திருமுழுக்கு தரவு சேமிப்பு மென்பொருள் பதிவிறக்கம்.

 

அன்பின் வாழ்த்துக்கள்!

திரு. இராஜா மரிய அந்தோணி அவர்களின் சீரிய உழைப்பாலும் தாராள உள்ளத்தாலும் உங்களுக்கு இந்த "திருமுழுக்கு தரவு நிர்வகிப்பு" மென்பொருளை (Baptismal Database Management Software) இலவசமாக கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த மென்பொருளில், திருமுழுக்கு பதிவு, திருத்தம், தேடல், சான்றிதழ் அச்சிடுதல், வருடாந்திர, மாதாந்திர திருமுழுக்கு அறிக்கை (Report) மற்ற மென்பொருளிலிருந்து தரவுகளை இணைத்தல் ஆகிய பணிகளைச் செய்ய இயலும்.

நிறைகள், குறைகள், மாற்றங்கள் தேவைப்பட்டால் மின்அஞ்சல் மூலமாக தெரிவிக்கவும், அவைகள் கருத்தில் கொள்ளப்பட்டு இந்த மென்பொருள் மேம்படுத்தப்படும்.

விரைவில் இந்த மென்பொருளோடு திருமணத் தரவு நிர்வகிப்பும் சேர்த்து வழங்கப்படும்

நன்றி.
பணி. மரியதாஸ் லிப்டன்

குறிப்பு: 1. இந்த மென்பொருளை பயன்படுத்தும்போது தேவைக்கேற்ப அல்லது அடிக்கடி மற்ற சேமிப்பு ஊடகத்தில் (CD,DVD,or Pen Drive) நகல் (Backup) எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும். உங்கள் கணணி செயல்படாமல் போனோலோ அல்லது உங்கள் கணணியின் வண்தட்டு (Hard Disk) செயலிழந்தாலோ உங்கள் பங்கின் திருமுழுக்குத் தரவுகளை மீண்டும் மற்றொறு கணணியில் பொருத்த இயலும்.

2. பயனாளர் கடவுச்சொல், மற்றும் நிர்வாக கடவுச்சொல்லை (Administrator password) பத்திரப்படுத்திக்கொள்ளவும். தொலைந்துவிட்டால் மென்பொருளில் உட்புகுவது மிகமிகக் கடினம்.

3. இப்பக்கத்தில் உங்கள் பெயர், பங்கு, மறைமாவட்டம் ஆகிய தகவல்கள் கேட்கப்படுகிறது, எத்தனை பேர், எந்தெந்த பங்குகளில் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவே இதை கேட்கிறோம். சரியாக பூர்த்திசெய்து மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

நன்றி.

Your Name: *
Your Parish *
Your Diocese *

* Required Fields