St. Fulgentius St. Mary Mother of God St. Peter

ஜனவரி 1

கன்னி மரியாள் கடவுளின் தாய்

mary

கன்னி மரியாள் கடவுளின் தாய்

முதல் அன்பு தாயன்புதான். குழந்தை அறியும் முதல் நபர் தாய்தான். அனைத்து மக்களுக்கும் தாய் என்று திரு வவிலியம் ஏவாளைக்குறிப்பிடுகிறது. பாவம் செய்த காரணத்தினால் தாய்க்குரிய தகுதியை இழந்தாள் ஏவாள். அந்த தகுதியை பாவத்தின் தலையை நசுக்கிய பாவத்தை வென்றெடுத்த இயேசுவை ஈன்றெடுத்த அன்னை மரியாவுக்குக் கொடுத்தார். அதனால்தான் அன்னை மரியா ஆண்டின் முதல் நாளன்று கத்தோலிக்கத்திருச்சபையால் நினைவு கூறப்படுகிறார்.

விழாவின் பின்னணி:
விவலியப்பின்னணி: மரிய எலிசபத்தம்மாளைச் சந்தித்த பகுதி: லூக்கா 1:39-56 முடிய
என் ஆண்டவரின் தாய் தாய் என்னிடம் வர நான் யார்? 1:43 இயேசுவின் தாய் மரியா என்று பல்வேறு இடஙகளில் வருகிறது.

இறையியல் பின்னணி: 5ம் நூற்றாண்டில் மூவொரு கொள்கை பற்றித திருச்சபை விவலிய ஆய்வு செய்த காலம். அந்த கால கட்டத்தில் நொஸ்டோரியஸ் என்ற ஆயர் தப்பறைக் கொள்கை ஒன்றை வெளியிட்டு மக்களைக் குழப்பினார். அவர் கூற்று என்னவெனில் மரியா மனிதனாகப் பிறந்த இயேசுவின் தாய்தாய்தானே அன்றி கடவுளின் தன்மை கொண்ட இறை இயேசுவின் தாய் அல்ல என்று வாதிட்டார். இயேசுவிடம் இரு தன்மைகள் உண்டு. ஒன்று கடவுள் தன்மை. இரண்டாவது மனித தன்மை.அவற்றில் மனித தன்மையில் விளங்கிய இயேசுவின் தாய்தான் மரியா. கடவுளின் தன்மையில் விளங்கிய இயேசுவின் தாய் அல்ல என்பதே நொஸ்டோரியஸ் கூற்று.

இந்த சூழலில் மக்கள் குழப்பமடைந்தனர். தெளிவான முஎவெடுக்க எபேசு திருச்சங்கம் கூட்டப்ப்ட்டது.இந்த திருச்சங்கத்தின் திருத்தந்தையின் பகராளியாக அலெக்சாண்டிரியா நகரத்து ஆயரான சிரில் கலந்து கொண்டார்.431 ஆம் ஆண்டு எபேசு திருச்சங்கம் கூடியது. எபேசு திருச்சங்கத்தின் முடிவைக் கான மக்கள் அனைவரும் தீப்பந்தங்களுடன் எபேசுக்குச் சென்றனர்.எபேசு நகர் முழுவதும் ஒளி மயமாகக் காட்சியளித்தது. திருச்சங்கத்தில் தியோடோக்கஸ் என்ற கிரேக்க வார்த்தை பயன் படுத்தப் பட்டது.புனித சிரில் கடவுளின் தன்மை பற்றியும் மனிதனின் தன்மை பற்றியும் எடுத்தரைத்தார். இயேசு கடவுளின் மகனான இருக்கிறார். திருவிவிலியத்தில் பல்வேறு இடங்களில் இவற்றை நாம் காண முடியும்.காலத்தின் கட்டாயத்தினால் அவர் கன்னி மரியிடம் இருந்து பிறந்தார்.அவர் உண்மையாகவே மனிதர். யோவான் நற்செய்தி அவரது மனிதத் தன்மையை வெளிப்படுத்துகிறது. அவர் அழுதார் உணவு உண்டார் என்பன அதற்கு எடுத்துக்காட்டுக்கள். எனவே அவரது மனித இயல்பும் இறை இயல்பும் மனித இயல்பும் இரண்டறக் கலந்து விட்டன. அதனால் தான் வார்த்தை மனிதரானார் என்கிறோம்.கடவுள் மனிதரானதால் அன்னை மரியா கடவுளின் தாயாகிறாள். இதைத் திருச்சங்கம் இறுதிமுடிவாக ஏற்றுக் கொண்டது. நொஸ்டோரியஸ்; தப்பறை கண்டனத்துக்குள்ளானது. இந்த முடிவு அறிவிக்கப் பட்;டவுடன் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதன் அடையாளமாக அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உம்முடனே என்ற செபத்தை அர்ச்சியஷ்ட மரியாயே ஆண்டவரின் தாயாரே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் என்ற செபத்தைச் சொல்லி ஆர்ப்பரித்தனர்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபை என்ற தலைப்பில் அன்னை மரியாவை 12 முறை கடவுளின் தாய் என்றழைக்கிறது. 1953 ஆம் ஆண்டு 12ஆம் பயஸ் Fulgens radiatur என்ற சுற்று மடலில் மரியா கடவுளின் தாய் என்பதால் மட்டுமே அவரை எல்லா வரங்களாலும் முழுமையாக நிரப்பினார் என்று குறிப்பிடுகிறார்.

