St. Bridgit St. Henry Morse

பிப்ரவரி 1

புனித ஹென்றி மோர்ஸ்

mary

புனித ஹென்றி மோர்ஸ்

ஊக்கம் கொள்ளுங்கள்: பணியைத் தொடருங்கள்: ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன். (ஆகா 2:4)

இங்கிலாந்து நாட்டில் சஃப்கோக் நகரில் புராட்டஸ்டான்ட் கிறிஸ்தவ பெற்றோருக்கு 1595ஆம் அண்டு பிறந்தவர் ஹென்றி மோர்ஸ். மிகவும் பக்தியான குடும்பத்தில் பிறந்த இவர் கேம்பிரிட்ஜில் உள்ள கார்புஸ் கிறிஸ்தி கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். தமது 17ஆம் வயதில் சட்டம் படிப்பதற்காக லண்டன் சென்றவர் கத்தோலிக்க மறையின் விசுவாசக் கோட்பாடுகள் மீது ஈர்ப்புக் கொண்டார். அதைப் பற்றி நிறைய தேடி வாசிக்க ஆரம்பித்தார். உண்மை மறையைக் கண்டுகொண்டவராக 1614ஆம் ஆண்டு திருமுழுக்குப் பெற்று கத்தோலிக்கக் கிறிஸ்தவரானார்.

இங்கிலாந்து திரும்பியவுடன் குருமடத்தில் இணைந்து பயிற்சி பெற்று குருவாக வேண்டும் என்று முடிவெடுத்து கப்பலில் ஏறினார். கப்பல் இங்கிலாந்து துறைமுகத்திற்கு வந்தது. அங்கிருந்த அதிகாரிகள் “கப்பல் பயணிகள் அனைவரும் இங்கிலாந்து அரசரின் ஆங்கிலிக்கன் திருச்சபை அதிகாரத்தைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாக உறுமொழி அளிக்க வேண்டும்” என்றனர். பலரும் உறுதிமொழி அளித்தார்கள். ஆனால் புதிதாக கத்தோலிக்க மறையைத் தழுவிய ஹென்றி “உரோமை ஆயருக்கே தமது தலை மரியாதை செலுத்தும்” என்று கூறி மறுத்து விட்டார். கோபம் கொண்ட அதிகாரிகள் ஹென்றியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையான ஹென்றி உரோமைக்குச் சென்றார். 1623இல் அங்கே குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அங்கிருந்து இங்கிலாந்து திரும்புமுன் அகில உலக இயேசு சபைத் தலைவரைச் சந்தித்து தன்னை இயேசு சபையில் சேர்த்pதுக் கொள்ளுமாறு வேண்டினார். வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட தலைமை அருள்தந்தை “இங்கிலாந்திற்குச் செல்லுங்கள் அங்கு நீங்கள் சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள்” என்று உறுதியளித்தார். அதன்படி இங்கிலாந்து திரும்பிய ஹென்றி அங்கிருந்த இயேசு சபைத் தலைவரைச் சந்தித்து சபையில் சேர்ந்து கொண்டார்.

நவதுறவியாக பயிற்சியை ஆரம்பித்தார். நியூகேசில் பகுதிகளில் மேய்ப்புபணி ஆற்றிக்கொண்டே பயிற்சி பெற்றார். 18 மாதங்களாக பல்வேறு பகுதிகளில் பணியாற்றிவிட்டு கப்பலில் வந்து கொண்டிருந்தபோது இராணுவ வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். வியாபாரிபோல மாறுவேடமிட்டு கப்பலில் தப்பித்துச் செல்லும் ஒரு குருவைத் தேடிவந்தவர்கள் அந்தக் குரு கிடைக்காததால் இவரைக் கைது செய்தார்கள். இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்ட ஹென்றியை நியூகேசில் சிறையில் அடைத்தார்கள். மூன்றாண்டுகள் சிறையில் இருக்கின்றபோதே இங்கிலாந்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார்.

