இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள்

துறவற வாழ்வைப்
புதுப்பித்தல்


உட்புகுமுன்

''திருச்சபை'' பற்றிய கோட்பாட்டு விளக்கத்தில் இரண்டாம் வத்திக்கான் ச ங்கம் துறவிகள், துறவற நிலை, துறவற வாழ்வு திருச்சபையோடு கொண்டுள்ள உறவு, துறவற அழைப்பின் மேன்மை ஆகியவை பற்றித் தெளிவாகக் கூறியுள்ளது (காண் திருச்சபை, இயல் 6). எனினும், திருச்சபையில் துறவற வாழ்வு ஓர் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளதால் ஆயர்கள், திருப்பணியாளர்கள், திருப்பணிக்குப் பயிற்சி பெறுவோர், பொதுநிலையினர் ஆகியோர் பற்றித்தனி ஏடுகள் அளித்த சங்கம், துறவியர் பற்றியும் ஓர் ஏட்டினைத் தந்திருப்பதில் வியப்பதற்கில்லை.

கிறிஸ்து தம் படிப்பினைகளாலும் கட்டளையாலும் துறவற வாழ்வைத் தோற்றுவித்தார் என்பதற்கு நற்செய்திகளில் சான்றுகள் இல்லை. எனினும், அவரது அறிவுரைகளை உள்ளத்தில் ஏற்ற பலர் அவற்றை வாழ்வில் கடைப்பிடிக்க முயன்றனர் என்பதைத் திருத்தூதர் பணி நூலில் காண்கிறோம் (காண் திப 2:42-47; 4:32-37). இம்மரபைப் பின்பற்றி, காலப்போக்கிலே இயேசுவின் அழைப்புக்குச் செவிமடுத்த பலர், துறவற நிலையைத் தேர்ந்தெடுத்தனர் எனலாம். இயேசுவின் தொடர்ந்து அழைப்பும் அதற்குச் சில மக்கள் அளித்த தெளிந்த, தீர்க்கமான பதிலுமே குறவற வாழ்வுக்கு அடிப்படை. இவ்வழைப்பும் பதிலும் இன்றும் தொடர்ந்து நடக்கின்றன என்பதற்குப் பழங்காலத்திலே தோன்றி இன்றும் நம்மிடையே உயிரோட்டத்தோடு வாழும் துறவறச் சபைகளே சாட்சிகளாகும். அதே வேளையிலே வேறுபல சபைகள் ஒரு குறிப்பிட்ட கலத்திலே ஒரு குறிப்பிட்ட தேவையை நிறைவேற்றுவதற்காகத் தோன்றி, பின்னர் மறைந்து கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை.

இத்தகைய ஒரு சூழலை மனத்தில் கொண்டு, காலம், இடம், பொருள் என்ற பின்னணிகளிலே துறவற வாழ்வைப் புதுப்பித்து அதற்குப் புதுவாழ்வும் புதுமெருகும் அளிக்க வேண்டும் என்னும் திருச்சபையின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது இவ்விதித் தொகுப்பு. புதுப்பித்தல் என்பது மேலோட்டமாக ஏற்கப்படுகின்ற அல்லது சேர்க்கப்படுகின்ற மாற்றங்களைச் சுட்டாது. மாறாக, மூன்று அடிப்படை உண்மைகளை அது மேல்வரிச் சட்டமாக ஏற்கவேண்டும் என்று கூறுகிறது இவ்விதித் தொகுப்பு.

1. நற்செய்தி எடுத்துரைக்கும் முறையில் ''கிறிஸ்துவைப் பின்பற்றுவதே துறவற வாழ்வின் அடிப்படை அளவுகோல். எனவே இதை எல்லாச் சபைகளும் தம் மேல்வரிச் சட்டமாகக் கொண்டிருக்கட்டும்'' (காண் எண் 2).

2. ''சபையை நிறுவியவரின் நோக்கத்தையும் அவர் வகுத்தளித்த தனிப்பட்ட திட்டங்களையும் நல்மரபுகளையும் ஒவ்வொரு சபையும் தம் குடும்பச் சொத்தாகப் பற்றுறுதியோடு ஏற்று அவற்றைப் போற்றிப் பேணவேண்டும்'' (காண் எண் 2).

3. ''இன்றைய உலகச் சூழ்நிலைகளைத் துறவிகள் நம்பிக்கை ஒளியில் பகுத்தறிந்து திருத்தூது ஆர்வக்கனலால் பற்றியெரிந்து அதிகப் பயனுறு முறையில் மக்களுக்குப் பணிபுரிய வேண்டும்'' (காண் எண் 2).

மேற்கூறிய அடிப்படை உண்மைகளின் வழிநின்று, துறவறச் சபைகள் கொணர வேண்டிய மாற்றங்களையே ''துறவற வாழ்வைப் புதுப்பித்தல்' என்னும் தலைப்பிலே இவ்விதித் தொகுப்பு விளக்குகிறது.

துறவற வாழ்வுக்கு ஊற்றாக அமைவன கிறிஸ்துவின் வாழ்வும் அவர் படிப்பினைகளுமே; அதே வேளையில், வெவ்வேறு துறவறச் சபைகளை நிறுவியவர்களின் நோக்கமும் செயல்முறைகளும் சபைகளின் புதுப்பித்தலுக்கு ஊற்றாக அமைகின்றன. எனவே, இவ்வடிப்படை உண்மைகளை ஆழ்ந்து தேர்ந்து அறிந்து பின்பற்றுதல் இன்றியமையாதது. ஆதலால், கிறிஸ்து இயேசுவின் காலச் சூழலிலே அவரது படிப்பினைகள் அவரது வாழ்வு முதலியவற்றின் சாரம் என்ன என்பதை அறிய விவலியத்தை இன்றயை ஆய்வு முறைப்படி படித்து, இறைவேண்டல் சூழலில் தியானிக்க வேண்டும். இவ்வாறு, ''இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவாகிய ஒப்பற்ற செல்வத்தை'' (காண் பிலி.3:8; துறவற வாழ்வு, எண்.6) பெறவேண்டும். மேலும், சபைகளை நிறுவியோரின் காலம், இடம் ஆகிய சூழல்களை நன்கு அறிந்து உணர்ந்து அப்பின்னணிகளிலே அவர்களது வாழ்வு, படிப்பினைகள் ஒழுங்கு முறைகள் முதலியனவற்றையும் தேர்ந்து தெளிதல் வேண்டும்.

அடுத்து, துறவியர் இன்றைய மக்கள் வாழும் சூழல்கள், பின்னணிகள், இடங்கள், பணிக்குறிக்கோள்கள் முதலியவை பற்றித் தெளிவான கண்ணோட்டம் பெறவேண்டும். காலம், இடம், தேவை ஆகியவற்றை முன்னிட்டு செயல்பாடுகளை மாற்றிக் கொள்வது இயல்பு. எனவே, துறவறச் சபைகளும் தங்களுடைய ஊற்றுக்களில் ஊன்றி நின்று, அதே வேளையில் இன்றைய சூழலில் தம் மூலக்கூறுகளை இனம்கண்டு அவற்றிற்குப் புதுமெருகூட்டிப் புதுவாழ்வு அளிப்பதே ''துறவற வாழ்வைப் புதுப்பித்தல்'' ஆகும்.

கிறிஸ்து இயேசுவின் வாழ்வே துறவற வாழ்வுக்கு அடிப்படையாகும். இருப்பினும் அவரை அனதை;துமாகக் கொண்டு வாழ்ந்த அவரது அன்னை மரியா துறவிகளுக்கும் துறவற வாழ்வுக்கும் ஒரு முதல் மாதிரியாகவும் முன்னோடியாகவும் அமைகிறார் எனலாம்.

ஏட்டின் வரலாறு

துறவியர் பற்றித் திருச்சங்கத் தயாரிப்புக் குழு உருவாக்கிய விவாதத் தொகுப்பு அளவில் மிகப்பெரிதாக இருந்தது. அதில் உலகத் தி ருச்சபையின் பங்கு அதிகம் இல்லை; துறவு வாழ்வு பற்றி அண்மைக் காலத் திருத்தந்தையரின் கூற்றுக்களை அப்பயே தொகுத்து அளித்ததுபோல ஏடு அமைந்திருந்தது. அதை அளவில் மிகவும் சுருக்கி 1963 ஏப்ரல் 22 ஆம் நாள் சங்கத் தந்தையர் அனைவருக்கும் அனுப்பினர். சுருக்கப்பட்ட இந்த விவாதத் தொகுப்பிலும் பல குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன. துறவியருக்கும் அவர்கள் பணிபுரியும் மறைமாவட்டங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றிக் கருத்துத் தெரிவிக்கப்படவில்லை; துறவற வாழ்வின் அருள்பணிக்கூறு குற்பிடப்படவில்லை; நற்செய்தி அறிவிக்கப்படும்நாளில் உள்ள துறவறச் சபைகள் பற்றிக் குறிப்பு இல்லை - இவ்வாறு பல குறைகள் காட்டப்பட்டன.

