இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள்

பொது நிலையினரின்
திருத்தூதுப் பணி

பற்றிய
விதித்தொகுப்பு

உட்புகுமுன்

பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி பற்றிய விதித் தொகுப்பு 1965 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 18 ஆம் நாள் வெளியானது. சங்க ஏடுகள் யாவற்றுள்ளும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே இதை நாம் கருதவேண்டும். இப்பொருள் பற்றி ஒருவிதப் புதிய கோட்பாட்டை இத்தொகுப்பு தம்முள் கொண்டுள்ளது என்பதால் அல்ல் ஆனால் திருச்சபை அமைப்பில் பொதுநிலையினருக்கு உரிய இடத்தை இஃது அளிக்கிறது என்பதே இம்முக்கியத்துவத்திற்குக் காரணம். திருத்தூதுப்ய பணிக்குப் பொதுநிலையினர் அழைக்கப் பெற்றுள்ளனர். இவ்வழைப்பினால் திருச்சபையின் அருள்பணியிலே அவர்கள் தமக்கே உரித்தான அருள்நெறியோடு பங்குகொள்ள முடிகிறது என்பதை இவ்விதித்தொகுப்பு நமக்கு நினைவுறுத்துகிறது. திருச்சபையிலுள்ள ஒவ்வோர் ஆணும் பெண்ணும் குழந்தையும் இந்தத் திருத்தூதுப் பணிக்கு அழைக்கப் பெற்றுள்ளனர். 'நற்செய்தி அறிவித்தல்' அல்லது நற்செய்தியை உலகுக்குப் போதித்தல் என்பது தம் முழு ஆற்றலுடன் உலகியல் அமைப்பைப் புதுப்பிக்க உழைத்தல்ன ஆகும். இதுவே திருத்தூதுப் பணியின் குறிக்கோள்.

பொதுநிலையினரும் அவர்தம் அருள்பணியாளர்களும் சேர்ந்தே கடவுளின் மக்களாவர். இவ்வாறு இணைந்து இவர்கள் கிறிஸ்துவின் மறையுடலை உருவாக்குகின்றனர். கிறிஸ்துவின் உடலில் உள்ள உயிருள்ள உறுப்பினர்கள் என்ற முறையில் அனைவரும் தம் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்தித் திருச்சபையை வளர்ச்சியுறச் செய்யவும் தூயத் தன்மையுடன் பொலிவுற்றுத் திகழச் செய்யவும் அழைக்கப்படுகின்றனர்.

பருப்பொருள் கொள்கையும் கடவுள் மறுப்புக் கொள்கையும் சமயத்தை ஒதுக்கும் பார்வையும் தலைதூக்கி நிற்கும் காலத்திலே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இக்கட்டத்தில் கிறிஸ்தவர் என்ற நிலையில் மிக முக்கியமான பொறுபு;பு நமக்கு உண்டு. பிற சமயத்தினர் நடுவிலே நாம் வாழ்கின்றோம்; நம் அன்றாட வாழ்வில் எல்லாவித மக்களிடமும் தொடர்பு கொள்கிறோம். நம் பிற சமய நண்பர்களும் அயலவரும் பொதுவாக, நமது நம்பிக்கை மட்டில் பெருமதிப்புக் கொண்டுள்ளனர். துணையும் தூண்டுதலுமாய் நாம் இருக்க இயல்பாகவே எதிர்பார்க்கின்றனர். எனவே, கிறிஸ்தவக் குடும்பங்கள் தப்பெண்ணம், பிரிவு முதலியவற்றால் தீய மாதிரியாக இருந்தால், அன்பின் உண்மை உணர்விலும், நேர்மை நீதி உணர்விலும், வறியோர் தாழ்த்தப்பட்டோர் மீது கொள்ளும் உண்மை அன்பிலும் கிறிஸ்தவர்கள் மே;பட்டிராவிட்டால், எத்தகைய திருத்தூதுப் பணியைத்தான் அவனியில் அவர்கள் ஆற்றமுடியும்?

பொதுநிலைத் திருத்தூதர் நல்ல கணவர் மனைவி ஆகவும் தந்தை தாய் ஆகவும் மட்டும் இருந்தால் போதாது. அவர்கள் நல்ல தொழிலாளர்களாகவும் மருத்துவராகவும் வழக்கறிஞராகவும் பொறியாளராகவும் ஆசிரியராகவும் தொழில் நுட்பமுடையவராகவும் திகழவேண்டும். தம் தொழிலைச் சார்ந்தவற்றில் எவரும் குறைகூறும் அளவிற்கு அவர்கள் நடந்து கொள்ளக்கூடாது. மருத்துவரிடம் வரும் நோயாளிகள் அவர் கத்தோலிக்கர் என்பதால் மட்டும் அவரிடம் வருவதில்லை; மாறாக, அவர் நல்ல மருத்துவராய்த் திகழ்வதாலேயே வருகின்றனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

'பொதுநிலையினர் உலகியல் அமைப்பைப் புதுப்பிப்பதை தமக்கே உரித்தான கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்' (எண் 7) என இவ்விதித் தொகுப்பு குறிப்பாக எடுத்துக் காட்டுகிறது. இங்கேதான் முக்கியத்துவம் வாய்ந்த, ஆனால் பொதுவாக நமது எண்ணத்தை ஈர்க்காத ஒன்று காணக்கிடக்கிறது. மிக முக்கியமான அந்தப் பொறுப்பு பற்றிச் சங்கம் நம்மைச் சிந்திக்க வைக்கிறது ஏறத்தாழ ஒவ்வொரு பங்கிலும் பல சபைகள் இருந்துவருகின்றன் இச்சபைகளின் உறுப்பினருள் பலர் தங்களுக்குக் குறிக்கப்பட்ட இறைவேண்டலைச் சொல்கிறார்கள்; கூட்டங்களில் முறையாகக் கலந்துகொள்கிறார்கள்; மிகவும் பக்தியும் பற்றும் உடையவர்களாய் நடந்துகொள்கிறார்கள். ஆனால் எப்பொழுதும் தம்மைப் பற்றியே நினைக்கின்றனர். எனவே, இவர்களுள் பலர் மிகவும் தன்னலமுடையவர்களாய் இருக்கிறார்கள். பிறரைப் பற்றி எப்பொழுதாவது அவர்கள் கவலைப்பட்டால், தம் சொந்தப் பங்கு வட்டத்தைத் தாண்டார். பொதுவாகப் பங்குப் பணிகளிலே ஈடுபடுவர். நாம் வாழும் சமூகம், ஊர், நகர் முதலியவை மட்டிலும், நமது நாட்டின்பாலும் நமக்கு எத்தனையோ கடமைகள் உள்ளன. வருத்தும் வறுமைக்குத்தான் பஞசமா! துன்புறுத்தும் துயரங்கள்தான் கொஞ்சமா! மக்களின் பொருளாதார, சமூக நலனுக்காக நகர் அதிகாரிகளும் பொதுப் பணித் துறையினரும்கூட எவ்வளவோ முயற்சி எடுக்கின்றனர். ஆனால், எத்தனை கத்தோலிக்கர் இத்தகைய முயற்சிகள் மட்டில் உண்மையிலேயே அக்கறை கொள்கின்றனர்? உலகியல் அமைப்பு மறுமலர்ச்சியைத் தங்களின் தனிப்பட்ட கடமை எனப் பொதுநிலையினர் ஏற்றுக் கொள்ளவேண்டும் என இச்சங்க விதித் தொகுப்பு கூறுகின்றது; ஆனால் நடைமுறை இவ்வாறு இருக்கின்றதா!

இத்தகைய காரியங்களிலே நாம் கவனம் செலுத்தாமலும் நமது அருள்பணியை நேர்மையாகச் செய்ய முனையாமலும்இருந்தால், வேறுசிலர் முன்வந்து செயலாற்றுவர் என்பதையும் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதையும் நாம் அறிவோம். நமது நாட்டிலேயே பல பகுதிகளில் நாளும் நடப்பதை நாமே தெரிந்துகொள்ளலாம்.

சிறு புளிப்புமாவை மாவிலே புதைத்து வைப்பதை நாம் பார்த்திருக்கிறோமே! அந்தப் புளிப்புமாவு என்ன செய்கிறது? மாவில் எல்லாப் பாகத்தையும் அது புளிக்கவைக்கிறது. எவ்வளவுக்கு மாவு புளிக்கிறதோ அவ்வளவுக்கு மாவு சிறக்கும்; அப்பமும் நன்றாக இருக்கும். அதுபோல் பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி எல்லாவற்றையும் ஊடுருவ வேண்டும். மனித வாழ்வில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தாக்கம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, தம் தூய்மை நிலையாலும் அன்பாலும் அவர்கள் எல்லாவற்றையும் உருமாற்றி அமைக்க முடியும். இம்முறையில்தான் கிறிஸ்துவின் உணர்வில் உலகம் ஊறி இருக்கும். பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி வழியாக நீதி, அன்பு, அமைதி ஆகிய மதிப்புகள் வளர்ச்சியுற்று, அனைத்தும் கிறிஸ்து மயமாக மாறும்.

பணி. யூஜின் டி' சூசா
போபால் பேராயர்
அனைந்திந்திய ஆயர் பேரவையின்
போபால் பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி
ஆணைக்குழுத் தலைவர்

பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி


பற்றி இறை அடியாருக்கு அடியார் ஆயர் பவுல்
திருச்சங்கத் தந்தையரோடு இணைந்து
நினைவில் என்றும் நிலைக்குமாறு அருளிய
விதித்தொகுப்பு


முன்னுரை

1. இறை மக்களின் திருத்தூதுப் பணியைழூ இன்னும் அதிக வலுவுறச் செய்ய1 திருச்சங்கம் விரும்புகிறது. எனவே, பொதுநிலைக் கிறிஸ்தவர்கள் மீது தன் கவனத்தை அக்கறையோடு திருப்புகிறது. திருச்சபையின் தூதுப் பணியில் இவர்களுக்கே உரித்தான, முற்றிலும் இன்றியமையாத பங்குபற்றிப் பிற இடங்களில் இச்சங்கம் எடுத்துக் கூறியுள்ளது.2 கிறிஸ்தவ அழைப்பிலிருந்தே இப்பொதுநிலையினர் திருத்தூதுப் பணி அரும்புகிறது; எனவே, இப்பணி ஒருக்காலும் திரு;சசபையில் இல்லாமல் போய்விட முடியாது. திருச்சபைத் தொடக்கத்தில் இப்பணி எவ்வளவு இயல்பாக இருந்தது, எவ்வளவு பயன் ஈந்தது என்பதை விவிலியமே தெளிவாய்க் ;காட்டுகிறது (காண் திப 11:19-21, 18-26; உரோ 16:1-16; பிலி 4:3).

நம் காலத்திலும் பொதுநிலையினரின் ஆர்வம் அதிகமாகவே தேவைப்படுகிறது; இவர்களின் திருத்தூதுப் பணி மேலும் வலுவடைந்து விரிவுகாண வேண்டும் என இன்றை சூழ்நிலைகள் கோருகின்றன. ஏனெனில், நாளும் பெருகி வரும் மக்கள் தொகை, அறிவியல், தொழில் நுட்பக் கலைகள் ஆகியவற்றின் முன்னேற்றம், மனிதரிடையே உருவாகும் மிக நெருங்கிய தொடர்புகள் இவையெல்லாம் பெரும்பாலும் பொதுநிலையினருக்கு மட்டுமே கிட்டும் திருத்தூதுப் பணித் துறைகளைப் பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளது; இஃதுடன், இவர்களின் ஆழ்ந்த கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்க்கும் புதிய சிக்கல்களையும் எழுப்பியுள்ளது. மனித வாழ்வின் பற்பல துறைகளில் தன்னாட்சி உரிமை நன்கு வளர்ந்துள்ளது; இது சரியே, எனினும் இத்தன்னாட்சி சில வேளைகளில் ஒழுக்க நெறி, சமய நெறியிலிருந்து சிறிது சிறிதாய் விலகிப் போய்க் கிறிஸ்தவ வாழ்வுக்கே விபத்தை விளைவிக்கின்றது. எனவே, பொதுநிலையினர் பணியின் தேவை மிகுகிறது. மேலும், பல பகுதிகளில் திருப்பணியாளர்கள் மிகமிகக் குறைவாகவே உள்ளனர், அல்லது பணியாற்றுவதற்கு வேண்டிய பறிபோய்விடுகிறது. இப்பகுதிகளில் பொதுநிலையினரின் பணி இல்லையேல் திருச்சபை நிலைத்திருப்பதும் செயலாற்றுவதும் மிகக் கடினமாகிறது.

இன்று பொதுநிலையினர் தம் பொறுப்பை மேன்மேலும் உணரும்படி தூய ஆவியார் செய்து வருகிறார்; கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் ஊழியம் செய்ய எங்கும் அவர்களைத் தூண்டி வருகிறார். அவரது இந்தத்தெளிவான செயலே பலவகைப்பட்ட உடனடியாக நிறைவு செய்யப்பட வேண்டியப் பணியின் அறிகுறியாக உள்ளது.3

இவ்விதித் தொகுப்பில், பொதுநிலைத் திருத்தூதுப் பணியின் இயல்பு, தனிப் பண்பு, வகைகள் ஆகியவற்றை விளக்கவும் இப்பணியின் அடிப்படைத் தத்துவங்களை எடுத்துரைக்கவும், மிகு பயன்தரு முறையில் தம் பணியை இவர்கள் ஆற்ற அருள்பணிசார்ந்த அறிவுரைகளை வழங்கவும் இச்சங்கம் அழைக்கிறது. பொதுநிலைத் திருத்தூதுப் பணி ப ற்றிய திருச்சபைச் சட்டம் திருத்தப்பெறும்போது, இவையெல்லாம் அதன் மேல்வரிச் சட்டங்களாகக் கருதப்பெறட்டும்.

இயல் 1
திருத்தூதுப் பணிக்கென பொதுநிலையினர்
பெறும் அழைப்பு

திருச்சபைப் பணியில் பொதுநிலையினருக்குள்ள பங்கு

2. இறைத் தந்தையின் மாட்சிக்காகக் கிறிஸ்துவின் ஆட்சியை உலகெங்கும் பரப்பவும், இதனால் நிறைவாழ்வு தரும் மீட்பிலே மனிதர் யாவரும் பங்குபெறச் செய்யவும்,1 இவர்கள் மூலம் உலகம் முழுவதும் கிறிஸ்துவோடு உண்மையாகத் தொடர்புகொள்ளச் செய்யவுமே திருச்சபை தோன்றியது. இக்குறிக்கோளை அடைய இம்மறையுடல் ஆற்றும் செயல்கள் அனைத்துமே திருத்தூதுப் பணி என அழைக்கப்பெறும். இதைத் திருச்சபை தன் உறுப்பினர் அனைவரின் வழியாகப் பல்வேறு விதங்களில் ஆற்றி வருகிறது. ஏனெனில், கிறிஸ்தவ அழைப்பு இயல்பாகவே திருத்தூதுப் பணி அழைப்பாகவும் அமைந்தள்ளது. உயிருள்ள உடலமைப்பில் செயலாக்கம் இல்லாத உறுப்பு எதுவுமில்லை; மாறாக, யாவுமே அவ்வுடலின் வாழ்வோடு இணைந்து அதன் அலுவல்களில் பங்கெடுக்கின்றன. இது போலவே, திருச்சபை எனும் கிறிஸ்துவின் உடலிலே, ''ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று அன்பால் கூட்டமைப்புப் பெற்று வளர்ச்சி அடைகிறது.'' (எபே 4:16). உண்மையில், இவ்வுடலின் உறுப்புகள் எவ்வளவு ஒன்றாய் இணைந்து இசைவாய்ப் பொருந்தி உள்ளன என்றால் (காண் எபே 4:16), இவ்வுடல் வளர்ச்சியில் தம் பங்கை ஆற்றாத எந்த உறுப்பும் திருச்சபைக்கோ தனிக்கோ பயனற்றது என்றே கூறவேண்டும்.

திருச்சபையின் பல்வகைத் திருப்பணிகள் உள்ளன. எனினும், அதன் தூதுப்பணி ஒன்றே. தம் பெயராலும் அதிகாரத்தாலும் போதித்துத் தூய்மையாக்கி வழிநடத்தும் அலுவலைக் கிறிஸ்து திருத்தூதர்களுக்கும் அவர்தம் வழிதோன்றல்களுக்கும் கொடுத்தார். பொதுநிலையினரும் கிறிஸ்துவின் திருப்பணி சார்ந்த, இறைவாக்குரைக்கும், வழிகாட்டும் அலுவல்களிலே பங்கு பெறுகின்றனர்; இறைமக்கள் யாவருக்கும் கொடுக்கப்பட்ட தூதுப்பணியிலே, திருச்சபையிலும் உலகிலும் தகமக்குள்ள பங்கை ஆற்றுகின்றனர்.2 நற்செய்தியை அறிவித்து மனிதரைத் தூய்மைப்படுத்தவும், உலகியல் அமைப்பை நற்செய்தி மனப்பாங்கில் ஊடுருவி நிறைவு செய்யவும்உழைக்கும்போது, இவர்கள் உண்மையான திருத்தூதுப் பணியை ஆற்றுகின்றனர். இவ்வாறு, இவர்களது உழைப்பே இந்த உலகியல் அமைப்பில் கிறிஸ்துவுக்குத் தெளிவான சான்று பகரும்; மனிதரின் நிறைவாழ்வுக்கும் உதவும். உலகின் நடுவிலே, உலக அலுவல்களிடையே வாழ்வது பொதுநிலையினருக்கே உரித்தான ஒன்று; ஆகவே, கிறிஸ்துவின் உணர்வால் தூண்டப்பெற்றவர்களாய் புளிப்புமாவு போல் உலகிலே இருந்து, தம் திருத்தூதுப் பணியை ஆற்ற இவர்கள் கடவுளிடமிருந்து அழைப்பு பெறுகின்றனர்.

