Bl. Kateri Teka Kwitha

ஏப்ரல் 17

முக்திபேறுபெற்ற. கித்தேரி டேக்காக்விதா

mary

mary

முக்திபேறுபெற்ற. டேக்காக்விதா (Kateri Tekakwitha)

பிறப்பு 1657 நியூயார்க்

இறப்பு 17 ஏப்ரல் 1680
கானாவெக்(Kahnawake), கியூபெக் (Quebec), கனடா

முத்திபேறுபட்டம்:22 ஜூன்,1980 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

புனிதர் பட்டம்: 21அக்டோபர் 2012, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்

சுற்றுசூழல், கைவிடப்பட்டோர், வெளிநாட்டில் வாழ்வோரின் பாதுகாவலர்

கித்தேரி டேக்காக்விதா 1657 -ல் நியூயார்க்கில் பிறந்தார். இவர் பிறந்தவுடன் பெரியம்மை என்ற நோயால் தாக் கப்பட்டு முகம், உடல் முழுவதிலும் பெரிய வடுக்கள் ஏற்பட்டு மிகவும் அழகு குறைந்தவளாக இருந்தார். தனது 4 வயதில் தனது பெற்றோரையும் சகோதரனையும் சின்னம்மை நோய் தாக்கியதால் இழந்தாள். இவளுக்கு கண்பார்வை குறைபாடு இருந்ததாகவும் அழகற்று காணப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன்பின் கித்தேரி தனது மாமன் துணையில் வாழந்து வந்தாள். திருமணம் புரிய மாட்டேன் என்று அவள் உறுதி எடுத்திருந்ததால் அவளது உறவினர்களும் அவளை எள்ளி நகையாடினர். தனது 20ஆம் அகவையில் கேத்தரி, லாம்பர் வில்லைச் சார்ந்த ஜாக்கஸ் என்ற இயேசு சபை அருட்பணியாளரைச் சந்தித்தாள். இவ்வுறவின் வெளிபாடாக 1676ஆம் ஆண்டு உயிர்ப்பு நாளன்று திருமுழுக்கு பெற்றாள். இவர் மோகாக் (Mohawk) மக்களின் "லில்லி" என்றழைக்கப்பட்டார். இவர் மிகவும் பொறுமையானவராக திகழ்ந்தார். புதியதாக கிறித்தவ மறையைத் தழுவிய இவரை விசுவாசத்திற்கு புறம்பானவர் பலர் ஏளனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை கடவுளின் நாளென்று இவள் கடவுளுக்கு ஊழியம் புரிய சென்றபோது வயலுக்கு வேலைக்கு வராததால் அடிக்கப்பட்டாள், பட்டினிப் போடப்பட்டாள்.

இறுதியில் கேத்தரி பணியாளர் ஜாக்கஸ்-ஸின் உதவியுடன் தப்பினாள். 200 மைல் தூரம் காடுகளின் வழியே நடந்து 1677ஆம் அக்டோபர் ஆண்டு கிறித்தவர்கள் வாழும் அமெரிக்கப் பகுதியான சால்ட் செயின்ட் லூயிஸ்-க்கு வந்து கிறித்து பிறப்பு நாளில் முதல் திருவிருந்து உட்கொண்டாள். அடுத்த மூன்று வருடமும் கேத்தரி செப வாழ்வில் இருந்தாள். தினமும் இருண்டு திருப்பலியில் பங்கேற்றாள். வாரத்திற்கு இருமுறை நோன்பிருந்தாள்.இறைபணியாளர் ஒருவர் கூறுவதுபோல கேத்தரியிடம் தீர்க்க முடியாத ஆன்மீக தாகமும் நிறைவாழ்வை நோக்கிய ஆன்மாவும் இருந்தது.

இவர் தனது 24 ஆம் வய தில் கனடாவிலுள்ள கியூபெக் மாவட்டத்தில், மாண்ட்ர லின் அருகிலுள்ள கானாவெக் என்ற இடத்தில் 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் நாள் இறந்தார். இவர் இறந்தபின் அண்டிவந்து செபித்தோர்க்கு ஏராளமான நன்மை களை செய்தார். அந்நாளிலிருந்து இயேசுசபை மறைபோதகர்கள் பல்வேறு புதுமைகள் இவளுடை கல்லறையில் நிகழ்ந்ததைக் கண்டனர். இவர்தான் புனித நிலைக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் அமெரிக்க குடிமகள். 1980 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்களால் முத்திப்பேறு பட்டம் கொடுக்கப்பட்டது. பின்னர்2012 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

செபம்:
எம்மை பாதுகாத்து, வழிநடத்தும் எம் மூவொரு இறைவா! இவ்வுலகில் அனாதைகளாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீரே அரணும், கோட்டையுமாய் இருந்து பாதுகாத்திட வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்

 

image