St. Rufina And Secunda

ஜுலை 10

புனிதைகள் ருஃபினாவும் செகுந்தாவும்

mary

புனிதைகள் ருஃபினாவும் செகுந்தாவும்

பிறப்பிடம் : உரோம், இத்தாலி
நினைவு நாள் : ஜூலை 10

வீரத்தைக் கண்டவர்கள்
மறைசாட்சிகள்

பழமையான மறைசாட்சிகளின் புத்தகம் என்ற நூலின்படி ருஃபினாவும், செகுந்தாவும் அஸ்தெரியஸ் என்ற உரோç செல்வந்தரின், அழகான மற்றும் தெளிவான இரு மகள்களாவர். இந்தக் குடும்பம் கிறிஸ்துவ குடும்பமானதால், அஸ்தெரியஸ் தனது இரு மகள்களுக்கும், கிறிஸ்துவ வரன்களைத் தேடினர். செல்வச் செழிப்புள்ள குடும்பங்களிலுள்ள அர்மெந்தேரியஸ் மற்றும் வெரினஸ் என்ற இரண்டு இளைஞர்களைக் கண்டுபிடித்தார்.
உரோமைப் பேரரசன் வலேரியன், கிறிஸ்தவர்களை துன்புறுத்தி அழித்து வந்தபோது, திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நான்கு இளம் வயதினரும் சிக்கலில் மாட்டிக்கொண்டதை உணர்ந்தன. அர்மெந்தேரிய‘ம் வெரின‘ம் தங்களது உடைமைகளைக் காப்பாற்றிக் கொள்ள, தங்களது மதத்தைக் கைவிட்டனர். ஆனால் அந்தச் சகோதரிகள், எத்ருரியா நாட்டுக்கு ஓடிவிட முடிவு செய்தனர். பிழைக்க வழிதேடி, அர்மெந்தேரிய‘ம் வெரின‘ம் இந்த பெண்களைக் கைவிட்டுவிட எண்ணினர். ருஃபினாவும் செகுந்தாவும் கைது செய்யப்பட்டு உரோமை ஆளுநர் ஜூனியஸ் தோனேதஸ் முன் இழுத்துச் செல்லப்பட்டனர்.

சித்ரவதையைப் பொறுத்துக் கொள்ளுதல் :
இந்த நம்பிக்கையுள்ள பெண்களைத் தண்டிக்க, தோனேதஸ் முடிவு செய்து, செகுந்தா பார்த்துக் கொண்டிருக்க முதியவளான ருஃபினா சாட்டையால் அடிக்கப்பட்டாள். எனது சகோதரியை இவ்வாறு மரியாதை செய்து, என்னை ஏன் அவமதிக்கிறாய் என்று செகுந்தா கத்தினாள். தயவு செய்து எங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் சாட்டையால் அறையும். இயேசுதான் கடவுள் என்று நாங்கள் இருவரும் சத்தியம் செய்தோமே. தங்களது நம்பிக்கையிலிருந்து பின்வாங்க மாட்டார்கள் என்றுணர்ந்த தோனேதஸ் இவர்களுடைய தலையை  வெட்டி கொலை செய்தான். புளோடில்லா என்ற புறச்சமயச் சார்புடைய பெண் ஒருவர் இரகசியமாக இவர்களின் உடலை அடக்கம் செய்தார். இந்த இடம் இவர்களின் நினைவாக முதலில் கருப்புக்காடு என்றும் பின்னர் வெள்ளைக்காடு என்றும் அழைக்கப்பட்டது. புளோட்டில்லாவும் பின்னர் ஒரு கிறிஸ்துவராக மாறினார். அவர்களின் கல்லறையின் மேல் ஒரு கோவில் கட்டப்பட்டது. ஆனால் இன்று அதன் அடையாளம் ஒன்றும் அங்கில்லை. பிற்காலத்தில், புனிதைகள் ருஃபினா, செகுந்தா இவர்களின் ஆலயம் உரோமில் அவர்கள் வசித்ததாகக் கருதப்படும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

செபம் :
விண்ணகத் தந்தையே, ருஃபைனா மற்றும் செகுந்தா என்ற ஆசீர்வதிக்கப்பட்ட சகோதரிகளின் முன்னுதாரணத்தை எங்களுக்குத் தந்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். வேதனை நேரங்களில், நாங்கள் உமது நம்பிக்கையில் நிலைத்திருக்க, எங்களுக்கு போதிய பலத்தைத் தாரும். வாழ்க்கையில் இழப்புகள் ஏற்படும்போது, உம்மில் மகிழ்ச்சி கொள்ள, நாங்கள் பழகிக்கொள்ள அருள்தாரும். எங்கள் நண்பர்கள் எங்களைக் கைவிட்டபோதும், நீர் எங்களிடமிருந்து விலகிச் செல்ல மாட்டீர் என்பதை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவும், உம்மை நேசித்து, சேவை புரியும் நல் மனதைத் தந்தருள வேண்டுமென்று உமது மகனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டுகிறோம். ஆமென்.

இவர்களது அடிச்சுவட்டில் :
தங்களைத் திருமணம் முடித்து, நம்பிக்கைக்குரியவர்களாய் வாழ வேண்டிய மனிதர்களால் ருஃபினாவும் செக்குந்தாவும் ஏமாற்றப்பட்டார்கள். குடும்ப ஏமாற்றுதல் சண்டை சச்சரவுகளுக்கு வழிவகுக்கும். இதனால்தான் குடும்ப அமைதி அமைப்பு ஜமைக்காவில் தொடங்கப்பட்டது. குடும்ப தகராறுகளுக்கு, கல்வி மூலமாகவே தீர்வு கண்டு தனி மனித உறவு மேம்பட உதவும் என்று தீர்மானித்து ஜமைக்கா பிளேன் நகரில் இல்லங்களில் அமைதி என்ற அமைப்பு தோன்றியது. இதன் செயல்பாடுகள் இவற்றை உள்ளடக்கியுள்ளன. ஒரு குருவைத் தலைவராகக் கொண்டு இளைஞரை கருத்தில் கொண்டு, போராட்டம் தடுப்பு முகாம். பெண்கள் கல்வி மற்றும் இறையாண்மை திட்டம் - பெண்கள் தங்கள் சொந்த அனுபவங்கள் அடிப்படையில் பெரிய சமுதாய சீரமைப்பு. வீட்டுக் கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம். இந்த அமைப்பு வீட்டு கொடுமைகள் பற்றிய 6,00,000 பிரதிகள் கையேடுகள் விநியோகிக்கப்பட்டன.

சைனாலில், பிஜிங்கில் பெண்களின் நிலை என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக மாநாடு நடைபெற்று, நமது வாழ்வைக் காப்போம் என்ற தலைப்பில் ஆவணப்படத்திற்கு அக்கதமி பரிசு வழங்கப்பட்டது.

லி. ஜெ. ஜோசப்

 

image