பொதுநிலைத் திருத்தூதுப் பணியின் அடிப்படைகள்

3. தலையாகிய கிறிஸ்துவோடு தாம் கொண்டள்ள ஒன்றிப்பிலிருந்தே பொதுநிலையினர் தம் திருத்தூதுப் பணிக்கான உரிமையும் கடமையும் பெறுகின்றனர். எப்படியெனில், திருமுழுக்கு வழியாகக் கிறிஸ்துவின் மறை உடலில் ஒன்றாய் இணைந்து, உறுதிப்பூசுதல் வழியாகத் தூய ஆவியின் ஆற்றலால் வலுவடைந்து, ஆண்டவராலேயே திருத்தூதுப் பணிக்கென இவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தம் செயல்கள் அனைத்தின் வழியாக ஆவிக்குரிய பலிகளைப் படைக்கவும், உலகெங்கும் கிறிஸ்துவுக்குச் சான்று பகரவும் அரச குழுக்களின் கூட்டத்தினராகவும்தூய மக்களினத்தாராகவும் (காண் 1 பேது 2:4-10) இவர்கள் திருநிலைப்படுத்தப் பெறுகிறார்கள். திருத்தூதுப் பணி முழுவதற்கும் உயிர்போல் இருக்கும் அன்பானது அருளடையாளங்கள் வரியாக, சிறப்பாய், தூய்மை மிகு நற்கருணை வழியாக அளிக்கப்பட்டு ஊட்டம் பெறுகிறது.3

திருச்சபை உறுப்பினர் அனைவரின் இதயங்களில் தூய ஆவியார் பொழியும் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு இவற்றால் திருத்தூதுப் பணி ஆற்றப்படுகிறது. தம் ஆட்சியின் வருகையால் கவுள் மாட்சிமை பெறவும், உண்மையான ஒரே கடவுளையும் அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையு; அறிந்து நிலைவாழ்வை மனிதர் அனைவரும் அடையவும் செய்யும்படி (காண் யோவா 17:13), ஆண்டவரின் மாபெரும் கட்டளையாம் அன்புக் கட்டளை எல்லாக் கிறிஸ்தவர்களையும் தூண்டுகிறது.

ஆகவே, கடவுளின் மீட்புச் செய்தியை உலகெங்கும் வாழும் மனிதர் யாவரும் அறிந்து ஏற்கும்படி உழைக்கவேண்டிய உயரிய பொறுப்பு கிறிஸ்தவர்கள் எல்லார் மீதும் சுமத்தப்பெறுகிறது.

அருள்பணி வழியாகவும் அருளடையாளங்கள் வழியாகவும் இறைமக்களைத் தூய்மைப்படுத்தும் தூய ஆவி இத்திருத்தூதுப் பணியை ஆற்ற நம்பிக்கை கொண்டோருக்குத் தனி அருள்கொடைகளையும் வழங்குகிறார் (காண் 1 கொரி 12:7). இவற்றைத் ''தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கிறார்'' (1 கொரி 12:11). இவ்வாறு, ''ஒவ்வோர் உறுப்பும் தமக்கே குறிக்கப்படட பணியைச் செய்வதால்'' உடல் வளர்ச்சி பெற்று அன்பால்கட்டமைப்புப் பெற்று வளாச்சியடையவும் (காண் எபே 4:16), ''கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்களாயிருந்து ஒவ்வொருவரும் தாம்பெற்றுக் கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியவும்'' (1 பேது 4:10) இயலுகிறது. இவ்வருள்கொடைகள் எளியவை ஆயினும், இவற்றைப் பெறும்ஒவ்வொருவருக்கும் திருச்சபை வளர்ச்சிக்காவும் அவற்றைப் பயன்படுத்தும் உரிமையும் கடமையும் வந்து சேர்கின்றன. ''காற்று தாம்விரும்பிய திசையில் வீசுகிறது'' (யோவா 3:8) தூய ஆவி தரும் சுதந்திர உணர்வில் கிறிஸ்துவில் தம் சகோதரர் சகோதரிகளோடு, சிறப்பாய்த் தம் அருள்பணியாளர்களோடு ஒன்றித்து அவற்றைப் பயன்படுத்துவது அவசியம். இக்கொடைகளின் உண்மையான இயல்பு, இவற்றை ஒழுங்காகப் பயன்படுத்தும்முறை என்பவை பற்றித் தீர்ப்புக்கூறல் இவ்வருட்பணியாளர்களைச் சாரும். ஆனால், இவர்கள் தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்கக் கூடாது; மாறாக, அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொள்ள வேண்டும் (காண் 1 தெச 5:12, 19, 21).4

பொதுநிலையினர் திருத்தூதுப் பணியின் அருள்நெறி

4. இறைத் தந்தையால் அனுப்பப்பெற்ற கிறிஸ்துவே திருச்சபையின் திருத்தூதுப் பணி அனைத்துக்கும் மூலமும் ஊற்றுமாய் உள்ளார். எனவே, ''ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது'' (யோவா 15:5) என ஆண்டவர் கூறியு;ளளதற்கு ஏற்ப, பெதுநிலையினர் கிறிஸ்துவோடு கொண்டிருக்கும் உயிருள்ள ஒன்றிப்பைப் பொறுத்தே இவர்களது திருத்தூதுப் பணியின் வளமை அமையும். திருச்சபையில் கிறிஸ்துவோடு கொள்ளும் நெருக்கமான ஒன்றிப்பு வாழ்வானது, கிறிஸ்தவர்கள் அனைவர்க்கும் பொதுவாயுள்ள அருள் உதவிகளாலும், திருவழிபாட்டில் செயல்முறைப் பங்கேற்பாலும்5 ஊட்டம் பெறுகிறது. பொதுநிலையினர் அன்றாட வாழ்க்கை நிலைகளிலே தம் உலகியல் கடமைகளைத் திறம்பட நிறைவேற்றும்போது, கிறிஸ்துவோடு தாம் கொண்டுள்ள ஒன்றிப்பைத் தம் வாழ்க்கையினின்று பிரித்து நோக்குவதற்குப் பதிலாக, கடவுளின் திருவுளப்படி தம் அலுவலை ஆற்றுவதன் மூலம் அந்த ஒன்றிப்பில் வளரத் துணை செய்யும்முறையில் இந்த அருள் உதவிகளைப் பயன்படுத்த வேண்டும். இவ்வண்ணம், பொதுநிலையினர் முன்மதியோடும் பொறுமையோடும் இடையூறுகளை வெல்ல முயன்று, மகிழ்வுறும் உற்சாக மனத்துடன் தூய்மைநிலையில் முன்னேற வேண்டும்.6 ''எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்'' (கொலோ 3:17) என்கிறார் திருத்தூதர் பவுல். இதற்கொப்ப, குடும்பக் கவலைகளோ பிற உலகியல் அலுவல்களோ அருள் வாழ்வுக்குப் புறம்பானவையாய் இருக்கலாகாது.

இத்தகைய வாழ்வுக்கு, தொடர்ந்து செயலாற்றும் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவை தேவை.

''இறைவனைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம்'' (திப 17:28). நம்பிக்கை ஒளியிலும், இறைவாக்கு தியானத்திலும் மட்டுமே எப்போதும் எங்கும் நாம் அவரைக் கண்டு கொள்ள முடியும்; ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவரது திருவுளத்தைத் தேட முடியும்; உற்றார் மற்றார் யாவரிலும் கிறிஸ்துவைக் காண முடியும்; உலகியல் காரியங்கள் தம் இயல்பாலும் மனிதரின் கதியோடும் கொள்ளும் தொடர்பாலும் பெற்றுள்ள மெய்ப் பொருளையும் மதிப்பையும் பற்றிச் சரியாகத் தீர்ப்பிட முடியும்.

இத்தகைய நம்பிக்கை கொண்டிருப்போர் ஆண்டவரின் சிலுவையையும் உயிர்ப்பையும் நினைவுகூர்ந்து கடவுளின் மக்கள் வெளிப்படுவர் என்னும் எதிர்நோக்கில் வாழ்கின்றனர்.

இவ்வாழ்க்கைப் பயணத்திலே, கிறிஸ்துவோடு இணைந்து கடவுளிடம் மறைந்திருப்பவர்களாய், செல்வத்தின் அடிமைத் தனத்தினின்று விடுதலை பெற்றவர்களாய் என்றும் நீடிக்கும் நலன்களை இவர்கள் நாடுகின்றனர்; இiறாயட்சியைப் பரப்பவும் கிறிஸ்தவ மனப்பாங்கால் உலகியல் காரியங்களின் அமைப்பை ஊடுருவி நிறைவு செய்யவும் தாராள மனத்துடன் தங்களை முழுவதும் அர்ப்பணிக்கின்றனர். ''இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை'' (உரோ 8:18) என எண்ணி இவ்வாழ்க்கையின் இன்னல்களிடையே எதிர்நோக்கில் வலுப்பெறுகின்றனர்.

கடவுளிடமிருந்து வரும் அன்பினால் உந்தப்பட்டு, ''எல்லாவகையான தீமையையும், வஞ்சகத்தையும் வெளிவேடம், பொறாமை அவதூறையும்'' ( பேது 2:1) அகற்றிவிட்டு, எல்லா மனிதருக்கும், சிறப்பாக, நம்பிக்கை கொண்டோரின் குடும்பத்தினருக்கு (காண் கலா 6:10), நன்மை செய்கின்றனர்; இவ்வாறு கிறிஸ்துவிடம் மனிதர்களை ஈர்க்கின்றனர். ''நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது'' (உரோ 5:5). இதே அன்பு மலைப்பொழிவு மன்பாங்கைத் தம் வாழ்க்கையில் எடுத்துரைக்கப் பொதுநிலையினருக்குத் திறனளிக்கிறது. இவர்கள் ஏழை இயேசுவைப் பின்பற்றுவர்; உலகப் பொருள்கள் குறைவால் மனம் தளர மாட்டார்கள்; அவற்றின் நிறைவால் செருக்குறவும் மாட்டார்கள். மனத்தாழ்மையுள்ள கிறிஸ்துவைக் கண்டு பாவித்து இவர்கள் வீண் பெருமைத் தேடமாட்டார்கள் (காண் கலா 5:26). மாறாக, மனிதரைவிட கடவுளையே அதிகம் மகிழ்விக்கத் தேடுவர். ''என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்'' (மத் 16:24) எனும் ஆண்டவரின் மொழிகளை நினைத்து, கிறிஸ்துவுக்காக அனைத்தையும் துறக்கவும் (காண் லூக் 14:26), நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படவும் (காண் மத் 5:10), நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படவும் (காண் மத் 5:10) எப்பொழுதும் இவர்கள் தயாராய் உள்ளனர். தம்மிடையே கிறிஸ்துவ நட்பை வளர்த்து எவ்விதத் தேவையிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கின்றனர்.

பொதுநிலையினரின் இவ்வருள்வாழ்வு அவரவர் திருமணம், குடுபம், மணத்துறவு, கைம்மை, உடல் நலம், தொழில் சமூக ஈடுபாடு ஆகியவற்றைப் பொறுத்துத் தனித்தன்மை பெறல் வேண்டும். எனவே, இந்த நிலைகளுக்கு ஏற்றவாறு தமக்கு அருளப்படும் பண்புகளையும் திறமைகளையும் வளர்க்கவும், தூய ஆவி தமக்கு அருளும் அருள்கொடைகளைப் பயன்படுத்தவும் தொடர்ந்து இவர்கள் முயல்வார்களாக.

இஃதுடன் தாம் பெற்ற அழைத்தலைப் பின்பற்றித் திருச்சபை ஒப்புதல் பெற்ற கழகங்களின் அல்லது சபைகளின் உறுப்பினர் ஆகியிருக்கும் பொதுநிலையினர் இவற்றிற்கே உரித்தான அருள்வாழ்வின் தனித் தன்மையையம் பெறப் பற்றுறுதியுடன் முயல்வார்களாக.

மேலும், தொழில் திறமையையும், குடும்ப, கடிமை உணர்வையும், உண்மைக் கிறிஸ்த வாழ்வுக்கு இன்றியமையாத நாணயம், நீதியுணர்வு, நேர்மை, மனித நேயம், மனத்திடம் ஆகிய சமூக உறவு நற்பண்புகளையும் இவர்கள் பெரிதும் மதிப்பார்களாக.

இத்தகைய அருள் வாழ்வுக்கும் திருத்தூது வாழ்வுக்கும் திருத்தூதர்களின் அரசியாம் அருள்மிகு கன்னிமரியா நிறைவுறு மாதிரியாய் இருக்கிறார். பல குடும்பக் கவலைகளுக்கும் வேலைகளுக்கும் இடையே, யாவரும் வாழும் சாதாரண வாழ்வை அவர் இம்மையில் வாழ்ந்தபோது, என்றும் தம் மகனோடு நெருங்கி ஒன்றித்திருந்தார்; மீட்பரின் அலுவலிலே முழுவதும் தனிச்சிறந்த முறையில் ஒத்துழைத்தார். விண்ணேற்புப் பெற்ற அவர், ''பல இன்னல் இக்கட்டுகளிடையே இன்றும் பயணம் செய்துகொண்டிருக்கும் தம் மகனின் சகோதரர் சகோதரிகளை, அவர்கள் தம் மகிழ்ச்சி நிறை தாய்நாடு வந்து சேரும்வரை, தாய்க்குரிய அன்போடு காத்து வருகிறார்''.7 மிகு பக்தியுடன் இவரை யாவரும் போற்றிப் பின்பற்றுவார்களாக் தம் வாழ்வையும் திருத்தூதுப் பணியையும் அவரது தாய்க்குரிய அருட்காவலுக்கு ஒப்படைப்பார்களாக.

இயல் 2
அடையவேண்டிய குறிக்கோள்கள்
முன்னுரை

5. கிறிஸ்துவின் நிறைவாழ்வுப் பணி தன்னிலே மனிதரின் மீட்பைக் குறிக்கும்; அதேவேளையில், உலகியல் அமைப்பு முழுவதையும் புதுப்பிப்பதையும் உள்ளடக்கும். எனவே, மனிதருக்குக் கிறிஸ்துவின் செய்தியையும் அருளையும் கொணர்வதோடு, உலகியல் அமைப்பை நற்செய்தி மனப்போக்கில் ஊடுருவி நிறைவுற்றிருக்கச் செய்வதும் திருச்சபையின் நற்செய்திப்பணியே. ஆகவே, திருச்சபையின் ;இப்பணியைத் தொடர்ந்து ஆற்றும் பொதுநிலையினர் உலகிலும், திருச்சபையிலும், உலகியல் அமைப்பிலும் அருளிய அமைப்பிலும், தம் திருத்தூதுப் பணியை ஆற்றுகின்றனர். இவ்வமைப்புகள் வெவ்வேறானவையாய் இருப்பினும் கடவுளின்ன ஒரே திட்டத்தில் பிணைக்கப்பட்டுள்ளன. இவண், உலகம் முழுவதையும் கிறிஸ்துவின் புதுப்படைப்பாக்க அவர் திருவுளம் கொண்டுள்ளார்; இத்திட்டம் இம்மையில் தொடக்க நிலையிலும் இறுதி நாளில் நிறை நிலையிலும் அமையும். ஒரே நேரத்தில் கிறிஸ்தவர்களும் குடிமக்களுமாய் உள்ள பொதுநிலையினர் இவ்விரு நிலைகளிலும் அதே கிறிஸ்தவ மனப்பாங்கோடு இடையறாது நடந்து கொள்ளவேண்டும்.

