St. Agnes of Montepulciano

ஏப்ரல் 20

புனித ஆக்னஸ்

mary

mary

மோன்ட்ரே புல்சியானோ நகர் புனித ஆக்னஸ்

ஆண்டவரே, பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்கினீர்: உமது வலக்கரத்தால் என்னைத் தாங்கிக் கொண்டீர்: உமது துணையால் என்னைப் பெருமைப்படுத்தினீர்;. (திபா 18:35)

இத்தாலி நாட்டில் மோன்ட்ரே புல்சியானோ என்னும் இடத்தில் 1268ஆம் ஆண்டு பிறந்தவர் ஆக்னஸ். தே செக்னி என்பவரின் மகளான இவர் பிறந்தவுடனேயே நகரம் முழுவதும் அற்புதமாக ஒளிர்ந்தது. வசதிக்கு எக்குறையும் இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் ஆறு வயது நடக்கும்போதே தன்னைத் துறவு மடத்தில் சேர்த்து விடுமாறு தம் பெற்றோரை வலியுறுத்தியவர் ஆக்னஸ். துறவு மடம் ஏதாவது அருகில் இருந்தால் அடிக்கடி அங்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும் என்று கருதிய ஆக்னஸ் வீட்டை வேறு இடத்திற்கு மாற்றும்படி தன் தந்தையிடம் கேட்டார். ஆனால் பாதுகாப்புக் கருதி தே செக்னி மறுத்துவிட்டார். இருப்பினும் சற்றுத் தொலைவில் உள்ள மடத்திற்குச் சென்றுவர அனுமதி வழங்கினார்.

அவ்வாறு ஒருமுறை ஆக்னஸ் தன் தாய் மற்றும் பணிப்பெண் ஒருவருடன் சென்று மலைப்பகுதி வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பகுதியில் தீமையின் அடையாளமாக ஒரு வீடு இருந்தது. அவ்விடம் வந்தபோது, திடீரென காக்கைக் கூட்டம் ஆக்னசைச் சூழ்ந்தது. தங்கள் இறக்கைகளாலும் அலகுகாளலுமர்; அடித்தும் கொத்தியும் ஆக்னசை அவை காயப்படுத்தின. மிகுந்த சிரமத்திற்கு இடையே குற்றுயிராகக் கிடந்த ஆக்னசை அவருடைய தாய் காப்பாற்றிக் கூட்டிக்கொண்டு வந்தார். “தனது தூய்மையான வாழ்க்கையால் நிச்சயம் ஆக்னஸ் இவ்விடத்தை; தூய்மைப்படுத்துவாள்” என்று பணிப்பெண் கூறினார்.

ஒன்பது வயது நடந்தபோது, துறவு மடம் சேர்வதற்கு இதுதான் சரியான நேரம் என்று எண்ணி அருகில் இருந்த பிரான்சிஸ்கன் மடத்தில் ஆக்னஸ் சேர்ந்தார். வசதியான பின்னணி கொண்ட இவர் தன்னை வருத்தி ஏழ்மையாக வாழ்ந்தததைக்கண்ட மற்ற சகோதரிகள் “சாக்குடை சகோதரி” என்றே இவரை அழைக்கலாயின. எப்போதும் காட்சி தியானத்தில் தன்னை ஈடுபடுத்திய ஆக்னஸ் பல்வேறு காட்சிகள் கண்டார். அதில் முக்கியமானது அன்னை கன்னி மரியா காட்சி கொடுத்ததாகும்.
கையில் குழந்தை இயேசுவுடன் காட்சி கொடுத்த அன்னை மரியா தன் மகனைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி அதன் அடையாளமாக பாலன் இயேசுவை ஆக்னசிடம் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்ட அன்னை மரியா இயேசுவைத் தூக்கினார். உடனே அன்னையின் காலைக்கட்டிக்கொண்டீ இயேசுவைத் தன்னிடமே தந்துவிடுமாறு ஆக்னஸ் கூறினார். அப்போது, இயேசு தன் உரும் தாங்கிய சிலுவை கோர்க்கப்பட்ட ஒரு சங்கிலியை ஆக்னசின் கழுத்தில் மாட்டிவிட்டார்.

அன்னை மரியா மூன்று கற்களை ஆக்னசிடம் ஞாபக அர்த்தமாகக் கொடுத்தார். இதை வைத்து “நான் என்ன செய்ய?” என்று கேட்டபோது, “ஒரு நாள் இது உனக்குப் பயன்படும்” என்று கூறியதுடன் “இது மூவொரு இறைவனின் அடையாளமாக வழங்கப்படுகிறது” என்று சொல்லிச் சென்றார்.

சில நாட்களுக்குப் பிறகு ப்ரோசெனோ என்ற இடத்தில் புதிகதாக ஆரம்பித்த மடத்து வேலையைப் பார்த்துக்கொள்ள மோன்ட்ரே புல்சியானோவில் இருந்து ஆக்னசை அனுப்பினார்கள். அங்கு சென்றபோதுதான் அந்த புதிய மடத்தின் தலைவியாக அவரை நியமித்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அப்போது ஆக்னசின் வயது 17தான் துடிப்புடன் செயலாற்றிய ஆக்னஸ் பணியாளர்களுக்கு உணவு இல்லாதபோது பலமுறை அற்புதமாக உணவு பலுகச் செய்து பசியாற்றினார்.
இறைவன் தந்த உள்ளுணர்வுக்குக் கட்டுப்பட்டு பிரான்சிஸ்கன் மடத்திலிருந்து 1306-இல் வெளியேறி புதிய சபையைத் தோற்றுவித்தார். தான் காக்கையால் தாக்கப்பட்ட இடத்திலேயே, அன்னை கன்னி மரியா தமக்குக் கொடுத்த மூன்று கற்களைக் கொண்டு வேலையை ஆரம்பித்தார். பலரது உதவியும் அன்னையின் அருளும் ஒன்று சேர குறித்த காலத்திலேயே வேலை முடிந்தது. தமது சபைக்கு பிரான்சிஸ்கன் துறவு சபையின் விதிமுறைகளையே வைத்துக் கொண்டார். இருப்பினும் சாமிநாதர் சபையினர் போல கடுந்தவ வாழ்வைப் பின்பற்றினார்கள்.

காட்சித் தியானத்தில் தன்னை மற்ந்து வாழ்ந்து பலருக்கும் நலமளித்த ஆக்னஸ் 1317 ஏப்ரல் 20 அன்று இறைவனடி சேர்ந்தார். இவர் வழியாக இறைவன் ஆற்றிய பல்வேறு புதுமைகளைக்கண்ட திருத்தந்தை 13-ஆம் ஆசிர்வாதப்பர், 1726-ஆம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கினார்.

தம்மைத் தேடி வரும் இறைவனின் அருட்கரம் பற்றி அவரை வழித்துணையாகக் கொள்வோர் அஞ்சிடத் தேவையில்லை.

image