சமூகத் தொடர்புக் கருவிகள் பற்றி பொருள் விளக்கம் 1. வியப்புக்குரிய பலழூ தொழில் நுணுக்கங்களைப் படைக்கப்பட்ட பொருள்களில் இருந்து மனித அறிவாற்றலால் கடவுளின் உதவியோடு இன்று கண்டுபிடித்துள்ளோம். அவற்றுள் மனித உள்ளத்தோடு நெருங்கிய தொடர்புள்ளவற்றையும், செய்திகளையும், கருத்துகளையும், வழிமுறைகளையும் மிக எளிதாக மக்களிடையே பரப்பக்கூடிய புதிய வழிகளைக் காட்டுவனவற்றையும் தாய்த் திருச்சபை ஏற்றுத் தனிப்பட்ட அக்கறையோடு கவனித்து வருகின்றது. தனிமனிதரை மட்டுமன்று, மக்கள் சமூகங்களையும் மனித குலம் முழுவதையும் இயல்பாகச் சென்றடைந்து இயக்கவல்ல கருவிகள் இக்கண்டுபிடிப்புகளுள் முக்கிய இடம் பெறுகின்றன. அச்சு வெளியீடு, திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி முதலிய இக்கருவிகளை சமூகத் தொடர்புக் கருவிகள் எனப் பொருத்தமுடன் அழைக்கலாம். திருச்சங்கம் இப்பொருள் பற்றிப் பேசுவதற்குக் காரணம் 2. இக்கருவிகளைத் தகுந்த முறையில் பயன்படுத்தினால் மனித இனம் மிகுந்த நன்மைகளை அடைய முடியும் என்பதைத் தாய்த் திருச்சபை உணர்ந்துள்ளது. ஏனெனில் இவை மனிதர்க்கு ஓய்வு அளிக்கவும் உள்ளத்தைப் பயன்படுத்தவும் உதவுவதோடு இறையாட்சியைப் பரப்பி நிலைநிறுத்தவும் உறுதுணையாகின்றன. ஆனால் படைத்தக் கடவுளின் திட்டத்திற்கு மாறாக மனிதர் இவற்றைப் பயன்படுத்தவும் அதனால் தம்மையே அழிக்கும்கருவிகளாக இவற்றை மாற்றவும் முடியும் என அது அறிந்திருக்கின்றது. இக்கருவிகளைத் தவறாகப் பன்படுத்துவதால் மனித சமுதாயத்திற்குப் பன்முறையும் ஏற்பட்டுள்ள அழவை எண்ணி அன்னைக்குரிய பரிவினால் திருச்சபை வருந்துகிறது. |
இத்துணை முக்கியம் வாய்ந்த இத்துறையுயில் திருத்தந்தையர்களும் ஆயர்களும் அயராத விழிப்புடன் அக்கறை காட்டியுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு சமூகத் தொடர்புக் கருவிகளைச் சார்ந்த முக்கியமான பிரச்சினைகளை ஆய்வதைத் திருச்சபை தன் கடமையாகக் கொண்டுள்ளது. இவ்வாறு தான் அளிக்கும் கோட்பாடும் ஒழுங்குமுறையும் கிறிஸ்தவர்களின் நலனை மட்டுமன்றிமனிதர் அனைவரின் முன்னேற்றத்தையும் பேணுவதற்கு வழிவகுக்கும் எனத்திருச்சங்கம் நம்புகிறது.
இயல் 1
சமூகத்தொடர்புக் கருவிகளை நன்முறையில்
பயன்படுத்துவதற்கான விதிமுறைகள்
திருச்சபையின் கடமைகள்
3. அனைத்துலக மாந்தர்க்கும் மீட்பளிப்பதற்காக ஆண்டவர் கிறிஸ்து நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபை, நற்செய்தியை அறிவிப்பது இன்றியமையாதது என்னும் உணர்வால் உந்தப்படுகிறது. ஆகவே, சமூகத் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தி மீட்புச் செய்தியை அறிவிப்பதும் அக்கருவிகளைச் சரியாகப் பயன்படுத்தும் முறைபற்றிக் கற்பிப்பதும் தன் கடமையெனக் கருதுகிறது.
எனவே கிறிஸ்தவ உருவாக்கத்துக்கும், நிறைவாழ்வுப் பணிக்கும் தேவையான அல்லது பயனுள்ள எல்லாக் கருவிகளையும் பயன்படுத்துவதும் உடைமையாகக் கொண்டிருப்பதும் திருச்சபையின் பிறப்புரிமையாகும். இக்கருவிகளின் உதவியால்தாங்களும்மனித இனம் முழுவதுமே மீட்பும் நிறைவும் பெறுமாறு கிறிஸ்தவர்களைப் பயிற்றுவிப்பதும் ஆற்றுப்படுத்துவதும்அருள்பணியாளரின் கடமையாகும்.