1964 மார்ச் மாதம் இந்த விவாதத் தொகுப்பு மீண்டும் ஒருமுறை சுருக்கப்பட்டு 51 எண்களிலிருந்து 19 எண்களாகக் குறைந்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் விவாதத் தொகுப்பின் நான்காவது வரைவு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

1965 அக்டோபர் மாதத்தில் சங்கத்தின் நான்காம் அமர்வின் போது இந்த ஏட்டின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக விவாதிக்கப்பட்டு ஆயர்களின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 1965 அக்டோபர் 28 ஆம் நாளன்று இறுதி வாக்கெடுப்பு நடந்தது. 2321 தந்தையர் இசைவு தெரிவித்தனர்; 4 பேர் மட்டுமே எதிர்வாக்கு அளித்தனர். இவ்வாறு, திருத்தந்தை ஆறாம் பவுல் ''துறவற வாழ்வைப் புதுப்பித்தல்'' என்ற சங்க ஏட்டை அதிகாரப் பூர்வமாக அமுல்படுத்தினார்.

துறவியர் பற்றிய ஏடு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளபட்டபோது இரு முக்கிய பொருள்கள் குறித்துத் தீவிர கருத்துப் பரிமாற்றம் நடந்தது. அவை:

1. நற்செய்தியில் 'அறிவுரை' என வழங்கப்படுவதற்கும் 'கட்டளை' என வழங்கப்படுவதற்கும் இடையே என்ன தொடர்பு? அவற்றிற்கிடையே வேறுபாடு உண்டா? 'அறிவுரை' வழி துறவியருக்கு, 'கட்டளை' வழி பிற கிறிஸ்தவருக்கு என்பதன் பொருள் யாது?

2. துறவற வாழ்க்கையில் 'தியான வாழ்வு' என்பதும் 'திருத்தூதுப் பணிவாழ்வு' என்பதற்கும் என்ன தொடர்பு?

இந்த இருபொருள்கள் பற்றிச் சங்கம் பல சமரசங்கள் செய்ய வேண்டியிருந்தது. என்றாலும் இறுதியாக வெளியாகிய ஏடு இன்றைய உலகில் துறவற வாழ்வின் மறுமலர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் இட்டுள்ளது எனலாம்.

பணி.தொ.செயராசு சே.ச.
கோட்பாட்டியல் பேராசிரியர்
சென்னை அருட்கடல்
மார்ச், 1997 சென்னை

துறவற வாழ்வைப் புதுப்பித்தல்
பற்றி
இறை அடியாருக்கு அடியார் ஆயர் பவுல்
திருச்சங்கத் தந்தையருடன் இணைந்து
நினைவில் என்றும் நிலைக்குhமறு வழங்கிய
விதித் தொகுப்பு

முன்னுரை

1. நிறை அன்பைழூ நற்செய்தி அறிவுரைகள் மூலம் தேடி அடைவதற்கான முயற்சி இறை ஆசிரியராகிய கிறிஸ்துவின் படிப்பினையிலும் முன்மாதிரியிலுமிருந்து பிறக்கிறது எனவும், அது விண்ணரசின் விழுமிய அடையாளமாகத் திகழ்கிறது எனவும் திருச்சங்கம் 'மக்களின் ஒளி' எனத் தொடங்கும் கொள்கை விளக்கத்தில் ஏற்கெனவே எடுத்துக்காட்டியுள்ளது. எனவே, இங்கு கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதலை வெளிப்படையாய் ஏற்போர் ஒன்றாய்க் குழுமி வாழும் சபை அமைப்புகளின் வாழ்க்கை, ஒழுங்குமுறை ஆகியவை பற்றி விளக்கவும் காலத்திற்கேற்ப இச்சபை அமைப்புகளின் தேவைகளை நிறைவு செய்யவும் சங்கம் கருத்துக் கொண்டுள்ளது.

நற்செய்தி அறிவுரைகளைக் கடைப்பிடிப்பதன் வழியாக அதிக சுதந்திர மனப்பான்மையோடு கிறிஸ்துவைப் பின்பற்ற உறுதி பூண்டு, நெருங்கி அவரைக் கண்டு பாவித்துக் கடவுளுக்கென ஒப்புக் கொடுக்கப்பெற்ற வாழ்வைத் தத்தம் முறையில் வாழ்ந்த ஆண்களும் பெண்களும் திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்திருக்கின்றனர். இவர்களுள் பலர் தூய ஆவியாரால் தூண்டப்பெற்றுத் தன்னந் தனிமையில் தம் வாழ்நாளைக் கழித்தனர்; அல்லது துறவறக் குடும்பங்களைத் தோற்றுவித்தனர். திருச்சபையும் இவற்றை மனமுவந்து ஏற்று அதிகாரப் பூர்வமாக ஒப்புறுதி அளித்தது; இவ்வண்ணம், இறைத் திருவுளத்தால் பல்வேறு துறவறக் குழுக்கள் வியத்தகு முறையில் தோன்றி வளர்ந்தன. திருச்சபை நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறும் பொருட்டும் (காண் 2 திமொ 3:17) கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்புவதற்கான பணியைச் செய்ய ஆற்றலுடையதாய் இருக்கும் பொருட்டும் மேற்கூறிய துறவறக் குழுக்கள் உறுதுணையாய் அமைந்தன (காண் எபே 4:12); அதுமட்டுமன்றித் திருச்பை தன் பிள்ளைகளின் பல்வேறு கொடைகளால் மானுட மகனுக்கென அணி செய்யப்பட்ட மணமகளைப் போல் (காண் திவெ 21:2) காட்சியளிக்கவும், இவ்வாறு பல்வகையாய்ச் செயல்படும் கடவுளின் ஞானம் (காண் எபே 3:10) தன்மூலம் மிளிரவும் துறவறக் குழுக்கள் உறுதுணை நல்கியுள்ளன.

இக்கொடைகள் மிகவும் வேறபட்டாலும் நற்செய்தி அறிவுரைகளைக் கடைப்பிடிக்கக் கடவுளால் அடைக்கப்பெற்று, அவற்றை நம்பிக்கையுடன் வெளிப்படையாய் ஏற்றுக் கொள்வோர் அனைவரும் சிறப்பான முறையில் தம்மையே ஆண்டவருக்கு அர்ப்பணிக்கின்றனர்; அதாவது, கன்னியானவரும் ஏழையானவரும் (காண் மத் 8:20; லூக் 9:58), சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து (காண் பிலி 2:8) மனிதரை மீட்டுத் தூயோராக்கியவருமான கிறிஸ்துவை இவர்கள் பின்பற்றுகின்றனர்; இவ்வாறு, தூய ஆவியார் இவர்கள் உள்ளங்களில் பொழியும் அன்பால் (காண் உரோ 5:5) உந்தப்பட்டு, மேன்மேலும் கிறிஸ்துவுக்காகவும் அவரது உடலாகிய திருச்சபைக்காகவும் (காண் கொலோ 1:24) வாழ்கின்றனர். எனவே, தங்கள் வாழ்வு முழுவதையும் இவ்வாறு கையளிப்பதன் வழியாகக் கிறிஸ்துவோடு எவ்வளவு ஆர்வத்துடன் ஒன்றுபடுகின்றனரோ அவ்வளவுக்குத் திருச்சபையின் வாழ்வு செழிப்புறுகிறது; அதன் திருத்தூதுப் பணியும் உரம்பெற்றுப் பயன்தருகிறது.

இந்த அறிவுரைகளை வெளிப்படையாய் ஏற்கும் அர்ப்பன வாழ்வின் உயர் மதிப்பும் இன்றைய சூழ்நிலைகளில் அதன் இன்றியமையாப் பணியும் திருச்சபைக்கு இன்னும்அதிகம் உதவவேண்டும் எனும் கருத்துடன் இததிருச்சங்கம் பின்வருபவற்றைத் தீர்மானித்திருக்கிறது. துறவறச் சபைகளின் வாழ்வையும்ஒழுங்கு முறையையும் புதுப்பிப்பதற்கான பொது விதிகளே இவை. நேர்ச்சைப் பாடுகளின்றிக் கூட்டு வாழ்வு வாழும் திருக்குழுக்களும் உலகியல் துறவு அமைப்புகளுக்கும், அவற்றின் தனி இயல்புக்கேற்ப, உதவுபவை இவை. இவற்றைத் தகுந்த வகையில் விளக்கி நடைமுறையில் செயல்படுத்தத் தேவையான ஒழுங்குகளைத் தக்க அதிகாரம் கொண்டவர்கள் திருச்சங்கம் முடிந்த பின் கொணர வேண்டும்.

புதுப்பித்தலுக்கான பொது விதிகள்

2. துறவற வாழ்வைப் புதுப்பிக்கக் கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றுகளுக்கும் சபையின் தொடக்க ஆர்வத்திற்கும் மீண்டும் மீண்டும் திரும்பச் செல்வதோடு மாறிவரும் காலநிலைமைகளுக்கு ஏற்பச் சபைகளை மாற்றியமைத்துக் கொள்ளவும் வேண்டும். தூய ஆவியார் தூண்ட திருச்சபை வழிகாட்ட பின்வரும் விதிகளுக்கு ஏற்ற வண்ணம் சபைகளைப் புதுப்பிக்க வேண்டும்.

அ. நற்செய்தி எடுத்துரைக்கும் முறையில் கிறிஸ்துவைப் பின்பற்றுவதே குறவற வாழ்வின் அடிப்படை அளவுகோல். ஆகவே, இதை எல்லாச் சபைகளும் தம் உயரிய மேல்வரிச் சட்டமாகக் கொண்டிருக்கட்டும்.

