St. Elizabeth Of Portugal St. Ulrich Of Augsburg

ஜுலை 4

போர்த்துக்கல் தூய எலிசபெத்

mary

போர்த்துக்கல் தூய எலிசபெத்

பிறப்பிடம் : ஸ்பெயின் நாட்டின் ஸரகோசா
நினைவு நாள் : ஜூலை 4

அமைதியை ஆதரிப்பவர்
போர்த்துக்கல் புனிதை, அமைதியின் புனிதை, கூடா ஒழுக்கம் உடையோரின் புனிதை

அரகான் நாட்டு அரசரின் அழகிய மகள் எலிசபெத் 1271 ஆம் ஆண்டு பிறந்தார். குழந்தைப் பருவ முதல், அவள் பக்தியும் செபமும் கலந்த ஒரு தனித்துவம் மிக்க வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது பெற்றோர் நலமெனக் கருதியதால் அவர் தமது 12 ஆவது வயதில் போர்த்துக்கல் அரசர் டினிஸ் என்பவரை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

திறமைமிக்க தலைவராகிய டினிஸ் அவரது மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒழுக்கம் மற்றும் பிரமாணிக்கம் இல்Vத கணவராயிருந்தார். இருந்தபோதிலும், எலிசபெத் கணவரை மதிப்புடன் நடத்தி வந்தார். மேலும் தவறான முறையில் பிறந்த அவர் குழந்தைகளையும் படிக்க வைக்க உதவினார். ஆனால் தனது தந்தை, மாற்றாந்தாய் குழந்தைகள் மீது பிரியமாய் இருப்பதைக் கண்டு மகன் அல்போன்ஸா பொறாமை கொண்டு கொதித்தெழுந்தான். எலிசபெத் இவர்களிடையே சமாதானம் செய்ய முயன்றாலும், இருவருக்கும் இடையே வேற்றுமை வளர்ந்து, போர்க்களத்தில் போர் மூண்டது. அமைதியை ஏற்படுத்தும் இறுதி முயற்சியாக, எலிசபெத் இரண்டு படைகளுக்குமிடையே பயணித்து சமாதானம் செய்து வைத்தார்.

சேவையில் ஈடுபட்ட அரசி :
ஞானமும், கரிசனமும் உள்ள பெண்ணாகிய எலிசபெத் அனாதைகள் இல்லம் நிறுவினார். வீடில்லாதவர்க்கு தங்குவதற்கு இருப்பிடம் அமைத்து தந்தார். ஒரு கன்னியர் மடமும் ஏற்படுத்தினார். அவர் கணவர் உடல்நிலை மோசமானபோது அவரை விட்டு நீங்காமல் எலிசபெத் மட்டுமே உடனிருந்து கவனித்து வந்தார்.

கணவரது பிரிவினால் துயருற்று, தூய பிரான்சிஸ் சபையின் மூன்றாம் நிலையில் இணைந்து, ஏழைகளுக்கும் நோயுற்றோருக்கும் உதவுவதில் தன்னையே அர்ப்பணித்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அரசராகியிருந்த அல்போன்ஸோ ஒரு தனிப்பட்ட தகறாரின் காரணமாக காஸ்டைல் நாட்டு அரசருக்கு எதிராகப் போர் தொடுத்தார். மறுபடியும் வயதான எலிசபெத் குதிரை மீதேறி படையைத் தொடர்ந்து சென்றார். அமைதி ஏற்பட அவரது முயற்சி வெற்றியளித்தது என்றாலும் இந்த முறை இந்த முயற்சி அவருக்கு வினையாய் இருந்தது. அவர் நோய்வாய்ப்பட்டு விரைவில் உயிர் நீத்தார். அவரது விருதுவாக்கு இன்று நமக்கு கிடைத்துள்ளது. நீ அமைதியை விரும்பினால் எல்லாம் நல்லதே நடக்கும்.

செபம் :
எங்கள் தந்தையே இறைவா, உமது வார்த்தையான இயேசு கிறிஸ்து இந்த பாவ உலகிற்கு சமாதானம் போதித்து வந்தார். மனுக்குலத்திற்கு மன்னிப்பு வழங்கினார். சாவை வென்றார். அவரது பெயரைத் தாங்கியிருக்கும் மக்களாகிய எங்களுக்கு அவரது முன் மாதிரியைப் பின்பற்றக் கற்பித்தருளும். எங்களது விசுவாசமும், நம்பிக்கை, நற்செயல்கள், வெறுப்பை அன்பாகவம் வேற்றுமையை ஒற்றுமையாகவும், சாவை நித்திய வாழ்வாகவும் மாற்றச் செய்தருளும். ஆமென்.

இவரது அடிச்சுவற்றில் :
தனது கணவர் மற்ற பெண்களோடு உறவு வைத்திருந்தது எலிசபெத்துக்கு எவ்வளவு மனவேதனை கொடுத்திருக்கும். பொறுமையுடனும் கனிவுடனும் கவனித்துக் கொண்டது நமக்கெல்லாம் வியப்பைத் தருகிறது. திருத்தந்தை அலெக்ஸாண்டர் இத்தகைய மனவலிமை குறித்து எழுதுகிறார். தவறுவது மனித இயல்பு, மன்னிப்பது இறை இயல்பு.

மன்னிப்பது என்பது குறிப்பாக நாம் அதிகமாக பாதிக்கப்படும் பொழுது, மிகவும் கடினம். ஆனால் குற்றம் சுமத்துவது, நம்மை அதிகமாகப் பாதிக்கும். பதிலாக, மன்னிபதற்கு உறுதுணையாக இருக்கும் புரிதல் கிடைப்பதற்கு செபம் செய்வோம். மன்னிப்பின் வழியாக, நீங்கள் அமைதியைக் கண்டடைவீர்கள்.

  • திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் மன்னிப்புக்கு ஒரு அருமையான முன்னுதாரணம். அவர் உண்மையான மன்னிப்பு வழங்கினார். மேலும் தேவையானபோது மன்னிப்பு வேண்டினார்.
  • 1981 ஆம் ஆண்டு தன்னை கொலை செய்ய முயற்சித்த மெக்மெத் அலி அக்கா என்பவருக்கு மன்னிப்பு வழங்கினார்.
  • மார்ச் 2000 ஆண்டில், ஹோலோகாஸ்ட்டில் பலியானவர்களுக்கும் மற்றும் பெண்கள் மாற்று சமயங்களைச் சேர்ந்த உயிர்த் தியாகிகளுக்காகவும் திருத்தந்தை மன்னிப்புக் கோரினார்.
    மன்னிப்பது என்பது பணிந்து போவது அன்று ; அது கடவுள் வழியில் பயணிப்பதாகும்.

லி.ஜெ. ஜோசப்

 

image