மேலும், மக்களின் உயர்ந்த எதிர்பார்ப்புகளுக்கும் கடவுளின் திட்டத்திற்கும் முபுவதும் ஏற்றவாறு மனித, கிறிஸ்தவ உணர்வுகளால் இக்கருவிகளுக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டியது சிறப்பாகப் பொதுநிலையினரின் கடமையாகும்.
ஒழுக்க நெறிச் சட்டம்
4. தகுந்த முறையில் இக்கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டுமாயின் அவற்றைப் பயன்படுத்தும் அனைவரும் நல்லொபுக்க நெறிகளை அறிந்திருப்பதும் அவற்றை இத்துறையில் நேர்மையோடு கடைப்படிப்பதும் மிகவும் இன்றியமையாதது ஆகும். எனவே, ஒவ்வொரு கருவியும் தன் இயல்புக்கு ஏற்பத் தெரிவிக்கும் பொருளை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், சமூகத் தொடர்புப் பணியைச் செயல்படுத்துவனவும் அதன் நேர்மையைப் பாதிக்கக் கூடியனவுமான எல்லாச் சூழ்நிலைகளையும் - அதாவது நோக்கம், ஆள்கள், இடம், காலம், இன்னும் பிறவற்றையும் - அவர்கள் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு கருவியும் தனக்கே உரிய விதத்தில் செயலுபடும் முறையும் இச்சூழ்நிலைகளுள் ஒன்று. இக்கருவிகளின் ஆற்றல் எத்துணை வலிமைமிக்கது எனின், மக்கள் தகுந்த தயாரிப்பின்றி இருந்தால் அவ்வாற்றலை உணர்வதும் நெறிப்படுத்துவதும் தேவையானால் புறக்கணிப்பதும் கடினமாகிவிடும்.
செய்தி திரட்டுவதற்கும் அறிவதற்குமான உரிமை
5. இக்கருவிகளைப் பயன்படுத்துவது பற்றி, சிறப்பாக இன்று விவாதத்திற்கு உட்பட்டுள்ள சில சிக்கல்களைப் பொறுத்த வரையில் சரியான ஒருமனச்சான்றை இத்துறையில் தொடர்பு கொண்ட அனைவரும் உருவாக்குவது இன்றியமையாதது ஆகும்.
இவற்றுள் முதன்மையான சிக்கல் செய்தித்துறையை அதாவது, செய்திகளைத் திரட்டுதலையும்பரப்புதலையும் பற்றியதாகும். இன்றைய மனித சமுதாயத்தின் முன்னேற்றம், அதன் உறுப்பினரிடையே உள்ள நெருங்கிய பிணைப்புகள் ஆகியவற்றின் காரணமாக, செய்தித்துறை மிகவும் பயனுள்ளதாகவும் இன்றியமையாததாகவும் மாறிவிட்டது. ஏனெனில் நிகழ்ச்சிகளையும் நிலைமைகளையும் வெளிப்படையாகவும் உடனடியாகவும் அறிவிப்பதால் ஒவ்வொரு மனிதரும்இவற்றை அதிக நிறைவான முறையிலும் தொடர்ந்தும் அறியமுடியும். இதனால்ஒவ்வொருவரும் பொதுநலத்திற்குப் பெரிதும்உதவவும் சமுதாய நலனை எளிதாக வளர்க்கவும் முடியும். எனவே தனி மனிதர்கள் என்னும் முறையிலோ, சமூக உறுப்பினர் என்னும் முறையிலோ தம்மோடு தொடர்புள்ளவை பற்றிய செய்திகளைத் தத்தம் நிலைமைக்கு ஏற்றவாறு அறிகின்ற உரிமை சமுதாயத்திற்கு உரித்தானது. இநத் உரிமையைச் சரியான முறையில் செயல்படுத்துவதற்கு, அறிவிக்கப்படும் பொருளைப் பொறுத்த மட்டில் செய்தி எப்பொழுதும் உண்மையானதாகவும், நீதியினின்றும் அன்பினின்றும் வழுவாத வகையில்முழுமையானதாகவும் இருக்க வேண்டும். மேலும், செய்தி அறிவிக்கும் முறை நேர்மையானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும். அதாவது செய்தியைத் திரட்டுவதிலும் பரப்புவதிலும் ஒழுக்க நெறிகளையும் தனி மனிதரின் முறையான உரிமைகளையும் மாண்பையும் நுணுக்கமாகக் காக்க வேண்டும். ஏனெனில் அறிவு பயன் தருவதில்லை. ''ஆனால் அன்பு உறவை வளர்க்கும்'' (1 கொரி 8:1)