திருத்தூதுப் பணியில் நற்செய்தியை அறிவித்தலும் மனிதர் தூய்மை பெறச் செய்தலும்

6. கிறிஸ்துவில் மனிதர் நம்பிக்கை கொண்டு அவரது அருளால் நிறைவாழ்வடையச் செய்வது திருச்சபையின் நற்செய்திப்ப ணிக்குறிக்கோளாககும். எனவே, சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவின் நற்செய்தியை உலகுக்கு வெளியிடுவதுமு; அவரது அருளைப் பகிர்ந்தளிப்பதுமே திருச்சபையின், அதன் உறுப்பினர் அனைவரின், முதன்மையான திருத்தூது அலுவல் ஆகும். இஃது அருள்வாக்குப் பணியாலும் அருளடையாளப் பணியாலும் முக்கியமாய் நிறைவேற்றப்படுகிறது. திருப்பணி நிலையினருக்குச் சிறப்பாய் இப்பணி ஒதுக்கப்பட்டுள்ளது; எனினும், ''உண்மைக்காக உழைக்கும் அவர்களின் உடன் உழைப்பாளர் ஆகிறோம்'' (3 யோவா 8). பொதுநிலையினருக்கும் இதில் மிக முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறே பொதுநிலையினரின் திருத்தூதுப் பணியும் அருள்பணியாளர்களின் திருப்பணியும் ஒன்றை ஒன்று நிறைவுபடுத்தும்.

நற்செய்தி அறிவிப்பு, தூய்மைப்படுத்தல் எனும் திருத்தூதுப் பணிகளை ஆற்றப் பொதுநிலையினருக்கு எண்ணிலா வாய்ப்புகள் உள்ளன. ''மானிடர் உங்கள் நற்செயலைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க'' (மத் 5:16) என ஆண்டவரே கூறுகிறார்; இதற்கொப்ப, கிறிஸ்தவ வாழ்வின் சாட்சியமும் இயல்பு கடந்த மனப்பாங்குடன் ஆற்றப்பெறும் நற்செயல்களும், கடவுள் மீது நம்பிக்கை கொள்ள மனிதரை ஈர்க்கும் திறன் கொண்டுள்ளன.

எனினும், இத்தகைய திருத்தூதுப் பணி வெறும் வாழ்க்கைச் சாட்சியத்தோடு நின்றுவிடாது. உண்மையான திருத்தூதர் தம் வார்த்தையாலும் கிறிஸ்துவைப் பறைசாற்றுகிறார். நம்பிக்கையற்றோரை நம்பிக்கைக்கு இட்டுச் செல்லவும், ஏற்கெனவே நம்புவோரை மேலும் பயிற்றுவித்து உறுதிப்படுது;தி ஆர்வமிகு வாழ்வில் ஊக்குவிக்கவும் உதவும் வாய்ப்புகளைத் தேடுகிறார். ஏனெனில், ''கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது'' (2 கொரி 5:14), ''நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!'' (1 கொரி 9:16) எனும் திருத்தூதர் பவுலின் வாக்கு அனைவரின் இதயத்திலும் எதிரொலிக்க வேண்டும்.1

நம் காலத்தில் புதுப்புதுக் கேள்விகள் கேட்கப்படுகின்றன் சமயம், ஒழுக்கநெறி, மனித சமுதாயம் என்பவற்றை அடியோடு அழிக்கத் தேடும் மிகப்பெரும் தப்பறைகள் பல பரவலாய் எழுந்துள்ளன. எனவே, கிறிஸ்துவக் கொள்கைகளை விளக்குவதிலும் காப்பாற்றுவதிலும், தக்க முறையிலே தற்காலச் சிக்கல்களில் இவற்றைப் பயன்படுத்துவதிலும்ஈ தத்தம் திறமைகளுக்கும் கல்விக்கும் ஒத்தவண்ணம், திருச்சபை உளப்படி, தம் பணியைக் கருத்துடன் ஆற்றுமாறு பொதுநிலையினரை இத்திருச்சங்கம்உளமாரத் தூண்டுகிறது.

உலகியல் அமைப்பைக் கிறிஸ்துவில் புதுப்பித்தல்

7. மனிதர் ஒன்றபட்ட உள்ளத்தோடு உலகியல் அமைப்பை இடையறாது புதுப்பித்து நிறைவுபடுத்த வேண்டும் என்பதே உலகைப்பற்றிக் கடவுள் வகுத்துள்ள திட்டமாகும்.

வாழ்க்கை நலன்கள், குடும்ப நலன்கள், பண்பாடு, பொருளாதாரம், கலைகள், அரசியல் அமைப்புகள்ஈ அனைத்து நாட்டுத் தொடர்புகள் ஆகியவையும் இவைபோன்ற பிறவும், இவற்றின் வளர்ச்சியும் முன்னேற்றமுமே உலகியல் அமைப்பை உருவாக்குபவை. இவை யாவும் மனிதரின் இறுதிக் கதியை அடைய உதவுபவை என்பதால் மட்டுமன்றி, தம்மிலேயே அல்லது முழு மதிப்பைக் கொண்டவையாய் இருக்கின்றன. இம்மதிப்பை இவற்றுள் இருத்தியவர் கடவுளே; ''கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன'' (தொ நூ 1:31). மனிதருக்கு உதவி செய்யப் படைக்கப்படட இப்பொருக்ளகளின் இயல்பான நன்மைப் பண்பு, மனிதருடன் இவை கொள்ளும் தொடர்பின் விளைவாய் ஒருவகைத் தனி மாண்பைப் பெறுகிறது. இறுதியாய், இயல்பானவை இயல்பு கடந்தவை, யாவற்றையுமே கிறிஸ்து இயேசுவில் ஒன்றுபடுத்த கடவுள் திருவுளம் கொண்டார். ''எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு'' (கொலோ 1:18) இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். எனினும், உலகியல் அமைப்பின் தன்னாட்சி உரிமை, அதற்குரிய குறிக்கோள்கள், ஒழுங்குகள், உறுதுணைகள், மனித நலனைப் பொறுத்தவரையில் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை இந்த நோக்கம் பறித்து விடுவதில்லை; மாறாக, அதன் ஆற்றலையும் மேன்மையையும் நிறைவுபடுத்துகிறது; அதேவேளையில், இம்மையில் மனிதர்கள் பெற்றுள்ள அழைத்தலின் முழுமைக்கு அவர்களை உயர்த்தவும் செய்கிறது.

வரலாற்றுப் போக்கிலே உலகப்பொருள்களைப் பயன்படுத்தும்முறை பெருகும் குறைபாடுகளால் களங்கமுற்றுள்ளது. ஏனெனில், தொடக்கப் பிழையால் பாதிக்கப்பட்ட இவர்கள் மெய்யங்கடவுளைப் பற்றியும் அறிய விழைந்தபோது பற்பல தவறுகளில் அடிக்கடி விழுந்துள்ளனர். எனவே, மனித அழுக்கமும் பழக்க வழக்கங்களும் சீரழிந்துள்ளன் மனித ஆளுமையே பன்முறை இழிநிலை அடைந்துள்ளது. இன்றுகூட இயற்கை அறிவியல்கள், தொழில் நுட்பக் கலைகள் ஆகியவற்றின் முன்னேற்றத்தில் பலர் அளவுக்கு மிஞ்சிய பற்றுக் கொண்டு, இவ்வுலகியல் பொருள்களுக்கு ஒருவிதத்தில் வழிபாடு செய்யவும்முற்பட்டள்ளனர்; அவற்றை ஆள்வதற்குப் பதிலாக அவற்றிற்கு அடிமைகளாகியும் ஆகிவிட்டனர்.

உலகியல் அமைப்பு முழுவதையும் சரியாக நிறுவி அதனைக் கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளை நோக்கிச் செலுத்தும் ஆற்றல் வாய்ந்தவராய் மனிதரை ஆக்கும்படி உழைப்பது திருச்சபை முழுவதின் அலுவலாகும். படைப்பின் நோக்கம், உலகைப் பயன்படுத்தும்முறை ஆகியவை பற்றி வீதிகளைத் தெளிவாய் எடுத்துரைப்பது, உலகியல் அமைப்பைக் கிறிஸ்துவில் புதுப்பிக்கும் வகையில் ஒழுக்க நெறி மற்றும் அருள் நெறி சார்ந்த உதவிகளை வழங்குவது என்பன அருள்பணியாளர்களைச் சாரும்.

பொதுநிலையினர், உலகியல் அமைப்பைப் புதுப்பிப்பதைத் தமக்கே உரித்தான கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நற்செய்தி ஒளியிலே, திருச்சபை உளப்படி, கிறிஸ்தவ அன்பால் உந்தப்பட்டு, அவ்வமைப்பில் அவர்கள் நேரடியாக உறுதியாக செயலாற்ற வேண்டும்; குடிமக்கள் என்னும் முறையில் தம் தனிப்பட்ட அறிவுத் திறனோடும் தமக்கே உரித்தான பொறுப்பு உணர்வோடும் மற்ற குடிமக்களுடன் ஒத்துழைக்க வேண்டும். எங்கும் எத p லும் இறை ஆட்சியைச் சார்ந்த நீதுpயை இவர்கள் தேடவேண்டும். இடம், காலம், மக்கள் போன்ற வேறுபட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்றதாயும், கிறிஸ்தவ வாழ்க்கை உண்மைகளுக்கு உகந்ததாயும் உலகியல் அமைப்பைப் புதுப்பிக்க வேண்டும். அதே வேளையில், அவ்வமைப்புக்கு உரிய ஒழுங்குகள் சிறிதும் சிதைந்து போகாதபடி பார்த்துக் கொள்ளவும் வேண்டும். இத்தகைய திருத்தூது அலுவல்களில் கிறிஸ்தவர்களின் சமுதாயப்பணி தலைசிறந்ததாக விளங்குகிறது. இன்று இப்பணி உலகியல் துறைகள் அனைத்திலும், பண்பாட்டிலும் முதலாய்ப் பரவ வேண்டுமென இத்திருச்சங்கம் விரும்புகிறது.2

அன்புப் பணிகளும் சமுதாய உதவிகளும்

8. திருத்தூதுப் பணிச்சயெல் அனைத்துமே அன்பிலிருந்து சுரந்து வலுப்பெற வேண்டும். ஆயினும் சில செயல்கள் தம் இயல்பாலேயே இவ்வன்பைச் சிறந்த முறையில் எடுத்துக்காட்டக் கூடியவையாக இருக்கின்றன. இவையே தம் மீட்புப் பணியின் அறிகுறியாய் இருக்கவேண்டுமென ஆண்டவர் கிறிஸ்து விரும்புகிறார் (காண் மத் 11:4-5).

ஒருவர் தம் முழு உள்ளத்தோடு கடவுளையும் தம்மை அடுத்திருப்பவரைத் தம்மைப்போலவும் அன்பு செய்ய வேண்டுமென்பதே திருச்சட்டத்தின் தலையாய கட்டளையாகும். (காண் மத் 22:37-40). பிறரன்பு பற்றிய இக்கட்டளைகளைக் கிறிஸ்து தம்முடையதாக்கிப் புதுப்பொருள் ஒன்றை இதற்குக் கொடுத்துள்ளார். எப்படியெனில், ''மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்'' (மத் 25:40) என்று கூறி, அவர் தம் சகோதரர் சகோதரிகளோடு தம்மை ஒன்றித்து இவ்வன்பிற்கு இலக்காய் இருக்க விரும்பியுள்ளார். மனித இயல்பை அவர் ஏற்றதனால் மனுக்குலம் முழுவதையும் ஒரு குடுமு;பமாய், இயல்பு கடந்த ஒருவித ஒன்றிப்பால், தம்முடன் இணைத்துக் கொண்டார். அஃதோடு ''ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்'' (யோவா 13:35) என்று கூறி இவ்வன்பைத் தம் சீடரை இனம் காஞம் அடையாளமாகவும் ஆக்கி வைத்துள்ளார்.

தன் தொடக்கக் காலத்திலே திருச்சபை நற்கருணைப் பந்தியோடு 'அன்பு விருந்தை'யும் இணைத்து, இதன்மூலம் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட, அன்பால் இணைக்கப்பட்ட ஒரு சமூகமாக தன்னையே வெளிக்காட்டியது. இதேபோல், எக்காலத்திலும் இவ்வன்பு அடையாளத்தாலேயே திருச்சபை அறிந்துகொள்ளப்படும். அன்புச் செயல்களைப் பிறர் செய்வது பற்றித் திருச்சபைக்கு மகிழ்ச்சியே; அதே நேரத்தில் அச்செயல்களை ஆற்றுவது தமக்குரிய, விட்டுக்கொடுக்க முடியாத, கடமையும் உரிமையும் என அது வலியுறுத்துகிறது. எனவேதான், வறியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் காட்டும் இரக்கம், எல்லா வகை மனிதத்தேவைகளையும் நிறைவுபடுத்தும் அன்புச் செயல்கள், ஒருவருக்கொருவர் செய்யும்உதவிகள் ஆகியவற்றைத் திருச்சபை மிக உயர்வாய் மதிக்கிறது.3

இத்தகைய செயல்களும் அன்புப் பணிகளும் இன்று மிகமிகப் பரவலாய்த் தேவைப்படுகின்றன. ஏனெனில், சமூகத் தொடர்புக் கருவிகள் மிகுவிரைவாய்ச் செயல்படுகின்றன் மக்களிடையே உள்ள தூரமும் ஒருவகையில் நீங்கிவிட்டது; உலகம் முழுவதிலும் வாழும் மக்கள் ஒரே குடும்ப உறுப்பினர்போல் ஆகிவிட்டனர். எனவே, இன்று அன்புப் பணி எல்லாம னிதரையும் எல்லாத் தேவைகளையும் தழுவுவதாய் இருக்கமுடியும்; இருக்கவும் வேண்டும். உணவு, குடிநீர், உடை, உறைவிடம், மருந்து வகைகள், தொழில், கல்வி மற்றும் உண்மையான மனித வாழ்வு வாழத் தேவையான வசதிகள் முதலியவற்றைக் கொண்டிராதோர், பிணியால் அல்லது இன்னலால் துன்புறுவோர், அகதிகளாகவோ கைதிகளாகவோ வருந்துவோர் ஆகியவர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கெல்லாம் கிறிஸ்தவ அன்பு அவர்களைத் தேடிச்சென்று கண்டுபிடித்து மிகுந்த அக்கறை காட்டி உதவி செய்ய வேண்டும். இந்த உண்மை பிறரைவிட அதிகமாய்ச் செல்வத்தில் கொழிக்கும் தனிமனிதர் மீதும் நாட்டின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.4

இத்தகைய அன்புப் பணி எந்த ஒரு குறைசொல்லுக்கும் அப்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும்; தோன்றவும் வேண்டும். இதற்கு நம்மை அடுத்திருப்போரிடத்தில் கடவுளது சாயலை நாம் காண வேண்டும்; அச்சாயலில்தானே அவர் படைக்கப்பட்டிருக்கிறார்! ஒருவரது தேவையை நிறைவு செய்யும் பொழுது அவரில் கிறிஸ்துவையே காணவேண்டும்; ஏனெனில், தேவையிலுள்ள ஒருவருக்கு நாம் ஏதாவது கொடுக்கும்போது ஆண்டவராகிய கிறிஸ்துவுக்கே அதைக் கொடுக்கிறோம். ஒருவருக்கு நாம் உதவி செய்யும் பொழுது ஆள் என்ற முறையில் அவருக்குள்ள மாண்பையும் தன்னுரிமையையும் மிகுந்த மனிதப் பண்போடு மதிக்க வேண்டும். தன்னலம் தேடல், பிறரை அடக்கி ஆள விருமப்ல் என்பவற்றால் நம் கருத்தில் தூய்மை கறைபடவிடலாகாது.5 முதன் முதலில் நீதியின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில், நீதியின் அடிப்படையில் பிறருக்கு உரிமையாய்ச் சென்று சேரவேண்டியதையே இரக்கப்பட்டு அளிக்கும் கொடைபோல் மாற்றிவிடக் கூடும். தீமைகளின் விளைவுகளை மட்டுமல்லாது அவ்றறின் காரணங்களையும் களைய வேண்டும். பிறரைச் சார்ந்து நின்று உதவி பெறுவோர், படிப்படியாக இப்புறச்சார்பிலிருந்து விடுபட்டுத் தன்நிறைவு பெற்றவராய் இருவாகும் முறையில் அவ்வுதவி அமைய வேண்டும்.

ஆகவே, பொதுநிலையினர் தனியாகவோ கூட்டமாகவோ, அனைத்து நாட்டு அளவிலோ, தேவையில் உழலும் தனி மனிதருக்கும் நாடுகளுக்கும் உண்மையில் துணைபுரியும் சமுதாய உதவித் திட்டங்களையும் அன்புப் பணிகளையும் பெரிதும் போற்றுவார்களாக் தத்தம் ஆற்றலுக்கேற்ப அவற்றிற்கு உதவுவார்களாக் இவ்வாறு செய்வதில் நன்மனத்தோர் அனைவருடனும் ஒத்துழைப்பார்களாக.6

இயல் 3
திருத்தூதுப் பணிக்கான பல்வேறு துறைகள்

முன்னுரை

9. பல்வகைப்பட்ட திருத்தூதுப் பணியைப் பொதுநிலையினர் திருச்சபையிலும் உலகிலும் ஆற்றுகின்றனர். இவ்விரு அமைப்புகளிலும் இப்பணியைப் புரிய பல்வேறு துறைகள் உள்ளன. இவற்றுள் திருச்சபைச் சமூகங்கள், குடும்பம், இளைஞர்கள், சமூகச் சூழல்கள், தன்நாட்டு வாழ்வு, அனைத்து நாட்டு வாழ்வு எனும் சில முக்கிய துறைகளைப் பற்றி இங்குச் சிறிது கூற விரும்புகிறோம். இக்காலத்தில் சமூக வாழ்வு முழுவதிலும் பெண்கள் அதிகம் அதிகமாய்ச் செயல்முறையில் பங்கு கொள்வதால், திருச்சபையின் பல்வேறு திருத்தூதுப் பணித் துறைகளிலும் இவர்கள் அதிகம் பங்கு கொள்வது மிக முக்கியமானது.

