St. Godric of Finchale St. Christopher Magallanes

மே 21

புனித கிறிஸ்டோபர் மாகல்லன்ஸ்

mary

புனித கிறிஸ்டோபர் மாகல்லன்ஸ்

"கிறிஸ்து அரசரும், குவாடலூப்பே கன்னியும் வாழ்த்தப் பெறுக."

மெக்சிகோவில் உள்ள கத்தோலிக்க நம்பிக்கையை அழிக்கும் ஒரு அபத்தமான முயற்சியில் திருச்சபைக்கு எதிராக சட்டங்களை நிறுவி அமுல்படுத்திய மெக்சிகோவின் கத்தோலிக்க எதிர்ப்பு அரசாங்கத்திற்கு எதிராக 1920 களில் "கிறிஸ்டெரோ" எழுச்சியின் முழக்கம் இதுவாகும். மெக்சிகோ அரசாங்கம் வெளிநாட்டலிருந்து குருக்கள் வந்து மறைப்பணி ஆற்றவும், திருப்பலி நிறைவேற்றுவதற்கும் தடைசெய்தது.

புனித கிறிஸ்டோபர் மாகல்லன்ஸ் டோட்டாட்டிச்சி எனும் இடத்தில் குருமாணவர்களுக்கான பயிற்சிஅகத்தை (செமினரியை) அமைத்தார், அவரும் அவருடைய தோழர்களும் இரகசியமாக போதித்து விசுவாசிகளுக்கு கிறிஸ்தவ மறையை பரப்பினார்கள்.

புனித கிறிஸ்டோபர் மாகல்லன்ஸ், மற்ற 21 குருக்கள் மற்றும் மூன்று சக தோழர்களுடன், 1915 மற்றும் 1937 க்கு இடையில், கிரிஸ்டெரோ இயக்கத்தில் உறுப்பினராக இருந்ததற்காக, எட்டு மெக்சிகன் மாநிலங்களில் துப்பாக்கிச் சூடு அல்லது தூக்கிலிடப்பட்டதன் மூலம் உயிர் ஈகம் செய்தனர்.

" நான் நிரபராதி, மரணம் அடைகிறேன். என் மரணத்திற்கு காரணமானவர்களை முழு மனதுடன் மன்னிக்கிறேன், நான் இரத்தம் சிந்துவது மெக்சிக்கோவின் அமைதிக்கு உதவவேண்டும் என்று கடவுளிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் உறக்க பேசியது கிறிஸ்டோபர் மாகல்லன்ஸ் சிறைவைக்கப்பட்டிருந்த அவரது அறையிலிருந்து மன்றாடிய செபமே அவரது இறுதி செபமாக அமைந்தது.

போப் இரண்டாம் ஜான் பால் 1992 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் மாகல்லன்ஸ்கு முக்திபேறு பட்டமும் 2000ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுத்தார்

 

image