திருச்சபையில் உட்புகுமுன் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை 'ஆயர்களின் சங்கம்' என்று அழைப்பதற்குக் காரணம் உண்டு. சங்கம், குறிப்பாக 'திருச்சபை' மற்றும் 'திருச்சபையில் ஆயர்களின் அருள்பணி' ஆகிய இரண்டு ஏடுகளில் தலத் திருச்சபையின் தனிச் ;சிறப்பையும் மறை மாவட்ட ஆயர்களின் மாண்பையும் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது. இவ்வேடு தனி ஆயர் ஒருவரின் அருள்பணி சார்ந்த கடமைகளையும் சட்டப்பூர்வமான நிலையையும் வரையறுக்கும் ஒரு முயற்சியாகவே இத்தொகுப்பு முதலில் ஆரம்பமானது. ஆனால், திருச்சபையின் அமைப்பையே பெரிதும் சீர்திருத்தும் ஓர் ஏடாக இறுதியிலே இது உருப்பெற்றது. இரண்டாம், மூன்றாம், நான்காம் அமர்வுகளிலே இவ்விவாதக் கோப்பினைப் பற்றிப் பல கருத்துப் பிளவுகள் காணப்பட்டன. இருப்பினும் 1965 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 6 ஆம் நாள் இவ்விவாதக் கோப்பு முழுவதையும் 2167 தந்தையர் ஏற்க, பதினால்வர் மட்டுமே அதனை எதிர்த்து வாக்களித்தனர். அது பிரகடனப்படுத்தப் பெறுவதற்குமுன் அதே ஆண்டு அக்டோபர்த் திங்கள் 28 ஆம் நாள் நடந்த பொதுக் கூட்டத்தில் 2319 பேர் ஏற்க, இருவர் மட்டுமே இதனை எதிர்த்து வாக்களித்தனர். இவ்வேட்டின்படி, திருச்சபையில் அனைத்து அதிகாரங்களும் அருளடையாளங்களிலிருந்து பிறக்கின்றன. ஆயர் திருநிலைப்பாடு ஓர் அருளடையாளம், எனவே, ஆயர்கள் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டாலும் தங்களின் ஆட்சியுரிமையைத் திருத்தந்தையிடமிருந்து பெறாமல், ஆயர் திருநிலைப்பாட்டிலிருந்து பெறுகின்றனர். மறைமாவட்ட ஆயர்கள் திருத்தந்தையின் பிரதிநிதிகள் அல்ல, கிறிஸ்துவின் பிரதிநிதிகள். எனவே தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட கடவுளின் மக்களைக் கிறிஸ்துவின் பெயரால் தங்களுக்கே உரித்தான ஆட்சியுரிமையுடன் வழிநடத்துகின்றனர். |
தனிப்பட்ட திருச்சபைகள் அல்லது மறைமாவட்டங்கள் அனைத்துலகத் திருச்சபையின் கிளைகள் அல்ல. மாறாக, தனிப்பட்ட திருச்சபைகளின் கூட்டமைப்பே அனைத்துலகத் திருச்சபையாகும். ஒவ்வொரு தனிப்பட்ட திருச்சபையிலும் ஒரே, தூய, பொதுவான, திருச்சபை உள்ளது, செயலாற்றுகிறது.
மறைத்தூதுவர்களின் வழி வருபவர்களான மறை மாவட்ட ஆயர்கள் தங்களுக்குள்ளும் தங்கள் குழுவின் தலைவரான உரோமை ஆயருடனும் இணைந்து ஒரு குழுவாகச் செயல்படுகின்றனர். ஆயர்களின் இக்குழுத் தன்மையானது சங்கத்தின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாகும். ஆயர்கள் குழு முழுத்திருச்சபையின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. திருத்தந்தை ஆயர்கள் குழுவின் பெயரால் முழுத்திருச்சபையை வழநடத்துகிறார்.
ஆயர்களின் அதிகாரங்களைப் பொறுத்தமட்டில் சங்கம் ஒரு தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. சங்கத்திற்கு முன்பு திருச்சபையின் பொதுச் சட்டங்களிலிருந்து விலக்கீடு அளிக்கும் உரிமை ஆயர்களுக்கு இல்லை. அத்தகைய உரிமை திருஆட்சிப் பீடத்தால் மறைமாவட்ட ஆயர்களுக்கு ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டது. ஆனால், 'திருச்சபையில் ஆயர்களின் அருள்பணி' என்ற சங்க ஏடு நம்பிக்கை கொண்டோரின் அருள் வாழ்வ நலனுக்காகத் திருச்சபையின் பொதுச்ச்டங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட காரியத்தில் விலக்கீடு அளிக்கும் உரிமையை மறைமாவட்ட ஆயர்களுக்கு வழங்கியுள்ளது.
திருச்சபையின் பொது நலன் கருதி ஒரு சில காரியங்கள் மட்டும் திருத்தந்தைக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. இக்காரியங்கள் நீங்கலாக மற்றெல்லாக் கரியங்களும் மறைமாவட்ட ஆயர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகும். மறைமாவட்ட ஆயர்கள் தங்கள் அ ருள்பணியைத் தங்குதடையின்றி ஆற்றுவதற்கு இத்தகைய அதிகாரம் தேவை என்பதைச் சங்கம் உணர்ந்து, திருச்சபையில் அதிகாரக் குவிப்பை அகற்றி, அதிகாரத்தைப் பரவலாக்கும் முறையைக் கடைப்பிடிக்கிறது.
மேற்கூறப்பட்ட ஒருசில அடிப்படை உண்மைகளைக் கண்முன் கொண்டு 'திருச்சபையில் ஆயர்களின் அருள்பணி' என்ற ஏட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
முப்பெரும் பொறுப்புகள்
மறைமாவட்ட ஆயர்களுக்கு தங்களுடைய சொந்த மறை மாவட்டத்தின் நலனில் மட்டுமல்ல, அனைத்துலகத் திருச்சபையின் நலனிலும், ஏனைய தனிப்பட்ட திருச்சைபகளின் நலனிலும் அக்கறையும் பொறுப்பும் உண்டு. இம்முப்பெரும் பொறுப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டும் விதத்தில் 'திருச்சபையில் ஆயர்களின் அருள்பணி' என்னும் விதித் தொகுப்பு மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. அவை:
1. ஆயர்களும் அனைத்துலகத் திருச்சபையும்
2. ஆயர்களும் அவர்களது தனிப்பட்ட சபைகளும்
3. பல சபைகளின் பொதுநலத்தில் ஆயர்களின் ஒத்துழைப்பு
ஆயர்களும் அனைத்துலகத் திருச்சபையும்
திருத்தூதர் குழுவின் வழிவரும் ஆயர்கள் தங்கள் தலைவரான உரோமை ஆயரோடு ஒன்றித்து முழுத் திருச்சபையின் மேல் ஒப்புயவர்வற்ற ஆட்சியுரிமை கொண்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு முழுத் திருச்சபையின் நலனில் ஆழ்ந்த அக்கறை உண்டு.
அனைத்துலகத் திருச்சபையின் மீது தங்களுக்குள்ள அக்கறையை மறைமாவட்ட ஆயர்கள் பின்வரும் வழிகளில் காட்டுகின்றனர்: திருச்சபையின் பொதுச் சங்கங்களில் பங்கேற்றல்; ஆயர் மன்றத்தின் மூலமாகத் திருத்தந்தைக்கு ஆலொசனை வழங்குதல்; உரோமைச் செயலவையில் ஒரு சில மறைமாவட்ட ஆயர்கள் உறுப்பினராகச் செயல்படுதல்; நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளுக்கும், திருப்பணியாளர்கள் பற்றாக் குறையுள்ள இடங்களுக்கும் பயிற்சி பெற்ற திருப்பணியாளர்களை அனுப்புதல்; வறுமையுற்ற தனிப்பட்ட திருச்சபைகளுடன் தங்களது பொருளாதார வளத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் முதலியன.
ஆயர்களும் தனிப்பட்ட திருச்சபைகளும்
தனிப்பட்ட திருச்சபைகள் எனப்படும் மறைமாவட்டங்கள் ஆயர்களின் தனிப் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சபைகளில் மறைமாவட்ட ஆயர்கள் போதிக்கும் பணி, தூய்மைப் படுத்தும்பணிஈ, ஆளும்பணி ஆகிய முப்பெரும் பணிகளை ஆற்றுகின்றனர்.
மறைமாவட்டத்தில் ஆயர்களின் அருள்பணியில் அவர்களுடன் நெருங்கி உழைப்பவர்கள்: இணை ஆயர்கள், துணை ஆயர்கள், குருகுல முதல்வர்கள், ஆயர்-பதிலாளிகள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர்.
'ஆயர் - பதில் ஆள்' என்பவர் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் புதிய படைப்பு, இவர் மறைமாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அல்லது குறிப்பிட்ட ஒரு சில துறைகளில் அல்லது குறிப்பிட்ட வழிபாட்டு முறையைச் சார்ந்த இறை மக்கள் நடுவில் ஆட்சியுரிமை கொண்டிருப்பார்.
திருப்பணியாளர்கள் பேரவையும் மறைமாவட்ட அருள்பணிக் குழுவும் மறைமாவட்ட ஆயர்களுக்கு அவர்களது அருள்பணியில் உதவும் இரண்டு முக்கிய ஆலோசனைக் குழுக்களாகும்.
மறைமாவட்ட ஆயரின் அதிகாரத்திலிருந்து விலக்குரிமை பெற்று, திருஆட்சிப்பீடத்pன் அதிகாரத்திற்கு உட்பட்ட துறவற சபைகளில் நற்செய்தி அறிவிப்புப் பணி, பொதுவழிபாடு, அருள்பணி, ஏனைய மறைபணிகள் கூட மறைமாவட்ட ஆயரின் அதிகாரத்திற்கு உட்பட்டவை. எனவே, துறவறத்தாரும் மறைமாவட்டக் குடும்பத்தின் உறுப்பினர்கள்.
ஆயர்கள் தங்கள் நடுவில் தொண்டுள்ளம் கொண்ட பணியாளர்களாகவும், ஆன்மீக அக்கறை கொண்ட நல்ல அயர்களாகவும், உண்மையான தந்தையர்களாகவும் திகழ அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயர்களும் மற்ற சபைகளும்
ஆயர்கள் தங்களுடைய மறைமாவட்டத்pன் நலனில் கண்ஞம் கருத்துமாயிருப்பதுபோல, பல்வேறு சபைகளின் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டுள்ளனர். பல்வேறு சபைகளின் ஆயர்கள் ஒருங்கிணைந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட நாட்டு அல்லது மண்டல ஆயர்கள் கருத்தொமித்து அந்நாட்டின் அல்லது மண்டலத்தின் திருச்சபை நலனுக்குத் தேவையான, ஆக்கப் பூர்வமான திட்டங்களைத் தீட்ட முடியும். அவ்வாறு செய்வதற்கு உறுதுணையாக 'ஆயர்கள் பேரவை' என்ற அமைப்பைச் சங்கம் முன் வைக்கிறது. சங்கத்திற்குப்பின் ஆயர்கள் பேரவைகள் மிகப் பொறுப்பு வாய்ந்த பணிகளை ஆற்ற அழைக்கப்பட்டுள்ளன. திருச்சபையின் பொதுச்சட்டம் பல காரியங்களை அந்தந்த நாட்டு ஆயர்கள் பேரவை தீர்மானிக்கும்டி பணித்துள்ளது.
ஒருசில நாடுகளின் ஆயர் பேரவைகள் இச்சவாலை மிகவும் துணிச்சலுடன் ஏற்றுத் தனிப்பட்ட திருச்சபைகளுக்குப் புpதய பொலிவை உட்டியுள்ளன. அனைத்திற்கும் உரோமையையே எதிர் பார்த்திருந்த காலம் மாறி, ஆயர்கள் தங்கள் தனிப்பட்ட திருச்சபைகளின் பிரச்சினைகளைத் தாங்களே உரோமைக்கு மனமுவந்து கீழ்ப்படியும் கடவுளின் மக்கள் ஆயர்கள் பேரவையின் முடிவுகளுக்குக் கீழ்ப்படியக் கடமைப்பட்டுள்ளனர்.
முடிவாக
இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளும், அதற்குப்பின் வெளி வந்த திருத்தூதுத் திருமுகங்களும், அறிக்கைகளும் மாவட்ட ஆயர்களின் கைகளை வலுப்படுத்தியுள்ளன. கூட்டுப் பொறுப்பு, குழுவாகச் செயல்படுதல், அதிகாரங்களைப் பரவலாக்குதல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் திருஆட்சிப்பீடம் மறைமாவட்ட ஆயர்களுக்குத் தேவையான அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. ஆயர்கள் தங்களுக்கு இருக்கும்அதிகாரங்களை அறிவர்களா? அவற்றைப் பயன்படுத்துவார்களா, என்பதுதான் தற்போது எழும் கேள்விகள். ஆயர்களால் சரியான விதத்தில் பயன்படுத்தப்படாத அதிகாரங்கள் அனைத்தும் மற்றவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படும்!
அதிகாரம் எதற்காக, ''எங்களுடைய அதிகாரத்தை உங்கள் அழிவுக்காக அல்ல, உங்கள் வளர்ச்சிக்காகவே ஆண்டவர் தந்திருக்கிறார்'' (2 கொரி 10:8) மக்களின் ஆன்மீக நலனே திருச்சபையின் மாபெரும் சட்டம். மக்களின் நலனுக்காகவே ஆயர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்காகவே வந்த கிறிஸ்துவின் மனநிலை (மாற் 10:45) அருள்பணியாளர்களிடம் இருக்க வேண்டும்.
'உங்களோடு நானும் ஒரு கிறிஸ்தவன்; உங்களுக்காக நான் ஓர் ஆயன்' என்று மூறிய ஆயர் அகுஸ்தினார் மனநிலையுடன், மறை மாவட்ட ஆயர்கள் கடவுளின் மக்களிடையே நிலவும் அடிப்படைச் சமத்துவத்தையும், அதே நேரத்தில் பணி சார்ந்த வேறுபாட்டையும் உய்த்துணர்ந்து கடவுளின் மக்கள் சமுதாயத்தை நீதியிலும் அன்பிலும் கிறிஸ்துவில் ஒரே குடும்பமாகக் காட்டி எழுப்பத் தூய ஆவியார் துணை நிற்பாராக!
பணி.ஒய்.இருதயராசு
திருச்சபைச் சட்டவியல் பேராசிரியர்
திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி
ஏப்ரல், 2001 திருச்சி
திருச்சபையில் ஆயர்களின் அருள்பணி
பற்றி இறை அடியாருக்கு அடியார் ஆயர் பவுல்
திருச்சங்கத் தந்தையருடன் இணைந்து
நினைவில் என்றும் நிலைக்குமாறு அருளிய விதித் தொகுப்பு
முன்னுரை
1. கிறிஸ்து ஆண்டவர்ழூ வாழும் இறைவனின் மகன். இவர் தம் மக்களைப் பாவத்திலிருந்து மீட்கவும்1 மக்கள் அனைவரையும் தூய்மைப்படுத்தவும் வந்தார். தந்தையால் இவர் அனுப்பப்பட்டது போல இவரும் தம் திருத்தூதர்களை அனுப்பினார்.2 தந்தையை அவர்கள் இவ்வுலகில் மகிமைப்படுத்தவும், மனிதர்களை மீட்கவும் திருச்சபை என்னும் ''கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும்'' (எபே 4:12) தூய ஆவியை அவர்களுக்கு அளித்து அவர்களைத் தூய்மைப்படுத்தினார்.