திருச்சபைச் சமூகங்கள்

10. இறைவாக்கினரும், திருப்பணியாளரும் அரசருமான கிறிஸ்துவின் அலுவலில் பங்கு பெறுபவர்கள் என்னும் நிலையில், பொதுநிலையினர் திருச்சபையின் வாழ்விலும் செயலிலும் தமக்குரிய பங்கைக் கொண்டுள்ளனர். திருச்சபைச் சமூகங்களில் இவர்களது செலய் மிகத் தேவை. அஃது இல்லாமல் அருள்பணியாளர்களின் திருத்தூதுப் பணி பெரும்பாலும் முழுப் பலன் அளிக்க இயலாததாய் ஆகிவிடும். நற்செய்தியை அறிவிப்பதில் பவுலுக்கு உதவிய ஆடவர், மகளிரைப் போன்று (காண் திப 18:18, 26; உரோ 16:3), உண்மையான திருத்தூது மனப்பாங்குடைய பொதுநிலையினர் தம் சகோதரர் சகோதரிகளுக்கு இல்லாததைக் கொடுத்து உதவுகின்றனர்; அருள்பணியாளர்களுக்கும் பிற கிறிஸ்தவர்களுக்கும் உற்சாகம் ஊட்டுகின்றனர்; (காண் 1 கொரி 16:17-18). ஏனெனில், இவர்கள் தம் சமூகத்தில் திருவழிபாட்டு வாழ்விலே செயல்முறையில் பங்கெடுத்து ஊட்டம் பெறுகின்றனர்; அச்சமூகம் ஆற்றும் திருத்தூது வேலைகளில் ஆர்வமுடன் பங்கு கொள்கின்றனர்; திருச்சபையை விட்டு மிகத் தொலைவில் சென்றிருப்பவர்களை அதனிடம் அழைத்து வருகின்றனர்; இறைவாக்கை எடுத்துரைப்பதிலும் குறிப்பாக, மறைக்கல்வி புகட்டுவதிலும் ஆர்வமுடன் ஒத்துழைக்கின்றனர்; அருள்பணியும் திருச்சபைச் சொத்துக்களின் பராமரிப்புப் பணியும் பயன்மிகு முறையில் நடைபெற தம் அறிவுத்திறன் வாயிலாக உதவுகின்றனர்.

சமூக அளவிலே ஆற்றப்படும் திருத்தூதுப் பணிக்குத் தெளிவான எடுத்துக்காட்டாய் அமைவது பங்கு. ஏனெனில், அது தன் எல்லைக்குள் காணப்பெறும் வேறுபட்ட எல்லா மனித வளங்களையும் ஒன்று திரட்டித் த pரு;சசபையின் பொதுமைக்குள் கொணர்கிறது.1 இப்பங்கிலே, பொதுநிலையினர் தம் திருப்பணியாளர்களோடு நெருங்கி ஒன்று சேர்ந்து உழைக்கப் பழகுவார்களாக.2 அதே வேளையில் தம் சொந்தச் சிக்கல்களையும் உலகச் சிக்கல்களையும் மனித நிறைவாழ்வைச் சார்ந்த பிரச்சினைகளையும் தம் திருச்சபைச் சமூகத்திற்கு முன் கொண்டுவந்து கூட்டாய் யாவற்றையும் கலந்தாய்ந்து தீர்வுகாணப் பழகுவார்களாக. தம் திருச்சபைக் குடும்பம் எடுத்துச் செய்யும் எல்லாத் திருத்தூது, நற்செய்தி அறிவிப்பு முயற்சிகளுடனும் தம்மலால் இயன்றவரை ஒத்துழைப்பார்களாக.

பங்கானது மறைமாவட்டத்தின் ஓர் உயிரஞவைப் போன்றுள்ளது; எனவே, பொதுநிலையினர் தம் n சாந்த மறைமாவட்டத்தின் மீது கொண்டுள்ள பரிவைத் தொடர்ந்து வளர்ப்பார்களாக. மறைமாவட்டம் மேற்கொள்ளும் முயற்சிகளில் பங்குக்கொள்ளத் தம் ஆயரால் அழைக்கப்படும்போது உடனே அதற்கு இணங்க எப்பொழுதும் தயாராய் இருப்பார்களாக. உண்மையில் நகர, நாட்டுப்புறப் பகுதிகளின் தேவைகளை3 நிறைவு செய்ய, பங்கு அல்லது மறைமாவட்ட எல்லைக்குள் மட்டும் ஒத்துழைத்தால் போதாது. மாறாக, பங்குகளுக்கு இடையேயும் மறைமாவட்டங்களுக்கு இடையேயும் நாட்டளவிலும் அனைத்துலகிலும் இவ்வொத்துழைப்பை விரிவாக்க முயல்வார்களாக. இத்தகைய ஒத்துழைப்பு மிக அவசியம். ஏனெனில், மக்கள் நாளும் அதிகமாய்க் குடிபெயர்கின்றனர்; ஒருவர் ஒருவர் மீது கொள்ளும் சார்பு அதிகரிக்கின்றது; தொடர்பு வசதி எளிதாகின்றது. எனவே, இனி எந்தச் சமுதாயப் பகுதியும் தனித்து ஒளிந்து இருக்க முடியாது. ஆகவே, பெ h துநிலையினர் உலகம் முழுவதும் பரவி இருக்கும் இறைமக்களின் தேவைகளைப் பற்றி அக்கறை கொள்வார்களாக. முக்கியமாக நற்;செய்தி அறிவிப்பு அலுவல்களைத் தம்முடையவை ஆக்கிக் கொண்டு வேண்டிய கடவுளிடமிருந்து பெற்ற நலன்களில் ஒரு பகுதியையாவது அவருக்கும் பிறருக்கும் திருப்பியளித்து கிறிஸ்தவர்களின் கடமையும் பெருமையுமாகும்.

குடும்பம்

11. அனைத்தையும் ஆக்கியவர் திருமண வாழ்வை மனித சமுதாயத்தின் தொடக்கமாகவும் அடித்தளமாகவும் அமைத்துள்ளார். தம் அருளால் கிறிஸ்துவிலும் திருச்சபையிலும் அதைப் பெரியதோர் அருளடையாளமாக ஆக்கியுள்ளார் (காண் எபே 5:32). எனவே, மணமக்கள், குடும்பத்தினர் ஆகியோரின் திருத்தூதுப்பணி திருச்சபைக்கும் உலக சமுதாயத்துக்கும் தனி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கிறிஸ்தவ மணமக்கள் ஒருவர் ஒருவருக்கும் தன் பிள்ளைகளுக்கும் தம் இல்லத்தைச் சார்ந்த பிறருக்கும் அருள்கொடைத் துணையாளர்களாகவும் நம்பிக்கையில் சாட்சிகளாகவும் இருக்கிறார்கள். அவர்களே தம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை முதன் முதலாகப் பறைசாற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். சொல்லாலும் மாதிரியாலும் இவர்களுக்குக் கிறிஸ்தவ வாழ்விலும் திருத் தூதுப் பணியிலும் பயிற்சி அளிக்கின்றனர்; இவர்கள் தத்தம் அழைத்தலைத் தேர்ந்து கொள்ள முன்மதியுடன் உதவுகின்றனர்; இவர்களில் எவருக்கேனும்இறை அழைத்தல் இருப்பதாகக் கண்டால் அதை முழுக் கவனத்துடன் ஊட்டி வளர்க்கின்றனர்.

திருமணப் பிணைப்பு தூய்மையானது, முறிவு படாதது எனத் தம் வாழ்க்கையாலேயே வெளிப்படுத்தி எண்பிப்பதும், கிறிஸ்தவருக்கேற்ற முறையில் பிள்ளைகளை வ ள ர்ப்பது பெற்றோர் அல்லது காப்போரின் உரிமையும் கடமையும் ஆகும் என வன்மையாய் வலியுறுத்துவதும், குடும்பத்தில் முறையான தன்னாட்சி உரிமையையும் மாண்பையும் பாதுகாப்பதும் மணமக்களின் கடமையாக என்றும் இருந்து வருகின்றது. இன்றோ, இஃது இவர்களது திருத்தூதுப் பணியில் பெரும் பகுதியாக மாறி உள்ளது. இவர்களும் மற்ற கிறிஸ்தவர்களும் நன்மனத்தோர் யாவரோடும் கூடி இதில் ஒத்துழபை;பார்களாக. இவ்வாறு, இவ்வுரிமைகளை அரசியல் சட்டங்கள் பழுதுபடுத்தாமல் பாதுகாக்க முடியும். உறைவிடம், பிள்ளை வளர்ப்பு, உழைப்போர் நிலை, சமூகப் பாதுகாப்பு, வரிகள் ஆகிவற்றைப் பொருத்தமட்டில் சமுதாயத்தை ஆளவோர் குடும்பத் தேவைகளைக் கருத்தில் கொண்டு செலய்படச் செய்யமுடியும். குடி பெயர்தலை ஒழுங்கு செய்யும்போது, இவர்களின் குடும்ப வாழ்க்கை முழுவதும் பாதுகாப்புடன் இருக்கும்படி செய்ய முடியும்.4

சமுதாயத்தில் முதல் உயிரணுவாய் இருப்பதே குடும்பத்தின் தூதுப்பணி. இப்பணியைக் கடவுளிடமிருந்தே குடும்பம் பெற்றுள்ளது. குடும்ப உறுப்பினர் குழுமி கடவுளை நோக்கி வேண்டுதல், திருச்சபையின் இல்லத் திருஇடமாய் குடும்பம் விளங்குதல், திருச்சபையின் வழிபாட்டில் குடும்பம் முழுவதும் கலந்து கொள்ளுதல், விருந்தோம்பும் குடும்பமாக மிளிர்தல், இறுதியாக தேவையுறும் சகோதரர் சகோதரிகள் அனைவரின் சேவைக்காக நீதியையும் பிற நற்செயல்களையும் ஊக்குவித்தல் என்பவற்றால் இத்தூதுப்பணியைக் குடும்பம் நிறைவேற்றும். இக்குடும்பம் ஆற்றும் பல்வேறு திருத்தூது வேலைகளுள் பின்வருபவற்றையும் குறிப்பிடலாம்; கைவிடப்பட்ட குழந்தைகளைத் தத்து எடுத்தல், முன்பின் தெரியாதவரையும் வாஞ்சையுடன் வரவேற்றல், பள்ளிகள் வைத்து நடத்தத் துணைபுரிதல், இளைஞர்களுக்கு அறிவுரையும் உதவியும் வழங்கல், திருமணம் புரிய இருப்வர்கள் சிறந்த முறையில் அதற்குத் தங்களைத் தயார் செய்துகொள்ள உதவுதல், மறைக்கல்வி புகட்டல், பொருளாதார அல்லது ஒழுக்கப் பிரச்சனைகளில் சிக்கியிருக்கும் மணமக்களுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவாக இருத்தல், முதியோர்களின் தேவைகள் தீர்வதற்கும் பொருளாதார முன்னேற்ற நலன்களில் சீரான முறையில் இவர்களுக்கும் பங்கு கிடைப்பதற்கும் ஆவன செய்தல்.

எக்காலத்திலும் எவ்விடத்திலும், சிறப்பாக, நற்செய்தி வித்துகள் முதன் முறையாக விதைக்ப்பெறும் பகுதிகளில், அல்லது தளிர்விடும் பருவத்தில் திருச்சபை இருக்கும் பகுதிகளில், அல்லது ஏதொ ஒரு பெரும் சிக்கலுக்கு உள்ளாயிருக்கும் பகுதிகளில், கிறிஸ்தவக் குடும்பங்கள் உலகின் முன்பாகக் கிறிஸ்துவைப் பற்றி மதிப்பிட முடியாச் சான்று பகரக்கூடும். இதற்கு இக்குடும்பங்கள் நற்செய்திக்கு ஒத்தபடி தங்கள் முழு வாழ்க்கையையும் அமைத்து, கிறிஸ்தவத் திருமணத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கவேண்டும்.5

இளைஞர்

12. இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள் பெரும் செல்வாக்குக் கொண்டுள்ளனர்.7 இவர்களின் வாழ்க்கைச் சூழல்கள், மனநிலைகள், தங்கள் குடும்பங்களோடு இவர்கள் கொண்டுள்ள பிணைப்பு அனைத்துமே மாற்றம் அடைந்துள்ளன. இவர்கள் புதிய சமூக, பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கு மிக விரைவில் அடிக்கடி மாறுகின்றனர். இவர்களின் சமுதாய முக்கியத்துவமும் அரசியல் முக்கியத்துவமும் நாளும் வளர்ந்து கொண்டே வருகின்றன. ஆனால் அதே வேளையில், தங்கள் மேல் விழும் இப்புதுச் சுமைகளைத் தக்க விதமாய்த் தங்கள் திறனற்றவர்களாய்ப் பெரும்பாலும் இவர்கள் காணப்படுகின்றனர்.

சமுதாயத்தில் உயர்வடைந்திருக்கும் இவர்களது செல்வாக்கின் காரணமாக அ தற்கொத்த திருத்தூதுப் பணியும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது; அதே வேளையில் இவர்களுக்குள்ள இயல்பான பண்புகளும் இத்தகைய பணிக்கு இவர்களை ஏற்றவர்களாய் ஆக்குகின்றன. இவர்கள் தங்களைப் பற்றி அதிகம் உணர உணர, வாழ்வின் மேல் கொண்ட ஆவலாலும் பொங்கி வழியும் செயல் துடிப்பாலும் n சாந்தப் பொறுப்பை ஏற்கும்படி உந்தப்படுகின்றனர்; சமுதாய வாழ்விலும், பண்பாட்டு வாழ்விலும் தங்கள் பங்கை ஆற்ற விழைகின்றனர். இந்தப் பேரார்வம் கிறிஸ்துவின் மனநிலையில் ஊறி இருக்க வேண்டும்; திருச்சபையின் அருள்பணியாளர்கள் பால் கொண்டுள்ள பரிவாலும் பணிவாலும் ஊக்கம் பெற்றிருக்க வேண்டும். அப்போது அப்பேராவலிலிருந்து மிகுந்த பலனை எதிர்பாக்கலாம். இளைஞர் சமுதாயத்தின் நேரடி, முதல் திருத்தூதர்களாக இளைஞர்கள் விளங்க வேண்டும்; தாங்கள் வாழும் சமூகச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தங்கள் திருத்தூதுப் பணியைத் தங்களிடையே ஆற்ற வேண்டும்.8

இளைஞரோடு நட்புறவுடன் உரையாடல் நடத்த வயது வந்தோர் முன்வருவார்களாக. இதன் மூலம் வயதினால் உருவாகும் தடைவேலி அகன்றுபோகும்; இரு சாராரும்ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளக்கூடும்; ஒருவர் ஒருவரிடையே தத்தம் சிறப்பு நலன்களைப் பரிமாறிக் கொள்ளக்கூடும். முதன்முதலாகத் தங்கள் முன்மாதிரியாலும், அத்துடன் வாய்ப்புக் கிடைக்கும்போது முன்மதியுள்ள அறிவுரையாலும், பயன்தரு உதவிகளாலும் இளைஞர்களைத் திருத்தூதுப் பணிக்கு அவர்கள் தூண்டுவார்களாக. இளைஞர்களோ வெனில், வயதுவந்தோர் மட்டில் மதிப்பையும் நம்பிக்கையும் வளர்ப்பார்களாக் இயல்பாகவே புதுமையை நாடுபவர்களாயினும், புகழுக்குரிய மரபுகளையும் தகுந்த முறையில் போற்றி வளர்ப்பார்களாக.

சிறுவர் சிறுமியரும் கூட, தமக்கே உரித்தான திருத்தூதுப் பணியைப் பெற்றிருக்கின்றனர். தத்தம் ஆற்றலுக்கேற்பத் தம் தோழர் தோழியரிடையே கிறிஸ்துவின் உயிருள்ள உண்மைச் சாட்சிகளாய் இருக்கின்றனர்.

