insert text here

 

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா கணிக்கப்படும் முறை

 

 

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா:

உயிர்ப்பு பெருவிழா எவ்வாறு கணிக்கப்படுகிறது? உயிர்ப்புப் பெருவிழா யூதர்களின் சந்திரனை மையமாக கொண்ட காலண்டரில் சிசான் மாதத்தில்(வருடத்தின் முதல் மாதம்) வருகின்ற முழு நிலவுக்குப் பின் வருகின்ற முதல் ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படுகிறது. (இது மார்ச் மாதம் 20 நாளுக்குப் பின் வருகின்ற ஞாயிலிருந்து ஏப்பரல் மாதம் 25ஆம் நாட்களுக்குள் உட்பட்ட ஒரு ஞாயிறு). இவ்வகையான கணக்கீடு இயேசு கி.பி. 30ஆம் ஆண்டில் உயிர்ப்பு நாளில் ஏற்பட்ட முழு நிலவு நாளில் இன்றும் அமைய வேண்டும் என்றே இந்த கணக்கீட்டு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜுலியன் காலண்டர்:
கி.மு 46 ஆம் ஆண்டில் ரோமைப் பேரரசர் ஜுலியஸ் ஸுசர் அன்றைய வழக்கிலிருந்த ரோமன் காலண்டரை முறைப்படுத்தி புதிய காலண்டர் முறையை அறிவித்தார். இது ஜுலியன் காலண்டர் என்றழைக்கப்படுகிறது. இக்காலண்டர் முறைப்படி வருடத்திற்கு 365.25 நாட்கள். ஒவ்வொரு நான்காவது ஆண்டுக்கும் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள். (லீப் வருடம்).

கி.பி 325ஆம் ஆண்டு வானவியல் அறிஞர்கள் கூடி திருச்சபைக்காக நிசான் மாதத்தின் முழுநிலவு நாளைக் கணித்தார்கள். இக்கணக்கீட்டு முறை அப்போது பழக்கத்தில் இருந்த ஜுலியன் காலண்டர் பயன்படுத்தப்பட்டது. இந்த பட்டியலின்படி உயிர்ப்புப் பெருவிழா மார்ச் மாதம் 21 ஆம் நாளுக்குப்பின்னரும் (சூரியன் வடக்கு எல்லையை அடையும் நாள்), ஏப்ரல் மாதத்தில் 25ஆம் நாளுக்கு முன்னதாகவும் ஏதாவது ஒரு ஞாயிறில் அமையும்.

கி.பி 325ல் கணிக்கப்பட்ட அந்த பட்டியலில் ஆண்டுகள் செல்லச்செல்ல முழுநிலவு நாளுக்குப் பின் வரும் ஞாயிறில் உயிர்ப்பு பெருவிழா அமையவில்லை. உயிர்ப்புப் பெருவிழா தள்ளிப்போய்கொண்டிருந்தது. எனெனில் இந்த அனுகுமுறையானது ஜுலியன் காலண்டர் கணக்கீட்டுப்படி வருடத்தில் சரியாக 365.25 (முன்றுற்று அறுபத்து ஐந்தே கால்) நாட்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டது (இந்தப் பட்டியலின்படி முழுநிலவு நாட்களும் அன்றய நாளில் உண்மையிலேயே வந்த முழுநிலவு நாட்களும் முழுமையாக ஒத்து வரவில்லை 10 நாட்கள் வரை வித்தியாசம் வந்தது (100 ஆண்டுகளுக்கு 1 நாள் அதிகமாக)) .

கி.பி 1583ல் போப் 13ஆம் கிரகோரியார், லிலியுஸ், கிலேவியுஸ் வானவியல் வல்லுனர்களின் கணக்கீட்டுப்படி புதிய காலண்டர் முறையை அறிவித்தார். இந்த கிரகோரியன் காலண்டர் முறை தான் உலகெங்கும் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அச்சமையத்தில் (ஏற்கனவே வருடத்திற்கு 365.25 நாட்கள் என கணக்கிட்டதால் ஏற்பட்ட அதிக நாட்கள்) 1582ஆம் வருடத்தின் அக்டோபர் 5ஆம் நாள் முதல் 14ஆம் நாள் வரை 10 நாட்கள் நீக்கப்பட்டது. இதன் மூலம் முழுநிலவு நாள் 10 நாட்கள் பிந்தி வருவது சரிசெய்யப்பட்டது. ஒரு வருடம் என்பது 365.25க்கு பதிலாக 365.2422 நாட்கள் எனக் கணக்கிடப்படுகிறது. லீப் வருடத்தைக் கணக்கிட புதிய முறை கையயாளப்பட்டது.

