இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள்

 

திருப்பணியாளர்களின் பணியும் வாழ்வும்

உட்புகுமுன்

ஏட்டின் தோற்றம்

1959 ஆம் ஆண்டு சனவரி 25, தூய பவுல் மனம் மாறிய நாளன்று 2ஆம் வத்திக்கான பொதுச் சங்கம் கூட்டப்படும் என்று திருத்தந்தை 23ஆம் யோவான் அறிவிப்புப் விடுத்தார். உலகளாவிய திருச்சபையின் பொது அமர்வு என்ற விதத்தில் எங்கும் சங்கத்தைப் பற்றிய பேச்சும் எதிர்ப்பார்ப்பும் நிலவியது. பல்வேறு நிலையிலுள்ள திருச்சபையின் மக்கள், தங்கள் வாழ்வு மற்றும் பணி பற்றிய தெளிவுகள் கிடைக்கும் என்று நம்பி நின்றனர்.

பொதுச் சங்கத்துக்கான தயாரிப்பு தொடங்கியது.குறிப்பிட்ட தலைப்புகளில் விவாதித்து, சிந்தித்துவர ஆயர்களுக்குக் குறிப்புக்ள அனுப்பப்பட்டன. அத்தலைப்புகளுள் திருப்பணியாளர் (குருக்கள்) பற்றி ஒரு தனித் தலைப்ப ஒதுக்கப்படவில்லை. திருப்பணியாளர் மற்றும் நம்பிக்கை கொண்டோர் பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறைகள் என்று ஒரு தலைப்பு இருந்தது. திருப்பணியாளர்கள் பற்றித் தனித் தலைப்பு இல்லாதது பற்றித் தனித் தலைப்பு இல்லாதது பற்றி ஆரம்பத்தில் யாருக்கும் வியப்பு இருந்தது போல் தெரியவில்லை. ஆயர்களையும் அவர்களது பணி நிலையையும் பற்றிய தெளிவுகள் முக்கியம் பெறும் என்று மக்கள் எதிhபர்த்தார்கள். கத்தோலிக்க சேவை போன்ற பொதுநிலையினரின் பணிக்குழுக்கள் உலகெங்கும் செயல்பட்டு வந்தன. எனவே, பொதுநிலையினரின் இறையியல் மற்றும் பணிஈடுபாடு பற்றியும் சங்கத்திலிருந்து தெளிவுகள் கடைக்கும் என்ற எதிhநோக்கு இருந்தது. பங்குகளில், பட்டித்தொட்டிகளில் அன்றாடம் திருச்சபைப் பணியை நடைமுறைப்படுத்தும் திருப்பணியாளர்களின் இறையியல் மற்றும் பணிப்பொறுப்புகள் பற்றி அதிகமாக தொடக்கத்தில் கவலையின்றியே எல்லாரும் இருந்ததுபோல் தோன்றியது.

சங்கத்தின் முதல் அமர்வின் விவாதங்கள் எதிர்பார்த்ததுபோல் வேகமாக நடைபெறவில்லை. விவாதிக்கப்பட வேண்டிய பொருள்கள் பல இருந்தன. எனவே திருப்பணியாளர்கள் பற்றி ஏற்கெனவே தயாரித்திருந்தவற்றைச் சுருக்குமாறு பணிக்கப்பட்டது.

இரண்டாம் அமர்வில், 29.11.63. அன்று உலகமெங்குமுள்ள திருப்பணியாளர்களக்கு ஒரு செய்தி என்று ஒரு சிறுகுறிப்பு சங்கத்தந்தையர் முன் வைக்கப்பட்டது. விவாதத்திற்கு நேரம் இல்லை. எனவே, யாருக்காவது பரிந்துரைகள் இருந்தால் மறுநாள் காலை பத்து மணிக்குள் எழுதித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மறுநாள் சனிக்கிழமை அமர்வுகளுக்கு விடுமுறை எனவே திருத்தக் குறிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பும் இல்லை. என்ன ஆச்சரியம் என்றால் மறுநாள் காலை நூற்றுக்கும் அதிகமான திருத்தங்கள் வந்து சேர்ந்தன. அத்திருத்தங்களின்மூலம் ஆயர்கள் பலரும் தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்திருந்தனர். அந்தச் செய்தியில் எந்தத் தெளிவும் இல்லை;; திருப்பணியாளர்களுக்கத் தரவேண்டிய முக்கியத்துவம் இல்லை இத்தகு குழப்பமான செய்தி ஒன்றைச் சங்கம் திருப்பணியாளர்களுக்குத் தரவேண்டாம் என்றே ஆயர்கள் சொன்னார்கள்.

இந்த விருப்பங்களின் அடிப்படையில் மூன்றாம் அமர்வில் திருப்பணியாளர்கள்பற்றிச் சற்று விரிவான குறிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 1964, அக்டோபர் 13ஆம் நாள் அது திருப்பணியாளர்களின் பணி மற்றும் வாழ்வு பற்றி 10 தீர்மானங்களாகச் சங்கத் தந்தையர்முன் வைக்கப்பட்டது. அன்று முதல் நடந்த விவாதங்களில் திருப்பம் ஏற்பட்டது. கீழ்வரும் கருத்துகள் அழுத்திக் கூறப்பட்டன:

ஆயர்களுக்கும் பொதுநிலையினருக்கும் திருச்சபை இயல்பிலும் பணியிலும் சிறப்பிடம் தரப்பட்டது போல், திருப்பணியாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். எனவே, அவர்களைப் பற்றி ஒரு ஏடு வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டது.

திருப்பணிநிலை திருச்சபையோட நெருஙகிய தொடர்பு கொண்டது; தொடக்கத்திலிருந்தே இருந்து வந்துள்ள என்ற தெளிவு வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

திருப்பணியாளர்கள் ஆயர்களின் சகோதர உடனுழைப்பாளர்கள், ஒத்;துழைப்பாளர்கள். இந்த சகோதரப்பணி உறவு வலியுறுத்தப்படல் வேண்டும் என்று கோரப்பட்டது.

மறைமாவட்டத்திலும், பங்குகளிலும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். எனவே அதற்கேற்ற அமைப்புகள் முன்வைக்கப்படல் வேண்டும் என்று கூறப்பட்டது. (எ.கா: மறைமாவட்ட அளவில் திருப்பணியாளர்கள் ஆலோசனை மன்றம், பங்களவில் பங்கு அருள்பணிப் பேரவை)

இப்படிப்பட்ட முக்கியமான பரிந்துரைகளுக்குப்பின், 10 தீர்மானங்கள் அடங்கிய அந்தச் சிற்றேடு திருப்பி அனுப்பப் பட்டது. சற்று விரிவான ஏட ஒன்றை உருவாக்கம் முயற்சி தொடங்கியது.

நான்காம் அமர்வில் அரு விவாதிக்கப்பட்டது. திருத்தங்கள் செய்யப்பட்டன. சங்கம் நிறைவுறுவதற்கு முன்தினம், அதாவது1965, டிசம்பர் 7ஆம் நாள் திருப்பணியாளரின் பணியும் வாழ்வும் என்னும் தலைப்புடன் இவ்வேடு ஏற்கப்பட்டு அறிவக்கப்பட்டது.

யாருக்கு எழுதப்பட்டது?

திருப்பணியாளர்கள் பற்றிய இவ்வேடு யாருக்க எழுதப்பட்டது என்பது முக்கிய கேள்வி. ஏனெனில், மறைமாவட்டத்திருப்பணியாளரும் உளர்; துறவறச் சபைகளைச் சேர்ந்த திருப்பணியாளரும் உளர். மறைமாவட்டத் திருப்பணியாளர் உலகுசார் பணியாளர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இச்சொல்i;லச் சங்கம் தவிர்க்கின்றது உலகுசார்ந்தது திருச்சபை சார்நதது என்ற இரட்டைப் பார்வையைச் சங்கம் தவிர்த்து வந்துள்ளது. சபைகளைச் சார்ந்த திருப்பணியாளரைத் துறவியர் என்று அழைக்கின்றோம். இந்த ஏடு முதல் முதலாக மறைமாவட்டத்திருப்பணியாளர்களையே கண்முன் கொண்டுள்ளது. முன்னுரையில் இதைச் சுட்டி காட்டுகின்றது. இங்கே கூறப்படுவன யாவும் எல்லாத் திருப்பணியாளர்களுக்கும் சிறப்பாக மக்களிடையே அருள்பணி ஆற்றுவோருக்கும் பொருந்தும்; தகுந்த மாந்நங்களுடன் துறவறத் திருப்பணியாளர்களுக்கும் பொருந்தும்.

தொடர்புடைய பிற ஏடுகள்

இவ்வேடு தன்னிலே அவ்வளவு ஆழம் கொண்டது என்று சொல்h முடியாது. இதனை முழுமையாகப் புரிந்திடச் சங்கம் வெளியிட்ட வேறு ஏடுகளை, சிறப்பாக நெருங்கிய தொடர்புடைய சில ஏடுகளை இதனுடன் இணைத்துப் படிக்க வேண்டும்.

அவையாவன:

திருச்சபை பற்றிய கொள்கை விளக்கம் (இது சங்கத்தின் எல்லா ஏடுகளுக்குமே அடிப்படையானது) திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம்; ஆயர்களின் அருள்பணி, திப்பணிப் பயிற்சி.

ஏட்டின் பகுதிகளும் முக்கிய கருத்துகளும்

இந்த ஏட்டின் மூன்று இயல்கள் ஏட்டினை மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கின்றனர்.

முதல் இயல் திருச்சபையின் பணியில் திருப்பணி நிலை என்னும் தலைப்பில் தரப்பட்டுள்ளது. திருப்பணிநிலையின் முறையான அடிப்படையை இது விளக்குகின்றது. ஆயர்கள் பொதுநிலையினர் ஆகியோரைப் பற்றிய ஏடுகள் அவரவர் வாழ்வு மற்றும் பணி நிலைகளின் இறையியல் அடிப்படைகளை விளக்குகின்றன திருப்பணியாளர்களைப் பற்றிய ஏடும் திருப்பணி நிலையைப் பற்றிய இறையியல் கொள்கை விளக்கம் தரவேண்டும் என்று சங்கத் தந்தையர் 3,4 ஆம் அமர்வுகளில் தெளிவாகக் கோரினர். எனவே இப்பகுதி முதலில் தரப்பட்டுள்ளது.

இந்த முதல் இயல் திருப்பணி நிலையை மூன்று முக்கிய கோணங்களிலிருந்து பார்க்கின்றது. திருச்சபையின் பணி எனத் தலைப்;பில் குறிப்பிட்டாலும், அதிக அழுத்தம் பெறுவது கிறிஸ்துவின் பணி தான் எனவே திருப்பணியாளர்கள் யார்? அவர்களது பணி என்ன? என்னும் கேள்விகளோடு தொடர்புள்ளவை. இதைக் கிறிஸ்தியல் பார்வை எனலாம்.

அடுத்து முக்கியத்துவம் பெறுவது திருச்சபை இயல் பார்வை. திருப்பணியாளரின் வாழ்வு , பணி ஆகியவை திருச்சபை என்ற கிறிஸ்துவின் உடலோடு நெருங்கிய தொடர்புள்ளவை. (ஆக திருச்சபை இயல் பார்;வையில் கூட கிறிஸ்தியல் அழுத்தமே கூடுதலாக உள்ளது)

இந்த ஏட்டின் தனிச் சிறப்பு உலகியல் பார்வை எனலாம். திருப்பணியாளர்கள் உலகின் நடுவில் இருக்கின்றார்கள் மனிதர்களின் வாழ்க்கையோடும் வாழ்க்கை நிலைகளோடும் அவர்கள் தொடர்புள்ளவர்கள். எனவே ஒருவித உலகுசார்தன்மை அவர்களின் பணியிலும் வாழ்விலும் உள்ளது. அதேநேரத்தில், உலகின் மதிப்பிடுகளிலும் உலக வாழிவிலும் மூழ்கிவிடாமல் அவற்றினின்று அகன்று நிற்கவும் அவர்கள் அழைக்கப்படுவார்கள் என்பதையும் விளக்குகிறது ஏடு (காண்க எண் 3) இந்த உலகியல் பண்பையும் கிறிஸ்தியல் பார்வையிலிருந்து விளக்குகிறது ஏடு.

இரண்டாம் இயல் திருப்பணியாளர்களின் பணி பற்றி விவரிக்கிறது திருப்பணியாளர்களின் முப்பணிகளாகிய போதிக்கும் பணி, புனிதப்படுத்தும் பணி, ஆளும் பணி ஆகியவை விளக்கம் பெறுகின்றன.

இந்தப் முப்பணிகளில் எது முக்கியமானது? ஏட்டின் அமைப்பினைப் பார்த்தால் போதிக்கும் பணிதான் முக்கியமானது என்பதை வலியுறுத்துவது போல் உள்ளது. இதைச் சங்கத் தந்தையரும் வலியிறுத்தி மற்ற இருபணிகளையும் இரண்டாம் தரம் ஆக்கக்கூடாது என்றார்கள். ஒரு சிலர் நற்கருணையைப் கொண்டாடுவது தான், அதாவது திருப்பலி ஒப்புக் கொடுப்பதுதான் மிகமிக முக்கியமான பணி என்றனர்.

இந்த மூன்று பணிகளையும் விளக்கும் போது மூன்றையுமே இன்றியமையாப் பணிகள் என்றே கொள்வது ஏட்டின் தனிச்சிறப்பு எனலாம். ஒவ்வொரு பணியும் தனித்தனிச் சிறப்பு பெற்றது. இவ்வாறு இறைவாக்குப் பணி என்பது முதன்மையானது, அதாவது, முதலாவது செய்யப்படவேண்டியது (எண் 4). புனிதப்படுத்தும் பணி மையமானது. நற்கருணைக் கொண்டாட்டம் கடவுளின் மக்கள் கூட்டத்தின் நடுநயகமாக விளங்குகின்றது (எண் 5). தலைமைப் பணியாகிய மக்களைச் சமூகமாகக் கூட்டி எழுப்புதல் இலட்சியமானது. அதாவது, அனைத்துப் பணிகளின் நோக்கம் மக்களைக் கிறிஸ்தவ நெறியிலும், அன்பிலும் இணைந்து ஒரு சமூகமாகக் கட்டி எழுப்புவதுதான்.

எனவே போதிக்கும் பணி முதன்மையானது, தூய்மைப்படுத்தும் பணி மையமானது, தலைமைப்பணி பணியின் இறுதி நோக்கமானது. இவ்வாறு மூன்று பணிகளும் இன்றியமையாதவையே என்று இவ்வேடு வருணிப்பது சிறப்பானது.

இந்த இயலில் அடிக்கோடிட்டுக் காட்டப்படும் மூன்று கருத்துகள்:

முதலில் வலியுறுத்துவது இறைவாக்குப் பணி இறைவாக்கைப் பொதுவாகவும் கொள்கை அளவிலும் விளக்கினால் போதாது. மாறாக, என்றும் நிலைக்கும் நற்செய்தி உண்மைகளை நடைமுறை வாழ்க்கைச் சூழ்நிலைகளோடு இணைத்து விளக்க வேண்டும் இவ்வாறு வாழ்வுச் சூழலுக்கேற்ற இறைவாக்கு விளக்கத்தை ஏடு வலியுறுத்துகின்றது.

இரண்டாவது கருத்து திருப்பணியாளர்களின் மக்கள் பணியைப் பற்றியது. திருப்பணியாளர்களின் இலக்கு மக்கள் யார் எனும் கேள்விக்குப் பதிலுறுக்கும் ஏடு, கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவர் அல்லாதாரையும் இலக்கு மக்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. ஏழைகள் வலுவற்றவர்கள் ஆகியோர்தான் இந்த இலக்கு மக்கள். இதற்கு ஏடு இரண்டு காரணங்களைத் தருகின்றது; ஒன்று இயேசுவும் ஏழை மக்களில் ஒருவராக இருந்தார் என்பது;; இன்னொன்று ஏழையருக்கு நற்செய்தி இறையாட்சியின் அடையாளம் என்பது.

மூன்றாவது, திருப்பணியாளர்களின் பல்முனை உறவுகளைப்ப பற்றியது. திருப்பணியாளரைத் தனித்துநின்று அலுவல் புரியும் பணியாளராக அன்று, திருச்சபையின் பலநிலைகளில் இருக்கும் அனைவரோடும் இணைந்து செயல்படும் ஒருவராகவே இவ்வேடு பார்க்கின்றது.

ஆயர்களும் திருப்பணியாளர்களுக்கும் இடையே நிலவ வேண்டியது ஒரு சகோதர உறவு. எனவே உறவையும் உலையாடலையும் வளர்க்கும் ஏற்பாடுக்ள தேவை, பங்கேற்பு அமைப்புகள் தேவை என்று எடுத்துரைக்கின்றது ஏடு (எண் 7).

திருப்பணியாளர்கள் தங்களிடையே கொண்டிருக்க வேண்டிய உறவும் வலியுறுத்தப்படுகிறது ( எண் 8). முதிர்ந்தவர்கள், இளையவர்கள் ஆகிய அனைவரும் சகோதர அன்பால் இணைந்திருப்பது தேவை. வாழ்வு முறையால் தனியாக வாழப் பல வழிகளில் கட்டாயப்படுத்தப்படுவதால் நட்பினை வளர்க்கவும் வாழ்வைப் பகிர்ந்து கொள்ளவும், கூடி இறைவேண்டல் செய்யவும், பொழுதுபோக்கவும் பிற திருப்பணியாளர்களுடன் கூடி வரவேண்டும். கூடுமான இடங்களில் திருப்பணியாளரின் குழுப்பணிகளை ஆதரிக்கவும் இந்த ஏடு பரிந்துரைக்கின்றது.

பொதுநிலையினருக்கும் திருப்பணியாளருக்கு; இடையே நிலவும் உறவு தந்தை பிள்ளைகள் உறவு என்பதைவிட உடன்பிறப்புகளுக்கு இடையே நிலவும் உறவு எனல் வேண்டும். (எண் 9) . எனவே உரையாடல் கருத்துப் பரிமாற்றம் ஆலோசனை கேட்டல் ஆகியவை தேவை. பங்குப் பேரவை போன்ற பங்கேற்பு அமைப்புகளும் தேவை. இந்த அணுகுமுறை வழியாகத் தலைமைப் பண்புக்குக் காலத்திற்கேற்ற புதுவிளக்கம் தருகின்றது ஏடு. அதாவது தலைமை என்பது ஒரு மனிதரிலே குவிந்திருக்கும் தன்மையது அன்று, அது சமூகத் தன்மை கொண்டது. எனவே தலைமை என்பது பங்கேற்புத் தலைமைதான். இதைத் தொண்டு ஏற்க வந்த இயேசுவின் வாழ்வின் ஒளியில் காண இவ்வேடு நம்மை அழைக்கின்றது.

மூன்றாம் இயல் திருப்பணியாளர்களின் வாழ்வு என்ற தலைப்பில் அமைந்துள்ளது. முந்தைய இரண்டு இயல்களின் சொல்லப்பட்டவைகளை உள்ளிட்டு, அனைத்திற்கும் திருப்பணியாளர்களின் அகவாழ்வு எவ்வளவு ஆதாரமாக இருக்கின்றது என்பதையே இந்த அதிகாரம் விளக்குகின்றது.

கடவுளோடு ஒன்றித்த அருள் வாழ்வின் நிறைவுக்குத் திருப்பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளார்க்ள. இவ்வாழ்வில் பொறுப்பு (எண் 13), பிறரோடு ஒற்றுமை ஒத்துழைப்பு (எண் 14), பணிவு (எண் 15), மணத்துறவும் கற்பொழுக்கமும் (எண் 16) ஏழ்மை ஆகிய பண்புகள் விளக்கப்படுகின்றன.

