BL. Edward Dekens St. John Of Sahagun St. Leo III
St. Onuphrius Bl. Yolanda St. Kaspar Bertoni

ஜுன் 12

✠ அருளாளர் யோலந்தா ✠(Blessed Yolanda)

mary

✠ அருளாளர் யோலந்தா ✠(Blessed Yolanda)

✠பிறப்பு : கி.பி. 1235
எஸ்டர்காம், போலந்து
(Esztergom)

✠இறப்பு : கி.பி. 1298
க்நீஸ்னோ
(Gniezno)

✠அருளாளர் பட்டம் : கி.பி. 1827
திருத்தந்தை 12ம் லியோ
(Pope Leo XII)

✠நினைவுத் திருநாள் : ஜூன் 12

அருளாளர் யோலந்தா, ஹங்கேரியின் அரசர் "நான்காம் பேலா" மற்றும் "மரிய லஸ்கரினா" (King B�la IV of Hungary and Maria Laskarina) ஆகியோரின் மகளாவார். இவர், "புனிதர் ஹங்கேரியின் மார்கரெட்" (Saint Margaret of Hungary) மற்றும் "புனிதர் "கிங்கா" (Saint Kinga (Cunegunda) ஆகியோரின் சகோதரியுமாவார். புகழ்பெற்ற ஃபிரான்சிஸ்கன் "புனிதர் ஹங்கேரியின் எலிசபெத்" (Elizabeth of Hungary) இவரது தந்தை வழி அத்தை ஆவார்.

போலந்து நாட்டின் பிரபுவைத் திருமணம் செய்திருந்த யோலந்தாவின் தமக்கை கிங்காவின் மேற்பார்வையில் கல்வி கற்பதற்காக யோலந்தா போலந்து அனுப்பப்பட்டார். அங்கே, அவர் "போலஸ்லா" (Bolesław the Pious) என்பவரைத் திருமணம் செய்ய அறிவுறுத்தப்பட்டார். 1257ம் ஆண்டு, அவர்களது திருமணம் நடந்தது. அவர்களுக்கு பின்வரும் மூன்று பெண்குழந்தைகள் பிறந்தன:

1. 1263ம் ஆண்டு, பிறந்த எலிசபெத் (Elisabeth of Kalisz) (இவர் பின்னாளில் "லெக்னிகா�வின்" பிரபு "ஹென்றி" (Henry V, Duke of Legnica) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.)
2. 1266ம் ஆண்டு, பிறந்த ஹெட்விக் (Hedwig of Kalisz) (இவர் பின்னாளில் போலந்தின் மன்னன் "முதலாம் விளாடிஸ்லாவ்" (Władysław I the Elbow-high, King of Poland) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.)
3. 1278ம் ஆண்டு, பிறந்த அன்னா (Anna of Kalisz) (இவர் பின்னாளில் "க்நீஸ்னோ" நகரில் அருட்சகோதரியாக (Nun in Gniezno) துறவறம் பெற்றார்.)

யோலந்தா, தமது திருமணத்தின்போதே எதிர்காலத்தில் ஏழைகளுக்கும் வீடற்றவர்களுக்கும் உதவும் எண்ணம் கொண்டார். இதற்கு அவரது கணவரான "போல்ஸ்லா"வும் துணை நின்றார். அதன் காரணமாகவே அவருக்கு "நல்லோர்" (The Pious) எனும் பட்டப்பெயரும் கிடைத்தது.

"சண்டேஸ்" (Sandez) என்னுமிடத்தில் யோலந்தாவின் தமக்கை கிங்கா, ஏழைகளுக்கான (Poor Clare monastery) துறவு மடம் ஒன்றினை நிறுவினார்.

1279ம் ஆண்டு, யோலந்தாவின் கணவர் "போல்ஸ்லா" மரணமடைந்தார். விதவையான யோலந்தா, தமது பெண்களில் ஒருவரான அன்னாவுடன் (Anna) இணைந்து தமக்கையின் "ஏழை கிளாரா" (Poor Clare monastery) என்ற துறவு மடத்தினை நிர்வகிக்க ஆரம்பித்தார். ஆனால், அங்கே நடந்த ஆயுதப் போரின் காரணமாக துறவு மடத்தை அங்கிருந்து அகற்ற வற்புறுத்தப்பட்டார்கள்.

யோலந்தா "க்நீஸ்னோ" (Gniezno) என்னுமிடத்தில் புதிய துறவு மடம் ஒன்றினை நிறுவினார். 63 வயதான யோலந்தா, 1298ம் ஆண்டு, மரணமடைந்தார்.

ஜுன் 12

புனித கஸ்பார் பெர்டோனி (St.Kaspar Bertoni)

mary

புனித கஸ்பார் பெர்டோனி (St.Kaspar Bertoni)

சீன நாட்டின் விசுவாசத்தின் பாதுகாவலர்

பிறப்பு 1777 வெரோனா, இத்தாலி

இறப்பு 12 ஜூன் 1853 வெரோனா

முத்திபேறுபட்டம்: 1975, ஆறாம் பவுல்

கஸ்பார் ஏழைகளின் ஆன்ம வழிகாட்டியாகவும், க த்தோலிக்க பணியகம் ஒன்றில் திருச்சபையின் வர லாற்றை பற்றி எடுத்துரைப்பவராகவும் இருந்தார். பி ன்னர் கனானிய துறவற சபையில் இளைஞர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். அச்சபைக்கு தேவையான எல்லாவித உதவிகளையும் செய்தார். பின்னர் "கிறி ஸ்துவின் திருக்காயம்" என்றழைக்கப்படும் சபையை தோற்றுவித்தார். பல ஆயர்களின் உதவி கொண்டு அ ச்சபையை வளர்த்தெடுத்தார். இவர் தன் மறைமாவட்ட த்தில் மிஷினரியாக வேலை செய்து, பல மாவட்டங்க ளில் ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்து, பலரை தன் சபையில் சேர்த்து பணியாற்றினார்.

1855 ஆம் ஆண்டு திருத்தந்தை 9 ஆம் பயஸ் அவர்களால் இவரின் சபை பாப்பரசரின் அங்கீகாரம் பெற்ற சபை யாக அறிவிக்கப்பட்ட பரிந்துரை செய்யப்பட்டு திரு த்தந்தை 9 ஆம் பயஸ் அவர்களால், 1925 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் நாள் பாப்புவின் அங்கீகாரம் பெற்ற சபை யாக அறிவிக்கப்பட்டது. இவர் இறக்கும் வரை பல ஆ ன்மாக்களுக்கு ஆன்ம வழிகாட்டியாகவே திகழ்ந்தார். இவர் சீன நாட்டில் மறைபரப்பு பணியை வளர்க்க பெரு ம்பாடுபட்டார்.

செபம்:
இரக்கத்தின் இறைவா! உம்மீது கொண்ட நம்பிக்கை யால், பலரின் மனக்காயங்களை போக்கி, வழிகாட்டி யாக திகழ்ந்தார் புனித கஸ்பார். எம்மையும் உமது கருவியாய் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு ஆறுதல் அளிப்பவராக நாங்கள் வாழ வரம் வாரும்

 

image