கத்தோலிக்கக் கீழைச் சபைகள் பற்றிய உட்புகுமுன் கத்தோலிக்கக் கீழைச் சபைகள் பற்றிய விதித் தொகுப்பில் கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வும் கத்தோலிக்கக் கண்ணோட்டமும் அடங்கியிருப்பதால் இந்த ஏடு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்விதித் தொகுப்பைத் தயாரிக்க ஏற்படுத்தப்பட்ட பணிக் குழு தந்த விவாதக் கோப்பு பலருக்கும் மனநிறைவு அளிக்கவில்லை. எனவே கீழைச் சபைகளுக்கான பணிக்குழு, இறையியல் பணிக்குழு, கிறிஸ்தவ ஒன்றிப்புச் செயலகம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த புதிய ஒரு விவாதக் கோப்பைத் தயாரித்துத் தந்தன. இது பற்பல ஆய்வுகளுக்குப்பின் திருத்தங்களுடன் 1964ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 10 ஆம் நாள் சங்கத் தந்தையரிடம் அளிக்கப்பட்டது. அவர்களின் புதுக் கருத்துகளுடன் மீண்டும் ஒருமுறை திருத்தம் பெற்று அதே ஆண்டு நவம்பர் திங்கள் 21 ஆம் நாள் இறுதி வாக்கெடுப்புக்கு இத்தொகுப்பு விடப்பட்டது. 2110 பேர் அதை ஏற்க 39 பேர் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர். 1965 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 22 ஆம் நாள் இந்த ஏடு செயல்முறைக்கு வந்தது. இவ்விதித் தொகுப்பின் தன்மை இவ்விதித் தொகுப்பு கத்தோலிக்கக் கீழைத் திருச்சபைகளைப் பற்றித் தெளிவான விளக்கங்களை அளிக்கிறது. கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ள கீழைச் சபைகளின் நிலைமைகளையும் உரிமைகளையும் தெளிவுபடுத்தி, கடந்த காலங்களில் அளிக்கப்பட்டிருந்த சலுகைகளையும் பழக்க வழக்கங்களையும் மீண்டும் நிலை நிறுத்துகிறது. தற்போது உரோமைத் திருச்சபையோடு ஒன்றித்திராத கீழைச் சபைகளின் ஒன்றிப்புப் பற்றியும் நம்பிக்கை தெரிவிக்கிறது. |
பண்டைய கீழைச் சபைகளின் மாண்பையும் நிலையையும் எடுத்தியம்புகிறது இந்த ஏடு. திருச்சபையில் பல்வேறுபட்ட வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அவை யாவும் சம மதிப்பையும் உரிமைகளையும் கொண்டுள்ளன. கீழை வழிபாட்டு முறைகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாய் அமைந்திருந்த பல்வேறு அரசியல், பண்பாட்டு, வரலாற்றுஈ சமயத் தொடர்பான காரணங்களை இத்தொகுப்பு கருத்தில் கொண்டுள்ளது. மேற்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நடந்த அரசில் போராட்டங்களும் இசுலாமியரின் ஆதிக்கமும் அந்நாடுகளில் திருச்சபையைப் பெரிதும் பாதித்தன. அங்குக் குடியேறிய மேலை நாட்டவர் கீழைச் சபையினரிடையே பல குழப்பங்களைக் கிளப்பிவிட்டனர். ஏனெனில் இவர்கள் இலத்தீன் வழக்கத்திற்கு மாறான எல்லாவற்றிலும்திரிபுக் கொள்கை இருக்கிறது என்று ஐயுற்றனர். இலத்தீன் வழிபாட்டு முறையே மற்ற எல்லாவற்றிலும்முதன்மை வாய்ந்தது என்ற தவறான எண்ணங்கொண்டிருந்தனர். கீழைச் சபைகளின் உண்மை மரபுகளை வரவேற்று நின்றன திருத்தந்தையரின் பல அறிக்கைகள். இருப்பினும் திருச்சபையின் பல்வேறு ஆட்சித் துறைகள் தீட்டிய தீர்மானங்கள் மேலே சுறப்பட்ட அறிக்கைகளுக்கு இசைந்தனவாக எப்போதும் இருக்கவில்லை. திருச்சபை சார்ந்த கல்வி, திருப்பணிப் பயிற்சி, திருச்சபை ஆட்சி ஆகியவற்றில் இலத்தீன் சபையினர் கீழசை; சபையினர் மேல் கொண்டிருந்த பெரும செல்வாக்காலும் தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளாலும் பல வேளைகளிலும் வெளியிலுள்ளோர் கீழைச் சபையாரின் காரியங்களில் தலையிட நேர்ந்தது.
1600 ஆம் ஆண்டிலிருந்த இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்தியாவில் உள்ள கீழைச் சபையிலே ஏற்பட்டிருந்த மாற்றங்களும் பிளவுகளும் இவ்வகைக் குழப்பங்களுக்கு ஏற்றதோர் எடுத்துக்காட்டாக நிற்கின்றன. ஆனால் இன்று திருச்சபைத் தலைமையிடம் ஒரு சபைக்கு அதே வழிபாட்டு முறையைச் சார்ந்த ஆயர்களையே நியமிக்கிறது. கீழை வழிபாட்டு முறைகளிலிருந்து பொருத்தமற்ற கூறுகளை விடுத்து, நல்ல கூறுகளை மீண்டும் வழக்கிற்கு கொணர்கிறது. திருச்சபைத் தலைமையிடத்தின் இப்போக்கு சிறந்த ஒரு முன்னேற்றமாகும்; பயன் விளைவிக்கக் கூடிய ஒரு வளர்ச்சியாகும்.
கீழைச் சபைகள் மறைத்தந்தையரைக் கொண்டிருக்கும் தூயமரபை இந்த விதித் தொகுப்பு ஏற்றுக் கொள்கிறது. மறைத் தந்தையர் என்னும் சொல் கிறிஸ்தவச் சமயத்தின் முக்கிய மையங்களில் உள்ள ஆயர்களுக்கு மட்டும் உரியதாக இருந்தது. உரோமை, அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா, எருசலேம், கான்ஸ்தாந்தி நோபுள் ஆகிய இடங்களில் உள்ள ஆயர்கள் மட்டுமே மறைத் தந்தையர்களாக நியமிக்கப் ;பெற்றனர். இவர்களுள் உரோமை ஆயர் உயர்ந்தவராக விளங்கினார். ''மறைத்தந்தையர்கள் தங்கள் மன்றங்களோடு சேர்ந்து தங்கள் மறைமாவட்டத்தில் நிகழும் எல்லாக் காரியங்களிலும் உயர்ந்த தனி அதிகாரம் கொண்டவர்கள்; அஃதோடு புதிய மறை மாவட்டங்களை உருவாக்கும் உரிமையும் தங்கள் மாவட்ட எல்லைக்குள் தம் வழிபாட்டு முறை ஆயர்களை நியமிக்கும் உரிமையும் அவர்களைச் சார்ந்தது. ஆனால் தனிப்பட்ட சூழ்நிலைகளில் முடிவு வழங்க உரோமை ஆயர் கொண்டுள்ள சிறப்புரிமை காக்கப்பட வேண்டும்'' (எண் 9). மறைத் தந்தையர்களற்ற கீழை வழிபாட்டு முறைகளில் உரோமை ஆயர் அவற்றிற்குப் பொறுப்புடையவராய் இருக்கிறார். புதிய மறைத் தந்தையர் ஆட்சி வட்டாரங்களை ஏற்படுத்தவும் இவ்விதித் தொகுப்பு விரும்புகிறது.