கலையும் ஒழுக்க நெறியும்
6. இரண்டாவது சிக்கல் கலையில் உரிமைகளுக்கும் ஒழுக்க நெறி விதிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பைப் பற்றியதாகும். இது பற்றிப் பெருகி வரும் கருத்து வேறுபாடுகள் பலவேளைகளில் ஒழுக்கவியல், அழகியல் பற்றிய தவறான கோட்பாடுகளிலிருந்து உருவாகின்றன. எனவே ண்மையான அறநெறிக்கு அனைவராலும்முன்னுரிமை தரப்படவேண்டுமென இச்சங்கம் அறிக்கையிடுகின்றது. ஏனெனில் மனிதரைச் சார்ந்தவை எத்துணைச் சிறந்தனவாயினும் கலை உட்பட அவை அனைத்தையும் விட அறநெறியே உயர்ந்து நின்று அவற்றை ஒருமுகப்படுத்துகின்றது. அறநெறி மட்டுமே கடவுளின் பகுத்தறிவுள்ள படைப்பும் மேலானவற்றிற்கு அழைக்கப்பட்டவருமான மனிதரின் முழு இயல்பை எட்டுகிறது. இந்நெறிமுறையை மனிதர் முழுமையாகவும் உறுதியுடனும் கடைப்பிடித்தால் அவர்கள் நிறைவையும் பேரின்பத்தையும் முழுமையாய் அடயை அதுவே அவர்களை ஆற்றுப்படுத்தும்.
ஒழுக்க நெறி சார்ந்த தீமையை எடுத்துரைத்தல்
7. இறுதியாக ஒழுக்கம் சார்ந்த தீமைகளைச் சமூகத் தொடர்புக் கருவிகளின் துணைகொண்டு எடுத்துரைப்பதும் விளக்குவதும் வருணிப்பதும் மனித இனத்தைப் பற்றி ஆழுந்தறியவும் பகுத்தாயவும் பயன்படுகின்றன் அஃதோடு உண்மை, நன்மை ஆகியவற்றின் பெருமையை வெளிப்படுத்தவும் உதவுகின்றன. இதனால் சீரிய பலன்கள் விளைவது திண்ணம். சமூகத் தொடர்புக் கருவிகள் மக்களுக்குத் தீமையை விளைவிக்காமல் நன்மையையே விளைவிக்க வேண்டுமாயின், குறிப்பாக மரியாதைக்குரியவற்றையும் ஆதிப் பாவத்தால் புண்பட்ட மனிதரை முறைகெட்ட ஆசைகளில் எளிதாகச் சிக்கவைப்பவற்றையும் பொறுத்தமட்டில் அறநெறி விதிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
மக்கள் கருத்து
8. எத்துறையைச் சார்ந்தவராயினும் எல்லா மனிதரின் தனி வாழ்விலும் பொது வாழ்விலும் மக்கள் கருத்து பெரும்செல்வாக்கு உள்ளதாகத் திகழ்கிறது. எனவே மக்கள் கருத்து சார்ந்தவற்றில் சமுதாய உறுப்பினர் அனைவரும் நீதியோடும் அன்போடும்தம்கடமைகளை நிறைவு செய்ய வேண்டும். சமூகத் தொடர்புக் கலையைப் பயன்படுது;திச் சரியான மக்கள் கருத்தை உருவாக்கவும் பரப்பவும் அனைவரும் முயல வேண்டும்.
9. தாங்களே சுதந்திரமாக விரும்பி இக்கருவிகள் பரப்புபவற்றை வாசிப்போர், பார்ப்போர், கேட்போர் ஆகிய அனைவருக்கும்ச pறப்பான சில கடமைகள் உண்டு. நற்பண்பிலும், அறிவிலும், கலையிலும் சிறந்தவற்றை எல்லாவிதத்திலும் ஆதரிப்பதே சரியானது. தங்கள் அருள்வாழ்வுக்கு ஊறுவிளைவிக்கக் காரணமாகவோ, வாய்ப்பாகவோ இருப்பவற்றையும் தவறான எடுத்துக்காட்டால் பிறருக்கு தீமை விளைவிப்பவற்றையும், நன்மையை பரப்புதவற்குத் தடையாய் நின்று தீமையை ஊக்குவிப்பவற்றையும் அகற்றிவிட வேண்டும். இவை நிகழப் பெரும்பாலும் காரணமாக இருப்பது இக்கருவிகளை இலாப நோக்கோடு பயன்படுத்துவோருக்குப் பண உதவி செய்தலே ஆகும்.