திருச்சபையில் அன்னை மரியா ஆண்டவருக்கு அடுத்தபடியாகவும், புனிதர்களுக்கெல்லாம் மேலான வணக்கத்துக்குரிவராகவும் கருதப் படுகிறார். திருவழிபாட்டில் அனைத்து நற்கருணை மன்றாட்டுகளிலும் அன்னை மரியா பெயர் இணைக்கப் பட்டுள்ளது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மரியாள் இறைவனின் தாய் என்ற விழாவைக் கொண்டாடும் நாம் அன்னை மரியாளிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. கீழ்ப்படிதல்
2. தேவையில் இருப்போருக்கு உதவும் நல்ல உள்ளம்
3. இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்தவள்

1. கீழ்ப்படிதல்
மரியாள் கீழ்ப்படிதலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. எவ்வாறெனில், வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றி, “மரியா, இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்” என்று (லூக் 1:31) சொல்கிறபோது, மரியாள் தொடக்கத்தில் தயங்குகிறாள். ஆனால் வானதூதர் அவளிடம் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னபிறகு, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று இறைவனின் மீட்புத் திட்டத்திற்கு கீழ்ப்படிந்து தன்னையே முற்றிலுமாகக் கையளிக்கிறார்.

பழைய ஏவாள் ஆண்டவர் கொடுத்த கட்டளையான ‘விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ணக்கூடாது’ என்பதற்குக் கீழ்படியவில்லை, அவள் பாம்பின் பசப்பு மொழியில் மயங்கி, விலக்கப்பட்ட கனியை உண்டு ஆண்டவர் கொடுத்த கட்டளைக்குக் கீழ்படியாமல் போனாள். அதனால் பாவம் இந்த உலகில் நுழைந்தது. ஆனால் புதிய ஏவாளாகிய மரியா ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள், அதனால் இந்த மண்ணுலகிற்கு மீட்பு உண்டாகக் காரணமாக இருந்தாள். நாம் கடவுளின் கட்டளைக்கு கீழபடிந்து நடக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் கூறுவார், “நீங்கள் அனைவரும் அவருக்குக் (கடவுள்) கீழ்ப்படிந்து அவரை அச்சத்தோடும் நடுக்கத்தோடும் ஏற்றுக்கொண்ட முறையை அவர் நினைவுகூரும்போது அவரது உள்ளம் உங்களுக்குக்காக மிகுதியாக உருகுகிறது”. ஆகையால் நாம் அன்னை மரியாவைப் போன்று இறைவனுக்குக் கீழ்படிந்து நடக்கின்றபோது இறைவனின் தயவு நமக்கு உண்டு என்பது உறுதி.

2. தேவையில் இருப்போருக்கு உதவும் நல்ல உள்ளம்

மரியாள் பிறருக்கு, தேவையில் இருப்போருக்கு உதவுகின்ற நல்ல உள்ளத்தைக் கொண்டவராக இருந்தார். கானாவூர் திருமண நிகழ்வாக இருக்கட்டும், பேறுகால வேதனையில் தவித்த எலிசபெத்துக்கு உதவச் சென்ற நிகழ்வாக இருக்கட்டும் மரியாள் தேவையில் இருப்போருக்கு உதவுவதில் தலைசிறந்தவளாக விளங்கினாள். நாம் ஒவ்வொருவரும் மரியாவைப் போன்று பிறருக்கு உதவவேண்டும் என்பதே நமக்கு முன்னால் இருக்கும் சவால்.