அருளடையாளங்கள் பற்றிய ஒழுங்குமுறை
அருளடையாளங்களைப் பற்றிய முக்கியமான சில காரியங்களை இவ்விதித் தொகுப்பு தீர்மானித்துள்ளது. திருப் பணியாளர்கள் உறுதிப்பூசுதல் என்னும் அருளடையாளத்தை அளிப்பது கீழை மரபு. ஞாயிறு அல்லது திருவிழா நாட்களில் திருவழிபாட்டில் பங்குகொள்ளும் கடமையை எளிதாக நிறைவேற்றுவதற்கு ஏதுவாக ஞாயிறு அல்லது திருவிழாவுக்கு முந்திய திருவிழிப்பு மாலைப்புகழ்க் கொண்டாட்டத்திலிருந்து விழா முடியும் வரை உள்ள காலம் தகுதியான நேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது (எண் 15). சில கீழைச்சபையினரிடையே நிலையான திருத்தொண்டர் முறை வழக்கொழிந்திருந்தது. இப்போது அதனை மீண்டும் வழக்கிற்குக் கொணரத் திருச்சங்கம் விரும்புகிறது (எண் 17); கலப்புத் திருமணத்திற்கான ஒழுங்கு முறை பற்றிய சட்டத்தையும் புதுப்பிக்கிறது எண் 18.
கிறிஸ்தவ ஒன்றிப்பு, நற்செய்தி அறிவிப்பு நோக்கங்கள்
இவ்விதித் தொகுப்பு கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றிய விதித் தொகுப்போடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இதன் கருத்துப்படி கீழைச் சபைக் கத்தோலிக்கர் கீழை நாட்டு மக்களாகவே விளங்க வேண்டும். இவர்கள் கத்தோலிக்கர் அல்லாதவர் நடுவிலும்கிறிஸ்தவர் அல்லாதவர் நடுவிலும் கிறிஸ்துவுக்குச் சான்று பகர வேண்டும். இவ்வாறு கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான வித்தைத் தூவ வேண்டும். தொன்மை வாய்ந்த கீழைச் சபைகளின் வாரிசுகள் என்ற முறையில் அவர்கள் தங்கள் மரபுச் செல்வங்களில் பற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
திருச்சபையின் ஒற்றுமை என்பது திருச்சபை ஒரே வகையாக இருப்பதில் அடங்குவதில்லை என்று இவ்விதித் தொகுப்பு நமக்கு நினைவூட்டுகிறது. ''ஏனெனில் ஒவ்வொரு தனிப்பட்ட சபையினுடையவும் அல்லது வழிபாட்டு முறையினுடையவும் மரபுகள் முழுமையாகப் பேணிக் காக்கப்பட வேண்டும் என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் குறிக்கோள்'' (எண் 2). சிறு கீழைச் சபைக்குழுக்கள் இலத்தீன் வழிபாட்டு முறை என்னும் பெரும் ஆழியில் ஒன்றாக்கப்பட்டு, அவற்றின் உருவை இழந்துவிடும் என்ற கருத்து கத்தோலிக்கரல்லாத கீழை மக்களிடம் இருக்கிறது என்பது உண்மை. இவ்வேடு இந்தக் கருத்தைத் திருத்துகிறது. கீழைச் சபைகள் பாதுகாக்கப்படவும் வளர்ச்சிபெறவும் உரிமை பெற்றுள்ளன என்று வலியுறுத்துகிறது. கீழைச் சபைகள் கிறிஸ்தவர்களின் அருள்வாழ்வு நன்மைக்காக, தேவைப்படும் இடங்களில் பங்குகளையும் திருச்சபை ஆட்சி அமைப்புகளையும் நிறுவ வேண்டும் என்று இவ்விதித் தொகுப்பு கூறுகிறது (எண் 4).
இலத்தீன் வழிபாட்டு முறைத் துறவறச் சபைகளில்சேர்ந்துள்ள கீழைச் சபைக் கத்தோலிக்கர் பலர் உள்ளனர். கீழை வழிபாட்டு முறையைச் சார்ந்த துறவற இல்லங்களும் மாநிலங்களும் குறிப்பாகக் கீழ்த்திசை நாடுகளில், அமைக்குமாறு இத்துறவறச் சபைகள் கனிவுடன் அறிவுறுத்தப்படுகின்றன (எண் 6).
நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளில், எடுத்துக்காட்டாக இந்தியாவில் கீழைச் சபைகளை பாதிக்கும் பிற சிக்கல்களும் இருக்கின்றன. நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ள இலத்தீன் வழிபாட்டு முறை மறைமாவட்டங்கள் கீழைச் சபைகளின் நற்செய்தி அறிவிக்கப்படும் பகுதிகளைச் சுற்றி இருக்கின்றன. இத்தகைய மறைமாவட்டங்களில் பல நற்செய்திப் போதகர்கள் உள்ளனர். இவர்கள் இலத்தீன் வழிபாட்டு முறையில் உறுப்பினராகப் பெயரளவில் மட்டும் இருந்து கொண்டு இலத்தீன் வழிபாட்டு முறையில் நற்செய்திப் பணி புரிபவர்கள். இவர்களைப் பார்த்ததும் நற்செய்திப் பணியின் வளர்ச்சியும் பெருக்கமும் இலத்தீன் வழிபாட்டு முறைக்கே உரியது என்று ஒருவர் எண்ணக் கூடும் அல்லவா? கீழைச் சபைகள் நீடிக்குமா என்ற ஐயம் இதனால் தோன்றலாம் அல்லவா?
கிறிஸ்து தங்களிடம் ஒப்படைத் பொதுப்பணியை எண்ணிப்பார்க்கக் கீழைச் சபையினரையும் இலத்தீன் சபையினரையு; அழைக்கும் இந்த ஏடு சரியான பாதையில் எடுத்து வைக்கப்பட்ட ஓர் அடியாகும். கத்தோலிக்கத் திருச்சபை கீழைச் சபைகளில் உள்ள மரபுகளையும் வழக்குகளையும் தனித் தன்மைகளையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெறவெண்டும். கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும்.
