image

 

ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு

1. கிறிஸ்து ஆண்டவர் தமது பாஸ்கா மறைநிகழ்வை நிறைவு செய்ய எருசலேமுக்குள் நுழைந்ததைத் திரு அவை இன்று நினைவுகூருகின்றது. எனவே, ஆண்டவரின் இத்தகைய நுழைவு எல்லாத் திருப்பலிகளிலும் நினைவுகூரப்படும். முக்கிய திருப்பலிக்குமுன் பவனி அல்லது சிறப்பான வருகைச் சடங்கினாலும், மற்றத் திருப்பலிகளுக்குமுன் சாதாரண வருகைச் சடங்கினாலும் இது கொண்டாடப்படும். மக்கள் பெருமளவில் பங்கேற்கும் ஒரிரு திருப்பலிகளுக்கு முன்னும் பவனி இன்றிச் சிறப்பான வருகை வழிபாட்டை நடத்தலாம். !

பவனியோ சிறப்பான வருகையோ நடைபெறாத இடங்களில் அங்கு மெசியாவின் வருகை, ஆண்டவரின் பாடுகள் ஆகியவை பற்றிய இறைவார்த்தை வழிபாட்டையும் சனிக்கிழமை அல்லது (ஞாயிற்றுக்கிழமை மாலைத்திருப்புகழையும் நேரத்திற்கு ஏற்றவாறு கொண்டாடுவது விரும்பத்தக்கது.

எருசலேமுக்குள் ஆண்டவரின் நுழைவை நினைவுகூர்தல்
முதல் வகை: பவனி

2. பொருத்தமான நேரத்தில் மக்கள் கோவிலுக்கு வெளியே ஒரு சிற்றாலயத்தில் அல்லது தகுந்த இடத்தில் கூடுவார்கள். வெளியிலிருந்து கோவிலை நோக்கிப் பவனி செல்லும் நம்பிக்கையாளர் தம் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருப்பர்.

3. அருள்பணியாளரும் திருத்தொண்டரும் திருப்பலிக்கான சிவப்பு நிறத் திருவுடையை அணிந்து மற்றப் பணியாளர்கள் புடைசூழ மக்கள் கூடியுள்ள இடத்துக்கு வருவர். அருள்பணியாளர் திருப்பலி உடைக்குப் பதிலாக 'திருப்போர்வை' அணியலாம். பவனி முடிந்தவுடன் அதைக் கழற்றிவிட்டுத் திருப்பலி உடையை அணிந்துகொள்வார்.

4. இதற்கிடையில் கீழ்க்கண்ட பல்லவி அல்லது மற்றொரு பொருத்தமான பாடல் பாடப்படும்.


பல்லவி: மத் 21:9

தாவிதின் மகனுக்கு ஒசன்னா! ஆண்டவர் பெயரால்
வருகிறவர் ஆ - - சி பெற்றவரே! இஸ்ரயேலின் அரசரே,
உன்னதங்களிலே ஒசன்னா!
உன்னதங்களிலே ஒசன்னா!

5. பின்னர் அருள் பணியாளரும் நம்பிக்கையாளரும் சிலுவை அடையாளம் வரையும் பொழுது, அருள்பணியாளர் தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே" என சொல்கின்றார். பின்னர் அருள்பணியாளர் வழக்கம் போல மக்களை வாழ்த்துகின்ற இந்நாள் கொண்டாட்டத்தை அனைவரும் அறிந்து, அதில் ஈடுபாட்டுடன் பங்கெடுக் இவ்வார்த்தைகளால் அல்லது இவை போன்ற வார்த்தைகளால் சிற்றுரை நம்பிக்கையாளருக்கு அழைப்பு விடுக்கின்றார்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, தவக் காலத் தொடக்கத்திலிருந்தே, தவ முயற்சிகளாலும் பிறர் அன்புப் பணிகளாலும் நம் இதயங்களைத் தயாரித்தபின் இன்று நாம் ஒன்று கூடியுள்ளோம். இதனால் நம் ஆண்டவருடைய பாஸ்கா மறைநிகழ்வை, அதாவது ஆண்டவருடைய திருப்பாடுகளையும் உயிர்ப்பையும் உலகளாவிய திரு அவையோடு சேர்ந்து அறிவிக்கின்றோம். இப்பாஸ்கா மறைநிகழ்வை நிறைவேற்றவே அவர் தம் நகரான எருசலேமுக்குள் நுழைந்தார். எனவே மீட்பு அளிக்கும் இந்த நுழைவை நாம் முழு நம்பிக்கையுடனும் இறைப்பற்றுடனும் நினைவில் கொண்டு, ஆண்டவரைப் பின்செல்வோம். அவருடைய அருளினால் சிலுவையின் பங்கேற்பாளர்களாக மாறி, அவருடைய உயிர்ப்பிலும் வாழ்விலும் நாம் பங்குபெறுவோமாக.

