திருப்பணிப் பயிற்சி உட்புகுமுன் முன்னுரை 400 ஆண்டுகளுக்கு முன்பு திரிதெந்துப் பொதுச் சங்கம் திருப்பணிப் பயிற்சியிலே குறிப்பிடத்தக்க ஒரு திருப்பததைக் கொண்டு வந்தது. இதன் விளைவாக, முதன் முறையாகத் திருப்பணிப் பயிற்சியகங்கள் அமைத்து, மாணவர்களுக்கு அருள், அறிவு, பணி வாழ்வில் பயிற்சி அளிக்கப்பட்டது. கி.பி.14ஆம் நூற்றாண்டில் கிரேக்கத் தாக்கத்தால் கலை இலக்கிய மறுமலர்ச்சி புத்துயிர் பெற்றிருந்தது. 16ஆம் நூற்றாண்டில் லூத்தரின் தாக்கத்தால் சமயச் சீர்த்திருத்தம் பிறப்பெடுத்திருந்தது. 18?ஆம் நூற்றாண்டில் பகுத்தறிவு வாதமானது, மரபை, அதிகாரத்தை, சமயக் கோட்பாடுகளை கேள்விக்குட்படுத்தியது. இவற்றின் பாதிப்புகளைப் பிரஞ்சுப் புரட்சி, தொழில் புரட்சி, இரசியப் புரட்சி போன்றவற்றில் காண முடிந்தது. தொடர்ந்து இரண்டு உலக யுத்தங்கள். இவை ஒட்டுமொத்தமாக இணைந்து புதிய கேள்விகளை, சவால்களை, பிரச்சனைகளை உருவாக்கின் புதிய பார்வைகளை, பதில்களை, தீர்வுகளைத் தேடின. திருப்பணிப் பயிற்சி ஏட்டின் வரலாறு இந்த வரராற்றுத் தேடலின் புதிய வார்ப்பாக வந்தது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம். இச்சங்கத்தின் ஓர் ஏடு திருப்பணிப் பயிற்சி. தயாரிப்புக்குழு திருப்பணிப் பயிற்சி பற்றி ஒரு விவாதத்திற்கான தொகுப்பை ஏற்கெனவே செய்திருந்தது. திருப்பணிப் பயிற்சியக ஆணைக்குழு, இந்தத்தொகுப்பை சங்கத்தின் முதல் இரண்டு அமர்வுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆய்வு செய்து, புதியதொரு தொகுப்பை உருவாக்கியது. சங்கத்தின் மூன்றாம் அமர்வில் திருப்பணிப் பயிற்சித் தொகுப்பு விவாதத்திற்கு வந்தது. இக்கட்டத்தில் த pருததங்களும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன. இவற்றை உள்ளடக்கி, திருத்திய தொகுப்பு ஒன்று தயாரானது. நான்காம் அமர்வின் போது மீண்டும் இது விவாதிக்கப்பட்டு 1965 அக்டோபர் 28ஆம் நாள், மூன்றே பேர் மறுப்புத் தெரிவிக்க, 2318 பேர் இவ்வேட்டை ஏற்று வாக்களித்தனர். அன்றே திருப்பணிப் பயிற்சி விதித் தொகுப்பு செயல்படுத்துமாறு அறிவிக்கப்பட்டது. |
சில சிறப்புகள்
திருப்பணிப் பயிற்சி ஏட்டில் மூன்று முக்கிய சிறப்புக் கூறுகளை முன்னிலைப்படுத்தலாம்.
1. அருள்பணி நோக்கு
திருப்பணிப் பயிற்சி முழுவதும் அருள்பணி நோக்குடையதாக அமைய வேண்டும் என்பது இவ்வேட்டின் அடிநாத சுருதியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ''திருப்பணி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முழுவதிலும் அருள்பணி பற்றிக் கவனம் செலுத்த வேண்டும்'' (எண் 19). இதற்கேற்பப் பாடத்திட்டங்கள், பயிற்சி முறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இதனால் மாணவர்கள் மற்றவற்றைவிட அருள்பணியினால் அருள் வாழ்வை உறுதிப்படுத்தப் பயிற்சி பெறுவர் (எண்9).
திருப்பணியாளர்கள் பல துறைகளிலும் வல்லுநர்களாக வேண்டும் (எண் 18). ஆயினும் திருப்பணிப் பயிற்சியகங்கள் மாணவரை வல்லுநராக உருவாக்குவதைவிட, அருள்பணியாளர்களாக உருவாக்குவதையே முதன்மையான, முக்கியமான நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
2. கடவுள் மையக் கல்வி
திருப்பணிப் பயிற்சியகங்களில் கற்றுத் தரப்படும் பாடங்களும் பயிற்சிகளும் இறைத்திட்டத்தையும் கிறிஸ்துவின் திரு நிகழ்வையும் மையமாகக் கொண்டு சுழல வேண்டும். மெய்யியலும் இறையியலும் இக்கண்ணோக்கிலே அணுகப்பட வேண்டும் (எண் 15).
விவிலியம் இறையியலின் உயிர்நாடியாக அமைய வேண்டும். விவிலியத்தின் ஒளியில் ஒழுக்க இறையியல், திருச்சபை வரலாறு, திருச்சபைச் சட்டம், ஆகிய பாடங்கள் மறுபார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கிறது இந்த ஏடு (காண் 16).
3. காலத்திற்கும் நாட்டிற்கும் ஏற்ற பயிற்சி
ஒவ்வொரு நாடும் தனது சூழல், அனுபவம், தேவைக்கு ஏற்பத் திருப்பணிப் பயிற்சிமுறைத் திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் (எண் 19). இது நிச்சயம் திருச்சபையின் வாழ்வுக்குச் செறிவூட்டி, செழுமைப்படுத்தும். இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட பயிற்சி முறையின்கீழ் உருவாகும் மாணவர்கள் இன்றைய உலகோடும்மக்களோடும் உறவாடி இயேசுவின் பணியைச் சிறந்த முறையில் தொடர முடியும் என்பதை இந்த ஏடு தெளிவுபடுத்துகிறது.
காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப மனிதப் பண்பாட்டிலும், அறிவிலும், அருள்வாழ்விலும் மாணவர்கள் வளர்ந்து முதிர்ச்சியடைய திருப்பணிப் பயிற்சி ஏதுவாக இருக்கவேண்டும் (எண் 13; 8). மேலும், கற்பிக்கும் முறைகளும் இடத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மாற்றியமைக்கப்படவேண்டும் எண் (17).
இன்றைய சில சவால்கள்
சங்கம் முடிந்த 35 ஆண்டகள் ஆகிவிட்டன. சங்கத்தின் மனப்பாங்கோடும் மறுமலர்ச்சித் துடிப்போடும் சங்கத்தையும்கடந்து செல்லக் காலத்தின் குறிகள் நம்மைத் தூண்டி ஈர்த்த வண்ணமிருக்கின்றன.
1995 ஆம் ஆண்டு நடந்த இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை பற்றிய நிறை குறை ஆய்வு, திருப்பணிப் பயிற்சிகளில் மாற்றங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது. காண்க இ.க.ஆ.பே. நிறை குறை ஆய்வு, புதுடெல்லி, 1995, பக்.79).
எங்கோ, எப்போதோ, உருவான ஓர் இறையியலைத் தமிழகத்தில் இன்று அப்படியே சொல்லிக் கொடுப்பது அர்த்தமுடையதாக அமையாது. இன்றும் நாம் வாழும் தமிழகச் சூழலில், இந்திய, உலகச் சூழல் பின்புலத்தில், மக்களுக்கும் மண்ணுக்கும் ஏற்ப இறையியல் ஆக்கப்படவேண்டும், இதற்கு தமிழ் மக்களுடைய, இதிலும் சிறப்பாக இங்குள்ள ஏழை, எளிய மக்களுடைய வாழ்வு அனுபவத்தில் அது ஆரம்பமாகவே வேண்டும் (2 வத், இதி எண். 1).
தமிழகத்திலுள்ள சாதி, வறுமை, தமிழரின் ஊனமுற்ற ஆளுமை, தலைமை வழிபாடு போன்றவற்றை ஆழமாக ஆய்வு செய்யவும் இவற்றை எதிர்கொள்ளவும் மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
வரலாற்று இயேசு ஏழைகளோடு கொண்ட தோழமையும் இவர்களுடைய விடுதலை வாழ்வுக்கு எதிரானவற்றை எதிர்த்ததும் 'தோழமை எதிர்ப்பு' என அழைக்கப்படுகிறது. இத்தகைய தோழமை எதிர்ப்பு மனநிலை மாணவர்களிடமும் உருவாக்கப்படுவது அருள்வாழ்வு பயிற்சியின் ஒரு முக்கிய அம்சமாகும்.