ஒத்த சமூகச் சூழல்கள்

13. ஒருவர் தாம் வாழும் சமூகத்தின் மனப்பாங்கு, பழக்க வழக்கங்கள், சட்டங்கள், அமைப்புக்ள ஆகியவற்றில் கிறிஸ்தவ மனப்பாங்கை இணைக்க முனைவது சமூகச் சூழலில் ஆற்றக்கூடிய திருத்தூதுப் பணியாகும். இதனை ஆற்றுவதற்கான கடமையும் பொறுப்பும் பொதுநிலையினருக்கு எவ்வளவு உரியதென்றால், இவர்களைத் தவிர வேறு எவராலும் ஒருபோதும் உரிய முறையில் இதனை நிறைவேற்ற முடியாது. இந்தச் சமூகத்துறையில் இவர்கள் தம்மை ஒத்தவர்கள் நடுவில் திருத்தூதுப் பணி ஆற்றலாம். இவண், தம் வாழ்க்கைச் ச hட்சியத்தை வார்த்தைச் சாட்சியத்தால் நிறைவு செய்கின்றனர்.9 தாம் வேலை செய்யும், தொழிலாற்றும், படிக்கும், வாழும், ஓய்வெடுக்கும், தோழமைகொள்ளும் பகுதிகளில் எல்லாம் இவர்கள் தம் சகோதரர் சகோதரிகளுக்கு மிகத் தகுந்த முறையில் உதவுபவர்களாக உள்ளனர்.

நம்பிக்கையாலே பொதுநிலையினர் உலகின் ஒளியாக விளங்குகின்றனர். அனைத்திற்கும்மேலாய் இந்த நம்பிக்கைக்கேற்பத் தம் செயல்கள் அனைத்திலும் காட்டும் நேர்மையின் மூலம் அனைவரையும்உ ண்மையின்மீதும் நன்மையின்மீதும் அன்பு கொள்ளச்செய்து, இறுதியாய்க் கிறிஸ்துவிடமும் த pருச்சபையிடமும் ஈர்க்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளின் வாழ்க்கை நிலை, உழைப்பு, துன்பங்கள், ஏக்கங்கள் ஆகியவற்றில் பங்கு கொள்ளச் செய்யும் சகோதர அன்பின் வழியாக படிப்படியாகவும் நுட்பமான முறையிலும் அனைவரின் இதயங்களையும் மீட்பளிக்கும் அருள்செயலுக்குத் தயாரிக்கின்றனர். சமுதாயத்தை வளர்ச்சியுறச் செய்வதில் தங்களுக்குள்ள பங்கைப் பற்றி முழுமையாக உணர்ந்து தங்கள் வீட்டு சமூக, தொழிசார் பணிகளைக் கிறிஸ்தவப் பெருந்தன்மையோடு நிறைவேற்ற முயல்கின்றனர். இவ்வாறு இப்பொதுநிலையினரின் நடத்தை சிறிது சிறிதாக இவர்கள் வாழும், உழைக்கும் வட்டாரம் முழுவதையும் ஊடுருவும்.

இவ்வட்டாரத்திலுள்ள அனைத்து மனிதருக்கும் இத்திருத்தூதுப் பணி ஆற்றப்பட வேண்டும். அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய எல்லாவித அருள் நலன்களையும் உலகியல் உதவிகளையும் n காடுக்கத் தவறலாகாது. ஆயினும், உண்மையான திருத்தூதுர் இப்பணியில் மட்டும் நிறைவு கொள்ளார்; இவர்கள் சொல்லாலும் அடுத்தவருக்குக் கிறிஸ்துவை எடுத்துரைக்க விழைவர். ஏனெனில், பலர் தம்மை அடுத்து வாழும் பொதுநிலையினர் வழியாக மட்டுமே நற்செய்தியைக் கேட்கக் கூடிய, மற்றும் கிறிஸ்துவை அறிந்து ஏற்கக்கூடிய நிலையில் உள்ளனர்.

தனி நாட்டளவில், அனைத்து நாட்டளவில் பணி

14. கிறிஸ்தவ ஞானத்தை வழங்குபவராய்ப் பொதுநிலையினர் பெரும்பாலும் இருக்கின்றனர். திருத்தூதுப் பணித்தளம் அவர்களது சொந்த நாட்டளவில் அனைத்துலக அளவிலும் வெகுவாய் விரிந்துள்ளது. எனவே, நாட்டுபற்றுடன் தம் சமூகக்கடமைகளை நேர்மையாய் நிறைவேற்றி, அதன்மூலம் உண்மையான பொது நேர்மையாய் நிறைவேற்றி, அதன்மூலம் உண்மையான பொது நலத்தைப் பேண வேண்டியவர்கள் தாங்கள் எனக் கத்தோலிக்கர்கள் உணர்வார்களாக. அஃதோடு அரசியல் அதிகாரம நீதியுடன் செயல்படுமாறு, சட்டங்கள் பொதுநலத்திற்கும் ஒழுக்க நெறிக்கும் ஒத்திருக்குமாறும் தங்கள் கருத்துகளை வலியுறுத்துவார்களாக. அரசியல் காரியங்களில் தேர்சிச பெற்றவர்களும் கிறிஸ்தவப் படிப்பினைகளிலும் நம்பிக்கையிலும் உறுதியுள்ளவர்களுமான கத்தோலிக்கர் பொதுநலகட காரியங்களை ஏற்று நடத்த மறுக்கக் கூடாது. ஏனெனில், இவர்கள் இத்தகைய அலுவலைத் தகுந்த விதமாய் ஆற்றுவதன் மூலம் பொதுநலத்தை நல்லமுறையில் பேண முடியும்; அதே வேளையில் நற்செய்தி பரவுவதற்கு வழிவகுக்கவும் முடியும்.

நன்மனத்தோர் அனைவரோடும் கத்தோலிக்கர் ஒத்துழைக்க முனைவார்களாக் இவ்வாறு உண்மையானவை எவையோ, நீதியானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ (காண் பிலி 4:8) அவற்றையே பேணிக் காப்பார்களாக. முன்மதியோடும் மனித நேயத்தோடும் தாமே முன்வந்து அவர்களோடு உரையாடல் நடத்துவார்களாக. இவண், சமூக, பொது நிறுவனங்களைப் பற்றி ஆய்வு நடத்தி, அவற்றை நற்செய்தி மனப்பாங்குப்படி நிறைவு செய்வார்களாக.

எல்லா மக்களும் ஒருமைப்பாடு அடையவேண்டுமென்ற உணர்வு தடுக்க முடியாதபடி இன்று வளர்ந்து வருகிறது. இன்றைய காலத்தின் அறிகுறிகளில் இது நம் தனிக்கவனத்துக்கு உரியதாக உள்ளது. இந்த ஒருமைப்பாட்டு உணர்வை ஆர்வமுடன் வளர்ப்பதும், அதை உளமார்ந்த, உண்மையான சகோதர வாஞ்சையாய் மாற்றுவதும் பொதுநிலையினரின் திருத்தூதுப் பணியின் கடமையாகும். மேலும், பொதுநிலையினர் அனைத்துலக அளவிலும் அறிவு பெற்றிருக்க வேண்டும். அனைத்து நாட்டளவில். குறிப்பாக, வளரும் நாடுகளின் மக்களைச் சார்ந்த மட்டில் கொள்கை அளவிலோ நடைமுறையிலோ எழும் பிரச்சனைகளையும் இவற்றிற்கான தீர்வுகளையும் இவர்கள் அறிந்திருக்கவேண்டும்.10 மக்களுக்கு இடையே உள்ள உறவு ஒருவருக்கு ஒருவர் கொடுத்து, வாங்கிக் கொள்ளும் உண்மையான சகோதரத்துவப் பரிமாற்றமாக அமையவேண்டுமென்பதைப் பிறநாடுகளில் வேலைசெய்வோர் அல்லது அந்நாடுகளுக்கு உதவி அளிப்போர் அனைவரும் மனதில் இருத்திக் கொள்வார்களாக. அனைத்து நாட்டுக் காரியங்கள் அல்லது சொந்த அலுவல் அல்லது ஓய்வு ஆகிய காரணங்களுக்காகப் பயணம் செய்யும் கிறிஸ்தவர்கள் எங்குச் சென்றாலும், ஊர் ஊராய்ச் சுற்றிவரும் கிறிஸ்துவின் தூதர்கள் தாங்கள் என்பதை நினைவில் கொண்டு, உண்மையிலே அதற்கு ஏற்றவாறு செயலாற்றுவார்களாக.

இயல் 4
திருத்தூதுப் பணியின் பல்வேறு வழிமுறைகள்

முன்னுரை

15. பொதுநிலையினர் தனி ஆள்களாகவோ, பல்வகைச் சமூகங்கள் அல்லது கழகங்களாக ஒன்றாய்க் கூடியோ தம் திருத்தூதுப் பணியை ஆற்ற முடியும்.

தனி ஆள் திருத்தூதுப் பணி

16. தனி ஆள் ஆற்றவேண்டிய திருத்தூதுப் பணி உண்மையான கிறிஸ்தவ வாழ்வு எனும் ஊற்றிலிருந்து வளமாய்ப் பொங்கி எழுகிறது (காண் யோவா 4:14) இதுவே, பொதுநிலையினரின் திருத்தூதுப்பணி அனைத்திற்கும், இணைந்து செயல்படுத்தப்படும் பணிகளுக்கும் கூட, முதல் மூலமும் நிபந்தனையுமாய் உள்ளது. வேறொன்றும் இதற்கு மாற்றாக அமைய முடியாது.

தனிஆள் திருத்தூதுப் பணி எவ்விடத்திலும் எக்காலத்திலும் பயன் விளைவிக்கக் கூடியது; சில சூழ்நிலைகளில் இஃது ஒன்றே தகுந்ததாயும் நடைபெறக் சூடியதாயும் உள்ளது. கழகங்களில் சேர்ந்து ஒத்துழைக்கும் வசதி அல்லது வாய்ப்பு இல்லாதபோதும் எல்லா நிலைப் பொதுநிலையினரும் இந்தப் பணிக்கு அழைக்கப் பட்டிருக்கின்றனர். இதில் ஈடுபட இவர்களுக்குக் கடமையும் உண்டு.

திருச்சபையை வளர்ச்சியுறச் செய்யவும், உலகைத் தூய்மைப்படுத்திக் கிறிஸ்துவில் வாழவைக்கவும் உதவுகின்ற இப்பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி பல்வேறு வகைப்படும்.

நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு இவற்றினின்று தோன்றும் பொதுநிலையினரின் முழுவாழ்வுச் சாட்சியம் தனி ஆள் திருத்தூதுப் பணியின் ஒர தனி வகையாகும்; இது தற்காலத்துக்கு மிகவும் ஏற்ற ஓர் அடையாளமாக அமைகிறது; தம்மை நம்புபவர்களில் கிறிஸ்து வாழ்கிறார் என்பதையும் வெளிக்காட்டுகிறது. எனினும் சில சூழ்நிலைகளில் போதனைத் திருத்தூதும் மிகமிகத் தேவைப்படுகிறது. இதன் வழியாகப் பொதுநிலைனர் கிறிஸ்துவைப் பறைசாற்றுகின்றனர்; அவரது போதனையை தத்தம் நிலைக்கும் திறனுக்கும் ஏற்ப விளக்கிப் பரப்புகின்றனர்; உண்மையோடு அதை அறிக்கையிடுகின்றனர்.

மேலும், இவ்வுலகக் குடிமக்கள் என்ற முறையில், உலகியல் அமைப்பை வளர்சிசியுறச் செய்யவும், நடத்தவும் தேவையானவற்றில் ஒத்துழைக்கும்போது. பொதுநிலையினர் குடும்ப, தொழில், பண்பாட்டு, சமூகத் துறைகளில் செயல்படத் தூண்டும் உயர்ந்த நொக்கங்களை நம்பிக்கை ஒளியில் தேடிக் கண்டுபிடிப்பார்களாக் அஃதோடு, வாய்ப்பு கிட்டும்போது பிறருக்கும் இவற்றைத் தெரிவிப்பார்களாக. இப்படிச் செய்யும்போது, படைப்பவரும் மீட்பவரும் தூய்மையாக்குபவருமான கடவுளோடு தாங்கள் ஒத்துழைப்பதாகவும் அவருக்குப் பகழ்சாற்றுவதாகவும் உணர்வார்களாக.

இறுதியாக, பொதுநிலையினர் அன்பால் தம் வாழ்க்கைக்கு உயிரூட்டி, இயன்றவரை செயல்களினால் அதை வெளிப்படுத்து வார்களாக.

பொதுவழிபாட்டாலும், இறைவேண்டலாலும், தன்னல மறுப்பாலும், வாழ்வின் வருத்தங்களையும் வேதனைகளையும் மனமுவந்து ஏற்றுக் கொள்வதாலும், குன்புறும் கிறிஸ்துவுக்கு ஒத்தவர்களாகி (காண் 2 கொரி 4:10; பொலோ 1:24), எல்லா மனிதரின் உள்ளத்தையும் ஒருவகையில் தாங்கள் தொட முடியும், அனைத்துலகின் நிறைவாழ்வுக்கு உதவவும் முடியும் என்பதை அவர்கள் தம் நினைவில் கொள்வார்களாக.

குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இத்தினி ஆள் திருத்தூதுப் பணி

17. திருச்சபையின் சுதந்திரம் பெரிதும் தடைபட்டிருக்கும் நிலப்பகுதிகளில் இத்தனி ஆள் திருத்தூதுப் பணி மிகவும் தேவைப்படுகிறது. மிகக் கடுமையான இச்சூழ்நிலைகளில் பொதுநிலையினர் தம்மால் இயன்றவரை திருப்பணியாளர்களின் பதில் ஆள்களாய் இருந்து உதவுகின்றனர்; தம் சுதந்திரத்திற்கும் சில வேளைகளில் தம் உயிருக்குமே ஆபத்து வரும் என உணர்ந்தாலும், தம்மால் இயன்ற அளவு தம்மைச் சுற்றியிருப்போருக்குக் கிறிஸ்தவப் படிப்பினையைக் கற்றுக் கொடுக்கின்றனர். இவ்வாறு, சமய வாழ்வை வாழவும், கத்தோலிக்கர் என்ற முறையில் சிந்திக்கவும் பிறருக்குப் பயிற்சி அளிக்கின்றனர்; அருளடையாளங்களை அவர்கள் அடிக்கடி பெறவும், அவர்களது இறைப்பற்றை, சிறப்பாய், தூய நற்கருணைப் பக்தியை வளர்க்கவும் தூண்டுகின்றனர்.1 இன்றும், தாங்கள் துன்புறுத்தப்படும் நேரங்களில் வீரத்துணிவு காட்டும் பொதுநிலையினரைத் தோற்றுவிக்கக் கடவுள் தவறவில்லை. அவருக்கு இத்திரச்சங்கம் உளமார நன்றி செலுத்துகின்றது; இத்தகைய பொதுநிலையினரைத் தந்தை தாய்க்குரிய வாஞ்சையோடும் நன்றி உணர்வோடும் அரவணைக்கிறது.

கத்தோலிக்கர் குறைவாகவும் சிதறியும் உள்ள இடங்கள் அனைத்தும் தனி ஆள் திருத்தூதுப் பணிக்குச் சிறந்த தளமாக அமைகின்றன. இப்பகுதிகளில், மேலே கூறப்பட்ட காரணங்களாலாவது அல்லது தாம் செய்யும் தொழில்களிலிருந்து எழும் வேறு தனிப்பட்ட காரணங்களாலாவது தனி ஆள்களாக மட்டுமே திருத்தூதுப் பணியில் ஈடுபட்டிருக்கும் பொதுநிலையினர், சரியான அமைப்பு, நிறுவனம் என்னும் அடிப்படையில் இல்லாவிடிலும், தங்களுக்கிடையே சிறுசிறு குழுக்களாகக் கூடி உரையாடல் நடத்துவது உகந்ததாகும். இவ்வாறு, உண்மையான அன்பின் சான்றே திருச்சபைச் சமூகத்தின் அடையாளம் என மற்றவர்க்கு என்றும் விளங்கும். மேலும், இவ்விதம் நட்புறவு கொள்வதாலும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதாலும் இவர்கள் ஒருவருக் கொருவர் அருள் உதவி அளித்துக் கொள்கின்றனர்; புறத் தொடர்வில்லாத வாழ்வாலும், செயலாலும் எழும் குறைகளைத் தவிர்க்கவும், தம் திருத்தூதுப் பணியை அதிகப் பயன் தருவதாய் ஆக்கிக் கொள்ளவும் உறுதி பெறுகின்றனர்.

கூட்டு திருத்தூதுப் பணி

18. தமது வாழ்வின் வெவ்வேறு சூழ்நிலைகளில் திருத்தூதுப் பணியைத் தனி ஆளாகி ஆற்றக் கிறிஸ்தவர்கள் அழைக்கப் பட்டிருக்கிறார்கள். எனினும் மனிதர் இயல்பாகவே சமூகப் பண்புடையவர்கள் என்பதையும், கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்பவர்களைத் தம் மக்களாகவும் (காண் 1 பேது 2:5-10) ஓருடலாகவும் (காண் 1 கொரி 12:12) ஒன்றுபடுத்தக் கடவுள் விரும்பியுள்ளார் என்பதையும் இவர்கள் நினைவில் கொள்வார்களாக. எனவே, மனிதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் எனும் இருவகை அடிப்படையில் நம்பிக்கை கொண்டோரின் வாழ்வில் எழும் தேவையைக் கூட்டுத்திருத்தூதுப் பணி சிறப்பாய் நிறைவு செய்கிறது. அதேவேளையில், ''இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்'' (மத் 18:20) என்று உறுதியளித்த கிறிஸ்துவின் திருச்சபை கொண்டுள்ள உறவுக்கும் ஒற்றுமைக்கும் அஃது ஓர் அடையாளமாய் உள்ளது.