6. சிற்றுரைக்குப் பின் அருள் பணியாளர் தம் கைகளை விரித்து, கீழுள்ள மன்றாட்டுகளுள் ஒன்றைச் சொல்கின்றார்:

மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, இக்குருத்தோலைகளை உமது X ஆசியால் புனிதப்படுத்தியருளும்; அதனால் கிறிஸ்து அரசரை அக்களிப்புடன் பின்பற்றும் நாங்கள் அவர் வழியாக நிலையான எருசலேமுக்குள் வந்து சேர ஆற்றல் பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.

அல்லது

மன்றாடுவோமாக.

இறைவா, உம்மை எதிர்நோக்கியிருப்போரின் நம்பிக்கையை வளர்த்து உம்மை வேண்டுவோரின் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருளும்; அதனால் வெற்றி வீரரான கிறிஸ்துவின் திருமுன் இன்று குருத்தோலைகளை ஏந்தி வருகின்ற நாங்கள் அவர் வழியாக நற்செயல்களின் பயன்களை உமக்கு அளிப்போமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில்: ஆமென். அருள்பணியாளர் அமைதியாகக் குருத்தோலைகள் மீது புனித நீரைத் தெளிக்கின்றார்.

7. ஆண்டவரின் நுழைவு பற்றிய நற்செய்தியை நான்கு நற்செய்திகளுள் ஒன்றிலிருந்து திருத்தொண்டரோ - அவர் இல்லையெனில் - அருள்பணியாளரோ பறைசாற்றுகின்றார். தேவைக்கு ஏற்பத் தூபம் பயன்படுத்தப்படலாம்.

முதல் ஆண்டு2017, 2020, 2023, 2026, 2029

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 21:1-11

இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, "நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும், அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், 'இவை ஆண்டவருக்குத் தேவை' எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார் என்றார். மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின்மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியின்மேல் அமர்ந்து வருகிறார்" என்று இறைவாக்கினர். உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஒட்டிக் கொண்டுவந்து, அவற்றின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர்.அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், "தாவீதின் மகனுக்கு ஒசன்னா ! ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர். உன்னதத்தில் ஒசன்னா" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, "இவர் யார்?" என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், "இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்" என்று பதிலளித்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

இரண்டாம் ஆண்டு : 2018, 2021, 2024, 2027

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 11:1-10

இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள். அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டிவைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், 'ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டால், 'இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பி விடுவார்' எனச் சொல்லுங்கள்" என்றார். அவர்கள் சென்று ஒரு வீட்டு வாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக்குட்டியைக் கட்டிவைத்திருப்பதைக் கண்டு, அதை அவிழ்த்துக் கொண்டிருக்கையில், அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், "என்ன செய்கிறீர்கள்? கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?" என்று கேட்டனர். அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர். பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார். பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலா வயல்வெளிகளில் வெட்டிய இலை தழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், ''ஒசன்னா! ஆண்டவா பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு ஆசி பெற்றதே! உன்னதத்தில் ஒசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அல்லது

