் தங்களைத் தயாரித்துக்கொண்டு42 எப்பொழும் பக்தியையும் தூய்மைநிலையையும் வாழ்வில் வளர்க்க முயல்வர். மேலும், அவர்களுடைய பணிக்குப் பயன்தரும் பாடங்களிலும் பயிற்சிகளிலும் தங்களையே புதுப்பித்துக் கொள்ளவும், தங்களது அருள் வாழ்வை ஊட்டி வளர்த்து உரமளிக்கவும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கருத்தரங்குகளும் தொடர் வகுப்புக்களும் வேதியருக்கு நடத்தப்பட வேண்டும். மேலும், மேற்கூறிய பணிக்குத் தங்களை முழுவதும் கையளித்தோர்க்கு நீதியான ஊதியம் கொடுத்து அவர்களுகு;குத் தகுந்த வாழ்க்கைத் தரமும் சமூகக் காப்பீடும் அளிக்கவேண்டும்.43

வேதியர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கும் அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் போதிய ஏற்பாடுகள் செய்ய நற்செய்தி அறிவிப்புத் திருப்பேராயத்தின் சிறப்பு நிதி உதவி கிடைப்பது அவசியமானது. தேவையானதாகவும் பொருத்தமானதாகவும் தென்பட்டால், வேதியர் நல நிறுவனம் ஒன்றும் ஏற்படுத்தப்படட்டும்.

துணை வேதியர்களின் உதவியும் சபைகளுக்குத் தேவைப்படும் துணை வேதியர்கள் செய்துவரும் தாராள உதவிகளுக்குச் சபைகள் நன்றிக்கடன் கொண்டுள்ளன. இந்தத் துணை வேதியர்கள் தங்களுடைய சமூகங்களில் இறைவேண்டல் வழிபாடுகள் நடத்திக் கிறிஸ்தவப் படிப்பினையை வழங்குபவராவர்.இவர்களுக்குக் கோட்பாட்டுப் பயிற்சியும் அருள்வாழ்வுப் பயிற்சியும் அளிப்பதற்குத் தகுந்த முயற்சியெடுக்க வேண்டும். மேலும், எங்கெல்லாம் நல்லது எனத் தோன்றுகின்றதோ, அங்கெல்லாம் நன்கு பயிற்சி பெற்ற வேதியருக்கு. ஒரு பொதுத் திருவழிபாட்டுச் சடங்கின்போது திருச்சபையின் அதிகாரப்பூர்வமான பணி வழங்கப்படுவது மிகவும் விரும்பத்தக்கது. இதனால், அவர்கள் மக்கள் நடுவில் இன்னும் அதிக அதிகாரத்தோடு நம்பிக்கைப் பணிபுரிய முடியும்.

துறவற வாழ்வைப் பேணி வளர்த்தல்

18. ஒரு சபை நிறுவப்படும் காலத்திலிருந்தே அங்குத் துறவற வாழ்வு கவனத்தோடு பேணி வளர்க்கப்பட வேண்டும். இத்துறவற வாழ்வு கவனத்தோடு பேணி வளர்க்கப்பட வேண்டும். இத்துறவற வாழ்வு நற்செய்திப் பணிக்குப் பெருமதிப்புடைய, இன்றியமையாத உதவி அளிப்பது மட்டுமன்றி, திருச்சபையில் அதிக நெருக்கமாகக் கடவுளுக்கு அர்பணிப்பதின் மூலம் கிறிஸ்தவ அழைத்தலின் உள்ளயல்கைப வெளிப்படுத்திக் குறித்துக் குறித்துக் காட்டுகிறது44

திருச்சபையை நிறுவுவதற்கு உழைக்கும் துறவறச் சபைகள் திருச்சபையின் துறவற மரபை அணிச்செய்யும் கடவுள் அனுபவச்செல்வங்களைத் தாராளமாகக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மக்களினத்தினுடையவும் இயல்புப் பண்புக்கும் தனித் தன்மைக்கும் ஏற்ற முறையில் இச்செல்வங்களை வெளிப்படுத்தவும் வழங்கவும் இச்சபைகள் முயல வேண்டும். நற்செய்தியை பறைசாhற்றப்படுமுன்பே பழங்கால பண்பாடுகளில் ஆங்காங்கே கடவுள் தவ வாழ்க்கை மரபுகள், மற்றும் ஆழ்நிலைத் தியான வாழ்கை மரபுகள், மற்றும் ஆழ்நிலைத் தியான வாழ்க்கை மரபுகளின் வித்துகளைத் தூவியுள்ளார். இம்மரபுகளைக் கிறிஸ்வத் துறவற வாழ்வில் எவ்வாறு புகுத்துவது என்பது பற்றித் துறவறச் சபைகள் கருத்தோடு ஆராய வேண்டும்.

புதிய சபைகளில் வெவ்வேறு துறவற வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை கிறிஸ்துவினுடைய பணி, திருச்சபையின் வாழ்வு இவற்றின் பல்வேறு கோணங்களை எடுத்துக்காட்டும்; அருள்பணியின் பல்;வேறு அலுவல்களில் தங்களையே ஈடுபடுத்தும்; இவ்வலுவல்களை நிறைவேற்றித் தங்கள் உறுப்பினரைச் சரியான முறையில் தயார் செய்யும். எனினும் ஒரே விதமான திருத்தூது நோக்கங்களைக் கொண்ட துறவறச் சபைகள் துறவற வாழ்வுக்கும் திருத்தூது நோக்கங்களை கொண்ட துறவறச் சபைகள் துறவற வாழ்வுக்கும் திருத்தூப் பணிக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் பெருகிவிடாதபடி ஆயர் பேரவைகள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஆழ்நிலைத் தியான வாழ்வு முறையை வேரூன்றக் செய்யப்படும் பல்வேறு முயற்சிகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனவாகும் இம்முயற்சிகளின் வழியாக, சிலர் ஆதினத் துறவு வாழ்வில் அடிப்படைக் கூறுகளைக் காத்து, தங்கள் சபையின் வளமிக்க மரபுகளை நிலைநாட்ட முயல்கின்றனர்;;;: சிலர் பழைய ஆதினத் துறவு வாழ்வின் அடிப்படைக் கூறுகளைக் காத்து, தங்கள் சபையின் வளமிக்க மரபுகளை நிலைநாட்ட முயல்கின்றனர்;;;;; சிலர் ஆதினத் துறவு வாழ்க்கையின் அதிக எளிமையான முறைகளுக்குத் திரும்புகின்றனர். எவ்வாறாயினும், எல்லாரும் அந்தந்த இடத்துச் சூழ்நிலைகளுக்குத் தக்கபடி உண்மையான தழுவியமைத்தலில் ஈடுபடுவார்களாக ஆழ்நிலைத் தியான வாழ்வு திருச்சபை முழுமையாக உடனிருப்பதைக் குறிக்கிறது. ஆதலால் அது புதிய சபைகளில் எங்கும் நிறுவப்பட வேண்டும்.

இயல் 3
தனித் திருச்சபைகள்

இளஞ் சபைகளின் வளர்ச்சி

19. நம்பிக்கை கொண்டோரின் குழுவானது சமூக வாழ்வில் ஏற்கெனவே வேரூன்றி, அந்தந்த இடங்களில் பண்பாட்டிற்கு ஏற்ப தகுந்த அளவு தம்மையே தழுவியமைத்து ஓரளவு நிலையாகவும் உறுதியாகவும் அமையும் பொழுது, குறிப்பிட்ட ஒரளவு நிலையாகவும் உறுதியாகவும் அமையும்பொழுது, குறிப்பிட்ட ஒரு மக்கள் சமுதாயத்தில் திருச்சபையை நிறுவும் பணியானது ஒரு திருப்பத்தைப் பெறுகிறது. அதாவது இத்தகைய திருச்சகை தன் சொந்தத் திருப்பணியாளர்கள், துறவிகள், பொதுநிலையினர் ஆகியோரை இவர்கள் எண்ணிக்கையில் மிகுதியானவர்கள் இல்லாதிருப்பினும்கூட தன்னகத்தே கொண்டுள்ளது. அஃதோடுகூட, தன் ஆயரின் வழிநடத்தலின் கீழ் இறைமக்கள் தம் வாழ்வை அமைக்கவும் வளர்க்கவும் தேவையான திருப்பணிகளும் அமைப்புகளும் இத்தகைய சபையில் நிலைத்துள்ளன.

மேற்கூறிய புதிய சபைகளைச் சார்ந்த இறைமக்களின் வாழ்வானது, இச்சங்கத்தின் ஒழுங்குகளுக்கு ஏற்ப மறுமலர்ச்சி பெறவேண்டிய கிறிஸ்தவ வாழ்வின் எல்லாத் துறைகளிலும் முதிர்ச்சி அடைய வேண்டும்: அப்போது நம்பிக்கை கொண்டோரின் குழுக்கள் மேன்மேலும் ஆழ்ந்த உள்ளுணர்வோடு நம்பிக்கையின், திருவழிபாட்டின், அன்பின் உயிருள்ள சமூகங்களாக உருவாகும்: பொதுநிலையினர் தங்களுடைய நாட்டுப்பணி, திருத்தூதுப் பணி ஆகியவற்றால் அன்பையும் நீதியையும் நாட்டில் நிலைநிறுத்த முயல்வர். சமூகத் தொடர்புக் கருவிகள் ஏற்ற முறையிலும் முன்மதியுடனும் பயன்படுத்தப்படும்;; குடும்பங்கள் உண்மையான கிறிஸ்தவ வாழ்வால் பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி மற்றும் திருப்பணிநிலை, துறவற அழைத்தல்கள் வளர்கின்றன நாற்றங்கால்களாக மாறும். இறுதியாக, மேற்கூறிய புதிய சபைகளில் தழுவியமைக்கப்பெற்ற மறைக்கல்வி வழியாக நம்பிக்கை பயிற்றுவிக்கப்படும்; மக்களின் தனிப்பண்பிற்கு ஏற்ற முறையில் அமைந்த திருவழிபாடு வழியாக அந்நம்பிக்கை கொண்டாடப்படும்; தக்க திருச்சபைச்சட்டங்கள் மூலமாக நம்பிக்கை அந்தந்ம இடத்தில் நிலவும் நலமான நிறுவனங்களிலும் பழக்கவழக்கங்களிலும் புகுத்தப்படும்.

ஆயர்கள், தத்தம் திருப்பணியாளர் குழுவோடு கூட கிறிஸ்துவின் மனநிலையிலும் அவருடைய திருச்சபையின் மனநிலையிலும் அவருடைய திருச்சபையின் மனநிலையிலும் என்றும் அதிகமாகத் தோய்ந்தவர்களாக அனைத்துலகத் திருச்சபையோடு ஒருமித்து வாழவும் உணரவும் வேண்டும். புதுச் சபைகள் திருச்சபை முழுவதோடும் நெருங்;கி இணைந்திருக்கட்டும்; இதன் மரபுக்கூறுகளைப் புதுச் சபைகள் தம் சொந்தப் பண்பாடுகளில் இணைத்தும், இவ்வாறு ஆற்றல்களைப் பரிமாறிக் கொண்டும் மறையுடலில் வாழ்வை வளரச் செய்யும் எனவே, திருச்சபை முழுவதோடும் நெருங்கி இணைந்திருக்கட்டும்; இதன் மரபுக் கூறுகளைப் புதுச் சபைகள் தம் சொந்தப் பண்பாடுகளில் இணைத்தும், இவ்வாறு ஆற்றல்களைப் பரிமாறிக் கொண்டும் மறையுடலின் வாழ்வை வளரச் செய்யும் எனவே திருச்சபை முழுவதோடும் கொள்ளும் இவ்வொன்றிப்பு உணர்வை வளர்க்க இயலுமான இறையியல், உளவியல் கூறுகளையும் மனிதக் பேணிட வேண்டும். பெரும்பாலும் உலகில் வறிய பகுதிகளில் அமைந்துள்ள இச்சபைகள் திருப்பணியாளர்களின் பெரும் பற்றாக்குறையாலும் பொருளுதவிகள் இல்லாமையாலும் அல்லறுகின்றன. எனவே, தலத் திருச்சபையின் வளர்ச்சிக்கும் கிறிஸ்தவ வாழ்வின் முதிர்ச்சிக்கும் சிறப்பாக பயன்படுகின்ற உதவிகளை மேற்கூறிய இளந் திருச்சபைகளுக்கு அனைத்துலகத் திருச்சபையின் தொடர்ந் நற்செய்திப் பணி வழியாக வழங்கிடுதல் மிகவும் இன்றியமையாததாகும். நெடுங்காலத்திற்கு முன்பே நிறுபப்பெற்றிருப்பினும் இன்று பின் தங்கி நிற்கின்ற அல்லது வலிமை குன்றிய நிலையிலுள்ள சபைகளுக்கும் மேற்கூறிய நற்செய்திப் பணி வழியாக உதவியளித்திட வேண்டும்.