ஆ. இச்சபைகள் தமக்கே உரித்தான பண்புகளையும் பணிகளையும் கொண்டிருப்பது திருச்சபைக்கு நலனாகவே அமையும். எனவே, சபையை நிறுவியவரின் நோக்கத்தையும் அவர் வகுத்தளித்த தனிப்பட்ட திட்டங்களையும் நன்மரபுகளையும் ஒவ்வொரு சபையும் குடும்பச் சொத்தாகப் பற்றுறுதியோடு ஏற்று, அவற்றைப் போற்றிப் பேண வேண்டும்.

இ. எல்லாச் சபைகளும் திருச்சபையின் வாழ்வில் பங்குக் கொள்ளட்டும். விவிலியம், திருவழிபாடு, மறைக்கோட்பாடு, அருள்பணி, கிறிஸ்தவ ஒன்றிப்பு, நற்செய்தி அறிவிப்பு, சமூக ஈடுபாடு இவை போன்றவற்றில் திருச்சபை தொடங்கிவைக்கும்அல்லது செய்யத் தூண்டும் காரியங்களை இச்சபைகள் தம்மால் ஆனமட்டும் தத்தம் தனி இயல்புக்கேற்பத் தம்முடையவையாக்கித் தழைக்கச் செய்யட்டும்.

ஈ. மனித நிலைமைகள் காலச் சூழல்கள் ஆகியவை பற்றியும் திருச்சபையின் தேவைகளைப் பற்றியும் சபைகள் தம் உறுப்பினருக்குத் தக்க அறிவை ஊட்டி ஊக்குவிப்பவனாக. அப்பொழுதுதான் இன்றைய உலகச் சூழ்நிலைகளை இவர்கள் நம்பிக்கை ஒளியில் பகுத்தறிந்து திருத்தூதுப் பணியின் ஆர்வக்கனலால் பற்றி எரிந்து, அதிக பயனுறு முறையில் மக்களுக்கு உதவமுடியும்.

உ. சபையினர் நற்செய்தி அ றிவுரைகளை வெளிப்படையாக ஏற்றுக் கிறிஸ்துவைப் பின்பற்றிக் கடவுளோடு ஒன்றிப்பதுவே துறவற வாழ்வின் தலையாய நோக்கம். எனவே, உயிரோட்டமான அருள் வாழ்வு மறுமலர்ச்சி இல்லையேல் இன்றைய தேவைக்கென உருவாக்கப்படும் எந்தச் சிறந்த சீரமைப்பும் எப்பயனும் அளிக்காது என்பதைக் கருத்தில் இருத்தல் வேண்டும். இதனால்தான் புறச்செயல்களை ஊக்குவிக்கும்போது எப்பொழுதும் அருள்சார்ந்த வாழ்வு மறுமலர்ச்சிக்கு முதலிடம் அளிக்க வேண்டும்.

புதுப்பிப்பதற்கான நடைமுறை அளவுகோல்கள்

3. அந்தந்தச் சபையின் தனி இயல்புக்குத்தக்கத் திருத்தூது, பண்பாட்டுச் கூழல்கள், சமூக, பொருளாதாரப் பணி சார்ந்த தேவைகள், நிலைமைகள் ஆகியவற்றிற்கும் சபையினரின் இன்றைய உடல், உளநிலைகளுக்கும் ஏற்றபடி சபையார் வாழும் முறை, இறைவேண்டல் செய்யும் முறை, செயலாற்றும் முறை அனைத்தும் எங்கும் குறிப்பாக நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளில் அமைவு பெறட்டும்.

இதே அளவுகோல்களை வைத்துக்கொண்டு, சபைகளின் ஆட்சிமுறையைப் பற்றியும் ஆய்வு நடைபெறட்டும். ஆகவேஈ சபை ஏற்பாடுகளும் வழிகாட்டி ஏடுகளும், பழக்க வழக்கங்கள் இறைவேண்டல்கள், திருச்சடங்குகள் போன்றவை அடங்கிய நூல்களும் இவற்றிற்கொத்த பிற ஏடுகளும் தக்க வண்ணம் திருத்தப் பெறவேண்டும். இவை யாவும், இததிருச்சங்க ஏடுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்; இக்காலத்திற்கு பொருந்தாத விதிகள் ஒழிக்கப்பட வேண்டும்.

புதுப்பித்தலுக்குப் பொறுப்பானவர்கள்

4. சபையில் பயனுள்ள புதுப்பித்தல் சபையினர் அனைவரின் ஒத்துழைப்பின்றி நடைபெறாது.

எனினும், புதுப்பித்தலுக்கான சட்டங்களை இயற்றுதல், ஒழுங்குகளை உருவாக்குதல் இவற்றைப் போதிய அளவுக்கும் முன்மதியோடும் நடைமுறையில் ஆய்ந்தறிய வாய்ப்பளித்தல் முதலியவை தக்க அதிகாரம் கொண்டவர்களுக்கே, சிறப்பாய் சபைகளின் பொது மன்றங்களுக்கே உரியவை. ஆயினும், திருச்சபைச் சட்டப்படி திருச்சபை ஆட்சிப்பீடத்திலிருந்தோஈ அந்தந்த தலத் திருச்சபை தலைவர்;களிடமிருந்தோ தேவையான ஒப்புதல் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், சபை முழுவதையும் சாரும் காரியங்களில் தலைவர்கள் தம் சபையினரோடு தக்க முறையில் கலந்துரையாடிக் கருத்துக்களைக் கேட்டறிவார்களாக.

பெண் துறவியரின் மடங்களைப் புதுப்பிக்க அம்மடங்களின் கூட்டமைப்பின் அமர்வுகளிலிருந்தோ முறைப்படி கூடிய வேறு வுட்டங்களிலிருந்தோ பரிந்துரைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

ஆயினும், சட்டங்களைப் பெருக்குவதைவிட விதிகளையும் சபை ஏற்பாடுகளையும் கருத்தாய்க் கடைப்பிடிப்பதில் தான் புதுப்பித்தலுக்கான எதிர்நோக்கு அதிகம் அடங்கியிருக்கிறது என்பதை யாவரும் சிந்தையில் கொள்வார்களாக.

எல்லா வகைத் துறவுவாழ்வுக்கும் பொதுவானவைகள்

5. நற்செய்தி அறிவுரைகளை வெளிப்படையாய் ஏற்றதனால் கடவுளின் அழைத்தலுக்குத் தாம் செவிமடுத்துள்ளதை எல்லாச் சபைகளைச் சேர்ந்த துறவியரும் சிறப்பாக மனத்தில் இருத்துவார்களாக. இவ்வாறு பாவத்pற்கு இறந்ததோடன்றி (காண் உரோ. 6:11) உலகையும் துறந்து கடவுளுக்காகவே அவர்கள் வாழுகின்றனர். ஏனெனில், அவர்கள் தம் வாழ்வு முழுவதையுமே அவரு பணிக்குக் கையளித்துள்ளனர். இக்கையளித்தல் தனிச்சிறப்பு வாய்ந்த ஓர் அர்ப்பணமாகின்றது. இவ்வர்ப்பணம் திருமுழுக்கு அர்ப்பணத்தில் வேரூன்றியிருப்பதோடு அதை முழுமையாகவும் வெளிப்படுத்துகின்றது. துறவியர் தம்மைக் கையளித்தபோது, அவர்கள்தம் அர்ப்பணத்தை ஏற்றுக்கொண்டது திருச்சபையே. எனவே, அத்திருச்சபையின் பணிக்கும் தம்மை நேர்ந்துவிட்டதாக அவர்கள் உணர்வார்களாக.

அவர்கள் கடவுளுக்கு ஆற்றும் பணி ;எல்லா நற்பண்புகளையும், சிறப்பாக மனத்தாழ்மை, கீழ்ப்படிதல், திடம், கற்பு என்பவற்றை மேன்மேலும் கடைப்பிடிக்க அவர்களைத் தூண்டி எழுப்ப வேண்டும். இந்த நற்பண்புகளால் தான் கிறிஸ்து ஏற்ற வெறுமையிலும் (காண் பிலி 2:7-8) ஆவியில் அவர் நடத்திய வாழ்விலும் (காண் உரோ 8:1-13) அவர்கள் பங்கு கொள்கின்றனர்.