எப்படி உதவுவது?. தமிழில் நாம் சொல்லக்கூடிய “உதவி” என்ற வார்த்தையே நாம் எப்படி பிறருக்கு உதவவேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகிறது. (உ – உள்ளுணர்ந்து; வி- விரைந்து ; த- தன்னலமின்றி). நாம் உதவி செய்கின்றபோது உள்ளுணர்ந்து உதவிசெய்யவேண்டும். பிறர் கேட்டுத்தான் உதவி செய்யவேண்டும் என்பதில்லை. கேளாமல், நாமாகவே உள்ளுணர்ந்து உதவி செய்யவேண்டும். அதே நேரத்தில் விரைந்து உதவிசெய்யவேண்டும். ஒருவருக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது என்றால், அந்த நொடியிலே செய்யவேண்டும். பிறகு உதவி செய்துகொள்ளலாம் என்பது கூடாத காரியம். இறுதியாக நாம் செய்யும் உதவியை தன்னலமின்றிச் செய்யவேண்டும். ஒன்றைக் கொடுத்தால் இன்னொன்றைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்போடு செய்வது உண்மையான உதவியாகாது.

மரியாள் மேலே சொல்லப்பட்ட இரண்டு நிகழ்வுகளிலும் யாரும் கேளாமலே உள்ளுணர்ந்து உதவிசெய்தாள்; விரைந்து உதவி செய்தாள். அதேநேரத்தில் தன்னலமின்றியும் உதவி செய்தாள். அவளுடைய அன்புப் பிள்ளைகளாகிய நாமும் உள்ளுணர்ந்து, விரைந்து, தன்னலமின்றி உதவி செய்வோம்.

3. இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்தவள்

மரியாள் இறைவார்த்தைக் கேட்டு, அதன்படி நடந்ததற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. எவ்வாறெனில், ஒருமுறை மரியாள், தன்னுடைய சொந்தங்களோடு இயேசுவை சந்திக்கச் செல்கிறபோது, இயேசு, “யார் என்னுடைய தாய்?, யார் என்னுடைய சகோதரிகள்?” என்று கேட்டுவிட்டு, “விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்பார் (மத் 12:50). இங்கே மரியாள் இரண்டு விதங்களில் தாயாகின்றார். ஒன்று இயேசுவைப் பெற்றெடுத்தனால், இன்னொரு தந்தையின் திருவுளத்தின்படி நடந்ததினால். மரியாள் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவார்த்தையைக் கேட்டு, அதனை தன்னுடைய உள்ளத்தில் இருத்தி சிந்தித்து செயல்பட்டு வந்தாள். அதனால் அன்னை இறைவார்த்தையைக் கடைப்பிடித்து வாழ்வதில் நமக்கெல்லாம் முன்மாதிரி.

நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இறைவார்த்தையைக் கேட்கின்றோம். ஆனால் வாழ்வக்குவதில்லை; நம்முடைய வாழ்வில் செயல்படுத்துவதில்லை. தொடக்கநூல் 22:18 ல் ஆண்டவர் ஆபிரகாமைப் பார்த்துக் கூறுவார், “நீ என் குரலுக்கு செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசிகூறிக்கொள்வர்”. ஆம், நாம் இறைவனின் வார்த்தைக்கு செவிமடுத்து வாழ்கின்றபோது என்றுமே ஆசிர்வாதம்தான்.

அன்னை மரியாள் இறைவார்த்தையை வாழ்வாக்கினாள், நாமும் இறைவனின் வார்த்தையை வாழ்வாக்குவோம், இறைவனின் ஆசியை நிறைவாய் பெறுவோம். ஆகவே, மரியா இறைவனின் தாய் என்ற விழாவைக் கொண்டாடும் நாம், அன்னையை நமக்குக் கொடுத்த ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். அதேவேளையில் அன்னையிடம் விளங்கிய கீழ்படிதலை, பிறருக்கு உதவும் நல்ல பண்பினை, இறைவார்த்தையைக் கேட்டு, நடக்கின்ற பண்பை நமதாக்குவோம், ஆண்டவரின் அருளை நிறைவாய் பெறுவோம்.

சிந்தனை: உயிர் வாழவும் நன்மை செய்யவும் இப்புத்தாண்டைத் தந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் இன்னின்ன நன்மைகள் செய்வேன் என திட்டமிடுவோம். அவற்றைச் செய்தேனா என்று இரவில் நினைத்துப்பார்ப்போம். தவறுகள், குற்றங்கள் செய்திருப்போமெனில் மன்னிப்புக்கேட்டு இறைவனின் இரக்கத்தை மன்றாடுவோம.

செபம்: மரியாவின் மாசற்ற இருதயமே, இந்த ஆண்டில் என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். நாங்கள் உமது திருமகனின் பாதையில் வழிநடக்க உதவிசெய்யும்.

இறை வார்த்தை: அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர் (சீ.ஞா. 3:4)

St. Fulgentius St. Mary Mother of God St. Peter
image