எனினும், மறைவாட்டம் திருப்பணி நிலையினருக்கும் துறவறச் சபைகளுக்கும் தேவையான இறை அழைத்தல்களை எண்ணிக்கையில் பெருகச் செய்வதற்கும், இவற்றை அதிகத் திட்மாகத் தேர்வு செய்து அதிகத் திட்பமாகத் தேர்வு செய்து அதிகப் பயன்கரு முறையில் பேணிடவும் இயலுமாறு மேற்கூறிய இளஞ்சபைகள் ஒருங்கிணைந்த அருள்பணி முயற்சிகளையும் தகுந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வகையில் இச்சபைகள் படிப்படியாகத் தன்னிறைவு பெறவும் பிறார்க்கு உதவி செய்யவும் இயலும்.

தனிப்பட்ட சபைகளின் நற்செய்திப் பணி

20. தனிப்பட்ட சபையானது இயன்ற வரையில் நிறைவாக அனைத்துலகத் திருச்சபையைக் குறித்துக் காட்டவேண்டும் என்பதால் தான் வாழும் அதே இடங்களில் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளாமல் இருப்போரிடம் தான் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை நன்கு உணர்ந்து, நம்பிக்கை கொண்டோர் ஒவ்வொருவரின் வாழ்வுச் சான்றாலும் சமூகம் முழுவதும் வாழ்வுச் சான்றாலும் இம்மக்களுக்குக் கிறிஸ்துவைச் சுட்டிக் காட்டும் அடையாளமாக அமைய வேண்டும்.

மேலும், நற்செய்தி எல்லாரையும் சென்றடைய வேண்டுமென்றால் ஆங்கு வார்த்தைப் பணியும் தேவையாகிறது. முதன் முதலில் ஆயரே கிறிஸ்துவுக்கு இன்னும் புதிய சீடர்களைக் கொண்டுவரும் நம்பிக்கை தூதுவராக இருக்க வேண்டும்.3 இத்தலைசிறந்த கடமையைச் சரிவர செய்ய வேண்டுமாயின் அவர் தம்முடைய மக்கள் குழுவின் வாழ்க்கை நிலைமைகளையும் தம் நாட்டினர் கடவுளைப் பற்றிக் கொண்டுள்ள உள்ளார்ந்த கருத்துகளையும் ஆழ அறிந்திருக்க வேண்டும். மேலும் நகர் மயமாதல், குடிபெயர்தல், சமயம்பற்றிய அக்கறையின்மை ஆகியவை கொணர்ந்துள்ள மாற்றங்களையும் அவர் கவனமாகக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

புதிய சபைகளில் உள்ள உள்நாட்டுத் திருப்பணியாளர்கள் வெளிநாட்டைச் சார்ந்த நற்செய்திப்பணியாளர்களோடு தோளோடு தோள் நின்று நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஆர்வத்தோடு ஈடுபட வேண்டும். இது நம்பிக்கைக் கொண்டோருக்குக் அருள் பணி செய்வதற்கும் இறைவழிபாடு நடத்துவதற்கும் மட்டுமன்றி, மற்றவர்களுக்கு நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கும் தேவையாகும். உண்மையிலேயே மேற்கூறிய உள்நாட்டுத் திருப்பணியாளர்களும் வெளிநாட்டைச்சார்ந்த திருப்பணியாளர்களும் ஆயரின் அதிகாரத்தின் கீழ் ஒன்று சேர்க்கப்பட்ட ஒரே திருப்பணியாளர்கள் குழுவை உருவாக்குகின்றார்கள். இத்திருப்பணியாளர்கள் ததங்கள்சொந்த மறைமாவட்டத்தில் தொலைவில் உள்ள, புறக்கணிக்கப்பட்ட இடங்களிலும், பிற மறை மாவட்டங்களிலும் நற்செய்திப்பணியை மேற்கொள்ளத் தயாராய் இருக்க வேண்டும்; இப்பணிக்குத் தேவை எழும்போது மகிழ்ச்சியோடு தங்களையே ஆயரின் கைகளில் ஒப்படைக்க வேண்டும். ஆண் துறவியரும் பெண் துறவியரும் மற்றும் பொது நிலையரும் தம் நாட்டுக் குடிமக்கள் மட்டில் குறிப்பாக ஏழைகள் மட்டில் மேற்கூறிய ஆர்வத்தால் பற்றி எரிய வேண்டும்.

ஆயர் பேரவைகள் அவ்வப்போது விவிலியம், இறையியல், அருள்வாழ்வு மற்றும் அருள் பணித்துறைகளில் மறுமலர்ச்சிப் பாட வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்து, இவ்வகுப்புகள் வழியாகத் திருப்பணியாளர்கள் காலத்தின் பல்வேறுபட்ட சூழ்நிலைகளுக்கும் மாற்றங்களுக்கும் இடையில் ஆழ்ந்த அறிவு பெறுவதற்கு வழிவகுக்க வேண்டும்.

பிற காரியங்களைப் பொறுத்த மட்டில், இச்சங்கம் குறிப்பாக திருப்பணியாளர்களின் பணியும் வாழ்வும் என்னும் பொருள் பற்றி விடுத்த விதித் தொகுப்பில் எடுத்துக் கூறியவற்றை கருத்தாக கடைப்பிடிக்க வேண்டும்.

மேற்கூறிய தனிப்பட்ட சபைகளின் நற்செய்திப்பணியை ஆற்ற வேண்டுமாயின் தகுதி பெற்ற பணியாளர்கள் தேவை. இவர்கள் அந்தந்தச்சபைகளின் சூழ்நிலைகளுக்கேற்பத் தகுந்த காலத்தில் தக்க முறையில் பயிற்சிப்பெற வேண்டும். மக்கள் அதிகதிகமாகக் குழுக்களாக ஒன்றிணைவதால், ஆயர்பேரவைகள் இக்குழுக்களோடு உரையாடல் நிகழ்த்துவதற்காகக் பொதுத்திட்டங்கள் தீட்டுவது சாலச்சிறந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள திருச்சபை அங்கு ஏற்றுக் கொண்டுள்ள அமைப்பிற்குத் தன்னையே தழுவி அமைக்க முடியாததால் ஒரு மக்கள் குழு கத்தோலிக்க நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதற்குத் தடை ஏற்படலாம்; இத்தகைய சூழ்நிலையில் எல்;லாக் கிறிஸ்தவர்களும் ஒரே சமூகமாகும் வரை, ஆங்குச் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது இச்சங்கத்தின் விருப்பம்.4 இந்நோக்கத்திற்காக திருத்தூது ஆட்சிப்பீடம் நற்செய்திப்பணியாளர்களைத் தயார் நிலையில் கொண்டிருக்குமானால், தனிப்பட்ட ஆயர்கள் அவர்களைத் தம் மறைமாவட்டங்களுக்கு அழைத்து, மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு அவர்கள் தம் முயற்சிகளைப் பயன்தரு முறையில் ஆதரிப்பார்களாக.

புதிய சபைகள், தம்மிடம் திருப்பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பனும் கூட உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கும் திருத்தூதர்களைத் தாமும் அனுப்பித் திருச்சபையின் அனைத்துலக நற்செய்திப் பணியில் தங்களால் இயன்ற அளவு விரைவாகக் பங்குகொள்வது சாலச் சிறந்தது. இவ்வாறு செய்தால் இப்புதிய சபைகள் நிலவும் நாட்டு மக்களிடம் நற்செய்தி பணிக்கான ஆர்வம் தழைத்தோங்கும். இப்புதிய சபைகளும் கூட பிற மக்களினங்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணியில் செயல்முறையில் பங்கேற்குமானால் அனைத்துலகத் திருச்சபையோடுள்ள ஒன்றிப்பு ஒருவகையில் நிறைவுபெறும்.

பொதுநிலையினலின் திருத்தூதுப் பணியை ஆதரித்தல்

21. திருக்கபை ஆட்சியாளரோடுகூட எங்கு உண்மையானப் பொதுநிலையினர் உடனிருந்து உழைக்கவில்லையோ, அங்குத் திருக்கபை உண்மையாகவே நிறுவப்படவுமில்லை, முழுமையாக வாழவுமில்லை, மனிதர் நடுவே கிறிஸ்துவின் நிறை அடையாளமாகத் துலங்கவுமில்லை எனச் சொல்லலாம். ஏனெனில் பொதுநிலையினர் செயல்முறையில் உடனிராவிட்டால் எந்த மக்களின் சிந்தனைப் பாணிகளிலும் வாழ்விலும் உழைப்பிலும் நற்செய்தி ஆழமாக வேரூன்ற இயலாது. எனவே ஒரு சபைக்கு அடித்தளம் அமைக்கும் போதே அங்கு முதிர்ச்சி பெற்ற கிறிஸறதவப் பொதுநிலையினரை உருவாக்க மிகவும் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் நம்பிக்கை கொண்டோராகிய பொதுநிலையினர் முழுமையாகவே இறைமக்களைச் சார்ந்தவர்களாகவும் அதே நேரத்தில் நாட்டின் குழமக்களைச் சார்ந்தவர்களாகவும் அதே நேரத்தில் நாட்டின் குடிமக்களைச் சார்ந்தவர்களாகவும் உள்ளனர். அதாவது அவர்கள் பிறப்பால் தங்கள் சொந்த நாட்டு மக்களினத்தாரைச் சார்ந்தவர்களாவர். கல்வியின் வழியாகத் தம் நாட்டின் பண்பாட்டுச் செல்வங்களில் பங்குபெறத் தொடங்கியவராவர்; பல்வேறு சமூகப் பிணைப்புகளால் அவர்கள் நாட்டு வாழ்வோடு இணைந்துள்ளார்கள் தாங்கள் செய்யும் தொழிலில் முயற்சியெடுத்து ஈடுபடுவதன் வழியாக அதன் முன்னேற்றத்திற்கு உதவுகின்றார்கள்; அதன் சிக்கல்களைத் தம்முடையனவாகவே உணர்ந்து, அவற்றைத் தீர்க்க முயல்கின்றார்கள். அதே நேரத்தில் அவர்கள் கிறிஸ்துவில் கடவுளுக்கு அடிபணிந்திருக்கவும். இறுதியில் கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருக்கவும்6 அவர்கள் நம்பிக்கையாலும் திருமுழுக்கினாலும் திருச்சபையில் புதுப்பிறப்பு அடைந்துள்ளனர்.

தங்கள் வாழ்வாலும் சொல்லாலும் குடும்பத்தாலும், தங்கள் சமூகக் குழுவிலும் தங்கள் அலுவலகங்களிலும் தொழில் சூழமைவிலும் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதே ஆண்களுடையவும் பெண்களுடையவும் முக்கியமான கடமை ஏனென்றால் நீதியிலும் உண்மையின் தூய்மைநிலையிலும் கடவுளுக்குக்கொப்பப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பு அவர்களில் தோன்ற வேண்டும்.7 தங்கள் நாட்டின் மரபுகளின் படி இப்புதிய வாழ்வை அவர்கள் தங்கள் சொந்த சமுதாயத்திலும் தாயக்ப பண்பாட்டிலும் வெளிப்படுத்த வேண்டும். இப்பண்பாட்டை அவர்கள் அறிந்து, அதைவளர்த்து இறுதியாகக் கிறிஸ்துவில் அதை நிறைவுக்குக் கொணர வேண்டும். அப்பொழுதுதான் கிறிஸ்துவின் நம்பிக்கையும் திருச்சபையின் வாழ்வும் அவர்கள் வாழும் சமுதாயத்திற்குப் புறம்பானதாக இராமல் அச்சமுதாயத்தை ஊடுருவி உருமாற்றத் தொடங்கும். உண்மையான அன்பு உள்ளத்துடன் பொதுநிலையினர் தங்கள் நாட்டு மக்களோடு ஒன்றித்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய வாழ்வில் கிறிஸ்வின் மறைபொருளிலிருந்து பெறப்படுகின்ற ஒற்றுமை மற்றும், அனைத்துலகத் தோழமையின் புதிய பிணைப்பு தெளிவாக விளங்கும். மேலும், பொதுநிலையினர் கிறிஸ்துவின் நம்பிக்கையைத் தங்களுடன் வாழ்வோர் மற்றும் உடன் உழைப்போர் நடுவில் பரவச் செய்ய வேண்டும். பெரும்பாலான மக்கள் நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வது அவர்களருகே வாழும் பொதுநிலையினரின் வழியாகத்தான் என்பதால் இக்கடமை அவர்கள் மீது அன்னும் அதிக கண்டிப்பாய்கச் சுமத்தப்படுகிறது. எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பொது நிலையினர் நற்செய்தியைப் பறைவாற்றிக் கிறிஸ்தவப் பழப்பினையைப் பரப்பும் சிறப்பான பணியை நிறைவேற்றுவதில் திருச்சபை ஆட்வியாளரோடு இன்னும் அதிக அளவில் நேரடியாக ஒத்துழைக்க ஆயத்தமாய் இருக்க வேண்டும். இதன் பயனாக அவர்கள் வளரும் இளந்திருச்சபைக்கு ஊக்கம் தருவார்கள்.