மாணவர்கள் எதிர்காலப் பணிக்காக மட்டுமல்ல, இப்போதே பெரும்பாலும்ப ணித்தளத்தில் உருவாக்கம் பெறுவது, சிறப்பாக இருக்கும். இது இவர்கள் எதார்த்தச் சூழலிலிருந்து அந்நியமாதலைத் தவிர்க்கும். மேலும் பல் சமயச் சூழலிலும், பல கருத்தியலுக்கு மத்தியிலும் வாழ்பவரோடு இணைந்து பணி செய்யவும் பயிற்சி அமைதல் நலமாக இருக்கும்.
இவைபோன்ற இன்றைய சவால்களையும் திருப்பணிப் பயிற்சி கணிப்பில் எடுப்பது திருப்பணி பயிற்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
பணி.ச.தே.செல்வராசு
கீழமுடிமன் பங்குத் திருப்பணியாளர்
கீழமுடிமன்
10 ஆகஸ்டு, 1998
திருப்பணிப் பயிற்சி
பற்றி இறை அடியாருக்கு அடியார் ஆயர் பவுல்
திருச்சங்கத் தந்தையரோடு இணைந்து
நினைவில் என்றும் நிலைக்குமாறு அருளிய
விதித்தொகுப்பு
முன்னுரை
விரும்பி எதிர்பார்க்கப்படும்ழூ திருச்சபை முழுவதின் மறுமலர்ச்சி கிறிஸ்துவின் ;உளநிலையில் தோய்ந்த திருப்பணியையே பெரிதும் சார்ந்துள்ளது என்பதைத் திருச்சங்கம் நன்கு உணர்ந்துள்ளது.1 எனவே திருப்பணி பயிற்சியின் n பரும் முக்கியத்துவத்தை அது எடுத்துரைக்கிறது; அஃதோடு திருப்பணி பயிற்சியில் ஏற்கனவே நூறறாண்டுகளாய்ப் பழக்கத்திலிருந்து நல்லவை எனக் கண்ட சட்டதிட்டங்களை உறுதிப்படுத்தவும், அஃதுடன், இத்திருச் சங்கத்தின் கொள்கை விளக்கங்களுக்கும் விதித்தொகுப்புகளுக்கும் மாறிவரும்கால நிலைமைகளுக்கும் ஏற்ற புது முறைகளைப் புகுத்தவும்சில அடிப்படைத் தத்துவங்களை அளிக்கிறது. கத்தோலிக்கத்திருப்பணி நிலையின் ஒருமைப்பாட்டை முன்னிட்டு இத்தகைய திருப்பணிப் பயிற்சி மறைமாவட்ட திருப்பணி நிலையினர், துறவறத்தார், பல்வேறு வழிபாட்டு முறையினர் ஆகிய எல்லாத் திருப்பணியாளருக்கும் தேவை. இவ்வொழுங்கு முறைகள் மறைமாவட்டத் திருப்பணியாளர்களுக்கென்றே வகுக்கப்பட்டுள்ளன. எனினும் இவை தகுந்த மாற்றங்களுடன் பிற திருப்பணியாளர்களுக்கு ஏற்பத் தழுவியமைக்கப்பட வேண்டும்.
i. ஒவ்வொரு நாட்டிலும் திருப்பணி பயிற்சி முறையில் செயல்படுத்த வேண்டிய திட்டம்
பயிற்சி முறையை இடங்களுக்கேற்பத் தழுவியமைத்தல்
1. மக்களும் மண்டலங்களும் மிக வேறுபட்டிருப்பதால் பொதுவான விதிகளையே அமைக்க முடியும். எனவே ஒவ்வொரு நாட்டினரும், வழிபாட்டு முறையினரும் தனித்தனியான திருப்பணிப் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இச்செயல் திட்டத்தை அந்தந்த நாட்டு ஆயர் பேவைகள் உருவாக்கவேண்டும். இச்செயல் த pட்டத்தை அந்தந்த நாட்டு ஆயர் பேவைகள் உருவாக்கவேண்டும்.2 இச்செயல் திட்டம் ஆயர் பேரவைகளால் அவ்வப்போது திருததத்திற்கு உட்படுத்தப்பட்டு, திருத்தூது ஆட்சிப்பீடத்தின் ஒப்புதல் பெறவேண்டும். இவ்வாறாகத் தனிப்பட்ட கால இட சூழ்நிலைகளுக்கேற்ப இப்பொது விதிகளைத் தழுவியமைப்பதன் மூலம் பணித்தளங்களின் அருள்பணித் தேவைகளுக்கேற்பத் திருப்பணிப் பயிற்சி அமையும்.
ii. திருப்பணி நிலைக்கான அழைத்தலை ஆர்வத்துடன் ஊக்குவித்தல்
அழைத்தலை ஊக்குவித்தலில் கிறிஸ்தவ சமூகத்தின் பொறுப்பு
2. அழைத்தல்களைப் பேணிவளர்த்தல்3 கிறிஸ்தவச் சமூகம் அனைத்தின் கடமையாகும். எல்லாவற்றிற்கும் மேலாக முழுமையான கிறிஸ்தவ வாழ்வின் மூலமே இக்கடமையை நிறைவேற்றமுடியும். நம்பிக்கை, அன்பு, பக்தி உணர்வில் தோய்ந்துள்ள தொடக்கத் திருப்பணிநிலைப் பயிற்சிக் கூடங்களாக குடும்பங்களே அமைகின்றன. இவையும் இவற்றோடு இளைஞர்களைத் தம் வளவாழ்வில் ஈடுபடுத்தி நிற்கும் பங்குகளும் மேற்கூறிய கடமையை ஆற்றுவதில் துணை புரிகின்றன. சிறுவர், இளைஞர் ஆகியோரைப் பயிற்றுவிப்பதில் எவ்விதத்திலாவது ஈடுபட்டுள்ள ஆசிரியரும் மற்றோரும்ச pறப்பாகக் கத்தோலிக்கக் கழகங்களும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் கடவுளின் அழைத்தலை உணர்ந்து, அவ்வழைத்தலுக்கு மனமுவந்து செவிமடுக்க இயலுமாறு அவர்களை பயிற்றுவிக்க முயற்சி செய்யவேண்டும். திருப்பணியாளர் அனைவரும் இவ்வழைத்தலை வளர்ப்பதில் மிகுந்த திருத்தூது ஆர்வம் காட்ட வேண்டும். மேலும் திருப்பணியாளர்கள் தங்களது மனத்தாழ்மை கொண்ட உழைப்புமிக்க, அகமகிழ்ச்சியோடு நடத்தப்படும் வாழ்வாலும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் காட்டும் திருப்பணி அன்பாலும், சகோதர ஒத்துழைப்பாலும் இளைஞர்களின் இதயத்தைத் திருப்பணி நிலைக்கு ஈர்க்கவேண்டும்.
அழைத்தல்களை வளர்க்குமாறு தம் மக்கள் குழுவைத் தூண்டுவதும் அதற்காக எல்லா ஆற்றல்களையும் முயற்சிகளையும் ஒருங்கிணைப்பதும் ஆயர்களது கடமையாகும். ஆண்டவரின் பணிக்காக அழைக்கப்பட்டோர் எனத் தாம் முடிவு செய்தவர்களுக்காக ஆயர்கள் தந்தை போலிருந்து எந்தவித தியாகத்தையும் தயங்காது செய்து உதவ வேண்டும்.