எனவே துறவியர் தாம் வெளிப்படையாய் ஏற்ற அர்ப்பண வாழ்வுக்கு உண்மையாய் இருந்து, கிறிஸ்துவுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு (காண் மாற் 10:28) கிறிஸ்துவே தம் ஒரே தேவையென (காண் லூக் 10:42) உணர்ந்தவர்களாய் அவரது வார்த்தைகளுக்குச் செவிமடுத்து (காண் லூக் 10:39) அவருக்குரியவற்றின் மேல் அக்கறை கொண்டு (காண் 1 கொரி 7:32) அவரைப் பின்பற்றுவார்களாக (காண் மத் 19:21)

ஆகவே, ஒவ்வொரு சபையைச் சேர்ந்தவர்களும் அனைத்திற்கும் மேலாய்க் கடவுளை மட்டுமே தேடுபவர்களாய் இருக்க வேண்டும். இதற்கென, இவர்கள் மனத்தாலும் இதயத்தாலும் அவரோடு ஒன்றிக்க வைக்கும் ஆழ்ந்த தியானத்தோடு, மீட்பு அலுவலில் பங்கு கொண்டு இறையாட்சியைப் பரப்ப உதவும் திருத்தூது ஆர்வத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

அருள்வாழ்வின் முதன்மை

6. நற்செய்தி அறிவுரைகளை வெளிப்படையாய் ஏற்றிருப்போர் தம்மீது முதுலில் அன்பு காட்டிய கடவுளை (காண் 1 யோவா 4:10) அனைத்திற்கும் மேலாய்த் தேடி, அவர் மீது அன்பு கொள்வார்களாக் கிறிஸ்துவோடு இணைந்து கடவுளிடம் மறைந்திருக்கும் தம் வாழ்வை (காண் கொலோ 3:3) பேணி வளர்க்க அனைத்துச் சூழ்நிலைகளிலும் முயல்வார்களாக. உலகின் நிறைவாழ்வுக்கும் திருச்சபையின் வளர்ச்சிக்கும் உதவும் பிறரன்பு இத்தகைய வாழ்விலிருந்தே வழிந்தோடுகின்றது; தூண்டுதலும் பெறுகிறது. நற்செய்தி அறிவுரைகளின்படி அமைகின்ற வாழ்வும் இந்த பிறரன்பினால் உயிரோட்டம் பெற்று முன்னேறும். ஆகவே, கிறிஸ்தவ அருள்நெறியின் ஊற்றுகளிலிருந்து சபையினர் இறைவேண்டல் மனநிலையையும், இறை வேண்டலையுமே பெற்று அவற்றை முயற்சிநிறை ஆர்வத்தோடு பேணக்ககடவர். ''கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவாகிய ஒப்பற்ற செல்வத்தை'' (பிலி 3:8) பெற்றுக் கொள்ள, தலையான முறையில், விவிலியத்தை அவர்கள் ஒவ்வொரு நாளும் கையிலெடுத்து அதனை வாசித்துத்தியானிப்பார்களாக. தூய திருவழிபாட்டை, குறிப்பாக தூய்மைமிகு நற்கருணை எனும் மறைபொருளைத் திருச்சபையின் மனப்பாங்குடன் உள்ளும் புறமும் ஒருங்கிணைய நிறைவேற்றக் கடவர்; இவ்வளமிகு ஊற்றின் உதவியால், தம் அருள் நெறி வாழ்வில் ஊட்டம்பெறுவர்.

இவ்வாறு, விவிலியப் பந்தியிலும், திருப்பீடப்பந்தியிலும் ஊட்டம் பெற்ற இவர்கள் கிறிஸ்துவின் உறுப்பினர்களைச் சகோதர உணர்வோடு அன்பு செய்வார்களாக் பிள்ளைகளுக்கு உரிய பண்போடு அருள்பணியாளர்களை மதித்து, அவர்களுக்கு அன்பு காட்டுவார்களாக் மேன்மேலும் திருச்சபையோடு வாழ்ந்து, ஒன்றித்து உணர்ந்து, அதனிடம் ஒப்படைக்கப்பட்ட பணிக்கெனத் தம்மை முழுவதும் அர்ப்பணித்துக் கொள்வார்களாக.

ஆழ்தியானச் சபைகள்

7. தனிமையிலும் அமைதியிலும் இடைவிடா இறை வேண்டலிலும் விருப்போடு மேற்கொள்ளும் தன்னொறுத்தலிலும் தம ;உறுப்பினர்கள் கடவுளுக்கு முற்றிலும்நேர்ச்சையாகி வாழும் பொருட்டு ஆழ்ந்த தி ய hனத்திற்காகவே சில சபைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நேரடித் திருத்தூதுப் பணியின் தேவை அதிகம் இருப்பினும், இச்சபைகள் கிறிஸ்துவின் மறையுடலில் எக்காலமும் சிறந்ததோர் இடத்தைக் கொண்டுள்ளன. இம்மறையுடலில் 'உறுப்:களெல்லாம்ஒரே செயலைச் செய்வதில்லை' (உரோ 12:4). இச்சபைகள் கடவுளுக்கு உயர்மிகு புகழ்ச்சிப் பலியை ஒப்புக் கொடுக்கின்றன் கடவுளின் மக்களைத் தூய்மை நிலையின் வளமிகு பலன்களால் மேன்மைப்படுத்துகின்றன் தம் முன்மாதிரியால் அவர்களைத் தூடுகின்றன் மறைவான திருத்தூது வளத்தால் அவர்கள் பெருகுமாறு செய்கின்றன. இவ்வண்ணம், திருச்சபையின் மாட்சியாகவும் விண்ணகக் கொடைகளை வழங்கும் ஊற்றாகவும் உள்ளன. இச்சபைகளின் வாழ்க்கை முறை மேற்கூறிய புதுப்பித்தலின் கூல மெய்ம்மைகளுக்கும் அளவுகோல்களுக்கும் ஏற்ப மாற்றியமைக்கப்படினும், உலகை விட்டு அவர்கள் விலகியிருக்கும்பண்பும் ஆழ்ந்த தியான வாழ்வுக்கே உரிய செயல்களும் இச்சபைகளில் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

திருத்தூதுப் பணியாற்றும் சபைகள்

8. திருச்சபையின் திருப்பணிநிலை சார்ந்த சபைகள் பொதுநிலைச் சபைகள் எனப் பற்பல சபைகள் உள. பற்பல திருத்தூதுப் பணிகளில் ஈடுபட்டிருப்பவை இவை; தமக்கு அளிக்கப் பெற்ற அருளுக்கேற்ப வெவ்வேறு கொடைகளை இவை கொண்டிருக்கின்றன. தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால் அதைத் தொண்டு புரிவதற்குப் பன்படுத்த வேண்டும். கற்றுக் கொடுப்போர் கற்றுக் கொடுப்பதிலும், ஊக்கமூட்டுவேர் ஊக்கம் தருவதிலும், தமக்குள்ளதை வழங்குவோர் தாராளமாய்க் கொடுப்பதிலும், இரக்கச் செயல்களில் ஈடுபடுவோர் முகமலர்ச்சியோடு அவற்றைச் செய்வதிலும் தாம் பெற்ற அருள் கொடைகளைப் பயன்படுத்த வேண்டும் (காண் உரோ 12:5-8). ''அருள் கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே'' (1 கொரி 1 2:4)ஃ

இச்சபைகளை பொறுத்த மட்டில் திருத்தூதுப் பணியும்மக்கள் நலப்பணிகளும் துறவற வாழ்வின் இயல்புக்கே உரித்தானவை; திருச்சபை திருப்பணியையும் தனிப்பட்ட அன்புப் பணியையும் இச்சபைகளிடம் ஒப்படைத்துள்ளதால் இவை திருச்சபையின் பெயரால் ஆற்றப்படவேண்டும். எனவே, சபையாரின் துறவற வாழ்வு முழுவதும் திருத்தூது உணர்வில் ஊறி நிற்கட்டும்; திருத்தூது அலுவல் முழுவதும் துறவற மனநிலையில் உருப்பெறட்டும். ஆகவே, அனைத்திற்கும் மேலாய்க் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான தம் அழைத்தலுக்குச் சபையினர் பதிலிறுக்கவும், அவருடைய உறுப்புகளுக்குப் பணி புரிவதன் வழியாக அதே கிறிஸ்துவுக்குப் பணிபுரியவும் அவர்களது திருத்தூதுப் பணி அவரோடு கொண்டுள்ள நெருங்கிய ஒன்றிப்பிலிருந்து சுருக்கவேண்டும். இவ்வாறு இறை அன்பையும் பிறரன்பையும் அவர்கள் ஒருங்கே போற்றிப் பேணுவர்.

ஆகவே, இச்சபைகள் எந்த திருத்தூதுப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துள்ளனவோ, அவற்றின் தேவைகளுக்கு ஏற்பத் தம் ஒழுங்கு முறைகளையும் பழக்கவழக்கங்களையும் வகுத்துக் கொள்ளட்டும். எனினும், திருத்தூதுப் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட துறவற வாழ்வு பல்வகைகளில் அமைவதால் சபையைப் புதுப்பிக்கும்போது இத்தகைய வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் இந்த வெவ்வேறு சபைகளிலே கிறிஸ்துவுக்குப் பணிபுரியும் சபை உறுப்பினரின் வாழ்க்கை அச்சபைகளுக்கே உரித்தான, தக்க வழிவகைகளால் பேணப்பட வேண்டும்.

ஆசிரமத் துறவு வாழ்வைக் காத்தல்

9. திருச்சபையிலும் மனித சமுதாயத்திலும்பல நூற்றாண்டுகளாய்ப் பெரும்புகழ் பெற்றுள்ளதும் மதிப்பிற்கு உரியதுமான ஆசிரமத் துறவு வாழ்வு கிழக்கு மற்றும் மேற்குச் சபைகளில் உறுதியாய்க் காக்கப்பட்டு, நாளுக்கு நாள் அதிகத் தெளிவாய் அதன் உண்மையான தொடக்க உணர்வில் ஒளிரட்டும். இத்துறவியரின் தலையாய கடமை ஆசிரமத்துக்குள்ளேயே இறைமாட்சிக்குப் பணிவும் மேன்மையும் ஒருங்கே அமைந்த ஊழியம் செய்வதாகும்.திரைமறை வாழ்விலே திருவழிபாட்டுக்கு என தம்மை முழுவதும் அர்ப்பணிப்பதாலும் சில திருத்தூதுப் பணிகளை அல்லது கிறிஸ்தவ அன்புப் பணிகளை ஒழுங்குக்கு ஒத்த வண்ணம்செய்வதாலும் இவர்கள் இக்கடமையை ஆற்றுகின்றனர். ஆகவே, இவர்கள் ம் சபையின் தனி இயல்பைக் கைவிடாமலே, முன்பிருந்த நலம் கொணரும்பழக்க வழக்கங்களைப் புதுப்பிப்பார்களாக் தற்கால அருள்வாழ்வுத் தேவைகளுக்கேற்ப இவற்றைத் தழுவி அமைப்பார்களாக. இவ்வாறு, ஆசிரமங்கள் கிறிஸ்தவ மக்களைப் பேணிவளர்க்கும் நாற்றங்கால்களாக விளங்கும்.