இத்தகைய வாழ்வுக்கு உதவும் வழிகளை ஆயும்போது, அருள்வாழ்வை வளர்க்கும் வழிகள் மட்டுமின்றி (எண்18) நற்படிப்பு (எண் 19) ஏற்ற ஊதியம் (எண் 20), சமூகப் பாதுகாப்பு (எண் 21) ஆகியவையும் தேவை என்று ஏடு சுட்டிகாட்டியுள்ளது. இந்த ஏட்டின் மனித நேய அணுகுமுறை இங்கே தொடங்குகிறதுஃ இலட்சியங்களை மட்டும் சுட்டிகாட்டி, அதோடு விட்டுவிடாமல் நடைமுறை வாழ்க்கையும் இந்த ஏடு கருத்தில் கொண்டுள்ளது போற்றத்தக்கது

பணி. சான் குழந்தை
முதன்மைதிருப்பணியாளர்
கோட்டார் மறைமாவட்டம்
கோட்டார்,
19, மார்ச், 2001

 

திருப்பணியாளர்களின் பணியும் வாழ்வும்

பற்றி இறை அடியாருக்கு அடியார் ஆயர் பவுல்
திருச்சங்கத் தந்தையரோடு இணைந்து
நினைவில் என்றும் நிலைக்குமாறு அருளிய

அறிக்கை

முன்னுரை

1.திருப்பணியாளரின் பணிநிலைக்குத் திருச்சபையில் உள்ள மேன்மை பற்றி இத்திருச்சங்கம் எல்வோருக்கும் ஏற்கெனவே பல தடவைகளில் நனைவுபடுத்தியுள்ளது.1 கிறிஸ்துவின் திருச்சபையைப் புதுப்பிப்பதில் மிகப்பெரும் பொறுப்பு இப்பணிநிலைக்கு உண்டு; இப்பொறுப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கடினமாகிக்கொண்டு வருகிறது. எனவே, திருப்பணியாளர்களைப் பற்றி இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வது மிக்க பயன் விளைவிக்கும் எனத் தோனிறியது. இங்கே கூறப்படுவனயாவும் எல்லாத் திருப்பணியாளர்களுக்கும், குறிப்பாக மக்களிடையே அருள்பணி ஆற்றுவோருக்குப் பொருந்தும். தகுந்த மாற்றங்களுடன் துறவறத் திருப்பணியாளர்களுக்கும் பொருந்தும். திருப்பணிநிலைக்கான திருநலைப்பாட்டாலும் ஆயர்களிடமிருந்து பெறும் பணியாலும், ஈசிரியரும் திருப்பணியாளரும் அரசருமான சிறிஸ்துவுக்குத் தொண்டு புரியத் திருப்பணியாளர்கள் உயர்த்தப்படுகிறார்கள்; அயவருடைய திருப்பணியிலே பங்கு பெறுகிறார்கள். இப்பணியின் வழியே திருச்சபைஇவ்வுலகில் கடவுளடைய மக்களாகவும் கிறிஸ்துவின் உடலாகவும் தூய ஆவியின் ஆலயமாகவும் இடையறாமல் கட்டி எழுப்பப்படுகிறது. ஆகையால் அருள் பணிச் சூழ்நிலை ஆகியவற்றில் பல வேளைகளில் ஏற்பட்டிருக்கும் பெரும் மாறுதல்களுக்கிடையே திருப்பணியாளர்களின் பணி பயன விளைவிக்கும் வகையில் உறுதிபெறவும் அவர்களின்வயாழ்க்கைக்கு அன்னும் நன்முறையில் உதவி புர்யவும் அத்திருச்சங்கம் பின்வருபவைகளை அறிக்கையிட்டுத் தீர்மானிக்கிறது.

இயல்1
திருச்சபையின் பணியில் திருப்பணிநலை

திருப்பணிநிலையின் இயல்பு

2. தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகிற்கு அனுப்பப்பட்ட (யோவா 10:36) ஆண்டவர் அயேசு தூய ஆவியினால் திருநலைப்படுத்தப்பட்டவர். அவர் இத்திருநிலைப்பாட்டில்2 தம்முடைய மறையுடல் முழுவதும் பங்கடையச் செய்கிறார்: நம்பிக்கை கொண்டோர் யாவரும் அவயரில் தூய, அரச, திருப்பணியாளர் குலமாக ஆக்கப்படுகிறார்கள், இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுளுக்கு ஆவிக்குரிய பலிகளை ஒப்புக்கொடுக்கிறாறர்கள்; இருளிலிருந்து தமது வியத்தகு ஒளிக்குத் தங்களை அழைத்தவருடைய மேன்மைமிக்க செயல்களை அறிவிக்கிறார்கள்.3 ஆகவே முழு உடலின் பணியிலும் பங்கு கொள்ளாத உறுப்பு ஒன்றுமே இல்லை. ஆனால் ஒவ்வொரு உறுப்பும் இயேசுவைத் தனது உள்ளத்தில் வைத்துப் போற்ற வேண்டும்;4 இறைவாக்குரைக்கும் மனப்பாங்குடன் இயேசுவுக்குச் சான்று பகரவேண்டும்.5

அதே ஆண்டவர் நம்பிக்கை கொண்டோரை ஓர் உடலாக ஒன்று சேர்க்கும்படி, அவர்களில் சிலலைப் பணியாளராக ஏற்படுத்தினர். அவ்வுடல்ல் உறுப்புகள் எல்ல்hம் ஒரே செயலைச் செய்வதில்லை (உரோ 12:4) இப்பணியாளர்கள் இறைமக்களின் சமூகத்தில் திருப்பணியாளர் பணிநிலையின் தூய அதிகாரத்தைக்கொண்டு பலி ஒப்புக்கொடுக்கிறார்கள்; பாவங்களை மன்னிக்கிறார்கள்; மேலும், திருப்பணிநிலைக்குரிய பணிகளை மக்களுக்காக்க கிறிஸ்துவின் பெயரால் வெளிப்படையாக நிறைவேற்றுகிறார்கள். ஆகவே, தந்தையால் தாம் அனுப்பப்பட்டதுபோல, 7 கிறிஸ்து திருத்தூதர்களை அனுப்பிவைத்தார். அதே திருத்தூதர்களின் வழியாகவே அவர்களின் வழிவருபவர்களான் ஆயர்களுக்குத்8 தம்முடைய பணியியுலும் பங்கு அளித்தார். ஆயர்களோடு சார்ந்து நின்று அவர்களது பணியில் திருப்பணியாளர்கள் பங்கு கொள்கிறார்கள்.9 இவ்வாறு திருப்பணிநலையில் நியமிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவால் ஒப்படைக்கப்பட்ட திருத்தூதுப் பணியைச் சரிவர நிறைவேற்றும் பொருட்டு ஆயர் திருநிலையுடன் ஒத்துழைப்பவர்கள் ஆகிறார்கள்.10

கிறிஸ்துவே தம் உடலைக் கட்டி எழுப்புகிறார்; தூய்மைப்படுத்துகிறார்; ஆண்டு வருகிறார். ஆயர் நிலையுடன் இணைக்கப்பட்டிருப்பதால் திருப்பணியாளர்களும் இவ்வதிகாரத்தில் பங்கேற்கின்றனர். ஆகைறால் திருப்பணியாளர்களின் ;திருப்பணி நிலைக்கு மன்னரே சிறிஸ்தவப் புகுநலை அருளடையாளங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதன் பின்தான் திருப்பணியாளர்கள் பணி ஒரு குறிப்பிட்ட அருளடையாளம் வழியாக அளிக்கப்படுகிறது. திருப்பணிநலை வழியே திருப்பணியாளர்கள் தூய ஆவியின் பூசுதலால் ஒரு தனிப்பட்டதொரு முத்திரை கொண்டு குறிக்கப்படுகிறார்கள்; இவய்வாறுதலையகிய கிறிஸ்துவின் பெயரால் செயல்படும்படி,11 அவர்கள் திருப்பணியாளராகிய கிறிஸ்துவின் சாயலைப் பெறுகிறார்கள்.

திருப்பணியாளர்கள் தங்களுக்கு உரிய அளவில் திருத்தூதர்களின் பணியில் பங்கு பெறுவதால், அவர்கள் மக்களிடையில் இயேசு கிறிஸ்துவின் ஊழியர்களாக இருப்பதற்கான அருளைக் கடவுளிடமிருந்து பெறுகிறார்கள். மக்களின் காணிக்கை தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்டு12 உகந்ததாகும்படி, அவர்கள் நற்செய்;தித் திருப்பணியைச் செய்துவருகிறார்கள். கடவுளின் மக்களைச் சார்ந்த எல்லாரும் தூய ஆவியினால் அர்ப்பணிக்கப்பட்டிருப்பதல், கடவுளுக்கு உகந்த தூய ஆவியினால் அர்ப்பணிக்கப்பட்டிருப்பதால் கடவுளக்கு உகந்த தூய உயிருள்ள பலியாக (உரோ12:1) தங்களையே ஒப்புக்கொடுக்க நற்செய்தியின் திருக்தூதுப் போதனையால் கடவுளின் மக்கள் ஒருமிக்க அழைக்கப்பட்டு ஒன்றுகூடுகிறார்கள். திருப்பணியாளர்களின் பணி வழியாக நம்பிக்கை கொண்டோரின் பலி ஒரே இணைப்பாளராக கிறிஸ்துவின் பலியோடு ஒன்றித்து நிறைவுபெறுகிறது. கிறிஸ்துவின் இப்பலி ஆண்டவர் வரும்வரை13 அனைத்துலத் திருச்சபையின் பெயரால் குருதி சிந்தாமல் அருளடையாள முறையில் நற்கருணையில் திருப்பணியாளர்களின் கைகளால் ஒப்புக்கொடுக்கப்படுகிறது. திருப்பணியாளர்களின் பணி இப்பலியையே நோக்கியே செல்கிறது; இதிலியே நிறைவும் பெறுகிறது. ஏனெனில், நற்செய்தியை அறிவிப்பதில் தொடங்கும் அபர்களின் பணி, தனது ஆற்றலையும் வலி;மையையும் கிறிஸ்துவின் பலியிலிருந்து பெறுகிறது. மீட்கப்பட்டநகர் முழுவதும், அதாவது தூயவர்களின் கூட்டமும் சமூகமு;ம தலைமைக் திருப்பணியாளர் வழியாக கடவுளுக்குப் பொதுப் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே திருப்பணிநலைப் பணியின் நோக்கம். மேன்மைமிக்க தலையின் உடலாக நாம் இருக்கும் பொருட்டு இந்தத் ;தலைமைத் ;திருப்பணியாளர் தம் துன்பங்கள் மூலம் நமக்காகத் தம்மையே கையளித்தார்;14

எனவே கிறிஸ்துவில் இறைத் தந்தை மாட்சிமை அடைவதே திருப்பணியாளர்களின் பணி வாழ்வு ஆகியவற்றின் நோக்கம். கிறிஸ்துவில் நிறைவு பெற்ற கடவுளின் செயலை மக்கள் உணர்ந்து சுதந்திரத்தோடும் நன்றியுள்ளத்தோடும் ஏற்று, அதைத் தங்கள் வாழ்வு முழுவதிலும் வெளிப்படுத்துவதில்தான் இம்மாட்சிமை அடங்கியுள்ளது. ஆகையால் திருப்பணியாளர்கள் இறைவேண்டல் செய்யும் போதும், ஆராதிக்கும்போதும், வார்த்தையைப் போதிக்கம் போதும் நற்கருணைப் பலியை ஒப்புக்கொடுக்கும்போதும், மற்ற ஆருளடையாளங்களை வழுங்கும்போதும், மக்களுக்காக வேறு எப்பணியைச் செய்யும் போதும் கடவுளின் மாட்சிமை அதிகரிக்கவும் மக்களை இறை வாழ்வில் வளர்க்கவும் உதவுகிறார்கள். இவை யாவும் கிறிஸ்துவின் பாஸ்காவிலிருந்தே தோன்றுவதால் அதே ஆண்டவரின் மாட்சிமிக்க வருகையின்போது, தந்தையாகிய கடவுளிடம் அவர் தமது ஆட்சியை ஒப்படைக்கும் வேளையில் நிறைவுபெறும்.15

உலகி;ல் திருப்பணியாளர்களின் நிலைமை

3. மனிதரிடமிருந்து தேர்ந்துகொள்ளப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக16 மக்கள் சார்பாகக் கடவுள் மன் பணிபுர்ய ஏற்படுத்தப்பட்ட திருப்பணியாளர்கள் மற்ற மனிதர்களுடன் சகோதரர்களாக வாழ்கின்றார்கள். இவ்விதமே இறைமகனாம் ஆண்டவர் இயேசுவும் தந்தையினால் மனிதர்களிடம் அனுப்பப்பட்ட மனிதராக நம்மிடையே வாழிந்தார். பாவம் தவிர மற்ற எல்லாவற்றிலும் தம்முடைய சகோதரர், சகோதரிகளைப் போல் ஆக விரும்பினார்.17 தூய திருத்தூதர்கள் ஏற்கெனவே அவரைப் பின்பற்றினார்கள். பிற இனத்தாரின் போதகரும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தவருமான (உரோ1:4) தூய பவுல் எல்லாலையும் மீட்கும் பொருட்டுத் தாம் எல்லோருக்கும் எல்லாம் ஆனதாகச் சான்று பகருகிறார்.18 தங்களின் அழைத்தலாலும் திருநிலைப்பாட்டாலும் புதிய ஏற்பாட்டின் திருப்பணியாளர்கள் ஒருவிதத்தில் கடவுளின் மக்களுக்குள்ளேயே பிரித்துவைக்கப்பட்டிருக்கிளார்கள். ஆனால் இந்தப் பிரிவுநலை கடவுளின் மக்களிடமிருந்தோ வேறு எந்த மனிதர்களிடமிருந்தோ அவர்களைப் பரிப்பதற்காக அன்று; மாறாக ஆண்டவர் எந்தப் பணிக்காக அவர்களை அழைத்திருக்கிறாரோ, அதற்கு அவர்கள் முழுவதும் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே.19 அவர்கள் இவ்வுலக வாழ்வு அல்லாத மற்றொரு வாழ்வுக்குச் சாட்சிகளாகவும் அவ்வாழ்வை வழங்குவோர்களாகவும் திகழாவிட்டால், கிறிஸ்துவின் பணியாளர்களாக இருக்கமுடியாது. அதே நேரத்தில், மனிதர்களின் வாழ்க்கையோடும் வாழ்க்கை நிலைகளோடும் தொடர்பற்றவர்களாய் இருந்தால் அவர்கள் மனிதருக்குப் பணி செய்ய முடியாது.20 அவர்களது பணியின் தனிப்பட்டதொரு தன்மையே அவர்கள் இந்த உலகுக்கு ஒத்தவர்க் ஆகாதிருக்கக் கோருகிறது; ஆயினும், அதே வேளையில், இவ்வுலகில் அவர்கள் மக்கள் நடுவில் வாழ வேண்டியிருக்கிறது; நல்ல அருள்பணியாளர்கள் என்ற முறையில் தங்கள் மக்கள் குழுவைச சேராதவர்கள் கிறிஸ்துவின் குரலுக்குச் செவி கொடுத்து, ஒரே ஆயனும் ஒரே மக்கள் குழுவும் உண்டாகும் பொருட்டு, அவர்கள் அம்மக்கள் குழுவையும் கூட்டிச் சேர்க்க வேண்டியிருக்கிறது.22 இதயத்தில் கனிவு, நேர்மை, நிலையான, உறுதியான மனம், நீதியின் மேல் தொடர்ந்த அக்கறை, மனித நேயம் போன்ற மனித வழக்கிலே நன்றாக மதிக்கப்படும் பண்புகள் இக்குறிக்கோளை அடைவதற்குப் பெரிதும் உதவிபுரிகின்றன. இப்பண்புகளையே திருக்தூதர் பவுல் பரிந்துலைக்கிறார்; உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையயோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ அவற்றையே மனத்தில் இருத்துங்கள் (பிலி 4:8)23.

இயல் 2
திருப்பணியாளர்களின் அலுவல்கள்

திருப்பணியாளர்கள் இறைவாக்குப் போதகர்கள் ஆவார்

4. கடவுளின் மக்கள் முதல் முதலில் உயிருள்ள கடவுளின் வாக்கினாலேயே ஒன்று சேர்க்கப்படுகிறார்கள். 1இவ்வாக்கைத் திருப்பணியாளர்களிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது முற்றும் சரியே.2 நிறைவாழ்வு அடைய முதலில் எவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.3 எனவே ஆயரின் உடனுழைப்பாளர்கள் என்னும் முறையில் திருப்பணியாளர்கள் கடவுளின் நற்செய்தியை எல்லோருக்கும் போதிப்பதைத்4 தங்கள் முதற்கடமையாகக் கொண்டுள்ளார்கள். இவ்விதம் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற்16:15)5 என்ற ஆண்டவரின் கட்டளைளை நிறைவேற்றி இவர்கள் கடவுளின் மக்களை உருவாக்கி வளர்க்கிறார்கள். ஏனெனில் மீட்பளிக்கும் வாக்கு நம்பாதேர் உள்ளத்தில் நம்பிக்கையைத் தூண்டுகிறது; நம்பிக்கை கொண்டோரின் உள்ளத்திலே நம்பிக்கைக்கு உணவாகவும் அமைகிறது. இவ்வாறு அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு (உரோ 10:17) என்னும் திருத்தூதரின் கூற்றுக்கொப்ப நம்பிக்கை கொண்டோரின் கூட்டம் நம்பிக்கையினால் உருவாகி வளர்கிறது. ஆண்டவரில் தங்களின் மகிழ்ச்சிக்குக் காரணமான நற்செய்தி உண்மையை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளத் திருப்பணியாளர்கள் கடன்பட்டிருக்கிறார்கள்.6 திருப்பணியாளர்கள் கடவுளை மாட்சிபடுத்தும் முறையில் மக்கள் நடுவில் நன்னடத்தை உடையவர்களாக இருந்தாலும்7 கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்குக் கிறிஸ்துவின் மறைபொருளை அறிவித்து, வெளிப்படையாகப் போதித்தாலும், கிறிஸ்துவ மறைக்கல்வி புகட்டினாலும் அல்லது திருச்சபையின் படிப்பினைகளை விளக்கினாலும், தங்கள் காலத்துச் சிக்கல்களைக் கிறிஸ்துவின் ஒளியில் ஆராய முயன்றாலும், தங்களின் சொந்த ஞானத்தை அன்று, இறைவாக்கைப் போதிப்பதும், எல்;லாரையும் மனமாற்றத்திற்கும் தூய்மைநிலைமைக்கும் வலியுறுத்தி அழைப்பதுமே என்றும் அவர்களின் கடமை ஆகும்.8 இன்றைய உலகச் சூழ்நிலையில் திருப்பணியாளர்கள் போதிப்பது பெரும்பாலும் மிகக் கடினமானதே. கேட்போர் உள்ளத்தைக் தகுந்த முறைவில் கவர வேண்டுமானால் இறை வாக்கைப் பொதுவாகவும் கொள்;கை அளவிலும் மட்டும் விளக்கினால் போதாது; மாறாக, என்றும் நிலைக்கும் நற்செய்தி உண்மைகளை நடைமுறை வாழ்க்கைச் சூழல்களோடு இணைத்து விளக்க வேண்டும்.