கிறிஸ்துவின் திருச்சபை ஆட்சி சார்ந்த திருப்பணி நிலையில் பங்குபெறக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்ட்டோருக்கு கடவுளின் பராமரிப்பு ஏற்றமுறையில் உதவிகளையும் அருள் கொடைகளையும் வழங்குகிறது. அழைத்தல்களைப் பேணி வளர்ப்பதில் இறைமக்கள் அனைவரும் ஈடுபாட்டுடன் ஒருமித்துச் செயல்படுவது கடவுளின் இந்தப் பராமரிப்புக்கு அவர்கள் அளிக்கும் பதில் மொழியாகும். மேலும் சரியான நோக்குடனும் முழுத் தன்னுரிமையுடனும் இம்மாபெரும் பணியை நாடுவோர்களின் தகுதியைக் கண்டறிந்து, தேர்ச்சி பெற்றோரை அழைத்து அவர்களைத் தூய ஆவியாரின் முத்திரையால் இறை வழிபாட்டிற்கும் திருச்சபையின் பணிக்கும் அர்ப்பணிக்கும் அலுவலைத் திருப்பணியின் முறையான பணியாளர்களிடம் இறைப் பராமரிப்பு ஒப்படைத்துள்ளது.4
அழைத்தல்களைப் பேணி வளர்க்குமாறு ஒருமித்துச் செயல்படுங்கால் மரபுவழி வந்துள்ள கீழ்வரும் வழிவகைகளைக் கையாளுமாறு திருச்சங்கம் பரிந்துரைக்கிறது; ஆர்வமிக்க இறைவேண்டல், கிறிஸ்தவத் தன்னல மறுப்பு, மறையுரை, மறைக்கல்வி, பல்வேறு சமூகத் தொடர்புக் கருவிகள் ஆகியவற்றின் மூலம் திருப்பணி அழைத்தலின் தேவை, இயல்பு, மாண்பு என்பவைகளை எடுத்துக்காட்டிக் கிறிஸ்தவ மக்களுக்கு நாளுக்கு நாள் ஆழ்ந்த அறிவூட்டுதல். மறைமாவட்டங்கள், மண்டலங்கள், நாடுகள் ஆகியவற்றில் திருத்தந்தையரின் ஏடுகளின்படி ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ள அல்லது ஏற்படுத்தப்ட வேண்டிய இறை அழைத்தல் நிறுவனங்கள் அழைத்தலுக்கான அருள்பணிச் செயல்களை முறையோடும் இணைந்தும் திட்டமிட்டு ஆர்வமிக்க முன்விழிப்போடு ஊக்குவிக்குமாறு திருச்சங்கம் ஏவுகிறது. இப்பணியை ஆற்றும்போது இந்நிறுவனங்கள் தற்கால உளவியல், சமூகவியல் அளிக்கின்ற பயன்தரு உதவிகள் அனைத்தையும் கையாள வேண்டும்.5
அழைத்தல்களை வளர்க்கும் பணி திருத்தனி மறை மாவட்டங்கள், நாடுகள், துறவறச் சபைகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றின் வரம்புகளைக் கடந்து பரந்த நோக்குடன் அமைய வேண்டும். அனைத்துத் திருச்சபையின் தேவைகளையும் கண்முன் கொண்டு, ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் பணி புரியுமாறு பணியாட்கள் உடனடியாக அழைக்கப்படுகின்ற பகுதிகளுக்குச் சிறப்பாக உதவும் வகையில் இப்பணி அமைய வேண்டும்.
இளநிலைத் திருப்பணிப் பயிற்சியகம் அளிக்கவேண்டிய பயிற்சி
3. அழைத்தலின் வித்தைப் பேணி வளர்ப்பதற்கு நிறுவப்பட்டுள்ள இளநிலைத் திருப்பணிப் பயிற்சியகம் ; தனிப்பட்ட சமையப் பயிற்சி வழியாகவும் குறிப்பாகத் தகுந்த அருள் வாழ்வு வழிகாட்டல் வழியாகவும் மாணவர்கள் தாராள மனத்தோடும் தூய உள்ளத்தோடும் மீட்பராகிய கிறிஸ்துவைப் பின்பற்றத்தயாரிக்கப்படவேண்டும். மாணவர்களின் வாழ்க்கை திருப்பணிப் பயிற்சியகத்தின் தலைவர்களின் தந்தைக்குரிய வழிநடத்துதல் மூலமும், பெற்றோர்களின் தகுந்த ஒத்துழைப்பு மூலமும், மாணவர்களின் வயது, உளப்பாங்கு, வளர்ச்சிப் பருவம் ஆகியவற்றிற்கேற்பவும் சிறந்த உளவியல் கோட்பாடுகளுக்கு முற்றிலும் பொருந்தவும் அமையவேண்டும். தகுந்த வாழ்க்கை அனுபவம் பெறுவதற்கும், தங்கள் குடும்பத்துடன் தொடர்பு கொள்வதற்குமான வாய்ப்புகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.6 மேலும், முதுநிலைத் திருப்பணிப் பயிற்சியகங்களின் குறிக்கோள், தன்மை ஆகியவற்றிற்கேற்பத் தழுவியமைத்துப் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் வேறு வாழ்க்கைத்துறையைத் தேர்ந்து கொள்ள நேர்ந்தாலும் எளிதாகத் தொடர்ந்து படிக்கக்கூடிய வகையில் அவர்களின் பாடத்திட்டம் அமைதல் வேண்டும்.
அந்தந்த இடங்களின் சூழ்நிலைக்கேற்பச் சில தனிப்பட்ட நிறுவனங்கள் இளநிலைத திரப்பணிப் பயிற்சியகங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றுகின்றன. இந்நிறுவனங்களில் பயிலும் இளைஞர்களிடையேயும் வாலிபர்களிடையேயும் மற்ற பள்ளிகளில் அல்லது வேறுவகையில் பயிற்சிகள் பெறும் மாணவர்களிடையேயும் ஒரே கவனத்துடன் அழைத்தலின் வித்தைப் போற்றி வளர்க்கவேண்டும். மேலும்ஈ வ யது கடந்தபின் இறை அழைத்தலை ஏற்பவர்களுக்கான நிறுவனங்களும் பிற முயற்சிகளும் வளருமாறு கவனம் செலுத்தவேண்டும்.
iii. முதுநிலைத் திருப்பணிப் பயிற்சியகங்களை முறைப்படுத்தல்
அருள்பணித் தன்மை கொண்ட பயிற்சி
4. திருப்பணியாளர்களை உருவாக்க முதுநிலைத் திருப்பணிப் பயிற்சியகங்கள் இன்றியமையாதன. இங்கு, ஆசிரியரும் திருப்பணியாளரும் அருள்பணியாளருமாகிய நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் போல் மக்களின் உண்மையான அருள்பணியாளர்களாக மாணவர்கள் உருவாக்கப்படுவதற்கு ஏற்றவிதமாக அவர்களது பயிற்சி முழுவதும் அமையவேண்டும்.7 கடவுள் வெளிப்படுத்திய வார்த்தையை அவர்கள் மேன்மேலும் நன்கு புரிந்துகொள்ளவும், நன்கு தியானித்து அதனைத் தங்களுயைதாக்கவும், சொல்லாலும் செயலாலும் அதனை எடுத்துக்காட்டவும், வார்த்தைப் பணிக்கு அவர்களைத் தயாரிக்கவேண்டும். தாங்கள் இறைவேண்டல்செய்யும்போதும், திருவழிபாட்டு கொண்டாட்டங்களை நிகழ்த்தும்போதும் திருவிருந்துக் கொண்டாட்டம், அருளடையாளங்கள் மூலமாக நிறைவாழ்வுப் பணியை நிறைவேற்றும்வகையில், வழிபாட்டுப் பணிக்கும் தூய்மைப்படுத்தும் பணிக்கும் அவர்களைத் தயாரிக்கவேண்டும். ''தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்த'' (மாற் 10:45; காண் யோவா 13:12-17) கிறிஸ்துவை மக்களுக்குக் காட்டக் கற்றுக்கொள்ளவும், அனைவரின் அடிமைகளாக மாறி பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர (காண் 1 கொரி 9:19), திருப்பணி மாணவர்களை அருள்பணியாளர் பணிக்குத் தயாரிக்க வேண்டும்.
ஆகையால், அருள்வாழ்வு, அறிவு வளர்ச்சி, ஒழுங்குமுறை ஆகியவற்றைச் சார்ந்த எல்லாப்ப யிற்சித் திட்டங்களும் இந்த அருள்பணியையே நோக்கமாகக் கொண்டு ஒருமித்த செயலாக அமையவேண்டும். இக்குறக்கோளை அடைவதற்கு இயக்குநர்களும் ஆசிரியர்களின் ஆயரின் அதிகாரத்துக்கு உண்மையில் கீழ்ப்படிந்து ஆர்வத்துடன் ஒரே மனத்துடனும் உழைக்கவேண்டும்.
இயக்குநர்களையும் ஆசிரியர்களையும் தேர்ந்தெடுத்தல்
5. மாணவர்களின் பயிற்சி சிறந்த விதிமுறைகளையும் குறிப்பாக தகுதியுடைய ஆசிரியர்களையும் பொறுத்தது. எனவே திருப்பணிப் பயிற்சியகம் தலைவர்களையும் ஆசிரியர்களையும் மிகச் சிறந்தவர்களுள் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.8 இவர்கள் உறுதியான கோட்பாட்டிலும், தகுந்த அருள்பணி அனுபவத்திலும், அருள்வாழ்வுப் பயிற்சியிலும், ஆசிரியவியல் பயிற்சியிலும் கவனமாகத் தயாரிக்கப்பெற்றிருக்க வேண்டும். எனவே இக்குறிக்கோளை அடையும் வண்ணம் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்; அல்லது தகுந்த முறையில் அமைந்த பாடத் திட்டங்களையும் அருள்பணிப் பயிற்சியக இயக்குநர்களுக்காக அவ்வப்போது நடத்தப்பெற வேண்டிய கருத்தரங்குகளையுமாவது ஊக்குவிக்க வேண்டும்.