திருத்தந்தையும் ஆயர்களும் கிறிஸ்துவின் அலுவலைத் தொடர்கின்றனர்
2. கிறிஸ்து தம் ஆடுகளும் ஆட்டுக்குட்டிகளுமாகிய மக்கள் குழுவைப் பேணும் பணியைப் பேதுருவிடம் ஒப்படைத்தார். உரோமை ஆயர் பேதுருவின் வழிவருபவர் என்னும் நிலையில் கடவுளின் நியமனப்படி கிறிஸ்துவின் இந்தத் திருச்சபையில் மக்களை வழிநடத்த ஒப்புயர்வற்ற, முழுமையான, நேரடியான, உலக முழுவதும் பரந்த அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். இவர் நம்பிக்கை கொண்டோர் அனைவர்pன் அருள்பணியாளர் என்பதால் அனைத்துலகத் திருச்சபையினுடைய பொது நலனையும் தனிச்சபைகளுடைய நலனையும் காக்க வேண்டியவற்றைச் செய்யுமாறு அனுப்பப்பட்டிருக்கிறார். ஆகையால், இவர் எல்லாச் சபைகளின்மேலும் தம் அலுவலோடு இணைந்து தலைமை அதிகாரம் கொண்டுள்ளார்.
தூய ஆவியால் நியமிக்கப்பட்டவர்கள் என்னும் முறையில் ஆயர்களும் திருத்தூதர்களின் வழித்தோன்றல்களாக, மக்களின் அருள்பணியாளர்களாக உள்ளனர்.3 இவர்கள் திருத்தந்தையோடு, அவரது அதிகாரத்தின் கீழ், என்றும் வாழும் அருள்பணியாளர் கிறிஸ்துவின் பணியை எக்காலமும் தொடர்ந்து செய்ய அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.4 எல்லா மக்களுக்கும் போதிக்கவும் உண்மையினால் அவர்களை அர்ப்பணமாக்கவும் பேணி வளர்க்கவும் கிறிஸ்து திருத்தூதர்களுக்கும் அவர்கள் தம் வழித்தோன்றல்களுக்கும் கட்டளையும் அதிகாரமும் கொடுத்தார். எனவே, அவர்களுக்கு அளிக்கப்பட்ட தூய ஆவியால், ஈயர்கள் நம்பிக்கையை அதிகாரப் பூர்வமாக எடுத்துரைக்கும் உண்மையான போதகர்களாகவும் தலைமைப் பணியாளர்களாவும் அருள்பணியாளர்களாகவும் ஆகிறார்கள்.5
3. எல்லாச் சபைகளையும் பற்றிய அக்கறையில் ஆயர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். இவர்கள் ஆயர் திருநிலைப்பாட்டின் மூலம் தாங்கள் பெற்ற ஆயர் பணியைத்6 திருத்தந்தையரோடும், அவரது அதிகாரத்தின் கீழும் செய்கிறார்கள். தங்களுடைய போதிக்கும்ன அலுவலையும் அருள்பணி ஆட்சியையும் கடவுளின் அனைத்துலகத் திருச்சபைக்காக அவர்கள் எல்லாரும் ஒரு குழுவாக, ஓர் உடலாக இணைந்து நிறைவேற்றுகிறார்கள்.
ஆண்டவரது மக்கள் குழுவில் தங்களுக்கென ஒதுக்கப்பெற்ற பகுதிகளில் அவர்கள் தனித்தனியாக இவ்வலுவலைச் செய்கிறார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட தனிச் சபையைக் கவனிக்கிறார்கள்; அல்லது சில வேளைகளில் அவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து பல சபைகளின் சில பொதுத் தேவைகளுக்கு வேண்டிய பணிகளைச் செய்கிறார்கள்.
எனவே, இத்திருச்சங்கம் புதுமையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இன்றைய சமுதாயத்தின் நிலைமைகளை மனத்திற்கொண்டு7 ஆயர்களின் அருள்பணி என்ன என்பதைத் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறும் நோக்குடன் கீழ் வருவனவற்றை அறிக்கையிடுகின்றது.
இயல் 1
ஆயர்களும் அனைத்துலகத் திருச்சபையும்
1. அனைத்துலகத் திருச்சபையில் ஆயர்களின் நிலை
ஆயர்குழுவின் அதிகாரம்
4. அருளடையாளத் திருநிலைப்பாட்டினாலும், ஆயர் குழுவின் தலைவரோடும் உறுப்பினர்களோடும் உள்ள திருச்சபை ஆட்சி ஒன்றிப்பினாலும் ஆயர்கள் ஆயர்குழுவின் உறுப்பினர் ஆகிறார்கள்.8 ''கற்பிக்கும் அதிகாரத்திலும் அருள்பணியாளருக்குரிய ஆளுகையிலும் ஆயர்குழு திருத்தூதர் குழுவின் வழிவருவதாக விளங்குகிறது. இந்த ஆயர் குழுவில் திருத்தூதர் குழு இடைவிடாது நிலைத்து நிற்கிறது என்றே கூறிவிடலாம். தன் தலைவரான உரோமை ஆயரோடு ஒன்றித்து இவ்வாயர்குழு திருச்சபை முழுவதன் மேல் ஒப்புயவர்ற்ற, முழு அதிகாரம் கொண்டுள்ளது. தன் தலைவரோடு ஒன்றித்திராவிடில் இதற்கு இவ்வதிகாரம் கிடையாது. உரோமை ஆயரின் உடன்பாடு இல்லாமல் இவ்வதிகாரத்தை அது செயல்படுத்த முடியாது.''10 எனவே, ஆயர்குழுவின் உறுப்பினராக இருக்கும் எல்லா ஆயர்களுக்கும் பொதுச் சங்கத்தில் பங்குபெற உரிமை உண்டெனத் திருச்சங்கம் அறிக்கையிடுகிறது.
''கீழ்வரும் சூழ்நிலைகளில் இதே குழு அதிகாரத்தை உலகம் முழுவதிலும் வாழும் ஆயர்கள் திருத்தந்தையுடன் செயல்படுத்தலாம். குழுவின் தலைவரே அவர்களைக் குழுவாகச் செயல்பட அழைத்திருக்க வேண்டும்; அல்லது சிதறி வாழும் ஆயர்களது ஒன்றுபட்ட செயலுக்கு ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்; அல்லது தன்னுரிமையுடன் அதை ஏற்றுக்கொண்டிருக்கவாவது வேண்டும்.''11
ஆயர் மன்றம் அல்லது மைய ஆலோசனைக் குழு
5. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயர்கள், உரோமை ஆயர் வகுத்துள்ள அல்லது வகுக்கவிருக்கின்ற வழிமுறைக்கேற்ப, திருச்சபையின் தலைமை ஆயருக்கு மிகப் பயனுள்ள உதவியை ஓர் ஆலோசனைக் குழுவாக அளிப்பர். இக்குழு ஆயர் மன்றம்12 என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும். இக்குழு கத்தோலிக்க ஆயர் அனைவரின் பெயரால் பணியாற்றுவதால் ஆயர்கள் அனைவரும் திருச்சபை நலனுக்கான அக்கறையில் பங்குகொள்ளுகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.13
அனைத்துலகத் திருச்சபையின் மட்டில் ஆயர்களின் அக்கறை
6. ஆயர்கள் திருத்தூதர்களின் முறையான வழித்தோன்றல்கள் என்பதாலும், ஆயர் குழுவில் உறுப்பினராக இருப்பதாலும் தங்களுக்குள்ளே ஒன்றாக இணைக்கப்படுகிறார்கள் என்பதை உணர வேண்டும்; எல்லாச் சபைகள் மேலும்அவர்கள் அக்கறை காட்ட வேண்டும். ஏனென்றால், கடவுள் நிறுவியபடியும், திருத்தூது அலுவல் ஆணையாலும் மற்ற ஆயர்களுடன் சேர்ந்து ஒவ்வோர் ஆயரும் திருச்சபைக்குச் செயற்பொறுப்பு உள்ளவர்கள்.14 குறிப்பாக, கடவுளது வார்த்தை எட்டாத நிலப் பகுதிகளிலும், திருப்பணியாளர்களின் எண்ணிக்கைக் குறைவால் கிறிஸ்தவ வாழ்வின் கடமைகளைப் பின்பற்றாது, தம் நம்பிக்கையையே இழந்துவிடும் நிலையில் உள்ள கிறிஸ்தவ மக்கள் வாழும் நிலப் பகுதிகளிலும் ஆயர்கள் த ன pப்பட்ட அக்கறை காட்ட வேண்டும்.
ஆகையால், நற்செய்தியை அறிவிக்கும் பணியையும் திருத்தூது அலுவலையும் நம்பிக்கை கொண்டோர் பெரிதும் ஆதரிக்கவும், அவற்றைப் போற்றி வளர்க்கவும் ஆயர்கள் தங்கள் திறமைகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி முயல வேண்டும். நற்செய்தி அறிவிக்கப்படுமு; நாடுகளுக்கும், போதிய திருப்பணியாளர்களின்றிப் பாதிக்கப்படும் இடங்களுக்கும் தகுந்த திருப்பணியாளர்களையும், அவர்களுக்கு உதவிபுரியத் துறவறத்தாரையும் பொதுநிலையினரையும் உருவாக்குவதில் ஆயர்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கோ, தங்கள் வாழ்நாள் முழுவதுமோ திருப்பணியை நிறைவேற்றுவதற்கு ஆயர்கள் தங்கள் திருப்பணியாளர்களில் சிலலை மேற்குறிப்பிட்ட நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளுக்கு அல்லது மறைமாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கத் தங்களால் இயன்றவரை முயல வேண்டும்.
தனிச் சபைகள் கிறிஸ்துவின் ஒரே திருச்சபையின் பகுதிகள் என்பதால் ஆயர்கள் திருச்சபையின் வளங்களைப் பயன்படுத்தும் போது தங்களுடைய மறைமாவட்டங்களின் தேவைகளை மட்டுமல்ல, மற்ற தனிச்சபைகளின் தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இறுதியாக, மற்ற மறைமாவட்டங்களையும் நிலப்பகுதிகளையும் பாதிக்கின்ற பேரிடர்களை அகற்றவும் தங்களால் இயன்ற அளவு அவர்கள் முன்வர வேண்டும்.
துன்புறுகின்ற பிற ஆயர்களுக்கு ஆற்றவேண்டிய அன்புப் பணி
7. குறிப்பாக, கிறிஸ்துவுக்காகப் பொய்க் குற்றச்சாட்டுகளாலும் இன்னல்களாலும் தொல்லைப்படுத்தப்படுகிற, சிறைக் காவலில் வைக்கப்படுகிற, தங்கள் பணியை ஆற்ற முடியாமல் தடை செய்யப்படுகிற ஆயர்களை இவர்கள் சகோதர அன்பினால் அரவணைக்க வேண்டும். சகோர ஆயர்களான இவர்கள் தங்கள் இறைவேண்டல்கள், செயல்கள் வழியாக அவர்கள் மட்டில் உண்மையான, செயலாக்கம் பொருந்திய சகோதரப் பரிவு காட்டவும் வேண்டும்.
2. ஆயர்களும் திருத்தூதர் ஆட்சிப்பீடமும்
தங்கள் மறைமாவட்டங்களில் ஆயர்களின் அதிகாரம்
8. அ) திருத்தூதர்களின் வழித்தோன்றல்களான ஆயர்களுக்குத் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மறைமாவட்டங்களில் அருள்பணி ஆற்றுவதற்கு வேண்டிய, தங்கள் பணியோடு இணைந்த, தமக்கே உரிய, நேரடியான எல்லா அதிகாரமும் இயல்பாகவே உண்டு. தமது பணிப்பொறுப்பின் காரணமாகத் தமக்கோ வேறு ஆட்சியாளருக்கோ சில காரியங்களை ஒதுக்கிவைக்க உரோமை ஆயர் கொண்டுள்ள அதிகாரத்தை ஆயர்களின் அதிகாரம் ஒருபோதும் பாதிப்பதில்லை.
ஆ) திருச்சபையின் உயர் அதிகாரத்தால் தனிப்பட்ட முறையில் ஒதுக்கிவைக்கப்படாத காரியங்களாக இருந்தால், தங்களது அதிகாரத்திற்கு உட்பட்ட நம்பிக்கை கொண்டோரின் அருள் நலன் கருதி, திருச்சபையின் பொதுச்சட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட காரியத்தில் அவர்களுக்கு விதிவிலக்களிக்க ஒவ்வொரு மறைமாவட்ட ஆயருக்கும் அதிகாரம் உண்டு.
உரோமைச் செயலவையின் பல்வேறு துறைகள்
9. உரோமை ஆயர் தமது ஒப்புயவற்ற, முழுமையான, நேரடியான அதிகாரத்தை உரோமைச் செயலவையின் பல துறைகள் மூலம் அனைத்துலகத் திருச்சபைமேல் செயல்படுத்துகிறார். இவை அவரது பெயரில் அவரது அதிகாரத்தோடு திருச்சபையின் நலனுக்காகவும் திருஅருள் பணியாளர்களுக்கு உதவியாகவும் பணிபுரிகின்றன.
ஆயினும், உரோமை ஆயருக்கும் திருச்சபையின் அருள் பணியாளர்களுக்கும் உண்மையிலேயே சிறந்த தொண்டாற்றியுள்ள இத்துறைகளின் எண்ணிக்கை, பெயர், அதிகார வரையறை, செயல்முறை, ஒருமுகப்படுத்தும் வழிகள் ஆகிய யாவும் காலம், இடம், வழிபாட்டு முறைகள் சார்ந்த தேவைகளுக்குப் பொருத்தமாக மாற்றி அமைக்கப்பட வேண்டுமென திருச்சங்கத் தந்தையர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.15 ஆயர்களுக்குரிய அருள்பணியை மனதிற்கொண்டு திருத்தந்தையின் தூதுவர்களின் பணி திட்டவட்டமாக வரையறுக்கப்பட வேண்டும் என்பதும் சங்கத் தந்தையரின் பேரவா.
உரோமைச் செயலவைத் துறைகளின் உறுப்பினர்கள்
10. இத்துறைகள் அனைத்துலகத் திருச்சபையின் நலனுக்காக நிறுவப்பட்டிருக்கின்றன என்பதால் இவற்றின் உறுப்பினர்களும் அலுவலர்களும் ஆலோசகர்களும் மற்றும் திருத்தந்தையின் தூதுவர்களும் இயன்றவரையில் திருச்சபையின் பல பகுதிகளிலிருந்தும் அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்படுவது விரும்பத்தக்கது. இவ்விதம் கத்தோலிக்கத் திருச்சபையின் அலுவலகங்கள் அல்லது மையச் செயலகங்கள் அதன் அனைத்துலகத் தன்மையை எடுத்துக்காட்டும்.
எல்லாச் சபைகளின் கருத்துகளையும் விருப்பங்களையும் தேவைகளையும் திருத்தந்தைக்குச் சிறந்த முறையில் எடுத்துரைக்க இயலும் வண்ணம் சில ஆயர்களும் குறிப்பாக மறைமாவட்ட ஆயர்களும் இத்துறைகளின் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவதும் விரும்பத்தக்கது.
இறுதியாக, பொதுநிலையினரும் திருச்சபைக்கடுத்த காரியங்களில் தங்களுக்கேற்ற பங்கைப் பெற, இத்துறைகள் நற்பண்பிலும் அறிவிலும் அனுபவத்திலும், முதிர்ந்த பொதுநிலையினரை இன்னும் அதிகம் கலந்து ஆலோசிப்பது சிறந்த பயனுடையதாக இருக்கும் எனச் சங்கத் தந்தையர் கருதுகின்றனர்.