மேலும், சில துறவற சபைகள் தங்கள் ஒழுங்குகள் அல்லது அமைப்புக்கு ஏற்ப, குழுத் திருப்புகழ்மாலை, ஆசிரமத் துறவற ஒழுங்கு முறைகள் இவற்றோடு திருத்தூது வாழ்வை நெருங்கி இணைத்துள்ளன. இவை தம் திருத்தூது தேவைகளுக்குத் தக்க தம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ளும்நேரத்தில் திருச்சபைக்குப் பெரிதும் நன்மை பயக்கும் வகையில் தம் ஆசிரமத் துறவு வாழ்க்கை முறையைப் பற்றுறுதியுடன் பேணவேண்டும்.

பொதுநிலைச் சபைகள்

10. ஆண்களுக்கும் பெண்களுக்குமான பொதுநிலைத் துறவற வாழ்வு, நற்செய்தி அறிவுரைகளை வெளிப்படையாய் ஏற்றுத் தன்னிலே நிறைவான ஒரு நிலையாய் உள்ளது. இளைஞர் கல்வி, பிணியாளர் பேணல் இன்னும்பிற பணிகளும்புரிந்து திருச்சபையின் அருள்பணிக்கு இவை பெரிதும்பயன்படுகினற்ன. எனவேஈ திருச்சங்கம் இத்தகைய வாழ்வை மிகவும்போற்றுகிறது; சபையினரைத் தங்கள் அழைத்தரிலே உறுதிப்படுத்துகிறது; தற்காலத் தேவைகளுக்கு ஏற்பத் தம் வாழ்க்கையைப் புதுப்பித்து அமைக்க அவர்களைத் தூண்டுகிறது.

சபைப் பொது மன்றத்தின் தீர்மானத்திற்கு ஏற்ப, சகோதரர் சபைகள் தம் இல்லங்களின் திருப்பணி சார்ந்த அலுவல்களில் உதவ தம் உறுப்பினர் சிலருக்குத் திருப்பணி நிலைப் பட்டங்கள் வழங்கத் தடை ஏதுமில்லை என்று திருச்சங்கம் அறிவிக்கிறது. ஆனால் இச்சகோதரர் சபைகளின் பொதுநிலைப் பண்பு உறுதியாக நிலைத்திருக்க வேண்டும்.

உலகுசார் துறவு அமைப்புகள்

11. உலகுசார் துறவு அமைப்புகள் துறவறச் சபைகளாக இல்லாவிடினும் நற்செய்தி அறிவுரைகளை மெய்யாகவும் முபுமையாகவும் உலகியல் சூழமைவில் வெளிப்படையாய் ஏற்கின்றன. இதற்குத் திருச்சபை ஒப்புதல் அளிக்கிறது. இவ்வாறு நற்செய்தி அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதன் வழியாக உலகியல் சூழமைவில் வாழும் இல்லறத்தாரும்திருப்பணி நிலையினரும் தம்மை அர்ர்ப்பணம் செய்கின்றனர். ஆகவேஈ இவர்கள் நிறைவான அன்பினால் கடவுளுக்குத் தம்மை முழுவதும்நேர்ந்துவிடுவதை முக்கிய குறிக்கோளாய்க் கொள்ள வேண்டும். இச்சபைகளும் தமக்கே உரித்தான தனிப்பட்ட, அதாவது உலகுசார் துறவு அமைப்புப் பண்பைக் காக்க வேண்டும்; இவ்வாறு எம்மறைப் பணியை ஆற்ற இவ்வமைப்புகள் உருவாக்கப்பட்டனவோ அம்மறைப் பணியை உலகிலேயே இருந்துகொண்டு, உலகுசார் வாழ்க்கை நிலைகளுக்கு ஏற்பப் பயனுறுதியுடன் எங்கணும் புரிய வேண்டும்.

ஆயினும் கிறிஸ்துவின் உடலுக்கு வலுவும் வளர்ச்சியும ;அளித்து உண்மையில் உலகில் புளிப்பு மாவாய் இருக்க இறை மற்றும் மனிதக் காரியங்களில் உறுப்பினர் நலமான பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில், இம்மாபெரும் பணியை அவர்களால் நிறைவேற்ற முடியாதென நன்கு அறிந்துகொள்வார்களாக. எனவே, தலைவர்கள் உறுப்பினருக்குச் சீரிய பயிற்சி, சிறப்பாக அருள்வாழ்வுத் துறைப் பயிற்சி அளிப்பதிலும் தொடர்ந்து அவர்களை உருவாக்குவதிலும் கண்ஞம் கருத்துமாய் இரப்பார்களாக.

கற்பு

12. ''விண்ணரசின் பொருட்டு''(மத் 19:21) துறவியர் வெளிப்படையாய் ஏற்கும் கற்பு மிகச் சிறந்த அருள் கொடையென மதிக்கப்பட வேண்டும். ஏனெனில், கடவுள்பாலும் எல்லா மனிதர் பாலும் உள்ள அன்புக்கனலை மூட்டி வளர்ப்பதற்கான சுதந்திரத்தை மனித இதயத்திற்கு இக்கற்பு தனிப்படட முறையில் அளிக்கிறது (காண் 1 கொரி 7:32-35). ஆகவே, விண்ணக நன்மைகளின் தனிப்பட்ட அடையாளமாய் இக்கற்பு உள்ளது. மேலும், இது துறவியர் இறை ஊழியத்திலும், திருத்தூதுப் பணியிலும் தங்களை முழுமனத்தோடு அர்ப்பணிக்க மிகத் தகுதிவாய்ந்த வழியாய் உள்ளது. திருச்சபைக் கிறிஸ்துவை தன் ஒரே மணமகனாக கொண்டுள்ளது. கடவுள் ஏற்படுத்தியதும் வருங்காலத்தில் முழுமையாய் வெளியாக்கப்பட இருப்பதுமான இவ்வியத்தகு திருமணத்தை நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் துறவியர் தம் கற்பு நிலைவழி நினைவுடுத்துகின்றனர்.

எனவே, தம் நேர்ச்சைப்பாட்டை உண்மையுடன் காக்க முயலும் போது துறவியர் ஆண்டவரின் வார்த்தைகளை உறுதியுடன் பற்றிக் கொள்வார்களாக் தம் சொந்த வலிமையில் நம்பிக்கை வைக்காது கடவுளின் துணைமேல் ஆழ்ந்த நம்பிக்கை வைப்பார்களாக் ஒறு;தலையுடம் புலனடக்கத்தையும் கையாளுவார்களாக் உடல், உளநலத்திற்கு உதவக்கூடிய இயற்கை வழிவகைகளையும் பயன்படுத்திக் கொள்வார்களாக. இவ்வாறு, முழு இச்சை அடக்கத்தைச் சாதிக்க முடியாது எனவும், முடிந்தாலும் மனித முன்னேற்றத்திற்கு அது தீங்கிழைக்கும் எனவும் கூறுகின்ற தப்புக் கொள்கைகள் இவர்களைத்தீண்டா. கற்புக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எதையும், ஒருவித அருள்நெறி உள்ளுணர்வோடு உதறித் தள்ளுவார்களாக. மேலும்ஈ சபையாரின் கூட்டு வாழ்விலே உண்மைச் சகோதர அன்பு நிலவினால் அதிக உறுதியுடன் கற்பு காக்கப்பெறும்எ ன்பதை யாவரும், குறிப்பாய்த் தலைவர்கள் மனத்தில் இருத்துவார்களாக.

முழு இச்சையடக்கம் மனித இயல்பின் மிக ஆழ்ந்த பற்றுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது; எனவே, உண்மையில் போதிய அளவு பயிற்சியுமின்றியும் உள, உணர்ச்சி நிலைகள் வேண்டியமட்டும் முதிர்ச்சி பெறாமலும் வேட்பு நிலையினர் கற்பு நேர்ச்சைப்பாடு கொடுக்க முன்வரலாகாது; அவர்களுக்கு அனுமதியும் வழங்கப்படலாகாது. கற்புக்கு நேரக்கூடிய இடையூறுகளைப் பற்றித் துறவியருக்கு எச்சரிக்கை தருவது மட்டுமல்லாது, கடவுளுக்கு நேர்ச்சியான மணத்துறவு நிலையை முழு ஆளுமை நலனுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் வகையை அவர்களுக்குக் கற்றுத் தரவும் வேண்டும்.

ஏழ்மை

13. கிறிஸ்துவைப் பின்பற்றுவுதின் அடையாளமாய், இக்காலத்தில் மிகவும் சிறப்பாய் மதிக்கப்படுவது மனமுவந்து ஏற்கப்படுமு; ஏழ்மையாகும். இதைத் துறவியர் அக்கறையுடன் கடைபிடிப்பார்களாக. தேவையானால், புதுப்புது வழிகளிலும் இதை வெளிப்படையாய்க் காட்டுவார்களாக. கிறிஸ்துவின் ஏழ்மையில் துறவியர் இவ்வாறு பங்கு கொள்கிறார்கள். அவர் செல்வராய் இருந்தும் நமக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நாம்செல்வராகும்படி இவ்வாறு செய்தார் (காண் 2 கொரி 8:9; மத் 8:20).