திருப்பணிப் பயிற்சியின் வெற்றி தங்களின் சிந்தனை, செயல்முறைகளை எந்த அளவுக்குப் பொறுத்துள்ளது என்பதை இயக்குநர்களும் ஆசிரியர்களும் நன்கு உணர வேண்டும். திருப்பணிப் பயிற்சியக முதல்வரின் தலைமையின்கீழ் சிந்தனையிலும், செயலிலும், ஆசிரியர்கள் மிக நெருங்கி ஒன்றித்திருப்பார்களாக. ''அவர்களும் ஒன்றாயிருக்கும்படி'' (காண் யோவா 17:11) என்ற ஆண்டவரின் வேண்டுதலுக்கிணங்க ஆசிரியர்கள் தங்களுக்குள்ளும், மாணவர்களுடனும் இணைந்து ஒரே குடும்பமாய் வாழ வேண்டும். இதனால் மாணவர்களுக்குத் தங்கள் அழைத்தலின் மேலுள்ள மகிழ்வு பெருகும். திருப்பணிப் பயிற்சியகத்தில் உழைப்பவர்களை ஆயர் நிலையான அன்புசார் அக்கறையோடு ஊக்குவிக்க வேண்டும்; கிறிஸ்துவில் த hம் உண்மையான தந்தையென்று மாணவர்களுக்கு எண்பிக்க வேண்டும். இறுதியாக, திருப்பணியாளர்கள் அனைவரும் திரப்பணிப் பயிற்சியகத்தை மறைமாவட்டத்தின் இதயமாகக் கருதி அதற்கு மனமுவந்து உதவ வேண்டும்.9
நேரிய நோக்கத்தை ஆராய்தல்
6. திருப்பணி மாணவர்களின் நேரிய நோக்கம், மனச்சுதந்திரம், அருள்நெறி, ஒழுக்க, அறிவுத் தகுதிகள், உடல், உளநலம், குடும்பத்திலிருந்து ஒரு வேளை பெற்றிருக்கக்கூடிய குணநலன்கள் ஆகியவற்றை அவர்களது வயதையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு விழிப்புடன் ஆராய வேண்டும். மேலும் திருப்பணிநிலைக்குரிய கடமைகளை நிறைவேற்றவும், அருள்பணியைச் செய்யவும் தேவையான ஆற்றல் அவர்களிடம் உண்டா என்பதையும் தீர்;மானிக்கவேண்டும்.10
திருப்பணியாளர்களின் பற்றாக்குறை வருந்தத்தக்கதுதான் என்றாலும்கூட, த pருப்பணி மாணவர்களை ஆய்ந்து தேர்ந்தெடுப்பதில் கண்டிப்பு தேவை.11 தகுதியானவர்களை ஏற்றுக்கொண்டு, தகுதியற்றவர்களைத் தொடக்கத்திலேயே பிற பணிகளை ஏற்க தந்தைக்குரிய பண்போடு வழிகாட்டி, தங்களது கிறிஸ்தவ அழைத்தலை உணர்ந்தவர்களாய், பொதுநிலையினரின் தூதுப்பணியில் ஆர்வமுடன் உழைக்க ஆவர்களை ஊக்குவிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் கடவுள் திருப்பணியாளர்களின் பற்றாக்குறையால் தமது திருச்சபையை அல்லலுற விடமாட்டார்.
பல மறைமாவட்டங்களுக்கான பொதுத் திருப்பணிப் பயிற்சியகங்கள்
7. ஒவ்வொரு மறைமாவட்டமும் தனக்கெனத் திருப்பணிப் பயிற்சியகத்தைக் கொண்டிருக்க இயலாதபோது பல மiறாவட்டங்களுக்கென்றோ, மண்டலத்திற்கென்றோ, நாட்டிற்கென்றோ பொதுவான திருப்பணிப் பயிற்சியகங்களை நிறுவிப் பேணவேண்டும். இவ்வாறு, தலையாய பணியாகக் கருதப்படவேண்டிய திருப்பணி மாணவர்களின் சீரிய வயிற்சியைப் பயன்மிகு முறையில் அளிக்கமுடியும். இத்திருப்பணிப் பயிற்சியகங்கள் மண்டல அளவிலோ நாட்டளவிலோ அமைந்தவையாயின், அந்தந்த இடத்து ஆயர்களின் சட்டங்களின்படி இயங்கட்டும்.12 இச்சட்டங்கள் திருத்தூது ஆட்சிப்பீடத்தின் ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும்.
மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாய் உள்ள திருப்பணிப் பயிற்சியகங்களில் ஒவ்வொருவரின் தனி வளர்ச்சிக்கும் உதவும் முறையில் அவர்களைத் தகுந்த முறையில் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கவேண்டும். ஆயினும் நிர்வாகத்pலும் கல்வித் திட்டத்திலும் ஒருமைப்பாட்டைக் கடைப்பிடிக்கவேண்டும்.
iv. அருள்வாழ்வுப் பயிற்சியில் ஆழ்ந்தகவனம் செலுத்தல்
அருள்வாழ்வை வளர்ச்சியுறச் செய்தல்
8. அருள்வாழ்வுப் பயிற்சியானது கோட்பாட்டு மற்றும் அருள்பணிப் பயிற்சிகளோடு நெருங்கிய தொடர்புடையதாக அமையவேண்டும். சிறப்பாக அருள்வாழ்வு வழிகாட்டின் துணையுடன்13 தந்தையாகிய கடவுளோடு, அவர் தம் மகன் இயேசு கிறிஸ்து வழியாக, தூய ஆவியாரில் நெருங்கி நிலையாக ஒன்றித்து வாழக் கற்றுக் கொள்ளும் வகையில் இப்பயிற்சி அமைய வேண்டும். அவர்கள் திருப்பணித் திருநிலைப்பாட்டால் திருப்பணியாளராகிய கிறிஸ்துவுக்கு ஒத்தவர்களாக உருவாக்கப்படுவார்கள். ஆகவே, தங்களின் வாழ்வு முழுவதையும் கிறிஸ்துவோடு இணைப்பதன் மூலம் கிறிஸ்துவின் நண்பர்களாக வாழ அவர்கள் பழகிக் கொள்ளவேண்டும்.14 கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருளை வாழ்வதன் மூலம் அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களும் இம்மறை பொருளை வாழ வழி வகுக்கின்றனர். அவர்கள் கடவுளின் வார்த்தையைப் பற்றுறதியுடன் தியானிப்பதிலும், திருச்சபையின் மறi நிகழ்ச்சிகளில் குறிப்பாக நற்கருணைக் கொண்டாட்டத்தில் செயல் முறையில் பங்கேற்பதிலும் திருப்புகழ் மாலையை வெண்டுவதிலும் கிறிஸ்துவைத் தேடும்படி கற்பிக்கப்படவேண்டும்.15 மேலும் தங்களை அனுப்பிய ஆயர், தாங்கள் யாரிடம் அனுப்பப்பட்டார்களோ அம்மக்கள், குறிப்பாக ஏழைகள், குழந்தைகள், நோயாளிகள், பாவிகள், இறை நம்பிக்கையற்றோர் ஆகியோரிடம் கிறிஸ்துவைத் தேடும்படி அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் நீத்தபோது தம் சீடருக்குத் தாயாக அளித்த பேறுபெற்ற கன்னி மரியாவுக்குச் சேய்க்குரிய நம்பிக்கையோடு அவர்கள் அன்பும் வணக்கமும் செலுத்தவேண்டும்.
திருச்சபையில் வழங்கி வரும் பக்தி முயற்சிகளை அவர்கள் ஆர்வமுடன் பின்பற்ற வேண்டும். ஆனால் அவர்களது அருள்வாழ்வுப் பயிற்சி இம்முயற்சிகளோடு நின்றுவிடாமலும், வெறும் சமய உணர்ச்சி அளவிலேயே அடங்கியிராமலும் கவனித்துக் கொள்ளவேண்டும். திருப்பணி மாணவர்கள் நற்செய்தி காட்டும் வழிக்கேற்ப வாழ கற்க வேண்டும்; நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றில் உறுதி பெறவேண்டும். மேற்கூறிய நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதால் அவர்கள் இறைவேண்டல் மனப்பாங்கைப் பெற்றுக்கொள்வார்கள்;16 அழைத்தலில் உறுதியும் பாதுகாப்பும் அடைவார்கள்; பிற நற்பண்புகளை வளரச் செய்வார்கள்; எல்லா மக்களையும் கிறிஸ்துவின் பால் இட்டுச் செல்லும் ஆர்வம் அவர்களிடையே வளரும்.