இவ்வாறு போதனைப் பணியானது கேட்போரின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் போதிப்பவரின் தனிக்கொடைகளுக்கும் ஏற்பப் பல வழிகளில் நிறைவேற்றப்படுகிறது. கிறிஸ்தவம் பரவாத பகுதிகளில் அல்லது குழுக்களில் நற்செய்திப் போதனை கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் மீட்பளிக்கும் அருளடையாளங்களுக்கும் மக்களை ஈர்க்கிறது;9 கிறிஸ்தவச் சமூகத்தில், குறிப்பாகத் தாங்கள் அடிக்கடி பெறுகின்றவற்றைச் சிறிதுமட்டும் அறிந்தவர்களாக அல்லது சிறிதளவு நம்பிக்கை மட்டும் கொண்டவர்களாகத் தோன்றுபவர்களுக்கு, அருளடையாளங்களை அளிக்கும்போதே இறை வார்த்தைப் போதனை தேவைப்படுகிறது. ஏனெனில், அவை கிறிஸ்தவ நம்பிக்கையின் அருளடையாளங்கள்; அந்நம்பிக்கை இறைவாக்கிலிருந்து தோன்றி அதனாலேயே ஊட்டம் பெறுகின்றது.10 இது முக்கியமாகத் திருப்பலியில் ஆண்டவரின் இறப்பு, உயிர்த்தெழுதல் பற்றிய அறிவிப்பும் அதனைக் கேட்கும் மக்களின் பதில் மொழியும், தமது இரத்தத்தில் புதிய உடன்படிக்கையை உறுதிப்படுத்திய கிறிஸ்துவின் தற்கையளிப்பும் பிரிக்கமுடியாத விதத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தங்கள் இறைவேண்டலாலும் அருளடையாளத்தைப் பெற்றுக் கொள்வதாலும் நம்பிக்கை கொண்டோர் கிறிஸ்துவின் இத்தற்கையளிப்பில் ஒன்றிக்கிறார்கள்.11

திருப்பணியாளர்கள் அருளடையாளங்களை வழங்குபவர்கள்

5. கடவுள் ஒருவரே தூயவரும் தூய்மைப்படுத்துபவரும் ஆவார். அவரே தூய்மைப்படுத்தும் வேலைக்குத் தங்களையே மனத்தாழ்மையுடன் அர்ப்பணிக்கும் மனிதர்களைத் தம் தோழர்களாகவும் உதவியாளர்களாகவும் தேர்ந்துகொள்ள விரும்பினர். எனவே, ஆயரின் பணிமூலம் கடவுள் திருப்பணியாளர்களைத் திருநிலைப்படுத்துகிறார். இதனால் கிறிஸ்துவின் திருப்பணி நிலையில் தனிப்பட்ட முறையில் திருப்பணியாளர்கள் பங்கு பெறுகிறார்கள். இவ்வாறு திருச்சடங்குகளை நிறைவேற்றும்போது, திருவழி;பாட்டிலே நமக்காகவே தமது திருப்பணியாளர் அலவலைத் தம் தூய ஆவியின் மூலம் தொடர்ந்து செய்யும் கிறிஸ்துவின் பணியாளர்களாக அவர்கள் செயலாற்ற முடியும்.12 திருப்பணியாளர்கள் திருமுழுக்கினால் மனிதர்களைக் கடவுளின் மக்கள் கூட்டத்தில் சேர்க்கிறார்கள்;; ஒப்புரவு அருளடையாளத்தினால் பாவிகளைக் கடவுளோடும் திருச்சபையோடும் ஒப்புரவாக்குகிறார்கள். நோயாளிகளின் எண்ணைய்யால் பிணியாளர்களின் துன்பத்தைத் தணிக்கிறார்கள்;; முக்கியமாகத் திருப்பலி நிறைவேற்றிக் கிறிஸ்துவின் பலியை அருளடையாள முறையில் ஒப்புக்கொடுக்கிறார்கள். திருச்சபைஙின் தொடக்கக்காலத்தில் மறைச் சாட்சியன பேறுபெற்ற இஞ்ஞாசி சான்று பகர்வது போல,13 எல்லா அருளடையாளங்களையும் நிறைவேற்றும்போதும் திருப்பணியாளர்கள் வெவ்வேறு வழிகளில் ஆயருடன் திருச்சபை ஆட்சி அமைப்புப்படி இணைக்கப்பட்டிருக்கிறார்கள்; இவ்வாறு நம்பிக்கை கொண்டோர் ஒன்று கூடும்போதெல்லாம் அவரை ஒருவிதத்தில் உடனிருக்கச் செய்கிறார்கள்.14திருச்சபையின் எல்லாப் பணிகளையும் திருத்தூது அலுவல்களையும்போல் மற்ற அருளடையாளங்களும் தூய்மைமிகு நற்கருணையுடன் இணைந்திருக்கின்றன் அதனையே நாடி நிற்கின்றன.15 உண்மையில், திருச்சபையின் அருள் வளம் முழுவதும் தூய்மைமிகு நற்கருணையில் அடங்கியிருக்கிறது.16 அதாவது கிறிஸ்துவே நமது பஸ்காவும் உயிர்தரும் உணவும் ஆவார். கிறிஸ்துவே நமது பாஸ்காவும் உயிர்தரும் உணவும் ஆவார். தூயஆவியினால் உயிரூட்டப்பட்டதும் உயிரூட்டுவதுமான தமது உடலின் மூலம் அவரே மனிதர்களுக்கு உயிர் அளித்தார்; இவ்வாறு மனிதர்கள் தங்களையும் தங்கள் வேலைகளையும் படைப்புப் பொருள்கள் அனைத்தையும் அவரோடு சேர்ந்து ஒப்புகொடுக்குமாறு அழைக்கப்பட்டு ஆற்றுப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு, நற்செய்தி அறிவிப்புப் பணியின் ஊற்றாகவும் சிகரமாகவும் நற்கருணை விளங்குகிறது. இதனால்தான் புகுநிலைக் கிறிஸ்தவர்கள் நற்கருணையில் பங்குபெறப் படிப்படியாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்;; திருமுழுக்காலும் உறுதிப் பூசுதலாலும் ஏற்கெனவே குறிக்கப்பட்ட நம்பிக்கை கொண்டோர் நற்கருணை உட்கொள்வதன் மூலம் கிறிஸ்துவில் முற்றிலும் ஒன்றுக்கிறார்கள்.

ஆகையால், நற்கருணை வழிபாடு நம்பிக்கை கொண்டோர் கூட்டத்தின் நடுநயமாக விளங்குகின்றது; அக்கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர் திருப்பணியாளரே. திருப்பலியிலே தெய்வீகப் பலிப்பொருளானவரை இறைத் தந்தைக்கு ஒப்புக்கொடுக்கவும், அத்துடன் தங்கள் வாழ்வையும் காணிக்கையாக அளிக்கவும், திருப்பணியாளர்கள் அவர்களுக்குக் கற்பிக்கிறார்கள். நம்பிக்கை கொண்டோர் மனம் வருந்தி, ஒப்புரவு அருளடையாளம் வழியாகத் திருச்சபையிடம் தங்கள் பாவங்களை அறிக்கையிடுமாறு அருள்பணியாளராகிய கிறிஸ்துவின் மனநிலைக்கு ஏற்ப அவர்களைத் திருப்பணியாளர்கள் பயிற்றுவிக்கிறார்கள். இவ்வாறு மனம் மாறுங்கள் ஏனெனில் விண்ணராக நெருங்கி வந்துவிட்டது (மத் 4:17) என்ற ஆண்டவரின் சொற்களை மனதிற் கொண்டு நம்பிக்கை கொண்டோர் நாளுக்கு நாள் மேன்மேலும் அவர் மீது மனதைத் திருப்புவார்கள். அவ்விதமே திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களின் போது நம்பிக்கை கொண்டோர் உண்மையாகவே இறைவேண்டல் உணர்வோடு பங்குகொள்ளும் பொருட்டுத் திருப்பணியாளர்கள் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். ஒவ்வொருவரின் அருள்கொடைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப என்றும் அதிக நிறைவை நாடும் இறைவேண்டல் உணர்வைத் தங்கள் வாழ்வு முழுவதும் கொண்டிருக்க அவர்களை வழிநடத்துகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை நிலையின் கடமைகளை நிறைவேற்றவும், வளர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு ஏற்ற முறையில் நற்செய்தி அறிவுரைகளைக் கடைபிடிக்கவும் அவர்களைத் தூண்டுகிறார்கள். மேலும், பாடல்கள், புகழ்ப்பாக்கள் இவற்றைக்கொண்டு ஆண்டவருக்கு உளமார இசைபாடவும், இங்ஙனம் கடவுளும் தந்தையுமானவருக்கு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போது நன்றி கூறவும் மக்களுக்குத் திருப்பணியாளர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள்.17

திருப்பணியாளர்கள் திருப்புகழ்மாலையை வேண்டுவதன் வழியாக, நற்கருணை வழிபாட்டில் இடம் பெறும் புகழ்ச்சி, நன்றி ஆகியவற்றை நாள் முழுவதும் தொடரச் செய்கிறார்கள்; ஏனெனில் இப்புகழ்மாலை வழியாக, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் எல்லாருக்காகவும் ஏன், அனைத்துலகிற்காகவுமே திருச்சபையின் பெயரால் கடவுளை அவர்கள் மன்றாடுகிறார்கள்.

இறைவேண்டல் வீடு தூய்மையானதாக, இறைவேண்டல் செய்வதற்கும் திருச்சடங்குகளை நிறைவேற்றுவதற்கும் ஏற்றதாக அமையவேண்டும். ஏனெனில் அங்குதான் தூய்மைமிகு நற்கருணைகொண்டாடப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது; நம்பிக்கை கொண்டோர்கள் ஒன்று கூடுகிறார்கள். நமக்காகப் பலிபீடத்திலே ஒப்புகொடுக்கப்பட்ட நம் மீட்பராம் இறைமகனின் உடனிருப்பு நம்பிக்கை கொண்டோரின் உதவிக்காகவும் ஆறுதலுக்காகவும் வழிபடப்படுகிறது.18 தமது உடலின் உறுப்புகளுக்கு இறை வாழ்வைத் தம் மனித இயல்பின் வழியாக இடைறாது ஊட்டிக் கொண்டிருக்கும் கிறிஸ்துவின் கொடைக்கு நன்றி உள்ளத்தோடு பதில் அளிக்க அருள் பணியாளர்களும் நம்பிக்கை கொண்டோரும் அவ்விடத்திற்கு அழைக்கப்படுகிறார்கள்.19 தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட கிறிஸ்தவச் சமூகங்கள் தந்தை, மகன், தூய ஆவியான கடவுளைத் திருவழிபாடு வழியாக நாளுக்கு நாள் மிகச் சிறந்த முறையில் புகழுமாறு திருவழிபாடு பற்றிய அறிவையும் திருவழிபாட்டுக் கலையையும் திருப்பணியாளர்கள் முறையாகக் கற்றுத் தேர்வதிலே கவனம் செலுத்த வேண்டும்.

திருப்பணியாளர்கள் இறை மக்களின் தலைவர்கள் ஆவர்

6. தங்களக்குரிய அதிகாரத்தால் தலைவரும் மேய்ப்பருமான கிறிஸ்துவின் அலுவலை நிறைவேற்றும் திருப்பணியாளர்கள் ஆயரின் பெயரால் கடவுளின் குடும்பத்தை ஒற்றுமையை நாடும் ஒரு சதோதரத்துவமாக ஒன்று சேர்க்கிறார்கள்;; தூய ஆவியில் கிறிஸ்துவின் வழியாக இறைத் தந்தையிடம் அதை இட்டுச் செல்கிறார்கள்.20மற்ற பணிகளைப் போல் இப்பணியையும் நிறைபேற்றுவதற்குத் திருப்பணியாளர்களுக்கு ஞான அதிகாரம் அளிக்கப்படுகிறது; திருச்சபையின் வளர்ச்சிக்காகவே இவ்வதிகாரம் அளிக்கப்படுகிறது.21திருச்சபையைக் கட்டி எழுப்பும் வேளையில் திருப்பணியாளர்கள் ஆண்டவரின் மாதிரியைப் பினபற்றி எல்லாருடனும் சிறந்த மனிதப் பண்புடன் பழக வேண்டும். மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அன்று,22மாறாக கிறிஸ்தவக் கோட்பாடு, வாழ்க்கை ஆகியவற்றிற்குப் பொருந்தும் முறையில் திருப்பணியாளர்கள் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். அவர்களக்குக் கற்பிக்க வேண்டும். வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு;கடிந்து கொள், அறிவுரை கூறு, மிகுந்த கொறுமையோடு கற்றுக்கொடு(2 திமொ 4:2) என்ற திருத்தூதரின் சொற்களுக்கு இணங்க, அன்புக் குழந்தைகளைப் போல23 அவர்களை எச்சரிக்கவும் வேண்டும்.24

எனவே கிறிஸ்தவ நம்பிக்கையைக் கற்பிப்பவர்கள் என்ற முறையில் திருப்பணியாளர்கள் தாங்களாகவோ, பிறர் வழியாகவோ பின்வருவனவற்றை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறார்கள்; அதாவது, நம்பிக்கை கொண்டோர் ஒவ்வொருவரும் நற்செய்திக்கு ஏற்பத் தங்கள் சொந்த அழைத்தலில் வளரச் செய்ய வேண்டும். உண்மையான செயல்முறை அன்பிற்கும், கிறிஸ்து நமக்கு மீட்டுத்தந்த தன்னுரிமைக்கும் தூய ஆவியின் துணையால் அவர்களை இட்டுச் செல்ல வேண்டும்.25 சடங்குகள் அழகாக அமையலாம்; இயக்கங்கள் செழித்தோங்கலாம். எனினும், கிறிஸ்தவருக்கு உரிய முழு வளர்ச்சியைக் கொடுத்து அவர்களை உருவாக்கும் வகையில் இவை அமையவிட்டால் இவற்றால் விளையும் பயன் மிகச் சிறிது.26 இவ்வளர்ச்சியை மேம்படுத்தச் சிறியது பெரியது எனப் பாராமல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேவையானது என்ன, இறைத் திருவுளம் எது எனக் கிறிஸ்தவர்கள் அறிய இயலும் வகையிலே திருப்பணியாளர்கள் அவர்களுக்கு உதவி புரிய வேண்டும். மேலும் கிறிஸ்தவர்கள் தங்களுக்காக மட்டும் வாழக்கூடாது; புதிய கட்டளையாகிய அன்பின் நெறிகளின்படி தாங்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, அன்பினைப் பிறருக்கு வழங்க வேண்டும் என்றும் திருப்பணியாளர்கள் கிறிஸ்தவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும்.

திருப்பணியாளர்கள் எல்லாருக்கும் கடன்பட்டவர்கள் எனினும், ஏடைகளையும் வலுவற்றோரையும் தங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைக்கப்பட்டவர்களாக அவர்கள் கருத வேண்டும்; ஏனெனில், ஆண்டவரே தம்மை இவர்களில் ஒருவராகக் காண்பித்தார்,28இவர்களுக்கு நற்செய்தியைப் போதித்தலே மீட்பரின் பணிக்கு அடையாளமாகக் கூறப்பட்டிருக்கிறது29 இளைஞர்களையும், முக்கியமாக மணமக்களையும் பெற்றோரையும் திருப்பணியாளர்கள் தனிக் கவனத்துடன் கண்காணிக்கவேண்டும்; பெரும்பாலும் கடினமான தங்கள் வாழ்க்கையைக் கிறிஸ்தவ நெறியின்படி அதிக எளிதாகவும், முழுமையாகவும் நடத்த ஒருவர்க்கு ஒருவர் உதவும்படி நட்புக் கழகங்களில் அவர்கள் ஒன்று கூடுவது திகவும் விரும்பத்தக்கதாகும், ஆண் துறவியர் மற்றும் பெண் துறவியர் அனைவரும் ஆண்டவயரின் இல்லத்தில் சிறப்பிடம் வகிக்கின்றனர் என்பதையும் முழுத் திருச்சபையின் நலனை முன்னிட்டு இவர்களின் ஆன்ம வளர்ச்சி தனிக் கவனிப்புக்குர்யது என்ததையும் திருப்பணியாளர்கள் மிகுந்த அக்கறைக் காட்டவேண்டும் அவர்களைச் சற்தித்து ஆண்டவரில் அவர்களைத் தேற்ற வேண்டும்.30

நம்பிக்கை கொண்டோரைத் தன் ஆள்கள் என்னும் முறையில் கவனிப்பது மட்டும் அருள்பணியாளரின் அலுவல் அன்று; உண்மையான கிறிஸ்தவச் சமூகத்தை உருவாக்கும் பணியும் அவர்களுக்கே சிறப்பாக உரியது. இச்சமூகத்தை உணர்வை முறையாக வளர்;க்க வேண்டுமாயின், தலத் திருச்சபையை மட்டுமின்றி அனைத்துலகத் திருச்சபையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அந்தந்த இடத்துக் கிறிஸ்தவச் சமூகம் தனது சொந்த மக்களின் நலனை மட்டும் பேணி வளர்ப்பதோடு நின்றுவிடக்கூடாது; மாறாக, நற்செய்தி அறிவிக்கும் ஆவலால் நிறைந்து, எல்லா மக்களும் கிறிஸ்துவை அடைவதற்கான வழியைத் தயார் செய்யவும்வேண்டும். தனிப்பட்ட விதத்தில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள புகுநிலைக் கிறிஸ்தவர்களும் புதுக் கிறிஸ்தவர்களும் படிப்படியாகக் கிறிஸ்தவ வாழ்வை அறிந்து, அதன்படி வாழ இச்சமூகம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும்.

தூய்மைமிகு நற்கருணைக் கொண்டாட்டத்தைத் தனது அடிப்படையாகவும் மையமாகவும் கொண்டிராத எந்தச் கிறிஸ்தவச் சமூகம் வளர்ச்சி பெற முடியாது; ஏனெனில், சமூக உணர்வை உருவாக்கும் எல்லாப் பயிற்சியும் இதிலிருந்துதான் தொடங்க வேண்டும்.31 இக்கொண்டாட்டம் உண்மையானதும் முழுமையானதுமாக இருக்க வேண்டுமானால், பற்பல அன்புப் பணிகள் செய்யவும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யவும், நற்செய்திப் பணி புரியவும், பல வழிகளில் கிறிஸ்துவுக்குச் சான்று பகரவும் அது இட்டுச் செல்ல வேண்டும்.

மேலும் அன்பு, இறைவேண்டல், முன்மாதிரி, தன்னலம் துறத்தல் ஆகியவற்றால் கிறிஸ்துவிடம் இட்டுச் செல்;லப்படவேண்டிய மக்களுக்குத் திருச்சபைச் சமூகம் உண்மையான தாயாக விளங்குகிறது. ஏனெனில், கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்காதவருக்குக் கிறிஸ்துவையும் அவரது திருச்சபையையும் சென்றடையும் வழியைச் சுட்டிக் காட்டவும் அதனை எளிதாக்கவும், கிறிஸ்தவர்களுக்கு ஊக்கமும் ஊட்டமும் ஒளித்து ஆன்மிகப் போராட்டத்தில் அவர்களைத் திடப்படுத்தவும் ஏற்ற சிறந்த கருவியாக இத்திருச்சபைச் சமூகம் அமைகிறது.

கிறிஸ்தவச் சமூகத்தை அமைக்கும்போது திருப்பணியாளர்கள் ஒரு கருத்தியலுக்கோ மனிதரிடையில் காணப்படும் ஒரு பிரிவுக்கோ பணிந்து உழைப்பவர்களாக ஒருபோதும் இருப்பதில்லை; மாறாக, நற்செய்தியை அறிவிப்பவர்கள் திருச்சபையின் அருள்பணியாளர் என்னும் முறையில் கிறிஸ்துவின் உடலினுடைய அருள்நலை வளர்ச்சிக்காகத் தங்களையே செலவிடுகிறார்கள்.