திருச்சபையின் திருப்பணிநிலையினர் பொதுநிலையினரின் திருத்தூதுப்பணி ஈடுபாட்டினைப் பெரிதும் போற்றி மதிக்க வேண்டும். கிறிஸ்துவின் உறுப்பினர் என்ற முறையில் எல்லா மனிதர்க்கும் தாங்கள் பொறுப்புள்ளவர்கள் என்பதை உணரும் வகையில் பொதுநிலையினரை அவர்கள் உருவாக்க வேண்டும்; கிறிஸ்துவின் மறைபொருள் பற்றிய ஆழ்ந்த அறிவை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்; அவர்களின் இக்கட்டுகளில் அவர்களுக்கு அருகிலிருந்து உதவவேண்டும்; திருச்சபைப் பற்றிய விதித் தொகுப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப மேற்கூறியவற்றை ஆற்றவேண்டும்.

இவ்வாறு, அருள்பணியாளர்களும் பொதுநிலையினரும் தமக்கே உரித்தான கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றும் போது, புதுச்சபை முழுவதும் கிறிஸ்துவுக்கு ஓர் உறுதியுள்ள, உயிருள்ள சான்று பகர முடிகிறது. இங்கனம், அது கிறிஸ்துவில் நமக்கு வருகின்ற நிறைவாழ்வின் தெளிவான அடையாளமாக மாறும்.

ஒற்றுமையில் வேற்றுமை

22. கடவுளின் வார்த்தையாகிய விதை நல்ல நிலத்தில் முளைத்து இறைப் பணியால் நீர் பெற்று, மண்ணிலிருந்து ஊட்டச்சத்தை உறிஞ்சுகிறது; முடிவாகப் பெருங்கனி கொடுக்கும்படி அச்சத்தை உருமாற்றித் தன்மயமாக்குகிறது. வாக்கு மனிதரான நிகழ்ச்சியில் நிகழ்ந்ததுபோலவே, கிறிஸ்துவில் வேரூன்றி, திருத்தூதர்களென்னும் அடித்தளத்தின்மேல் எழுப்பப்பெற்ற அப்புதுச் சபைகள் கிறிஸ்துவுக்கு உரிமைச் சொத்தாகக்8 கொடுக்கப்பட்ட எல்லா நாடுகளின் செல்வங்கள் அனைத்தையும் வியத்தகு பொருள்மாற்று முறையில் தன்வயப்படுத்திக் கொள்கின்றன. இப்புதிய சபைகள் தங்கள் மக்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், ஞானம், கோட்பாடு, கலைகள், அறிவியல்கள் ஆகியவற்றிலிருந்து எவையெல்லாம் படைத்தவரின் மாட்சியைப் பறைசாற்றவும் மீட்பரின் அருளை வெளிப்படுத்தவும் கிறிஸ்தவ வாழ்வைத் தகுந்த முறையில் அமைக்கவும் உதவக்கூடுமோ அவையனைத்தையும் உள்ளேற்றுக் கொள்கின்றன.9

இக்குறிக்கோள்களை அடைய ஒவ்வொரு பெரிய சமூகபண்பாட்டு நிலப்பகுதியிலும் இறையியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். அதாவது, கடவுளால் வெளிப்படுத்தப்பட்டதும், விவிலியத்தில் பதிக்கப் பெற்றதும், திருச்சபைத் தந்தையர்களாலும் திருச்சபையின் ஆசிரியத்தாலும் விளக்கப் பெற்றதுமான சொற்களையும் நிகழ்ச்சிகளையும் அனைத்துலகத் திருச்சபையின் மரபு எனும் ஒளியில் புதியதொரு ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு, மக்களின் மெய்யிலை அதாவது ஞானத்தைத் துணையாகக் கொண்டு எவ்வழிகளில் நம்பிக்கை பகுத்தறிவால் விளக்கப்படுகிறது எனவும் எம்முறைகளில் அவர்களின் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை நோக்குகளையும் சமூக அமைப்பiயும் இறை வெளிப்பாடு கற்றுத்தரும் ஒழுங்குகளோழு பொருந்தச் செய்ய முடியும் எனவும் தெளிவாக அறிந்துகொள்ளக் கூடும் இதனால் கிறிஸ்தவ வாழ்வின் முழுச் சூழ்மைவையும் அதிக ஆழமாகத் தழுவி அமைப்பதற்கான வழிமுறைகள் பிறக்கும். இவ்வாறு செய்யும்போது, மேலோட்டமாக வெவ்வேறு சமயக் கொள்கைகளை ஒருங்கிணைத்து ஏற்றுக் கொள்ளும் பழக்கம், தவறாக அமைந்த தனிப்படுத்திக் கூறும் ஆகியவற்றின் வடிவங்கள் அனைத்தும் தவிர்க்கப்பட முடியும்; அந்தந்த பண்பாட்டின் மனப்பாங்கிற்கும் இயல்பிற்கும் தக்க முறையில் கிறிஸ்தவ வாழ்வு தழுவியமையும்;10 தனி மரபுகளும் அவற்றோடு கூட அந்தந்த மக்களினங்களையும் தனிப்பண்பியல்புகளும் நற்செய்தியும் ஒளியில் தெளிவுபெற்றுப் பொது ஒற்றுமையில் ஏற்கப்பெறும். இறுதியாக, அனைத்துலகும் பரந்த அன்புக் குழுவிற்குத் தலைமை தாங்கும் பேதுருவின் ஆட்சிப்பீடத்தின்11 முதன்மை பாதிக்கப்படாது நிற்கவே, தங்களுடைய சொந்த மரபுகளால் அணி செய்யப்பெற்ற புதுச்சபைகள் திருச்சபையின் உறவு ஒன்றிப்பில் தமக்குரிய இடத்தைப் பெறும்.

எனவே, பெரிய சமூக-பண்பாட்டு நிலப்பரப்பு ஒவ்வொன்றிலும் உள்ள ஆயர் பேரவைகள் ஒரே உள்ளத்தினராய், ஒன்றுப்பட்ட முயற்சிகளால் தழுவியமைப்பதற்கான மேற்கூறிய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒன்றிணைவது விரும்பத்தக்கது மட்டுமன்று, முற்றிலும் பொருத்தமானதும் கூட.

இயல் 4
நற்செய்திப் பணியாளர்

நற்செய்திப் பணிக்கான அழைத்தல்

23. நம்பிக்கையைப் பரப்புகின்ற கடமை கிறிஸ்துவினுடைய சீடர் ஒவ்வொருவரின் மீதும் அவரது சக்திக்கேற்பச் சுமத்தப்பட்டுள்ளது1 என்றாலும் ஆண்டவர் கிறிஸ்து தம்மோடிருக்கவும் மக்களினங்களுக்குப் பறைசாற்ற அனுப்புவதற்குமென2 தம் சீடர்களுடள் தாமே விரும்பியவர்களை எப்பொழுதும் அழைக்கிறார். எனவே நன்மைக்கெனத் தம் அருள் கொடைகளை ஒவ்வொருவருக்கும் தம் விருப்பம்போல் பகிர்ந்தளிக்கும் தூய ஆவியார்3 மூலமாகக் கிறிஸ்து தனிமனிதர்களின் உள்ளங்களில் நற்செய்தி அறிவிப்புக்கான அழைத்தலைத் தூண்டுகிறார்; மேலும், திருச்சபை முழுவதையும் சார்ந்த நற்செய்தி அறிவிக்கும் கடமையைத் தங்களது சிறப்புப் பணியாக ஏற்கும் நிறுவனங்களைத்4 திருச்சபையில் அவர் தோற்றுவிக்கிறார்.

தகுந்த, இயற்கையான குணவியல்புகளும் போதிய திறனும் சிறப்புப் பண்புகளும் கொண்டவராய் நற்செய்திப் பணி புரியத் தயாராய் இருக்கம் திருப்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகியோர் சிறப்பானதோர் அழைத்தலைப் பெற்றவராவர்.5 இவர்கள் உள்நாட்டவராகவோ இருக்கலாம். முறையான அதிகாரிகளால் அனுப்பப்படும் இவர்கள் கிறிஸ்துவிடமிருந்து தொலைவிலுள்ளளோரிடம் நம்பிக்கையுடனும் கீழ்ப்படிதலுடனும் செல்கின்றனர். ''பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்டுக் கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி. (உரோ 15:16 ) இவர்களை அழைக்கும் பணிக்காக6 நற்செய்தின் திருத்தொண்டர்களாக இவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனா.

நற்செய்திப்பணி அருள் நெறி

24. அழைக்கும் கடவுளுக்கு மனிதர் எவ்வாறு பதில்மொழி அளிக்க வேண்டுமெனில், அவர் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசாமல்7 நற்செய்திப் பணிக்குத் தம்மை முற்றிலுமாகக் கையளிக்க வேண்டும். தூய ஆவியின் தூண்டுதலும் வலிமையுமின்றி ஒருவர் இத்தகைய பதிலைக் கொடுக்க முடியாது. ஏனென்றால் அனுப்பப்படுபவர் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்றவரின் (பிலி 2:7) வாழ்விலும் பணியிலும் நுழைகிறார். எனவே, அவர் இந்த அழைத்தலின் தன் வாழ்க்கை முழுவதையும் செலவிடவும்;, தன்னையும் இதுவரை தனக்குச் சொந்தமாக இருந்த அனைத்தையும் துறந்து விடவும், எல்லோர்க்கும் எல்லாமாகவும8 தயாராய் இருக்க வேண்டும்.

மக்களினத்தாரிடையே நற்செய்தியைப் பறைசாற்றுகையில் அவர்கள் உறுதியுடன் கிறிஸ்துவின் மறைபொருளை அறிவிக்க வேண்டும். மேலும், அவர்கள் கிறிஸ்துவின் தூதர்களாக இருப்பதனால், சிலுவையின் இடறல் பற்றி வெட்கமுறாது அவரில் நம்பிக்கை கொண்டு துணிவுடன் பேச வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு9 கனிவும் மனத்தாழ்மையும் உடையவராகிய தம் தலைவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவருடைய நுகம் அழுத்தாது, அவருடைய சுமை எளிதாயுள்ளது என அவர்கள் எடுத்துக்காட்ட வேண்டும்.10 பொறுமையிலும் பெருந்தன்மையிலும் வெளிவேடமற்ற அன்பிலும் உண்மையாகவே நற்செய்திக்கு உகந்த வாழ்க்கை நடத்தி12 தேவையானல் தன் இரத்தத்தைச் சிந்தியும் தம் ஆண்டவருக்கு அவர்கள் சான்று பகர வேண்டும். வேதனையால் மிகவும் சோதிக்கப்படும்போதும் கொடிய வறுமைக்கு ஆளாகும்போதும் பெரு மகிழ்ச்சியின் நிறைவு அங்குள்ளது13 என அறிந்துகொள்ள ஆற்றலையும் துணையையும் தருமாறு கடவுளை அவர்கள் மனறாட வேண்டும். தம்முடைய கீழ்பழதலால் மனித குலத்தை மீட்டவரான கிறிஸ்துவின் பணியாளருக்கு இருக்க வேண்டிய தனிப்பட்ப நற்பண்பு கீழ்படிதலே என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்க வேண்டும்.

நற்செய்திக் தூதுவர்கள் தங்கள்pல் இருக்கும் அருள்கொடையைப் பற்றி அக்கறையற்றவர்களாய் இராமல் உள்ளத்தின் ஆழத்தில் தங்களை நாளுக்குநாள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.14 நற்செய்திப் பணியாளர்கள் தங்களுடைய அழைத்தலின் மேலுள்ள எதிர்நோக்கில் உறுதியடையவும், திருத்தூதுப்பணியில் மறுமலர்ச்சி பெறவும் இயலும் வகையில் திருச்சபைத் தலைவர்களும் துறவறச் சபைத்தலைவர்களும் அவர்களை அவ்வப்போது ஒன்று கூட்ட வேண்டும். இந்நோக்கத்திற்காக் தகுந்த இல்லங்களை அமைப்பதும் பொருத்தமாகும்.