இத்துறவற ஏழ்மை, பொருள்களைத் தலைவர்களுக்குப் பணிந்து சபையினர் பயன்படுத்துவதில் மட்டும் அடங்குவதில்லை; அகமும் புறமும் ஏழைகளாய், விண்ணுலகில் தம் செல்வத்தைத் கொண்டவர்களாய் துறவியர் வாழவேண்டும் (காண் மத் 6:20).

உழைக்க வேண்டும் என்னும் பொதுநியதிக்குத் தாமும் உட்பட்டவர்கள் என்பதைத் துறவியர் தத்தம் அலுவல்கள் ஆற்றுவதன் வழியாக உணர்வார்களாக. இப்பழ உழைத்துத் தாம் வாழ்வதற்கும் பணிபுரிவதற்கும் தேவையானவற்றை இவர்கள் தேடிக்கொள்ளும் அதே நேரத்தில், அளவுக்கு மீறிய கவலையனைத்தையும் தள்ளிவிட்டு விண்ணகத் தந்தையின் பராமரிப்புக்குத் தம்மை முழுவதும் கையளிப்பார்களாக (காண் மத் 6:25).

தம் சபையினர் ஏற்கனவே அடைந்துள்ள அல்லது அடையப்போகும் குடும்பச் சொத்துக்களைத் துறந்துவிடும்பா துறவறக் குழுக்கள் தம் சபை ஏற்பாடுகளில் சபையினருக்கு வாய்ப்பு வழங்கலாம்.

வெவ்வேறு இடங்களின் சூழ்நிலைக்கேற்ப, சபைகள் குழுவாகவும் ஏழ்மைக்குச் சான்று பகர முயல வேண்டும். தன் சொந்த உடைமைகளிலிருந்து திருச்சபையின் பிற தேவைகளைத் தீர்க்கவும் வறியோருக்கு உதவவும் மனமுவந்து கொடுக்கவேண்டும்; ஏழைகளைத் துறவியர் அனைவருமே கிறிஸ்துவின் பரிவோடு அன்பு செய்வார்களாக (காண் மத் 19:21; 25:34-46; யாக் 2:15-16; 1 யோவா 3:17). சபைகளின் மாநிலங்களும் மடங்களும் தம் உலகியல் பொருள் நலன்களை தமக்குள்ளே கொள்வனவாக. இவ்வாறு மிகுதியில் திளைப்பவர் வறுமையில் வாடுவோருக்கு உதவுபவர் ஆவர். தத்தம் ஒழுங்குகளுக்கு; சபை ஏற்பாடுகளுக்கும் ஏற்பத்தம் உலகியல் வாழ்க்கைக்கும் பணிக்கும் தேயைவானவற்றை எல்லாம் உடைமையாகக் கொண்டிருக்கத் துறவறச் சபைகளுக்கு உரிமையுண்டு. ஆயினும் எவ்வகை உல்லாச வாழ்க்கையின் தோற்றமும், அளவுக்கு மீறிய பொருளீ;டல், உடைமைக் குவிப்பு ஆகியவற்றின் சாயலும் இல்லாதபடி இச்சபைகள் பார்;த்துக் கௌ;வனவாக.

கீழ்ப்படிதல்

14. கீழ்ப்படிதலை வெளிப்படையாய் ஏற்பதனால் துறவியர் கடவுளுக்குத் தம்மையே பலியாக்கும் முறையில் தம் சுய உள்ளம் முழுவதையும் நேர்ந்துவிடுகின்றனர். இவ்வாறு மீட்பளிக்கும் கடவுளின் திருவுளதோடு இன்னும் உறுதியாகவும் நிலையாகவும் ஒன்றிக்கின்றனர். இயேசு கிறிஸ்து தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற வந்தார் (காண் யோவா 4:34; 5:30; எபி 10:7; திபா 39:9). ''அடிமையின் வழவை ஏற்று'' (பிலி 2:7) தம் துன்பங்கள் வழுpயே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார் (காண் எபி 5:8). அவருடைய மாதிரியைப் பின்பற்றித் துறவியரும் தூய ஆவியாரின் தூண்டுதலால், கடவுளுக்குப் பதிலாய் இருக்கும் தலைவர்களுக்கு நம்பிக்கை உணர்வில் பணிகின்றனர். கிறிஸ்து தம் தந்தையின்பால் கொண்டிருந்த பணிவினாலே தம் சகோதரர் சகோதரிகளுக்குப் பணிபுரிந்தார்; அனைவரின் மீட்புக்கும் ஈடாகத் தம் உயிரைக் கொடுத்தார் (காண் மத் 20:28; யோவா 10:14-18). இதேபோல் தலைவர்கள் நழிநடத்த, துறவியர் கிறிஸ்துவில் சகோதரர், சகோதரிகளாயிருக்கும் அனைவருக்கும் பணிபுரியச் செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் திருச்சபையின் பணியில் நெருங்கிப் பிணைந்து, கிறிஸ்துவில் காணப்பட்ட நிறைவைப் பெருமளவுக்கு முதிர்;ச்சியடைய (காண் எபே 4:13) முயலுகின்றனர்.

எனவே, சபையினர் நம்பிக்கை உணர்வோடும் கடவுளின் திருவுளத்தின்பால் கொண்ட அன்போடும் ஒழுங்குகளுக்கும் சபை ஏற்பாடுகளுக்கும் ஒத்தவண்ணம் தம் மடத்துத் தலைவர்களுக்குத் தாழ்மையுடன் கீழ்படிவார்களாக. கடவுளின் திட்டப்படி கிறிஸ்துவின் ;உடலை வளர்ப்பதற்கென்று தாம் உழைப்பதை உணர்ந்து, தமக்கு இடப்படும் கட்டளைகளை நிறைவேற்றுவதிலும் தம்மிடம் ஒப்படைக்கப்படும் பணிகளைச் செய்வதிலும் தம் அறிவு உள்ளம் இவற்றின் ஆற்றல்களையும் இயற்கை, அருள் ஆகியவற்றின் கொடைகளையும் பயன்படுத்துவார்களாக. இவ்வாறு, துறவறக் கீழ்ப்படிதல் மனித ஆளுமையின் மேன்மையைக் குறைப்பதில்லை; மாறாக, கடவுளின் பிள்ளைகளுக்குரிய சுதந்திரத்தால் அதை வளர்த்து முதிர்ச்சி இட்டுச் செல்கிறது.

தலைவர்களோ தம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களைப் பற்றிக் கணக்குக் கொடுக்கவேண்டியவராவர் (காண் எபி 13:17). ஆகவே, தம் அலுவலை ஆற்றுகையில், இறை உளத்துக்குப் பணிந்து, தம் சகோதரர் சகோதரிகளுக்குப் பணிபுரியும் மனநிலையில், தம் அதிகாரத்தைக் கையாளுவார்களாக் இவ்வாறு சபையார்பால் கடவுள் கொண்டுள்ள அன்பை டிவளிப்படுது;துவார்களாக. வழிநடத்துதலுக்கு உட்பட்டோரை மனித ஆளுமை கொண்டவர்களாக, கடவுளின் பிள்ளைகளாக மதித்துத் தாமாகவே மனமுவந்து கீழ்ப்படியும் வண்ணம் அவர்களைத் தலைவர்கள் ஊக்குவித்து ஆள்வார்களாக. ஆகவே, சிறப்பாக ஒப்புரவு அருளடையாளம், அருள்வாழ்வு வழிகாட்டல் போன்றவற்றைப் பொறுத்தமட்டில் அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தை அளிப்பார்களாக. அலுவல்களை ஆற்றுவதிலும் திட்டங்களை மேற்கொள்வதிலும் துறவியர் பொறுப்போடும் உவந்தேற்கும் கீழ்ப்படியும் வண்ணம் அவர்களைத் தலைவர்கள் ஊக்குவித்து ஆள்வார்களாக. ஆகவே, சிறப்பாக ஒப்புரவு அருளடையாளம், அருள்வாழ்வு வழிகாட்டல் போன்றவற்றைப் பொறுத்தமட்டில் அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தை அளிப்பார்களாக. அலுவல்களை ஆற்றுவதிலும் திட்டங்களை மேற்கொள்வதிலும் துறவியர் பொறுப்போடும் உவந்தேற்கும் கீழ்ப்படிதலோடும் ஒத்துழைக்கும்படி அவர்களைத் தூண்டவேண்டும். ஆகையால், தலைமைப் பொறுப்புடையோர் சபையாரின் கருத்துகளுக்கு மனமாரச் செவிமடுப்பார்களாக. தம் சபை, திருச்சபை இவற்றின் நலனுக்கு உதவ ஒத்தியங்கும்படி அவர்களுக்கு ஊக்கமளிப்பார்களாக. ஆயினும் செய்யவேண்டிய காரியங்களைப் பற்றித் தீர்மானித்துக் கட்டளையிடும் அதிகாரம் இத்தலைவர்களுக்கே முற்றிலும் உரியது.

சபை மன்றங்களும் சங்கங்களும் சபை ஆட்சியில் தங்களிடம்ஒப்படைக்கப்பட்ட பணியை உண்மையுடன் செய்து முடிப்பனவாக. சபையார் யாவரும் சபைச் சமூகம் முழுவதின் நலத்திற்கு பொறுப்பும் அக்கறையும் உடையவர்கள் என்பதை இவை தத்தம் முறையில் வெளிப்படுத்துவனவாக.