2. திருப்பணியாளர்கள் மற்றவர்களுடன் கொண்டிருக்க
வேண்டிய உறவு

ஆயர்-திருப்பணியாளர்கள் உறவு

7. திருப்பபணியாளர்கள் எல்லாரும் ஆயர்களுடன் சேர்ந்து கிறிஸ்துவின் ஒரே திருப்பணிநிலையிலும் பணியிலும் பங்குகொள்கிறார்கள். இதனால் அவர்களின் திருநிலைப்பாடு, பணி ஆகியவற்றின் ஒற்றுமைக் காரணமாக அவர்கள் ஆயார் குழுவுடன் திருச்சபை ஆட்சி அடிப்படையிலான ஒன்றிப்பு கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.32 திருவழிபாட்டை ஆயர்களுடன் இணைந்து திருப்பணியாளர்கள் கொண்டாடுவதன் மூலம் இவ்வுறவைச் சில வேளைகளில் சிறந்த முறையில் வெளிப்படுத்துகிறார்கள்; நற்கருணைப் பலிக் கொண்டாட்டத்தின்போது ஆயர்களோடு தாங்கள் கொண்டுள்ள ஒன்றிப்பை வெளிப்படையாக அறிக்கையிடுகிறார்கள்.33 திருப்பணியாளர்களுக்கு தூய ஆவி கொடையாக அளிக்கப்பட்டுள்ளார். எனவே, ஆயர்கள் தங்கள் பணியிலும் இறைமக்களுக்குப் போதித்தல், அவர்களைத் தூய்மைப்படுத்தல், அருள் பணிபுரிதல் ஆகிய அலுவல்களிலும் திருப்பணியாளர்களை இன்றியமையா உதவியாளர்களாகவும், ஆலோசகர்களாகவும் கொள்ளவேண்டும்.34 பாலைநிலத்தில் மோசேக்கு அளிக்கப்பட்ட ஆவி முன்மதியுள்ள எழுபது மனிதர்களுக்கும் அளிக்கப்பட்டது.35 இவர்களின் உதவியைக் கொண்டு எண்ணற்ற மக்கள்திரளை அவர் எளிதாத ஆண்டு நடத்தினார்.36 இதைப்போல் தூய மனத்துடன் மக்களுக்கு உதவி அளிக்கவும், அவர்களை வழிநடத்தவம் தேலையான அருளையும் அறிவுலையும் தரும் ஆவியைத்37 திருப்பணியாளர்களாகத் திருநிலை பெறுவோர் மீது பொழியுமாறு செய்யப்படும் சிறப்பான திருநிலைப்பாட்டு வழிபாட்டில், ஆயருக்கும் திருப்பணியாளர்களுக்கும் உள்ள மேற்கூறிய உறவு தெளிவாகிறது. இதைத் திருவழிபாட்டு ஏடுகள் திருச்சபையின் பழங்காலம் தொட்டே வெளிப்படுத்துகின்றன. ஒரே திருப்பணிநிலையிலும் பணியிலும் ஒன்றித்திருப்பதால் ஆயர்கள் தங்கள் திருப்பணியாளர்களைச் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் கொள்ள வேண்டும்.38 தங்களின் ஆற்றலுக்கு ஏற்ப அவர்களின் உலக வாழ்க்கைக்கான நலனிலும் சிறப்பாக அருள்வாழ்வு நலனிலும் கருத்தாய் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கள் திருப்பணியாளர்கள் தூய வாழ்க்கை வாழுமாறு கவனித்துக் கொள்ளும் பளுவான பொறுப்பு ஆயர்களையே சார்ந்தது.39 எனவே, தங்கள் திருப்பணியாளர்களின் தொடர் பயிற்சியில் ஆயர்கள் பெரும் கவனம் செலுத்துவார்களாக.40 ஆயர்கள் திருப்பணியாளர்களுக்கு இன்முகத்துடன் செவிமடுக்க வேண்டும்; அருள்பணித் தேவைக்ள, மறைமாவட்ட நலன் முதலியவற்றைச் சார்ந்தவைகளில் அவர்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்; அவர்களுடன் கலந்து உரையாட வேண்டும். இவை பலன் அளிக்க, திருப்பணியாளர்களின் பிரதிநிதிகளான் குழுஅல்லது திருப்பணியாளர் மன்றத்தை ஏற்படுத்த வேண்டும்.41 இது இன்றைய சூழ்நிலைககளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறையில் அமைய வேண்டும். இவ்வமைப்பு தன் அறிவுரையால் மறைமாவட்ட ஆட்சியை பொறுத்த மட்டில் ஆயருக்குப் பயனுள்ள முறையில் உதவ முடியும்.

ஆயர்கள் திருப்பணி நிலையின் முழுமையைப் பெற்றுள்ளார்கள் என்பதைத் திருப்பணியாளர்கள் தங்கள் கண்முன் ;நி;றுத்தி, தலைமை அருள்பணியாளரான கிறிஸ்துவின் ;அதிகாரத்தை அவர்களில் கண்டு மதிக்க வேண்டும். தங்களுது உண்மையான அன்பாலும் கீழ்படிதலாலும் திருப்பணியாளர்கள் தங்கள் சொந்த ஆயரைச் சார்ந்து நிற்க வேண்டும்.43 தமது திருப்பணிநிலைத் திருப்பாராட்டினாலும் திருச்சபை அதிகாரப்பூர்வமாக அளிக்கம் பணியின் மூலமும் திருப்பணியாளர்கள் ஆயர் பணியில் பங்கு பெறுவதால் அபர்கள் ஒத்துழைப்பு மனப்பான்மை நிறைந்தவர்களாய்த் தங்கள் ஆயர்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள்.44

இன்று ஆயர்களோடு திருப்பணியாளர்கள் ஒன்றித்திருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் பல காரணங்களினால் திருத்தூது முயற்சிகளில் பல்வேறு வழிமுறைளைக் கையாளவும், அவை பங்கு, மறைமாவட்டம் போன்ற எல்லைகளைக் கடந்து செல்லவும் வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவே எந்தத் திருப்பணியாளரும் தமது எணியைத் தனியாகவோ, தமது சொந்த முயற்சியாலோ போதிய அளவுக்கு நிறைவேற்ற முடியாது; மந்ற திருப்பணியாளர்களுடன் சேர்ந்து தங்கள் ஆற்றலை ஒன்றுதிரட்h, திருச்சபை அதிகாரிகளின் வழிகாட்டலுக்கு ஏற்ப செய்வதால் மட்டுமே இப்பணியைப் போதிய அளவுக்கு நிறைவேற்ற முடியும்.

திருப்பணியாளர்களுக்குள் ஒத்துழைப்பும் உறவும்

8. தமது திருநிலப்பாட்டின் வழியகர் திருப்பணிநிலையை அடைந்த திருப்பணியாளர்கள் அனைவரும் அந்த அருளடையாளம் வழி எழும் சகோதரத்துவத்தால் தம்முள் நெருங்கிய மறையில் இணைக்கப்படுகின்றனர். சிறப்பாக எந்த மறைமாவட்டத்தில் தங்கள் ஆயருக்கு அடியில் பணி புரியயவிருக்கிறார்களோ, அந்த மறைமாவட்டத்தில் ஒரே திருப்பணியாளர்கள் கழுலை உருவாக்குகிறார்கள். வெவ்வேறு அலுவல்களைச் செய்தபோதிலும், அவர்கள் மக்களுக்காக ஆற்றுவது ஒரே திருப்பணிநிலை அலுவல்தான். திருப்பணியாளர்கள் பங்கைச் சார்ந்த அல்லது பங்குக்கு அப்பாற்ப்பட்ட பணியைப் புரியலாம்; அறிவியல் ஆராய்ச்சியில் அல்லது கல்வி புகட்டுவதில் ஈடுபட்டிருக்கலாம்; தகுந்த அதிகாரிகளின் ஒப்புதலோடு உகந்ததாக தோன்றும் இடங்களில் தாங்கள் தாங்கள் கைகளால் உழைப்பதன் வழியாகத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையில் பங்குகொள்ளலாம்; அல்லது வேறு எந்தத் திருத்தூதப் பணியையோ, திருத்தூதுப் பணியைச் சாந்தவற்றையோ செய்யலாம்; இவற்றில் எந்த அலுவலைச் செய்தாலும் ஒரே பணியில் ஒத்துழைக்கும்படியே எல்லாத் திருப்பணியாளர்களும் அனுப்பப்படுகிறார்கள். கிறிஸ்துவின் உடலைக் கட்டியெழுப்பும் ஒரே நோக்கத்திற்காகவே எல்லாரும் உழைக்கிறார்கள். இப்பணியில், முக்கியமாக அன்று பலவகைச் செயல்பாடுகளும் புதிய மாற்றங்களும் தேவைப்படுகின்றன. எனவே, எல்லத் திருப்பணியாளர்களும் மறைமாவட்டத் திருப்பணியாளர்களும், துறவறத் திருப்பணியாளர்களும் உண்மைக்குப் பணிபுரிவதில் உடனுழைப்பாளர்களாக என்றும் இருக்கும்படி45 ஒருவர்க்கு ஒருவர் உதவி புரிவது மிகவும் முக்கியமானது. திருப்பணியாளர்கள் ஒவ்வொருவரும் திருத்தூது அன்பு, பணி, சகோதரத்துவம் ஆகிய சிறந்த பிணைப்புகளால் மற்ற திருப்பணியாளர்களுடன் இணைக்கப்படுகிறார்கள். இற்த உண்மையைப் பழங்காலத்தொட்டே திருவழிபாடு குறித்துக்காட்டி வந்திருக்கிறது; கூடியிருக்கும் திருப்பணியாளர்கள், திருப்பணியாளருக்குரிய திருநிலைப்பாடு அளிக்கும் ஆயருடன் ஒன்றுசேர்ந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் மேல் கைகளை வைக்க அழைக்கப்படும்போது, ஒன்றுபட்ட உள்ளத்தோடு நற்கருணைப் பலியை இணைந்து நிறைவேற்றும்போதும் இவ்வுண்மை தெளிவாகிறது. திருப்பணியாளர்களுடன் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்விதம் தம்முடையவர்கள் அடையவேண்டும் என்று கிறிஸ்து விரும்பிய ஒன்றிப்பின் நிறைவு வெளிப்படுகிறது; இதனால் தந்தையினால் மகன் அனுப்பப்பட்டார் என்பதை உலகம் அறிந்து கொள்ளும்.46

ஆகையால் வயதில் முதிர்ந்த திருப்பணியாளர்கள் இளையதிருப்பணியாளர்களை உண்மையிலே தங்கள் சகோதரர்களாக ஏற்று அவர்கள் முதன்முறையாக மேற்கொள்ளும் அலுவல்களிலும் அவற்றின் சுமைகளிலும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். தங்களிடமிருந்து வேறுபட்ட கருத்துக் கொண்டிருந்தாலும் இளைய திருப்பணியாளர்களின் மனப்பான்மையைப் புரிந்து கொள்ள முயலவேண்டும். அவர்கள் முயற்சிகளுக்குக் கனிவாய் ஊக்கமளிக்க வேண்டும். தங்களிடமிருந்து வேறுபட்ட கருத்துக் கொண்டிருந்தாலும் இளைய திருப்பணியாளர்கள ;முதியதிருப்பணியாளர்களின் வயதையும், அனுபவத்தையும் மதித்து நடக்கவேண்டும். அருள்வாழ்வு தொடர்பான காரியங்களில் முதிய திருப்பணியாளர்களைக் கலந்தாலோசித்து அவர்களுடன் மனமுவந்து ஒத்துழைக்க வேண்டும்.

சகோதர உணர்வால் தூண்டப்பட்டுத் திருப்பணியாளர்கள் விருந்தோம்ப வேண்டும்;47 நற்செயல்களில் ஈடுபட்டு, தம் பொருள்களைப் பொதுவில் பகிர்ந்து கொள்ள வேண்டும்;48 பிணியாளர், துன்புறுவோர், வேலைப்புளுவால் வருந்துவோர், தனிமையில் தவிப்போர், நாடு கடத்தப்பட்டோர், துன்புறுத்தப்படுவோர் ஆகியோர்மேல் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.49 நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்துக்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள். (மாற் 6:31) என்று களைத்திருந்து திருத்தூதர்களுக்கு ஆண்டவர் விடுத்த அழைப்பை நினைவில் கொண்டுத் திருப்பணியாளர்கள் இளைப்பாற விருப்பமுடனும் மகிழ்ச்சியுடனும் ஒன்றுப்கூடுவார்களாக. மேலும் அருள் வாழ்விலும் அறிவுத் துறையிலும் ஒருவரிடமிருந்து ஒருவர் உதவிப்பெற்றுக் கொள்ளவும், தங்கள் பணியிலே அதிகப் பயனளிக்கும் முறையில் ஒத்துழைப்புப் பெறவும், தனிமையின் காரணமாகச் சில வேளைகளில் வரும் ஆபத்துகளைத் தவிர்க்கவும் திருப்பணியாளர்களுக்குள்ளே ஒருவித கூட்டு வாழ்வு அவர்களது வளர ஊக்கம் அளிக்கவேண்டும். இத்தகைய வாழ்வு அவர்களது வெவ்வேறு சொந்த தேவைகளுக்கும் அருள்பணித் தேவைகளுக்கும் ஏற்பர் பல வகைகளில் அமையக்கூடும். அதாவது, எங்கு முடியுமோ அங்கு அவர்கள் சேர்ந்து வாழலாம்; அல்லது ஒன்றாக உணவருந்தலாம்; குறைந்தது, குறப்பிட்ட காலங்களில் அடிக்கடி ஒன்று கூடலாம். மேலும், தகுதி வாய்ந்த திருச்சபை அதிகாரிகளால்ட ஒப்புக்கொள்ளப்பட்ட ஒழுங்குகளின் அடிப்படையில் அமைந்து வாழிக்கைமுறை, சகோதர உதவி இவற்றின் மூலம் திருப்பணியாளருக்குரிய அலுவலிலே அவர்களது தூய்மை நிலையை வளர்க்கும் கழகங்களைப் பெரிதும் மதித்துக் கவனத்துடன் வளர்க்க வேண்டும். இவ்விதம் திருப்பணியாளர் குழு முழுமைக்கும் சேலை புரிவதே இக்கழகங்களின் நோக்கம் ஆகும்.

இறுதியாக, திருப்பணிநிலையில் ஒன்றித்துள்ள காரணத்தால், சில இன்னல்களினால் துன்புறும் திருப்பணியாளர்கள் மட்டில் தங்களுக்குத் தனிப்பட்ட கடமைகள் உண்டு என்பதை திருப்பணியாளர்கள் உணர வேண்டும்; தகுந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி அளிக்கவேண்டும்; தேவை இருப்பின், விவேகத்துடன் அவர்களை எச்சரிக்கவும் வேண்டும். ஏதாவது ஒருவகையில் தவறிவிட்டவர்களோடு எப்பொழுதும் சகோதர அன்புடனும் பெருந்தன்மையுடனும் பழகவேண்டும்; அவர்களின் உண்மைச் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் எப்பொழுதும் நடந்துகொள்ளவேண்டும்.

பொதுநிலையினரோடுத் திருப்பணியாளர்களின் உறவு

9. புதிய ஏற்பாட்டின் திருப்பணிhளர்கள் திருப்பணிநிலை எனும் அருளடையாளத்தால் தந்தை, ஆசிரியர் என்னும் முறையில் மிகச் சிறந்ததும் இன்றியமையாததுமான தங்கள் அலுவலை, கடவுளின் மக்களுக்காகவே ஆற்றி வருகிறார்கள். என்றாலும், எல்லாக் கிறிஸ்தவ மக்களையும் போல் அவர்களும் ஆண்டவரின் சீடர்களே; அழைக்கும் கடவுளின் அருளால் இறையாட்சியின் பங்காளிகள் ஆகிறார்கள்.50ஏனெனில், மற்றவர்களைப்போல் அவர்களும் திருமுழுக்குத் தொட்டியிலே புதுப் பிறப்பு அடைந்துள்ளதால், தங்கள் சகோதரர் சகோதரிகள் நடுவில் சகோதரர்களாகவும் 51கிறிஸ்துவின் ஒரே உடலின் உறுப்புகளாகவும் இருக்கிறார்கள். அந்த உடலை வளர்ப்பது அனைவருக்கும் உரிய பொறுப்பு ஆகும்52.

ஆகவே, திருப்பணியாளர்கள் தங்கள் தலைமைப் பணியை ஆற்றும்போது தங்களுடைய நலன்களைத் தேடாமல் இயேசு கிறிஸ்துவைச் சார்ந்தவற்றைத்53 தேடுபவர்களாகச் செயல்பட வேண்டும்; பொதுநிலையினருடன் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். மனிதரிடையே தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் (மத்20:28) ஆண்டவரின் முன்மாதிரியைப் பின்பற்றித் திருப்பணியாளர்கள், மக்கள் நடுவில் வாழவேண்டும். பொதுநிலையினரின் மாண்பையும், திருச்சபையின் பணியில் அவர்களுக்குரிய பங்கையும் திருப்பணியாளர்கள் நேர்மையுடன் ஏற்று ஊக்குவிக்க வேண்டும். மண்ணகத்திலே ஒவ்வொருவருக்கும் உள்ள நியாயமான தன்னுரிமையை மதிக்க வேண்டும். பொதுநிலையினருக்கு விருப்பமுடன் செவிமடுத்து அவர்களின் விருப்பங்களைச் சகோதர வாஞ்சையோடு கவனிக்க வேண்டும்; மனித வாழ்வின் பல்வேறு துறைகளில் அவர்களுக்கு உள்ள பட்டறிவையும் தகுதியைம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுடன் சோந்ந்து காலத்தின் அறிகுறிகளை அறிந்தகொள்ள முடியும். ஆவிகளைத் தேர்ந்து தெளிந்து அவை கடவுளிடமிருந்து வருகின்றனவா என ஆராய்ந்து,54 பொதுநிலையினர் பெற்றுள்ள எளியனவாகவும் உயர்ந்தனவுமான பலதரப்பட்ட அருள்கொடைகளை நம்பிக்கை உணர்வுடன் கண்டறிந்து, மகிழ்வுடன் ஏற்று, அக்கறையுடன் பேண வேண்டும். கடவுளின் மற்ற கொடைகள் நம்பிக்கை கொண்டோரிடையே நிறையக் காணக்கிடக்கின்றன் இவற்றுள், பலலை உயர்ந்த அருள் வாழ்வுக்கு ஈர்க்கின்றன பல கொடைகள் தனிக் கவனத்துக் கு உரியவை. அதேபோல் திருச்சபையின் பணியைச் சார்ந்த செயல்பாடுகளைப் பொதுநிலையினரிடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்க வேண்டும்;;; அவர்களுக்குச் செயலாற்றத் தன்னுரிமையும் வாய்ப்பும் அளிப்பதுடன், தகுந்த வேளைகளில் தாங்களாகவே முன்வந்து சில வேலைகளை மேற்கொள்ளவும் அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.15

இறுதியாக, உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் தங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணும்படி (உரோ 12:10) எல்லாரையும் அன்பின் ஒன்றிப்புக்கு அழைத்துச் செல்வதற்கும்தான் திருப்பணியாளர்கள் பொதுநிலையினரிடையே வாழ்கிறார்கள். ஆகையால், நம்பிக்கை கொண்டோரின் கூட்டத்தில், தான் ஓர் அந்நியன் என்னும் உணர்வு யாருக்கு ஏற்படாதவாறு, மேற்பட்ட மனப்பான்மை கொண்டவர்களை ஒன்றுபடுத்துவது திருப்பணியாளர்களின் கடமையாகும். பொதுநலனைக் காப்பவர்கள் திருப்பணியாளர்கள்; அவர்கள் ஆயரின் பெயரால் இப்பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். அதே வேளையில் எந்தக் கொள்கையாலும் நம்பிக்கை கொண்டோர் அலைக்கழிக்கப்படாதபடி56 அசைக்க முடியாத உறுதியுடன் உண்மையைக் காப்பவர்களாகவும் திருப்பணியாளர்கள் விளங்க வேண்டும். அருளடையாளங்களை நாடும் பழக்கத்தை விட்டவர்களும், சிலவேளை கிறிஸ்தவ நம்பிக்கையையே கைவிட்டவர்களும் அவர்களுடைய தனிக்கவனத்திற்கு ஆளாகிறார்கள், நல்ல அருள்பணியாளர்களாய்த் திருப்பணியாளர்கள் அவர்களைத் தேடிச் செல்வதில் தவறக் கூடாது.

கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றிய ஒழங்குகளைக் கருத்தில் கொண்டு திருச்சபையின் நிறைவான உறலை நம்மோடு கொண்டிராச் சகோதரர், சகோதரிகளைத் திருப்பணியாளர்கள் மறந்துவிடக் கூடாது.57

மேலும் கிறிஸ்துவைத் தங்கள் மீட்பராக ஏற்றுக்கொள்ளாத எல்லாருமே தங்களிடையே ஒப்கடைக்கப்பட்டவர்கள் தாம் என்பதைத் திருப்பணியாளர்கள் நினைவில் கொள்வார்களாக.