அருள்நெறி, அறநெறிப் பயிற்சி

25. இத்தகைய சீரிய பணிக்காக வருங்கால நற்செய்திப் பணியாளரை ஒரு தனிப்பட்ட அருள்நெறிப் பயிற்சியாலும் அறநெறிப் பயிற்சியாலும் தகுந்த முறையில் தயார் செய்ய வேண்டும்.15 ஏனென்றால் அவர் முன் வந்து முயற்சிகள் எடுக்க தயாராய் உள்ளவராகவும், எடுத்த வேலைகளை முடிப்பதில் நிலையானவராகவும், துன்பங்கள் நடுவே நிலைத்து நிற்பவராகவும் இருக்க வேண்டும். தனிமையையும் களைப்பையும் பயன் விளைவிக்கா உழைப்பையும் பொறுமையோடும் திட உள்ளத்தோடும் ஏற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும். மேலும் அவர் எல்லா மனிதரையும் திறந்த மனத்தோடும், பரந்த உள்ளத்தோடும் எதிர்கொள்ள வேண்டும்; தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை விருப்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களிடையே நிலவும் வேறுபட்ட பழக்க வழக்கங்களுக்கும் மாறுகின்ற சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பெருமனத்தோடு தம்மையே தழுவியமைத்திட வேண்டும். தம் சகோதர சகோதரிகளுக்கும் இதே பணிக்காக தங்களையே கையளித்துள்ள அனைவருக்கும் அவர் ஒத்த உள்ளத்தோடும் ஒருவருக்கொருவர் காட்டவேண்டிய அன்போடும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அப்பொழுதுதான் நம்பிக்கை கொண்டோரோடு ஒன்று சேர்ந்து திருத்தூதர் காலத்துச் சமூகத்தை மாதிரியாகக் கொண்டு அவர்கள் ஒரே உள்ளமும் ஒரே மாதிரியகக் கொண்டு அவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருப்பார்கள்.16

இத்தகைய உள்ளார்ந்த மனப்பாங்குகளை பயிற்சிக் காலத்திலிருந்தே கருத்துடன் கடைபிடித்து வளர்க்க வேண்டும். அருள்வாழ்வால் இவற்றை மேம்படுத்தி ஊட்டம் பெறச்செய்ய வேண்டும். நற்செய்திப் பணியாளர் ஒவ்வொருவரும் உயிருள்ள நம்பிக்கையாலும் தளராத எதிர் நோக்காலும் நிறைந்து இறைவேண்டல் மனிதராக விளங்க வேண்டும்; வல்லமை, அன்பு, கட்டுப்பாடு கொண்ட உள்ளமுடையவராய் ஒளிரவேண்டும்.17 எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்,18 எம்மக்களிடம் அனுப்பப்பட்டுள்ளரோ அம்மக்களிடம் கிறிஸ்துவயின் வாழ்வு வெளிப்படும்படி தியாக உள்ளத்தோடு இயேசுவின் சாவுக்குரிய துன்பங்களைத் தம் உடலில் சுமந்து செல்ல வேண்டும்,19இவ்வாறு நற்செய்திப் பணியாளர் தம் அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதால் இறை அன்பிலும் பிறர் அன்பிலும் வளர்வர்.20 மக்கள் மீது வைத்த ஆர்வத்தால் எல்லாவற்றையும் மனமுவந்து அளிக்கவேண்டும்; அவர்களுக்காகத் தன்னையுமே அளித்திட வேண்டும்.21 கிறிஸ்துவோடு இணைந்து தந்தையின் திருவுளத்திற்குப் பணிந்து திருச்சபை ஆட்சியாளரின் அதிகாரத்தின் கீழ்த் தன் பணியைத் தொடர்ந்து செய்து நிறைவாழ்வின் திட்டத்தோடு அவர் ஒத்துழைப்பார்.

கோட்பாட்டு, திருத்தூதுப் பயிற்சி

26. பல்வேறு மக்களினங்களுக்கு அனுப்பப்பட்டவர்கள் கிறிஸ்துவின் நல்ல தொண்டர்கள் என்ற முறையில் விசுவாசக் ;கோட்வாடுகளாலும் நற்போதனையாலும் (1திமொ 4:6) ஊட்டம் பெற்றிருக்கவேண்டும். கிறிஸ்துவைப் பறைசாற்றுவோராகவும் அவருக்குச் சான்று பகர்வோராகவும் இருக்க இவர்கள், அவரது மறை பொருளை அழ ஆராய்ந்து இக்கோட்பாடுகளையும் நற்போதனைகளையும் சிறப்பாக விவிலியத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே, திருப்பணியாளர்கள், சகோதரர்கள், சகோதரிகள், பொது நிலையினர் ஆகிய எல்லா நற்செய்திப் பணியாளர்களும் தம் வருங்கால அலுவல்களைச் செய்ய இயலாதவர் ஆகிவிடாதபழ தத்தம் நிலைக்கேற்ப ஆயத்தமும் பயிற்சியும் பெற வேண்டும்.22 தொடக்கத்திலிருந்தே அவர்கள் திருச்சபையின் அனைத்துலகத் தன்மையும் மக்களின் பல்வேறுபட்ட நிலையையும் உணர்ந்து கொள்ளும் வகையில் அவர்களுடைய கோட்பாட்டுப் பயிற்சி அமைந்திருக்க வேண்டும். இது அவர்களின் எதிர்காலத் திருப்பணிக்குத் தயாரிப்பாக அமைகின்ற எல்;;லாப் பாடங்களுக்கும் பொருந்தும்; அது மட்டுமின்றி, மக்களினங்கள், பண்பாடுகள், சமயங்கள் ஆகியவை பற்றிய பொது அறிவைப் பயனுறு முறையில் கற்பிக்கின்ற பிற அறிவுத் துறைகளுக்கும் பொருந்தும். இங்குக் கூறப்பட்ட பொது அறிவு கடந்த காலத்தைப் பற்றியது மட்டுமன்று, நிகழ்காலத்தையும் பற்றியதாக இருத்தல் வேண்டும். உண்மையில் மந்றொழு நாட்டு மக்கள் நடுவே செல்லவிருக்கும் உவரும் அவர்களின் மரபுச் ;செல்பங்களையும் ;மொழிகளையும் பழக்கவழக்கங்களையும் பெரிதும் மதித்துப் போற்றவேண்டும். எதிர்கால நற்செய்திப் பணியாளர்கள் முதனமுதலில் நற்செய்திப் பணியியலைக் கற்பது மிகவும் அவசியம்; அதாவது நற்செய்திப் பணிப்பற்றித் திருச்சபை வழங்கியுள்ள போதனைகள், சட்ட திட்டங்கள் ஆகியவைகளை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் கடந்த காலத்தில் நற்செய்திப் பணியாளர்கள் எத்தகைய வழிகளைப் பின்பற்றினர் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்; மேலும் நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளின் அன்றைய நிலையையும் அன்னும் அதிகப் பயன்விளைவிக்கும் எனக் கருதப்படுபிற வழிவகைகளையும் தெரிந்திருக்க வேண்டும்.23 மேற்கூறிய அருள்பணி சார்ந்த அக்கறையால் நிறைந்திருக்க வேண்டுமென்றாலும் கோட்பாடு வழியாகவும் நடைமுறைப் பயிற்சி வழியாகவும் ஓழுங்குப்படுத்தப்பட்ட தனிப்பட்டதொரு திருத்தூதுப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.24

துறவறச் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுள் இயன்ற அளவு பெரும்பான்மையோருக்கு மறைக் கல்விக் கலையில் நல்ல பயிற்சியளித்து அவர்களை அக்கலையில் தயாசித்திட வேண்டும் இவ்வாறு அவர்கள் திருத்தூது அலுவலில் இன்னும் அதிகமாக ஒத்துழைக்க முடியும்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நற்செய்திப் பணியில் ஈடுபடுவோரும் தங்களது நிலைமைக்கு ஏற்ப தகுந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்தகைய பயிற்சி வகைகள் நற்செய்திப் பணியாளர்கள் எந்த இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்களோ அந்த இடங்களிலெயெ நிறைவு செய்யப்படமட்டும். இவ்வாறு செய்தால் நற்செய்திப் பணியாளர்கள் மக்களின் வரலாறு, சமுதாய அமைப்புகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை இன்னும் தெளிவாக அறிந்துகொள்வர். மேலும், அம்மக்கள் கடவுள், உலகம், மற்றும் மனிதர் பற்றித் தங்களுடைய தூய மரபுகளின் அடிப்படையில் உருவாக்கியுள்ள ஆழ்ந்த கருத்துகளையும் மற்றும் அவர்களது அறநெறி அமைப்பையும் சமய விதிமுறைகளையும் நற்செய்திப் பணியாளர்கள் ஆழமாகத் தெரிந்து கொள்வர்.25 நற்செய்திப் பணியாளர்கள் மொழிகளை எவ்வளவு நன்றாகப் பயில வேண்டும் என்றால், அவற்றை ஆற்றொழுக்குப் போலவும் பண்பட்ட முறையிலும் பையாள அவர்களால் இயல வேண்டும். இவ்வாறு செய்தால் மக்களின் மனத்ததையும் அதயத்ததையும் அதிக எளிதாகக் கவர அவர்களால் முடியும்.26 மேலும் மனிப்பட்ட அருள் பணித் தேவைகளைப் பறிறித் தகுந்த முறையில் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். எனினும் நற்செய்திப் பணி அயல் நிறுவனங்களிலோ பிற இறை இயல் கல்லூரிகளிலோ, பல்கலைக் கழகங்களிலோ சிலருக்கு இன்னும் அதிக ஆழ்ந்த பயிற்சி அளித்திட வேண்டும். அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள்ஈ நற்செய்திப்பணி எத்தனையோ அக்கட்டுகளையும் வாய்ப்புகளையும் கொண்டுவரும் நம் வாலத்தில்ஈ அப்பணி சார்ந்த ஒரு சில சிறப்பான அலுவல்களை அதிகப் பயன் விளைவிக்கும் வகையில் ஆற்றமுடியும் . மேலும் பணியில் ஈடபட்டுள்ள பிற நற்செய்திப் பணியாளர்களுக்குத் தம் புலமையால் உதவ முடியும். மேலும் தொழில் நுட்பத்துறைக் கருவிகளையும் சமூகத்துறைக் கருவிகளையும் சமூகத் தொடர்புக் கருவிகளையும் நன்கு பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கும் குறைவிருக்கக் கூடாது. இக்கருவிகளின் முக்கியத்துவத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளில் பணிபுரியும் நிறுவனங்கள்

27. மேற்கூறிய அனைத்தும் நற்செய்திப் பணிக்காக மக்களினங்களிடையே அனுப்பப்படும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவைதான் என்றாலும் கூட அவை அனைத்தையும் தனிப்பட்டவர்கள் நடைமுறையில் பெறுவது கடினம். தனி மனிதர்களால் நற்செய்திப்பணி அலுவலை நிறைவேற்ற முடியாது என அனுபவம் கற்பிப்பதால், பொதுவான அழைத்தல் இந்தத் தனி மனிதர்களைச் சபைகளாகச் சேர்த்துள்ளது. இச்சபைகளில் அவர்கள் தங்கள் திறமைகளை எல்லாம் ஒன்று கூட்டித் தகுந்த முறையில் பயிற்சி பெறவும் திருச்சபையின் பெயரிலும் தருச்சபை ஆட்சியாளவின் விருப்பப்படியும் நற்செயதிப் பணி அலுவலைத் திறமுடன் செய்யவும் முடியும். இத்தகைய சபைகள் நற்செய்திப் பணிக்காகத் தங்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கையளித்துஈ பல நூற்றாண்டுகளாகப் பகல் முழுவதன் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கி வந்திருக்கின்றன. நற்செயதிப் பணி செய்கதற்காகத் திருச்சபை ஆட்சிப் பீடமானது பன்முறையும் அச்சபைகளிடம் பெரும் நிலப் பரப்புகளை ஒப்படைத்துள்ளது. அவ்விடங்களில் இச்சபைகள் கடவளுக்குப் புதிய மக்களைக் கூட்டிச் சேர்த்திருக்கின்றன. அதாவது சொந்த அருள் பணியாளர்களைச் சார்ந்து நிற்கும் வட்டாரச் சபைகளை ஏற்படுத்தியுள்ளன இந்நற்செய்திப் பணிச் சபைகள் தம் நெற்றி வியர்வையைச் சிந்தி, ஏன் இரத்ததைக் கூடச் சிந்தித் திருச்சபைகளை நிறுவியுள்ளன. சகோதரர் சகோதரிகளாய் ;இணைந்து ஒத்துழைத்து, அருள் வாழ்வுப் பணியில் ஈடுபட்டும், பொது நன்மைக்கான சிறப்புப் பணிகளை மேற்கொண்டும், மேற்கூறிய திருச்சபைகளுக்கு இந்நற்செய்திப்பணி சபைகள் தொடர்ந்து தங்களின் ஆர்வத்தாலும் அனுபவத்தாலும் உதவி வழங்கும்.

நற்செய்திப்பணிச் சபைகள் சில சமயங்களில் ஒரு நிலப்பகுதி முழுவதிலும் அதிக அவசரமான சில பணிகளை ஏற்றுக் செய்யலாம். தனிப்பட்ட காரணங்களால் நற்செய்தி தூதரை ஏற்றுக்கொள்ளாத அல்லது இதுவரை அதற்குத் தடை விதித்து வந்த மக்களுக்கு அல்லது குழுக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதை இதறிகு எடுத்துக்காட்டாக கூறலாம்.28

தேவையானால் , ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நற்செய்திப் பணியில் தம்மை அர்பணித்திருப்போர்களை உருவாக்கவும் அவர்களுக்கு உதவி புரியவும் நற்செய்திப் பணிச்சபைகள் தயாராய் இருக்க வேண்டும்.