ஆகவே, கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டுத் தம் திருத்தூதுப் பணியைச் செய்வார்கள்.2 தூதுப்பணியின் சமுதாயப் பண்பை வெளிப்படுத்தும் தம் குடும்பச் சமூகங்கள், பங்குகள், மறைமாவட்டங்கள், தன்னார்வக் குழுக்கள் ஆகிய அனைத்திலும் இவர்கள் திருத்தூதர்களாய் இருப்பார்களாக.

திருச்சபைச் சமூகங்களிலும் வெவ்வேறு சூழ்நிலைகளிலும் திருத்தூதுப் பணியை அடிக்கடி கூட்டுச் செயலாகவே ஆற்ற வேண்டியிருப்பதால் இக்கூட்டுத் திருத்தூதுப் பணிக்கென நிறுவப்பட்ட கழகங்கள் தம் உறுப்பினர்களுக்கு ஆதரவாய் உள்ளன் இப்பணிக்கு வேண்டிய பயிற்சி அளிக்கின்றன் அவாகளின் திருத்தூது அலுவல்களைச் சரியாக அமைத்து இயக்குகின்றன. இதனால் தனித்தனியாய் ஆற்றும் பணியைவிட கூட்டுப் பணியிலே நாம் அதிக நற்பயனை எதிர்பார்க்க முடிகிறது.

இன்றைய சூழ்நிலைகளில், பொதுநிலையினரின் செயல்கள் ஒருமித்த, கூட்டுத் திருத்தூதுப் பணியாக உருவெடுத்து வலுப்பெற வேண்டியது மிக அவசியம். உண்மையில், எல்லா ஆற்றல்களையும் ஒன்றாய் திரட்டினால்தான் தற்காலத் திருத்தூதுப் பணியின் குறிக்கோள்கள் அனைத்தையும் நாம் அடையவும், அதன் நலன்களை உறுதியாய்க் பாதுகாக்கவும் முடியும்.3 யாருக்காகக் குறிப்பாய் திருத்தூதுப் பணி ஆற்றப்படுகிறதோ, அவர்களின் சமூக நிலைமைகளையும் பொதுவான மனப்பாங்குகளையும் தனிப்பட்டவகையில் கருத்தில் கொள்ளவேண்டும். இல்லாவிடில், இப்பணியில் ஈடுபடுவோர், பொதுமக்களின் கருத்து அல்லது அமைப்புகள் இவற்றால் எழும் நெருக்கடிகளுக்குப் பன்முறையும் ஈடுகொக்க முடியாதவர் ஆகிவிடுவர்.

கூட்டுத் திருத்தூதுப் பணியில் பலவகைகள்

19. திருத்தூதுப் பணி ஆற்றும் கழகங்களுள் பல்வேறு வகைகள் உள்ளன.4 திருச்சபையின் பொதுவான திருத்தூதுக் குறிக்கோளையே தங்களுடையதாகச் சில எடுத்துக் கொள்கின்றன் வேறு சில, தனிப்பட்ட முறையில் நற்செய்தியை அறிவித்துத் தூய்மைப்படுத்தும் குறிக்கோளைக் கொண்டுள்ளன் இன்னும் சில, அன்பு மற்றும் இரக்கச் செயல்காளல் தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்கின்றன.

இக்கழகங்களுள். உறுப்பினரின் நம்பிக்கையையும் நடைமுறை வாழ்கையையும் மிக நெருக்கமாய் இணைத்து ஊக்குவித்து வலியுறுத்துபவை பற்றி முதன்முதலில் கவனிப்போம். இக்கழகங்கள் தம்மிலேயே இறுதி நோக்கங்கள் அல்ல் மாறாக, உலகின் திருச்சபை தன் தூதுப் பணியை ஆற்ற உதவ வேண்டியவை. இக்கழகங்கள் திருச்சபையின் நோக்கங்களோடு ஒத்திருப்பதைப் பொறுத்தும், தனி உறுப்பினரும் முழுக் கழகமும் கொண்டிருக்கும் நற்செய்தி மனப்பாங்கு, இவர்கள் கொடுக்கும் கிறிஸ்தவச் சான்று ஆகியவற்றைப் பொறுத்தும் இவற்றின் திருத்தூது ஆற்றல் இருக்கும்.

நிறுவனங்களின் முன்னேற்றத்தையும், விரைவு நடைபோடும் இன்றைய சமுதாயத்தையும் பார்க்கையில் கத்தோலிக்கரின் திருத்தூது முயற்சிகள் அனைத்து நாட்டளவில் கூட்டிணைந்த அமைப்புக்களாக மேன்மேலும் வளர வேண்டும் எனத் திருச்சபையின் பரந்த தூதுப் பணி கோருகின்றது. அனைத்து நாட்டுக் கத்தோலிக்கச் சங்கங்களோடு இணைந்த குழுக்களும், இவற்றின் உறுப்பினரும், நெருங்கிய முறையில் இச்சங்கங்களோடு ஒன்றுபட்டிருந்தால் அவை தம் குறிக்கோளை நல்லமுறையில் அடையும்.

திருச்சபை அதிகாரிகளோடு ஏற்ற தொடர்பு கொண்டு,5 இத்தகைய கழகங்கள் நிறுவவும் அவற்றை நடத்தவும்,6 நிறுவப்பட்ட கழகங்களில் சேரவும் பொதுநிலையினருக்கு உரிமை உண்டு. எனினும், போதிய காரணமின்றிப் புதிய கழகங்களையும் செயல் திட்டங்களையும் உருவாக்குவதாலும், பயன் தரும் காலம் கழி;ந்த பின்னும் பழமையடைந்த கழகங்களையும் முறைகளையும் வைத்துக் கொண்டிருப்பதாலும் ஆற்றல்கள் வீணாய்ச் சிதறிப்போகின்றன. இவ்வாறு சிதறுவதைத் தடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாட்டிலே செயல்பட்ட முறைகளை முன்பின் சிந்திக்காமல் பிறநாடுகளில் அப்படியே பெயர்த்து வைக்கப் பார்ப்பது ஒருபோதும் ஏற்புடைத்து ஆகாது.7

கத்தோலிக்கச் சேவை

20. கடந்த சில பத்தாண்டுகளாகப் பற்பல நாடுகளில் பொதுநிலையினர் நாளும் அதிகம் அதிகமாய்த் திருத்தூதுப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்து வருகின்றனர். அதற்காக இவர்கள் திருச்சபை ஆட்சியாளரோடு மிக நெருங்கிய ஒன்றித்து, பல்வேறுபட்ட கழகங்களிலும் செயல்முறைகளிலும் தம்மையே இனைத்துள்ளனர்;;;: இவண், தம் திருத்தூதுக் குறிக்கோள்களை நல்ல முறையில் அடைந்துள்ளனர், அடைத்தும் வருகின்றனர். இவற்றுள் அல்லது இவற்றை ஒத்த பழைய நிறுவனங்களில் தனிக்கவனம் பெற வேண்டியவை ஒரு சில உள. இவை பல்வேறு முறைகளில் செயலாற்றுபவை: ஆயினும், இவை தம் தகுதிக்கு ஏற்றவாறு, திருத்தந்தையர், ஆயர்கள் பலரால் ஊக்கமும் பாராட்டும் பெற்றுள்ளன: அவர்களிடமிருந்து கத்தோலிக்கச் சேவை எனும் பெயரையும் பெற்றுள்ளன: திருச்சபை ஆட்சியாளரின் திருத்தூதுப் பணிக்குப் பொதுநிலையினர் தரும் ஒத்துழைப்பு எனப் பன்முறை இவை அழைக்கப்பட்டுள்ளன.8

இந்தத் திருத்தூதுப் பணிமுறைகள், கத்தோலிக்கச் சேவை என்ற பெயரைக் கொண்டிருந்தாலும் சரி வேறுபெயரைச் சூடியிருந்தாலும், இன்று உயர் மதிப்பு வாய்ந்த திருத்தூதுப் பணி ஆற்றுகின்றன. இவை பின்வரும் தனிப் பண்புகளை எல்லாம் ஒருங்கே கொண்டுள்ளன:

(அ) இத்தகைய திருத்தூதுச் சங்கங்களின் உடனடி நோக்கு திருச்சபையின் திரத்தூது நோக்க: அதாவது, பலிவேறு சமூகங்களையும் வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் நற்செய்தி மனப்பாங்கால் நிரப்பும் வண்ணம் நற்செய்தி அறிவிப்பது, மனிதரைத் தூய்மைப்படுத்துவது, இவர்களின் மனச்சான்றைக் கிறிஸ்தவ முறையில் உருவாக்குவது ஆகியவையே.

(ஆ) பொதுநிலையினர் தங்களுக்கே உரிய முறையில் திருச்சபையின் அதிகாரிகளோடு ஒத்துழைக்கின்றனர்; மேற்கூறிய சங்கங்களின் நடத்துவதிலும், திருச்சபையின் அருள்பணி ஆற்றப்படவேண்டிய நிலைமைகளை ஆய்ந்துணர்வதிலும், செயல் திட்டத்தை வகுத்து நிறைவேற்றுவதிலும் தம் அனுபவத்தைக் கொடுத்துப் பொறுப்பேற்கின்றனர்.

(இ) ஓர் உயிருள்ள உடலைப்போல் இப்பொதுநிலையினர் ஒன்றாய் இணைந்து செயலாற்றுகின்றனர்; இவ்வாறு திருச்சபை சமூகத்தைத் தகுந்த முறையில் சுட்டிக் காட்டி, திருத்தூதுப் பணியையும் மிகுந்த பலனளிப்பதாய் ஆக்குகின்றனர்.

(ஈ) திருத்தூதுப் பணியில் செயலாற்றவும் நேரடியாக ஒத்துழைக்கவும் தாமாக முன்வருபவர் அல்லது அழைப்புப் பெறுபவர் அதே திருச்சபை ஆட்சியாளரின் உயர் கண்காணிப்பின் கீழ் இச்செயலை ஆற்றுகின்றனர். இத்தகைய ஒத்துழைப்பைத் திருச்சபை ஆட்சியாளர் வெளிப்படையாக ஓர் 'ஆணை' மூலம் உறுதிப்படுத்தலாம்.

இத்தனிப் பண்புகள் யாவற்றையும் ஒருங்கே கொண்டுள்ள சங்கங்கள் எவை எனத் திருச்சபை ஆட்சியாளர் அறுதியிடுகின்றனரோ, அவை நாட்டினுடைய, மக்களுடைய தேவைகளுக்கு ஏற்பப் பலவேறு வடிவங்களையும் பெயர்களையும் கொண்டிருந்தாலும், 'கத்தோலிக்கச் சேவை' என்றே கருதப்பெற வேண்டும்.

இத்தகைய நிறுவனங்கள் உண்மையாகவே திருச்சபையின் திருத்தூதுத் தேவைகளைப் பல நாடுகளில் நிறைவு செய்கின்றன. எனவே, இத்திருச்சங்கம் இவற்றைப் பெரிதும் பாராட்டுகிறது; மேற்கூறிய பண்புகளை மேன்மேலும் செயல்படுத்தவும், திருச்சபையிலே சகோதரத்துவ முறையில் திருத்தூது அமைப்புகள் அனைத்தோடும் ஒத்துழைக்கவும் இச்சங்கங்களிலே பணியாற்றும் திருப்பணியாளர்களுக்கும் பொதுநிலையினருக்கும் அழைப்பு விடுக்கின்றது.

திருத்தூதுப் பணிக் கழகங்களுக்குக் காட்ட வேண்டிய மதிப்பு

21. திருத்தூதுப் பணி ஆற்றும் கழகங்கள் யாவற்றுக்கும் சரியான மதிப்பளிக்கப்படவேண்டும். கால, இடத் தேவைகளுக்கு ஏற்பத் திருச்சபை ஆட்சியரிடமிருந்து புகழுரையோ, பரிவுரையோ பெற்ற கழகங்கள் அல்லது அதிக தேவையாயிருப்பதால் நிறுவப்பட வேண்டும் என ஆணை பெற்ற கழகங்கள் அனைத்தையும், திருப்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் யாவரும் பெரிதும் மதிக்க வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஏற்ற முறையில் அவற்றை ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய கழகங்களுடன் அனைத்து நாட்டக் கத்தோலிக்கக் கழகங்களும் குழுக்களும் இன்று மிக முக்கியமானவையாய்க் கருதப்பட வேண்டும்.

திருச்சபைப் பணியில் சிறப்பாக செயல்படும் பொதுநிலையினர்

22. திருமணம் முடித்தவராகவோ திருமணம் துறந்தவராகவோ, நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ திருத்தூது நிறுவனங்களிலும் இவற்றின் செயல் திட்டங்களிலும் சேவை செய்யத் தங்களையும் தங்கள் தொழில் திறமைகளையும் அர்ப்பணித்து வாழும் பொது நிலையினர் திருச்சபையில் தனி மதிப்புக்கும் பாராட்டலுக்கும் உரியவராவர். தத்தம் நாட்டு எல்லைக்குள்ளோ, அனைத்து நாட்டு அளவிலோ, குறிப்பாய், புதிய திருச்சபைகள், நற்செய்தி அறிவிக்கப்படும் பகுதிகள் ஆகியவற்றின் கத்தோலிக்கச் சமூகங்களிலோ திருத்தூதுப் பணிக் கழகங்களுக்கும் செயல் திட்டங்களுக்கும் தங்கள் சேவையை அளிக்கும் பொதுநிலையினரின் தொகை நாளுக்கு நாள் சேவையை அளிக்கும் பொதுநிலையினரின் தொகை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு வருவது திருச்சபைக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

திருச்சபையின் அருள்பணியாளர்கள் இத்தகைய பொதுநிலையினரை விருப்புடனும் நன்றி உணர்வோடும் ஏற்றுக்கொள்வார்களாக் நீதி, நடுநிலை, நேர்மை, அன்பு என்பவற்றிற்கும் இயன்ற அளவு முழுவதும் ஒத்தபடி இவர்களது வாழ்க்கைநிலை அமைந்திருக்கும்படி கவனித்துக் கொள்வார்களாக. சிறப்பாக, இவர்களும் இவர்களின் குடும்பங்களும் சீராக வாழ்வதற்கு வேண்டிய பல உதவியும் தேவையான பயிற்சியும் அருள்நெறி ஆறுதலும் ஊக்கமும் இவர்களுக்குக் கிடைக்கும்பழ அருள்பணியாளர்கள் பார்த்துக் கொள்வார்களாக.

இயல் 5
கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை

முன்னுரை

23. தனி ஆள்களாகவோ ஏதோ ஒரு கழக உறுப்பினர்களாகவோ கிறிஸ்தவர்கள் செய்யும் பொதுநிலைத் திருத்தூதுப் பணி திருச்சபை முழுவதின் தூதுப்பணியோடு சீரானமுறையில் இணைந்திருக்க வேண்டும். உண்மையாகவே தூய ஆவி கடவுளின் திருச்சபையை வழிநடத்திக் கண்காணிக்க ஏற்படுத்தி உள்ளவர்களோடு (காண் திப 20:28) இணைந்திருப்பது கிறிஸ்தவத் திருத்தூதுப் பணிக்கு இன்றியமையாத பண்பாகும். இதைப்போன்று திருச்சபை ஆட்சியாளரால் தக்கபடி ஒழுங்குபடுத்தப்படவேண்டிய பல்வேறு திருத்தூது முயற்சிகளுக்குள்ளேயும் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.

ஏனெனில். திருச்சபையின் திருத்தூதுப் பணி முழுவதிலும் சகோதரத்துவ அன்பு மிளிரவும், பொதுக் குறிக்கோள்களை அடையவும், தீங்கிழைக்கும் போட்டிகளைத் தவிர்க்கவும் ஒற்றுமை மனப்பான்மையை நாம் ஊக்குவிக்க வேண்டும். இதற்காக, திருச்சபையில் உள்ள திருத்தூதுப் பணி முறைகள் அனைத்தும் ஒன்றை ஒன்று உயர்வாக மதிக்க வேண்டும். அத்தோடு ஒவ்வொரு குழுவின் தனிப் பண்பைப் பாதுகாத்துக் கொண்டே அனைத்தையும் தக்கமுறையில் ஒருங்கிணைக்க வேண்டும்.1

திருச்சபையில் சில செயல்களுக்கு இருவகைத் திருப்பணி நிலையினர், துறவியர் மற்றும் பொதுநிலையினரின் இசைவிணக்கமும் ஒத்துழைப்பும் தேவைப்படும் அப்போது, மேற்கூறிய மதிப்பும் ஒருங்கிணைப்பும் எவ்வளவு முக்கியம் என்பது தெளிவாகிறது.