தங்கள் திருப்பணியாளர்களுக்குத் தாங்கள் கடன்பட்டவர்கள் என்பதைக் கிறிஸ்தவ மக்கள் உணரவேண்டும்; ஆகவே பிள்ளைக்குரிய அன்போடு அவர்களைத் தந்தையராகவும் அருள்பணியாளராகவும் கருதி நடத்த வேண்டும்; அதேபோல் தங்கள் திருப்பணியாளர்களுடைய கவலைகளைப் பகிர்ந்து கொண்டு, இறைவேண்டலாலும் செயல்களாலும் கூடியவரை அவர்களுக்கு உதவவேண்டும்; இதன் பயனாகத் திருப்பணியாளர்கள் தடைகளைத் தக்கபடி முறியடித்து அதிகப் பயனளிக்கும் வகையில் தங்கள் கடமைகளை ஆற்ற முடியும்.58

3. திருப்பபணயாளர்களின் பங்கீடு திருப்பணிநிலைக்கான
அழைத்தலும்

அனைத்துத் திருச்சபையின் மட்டில் அக்கறை

10. திருப்பணிநிலைக்குரிய திருநிலைப்பாட்டின்போது திருப்பணியாளர்கள் பெற்ற அருள்கொடை வரையறுக்கப்பட்ட குறுகிய ஒருபணிக்காக அன்று; மாறாக, மிக விரிந்தும், உலகின் கடையெல்லை வரைக்கம் (திப 1:8) எட்டக்கூடிய அனைத்துலகப் பணியின் ஒரு பாகமாகவே அமைகிறத. கிறிஸ்துவின் திருப்பணிநிலையில் திருப்பணியாளர்கள் உண்மையாகவே பங்கு கொள்கிறார்கள்; இத்திருப்பணிநிலை எல்லா மக்களையும் எல்லாக் காலங்களையும் கருத்தில் கொண்டே ஏற்படுத்தப்பட்டது. இரத்த உறவு, நாடு, காலம் போன்ற எந்த வரையறையும் அதைக் கட்டுப்படுத்த முடியாது; இவ்வுண்மை ஏற்கெனவே மெல்கிசதேக்கின் உருவிலே மறைமுகமாக முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது.59 எனவே, எல்லாச் சபைகளைப் பற்றியும் தாங்கள் கவலை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதைத் திருப்பணியாளர்கள் நினைவில் கொள்வார்களாக. இதனால் தங்கள் திருச்சபைத் தலைவர் அனுமதிக்கும் போது அல்லது தூண்டுதல் அளிக்கும்போது, இறை அழைத்தல் மிகுந்த மறைமாவட்டங்களில் உள்ள திருப்பணியாளர்கள், திருப்பணியாளரின் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் பகுதிகளில், அல்லது பணிகளில் அல்லது நற்செய்தி அறிவிகிகப்படு; நாடுகளில் பணியாற்றத் தாங்களாகவே விருப்புடன் முன்வர வேண்டும்.

திருப்பணியாளர்களை மறைமாவட்டத்தில் இணைத்தல், அதிலிருந்து நீக்குதல் பற்றிய விதிகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். பழழைமையான இப்பழக்கத்தைக் கைவிட்டு விடாமல் அருள்பணியின் இன்றைய தேவைகளை நன்முறையில் நிறைவு செய்யும் வகையில் இதனைத் திருத்தியமைக்க வேண்டும். திருத்தூதப் பணியின் காரணமாகத் தேவைப்படும் இடங்களுக்குத் திருப்பணியாளர்களைச் சரியான முறையிலே பகிர்ந்தளிப்பதற்கு மட்டுமன்றி, வெவ்வேறு சமூகங்களுக்கென்றே உள்ள தனிப்பட்ட அருள்பணிகளை நிறைவேற்றுவதற்கும் உரிய செயல் முறைகளை எளிதாக்க வேண்டும்; இவ்வலுவல்கள் ஒரு நிலப்பகுதியில் அல்லது நாட்டில் அல்லது உலகின் எப்பகுதியிலும் செய்யப்படவேண்டியதாக இருக்கலாம். ஆகையால், இந்நோக்கத்திற்காக அனைத்துலகத் திருப்பணிப்ப பயிற்சியகங்கள், தனிப்பட்ட மறைமாவட்டங்கள், ஆள்மேல் அதிகாரம் கொண்ட உயர்நிலைப் அருள்பணியாளர் போன்று வேறு சில அமைப்புகளும் பயன்தரு முறையிலே நிறுவப்படலாம்; திருச்சபை முழுவதின் பொதுநலனை முன்னிட்டு, மேற்சொன்ன அமைப்புகளுக்குத் திருப்பணியாளர்கள் அனுப்பப்படலாம் அல்லது அவற்றோடு இணைக்கப்படலாம். இந்த அமைப்புக்ள ஒவ்வொன்றுக்குமான விதிமுறைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இதனால், திலத் திருச்சபைத் தலைவரின் உரிமைகள் ஒருபொழுதும் பாதிக்கப்படக் கூடாது.

எனினும், ஒரு புதிய நிலப்பகுதியின் மொழி, பழக்க வழக்கங்கள் இவற்றை இன்னும் திருப்பணியாளர்கள் நன்கு அறியாதிருந்தால்,இயன்ற அளவு தனியாக அவர்களை அங்கு அனுப்பாமல் கிறிஸ்துவினுடைய சீடர்களின் மாதிரியைப் பினபற்றி,60 ஒருவர் ஒருவர்க்கு உதவியாக இருக்கும் வண்ணம், அவர்களைக் குறைந்தது இருவர் இருவராகவோ, மூவர் மூவராகவோ அனுப்பவேண்டும். அவ்வாறே அவ்வாறே அவர்களின் அருள் வாழ்வு, உடல்நலம், உள நலம், உள நலம் பற்றிச் சிறப்பாகக் கவனம் எடுக்கவேண்டும்; பணிபுரியும் இடங்களுக்கு பணிக்கான சூழ்நிலைகளம் இயன்ற அளவு ஒவ்வொருவரின் சொந்த நிலைமைக்கு ஏற்றதாய் அமைந்திருக்கச் செய்ய வேண்டும். அதே நேரத்தில் பணி புரிவதற்கு ஒரு புதிய நாட்டை நாடிச் செல்லும் திருப்பணியாளர்கள், அந்நாட்டின் மொழியை மட்டுமின்றி, அம்மக்களின் தனிப்பட்ட உளப் பண்பையும் சமூகப் பண்பையும் சரிவர அறிந்து கொள்வதில் கவனம் செலுத்துவது மிகவும் நலம் பயக்கும்; ஏனெனில், இவ்வாறு அவர்கள் எம்மக்களுக்கு மனத் தாழ்மையுடன் பணிபுரிய விரும்புகிறார்களோ, அம்மக்களுடன் மிகச்சிறந்த முறையில் தொடர்புகொள்ள முடியும். அப்;;;போது நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும், பலரை கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். யூதரைப் போலானேன் (1 கொரி9:19-20) என்று தம்மைக் குறித்து கூற முடிந்த திருத்தூதர் பவுலின் மாதிரியை அவர்கள் பின்பற்ற முடியம்.

திருப்பணி அழைத்தலை வளர்த்தல்

11. தாம் தேர்ந்தெடுத்துத் தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட மக்கள்61 எப்பொழுதும், உலகம் முடியும் வரை, திருப்பணியாளர்களைக் கொண்டிருக்கும் வகையிலும், கிறிஸ்தவர்கள் ஒருபோதும் ஆயனில்லா ஆடுகளைப் போல் அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து போகாத விதத்திலும்62 நம் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமான63 கிறிஸ்து தமது திருச்சபையை நிறுவினார். கிறிஸ்துவின் இவ்விருப்பத்தை அறிந்த திருத்தூதர்கள் தூய ஆவியின் தூண்டுதலினால், மற்றவர்களுக்குக் கற்பிக்கும் திறமையுள்ளவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய (திமொ 2:2) பணியாளலைத் தேர்ந்துகொள்வது கடமை எனக் கொண்டார்கள். இக்கடமைத் திருப்பணிநிலையின் பணிப் பொறுப்போடு இணைந்த ஒன்றாகும். இதனால் இவ்வுலகில் கடவுளின் மக்களிடையே பணிபுரிவோரின் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாது என்னும் திருச்சபை முழுவதின் அக்கறையில் பங்கு கொள்கிறார்கள திருப்பணியாளர்கள். கப்பல் தலைவனுக்கும் பயணம் செய்வோர்க்கும் ஒரு பொது நோக்கு இருப்பதுபோல64 திருச்சபை தனது தெய்வீகப் பணியை நிறைவேற்றத் தேவையானத் திருப்பணியாளர்களை எப்போழுதும் கொண்டிருக்கும் பொருட்டு இடைவிடா இறைவேண்டலாலும் தங்களிடம் இருக்கும் வேறு எல்லா வழிகவகைகளாலும்65 வெவ்வேறு முறைகளிலே ஒத்துழைக்கவேண்டியது அவர்கள் கடமை என்பதைக் கிறிஸ்தவர் அனைவருக்கும் திருப்பணியாளர்கள் கற்றுக் கொடுக்கவேண்டும். ஆகையால் இறைவாக்குப் பணியாலும், சேவை மனப்பான்மை மற்றும் உண்மையான பாஸ்கா மகிழ்ச்சி பொங்கி வழியும் வாழ்வின் சான்றாலும் திருப்பணிநிலையின் மேன்மையையும் அதன் தேவையையும் நம்பிக்கை கொண்டோருக்கு உணர்த்துவதில் திருப்பணியாளர்கள் மிகவும் கருத்தாய் இருக்கவேண்டும். பின், திருப்பணியாளர்கள் மிகவும் கருத்தாய் இருக்கவேண்டும். பின் இப்பெரும் பணிக்குத் தகுதி உள்ளவர்கள் என்று தாங்கள் முன்மதியுடன் முடிவு செய்த இளைஞர் வயது வந்தோர்க்குத் தங்களது வசதிக் குறைவையும் தொல்லைகளையும் பொருட்படுத்தாது உதவி அளிப்பார்களாக் இதனால் இவர்கள் தங்களையே தக்க முறையில் தயார் செய்து கொள்ளவும் பின்னர் அக புறச் சுதந்திரத்தோடு, ஆயரால் அழைக்கப்படவும் வாய்ப்பு உண்டு இக்குறிகளை அடையும் முயற்சியில் கவனமும் விவேகமுமுள்ள அருள் வழிகாட்டல் மிகப்பெரு உதவியாகும். பெற்றோரும், ஆசிரியரும், மற்றும் சிறுவர், இளைஞர்களுடைய பயிற்சியில் எந்த வகையிலும் ஈடுபட்டிருப்பவர்களும், ஆண்டவர் தம் மக்கள்மேல் கொண்டுள்ள அக்கறையை உணர்ந்த திருச்சபையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும் (எசா6:8) என்று கூறிய இறைவாக்கினரைப் போன்று தாராள மனத்துடன் ஆண்டவரின் அழைத்தலுக்குப் பதிலிருக்கும் வண்ணம் அச்சிறுவர்களையும் இளைஞர்களையும் பயிற்றுவிக்க வேண்டும். ஆண்டவரின் அழைத்தல் வருங்காலத் திருப்பணியாளரின் செவிகளில் வழக்கத்துக்கு மாறான வகையில்தான் ஒலிக்கும் என எதிர்பார்க்கக் கூடாது. மாறாக வகையில்தான் ஒலிக்கும் என எதிர்பார்க்கக் கூடாது. மாறாக முன்மதியோடு செயல்படும் கிறிஸ்தவர்களுக்குக் கடவுளின் திருவுளத்தை நாளும் வெளிப்படுத்தும் அடையாளங்களிலிருந்து அக்குரலைக் கவனத்துடன் கண்டறிந்து தீர்மானிக்க வேண்டும். இவ்வடையாளங்களை நன்க ஈய்ந்தறிய வேண்டியது திருப்பணியாளர்களின் பொறுப்பாகும்.66ஷஷ

மறைமாவட்ட அளவிலோ நாட்டளவிலோ இறை அழைத்தலை ஊக்குவிக்கும் அமைப்புகளைத் திருப்பணியாளர்கள் ஆதரிக்குமாறு பெரிதும் பரிந்துரைக்கப்படுகின்றது.67தாங்கள் மறையுரை ஆற்றும்போதும், மறைக்கல்வி புகட்டும்போதும், பத்திரிக்கைகளில் எழும்போதும் அனைத்துலகத் திருச்சபையினுடையவும் தலத் திருச்கபையினுடையவும் தேவைகளை அவர்கள் தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டும் திருப்பணிநிலைக்குரிய பணியின் பொருளையும் அதன் மேன்மைகளையும் விளக்கமாக எடுத்து இயம்ப வேண்டும்; அதாவது இப்பணியில் வருத்தும் சுமைகளோடு பெரும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கின்றது; சிறப்பாக, திருச்சபைத் தந்தையர் கூறுவதுபோல், இதிலே கிறிஸ்துவுக்கு அன்பின் தலைசிறந்த சான்று பகரமுடியும்68 என்பதைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

இயல் 3
திருப்பணியாளர்களின் வாழ்வு
1. நிறைவு காணத் திருப்பணியாளர்களுக்கு அழைப்பு

நிறைவு காண்பதற்கான பொறுப்பு

12. திருப்பணிநிலை எனும் அருளடையாளத்தின் வழியில் திருப்பணியாளர்கள் திருப்பணியாளராகிய கிறிஸ்துவை ஒத்திருக்கின்றார்கள் இதனால் தலையாக விளங்கும் கிறிஸ்துவின் பணியாளர்களாகவும், ஆயர் குழுவுடன் ஒத்துழைப்பவர்களாகவும் இருந்து, திருச்சபையாகிய அவரது முழு உடலையும் அவர்கள் கட்டியெழுப்பி வளர்ச்சியுறச் செய்கிறார்கள். கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் அனைவரையும் போலத் திருப்பணியாளர்களும் திருமுழுக்கு அர்ப்பணித்தின்போது உயர்ந்த ஓர் அழைத்தல், அருள் ஆகியவற்றையும் அடையாளமாகவும் கொடையாகவும் பெற்றுள்ளார்கள். ஆதலால் உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல் நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்(மத்5:48) என்ற கிறிஸ்துவின் கூற்றிற்கொப்ப, மனித வலுவின்மையிலும் அவர்கள் நிறைவை அடையமுடியும், டையவும் வேண்டும். இந்நிறைவை அடையத் திருப்பணியாளர்கள் தனிப்பட்ட விதத்திலே கடமைப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், திருப்பணிநிலையைத் ஏற்றுக் கொள்ளும்போது அவர்கள் கடவுளுக்காகத் திருப்பணிநிலைத் திருநிலைப்பாட்டின்வழி ஒரு புதுவிதத்திலே அர்ச்சிக்கப்பட்டு. நிலையான திருப்பணியாளராம் கிறிஸ்துவின் உயிருள்ள கருவிகளாக ஆக்கப்படுகிறார்கள். இதனால், மனித சமுதாயம் முழுவதையும் விண்ணக ஆற்றலினால் சீராக்கிய அவருடைய வியத்தகு பணியைத் திருப்பணியாளர்கள் காலமெல்லாம் செய்ய இயலும்.2 ஒவ்வொரு திருப்பணியாளரும் தமக்குரிய வகையிலே கிறிஸ்துவின் பதிலாளாக இருப்பதாலி தனிப்பட்டதேரி அருளாலும் நிரப்பப்படுகிறார். இவ்வலறு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கும் கடவுளின் மக்கள் அனைவருக்குமே ஊழியம் புரிவதன் மூலம் கிறிஸ்துவுக்குப் பதிலாகச் செயல்படும் திருப்பணியாளர், தம் நிறைவை மிகத் தகுந்த முறையிலே பெற இயலும்; இவ்விதமே, நமக்காகத் தூயவர் கபடமற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரிக்கப்பட்டவர்(எபி7:26) எனத் தலைமைத் திருப்பணியாளராக ஏற்படுத்தப்பட்ட கிறிஸ்துவின் தூய்மை மனித உடலின் வலுவின்மையைக் குணமாக்க இயலும்.

தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு, அதாவது திருநிலைப்படுத்தப்பட்டு கிறிஸ்து இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டர்3இவர் நம்மை எல்லக் நெறி கேடுகளிலிருந்தும் மீட்டு நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்(தீத் 2:14) இவ்வாறு துன்பங்கள் வழியாக மாட்சி பெற்றார்.4 இதுபோலவே, தூய ஆவியின் அருள் பொழிவால் திருநிலைப்படுத்தப்பட்டு, கிறிஸ்துவால் அனுப்பப்பட்ட திருப்பணியாளாகளும், தங்களுடைய ஊனியல்பின் செயல்களை ஒறுத்து, மனிதருக்குப் பணி புரிய தங்களை முழுவதிலும் கையளிப்பார், இவ்வாறு முதிர்ச்சி பெற்ற மனிதர்களாவதற்குக்5 கிறிஸ்துவில் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தூய்மையில் அவர்கள் வளர இயலும்.

ஆகவே, ஆவியின் திருப்பணியையும் நீதியின் திருப்பணியையும்6ஆற்றும் திருப்பணியாளர்கள், தங்களை உய்வித்து வழிநடத்துபவரான கிறிஸ்துவின் ஆவிக்குப் பணிந்திருப்பார்களேயானால் அருள் வாழ்விலே உறுதிப்படுத்தப்படுவார்கள். ஆயரோடும் மற்ற திருப்பணியாளர்களோடும் இணைந்து அவர்கள் தங்கள் முழுப் பணியையு; நிறைவேற்றும் போதும், அன்றாடத் தூய செயல்களை அவர்கள் ஆற்றும்போதும் தங்கள் வாழ்வின் நிறைவை நோக்கிச் செல்கிறார்கள். திருப்பணியாளர்களின் தூய்மைநிலையே அவர்கள் தங்கள் பணியை பயனுள்ள முறையில் நிறைவேற்றப் பெரிதும் உதவுகிறது. கடவுளின் அருளால் தகுதிறில்லாப் பணியாளர் வழியாய்க் கூட மீட்புப்பணி நிறைவேற்றப்பட முடியும். எனினும், சாதரணமாகத் தூய ஆவியின் தூண்டுதலுக்கும் வழிநடத்தலுக்கும் பணிந்து இருப்பவர் மூலமே வியப்புக்குரியவைகளைக் கடவுள் செய்ய விரும்புகிறார். இவ்வாறு, கிறிஸ்துவோடு அவர்கள் கொண்டுள்ள நெருங்கிய தொடர்பினாலும், அவர்களுடைய தூய வாழ்வினாலும் திருத்தூதரோடு சேர்ந்து, இனி வாழ்பவன் நானல்ல் கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் (கலா 2:20) என அவர்கள் கூற இயலும்.

திருச்சபை உள்ளுரப் புதுப்பித்தல், அனைத்துலகிற்கும் நற்செய்தி அறிவித்தல், உலகோடு உரையாடுதல் போன்ற அருள்பணி சார்ந்த தன் நோக்கங்களை இத்திருச்சங்கம் நிறைவேற்ற விரும்புகிறது. ஆகவே, அது எல்லாத் திருப்பணியாளர்களுக்கும் ஆர்வத்தோடு அறிவுறுத்துவதாவது: திருச்சபை ஆதரித்துப் போற்றும் ஏற்ற வழிகளைக் கைக்கொண்டு,7 மிக உயர்ந்த தூய்மைநிலையை அடைய எப்பொழுதும் அவர்கள் முயலவேண்டும்; இதனால் கடவுளின் மக்கள் அனைவருக்காகவும் ஊழியம் புரிவதிலே நாளடைவில் மிகத் தகுந்த கருவிகளாக அவர்கள் உருப்பெறுவார்கள்.

திருப்பணிநிலையின் முப்பணி தூய்மைநிலையை வளர்க்கிறது

13. கிறிஸ்துவின் ஆவியில் உண்மையாக அயராத தங்கள் பணியை ஆற்றுங்கால், திருப்பணியாளர்கள் தங்களுக்கே உரிய முறையிலே தூய்மைநிலையை அடைகிறார்கள்.

இறைவாக்குப் பணியாளர்களாக இருப்பதால் திருப்பணியாளர்கள் நாளும் கடவுளின் வார்த்தையை வாசிக்கிறார்கள்;கேட்கிறார்கள்; மற்றவர்களுக்கும் அதைக் கற்றுக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அதே வேளையில் அதைத் தங்கள் உள்ளத்திலும் ஏற்க முயல்வார்களானால், நாளடைவில் ஆண்டவரின் மிக நிறைவான சீடர்களாக விளற்குவார்கள். இவ்வாறு, திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதியதற்கு ஏற்ப இவை எல்லாவற்றிலும் கவனம் செலுத்து. இவைகளிலேயே ஈடுபட்டிரு. அப்பொழுது நீ அடைந்துள்ள வளர்ச்சி எல்லோருக்கும் தெளிவாகும். உன்னைப் பற்றியும், உன் போதனையைப் பற்றியும் கருத்தாயிரு; அவைகளில் நிலைத்திரு; இவ்வாறு செய்தால் நீயும் மீட்படைவாய்; உனக்குச் செவி சாய்ப்போரும் மீட்படைவர்(1திமொ4:15-16). ஏனெனில், தாங்கள் ஆழ்ந்து தியானித்தவற்றை மற்றவர்களுக்கு மிகத் தகுந்த முறையிலே அளிக்க8 அவர்கள் முயற்சி செய்யும் பொழுது, அவர்களே கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தையும்(எபே3:8) கடவுளின் பல வகைப்பட்ட ஞானத்தையும்9 பற்றி அழ்ந்த அறிவு பெறுவார்கள். ஆண்டவரே உள்ளங்களைத் திறப்பவர்10 என்பதையும் இத்ததைய உயர்நிலை தங்களிடமிருந்து அன்று, கடவுளின் வல்லமையியலிருந்துதான் வருகிறது11 என்பதையும் தங்கள் கண்முன் கொண்டு, இறைவாக்கைப் போதிக்கும் செயலில் ஆசிரியராகிய கிறிஸ்துவோடு மிக நெருங்கிய முறையில் ஒன்றிப்பார்கள் அவருடைய ஆவியால் வழிநடத்தப்படுவார்கள். இவ்வாறு கிறிஸ்துவோடு ஒன்றித்துள்ள திருப்பணியாளர்கள் கடவுளின் அன்பிலே பங்கு கொள்கிறார்கள்: ஊழுழியாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இவ்வன்பின் இறைத்திட்டம்12 கிறிஸ்துவின் வெளிப்படுத்தப்பட்டது.