மேற்கூறிய காரணங்களை முன்னிட்டும் கிறிஸ்துவிடம் அழைத்துவரப்பட வேண்டிய மக்களினங்கள் இன்னும் பலவுள்ளன என்பதாலும் நற்செய்திப் பணிச் சபைகள் இன்றும் கூட மிகமிகத் தேவை.

இயல் 5
நற்செய்திப் பணியின் அமைப்புமுறை

முன்னுரை

28. கிறிஸ்தவர்கள் பல்வேறு அருள் ;கொடைகளைப் பெற்றுள்ளதால்1 ஒவ்வொருவரும் தம் திறமைக்கும் அருள் கொடைக்கும் பணிக்கும்2 தக்கவாறு நறசெய்திப்பணியில் ஒத்துழைக்க வேண்டும். ஆகவே விதைப்போர், அறுவடை செய்வோர்3, நடுவோர், நீர் பாய்ச்சுவோர் அனைவரும் ஒன்றித்து இருக்க வேண்டும்.4 இங்கனம் ஒரே குறிக்கோளை இடையத் தன்னுரிமையுடனும் ஒழுங்குடனும் ஒன்றாக உழைத்து5 அவர்கள் திருச்சபையின் வளர்ச்சிக்குத் தங்கள் ஆற்றல்களை எல்லாம் செலவிடுவர். ஆகவே, நற்செய்திப் பணியைச் சார்ந்த எல்லாச் செயல்களிலும் ஒத்துழைப்பிலும் அனைத்தும் பாங்காவும் ஒழுங்காகவும் நடைபெற (1 கொரி 14:40) நற்செய்தித் தூதர்களின் உழைப்பையும் பிற கிறிஸ்தவர்களின் ஒன்று திரட்டி ஒழுங்குற அமைக்க வேண்டும்.

பொதுவான அமைப்பு முறை

29. நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்கும் பொறுப்பு ஆயர்குழுவையே முதன் முதலில் சார்ந்துள்ளது.6 எனவே ஆயர் மன்றம், அதாவது அனைத்துலகத் திருச்சபைக்கபான நிலையான ஆயர் ஆலோசனைக்குழு7 பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த காரியங்களுக்கு நடுவே,8 திருச்சபையின் தலைசிறந்த தூய்மைமிகு பணியான நற்செய்திப் பணியில்,9 தனிப்பட்ட அக்கறை காட்ட வேண்டும்.

நற்செய்தி அறிவ்க்கப்படும் நாடுகள் அனைத்திற்கும் பொறுப்பாக ஒரே ஒரு பேராயம் மட்டுமே இருத்தல் வேண்டும். இதுவே நற்செய்தி அறிவிப்புப் பேராயம் ஆகும். இப்பேராயம், கீழைத் திருச்சபைகளின் உரிமைகளைப் பாதிக்காத வகையில்,10 உலகம் முழுவதிலும் நற்செய்திப் பணி சார்ந்த அலுவலையும் நற்செய்திப் பணி ஒத்துழைப்பையும் ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைக்கும்.

தூய ஆவி பல வழிகளில் கடவுளின் திருச்சபையில் நற்செய்திப் பணி உணர்வைத் தூண்டி வளர்க்கிறார்;. சிலவேளைகளில் திருச்சபையின் வாழ்வை நெறிப்படுத்துவோர் செய்யவேண்டியவற்றை முன்கூட்டியே நடத்தியும் வைக்கிறார். இருப்பினும், மேற்கூறிய பேராயமும் நற்செய்திப் பணி அழைத்தலையும் அருள் நெறியையும் வளரச் செய்யவேண்டும். நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகள் மீது ஆர்;வத்தையும், அவற்றிற்காக இறைவேண்டல் ;செய்யும் பழக்கத்தையும் தூண்டியெழுப்ப வேண்டும். நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகள் பற்றிய சரியான, போதுமான தகவல்களையும் இப்பேராயம் வழங்க வேண்டும். நற்செய்திப் பணியாளர்களைத் தூண்டியெழுப்புவதும் உடனடியாக அதிகத் தேவையுள்ள இடங்களுக்கு அவர்களை அனுப்புவதும் அதன் கடமையாகும். இந்த பேராயம் ஒருங்கிணைந்த ஒரு செயல்முறைத் திட்டத்தை உருவாக்கட்டும் மேலும் நற்செய்தி அறவிப்புக்கு உகந்த வழிமுறைகளையும் தத்துவங்களையும் வகுத்துத் தரட்டும் நற்செய்திஅறிவிப்புக்குத் தூண்டுதல் ஊட்டட்டும். பயனுறு வகையில் பண உதவி பேராயம் தேவை, பயன்பயக்கும் வாய்ப்பு, நிலப்பரப்பு, மற்றும் கிறிஸ்தவர், கிறிஸ்தவர் அல்லாதோர், பணிகள், நிறுவனங்கள், திருப்பணிநிலையினர், நற்செய்திப் பணியாளர் ஆகியோரின் எண்ணிக்கை இவை அனைத்தையும் கண்முன் கொண்டு பகிர்ந்தளிக்க வேண்டும்.

கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செயலகத்தோடு இணைந்து, இயன்றவரை பிரிவினையாகிய இடறலை நீக்கிட இப்பேராயம் பிற கிறிஸ்தவச் சமூகங்கள் மேற்கொள்ளும் நற்செய்திப் பணி முயற்சிகளுக்குச் சகோதர ஒத்துழைப்பபையும் தோழமையையும் நல்கவும் அவற்றை ஒழுங்குபடுத்தவும் உதவக்கூடிய வழிவகைகளைக் தேட வேண்டும்.

எனவே, இந்தப் பேராயம் ஒரு நிர்வாகக் கருவியாகவும் அதே நேரத்தில் ஆற்றலுடன் இயங்கும் ஒரு நடு நிலையமாகவும் அமைய வேண்டும். தற்கால நிலைமைகளக்கு ஏற்ற அறிவியல் ஆய்வு முறைகளையும் கருவிகளையும் பயன்படுத்த வேண்டும். அதாவது, இறையியலிலும் ஆய்வு முறையியலிலும் நற்செய்திப் பணி சார்ந்த அருள் பணியியலிலும் இன்று நிகழ்கின்ற ஆய்வுகளைக் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

நற்செய்திப் பணியில் ஒத்துழைக்கின்ற அனைவரும் தேர்ந்தெடுத்து அனுப்பும் பதிலாள்கள் இந்தப் பேராயத்தை இயக்குவதில் செயல்முறைப் பங்கும் தீர்மானிக்கும் வாக்குரிமையையும் கொண்டிருப்பர். அதாவது ஆயர் பேரலைகளின் ஆலோசனையின் படி உலகனைத்திலுமிருந்துவரும் ஆயர்களும், மற்றும் திருத்தற்தை நிறுவனங்கள், சபைகள் ஆகியவற்றின் இயக்குநர்களும் இப்பேராயத்தை இயக்குவதில் பங்கேற்பர். இது பற்றிய வழிமுறைகளும் விதிமறைகளும் உரோமைத் தலைமை ஆயரால் தரப்படும் மேற்குறிக்கப்பட்ட அனைவரும் திருத்தந்தையின் அதிகாரத்தின் கீழ் நற்செய்திப் பணி சார்ந்த அலுவல் முழுவதையும் உயர் மட்டத்தில் ஓழுங்குபடுத்துவர்; இவர்கள் குறிப்பிட்ட காலக்கட்டங்களில் அப்பணியை ஆற்ற அழைக்கப்படுவார்கள்.

படிப்புத் அனுபவமும் மிக்க வல்லுநரைக் கொண்ட நிலையான ஆலோசகர் குழு ஒன்று இந்தப் பேராயத்திற்கு உதவ வேண்டும். இவ்வல்லுநர்கள் தங்களின் பிறபணிகளின் நடுவே கீழ்வரும் பணிகளையும் ஆற்றுவர். அதாவது, வெவ்வேறு நிலப்பகுதிகளின் தனிப்பட்ட சூழமைவுகள், பல்வேறு மக்கள் குழுக்களின் சிந்தனை முறைகள், மற்றும் நற்செய்தி அறிவிப்புக்குப் பயன்படுத்த வேண்டிய வழிமுறைகள் ஆகியவை பறிறிப் பயன்தரு தகவல்களைச் சேகரிப்பர் மேலும் நற்செய்திப் பணிக்கும் ஒத்துழைப்புக்கும் உதவும் வகையில் அறிவியல் அடிப்படையில் அமைந்த முடிவுகளைப் பரிந்துலைப்பர். பெண் துறவியர் சபைகள், நற்செய்தி அறிவிப்புக்காக மண்டல அளவில் அமைந்த நிறுவனங்கள், பொது நிலையினர் அமைப்புகள், குறிப்பாக அனைத்துலக அளவில் அமைந்துள்ள அமைப்புக்ள ஆகியவை தகுந்த முறையில் இந்தப் பேராயத்தில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும்.

நற்செய்திப் பணித்தளங்களில் அமைப்பு முறைகள்

30. நற்செய்திப் பணியின் குற்ககோள்களையும் பயனையும் அடைய வேண்டுமானால்நற்செய்திப் பணித் தளத்தில் பணியாற்றும் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருக்க வேண்டும்.

மறைமாவட்ட திருத்தூதுப் பணித் தளத்தில் பணியை ஒன்றிணைக்கும் தலைவரும் மையமமாக விளங்கும் ஆயர் நற்செய்திப் பணியை மேம்படுத்தவும் இயக்கவும் ஒருங்கிணைக்கவும் கடமைப்பட்டள்ளார். இப்பொறுப்பைச் செயல்படுத்தும்போது ஆயர் நற்செய்திப் பணியில் பங்கேற்போரின் சுயமான முயற்சிகளைப் போற்றி ஊக்குவித்தல் வேண்டும். விலக்குரிமை வெற்ற துறவிகள் உட்பட எல்லா நற்செய்திப் பணியாளரும் தூய திருத்தூதுப் பணியைச் சார்ந்த பல்வகை அலுவல்களில் ஆயரின்அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.11 பணிகளை அதிகச் சிறப்பாக ஒருமுகப்படுத்தும் வண்ணம் ஆயர் அருள்பணி அறிவுரைக் குழு ஒன்றினைக் கூடியமட்டும் ஏற்படுத்த வேண்டும். இக்குழுவில் திருப்பணி நிலையினர், பொதுநிலையினர் ஆகியோர் தங்களால் தேர்ந்தெடுக்கப்ப்டட பதிலாள்கள் வழியாகப் பங்கேற்பர். திருத்தூது அலுவல் ஏற்கெனவே மனந்திரும்பியுள்ள மக்களுக்கு மட்டும் என இருந்துவிடாது, கிறிஸ்தவரல்லாதவர் நடுவிலேயும் நற்செய்தியை அறிவிப்பதற்காகப் போதிய அளவு ஆள்களும் நிதியும் ஒதுக்கப்படுமாறு ஆயர் கவனித்துக் கொள்ளவேண்டும்.

மண்டல அளவில் ஒருங்கிணைப்பு

31. ஆயர் பேரவைகள் மிகவும் முக்கியமான சிக்கல்களையும் உடனழயாகத் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளையும் உடனழயாகத் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளையும் பற்றி ஒன்றாகக் கலந்து ஆராய வேண்டும். அதே நேரத்தில், இடத்திற்கு இடம் உள்ள வேறுபாடுகளையும் கவனிக்க அவை தவறக் கூடாது.12 நற்செய்திப் பணிக்கு ஆள்களும் நிதியும் பற்றாக்குறையாக இருக்கும் போது எதுவும் வீணாகாதிருக்கவும், தேவையற்ற முயற்சிகளைப் பலுகச் செய்யாதிருக்கவும், ஆற்றல்களை ஒன்றுதிரட்டி அனைவருக்கும் பயன்படும் நல்ல திட்டங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கீழ்வருவனவற்றை நிறுவுவதைக் குறி;பபிடலாம்ஃ திருப்பணிப் பயிற்சியகங்கள், மேல் நிலை மற்றும் தொழில் நுட்பப் பள்ளிகள், அருள்பணி, மறைக் கல்வி, திருவழிபாடு. சமூகத் தொடர்புக் கருவிகள் ஆகியவற்றிற்கான நடுநிலையங்கள்.

வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் பல்வேறு ஆயர் பேரவைகளுக்கிடையிலும் இத்தகைய ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.

நற்செய்திப் பணி சபைகளின் அலுவல்களை ஒருமகப்படுத்தல்

32. சபைகள், திருச்சபைச் சார்ந்த நிறுவனங்கள் அகியவற்றின் அலுவல்களையும் ஒருமுகப்படுத்துவது பொருத்தமாகும் இத்தகைய எல்லா அமைப்புகளும், அவை எத்தன்மையுடைத்தனவாயினும் சரி நற்செய்திப் பணி சார்ந்த எல்லாக் காரியங்களிலும் தலத் திருச்சபைத் தலைவர்களுக்குப் பணிந்திருக்க வேண்டும். எனவே, தலத் திருச்சபைத் தலைவர்களுக்குப் பணிந்திருக்க வேண்டும். எனவே தலத் திருச்சபைத் தலைவர்களுக்கும் ந்றசெய்திப் பணிச் சபைத் தலைவருக்குமிடையே உள்ள உறவுகளை ஒழுங்குப்படுத்தக் கூடிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வது மிகவும் துணையாக இருக்கும்.

