St. Peter Chanel St. Louis Marie Grignion De Monfort

ஏப்ரல் 28

புனித பேதுரு சேனல்

mary

mary

புனித பேதுரு சேனல்


உலக இளையோர் தினத்தின் பாதுகாவலர்

நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும் வரை அவரோடு தங்கியிருங்கள். (மத் 10:11)
பேதுரு லூயிஸ் மரிய சேனல் 1803, ஜூலை 12 ன்று பிரான்ஸ் நாட்டில் பெல்லி மறைமாவட்டத்திற்கு உட்பட்ட க்லட் என்னும் இடத்தில் பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பேதுரு சிறுவனாக இருந்தபோது ஆடு, மாடுகள் மேயத்து கடும்பத்தின் ஏழ்மையைப் போக்க தன்னாலான உதவியைச் செய்து வந்தார்.

பங்கத்தந்தை ட்ராமபியர் அவர்களின் உதவியுடன் பேதுரு தொடக்கக் கல்வி கற்றார். பேதுருவின் அறிவுத்திறன் மற்றும் எளிய பக்தி நிறைந்த வாழ்வு முறைகளைக் கண்டுணர்ந்த ட்ராமபியர், மறைமாவட்ட குருமடத்தில் அவரைச் சேர்த்துவிட்டார். கற்றுக் கொள்ளும் தமது ஆர்வம் மற்றும் தெளிந்த சிந்தனையினால் பேராசிரியர்களின் மனம் கவர்ந்த மாணவராக பேதுரு திகழ்ந்தார்.

பேதுரு 1827-ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். மூடும் நிலையில் க்ரோசெட் பங்குத்தளத்திறகு அனுப்பப்ட்டார். அங்குஈ தான் பணியாற்றிய அனைவரின் நல்லெண்ணத்தையும் பேதுரு பெற்றார். எண்ணற்றோரை கிறிஸ்தவ மதத்திற்கு மனந்திருப்பினார்.

இதனிடையே, மறைப்பணியாளராகப் பணியாற்றும் எண்ணம் பற்றி எரிந்ததால் புதிதாக ஆரமபிக்கப்பட்டிருந்த மாரிஸ்ட் தந்தையர்களின் மரியன்னை சபையில் 1831-இல் பேதுரு சேர்ந்தார். இச்சபையானது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மறைப்பணி ஆற்றுவதைத் தமது முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது.

சபையில் சேர்ந்த பேதுரு அவரே எதிர்பார்க்காதபடி, பெல்லியல் இருந்த குருமடத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். மகிழ்வுடன் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகுஈ பசிபிக் பகுதியில் உள்ள நியூ ஹெப்ரிடஸ் பகுதியில் மறைப்பணியாற்ற 1836ஆம்ஆண்டுசபையால் அனுப்பப்பட்டார். அங்கு சென்றதும் ஆங்கிலேயரும், பொதுநிலை சகோதரருமான தாமஸ் பூக் என்பவரை தம்முடன் அழைத்துக்கொண்டு ஃபுத்துனா தீவிற்குச் சென்றார்.

அப்போதுதான், மனிதர்களைத் தின்னும்; வழக்கம் அத்தீவில் தடை செய்யப்பட்டிருந்தது. அங்குச் சென்று இறங்கியபோது, அம்மக்கள் மற்றும் அவர்களது அரசர் நிலுக்கி ஆகியோர் அன்புடன் மறைப்பணியாளர்களை வரவேற்றார்கள். குறுகிய காலத்திரேயே மறைப்பணியாளர்கள் அம்மக்களின் மொழியைக் கற்றார்கள். அவர்களுக்குத் தன்னம்பிக்கை மற்றும் தன்னுரிமை பற்றி கற்றுக் கொடுத்தார்கள். எல்லாரின் நம்பிக்கை;கு உரியவராக மாறினார்கள். இதைக்கண்ட அரசர் பொறாமைப்பட்டார்.

புதிய மதத்தை மக்கள் தழுவ ஆரம்பித்ததை அச்சத்துடன் நோக்கினார். தாம் அதுவரை அனுபவித்து வந்த தலைமைப் பதவிக்கு வந்துவிடுமோ என்று அஞ்சி மறைப்பணியாளர்களை அடக்க முடிவு செய்தார். இதனிடையே தமது மகனும் திருமுழுக்குப் பெற விருப்பம் கொண்டிருப்பதை அறிந்த அரசர் கோபத்தின் உச்சத்திற்கே சென்றார். பேதுருவின் தலையைக் கொய்துவருமாறு ஒரு படைப்பிரிவை அனுப்பினார்.
எந்த மக்கள் வாழ்வு பெற வேண்டும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேதுரு வந்தாரோ அந்த மக்களாலேயே கைது செய்யப்பட்டார். அவர்களின் கையாலே 1841 ஏப்ரல் 28இல் தடியடி பட்டு இறந்தார். பேதுரு இறந்த ஐந்து ஆண்டுகளுக்குள் அந்தத்தீவினர் அனைவருமே கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள்.

திருத்த்நதை 13ஆம் சிங்கராயர் 1889, நவம்பர் 17இல் பேதுருவை அருளாளராக அறிவித்தார். திருத்தந்தை 12-ஆம் பத்திநாதர் 1954, ஜுன் 12 அன்று புனிதராக உயர்த்தினார்.
வாழ்கின்ற இடத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை கற்பதும், போற்றுவதும் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணரும் அனைவரும் எங்குச் சென்றாலும் சாதிக்க முடியும்.

 

image