St. Michael Rua St. Peter of Verona St. Celestine

ஏப்ரல் 6

புனித முதல் செலஸ்டின்

mary

புனித முதல் செலஸ்டின்

கிறிஸ்துவின் ஒளியாக வழியாக அன்பின் பணியாளராக வாழ்ந்தவர். அன்னை மரியாவிடம் அன்பும் மதிப்பும் பக்தியும் கொண்டு வாழ்ந்தவர். இறைவனை நினைத்து வாழ்ந்தவர். திருச்சபைக்கு எதிராக எழுந்த தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக்கி நற்சான்றுகளுடன் நற்செய்தி அறிவித்தவர். திருச்சபையை அன்பு செய்தவர். பாவிகள் மீது பரிவன்பு கொண்டு நல்வழி காட்டியவரே புனித முதலாம் செலஸ்டின். இவர் உரோம் நகரில் கம்பானியாவில் பிறந்தார்.

செலஸ்டின் மிலான் நகரில் வாழ்ந்த புனி அம்புரோஸ் அவர்களை ஆன்மீக தந்தையாக ஏற்றுக்கொண்டு அவருடன் வாழ்ந்தார். திருத்தந்தை முதலாம் இன்னொசென்டின் ஆட்சி காலத்தில் திருத்தொண்டராக பணியாற்றினார். திருச்சபையின் வளர்ச்சி பணிகளுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டார். நெஸ்தோரியஸின் தப்பறைகளுக்கு எதிராக குரல்கொடுத்தார். கிறிஸ்துவின் உண்மை சீடராக வாந்தார்.

அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு அன்னை மரியாவுக்கு எதிராக கூறப்பட்ட தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். அன்னை மரியாவின் அன்பும் அரவணைப்பு பெற்று திருச்சபையின் விசுவாசக் கோட்பாடுகளை அறிவித்தார். அன்னை மரியாவின் ஆலயத்தை புது பொலிவுடன் சீரமைத்தார். புனித ப்ராஸ்பர் அவர்களால் “செலஸ்டின், உரோமையில் நம்பிக்கையைக் காப்பாற்றினார். கிறிஸ்துவை அறியாத அயர்லாந்தில் கிறிஸ்துவின் ஒளியை கொண்டிருந்தார்” என்று கூறினார். இறைவனுக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்து அவருக்காக வாழ்ந்த செலஸ்டின் 432ஆம் ஆண்டு ஜøலை 27ஆம் நாள் இறந்தார்.

 

image