இயல் 2
ஆயர்களும் அவர்களின் தனிப்பட்ட சபைகளும்
அல்லது மறைமாவட்டங்களும்
1. மறைமாவட்ட ஆயர்கள்
மறைமாவட்டம் என்பதன் பொருளும் ஆயர்களின் பணிப் பொறுப்பும்
11. மறைமாவட்டம் என்பது திருப்பணியாளர்களின் ஒத்துழைப்புடன் கண்காணிக்கப்படுவதற்காக ஆயரிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களின் ஒரு பகுதி. இவ்வாறு ஆயரோடு இணைந்திருப்பதாலும், நற்செய்தி வழியாகவும் நற்கருணை வழியாகவும் அவரால் ஒன்றுகூட்டப்படுவதாலும் அஃது ஒரு தனிப்பட்ட சபையாக உருப்பெறுகிறது. அதில் கிறிஸ்துவின் ஒரே, தூய, பொதுவான, திருத்தூதுத் திருச்சபை உண்மையாகவே உள்ளது, செயலாற்றுகிறது.
ஒவ்வோர் ஆயரும் கண்காணிப்பதற்காகத் தனிப்பட்ட சபை ஒன்று அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. திருத்தந்தையின் அதிகாரத்தின் கீழ் ஆயர்கள் இச்சபைகளுக்கு இயல்பான, பணிசார்ந்த அதிகாரமுடைய, நேரடியான அருள்பணியாளர்களாக இருந்து, ஆண்டவரின் பெயரால் தம் ஆடுகளை ஊட்டி வளர்க்கின்றனர். இவ்வாறு, கற்பித்தல், தூய்மைப்படுத்தல், வழிகாட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய தமது பணியைத் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் குழுவைப் பொறுத்தமட்டில் அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். எனினும், மறைத்தந்தையருக்கோ திருச்சபை ஆட்சி அமைப்பின் பிற அதிகாரத்துக்கோ சட்ட முறையாக உள்ள உரிமைகளை அவர்கள் ஏற்று மதித்தல் வேண்டும்.16
எல்லா மனிதர்களுக்கும் முன்பாகக் கிறிஸ்துவின் சாட்சிகளாகத் தங்களைத்தாமே ஆயர்கள் தங்களது திருத்தூதுப் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். அவர்கள் ஆயர்களின் தலைவராகிய கிறிஸ்துவை ஏற்கனவே பின்பற்றுகிறவர்கள்மேல் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது; உண்மையின் வழியினின்று எவ்வகையிலாவது தவறிச் சென்றவர்கள் அல்லது கிறிஸ்துவின் நற்செய்தியையும் மீட்பளிக்கும் அவரது இரக்கப் பெருக்கையும்'' (எபே 5:9) பெற்றவர்களாய் வாழ அவர்களுக்காகவும் முழுமனத்துடன் தங்களையே அர்ப்பணிக்க வேண்டும்.
கற்பிக்கும் பணி
12. ஆயர்கள் கற்பிக்கும் பணியை ஆற்றும்போது, கிறிஸ்துவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கவேண்டும்; அவர்களின் முக்கியமான அலுவல்களில் மேன்மையானது இதுவே.17 தூய ஆவியின் திடத்தால் ஆயர்கள் மக்களை நம்பிக்கைக்கு அழைக்க வேண்டும். அல்லது உயிருள்ள நம்பிக்கையில் அவர்களை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் கிறிஸ்துவின் முழுமறைபொருளையும் அதாவது எந்த உண்மைகளை அறியாமல் இருப்பது கிறிஸ்துவையே அறியாமல் இருப்பதற்குச் சமமாகக் கருதப்படுகிறதோ அந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அஃதோடு, கடவுளை மாட்சிமைப்படுத்தி அதன் மூலம் முடிவில்லாப் பேரின்பத்தை அடைவதற்குக் கடவுள் வெளிப்படுத்திய வழியையும் அவர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.18
மேலும், படைத்தவரின் திட்டப்படி இவ்வுலகப் பொருள்களும் மனித அமைப்புகளும் மனிதரின் நிறைவாழ்வுக்குத் துணைபுரிவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன என்பதையும், எனவே அவை கிறிஸ்துவின் உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கமுடியும், என்பதையும் அவர்கள் எடுத்துக்காட்ட வேண்டும்.
ஆகவே, கீழ்க் காண்பவைகளை எத்துணை மதிக்க வேண்டுமெனத் திருச்சபையின் கோட்பாட்டின்படி ஆயர்கள் மக்களுக்குக் கற்பிக்க வேண்டும்; மனிதர், அவர்களது தன்னுரிமை, அவர்களது உடல்சார்ந்த வாழ்வு; குடும்பம், அதன் ஒற்றுமையும் உறுதியும், மக்களைப் பெறலும் அவர்களுக்குக் கல்வியளித்தலும்; சமூகக் கூட்டுவாழ்வு, அதன் சட்டங்களும் வாழ்க்கைத் தொழில்களும்; உழைப்பு, ஓய்வு; கலைகள், தொழில்நுட்பத் துறைக் கண்டுபிடிப்புகள்; வறுமை, வளமை, இறுதியாக, இவ்வுலகப் பொருள்களை உடமையாக்குதல், அவைகளைப் பெருக்குதல், நேர்மையாகப் பங்கிடுதல், அமைதி, போர், எல்லா நாடுகளிடையேயும் நிலவவேண்டிய சகோதர உறவு ஆகிவை போன்ற பெரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டிய முறைகளையும் அவர்கள் எடுத்துரைக்க வேண்டும்.19
கிறிஸ்தவக் கோட்பாட்டை இக்காலத்தில் எடுத்துரைக்கும் முறை
13. கிறிஸ்தவக் கோட்பாட்டை ஆயர்கள் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ற முறையில் எடுத்துக்கூற வேண்டும். அதாவது, மக்கள் மனத்தை அச்சுறுத்தி அலைக்கழிக்கும் பிரச்சனைகளுக்கும் கேள்விகளுக்கும் தகுந்த பதில் அளிக்கும் வகையில் அது அமைதல் வேண்டும். மேலும், கிறிஸ்தவக் கோட்பாட்டை அவர்கள் பாதுகாக்க வேண்டும் அஃதோடு, நம்பிக்கை கொண்டோரும் அதைக் காத்துப் பரப்ப அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். கோட்பாட்டை விளக்குகையில் நம்பிக்கை கொண்டோரும் நம்பிக்கை இல்லாதாருமான மனிதர் யாவரின் மீதும், திருச்சபை கொண்டுள்ள அன்னைக்குரிய அக்கறையை அவர்கள் எண்பிக்க வேண்டும்; குறிப்பாக, ஏழைகளிடத்திலும் தாழ்த்தப்பட்டோரிடத்திலும் அவர்கள் தனிக்கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில், இவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கவே ஆண்டவர் அவர்களை அனுப்பினார்.
தான் வாழும் மக்கள் சமுதாயத்தோடு உரையாடுவது20 திருச்சபையின் பொறுப்பாதலால் மக்களை நாடிச் சென்று அவர்களோடு உரையாடலைத் தொடங்கி அதனைப் பேணி வளர்ப்பது சிறப்பாக ஆயர்களைச் சார்ந்த அலுவல். உண்மையும் அன்பும் அறிவும் பாசமும் எக்காலத்தும் இணைந்து செல்ல வேண்டுமாதலால், இறைவாழ்வுக்கான இந்த உரையாடல்கள் தெளிவான சொல்லாட்சியோடு தாழ்மையும் பணிவும் கலந்து திகழவேண்டும். நட்பை வளர்ப்பதன் மூலம் உள்ளங்களை ஒன்றாகச் சேர்க்கும் நம்பிக்கையோடு இணைந்த, தகுந்த முன்னறிவோடு இவ்வுரையாடல்கள் நடைபெற வேண்டும்.21
கிறிஸ்தவக் கோட்பாட்டைப் பறைசாற்ற இன்று கிடைக்கக் கூடிய பல்வேறு வழிவகைகளை ஆயர்கள் கையாள முயல வேண்டும். எப்போதும் மிக முக்கியமாக அமையும் மறைப் படிப்பினையும் மறைக் கல்விப் பயிற்சியுமே இவற்றில் முதலிடம் வகிப்பவை. கீழ்வருவன பிற வழிவகைகளாகும்: பள்ளிகளிலும் உயர் கல்வி நிலையங்களிலும் பிற மன்றங்களிலும் எல்லா வகைக் கூட்டங்களிலும் கோட்பாட்டை எடுத்துரைத்தல்; குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின்போது அச்சுத்துறை வழியாகவும் பல்வேறு சமூகத் தொடர்புக் கருவிகள் வழியாகவும் பொது அறிக்கைகள் வெளியிடுதல். மேற்கூறப்பட்ட சமூகத் தொடர்புக் கருவிகள் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு அவசியம் கையாளப்படவேண்டியவை.22
மறைக்கல்வி அளித்தல்
14. படிப்பினையால் விளக்கப்பட்ட நம்பிக்கை மனித வாழ்க்கையில் உயிருள்ளதாக, வெளிப்படையானதாக, செயலாற்றுவதாக அமைய வேண்டும். இதுவே மறைக்கல்விப் பயிற்சியின் நோக்கம். இந்த மறைக்கல்விப் பயிற்சியைச் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாலிபர்களுக்கும் வயது வந்தவர்களுக்கும் சிறந்த முறையில் தகுந்த கவனத்துடன் ஊட்ட ஆயர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மறைக்கல்வி ஊட்டுவதில் தகுந்த ஒழுங்கும் சிறந்த முறையும் கையாளப்பட வேண்டும். அதாவது கற்பிக்கப்படும் பொருளுக்கு மட்டுமன்றி மாணவர்கள் இயல்பு, திறமை, வயது, வாழ்க்கைச் சூழ்நிலைகள் ஆகியவைகளுக்கும் ஏற்றாற்போல் இவ்வொழுங்கு முறையும் அமைய வேண்டும். இறுதியாக, இப்பயிற்சி விவிலியத்தையும் மரபையும் திருவழிபாட்டையும் திருச்சபை ஆசிரியத்தையும் திருச்சபையின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இவை அனைத்தையும் ஆயர்கள் விழிப்புடன் கவனிக்க வேண்டும்.
திருச்சபையின் கோட்பாட்டைப் பற்றிய முழு அறிவைப் பெறுவதற்கும், உள நூலின் விதிகளையும் கற்பிக்கும் ஒழுங்கு முறைகளையும் கொள்கை அளவிலும் நடைமுறையிலும் கற்பதற்கும் மறைக்கல்வி ஆசிரியர்கள் தக்க பயிற்சி பெறுவதில் ஆயர்கள் கவனம் செலுத்தவேண்டும். மேலும், வயதுவந்த புகுநிலைக் கிறிஸ்தவர்க்கு அளிக்கும் மறைக்கல்வியை மீண்டும் வழக்குக்குக் கொணரவோ, நல்ல முறையில் மாற்றியமைக்கவோ ஆயர்கள் முன்வரவேண்டும்.
தூய்மைப்படுத்தும் பணி
15. பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்பட்டவர்கள் தாங்கள் என்பதை ஆயர்கள் தூய்மைப்படுத்தும்ப ணியை ஆற்றும்போது மனத்தில் கொள்ளவேண்டும். ஆயர்கள் திரப்பணிநிலையின் முழுமையைக் கொண்டிருக்கிறார்கள். திருப்பணியாளர்களும் திருத்தொண்டர்களும் தங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்துவதில் ஆயர்களைச் சார்ந்திருக்கிறார்கள். ஏனென்றால் திருப்பணியாளர்கள் ஆயர்களின் விவேகமுள்ள துணையாளர்களாக, புதிய ஏற்பாட்டின் உண்மைத் திருப்பணியாளர்களாகத் திருநிலைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். திருத்தொண்டுக்கே தங்களை அர்ப்பணித்துக்கொண்ட திருத்தொண்டர்களோவென்றால், திருப்பணியாளர்களுடனும் ஆயர்களுடனும் இணைந்து கடவுளின் மக்களுக்குத் தொண்டாற்றுகிறார்கள். தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சபையின் திருவழிபாட்டு வாழ்வனைத்தையும் ஒழுங்குபடுத்தி, ஊக்குவித்து, கண்காணித்து வருவதோடு23 முக்கியமாக கடவுளின் மறைபொருள்களை வழங்குபவர்களில் முதல்வர்களாகவும் ஆயர்கள் விளங்குகிறார்கள்.
நற்கருணை வழியாகப் பாஸ்கா மறைபொருளைக் கிறிஸ்தவ மக்கள் நன்றாக உணர்ந்து அதைத் தங்கள் வாழ்வாக்கி, அதன்வழி கிறிஸ்தவ அன்பின் ஒருமைப்பாட்டில் அவர்கள் அனைவரும ;மிகநெருங்கி இணைந்த ஓர் உடலாக அமைய ஆயர்கள் இடைவிடாது முயலவேண்டும்.24 ''இறைவேண்டலிலும் இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்'' (திப 6:4) தங்களுடைய கண்காணிப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்ட அனைவரும் ஒரே மனதோடு கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கவும்,25 அவர்கள் பெறும் அருளடையாளங்கள் மூலம் அருளில் யாவரும் வளரவும், ஆண்டவருக்கு உண்மைச் சாட்சிகளாக இருக்கவும்ஆயர்கள் பாடுபடவேண்டும்.
நிறை வாழ்வுக்கு மக்களை இட்டுச் செல்லும் பொறுப்புடைய ஆயர்கள், ஒவ்வொருவருடையவும் தனி அழைப்பிற்கேற்றார்போல் திருப்பணிநிலையினர், துறவறத்தார், பொதுநிலையினருடைய தூய்மையை வளர்க்க முயலவேண்டும்.26 அன்பிலும் மனத் தாழ்மையிலும்எளிய வாழ்விலும் தூய்மை நிலையின் எடுத்துக் காட்டாகத் தாம் திகழவேண்டும் என்பதை அவர்கள் மனத்திற்கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் அனைத்துலகத் திருச்சபையின் உணர்வு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சபைகளில் முழுமையாய் மிளிரும்படி ஆயர்கள் அச்சபைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்காகத் திருப்பணிக்கான மற்றும் துறவறத்திற்கான அழைத்தல்களைத் தங்களால் இயன்றவரை வளர்க்கவேண்டும். நற்செய்தி அறிவிப்புக்கான அழைத்தலுக்கும் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
அருட்பணியாளர்களாக வழிகாட்டும் பணி
16. தந்தையராகவும் அருள்பணியாளராகவும் தங்கள் அலுவலைச் செய்யும்போது ஆயர்கள் தங்கள் மக்கள் நடுவே பணிவிடை புரிபவர்களாக இருப்பார்களாக.27 தங்கள் ஆடுகளை அறிகின்றவரும் அவைகளால் அறியப்படுகின்றவருமான நல்ல ஆயர்களாக அவர்கள் விளங்குவார்களாக் மக்களனைவர் மேலும் அன்பும் அக்கறையும் கொள்ளும் பணியில் சிறந்து விளங்கும் உண்மைத் தந்தையர்களாக இருப்பார்களாக. மக்களும் கடவுளால் அளிக்கப்பட்ட ஆயர்களின் அதிகாரத்துக்கு உவந்த மனத்துடன் பணிவார்களாக. ஒவ்வொருவரும் தம் கடமையை உணர்ந்து அன்பின் ஒற்றுமையில் வாழவும் உழைக்கவும் ஏற்ற முறையில் ஆயர்கள் தம் மக்கள் குழுவாகிய குடும்பம் முழுவதையும் ஒன்று சேர்த்து உருவாக்க வேண்டும்.
இப்பணிகளைப் பயன்தரும் முறையில் ஆற்ற ஆயர்கள் ''எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்போர்'' (2 திமொ 2:21), ''தேர்ந்துகொள்ளப்பட்டவர்களுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு'' (2 திமொ 2:10) காலத்தின் தேவைகளுக்கேற்றவாறு தங்கள் வாழ்க்கை அமையும்படி அதை ஒழுங்குபடுத்த வேண்டும்.