இக்கருவிகளைப் பயன்படுத்துவோர் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமானால் இத்துறை வல்லுநர்கள் செய்யும் மதிப்பீடுகளை உரிய காலத்தில் அறிந்து நேர்மையான மனச்சான்றின் குரலுக்கு ஏற்ப அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். நேர்மைக் குறைவான தூண்டுதல்களை எளிதில் தவிர்க்கவும் நன்மை பயப்பனவற்றை முழுமையாக ஆதரிக்கவும் ஏற்ற உதவிகளுடன் தங்கள் மனச்சான்றை வழிநடத்திப் பயிற்றுவிக்க ஆவன செய்ய வேண்டும்.
இளைஞர், பெற்றோரின் கடமைகள்
10. இக்கருவிகளைப் பயன்படுத்துவோர், குறிப்பாக இளைஞர்கள், அளவோடும் கட்டுப்பாட்டோடும் இவற்றைப் பயன்படுத்திப் பழகிக் கொள்ள வேண்டும். பார்ப்பவை, கேட்பவை, வாசிப்பவை பற்றி ஆழ்ந்தறிய முயலவேண்டும். இத்துறை ஆசிரியர்களோடும் வல்லுநர்களோடும் இவை பற்றிக் கலந்து விவாதித்து, சரியான மதிப்பீட்டை உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நம்பிக்கை மற்றும் நல்லொழுக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் காட்சிகள், வெளியீடுகள் போன்றவை இல்லத்தில் இடம்பெறலாமலும் பிற இடங்களில் தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்காமலும் இருக்கும் வகையில் கண்ணும் கருத்துமாய் இருந்து விழிப்போடு செயல்படுவதைப் பெற்றோர் தங்கள் கடமையெனக் கருத வேண்டும்.
சமூகத் தொடர்பு நிகழ்ச்சிகளை உருவாக்குவோரின் கடமைகள்
11. சமூகத் தொடர்புக் கருவிகளைச் சரியாகப் பயன்படுத்துவது பற்றிய ஒழுக்கநெறிப் பொறுப்பு இதழாளர், எழுத்தாளர், நடிகர், காட்சியமைப்பாளர், தொகுப்பாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சிப் பொறுப்பாளர், விநியோகிப்போர், இயக்குபவர், விற்பனையாளர், திறனாய்வாளர் ஆகியோரையும் இன்னும் சமூகத் தொடர்பு நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும்பரப்புவதிலும் பல்வேறு வகைகளில் பங்குகொள்ளும் மற்றவர்களையும் சாரும். இன்றைய சூழ்நிலையில் இத்தகையோர் எத்துணைப் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளர்கள் என்பது கண்கூடு. ஏனெனில் கருத்து வெளியீட்டாலும் தாக்கங்களாலும் சமுதாயத்தை நன்மைக்கு அல்லது தீமைக்கு இட்டுச் செல்லும் ஆற்றலுடையவர்கள் இவர்கள்.
பொருளியல், அரசியல், கலை மதிப்பீடுகளைப் பொது நன்மையுடன் முரண்படாதவாறு அமைப்பது இவர்களின் பொறுப்பு. இப்பொறுப்பை நன்முறையில் நிறைவேற்றத் தங்கள் தொழிலைச் சார்ந்த கழகங்களில் உறுப்பினராதல் புகழ்ச்சிக்குரியது. தங்கள் லைப் பணிகளிலும், கடமைகளிலும் அறநெறிக் கோட்பாடுகளை மதித்துப் போற்றுமாறும், தேவையானால் தங்கள் கலைத்துறையில் சில நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க உறுதிமொழி எடுக்குமாறும் இக்கழகங்கள் தங்கள் உறுப்பினரைக் கட்டாயப்படுத்த இயலும்.
இவர்கள் தயாரிப்பவற்றை வாசிப்போர், பார்ப்போர் ஆகியோருள் பெரும்பாலோர் இளைஞர்களே ஆவர். நேர்மையான விதத்தில் களிப்பூட்டி உள்ளங்களை மே;படையச் செய்யும் வெளியீடுகளும் காட்சிகளும் இவ்விளைஞர்களுக்குத்தேவை என்பதை இவர்கள் மறந்துவிடக் கூடாது. மேலும் சமயத் தொடர்பான நிகழ்ச்சிகள் தகுதி வாய்ந்த வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உரிய மரியாதையுடன் அப்பணி நிறைவு செய்யப்படுகிறதா என்று கவனித்துக் கொள்வதும் இவர்கள் கடமையாகும்.