தூயசடங்குகளை ஆற்றுபவர் என்ற முறையிலே, முக்கியமாகத் திருப்பலியின் மூலம், மனிதர்களைத் தூயவர்களாக்கத் தம்மையே பலியாகக் கொடுத்தக் கிறிஸ்துவின் பதிலாள்களாகத் திருப்பணியாளர்கள் செயல்படுகின்றனர். ஆகவே, தாங்கள் கையாளுபவற்றைப் பின்பற்றுமாறு திருப்பணியாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்; அதாவது, ஆண்டவரின் இறப்பை நினைவுபடுத்தும் மறை நிகழ்ச்சியை நிறைவேற்றும் அவர்கள் தங்கள் உடலின் உறுப்புகள் அனைத்தையும் தீய பழக்கங்களும் பாவ நாட்டங்களுக்கும் இறந்தவை ஆக்க வேண்டும்.13 நற்கருணைப் பலியாகிய மறை நிகழ்ச்சியில் நமது மீட்பின் அலுவல் தொடர்ந்து நடைபெறுகிறது; இந்தப் பலியில் தான் திருப்பணியாளர்களும் சிறப்புப் பணியை நிறைவேற்றப்படவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. கிறிஸ்தவ மக்கள் அதில் பங்கு கொள்ள முடியாவிட்டாலும்கூட ,இப்பலி கிறிஸ்துவின் செயலாகவும் திருச்சபையின் செயலாகவும் விளங்குகிறது.15 இவ்வாறு திருப்பணியாளராகிய கிறிஸ்துவின் செயலோடு தங்களையே முழுமையாகக் கையளிக்கிறார்கள். அவருடைய உடலால் ஊட்டம் பெறும்போது, தம்மை நம்புகிறவர்களுக்குத் தம்மையே உணவாகத் தருகின்ற கிறிஸ்துவின் அன்பில் தங்கள் உள்ளத்தால் பங்கு கொள்கிறார்கள். இதைப்போல், அருளடையாளங்களை வழங்கும்போது கிறிஸ்துவின் நோக்கத்தோடும் அன்போடும் சிறப்பான விதத்தில் ஒன்றிக்கிறார்கள். திருப்புகழ்மாலைவழி இறைவேண்டல் செய்யும் போது திருப்பணியாளர்கள் திருச்சபைக்குக் குரல் கொடுக்கிறார்கள்; இத்திருச்சபை அவாகளக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழும்(எபி 7:25) கிறிஸ்துவுடன் ஒன்றித்து மனித இனம் முழுவதன் சார்பில் தொடர்ந்து இறை வேண்டல் செய்து வருகின்றது.

இறைமக்களின் தலைவர்களும் அருள்பணியாளர்களும் என்னும் முறையில் திருப்பணியாளர்கள் தங்கள் ஆடுகளுக்காகத் தம் உயிரையும் கொடுப்பதற்கு16 நல்ல ஆயர் கிறிஸ்துவின் அன்பினால் தூண்டப்படுகிறார்கள். இவ்வாறு, இக்காலத்தில் கூடத் தங்கள் உயிரைக் கொடுக்க முன்வந்த திருப்பணியாளர்களின் மாhதிரியை பின்பற்றி, மிக உயர்ந்த தியாகம் செய்வதற்குக் கூட ஆயத்தமாய் இருக்க அவர்கள் தூண்டப்படுகிறார்கள். திருப்பணியாளர்கள் நம்பிக்கையைக் கற்பிப்பவர்கள்; மேலும் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு; ஏனெனில் கிறிஸ்து இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார்.(எபி10:19) என்பதால் திருப்பணியாளர்கள் நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடு (எபி10:22) கடவுளை அணுகிச் செல்வார்கள். தங்கள் கிறிஸ்தவர்களைக் குறித்து உறுதியான எதிர்நோக்கு கொள்கிறார்கள்.17 இவ்வாறு கடவுள் தங்களுக்கு அளிக்கும் ஊக்கத்தின் மூலம் அவர்களுக்கு எத்தகைய வேதனையுறுவோர்க்கும் ஊக்கமளித்து ஆறுதல் அளிக்க முடிகிறது.18 திருச்சபைச் சமூகத்தின் தலைவர்கள் என்னும் முறையில், திருப்பணியாளர்கள் அருள்பணிக்கு ஏற்ற தவ வாழ்வை மேற்கொள்ள வேண்டும்; தமது வசதியைத் துறக்க வேண்டும்; தமக்குப் பயன் தருவதை நாடாமல் பலரும் மீட்பு அடையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாட வேண்டும்.19 அருள்பணியை நிறைவாகச் செய்வதில் என்றும் அவர்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும்; எங்குத் தேவைப்படுகிறதோ அங்கு அவர்கற் அருள்பணியிலே புதிய வழிகளைப் பின்பற்றத் தயாராய் இருத்தல் வேண்டும்; அப்படிப் பின்பற்றும் பொழுது, தாம் விரும்பிய திசையில் வீசுகின்ற அன்பின் ஆவியால்20 அவர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.

திருப்பணியாளர்களின் வாழ்வில் ஒற்றுமை

14.இன்றைய உலகிலே மனிதர் ஆற்றவேண்டிய கடமைகள் பல் அஃதோடு அவர்களை வருத்தும் பிரச்சனைகளும் பல் அவைகளுக்கு அவர்கள் விலைவில் தீர்வு காணவேண்டும். இதனால் பல வேளைகளில் அவர்களுடைய ஆற்றல் பல வழிகளில் சிதறடிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. தங்கள் பணியின் பற்பல கடமைகளில் ஈடுபட்டு, வெவ்வேறு திசைகளில் தங்கள் எண்ணங்களைச் சிதறவிட்டிருக்கும் திருப்பணியாளர்கள், தங்கள் அக வாழ்வையும் புற அலுவல்களையும் எவ்வாறு இணைப்பதென்று கவலையோடு கேட்க முடியும். புற அலுவல்களை மட்டும் செய்துகொண்டிருப்பதோ அல்லது பக்தி முயற்சிகளில் மட்டுமே ஈடுபடுவதோ எவ்வளவுதான் இந்த இணைப்புக்கு உதவினாலும், வாழ்வின் ஒருங்கிணைப்பை உருவாக்க முடியாது. தங்கள் பணியை நிறைவேற்றுவதில் ஆணடவராகிய கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் மூலமே அவர்கள் இந்த வாழ்வின் ஒருங்கிணைப்பை உண்டாக்க முடியும்; தம்மை அனுப்பினவரின் திருவுளத்தின்படி நடந்து, அவரது வேலையைச் செய்து முடிப்பதே கிறிஸ்துவின் உணவாய் இருந்தது.21

உண்மையில், தம் தந்தையின் அதே உள்ளத்தைத் திருச்சபை வழியாக உலகில் தொடாந்து நிறைவேற்றுதற்காகவே கிறிஸ்து தம் பணியாளர்கள் வழியாகச் செயல்படுகிறார். அவரே திருப்பணியாளர்கள் வாழிவில் இந்த ஒற்றுமையின் ஊற்றும் தொடக்கமுமாக விளங்குகிறார். எனவே,திருப்பணியாளர்கள் விண்ணகத் தந்தையின் திருவுளத்தை ஏற்பதிலும் தங்கள் கண்காணிப்பில் விடப்பட்டிருக்கும் மக்களுக்குத்22 தங்களையே முழுவதும் அர்ப்பணிப்பதிலும் கிறிஸ்துவோடு ஒன்றிக்கும் பொழுது, தங்கள் வாழ்வில் இந்த ஒற்றுமையை அடைகிறார்கள். இவ்வாறு நல்ல ஆயரின் பணியையே செய்யும் திருப்பணியாளர்கள், அன்பின் அருள்பணியை நிறைவேற்றுவதனாலேயே, தங்கள் வாழ்வையும் செயல்களையும் இணைக்கும் திருப்பணியாளருக்குரிய தூய்மை நிலையைப் பெறுவார்கள். சிறப்பாக, நற்கருணைப் பலியிலிருந்துதான் திருப்பணியாளர்களின் இந்த அருள்பணியன்பு23 பெருக்கெடுத்தோடுகிறது; ஆகவே நற்கருணைப்பலி திருப்பணியாளருடைய வாழ்வின் முழுமையாகவும் அடிப்படையாகவும் விளங்குகிறது; இவ்வாறு, பீடத்தில் நிறைவேற்றப்படுவதைத் திருப்பணியாளர்கள் தம் வாழ்வோடுத் தொடர்புபடுத்த முயலவேண்டும். கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சியைத் திருப்பணியாளர்கள் இறைவேண்டல் மூலம் நாளும் ஆழ்ந்துணராவிடில் இதுநிகழவியலாது.

தங்கள் வாழ்வின் ஒருங்கிணைப்பை நடைமுறையில் கண்டறியத் திருப்பணியாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளும் கடவுளின் திருவுளத்திற்கு அமைந்துள்ளனவா எனத் தேர்ந்து தெளியவேண்டும்.24அதாவது, தங்கள் முயற்சிகள் யாவும் திருச்சபையின் நற்செய்தி அறிவிப்புப் பணியைச் சார்ந்த வழிமுறைகளோடு ஒத்திருச்சின்றனவா என்று பார்க்க வேண்டும். கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள பற்றுறுதியை அவருடைய திருச்சபையிடம் நாம் கொண்டுள்ள பற்றுறுதியிலிருந்து பிரிக்க முடியாது. ஆகவே திருப்பணியாளர்கள் தங்கள் முயற்சிகளை வீணாக்காமல்25தஙகள் ஆயரோடும் சதோதரக் திருப்பணியாளர்களோடும் ஒன்றித்து உழைக்கவேண்டும் என்பதே அருள்பணியன்பு விடுவிக்கும் கோரிக்கை ஆகும். இப்படிச் செயல்படும்பொழுது, திருச்கபைப் பணி ஒற்றுமையிலே தங்கள் வாழ்வின் ஒற்றுமையை அவர்கள் காண்பார்கள்; இங்ஙனம் தங்கள் ஆண்டவரோடு ஒன்றுபட்டு, அவர் மூலம் தூய ஆவியின் வழி தந்தையோடும் ஒன்றுபடுவார்கள்; இவ்வாறு அவர்கள் நிறைவான ஆறுதலும், பொங்கி வழியும் மகிழ்ச்சியும் அடைவார்கள்.26

2. திருப்பணியாளர்களுடைய வாழ்வில் தனிப்பட்ட அருள்நெறித்
தேவைகள்

மனத்தாழ்மையும் கீழ்படிதலும்

15. திருப்பணியாளர்களின் பணியில் மிகத் தேவையான நற்பண்புகளுள் ஒன்றாக எண்ணப்பட வேண்டியது. அவர்கள் தங்கள் விருப்பத்தை அன்று தங்களை அனுப்பினவருடைய திருவுளத்தை27 அறிய என்றும் தயாராய் இருக்கும் மனப்பான்மை ஆகும். கடவுளிடமிருந்து வரும் பணி எல்லா மனித ஆற்றலையும் ஞானத்தையும் கடந்தது; இப்பணியை நிறைவேற்றவே திருப்பணியாளர்கள் தூய ஆவியினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.28 ஏனெனில் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார்(1கொரி1:27) எனவே, கிறிஸ்துவின் உண்மைப் பணியாளர் தம்முடைய வலுவின்மையை உணர்ந்தவராய் கடவுளுக்கு உகந்தது எது என ஆராய்ந்துணர்ந்து,29 மனத்தாழ்மையோடு உழைக்கிறார் மேலும் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர் போல்,30 எல்லா மனிதரையும் மீட்க விரும்பும் கடவுளுடைய திருவுளத்தின்படியே அவர் எல்லாவற்றிலும் வழிநடத்தப்படகின்றார். தமக்கு வகுக்கப்பட்ட அலுவலிலும், தம் வாழ்வின் பற்பல நிகழ்ச்சிகளிலும்,தம்மிடம் கடவுளால் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்காகவும் தாழ்ச்சியோடு உழைப்பதன் மூலம் அன்றாடச் சூழ்நிலைகளில் கடவுளின் திருவுளத்தை அவர் அறிந்து நிறைவேற்ற முடிகிறது.

திருப்பணிநிலையினரின் பணி என்பது திருச்சபையின் பணி அன்றி வேறு அல்ல. ஆதலால் திருச்சபை என்னும் முழு உடலோடும் திருச்சபை ஆட்சி ஒன்றிப்பைக் கொண்டிருந்தால்தான் இப்பணியை அவர்கள் நிறைவேற்ற முடியும். இவ்வாறு ஒன்றித்துச்செயலாற்றும்போது, கடவுளுக்கும் தங்கள் சகோதரர் சகோதரிகளுக்கும் தொண்டு புரியம் பொருட்டு, கீழ்படிதல் மூலம் அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தைத் துறக்க முன்வர வேண்டும்; தலைமை ஆயர், தங்கள் ஆயர், மற்ற தலைவர்கள் ஆகியோர் ஆணையிடுபவற்றையும் பரிந்துரைப்பவற்றையும் திருப்பணியாளர்கள் நம்பிக்கை உணர்வோடு ஏற்று நிறைவேற்ற வேண்டும்; தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட எந்த அலுவலிலும் அது மிகத் தாழ்ந்ததாகவோ, எளிமையானதாகவோ இருந்தால் கூட முழுமனத்துடன் ஈடுபாடு கொண்டு, தங்களை மழுவதும் மனமுவந்து அளித்திட வேண்டும்; 31 மேற்கூறிய விதத்தில் செயல்படுவதற்கு அருள்பணியன்பு அவர்களைத் தூண்டுகிறது. இவ்வாறு, பணிலே தங்களுக்குச் சகோதராய் விளங்குவர்களோடும், முக்கியமாக ஆண்டவர் தம் திருச்சபையில் காணக்கூடிய தலைவர்களாக ஏற்படுத்தியுள்ளவர்களோடும் கொண்டிருக்கவேண்டிய ஒன்றிப்பை திருப்பணியாளர்கள் காத்து உறுதிப்படுத்துவர்; இறுக்கிப் பிணைக்கும் தசைநார்களால் வளர்ச்சியுறும்ட கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்புவர். இத்தகைய கீழ்படிதல் வழியாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரி முதிர்ச்சியான சுதந்திரத்தை அடைய முடியும். தங்கள் பணியை நிறைவேற்றும் வேளையில் அன்பினால் உந்தப்பட்டு, திருச்சபையின் அதிமிக நலனுக்காகப் புதிய வழிகளைத் திருப்பணியாளர்கள் முன்மதியுடன் தேர்ந்தெடுக்கும் பொழுது, தாங்கள் தொடங்கிய முயற்சிகளை நம்பிக்கையோடு தெரியப்படுத்த வேண்டும்; தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களின் தேவைகளை அவ்வப்போது விளக்கிச் சொல்லவும் வேண்டும்; மேற்கூறியவை எல்லாம் கீழ்படிதலின் இயல்பிலிருந்தே பிறக்கும் கோரிக்கைகள் ஆகும். எனினும், கடவுளின் திருச்சபையை ஆண்டு நடத்துவதில் முக்கிய பொறுப்பு கொண்டவர்களின் தீர்மானத்திற்குக் கீழ்படிய என்றும் தயாராய் இருக்க வேண்டும்.

இத்தகைய மனத்தாழ்மை வழியாகவும் பொறுப்புணர்வுள்ள, மனமார்ந்த கீழ்படிதல் வழியாகவும் திருப்பணியாளர்கள் தங்களையே கிறிஸ்துவுக்கு ஒத்தவர்கள் ஆக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்யும்பொழுது, தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து (பிலி2:7-8) கிறிஸ்து இயேசுவின் மனநிலையை அவர்கள் தங்களுடையதாக்கிக் கொள்கிறார்கள். ஏனெனில், ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் அனைவரும். பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்படியாமையால் அனைவரும் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்(உரோ 5;:19) எனத் திருத்தூதர் சான்று பகர்வது போன்று, கீழ்படிதல் மூலம்தான் கிறிஸ்து, ஆதாமின் கீழ்ப்படியாமையை வென்று நம்மை மீட்டார்.

மணத்துறவு

16. விண்ணரசை முன்னிட்டு ஏற்றுக்கொள்ளப்படும் நிறைவான, நிரந்தரமான நுகர்வடக்கத்தை ஆண்டவராகிய கிறிஸ்து போற்றுகிறார்.23 கடந்த காலங்களிலும், ஏன் இக்காலத்தில் கூடக் கிறிஸ்தவ மக்களுள் பலர் இதனை விரும்பி ஏற்று, இதனை விரும்பி ஏற்று, புகழத்தக்க முறையிலே கடைப்பிடித்து வருகின்றனர். இத்ததைய நுகர்வடக்கம் திருப்பணிநிலை வாழ்வுக்குத் தனிப்பட்ட முறையில் பொருளுடைத்தது எனத் திருச்சபை என்றும் கருத் வந்துள்ளது. ஏனெனில் நுகர்வடக்கம் அருள்பணியன்பின் அடையாளமாகவும், அதே வேளையில் அதன் தூண்டுகோலாகவும் உலகிலே அருள் நெறி வளமைகக்குச்ட சிறப்பான ஊற்றாகவும் விளங்குகிறது.34 திருப்பணிநிலை தன்னிலே இத்தகைய நிறைவான, நிரந்தரமான நுகர்வடக்கத்தைக் கோருவதில்லை என்னும் உண்மை தொடக்கக் காலத் திருச்சபையின் வழக்கத்திலிருந்தும்,35 கீழைச் சபைகளில் ஆயர்கள் அனைவரும் மற்றும் அருள்கொடையால் மணத்துறவைத் தேர்ந்தெடுத்த பலரும் நீங்கலாக, மணம் புரிந்த திருப்பணியாளர்களும் பெரிதும் மதித்துப் போற்றப்படுகிறார்கள். திருச்சபையில் கடைபிடிக்கப்பட்டுவரும் மணத்துறவைப் போற்றும் இத்திருச்சங்கம், கீழைச்சபைகளில் சட்டப்படி பின்பற்றப்பட்டுவரும் வேறுபட்ட ஒழுங்குகளை மாற்ற விரும்பவில்லை. திருமணத்துக்குப் பின்னர் திருப்பணிநிலையை ஏற்றதோர் அனைவரும் தங்கள் தூய அழைத்தலில் நிலைத்து நின்று, தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மக்களுக்காகத் தொடர்ந்து தங்கள் வாழ்வையே முழுமையாகவும் தாராள மனத்தோடும் அர்ப்பணிக்குமாறு36 திருச்சங்கம் அன்புடன் அவர்களை வேண்டுகிறது.

