St. Benjamin St. Guy Of Pomposa St. Daniel of Murano

மார்ச் 31

முரானோ நகர் புனிதர் டேனியல்

mary

முரானோ நகர் புனிதர் டேனியல் * (St. Daniel of Murano)

வணிகர் கமால்டோலிஸ் துறவி: (Merchant/ Camaldolese monk)

பிறப்பு: தெரியவில்லை ஜெர்மன் (German)

இறப்பு: மார்ச் 31, 1411 சான் மாட்டியா டி முரானோ, வெனிஸ், இத்தாலி (San Mattia di Murano, Venice, Italy)

நினைவுத் திருநாள்: மார்ச் 31

புனிதர் டேனியல், ஒரு கமால்டோலிஸ் துறவி (Camaldolese monk) ஆவார். முதலில் ஒரு ஜெர்மன் வணிகரான இவர், அவர் வியாபார நிமித்தமாக பயணம் செய்து, இத்தாலியின் முரானோ நகரில் தாங்கினார். அங்கு அவர் கமால்டோலீஸ் ஆனார்.

இவர் ஜெர்மனியில் பிறந்த பதினைந்தாம் நூற்றாண்டு துறவி. இந்த துறவியின் பல விவரங்கள் பொது களத்தில் அறியப்படவில்லை. ஆனால் அவர் இத்தாலியின் வெனிஸ் நகரில், ஒரு கமால்டோலிஸ் துறவி ஆனார்.

ஒரு துறவியாக, அவர் ஒரு எளிய வாழ்க்கையை நடத்தினார். தன்னிடம் இருந்த அனைத்தையும் ஏழைகளுக்காகக் கொடுத்ததற்காகவும் அவர் அறியப்பட்டார். கடும் குளிர் காலத்தில், போதுமான பாதுகாப்பு இல்லாமல் ஒரு ஏழையைக் கண்டால், கடுமையான குளிர்கால இரவுகளில் கூட அவர் தனது துணிகளைக் தானமாக வழங்கிவிடுவார் என்று நம்பப்படுகிறது.

அல்லும் பகலும், தொடர்ச்சியான பிரார்த்தனைகளில் அவர் தமது வாழ்க்கையை நடத்தினார். கமால்டோலீஸ் மடாலயத்தால் அவர் மிகவும் செல்வாக்கு பெற்றார். கமால்டோலீஸ் துறவற சமூகங்கள் பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புனிதர் ரொமுவால்ட் (Saint Romuald) தொடங்கிய துறவற இயக்கத்தின் பரம்பரையை கண்டுபிடிக்கின்றன. அவர்களின் பெயர் மத்திய இத்தாலியின் மலைகளில், அரேஸ்ஸோ (Arezzo) நகருக்கு அருகிலுள்ள கமால்டோலியின் புனித மடாலயத்திலிருந்து பெறப்பட்டது.

இத்தாலியின் வெனிஸில் உள்ள சான் மட்டியா டி முரானோ நகரில், கி.பி. 1411ம் ஆண்டு, மார்ச் மாதம், 14ம் நாளன்று, அன்று அவர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.


 

image