St. John Neumann St. Simeon Stylite Bl. Marcelina Darowska Bl. Peter Bonilli

ஜனவரி 5

தூய ஜான் நியுமென்

mary

mary

தூய ஜான் நியுமென்

ஜான் நியுமென் பொகிமியா நாட்டில் 1811 மார்ச் 28இல் பிறந்தார். இவரது தந்தை ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர். தாய் செக் நாட்டைச் சார்ந்தவர். ஜான் நியுமென் இளம் வ பிலிப் மற்றும் ஆக்னஸ் நியுமனுக்குப் பிறந்த ஆறு பிள்ளைகளுள் இவர் மூன்றாமவராவார். யோவான் நெப்பமுசீன் என்னும் புனிதரின் பெயரைத் தமது மகனுக்கு இவரின் பெற்றோர் சூட்டினார்கள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது மாதிரி, சிறுவனான யோவான் தாயுடன் தவறாமல் கோவிலுக்குச் செல்லும் வழக்கத்தையும் அனைத்துச் செபங்களையும் பொருளுள்ள முறையில் செபிக்கும் பண்பையும் பெற்றிருந்தார். இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இவருக்கு முதல் நற்கருணையும், உறுதிப்பூசுதலும் வழங்கப்பட்டது. பீடச்சிறுவனாக இருந்தபோது, யோவான் தாம் பலிபீட உதவி செய்யும் நாள்களில் திருப்பலிக்கு முன்பாக நோன்பு இருந்து இறைப்பற்றுடன் பணி செய்தார். தாழ்ச்சியே புனிதத்தின் சிறந்த பண்பு என்பதை தமது சிறு வயது முதலே வாழ்ந்து காட்டினார். வாசிக்கத் தொடங்கிய நாள் முதலாக, நிறைய தேடி வாசிக்கும் ஆர்வம் மிகுந்திருந்த இவரை இவரது அம்மா, புத்தகப்புழு என்றும் புத்தகப் பைத்தியம் என்றும் கேலி செய்ததாக இவர் குறிப்பிட்டுள்ளார். இளம் வயதிலேயே தனித் திறமைகள் பல பெற்றிருந்தார். பல மொழிகளை கற்றறிந்திருந்தார்.

1831இல் இறை பணிக்காக தன்னை அற்பணிக்க முன்வந்து சார்லஸ் பர்டினான்டு பல்கலைக் கழகத்தில் தனது குருத்துவ படிப்பினை நிறைவு செய்தார். சிறப்பாகப் பயிற்சி பெற்ற இவர் தமது முன்மாதிரியாக வேற்றினத்தவர்களின் திருத்தூதர் புனித பவுல் மற்றும் அவருடைய அயராத நற்செய்திப்பணியை நினைவில் ஏற்றிக் கொண்டார். அருள்தந்தை ஃபிரடரிக் பராக்கா, வியோபோல்டு மறைபரப்பு சபையினருக்கு எழுதிய கடிதத்தினாலும் மிகுவும் ஈர்க்கப்பட்டார். பயிற்சி முடிந்தவுடன் குருத்துவ திருப்பொழிவுக்கான நாள் குறிக்கப்பட்டது. தனது குருத்துவப் படிப்பிற்குப் பின் 1835ல் குருவாக திருநிலைப்படுத்தப்பட இருந்த தருவாயில் அந் நாட்டிலுள்ள ஆயர் போதிய குருக்கள் இருப்பதால் யாரையும் திருநிலைப்படுத்தப்படப் போவதில்லை என முடிவெடுத்தார்.

அவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்ததால் நியுயார்க் பேராயர் 1836ல் இவரை குருவாக திருநிலைப்படுத்தி தமது மறைமாவட்டத்தில் குருவாக்கினார். நியுயார்க் மறைமாவட்டத்தில் முதல் பணித்தளமான பஃப்பலோ சென்றார். அங்கிருந்த அருள்தந்தை அலெக்ஸாந்தர் பாக்ஸ், “நகரம் அல்லது கிராமம் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றுங்கள்” என்று வாய்ப்பளித்தார். யோவான் தூரத்தில் உள்ள கிராமத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்றார். “என் ஆண்டவரே! ஏழ்மையிலும் அறியாமையிலும் உள்ள இளைஞன் நான். உமது மந்தைக்கு ஆயனாக நியமிக்கப்பட்டுள்ளேன். இவையுள் எவையும் தொலைந்துவிடாதபடிக்கு அருள்புரியும். அனைவரும் காப்பாற்றப்பட, அன்னை மரியா மீது மிகுந்த பற்றுக் கொள்ள நான் மக்களுக்காக வாழவும் தேவையெனில் சாகவும் கற்பியும். அன்னையே! தப்பறைகளை வெற்றிகொண்டவரே!! துன்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் செபித்தருளும். என் இயேசுவே! ஆன்மாக்களை உம்மிடம் கொண்டுவருவதைத் தவிர இந்த ஏழை படைப்பால் வேறு என்ன செய்ய முடியும்?” என்று செபித்தார்.

குறைந்த நேரமே தூங்கினார். பல மைல்கள் நடந்து பல்வேறு பண்ணைகளில் உள்ள விசுவாசிகளைச் சந்தித்தார். அப்பகுதியில்அமேரிக்காவிற்கு புதிதாக குடிபெயர்ந்து வந்த மக்களிடையே அதிகம் பணிசெய்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட பங்கில் பெறும்பாலும் பயணங்கள் அனேகம் மேற்கொண்டு திருப்பலி நிறைவேற்றினார். நோயாளிகளை சந்தித்தார் மறைக்கல்வி சென்றவிடமெல்லாம் போதித்தார். சென்றவிடமெல்லாம் வீடுகளிலேயே பள்ளிகள் நடத்தி கல்வியறிவை வந்த மக்களுக்குக் கொடுத்தார். நான்கு வருடங்களுக்குப் பின் ஏழைகளுக்கும் கைவிடப்பட்டோருக்கும் அதிகமாக பணிசெய்யும் உலக மீட்பரின் சபையில் (Redeptorists) சேர்ந்து பணிசெய்தார். பின்னர் பிட்ஸ்பெர்க், பால்டிமோர் பகுதிகளில் பங்குக் குருவாக, மறைபணியாளராக, பலஇடங்களில் பணிசெய்தார். இவர் ஆற்றலோடும், வல்லமையோடும், முழு ஈடுபாட்டுடனும் செய்த பணிகளால் 1852ஆம் ஆண்டில் பிலடெல்பியா மாகாணத்தின் முதல் ஆயராக 41 வயதில் நியமிக்கப்பட்டார்.

முதல் பணியாக அநேகமாக எல்லா பங்குகளிலும் பங்கு பள்ளிக்கூடங்களை உருவாக்கினார். மிகக் குறைந்த காலத்தில் 100 ஆலயங்களையும் 80 பள்ளிகளையும் தமது மறைமாவட்டத்தில் நிறுவினார். அனைத்து கத்தோலிக்கப்பள்ளிகளையும் ஒருங்கிணைத்தார். ஏழை மக்கள் மீது பரிவிறக்கம், நேசமும் கொண்டிருந்தார். புதிதாக அமேரிக்காவில் குடியேறியவர்களுக்கு வேண்டிய அடிப்படை உதவிகள் செய்தார். அதற்காக பல மொழிகளை கற்றுத் தெரிந்திருந்தார். மறைமாவவட்டத்தில் அனேக சமூக சேவை நிறுவனங்களை நிறுவினார். தானும் எழிமையாக வாழ கற்றுக் கொண்டார்.

1860 ஜனவரி 5ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார். திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட் 1921ல் வணக்கத்துக்குரியவராக அறிவித்தார். திருத்தந்தை ஆறாம் பவுல் ஜுன் 19, 1977ல் புனிதர் நிலைக்கு உயர்தினார். புனித யோவான் நெப்பமுசீன் நியுமன், புனிதர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்கர் மற்றும் முதல் அமெரிக்க ஆயராவார்.

இறை வார்த்தை: சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்ளும் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார் (மத். 18:5)

St. John Neumann St. Simeon Stylite Bl. Marcelina Darowska Bl. Peter Bonilli
image