கூட்டு வாழ்வு

15. தொடக்கக்காலத் திருச்சபை ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்த நம்பிக்கை கொண்டோரின் குழுவாய் விளங்கியது (காண் திப 4:32). இதனை மாதிரியாகக் கொண்ட கூட்டு வாழ்வு நற்செய்திப் படிப்பினையாலும் திருவழிபாட்டாலும், சிறப்பாய் நற்கருணையாலும் ஊட்டம் பெற்று இறை வேண்டலிலும் நட்புறவிலும் நிலைத்திருக்கக்கூடும்(காண் திப 2:42); கிறிஸ்துவின் உறுப்புகள் என்ற முறையில் துறவியர் சகோதரர் சகோதரிகளுக்கு உரிய முறையில் ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பார்களாக (காண் உரோ 12:10); ஒருவரொருவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்வார்களாக (காண் கலா 6:2). ஏனெனில், தூய ஆவியின் வழியாகக் கடவுளின் அன்பு நம் இதங்களில் மொழியப்பட்டுள்ளது (காண் உரோ 5:5). இவ்வன்பால் துறவறச் சமூகம் மெய்யாகவே ஆண்டவர் பெயரால் குழுமிய ஒரு குடும்பமாக அவரது உடனிருப்பைக் கொண்டுள்ளது (காண் மத் 18:20). அன்பே திருச்சட்டத்தின் நிறைவு (காண் உரோ 13:10); எல்லா நற்பண்புகளையும் பிணைத்து நிறைவுறச் செய்து (காண் கொலோ 3:14). சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோம் என்பதை இதனாலே நாம் அறிகிறோம் (காண் 1 யோவா 3:14). சகோதரர், சகோதரிகளின் ஒன்றிப்பே கிறிஸ்துவின் வருகையை வெளிப்படுத்துகிறது (காண் யோவா 13:35; 17:21). இதிலிருந்தே பெரும் திருத்தூது ஆற்றல் சுரக்கிறது.

சபையாரிடையே நெருங்கிய சகோதரப் பிணைப்பு இருக்கும் வண்ணம் துணைச் சகோதரர்கள் என்றோ, கூட்டுழைப்பாளர் என்றோ வேறு பெயராலோ அழைக்கப்படுபவர்கள் சபையின் அ லுவலிலும் வாழ்விலும் நெருங்கி இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். கால, இடச் சூழ்நிலைகள் வேறு வகையிலே செய்யும்படி உண்மையாய்த் தூண்டினாலன்றி, பெண்கள் சபைகள் ஒரே விதச் சகோதரிகளையே கொண்டிருக்கும் நிலகை;கு வருமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இச்சபைகளில் தனிப்பட்ட இறை அழைத்தலினாலோ, தனித் திறமையினாலோ, தங்களுக்கென்று இருக்கும் வெவ்வேறு வேலைகளைச் செய்வதினாலோ எழும் வேறுபாடுகள் மட்டுமே இருக்கலாம்.

ஆண்கள் மடங்களும் வெறும் பொதுநிலைச் சபைகளாய் எல்லாத் துறவறச் சபைகளும் தம் பண்புக்கு ஒத்தபடி, சபை ஏற்பாடுகளின் விதிகளுக்கேற்பத் திருப்பணி நிலையினரையும் பொதுநிலையினரையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் திருப்பணி நிலையிலிருந்து பிறப்பவை நீங்கலாக மற்ற யாவற்றிலும்ஒரேவித உரிமைகளும் கடமைகளும் இவர்களுக்கு உண்டு.

திருத்தந்தையின் ஆளுகைக்குட்பட்ட தனி இட ஒதுக்கீடு

16. ஆழ்ந்த தியானத்திலேயே வாழ்வைச் செலவழிக்கும் பெண் துறவிகளுக்குத் திருத்தந்தையின் ஆளுகைக்குடபட்ட தனி இட ஒதுக்கீடு தொடரட்டும். ஆயினும், வழக்கொழிந்த பழக்கங்களை நீக்கிவிட்டு, அந்தந்த மடங்களின் விருப்பத்தையும் கேட்டு, கால, இட நிலைமைகளுக்கு ஏற்ப இது புதுப்பிக்கப்பட்ட பெறட்டும்.

சபை ஒழுங்கின்படி திருத்தூதுப் பணிசார்ந்த வெளி அலுவல்களில் ஈடுபட்டுள்ள பிற பெண் துறவிகளுக்குத் திருத்தந்தையின் ஆளுகைக்குட்பட்ட ஒதுக்கமைப்பு இனி இராதிருக்கட்டும். இப்பொழுதுதான் தங்களிடம் ஒப்படைக்கப் பெற்றுள்ள திருத்தூது அலுவல்களை அவர்கள் சிறந்த முறையில் செய்யக்கூடும். ஆயினும், தம் சபை ஏற்பாடுகளுக்கேற்ப இருக்க வேண்டிய ஒதுக்கமைப்பை இவர்கள் பேண வேண்டும்.

துறவற உடைகள்

17. துறவற உடை அர்ப்பணத்தின் அடையாளம். ஆகவே, இது எளிமையானதாகவும் அடக்கமானதாகவும் ஏழ்மை கமழ்வதாகவும் கண்ணியமானதாகவும் இருக்கட்டும். அஃதுடன், துறவியரின் உடல்நலத் தேவைகளுக்கு இசைந்ததாகவும் கால, இடச்சூழ்நிலைகள், பணிவிடைத் தேவைகள் இவற்றிற்குப் பொருந்தியதாகவும் இருக்கட்டும். இத்தகைய அளவீடுகளுக்கு ஏற்ப அமையாத ஆண் பெண் இருபாலரின் உடைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

சபை உறுப்பினரை உருவாக்குதல்

18. துறவறச் சபைகளைப் புதுப்பித்தல் சபையினரை நன்றாய் உருவாக்குவதில்தான் பெரும்பாலும் அடங்கியுள்ளது. எனவே, திருப்பணி நிலையினராய் இல்லாச் சகோதரர்களும், சகோதரிகளும் புதுமுகத் துறவு முடிந்தவுடனே திருத்தூதுப் பணிக்கென நியமிக்கப்படக் கூடாது. தகுந்த இல்லங்களில் இவர்கள் இருந்து துறவறப் பயிற்சி, திருத்தூதுப் பயிற்சி, சமய கோட்பாடு, தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகளைப் பெறட்டும்; தக்க சிறப்புப் பட்டங்களும் பெறட்டும்; இதற்கெல்லாம் போதிய அளவு பயிற்சிக் காலம் இவர்களுக்கு நீடிக்கட்டும்.

இன்றைய தேவகைளுக்கேற்பத் துறவற வாழ்வைப் புதுப்பிக்கும் பணி, வெறும் வெளிச்செயலாக மட்டும் இருத்தல் ஆகாது. தம் ஒழுங்குப்படி மடத்துக்கு வெளியெ போய் திருத்தூது அலுவல் ஆற்றுவோர் தம் கடமையைச் செய்யப் போதிய அளவு தகுதியுடையவராய் இருத்தல் வேண்டும். எனவே, அவரவர் அறிவுத் திறனுக்கும் ஆளுமை இயல்புக்கும் ஏற்றபடி தற்காலச் சமுதாய வாழ்வில் பரவியிருக்கும் பழக்கவழக்கங்களிலும், உணரும், சிந்திக்கும் முறைகளிலும் வேண்டிய அளவு அவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்ட கூறுகளையெல்லாம் துறவறப் பயிற்சி ஒருங்கிசையச் செய்து, துறவியரின் வாழ்க்கை ஒருமைப்பாட்டிற்கு உதவுவதாய் இருக்க வேண்டும்.

சபையினர் தம் வாழ்நாள் முழுவதும் அருள்வாழ்விலும், போதனையிலும், தொழில் நுட்பத்திலும் வளர்ச்சிக் கண்டு நிறைவடைய முயல்வார்களாக. இவர்களுக்கு வேண்டிய வாய்ப்பும்வழிவகைகளும் நேரமும் கிடைக்கும்படி தங்களால் இயன்றவரை தவலைவர்கள் கவனித்துக் கொள்வார்களாக.

இயக்குநர், அருள்வாழ்வு வழிகாட்டிகள், பேராசிரியர்கள் போன்றவற்றைச் சிறந்த முறையில் தேர்ந்தெடுத்துக் கருத்தோடு பயிற்சி கொடுப்பதும் தலைவர்களின் கடமையாகும்.

புதிய சபைகள்

19. பயனற்ற அல்லது போதுமான அளவு வலுப்பெறாத் துறவறச் சபைகள் கவனக் குறைவால் தோன்றிவிடக்கூடும் என்பதால் புதிய சபைகளை அமைக்குமுன் அவை தேவையா, நல்ல பயனைத் தருமா, வளர்ச்சியடைய அவற்றிற்கு வாய்ப்புண்டா என்பதைப் பற்றி ஆழ்ந்து ஆராய வேண்டும். சிறப்பாய், திருச்சபை புதிதாய்ப் பரவியுள்ள பகுதிகளில் ஆங்காங்குள்ள மக்களின் பண்புக்கும் வாழ்க்கை முறைக்கும் ஆழ்ந்த இடங்களின் பழக்க வழக்கங்களுக்கும் நிலைமைகளுக்கும்ஒத்த வண்ணம் அமையும் துறவற வாழ்க்கை முறைகளை வளர்க்க வேண்டும்.