மணத்துறவு பல வகைகளில் திருப்பணிநிலைக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. ஏனெனில் திருப்பணிநிலை சார்ந்த பணி முழுவதும் புது மனித குலத்திற்கான ஊழியத்திற்கே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது: சாவின்மேல் வெற்றி கொண்ட கிறிஸ்து தம் ஆவியின் வழியாக உலகில் எழுப்புகின்ற அம்மனித குலம் இரத்தத்தினாலோ, உடல் இச்சையினாலோ, ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல் கடவுளாலேயே உருவாகிறது. விண்ணரசை முன்னிட்டு ஏற்றுக்கொள்ளப்படும் கன்னிமை அல்லது மணத்துறவு வழியாக,37திருப்பணியாளர்கள் புதிய சிறந்த முறையிலே கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணிக்கப்படுகிறார்கள்; பிளவுபடாத உளத்தோடு எளிதில் அவரைப் பறிறிக் கொள்கிறார்கள். அவரில், அவர் வழியாக, கடவுளுக்கும் மனிதர்க்கும் ஊழியம் செய்ய அதிகத் தன்னுரிமையோடு தங்களையே அர்ப்பணிக்கிறார்கள்; அவருடைய ஆட்சிக்கும், விண்ணக மறுபிறப்புக்கும் மிகவும் ஏற்ற முறையிலே பணி புரிகிறார்hகள்: இவ்வாறு கிறிஸ்துவில் பலருக்குத் தந்தையாய்த் திகழ அதிகத் தகுதி பெறுகிறார்கள். அம்முறையில், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிக்கே தங்களை முழுமனதுடன் அர்ப்பணிக்க விரும்புவதாக அவர்கள் மனிதர்முன் ஏற்றுக்கொள்கிறார்கள்: அதாவது, ஒரே மணமகனுக்கு நம்பிககை கொண்டோலைக் கையளித்து, அவர்களைக் கற்புள்ள கன்னியராக கிறிஸ்துமுன் நிறுத்துவதன் மூலம்,39 கடவுளால் ஏற்படுத்தப்பட்டதும் வருங்காலத்தில் முழுமையாக வெளிப்பட இருப்பதுமான் அறிவுக்கு எட்டாத ஒரு திருமணத்தைக் திருப்பணியாளர்கள் நினைவுபடுத்துகிறார்கள்: அத்திருமணத்தில் திருச்சபை கிறிஸ்துவைத் தன் ஒரே மணமகனாகக் கொண்டிருக்கும்.40 மேலும், வரவிருக்கும் உலகின் உயிருள்ள அடையாளமாகத் திருப்பணியாளர்கள் விளங்குகிறார்கள். நம்பிக்கையினாலும் இப்பொழுதே நம்மிடையே இருக்கம் அந்த வருங்கால உலகில், இறந்து உயிர்த்தவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை.41

கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சியையும் அவருடைய பணியையும் அடிப்படையாகக் கொண்டஇக்காரணங்களுக்காக, திருப்பணியாளர்களு;ககு மணத்துறவு முதலில் பரிந்துரைக்கப்பட்டது; பின்னர் இலத்தீன் திருச்சபையில், திருப்பணிநிலைக்கு உயர்த்தப்பட வேண்டியவர் அனைவர் மீதும் இது சட்டமாகத் திணிக்கப்பட்டது. திருப்பணியாளர்கள், திருநிலைக்கென்று குறிக்கப்பட்டவர்களைப் பொறுத்த மட்டில் இத்திருச்சங்கம் மீண்டும் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து அதனை உறுதிப்படுத்துகிறது; திருப்பணிநிலை என்னும் அருளடையாளத்தின் மூலம் கிறிஸ்துவின் திருப்பணிநிலையிலே பங்கு பெறுபவர்களும், ஏன் திருச்சபை முழுவதுமே இக்கொடையைப் பெற மனத் தாழ்மையோடும் ஆர்வத்தோடும் கடவுளை வேண்டுகிறவரையில், புதிய ஏற்பாட்டின் திருப்பணிநிலையோடு மிகவும் பொருந்திப் போகின்ற மணத்துறவு என்னம் கொடையைத் தந்தை தாராளமாக அருள்வார் என் ஆவியாரில் அது நம்பிக்கை கொள்கிறத. திருச்சங்கம் திருப்பணியாளர்கள் அனைவருக்கும் தரும் அறிவுலையாவது: கடவுளின் அருளில் நம்பிக்கை கொண்டு கிறிஸ்தவின் மாதிரியைப் பின்பறிறித் தூய மணத்துறவைச் சுதந்திர மனத்தோடு ஏற்றுக்கொண்ட திருப்பணியாளர்கள், அதில் பெருந்தன்மையோடும் முழு இதயத்தோடும் பற்றுக்கொண்டு, உண்மையாகவே அதில் நிலைத்துநிற்கும் பொருட்டு, தந்தை தங்களுக்கு அளித்துதும், ஆண்டவர் வெளிப்படையாகப் போற்றியதுமான42 மணத்துறவைத் தலைசிறந்த கொடைiயாகக் கருதவேண்டும்; இது குறித்துக் காட்டுவதும் இதில் நிறைவேறுவதுமான பெரும் மறை நிகழ்ச்சிகளை அவர்கள் தங்கள் கண்முன் கொண்டிருக்க வேண்டும். நிறைவான நுகர்வடக்கத்தை இன்றைய உலகில் கடைப்பிடிப்பது இயலாது என மக்கள் பலரும் எந்த அளவுக்கு இன்று கருதுகிறார்களோ, அந்த அளவுக்குத் திருப்பணியாளர்கள் மனத் தாழ்மையோடும் விடா முயற்சியோடும்; நிலைத்து நிற்கும் பண்பு எனும் கொடையைப் பெறத் திருச்சபையுடன் சேர்ந்து மன்றாட வேண்டும்; இவ்வாறு இறைவேண்டல் செய்வோர்க்கு இரு என்றுமே மறுக்கப்பட்டதில்லை; அதே நேரத்தில், எல்லாருக்குமே கிடைக்கக்கூடிய இயல்புக்கு மேற்பட்டதும் இயல்புக்கு உட்பட்டதுமான எல்ல உதவிகளையும் அவர்கள் பயன்படுத்த வேண்டும். மேலும், திருச்சபை தன் பட்டறிவால் நல்லவை எனக் கண்டவையும், இந்றைய உலகிற்கு எவ்விதத்திலும் குறையாது எக்காலத்திலும் போல தேவைப்படுகின்றனவுமான வழிகளை, முக்கியமாக ஒறுத்தல் வாழ்வின் வழிகளைப் பின்பற்றவதைத் திருப்பணியாளர்கள் விட்டுவிடக் கூடாது. ஆகவே, திருப்பணிநிலை- மணத்துறவு என்னும் விலைமதிக்கப்படாத இக்கொடையை உளமார மதிக்க வேண்டும் எனத் திருப்பணியாளர்களை மட்டுமல்ல,நம்பிக்கை கொண்டோர் அனைவலையும் இத்திருச்சங்ம் கேட்டுக்கொள்கிறது; மேலும் கடவுள் இக்கொடையைத் தம் திருச்சபையின் மேல் என்றும் அதிகமதிகமாக அருளும்படி எல்லோரும் அவரிடம் வேண்டுமாறும் கேட்டுக்கொள்கிறது.

ஏழ்மையும் உலகப் பொருள்களும்

17. நண்பர்கள், சகோதரர்கள் என்னும் முறையிலே திருப்பணியாளர்கள் தங்களுக்குள்ளும், மற்ற மனிதர்களோடும், உறவாடும்பொழுது, மனித மதிப்பீடுகளை வளர்க்கவும் படைப்புப் பொருள்களைக் கடவுளின் கொடைகளாக மதிக்கவும் கற்றுக்கொள்வர். உலகில் வாழும் அவர்கள் நம் ஆண்டவரும் போதகருமான கிறிஸ்து கூறியதற்கு இணங்க, தங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்லர்43 என்பதை என்றும் உணர்வார்களாக. ஆகவே, இவ்வுலகச் செல்வத்தைப் பணன்படுத்தும்போது அவர்கள் அவற்றில்முழுமையாக ஈடுபடாமல் இருக்க வேண்டும்.44 இவ்வாறு மித மிஞ்சிய எல்லக் கவைலைகளிலிருந்தும் அவர்களைப் பணிவுள்ளவர்களாக ஆக்குவதுமான தன்னுரிமையை அவர்கள் அடைவார்கள்.இந்தத் தன்னுரிமையிலும் பணிவிலும்தான் உலகோடும், உலகப்பொருள்களோடும் அவர்கள் கொள்ளவேண்டிய சரியான் உறவைத் தேர்ந்து தெளியும் ஞான அறிவு வறர்கிறது. இந்த உறவு திருப்பணியாளர்களுக்கு மிகவும் அவசியம்; ஏனெனில், திருச்சபையின் பணி உலகின் மத்தியில்தான் நிறைவேறுகிறது. அஃதோடுகூட, படைப்புப் பொருள்களும் மனிதரின் ஆளுமை வளர்ச்சிக்கு மிகமிகத் தேலை. ஆகவே, தாங்கள் முறையாக வாழ்வதற்கு வானகத் தந்தை தங்களுக்கு அளித்துள்ள அனைத்திற்காகவும் திருப்பணியாளர்கள் நன்றிக்கடன்பட்டவர்களாய் இருக்க வேண்டும் கடவுளின் திருவுளத்துக்கு ஏற்ப உலகப் பொருள்களை அவர்கள் சரியாகப் பயன்படுத்துவதின் பொருட்டும், தங்களது பணிக்கு இடையூறாய் இருப்பவற்தை; தள்ளிவடும் பொருட்டும், தங்கள் வாழ்விலே எதிர்கொள்ளும் அனைத்தையம் நம்பிக்கை ஒளியிலே அவர்கள் தேர்ந்து தெளிய வேண்டும்.

திருப்பணியாளாகள் ஆண்டவரைத் தங்கள் பங்காகவும் உரிமைச் சொத்தாகவும்(எண் 18:20)கொண்டிருக்கிறார்கள்; எனவே, ஆண்டவராகிய கிறிஸ்துவின் போதனையம் திருச்சபையின் ஒழுங்குகளும் எந்த நோக்கங்களுக்காக இவ்வுலகப் பொருள்களைக் கையாள அவர்களை அனுமதிக்கின்றனவோ, அந்த நோக்கங்களுக்காக மட்டுமே அவற்றை அவர்கள் பயன்படுத்த வேண்டும்.

கூடியவரையில் திறமைமிக்க பொதுநிலையினரின் துணைகொண்டு, திருச்சபைச் சொத்துக்கள் என் முறையாக அழைக்கப்படுவனவற்றை தன்மைக்கும், திருச்சபைச் சட்டமுறைகளுக்கும் தக்கவாறு திருப்பணியாளர்கள் நிhவகிக்க வேண்டும். எந்நோக்கங்களைச் செயல்படுத்துவதற்காகத் திருச்சபை இவ்வுலகச் சொத்துக்களை உடைமையாயர்க் கொண்டிருத்தல் முறையோ, அந்நோக்கங்களுக்காக மட்டுமே திருப்பணியாளர்கள் திருச்சபைச் சொத்துக்களைப் பயன்படுத்த வேண்டும். அந்நோக்கங்களாவன: இறைவழிபாட்டை ஏற்பாடு செய்தல், திருப்பணியாளர் நேர்மையான முறையில் வாழத் தேவையானவற்றைப் பெறுதல்; திருத்தூதப் பணிகளை அல்லது பிறரன்பு;ப பணிகளை, முக்கியமாக வறியவர்களுக்கான பணிகளை ஆற்றுதல்.45 ஆயர்களைப் போலவே திருப்பணியாளர்களம், திருச்சபையின் அலுவல்களை நிறைவேற்றும் போது கிடைக்கும் ஊதியத்தை, தங்கள் ஏற்புடைய வாழ்க்கை வாழத் தேவையானவற்றைப் பெறுவதற்கும் முக்கியமாகப் பயன்படுத்த வேண்டும். இக்காரியத்தில் தனிப்பட்ட சட்டங்கள் இருப்பின், அவை மாற்றமுறாது இருக்கட்டும்46 தேவைக்குப் பின் எஞ்சியவற்றைத் திருச்சபையின் நலனுக்காகவும் அன்புப் பணிகளுக்காகவும் செலவிட அவர்கள் முன்வர வேண்டும். எனவே, திருச்சபை அலுவல்களை ஊதியம் பெறும் வாய்ப்பாக இவர்கள் கருதக் கூடாது.47 ஆகவே திருப்பணியாளர்கள் செல்வத்திலே தங்கள் மனத்தைச் செலுத்தக் கூடாது; 48 வாணிவத் தோற்றம் கொண்ட அனைத்தையும் கவனத்தோடு தவிர்க்கவேண்டும்.

திருப்பணியாளர்கள் ஏழ்மையைத் தங்களே விரும்பி ஏற்க அழைக்கப்படுகிறார்கள் இந்த ஏழ்மையால் திருப்பணியாளர்கள் கிறிஸ்துவை அதிகத் தெளிவாக ஒத்திருப்பார்கள்; திருப்பணியை ஆற்றுவதில் அதிக ஆர்வம் கொள்வர்கள். ஏனெனில் தம் ஏழ்மையால் நாம் செல்வராகும் பொருட்டுச் செல்வராய் இருந்த கிறிஸ்து நமக்காக ஏழை ஆனார்.49 வளமையிலும் வறுமையிலும் வாழத் தெரிந்திருந்த திருகததூதர்கள் கடவுளின் இலவசச் கொடை இலவசமாகவே அளிக்கப்பட வேணடும்50 என்பதற்குத் தங்கள் முன்மாதிரியால் சான்று பகர்ந்தார்கள்.51 திருச்சபையின் தொடக்கக் கால வரலாற்றில் அனைவரும் தங்கள் உடமைகள் எல்லாவற்றையும் கொதுவாய்க் கொண்டிருந்தனர்: ஆங்கு இவ்வழக்கம் பெரிது; புகழப்பட்டது; 52 இதேபோல், ஓர் அளவிற்குப் பொருள்களைப் பொதுவாகப் பயன்படுத்துதல் அருள்பணியின்பிற்குப் பெரிதும் துணைபுரியும்; இத்தகைய வாழ்க்கை முறை வாயிலாக, கிறிஸ்து போற்றிய ஏழ்மை உணர்வைத் திருப்பணியாளர்கள் புகழ்ச்சிக்குரிய முறையிலே வாழ்ந்து காட்ட முடியும்.

நிறைவாழ்வளிப்பவர் மீது அருள்பொழிவு செய்து, எளியோர்க்கு ந்றசெய்தி சொல்ல அனுப்பி வைத்த ஆண்டவரின் ஆவியால்53 திருப்பணியாளர்களும் ஆயர்களும் வழிநடத்தப்படவேண்டும். இவ்வாறு, எளியோரைத் தங்களிடமிருந்து எந்த விதத்திலும் பிரித்து வைக்கும் எல்லாவற்றையும் அவர்கள் அகற்றவேண்டும். ஒருவருக்கும் அடைபட்ட வீடாகத் தோன்றாமலும், மிகத் தாழ்ந்தவர்கூட வந்து போகப் பயப்படாத அளவிலும் அவர்கள் தங்கள் இல்லங்களை அமைத்தக்கொள்வார்களாக.

3.திருப்பணியாளர்களின் வாழ்விற்கான உதவிகள்

அருள் வாழ்வை வளர்க்க வழிவகைகள்

18. வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் திருப்பணியாளர்கள் கிறிஸ்துவுடன் ஒன்றித்து இருப்பதற்கு, தங்கள் பணியை உணர்ந்து நிறைவேற்றுவதோடு இன்னும் பல வழிவகைகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன: அவைகளில் சில பொதுவானவை, சில தனிப்பட்டவை; சில பழமையானவை; சில புதியவை. இவற்றையெல்லாம் கடவுளின் மக்களிடம் தூண்டத் தூய ஆவி ஒரு போதும் தவறுவதில்லை. திருச்சபையும் தனது உறுப்பினரின் தூய்மைநிலைக்காக இவற்றைப் பரிந்துரைக்கிறது; சில வேளைகளில் இவற்றைக் கடைபிடிக்கக் கட்டளையும் இடுகிறது.54 அருள்வாழ்வுக்கான எல்லா உதவிகளிலும் சிறந்து விளங்குவன விவிலியப் பந்தியும் நற்கருணைப் பந்தியுமே. இவ்விரு பந்திகளுலும்தான் கிறிஸ்தவர்கள் இறைவாக்கால் ஊட்டி வளர்க்கப்டுகிறார்கள்55 திருப்பணியாளர்கள் தங்களுக்கே உரிய தூய்மைநிலையை அடைய விடாமுயற்சியுடன் அடிக்கடி இவற்றில் பங்கு கொள்வது எவ்வளவு இன்றியமையாதது என்பது வெள்ளிடை மலை.

அருளடையாள அருளை வழங்கும் பணியாளர்கள் என்ற முறையில், தாங்களே பயனள்ள வகையில் அருளடையாளங்களைப் பெறுவதன் மூலம், குறிப்பாக ஒப்புரவு அருளடையாளத்தில் அடிக்கடி பங்கு கொள்வதன் மூலம், நிறைவழிவளிப்பரும் அருள் பணியாளருமான கிறிஸ்துவுடன் திருப்பணியாளர்கள் நெருங்கி ஒன்றிக்கிறார்கள். ஏனெனில், ஒவ்வொரு நாளும் ஆன்ம சோதனை மூலம் தங்களையே தயாரிப்பதன் வழியாக, இரக்கம் நிறைந்த தந்தையை அதிகமாக அன்பு செய்வதற்குத் தேவையான மனமாற்றத்தை இந்த ஒப்புரபு அருளடையாளம் பெரிதும் வளர்க்கும். ஞான வாசகத்தினால் உரம் பெற்ற நம்பிக்கை ஒளியைக் கொண்டு, கடவுளின் திருவுளத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களையும் கடவுளுடைய அருளின் தூண்டுதல்களையும் தங்கள் வாழ்க்கைஙில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர்கள் நுணுக்கமாகக் கண்டறிய முடியும்; இவ்விதம் தூய ஆவியில் பணிவுள்ளவர்களாக மாற முடியும். இத்தகைய பணிவுக்கு ஒரு வியத்தகு எடுத்துக்காட்டாகத் தூய கன்னிமரியா என்றும் துலங்குகிறார்கள்; தூய ஆவியினால் வழி நடத்தப்பட்ட அவர், மனிதர்களின் மீட்புத் திட்டத்திற்குத் தம்மையே முற்றிலும் அர்ப்பணித்தார்.56 நித்திய தலைமைப் பணியாளரின் தாயும், திருத்தூதர்களின் அரசியும், தங்கள் பணியில் உதவுபசருமான அவலைத் திருப்பணியாளர்கள் பிள்ளைக்குரிய பக்தியுடனும் வணக்கத்துடனம் போற்றி அன்பு செய்யக்கடவார்கள்.

தங்கள் பணியை உண்மையுடன் நிறைவேற்றும் பொருட்டு, தூய்மை மிகு நற்கருணையைச் சந்திப்பதன் மூலமும் தனிப்பட்ட முறையில் ஆராதனை செலுத்துவதன் மூலமும், நாள்தோறும் கிறிஸ்து ஆண்டவருடன் உரையாடுவதில் அவர்கள் அக்கறை காட்டவேண்டும். விருப்புடன் தியானங்கள் செய்வதோடு, அருள் வழிகாட்டலையும் அவர்கள் பெரிதும் மதிக்க வேண்டும். பல வழிகளில் சிறப்பாக, சீரிய ஒப்புதல் பெற்றுள்ள தியான இறைவேண்டலாலும், தாங்களாகவே தேர்ந்து கொள்ளும் பல்வேறு இறைவேண்டல் முறைகளாலும் திருப்பணியாளர்கள் உண்மையான ஆராதனைக்குரிய மனநிலையைத் தேடவும், அதற்காகக் கடவுளிடம் விடாது மன்றாடவும் வேண்டும். இந்த மனநிலையால் அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பபட்ட மக்களோடு சேர்ந்து புதிய உடன்படிக்கையின் இணைப்பாளரான கிறிஸ்துவுடன் நெருங்கிய முறையில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்; இதனால் அவர்கள் கடவுளின் பிள்ளைகளாக, அப்பா தந்தையே(உரோ8:15) எனக் கூப்பிட முடியும்.

