புனித யோசேப்பு (சூசையப்பர்) தொழிலாளர்களின் பாதுகாவலர்
நாத்திக பொதுவுடைமையாளர்கள் மே தினத்தை தொழிலாளரின் நலனுக்கென்று முதன்முறையாக உரு வாக்கினர். இதற்கு முழுமையான பொருள் கிடைக்கும் வகையில் 1955 ஆம் ஆண்டு திருத்தந்தை 12ஆம் பத்தி நாதர் தொழிலாளரான புனித சூசையப்பர் திருநாளை மே மாதம் முதலாம் நாளில் திருச்சபை முழுவதிலும் கொண்டாட பணித்தார். இயேசு ஒரு தச்சு தொழிலாளி என்பதற்கு நம் தாயாம் திருச்சபை முக்கியத்துவம் கொடுக்கிறது. இயேசுவை இப்பணிக்கு உருவாக்கிய வர் சூசையே. மனிதன் தன் கைகளாலும், தன் அறிவா ற்றலாலும் கிறிஸ்துவின் மறையுடலைக் கட்டி எழுப்பக் கடமைப்பட்டவன் என்பதை புனித சூசையப்பர் தன் வாழ்வின் வழியாக உணர்த்தியுள்ளார். இன்றைய உலகில் மனிதன், தனது முயற்சியினாலும், திறமையாலும் அடைந்த மாபெரும் வெற்றியை நினை க்க நினைக்க அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கி ன்றது. அனைத்து நாட்டு மக்களும் கைகோர்த்துப் பணியாற்றுகிறார்கள் என்பது வெற்றிக்கு மூல கார ணமாக உள்ளது.
உலக மாந்தர் அனைவரும் ஒரு குடும் பத்தினர்போல் சுருங்கிவிட்ட காட்சி வியப்பானது. புதிய சாதனங்களும், கண்டுபிடிப்புகளும் எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பதை திருச்சபை உலக மக்களுக்கு எடுத்துரைத்துவருகிறது. கடவுளின் திட்டம், மனித வரலாற்றில் நிறைவேற, மனிதன் எவ் வாறு ஒத்துழைக்கவேண்டும் என்பதை சூசை தன் வாழ்வில் உணர்த்தியுள்ளார். உலகின் பல பகுதிக ளிலும் மனித உழைப்பின் மாண்பினைப் பாராட்டும் விழா மே மாதம் முதல் நாளன்று கொண்டாடப்பட வேண்டுமென்று இத்திருவிழா நிறுவப்பட்டது. செபம்: உலகை படைத்து பராமரித்து ஆளும் இறைவா! உழைக்க வேண்டும் என்னும் நியதியை, மனித இனத்திற்குத் தந்துள்ளீர். நாங்கள் புனித யோசேப்பின் எடுத்துக்காட்டான வாழ்வாலும், மன்றாட்டாலும் நீர் கட்டளையிடும் பணிகளை புரியவும், நீர் வாக்களித்த பேற்றைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வரம் அருளும்.