St. Adrian St. Julian

ஜனவரி 9

புனித ஏட்ரியான் (709)

mary

mary

புனித ஏட்ரியான் (709)

காந்தர்பரி நகரத்துக்குப் பெருமை சேர்த்தவர், உளவாளி என்று பொயக்குற்றம் சாட்டப்பட்;வர், பேராயர்பதவிக்குப் பரிந்துரைக்கப் பட்டவர், இங்கிலாந்து நாட்டின் விடிவெள்ளிகளில் ஒருவர் யார்?

புனித ஏட்ரியான்

புனித ஏட்ரியான் ஆப்பரிக்காவில் பிறந்தார். இத்தாலி நாட்டில் உள்ள புனித பெனடிக்ட் துறவற மடத்தில் இவர் சேர்ந்தார்.  புனித ஏட்ரியான்  ஒழுக்கம் தவ வாழ்வு கராணமாக தலைமைப் பொறுப்பு அவரைத் தேடி வந்தது.  அந்த பொறுப்பில் ஏட்ரியான் தம் அன்பையும் அறிவையும் வெளிப்படுத்தினார். அப்போது திருத்தந்தையாக இருந்த புனித விட்டாலியன் ஏட்ரியான்  காந்தர் பரி நகர பேராயர்  புனித டேயுஸ்ட்டல் பணி நிறைவு பெற்ற பின்  அப்பொறுப்பை ஏட்ரியான் ஏற்க விரும்பினார். ஆனால் அதற்குத் தனக்குத் தகுதியில்லை என்று கூறி மறுத்து விட்டார்; ஏட்ரியான். மாறாக தியோடர் என்பவரைப் பரிந்துரைத்தார் ஏட்ரியான்.  அவருக்கு ஆலோசகராக ஏட்ரியான் இருந்தார்.

உரோமையி;ல் 668 ஆம் ஆண்டு தியோடர் பேராயாராக திருநிலைப் படுத்தப்பட்டார்.  பிரான்ஸிலிருந்து  இங்கிலாந்துக்குச்சென்ற  போது பேராயரும் ஏட்ரியானும்  வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது  ஏட்ரியான் மீது உளவாளி என்று தவறான குற்றச்சாட்டை சுமத்தினர். 2 ஆண்டுகள் அவர்கள் காவலில் வைக்கப் பட்டார். அவர் மேல் எந்த குற்றமும் இல்லை என்று உறுதியான உடன்  அவர் விடுவிக்கப் பட்டார். இங்கிலாந்து சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. புனித பீட்டர் துறவு மடத் தலைமைப் பொறுப்பு அவருக்காகக் காத்திருந்தது. வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொண்டார். புனித பீட்டர் துறவு மடத்தை நிறுவியர் புனித அகஸ்டின். ( அவர் மோனிக்கம்மாளின் மகனான கிப்போ நகரத்து அகஸ்டின் அல்ல. காந்தர் பரி நகரத்து  அகஸ்டின் ஆவார். அந்த துறவு மடம் பிறகாலத்தல் புகழ் பெற்ற கல்வி நிறுவனமாக  மாறியது.) அதன் பொறுப்பை ஏட்ரியான் ஏற்றுக் கொண்ட பின்  பல்வேறு இடங்களில் கல்விச் சாலைகளை அமைத்தார். அதன் விளைவாக் அறிவுச் சோலை  மணம் வீசியது.
இந்த கல்விசாலைகளிலருந்துதான் ஜெர்மன் நாட்டிற்கு  8ஆம் நூற்றாண்டில் விசுவாசத்தளர்ச்சி ஏற்பட்ட போது   மறை பணியளர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் விசுவாத்தைத் தூக்கி நிறுத்தினர். 

இறுதியாக உழைப்பின் களைப்பின் மிகுதியால்  709ஆம் ஆண்டு  ஜனவரி ஆம் நாள் தம் ஆன்மாவைக் கடவுளிடம் ஒப்படைத்தார். இவரது கல்லறை காந்தர் பெரி பேராலயத்தில் உள்ளது.

இறை வார்த்தை : நாமும் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும் (யோவா. 17:11)

தொகுப்பு: அருட்பணி. சந்தீஸ்டன்

St. Adrian St. Julian
image