சிறையிலிருந்து விடுதலையாகி ஃபிலான்டர்ஸ் நகரில் இருந்த ஸ்பானிய வீரர்கள் மத்தியில் பணியாற்ற ஆரம்பித்தார். பிறகு இவரை 1633இல் லண்டனுக்கு வெளியே உள்ள புனித கிலஸ் பங்கிற்கு அனுப்பினார்கள். அங்கு பணியாற்றிய நாள்களில் அப்பகுதியில் கொள்ளைநோய் மிகுதியாய் பரவ ஆரம்பித்தது. மழலைகள் முதல் முதியவர்கள் வரை எல்லா பருவத்தினரும் இக்கொள்ளை நோயினால் இறக்க ஆரம்பித்தார்கள். அவர்களுடன் தன்னையே முழுமையாக கரைத்துக் கொண்ட ஹென்றி எப்போதும் அவர்களின் சுகத்திற்காகவே உழைக்க ஆரம்பித்தார். நோயுற்றோருக்கு மருந்து கொடுத்தல், பாவமன்னிப்பு மற்றும் நோயில் பூசுதல் வழங்குதல், இறந்தவர்களை நல்லடக்கம் செய்தல் போன்ற பணிகளைச் செய்தார். இது பொறுக்கமாட்டாத வீரர்கள் ஹென்றியை மீண்டும் சிறையில் அடைத்தார்கள். இவரின் சேவையினால் ஈர்க்கப்பட்ட அரசி ஹென்றிட்டா மரியாவின் தலையீட்டால் இரண்டு மாதங்களில் விடுதலை செய்யப்பட்டார்.

ஹென்றி 1643ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து சென்று பணியாற்றுமாறு பணிக்கபப்பட்டார். அதன்படி ஓய்வின்றி பணியாற்றிய ஹென்றி ஒரு நாள் இரவு தமது தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார். வழியில் நின்று கொண்டிருந்த வீரர்கள் தந்தைக் கண்டு கைது செய்து உயரதிகாரியின் வீட்டிற்கு இழுத்துச் சென்றார்கள். இருட்டறையில் அடைத்தார்கள். அந்த உயரதிகாரியின் மனைவி யாருக்கும் தெரியாமல் கத்தோலிக்க கிறிஸ்தவ மறையைப் பின்பற்றி வந்தவர். அவர் இரவோடு இரவாக ஹென்றியை தப்பிக்க வைத்துவிட்டார். ஆறு வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் தம் தோழர்களுடன் நெடுந்தொலைவு நடந்து பணயாற்றிவிட்டு வரும்Nபுhது குடிக்கத் தண்ணீர் வேண்டி ஒரு வீட்டுக் கதவை அருள்தந்தை தட்டினார். கதவைத் திறந்தவன் ஓர் இராணுவவீரன். அவன் அருள்தந்தையைக் கண்டுகொண்டு அப்பொழுNது மீண்டும் கைது செய்தான்.

விசாரணை நடந்தது. தடையை மீறி இங்கிலாந்துக்குள் நுழைந்ததால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நான்கு நாட்கள் இடைவெளியில் பலர் சென்று சந்தித்து செப உதவி வேண்டினார்கள். கத்தோலிக்க நாடுகளின் தூதுவர்களும் வந்து சந்தித்தார்கள். இங்கிலாந்தில் இருந்த மற்ற கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கும் இத்தூதுவர்கள் தங்களின் உடனிருப்பைக் காட்டினார்கள். தீர்ப்பின்படி பிப்ரவரி முதல் தேதி 1645 அன்று தூக்கிலிட்டு ஹென்றியை கொலை செய்தார்கள்.

இறப்பதற்கு முன்பு, “என் பாவமே என் பாவமே என் பெரும்பாவமே” என்று மன்னிப்பு வேண்டி இறையடி சேர்ந்த ஹென்றி 1929, டிசம்பர் 15 அன்று திருத்தந்தை 11ஆம் பத்திநாதரால் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். திருத்தந்தை ஆறாம் பவுல் 1997, அக்டோபர் 25ஆம் தேதி ஹென்றி புனித நிலைக்கு உயர்த்தினார்.

மனநிலை மாற்றங்கள் எப்போதாவதுதான் நிகழும். அதில் உறுதியுடன் தொடர்பவர்கள்தான் வரலாற்று நாயகர்கள் ஆகிறார்கள்.

image