ஒரு நிலப்பகுதியானது ஒரு குறிப்பிட்ட சபையிடம் ஒப்படைக்கப்படும்பொழுது அங்குள்ள புதுக் கிறிஸ்தவ சமூகத்தை ஒரு தலத் திருச்சபையாக உருவாக்கும் ஒரே குறிக்கோளுக்காக எல்லாவற்றையும் ஆற்றுப்படுத்துவதில் திருச்சபை தலைவரும் சம்பந்தப்பட்ட சபையும் கருத்தாய் இருக்க வேண்டும்; உரிய காலத்தில் இத்தலத் திருச்சபையானது தன்னுடைய சொந்த அருள் பணியாளரலலும் திருப்பணிநிலையினராலும் வழிநடத்தப் பெறும்.

ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கண்காணிப்பதற்கான பொறுப்பு தீர்ந்தவுடன அங்கு ஒரு புதிய சூழ்நிலை உருவாகிறது. அந்நிலையில் ஆயர் பேரலைகளும் நற்செய்திப் பணிச் சபைகளும் ஒருங்கிணைந்து பொது ஒப்பந்தத்தால் தலத்திருச்சபையின் தலைவர்களுக்கும் இச்சபைகளுக்குமிடையே உள்ள உறவைச் சீர்படுத்தக் கூடிய ஒழுங்குகளை வகுக்க வேண்டும்.13 மண்டல அளவில் அல்லது தனிப்பட்ட வனையில் ஒப்பந்தங்கள் செய்யப்படுவதற்குரிய பொதுத் தத்துவங்களை வரையறுத்துக் கொடுப்பது திருச்சபை ஆட்சிப் பீடத்தின் பொறுப்பாகும்.

மக்களின் அருள் வாழ்வைக் கண்காணிக்கும் வழக்கமான பணியில் ஒத்துழைத்து, இச்சபைகள் தாங்கள் தொடங்கிய வேலையை தொடர்ந்து செய்யத் தயாராய் இருத்தல் வேண்டும்; எனினும் அந்த இடத்திலுள்ள திருப்பணி நிலையினரின் எண்ணிக்கை பெருகப் பெருக இச்சபைகள் தங்கள் குறிக்கோள்களுக்கு ஏற்றபடி மறை மாவட்டத்துக்கு உண்மையாயிருந்து அங்குத் தாராள உள்ளத்தோடு சிறப்பான பணிகளைச் செய்யவோ மறைமாவட்டத்தில் ஒரு நிலப்பகுதியை ஏற்றுக் கண்காணிக்கவோ ஆவன செய்ய வேண்டும்.

நற்செய்திப் பணிச் சபைகளின் அலுவலை ஒருங்கிணைத்தல்

33. ஒரே நிலப் பகுதியில் நற்செய்திப் பணியில் ஈடுபட்டிருக்கும் சபைகள் தங்கள் அலுவல்களை ஒருமுகப்படுத்தும் வழிகளையும் முறைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டும். எனவே, ஆண் துறவியர் பேரவைகளும் பெண் துறவியர் ஐக்கியங்களும் பெரும்பயன் விளைவிப்பனவாகும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது மாநிலத்தில் பணியாற்றிவரும் எல்லாச் சபைகளும் இவற்றில் பங்கேற்க வேண்டும். பொது முயற்சியால் செய்யக் கூடியனவற்றை இப்பேரவைகள் அலசி ஆராய வேண்டும். அஃதோடு இப்பேரவைகள் ஆயர் பேரவைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

இது போன்றே, நற்செய்த்ப் பணிச் சபைகள் தோன்றிய நாடுகளில் அச்சபைகளுக்கிடையே நிலவவேண்டிய ஒத்துழைப்பைச் சாலப்பொருந்தும். இவ்வாறு செய்தால் பொதுத் திட்டங்களையும் முயற்சிகளையும் அதிக எளிதாகவும் குறைந்த செலவிலும் செயல்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக எதிர்கால நற்செயதிப் பணியாளரின் கோட்பாட்டுப் பயிற்சி, நற்செய்திப் பணியாளருக்கான பாடத்திட்டம், அரசு அதிகாரிகளோடும் மற்றும் அனைத்து நாட்டளவிலும் நாட்டு எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அமைந்த அமைப்புகளோடும் உள்ள உறவுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

கல்வி நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பு

34. நற்செய்திப் பணியைச் சரியாகவும் ஒழுங்கான முறையிலும் ஆற்றுவதற்கு, நற்செய்திப் பணியாளர்கள் தங்களுடைய அலுவல்களுக்கு சிறப்பாகக் கிறிஸ்தவமல்லா பிற சமயங்களோடும் பண்பாடுகளோடும் உலையாடுவதற்கு அறிவியல் முறையில் தயாரிக்கப்பட வேண்டும், இக்கடமைகளை நிறைவேற்றும்போது அவர்களுக்குச் செயல்முறையில் உதவி அளிபக்கப்பட வேண்டும். எனவே, நற்செய்திப் பணிக்கு உதவியாக உள்ள பாடத்துறைகளையும் செயல்முறைப் பாடங்களையும் பயிற்றுவிக்கக் கூடிய அறிவியல் நிறுவனங்கள் தங்களுக்குள்ளே சகோதர உணர்வோடும் தாராள உள்ளத்தோடும் ஒத்துழைப்பது வரவேற்கத் தக்கதாகும். நற்செய்திப் பணி இயலோடு கூட நற்செய்திப் பணித் தளங்களும் உதவியாக இருக்கக்கூடுமான பாடத்துறை களும் செயல்முறைப் பாடங்களும் கீழ்வருவன: இன மரபு இயல், மொழியியல், சமயங்களின் வரலாறு, சமய அறிவியல், சமூகவியல், அருள்பணி சார்ந்த செயல்முறைப் பாடங்கள் மற்றும் இன்ன பிற.

இயல் 6
ஒத்துழைப்பு

முன்னுரை

35. திருச்சபை முழுவதும் நற்செய்தப் பணிக்கு அனுப்பப்படக் கூடிய தன்மை கொண்டது; நற்செய்தியை அறிவித்தலானது இறை மக்களுடைய அடிப்படையான கடமையாகும். ஆகவே, யாவரும் தங்களையே ஆழ்ந்து உள்;ரப் புதுப்பிக்குமாறு திருச்சங்கம் எல்லவரையும் அழைக்கிறது. இவ்வாறு அனைவரும் நற்செய்தியை அறிவிக்கத் தங்களுக்கு இருக்கும் பொறுப்பினை உயிரோட்டத்தோடு உணர்ந்து எல்லா இனத்தாரும் நற்செய்திப் பணி புரிவதில் தங்களுக்குரிய பங்கை ஏற்பார்கள்.

கடவுளின் மக்கள் அனைவரும் நற்செய்திப் பணிபுரிய கடமைப் பட்டுள்ளனர்

36. நம்பிக்கை கொண்டோர் அனைவரும் உயிருள்ள கிறிஸ்துவயின் உறுப்பினர் ஆவர், இவர்கள் திருமுழுக்கு, உறுதிப்பூசுதல், நற்கருணை இவை மூலமாக கிறிஸ்துடீவாடு ஓருடலாகி அவருடைய உருவைப் பெற்றுள்ளனர். ஆகவே இவர்கள் கிறிஸ்துவிதுவின் உடல் வளர்ந்து விரிவடையும், கூடிய விலைவில் அது முழுமை பெறவும் ஒன்று சேர்ந்து உழைக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

எனவே, திருச்சபையின் பிள்ளைகள் எல்லாரும் உலகின் மீது தாங்கள் கொண்டுள்ள பொறுப்பை பற்றிய உயிரோட்டமான உணர்வைப் பெற்றிருக்க வேண்டும். உண்மையிலேயே பொதுமையான உணர்வைப் பெற்றிருக்க வேண்டும். உண்மையிலேயே கிறிஸ்துவ வாழ்வை ஆழமாக வாழ்வதே நம்பிக்கiயைப் பரப்புவதற்கு தாங்கள் செய்யும் மதன்மையான முக்கியமான கடமை என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். உண்மையிலேயெ, கடவுளின் சேவையில் அவர்கள் காட்டும் ஆர்வமு;ம பிறர் மீது அவர்கள் கொள்ளும் அன்பும் திருச்சபை முழுவதற்கும் ஓரு புதிய அருள் வாழ்வு உணர்வைக் கொண்டுவர வேண்டும்; இதனால் திருச்சபை நாடுகளின் நடுவே எயர்த்தப்பட்டிருக்கும் ஓர் அடையாளமாகவும்2 உலகிற்கு ஒளியாய் (மத் 5:14 ) மண்ணுலகிற்கு உப்பாக (மத் 5:13) விளங்குகிறது. கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றிய விதித்தொகுப்பில் கூறப்பட்டுள்ள ஒழுங்குங்களின்படி பிற கிறிஸ்தவ ஒன்றிப்புப பற்றிய விதித் தொகுப்பில் கூறப்பட்டுள்ள ஒழுங்குங்களின்படி பிற கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றிய விதித் தொகுப்பில் கூறப்பட்டுள்ள ஒழுங்குங்களின்படி பிற கிறிஸ்தவக் குழுக்களோடு சேர்ந்து இந்த வாழ்வுச் சான்று வழங்கப்பட்டால் அது அதிக எளிதாக நற்பயன் விளைவிக்கும்.3

கடவுள் தம் அருளால் நற்செய்திப் பணியைப் பயன் உள்ளதாக வேண்டும் என்றும், நற்செய்திப் பணிக்கான அழைத்தல்கள் பெருகவேண்டும் எனவும், நற்செய்கப் பணிக்கான அழைத்தல்கள் பெருக வேண்டும் எனவும், நற்செய்திப் பணித் தளங்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்க வேண்டும் எனவும் மேற்யுகூறிய மறுமலர்ச்சி உணர்விலிருந்து பிறக்கும் இறைவேண்டல்களும் தவ முயற்சிகளும் உளமால ஒப்புக்கொடுக்கப்படும்.

கிறிஸ்தவ மக்கள் அனைவரும் அவர்களில் ஒவ்வொருவரும் உலகில் திருச்சபையின் இன்றைய நிலையை நன்கு அறியவும், எங்களுக்கு உதவி செய்யும்4 என்ற பெருந்திரளான மக்களின் கூக்குரலை கேட்கவும் இயலுமாறு நற்செய்திப் பணி சார்ந்த விவரங்களை நவீன சமூகத் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தியும் அவர்களுக்கு வழங்கவேண்டும். இதனால் அவர்கள் நற்செய்திப் பணி அலுவலைத் தமக்கும் உரிய அலுவலாகவே உணர்வர்; மனிதரின் ஆழ்ந்த பெரும் தேவைகளுக்குத் தங்கள் இதயங்களைத் திறந்து அவர்களுக்கு உதவுவர்.

மேலும், மேற்கூறிய நற்செய்தி பணிச் சார்ந்த விவரங்களை ஒருமுகப்படுத்துவதும், நாட்டளவிலான மற்றும் பன்னாட்டளவிலான அமைப்புகளோடும் ஒத்துழைப்பதும் அவசியமாகும்.

கிறிஸ்தவச் சமூகங்கள் நற்செய்தியை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளன

37. கடவுளின் மக்கள், சமூகங்களாக, சிறப்பாக மறைமாவட்டம், பங்கு போன்ற சமூகங்களாக வாழ்கின்றனர், அவர்கள் இச்சமூகங்கள் வழியாக மக்களுக்குத் தோற்றம் தருகின்றன எனலாம். எனவே மக்களினங்களுக்கு முன் கிறிஸ்துவுக்குச் சான்று பகரவேண்டிய கடமை இச்சமூகங்களுக்கும் உண்டு.

இச்சமூகங்களுள் ஒவ்வொன்றும் தன் அன்பை உலகின் கடைசி எல்லைவரை விரிவடையச் செய்யவேண்டும். தன் சொந்த உறுப்பினர்களுக்குக் காட்டும் அதே பணி ஆர்வத்தைத் தொலைவில் இருப்போர்க்கு காட்ட வேண்டும். இதே இவ்வாறு செய்தாலொழிய மறுமலர்ச்சியெனும் அருள் இச்சமூகங்களில் வளர்ந்தோங்க முடியாது.