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 12:12-16

அக்காலத்தில்
திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், "ஒசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவரும் இஸ்ரயேலின் அரசருமானவரும் ஆசி பெற்றவர்" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார். "மகளே சீயோன், அஞ்சாதே! இதோ உன் அரசர் வருகிறார்; கழுதைக் குட்டியின்மேல் ஏறி வருகிறார் என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார். அந்நேரத்தில் அவருடைய சீடர்கள் இச்செயல்களின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. அவரைப் பற்றி மறைநூலில் எழுதப்பட்டிருந்தவாறே இவையனைத்தும் நிகழ்ந்தன என்பது இயேசு மாட்சி பெற்ற பிறகே அவர்கள் நினைவுக்கு வந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மூன்றாம் ஆண்டு 2019, 2022, 2025, 2028

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19:28-40

அக்காலத்தில்
இயேசு முன்பாகவே எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார். அப்போது அவர் அவர்களிடம், "எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்: அதில் நுழைந்ததும், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், 'ஏன் அவிழ்க்கிறீர்கள்?' என்று கேட்டால், 'இது ஆண்டவருக்குத் தேவை' எனச் சொல்லுங்கள் என்றார். அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், "கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இது ஆண்டவருக்குத் தேவை" என்றார்கள். பின்பு அதை இயேசுவிடம் ஒட்டி வந்தார்கள். அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏறச் செய்தார்கள். அவர் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக்கொண்டே சென்றார்கள். இயேசு ஒலிவ மலைச் சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட அனைத்து வகை செயல்களுக்காகவும் உரத்த குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்:

" ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் ஆசி பெற்றவர்!
விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!" என்றனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, "போதகரே, உம் சீடர்களைக் கடிந்துகொள்ளும் என்றனர். அதற்கு அவர் மறுமொழியாக, "இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

8. நற்செய்திக்குப்பின் சுருக்கமான மறையுரை ஆற்றலாம். பவனியைத் தொடங்க அருள்பணியாளர் அல்லது திருத்தொண்டர் அல்லது பொதுநிலைப் பணியாளர் கமல் அல்லது இவை போன்ற வார்த்தைகளால் அழைப்பு விடுக்கின்றார்:

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவைப் புகழ்ந்து ஆர்ப்பரித்து மக்கள் திரளைப் போன்று நாமும் அமைதியுடன் புறப்படுவோம்.

அல்லது

அமைதியுடன் புறப்படுவோமாக.

அனைவரும் பதிலுரைக்கின்றனர்:

கிறிஸ்துவின் பெயரால். ஆமென்.

9. திருப்பலி கொண்டாடப்படும் கோவிலை நோக்கிப் பவனி வழக்கம் போலத் தொடங்குகின்றது. தூபம் பயன்படுத்தினால் புகையும் கலத்துடன் தூபபப
அத்தனால் புகையும் கலத்துடன் தூபப் பணியாளர் முன்செல்ல, பாயும் திரிகளைத் தாங்கும் இரு பணியாளர்களிடையே அந்தந்த இடத்தின் வழக்கத்துக்கு ஏற்பக் குருத்தோலைகளால் அணிசெய்யப்பட்ட சிலுவையைத் தாங்கிய பிடத் துணைவரோ பிற பணியாளரோ முன் செல்கின்றனர். அவர்களை அடுத்து நிறு
அவர்களை அடுத்து நற்செய்தி வாசக நூலைத் தாங்கிய திருத்தொண்டர், பிற பணியாளர்கள், அருள்பணியாளர் ஆகியோருக்குப்பின் குருத்தோலை ஏந்திய நம்பிக்கையாளர் அனைவரும் பின்தொடர்கின்றனர்.

பவனியின்போது, பாடகர் குழுவும் மக்களும் கீழ்க்கண்ட அல்லது கிறிஸ்து அர°°° புகழ்ந்தேத்தும் வேறு பொருத்தமான பாடல்களைப் பாடுகின்றனர்.

பல்லவி - 1

எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக்கிளைகளைப்
பிடித்தவராய் உன்னதங் க ளி லே
ஒசன்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர் கொண்டனரே.