திருச்சபையெனும் மறை பொருள் உணர்வை வளர்த்தல்
9. இத்திருச்சங்கம் தனிப்பட்ட விதத்தில் எடுத்துரைத்துள்ள திருச்சபையெனும் மறைபொருள் உணர்வால் மாணவர்கள் நிரம்பி இருக்கவேண்டும். இவ்வாறு கிறிஸ்துவின் பதிலாளாகிய திருத்தந்தையோடு மனத்தாழ்மை மற்றும் பிள்ளைக்குரிய அன்போடு ஒன்றித்திருப்பார்கள்; திருந்pலைப்படுத்தப்பட்டபின் ஆயருக்கு நேர்மையுள்ள உதவியாளர்களாக இருப்பார்கள்; சகோதர திருப்பணியாளர்களோடு இணைந்து ஒத்துழைப்பார்கள். இவ்வாறு கிறிஸ்துவின்பால் மக்களை ஈர்க்கும் ஒற்றுமைகை;குச் சான்று பகர்வார்கள்.17 ''கிறிஸ்துவின் திருச்சபைக்கு அன்பு காட்டும்அளவிற்கு தான் ஒருவர் தூய ஆவியாரைப் பெற்றிருக்கிறார்''18 என்று தூய அகஸ்தீன் கூறியுள்ளார். இக்கூற்றை மனத்தில் கொண்டு திருச்சபையின் முழு வாழ்விலும் மாணவர்கள் பரந்த உள்ளத்தோடு பங்கேற்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதிகாரம் செலுத்துவதற்கோ, பதவிகள் பெறவோ தாங்கள் அழைக்கப்படவில்லை, மாறாக இறைப்பணிக்கும் அருள்பணிக்கும் தங்களையே முற்றிலும் கையளிக்கவே அழைக்கப்பட்டுள்னர் என்பதை அவர்கள் தௌ;ளத்தெளிவாக உணர்ந்திருக்கவேண்டும். திருப்பணி நிலைக்குரிய கீழ்படிதல், எளிய வாழ்வுமுறை, தன்னல மறுப்பு மனப்பாங்கு ஆகியவைகளில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்க தனிப்பட்ட கவனம் காட்டவேண்டும்.19 இதனால் சில காரியங்கள் அனுமதிக்கப்பட்டனவாயினும் அவை அவர்களுகு;கு ஒவ்வாதனவாக இருக்கும்போது அவற்றையும் தியாகம் செய்யும் மனப்பாங்கு இயல்பாக உருவாகும். மேலும் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவுக்கு ஒத்தவண்ணம் வாழ அவர்கள் பழகிக்கொள்வார்கள்.
மாணவர்கள் தாங்கள் ஏற்கப்போகும் பொறுப்புகள் பற்றி நன்கு அறிந்திருக்குhறு அவன செய்ய வேண்டும். திருப்பணி வாழ்வில் ஏற்படும் எந்த இடரையும் அவர்களிடமிருந்து மறைத்தல் ஆகாது. அதே வேளையில் அவர்கள் பிற்கால வாழ்வின் ஆபத்துகள் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருத்தலும் தகாது; மாறாகத் தங்கள் அருள் வாழ்விற்கான ஆற்றலை அவர்கள் ஆற்றப்போகும் அருள்பணியிலிருந்தே பெறும் வண்ணம் அவர்கள் பயிற்சி அமையவேண்டும்.
மணத்துறவு வளர்ச்சிக்கான கல்வி
10. தங்களுடைய வழிபாட்டு முறையிலுள்ள தூய, நிலையான விதிகளுக்கு ஏற்பத் திருப்பணி மணத்துறவாகிய மாண்புறு மரபைப் பின்பற்றுகின்ற மாணவர்களை, அவ்வாழ்வு நிலைக்கென பின்பற்றுகின்ற மாணவர்களை, அவ்வாழ்வு நிலைக்கென கவனத்துடன் பயிற்றுவிக்க வேண்டும். இத்தகைய வாழ்வில் அவர்கள் விண்ணரசின் பொருட்டுத் திருமண வாழ்வைத் துறக்கின்றனர் (காண் மத் 19:12) புதிய உடன்படிக்கைக்கு உள்;ரப் பொருத்தமானதாகிய பிளவுபடாத அன்போடு20 ஆண்டவரைப் பற்றிக் கொள்கிறார்கள்; வருங்கால உலகில் நிகழவிருக்கும் நமது உயிர்த்தெழுதலுக்குச் சான்று பகர்கிறார்கள் (காண் லூக் 20:36)21 தங்கள் திருப்பணி அலுவலில் எல்லாருக்கும் எல்லாமாய் இருக்கச் செய்யும் நிறைவான அன்பைத்தொடர்ந்து செலுத்த மிகவும் ஏற்ற உதவியைப் பெறுகின்றனர்22. தாங்கள் எவ்வளவு நன்றியுடன் இவ்வாழ்க்கை நிலையை ஏற்க வேண்டும் என்பதை அவர்கள் உள்;ர உணர்வார்களாக் இது திருச்சபைச் சட்டப்படி தேவைப்படுவதென மட்டும் கருதாது, கடவுளின் அளப்பரிய கொடை எனவும் உணரவேண்டும். இக்கொடையைப் பெறுவதற்காக மனத்தாழ்மையுடன் அவர்கள் கடவுளை வேண்டுதல் தேவை. தூய ஆவியரின் தூண்டுதலாலும் அருள் துணையாலும் தாமாகவே தாராள மனத்துடன் இக்கொடைக்கு ஏற்ப ஒழுகுவார்களாக.
கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள அன்பைக் குறிக்கும் கிறிஸ்தவத் திருமணத்தின் (காண் எபே 5:22-23) கடமைகளையும் மேன்மைகளையும் திருப்பணி மாணவர்கள் சரியாக உணரவேண்டும். அதே வேளையில் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்படும் கன்னிமையின் தனிச்சிறப்பை23 அறிந்து உணர்வார்களாக. இவ்விதம் ஆழ்ந்து சிந்தித்து, தாராள மனத்துடன் முடிவு செய்து உடல், உயிர் அனைத்தையுமே கடவுளுக்கே கையளிப்பார்களாக.
குறிப்பாக இன்றைய சமுதாயத்தில் தங்களின் கற்புக்கு ஊறுவிளைவிக்கும் ஆபத்துகளை எதிர்கொள்வது பற்றி அவர்களை எச்சரிக்கவேண்டும்.24 இறையுதவிகள், மனித உதவிகள் ஆகியவற்றின் துணையோடு மணத் துறவைத் தங்கள் வாழ்வோடு பொருத்தமாக இசைவுபடுத்த மாணவர்கள் கற்றுக்கொள்வார்களாக. இதனால் தங்களின் வாழ்வுக்கு; பணிக்கும் மணத்துறவால் ஊறு விளையாதவாறு அவர்கள் பாதுகாத்துக் கொள்வார்கள்; அஃதோடு உடலையும் உள்ளத்தையும் அடக்கி ஆளும் ஆற்றலில் அதிக வளர்ச்சியும் மிகுந்த முதிர்ச்சியும் பெறுவர்; இவற்றோடு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள பேறுபெற்றோர் நிலையையும் மிக நன்கு உணர்ந்தறிவார்கள்.
தன்னடக்கத்தில் வளர்ச்சியுறல்
11. கிறிஸ்தவக் கல்வி முறையின் விதிகள் துல்லியமாகக் கடைபிடிக்கவேண்டும்; அஃதோடு நலமான உளவியல், ஆசிரியவியல் ஆகியவற்றின் இன்றைய கண்டுபிடிப்புகளால் அவை தக்க முறையில் நிறைவு செய்யப்படவேண்டும். ஆகவே நுட்பமான அறிவோடு திட்டமிட்ட பயிற்சியினால் தேவையான மனித முதிர்ச்சியையும் மாணவர்களில் கொணரவேண்டும். இம்முதிர்ச்சி உளவுறுதி, சீர்தூக்கி முடிவெடுப்பதற்கான திறமை, ஆள்களையும் நிகழ்ச்சிகளையும் சரியாக மதிப்பிடும் ஆற்றல் ஆகியவற்றில் விளங்கும். மாணவர்கள் நற்குணம் உடையவர்களாகத் தங்களையெ தக்கமுறையில் உருவாக்கப் பழகிடவேண்டும்; உளத்திடத்தை உருவாக்க கற்று கொள்ளவேண்டும். பொதுவாக மக்களால் மதிக்கப்படுபவையும் கிறிஸ்துவின் பணியாளருக்குரியவையுமான25 நண்பண்புகளைப் போற்ற மாணவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். மனத்திலே நேர்;மை, நீதியின் பால் நிலையான பற்று, உறுதி மொழியில் தவறாமை, நடத்தையில் நற்பழக்கங்கள், பேச்சில் அன்போடு கூடிய அடக்கவொடுக்கம் ஆகியவை இந்நற்பண்புகளாகும்.