சபைகளுக்குரிய பணிகளைக் காத்தல், மாற்றியமைத்தல், கைவிடல்

20. சபைகள் தத்தம் பணிகளைக் கைநெகிழவிடாமல் பேணி உண்மையுடன் நிறைவேற்ற வேண்டும். அதே வேளையில் அனைத்துலகத் திருச்சபை, மறைமாவட்டம் இவற்றின் நலனைக் கருத்தில் கொண்டு கால, இடத் தேவைகளுக்குத் தக்கவாறு தம் செயல்பாடுகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்; தகுந்த, ஏன் புதிய வழி முறைகளையும் கூடக் கையாளவேண்டும். தம் சபையின் உளபாங்கிற்கும் தொடக்கநிலைப் பண்புக்கும் இன்று நன்கு ஒத்துவரா அலுவல்களைக் கைவிட்டுவிட வேண்டும்.

நற்செய்தி அறிவிப்பு மனநிலை துறவறச் சபைகளில்முழுமையாகப் போற்றப்படட்டும். ஒவ்வொரு சபையின் பண்புக்கும் தக்கபடி, தற்காலச் சூழ்நிலைகளுக்கேற்ப இது தழுவி அமைக்கப் பெறட்டும். அப்பொழுதுதான் நற்செய்தி அறிவிப்பு எல்லா மக்களிடையிலும் மிகு பயனுறுமுறையில் நடைபெறும்.

வளர்ச்சியடையாச் சபைகளைக் கைவிடல்

21. அந்தந்தத் தலத் திருச்சபைத் தலைவர்களின் கருத்தைக் கேட்டறிந்தபிறகு, திருச்சபை ஆட்சிப் பீடத்தின் பார்வையில் இனி வளர்ச்சியடையும் என்னும் நம்பிக்கை சிறிதேனும் இல்லாத துறவறச் சபைகளுக்கும், மடங்களுக்கும், இனி புகுமுகத் துறவியரைச் சேர்க்கத் தடைவிதிக்கப் n ப றட் டும். கூடுமானால் குறிக்கோளிலோ உளப்பாங்கிலோ பெரிதும் வேறுபடாத, அதிக வளர்ச்சியுற்ற மற்றொரு சபையோடு அல்லது மடத்தோடு இவை இணைத்துக் கொள்ளப்படட்டும்.

சபைகளுக்கிடையே ஒன்றிப்பு

22. தன்னந்தனியாக இயங்கும் துறவறச் சபைகளும் மடங்களும் எவ்வகையிலேனும் ஒரே துறவறக் குடும்பத்தைச் சேர்ந்தவைகளாக இருப்பின் வாய்ப்புக்கு ஏற்றபடி திருச்சபை ஆட்சிப் பீடத்தின் ஒப்புதல் பெற்று, அவை தமக்குள்ளே கூட்டிணைப்புகளாய் அமையட்டும், அல்லது, ஏறத்தாழ ஒரே சபை ஏற்பாடு, பழக்க வழக்கங்கள், ஒரேவித உளப்பாங்கு கொண்டிருப்பின், குறிப்பாக மிகமிகச் சிறிய சபைகளாய்ப் பிரிந்திருப்பின், அவையும் கூட்டமைப்புகளாய் செயல்படட்டும். அதே அல்லது ஒரே மாதிரியான வெளி அலுவல்களில் உழைப்பனவாகயிருப்பின் அவை தமக்குள்ளே கழகங்களாய் அமையட்டும்.

உயர் தலைவர் பேரவைகள்

23. திருச்சபை ஆட்சிப் பீடம் நிறுவியிருக்கும் உயர் தலைவர்களின் பேரவைகளுக்கும் சங்கங்களுக்கும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சபையும் தன் குறிக்கோளை முழுமையாக அடையவும் திருச்சபையின் நலனுக்காய் அதிகப் பயன் தருமுறையில் ஒத்துழைக்கவும் ஒரு குறித்த எல்லைக்குள் நற்செய்தித் தொண்டரை இன்னும் சீரான முறையில் பரிமாறிக் கொள்ளவும், துறவியருக்குப் பொதுவாக ள்ள காரியங்களைக் கவனித்துக் கொள்ளவும் இவை பெரிதும் உதவும். திருத்தூதுப் பணியை ஆற்றுவதில் அயர் பேரவைகளோடு தக்க முறையில் இணைந்து இப்பேரவைகளும் சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டும். இத்தகைய பேரவைகளை உலகியல் துறவு அமைப்புகளும் நிறுவிக்கொள்ளலாம்.

துறவற அழைத்தலைப் பேணி வளர்த்தல்

24. திருச்சபையின் தேவைகளைக் கண்முன் கொண்டு, அது புது வளர்ச்சி பெற திருப்பணியாளரும் கிறிஸ்தவ ஆசிரியர்களும் துறவற அழைத்தல்கள் பெருகப் பெரு முயற்சி செய்வார்களாக. இவ்வழைத்தல்களைச் சரியாகவும் தக்க வகையிலும் தேர்ந்தெடுக்க வேண்டும். வழக்கமான மறையுரைகளில் நற்செய்தி அறிவுரைகளைப் பற்றியும், துறவற நிலையைத் தழுவுதல் பற்றியும் அடிக்கடி விளக்கம் தருவார்களாக. பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்குக் கிறிஸ்தவப் பழக்கவழக்கங்களைக் கற்றுத் தருவதன்மூலம் துறவற அழைத்தலை அவர்கள் உள்ளத்தில் பேணிக் காப்பார்களாக.

தம் சபைக்கு அழைத்தல்களை வளர்க்கத் தங்களைப் பற்றிய அறிவைப் பரப்பவும் ஆள் தேடவும் சபைகளுக்கு உரிமை உண்டு. ஆயினும், இந்நேரங்களில் திருச்சபை ஆட்சிப் பீடமும் அந்தந்தத் தலத் திருச்சபைத் தலைவர்களும், கொடுத்திருக்கும் விதிகளை மீறாது, தகுந்த முன்மதியோடு யாவரும் நடந்து கொள்ளவேண்டும்.

தங்கள் வாழ்வின் முன்மாதிரியே தம் சபைக்குச் சிறந்த விளம்பரமாகவும் துறவற வாழ்வைத் தழுவ அழைப்பாகவும் அமைகிறது என்பதை துறவியர் மனத்தில் இருத்துவார்களாக.

இறுதி அறிவுரை

25. துறவற சபைகளைப் புதுப்பித்தலுக்கான இவ்விதிகள் எச்சபைகளுக்காக இயற்றப்ட்டிருக்கின்றனவோ அச்சபைகள் ஒவ்வொன்றும் கடவுளுடைய அழைப்பிற்கும் திருச்சபையில் இக்காலத்தில் தாம்கொண்டுள்ள பணிக்கும் ஏற்ப உளமுவந்து செயல்படுவனவாக. கன்னிமை, ஏழ்மை, கீழ்ப்படிதல் ஆகியவற்றைக் கடைபிடிக்கும் வாழ்க்கை முறையை இவர்கள் கொண்டுள்ளனர். இவ்வாழ்க்கை முறைக்குக் கிறிஸ்து ஆண்டவரே மாதிரி. எனவே, இத்திருச்சங்கம் இதனை மிகவும் மதிக்கிறது; இவர்கள் மறைவிலும் வெளியிலும் செய்கின்ற பயன்தரு பணிகளிலே உறுதியான நம்பிக்கை வைத்துள்ளது. ஆகவே, துறவியர் யாவரும் முழுமையான நம்பிக்கையாலும் கடவுள் மேலும் பிறர் மேலும் கொண்டுள்ள அன்பாலும் சிலுவையின் மீது காட்டும் பற்றாலும், அதே சமயத்தில் வரவிருமக்கும் மாட்சி பற்றிய எதிர்நோக்காலும் கிறிஸ்துவின் நற்செய்தியை உலகமெங்கும் பரப்பக்கடவர்; இவ்வாறு அவர்களது சான்று அனைவருக்கும் வெளிப்படையாகும்; விண்ணகத்திலுள்ள நம் தந்தையும் போற்றிப் புகழப்படுவார் (காண் மத் 5:16). இவ்வாறு, ''எல்லாருக்கும் மேல்வரிச் சட்டமாய் வாழ்ந்து காட்டிய''1 இனிமைநிறை இறை அன்னையாம் கன்னிமரியின் வேண்டுதலால்நாளும் இத்துறவியர் தழைத்தோங்குவார்களாக் நிறைவாழ்வுக் கனிகளை அதிகமதிகம் அளிப்பார்களாக.

இவ்விதித் தொகுப்பில் கூறப்பட்டுள்ள யாவும், அவை ஒவ்வொன்றும்ஈ திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும் கிறிஸ்து நமக்கு அளித்துள்ள திருத்தூது அதிகாரத்தால் வணக்கத்துக்குரிய தந்தையருடன் இணைந்து, தூய ஆவியில் அவைகளை ஏற்றுக் கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிலைநாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டிய இவை யாவையும் கடவுளின் மாட்சிமைக்காகச் செயல்படுத்துமாறு ஆணையிடுகிறோம்.

தூய பேதுரு பேராலயம் பவுல்.
உரோமை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்
அக்டோபர் 28, 1965.  

கீழே தந்தையரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.