தேவைக்கு ஏற்ப, இப்பல்லவியைத் திருப்பாடலின் அடிகளுக்கு இடையே பாடலாம்.

திருப்பாடல் 23

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;
நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
ஏனெனில் கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டவர் அவரே;
ஆறுகள் மீது அதை நிலைநாட்டியவரும் அவரே. பல்லவி


ஆண்டவரது மலையில் ஏறக் கூடியவர் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
கறைபடாத கைகளும் மாசற்ற இதயமும் உடையவர்;
பொய்யானவற்றை நோக்கித் தம் ஆன்மாவை உயர்த்தாதவர்;
வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர். பல்லவி

இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே;
யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவரே! இவரே போரில் வல்லவரான ஆண்டவர். பல்லவி

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
படைகளின் ஆண்டவர் இவர்; மாட்சிமிகு மன்னர் இவரே. பல்லவி

பல்லவி - 2

எபிரேயர்களின் சிறுவர் குழாம் வழியில் மேலுடைகள்
விரித்தவராய் உன்னதங்களிலே
ஒசன்னா ஆண்டவர் பெயரால் வருகிறவர்
ஆ - - - - சி பெற்றவர்
என் று முழங்கி ஆர்ப்பரித்தார்.

தேவைக்கு ஏற்ப, இப்பல்லவியைத் திருப்பாடலின் அடிகளுக்கு இடையே பாடலாம்.

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்:
அக்களிப்புடன் கடவுளுக்குக் குரலெழுப்பி ஆர்ப்பரியுங்கள்.
ஏனெனில் உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்;
உலகனைத்தின் மாவேந்தர் அவரே. பல்லவி

மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்;
அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார்.
நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்தளித்தார்;
அது அவர் அன்புகூரும் யாக்கோபின் மாட்சி ஆகும்.
ஆரவார ஒலியிடையே ஏறிச் செல்கின்றார் கடவுள்;
எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பல்லவி

பாடுங்கள், கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;
பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.
ஏனெனில் கடவுளே அனைத்துலகின் வேந்தர்; ஞானத்தோடு பாடுங்கள். பல்லவி

கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்;
அவர் தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார்.
மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்;
ஏனெனில் மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளுக்கு உரியவர்;
கடவுளே அனைத்துக்கும் மேலானவர். பல்லவி

கிறிஸ்து அரசருக்குப் பாடல்

பாடல் குழு:

கிறிஸ்து அரசே!
மீட்பரே! மாட்சி, வணக் கம், புகழ் உமக் கே;
எழிலார் சிறுவர் திரள் உமக் கு
அன்புடன் பாடினர்: ஒ சன் னா!

எல்.: கிறிஸ்து அரசே . . .

பாடல் குழு:

இஸ்ரயேலின் அரசர் நீர்,
தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்
ஆ - - சி பெற்ற அரசே நீர்
ஆண்டவர் பெயரால் வருகின்றீர்.

எல். : கிறிஸ்து அரசே! . ...

பாடல் குழு:

வானோர் அணிகள் அத்தனையும்
உன்னதங்களிலே உமைப் புகழ்க;
அழிவுறும் மனிதரும் படைப்பனைத்தும்
யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே.

எல். : கிறிஸ்து அரசே! ..

பாடல் குழு:

எபிரேயர்களின் மக்கள் திரள்
குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார்
வேண்டலும் காணிக்கையும் பாடலும்
கொண்டு உம்மிடம் இதோ வருகின்றோம். T .

எல். : கிறிஸ்து அரசே ! ...


பாடல் குழு:
பாடுகள் படுமுன் உமக்கவர் தம்
வாழ்த்துக் கடனைச் செலுத்தினரே;
ஆட்சி செய்திடும் உமக்கின்றே
யாம் இதோ இன்னிசை எழுப்புகின்றோம்.

எல். : கிறிஸ்து அரசே! . . .

பாடல் குழு:
அவர்தம் பக்தியை ஏற்றீரே,
நலமார் அரசே, கனிவுடை அரசே,
நல்லன எல்லாம் ஏற்கும் நீர்
எங்கள் பக்தியும் ஏற்பீரே.