திருப்பணிப் பயிற்சியகத்தின் ஒழுங்குகள், மாணவர்களின் கூட்டு வாழ்வுக்கும் பிறரன்புக்கும் உறுதியான பாதுகாப்பு மட்டுமே எனக் கருதக்கூடாது. அவை மாணவர்கள் தங்களையே கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறவும், ஆளுமை முதிர்ச்சியில் உறுதியாய் வளரவும் உதவுகின்றன் திருச்சபையின் திட்டமிடப்பட்டு ஆற்றப்படும் பயன்தரும பணிக்குப் பேருதவியாக விளங்கும் நற்குணங்களை அவர்களிடம் உருவாக்குகின்றன. எனவே திருப்பணிப் பயிற்சியகத்தின் ஒழுங்குகள் முழுத் திருப்பணிப் பயிற்சியின் இன்றியமையாத ஒரு பகுதியாகக் கருதப்பட வேண்டும். உள்ளார்ந்த உறுதிபாடு அல்லது மனச்சான்றின் படியும் (காண் உரோ 13:5) இயல்பு கடந்த காரணங்களை முன்னிட்டும் பயிற்சியகத்தின் தலைவர்களின் அதிகாரத்தை ஏற்கும் ஓர் உள்மனநிலையை மாணவர்களில் உருவாக்கும் வகையில் திருப்பணிப் பயிற்சியகத்தின் ஒழுங்குகள் அமைய வேண்டும். ஒழுங்கு முறைகள் மாணவர்களின் வயதிற்கேற்ப அமைய வேண்டும். ஒழுங்கு முறைகள் மாணவர்களின் வயதிற்கேற்ப அமைய வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் தம்மையே அடக்கி ஆளச் சிறிது சிறிதாகக் கற்றுக்கொள்வர்; சுதந்திரத்தை நன்முறையில் பயன்படுத்தவும் இயல்பாகவும் ஊக்கமுடனும் செயலாற்றவும்26 உடன் சகோதரரோடும் பொது நிலையினரோடும் ஒத்துழைக்கவும் பழகுவர்.
பக்தி மற்றும் மௌனம் மேல் உள்ள ஆர்வமும் ஒருவருக்கொருவர் உதவும் ஆவலும் நிறைந்துள்ள திருபபணிப் பயிற்சிமுறை முழுவதும் ஒருவகையில் திருப்பணியாளரின் எதிர்கால வாழ்விற்குத் தொடக்கமாக விளங்கும் முறையில் அமையவேண்டும்.
அருள்பணிப் பயிற்சி
12. அருள் வாழ்வின் பயிற்சி மிகவும் உறுதியான அடிப்படையின்மேல் அமைந்திருக்க வேண்டும்; திருப்பணி மாணவர்கள் தங்களது அழைத்தலை முதிர்ச்சியான முடிவோடு தழுவ வேண்டும்; எனவே, இதற்குத் தேவையான ஆழந்த அருள்வாழ்வுப் பயிற்சியின் கால வரையறையை வகுத்துத் த ருவது ஆயர்களின் கடமையாகும். திருப்பணி நிலையை அடைய விழைவோரின் தகுதியை நன்கு ஆயும் நோக்குடன் அவர்களது படிப்பைச் சில காலத்திற்கு நிறுத்துவதோ அல்லது தகுந்த அருள்பணியில் அவர்களை ஈடுபடுத்துவதோ ஆயரின் பொறுப்பாகும். இதே போன்று மண்டலங்களின் தனிச் சூழ்நிலைகளை மனத்திற்கொண்டு, திருப்பணிநிலை பெற இன்றையப் பொதுச்சட்டம் நிர்ணயித்துள்ள வயதை அதிகரிப்பதைப் பற்றியும் இறையியல் படிப்பின் முடிவில் திருப்பணி நிலைக்கு உயர்த்தப்படுவதற்குமுன் குறிப்பிட்ட காலத்திற்குத் திருத்தொண்டர்களாகப் பணியாற்றச் செய்வது நன்மை பயக்குமா எனத் தீர்மானிப்பதும் ஆயர்களின் பொறுப்பாகும்.
v. திருப்பணிப் படிப்பைத் திருத்தி அமைத்தல்
மனிதப் பண்பாட்டியலிலும் அறிவியலிலும் பயிற்சி
13. தங்கள் சொந்த நாட்டில் இளைஞர்கள் மேற்படிப்பிற்கு முன் மனிதப் பண்பாடடியலிலும் அறிவியலிலும் கொண்டிருக்க வேண்டிய பயிற்சியைத் திருப்பணி மாணவர்கள் திருச்சபைக்கே உரித்தான திருப்பாடப் படிப்பைத் தொடங்குமுன் பெற்றிருக்க வேண்டும்; அஃதுடன், எத்தனையோ அறிவியல் கலைகளின் மூலங்களையும் திருச்சபை ஏடுகளையும் படித்துணர்ந்து பயன்படுத்தத் தேவையான இலத்தீன் மொழி அறிவையும் பெற்றிருப்பார்களாக.27 ஒவ்வொருவரும் தத்தம் வழிபாட்டு முறையின் மொழியைக் கற்றுத் தெளிவதும் இன்றியமையாததாகும். அதே சமயத்தில் விவிலியமும் மரபும் எழுதப்பட்டுள்ள மொழிகளில் தகுந்த அ றிவு பெறுமாறு மாணவாகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
திருச்சபை சார்ந்த படிப்புகள்
14. கிறிஸ்துவின் மறைபொருள் மனித வரலாறு முழுவதிலும் தாக்கம் கொணர்கிறது; திருச்சபையில் தொடர்ந்து இயங்குகிறது; சிறப்பாகத் திருப்பணியில் செயல்படுகிறது.28 மெய்யியல், இறையியல் பாடங்கள் கிறிஸ்துவின் இம்மறைபொருளை மாணவர்களுக்கு மேன்மேலும் வெளிப்படுத்த இணைந்து செயல்படும் வகையில் தகுந்த முறையில் தொகுத்தமைக்கப்பட வேண்டும். இதுவே திருச்சபை சார்ந்த படிப்புகளைத் திருததியமைக்கும்போது முக்கியாக மனத்தில் கொண்டிருக்கவேண்டிய ஒன்று.
திருப்பணி மாணவர்கள் தங்களது பயிற்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே இக்கருத்தை நன்கு உணருமாறு செய்ய வேண்டும். இதற்காகத் திருச்சபை சார்ந்த படிப்புகளைத் தகுந்த கால வரையறை கொண்ட அறிமுகப் பயிற்சியோடு தொடங்க வேண்டும். இப்பயிற்சியின் போதே நிறைவாழ்வின் இறைத்திட்டம் மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்படவேண்டும். இதனால் மாணவர்கள் திருச்சபை சார்ந்த படிப்புகளின் பொருளையும் அமைப்பையும் அருள்பணித் தன்மையையும் அவற்றிற்கிடையே உள்ள தொடர்பையும் காண்பர். அதே நேரத்தில் தங்கள் முழு வாழ்வையும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைத்து அதில் ஊறித் திளைக்க உதவிபெறுவர்; மகிழ்ச்சியான உள்ளத்தோடு தங்களையே கையளித்துத் தங்களது அழைத்தலைத் தழுவுவதற்கு அவர்கள் உறுதி பெறுவர்.
மெய்யியல் படிப்பு
15. மனிதர், உலகம், கடவுள் பற்றிய உறுதியான, தொடர்புடைய அறிவைத் திருப்பணி மாணவர்கள் முதன் முதலாகப் பெறவேண்டும்; என்றுமே ஏற்புடைத்த மெய்யியல் மரபுச் செல்வத்தில்29 மாணவர்கள் ஊன்றிருக்கவேண்டும்; அஃதோடு தற்கால மெய்யியல் ஆராய்ச்சிகள், தங்களது நாட்டில் செல்வாக்குக் கொண்டுள்ள மெய்யியல் ஆராய்ச்சிகள், தற்கால அறிவியல் முன்னேற்றம் ஆகியவை பற்றி அவர்கள் தெரிந்திருக்கவேண்டும். இவவாறு அவர்கள் தற்காலத்தின் தன்மையைச் சரியாகப் புரிந்து கொள்வதன் மூலம் தற்கால மனிதருடன் உரையாடல் நடத்தத் தயாரிக்கப்படுவர்.30 இவை அனைத்தையும் கண்முன் கொண்டு மெய்யியல் கற்றுத்தரப்படவேண்டும்.
உண்மையை ஊக்கமுடன் தேடி அடைந்து, கடைப்பிடித்து, அதனை எண்பிக்கம் ஆவலை மாணவர்களிடத்தில் தூண்டும் வகையிலும் மனித அறிவின் வரம்புகளை உணர்ந்து ஒழுகும் நேர்மையை அவர்கள் பெறும் வகையிலும் கற்பிக்கும் முறை அமையவேண்டும். மெய்யியலுக்கும் வாழ்வின் உண்மையான சிக்கல்களுக்குமிடையே உள்ள தொடர்புக்கும் மாணவர்களின் மனத்தைக் கலக்குகின்ற வினாக்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். நம்பிக்கைப் பேரொளியில் ஆராயப்படும் மீட்பின் இறைத் திட்டத்திற்கும் மெய்யியல் விளக்கச் சான்றுகளுக்குமிடையே உள்ள தொடர்பையும் கண்டுணர மாணவர்களுக்கு உதவவேண்டும்.
