St. Ildephonsus St. John St. Emerentiana

ஜனவரி 23

புனித எமரென்ஸியானா

mary

புனித எமரென்ஸியானா

வயிற்றுப்பிரச்னை உள்ளவர்களின் பாதுகாவலர்

நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். (எபே:1:4)
எமரென்ஸியானா மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் கன்னியும், மறைசாட்சியுமாவார். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எந்த அளவு துயரமான சூழலி;ல் வாழ்ந்தார்கள் என்பதற்கு இவரின் வாழ்வு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
புனித ஆகனஸ் மற்றும் எமரென்ஸியானா இருவரும் சமகாலத்தவர்களாவர். புனித ஆகனஸ், கிறிஸ்தவத்திற்கு எதிரானவர்களின் குரலுக்குக் கீழ்ப்படிய மறுத்துத் துணிவுடன் நின்றார். உரோமை தெய்வத்தை வணங்காமல் உண்மை இறைவனின் மீதும் தம் பற்றினை அதிகரித்தார்.

ஆட்சியாளர்களின் கொடூர இச்சைக்கு இணங்க மறுத்தார். இவை அனைத்திலும் கொலை செய்யப்பட்டார். இந்த உன்னதமான புனிதையின் வளர்ப்புத் தங்கையாகும் பெரும் பேற்றினை எமரென்ஸியானா பெற்றிருந்தார்.
கிறிஸ்தவ மறையை ஏற்றுக்கொண்ட எமரென்ஸியானா திருமுழுக்குப் பெறுவதற்கு தன்னையே தயார் செய்து கொண்டு இருந்த காலத்தில்தான் புனித ஆகனஸ் கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்ததும் தன்னை ஆன்மீக வாழ்விலும், நல வாழ்விலும் பயற்றுவித்த சகோதரியின் இழப்பைத் தாங்க முடியாமல் எமரென்ஸியானா தவித்தார்: துயருற்றார்: செபிப்பதற்காக புனித ஆக்னசின் கல்லறைக்குச் சென்றார்: முழந்தாள் படியிட்டு உருக்கத்துடன் அழுது புலம்பி மன்றாடிக் கொண்டிருந்தார்.

கிறிஸ்தவர்களைக் கண்டாலே குதறி எடுத்த கயவர்கள் கல்லறையில் முகம் புதைத்துக் கிடந்தளைப் பார்த்தார்கள். அவள் கிறிஸ்தவளே என்று அறிந்து கொதித்தார்கள். ஓடிச்சென்று அவளின் உயிரைப் பறித்தார்கள். நீரினால் திருமுழுக்குப் பெற தயாரித்துக் கொண்டிருந்த எமரென்ஸியானா இரத்தத் திருமுழுக்குப் பெற்று இறைவனின் ஈடு இணையற்ற சீடத்தியானார்.

நம்மை வளர்த்தெடுக்கும் நல்லவர்களின் நலமான பண்புகளை நம் பழக்கமாக்கும் போது அதுவே நமது வாழ்வின் வழக்கமாகிவிடும்.

image