எல். : கிறிஸ்து அரசே ....

10. பவனி கோவிலுக்குள் நுழைகையில் கீழுள்ள பதிலுரைப் பாடலையோ ஆண்டவரின் நுழைவைப் பற்றிய வேறு பாடலையோ பாடலாம்.

முதல்: ஆண்டவர் புனித நகரத்தில்
நுழைகையில் எபிரேயச் சிறுவர் குழாம்
உயிர்த்தெழுதலை அறிவித்தவராய்

பதில்: * குருத்து மடல்களை ஏந்தி நின்று
"உன்னதங்களிலே ஓசன்னா!'
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்.

முதல்: எருசலேம் நகருக்கு இயேசு வருவதைக் கேட்ட
மக்களெல்லாம் அவரை எதிர் கொண்டழைத்தனரே.

பதில்: * குருத்து மடல்களை . . .

11. அருள் பணியாளர் பீடத்தை அடைந்ததும் அதற்கு வணக்கம் செலுத்தியபின், கலவை என்பர் காயம் காட்டலாம், பின்னர் தம் இருக்கைக்குச் சென்று திருப்போர்வை! அணிந்திருந்தால் அதை அகற்றிவிட்டு திருப்பலி உடை அணிகின்றார். திருப்பலியில் தொடக்கத் திருச்சடங்குகளை, தேவைக்கு ஏற்ப, ஆண்டவரே, இரக்கமாயிரும்" தவிர்க்க விட்டு, திருப்பலியின் திருக்குழும மன்றாட்டைச் சொல்கின்றார். அதன்பின் வமச் திருப்பலி தொடர்கின்றது.

2-ஆம் வகை: சிறப்பு வருகை

12. கோவிலுக்கு வெளியே பவனி நடத்த முடியாதெனில், அந்நாளின் முக்கிய 2-பவிக்குமுன் கோவிலுக்கு உள்ளேயே சிறப்பு வருகையை நடத்தி ஆண்டவரின் நுழைவைக் கொண்டாடலாம்.

13. நம்பிக்கையாளர் கோவில் வாயில்முன் அல்லது கோவிலுக்குள் குருத்தோலைகளைக் கைகளில் ஏந்திக் கூடி நிற்கின்றனர். அருள்பணியாளரும் பிற பணியாளர்களும் நம்பிக்கையாளரின் பிரதிநிதிகள் சிலரும் திருப்பீட முற்றத்துக்கு வெளியே பெரும்பான்மையோர் பார்க்கக்கூடிய பொருத்தமான இடத்திற்கு வருகின்றனர்.

14. அருள் பணியாளர் மேற்கூறிய இடத்துக்கு வரும்போது, "தாவீதின் மகனுக்கு ஒசன்னா என்னும் பல்லவி அல்லது வேறு பொருத்தமான பாடல் பாடப்படும். பின் குருத்தோலைகளைப் புனிதப்படுத்துதலும், ஆண்டவர் எருசலேமுக்குள் நுழைந்ததைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றலும் (எண். 5முதல் 7 வரை குறிப்பிட்டுள்ளவாறு) நடைபெறும். நற்செய்திக்குப்பின் அருள் பணியாளரும் பிற பணியாளர்களும் நம்பிக்கையாளரின் பிரதிநிதிகளும் சிறப்பான விதத்தில் கோவிலின் வழியாகத் திருப்பீட முற்றத்துக்குப் பவனியாகச் செல்கின்றனர். அப்பொழுது "ஆண்டவர் புனித நகரத்தில் என்னும் பதிலுரைப் பாடல் (எண் 10) அல்லது பொருத்தமான வேறு பாடல் பாடப்படும்.

15. பீடத்தை அடைந்ததும், அருள்பணியாளர் அதற்கு வணக்கம் செலுத்திவிட்டு, தமது இருக்கைக்குச் செல்கின்றார். திருப்பலியின் தொடக்கத் திருச்சடங்குகளை, தேவைக்கு ஏற்ப - "ஆண்டவரே இரக்கமாயிரும் தவிர்த்துவிட்டு - திருக்குழும மன்றாட்டைச் சொல்கின்றார். அதன்பின் திருப்பலி வழக்கம் போலத் தொடர்ந்து நடைபெறும்.

