St. Otto Of Bamberg St. Processus & Martinian

ஜுலை 2

புனிதர்கள் புரோசிஸஸ் மற்றும் மார்ட்டினியன்

mary

புனிதர்கள் புரோசிஸஸ் மற்றும் மார்ட்டினியன்
நினைவு நாள் : ஜூலை 2

துணிவை நாடி
பண்டைகால மறைசாட்சிகள்
முதலாம் நூற்றாண்டில், திருத்தூதர்கள் ஆயிரக்கணக்கான மக்களை கிறிஸ்துவுக்குள் மனம் மாற்றினார்கள். அவர்களின் பெரும்பாலோர் சாதாரண மக்கள். இவர்கள் கிறிஸ்துவைப் பற்றி அறிந்து அவரைத் தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டனர். புரோசிஸஸ் மற்றும் மார்ட்டினியனின் வாழ்க்கைக் கதைகள் அவர்கள் ஆழமான, தகர்க்க முடியாத நம்பிக்கையை நமக்கு எடுத்துச் சொல்கின்றன. மரபுவழிக் கதைகளின்படி, உரோமை நகரில் நீரோ மன்னன் ஆண்ட காலத்தில் மெமர்டைன் சிறைச்சாலையில், புரோசிஸஸ் மற்றும் மார்ட்டினியன் என்பவர்கள் உரோமைக் காவலர்களாக இருந்தனர். உரோமையர்கள் பழங்கால கிறிஸ்தவர்களை துன்புறுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் மெமர்டைன் சிறைச்சாலை குற்றவாளிகளாலும் கிறிஸ்துவர்களாலும் நிரம்பியிருந்தது. அக்காலத்தில், பழங்கால கிறிஸ்துவர்களுடன் தொடர்புடைய மக்களைப்போல, புரோசிஸஸ் மற்றும் மார்ட்டினியன் இயேசுவின் நற்செய்தியால் ஈர்க்கப்பட்டார்கள். அவர்கள் கைதிகளைக் காவல் காக்கும்போது இயேசுவைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டு அவர்கள் கிறிஸ்துவை முழுமையாக நம்பினார்கள்.

சிறைச்சாலையில் திருமுழுக்குப் பெறுதல் :
திருத்தூதர் பேதுரு, திருத்தூதர் பவுலுடன் மெமர்டைன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, இவர்களுக்கும் மனம் திரும்பிய மற்ற கைதிகளுக்கும் திருத்தூதர் பேதுரு திருமுழுக்குக் கொடுத்தார். சிறைக்காவலர் தலைவர் புரோசிஸஸ் மற்றும் மார்ட்டினியன் மனம் மாறியதை அறிந்து, அவர் அவர்களிடம் இயேசுவை மறுதலித்து, ஜூபிடர் என்றும் வேற்று தெய்வச்சிலையை வணங்குமாறு கட்டாயப்படுத்தினான். பதிலாக அவர்கள் உண்மையிலேயே தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறி சிலையின் மீது துப்பினார்கள்.

சிறையில் அடைக்கப்பட்டு, மறைசாட்சியாக உயிர்விடுதல் :
சிறைச்சாலை தலைவன், புரோசிஸ‘ம் மார்ட்டினியனும் இவர்களது நம்பிக்கையைக் கண்டு, அவர்களை சித்ரவதை செய்து அவர்கள் காவல்களுக்கு அதே சிறைச்சாலையில் அவர்களை அடைத்து வைத்தான். சில நாட்களுக்குப்பின், திருத்தூதர் பேதுருவும் பவுலும் அடைந்த மரணத்தீர்ப்பை இவர்களும் பெற்று கொலை செய்யப்பட்டார்கள்.

இவர்களின் அடிச்சுவட்டில் :
இயேசுவைப் பற்றி அறிந்து புரோசிஸ‘ம் மார்ட்டினியனும் மனம் மாறியதைத் தொடர்ந்து மெமரிடன் சிறைச்சாலையில் மேலும் பல குற்றவாளிகள் மனம் மாறினர். இன்னும் இயேசுவின் நற்செய்தியால் சிறைச்சாலைச் சந்திப்பு பல சிறைக்கைதிகளுக்கு நம்பிக்கை அளிக்கின்றது. 1997 இல் சிறைச்சாலை நற்செய்தி பணியில் பயிற்சி பெற்ற நார்மன்லாங் என்னும் அருள்தந்தை பென்சில்வேனியாவில், பைக் கவுன்டி ஜெயிலில் அருள்பணியாளராக பொறுப்பேற்றார். அங்கு உள்ளிருப்பு பயிற்சி பெறுவோர் தோல்வியையே சந்திப்பதாக உணர்கிறார்கள் என்பதை அவர் கண்டறிந்தார். கடவுளுடைய மன்னிப்பைப் பற்றி போதித்து, அருள்தந்தை லாங் அவர்கள், உள்ளிருப்போர் அவர்களது குற்றங்களுக்கு பொறுப்பேற்று, மனந்திருந்தி, கிறிஸ்து எதிர்காலத்துக்கு நம்பிக்கை ஊட்டுகிறார் என்பதை அறிந்து கொள்ள பயிற்சி அளித்தார்.

பைக்கவுன்ட்டி ஜெயில் கீழ்க்கண்ட சேவையாற்றியது :
திருவிவிலியக் கல்வி மற்றும் ஆலய சேவைகள்
மது மற்றும் போதைப்பழக்கம் உள்ளவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம்
அங்குள்ள சிறைக்கைதிகள் விடுதலைக்கு முன்னும் பின்னும் அருள்தந்தை வழியாக விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்குதல்
பைக்கவுன்டி சிறையில் பயிற்சி பெறும் உள்ளிருப்பு கைதிகளின் மறுசீரமைப்பு 10 விழுக்காடுக்கும் குறைவாகும்.
இதுவே தேசிய அளவில் 80 விழுக்காடு ஆகும். இந்த மகத்தான வெற்றி விழுக்காடு, இயேசுவை நம்புவோருக்கு கிடைக்கும் வெற்றியாகும்.

ஜெபம் :
அன்பு தெய்வமே, எனது வாழ்க்கையை முறையாகக் கழிக்க அருள்தாரும். எனது மரண வேளை வரும்போது, என் உடலில் வலி, வருத்தம் ஏற்பட்டாலும், எனது ஆன்மா ஆறுதல் பெறட்டும். உமது இரக்கத்தினால், உறுதியான நம்பிக்கை கொண்டு உம்மிடம் முழுமையான அன்பு கொண்டு, உலகின்மீது நல்மனம் கொண்டு, உமது அருள்கொடைகளால் ஆசிபெற்று உம்மை வந்தடைவேனாக.

லி.ஜெ. ஜோசப்

image