பணி. ளு. சேசுராசு|
திருச்சபை வரலாற்றுப் பேராசிரியர்
தூய பவுல் இறையியல் கல்லூரி
திருச்சிராப்பள்ளி
மார்ச், 1997
கத்தோலிக்கக் கீழைச் சபைகள்
பற்றி
இறை அடியாருக்கு அடியார் ஆயர் பவுல்
திருச்சங்கத் தந்தையரோடு இணைந்து
நினைவில் என்றும் நிலைக்குமாறு அருளிய
விதித் தொகுப்பு
முன்னுரை
1. கீழைச் சபைகளின்ழூ வழக்கிலான அமைப்புகள், வழிபாட்டு முறைகள், சபை மரபுகள், கிறிஸ்தவ வாழ்க்கை முறைகள் ஆகிவற்றைக் கத்தோலிக்கத் திருச்சபை பெரிதும் மதிக்கிறது. ஏனெனில் போற்றுதற்குரிய பன்னெடுங்காலச் சிறப்புடன் விளங்கும் இச்சபைகளில், திருத்தூதரிடமிருந்து தந்தையர் வழியாக வரும் மரபு1 ஒளிர்கிறது. இம்மரபு கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட, அனைத்துலகத் திருச்சபையின் பிளவுபடா மரபுச் செல்வத்தின் ஒரு பகுதியாகும். எனவே இம்மரபிற்கு உயிருள்ள சான்றுகளாய் விளங்கும் கீழைச் சபைகள் மீது இத்தூய பொதுச் சங்கம் அக்கறை காட்டுகிறது; இவை செழித்தோங்க வேண்டும் எனவும், தங்களிடம் ஒப்படை;கப்பட்ட பணியைத் திருத்தூதுப் புத்துணர்வோடு நிறைவேற்ற வேண்டும் எனவும் விரும்புகிறது. அதன் பொருட்டு அனைத்துலகத் திருச்சபையைச் சார்ந்தவற்றைத் தவிர, இச்சபைகள் பற்றிய ஒருசில காரியங்களையும் தீர்மானிக்க முடிவு செய்துள்ளது. ஏனைய முடிவுகளைக் கீழைச்சபை மன்றங்களுடையவும் திருத்தூதுப் பீடத்தினுடையவும் மேற்பார்வைக்கு விட்டுவிடுகிறது.
தனிச்சபைகள் அல்லது வழிபாட்டு முறைகள்
பல்வேறு வழிபாட்டு முறைகள் திருச்சபையின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவை அல்ல.
2. கிறிஸ்துவின் மறையுடலாகிய தூய, கத்தோலிக்கத் திருச்சபை ஒரே நம்பிக்கை, ஒரே அருளடையாளங்கள், ஒரே ஆட்சி முறை ஆகியவற்றால் தூய ஆவியில் உறுப்புகளாக ஒன்றிணைக்கப்பட்டுள்ள நம்பிக்கை கொண்டோரால் ஆனது. பல்வேறு குழுக்களாக இருக்கும் இம்மக்கள் திருச்சபை ஆட்சியமைப்பால் ஒன்றுபட்டு, தனிச் சபைகளாக அல்லது தனி வழிபாட்டு முறைகளாக அமைகின்றனர். இச்சபைகளுகு;குள் வியத்தகு ஒன்றிப்பு நிலவுவதால், திருச்சபையில் காணப்படும் வேற்றுமை அதன் ஒற்றுமையை வெளிப்படுது;துகிறதேயன்றி அதற்கு எவ்வித ஊறும் விளைவிப்பதில்லை. ஏனெனில் ஒவ்வொரு தனிப்பட்ட சபையினடையவும் அல்லது வழிபாட்டு முறையினுடையவும் மரபுகள் முழுமையாகப் பேணிக் காக்கப்பட வேண்டும் என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் குறிக்கோள். இதே போல் வெவ்வேறு கால, இடத் தேவைகளுக்கு ஏற்ப இச்சபைகள் தத்தம் வாழ்க்கை முறையைத் தழுவி அமைப்பதையும் கத்தோலிக்கத் திருச்சபை விரும்புகிறது.2
பல்வேறு வழிபாட்டு முறைகளும் ஒரே மாண்புடையவை
3. கிழழக்கிலும் மேற்கிலும் உள்ள இத்தனிச் சபைகள் தத்தம் வழிபாட்டு முறைகளில், அதாவது திருவழிபாட்டு, திருச்சபை ஒழுங்குமுறை, அருள்நெறி மரபுச்செல்வம் ஆகியவற்றில் தமக்குள் ஓரளவு வேறுபட்டுள்ளன. இருப்பினும், இறை நியமனப்படி அனைத்துலகத் திருச்சபையில் முதன்மை இடம் வகிப்பவரும் தூய பேதுருவின் வழித்தோன்றலுமாகிய உரோமை ஆயரின் அருள்பணி ஆளுகைக்கு இச்சபைகள் ஒரே வகையில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. எனவே இச்சபைகள் யாவும் சமமான மாண்புடையவை. இதனால் ஒரு சபை மற்ற சபைகளை விட வழிபாட்டு முறையின் காரணமாக உயர்ந்ததன்று. அவை அனைத்தும் சமமான உரிமைகளையும் கடமைகளையும் பெற்றிருக்கின்றன. உரோமை ஆயரின் கண்காணிப்பின்கீழ், அனைத்துலகிலும் நற்செய்தியை அறிவிப்பதிலும்கூட (காண் மாற் 16:15) சமமான உரிமைகளையும் கடமைகளையும் பெற்றிருக்கின்றன.