ஆயர்களின் அலுவல்களிலும் பொறுப்பிலும் திருப்பணியாளர்கள் பங்குகொள்வதாலும், அவற்றை ஆர்வமுடன் நாள்தோறும் நிறைவேற்றுவதாலும் ஆயர்கள் அவர்களை எப்போதும் தனி அன்புடன் அரவணைக்கவேண்டும். அவர்களைத் தங்கள் மகன்களாகவும், நண்பர்களாகவும்28 கொள்ளவேண்டும். இவ்வாறு ஆயர்கள் திருப்பணியாளர்களுக்கு எப்பொழுதும் செவிமடுக்கத் தயாராக இருப்பதன் மூலமும் அவர்களோடு நம்பிக்கையுடன் நெருங்கிப் பழகுவதின் மூலமும் தங்களுடைய மறைமாவட்டம் எங்கும் அனைத்து அருள்பணிச் செயல்களும் சிறந்திடச் செய்யமுடியும்.
திருப்பணியாளர்கள் தூய இறைப்பற்றோடு கூடிய வாழ்வு வாழவும், தம் திருப்பணியைப் பற்றுறுதியுடன் பயன்தரும் வகையில் செய்யவும் ஆயர்கள் அவர்களுடைய அருள், அறிவு, பொருள் சார்ந்த நலன்களைப் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டும். எனவே, திருப்பணியாளர்கள் தங்கள் வாழக்யைப் புதுப்பிப்பதற்காக நீண்ட தியானங்கள் செய்யவும், திருமறைப் பாடங்களில், சிறப்பாக விவிலியம், இறையியல், அதிக முக்கியத்துவம் வாய்ந்த சமூகப் பிரச்சினைகள், அருள்பணிக்கான புதுமுறைகள் ஆகியவைகளில் ஆழ்ந்த அறிவு பெறவும், அவ்வப்போது திருப்பணியாளர்களுக்காகப் பயிலரங்குகள் நடத்துவதும், அதற்கான அமைப்புகளை உருவாக்குவதும் ஆயர்களது கடமையாகும். ஏதாவது ஆபத்தில் இருக்கின்ற அல்லது எதிலேனும் தவறிய திருப்பணியாளர்கள்பாலும் ஆயர்கள் செயல் முறையிலான பரவிரக்கம் காட்ட வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரின் நலனை நல்ல முறையில் அவரவர் நிலைமைக் கேற்பப் பேணுவதற்கு ஆயர்கள் தங்கள் மக்கள் வாழும் சமூகச் சூழ்நிலைகளில் அவர்கள் தேவைகள் யாவை என்பதைச் சரியாக அறிய முயலவேண்டும். அதற்காக அவர்கள் தகுந்த வழிகளை, குறிப்பாகச் சமூக ஆய்வுகளைக் கையாளவேண்டும். நம்பிக்கை கொண்டோரின் வயது, நிலைமை, நாடு ஆகியவற்றைப் பாராது, அவர்கள் சொந்த நாட்டினர்களாக இருந்தாலும் சரி, குழயேறிவயவர்களாக இருந்தாலும் சரி, முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும் சரி, அனைவர்பாலும் ஆயர்கள் அக்கறை காட்ட வேண்டும். ஆயர்கள் இவ்வருள்பணிப் பொறுப்பை ஆற்றும்போது, கிறிஸ்துவின் மறையுடலை வளர்ப்பதில் செயல்முறையில் ஒத்துழைக்க நம்பிக்கை கொண்டோருக்கு உள்ள உரிமையையும் கடமையையும் மதித்துத் திருச்சபை செயல்களில் அவர்களுக்குரிய பங்கை அவர்களுக்கே விட்டுவிட வேண்டும்.
பிற கிறிஸ்தவ சகோதரர் சகோதரிகளுடன் ஆயர்கள் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். நம்பிக்கை கொண்டோரும் அவர்களோடு மனிதப் பண்புடனும் அன்புடனும் நடந்து கொள்ளுமாறு அவர்களைத் தூண்ட வேண்டும். திருச்சபையின் கருத்திற்கு இயைந்த விதத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்க்க வேண்டும்.29 திருமுழுக்குப் பெறாதவர்கள் மேலும் ஆயர்கள் அக்கறை கொண்டிருக்க வேண்டும். இதன் வழியாகக் கிறிஸ்து இயேசுவின் அன்பு இவர்களுக்கு வெளிப்படையாகத் துலங்கும். ஏனென்றால், எல்லா மனிதர் முன்பாகவும் கிறிஸ்துவுக்குச் சான்றுபகர்பவர்களாக ஆயர்கள் விளங்குகிறார்கள்.
திருத்தூதுப் பணி முறைகள்
17. பல்வகை திருத்தூதுப் பணிமுறைகள் பேணி வளர்க்கப்பட வேண்டும். திருத்தூதுப் பணிகள் யாவும் ஆயரது கண்காணிப்பின் கீழ் மறைமாவட்டம் முழுவதும் அல்லது அதன் குறிப்பிட்ட பகுதிகளில் ஒருமுகமாக நெருங்கி இணைந்து செயல்பட வழிசெய்ய வேண்டும். இதன் வழியாக மறைக்கல்வி, நற்செய்தி அறிவிப்பு, அறச்செயல், சமூகம், குடும்பம், கல்வி ஆகிவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் செயலமைப்புகளும் அருள்பணியைச் சார்ந்த பிறவும் இணைந்து செயல்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மறைமாவட்டத்தின் ஒற்றுமை அதிகத் தெளிவாகத் துலங்கும்.
தம் நிலைமைக்கும் திறனுக்கும் ஏற்றாற் போல் திருத்து{துப் பணியை ஆற்ற வேண்டியது நம்பிக்கை கொண்டோரின் கடமை. இக்கடமையை ஏற்றுச் செய்ய பொறுப்போடு அவர்களைத் தூண்ட வேண்டும். பொதுநிலையினரின் திருத்தூதுப் பணியினுடைய பல்வேறு அலுவல்களில், சிறப்பாகக் கத்தோலிக்கச் சேவையில் பங்கு பெறவும் அவற்றிற்கு உதவி புரியவும் நம்பிக்கை கொண்டோருக்கு அறிவுறுத்த வேண்டும். அதிக நிறைவான வாழ்வை அடைதல், அனைவருக்கும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தல், கிறிஸ்தவப் படிப்பினைகளைப் பரப்புதல் மற்றும் பொதுவழிபாடு சிறக்க உழைத்தல், சமூக நோக்கங்களை அடைய முயலுதல், பிறரன்பு அல்லது அறச் செயல்களைப் புரிதல் போன்ற இயல்பு கடந்த இலக்குகளை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அடைய முயலும் குழுக்களை ஆதரித்து வளர்க்க வேண்டும்.
மக்களின் ஆன்ம, ஒழுக்க நிலைமைகளை மட்டுமன்றி அவர்களது சமூக, பொருளாதார, மக்கள் பெருக்கம் சார்ந்த நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இன்றைய தேவைகளுக்கு ஏற்றாற்போல் திருத்தூதுப் பணிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும். இதைச் செயலளவிலும், பயன்தரும் வகையிலும் நிறைவேற்ற அருள்பணி சார்ந்த சமூகவியல் அமைப்புகள் மூலம் நடைபெறும் சமூக, சமய ஆராய்ச்சிகள் மிகவும் உதவுகின்றன. எனவே இவ்வாராய்ச்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஒரு சில குழுவினர் மட்டில் காட்ட வேண்டிய தனி அக்கறை
18. தங்கள் வாழ்க்கை நிலைமைகளின் காரணமாக பங்குப் பணியாளரின் பொதுவான, சாதாரண கண்காணிப்பின் பலனைச் சரிவரப் பெற முடியாத அல்லது அக்கண்காணிப்பை எவ்விதத்திலும் பெற இயலாத நம்பிக்கை கொண்டோர் மேலும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். இவர்களில் பெரும்பாலோர் குடிபெயர்வோர், நாடு கடத்தப்படுவோர், தஞ்சம் அடைவோர், கடல் பயணிள், விண் பயணிகள், நாடோடிகள், இன்னும் இவர் போன்ற பிறராவர். ஓய்வுக்காகச் சிறிதுகாலம் வெளிநாடு செல்வோருடைய அருள் வாழ்வைப் பேணி வளர்ப்பதற்கேற்ற அருள்பணி முறைகளையும் ஊக்குவிக்க வேண்டும்.
ஆயர் பேரவைகள், குறிப்பாக நாட்டளவிலான ஆயர் பேரவைகள், மேலே குறிப்பிடப்பட்டவரின் உடனடியான பிரச்சினைகளை ஆழ்ந்து ஆராய்ந்து, தங்களின் ஒருமனப்பட்ட முயற்சியாலும் தகுந்த வழிவகைகளாலும் அமைப்புகளாலும் அவர்களின் அருள் வாழ்வுக் கண்காணிப்புக்கான ஏற்பாடுகள் செய்து அற்றை ஊக்குவிக்க வேண்டும். இதற்குத் திருத்தூதர் ஆடசிப் பீடத்தால் இயற்றப்பட்ட30 அல்லது இயற்றப்பட வேண்டிய விதிகளை மனத்தில் கொள்ளவேண்டும். இவ்வதிகளைக் காலம், இடம், ஆள்கள், நிலைமைகளுக்குத் தக்கவாறு மாற்றி அமைக்க வேண்டும்.
நாட்டு அதிகாரிகளும் ஆயர்களின் தன்னுரிமையும்
19. மக்களின் நிறைவாழ்வை நோக்கமாகக் கொண்ட தங்கள் திருத்தூது அலுவலை ஆற்றுவதில் ஆயர்களுக்கு இயல்பாகவே முழுமையான, நிறைவான, எந்த நாட்டு அதிகாரிகளுக்கும் அடிமைப்பட்டிராத சுதந்திரம் உண்டு. எனவே, அவர்களது திருச்சபை ஆட்சித்துறை சார்ந்த அலுவலில் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ யாரும் குறுக்கிடக்கூடாது. அன்றியும் திருத்தூதர் ஆட்சிப் பீடத்திடமாவது, மற்ற திருச்சபை அதிகாரிகளிடமாவது தங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்டவர்களிடமாவது சுதந்திரமாகத் தொடர்பு கொள்வதற்கு யாரும் தடை செய்யக்கூடாது.
தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் குழுவின் அருள் வாழ்வுக் கண்காணிப்புக்காகத் தங்களையே கையளிக்கும்போது திருஆயர்கள் சமூக, அரசியல் முன்னேற்றத்திற்கும்வளத்திற்கும் உண்மையிலே உதவுகிறார்கள். தங்கள் அலுவலின் தன்மைக் கேற்றவாறும், ஆயர்களுக்கு ஏற்ற முறையிலும், இந்த நோக்கத்திற்காக அவர்கள் நாட்டு ஆட்சியாளர்ளோடு ஒருமித்துச் சயெல்படுகிறார்கள்; நியாயமான சட்டங்களுக்குப் பணியவும், சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட அதிகாரிகளை மதிக்கவும் மக்களுக்குக் கற்பிக்கின்றார்கள்.
ஆயர்களை நியமிப்பதில் குறுக்கிடல் ஆகாது
20. ஆயர்களின் திருத்தூது அலுவலைக் கிறிஸ்து ஆண்டவர் நிறுவினார்; அது அருள்வாழ்வு சார்ந்ததும் இயல்பு கடந்ததுமான குறிக்கோளை அடைய முயலுகிறது. எனவே ஆயர்களை நியமிப்பதற்கும் ஏற்படுத்துவதற்கும் தகுதிவாய்ந்த திருச்சபை அதிகாரிகளுக்கு மட்டுமே இயல்பாக உரிமை உண்டு என்று இப்பொதுச் சங்கம் அறிக்கையிடுகின்றது.
எனவே, திருச்சபையின் சுதந்திரத்தைத் தக்கவாறு காக்கும் பொருட்டும், கிறிஸ்தவ மக்களின் நலனை இன்னும் அதிகத் தகுதியும் பயனும் உள்ள முறையில் வளர்ர்க்கும்பொருட்டும் ஆயர் பணிப் பொறுப்புக்கு ஆள்களைத் தேர்ந்தெடுக்கவோ நியமிக்கவோ முன் வைக்கவோ குறிப்பிடவோ யாதொரு உரிமையோ ச லு கையோ இனிமேல் அரசியல் அதிகாரிகளுக்குத் தரலாகாதென்பது திருச்சங்கத்தின் விருப்பம். அரசியல் அதிகாரிகள் திருச்சபைக்கு அளிக்கும் ஆதவைத் திருச்சங்கம் நன்றி உணர்வுடன் ஏற்று அதனைப் பெரிதும் பாராட்டுகின்றது; என்றாலும், ஒப்பந்தத்தின்படியோ வழ்கத்தின்படியோ அவர்கள் இப்போது அனுபவிக்கும் மேற்கூறப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் திருத்தூது ஆட்சிப்பீடத்தோடு கலந்து ஆலோசித்து பின்பு, தாங்களாகவே துறந்துவிடுமாறு திருச்சங்கம் பணிவுடன் வேண்டுகின்றது.
ஆயர் பணியிலிருந்து விலகுதல்
21. ஆயர்களின் அருள்பணி மிகவும் முக்கியமானது; மிகவும் பொறுப்பானதுங்கூட. எனவே, மறைமாவட்ட ஆயர்களும் சட்டத்தின்படி அவர்களுக்கு இணையானவர்களும் தளர்ந்த வயதினாலோ வேறு சுவையான காரணத்தாலோ தங்கள் அலுவலை நிறைவேற்றத் திறமை குறைந்தவர்கள் ஆகும்போது, தாங்களாகவோ தகுதிவாய்ந்த அதிகாரிகளின் விருப்பப்படியோ தங்கள் பணிப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளமாறு திருச்சங்கம் அவர்களைக் கனிவுடன் வேண்டுகிறது. பணியிலிருந்து இவ்வாறு விலகுதலைத் தகுதி படைத்த அதிகாரி ஏற்றுக் கொண்டால், பணியைத் துறப்போரின் வாழ்க்கைத் தேவைகளுக்கு உகந்த பொருள் நலன்களை வழங்க அவரே வழிசெய்வார்; அவர்களுக்கெனத் தனிப்பட்ட உரிமைகள் இருக்குமாறும் வழிசெய்வார்.
2. மறைமாவட்ட எல்லைகள்
மறைமாவட்ட எல்லைகளைத் திருத்தியமைத்தல்
22. மறைமாவட்டம் தன் குறிக்கோளை அடைய வேண்டும் என்றால் அம்மறை மாவட்டத்தைச் சார்ந்த இறைமக்களில் திருச்சபையின் இயல்பு தௌ;ளத்தெளிவாகத் துலங்க வேண்டும்; ஆயர்களும் தங்கள் அருள்பணி அலுவல்களைப் பயன்தரும் வகையில் இம்மக்கள் நடுவில் நிறைவேற்ற இயல வேண்டும்; இறுதியாக, இறைமக்களது நிறைவாழ்வுக்காக இயன்ற அளவு மிகச் சிறந்த முறையில் அவர்ள் பணிபுரிய இயல வேண்டும்.
இவற்றை நிறைவு செய்ய மறைமாவட்ட எல்லைகளைத் தகுந்த முறையில் வரையறுக்க வேண்டும்; நியாயமான விதத்திலும் திருத்தூதுப் பணியின் தேவைகளுக்கு ஏற்றமுறையிலும் திருப்பணியாளர்களையும் பொருள் நலன்களையும் பகிர்ந்தளிக்க வெண்டும். இச்செயல்பாடுகள் யாவும், நேரடியாக மறை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பணியாளர்களுக்கும் கிறிஸ்தவ மக்களுக்கும் மட்டுமல்ல, கத்தோலிக்கத் திருச்சபை முழுவதற்குமே பயனளிக்கும்.