3-ஆம் வகை: சாதாரண வருகை

16. இந்த ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு வருகை நடைபெறாத மற்றத்திருப்பலிகளிலெல்லாம் சாதாரண வருகையை நடத்துவதன் வழியாக, ஆண்டவருடைய எருசலேம் நுழைவு நினைவுகூரப்படும்.

11. அருள்பணியாளர் பீடத்துக்கு வரும்போது வருகைப் பல்லவி திருப்பாடலுடன் (எண் 18) பாடப்படும் அல்லது அதே கருத்துள்ள வேறு பாடலைப் பாடலாம். அருள்பணியாளர் பீடததை அடைந்தபின் அதை வணங்கி, தமது இருக்கைக்குச் சென்று, இறைமக்களை வாழ்த்துகின்றார். அதன்பின் திருப்பலி வழக்கம் போலத் தொடர்கின்றது.

வருகைப் பாடல் பாட முடியாத மற்றத் திருப்பலிகளில் அருள்பணியாளர் பீடத்தை அடைந்ததும், அதை வணங்கிய பின் இறைமக்களை வாழ்த்துகின்றார். பின் வருகைப் பல்லவியை வாசித்து வழக்கம் போலத் திருப்பலியைத் தொடங்குகின்றார்.


18. வருகைப் பல்லவி காண், யோவா 12:1,12-13; திபா 23:3-10

பாஸ்கா விழாவுக்கு ஆறு நாள் இருக்கையில்
ஆண்டவர் எருசலேம் நகருக்குள் வருகையில்
சிறுவர் அவரை எதிர்கொண்டனரே;
கைகளில் குருத்தோலை தாங்கி, அவர்கள்
பெருங்குரல் எழுப்பி ஆர்ப்பரித்தனரே:

* உன்னதங்களிலே ஒசன்னா!
இரக்கப் பெருக்குடன் வருகின்ற நீர்,
ஆசி பெற்றவரே!

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
படைகளின் ஆண்டவரே இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்:

* உன்னதங்களிலே ஒசன்னா!
இரக்கப் பெருக்குடன் வருகின்ற நீர், ஆசி பெற்றவரே!

திருப்பலி

19. பவனி அல்லது சிறப்பு வருகைக்குப்பின் அருள்பணியாளர் திருக்குழும மன்றாட்டைச் சொல்லித் திருப்பலியைத் தொடர்கின்றார்.

20 திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, தாழ்மையின் எடுத்துக்காட்டை மனித இனம் பின்பற்ற, எங்கள் மீட்பரை மனித உடல் எடுக்கவும் சிலுவையை ஏற்றுக்கொள்ளவும் செய்தீரே; அதனால் நாங்கள் அவரது பொறுமையைக் கற்றுக்கொண்டு அவரது உயிர்ப்பில் பங்கேற்கத் தகுதி பெறுமாறு எங்களுக்குக் கனிவாய் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

வாசகங்கள் :

முதல் ஆண்டு (2017, 2020, 2023, 2026) வாசகங்கள் as
இரண்டாம் ஆண்டு: (2018, 2021, 2024, 2027) வாசகங்கள்
as
மூன்றாம் ஆண்டு: (2019, 2022 2025, 2028) வாசகங்கள் as

தியானப்பாடல்: திருப்பாடல்: 22:8-9, 17-18, 19-20, 23-24


பல்லவி: என் இறைவா என் இறைவா ஏன் என்னை கை விட்டீர்

என்னைப் பார்ப்போர் எல்லோரும் என்னை ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கித் தலை அசைத்து
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் இவனை மீட்கட்டும்
தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும் என்கின்றனர் - பல்லவி

தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது
நாய்கள் என அவர்கள் என்னை சூழ்ந்து கொண்டார்கள்
என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்
என் எலும்புகளை யெல்லாம் நான் எண்ணிவிடலாம் - பல்லவி