அருள்பணி இயலும் படிப்பும்

19. திருப்பணியாளர் திருநிலைப்பாட்டின்சடங்கன் போது, திருப்பணியாளர்கள் அறிவில் முதிர்ந்தவர்களாய் விளங்குமாறும், அவர்கள் போதிக்கும் உண்மைகள் இறைமக்களுக்கு அருள் மருந்தாக57 இருக்குமாறு திருப்பணியாளர்களுக்குத் தலைமைத் திருப்பணியாளர் அறிவுறுத்துகிறார். ஆகவே திருப்பணியாளரின் அறிவு தூய்மையானதாக இருக்க வேண்டும்; ஏனெனில், அது தூய நோக்கத்திற்காகத் தூய ஊற்றிலிருந்து உருவாகிறது. எனவே, முக்கியமாக விவிலியத்தை வாசிப்பதாலும் தியானிப்பதாலும் இந்த அறிவை அவர்கள் பெறுகிறார்கள்.58 அஃதுடன் தூய திருச்சபைத் தந்தையர், மறைவல்லுநர் ஆகியோரின் நூல்களைப் படிப்பதாலும் திருச்சபை மரபு பற்றிய ஏடுகளை வாசிப்பதாலும் மேற்சொன்ன அறிவு பலன்தருமுறையில் வளர்ச்சி பெறுகிறது. மேலும் இக்கால மக்கள் எழுப்பும் கேள்விகளுக்குத் திருப்பணியாளர்கள் தக்க பதில் அளிக்கும் பொருட்டு, திருச்சபையின் ஆசிரியத்தினுடையவும், சிறப்பாக பொதுச் சங்கங்களுடையவும் உரோமைத் தலைமை ஆயருடையவம் ஏடுகளை அவர்கள் நன்கு கற்க வேண்டும்; சிறந்தவர்களென ஏற்றுக்கொள்ளப்பட்ட,தலை சிறந்த இறையியல் அறிஞர்களின் எழுத்துப் படையல்களையும் வாசிக்க வேண்டும்.

இன்று மனிதப் பண்பாடும் சமயம் சார்ந்த அறிவுத் துறைகளும் புதுப்புது வளர்ச்சி கண்டுவருவதால், இறை உண்மைகள் உலக நிகழ்வுகள் பற்றிய தங்கள் அறிவை ஏற்ற விதத்திலும் எப்பொழுதும் திருப்பணியாளர்கள் நிறைவு செய்துகொண்டே இருக்க வேண்டும்; இதனால் தங்கள் காலத்தவருடன் அதிகப் பொரத்தமான முறையில் உரையாடுவதற்கு அவர்கள் தங்களையே தயார் செய்துகொள்வார்கள்.திருப்பணியாளர்கள் தொடர்ந்து படிக்கவும், நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும் திருத்தூதப் பணிக்கும் உதவுகின்ற வழிமுறைகளை அதிக பயனுள்ள விதத்தில் கற்றுக்கொள்ளவும் ஏற்ற உதவிகளை அளிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இடத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ற தொடர் பயிற்சி அளித்தல் அல்லது கருத்தரங்குகளை நடத்துதல், அருள்பணி பயிற்சி நடுநிலையங்களை அமைத்தல், நூல் நிலையங்களை நிறுவுதல், தேர்ச்சி பெற்றவர்கள் கல்வித் திட்டத்தைத் தகுந்த முறையில் இயக்குதல் போன்றவை மேற்கூறிய உதவிகளாகும். மேலும் தங்கள் திருப்பணியாளர்கள் எல்லாரும் அருள்பணி முறைகளையும் இறையியலையும் முழுமையாகக் கற்றறியவும், அருள் வாழிவைத் திடப்படுத்தக் கொள்ளவும், அவர்களின் திருத்தூது கொள்ளவும்59வாய்ப்பளக்கும் தொடர் பயிறிசியில் பங்குகொள்வதற்குத் தகுந்த வழிமுறையைக் கண்டுபடிக்கும் பொருட்டு, ஆயர்கள் தனித்தனியாகவோ ஒன்று சேர்ந்தோ ஆராய்தல் வேண்டும். இவ்வித தொடர் பயிற்சிகள் குறிப்பிட்ட காலங்களில் முக்கியமாகத் திருப்பணி திருநிலைப்பாட்டுக்குச் சில ஆண்டுகளுக்குப்பின் அளிக்கப்பட வேண்டும்60. இவைகளும் மற்ற தகுந்த ஒதவிகளும் புதுப்பங்குத் திருப்பணியாளர்களுக்கும், புதிய அருள் பணி அலுலலை மேற்கொள்வோருக்கும் ;அல்லது பிற மறைமாவட்டத்துக்கோ, நாட்டுக்கோ அனுப்பப்படுவோர்க்கும் தனிப்பட்ட கவனத்துடன் அளிக்கப்படவேண்டும்.

இறுதியாக. திரப்பணியாளர்களுக்குள் சிலர் ஆழ்ந்த இறையியல் அறிவைப் பெறத் தங்களையே அர்ப்பணிக்குமாறு ஆயர்கள் கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் திருப்பணியாளர் குழுவினலைப் பயிற்றுவிகக்கத் தகுதியான ஆசிரியர்களுக்கும் ஒருபோதும் குறைவிருக்காது; இவர்களிடமிருந்து மற்ற திருப்பணியாளர்களும் நம்பிக்கை கொண்டோரும் தங்களுக்குத் தேவையான போதனைகளைக் கற்றுக்கொள்ள உதவி பெறலாம்; இவ்விதம் சமயம் சார்ந்த அறிவுத் துறைகளில் வளமான முன்னேற்றம் காணலாம். இம்முன்னேற்றம் திருச்சபைக்கு மிகவும் இன்றியமையாதது.

திருப்பணியாளர்களுக்குத் தேவையான ஊதியம் வழங்கல்

20. தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அலுவலை நிறைவேற்றுவதின் மூலம் கடவுளுக்கு ஊழியம் செய்ய அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் திருப்பணியாளர்கள் முறையான ஊதியம் பெறத் தகுதி பெறுகிறார்கள். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே (மத்10:10).61 மேலும் நற்செய்தி அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியன் மூலமாகவே பிழைப்புக்குரியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று பணித்திருக்கிறார் நம் ஆண்டவர்(1 கொரி9:4). ஆகவே திருப்பணியாளர்களின் முறையான ஊதியத்திற்கு வேறு வகையில் வழி செய்யப்படாமல் இருந்தால், எந்த நம்பிக்கை கொண்N;டாரின் நினைவுப்படுத்த வேண்டியது ஆயர்களின் பொறுப்பு. ஆயர்கள் கடவுளின் மக்கள் பணியின் ஏதாவது ஓர் அலுவலை ஆற்றுகின்றவரின் அல்லது ஆற்றியவரின் நியாயமான வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்த வேண்டும். தங்கள் மறைமாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஆயர்கள் தனியாகவோ அல்லது இன்னும் சிறப்பாக, ஒரு பொது நிலப்பரப்பைப் பொறுத்தவரையில் அதன் ஆயர்கள் இணைந்தோ இவ்வொழுங்குகளை ஏற்படுத்தலாம். ஒவ்வொருவரும் பெறவேண்டிய ஊதியம் அவர்களின் வேலையின் தன்மையையும் கால, இடச் சூழ்நிலைகளையும் பொறுத்தே அமைந்தாலும், அடிப்படையில் ஒரே சூழ்நிலையில் வாழும் எல்லோர்க்கும் ஒரே ஊதியமே தரப்படவேண்டும்; இது அவர்களின் வாழ்க்கை நிலைக்கு ஏற்றதாகவும் இருக்கவேண்டு. மேலும், திருப்பணியாளர்களுக்குக் கொடுக்கப்படும் இந்த ஊதியம் அவர்களிடம் பணிபுரிபவர்களுக்கு முறையான கூலி கொடுக்க மட்டுமன்றி, அவர்களாக் வறியோர்க்கும் ஓரளவுக்குக் கொடுத்து உதல போதுமானதாக இருக்க வேண்டும்: ஏழைகளுக்குச் செய்யும் இப்பணியைத் தொடக்கத்திலிருந்து திருச்சபை மிகவும் போற்றி வந்துள்ளது. மேலும், இந்த ஊதியத்தைக் கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் திருப்பணியாளர்கள் தங்களுக்கு உரித்தான போதுமான விடுமுறையைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை ஆயர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

திருப்பணியாளர் நிறைவேற்றும் அலுவலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எனவே நிதி உதவி ஏற்பாடு, என்று அழைக்கப்படும் முறை கைவிடப்படவேண்டும். அல்லது நிதி உதவி ஏற்பாடு அதாவது அலுவலிலிருந்து கிடைக்கும் வருவாய் பெறுவதற்கான உரிமை இரண்டாம் நிலையானதே எனக் கருதப்படும் அளவுக்காகவது இந்த முறை மாற்றியமைக்கப்படவேண்டும்; சட்ட முறையாகத் திருச்சபை அலுவலுக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்; இனிமேலாகத் திருச்சபை அலுவல் என்பது அருள்வாழ்வு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொடுக்கப்பட்ட நிலையான ஒரு பணி என்னும் பொருளில் கொள்ளப்பட வேண்டும்.

திருப்பணியாளர்களுக்குப் பொதுநதியும் சமூகப் பாதுகாப்பும்

21. எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது (திப4:32)என்ற தொடக்க கால எருசலேம் சபையின் நம்பிக்கை கொண்டோருடைய முன்மாதிரியை நாம் எப்பொடுதும் கண்முன் கொள்ள வேண்டும். எனவே திருப்பணியாளர்களின் வாழ்க்கைக்குத் தேவையானவை முழுவதும் அல்லது அதன் பெரும்பகுதி நம்பிக்கை கொண்டோரின் காணிக்கையிலிருந்தே பெறப்படுகின்ற மண்டலங்களிலாவது, இந்நோக்கத்திற்காகக் கொடுக்கப்படும் காணிக்கைகளை ஒன்று திரட்டி மையப்படுத்த மறைமாவட்ட அமைப்பு ஒன்று இருப்பது மிகவும் பொருத்தமாய் இருக்கும். இந்த அமைப்பை ஆயர் தம் பதிலாள்களான திருப்பணியாளர்களின் உதவியாலும், நடத்தலாம். மேலும், கூடுமான அளவு, ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் அல்லது மண்டலத்திலும், திருச்சபைப் பணியாளர்களின் நலனுக்காகக ஆற்ற வேண்டிய பிற கடமைகளை நிறைவேற்றவும், மறைமாவட்டத்தின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்யவும் ஆயர்களுக்கு உதவியாக இருக்க ஒரு செல்வம் நிறைந்த மறைமாவட்டங்கள் ஏழ்மையான மறைமாவட்டங்களுக்கு உதவி புரிந்து, தங்கள் செல்வ மிகுதியைக் கொண்டு அவற்றின் பற்றாக்குறையைப் போக்க முடியும்.62இப்பொது நிதியும் சிறப்பாக நம்பிக்கை கொண்டோரின் காணிக்கைகளிலிருந்து திரட்டப்படுவது சாலச் சிறந்தது; பின் சட்ட வரையறைக்கு உட்பட்ட பிற வழிகளிலும் சேர்க்கப்படலாம்.

திருப்பணியாளர்களுக்குப் போதிய சமூகப் காப்பீடு இன்னும் கிடைக்காத நாடுகள் உள்ளன. இத்தகைய நாடுகளின் ஆயர் பேரவைகள் திருச்சபைச் சட்டங்களினபடியும் நாட்டுச் சட்டஙகளின் படியும் இதற்கான அமைப்புகளைத் தோற்றுவிக்க வேண்டும். இவை மறைமாவட்ட அளவிலோ பல மறைமாவட்டங்கள் தம்முள் இணைந்து செயல்படக்கூடிய அமைப்புகளாகவோ இருக்கலாம்; அல்லது பல மறைமாவட்டங்களுக்கென அமைக்கப்பட்டனவாய் இருக்கலாம்; ஒருகுறிப்பிட்ட நிலப்பகுதிக்கே பொதுவானவையாகவும் இருக்கலாம்; இவை திருச்சபை ஆட்சியாளர்களின் கண்காணிப்பின் கீழ்ச் செயல்பட வேண்டும். இவை நோய்களைத் தடுப்பதற்கும் உடல்நலம் பேணுவதற்கும் போதிய உதவி அளிக்க வேண்டும். அஃதோடு பிணி, இயலாமை,முதுமையால் வருந்தும் திருப்பணியாளர்களுக்குத் தேவையான வாழ்க்கை ஆதாரத்தைப் போதுமான அளவு வழங்கவேண்டும். திருப்பணியாளர்கள் தங்கள் சகோதரத் திருப்பணியாளர்களுடன் கொண்டுள்ள ஒருமைப்பாட்டால் உந்தப்பட்டு, அவர்களின் துன்பங்களில் பங்கு கொண்டு,63 இவ்வித அமைப்புகளுக்கு உதவ வேண்டும். அதே சமயத்தில் தங்களின் வருங்காலத்தைப் பற்றிய கவலையின்றி நற்செய்தியின் உயிருள்ள உணர்வினால் ஏழ்மையைக் கைக்கொண்டு, ஆன்ம, ஈடேற்றத்திற்காகத் தங்களை முழுவதும்கையளிக்க முடியும் என்பதை அவர்கள் உணரவேண்டும். பல்வேறு நாடுகளிலுள்ள இத்தகைய அமைப்புகள் தங்களுக்குள்ளே இணைந்து செயல்பட ஆவன் செய்வது பொறுப்புள்ளவர்களின் கடமையாகும்; இவ்வாறு இந்த அமைப்புகள் அதிக வளமைப்பெற்று, பெருமளவில் பரவ இயலும்.

முடிவுரையும் அறிவுரையும்

22. திருப்பணியாளர்களின் வாழ்வில் நிலவும் மகிழ்ச்சிகளைக் கண்முன் கொண்டுள்ள இத்திருச்சங்கம், அவர்கள் இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலைகளில் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. பொருளாதார மற்றும் சமூகச் சூழ்நிலைகளும், ஏன் மனிதரின் பழக்க வழக்கங்களும் எவ்வளவு மாறுபட்டு வருகின்றன என்பதையும், மக்களின் எண்ணத்தில் மதிப்பீடுகள் எவ்வளவு தூரம் மாறியுள்ளன என்பதையும் சங்கம் அறிந்துள்ளது. ஆகவே திருச்சபையின் பணியாளர்களும், சில வேளைகளில் கிறிஸ்தவ மக்களும் கூட இவ்வுலகில் தாங்கள் ஒரு விதத்தில் அந்நியர்கள் என உணர்த்துகிறார்கள்; எத்தகைய பொருத்தமான வழி வகைகளை மற்றும் வார்த்தைகளை கொண்டு உலகோடு உரையாடலாம் என்பது பற்றி ஒருவித கவலையோடு தேடுகின்றனர். நம்பிக்கைக்கு எதிராகப் புதிய இடையூறுகள் எழுவதும், செய்த வேலை பயனில்லாமல் தோன்றுவதும், கசப்பான தனிமையை அவர்கள் அனுபவிப்பதும், அவர்களில் மனத்தளர்ச்சியை உண்டாக்கக் கூடிய ஆபத்தை விளைவிக்க முடியும்.

இந்த உலகின் மேல் கடவுள் உண்மையிலேயே எவ்வறவு அன்பு கூர்ந்தாரென்றால், அதற்காகத் தம் ஒரே மகனையே அளித்தர்.64இந்த உலகத்தை அன்பு செய்து அதற்குப் பணிபுரியவே இன்று திருச்சபை திருப்பணியாளர்களகை; கோருகிறது. பற்பல பாவங்களில் மூழ்கி இருப்பினும், அதே சமயத்தில் பல ஆற்றல்களையும் கொண்டிருக்கின்ற இந்த உலகம், தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் உறைவிடத்தை கட்டியெழுப்பும்65 உயிருள்ள கற்களைத்66 திருச்சபையைத் தூண்டிவரும் அதே தூய ஆவி, திருப்பணியாளரின் பணியில் தகுந்த மாற்றங்களைப் புகுத்துவதற்கும் தூண்டுதலும் ஊக்கமும் தருகிறார்.

தங்கள் பணியை நிறைவேற்றும்போது தாங்கள் தனியாக அல்ல, எல்லாம் வல்ல கடவுளின் வல்லமையில் ஊன்றி நின்றே செயலாற்றுகிறார்கள் என்பதைத் திருப்பணியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தமது திருப்பணியாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும். தமது திருப்பணிநிலையில் பங்கு கொள்ளத் தங்களை அழைத்த கிறிஸ்துவில் அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்; முழு நம்பிக்கையுடன் பணிக்குத் தங்களை முழுவதும் அவர்கள் அர்ப்பணிக்க வேண்டும்; அவர்களில் அன்பை வளர்க்க கடவுள் வல்லமை உள்ளவர் என்பதையும் அறிய வேண்டும்.67சதோதரத் திருப்பணியாளர்கள், ஏன் உலகம் முழுவதிலும் உள்ள நம்பிக்கை கொண்டோர் தங்களுக்குத் தோழர்களாக உள்ளனர் என்பதைத் திருப்பணியாளர்கள் நினைவில் கொள்வார்ளாக. ஏனெனில், கடவுளின் நிறைவாழ்வுத் திட்டத்தை, அதாவது கிறிஸ்துவின் மறைபொருளை அல்லது ஊழிக்காலமாக கடவுளில் மறைந்திருந்த மறைபொருளான திட்டத்தை68 நிறைவேற்றுவதில் எல்லாத் திருப்பணியாளர்களும் ஒத்துழைக்கிறார்கள். இந்த நிறைவாழ்வுத் திட்டம் பல்வேறு பணிகளின் மூலம் கிறிஸ்துவின் உடல் இவ்வுலகிலே நிறுவப்பட்டு அது முழு வளர்ச்சி அடையும்வரை சிறிது சிறிதாகத்தான செயல்படுகிறது. கிறிஸ்துபோடு கடவுளுக்குள் மறைந்திருந்த இவற்றை எல்லாம் நம்பிக்கையினால் சிறப்பாக உணரமுடியும்.69 ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்படிந்து உரிமைப் பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்(எபி 11:8) உறுதியான அவருடைய மாதிரியைப் பின்பற்றி, கடவுளின் மக்கள் தலைவர்கள் நம்பிக்கை உணர்வோடு வாழ்வது அவசியம். உண்மையிலேயே, கடவுளுடைய மறைநிகழ்ச்சிகளின் கண்காணிப்பளரை, ஆண்டவர் கூறியபடி வயலில் விதைத்தவரும் ஒப்பிடலாம். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது(மாற்4:27) என்று ஆண்டவர் சொன்னது இவரைப் பற்றியே.

மேலும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டு விட்டேன்(யோவா16:33) என்று கூறிய ஆண்டவர் இயேசு இச்சொற்களால் தமது திருச்சபைக்கு இவ்வுலகிலே நிiவான வெற்றியை வாக்களிக்கவில்லை. நற்செய்தியின் விதையால் விதைக்கப்பட்ட உலகம், அது முழுவதையும் நிறைக்கும் ஆண்டவருடைய ஆவியாரின் இயக்குதலினால் இப்பொழுது பல இடங்களில் பலன் கொடுப்பது கண்டு திருச்சங்கம் மகிழ்ச்சியுறுகிறது; இதே ஆவியர் பற்பல திருப்பணியாளர்கள் மற்றும் நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்களில் நற்செய்திப் பணிக்கான ஆவலைத் தூண்டியிருக்கிறார். இவை அனைத்திற்காகவும் திருச்சங்கம் உலகிலுள்ள திருப்பணியாளர்கள் அனைவருக்கும் அன்புடன் நன்றி கூறுகிறது. நம்முள் வல்;லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்ததையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே திருச்சபையில் கிறிஸ்து இயேசு வழியாக தலைமுறையாக என்றென்றும் மாட்சி உரித்தாகுக!(எபே3:20-21).

இவ்விதித் தொகுப்பில் கூறப்பட்டுள்ள யாவும், அவை ஒவ்வொன்றும், திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும் கிறிஸ்து நமக்கு அளித்துள்ள திருத்தூது அதிகாரத்தால் வணக்கத்துக்குரிய தந்ததையருடன் இணைந்து தூய ஆவியில் அவைகளை ஏற்றுக்கொள்கிறோம், தீர்மானிக்கிறோம். நிலைநாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டிய இவை யாவையும் கடவுளின் மாட்சிக்காகச் செயல்படுத்துமாறு ஆணையிடுகிறோம்.

தூய பேதுரு பேராலயம் பவுல்.
உரோமை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்
டிசம்பர் 7, 1965.  

கீழே தந்தையரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.