எனவே, மறைமாவட்டங்களின் எல்லைகளைப் பொறுத்த மட்டில், மக்களின் அருள்வாழ்வுத் தேவைகளுக்கு ஏற்ப முன்னறிவுடனும் கூடிய விரைவாகவும் அவைகளின் எல்லைகளைத் தகுந்த முறையில் திருத்தி அமைக்க வேண்டும் என இத்திருச்சங்கம் தீர்மானிக்கிறது. மறைமாவட்டங்களைப் பிரித்தோ கூறுபடுத்தியோ இணைத்தோ அவைகளின் எல்லைகளை மாற்றி அமைத்தோ, ஆயர் இருப்பிடம் அமைக்க இன்னும் அதிகத் தகுதிவாய்ந்த இடத்தை நிர்ணயித்தோ, இறுதியாக மறைமாவட்டங்கள் மாபெரும் நகரங்களால் அமைந்தவை என்றால் அவைகளுக்குப் புதிய உள்நிர்வாகம் அளித்தோ மறைமாவட்ட எல்லைகளைத் திருத்தி அமைக்க வேண்டும்.
மறைமாவட்ட எல்லைச் சீரமைப்புக்கான விதிகள்
23. மறைமாவட்டத்தின் எல்லைகளை மாற்றி அமைக்கும்பொழுது, குறிப்பாக ஆள்களையும் பணிப்பொறுப்புகளையும் அமைப்புகளையும் பொறுத்தமட்டில் ஒவ்வொரு மறைமாவட்டத்தின் ஒன்றிப்பை முதல் நோக்கமாகக் கொள்ள வேண்டும்; இவ்வொன்றிப்பு உயிருள்ள உடலின் ஒன்றிப்பைப் போன்றது. இவ்வாறு எல்லைகளை மாற்றியமைக்கும்போது எல்லாச் சூழ்நிலைகளையும் சரிவர ஆராய்வதோடு, கீழ்வரும் பொதுவான அளவைகளையும் மனத்தில் கொள்ள வேண்டும்.
1) மறைமாவட்ட எல்லையை வரையறுக்கும்போது இறைமக்கள் பல வகையினர் என்பதைக் கூடிய மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். அருள்பணியை இன்னும் சிறந்த முறையில் செய்வதற்கு இது பெரிதும் உதவும். அஃதோடு, பல்வேறு குழுக்களாய் அமைந்த இம்மக்களை ஓர் உடல் போல் இணைக்கும் குடிமைசார் ஆட்சியமைப்போடும் சமூக அமைப்புகளோடும் இவர்களின் இயல்பான பிரிவுகளையும் இயன்றவரை மாற்றாமல் ஒன்றாகவே வைத்திருக்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு மறைமாவட்ட நிலப்பரப்பும் தொடர்ச்சியாக இருப்பது இன்றியமையாதது.
தேவை ஏற்பட்டால், குழமைசார் ஆட்சி எல்லைகளையும் ஆள்கள், இடங்கள் சார்ந்த ழே;நிலைகளையும்கவனித்தல் வேண்டும். இச்சூழ்நிலைகள் உளவியல், பொருளியல், புவியியல், வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் எழுபவையாக இருக்கலாம்.
2) மறைமாவட்ட நிலப்பகுதியின் பரப்பளவும் அங்கு வாழும் மக்களின் எண்ணிக்கையும் பொதுவாக எவ்வாறு அமைய வேண்டும் என்றால், பிறர் துணை இருப்பினும், ஆயர் தாமாகவே தம் ஆயர் பணியை நிறைவேற்றவும் சரியான முறையில் தம் மக்கள் குழுக்களைப் பார்வையிடவும் இயல வேண்டும்; மறைமாவட்டத்தில் ஆற்றப்பெறும் திருத்தூதுப் பணிகள் யாவையும் முறையே நடத்திச் செல்லவும் ஒருமுகப்படுத்தவும் இயல வேண்டும்; குறிப்பாகத் தம் திருப்பணியாளர்களையும், மறைமாவட்டத்தில் பணிபுரியும் துறவிகளையும் பொதுநிலையினரையும் தெரிந்து கொள்ளவும் இயல வேண்டும். அதே சமயத்தில் அனைத்துலகத் திருச்சபையின் நலனை மனத்தில் கொண்டு ஆயரும் திருப்பணியாளர்களும் தங்கள் ஆற்றல் அனைத்தையும்தம் பணியில் ஈடுபடுத்தப் போதுமானதும் பொருத்தமானதுமான ஓர் இடப்பரப்பு இருக்க வேண்டும்.
3) இறுதியாக, மறைமாவட்டத்தில் நிறைவாழ்வுப் பணி ஏற்றமுறையிலும் பயன்தரும் வகையிலும் நிகழ வேண்டுமெனில், ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இறைமக்களுகு;குத் தக்கபடி அருள்பணி புரியப் போதுமான அளவிலாவது எண்ணிக்கையும் தகுதியும் உள்ள திருப்பணி நிலையினர் இருக்க வேண்டும்; மேலும், மறைமாவட்டத்தின் ஏறற ஆட்சிக்கும் திருத்தூதுப் பணிக்கும் தேவையானவை என்று அனுபவத்தால் மெய்ப்பிக்கப்பட்டனவும் தனிப்பட்ட சபைக்கே உரியனவுமான பணிப்பொறுப்புகளும் நிறுவனங்களும் அமைப்புகளும் இருக்க வேண்டும்; இறுதியாக, ஆள்களையும் நிறுவனங்களையும் பேணுவதற்குத் தேவையான பொருள் வசதி ஏற்கெனவே கையில் இருக்க வேண்டும்; மேலும், மறைமாவட்டத்தின் ஏற்ற ஆட்சிக்கும் திருத்தூதுப் பணிக்கும் தேவையானவை என்று அனுபவத்தால் மெய்ப்பிக்கப்பட்டனவும், தனிப்பட்ட சபைக்கே உரியனவுமான பணிப்பொறுப்புகளும் நிறுவுனங்களும் அமைப்புகளும் இருக்க வேண்டும்; இறுதியாக, ஆள்களையும் நிறுவனங்களையும் பேணுவதற்குத் தேவையான பொருள் வசதி ஏற்கெனவே கையில் இருக்க வேண்டும்; அல்லது வேறு வழியாகக் கிடைக்குமென்று முன்னறிந்திருக்க வேண்டும்.
இதே அடிப்படையில், பிற வழிபாட்டு முறையைச் சார்ந்த மக்கள் வாழும் இடங்ளில் அந்த வழிபாட்டு முறையைச் சார்ந்த திருப்பணியாளர்கள் அல்லது பங்குகள் மூலமோ, ஏற்ற அதிகாரம் பெற்ற ஆயர் பதிலாள் மூலமோ, ஆயர் தாமாகவே பிற வழிபாட்டு முறை தலத் திருச்சபை முதல்வரின் அலுவலகளை ஆற்றுவதன் மூலமோ மறைமாவட்ட ஆயர் அவர்களுடைய அருள்வாழ்வுத் தேவைகளைப் பேண வேண்டும். தேவைப்படின், மேற்கூறப்பட்ட ஆயர்-பதிலாள், ஆயர் நிலையைச் சார்ந்தவராகவும் இரு;ககலாம். தனிப்பட்ட காரணங்களினால் இவை யாவற்றையும் செலய்படுத்த இயலாது எனத் திருத்தூது ஆட்சிப் பீடம்கருதினால் வேறுபட்ட வழிபாட்டு முறைகளுக்கு உரிய திருச்சபை ஆட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.31
அவ்வண்ணமே இத்தகைய சூழ்நிலைகளில் வெவ்வேறு மொழி பேசும் கிறிஸ்தவ மக்களின் அருள் வாழ்வுத் தேவைகள் அதே மொழி பேசும் திரபப்ணியாளர்கள் மூலமாகவோ, அல்லது அந்த மொழியைக் கற்றுத் தேர்ந்தவரும், தேவைப்படின் ஆயர் நிலையைச் சார்ந்தவருமான ஆயர்-பதிலால் மூலமாகவோ, பொருத்தமிக்க வேறு வழியிலோ பேணப்பட வழிவகைகள் செயல்தல் வேண்டும்.
ஆயர் பேரவைகளைக் கலந்தாலோசித்தல்
24. எண்கள் 22-23இல் கூறப்பட்டள்ள விதிகளின்படி மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் செயல்முறைக்குக் கொண்டுவரும் பொழுது, கீழைச் சபைகளின் ஒழுங்கு முறையைத் தடை செய்யாத வகையில், தகுதி வாய்ந்த ஆயர் பேரவைகள் தத்தம் நிலைப்பகுதிகளுக்கு ஏற்றாற்போல் இக்காரியங்களை ஆராய்ந்து ஊக்குவிப்பது ஏற்புடையது. பொருத்தமாகத் Nதூன்றினால், இதற்காக ஒரு தனி ஆயர் குழுவின் உதவியையும் நாடலாம். ஆனால், இக்கரியத்தில் எப்போதும், முக்கியமாகச் சம்பந்தப்பட்ட மாநில மற்றும் மண்டல ஆயர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். இறுதியாக, இப்பேரவைகள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் திருத்தூது ஆட்சிப்பீடத்திடம் சமர்ப்பிப்பார்கள்.
3. அருள்பணியில் மறைமாவட்ட
ஆயர்களுடன் ஒத்துழைப்பவர்கள்
1. இணை ஆயர்களும், துணை ஆயர்களும்
25. ஆண்டவரின் மக்கள் குழுவின் நலனே மறைமாவட்ட ஆட்சி அமைப்பிலும் ஆயர் அருள் பணியிலும் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். இதனடிப்படையில் பல வேளைகளில் துணை ஆயர்களை ஏற்படுத்த வேண்டிய தேவை எழும். ஏனெனில், மறைமாவட்டத்தின் அகன்ற பரப்பு, பெரும் மக்கள் தொகை, திருத்தூதுப்பணியின் தனிப்பட்ட சூழ்நிலைகள் ஆகியவை காரணமாகவோ மற்ற பல்வேறு காணங்களினாலோ மக்களின் தேவைகளுக்கேற்ப ஆயர் தம் அலுவல்கள் யாவையும் தாமாகவே நிறைவேற்ற இயலாமல் போகின்றது. மேலும், அதே மறைமாவட்ட ஆயருக்கு உதவிபுரிய இணை ஆயரை நியமிப்பதற்கான தனிப்பட்ட தேவையும் சில வேளைகளில் எழலாம். தங்கள் செயலை மிகுந்த பயன் அளிக்கும் முறையில் செய்யவும் ஆயருக்குரிய மேன்மையை இன்னும் தகுந்த பணி அதிகாரம் அளிக்க வேண்டும். இதனால் மறைமாவட்டத்தின் ஆட்சி ஒற்றுமையும் மறைமாவட்ட ஆயரின் அதிகாரமும் பாதிக்கப்படலாகாது.
இணை ஆயர்களும் துணை ஆயர்களும் மறைமாவட்ட ஆயரின் பணியில் பங்குபெற அழைக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, எல்லாக் காரியங்களிலும் அவரோடு ஒருமனப்பட்டு இசைந்து செல்லும் வகையில் இவர்கள் தங்கள் அலுவலை ஆற்ற வேண்டும். மேலும் மறைமாவட்ட ஆயருக்கு அவர்கள் பணிவும் மரியாதையும் எப்போதும் காட்ட வேண்டும். அவரும் இணை ஆயர்கள் மேலும் துணை ஆயர்கள் மேலும் சகோதர அன்பு காட்டி அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
துணை ஆயர்களுக்கும் இணை ஆயர்களுக்கும் உரித்தான அதிகாரம்
26. மக்களின் அருள்வாழ்வு நலனுக்குத் தேவை என்றால் மறைமாவட்டத்துக்காக வழிவருகை உரிமை இல்லாத ஒரு துணை ஆயரையோ பல துணை ஆயர்களையோ தக்க அதிகாரியிடமிருந்து கேட்க மறைமாவட்ட ஆயர் மறுக்கக்கூடாது.
நியமனக் கடிதத்தில் ஏற்கெனவே குறிப்பிடப்படவில்லை என்றால் மறைமாவட்ட ஆயர் தமது துணை ஆயரை அல்லது ஆயர்களைக் குருகுல முதல்வர்களாக அல்லது ஆயர் பதிலாள்களாகவாவது நியமிக்க வேண்டும். இவர்கள் ஆயரின் அதிகாரத்துக்கு மட்டுமே கீழ்பபட்டிருப்பர். மிகவும் முக்கியமான காரியங்களை, குறிப்பாக அருள்பணியைச் சார்ந்தவற்றைப் பற்றி ஆராயும்போது அவர்களோடு ஆயர்க் கலந்து பேச வேண்டும்.
தக்க அதிகாரம் கொண்டோர் மாறாகக் குறிப்பிடவில்லை என்றால், மறைமாவட்ட ஆயரின் ஆளுகை முடிவுக்கு வரும்போது துணை ஆயர்களுக்குச் சட்டம் அளித்திருக்கும் உரிமைகளும் ஆதிகாரங்களும் நீங்குவதில்லை. ஆட்சிப்பீடம் காலியாக நேரிட்டால் வேறு கனமான காரணங்கள் தடுத்தாலொழிய மறைமாவட்டத்தை வழி நடத்தும் அலுவலை உதவி ஆயரிடத்திலோ, பல உதவி ஆயர்கள் இருக்கும் இடங்களில் அவர்களில் ஒருவரிடத்திலோ ஒப்படைத்தல் விரும்பத்தக்கது.
மறைமாவட்ட ஆயர் எப்போதுமே வழிவருகை உரிமையுடன் நியமிக்கப்பட்ட இணை ஆயரைக் குருகுல முதல்வராக நியமிக்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் தக்க அதிகாரம் பெற்றவரால் அவருக்கு இன்னும் அதிகமான அதிகாரங்களும் அளிக்கப்படலாம்.
மறைமாவட்டத்தின் நிகழ்கால, எதிர்கால நன்மைக்காக மிகவும் முக்கியமான காரியங்களில் மறைமாவட்ட ஆயரும் அவரது இணை ஆயரும் கலந்து ஆலொசிக்கத் தவறக்கூடாது.
2. மறைமாவட்டச் செயலவையும் அறிவுரைக் குழுக்களும்
27. மறைமாவட்டச் செயலவையில் மறைமாவட்டக் குருகுல முதல்வரது அலுவலே மிகவும் மேலானது. மறைமாவட்டத்தின் சரியான ஆட்சிக்கு தேவைப்படும் போதெல்லாம் ஆயர்-பதிலாள் ஒருவரையோ பலரையோ ஆயர் நியமிக்கலாம். குருகுல முதல்வருக்குள்ள அதிகாரம் அனைத்தும் இவர்களுக்கும் சட்டப்பூர்வமாக உண்டு. ஆனால், இந்த அதிகாரத்தை மறைமாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையைச் சார்ந்த மக்களிடையொ மட்டுமே பயன்படுத்த முடியும்.
மறைமாவட்டக் கோவில் திருப்பணியாளர் குழு, ஆலோசகர் குழு, வேறுபட்ட இடங்களின் சூழ்நிலைகளுக்கும் இயல்புகளுக்கும் ஏற்றாற்போல் அமைந்த மற்ற ஆலொசனைக் குழுக்கள் போன்ற மன்றங்களிலும் குழுக்களிலும் உறுப்பினராய் உள்ளத் திருப்பணியாளர்களும் மறைமாவட்ட ஆட்சியில் ஆயரோடு ஒத்துழைப்போராகக் கருதப்படுவர். இந்த அமைப்புகளை, குறிப்பாக, மறைமாவட்டக் கோவில் திருப்பணியாளர் குழுவை, இன்றைய மறைமாவட்டச் செயலவையைச் சேர்ந்த திருப்பணியாளர்களும் பொதுநிலையினரும் ஆயரின் அருள்பணியில் தாங்கள் செயல் முறையில் உதவுகின்றார்கள் என்பதை உணர வேண்டும்.