இவ்வழிபாட்டு முறைகள் பேணப்படல் வேண்டும்
4. ஆகவே எல்லாத் தனிப்பட்ட சபைகளையும் பாதுகாக்கவும் அவற்றை வளர்ச்சியுறச் செய்யவும் உலகெங்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இதற்காக, கிறிஸ்தவ மக்களின் ஒருள்வாழ்வு நலனுக்காகத் தேவைப்படும் இடங்களில் பங்குகளையும் தனிப்பட்ட திருச்சபை ஆட்சி அமைப்பையும் நிறுவ வேண்டும். ஒரே எல்லைக்குள் ஆட்சி உரிiமை செலுத்தும் பல்வேறு தனிச்சபைகளின் ஆட்சியாளர்கள் குறித்த கலங்களில் கூட்டங்கள் நடத்தி ஆலொசனை செய்து அதிக ஒற்றுமையுடன் செயல்படவும், கிறிஸ்தவத்தின் நலனை நன்முறையில் வளர்க்கவும் திருப்பணி நிலையிருக்கான ஒழுங்கு முறைகளைத் திறம்படப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகளில் ஒருங்கிணைந்து உதவவும் வேண்டும்.3 திருப்பணி நிலையினர் அனைவருக்கும், திருப்பட்டங்களைப் பெற இருப்பவர்களுக்கும் வழிபாட்டு முறைகள் பற்றியும் முக்கியமாகப் பல்வேறு வழிபாட்டு முறைகளுக்கு இடையே உள்ள நடைமுறை விதிகள் பற்றியும் நன்முறையில் அறிவுறுத்த வேண்டும். பொது நிலையனருக்கும் வழிபாட்டு முறைகளைப் பற்றியும் அவற்றின் விதிகளைப் பற்றியும் மறைக்கல்விப் பயிற்சியில் கற்பிக்க வேண்டும். இறுதியாக, கத்தோலிக்கர் அனைவரும், கத்தோலிக்கச் சபையல்லாத வேறு எந்தச் சபையிலாவது சமூகத்திலாவது திருமுழுக்குப் பெற்றுக் கத்தோலிக்க ஒன்றிப்பின் நிறைவை அடைய முன்வருவோரும் தமக்கு உரிய வழிபாட்டு முறையை எவ்விடத்திலும் கைக்கொண்டு, வளர்த்து, தங்களால் இயன்றவரை கடைப்பிடிக்க வேண்டும்.4 எனினும் ஆள்களையோ சமூகங்களையோ நிலப்பகுதிகளையோ சார்ந்த தனிப்பட்ட காரியங்களில் திருத்தூதுப்பீடத்திற்கு விண்ணப்பம் செய்து கொள்ளும் உரிமைக்கு இது இடையூறாய் இருப்பதில்லை. கபைகளுகு;குள் உள்ள தொடர்புகளைச் சார்ந்தவற்றில் இந்தத் திருத்தூதுப்பீடம் ஒப்புயர்வற்ற நடுவராக விளங்குகிறது. எனவே இது கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வோடு, தானாகவோ வேறு அதிகாரிகள் வழியாகவோ, தகுந்த ஒழுங்குகளையோ விதிகளையோ பதில் மொழிகளையோ அளித்து, தேவைகளை நிறைவு செய்கிறது.
கீழைச் சபைகளின் அருள் மரபுக்
கருவூலத்தைப் பாதுகாத்தல்
கீழைச் சபைகளின் சிறப்புக் கூறுகள்
5. அனைத்துலகத் திருச்சபை கீழைச் சபைகளுக்கு எவ்வளவு கடமைப்பட்டு இருக்கிறது என்பதற்கு வரலாறும் மரபும் திருச்சபையின் பற்பல அமைப்புகளும் சீரிய சான்று பகர்கின்றன.5 எனவே, இச்சபைகளின் திருச்சபை சார்ந்ததும் அருள் வாழ்வு சார்ந்ததுமான மரபுக் கருவூலத்திற்குத் திருச்சங்கம் தகுந்த மதிப்பும் முறையான பாராட்டும் அளிப்பதோடு அல்லாமல் அக்கருவூலத்தைக் கிறிஸ்துவின் அனைத்துலகத் திருச்சபையின் மரபுச் செல்வம் எனவும் உறுதியாக எண்ஞகிறது. இதனால் கீழைச் சபைகள் மேலைச் சபைகளைப் போல் தங்களுக்கே உரிய தனிப்பட்ட ஒழுங்கு முறைகளின்படி தங்களையே ஆட்சிபுரியும் உரிமையையும் கடமையையும் கொண்டுள்ளன என்று சிறப்பான முறையில் அறிக்கை இடுகின்றது. ஏனென்றால் மதிக்கப்பட வேண்டிய பன்னெடுங்காலச் சிறப்புடைய இவை தங்கள் மக்களின் பழக்க வழக்கத்திற்குப் பெரிதும் ஒத்திருக்கின்றன. அவர்களின் அருள்வாழ்வு சார்ந்த நலனை வளர்க்க மிகத் தகுதி வாய்தனவாகவும் காணப்படுகின்றன.
முறைக்கு முரணான மாற்றங்கள் கொணரல் ஆகாது
6. ஒழுங்குப்படி அமைந்த தங்களது திருவழிபாட்டு முறைகளையும் தங்களுடைய பழக்க முறைகளையும் எப்பொழுதும் பேணிக்காக்க முடியும், பேணிக்காக்கவும் வேண்டும் எனவும், பொருத்தமான, உயிரோட்டமுள்ள வளர்ச்சிக்காகவன்றி வேறு எக்காரணத்தை முன்னிட்டும் மாற்றங்களைப் புகுத்தக் கூடாது எனவும் கீழைச் சபையினர் அனைவரும் அறிய வேண்டும்; உறுதியாகக் கொள்ளவும் வேண்டும். எனவே இவை எல்லாவற்றையும் கீழைத் திருச்சபையைச் சார்ந்த எல்லா உறுப்பினர்களும் ஆழ்ந்த நேர்மையுடன் கடைப்பிடிக்க வேண்டும். தவிர, இவ்றறை நாளுக்கு நாள் அதிகாக அறியவும் நிறைவான முறையில் செயலாக்கவும் வேண்டும். காலச் சூழமைவுகளின் காரணத்தாலோ ஆள்களின் காரணத்தாலோ தங்கள் பழக்க முறைகளினின்று விலகிச் செல்ல நேரிட்டிருந்தால் தங்கள் முன்னோகளின் மரபுகளுக்கு மீண்டும் திரும்பிச் செல்ல முயல வேண்டும். தங்கள் பணிப் பொறுப்பாலோ திருத்தூது அலுவலாலோ அடிக்கடி கீழ்ச் சபைகளோடு அல்லது அச்சபைகளின் கிறிஸ்தவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் கீழைச் சபையினரின் வழிபாட்டுச் சடங்குகள், ஒழுங்கு, கோட்பாடு, வரலாறு, தனிப்பண்பு போன்றவற்றில் தங்கள் பணிப்பொறுப்பின் முதன்மைக்கேற்ப ஆழந்த அறிவும்நடைமுறைப் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.6 கீழ்த்திசை நாடுளில் அல்லது கீழைச் சபைக் கிறிஸ்தவர்கள் நடுவில்பணி புரியும் இலத்தீன் வழிபாட்டு முறையைச் சார்ந்த துறவறச் சபைகள் மற்றும் குழுக்கள் திருத்தூதுப் பணி அதிக பயன்தரும் முறையில் நடைபெறும் வகையில் கீழ்ச்சபை வழிபாட்டு முறையைச் சார்ந்த துறவற இல்லங்களை, ஏன் மண்டலங்களைக் கூட இயன்றவரையில் அமைக்கப் பெரிதும் தூண்டப்படுகின்றன.7
கீழைச் சபை மறைத் தந்தையர்
மறைத் தந்தையர் நிறுவன அமைப்பு
7. மிகத் தொன்மையான காலத்திலிருந்தே மறைத் தந்தையர் நிறுவன அமைப்பு திருச்சபையில் வழக்கத்தில் இருந்து வருகிறது. முதல் பொதுச் சங்கங்களில் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள உண்மை இது.8
கீழைச் சபை மறைத் தந்தையர் என்னும் பெயரானது, தமது ஆட்சி எல்லை அல்லது தமது வழிபாட்டு முறைக்கு உட்பட்டு இருக்கும் ம hநகர்ப் பேராயர்கள் உட்பட்ட ஆயர்கள் - திருப்பணி நிலையினர், பொது மக்கள் ஆகியோர் மேல் ஆட்சியுரிமை கொண்டுள்ள ஓர் ஆயரைக் குறிக்கும். இவ்வாட்சி உரிமை சட்ட ஒழுங்குக்கு உட்பட்டு உரோமை ஆயரின் முதன்மைக்கு இடையூறு வருவிக்காமல் இருக்க வேண்டும்.9
மறைத்தந்தையின் ஆட்சி எல்லைக்கு வெளியே எவ்விடத்திலாவது ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையைச் சார்ந்த திருச்சபைத் தலைமைத் திருப்பணியாளர் நியமிக்கப்பட்டிருப்பின், சட்ட ஒழுங்குப்படி தமது வழிபாட்டு முறையைச் சார்ந்த மறைத் தந்தையின் ஆட்சிக்கு அவர் உட்பட்டு இருப்பார்.
