St. Genevieve St. Kuriakose

ஜனவரி 3

புனித குரியாக்கோஸ் எலியா சவேரா

mary

mary

அருளாளார் குரியாகோஸ் எலியாஸ் சாவரா

உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன் (எரே. 1:19)

வாழ்ந்த காலம் : (1805-1871)
பிறந்த இடம் : இந்தியாவில் உள்ள கைநகரி
பாதுகாவல் : தடைகளிலிருந்து விடுதலை
நாமவிழா : ஜனவரி 3

வனப்பு மிகுந்த கேரளாவில் ஆலப்புளா அருகில் உள்ள கைனகரியில் 1805 பிப்ரவரி 10-ஆம் நாள் பிறந்தவர் குரியாகோஸ் எலியாஸ் சாவரா. ஆறு குழந்தைகளில் கடைக்குட்டியான இவருடைய பெற்றோர் சீரோ மலபார் திருச்சபையைச் சார்ந்த கத்தோலிக்கரான, குரியாகோஸ் மற்றும் மரியம் தோப்பில் ஆவர். தொடக்கக் கல்வியை இந்து ஆசானிடம் கற்ற இவர் குருவாகும் அழைத்தலுடன் பங்குத்தந்தையை அணுகி கத்தோலிக்க மறைபோதகம் கற்றுக்கொண்டார். தமது 13வது வயதில் 1818-இல் குருத்துவ பயிற்சியை ஆரம்பித்தார். 1829, நவம்பர் 29 அன்று தமது 24-ஆம் வயதில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

பங்குப்பணியாளராக சில காலம் மேய்ப்புப் பணியாற்றிய குரியாக்கோஸ் குருமடத்திற்குச் சென்று அவ்வப்போது கற்பிக்கவும் செய்தார். வெளிநாடுகளில் எத்தனையோ சபைகள் தோன்றி இருக்கின்றன. ஆனால் 18 நூற்றாண்டுகளாக கிறிஸ்தவம் வேரூன்றியுள்ள நம் நாட்டிலிருந்து ஒரு சபை கூட பிறக்கவில்லையே என்ற கவலையுடனும், புதிய சபையை நிர்மாணிக்கும் தொலைநோக்குப் பார்வையுடனும் சிந்தித்தார். அதே கனவுடன் இருந்த தமது குருமட அதிபர் பணி.மல்பன் தாமஸ் பலக்கல் மற்றும் பணி.மல்பன் தாமஸ் பொருக்காரா ஆகியோருடன் இணைந்து மன்னானம் பகுதியில் புதிய சபைக்கான முதல் வீடு கட்டும் பொறுப்பை 1831, மே 11-இல் ஆரம்பித்தார். விரைவிலேயே இரண்டு அருள் பணியாளர்களுடன் இணைந்து திருக்குடும்பத்தின் குரியாக்கோஸ் எலியா என்னும் பெயரில் துறவற வார்த்தைப்பாடு கொடுத்தார். அமல மரியின் கார்மெல் சபை உதயமானது.

சபையின் தலைவராக இருந்த குரியாக்கோஸ் தமது பன்முகப் பார்வையால் சீரிய திட்டமிடுதலால் திருச்சபையின் சிறந்த முன்னெடுப்பாளராக மாறினார். கேரள திருச்சபையில் பல பணிகளை முதலில் ஆரம்பித்தவர் இவரே. மண்ணின் மைந்தர்களைக் கொண்டே உருவான ஆண்களுக்கான முதல் துறவற சபை முதல் சமஸ்கிருதப்பள்ளி. இந்தியப் பெண்களுக்கான முதல் துறவு சபை, முதல் அச்சகம், கிழக்கு சிரிய திருச்சபையின் கட்டளைச் செப புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டது. மலபார் திருச்சபைக்கான நாட்காட்டி வெளியிட்டது. முதல் செப புத்தகம் மலையாளத்தில் வெளியானது போன்ற பல பணிகளுக்கு குரியாகோஸ் அரிச்சுவடியாய் இருந்தார்.