மறைமாவட்டத்தை வழிநடத்துவதற்கு மட்டுமின்றித் திருத்தூதுப் பணிகளை ஆற்றவும்ஆயருக்கு ஏற்ற கருவியாக இருக்கும் வகையில் மறைமாவட்டச் செயலவையை அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு மறைமாவட்டத்திலும்தனிப்பட்ட அருள்பணிப் பேரவையை நிறுவுதல் மிகவும் விரும்பத்தக்கது. மறைமாவட்ட ஆயரே இதன் தலைவராக இருப்பவர். தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பணி நிலையினரும் துறவிகளும் பொதுநிலையினரும் இதில் பங்கு பெறுவார்கள். அருள் பணியைச் சார்ந்தவற்றைப் பற்றி ஆராய்வதும் அவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பதும், அவை பற்றிச் செயல்முறைக்கேற்ற முடிவுகள் எடுப்பதும் இக்குழுவின் அலுவல்களாகும்.
3. மறைமாவட்டத் திருப்பணி நிலையினர்
28. திருப்பணியாளர்கள் யாவரும் - மறைமாவட்டத் திருப்பணியாளர்களும், துறவறத் திருப்பணியாளர்களும் - ஆயருடன் கிறிஸ்துவின் ஒரே திருப்பணி நிலையில் பங்கு பெற்று அதனையே செயல்படுத்துகிறார்கள்; ஆகையால், அவர்கள் ஆயர் குழுவின் முன்மதியுள்ள ஒத்துழைப்பாளர்கள் அகிறார்கள். மக்களின் அருள் வாழ்வு நலன் பேணுவதில் மறைமாவட்டத் திருப்பணியாளர்கள் முதலிடம் வகிக்கின்றார்கள். ஒரு தனிப்பட்ட சபையோடு சட்டமுறைப்படிப் பெற்ற அல்லது சேர்த்துக் கொள்ளப்பட்ட இவர்கள் ஆண்டவருடைய மந்தையின் ஒரு பகுதிக்கு அருள்புரியவே தங்களை முழுவதும் அர்ப்பணித்தவர்கள். எனவே, இவர்கள் ஆயரைத் தந்தையாகக் கொண்ட ஒரே திருப்பணியாளர் ழுவை, ஒரு குடும்பத்தை உருவாக்குகின்றனர். தம் திருப்பணியாளர் குழுவை, ஒரு குடும்பத்தை உருவாக்குகின்றனர். தம் திருப்பணியாளர்களுக்குத் திருப்பணிகளை மிகவும் ஏற்ற முறையிலும் சமமாகவும் பகிர்ந்தளிக்க, பொறுப்புகளையும் பொருள்நலன்களையும் வழக்குகளையில் ஆயர் தேவையான சுதந்திரம் கொண்டிருக்க வேண்டும். எனவே, இந்தச் சுதந்திரத்தை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தும் உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் ஒழித்திட வேண்டும்.
ஆயரின் உள்ளத்தோடு திருப்பணியாளர்களின் உள்ளமும் இணைந்து அவர்களது அருள்பணியை அதிகம் பயன்தரும் முறையில் செய்ய ஆயர்களுக்கும் மறைமாவட்டத் திருப்பணியாளர்களுக்கும் இடையே உள்ள உறவு யாவற்றிற்கும் மேலான இயல்பு கடந்த அன்பில் நிலைத்திருத்தல் வேண்டும். எனவே, மக்களுக்கு அருள் வாழ்வுப் பணி இன்னும் சிறப்பாக நிகழும் பொருட்டு, பொது உரையாடல்களுக்கும் சிறப்பாக அருள்பணியைச் சார்ந்தவை பற்றி நடத்தப்படும் உரையாடல்களுக்கும் திருப்பணியாளர்களை ஆயர்கள் அழைக்க வேண்டும். இதற்கு வாய்ப்புக் கிடைக்கும் போது மட்டுமல்லாமல், இயன்றவரை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர்களை அழைக்க வேண்டும்.
மேலும், மறைமாவட்டத் திருப்பணியாளர்கள் யாவரும் தங்களுக்குள் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்; மறைமாவட்டம் முழுவதன் அருள்பணி நலனுக்கான அக்கறையை நிறைவாகக் கொண்டிருக்க வேண்டும். இதுமட்டுமன்று, திருச்சபை சார்ந்த பணிகளிலிருந்து அவர்கள் பெறும் பொருள்நலன்கள் திருப்பணியோடு இணைந்துள்ளன என்பதை அவர்கள் மனத்தில் இருத்தி, மறை மாவட்டத்தின் பொருள் தேவைகளுக்கு ஆயரின் திட்டப்படி தங்கள் ஆற்றலுக்கு ஏற்பப் பெருந்தன்மையுடன் உதவ முன்வரவேண்டும்.
பங்கைக் கடந்த பணிகளில் ஈடுபடும் திருப்பணியாளர்கள்
29. எல்லைகளைக் கடந்து நிற்கும் இயல்புடைய அருள்பணிகளையும் திருத்தூது அலுவல்களையும் ஆற்ற ஆயரால் பணிக்கப் பெற்ற திருப்பணியாளர்களும் ஆயருடன் மிக நெருங்கி ஒத்துழைப்பவர்கள் ஆவார்கள். மறைமாவட்டத்தின் குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பிலோ அல்லது நம்பிக்கை கொண்டோரின் தனிப்பட்ட குழுக்களிலோ ஆற்றப்படும் பணிகளும் சில சிறப்புப் பணிகளும் பங்கு எல்லைகளைக் கடந்த பணிகளாகும்.
பள்ளிகளிலோ, பிற நிறுவனங்களிலோ, குழு அமைப்புகளிலோ ஆயரால் ஒப்படைக்கப்பட்ட வெவ்வேறு அலுவல்களைப் புரியும் திருப்பணியாளர்களும் ஆயருக்குச் சாலச் சிறந்த உதவி அளிக்கிறார்கள். மறைமாவட்டத்தைக் கடந்த வேளைளில் ஈடுபட்டிருக்கும் திருப்பணியாளர்கள், சிறந்த திருத்தூதுப் பணி புரிவதால் அவர்கள் தங்கியிருக்கும் மறைமாவட்டத்தின் ஆயர் தனிப்பட்ட முறையில் அவர்கள்பால் அக்கறை கொண்டிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
பங்குத் திருப்பணியாளர்கள்
30. எனினும், மிகச்சிறப்பான முறையில் ஆயர்களுடன் ஒத்துழைப்பவர்கள் பங்குத் திருப்பணியாளர்கள் ஆவர். இவர்கள் மறைமாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் ஆயரின் அதிகாரத்தின் கீழ் அருள்பணியாளருக்கே உரிய முறையில் மக்களைக் கவனிக்கும் பொறுப்பைப் பெற்றுள்ளனர்.
1) இப்பொறுப்பை நிறைவேற்றுங்கால், நம்பிக்கை கொண்டோரும் பங்குச் சமூகங்களும் தாhங்கள் மறை மாவட்டத்தினுடையவும் திருச்சபை முழுவதினுடையவும் உறுப்பினர்கள் என்பதை உண்மையில் உணரும்வகையில்பங்குத் திருப்பணியாளர்கள் தம் துணையாளர்களுடன் கற்பித்தல், தூய்மையாக்குதல், வழிநடத்தல் என்னும் பணிகளை ஆற்ற வேண்டும். இதற்காக மற்ற பங்குத் திருப்பணியாளர்களுடனும் குறிப்பாக ஒரே நிலப்பரப்பில் அருள்பணிப்புரியும் (மறைமாவட்ட முதல்வர், மறைக் கோட்ட முதல்வர் போன்ற) திருப்பணியாளர்களுடனும் எல்லைகளைக் கடந்த இயல்புடைய வேலைகளில் ஈடுபட்டிருக்கும் திருப்பணியாளர்களுடனும் சேர்ந்து உழைக்க வேண்டும். இதன் மூலம் மறைமாவட்டத்தின் அருள்பணி ஒருங்கிணைந்தும், அதிகப் பயன்தரும் முறையிலும் செய்யப்படும்.
பங்கில் வாழும் யாவரையும் அரவணைக்கும் வகையிலும், பொருத்தமான முறையிலும் திருப்பணியாளர்கள் மக்களுக்கு அருள்பணி ஆற்றுவதில் நற்செய்தி அறிவிப்பு ஆர்வத்தால் எப்போதும் நிரப்பப்பட வேண்டும். மக்கள் கூட்டத்தாரில் சிலருடன் பங்குத் திருப்பணியாளர்கள் தொடர்பு கொள்ள முடியாதபோது திருத்தூதுப் பணியைச் சார்ந்தவற்றில் அவர்களுக்குத் துணைபுரியப் பொதுநிலையினர் உட்பட பிறரைத் தங்களது உதவிக்கு அழைக்க வேண்டும்.
அருள்வாழ்வுப் பணி மக்களுக்குச் சிறந்த பயன்தரும் வகையில் செய்யப்படுவதற்கு, திருப்பணியாளர்கள் சிறப்பாக ஒரே பங்கிலுள்ள திருப்பணியாளர்கள், கூட்டு வாழ்க்கை வாழ்வது மிகவும் போற்றத்தக்கது. இது திருத்தூதுப் பணியைப் பேணி வளர்ப்பதோடு நம்பிக்கை கொண்டோருக்கு அன்பிற்கும் ஒற்றுமைக்கும் ஓர் எடுத்துக்காட்டாகவும் விளங்கும்.
2) கற்பிக்கும் பணியை ஆற்றும்போது கிறிஸ்தவ மக்கள், நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு இவைகளில் வேரூன்றிக் கிறிஸ்துவில் வளர்வதற்கும், கிறிஸ்தவச் சமூகம் ஆண்டவர் போற்றிய அன்பிற்குச் சாட்சியாக32 இருப்பதற்கும் இறைவார்த்தையைக் கிறிஸ்தவ மக்கள் யாவருக்கும் பறைசாற்றுவது பங்குத் திருப்பணியாளர்களின் கடமை. ஒவ்வொருவரது வயதிற்கும் ஏற்றாற்போல் அமைந்த மறைக்கல்விப் பயிற்சியால் நம்பிக்கை கொண்டோருக்கு நிறைவாழ்வின் மறைபொருளைப் பற்றிய நிறைந்த அறிவை அளிப்பதும் அவர்களது கடமையே. இக்கவில்யை அளிப்பதற்கு அவர்கள் துறவறத்தாரின் உதவியை மட்டுமன்றிப் பொதுநிலையினரின் ஒத்துழைப்பையும் தேடவேண்டும். இதற்காக மறைக்கல்வி மன்றங்களையும் நிறுவவேண்டும்.
தூய்மையாக்கும் பணியை நிறைவேற்றும்போது நற்கருணைப் பலி கிறிஸ்தவ சமூகம் முழுமையின் வாழ்வினை மையமும் உச்சியுமாக அமையுமாறு பங்குத் திருப்பணியாளர்கள் ஆவன செய்யவேண்டும். அருளடையாளங்களைப் பக்தியோடு அடிக்கடி நம்பிக்கை கொண்டோர் பெறுவதின் மூலமும் வழிபாட்டில் அறிவோடும் செலய்முறையிலும் பங்கெடுப்பதின் மூலமும் அவர்களது அருள்வாழ்வை ஊட்டிவளர்க்கத் திருப்பணியாளர்கள் பாடுபட வேண்டும். ஒப்புரவு அருளடையாளம் கிறிஸ்தவ வாழ்க்கையின் வளர்ச்சிக்கு எவ்வளவு துணைபுரிகின்றது என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். நம்பிக்கை கொண்டோரின் பாவ அறிக்கைகளைக் கேட்பதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். தேவையாக இருந்தால் பல மொழிகளைக் கற்ற வேறு திருப்பணியாளர்களையும் இப்பணிக்கு அழைக்க வேண்டும்.
அருள்பணி ஆற்றும்போது பங்குத் திருப்பணியாளர்கள் முதலாவது தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சொந்த மக்கள் குழுவைத் தெரிந்திருக்க முயலவேண்டும். அவர்கள் ஆடகளாகிய அனைத்து மக்களுக்கும் பணியாளர்கள் என்பதால் ந ம்ப pக்கை கொண்ட தனியாரிடத்திலும் குடும்பங்களிலும், சிறப்பாகத் திருத்தூதுப் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட குழுக்களிலும், பங்கு முழுவதிலுமே கிறிஸ்தவ வாழ்வின் வளர்ச்சியைப் பேணிக்க காக்க வேண்டும். அருள்பணித் தேவைகளுக்கு ஏற்ப வீடுகளையும் பள்ளிகளையும் அவர்கள் சந்திக்க வேண்டும். சிறுவர்களையும் இளைஞர்களையும் நன்றாகக் கவனிக்க வேண்டும்; ஏழைகளையும் நோயாளிகளையும் தந்தைக்குரிய அன்போடு பேண வேண்டும்; தொழிலாளிகள்பால் தனிக்கவனம் செலுத்த வேண்டும்; நம்பிக்கை கொண்டோர் திருத்தூதுப்பணிகளுக்கு உதவி புரிய அவர்களைத் தூண்ட வேண்டும்.
3. பங்குத் துணைத் திருப்பணியாளர்கள், பங்குத் திருப்பணியாளர்களின் உதவியாளர்களாக, அவர்களது அதிகாரத்தின் கீழ், அருள்பணியை ஆற்றும்போது சிறந்த முறையில் உதவி அளிக்கிறார்கள். எனவே, பங்குத் திருப்பணியாளருக்கும் அவரது துணைத் திருப்பணியாளர்களுக்கும் இடையே சகோதர உறவும் அன்பும் மதிப்பும் நிலவ வேண்டும். அவர்ள் ஒருவருக்கொருவரு அறிவுரைகளாலும் உதவிகளாலும் முன் மாதிரிகையாலும் துணைபுரிய வேண்டும்; ஒருமித்த உள்ளத்துடனும் ஒருங்கிணைந்த ஆர்வத்துடனும் பங்கு அலுவல்களை ஏற்று நடத்த வேண்டும்.
பங்குத் திருப்பணியாளர்களை நியமித்தல், மாற்றுதல், அகற்றுதல்
31. பங்கை வழிநடத்துவதற்கு ஒரு திருப்பணியாளரின் தகுதியைப் பற்றித் தீர்மானம் பண்ணுகையில் அவரது கல்வியறிவை மட்டுமின்றிப் பக்தி, திருத்தூதுப் பணி ஆர்வம், மக்களுக்கு அருள்பணியைச் சரிவர செய்யத் தேவையான மற்ற கொடைகள், குணநலன்கள் யாவற்றையுமே ஆயர் கருத்தில் கொள்ள வேண்டும்.
மக்களின் அருள்வாழ்வு நலன் பேணுவதே பங்குப் பணியின் ஒரே நோக்கமாதலால், ஆயர் மிகவும் எளிதாகவும் ஏற்ற முறையிலும் பங்குகளைப் பராமரிக்க உதவும் வகையில் திருப்பணியாளர்களை மற்றவர் முன்மொழியவும் நியமிக்கவும் ஒதுக்கி வைக்கவும் உரிமை யாதேனும் கொண்டிருப்பின் அதை ஒழித்துவிடல் வேண்டும். அது போலவே பங்குப் பணிக்காகச் சில இடங்களில் பொது அல்லது தனித் தேர்தல்கள் நடத்தப்பெறுவது வழக்கமாயின் அவற்றையும் ஒழிக்க வேண்டும். ஆனால் இதில் துறவறத்தாரின் உரிமைகள் பாதிக்கப்படலாகாது.
