St. Gudula St. Laurence St. Severinus St. Angela

ஜனவரி 8

புனித செவரின் -482

mary

புனித செவரின் -482

இளமைப்பருவத்தைப் பற்றித்தெளிவான விளக்கங்கள கிடைக்கப் பெறாத புனிதர்களில் இவரும் ஒருவர். ஒரு  சில எழுத்தாளர்கள் இவரைத் தெற்கு இத்தாலியைச்சார்ந்தவர் என்றும் சிலர் உரோமையைச் சார்ந்தவர் என்றும் கூறுகின்றனர். இவரின் எழுத்துக்கள்  மொழி நடை இவரை உரோமையைச் சார்ந்தவர் என்று சான்று பகர்கின்றது.
இவர்  பிற்காலத்தில் நோரிக்கும் பகுதியில் நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்தவர் என்பது எல்லாரும் ஏற்றுக்;கொள்கின்ற பொதுவான செய்தியாகும். தொடக்க கால கட்டத்தில்  அந்த இடத்தில்  நற்செய்திக்காகச் சென்ற போது கடுமையான் எதிர்ப்பு இருந்தது. அப்போது அவர் வேதனையில் “இந்த பகுதிக்கு கடவுளின் ;தண்டனை வரும்” என்று மன வேதனையில் கூறி விட்டு  கெய்ன்பர்க் பகுதிக்குச் சென்று விட்டார்.

அவர் சொன்ன இறைவாக்கு உண்மையானது. குணர்கள் என்ற முரட்டுக கூட்டத்தினர்  அந்த பகுதியை சூரையாடினர்.  அந்த பகுதி முழுவதும் கடுமையாகத்தாக்கப் பட்டது.  பலர் அழிவின் விளிம்பிற்கே சென்றனர். இதனால் மக்கள் அழைத்து தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எண்ணம்  பலருக்கும் ஏற்பட்டது.  அதன் விளைவாக இவர் சிவப்புக் கம்பளம் விரித்து வரவழைக்கப்பட்டார்.

டான் டியூப்  ஆற்றங்கரையில் பவியானா என்ற நகர மக்கள் பஞ்சத்தாலும் பசியாலும் வாடிய போது  புனித செவரினின் கடும் செபமும் தவமும்  கடவுளின் இரக்கத்தைப் பெற்றுத்தந்தன. பணக்காரப் பெண் ஒருத்தி தன்னிடம் இருந்த அனைத்துப்பொருட்களையும்  மக்கள் அனைவருக்கும் வாரி வழங்கினார். மக்கள் மனமகிழ்ந்தனர். மேலும் அந்த பகுதியில் பல ஆற்றல் மிகு செயல்களைச் செய்தார்.  அடிமைகளை விடுவித்தார்;. நோயாளிகளைக் குணப்படுத்தினார். வரவிருந்த ஆபத்தை தடுத்து நிறுத்தினார்.
புனித செவரின் சமாதானத்தின் தூதர் என்று அழைக்கப் பட்டார். அந்த பெயருக்கேற்ப வாழ்ந்தார்.       சண்டை சச்சரவுகள் இருந்த இடத்திற்குச் சென்று அங்கு அமைதியை ஏற்படுத்துவதில்  ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.

இவர் பணிகளைக் கண்ட மக்கள் புனித செவரின் ஆயராக வேண்டும் என்ற தங்கள் ஆவலைத் தெரிவித்தனர் ஆனால் அதற்கு புனித செவரின் மறுத்து விட்டார். ஆயர் பொறுப்பு தன் மேய்ப்புப்பணிக்கு இடையூறாக மாறி விடுமோ என்று அஞ்சினார்.
காசா பவியானா போன்ற பகுதிகளில்  துறவு மடங்களை நிறுவினார். பல நேரங்களில்  இவர் ஒரு முறை மட்டுமே உணவு உட்கொண்டார். பாதத்திற்கு செருப்பு கூட அணிய வில்லை. பல அரசர்கள்  உயர் குடும்பத்தைச்சர்ந்தவர்கள் அனைவரும் இவரது தவ வாழ்வைக் காண புனித செவரின் இருப்பிடம் நோக்கி வந்தனர். ஆனால் அவர் வாழ்ந்த இருப்பிடத்தைக் கண்ட அவர்கள் திகைத்தனர். காரணம் அவர்  வாழ்ந்த இடம் ஒரு குடிசை. அந்த குடிசைக்குள் செல்லவும் அமரவும்  எழவும் மிகச் சிரமமாக இருந்தது.
தம் சாவை புனித செவரின் முன்னறிவித்தார். தாம் முன்னறிவத்தபடியே 482 ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் நாள் தம் ஆன்மாவைக் கடவுளிடம் ஒப்படைத்தார். அவருடைய இறுதி வார்த்தை அனைத்து உயிர்களே ஆண்டவரைப் புகழுங்கள்.

இறை வார்த்தை: பசித்திருப்போருக்காக உனனையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும் (எசா. 58:10)

தொகுப்பு: அருட்பணி. சந்தீஸ்டன்

St. Gudula St. Laurence St. Severinus St. Angela
image