நாட்டு அதிகாரிகளின் கடமைகள்
12. இக்கருவிகள் பொது நன்மைக்கு உரியவை என்பதால் இத்துறையில்சில தனிப்பட்ட கடமைகள் நாட்டு அதிகாரிகளுக்கு உண்டு. செய்தி அறிவதற்கு உரிய முறையான உண்மைச் சுதந்திரத்தை, சிறப்பாக அச்சுத் துறையில் தங்கள் வரம்புக்குள் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இவ்வதிகாரிகளைச் சார்;ந்தது. இன்றைய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இச்சுதந்திரம் இன்றியமையாததாகும். சமயத்தையும் பண்பாட்டையும் உயர் கலைகளையும் இவர்கள் பேணி வளர்க்க வேண்டும். இவற்றைப் பயன்படுத்துவோர் தங்கள் முறையான உரிமைகளைச் ;சுதந்திரத்துடன் செயல்படுத்துவதை உறுதி செய்வதும் இவர்களின் கடமையாகும். மேலும் சிறப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பயன்தரக் கூடியனவாக இருந்தும் வேறுவிதத்தில் செயல்படுத்த முடியாமல் இருக்கும் திட்டங்களை நிறைவு செய்ய உதவுவதும் நாட்டு அதிகாரிகளின் கடமையாகும்.
இறுதியாக, சமூகத் தொடர்புக் கருவிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், பொது ஒழுக்கத்துக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பெருங்கேடு நேராமல் முறையாகவும் விழிப்புணர்வோடும் சட்டங்களை இயற்றி அவற்றைத்திறமையாகச் செயல்படுத்துவது குடிமக்களின் பொது நலனில் முறையாக ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் கடமையாகும். இக்கருவிகளைத்தொழில் முறையில் பயன்படுத்துவோர் தங்கள் கடமையில் வழுவினாலும்கூட மேற்கூறிய விழிப்புள்ள கவனத்தால் தனிமனிதர், குழுக்கள் ஆகியோரின் உரிமை சிறிதும் பாதிக்கப்படாது.
தீங்கு விளைவிக்கும் வெளியீடுகள், காட்சிகள் முதலியவற்றிலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பதில் தனிக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இயல் 2
சமூகத் தொடர்புக் கருவிகளும்,
கத்தோலிக்கத் திருத்தூதுப் பணியும்
அருள்பணியாளரும் கிறிஸ்தவரும்
13. சூழ்நிலைகளின் தேவைகளுக்கேற்ப, சமூகத் தொடர்புக் கருவிகளைப் பல்வேறு திருத்தூதுப் பணிகளில் பயன்பதுர முறையில் கையாளத் திருச்சபையின் மக்கள் அனைவரும் ஒருமித்த உள்ளத்தேமாடு திட்டமிட்டு, தாமதமின்றி முழு ஆற்றலுடன் முயல வேண்டும். தீங்கு விளைவிக்கும் திட்டங்களை முன்னறிந்து தடுப்பதில் சிறப்பாக, ஒழுக்க, சமய வளர்ச்சிக்கு இத்தகைய ஈடுபாடு தேவையான இடங்களில் முயன்று உழைக்க வேண்டும்.
அருள்பணியாளர்களின் பொதுவான போதிக்கும் பணியோடு நெருங்கிய தொடர்புள்ள காரணத்தால், இத்துறையில் அவர்கள் பொறுப்போடு செயல்பட வேண்டும். இத்துறையில் ஈடுபட்டுள்ள பொதுநிலையினரும் கிறிஸ்துவுக்குச் சான்று பகர முயல வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளைத் திறமையோடும் திருத்தூது உணர்வோடும் நிறைவேற்றித் தொழில் நுட்பம், பொருளியல், பண்பாடு, கலை ஆகிய துறைகளில் தங்களுக்குள்ள திறமைகளைப் பயன்படுத்தி, தங்களால் இயன்ற வகையில் திருச்சபையின் அருள்பணியல் நேரடியாக உதவ வேண்டும்.