கிரகோரியன் முறைப்படி லீப் வருடம் கணக்கிடும் முறை:

நூற்றாண்டுகளைத் தவிர்த்து எந்தவொரு ஆண்டும் நான்கிற்கு மீதமின்றி வகுபட்டால் அந்த ஆண்டு லீப் வருடம் (பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள்). ஆனால் எந்தவொறு ஆண்டும் நூற்றாண்டாய் இருக்கும் பட்ஷத்தில், அந்த ஆண்டு 400க்கு மீதமின்றி வகுபட்டால் மட்டுமே லீப் வருடம். (எடுத்துக்காட்டு : 1900 ஆம் ஆண்டு நான்கிற்கு மீதமின்றி வகுபட்டாலும் அது லீப் வருடமல்ல ஏனனில் அது 400க்கு மீதமின்றி வகுபடாது. ஆனால் 2000 வருடம் லீப் வருடம்).

இந்த கிரகோரியன் காலண்டர் முறையில் உயிர்ப்புப் பெருவிழா ( யூதர்களின் முதல் மாதமான நீசான் மாதத்தில் முழுநிலவுக்குப்பின் வருகின்ற ஞாயிறு ) 1583 முதல் 4099 ஆண்டுகள் வரை கணக்கிடப்பட்டுள்ளது.

உயிர்ப்பு ஞாயிறு பெருவிழா நாட்கள்:

2004 -

April 11

 

2014 -

April 20

2005 -

March 27

 

2015 -

April 5

2006 -

April 16

 

2016 -

March 27

2007 -

April 8

 

2017 -

April 16

2008 -

March 23

 

2018 -

April 1

2009 -

April 12

 

2019 -

April 21

2010 -

April 4

 

2020 -

April 12

2011 -

April 24

 

2021 -

April 4

2012 -

April 8

 

2022 -

April 17

2013 -

March 31

 

2023 -

April 9

 

 

 

 

 

 

 

 

Definition of Easter Sunday Date:
Easter Sunday is the Sunday following the Paschal Full Moon (PFM) date for the year.   In June 325 A.D. astronomers approximated astronomical full moon dates for the Christian church, calling them Ecclesiastical Full Moon (EFM) dates.   From 326 A.D. the PFM date has always been the EFM date after March 20 (which was the equinox date in 325 A.D.).

The Ecclesstical Full Moon dates slightly differs for the acual full moon dates AFM (Astoronomical Full Moon dates) For most Easter Sundays, the nearest Astronomical full moon date can be anything from 10 days earlier (over a week before) to 2 days later (on the Tuesday after Easter).

The aim of the Easter Dating Method is to maintain, for each Easter Sunday, the same season of the year and the same relationship to the preceding astronomical full moon that occurred at the time of his resurrection in 30 A.D.

Julian Calendar:
The Julian calendar was a reform of the Roman calendar which was introduced by Julius Caesar in 46 BC and came into force in 45 BC (709 ab urbe condita). It was chosen after consultation with the astronomer Sosigenes of Alexandria and was probably designed to approximate the tropical year, known at least since Hipparchus. It has a regular year of 365 days divided into 12 months, and a leap day is added to February every four years. Hence the Julian year is on average 365.25 days long. (Which is not exactly correct).

Gregorian calendar:
The Gregorian calendar is the most widely used calendar in the world today. It was first proposed by the Calabrian doctor Aloysius Lilius, and decreed by Pope Gregory XIII, after whom it was named. It is a reform of the Julian calendar.

The Julian calendar was replaced by the Gregorian calendar in October 1582 to re-align March 20 (and therefore Easter) with the seasons by removing 10 dates October 5 to 14, 1582 to bring the calendar back into synchronization with the seasons. The changes made by Gregory corrected the drift in the civil calendar which arose because the mean Julian calendar year (exactly 365 1/4 days) was slightly too long, causing the vernal equinox, and consequently the date on which Easter was being celebrated, to drift slowly forward in relation to the civil calendar and the seasons.

The Gregorian calendar system dropped adopted the following new leap year rule:
Every year that is exactly divisible by four is a leap year, except for years that are exactly divisible by 100; the centurial years that are exactly divisible by 400 are still leap years. For example, the year 1900 was not a leap year; the year 2000 was a leap year.

 

text