8. கீழைச் சபை மறைத்தந்தையர் காலக் கணிப்பின்படி முன்னரோ பின்னரோ வந்தவராயினும்மறைத் தந்தையர் என்னும் முறையில் சம மதிப்புப் பெறுகின்றனர். இருப்பினும், நன்மதிப்புக்கு அடையாளமாக, இம்மறைத் தந்தையர்களில் முந்தைய சிலருக்குச் சட்ட முறைப்படி முதலிடம் கொடுப்பது இதனால் பாதிக்கப்படுவதில்லை.10
கீழைச் சபை மறைத் தந்தையருக்கான சிறப்பு மரியாதை
9. திருச்சபையின் மிகத் தொன்மையான மரபின்படி கீழைச்சபை மறைத் தந்தையர்களுக்குத் தனிப்பட்ட மதிப்பு அளித்தல் வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மறைத் தந்தையும் தம் மறை மாவட்டத்திற்குத் தந்தையும் தலைவரும் போல் இருக்கிறார்.
எனவே இத்திருச்சங்கம் ஒவ்வொரு சபையின், தொன்மையான மரபுகளும் பொதுச்சங்கங்களின் விதிகளும் நிலைநாட்யதற்கேற்ப,11 மறைத் தந்தையர் உரித்தான உரிமைகளையும் தனிச்சலுகைகளையும் மீண்டும் வழக்கிற்கும் கொணர வேண்டும் என அறிக்கையிடுகிறது.
இவ்வுரிமைகளுககு; தனிச்சலுகைகளும் தற்கால நிலைமைகளுக்கு ஏற்பச் சிறிது புதுப்பித்து அமைக்கப்பட வேண்டியனவாயினும், இவை கீழைத் திருச்சபையும் மேலைத் திருச்சபையும் ஒன்றித்து இருந்த நேரத்தில் வழக்கில் இருந்தவையே.
மறைத்தந்தையர்கள் தங்கள் மன்றங்களோடு சேர்ந்து தங்கள் மறைமாவட்டத்தில் நிகழும் எல்லாக் காரியங்களிலும்உயர்ந்த தனி அதிகாரம் கொண்டவர்கள்; அஃதோடு புதிய மறைமாவட்டங்களை உருவாக்கும் உரிமையும் தங்கள் மாவட்ட எல்லைக்குள் தம் வழிபாட்டு முறை ஆயர்களை நியமிக்கும் உரிமையும் அவர்களைச் சார்ந்தது. ஆனால் தனிப்பட்ட சூழ்நிலைகளில் முடிவு வழங்க உரோமை ஆயர் கொண்டுள்ள சிறப்புரிமை காக்கப்பட வேண்டும்.
மறைத் தந்தையர் மாவட்டங்களைப் புதிதாக நிறுவுதல்
10. மறைத் தந்தையரைப் பற்றி இங்குக் கூறப்பட்டவை சட்ட ஒழுங்குப்படி தனிச்சபை அல்லது தனி வழிபாட்டு முறை முழுவதற்கும் தலைமை தாங்கும் உயர் பேராயர்களுக்கும் பொருந்தும்.12
11. மரபு வழியாகக் கீழைச் சபைகளில் நிலவி வ ரும் ஆட்சிமுறை மறைத் தந்தையர் ஆடசி முறையே என்பதால் தேவையான இடங்களில் மறைத் தந்தையர் மாவட்டங்கள் புதிதாக நிறுவுப்படட்டும் எனத்தூய பொதுச்சங்கம் விரும்புகிறது. இவற்றை அமைக்கும் உரிமை பொதுச்சங்கத்திற்கு அல்லது உரோமை ஆயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகும்.13
அருளடையாளங்களைப் பற்றிய ஒழுங்குமுறைகள்
மரபுவழியிலான அருளடையாளங்களைப் பற்றிய ஒழுங்கு முறைகளை மீண்டும் நிறுவுதல்
12. அருளடையாளங்களைப் பற்றிய கீழைச் சபைகளின் ஒழுங்கு முறைகளையும் அருளடையாளங்களை நிறைவேற்றுவதிலும் வழங்குவதிலும் உள்ள நடைமுறையையும் தூய பொதுச் சங்கம் ஏற்றுப் புகழ்கின்றது. தேவைப்படுமிடத்து அவற்றை மீண்டும் நிறுவ வேண்டும் எனவும் விரும்புகிறது.