கத்தோலிக்கரின் ஈடுபாடு
14. முதலில் பொறுப்புணர்வுமிக்க அச்சு வெளியீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கிறிஸ்தவ உணர்வில் வாசகர்களை வளரச் செய்ய உண்மையான கத்தோலிக்க அச்சுத்துறையை நிறுவி வளர்க்க வேண்டும். திருச்சபை அதிகாரிகளாலோ கத்தோலிக்க மக்களாலோ ஊக்குவிக்கப்பட்டும், அவர்களை சார்ந்துமிருக்கும் இத்துறை இயற்கை நெறிக்கும், கத்தோலிக்கக் கோட்பாடுகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் இயைந்தவாறு பொதுமக்களின் கருத்துகளை உருவாக்கி, உறுதிப்படுத்தி வளர்ப்பதோடு, திருச்சபைச் செய்திகளைப் பரப்பி அவற்றுக்கு ஏற்ற விளக்கமும் தரவேண்டும். எல்லா நிகழ்சிகளையும் கிறிஸ்தவக் கண்ணோட்டத்துடன் உணர்ந்து முடிவு செய்வதற்குக் கத்தோலிக்க வெளியீடுகளைப் படிப்பதும் பரப்புவதும் இன்றியமையாதவை எனக் கிறிஸ்தவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
உள்ளத்துக்கு நேரிய முறையில் களிப்பூட்டிய பண்பாட்டையும் கலையையும் வளர்ப்பவையும் சிறப்பாக இளைஞர்க்குரியவையுமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதற்கான எல்லா உதவிகளையும் தந்து ஊக்குவிக்க வேண்டும். நேர்மையான தயாரிப்பாளர்கள், விநியோகிப்போர் ஆகியோரின் முயற்சிகளையும், திட்டங்களையும் ஆதரித்து ஒருமுகப்படுது;துவாலும் தகுதியுள்ள திரைப்படங்களுக்குப் பரிசுகளும் திறனாய்வாளர்களின் பாராட்டுதலும் கிடைக்கச் செய்து ஆதரிப்பதாலும் கத்தோலிக்கரும் நேர்மையுள்ள பிறரும் நடத்தும் திரையரங்குகளை ஊக்குவித்து ஒருமுகப்படுத்துவதாலும் இதனைச் செய்ய முடியும்.
அதுபோலவே நல்ல வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு, சிறப்பாகக் குடும்ப நலனுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளுக்குச் செயலளவிலான உதவி வழங்கப்பட வேண்டும். திருச்சபை வாழ்வில் பங்குபெறவும் மறை உண்மைகளில் தோய்ந்திடவும் பார்ப்போரையும், கேட்போரையும் ஈர்க்கின்ற கத்தோலிக்க நிகழ்ச்சிகளை முழுமுயற்சியுடன் ஆதரிக்க வேண்டும். கூடுமான இடங்களில் கத்தோலிக்க வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை அக்கறையுடன் நிறுவ வேண்டும்; இந்நிலையங்கள் வெளியிடும் நிகழ்ச்சிகள் தரத்திலும் பயன் தருவதிலும் முன்னிற்க ஆவன செய்ய வேண்டும்.
மேன்மையும் பழமையும் மிக்க நாடகக் கலை ஏற்கெனவே சமூகத் தொடர்புக் கருவிகளால் பல இடங்களிலும் பரப்பப்பட்டுள்ளது. இக்களைல காண்போரின் மனிதப் பண்பையும் ஒழுக்க நெறியையும் வளர்க்க ஆவன செய்ய வேண்டும்.
சமூகத் தொடர்பு நிகழ்ச்சிகளை உருவாக்குவோருக்குப் பயிற்சி
15. மேற்கூறிய தேவைகளை நிறைவு செய்யும் வகையில் திருத்தூதுப் பணிக்கேற்ப இக்கரவிகளைப் பயன்படுத்தும் திறமைமிக்க திருப்பணியாளர்களையும் துறவிகளையும் பொதுநிலையினரையும் விரைந்து பயிற்றுவிக்க வேண்டும்.
முதலாவதாக, பொதுநிலையினருக்கு இத்துறையின் தொழில் நுட்பம், கொள்கைகள், கடமைகள் ஆகியவை பற்றிக் கற்பிக்கப் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும். இதர்hளரும் திரைப்படம், வானொலி, தொலைக்காட்சிகளுக்கு எழுதுவோரும் மற்றும் இத்துறையில் அக்கறையுள்ள பிறரும் கிறிஸ்தவ உணர்வோடு கூடிய முழுப் பயிற்சியைச் சிறப்பாகத் திருச்சபையின் சமூகக் கோட்பாட்டுத் துறையில் மேற்கூறிய நிலையங்கள்மூலம் பெற முடியும். தங்கள் கலையால் மனித சமுதாயத்துக்குத் தகுந்த முறையில் உதவுமாறு நடிகர்களுக்குப் பயிற்சியும் உதவியும் வழங்க வேண்டும். இறுதியாக இலக்கியம்இ திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி முதலிய துறைகளிலுள்ள திறனாய்வாளர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்கள் தத்தம் துறையில் புலமை பெறுவதோடு தங்கள் திறனாய்வுகளில் ஒழுக்கநெறிக்கு உரிய முக்கியத்துவம் வழங்கக் கற்பிக்கப்படவும் ஊக்குவிக்கப்படவும் வேண்டும்.