இவ்வாறு, இச்சிறப்புமிகு பணிக்காகக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தம் பிள்ளைகள் வழியாக இச்சமூகங்கள் முழுவதுமே கடவுளை வேண்டுகின்றன, ஒத்துழைக்கின்றன. மக்களிடையே செயலாற்றுகின்றன. அனைத்துலக நற்செய்திப் பணியை புறக்கணித்துவிடாமல், அதேநேரத்தில் மேற்கூறிய சமூகங்கள் தம்மிடையேயிலிருந்து தோன்றிய நற்செய்திப் பணியாளர்களோடோ, நற்செய்தி அறிவிக்கப்படும் தங்களில் உள்ள ஒருபங்கோடோ, நற்செய்தி அறிவிக்கப்படும் தளங்களில் உள்ள ஒரு பங்கோடோ மறைமாவட்டத்தோடோ தொடர்பு கொண்டிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு செய்தால் சமூகங்களுக்கிடையே உள்ள ஒன்றிப்பு வெளிப்படும்; இச்சபைகளும் தம்மை கட்டி யெழுப்புவதில் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்கும்.

நற்செய்திப் பணியில் ஆயர்களின் கடமை

38. எல்லா ஆயர்களும் திருத்தூதர் குழுவின் வாரிசாக வரும் ஆயர்குழுவின் உறுப்பினர்கள் என்னும் முறைவில், ஒரு குறிப்பிட்ட மறைமாவட்டத்திற்காக மட்டுமின்றி, உலகம் முழுவதின் நிறைவாழ்வுக்காகவுமே திருநிலைப்படுத்தப் பட்டுள்ளனர். படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும் என்று கிறிஸ்து வழங்கிய கட்டளையானது5 பேதுருவோடும் அவருக்குக் கீழும், முதன் முதலாக, உடனடியாக ஆயர்களுக்கே பொருந்தும். இதிலிருந்து நற்செய்தியை அறிவிக்கும் பணியில் சபைகளுக்கிடையே இன்று ஒன்றிப்பு, ஒத்துழைப்பு ஆகியன தேவை என அறியலாம். இவ்வொன்றிப்பால் தனிப்பட்ட சபைகள் பிற எல்லாச் சபைகளின் நலன்களிலும் ஆர்வம் காட்டுகின்றன. தம் தேவைகளை ஒன்றுக்கொன்று அறியப்படுத்துகின்றன. தம் உடைமைகளை ஒன்றுக்கொன்று பகிர்ந்து கொள்கின்றன் ஏனெனில் கிறிஸ்துவின் உடலை வளர்ச்சியுறச் செய்வது ஆயர் குழு முழுவதின் கடமையாம்.6

ஆயர் தம் சொந்த மறைமாவட்டத்தோடு ஒன்றித்து விட்டவராவர். ஆக தம் மறைமாவட்டத்தின் நற்செய்திப் பணிக்கு எழுச்சியூட்டி, அதனை ஊக்குவித்து வழிநடத்துவார், இவ்வாறு அவர் கடவுளின் மக்களின் நற்செய்திப் பணி உணர்வையும் ஆர்வத்தையும் உடனிருக்கச் செய்கிறார். ஒருவகையில் அதை வெளிப்படுத்துகிறார். இங்ஙனம் மறைமாவட்டம் முழுவதும் நற்செய்தி பணிபுரிய அனுப்பப்பட்டதாக உருப்பெறுகிறது. உலகில் நற்செய்தியை அறிவிப்பதற்காகக் கடவுளிடம் அறைவேண்டல்களையும் தவமுயற்சிகளையும் திறந்த உள்ளத்தோடு அர்ப்பணிக்கக் கூடியவர்களைத் தம்முடைய சொந்த மக்களில், சிறப்பாக நோயாளிகள், துன்பத்தால் வருந்துவோர் இடையே, உருவாக்குவது ஆயரின் அலுவலாகும். அவர் இளைஞர், மற்றும் திருப்பணி நிலையினரிடையே நற்செய்திப் பணிச் சபைகளுக்கான அழைத்தல்களை விருப்புடன் ஊக்குவிக்க வேண்டும்; மேலும், திருச்சபையின் நற்செய்திப் பணியில் பங்குபெற சிலரைக் கடவுள் தேர்ந்தெடுப்பின, அதற்காக ஆயர் நன்றியறிந்திருக்க வேண்டும்; நற்செய்திப் பணி புரிவதில் மறைமாவட்டச் சபைகள் தங்களுக்குரிய பங்கை ஆற்றும்படி அவற்றிற்கு அறிவுரை கூறுவதும் உதவி செய்வதும் அவரது கடமையாகும்; தம்முடைய மக்களிடையே நற்செய்திப் பணிச்சபைகளின் செயல்பாடுகளை, சிறப்பாகத் திருத்தந்தையின் கீழ்செயல்கடும் நற்செய்திப் பணிச் சபைகளின் செயல்பாடுகளைப் பேணச் செய்யவேண்டும். இச்சபைகளின் செயல்பாடுகளுக்கு முதலிடம் தரவேண்டியது நியாயமாகும்; ஏனெனில் குழந்தைப் பருவம், தொடங்கிக் கத்தோலிக்கரை உண்மையான, அனைத்துலக உணர்விலும் நற்செய்திப் பணி உணர்விலும் தோய்ந்திருக்கச் செய்வதற்கம், நற்செய்தி அறிவிக்கப்படும் எல்;லா நாடுகளுக்கும் பயன்படுவதற்காக அவை ஒவ்வொன்றின் தேவைகளுக்கு ஏற்ப, தகுந்த அளவு நிதி திரட்டுவதற்கும் மேற்கூறிய சபைச் செயல்பாடுகள் வழிகளாக அமைகின்றன.7

ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் உழைக்க நாளுக்கு நாள் அதிகமானவர்கள் தேலைப்படுகிறார்கள். அஃதோடு, மறைமாவட்டத் திருப்பணியாளர்களும் உலகிற்கு நற்செய்தியை அறிவிப்பதில் இன்னும் அதிமாகப் பங்கேற்க விரும்புகின்றனர். எனவே திருப்பணியாளர்களின் பெரும்கற்றாக் குறையால் பல மண்டலங்களில் நற்செய்தி அறிவிப்பு தடைபடுகின்றது என்பதை உணர்ந்து நற்செய்திப் பணிக்காகத் தாமே முன்வரும் தம்முடைய சிறந்த திருப்பணியாளர்களில் சிலரை, உரிய பயிற்சிக்குப் பின், திருப்பணியாளர்கள் தேவையுள்ள மறைமாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டுமெனத் திருச்சங்கம் விழைகிறது. அங்குச் சிறிது காலமாவது இத்திருப்பணியாளர்கள் தொண்டுபுரியும் மனப்பான்மையோடு நற்செய்திப் பணியைச் செய்யலாம்.8

ஆயர்களின் நற்செய்திப் பணி திருச்சபை முழுவதன் நன்மைக்காக இன்னும் அதிகப் பயன்தரும் முறையில் நடைபெற, ஆயர் பேரவைகள் தங்களின் சொந்த மண்டலங்களில் திட்டமிடப்பட்ட ஒத்துழைப்பைச் சார்ந்த செயல்கள் அனைத்தையும் மேற்பார்வையிட்டு முறைப்படுத்துவது நலம் பயக்கும்.

ஆயர்கள் தங்கள் பேரவைகளில் கீழ்வரும் பொருள்கள் பற்றி ஆய்வு நிகழ்த்துவார்களாக. மக்களினங்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும். பணிக்கென மறைமாவட்டத் திருப்பணியாளர்களை ஒதுக்குதல்; நற்செய்திப ;பணிக்காக ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கக் கடமைப்பட்டுள்ள குறிப்பிட்ட தொகை;9 நற்செய்தி அறிவிக்கப்டும் நாடுகளுக்கு நேரடியாக உதவி செய்வதற்கான வழிவகைகளை ஒழுங்குபடுத்தல், மற்றும் முறைப்படுத்தல், நற்செய்திப் பணிச் சபைகளுக்கும் நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளில் பணிபுரிய மறைமாவட்டத் திருப்பணியாளர்கள் பயிற்சி பெறும் திருப்பணி பயிற்சியகங்களுக்கும் உதவி செய்தல், மற்றும் தேவைப்படும்போது இவற்றை நிறுவுதல்; மேற்கூறிய சபைகளுக்கும் மறைமாவட்டங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்புகளை வளர்த்தல்.

இதுபோலவே, வேலைக்காக அல்லது கல்விக்காக நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளிலிருந்து வந்து குடியேறுவோர்க்குச் சகோதர வாஞ்சையோடு வரவேற்பளிக்கவும் அருள்பணிக்கு உகந்த அக்கறையோடு உதவவும் பொருத்தமான அமைப்புகளை ஏற்படுத்தி ஊக்குவிக்க ஆயர் பேரவைகள் கடமைப்பட்டிருக்கின்றன. ஏனென்றால், இவற்றின் வழியாகத் தொலைவிலிருக்கும் மக்கள் ஒருவகையில் அருகிலிருப்போர் ஆகின்றனர்; மேலும் பழங்காலந்தொட்டுக் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிய சமுதாயங்கள் நற்செய்தியை இன்னும் கேளாத நாடுகளோடு உரையாடவும் தங்களுடைய அன்புப் பணி மற்றும் உதவி மூலமாக அந்நாடுகளுக்குக் கிறிஸ்துவின் உண்மை முகத்தைக் காட்டவும் சிறந்ததொரும் வாய்ப்பு கிடைக்கிறது.10

நற்செய்திப் பணி திருப்பணியாளர்களின் கடமை

39. திருப்பணியாளர்கள் கிறிஸ்துவின் பதிலாள்களாக உள்ளனர்; இயல்பிலேயே திருச்சபையின் நற்செய்திப் பணியைச் சார்ந்துள்ள மூவகையான தூய அலுவலில் அவர்கள் ஆயர்நிலையின் ஒத்துழைப்பாளராய் இருக்கின்றனர்.11 எனவே, தங்களுடைய வாழ்வு நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளுக்குச் சேவை செய்வதற்காகவும் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் திருப்பணியாளர்கள் ஆழ்ந்து உணர வேண்டும். திருப்பணியாளர்கள் புரிகின்ற பணியானது திருச்சபைக்கு முழுமை தருகின்ற நற்கருணையில் சிறப்பாக அடங்கியுள்ளது. திருப்பணியாளர்கள் தங்களுக்கு உரித்தான பணியின் மூலம் தலையாகிய கிறிஸ்துவோடு ஒன்றிக்கின்றனர்; பிறரை இந்த ஒன்றிப்பிற்கு அழைத்து வருகின்றனர்; எனவே கிறிஸ்துவின் உடலை முழுமையாக்குவதற்கு இன்னும் எவ்வளவு குறைவாயிருக்கிறது என்பதையும் அதனால் அவ்வுடல் நாள்தோறும் வளர்வதற்கு எவ்வளவு செய்யவேண்டியுள்ளது என்பதையும் திருப்பணியாளர்கள் உணராமல் இருக்க முடியாது. ஆகவே, கிறிஸ்தவரல்லாதோர் நடுவே நற்செய்தி பரவ உதவக்கூடியவகையில் திருப்பணியாளர்கள் தங்கள் அருள்பணியை அமைத்துக் கொள்ளவேண்டும்.

திருப்பணியாளர்கள அருள்பணி ஆற்றும்போது, உலகுக்கு நற்செய்தி அறிபப்பதற்கான ஆர்வத்தை நம்பிக்கை கொண்டோர் நடுவே தூண்டியெழுப்பி வளர்பபர்; இதற்காக அவர்கள் மக்களினங்களுக்குக் கிறிஸ்துவை அறிவிக்கும் கடமை பற்றி மறைக்கல்வி, மறையுரை இவற்றின் வழியாக நம்பிக்கை கொண்டோருக்குக் கற்பிப்பர், மேலும் இவர்கள் கிறிஸ்வக் குடும்பங்கள் தங்களுடைய சொந்த ஈண் பிள்ளைக்ள மற்றும் பெண் பிளளைகளிடையே நற்செய்திப் பணிக்கான அழைத்தலை வளர்க்க வேண்யெதன் தேலை பற்றியும், இவ்வாறு செய்தலின் சிறப்புப் பற்றியும் உணரும்படிச் செய்வர்; பள்ளிகளிலிருந்தும் கத்தோலிக்கக் கழகங்களிலிருந்தும் எதிர்கால நற்செய்தித் தூதர்கள் தோன்றும்படியாக அவற்றிலுள்ள இளைஞரிடையே நற்செய்திப் பணி ஆர்வத்தை வளர்ப்பர். மேலும் திருப்பணியாளர்கள் நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளுக்காக இறைவேண்டல் செய்யவும் நம்பிக்கை கொண்டோருக்குக் கற்பிக்க வேண்டும்; கிறிஸ்துவுக்காகவும் மக்களின் நிறைவாழ்வுக்காகவும் இரவலர் போல தங்தளையே ஆக்கிக்கொண்டு திருப்பணியாளர்கள் நம்பிக்கை கொண்டோரிடத்தில் தர்மம் கேட்கவும் வெட்கப்படாமலிருக்க வேண்டும்.12

திருப்பணிப் பயிற்சியகங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றும். பேராசிரியர்கள உலகு மற்றும் திருச்சபையின் உண்மை நிலையை இளைஞர்களுக்குக் கற்பிக்க வேண்டும்; இவ்வாறு இந்த இளைஞர்கள் கிறிஸ்தவரல்லாதோர்க்கு நற்செய்தியைத் தீவிரமாகப் போதிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொள்வர்; அவர்களது ஆர்வமும் ஊட்டம் பெறும். சமயக் கோட்பாடு, விவிலியம், ஒழுக்க நெறி, வரலாறு போன்ற பாடங்களைக் கற்பிக்கும்போது இவைகளுள் பொதிந்து கிடக்கும் நற்செய்திப் பணி சார்ந்த கூறுகளைத் தெளிவாக விளக்க வேண்டும்; இவ்வாறு வருங்காலத் திருப்பணியாளர்களில் நற்செய்திப் பணி உள்ளுணர்வு உருவாகும்.