என் ஆடைகளைகத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்
என் உடையின் மேல் சீட்டுப்போடுகிறனர்
நீரோ ஆண்டவரே என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்
என் வலிமையே எனக்கு துணை செய்ய விரைந்து வாரும் - பல்லவி

உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்
சபை நடுவே உம்மை புகழ்ந்து பாடுவேன்
ஆண்டவருக்கு அஞ்சுவோரே அவரைப் புகழுங்கள்
யாக்கோபின் மரபினரே அனைவரும் அவரை மாட்ச்சிமைப்படுத்துங்கள்
இஸ்ராயேல் மரபினரே அனைவரும் அவரைப் பணியுங்கள் - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்: பிலிப் 2:8-9

கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு,
அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி
எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

 

21. எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் ஆண்டவருடைய பாடுகளின் வரலாறு வாசிக்கப்படும். திருத்தொண்டர் அல்லது - அவர் இல்லை எனில் - அருள்பணியாளர் அதை வாசிக்கின்றார். வாசகர்களும் அதை வாசிக்கலாம்; ஆனால் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கூடியமட்டும் அருள்பணியாளரே வாசிக்க வேண்டும்.

பாடுகளின் வரலாற்றைப் பாடுமுன், திருத்தொண்டர்கள் மட்டும் மற்றத் திருப்பலிகளில் நற்செய்திக்குமுன் செய்வது போல் அருள்பணியாளரிடம் ஆசி பெறுவார்கள். மற்ற வாசகர்கள் இவ்வாறு செய்வதில்லை.

22. பாடுகளின் வரலாற்றுக்குப்பின் தேவைக்கு ஏற்பச் சுருக்கமான மறையுரை : பெறலாம். சிறிது நேரம் அமைதியும் இடம் பெறலாம். "நம்பிக்கை அறிக்கையும்" "பொது மன்றாட்டும்" சொல்லப்படும்.

23. காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் பாடுகளால் நீர் எம்மீது கொண்டுள்ள இரக்கம் நெருங்கி வருவதாக; எங்கள் செயல்களால் தகுதியற்றவர்கள் ஆயினும் இந்த ஒரே பலியின் ஆற்றலால் உமது இரக்கத்தை முன்கூட்டியே நாங்கள் கண்டுணர்வோமாக. எங்கள்.


24. தொடக்கவுரை: ஆண்டவருடைய பாடுகள்

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

மாசற்ற கிறிஸ்து பாவிகளுக்காகப் பாடுபடவும்
தீயோரின் மீட்புக்காக அநீதியாகத் தீர்ப்பிடப்படவும் திருவுளமானார்.
' அவரது இறப்பு எங்கள் பாவங்களைப் போக்கியது;
அவரது உயிர்த்தெழுதல் எங்களை உமக்கு ஏற்புடையவர்கள் ஆக்கியது.

ஆகவே நாங்கள் வானதூதர் அனைவரோடும் சேர்ந்து
உம்மைப் புகழ்ந்து போற்றி, அக்களித்துக் கொண்டாடி,
ஆர்ப்பரித்துச் சொல்வதாவது: தூயவர்.

25. திருவிருந்துப் பல்லவி மத் 26:42 தந்தையே, நான் குடித்தால் அன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படி ஆகட்டும்.

26. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, புனிதக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் நம்புவதை உம் திருமகனின் இறப்பினால் எதிர்நோக்கியிருக்கச் செய்த நீர் நாங்கள் நாடுவதை அவரது உயிர்ப்பினால் வந்தடையச் செய்வீராக. எங்கள்.

27. மக்கள்மீது மன்றாட்டு ஆண்டவரே,
உம்முடைய இந்தக் குடும்பத்துக்காக எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து துன்புறுத்துவோருக்குத் தம்மைக் கையளிக்கவும் சிலுவையின் கொடுமையைத் தாங்கிக்கொள்ளவும் தயங்கவில்லை; நீர் இக்குடும்பத்தைக் கண்ணோக்கி அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

=====================

 

 

 

image