சமூகத் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்துவோருக்குப் பயிற்சி
16. வயதிலும் அறிவுநிலையிலும் மாறுபட்ட பலரும் பயன்படுத்தும் சமூக தொடர்புக் கலையைத் தகுந்த முறையில் கையாளும் வகையில் இவை பற்றிய ஏற்ற, உரிய கல்வியும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். இக்குறிக்கோளை அடைய உதவும் திட்டங்கள், சிறப்பாக இளைஞர்களுக்கான திட்டங்கள் எல்லா நிலைகளிலுமுள்ள கத்தோலிக்கப் பள்ளிகளிலும் திருப்பணி நிலைப்பயிற்சியகங்களிலும் பொதுநிலையினர் திருத்தூதுப் பணிக் கழகங்களிலும் ஆதரவும் விரிவாக்கமும் பெற்று, கிறிஸ்தவ ஒழுக்கநெறித் தத்துவங்களுக்கு ஏற்ப இயக்கப்பட வேண்டும். இது விரைந்து செயலாக்கம் பெற, மறைக்கல்வி வழியாக இதுபற்றிய கத்தோலிக்கக் கோட்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் விளக்கப்பட வேண்டும்.
முதலீடும், பொருளுதவியும்
17. இத்துறையில் ஏற்படும் தொழில்நுட்ப இடையூறுகளும் பெருஞ்செலவும் மீட்புச் செய்திக்கு இடர்பாடாகவும் தடையாகவும் இருப்பதைக் கண்டும் திருச்சபை உறுப்பினர் வாளாவிருப்பது ஏற்புடையதன்று. எனவே, உண்மையைப் பரப்பிப் பாதுகாப்பாதையும் சமுதாயத்தில் கிறிஸ்தவ உணர்வுகளைப் பரவச் செய்வதையும் தங்கள் தலையாய குறிக்கோளாகக் கொண்டுள்ள கத்தோலிக்க இதழ்கள், வெளியீடுகள், திரைப்படத்துறை முயற்சிகள், வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அவற்றின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஆதரிப்பதும், அவற்றிற்கு உதவுவதும் திருச்சபை உறுப்பினரின் கடமை என்பதை இத்திருச்சங்கம் வலியுறுத்துகிறது. அதே வேளையில் உண்மையான பண்பாட்டுக்கும் திருத்தூதுப் பணிக்கும் உறுதுணையாகும் அளவுக்கு அக்கருவிகளைத் தங்கள் பணியாலும் அறிவுத் திறனாலும் விரும்பித் தாராளமாக ஆதரிக்குமாறு பொருளியல், தொழில்நுட்பத் துறைகளில் பெரும் செல்வாக்குள்ள கழகங்களுக்கும் தனி மனிதருக்கும் அது அழைப்பு விடுக்கிறது.
இத்துறைக்கான ஆண்டுக் கொண்டாட்டங்கள்
18. சமூகத் தொடர்புத் துறையில் திருச்சபை ஆற்றும் பலவகை திருத்தூதுப் பணிகளைப் பயன்தரும் முறையில் வலுப்படுத்த ஆண்டுதோறும் உலகில் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் ஆயர்களின் முடிவுக்கிணங்க ஒருநாள் கொண்டாடப்பட வேண்டும். அதுபொன்று கிறிஸ்தவர்களுக்கு இத்துறையிலுள்ள கடமைகளை அறிவுறுத்தி இப்பணிக்காக மன்றாடவும் பொருளுதவி செய்யவும் அவர்கள் தூண்டப்பட வேண்டும். இப்பண உதவி கத்தோலிக்க உலகின் சமூகத் தொடர்புத் துறைத் தேவைகளை நிறைவு செய்யத் திருச்சபை உருவாக்கும் அமைப்புகளையும் திட்டங்களையும் ஆதரிக்கவும் விரிவாக்கவும் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
திருச்சபைத் தலைமையிடச் செயலகம்
19. சமூகத் தொடர்புத் துறையில் தம் பெரும் பணியை நிறைவேற்ற, திருச்சபைத் தலைமை இடத்தில் தனியான ஒரு செயலகம் திருத்தந்தைக்கு உதவும்.1
ஆயர்களின் பொறுப்பு
20. தத்தம் மறைமாவட்டத்தில் இத்துறையில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் முயற்சிகளையும் விழிப்புணர்வோடு கவனித்து ஊக்குவிப்பதும் பொதுத் திருத்தூதுப் பணியோடு தொடர்பு கொண்டுள்ள அளவுக்கு அவற்றை ஒழுங்குபடுத்துவதும் ஆயர்களின் கடமையாகும். விலக்குரிமை பெற்ற துறவிகளின் கண்காணிப்பில் நடைபெறும் இத்துறைப் பணிகளும் இவ்விதிக்கு விலக்காகா.
