St. Margaret St. Prisca St. St.Emily de Vialar

ஜனவரி 18

புனித ஹங்கேரி மார்க்கரேட்

mary

mary

புனித ஹங்கேரி மார்க்கரேட் (1242 - 1270) கன்னி

பிறந்த இடம் : ஹங்கேரி
திருநாள் : சனவரி 18
பாதுகாவல் : தைரியம்

:
உலகத்தின் எல்லா ஆடம்பரங்களையும் பெற்ற ஒரு இளவரசியாய்ப் பிறந்தவர் மார்க்கரேட். ஆனால் எளிமையான ஒரு துறவியாக வாழ அவள் விரும்பினாள். ராணுவ ஆட்சியின்போது ஹங்கேரியின் அரசராயிருந்த அரசர் நான்காம் பேலா-தான் அவளது தந்தை. அவள் பிறந்தவுடனேயே அவளது பெற்றோர்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டால் அவளைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதாக வேண்டியிருந்தனர்.
பேலா வெற்றி பெற்றார். தனது 3ம் வயதில் மார்க்ரேட் டோமினிக் சபை கன்னியர்களுடன் வாழ அனுப்பப்பட்டாள். சிறிது காலத்திற்குப் பின் அவளது தந்தை அவளுக்கென்று ஒரு துறவற மடத்தை தான்யூப் ஆற்றின் தீவில் கட்டிக் கொடுத்தான்.
அழகான இளம்பெண்ணாக அவள் வளர்ந்தபோது யோயோமியாவின் அரசரான ஓட்டோகார் அவளை மணக்க விரும்பினார். ஆனால் அவள் துறவற வாழ்வையும், துறவற மடத்தையும் விட்டு வருவதற்குப் பதிலாக தனது மூக்கையும் உதடுகளையும் வெட்டிக்கொள்வேன் என்று பயமுறுத்தினாள்.

பணிச்சிறப்பு :
தனது 13ம் வயதில் மார்க்ரேட் வார்த்தைப்பாடு எடுத்தார். இளவரசி என்பதனால் அவர் அங்கு சிறப்பாகக் கவனிக்கப்பட்டாள். ஆனால் அச்சிறப்புக்களையெல்லாம் அவள் மறுத்துவிட்டாள். மிகவும் எளிமையான தாழ்ச்சியான வாழ்வு வாழ்ந்தாள். தனது உடைகளை ஒருபோதும் சுத்தம் செய்யாமல் - பிறர் தன் அருகில் வர முகம் சுழிக்கும் துறவற வாழ்வை மேற்கொண்டார். தபசு காலத்தில் பிற கன்னியர்கள் அவளது உடல் நலம் குறித்துக் கவலைப்படும் அளவிற்கு நோன்பிருந்தார்.
தன்னுடைய புதுமையினால் வேலைக்காரப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாள். ஷஷஅவள் நல்லவள், மிகவும் புனிதமானவள். பணிப்பெண்கள் எங்களைவிட அவள் மிகவும் தாழ்மையானவள் ஷஷ என்று அந்த பணிப்பெண் கூறுகிறாள். தனது 28ம் வயதில் மார்க்ரேட் இறந்தாள்.

செபம் :
ஆண்டவரே எங்கள் தந்தையே! நம் திருச்சபையின் அருட்கன்னியர்களைப் பாதுகாத்தருளும். உமக்காக அவர்கள் செய்யும் அர்ப்பணங்களை எண்ணி அவர்களை மதித்து வாழ எமக்கு உதவும். அவர்கள் தங்களையே உமக்கென ஒப்புக்கொடுத்தவர்கள். எங்களை வழிநடத்தவும் உதவவும் இருப்பவர்கள் என்பதை எங்களுக்கு உணர்த்தியருளும். உமது பணியைத் தொடரும் தைரியமும் உமது பிள்ளைகளாயிருக்கும் அருளும் அவர்களுக்குக் கொடுத்துக் காத்தருளும். ஆமென்.

St. Margaret St. Prisca St. St.Emily de Vialar
image