உறுதிப்பூசுதல் வழங்கல்
13. திருஎண்ணெய் பூசி உறுதிப்பூசுதலை வழங்குகின்ற பணியாளர் பற்றி கீழைச் சபைகளில் மிகத்தொன்மையான காலத்திலிருந்தே வழக்கில் இருந்துவரும் ஒழுங்கு முறையை மீண்டும் முற்றிலும் நிறுவ வேண்டும். ஆகவே, மறைத்தந்தையால் அல்லது ஆயரால் மந்திரிக்கப்பட்ட திருஎண்ணெயைப் பயன்படுத்தித் திருப்பணியாளர்கள் இவ்வருளடையாளத்தை நிறைவேற்ற அதிகாரம் கொண்டுள்ளனர்.14
14. கீழைச் சபைத் திருப்பணியாளர்கள் அனைவரும்இலத்தீன் வழிபாட்டு முறை உட்பட எந்த வழிபாட்டு முறையையும் சார்ந்த எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும், திருமுழுக்குடனோ, கனியாகவோ இவ்வருளடையாளத்தைச் சட்டப்படி செல்லத்தக்க வகையில் நிறைவேற்றலாம். இவ்வாறு நிறைவேற்றுவது சட்ட முறைமைக்கு அமைந்ததாக வேண்டுமென்றால் பொதுச்சட்டமும் தனிச்சட்டமும் வகுக்கும் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.15 இலத்தீன் வழிபாட்டு முறையைச் சார்ந்த திருப்பணியாளர்களும், இவ்வருளடையாளத்தை நிறைவேற்றுவதற்காகத் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைக்கொண்டு கீழைச் சபைக் கிறிஸ்தவர்களுக்கும்கூட அவர்களின் வழிபாட்டு முறையைப் பாதிக்காதவாறு இதனை நிறைவேற்றலாம். இவ்வாறு நிறைவேற்றுவுது சட்ட முறைமைக்கு அமைந்ததாக வேண்டுமென்றால் பொதுச் சட்டமும் தனிச்சட்டமும் வழங்கும் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.16
கடமைத் திருநாள்
15. ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவிழா நாள்களிலும் திருவழிபாட்டிலோ, அவரவர் வழிபாட்டு முறையின் ஒழுங்குப்படி அல்லது வழக்கத்தின்படி இறைப்புகழ்க் கொண்டாட்டத்திலோ, பங்கு கொள்ளக் கிறிஸ்தவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.17 கிறிஸ்தவர்கள் இக்கடiயை அதிக எளிதாக நிறைவேற்றுவதற்கு ஏதுவாக ஞாயிறு அல்லது திருவிழாவுக்கு முந்திய திருவிழிப்பு மாலைப் புகழ்க் கொண்டாட்டத்திலிருந்து விழா நாள் முடியும் வரை உள்ள காலம் இக்கடமையை நிறைவேற்ற தகுதியான நேரமாகும் என நிர்ணயிக்கப்படுகிறது.18 இந்நாட்களிலும் அடிக்கடி, ஏன் ஒவ்வொரு நாளும்கூட, தூய நற்கருணை உட்கொள்ள கிறிஸ்தவர்கள் மிகவும் அறிவுறுத்தப் பெறுகிறார்கள்.19
ஒப்புரவு அருளடையாளத்தைக் கொண்டாடுவதற்குச் சட்டப் படியான அதிகாரம்
16. பல்வேறு தனிப்பட்ட சபைகளைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் கீழைச் சபைக்கான ஒரே மண்டலத்திலோழூ வட்டாரத்திலோழூ கலந்து வாழ்பவராக இருக்கலாம். எனவே தத்தம் தலைமைத் திருப்பணியாளரிடமிருந்து ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அதிகாரத்தை முறையாகவும் வரையறையின்றியும் பெற்றுள்ள எந்த வழிபாட்டு முறையைச் சார்ந்த திருப்பணியாளர்களும் தங்களுக்கு அதிகாரம் அளித்தவரின் ஆட்சிக்கு உட்பட்ட வட்டாரம் முழுவதிலும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்; அதுமட்டுமன்று, இடத் தலைமைத் திருப்பணியாளர் ஒருவர் தம் வழிபாட்டு முறை வழக்கிலிருக்கும் இடங்களில் மேற்கூறிய அதிகாரம் செல்லாதென வெளிப்படையாக மறுத்தாலொழியா,20 மேற்கூறிய வட்டாரத்தின் எல்லா இடங்ளிலும் எவ்வழிபாட்டு முறையைச் சார்ந்த கிறிஸ்தவர்களப் பொறுத்த அளவிலும் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவுதற்கான இந்த அதிகாரத்தைத் திரு;பபணியாளர்கள் செயல்படுத்தலாம்.
திருப்பணிநிலை என்னும் அருளடையாளம்
17. கீழைச் சபைகளில் திருப்பணிநிலை என்னும் அருள் அடையாளத்தைச் சர்ந்த தொன்மையான ஒழுங்கு முறையை மீண்டும் நடைமுறைக்குக் கொணரும் நோக்குடன், நிலையான திருத்தொண்டர் முறை வழக்கொழிந்துபோன இடங்களில் அதை மீண்டும் நிறுவிட இத்திருச்சங்கம் விரும்புகிறது.21 துணைத் திருத்தொண்டர் முறை மற்ற கீழ்ப்பட்டங்கள், அவைகளைச் சார்ந்த உரிமைகள், கடமைகள் அனைத்தையும் ஒவ்வொரு தனிப்பட்ட சபைகளின் சட்டம் இயற்றும்அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்களாக.22
கலப்புத் திருமணங்களில் கடைப்பிடிக்க வேண்டிய திருச்சபைத் திருமணமுறை
18. கீழைச் சபைக் கத்தோலிக்கர்கள், திருமுழுக்குப் பெற்றிருக்கும் கத்தோலிக்கரல்லாதக் கீழைச்சபையினரோடு திருமணம் புரியும்போது, இத்திருமணங்கள் சட்டப்படி செல்லாதனவாகி விடுதலைத் தவிர்க்கும் பொருட்டும், திருமணத்தின் உறுதிநிலை, தூய்மைப் பண்பு, இல்லற வாழ்வின் அமைதி ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கும்பொருட்டும் திருச்சங்கம் கீழ்வருமாறு தீர்மானிக்கிறது. திருச்சபையின் திருமண முறை, மேற்கூறிய திருமணங்களைப் பொறுத்தமட்டில் அவை சட்டமுறைக்கு அமைந்தனவாக இருப்பதற்கு மட்டுமே தேவை; இத்திருமணங்கள் சட்டப்படி செல்லத் தக்கவையாக வேண்டும் என்றால், சட்ட உரிமை சார்ந்த ஏனையவற்றைக் கடைப்பிடிப்பது உட்பட,23 திருப்பணி நிறைவேற்றுவோர் முன்னிலையில் நடைபெற்றால் போதும்.