திருச்சபை ஆட்சியாளருடன் கொள்ள வேண்டிய உறவு

24. பொதுநிலையினரின் திருத்தூதுப் பணியை ஊக்குவிப்பது, இதற்கான தத்துவங்களையும் அருள் உதவிகளையும் அளிப்பது, திருத்தூதுப் பணியைத் திருச்சபையின் பொதுநலனைப் பேணும் வகையில் அமைப்பது, கோட்பாடு, ஒழுங்கு ஆகியவை காக்கப்படுமாறு கவனித்துக் கொள்வது என்பவை அனைத்துத் திருச்சபை ஆட்சியாளரையும் சார்ந்ததாகும்.

பொதுநிலைத் திருத்தூதுப் பணியின் வகைகளையும் நோக்கங்களையும் பொறுத்து அப்பணிக்கு திருச்சபை ஆட்சியாளருக்கும் இடையே உள்ள உறவும் பல்வகைப்பட்டிருக்கும்.

ஏனெனில், பொதுநிலையினர் தங்கள் சொந்த விருப்பத்தால் தேர்ந்தெடுத்து, தங்கள் முன்மதியுள்ள தீர்ப்பால் கண்காணித்துவரும் திருத்தூது முயற்சிகள் பல உள. இத்தகைய முணற்சிகளாலேயே சில சூழ்நிலைகளில் திருச்சபையின் தூதுப்பணி மிக நல்லமுறையில் ஆற்றப்படமுடியும். எனவே, திருச்சபை ஆட்சியாளர் இவற்றை அடிக்கடி பாராட்டுகின்றனர்; பரிந்துரைக்கின்றனர்.2 ஆயினும், முறையாகத் திருச்சபை அதிகாரிகளின் ஒப்புதல் பெற்றிருந்தால் தவிர. எம்முயற்சியும் 'கத்தோலிக்க' எனும் அடைமொழியைத் தனக்குச் சூட்டிக் கொள்ளக்கூடாது.

பொதுநிலையினரின் திருத்தூது முறைகளுள் சில திருச்சபை ஆட்சியாளரால் பற்பல வகைகளில் வெளிப்படையாக ஏற்புப் பெறுகின்றன.

திருச்சபையின் பொதுநலத் தேவை காரணமாக, அதன் அதிகாரிகள் ஆன்ம குறிக்கோளை நேரடியாய்க் கொண்டுள்ள திருத்தூதுக் கழகங்களிலிருந்தும் முயற்சிகளிலிருந்தும் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தனிப்பட்ட முறையில் ஊக்குவிக்கலாம்; இவ்வாறாயின் அவர்கள் இவைமட்டில் தனிப்பொருப்பு மேற்கொள்வர். இவ்வாறு, திருச்சபை ஆட்சியாளர் திருத்தூதுப் பணியைச் சூழ்நிலைகளுக்கு ஏற்பப் பற்பலவிதமாய் ஒழுங்குபடுத்தி, அதில் சில முறைகளைத் தம் சொந்தத் திருத்தூதுப் பணியோடு நெருங்கிய முறையில் இணைத்துக் கொள்கின்றனர். திருச்சபை ஆட்சியாளர் எடுக்கும் இந்த நடவடிக்கை திருச்சபை விடுவிக்கும் பல்வேறு ஏடுகளில் 'ஆணை' என அழைக்கப்படுகிறது. ஆயினும் அதேநேரத்தில் இவ்விரு திருத்தூதுப் பணிகளின் இயல்பும் இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடும் பாதுகாக்கப்படவேண்டும்; அஃதோடு, தாமாகவே செயலாற்றுவதற்குத் தேவையான வாய்ப்புகள் பொதுநிலையினரிடமிருந்து பறிபோய்விடக்கூடாது.

இறுதியாக, கிறிஸ்தவக் கோட்பாடுகளை எடுத்துரைத்தல், திருவழிபாட்டுச் செயல்கள் சிலவற்றை நிறைவேற்றல், ஆன்ம பணி ஆகிய அருள்பணிகளோடு இணைந்த சில அலுவல்களை ஆற்றும்படி திருச்சபை ஆட்சியாளர் பொதுநிலையினர் சிலரிடம் கேட்டுக் கொள்ளலாம்; இவை ஒப்படைக்கப்பட்ட பணிகள் என்ற காரணத்தால் பொதுநிலையினர் இவவலுவலை ஆற்றும்போது திருச்சபை அதிகாரிகளின் வழிகாட்டலுக்கு முற்றிலும் அமைந்தே இருப்பர்.

உலகியல் நிறுவனங்களையும் செயல் திட்டங்களையும் பொறுத்த வரையில், இவ்வுலகியல் காரியங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளைப் போதித்தலும், அவற்றிற்க்கு அதிகாரபூர்வமாக விளக்கம் கொடுப்பதும் திருச்சபை அதிகாரிகளின் அலுவல் ஆகும். மேலும், அனைத்தையும் சரியாய் ஆய்ந்து பார்த்தும், வல்லுநர்களின் உதவியை பயன்படுத்தியும், இந்த உலகியல் நிறுவனங்கள் மற்றும் செயல்த்திட்டங்கள் ஒழுக்க நெறிகளுக்கு ஒத்துள்ளனாகவா எனத் தீர்ப்பிடுவதும் இயல்பு கடந்த நலன்களை பேணிவளர்க்கத் தேவையானவை யாவை என வறையறுப்பதும் அவர்களைச் சார்ந்ததே.

திருப்பணியாளர்கள் துறவியர் என்பவருடன் பொதுநிலையினர் கொண்டிருக்க வேண்டிய உறவு

25. திருப்பணியாளராயினும் பொதுநிலையினராயினும், கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் திருத்தூதுப் பணியை ஆற்றும் பொதுவான கடமையும் உரிமையும் உண்டு என்பதையும், திருச்சபையைக் கட்டி எழுப்புவதில் பொதுநிலையினருக்குத் தனிப்பங்கு உண்டு என்பதையும், ஆயர்கள், பங்குத் திருப்பணியாளர்கள், இருவகைத் திருப்பணிநிலைச் சார்ந்த பிற திருப்பணியாளர்கள் அனைவரும் கருத்தில் கொண்டிருப்பார்களாக.3 ஆகவே, அவர்கள் திருச்சபையிலும் திருச்சபைக்காகவும் பொதுநிலையினரோடு சகோதரராக ஒன்றித்து உழைப்பார்களாக் திருத்தூது அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் பொதுநிலையினர் மீது தனி அக்கறை காட்டுவார்களாக.4

பொதுநிலையினரின் திருத்தூதுப் பணியில் சிறப்பான முறையில் உதவுமாறு தகுதி வாய்ந்த, தக்க பயிற்சி பெற்ற திருப்பணியாளர்களைக் கவனமாய்த் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும்.5 திருச்சபை ஆட்சியாளரிடமிருந்து இப்பணியை ஏற்று ஆற்றும் இவர்கள், தம் அருள்பணியில் அந்தத் திருச்சபை ஆட்சியாளரின் பதில் ஆள்களாய் இருக்கின்றனர். திருச்சபையின் மனப்பாங்கிலும் போதனையிலும் பற்றுறுதிவுடன் நிலைத்திருந்து, பொதுநிலையினருக்கும் திருச்சபை ஆட்சியாளருக்கும் இடையே நல்லுறவை இவர்கள் வளர்ப்பார்களாக. தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் கத்தோலிக்கக் கழகங்களின் அருள் வாழ்வையும் திருத்தூது உணர்வையும் பேணி வளர்க்கத் தம்மையே நேர்ந்துவிடுவார்களாக் அவை ஆற்றுகின்ற திருத்தூது அலுவல்களுக்கு ஆதரவு காட்டுவார்களாக. பொதுநிலையனைரொடு தொடர்ந்து உரையாடல் நடத்தித் திருத்தூதுச் செயல்களை மிகு பயனுறு முறையில் ஆக்குவதற்கான வழிகள் எவையெனக் கருத்துடன் ஆய்ந்து உதவுவார்களாக. தனியொரு கழகத்திற்குள்ளேயும், பல்வேறு கழகங்களிடையேயும் ஒற்றுமை மனப்பான்மையை ஊக்குவிப்பார்களாக.

இறுதியாய், துறவறச் சகோதரர்களும் சகோதரிகளும் பொதுநிலையினர் ஆற்றும் திருத்தூது அலுவல்களை மதிப்பார்களாக. தத்தம் துறவறச் சபைகளின் மனப்பாங்குக்கும் சட்டங்களுக்கும் ஏற்றபடி, பொதுநிலையினர் செய்யும் அலுவல்களை ஊக்குவிக்க மகிழ்ச்சியுடன் தங்களை அர்ப்பணிப்பார்களாக.6 இதேபோல், திருப்பணியாளர்களின் அலுவல்களையும் தாங்கித் துணைபுரிந்து நிறைவு செய்ய முன்வருவார்களாக.

தனிப்பட்ட அறிவுரைக் குழுக்கள்

26. மறைமாவட்டங்களில் நற்செய்தியை அறிவித்துத் தூய்மைப்படுத்தும் துறையிலோ, பிறரன்பு, சமூகப்பணித் துறைகளிலோ, வேறு எத்துறைகளிலோ திருச்சபை ஆற்றும் திருத்தூது அலுவல்களில் உதவும்படியாக முடிந்தமட்டில் சில அறிவுரைக் குழுக்களை அமைக்க வேண்டும். இவற்றில் திருப்பணியாளரும் துறவியரும் பொதுநிலையினரோடு நன்கு ஒத்துழைப்பார்களாக. இந்த அறிவுரைக் குழுக்களால் வெவ்வேறு பொதுநிலையினர் கழகங்களும் இவை மேற்கொள்ளும் முயற்சிகளும் இணைந்து இயங்கும்படி உதவமுடியும். அதே வேளையில். ஒவ்வொரு குழுவின் தனிப்பண்பும் தனித்தியங்கும் தன்மையும் பாதுகாக்கப்படும்.7

இத்தகைய அறிவுரைக் குழுக்கள் முடிந்தமட்டில் ஒவ்வொரு பங்கிலும், பல பங்குகளுக்கிடையேயும், பல மறைமாவட்டங்களுக்கிடையேயும், நாட்டளவிலும் அனைத்துலக அளவிலும்கூட நிறுவப்பட வேண்டும்.8

இஃதுடன் பொதுநிலையினரின் திருத்தூதுப் பணிக்கு உதவியாகவும் தூண்டுகோலாகவும் இருக்கத் திருச்சபை ஆட்சிப் பீடத்தில் தனிச் செயலகம் ஒன்று அமைக்கப்படட்டும். பொதுநிலையினர் மேற்கொள்ளும் பல்வகை திருத்தூதுப் பணிகளைப் பற்றித் தகவல் கொடுக்கவும், இத்துறையில் எழும் இன்றைய சிக்கல்களை ஆய்ந்து அறியவும், திருத்தூது வேலைகளிலே திருச்சபை ஆட்சியாளருக்கும் பொதுநிலையினருக்கும் அறிவுரை கூறி உதவவும் ஏற்ற வழிவகைகளைக் கொண்ட நடுநிலையினரின் பல்வேறு திருத்தூதுப் பணி இயக்கங்களும் முயற்சிகளும் இச்செயலகத்தோடு ஒத்துழைக்கும். இதில் பொதுநிலையினரோடு திருப்பணியாளரும் துறவியரும்பெறுவார்களாக.

பிற கிறிஸ்தவர்களோடு பிற சமயத்தவரோடும் ஒத்துழைத்தல்

27. நற்செய்தி எனும் பொது மரபுச் செல்வமும் அதன் விளைவாக எழும் கிறிங்தவச் சான்று பகரவேண்டிய பொதுவான கடமையும் பிற கிறிஸ்தவர்களுடன் கத்தோலிக்கர் கொள்ளவேண்டிய ஒத்துழைப்பை உணர்த்துகின்றனர்; பல வேளைகளில் அதைக் கட்டாயம் ஆக்குகின்றன. இவ்வொத்துழைப்பை இவர்கள் தனி வழியாகவோ, கழகங்கள் வழியாகவோ, நாட்டளவிலோ, அனைத்துலக அளவிலோ செயல்படுத்த வேண்டும்.9

அதுபோலவே, கிறிஸ்துவின் பெயரை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாவிடினும் பொதுவான மனித மதிப்பகளை ஒப்புக் கொள்ளும் பிற மனிதரோடும் திருத்தூதுக் குறிக்கோள்களை அடையத்தேடும் கிறிஸ்தவர்கள், அம்மதிப்புகள் காரணமாக, ஒன்றாய்க் கூடி ஒத்துழைக்க வேண்டியிருக்கும்.

உலகியல் செயல்களிலே தனிமுக்கியத்துவம் வாய்ந்தது பொதுநிலையினரின் இந்த முன்மதி வாய்ந்த, ஊக்கமிகு ஒத்துழைப்பே.10 இதனால், உலக மீட்பரான கிறிஸ்துவுக்கும் மனிதக் குடும்பத்தின் ஒற்றுமைக்கும் இவர்கள் சான்று பகர்கின்றனர்.

இயல் 6
திருத்தூதுப் பணிக்கான பயிற்சி

திருத்தூதுப் பணிக்குப் பயிற்சி தேவை

28. முழுமையான, பலவகைப் பயிற்சி இருந்தால்தான் திருத்தூதுப் பணி முழுப்பலனையும் தரக்கூடும். பொதுநிலையினர் தொடர்ந்து பெற வேண்டிய அருள்நெறி, அறிவு வளர்சிசி மட்டுமின்றி, காரியங்கள், ஆள்கள், கடமைகள் ஆகியவற்றிற்கேற்ப மாறுபடும் சூழிநிலைக்குத் தக்கவாறு பணிகளைத் தழுவி அமைக்க வேண்டியதின் தேவையும் இம்முழுப் பயிற்சியைக் கோருகின்றது. இத்திருச்சங்கம் பிற ஏடுகளில் உறுதியாக எடுத்துக் கூறியுள்ள அடித்தளங்களில் ஊன்றி நின்று1 திருத்தூதுப் பணிக்கானஇப்பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். கிறிஸ்தவர் எல்லாருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய பயிற்சியோடு, ஆள்கள், சூழ்நிலைகள் ஆகியவற்றின் வேறுபாட்டின் காரணமாக, பல்வகைத் திருத்தூது முயற்சிகளுக்கெனத் தனிப்பட்ட சிறப்புப் பயிற்சியும் தேவைப்படுகிறது.

பொதுநிலைத் திருத்தூதுப் பணிக்கான பயிற்சியின் அடிப்படை

29. திருச்சபைத் திருத்தூதுப்பணியில் பொதுநிலையினர் தமக்கே உரித்தான முறையில் பங்கு பெறுகின்றனர். ஆகவே, அவர்களது திருத்தூதுப் பயிற்சியும் பொதுநிலைக்குரிய உலகியல் பண்பலிருந்தும் அருள்நெறியிலிருந்தும் தனித்தன்மை பெறுகிறது.

திருத்தூதுப் பணிக்கான பயிற்சிக்கு முன்பு, ஒவ்வொருவரும் தம் திறமைக்கும் ஏற்ற முழுமையான மனிதப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், பொதுநிலையினர் இன்றைய உலகத்தை நன்கு அறிந்தவராய் தம் சொந்த சமுதாயத்திலும் பண்பாட்டிலும் ஊறிய உறுப்பினராய் இருக்க வேண்டும்.

ஆயினும், எல்லாவற்றிற்கும் மேலாய், பொதுநிலையினர் கிறிஸ்துவினுடையவும், திருச்சபையினுடையவும், தூதுப்பணியை நிறைவேற்றக் கற்றிருக்க வேண்டும். இதற்காக, படைப்பு, மீட்பு எனும் இறைத்திட்டத்தின்மேல் நம்பிக்கை கொண்டு வாழ்வார்களாக. இறை மக்களுக்கு உயிரூட்டுபவரும், இறைத் தந்தை மீதும் அவரிலே உலகின் மீதும் பிறர் மீதும் அன்பு காட்ட மனிதர் யாவரையும் தூண்டி வருபவருமான தூய ஆவியால் இயக்கப்படுவார்களாக. எத்தகைய திருத்தூதுப் பணியும் பயனுள்ளதாய் இருக்க இப்பயிற்சி அடிப்படையாகவும் நிபந்தனையாகவும் இருக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

அருள்வாழ்வுப் பயிற்சியுடன் வயது, வாழ்க்கை நிலை, திறமைகள் ஆகியவற்றின் வேறுபாட்டிற்கு ஏற்றபடி, இறையியல், ஒழுக்கவியல், மெய்யியல் என்பவற்றில் உறுதியான கல்விப் பயிற்சியும் தேவை. அஃதுடன், பொதுவான பண்பாடு, செயல் முறைப் பணிற்சி, தொழில் நுட்பத்துறைப்பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் நாம் சிறிதும் புறக்கணித்து விடலாகாது.

மக்களிடையே நல்லுறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் உண்மையான மனித மதிப்புகள் பேணப்பட வேண்டும். சிறப்பாய், உடன்பிறந்தோராய்ப் பிறருடன் கூடி வாழ்ந்து, ஒத்துழைத்து, உரையாடல் நடத்தும் கலவைப் போற்றி வளர்க்க வேண்டும்.