குரு மாணவர்களுக்கான பயிற்சி இல்லங்கள் மட்டுமல்லாமல் எல்லாருக்குமான தியான இல்லங்களை நிறுவினார். நாற்பது மணிநேர ஆராதனையை ஆரம்பித்தார். அனாதைகளாக விடப்பட்ட ஆதரவற்றவர்களைக் காக்க எங்கெல்லாம் கோவில்கள் கட்டப்பட்டதோ அதனோடு இணைந்து பள்ளிக்கூடங்கள் கட்டவும் ஆவன செய்தார். சமூக சேவை வழியாக இறைவனின் திருமுகத்தை எல்லாருக்கும் காண்பித்த குரியாகோஸ் கடவுளுடன் எந்நேரமும் இணைந்திருந்தார். எல்லாவற்றிற்காகவும் நன்றி கூறினார். தவறுகளுக்காக மனம் வருந்தினார்.

இவரது பணிக்காலத்தில் மார் தாமஸ் ரோக்கோஸ் என்பவர்தாம் திருத்தந்தையின் அதிகாரத்துடன் வந்திருப்பதாக பொய்யான பிரச்சாரத்தால் கேரள திருச்சபையில் பிளவை ஏற்படுத்த இருந்த வேளையில் இறைவனின் துணையோடும், தைரியத்தோடும் அவரை வெற்றி கொண்டார். கேரள திருச்சபையை இறைவழியில் வழிநடத்தினார்.

இவரின் ஆன்மீகத்தை நான்கு வகையாக குறிப்பிடுகின்றார்கள். 1. ஆணடவர் அளித்த எண்ணிலடங்கா ஆசிர்வாதங்களை நினைவுகூர்ந்தார். அதற்காக கடவுளின் அன்புத் தீயில் தன்னையே எரித்துக்கொண்டார். 2. தனது பாவங்கள், குற்றம் குறைகளை நினைத்துப் பார்த்தார். ‘கடவுளின் அன்பு இதயத்தைக் காயப்படுத்திவிட்டோமே’ என்று மனம் வருந்தினார். 3. கடவுளுக்கு விசுவாசமாக இல்லாவிட்டாலும் கடவுள் பல சிறந்த வரங்களை தமக்கு தந்திருப்பதாக நம்பினார். அதற்கு பதில்மொழியாக எப்போதும் கடவுளின் அன்பில் தன்னையே கரைத்துக் கொண்டார். 4. கணக்கிலடங்கா ஆசிர்வாதங்களும், சிறப்பு பரிசுகளும் கடவுளிடம் இருந்து பெற்றுக் கொண்டதால் கடவுளை அதிகமாக அன்பு செய்தார். தன்னையே கடவுளின் மக்களுக்கும், தன்னைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பணியாற்ற கையளித்தார்.

ஆன்மீக ஆற்றுப்படுத்துதலும், சமூக சேவையும் செய்த குரியாகோஸ் வாத நோயினால் துயருற்று 1871, ஜனவரி மூன்றாம் நாள் இறந்தார். இவரின் திருவுடன் முதலில் கூனமாவு புனித பிலோமினாள் ஆலயத்தில் புதைக்கப்பட்டது. பிறகு 1889இல் மன்னாகம் கொண்டுவரப்பட்டு துறவிகள் இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டது. திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இந்தியாவிற்கு திருப்பயணமாக வந்தபோது 1986 பிப்ரவரி எட்டு அன்று குரியாகோஸை அருளாளராக உயர்த்தினார். தொலைநோக்குப் பார்வையுடன் சாதிக்கத் துடிக்கும்போது... சாதிக்க வாய்ப்பிழந்து நிற்பவர்களுக்கு விளக்காகும்போது நாமும் அருளாளரின் பிள்ளைகளே! இறுதியில் 1871ஆம் ஆண்டு  ஜனவரி 3ஆம் நாள் தம் ஆன்மாவை ஆண்டவரிடம் ஒப்படைத்தார்.1889 இல்  மறு அடக்கம் செய்யப்பட்ட பின் அதிக புதுமைகள் செய்தார். இதைப் புனித அல்போன்சம்மா  நோய்வாய்ப் பட்ட போது புனித குரியாக் கோஸ் அடிகளிடம் வேண்டியதன் பயனாக நலன் பெற்றதாகதன் வாழ்க்கைக் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய புதுமைகளில் முக்கியமானது பிறவியில் ஊனமாகப்பிறந்த சிறுவன் கால் ஊன்றி நடந்த புதுமைதான். எனவே விரைவில் புனிதர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 1986 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் முத்திப்பேறு பட்டமும் 2015 ஆம்ஆண்டு திருத்தந்தை பிசான்சிஸ் அவர்களால் புனிதர் பட்டமும் கொடுக்கப் பட்டது.

image