இறைவழிபாடு
திருவிழாக்கள்
19. கீழைச் சபைகள் அனைத்திற்கும் பொதுவான திருவிழாலக்களை ஏற்படுத்துவதோ, அவற்றை வேறு நாள்களுக்கு மாற்றுவதோ, வேண்டாம் என ஒதுக்குவதோ இனிமேல் பொதுச் சங்கத்திற்கு அல்லது திருத்தூதுப்பீடத்திற்கு மட்டுமே உரித்தானது. ஆனால் தனிப்பட்ட சபை ஒவ்வொன்றிற்குமான திருவிழாக்களை ஏற்படுத்தவும், வேறு நாள்களுக்கு மாற்றவும், வேண்டாமென ஒதுக்கவும் திருத்தூதுப்பீடத்தைத் தவிர மறைத்தந்தையரின் அல்லது பேராயர்களின் மன்றங்களும்உரிமை கொண்டுள்ளன் என்றாலும், இவ்வுரிமையைச் செயலாக்கும்போது மண்டலம் முழுவதினுடயவும், ஏனைய தனிப்பட்ட சபைகளினுடையவும் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.24
உயிர்த்தெழுதல் திருவிழாக் கொண்டாட்டம்
20. உயிர்த்தெழுதல் திருவிழாவைக் குறிப்பிட்ட ஒரே நாளில் அனைவரும் கொண்டாடுவதற்காக எல்லாக் கிறிஸ்தவர்களிடையெயும் ஒற்றுமையான நிலை உருவாவது விரும்பத் தக்கது. அந்நிலை உருவாகும் வரையிலும் ஒரே மண்டலத்தில் அல்லது நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் பொருட்டு, மறைத்தந்தையர் அல்லது அந்தந்த இடத்துச் சபைகளின் உ யர் அதிகாரிகள் யார் யாருடைய கருத்துகளைக் கேட்க வேண்டுமோ அவற்றைக் கேட்டு, ஒரே ஞாயிறன்று உயிர்த்தெழுதல் விழாவைக் கொண்டாட ஒருங்கிணைந்து முடிவு செய்வது சாலச் சிறந்தது.25
தூய காலங்கள்
21. தங்களது வழிபாட்டு முறையைச் சார்ந்த மண்டலத்திற்கோ வட்டாரத்திற்கோ வெளியே வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் தூய காலங்களுக்கான சட்டங்களைப் பொறுத்த வரை, தாம் வாழும் இடத்தின் ஒழுங்குகளை அனுசரிப்பதற்குத் தடையேதும் இல்லை. வேறுபட்ட வழிபாட்டு முறைகளைக் கொண்ட குடும்பங்களில் ஏதாவது ஒரு வழிபாட்டு முறைப்படி இதே ஒங்குகளை அனுசரிக்கலாம்.26
திருப்புகழ்மாலை
22. தொன்மையான காலத்திலிருந்தே எல்லாக் கீழைச் சகைளாலும் திருப்புகழ்மாலை உயர்வாக மதிக்கப்பட்டு வந்துள்ளது. இத்திருப்புகழ்மாலையைக் கீழைச் சபகைளின் திருப்பணியாளர்களும் துறவிகளும் தங்கள் ஒழுங்கு முறையின் சட்டங்களுக்கும் மரபுகளுக்கும் ஏற்ப வேண்டுதல் செய்வார்களாக.27 கிறிஸ்தவர்களும் தங்கள் முன்னோர்களின் வழி நடந்து, தங்களால் இயன்றவரை திருப்புழ்மாலையின் பக்தியுடன் பங்கு பெறுவார்களாக.
திருவழிபாட்டில் பயன்படுத்தும் மொழி
23. மறைத்தந்தையர் தம் மன்றத்தோடு இணைந்தும், ஒவ்வொரு சபையின் உயரதிகாரிகள் தலைமைப் பணியாளர்களின் சங்கத்தோடு இணைந்தும், திருத்தூதுப் பீடத்தோடு தொடர்பு கொண்டு அந்தந்த இடத்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பாடங்களுக்கு இசைவு தெரிவித்து ஏற்றுக்கொள்ளவும் உரிமை கொண்டுள்ளனர்.28
பிற கிறிஸ்தவச் சபைகளோடு உறவாடல்
பிற கீழைச் சபையினரோடு ஒற்றுமையை வளர்த்தல்
24. ''கிறிஸ்தவ ஒன்றிப்பு'' பற்றி இத்திருச்சங்கம் தந்த விதித் தொகுப்பின் தத்துவங்களுக்கு ஏற்பக் கிறிஸ்தவர் அனைவரிடையேயும் சிறப்பாகக் கீழைச் சபையினரிடையேயும் ஒற்றுமையை வளர்க்கும்சிறப்பான பணி, உரோமைத் திருத்தூதுப்பீடத்தோடு ஒன்றித்திருக்கும் கீழைச் சபைகளைச் சார்ந்தது. முதன்முதலில் இறைவேண்டல் வழியாகவும், எடுத்துக்காட்டான வாழ்வு, கீழைச் சபைகளின் தொன்மையான மரபுகளின்மேல் அசையாத பற்றுதல், ஒருவர் ஒருவரைப் பற்றி அதிக ஆழமான அறிவு, ஒத்துழைப்பு, n வளி அமைப்புகளையும் உளநிலைகளையும் சகோதர மனப்பான்மையோடு மதித்தல் ஆகியவற்றின் வழியாய் இப்பணியை நிறைவேற்ற வேண்டும்.29
25. பிற கீழைச் சபையினர் தூய ஆவியின் அருளால் தூண்டப்பட்டுக் கத்தோலிக்க ஒன்றிப்பில் இணையும்போது, சாதாரண கத்தோலிக்க நம்பிக்கை அறிக்கையைத் தவிர அதிகமான எதையும் அறிக்கையிட அவர்களைக் கேட்டல் ஆகாது. மேலும் அவர்களிடையே வழக்கிலிருக்கும் திருப்பணிநிலை சட்டப்படி செல்லத்தக்கதே. ஆதலால் கத்தோலிக்க ஒன்றிப்பில் இணையும் கீழைச் சபைத் திருப்பணி நிலையினர் தகுந்த அதிகாரிகளால் வரையறுக்கப்பட்ட ஒழுங்குகளின்படி திருப்பணி நிறைவேற்றும்ஆற்றலைப் பெற்றுள்ளனர்.30
பிறர் வழிபாட்டில் பங்குகொள்ளுதல் பற்றிய தத்துவங்கள்
26. ''பிறர் வழிபாட்டில் பங்குகொள்ளுதல்'' என்னும் செயல் திருச்சபையின் ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிப்பதாக இருந்தால் அல்லது தவற்றினை மனதாரத் தழுவுவதற்கு வழி வகுக்குமானால் அல்லது நம்பிக்கையில்தவறிப் போவதற்கும் இடறலுக்கும் அக்கறையின்மைக்கும் இட்டுச்செல்லும் ஆபத்தைக் கொண்டிருந்தால் அது இறைச் சட்டத்தால் அனுமதிக்கப்படாததாகும்.31 ஆனால் அருள்பணிச் செயலில் ஈடுபாடு சுட்டிக் காட்டுவது என்னவென்றால், தனித்தனி மனிதரைச் சார்ந்த பல்வேறு சூழமைவுகளில் திருச்சபையின் ஒற்றுமைக்குத் தீங்கு நிகழ்வதுமில்லை, தவிர்க்க வேண்டிய இடர்கள் இருப்பதுமில்லை; மாறாக மீட்பின் தேவையும் மக்களின் அருள் வாழ்வும்தான் உடனழத் தேவைகளாகக் காணக்கிடக்கின்றன. ஆகையால்தான் கத்தோலிக்கத் திருச்சபை அருளடையாளங்கள், தூய செயல்கள் மற்றும் தூய காரியங்களில்மக்கள் பங்கு கொள்வதன் வழியாக அவர்களுக்கு மீட்பின் வழிவகைகளையும் அனைத்துக் கிறிஸ்தவர்கள் நடுவில் அன்பின் சான்றினையும் வழங்கி, காலம், இடம், ஆள்கள் சார்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப அதிகக் கடுமையின்றிப் பெரும்பாலும் செயல்பட்டுள்ளது, இன்றும் செயல்படுகிறது. இவற்றை மனதில் கொண்டு, ''மீட்பைப் பெறுகிறவர்களுக்குக் கடுமையான நம் தீர்ப்புகளினால் நாம் தடையாக இருக்கக் கூடாது''32 என்பதற்காகவும், பிற கீழைச் சபைகளோடு ஒன்றிப்பை அதிகமாக வளர்க்க வேண்டும் என்பதற்காகவும், திருச்சங்கம் கீழ்வரும் செயல்முறையைத் தீர்மானிக்கின்றது.
