Bl. Maria Romero Meneses

ஜுலை 7

வணக்கத்திற்குரிய மரியா ரோமேரோ மெனிசஸ்

mary

வணக்கத்திற்குரிய மரியா ரோமேரோ மெனிசஸ்

பிறப்பிடம் : கிரானடா, நிகாராகுவா
நினைவு நாள் : ஜூலை 7

வரலாறு:

1902 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் நாள் கிரானடா நாட்டில் வாணிப தந்தைக்கு மகளாக மரியா ரோமேரோ மெனிசஸ் பிறந்தார். இவரது தந்தை மாநில அரசு அலுவலகத்தில் ஓர் உயர் அதிகாரி. சில காலமாக, முற்போக்கு அரசு ஆட்சியில் அவர் ஒரு அமைச்சராகக் கூட இருந்தார். ஏழைமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முனைப்புடன் செயல்பட்டவர். ஆழ்ந்த இறைப்பற்று மிக்கவுர். இசை மற்றும் கைவேலைப்பாடுகளில் தனித்திறமை கொண்டிருந்தார். சலேசியன் சபை பெண்கள் பிரிவு நடத்தி வந்த, கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பள்ளியில் கல்வி பயின்றார். தனது பள்ளிப் படிப்பிற்குப் பின் அந்த சபையில் 1923 ஆம் ஆண்டு ஒரு அருள்சகோதரி ஆனார். இந்த சபை கோஸ்டா ரீகா நாட்டில் நடத்தி வந்த பள்ளி நிறுவனங்களை நிர்வகிக்க, 1931 ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டார். ஒரு எளிமையான சூழலில் தனது பணியைத் தொடங்கினார். விரைவில், மாணவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். மாணவர்களின் செல்வ வளமிக்க பெற்றோரின் நன் மதிப்பையும் பெற்றார். அந்த நாட்டின், வறுமையில் வாடிய மக்களுக்கு, மேலும் பல சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த அவருக்கு வாய்பளித்தது.

ஏழைகளின் சகோதரி :
சிறப்பு மிக்க வல்லுனர்களிடம் இலவச ஆலோசனைகள் பெற்று, சேன் ஜோஸ் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் வசிக்கும் ஏழை குடிமக்களுக்கு அவர் மருத்துவம் மற்றும் கல்வி சம்பந்தமான தன்னார்வ சேவைகள் பல புரிந்தார். குடியிருப்பு இல்லாத ஏழைகளின் தேவை உணர்ந்து, அவர்களுக்கு வீடுகள் கட்டித்தர உதவி செய்தார். அவருடைய இந்தப் பணிகள் அவருக்கு மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுத்தந்தன. 1968 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பெண்கள் கூட்டமைப்பு அவருக்கு அந்த ஆண்டின் சிறந்த பெண்மணி என்ற விருதையும் 1976 ஆம் ஆண்டு கோஸ்டா ரிகா ரோட்டரி கிளப் அவருக்கு தங்கப் பதக்கத்தையும் பெற்றுத் தந்தன. 1977 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாள் தாம் இறக்கும்வரை அவர் தனது பணிகளைச் செய்து வந்தார். அவரது கன்னியர் மட அதிபர் அவருக்கு விடுமுறை வழங்கிய முதல் நாளிலேயே அவர் இறைவனடி சேர்ந்தார். 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்.

செபம் :
இறைவா, ஏழைகளுக்கும் துன்பப்படுகிறவர்களுக்கும் உமது அளவுகடந்த அன்பை வெளிப்படுத்துகிறீர். தேவையில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உதவ, வணக்கத்திற்குரிய மரியா ரோமேரோ மெனிசஸின் முன் மாதிரிகை எங்களுக்கு உதவுவதாக, கிறிஸ்து வழியாக ஆமென்.

இவர்களின் அடிச்சுவட்டில் :
தலைநகர் கோஸ்டா ரிகா வின் கவனிப்பாரற்ற சுற்றுவட்டாரப் பகுதியில், மறைபரப்பு மற்றும் அறச்செயல் பணியில் ஈடுபடும் மாணவர்களை தயாரிக்கும்போது மரியா ரோமெரோ மெனிசஸ் தொடர்ந்து கூறுவது :
இயேசுவைக் கொண்டு வராமல், ஏழைகளுக்கு உணவும் உடையும் மட்டும் கொண்டு வந்தால், நமது ஏழை சகோதரர்களை முன்பைவிட ஓர் ஏழ்மை நிலைக்குத் தள்ளி விடுவோம்.
தொலைக்காட்சி வானொலி, நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் தொண்டு செய்யும் பணிகளுக்கு அழைப்பு விடுக்கின்றன. கிறிஸ்துமஸ் பெரிய இசைக்கருவியாளர் குழு, 1993 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் ஜெர்சி ஆஸ்விக் என்ற பல்வகை வான்வெளி பரப்பு கருவிகள் குழு ஒவ்வொரு ஆண்டும், இசைக்கச்சேரி நடத்துகிறார்கள். யூ.எஸ். உட்பட பல நாடுகளில் இந்த குழு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. ஆனால், நம்மில் எத்தனை பேர், நம்மிடமுள்ள பணம் மட்டுமல்லாமல், நமது நேரம், பொறுமை, நல்ல வார்த்தை இவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்கிறோம். காணிக்கைப் பெட்டியில் போடப்படும் ஒரு காசு நமது மனநிலையை திருப்தியடையச் செய்கிறது. ஆனால் அந்த நேரம் மிகக்குறுகிறது. கொடுப்பது ஒரு அருமையான கலை. அதனால் நமது இதயப் பூர்வமான ஈடுபாடும், நமது உள்ளமும் உண்மையான கொடுத்தல் ஆகும்.

 

image