தேசியச் செயலகங்கள்
21. தேசிய அளவில் பயனுள்ள திருத்தூதுப் பணியாற்ற ஒன்றுபட்ட நோக்கமும் முயற்சிகளும் தேவையாதலால் அச்சு, திரைப்படம், வானொhலி, தொலைக்காட்சி ஆகிய துறைகளுக்கான தேசிய அலுவலகங்கள் எங்கும் நிறுவப்பட்டு அவற்றிற்கு எல்லா உதவிகளும் அளிக்கப்பட வேண்டும் என்று இத்திருச்சங்கம் தீர்மானித்து ஆணையிடுகிறது. இத்துறையைப் பயன்படுத்துதல் பற்றிக் கிறிஸ்தவர்கள் முறையான மனச்சான்றை உருவாக்க உதவுவதும் இத்துறையில் கத்தோலிக்கரின் முயற்சிகளை ஆதரிப்பதும் ஒழுங்குபடுத்துவதும் இவ்வலுவலகங்களின் கடமை.
ஒவ்வொரு நாட்டிலும் தனிப்பட்ட ஆயர் குழுவினர் அல்லது ஓர் ஆயர் இந்த அலுவலகங்களுக்குப் பொறுப்பேற்பர். கத்தோலிக்கக் கோட்பாட்டிலும் இத்துறையிலும் தேர்ச்சி பெற்ற பொது நிலையினருக்கு இவற்றில் இடம்தர வேண்டும்.
அனைத்துலக அளவிலான செயலகங்கள்
22. மேலும் இக்கருவிகள் நாட்டு எல்லைகளைக் கடந்து பயன் விளைவிப்பதாலும் எல்லா மனிதரையும் உலகக் குடிமக்களாக மாற்றுவதாலும் நாட்டு அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்துலக அளவிலும் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். எண் 21இல் குறிப்பிடப்பட்டுள்ள அலவலகங்கள் தங்கள் துறையைச் சார்ந்த அனைத்துலகக் கழகங்களுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும். இத்தகைய அனைத்துலகக் கத்தோலிக்கக் கழகங்கள் திருச்சபைத் தலைi9ம இடத்தால் மட்டுமே சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படும்; திருச்சபைத் தலைமை இடத்தையே சார்ந்திருக்கும்.
முடிவுரை
அருள்பணி சார்ந்த அறிவுரை
23. சமூகத் தொடர்புத் துறை பற்றி இத்திருச்சங்கம் வெளியிட்டுள்ள கோட்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் செயல்படுத்தத் திருச்சங்கத்தின் தெளிவான ஆணைப்படி எண் 19இல் குறிக்கப்பட்டுள்ள திருச்சபைத் தலைமை இடச் செயலகம் பன்னாட்டு வல்லுநர்களின் ஒத்துழைப்புடன் அருள்பணி சார்ந்த அறிவுரை ஒன்றை வெளியிட வேண்டும்.
இறுதி வேண்டுகோள்
24. இவ்வறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள கோட்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் திருச்சபையின் எல்லாமக்களும் ஏற்றுச் செயல்படுவார்கள் என இத்திருச்சங்கம் நம்புகிறது. சமூகத் தொடர்புக் கலையைப் பயன்படுத்துவதால் அவர்கள் தீமைக்கு உள்ளாகமல், உலகுக்கு உப்பாகச் சுவையூட்டி, ஒளியாக விளங்குவார்கள். மனிதச் சமுதாயத்தின் எதிர்காலம் இத்துறையைச் சரியாகப் பயன்படுத்துவதில் அடங்கியுள்ளமையால், மனித நலனுக்காகவே இதனைக் கையாளுமாறு நன்மனமுள்ள அனைவரையும், குறிப்பாக இத்துறையில் பொறுப்பு ஏற்றிருப்போரையும் இச்சங்கம் அழைக்கிறது. ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்'' (எபி 13:8) என்று திருத்தூதர் பவுல் வுறுவதற்கொப்ப, பழங்காலக் கலைச் செல்வங்களால் ஆண்டவரின் பெயர் அன்று புகழப்பட்டதுபோல, தற்காலக் கண்டுபிடிப்புகளாலும் அவர் பெயர் இன்று புகழ்பெறும்.
இவ்விதித் தொகுப்பில் கூறப்பட்டுள்ள யாவும், அவை ஒவ்வொன்றும், திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும், கிறிஸ்து நமக்கு அளித்துள்ள திருத்தூதர் ஆணையுரிமையால் வணக்கத்துக்குரிய தந்தையருடன் இணைந்து தூய ஆவியில் அவைகளை ஏற்றுக்கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிலைநாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டிய இவை யாவையும், கடவுளின் மாட்சிக்காகச் செயல்படுத்துமாறு ஆணையிடுகிறோம்.
| தூய பேதுரு பேராலயம் | பவுல். |
| உரோமை | கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் |
| டிசம்பர் 4, 1963 |
கீழே தந்தையரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.