மக்களின் ஆன்மீக நலனை முன்வைத்துப் பங்குத் திருப்பணியாளர்கள் தத்தம் பங்குகளில் பணிபுரிய வேண்டுமானால் அப்பணிக்குத் தொடர்ச்சி தேவை ஏற்படுகிறது. எனவே மாற்றப்படக்கூடிய, மாற்றப்படக்கூடாத பங்குத் திருப்பணியாளர்கள் என்ற வேறுபாடு அகற்றப்பட்டு, திருப்பணியாளர்களை மாற்றவும் அகற்றவும் கையாளப்படும் வழிமுறைகளைத் திருத்தி அமைத்து எளிதாக்க வேண்டும். இவ்விதம், ஆயர் இயற்கைச் சட்டத்தினுடையவும் திருச்சபைச் சட்டத்தினுடையவும் வழிநின்று மக்களின் அருள்வாழ்வு நலனைப் பேணுவதற்குத் தேவையானவைகளை மிகவும் ஏற்ற வகையில் ஏற்பாடு செய்ய முடியும்.
முதிர்ந்த வயதின் காரணமாகவோ பிறகனமான காரணமாகவோ தங்கள் அலுவலை ஒழுங்காகவும் பயன்தரும் முறையிலும் நிறைவேற்ற இயலாப் பங்குத் திருப்பணியாளர்கள் தாமாகவோ ஆயரின் அழைப்பின் பேரிலோ பணியைத் துறந்து விடும்படியாகக் கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணியைத் துறந்து விட்டவர்களின் நல்வாழ்வுக்குப் பொருத்தமான ஏற்பாடுகளை ஆயர் செய்ய வேண்டும்.
பங்குகளை நிறுவுதலும் அகற்றுதலும்
32. இறுதியாகப் பங்குகளை ஏற்படுத்துதல், அகற்றுதல் இதுபோன்ற வேறு சீர்த்திருத்தங்களைப் புகுத்தல் என்பன பற்றி ஆராய்தலும் முடிவு செய்தலும் ஆயருக்குரிய அதிகாரத்தையே சார்ந்தது. இவை அனதை;தையும் மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய மீட்புப் பணியை முன்னிட்டே அவர் செய்ய வேண்டும்.
4. துறவிகள்
துறவிகளும் திருத்தூதுப் பணியும்
33. தத்தம் அழைப்பிற்கு ஏற்றாற்போல் கிறிஸ்துவின் முழு மறையுடலைக் கட்டியெழுப்பி வளர்ச்சியுறச் செய்வதற்காகவும் தனிச்சபைகளின் நலனுக்காகவும் ஆர்வத்தோடும் கவனத்தோடும் உழைக்க எல்லாத் துறவறத்தாருக்கும் கடமை உண்டு. நற்செய்தி அறிவுரைகளைப் பின்பற்றும் பிற சபை அமைப்புகளின் உறுப்பினர்களும் இவண் துறவறத்தார் என அழைக்கப்படுகிறார்கள்.
சிறப்பாக இறைவேண்டல், தன்னல மறுப்பு, தங்கள் வாழ்க்கையின் முன்மாதிரி ஆகிய செயல்களால் இந்நோக்கங்களை ஊக்குவிப்பதே அவர்களுடைய கடமை. இச்செயல்கள் மேல் அவர்கள் கொண்டுள்ள மதிப்பையும் ஆர்வத்தையும் அதிகரிக்க இத்திருச்சங்கம் அவர்களைப் பெரிதும் தூண்டுகிறது. ஒவ்வொரு சபையின் தனி இயல்புக்கு ஏற்பத் திருத்தூதுப் பணியின் வெளி அலுவல்களைச் செய்யவும் வெகு ஆர்வமுடன் அவர்கள் முன்வர வேண்டும்.
திருத்தூதுப் பணியாற்றுவதில் துறவறத்தார் ஆயர்களுக்கு அளிக்கும்உதவி
34. ஆயர் குழுவின் முன்மதியுள்ள உடன் உழைப்பாளர்களாக இருக்குமாறு துறவறத் திருப்பணியாளர்கள் திருப்பணி சார்ந்த அலுவலைச் செய்யத் திருநிலைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மக்களின் அருள்பணித் தேவைகள் பெருகிவரும் இன்று இவர்கள் ஆயர்களுக்குப் பெரும்உதவியாக இருக்கமுடியும். ஆகையால், ஆயர்களின் அதிகாரத்தின் கீழ் மக்களின் அருள் வாழ்வைப் பராமரிப்பதிலும், திருத்தூதுப்பணி அலுவல்களை ஆற்றுவதாலும் ஒருவகையில் துறவறத் திருப்பணியாளர்களும் மறைமாவட்டத் திருப்பணிநிலையினரைச் சேர்ந்தவர்கள் என்றே கூறவேண்டும்.
துறவறச் சபைகளில் உறுப்பினராக உள்ள ஏனைய ஆண்களும் பெண்களும் சிறந்த முறையில் மறைமாவட்டக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள், திருச்சபை ஆட்சியாளர்களுக்குச் சிறந்த உதவி அளிக்கிறார்கள். திருத்தூதுப் பணியின் தேவைகள் பெருகி வரும் இன்று நாளுக்கு நாள் அவர்கள் அதிகமதிகமாக உதவி அளிக்க முடியும்; உதவி அளிக்கவும் வேண்டும்.
மறைமாவட்டத்தில் துறவறத்தார் ஆற்றும் திருத்தூதுப் பணியின் அடிப்படைத் தத்துவங்கள்
35. ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் திருத்தூதுப் பணிகள் இணைந்து செயல்படவும், மறைமாவட்ட ஒழுங்கு முறைகளைப் பழுதுபடாது ஒற்றுமையாய்க் காக்கவும் கீழ்வரும் அடிப்படைத் தத்துவங்கள் வகுக்கப்பட்டுள்ளன:
1. ஆயர்கள் திருத்தூதர்களின் வழிவந்தோர் என்ற முறையில் துறவறத்தார் யாவரும் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண்டும். திருத்தூதுப்பணிகளை ஆற்ற முறையாக அவர்கள் உதவிபுரியத் தயாராக இருந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல்களைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.33 மேலும், மனித மீட்புப் பணியிலே இன்னும் அதிக பங்கு பெறத் துறவறத்தார் அழைக்கப்படும்போது, அவர்கள் ஆயருடைய வேண்டுகோள் மற்றும் பரிந்துரையின்படி உடனடியாகவும் பற்றுறுதியுடனும் செயல்படவேண்டும். சபையின் இயல்புக்கும் சபை ஏற்பாடுகளுக்கும் ஏற்றவாறு இதை அவர்கள் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காகச் சபை ஏற்பாடுகளைச் சங்கத்தின் விதித்தொகுப்பின் விதிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். உடனடி அருள்பணித் தேவை, மறைமாவட்டத் திருப்பணியாளர்களின் எண்ணிக்கைக் குறைவு என்பனவற்றைக் கருத்திற் கொண்டு ஆழ்நிலைத் தியான வாழ்வுக்கு மட்டுமே தங்களை அர்ப்பணிக்காதத் துறவற சபைகளைப் பல்வேறுபட்ட அருள்பணிகளில் தமக்கு உதவும்படியாக ஆயர்கள் அழைக்கலாம். எனினும், ஒவ்வொரு சபைக்கும் உரிய தனி இயல்பையும் அவர்கள் மனத்தில் கொள்ளவேண்டும். சிறிது காலத்திற்கேனும் பங்குப் பொறுப்பை ஏற்று, சபைத் தலைவர்கள் தங்களால் இயன்றவரை இவ்வொத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும்.
2. வெளித் திருத்தூதுப்பணியில் ஈடுபட்டுள்ள துறவிகள் தங்கள் சபைக்குரிய மனப்பாங்கில் தோய்ந்திருக்க வேண்டும். அவர்கள் தங்கள் சபை ஒழுங்குகளுக்கு உண்மையுள்ளவர்களாக, தம் தலைவர்களுக்குப் பணிந்தவர்களாக இருக்க வேண்டும். இக்கடமையைத் துறவிகளுக்கு வலியுறுத்த ஆயர்கள் தவறக் கூடாது.
3. திருத்தந்தை அல்லது ஏனைய திருச்சபை அதிகாரிகளின் கீழ் பணிசெய்யத் துறவிகளை ஒதுக்கிவைத்து, ஆயர்களின் ஆட்சி உரிமையிலிருந்து நீக்கி வைக்கும் விலக்குரிமை முக்கியமாகச் சபைகளின் உள்ளமைப்பையே சார்ந்தது. சபைகளில் உள்ள யாவையும், இன்னும் சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி, ஒருங்கிணைத்துத் துறவற வாழ்வின் வளர்ச்சிக்கும் நிறைவு நிலைக்கும் உதவுவதுவிலக்குரிமையின் நோக்கம்.34 மேலும், இந்த விலக்குரிமையின் பயனாகத் துறவிகளைத் திருத்தந்தை அனைத்துலகத் திருச்சபையின் நலனுக்கும்,35 தகுந்த அதிகாரம் பெற்றவர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட சபைகளைப் பராமரிக்கவும் பயன்படுத்த முடியும்.
இவ்விலக்குரிமையைத் துறவியர் கொண்டிருப்பினும் ஆயர்களது அருள்பணிக்கும் மக்களது அருள்வாழ்வு நலனுக்கும் வேண்டியவற்றில் அவர்கள் அந்தந்த மறைமாவட்டங்களில் ஆயர்களது ஆட்சியுரிமைக்குச் சட்டப்படி உட்பட்டே இருப்பர்.36
4. வேறுபட்ட வழிபாட்டு முறைகள் உள்ள இடங்களில் அவற்றிற்கு ஊறுவிளைவிக்காமல், பொது இவைழிபாடு செய்தல், மக்களின் அருள்வாழ்வைப் பராமரித்தல், மக்களுக்கு அருளுடைர ஆற்றல், கிறிஸ்தவ மக்களுக்கு, குறிப்பாகச் சிறுவுர்களுக்குச் சமயப் பயிற்சியும் ஒழுக்கமும் கற்பித்தல், மறைக்கல்விப் பயிற்றுவித்தல், திருவழிபாட்டு அறிவை வளர்த்தல் போன்றவற்றில், விலக்குரிமை பெற்றவரும் பெறாதவர்களுமாகிய எல்லாத்துறவியரும் தலத் திருச்சபைத் தலைவர்களின் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருக்கின்றனர். மேலும், திருப்பணி நிலையின் மதிப்பைச் சார்ந்தவற்றிலும் தூய திருத்தூதுப்பணியைச் சார்ந்த பற்பல அலுவல்களிலும் அவர்கள் தலத்திருச்சபைத் தலைவர்களின் அதிகாரத்துக்குட்பட்டவர்கள். துறவறத்தாரால் நடத்தப்படும் கத்தோலிக்கப் பள்ளிகளும் ஆயரின் பொது ஒழுங்கமைப்பையும் மேற்பார்வையையும் பொறுத்தமட்டில் அவரது அதிகாரத்துக்குக் கீழ்பட்டே இருக்கவேண்டும். ஆனால், அவைகளை நடத்தும் உரிமை துறவறத்தாரையே சார்ந்தது. எல்லாரும் கடைப்பிடிப்பதற்கென்று ஆயர் சங்கங்கள் அல்லது பேரவைகள் சட்டப்பூர்வமாக எடுத்துரைப்பவற்றைத் துறவறத்தாரும் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
5. பல்வேறு துறவறச் சபைகளுக்கு இடையிலும், அவற்றிற்கும் ம றைமாவட்டத் திருப்பணியாளர்களுக்கும் இடையிலும் முறையான ஒத்துழைப்பை வளர்க்க வேண்டும். எல்லா அலுவல்களையும் திருத்தூதுப் பணிகளையும் நெருங்கிய முறையில் ஒருமுகப்படுத்த வேண்டும். அன்பில் வேரூன்றி அதையே அடித்தளமாகக் கொண்ட இயல்புகடந்த மனப்பாங்கு இருந்தால்தான் இவ்வாறு ஒருமுகப்படுத்த முடியும். அனைத்துலகத் திருச்சபையைப் பொறுத்தமட்டில் இந்த ஒருமுகப்படுத்தல் திருத்தூது ஆட்சிப்பீடத்தைச் சார்ந்தது. ஆயர்கள் தங்களது மறைமாவட்டங்களிலும், மறைத்தந்தையர் மன்றங்களும் ஆயர் பேரவைகளும் தத்தம் நிலப்பரப்புகளிலும்இவ்வலுவல்களை ஒருமுகப்படுத்தும் பொறுப்பு கொண்டுள்ளன.
ஆயர்கள் அல்லது ஆயர் பேரவைகள் துறவறத் தலைவர்களுடனோ, உயர் துறவறத் தலைவர் பேரவைகளுடனோ கூடிக் கலந்து ஆராய்ந்த பிறகு துறவறத்தார் மேற்கொள்ள வேண்டிய திருத்தூது அலுவல்களைப் பற்றி முடிவு செய்யவேண்டும்.
6. ஆயர்களுக்கும் துறவிகளுக்கும் இடையே உள்ள உறவை இசைந்த உள்ளத்தோடும் பயனளிக்கும் முறையிலும் வளர்க்கும் வண்ணம் ஆயர்களும் துறவற சபைத் தலைவர்களும் தங்களுக்குட்பட்ட இடங்களிலுள்ள திருத்தூதுப் பணியைச் சார்ந்த காரியங்களைப் பற்றிப் பேச, குறிப்பிட்ட காலங்களிலோ, பொருத்தமாகத் தோன்றுபோதெல்லாமோ கூடிவர வேண்டும்.
இயல் 3
பல சபைகளின் பொதுநலத்தில் ஆயர்களின் ஒத்துழைப்பு
1. மன்றங்கள், சங்கங்கள் குறிப்பாக ஆயர் பெரவைகள்
மன்றங்களும் தனிப்பட்ட சங்கங்களும்
36. திருச்சபையின் தொடக்கக் காலந்தொட்டே, தனிச் சபைகளை ஆண்டுவ்நத ஆயர்கள் பொது நன்மையையும் தனிச் சபைகளின் நலனையும் வளர்ப்பதற்காகத் தங்களுடைய ஆற்றல்களையும் திட்டங்களையும் ஒன்றுபடுத்த, சகோதர அன்பாலும், அனைத்துலகுக்கும் நற்செய்தியை அறிவிக்கத் திருத்தூதர்கள் பெற்றுள்ள ஆணையாலும் தூண்டப்பட்டார்கள். இவ்விதம் மன்றங்கள், மாநிலச் சங்கங்கள், நாட்டுச் சங்கங்கள் முதலியன நிறுவப்பட்டன. இவ்றறில் ஆயர்கள் பல்வேறு சபைகளுக்கும் நம்பிக்கைச் சார்ந்த உண்மைகளைக் கற்பிப்பதிலும் திருச்சபை ஒழுங்குகளை அமைப்பதிலும் பின்பற்ற வேண்டிய பொது முறைகளை வகுத்தனர்.
இத்தகைய நன்மதிப்புக்குரிய நிறுவனங்களாகிய மன்றங்களும் சங்கங்களும் புத்துயிர் பெற்று எழுச்சியுற வேண்டுமென்று இப்பொதுச்சங்கம் விரும்புகிறது. இதனால், காலத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் நம்பிக்கை வளர்ச்சிக்கும் ஒழுங்குகளைக் காப்பதற்கும் சிறந்த முறையிலும் பயனளிக்கக் கூடிய வகையிலும் பல்வேறுச் சபைகளுக்கு உதவ முடியும்.
