இறை அலைகள் - வழிபாட்டுப் பாடல்கள்

as

      இசையால் நாம் எதையும் வசப்பட வைக்கலாம்.
இணையத்தளங்களில் சந்திக்கும் இதயங்கள் கூட இசையால் ஆட்கொள்ளப்படுகின்றன.
அத்தகைய சிறப்புவாய்ந்த பாடல்களை நாம் திருவழிபாட்டிலும் பயன்படுத்தி
அனைவரையும் உற்சாகப்படுத்துவது நமது திருச்சபையின் தனிவரமாகும்.

திருவழிபாட்டுப் பாடல்கள் மக்களின் மனதில் நீங்காத
இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது உண்மை.
”திருப்பாடல்களையும், புகழ்பாக்களையும் ஆவிக்குறிய பாடல்களையும் நன்றியோடு
உளமாரப் பாடி கடவுளைப் போற்றுங்கள் (கொலோ 3:16) என்ற பவுலடியாரின் கூற்று
இன்றும் திருச்சபையின் பாரம்பரியமாக உள்ளது.

ஏறக்குறைய 100 ஆண்டுகளைக் கடந்து வரும் இனிமையான,
இறைபக்தி மிகுந்த அருமையான பாடல்களின் தொகுப்புதான் இந்த ”இறை அலைகள்”.
அன்று முதல் இன்றுவரை நாம் பாடிவரும் 1200 பாடல்கள் அனைத்தும்
தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் உலாவந்து
இறையருளின் முழுமையைப் பெற்றுத்தரும் என்பது திண்ணம்.

இறை அலைகள் வழியாக இறைநம்பிக்கை உறுதிப்படுத்தப்படட்டும். இறையருள் அலைஅலையாய் உலகமெங்கும் தவழட்டும்

அருட்பணி. க. மரிய ஆரோக்கியம் ச.ச. மற்றும் அருட்பணி. அகிலன் ச.ச.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு : www.bibleintamil.com இணையத்தளத்தில் 1200 பாடல் வார்த்தைகளோடு
1110 பாடல்களின் இசையும் தறவிறக்கம் செய்யும் வசதியோடு தரப்படுகிறது.
பாடல் வார்த்தைகளை தந்த பணி. அகிலனுக்கு நன்றி.