பிறர் வழிபாட்டில் பங்குகொள்ளுதல் பற்றிய அருள்பணி விதிகள்
27. மேலே குறிக்கப்படட தத்துவங்களை நினைவில் கொண்டு, கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து தங்கள் குற்றம் ஏதுமின்றிப் பிரிந்து இருக்கும் கீழைச் சபையினர், தாங்களாகவே முன்வந்து தகுந்த தயாரிப்புடன் அஞகினால் அவர்களுக்கு ஒப்புரவு, நற்கருணை, நோயில் பூசுதல் ஆகிய அருளடையாளங்களை வழங்கலாம். ஏன், கத்தோலிக்கரும் கூட மேற்கூறிய அருள் அடையாளங்களைக் கத்தோலிக்கரல்லாதப் பிற சபைப் பணியாளர்களிடமிருந்து சட்ட முறைக்கு இணங்க, கீழ்க் காஞம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வேண்டிப் பெற்றுக் கொள்ளலாம். இந்நிபந்தனைகளாவன: மேற்கூறிய சபைகளில் சட்டப்படி செல்லத்தக்க அருளடையாளங்கள் இருத்தல் வேண்டும்; வேறு வழியல்லாத நிலையோ அல்லது உண்மையான அருள் சார்ந்த நலனோ காரணமாக இருத்தல் வேண்டும்; வேறு வழியில்லாத நிலையோ அல்லது உண்மையான அருள் சார்ந்த நலனோ காரணமாக இருத்தல் வேண்டும்; கத்தோலிக்கத் திருப்பணியாளரை அஞகுவது செயலளவில் இயலாததாக இருக்க வேண்டும்.33
28. அவ்வாறே மேலே குறிப்பிட்ட தத்துவங்களின் அடிப்படையில் தூய நிகழ்ச்சிகள், காரியங்கள், இடங்கள் ஆகியவற்றில் கத்தோலிக்கர்களும் பிற கீழைச்சபைச் சகோதரர், சகோதரிகளும் சேர்ந்து பங்குபெறுவது தகுந்த காரணம் இருப்பின் அனுமதிக்கப் பெறுகிறது.34
29. பிற கீழைச் சபைச் சகோதரர், சகோதரிகளின் வழிபாட்டில் பங்குகொள்வது பற்றிய தளர்த்தப்பட்டுள்ள இம்முறையானது அந்தந்த இடத்துத் தலைமைத் திருப்பணியாளர்களின் கவனத்திற்கும் கண்காணிப்பிற்கும் விடப்பட்டுள்ளது. இது எதற்காகவெனில்: இவர்கள் தங்களுக்குள்ளே கலந்தாலோசித்து, தேவைப்படுமிடத்துப் பிரிந்த சபைகளின் திருச்சபை ஆடசியாளர்களின் கருத்தையும் அறிந்து, சூழ்நிலைகளுக்கு ஏற்றனவும் பயனளிக்கக் கூடியனவுமான சட்டங்கள், விதிகள் மூலம் கிறிஸ்தவர்களிடையே உள்ள உறவை முறைப்படுத்த வேண்டும்.
முடிவுரை
30. கத்தோலிக்க மேலை, கீழைச் சபைகள் பயனளிக்கும் முறையிலும் செயலாக்கத்தோடும் ஒத்துழைப்பதைக் கண்டு திருச்சங்கம் அறிக்கையிடுகிறது: கத்தோலிக்கத் திருச்சபையும் பிரிந்த கீழைச் சபைகளும் ஒன்றிப்பின் முழுமையை அடையும்வரை, தற்காலச் சூழமைவுகளுக்கு ஏற்றனவாக மேற்கூறிய ஒழுங்குகள் எல்லாம் தரப்பட்டுள்ளன.
இந்த இடைப்பட்ட காலத்தில் கீழைச் சபையினரும் மேலைச் சபையினருமான எல்லாக் கிறிஸ்தவர்களும் தூய்மை மிகு இறை அன்னையின் துணைகொண்டு விடா முயற்சியுடனும், ஒவ்வொரு நாளும், கடவுளை நோக்கி வேண்டுதல்களை எழுப்ப ஆர்வத்துடன் அழைக்கப்படுகிறார்கள். மேலும், கிறிஸ்துவின் பெயரை அயராது அறிக்கையிட்டு, துன்பங்களில் உழன்றும் ஒதுக்கப்பட்டும் வருகின்ற எல்லாச் சபைகளையும் சார்ந்த எண்ணிறந்த கிறிஸ்தவர்கள் மீதும், தேற்றுகிறவராகிய தூய ஆவியின் ஆறுதலும் தேற்றுதலும் நிறைவாகப் மொழியப்பட வேண்டும் எனவும் அவர்கள் இறைஞ்சுவார்களாக.
உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுவோம்; பிறர் நம்மை விட மதிப்புக்கு உரியவர் என எண்ணுவோம் (உரோ 12:10)
இவ்விதித் தொகுப்பில் கூறப்பட்டுள்ள யாவும், அவை ஒவ்வொன்றும், திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும் கிறிஸ்து நமக்கு அளித்துள்ள திருத்தூதர் அதிகாரத்தால் வணக்கத்துக்குரிய தந்தையருடன் சேர்ந்து தூய ஆவியில் அவைகளை ஏற்றுக்கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிலைநாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டிய இவை யாவும் கடவுளின் மாட்சிக்காகச் செயல்படுத்துமாறு ஆணையிடுகிறோம்.
| தூய பேதுரு பேராலயம் | பவுல். |
| உரோமை | கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் |
| நவம்பர் 21,1964 |
கீழே தந்தையரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.
அறிவிப்பு
கீழைத் திருச்சபைகள் பற்றிய விதித் தொகுப்பு செயலாக்கம் பெறுமுன்னர் இரண்டு மாத இடை ஓய்வுக்காலம் இருக்க வேண்டும் என்று திருத்தந்தை முடிவு செய்துள்ளார். எனினும் தகுந்த காரணங்களை முன்னிட்டு இக்கால எல்லையைக் குறைக்கவோ கூட்டவோ மறைத் தந்தையர் அதிகாரம் கொண்டுள்ளனர்.
ஏ பெரிக்கிளஸ் ஃபெலிச்சி,
சாமோசத்தா பட்டத்தில் - பேராயர்
இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் பொதுச் செயலர்