நற்செய்திப் பணியில் துறவறச் சபைகளின் கடமை

40. ஆழ்நிலை தியான வாழ்வு, பணி வாழ்வு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள துறவறச் சபைகள் உலகில் நற்செய்தியை அறிவிக்கும் பணியில் மாபெரும் பங்கினை இதுவரை ஏற்று வந்துள்ளன் இப்பொழுது ஏற்று வருகின்றன. திருச்சங்கம் இச்சபைகளின் நற்செயல்களை மகிழ்வோடு ஒப்புக்கொண்டு, கடவுளின் மாட்சிமைக்காகவும் மக்கள் சேவைக்காகவும் அவை புரிந்துள்ள எண்ணற்ற பணிகளுக்காக கடவுளுக்கு நன்றி கூறுகின்றது; மேலும், இச்சபைகள் தாம் தொடங்கிய வேலையைத் தளராது தொடர்ந்து செய்யும்படித் திருச்சங்கம் அவற்றிற்கு அறிவுறுத்துகிறது. இச்சபைகள் தங்களுடைய அழைத்தலினால் இன்னும் நிறைவாகப் பேணி வளர்கக வேண்டிய அன்பு எனும் நற்பண்ப உண்மையிலேயே பொதுமை உணர்வுக்கும் உடைப்பிற்கும் தங்களைத் தூண்டிக் கட்டாயப்படுத்துகிறது13 என்பதை அறிந்திருக்க வேண்டும்.

ஆழ்நிலைத் தியான வாழ்வுச் சபைகள் தங்கள் இறைவேண்டல்களாலும் தவ முயற்சிகளாலும் துன்பங்களாலும் மக்களை மனந்திருப்புவதில் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. ஏனெனில், நாம் மன்றாடும்போது தம் அறுவடைக்கு வேலையாள்களை அனுப்பபுவர்14 கடவுளே ஆவார். நற்செய்திக்குச் செவிசாய்க்கக் கிறிஸ்தவரல்லாதாரின் உள்ளங்களை அவர் திறந்துவிடுகிறார்;15 அவர்களுடைய இதயங்களில் நிறைவாழ்வின் வார்த்தையை வளமுறச் செய்கிறார்.16 நற்செய்தி அறிவிக்கப்படும் தளங்களில் இல்லங்களை நிறுவும்படி மேற்கூறிய சபைகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. உண்மையிலேயே, இச்சபைகளுள் பல ஏற்கெனவே இவ்வாறு செய்துள்ளன. இஙஙனம் செயல்படும் போது, நற்செய்தி அறிவிக்கப்படும் தளங்களில் வாழும் மக்களின் உண்மையான சமய மரபுகளுக்கு உகந்த முறையில் இச்சபைகள் வாழ்க்கை நடத்தும்; கிறிஸ்தவரல்லாதாரிடையே கடவுளின் மாண்பிற்கும் அன்பிற்கும் கிறிஸ்துவில் கொண்டுள்ள ஒன்றிப்பிற்கும் சிறந்த சான்று பகரும்.

பணி வாழ்வில் ஈடுபட்டுள்ள சபைகள் தாம் வெளிப்படையாக நற்செய்தி அறிவிக்கும் நோக்கம் கொண்டிருந்தாலும் சரி, கொண்டிராவிட்டால் சரி, கடவுள், முன்னிலையில் தங்களிடமே கீழ்வரும் கேள்விகளை நேர்மையுடன் கேட்டுக் கொள்ள வேண்டும்; மக்களினத்தாரிடையே இளையாட்சியைப் பரப்புவதற்காகத் தங்கள் உழைப்பை இன்னும் அதிகரிக்க முடியுமா? தங்கள் சபையை நிறுவியவரின் கருத்திற்கு முரணில்லாத வகையில் சபையின் அமைப்புச் சட்டங்களைத் தேவையானால் தழுவி அமைத்து நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளில் பணிகள் தொடங்க முடியுமா? தங்கள் உறுப்பினர் தங்களால் இயன்றவரை நற்செய்திப் பணிகள் ஆர்;வத்தோடு பங்குகொண்டு வருகின்றனரா? அவர்களுடைய வாழ்க்கை இறைமக்களின் சூழ்நிலைக்கும் பண்பிற்கும் உகந்த வகையில் நற்செய்திக்குச் சான்றாக அமைந்திருக்கிறதா?

தூய ஆவியின் தூண்டுதலால் திருச்சபையின் உலகுசார் துறவறச் சபைகள் நாற்தோறும் வளர்ந்து வருகின்றன. ஆயரின் அதிகாரத்தின்கீழ்ச் செயல்படும் இச்சபைகளின் பணிகள் உலகிற்கு நற்செய்தி அறிவிப்பதற்கான முழுமையான அர்ப்பணத்தின் அடையாளமாகத் துலங்கும்.

நற்செய்திப் பணியின் பொதுநிலையினரின் கடமை

41. திருச்சபையின் நற்செய்திப் பணியில் பொதுநிலையினர் ஒத்துழைக்கின்றனர். சிறப்பாக, கடவுளால் அடைக்கப்பட்டு ஆயரால் திருச்சபையின் மீட்புப் பணிக்காகத் தேர்ந்து கொள்ளப்படும்போது பொதுநிலையினர் இப்பணிக்குச் சாட்சிகளாகவும் அதே நேரத்தில் அதன் உயிருள்ள கருவிகளாகவும் இருந்து அதில் பங்கு பெறுபகிறார்கள்.17

ஏற்கெனவே கிறிஸ்தவச் சமயம் நிலவுகின்ற நாடுகளில் பொதுநிலையினர் நற்செய்திப் பணியில் கீழ்வரும் வகைகளில் ஒத்துழைப்பார்கள். அவையாவன: நற்செய்தி அறிவிக்கப்படும் தளங்கள் பற்றிய அறிவையும் அவற்றின் மீது அன்பையும் தங்களிடையேயும் பிறரிடையேயும் வளர்த்தல். தங்கள் குடும்பத்திலும் கத்தோலிக்கக் கழகங்களிலும் பள்ளிகளிலும் இறை அழைத்தலைத் தூண்டுதல்; தங்கள் இலவசாமாகப் பெற்றுக்கொண்ட நம்பிக்கை எனும் கொடை பிறருக்கும் அளிக்கப்படுவதற்காக எல்லாவிதப் பொருளுதவியையும் செய்தல்.

நற்செய்தி அறவிக்கப்டும் நாடுகளில் உள்ள பொதுநிலையினர் அவர்கள் வெளிநாட்டினர் ஆயினும் சரி, உள்நாட்டினர் ஆயினும் சரி புதிய சபைகளைச் சேர்ந்த நம்பிக்கை கொண்டோர் ஆயினும் சரி, புதிய சபைகளைச் சேர்ந்த நம்பிக்கை கொண்டோர் கூடிய சீக்கிரம் திருச்சபை வாழ்வில் தங்களுடைய பங்கை ஏற்றுச் செயல்பட இயலுமாறு18 கீழவரும் பணிகளை ஆற்றுவர். அவையாவன: பள்ளிகளில் கற்பித்தல், உலகு சார்ந்த செயல்பாடுகளைக் கவனித்தல்; பங்கு மற்றும் மறைமாவட்டப் பணிகளில் ஒத்துழைத்தல் பொதுநிலையினருடைய திருத்தூதுப் பணியின் பல்வேறு வகைகளை உருவாக்கி ஊக்குவித்தல்.

இறுதியாக வளரும் நாடுகளின் மக்களுக்குப் பொது நிலையினர் சமூக பொருளாதார ஒத்துழைப்பைத் தாராள மனதுடன் நல்கவேண்டும். சமூக வாழ்வின் அடிப்படை அமைப்புகளைச் சார்ந்த, அல்லது பொதுநலனை வளர்க்கப் பொறுப்புடையவர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கமுடைய நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு மேற்கூறிய ஒத்துழைப்பு வழிவகுக்குமானால், அது இன்னும் அதிகமாகப் போற்றுதற்குரியது.

பல்கலைக் கழகங்களிலும் அறிவியல் நிறுவனங்களிலும் தங்களடைய வரலாற்று ஆராய்ச்சி, அறிவியல் முறைப்படி அமைந்த சமயங்களையும் பற்றிய அறிவை வறர்ச்சியுறச் செய்கின்ற பொதுநிலையினர் நற்செய்தித் தூதர்களுக்கு உதவுவதோடு கூட, கிறிஸ்தவரல்லாதாரோடு உரையாடல் நிகழ்த்தவும் ஆயத்தம் செய்கின்றனர். இந்தப் பொதுநிலையினர் தனிப்பட்ட முறையில் பாரட்டுக்குரியவராவர்.

பொதுநிலையினர் மண்ணக நகரைக் கட்டி எழுப்பும் பணி ஆண்டவரில் அடித்தளமிடப்பட்டு அவரைச் சார்ந்து நிற்க வேண்டும்19 என்பதை எப்போதும் கண்முன் கொண்டு பிற கிறிஸ்தவர்களோடும் கிறிஸ்தவரல்;லாதோரோடும், சிறப்பாகப் பன்னாட்டுக் கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களோடும் சகோதரர் சகோதரிகளாக ஒத்துழைப்பார்களாக.

இத்தகைய கடமைகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால் பொதுநிலையினருக்குத் தொழில் நுட்ப, அருள் வாழ்வுத் தயாரிப்பு தேவையாகும். இதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களில் இப்பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்களுடைய வாழ்க்கை கிறிஸ்தவரல்;லாதாரிடையே கிறிஸ்துவுக்குச் சான்றாக அமையும். திருத்தூதர் பவுலின் சொற்கள் இவண் அவர்களுக்குப் பொருந்தும்: யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன் தருவதை நடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன்தருவதையே நாடுகிறேன்.(1 கொரி 10:32-33).

முடிவுரை

42. உரோமைத் தலைமை ஆயரோடு சேர்ந்து, சங்கத் தந்தையர் எங்கும் இறையாட்சியைப் பரப்பும் கடமையை ஆழ்ந்து உணர்ந்து நற்செய்தித் தூதர்கள் அனைவரையும் மிகுந்த அன்போடு வாழ்த்துகின்றனர். சிறப்பாகக் கிறிஸ்துவின் பெயருக்காகத் துன்புறுத்தப்படுவோரோடு சேர்ந்து தாமும் அவர்களுடைய துன்பங்களில் பங்கேற்று20 அவர்களை வாழ்த்துகின்றனர்.

கிறிஸ்து மனிதர்கள் மட்டில் எத்தகைய அன்பால் பற்றி எரிந்தாரோ அதே அன்பால் சங்கத் தந்தையரும் எரிந்து ஒளிர்கின்றனர். இறையாட்சியை மண்ணில் வரச்செய்பவர் கடவுளே ஆவார் என்பதைச் சங்கத் தந்தையர் உணர்ந்திருக்கின்றனர். ஆகவே, அவர்கள் எல்லாக் கிறிஸ்தவர்களோடும் ஒன்று சேர்ந்து கீழ்வரும் கருத்துக்காக இறைவேண்டல்களை எழுப்புகின்றனர். திருத்தூதர்களின் அரசியாகிய கன்னி மரியாவின் வேண்டுதல் வழியாக மக்களினங்கள் உண்மையை விரைவில் அறிந்துணர வேண்டும்,21 இயேசு கிறிஸ்துவின் முகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளி தூய ஆவியின் வழியாக எல்;லா மனிதர் மேலும் ஒளிர வேண்டும்.22

இவ்விதித் தொகுப்பில் கூறப்பட்டுள்ள யாவும், அவை ஒவ்வொன்றும், திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும் கிறிஸ்து நமக்கு அளித்துள்ள திருத்தூது அதிகாரத்தால் வணக்கத்துக்குரிய தந்தையருடன் இணைந்து, தூய ஆவியில் அவைகளை ஏற்றுக்கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிலை நாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டீய அவை யாவையும் கடவுளின் மாட்சிமைக்காகச் செயல்படுத்தும்படி ஆணையிடுகிறோம்.

தூய பேதுரு பேராலயம் பவுல்.
உரோமை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்
டிசம்பர் 7, 1965.  

கீழே தந்தையரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.