ஆயர் பேரவைகளின் முக்கியத்துவம்
37. முக்கியமாக இன்று ஆயர்கள் பிற ஆயர்களோடு நாளுக்கு நாள் நெருங்கி ஒன்றித்தும் மிக இணைந்தும் பணி புரியவில்லையென்றால் தங்களுடைய அலுவலைத் தகுந்த முறையிலும்பயன் விளைவிக்கும் வகையிலும் நிறைவேற்றப் பல நேரங்களில் முடியாமல் போகிறது. பல நாடுகளில் ற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள ஆயர் பேரவைகள் திருத்தூதுப் பணிகளில் மிகுந்த பலனைத் தந்துள்ளன என்பதை அப்பேரவைகள் சிறந்த சான்றுகளால் எண்பித்துள்ளன. எனவே, உலகெங்கும் ஒரு நாற்டிற்கோ மண்டலத்திற்கோ உட்பட்ட ஆயர்கள் குறிப்பிட்ட காலங்களில் ஒன்றாகக் கூடும் குழுவை உருவாக்குவது மிகவும் பயனுள்ளது என இத்திருச்சங்கம் கருதுகிறது. இக்கூட்டங்களின் வாயிலாக ஆழந்த அனுபவ அறிவைப் பகிர்ந்து கொள்வதாலும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதாலும் எல்லாச் சபைகளின் பொது நன்மைக்காக ஆற்றலனைத்தும் ஒன்று திரட்டி பணி செய்ய முடியும்.
எனவே, இத்திருச்சங்கம் ஆயர்களின் பேரவைகளைப் பற்றிக் கீழ்வருவனவற்றைத் தீர்மானிக்கிறது.
ஆயர் பேரவைகளின் வரையறை, அமைப்பு, அதிகாரம், ஒத்துழைப்பு
38. (1) ஆயர் பேரவை என்பது ஒருவகைக் குழுவாகும். இக்குழுவின் மூலமாக ஒரு குறிப்பிட்ட நாட்டின் அல்லது நிலப்பரப்பின் ஆயர்கள் தங்கள் அருள்பணியை ஒருங்கிணைந்து செய்கின்றனர். குறிப்பாக, காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ற திருத்தூதுப் பணி முறைகள், திட்டங்கள் வழியாகத் திருச்சபை மக்களுக்கு வழங்கும் மேலான நலன்களைப் பெருக்குவதே இப்பேரவையின் நோக்கமாகும்.
(2) அனைத்து வழிபாட்டு முறைகளைச் சேர்ந்த எல்லாத் தலத் திரச்சபைத் தலைவர்கள், இணை ஆயர்கள், துணை ஆயர்கள், திருத்தூது ஆட்சிப் பீடத்தினாலோ ஆயர் பேரவைகளாலோ ஒப்படைக்கப்பட்ட தனிப்பட்ட அலுவல் புரியும் ஏனைய பட்டத்தில் - ஆயர்கள் ஆகியோர் ஆயர் பேரவையின் உறுப்பினர்கள் ஆவர். குருகுல முதல்வர்கள் இப்பேதவையின் உறுப்பினர்கள் அல்லர். மேலும் பிற பட்டத்தில் - ஆயர்களும் தங்களது தனிப்பட்ட அலுவலை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் புரியும் திருத்தந்தையின் தூதுவர்களும் சட்டப்படி இந்தப் பேரவையின் உறுப்பினர்கள் அல்லர்.
தலத் திருச்சபைத் தலைவர்களுக்கும் அவர்களுடைய இணை ஆயர்களுக்கும் தீர்வெடுக்கும் வாக்குரிமை உண்டு. இப்பேதவையில் பங்கெடுக்க உரிமையுள்ள எல்லாத் துணை ஆயர்களுக்கும் மற்ற ஆயர்களுக்கும் பேரவையின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்பத் தீர்வெடுக்கும் வாக்குரிமையோ ஆலொசனை வாக்குரிமையோ உண்டு.
(3) ஒவ்வோர் ஆயர் பேரவையும் தன் சட்டத்திட்டங்களை இயற்றும்; இவை திருத்தூது ஆட்சிப்பீடத்தின் ஒப்புதல் பெற வேண்டும். தன் குறிக்கோளை மிகுந்த பயனளிக்கும் முறையில் அடைய உதவும் பணிப் பொறுப்புகளும் பிற வழிவகைகளும் இச்சட்டத்திட்டங்களில் இடம் பெறவேண்டும்; எடுத்துக்காட்டாக, ஆயர்களின் நிலையான குழு, ஆயர்களின் பணிக்குழுக்கள், பொதுச் செயலகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
(4) சட்ட முறைப்படி இயற்றப்பட்டு, பேரவையில் தீர்வெடுக்க வாக்குரிமைப் பெற்ற ஆயருள் மூன்றில் இரண்டு பங்கினரின் வாக்கலாவாது ஏற்றுக் கொள்ளப்பட்டு திருத்தூதுப்பீடத்தின் ஒப்புதல் பெற்றால்தான் பேரவைகளின் தீர்வுகளுக்குச் சட்டத்தால் கட்டுப்படுத்தும் வல்லமை உண்டு. இத்தீர்வுகள், பொதுச் சட்டத்தால் கட்டுப்படுத்தும் வன்மை உண்டு. இத்தீர்வுகள், பொதுச் சட்டத்தால் விதிக்கப்பட்ட அல்லது திருத்தூது ஆட்சிப் பீழத்தின் தனிப்பட்ட கட்டளையால் தரப்பட்டவையாய் இருத்தல் வேண்டும். திருத்தூது ஆட்சிப் பீடத்தின் இந்தக் கட்டளை தாமாகவோ பேரவையின் விண்ணப்பத்திற்கு இணங்கியோ கொடுக்கப்பட்டதாயிருக்கலாம்.
(5) தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக எழும் தேவைகளைப் பொறுத்து திருத்தூது ஆட்சிப்பீடத்தின் ஒப்புதலோடு பலநாட்டு ஆயர்கள் சேர்ந்து தனிப் பேரவை ஒன்றை அமைக்கலாம்.
மேலும், மிகுந்த நலனைப் பேணி வளர்க்கும் பொருட்டு வெவ்வேறு நாட்டு ஆயர் பேரவைகளிடையே தொடர்புகளைப் பேண வேண்டும்.
(6) கீழைச் சபைகளின் தலைவர்கள் மன்றங்களின் மூலம் தங்கள் சபைகளின் ஒழுங்குத் திட்டங்களை முன்னேற்றும்போதும் சமயத்தின் நன்மைக்காகப் புரியும் பணிகளை அதிகப் பயன்தரும் வகையில் ஊக்குவிக்கும்போதும் வெவ்வேறு வழிபாட்டு முறைகளைச் சார்ந்த பல சபைகள் இருக்கின்ற முழு நிலப்பரப்பின் பொது நன்மையையும் மனத்தில் கொள்ளுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகுதிவாய்ந்த அதிகாரிகள் கொடுக்கும் விதிகளுக்கு ஏற்றாற்போல் பல வழிபாட்டு முறையினரின் பொதுக்கூட்டங்களில் தங்களுடைய கருத்துகளை இவர்கள் பரிமாறிக் கொள்ளவேண்டும்.
2. மறை மாநிலங்களின் எல்லைகளும்
மறை மண்டலங்களை நிறுவுதலும்
எல்லைகளைச் சீரமைப்பதற்கான தத்துவங்கள்
39. மக்களின் அருள்வாழ்வு நலனைப் பேண மறை மாவட்டங்களுக்கு மட்டுமல்ல, மறைமாநிலங்களுக்கும் ஏற்ற எல்லைகள் தேவைப்படுகின்றன. உண்மையில் இது மறை மண்டலங்களை ஏற்படுத்தவும் தூண்டுதல் அளிக்கிறது. இங்ஙனம் சமூக, இட சூழ்நிலைகளுக்கேற்பத் திருத்தூதுப் பணித்தேவைகளைச் சிறந்த முறையில் நிறைவேற்ற இயலும். இவ்விதம் ஆயர்கள் தம்மிலும், மாநகர்ப் பேராயர்களுடனும் அதே நாட்டின் பிற ஆயர்களுடனும் கொண்டுள்ள தொடர்பும் ஆயர்களுக்கும் நாட்டு அதிகாரிகளுக்கு இடையே உள்ள தொடர்பும் அதிக எளிதாகவும் பயனுள்ளதாகவும் அமையும்.
பின்பற்ற வேண்டிய விதிகள்
40. எனவே, முன் கூறப்பட்ட குறிக்கோள்களை அடையத் திருச்சங்கம் கீழ்வருவனவற்றைத் தீர்மானித்திருக்கின்றது:
(1) மறை மாநில எல்லைகள் தகுந்த விதத்தில் திருத்தி அமைக்கப்பட வேண்டும். மாநகர்ப் பேராயர்களின் உரிமைகளும் சலுகைகளும் புதிய, ஏற்ற விதிகளால் வரையறுக்கப்பட வேண்டும்.
(2) பொதுவாக எல்லா மறைமாவட்டங்களும், சட்டப்படி அவைகளுக்குச் சரிநிகரான நிலப்பரப்புகளும் ஒரு மறை மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும். எனவே, திருத்தூது ஆட்சிப் பீடத்திற்கு இப்பொழுது நேரடியாகக் கீழ்ப்பட்டவையும் வேறு எந்தப் பகுதியுடனும் இணைக்கப்படாதவையுமான மறை மாவட்டங்களைக் கூடுமானால் ஒன்று சேர்த்து ஒரு புதிய மறை மாநிலமாக உருவாக்க வேண்டும். அல்லது அதிக வசதிவாய்ந்த அல்லது அருகேயுள்ள மறைமாநிலத்தோடு இணைக்க வேண்டும். பொதுச் சட்டத்தின் விதிகளின்படி அவைகள் மாநகர்ப் பேராயரின் அதிகாரத்திற்கு உட்படும்.
(3) எங்கெல்லாம் நலன் விளைவிக்குமோ அங்கெல்லாம் மறை மாநிலங்கள், மறை மண்டலங்களாக ஒன்று சேரவேண்டும். இவற்றின் அமைப்பு சட்டத்தால் வரையறுக்கப்பட வேண்டும்.
41. மறைமாவட்ட நலன் விளைவிக்குமோ அங்கெல்லாம் மறை மாநிலங்கள், மறை மண்டலங்களாக ஒன்று சேரவேண்டும். இவற்றின் அமைப்பு சட்டத்தால்வரையறுக்கப்பட வேண்டும்.
41. மறைமாவட்ட எல்லைப் பற்றி, எண்கள் 23, 23இல் கொடுக்கப்பட்ட ஒழுங்குப்படி தகுதி வாய்ந்த ஆயர் பேரவைகள், மறை மாநில எல்லைகள் அமைத்தல், மறை மண்டலங்கள் ஏற்படுத்துதல் போன்ற பொருள்களை அலசிப் பார்ப்பது தகுந்தது. பின் இப்பேரவைகள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் திருத்தூது ஆட்சிப் பீழத்திற்கு வெளிப்படுத்த வேண்டும்.
3. மறை மாவட்டங்களிடையே அலுவல் புரியும் ஆயர்கள்
ஆயர்களோடு ஒத்துழைத்தல்
42. அருள்பணி சார்ந்த சில அலுவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஊக்கம் பெற வேண்டுமென அருள்பணித் தேவைகள் மேன்மேலும் அதிகமாக வலியுறுத்துகின்றன. எனவே, குறிப்பிட்ட ஒரு மறை மண்டலத்தினுடையவோ, நாட்டினுடையவோ எல்லா மறை மாவட்டங்களுக்காகவும் அல்லது பல மறைமாவட்டங்களுக்காகப் பணிபுரிய சில பணிப் பொறுப்புகளை உருவாக்குவது பயன்தரும். இந்த ப ணிகள் ஆயர்களிடமே ஒப்படைக்கப்படலாம்.
இத்தகைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் திருச்சபைத் தலைவர்கள் அல்லது ஆயர்களுக்கும் மறைமாவட்ட ஆயர்களுக்கும் ஆயர் பேரவைகளுக்கும் இடையே சகோதர ஒற்றுமையும் அருள்பணிப் பற்றிய அக்கறையில் ஒன்றித்த ஒத்துழைப்பும் நிலவ வேண்டும் எனத் திருச்சங்கம் பரிந்துரைக்கிறது. இவை பற்றிய வழிமுறைகள் பொதுச்சட்டத்தாலும் வரையறுக்கப்பட வேண்டும்.
படைத்துறை ஆயர்கள்
43. போர் வீரர்களுடைய வாழ்க்கையின் தனி நிலைமைகள் காரணமாக அவர்களின் அருள்வாழ்வு நலன்மேல் சிறந்த கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதால் ஒவ்வொரு நாட்டிலும், முடியுமானால் படைத்துறை மறைமாவட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். போர் வீரர்களுக்குப் பணிபுரியும் மறை ஆளுநரும் தனிப்பணித் திருப்பணியாளரும் மறைமாவட்ட ஆயர்களுடன் முழுதும் தோளோடு தோள் நின்று ஆர்வத்துடன் இந்தக் கடின வேலைக்குத்தங்களையே அர்ப்பணிக்க வேண்டும்.37
இந்த முக்கிய அலுவலைச் செய்யத் தகுதிவாய்ந்த, போதுமான திருப்பணியாளர்களைப் படைத்துறை மறை ஆளுநருக்கு மறை மாவட்ட ஆயர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் போர் வீரர்களின் அருள்வாழ்வு நலனைப் பேணி வளர்ப்பதற்கான எல்லா முயற்சிகளையும் ஊக்குவிக்க வேண்டும்.38
பொதுக்கட்டளை
44. திருச்சபை சட்டத் தொகுப்பைத் திருத்தி அமைக்கும்போது இவ்விதித் தொகுப்பில் தரப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்ப, பொருத்தமான சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என இத்திருச்சங்கம் தீர்மானிக்கின்றது. இவ்வாறு இயற்றப்படும்போது பணிக் குழுக்கள் மற்றும் சங்கத் தந்தையர் தெரிவித்துள்ள கருத்துகளையும் மனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், ஆயர்கள் மற்றும் பங்குத் திருப்பணியாளர்கள் பயன்படுத்துவதற்காக அருள்பணி வழிகாட்டி ஏடுகள் தயாரிக்கப்பட வேண்டுமென இத்திருச்சங்கம் தீர்மானிக்கிறது. இதனால், அதிகப் பொருத்தமான முறையிலும் எளிதாகவும் தங்களுக்குரிய அருள்பணியைச் செய்வதற்குத் திட்டவட்டமான வழிவகைகளை அவர்கள் பெற இயலும்.
மேலும், குறிப்பிட்ட நாடுகளின் அல்லது குறிப்பிட்ட மண்டலங்களின் வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் நம்பிக்கை கொண்டோரின் தனிப்பட்ட குழுக்களின் அருள்பணிக்கான ஒரு தனி வழிகாட்டி ஏடு உருவாக்கப்பட வேண்டும். கிறிஸ்தவ மக்களின் மறைக் கல்விப் பயிற்சியைப் பற்றி வேறொரு வழிகாட்டி ஏடும் தயாரிக்கப்பட வேண்டும். இந்த வழிகாட்டி ஏடு மறைக்கல்விப் பயிற்சியின் அடிப்படைக் கோட்பாடுகள், இப்பொருள் பற்றிய நூல்களின் அமைப்பு, அவற்றின் விளக்கம் ஆகியவை பற்றி எடுத்துரைக்கும். இந்த வழிகாட்டி ஏடுகளைத் தயாரிக்கும்போது பணிக்குழுக்களும் சங்கத் தந்தையர்களும் எடுத்துக்கூறிய கருத்துகளையும் மனத்தில் கொள்ளவேண்டும்.
இவ்விதித் தொகுப்பில் கூறப்பட்டுள்ளன யாவும், அவை ஒவ்வொன்றும், திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும் கிறிஸ்து நமக்கு அளித்துள்ள திருத்தூது அதிகாரத்தால் வணக்கத்துக்குரிய தந்தையருடன் இணைந்து, தூய ஆவியில் அவைகளை ஏற்றுக்கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிலைநாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டிய இவை யாவும் கடவுளின் மாட்சிமைக்காகச் செயல்படுத்துமாறு ஆணையிடுகிறோம்.
| தூய பேதுரு பேராலயம் | பவுல். |
| உரோமை | கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் |
| அக்டோபர் 28, 1965. |
கீழே தந்தையரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.