திருத்தூதுப் பணிக்கான பயிற்சி ஏட்டளவிலே நின்றுவிடக் கூடாது. மாறாக, இப்பயிற்சியின் தொடக்கத்திலிருந்தே அனைத்தையும் நம்பக்கை ஒளியில் கண்டு மதிப்பீடு செய்திடவும், இச்செயல் வழியாகத் தம்மையும் பிறரையும் உருவாக்கி நிறைவு படுத்தவும், இவ்வாறு திருச்சபையின் செயல்முறைப் பணியில் இறங்கவும் பொதுநிலையினர் படிப்படியாக, முன்மதியோடு கற்றுக்கொள்ளட்டும்.2 இந்தப் பயிற்சியை என்றும் நிறைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்;;;; ஏனெனில் மனித ஆளுமை முதிர்ச்சி வளர்ந்து கொண்டே இருப்பதாலும், புதுப்புதுப் பிரச்சனைகள் எழுவதாலும் இப்பயிற்சி நாளுக்கு நாள் ஆழ்ந்த அறிவையும் அதற்கேற்ற செல்களையும் கோருகின்றது. இப்பயிற்சியின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவு செய்ய வேண்டுமாயின், மனித ஆளுமையின் ஒற்றுமையும் முழுமையையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்; அப்பொழுதுதான் மனிதரின் ஒருங்கிணைவும் சமநிலையும் பாதுகாக்கப்பெற்று, உறுதிப்படுத்தப்படும்.

இவ்விதம் பயிற்சிபெறும் பொதுநிலையினர் ஆழமாய்ச் செயல்முறையில் உலகியல் அமைப்பில் ஈடுபடுகின்றனர்; அதன் காரியங்களை நடத்துவதில் பயன்தரு முறையில் தம் பங்கை ஏற்கின்றனர்; அதே வேளையில், திருச்சபையின் உயிருள்ள உறுப்புக்களாயும் அதன் சாட்சிகளாயும் அமைந்து, உலகியல் சாரியங்களிடையே அத்திருச்சபையே தம்முடனிருந்து செயலாற்றும்படி செய்கின்றனர்.3

திருத்தூதுப் பணிப் பயிற்சி அளிக்கவேண்டியவர்கள்

30. சிறுவர் கல்வி கற்றத் தொடங்கும் போதே திருத்தூதுப்பணிக்கான பயிற்சியும் தொடங்கவேண்டும். வளரும் பருவத்தினரும் இளைஞர்களும் தனிப்பட்ட முறையிலே திருத்தூதுப் பணிக்கு அறிமுகம் செய்யப் பெற்று திருத்தூது மனப்பாங்கில் ஊறியிருப்பார்களாக. புதுப்புது அலுவல்களின் தேவைகளுக்கேற்ப இந்தப் பயிற்சி இவர்கள் வாழ்நாள் முழுவதும் நிறைவு பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். ஆகவே, கிறிஸ்தவக் கல்வி அளிக்கக் கடமைப்பட்டவர்களே அனைவருமே திருத்தூதுப் பிணக்கான பயிற்சியையும் அளிக்கக் கடமைப்பட்டவர்கள் என்பது தெளிவு.

மனிதர் அனைவர்மேலும் கடவுள் கொண்டுள்ள அன்பைச் சிறுவயதிலிருந்தே குடும்பத்தில் தம் பிள்ளைகள் அறிந்துணரும்படி செய்வதும், தம்மை அடுத்திருப்போரின் ஆன்ம, உடல் நலத் தேவைகளைப் பற்றி அக்கறை காட்டும்படி சிறப்பாய்த் தம் மாதிரியால் பிள்ளைகளுக்குப் படிப்படியாய் அறிவுறுத்துவதும் பெற்றோரின் கடமையாகும். எனவே, குடும்பம் முழுவதும் அதன் கூட்டு வாழ்வும் திருத்தூதுப் பணிக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு நாற்றாங்காலாய் அமையட்டும்.

தம் குடும்ப எல்லையைத் தாண்டி, உலகியல் சார்ந்த, திருச்சபை சார்ந்த சமூகங்கள்பாலும் திறந்த உள்ளம் கொண்டவர்களாய் இருக்குமாறும் பிள்ளைகளைப் பயிற்றுவிக்க வேண்டும். கடவுளின் மக்கள் குழுவின் உயிருள்ள, செயல்படும் உறுப்பினர் தாங்கள் என்று உணரும் அளவுக்குப் பங்கு எனும் சமூகத்திலே இவர்களும் ஏற்றுக் கொள்ளப்படுவார்களாக. திருப்பணியாளர்கள் மறைக்கல்வி புகட்டும்போதும், அருள்வாக்குப் பணி ஆற்றும்போது, அருள் வழிகாட்டும்போதும், வெவ்வேறுவிதமான அருள்பணிகள் புரியும்போதும் இத்திருத்தூதுப் பணிப் பயிற்சிக் கண்முன் கொண்டிருப்பார்களாக.

இளைஞர்களிடையே கத்தோலிக்க மனப்பான்மையையும் திருத்தூதுச் செயலாக்கத்தையும் வளர்க்கும் கடமை பள்ளிகள், கல்லூரிகள், பிற கத்தோலிக்க நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் உண்டு. இக்கத்தோலிக்கப் பள்ளிகளுக்குச் செல்லாததாலோ, வேறு எக்காரணத்தாலோ, இளைஞர்களுக்கு இத்தகைய பயிற்சி கிடைக்காமலிருக்கலாம்; அப்பொழுது பெற்றோர், அருள்பணியாளர்கள், திருத்தூதுக் கழகத்தினர் ஆகியோர் அதிகக் கஐத்தாய் இதற்கு ஈடு செய்வார்களாக. தம் அழைத்தலாலும் அலுவலாலும் பொதுநிலையினரின் திருத்தூதுப் பணியை மிகச் சிறந்த முறையில் ஆற்றிவரும் வகையில் அளிக்கும் வண்ணம், தேவையான அறிவிலும் ஆசிரியக்கலையிலும் தேர்ச்சி பெற்றிருப்பாள்களாக.

அவ்வாறே, திருத்தூதுப் பணியையோ வேறு இயல்பு கடந்த குறிக்கோள்களையோ அடையத் தேடும் பொதுநிலையினரின் குழுக்களும் கழகங்களும் தம் நோக்கத்திற்கும் செயல்முறைக்கும் ஏற்ப, இத்திருத்தூதுக்கான பயிற்சியைக் கருத்துடனும் விடாமுயற்சியுடனும் ஊக்குவிக்க வேண்டும்.4 இக்குழுக்களே கல்விப்பயிற்சி, அருள்நெறிப் பயிற்சி, நடைமுறைப்பயிற்சி ஆகியவற்றை அளிக்கின்றன் எனவே, பல வேளைகளில் இவையே திருத்தூக்கு ஏற்ற பயிற்சி தரும் சாதாரண வழிகளாய் உள்ளன. இவற்றின் உறுப்பினர் தம் நண்பர் அல்லது தோழரோடு சிறுசிறு குழுவாய் ஒன்றுகூடி, தம் திருத்தூதுப் பணி முறைகளையும் பலன்களையும் பற்றி ஆய்கின்றனர். தம் அன்றாட வாழ்க்கை முறையை நற்செய்தியோடு ஒப்பிட்டு மதிப்பிடுகின்றனர்.

இத்தகைய பயிற்சி பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி முழுவதையும் கருத்தில் கொண்டு ஒழுங்குபடுத்தப்படவேண்டும். ஏனெனில், திருத்தூதுப்பணி கூட்டிணைந்த கழகங்களிடையே மடடுமின்றி, எல்லாச் சூழ்நிலைகளிலும், குறிப்பாக, தொழில், சமூக வாழ்க்கை முழுவதிலும் ஆற்றப்படவேண்டியதாய் உள்ளது. உண்மையாகவே ஒவ்வொருவரும் திருத்தூதுப் பணிக்கெனத் தம்ழமயே கருத்துடன் தயார் செய்து கொள்ளவேண்டும்; இந்தத் தயாரிப்பு வளர்சிசப் பருவத்தில் இன்னும் அதிக அவசியமாய் உள்ளது. ஏனெனில், வயதில் வளர வளர விரிவடைகிறது. இவண், கடவுள் தமக்கு அளித்திருக்கும் திறமைகளi ஒவ்வோர் இளைஞரும் இளம்பெண்ணும் தெளிவாய்க் கண்டரிய முடிகிறது; தம்மை அடுத்திருப்போரின் நலனுக்காகத் தூய ஆவி பொழிந்திருக்கும் அருங்கொடைகளை மிகப்பயனுள்ள முறையில் கையாள முடிகிறது.

சிறப்புப் பயிற்சி தேவைப்படும் கட்டங்கள்

31. பல்வேறு திருத்தூதுப் பணி முறைகளில் தனித்தனியான, தகுந்த பயிற்சி தேவைப்படுகிறது.

(அ) மனிதருக்கு நற்செய்தியை அறிவித்து அவர்களைத் தூய்மைப்படுத்தும் திருத்தூதுப் பணியைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவர்கள், பிற சமயத்தினர் ஆகிய யாவருடனும் உரையாடல் நடத்தவும், கிறிஸ்துவின் நற்செய்தியை அனைவர்க்கும் நன்கு பெறவேண்டும்.5

இன்று, எங்கும் கத்தோலிக்கரிடையிலும் பல்வகையான பருப்பொருள் கொள்கைகள் பரவியுள்ளன என்பதால், பொதுநிலையினர் கத்தோலிக்கக் கோட்பாடுகளை, முக்கியமாக விவாதத்திற்கு உள்ளாகியிருப்பவற்றை மிகக் கவனமாகக் கற்றிருப்பார்களாக் இத்துடன், எவ்வகைப் பருப்பொருள் கொள்கையையும் எதிர்கொள்ளும் முறையில் நற்செய்தி அடிப்படையில் வாழ்ந்து சான்று பகர்வார்களாக.

(ஆ) உலகியல் அமைப்பைக் கிறிஸ்தவ முறையில் புதுப்பிப்பதைப் பொறுத்தவரையில், உலகியல் நலன்கள், தம்மிலும் மனிதரின் குறிக்கோள் முழுவதோடுமுள்ள தொடர்பிலும், கொண்டுள்ள உண்மைப் பொருளையும் மதிப்பையும் பற்றி பொதுநிலையினர் பயிற்சி பெறுவார்களாக. அறநெறி, சமூக வாழ்வு இவை பற்றித் திருச்சபை போதிக்கும் கொள்கைகளுக்கு ஒத்தவண்ணம் எப்பொழுதும் பொதுநலனைக் கண்முன் வைத்துப் பொருள்களைச் சரியாய்ப் பயன்படுத்துவதிலும் நிறுவனங்களை அமைப்பதிலும் பொதுநிலையினர் பயிற்றுவிக்கப் பெறுவார்களாக. முதன்முதலில் சமுதாயப் படிப்பினையின் தத்துவங்களையும் அதன் முடிவுகளையும் பொதுநிலையினர் கற்பர்hகளாகஃ அப்பொழுதுதான், இவர்களது பயிற்சி வளர்ச்சி பெறும்; ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கற்றவற்றை இவர்கள் சரியாய்ப் பயன்படுத்த முடியும்;6 தம் பணியை நன்கு ஆற்றமுடியும்.

(இ) அன்பு மற்றும் இரக்கப் பணிகள் மிகச் சிறந்த முறையில் கிறிஸ்தவ வாழ்வுக்குச் சான்று பகர்கின்றன என்பதால், இத்தகைய பணிகளையும் ஆற்றுவதற்கு திருத்தூகுப் பணிற்சி வழிவகுப்பதாய் இருக்க வேண்டும். இவ்வாறு சிறு வயதிலிருற்து கிறிஸ்தவர்கள் தம்மை அடுத்திருப்போர்மீது இரக்கம் கொள்ளவும் தேவைப்படுவோருக்கு பெருமனத்துடன் உதவவும் கற்றுக் கொள்வர். 7

பயிற்சிக்கான உதவிகள்

32. திருத்தூதுப் பணியில் ஈடுபாடும் பொதுநிலையினருக்கு, கருத்தரங்குகள், மாநாடுகள், ஞான ஒடுக்கங்கள், தியானங்கள், குறிப்பிட்ட காலத்தில் கூட்டங்கள், பேருரைகள், நூல்கள், விளக்கவுரைகள் ஆகிய உதவிகள் ஏற்கனவே உள்ளன. விவிலயத்திலும் கத்தோலிக்கக் கோட்பாட்டிலும் இவர்கள் ஆழ்ந்த அறிவு பெறவும், அருள்வாழ்விலே ஊட்டம் பெறவும், அத்தோடு உலக நிலைமைகளைப் பகுத்துணர்ந்து இவ்வுதவிகள் இவர்களுக்கு வழிவகுக்கும்.

திருத்தூதுப் பணி ஆற்றப்படும் பகுதிகளிலுள்ள பல்வேறு பணி வகைகளை, மேற்கூறிய பயிற்சிச் சாதனங்கள் கண்முன் கொள்ளவேண்டும்.

இந்தக் குறிக்கோளுக்காகவே உயர் நிறுவனங்கள் அல்லது மையங்கள் சில அமைக்கப்பட்டுள்ளன் இவை ஏற்கெனவே சிறந்த பயனை அளித்துள்ளன. சில பகுதிகளில் ஏற்கனவே தழைத்திருக்கும் இத்தகைய முயற்சிகளைக் கண்டு இத்திருச்சங்கம் மகிழ்கிறது; தேவைப்படும் மற்ற இடங்களிலும் இவை ஊக்குவிக்கப்பட்ட வேண்டுமென விரும்புகிறது.

மேலும், இறையியலைப் பற்றி மட்டுமின்றி, மனித இனவியல், உளவியல், சமூகவியல், ஆய்வுமுறையியல் ஆகியவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவும் பல ஆவண நிலையங்களும் ஆய்வு நிலையங்களும் நிறுவப்படட்டும். இவற்றால், திருத்தூதுப் பணித் துறைகள் அனைத்திலும், ஆண், பெண், இளைஞர், வயதுவந்தோர், ஆகிய எல்லா வயதுப் பொதுநிலையினரின் இயல்பான திறமைகளும் சிறந்த முறையில் வளர்க்கப்படட்டும்.

தூண்டுரை

33. எனவே, இந்நேரத்தில் ஆர்வமுடன் அழைக்கும் கிறிஸ்துவின் குரலுக்கும் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கும் மனமுவந்து, அகம் விரிந்து, உளம் விரைந்து பதிலிறுக்கும்படி, இத்திருச்சங்கம், எல்லாப் பொது நிலையினரையும் ஆண்டவரில் உருக்கமாய் வேண்டுகிறது. இத்திருச்சங்கம், சிறப்பாய்த் தமக்கே இந்த அழைப்பு விடப்பட்டதாக இளைஞர், இளம்பெண்கள் உணர்ந்து, ஆர்வத்துடன் பெருமனத்துடனும் இதை ஏற்பார்களாக. தம்முடன் பொதுநிலையினர் அனைவருக்கும் உரியவையாய் ஆக்கிக் கொள்ளவும் (காண் பிலி 2:5), தமது மீட்புப்பணியிலே பங்கு கொள்ளவும், அண்டவர் அவர்களுக்கு இத்திருச்சங்கத்தின் மூலம் மீண்டும் அழைப்பு விடுக்கிறார். தாம் போக இருக்கும் எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே அவர்களை ஆண்டவர் அனுப்புகிறார் (காண் லூக் 10:1). காலத்தின் புதுப்புதுத் தேவைகளுக்கேற்ப இடைவிடாது தழுவி அமைக்கப்பெற வேண்டியது இத்திருத்தூதுப் பணி திருச்சபையின் ஒரே திருத்தூதுப் பணியின் பல்வேறு முறைகளிலும் வகைகளிலும் தாங்கள் ஆண்டவரோடு ஒத்துழைப்பவர்கள் எனப் பொதுநிலையினர் காட்டுவார்களாக. அவருக்காகத் தாங்கள் உழைப்பது வீண்போவதில்லை என்பதை உணர்ந்து (காண் 1 கொரி 15:58) கடவுளின் பணியில் இவர்கள் சிறந்தோங்குவார்களாக.

இவ்விதி தொகுப்பில் கூறப்பட்டுள்ள யாவும் அவை ஒவ்வொன்றும், திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும் கிறிஸ்து நமக்க அளித்துள்ள திருத்தூது ஆணையுரிமையால் வணக்கத்துக்குரிய தந்தையருடன் இணைந்து, தூய ஆவியில் அவற்றை ஏற்றுக்கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிலை நாட்டுகிறோம், சங்கம் நிலைநாட்டிய இவை யாவைளயும் கடவுளின் மாட்சிமைக்காகச் செயல்படுத்துமாறு ஆணையிடுகிறோம்.

தூய பேதுரு பேராலயம் பவுல்.
உரோமை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்
நவம்பர் 18, 1965.  

கீழே தந்தையரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.