இறையியல் படிப்பு
16. இறை வெளிப்பாட்டிலிருந்து கத்தோலிக்கக் கோட்பாடுகளை மாணவர்கள் சரிவரப் பெற்று, பெற்றவற்றை ஆழ்ந்துணர்ந்து, உணர்ந்தவற்றைத் தங்கள் அருள்வாழ்வுக்கு உணவாகக் கொள்ளவேண்டும்.31 அவற்றை அவர்கள் திருப்பணி சார்ந்த அலுவல்களை ஆற்றும்போது பறைச்சாற்றவும் விளக்கிக்கூறவும் காக்கவும் இயவேண்டும். இந்நோக்குடன் இறையியலானது நம்பிக்கை ஒளியில், திருச்சபை ஆயிரியம் காட்டும் வழியில்32 கற்பிக்கப்படவேண்டும்.
இறையியல் முழுவதன் ஆன்மா போன்று அமையவேண்டிய33 விவிலியப் பாடம் தனிக் கவனத்துடன் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். ஏற்ற முன்னுரைக்குப் பின்பு அவர்களுகு;கு விவிலியப் பொருள்கோள் முறையை நன்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவர்கள் இறைவெளிப்பாட்டின் உயரிய உண்மைகளை உணர்ந்து கொள்வதோடு விவிலியத்தைப் படித்துத் தியானிப்பதன் மூலம் ஊட்டமும் தூண்டுதலும் பெறுவார்களாக.34
கோட்பாட்டு இறையியல் பின்வருமாறு அமையவேண்டும்: முதற்கண் விவிலிய மையக் கருத்துகள் விளக்கப்பட வேண்டும். இறைவெளிபாட்டின் ஒவ்வொரு உண்மையையும் விளக்கவும், வழுவின்றி வழிவழியாக அளிக்கவும் கீழை, மேலைத் தந்தையர்கள் ஆற்றியுள்ள பணிகளை மாணவர்களுக்கு எடுத்துக்கூறவேண்டும். சமயக் கோடபாடுகளின் பிற்கால வரலாற்றையும், அவை திருச்சபைப் பொது வரலாற்றோடு கொண்டுள்ள தொடர்பையும் தெளிவாகக் காட்டவேண்டும்35 அடுத்து நிறைவாழ்வின் மறைநிகழ்வுகளை எவ்வளவுக்குத் தெளிவாக்க முடியுமோ அவ்வளவுக்குத் தெளிவாக்கும் எண்ணத்துடன்மாணவர்கள் து{ய தோமாவை ஆசிரியராகக் கொண்டு தொடர்ந்து ஆய்ந்து, சமய உண்மைகளையும் அவற்றிற்கு இடையே உள்ள தொடர்பையும் ஆழ்ந்து உணரக் கற்றுக் கொள்ளவேண்டும்.36 திருச்சபை முழுவாழ்விலும், இறைவழிபாட்டுச் செல்களிலும்37 இம்மறையுண்மைகள் இருந்து செயல்படுவதைக் கண்டுணர அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வெண்டும். மனிதச் சிக்கல்களுக்கு இறைவெளிப்பாட்டின் ஒளியில் தீர்வு கண்டவையவும், இறைவெளிபாட்டின் ;மாறா உண்மைகளை மனித வாழ்வின் மாறுகின்ற நிலையோடு தொடர்புபடுத்தி அவற்றை இன்றைய மக்களுக்கு ஏற்ற முறையில் எடுத்துரைக்கவும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.38
மற்ற இறையியல் பாடங்களையும் கிறிஸ்துவின் மறைநிகழ்வுகளோடும், மீட்பின் வரலாற்றோடும் ;அதிக உயிரோட்டத்துடன் தொடர்புப்படுத்திப் புதுப்பிக்கவேண்டும். ஒழுக்க இறையியல் நிறைவாக்கம் பெறும்படியாகத் தனிக்கவனம் செலுத்தவேண்டும். இப்பாடத்தில் அறிவியல் அடிப்பiயில் தரப்படும் விளக்கங்கள் விவலியப் படிப்பினையால் அதிக ஊட்டம் பெற்று, மக்களின் கிறிஸ்தவ அழைப்பின் மேன்மையையும் உலக வாழ்விற்குப் பயன்படும் முறையில் செயல்பட வேண்டிய அவர்கள் தம் அன்புக் கடமையையும் எடுத்துணர்த்தவேண்டும். இதேபோன்று இத்திருச்சங்கம் செயல்படுத்துமாறு அறைகூவல் விடுத்துள்ள ''திருச்சபை'' பற்றிய கோட்பாட்டு விளக்கத்தின் கண்ணோட்டத்தில் திருச்சபையின் மறைபொளைக் கண்முன் கொண்டு திருச்சபைச் சட்டவியலையும், திருச்சபை வரலாற்றையும் கற்பிக்க வேண்டும். உண்மையான கிறிஸ்தவ உணர்வுக்கு முதன்மையான, இன்றியமையாத ஊற்றாகக் கருதப்படவேண்டிய திருவழிபாடு, திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் 15, 16 ஆம் எண்களில் கூறப்பட்டுள்ளபடி கற்பிக்கப்பட வேண்டும்.39
வெவ்வேறு மண்டலங்களின் சூழ்நிலைகளைத் தகுந்த முறையில் கருத்தில்கொண்டு திருத்தூது ஆட்சிப் பீடத்திலிருந்து பிரிந்து நிற்கும் சபைகளைப் பற்றியும், சபைச் சகூகங்களைப் பற்றியும்மாணவர்கள் மேன்மேலும் அறியச் செய்யவேண்டும். இதனால் மாவர்கள் இத்திருச்சங்கத்தின் விதிகளுக்கொப்ப எல்லாக் கிறிஸ்தவர்களிடையேயும் ஒற்றுமையை மீண்டும் கொணர உழைக்க இயலும்.40
அந்தந்த நிலப்பகுதிகளில் மிகுதியாகப் பரவியுள்ள மற்ற சமயங்கள் பற்றி அறிவையும்அவர்களுக்குப் புகட்டவேண்டும். இவ்வாறு, கடவுளின் ஏற்பாட்டிற்கொப்ப இந்தச் சமயங்களில் காணக்கிடக்கும் உண்மையானவற்றையும் நலமானவற்றையும் அவர்கள் இன்னும் ஆழமாக அறிந்து ஏற்பார்கள்; தவறுகளை மறுத்துரைக்க வாதாடக் கற்றுக்கொள்வார்கள்; அஃதோடு, உண்மையின் ஒளியை முழுமையாகப் பெற்றுக் கொள்ளாதவர்களோடு அதனைப் பகிர்ந்து கொள்ளவும் அறிவார்கள்.
கற்பிக்கும் முறைகளைத் திருத்தியமைத்தல்
17. கோட்பாடுகளில் அவர்களுக்கு அளிக்கும் பயிற்சியானது வெறுமனே க ருத்துகளை வெளியிடுவதில் மட்டும் அமையக் கூடாது. மாறாக, அது மாணவர்களுடைய உண்மையான ஆழ்ந்த உருவாக்கத்தையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். எனவே விரிவுரைகள், கலந்து ஆய்தல், கருத்தரங்குகள் ஆகியவற்றைச் சார்ந்த கற்பிக்கும் முறைகள் திருத்தியமைக்கப்பட வேண்டும். அஃதோடு, மாணவர்கள் தனியாகவும் சிறு குழுக்களாகச் சேர்ந்தும் படிப்பில் ஈடுபடுவதற்கும் இது பொருந்தும். திருப்பணி மாணவர்களின் பயிற்சி முழுவதும் தொடர்புடையதாகவும், செறிவு கொண்டதாகவும் இருக்குமாறு கவனம் செலுத்தவேண்டும். எனவே, பாடங்களும் விரிவுரைகளும் அளவுக்குமேல் அதிகரிக்காமல் தடுக்கவேண்டும். முக்கியத்துவம் இழந்துவிட்ட அல்லது மேற்படிப்புக்கு உரிய பாடங்கள் நீக்கப்பட வேண்டும்.
உயர் கல்வித் துறைகள்
18. தகுதியான உளப்பாங்கும் ஒழுக்கமும் திறமையும் கொண்டுள்ள இளைஞர்களை சிறப்பு நிறுவனங்களுக்கும் உயர் அறிவுத் துறைகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்புவதில் ஆயர்கள் கவனம் செலுத்த வேண்டும். இதனால் திரு அறிவுத் துறைகளிலும்தேவையான மற்ற அறிவுத் துறைகளிலும் திருப்பணிஙயாளர்கள் உயர்ந்து அறிவியல் முறைபடி முதிர்ச்சி பெறுவார்கள். இவ்வாறு திருத்தூதுப் பணியின் பற்பல தேவைகளை நிறைவு செய்ய இயலும். ஆயினும்அவர்களது அருள்வாழ்வு, அருள்பணிப் பயிற்சி, குறப்பாக அவர்கள் திருப்பணித் திருநிலைபாடு பெறாதிருப்பின், எவ்வகையிலும் புறக்கணிக்கப்படலாகாது.
vi. தகுந்த அருள்பணிப் பயிற்சியை ஊக்குவித்தல்
உரையாடலுக்குப் பயிற்சியளித்தல்
19. திருப்பணி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முழுவதிலும் அருள்பணி பற்றிய கவனம் செலுத்தவேண்டும்.41 தனிப்பட்ட விதத்தில் திருப்பணியோடு தொடர்பு கொண்டுள்ள துறைகளில் சிறப்பாக மறைக்கல்வி அளித்தல், மறையுரை ஆற்றுதல், திருவழிபாட்டுப் பணி செய்தல், அருளடையாளங்களை வழங்குதல், அன்புப்பணிகள் புரிதல், பாதை தவறிச்சென்றவர்களுகு;கும் கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கும் உதவவேண்டிய தங்கள் கடமையை ஆற்றல் ஆகியவற்றிலும் இன்னும் மற்ற அருள் பணிகளிலும் மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். மக்களை அருள்வாழ்வில் வழிநடத்தும் கலையில் அவர்களுக்குத் துல்லியமான பயிற்சி அளிக்கப்படவேண்டும். இதனால் திருச்சபையின் மக்களனைவரும் முதன்முதலில் முழுமையாக உணர்ந்து தெளிந்து திருத்தூது ஆர்வத்துடன் கிறிஸ்தவ வாழ்வு வாழவும் தத்தம் வாழ்க்i நிலைக்குரிய கடமைகளை நிறைவேற்றவும் இயலுமாறு உருவாக்கம் பெற்றிட ஆவன செய்வர். துறவற நிலையைத் தேர்ந்து கொள்ளும் ஆண் பெண் இருபாலரும், தங்களுடைய அழைத்தலாகிய அருள் கொடையில் நிலைக்கவும் தங்களுடய வேறுபட்ட சபைகளின் நோக்கத்தின்படி முன்னேறவும்42 அவர்களுக்கு உதவிபுரிய திருப்பணி மாணவர்கள் அதே அக்கறையோடு கற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுவாக, மக்களோடு உரையாடச் சீரிய முறையில் உதவும் பொருத்தமான பண்புகளை, எடுத்துக்காட்டாகப் பிறருக்குச் செவிமடுக்கும் ஆற்றல், மனித வாழ்வுச் சூழலில் பற்பல தேவைகளுக்கு அன்புணர்வோடு திறந்த உள்ளம் கொண்டிருத்தல் ஆகியவற்றை மாணவர்களிடத்தில் வளளர்க்கவேண்டம்.43
நற்செய்தி அறிவிப்பு மனநிலைக்கான பயிற்சி
20. ஆசிரியவியல், சமூகவியல்44 முதலிய துறைகள் தரஇயலும் உதவிகளை, சரியான முறைகளிலும் திருச்சபை அதிகாரத்தின் விதிகளின்படியும் பயன்படுத்த அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். இதேபோல் பொதுநிலையினரின் த pருத்தூதுப் பணியை ஊக்குவித்துப் பேணி வளர்க்கவும் அதிகப் பயனளிக்கக் கூடிய மற்ற பல திருத்தூதுப் பணி முறைகளை ஆதரிக்கவும் அவர்களுக்குக் கருத்தாகப் பயிற்சி அளிக்கவேண்டும்.45 மேலும், தங்கள் மறைமாவட்டம், நாடு அல்லது வழிபாட்டுமுறை ஆகிய வரம்புகளைக் கடந்து நிற்கவும், நற்செய்தியை எங்கும் போதிக்கத்46 தயாராய் இருக்கும் மனநிலை கொண்டவர்களாய்த் திருச்சபை முழுவதன் தேவையை நிறைவேற்ற உதவி புரியவும் அவசியமான உண்மைக ;கத்தோலிக்க உணர்வு அவர்களிடம் ஊறியிருக்க வேண்டும்.
21. திருத்தூதுப் பணிக் கலையை மாணவர்கள் ஏட்டளவில் மட்டுமின்றி, செயலளவிலும் நிறைவேற்றக் கற்றிருக்கவேண்டும். தனிப் பொறுப்புணர்வோடும் பிறரோடு இணைந்தும் செயல்பட அவர்களால் இயலவேண்டும். இத்தகைய ஈடுபாடு ப டிப்புக் காலத்திலேயே தொடங்கி விடுமுறை நாட்களிலும் தொடர வேண்டியதாகையால், பொருத்தமான செயல் முறகைள் மூலம் அருள்பணியில் மாணவர்கள் வயதிற்கும், இடத்தின் நிலைமைக்கும் ஏற்ப அமையவேண்டும். ஆயர்களின் விவேகமுள்ள தீர்மானங்களின்படி அருள்பணித் துறையில் வல்லுநர்களின் கண்காணிப்பில் இவற்றை முறையாக நடத்தவேண்டும். இவ்வாறு செய்யும் நேரத்தில் இயல்புக்கு மேலான கொடைகளின் உயர்ந்த ஆற்றலையும் எப்போதும் மனதில் கொண்டிருக்கவேண்டும்.47
vii. படிப்புக் காலத்திற்குப்பின் நிறைவு செய்ய்பபடவேண்டிய பயிற்சி
தொடர்ந்து அளிக்கப்படவேண்டிய பயிற்சி
22. திருப்பணிப் பயிற்சி குறிப்பாகத் தற்காலச் சமுதாயத்தின் சூழ்நிலை காரணமாகத் திருப்பணிப் பயிற்சியகப் படிப்பிற்குப் பின்பும் தொடர்ந்து அளிக்கப்பட்டு நிறைவுபெற வேண்டியிருக்கிறது.48 எனவே ஒவ்வொரு நாட்டின் அயர் பேரவைகளும் இதற்காகத் தகுந்த வழிவகைகளைக் கையாளக் கடமைப்பட்டிருக்கின்றன. இவ்வழிவகைகள் ஏற்ற முறையிலே தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குத் தளங்களுடன் சேர்ந்து செயல்படும் அருள்பணிப் பயிற்சி நிறுவுனங்கள்;, குறிப்பிட்ட காலங்களில் நடத்தப்படும் கூட்டங்கள், ஏற்ற செயல்திட்டங்கள் போன்றவையே. இவற்றின் மூலம் இனளம் திருப்பணியாளர்கள் தங்கள் அருள் வாழ்வு, அறிவு வளர்ச்சி அருள்பணியாகிய எல்லாக் கோணங்களிலிருந்தும் திருப்பணி வாழ்விலும் திருத்தூதுப் பணியிலும் படிப்படியாக ஈடுபடுத்தப்படுவர். இவற்றை அதிகமளவில் நாளும் புதுப்பிக்கவும் வளர்ச்சியுறச் செய்யவும் அவர்களால் இயலும்.
முடிவுரை
திரிதெந்து பொதுச் சங்கம் தொடங்கிய அலுவலைத் தொடர்ந்து கிறிஸ்துவின் வருங்காலத் திருப்பணியாளர்களை திருச்சங்கம் ஊக்குவிக்கும் மறுமலர்ச்சிக்கு ஏற்ப உருவாக்கும் பணியை திருச்சங்கத் தந்தையர் திருப்பணிப் பயிற்சியகங்களின் இயக்குநர்களிடமும் பேராசிரியர்களிடமும் நம்பிக்கையுடன் ஒப்படைக்கிறார்கள். அதே நேரத்தில் திருப்பணிக்காகத் தங்களைத் தயாரிப்பவர்கள் திருச்சபையின் நம்பிக்கையும் மக்களின் ஈடேற்றமும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பதை நன்கு உணர்ந்து இவ்விதித் தொகுப்பின் ஒழுங்குகளை மகிழ்ந்த உள்ளத்தோடு ஏற்று, என்றும் நிலைக்கின்ற பலனை ஏராளமாகக் கொடுக்குமாறு அவர்களை மிகுந்த ஆர்வத்துடன் சங்கத் தந்தையர் கேட்டுக் கொள்கிறார்கள்.
இவ்விதித் தொகுப்பில் கூறப்பட்டுள்ளன யாவும், அவை ஒவ்வொன்றும், திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும், கிறிஸ்து நமக்கு அளித்துள்ள திருத்தூது அதிகாரத்தால் வணக்கத்துக்குரிய தந்தையருடன் இணைந்து தூய ஆவியில் அவைகளை ஏற்றுக் கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிiநாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டிய இவை யாவையும் கடவுளின் மாட்சிக்காகச் செயல்படுத்துமாறு ஆணையிடுகிறோம்.
| தூய பேதுரு பேராலயம் | பவுல். |
| உரோமை | கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் |
| அக்டோபர் 28, 1965. |
கீழே தந்தையரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.
