St. Benedict St. Olga
St. Placidus St. Sigisbert

ஜுலை 11

J}a

mary

புனித பெனடிக்ட்

புனித பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்)

பிறப்பிடம் : நர்சியா, இத்தாலி
நினைவு நாள் : ஜூலை 11

ஆறுதல் தேடி
மேற்கத்திய குருமட வாழ்வியல் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாவலர்

480 ஆண்டளவில் பெனதிக்த் பிறந்தபோது, உரோமைப் பேரரசு பிளவுபட்டுக் கிடந்தது. சிறுவனாயிருந்தபோது, போரின் தாக்கம் தெரிந்திராத உரோம் நகரில் அவர் படித்து வந்தார். உடன் பயின்ற மாணவர்கள், படிப்பை விட, குடி, கேளிக்கையாட்டங்களில் ஈடுபட்டிருந்தபோது வாழ்க்கைக்கு மிகுந்த பொருள் உண்டு என்று நம்பினார். அவர் குடும்பத்தைத் துறந்து, பள்ளியை விட்டு, துறவு வாழ்க்கை மேற்கொள்வதற்காக பியாகோ என்ற ஊரில் ஒரு குகையில் துறவியாக வாழச் சென்றார். மிருகங்களின் தோலையே ஆடையாக அணிந்து கொண்டு, வெறுமையான மலைநாடுகளில், மூன்று ஆண்டுகள் ஜெபத்திலும், திருநூல்களைக் கற்பதிலும் செலவிட்டார். அங்கு ஒவ்வொரு நாளும், நண்பரான ஒரு துறவி அவருக்கு ஒரு கயிற்றின் வழியாக இறக்கி ரொட்டியுணவு வழங்கி வந்தார். பெனதிக்தின் மீது மதிப்பு மரியாதை அதிகமாகி, ஒருநாள் அங்குள்ள துறவிகள் தங்களின் துறவு மடத்திற்கு அதிபராக இருக்குமாறு வேண்டினர். அவரது கடுமையான ஒழுக்க நெறியைக் கடைப்பிடிக்க முடியாமல் அவர்கள் கிளந்தெழுந்து, அவருக்கு வி­ம் கொடுத்து கொல்ல முயன்றனர். அவர், அந்த வி­ம் கலந்த திராட்சை இரசத்தை ஆசீர்வதித்தபோது, அந்தக் கிண்ணம் உடைந்து சிதறியது. இவரது உயிரும் காப்பாற்றப்பட்டது என்று பாரம்பரியம் கூறுகிறது.

பெனதிக்தைப் பார்த்து, கடவுளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக, எல்லா நிலைகளிளுமிருந்தும் மக்கள் கூடியபோது, ஒரு பகிரும் சமூகமாக அவர்களை ஒன்றிணைக்க முடிவு செய்தார். விரைவில், பெனதிக்த் 12 குருமடங்களைத் தோற்றுவித்தார். 527 ஆம் ஆண்டு மோந்தி கேசினோ நகருக்குச் சென்று பெனதிக்தன் சபையை  நிறுவினார்.

மேற்கத்திய துறவு மடங்களை உருவாக்கியவர் :
ஒரு சராசரியான வாழ்வுக்கு, மக்களுக்கு கல்வியும், வேலையும் அவசியம் என்பதை உணர்ந்தார். புகழ்மிக்க தூய பெனதிக்தின் ஒழுங்கு முறைகள் என்ற நூலை எழுதினார். அதுவே மேற்கத்திற ஐரோப்பாவில் துறவியருக்கு நடைமுறை விதிகளாக விளங்கியது. ஜெபிப்பது, திருமறை நூல்களை விளக்கி விவாதிப்பது, மற்றும் உடல் உழைப்புப் பணிகள் செய்வதில் தினமும் ஈடுபட்டனர். பெனதிக்தின் மகிழ்ச்சி நிறைந்த சகோதரத்துவ துறவு வாழ்வு, குழப்பமான ஐரோப்பாவில், நெறிமுறையான வாழ்வுக்கு வழிகாட்டியது. மேலும் அவரது வாழ்வியல் இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகிறது.

செபம் :
தந்தையே, உம்மைப் புரிந்து கொள்வதிலும், ஆழ்ந்து உய்த்துணர்வதிலும் உம்மைப் புகழ்வதிலும், உமது நன்மைத்தனத்தில் எனக்கு நுண்ணறிவைத் தந்தருளும். உம்மைத் தேடி கண்டுணரவும், உம்மைப் புரிந்து கொள்ளும் ஞானத்தைப் பெறவும், உம்மை உணர்ந்து கொள்ளவும், உமது அன்பினால் ஆற்றல் தந்தருளும். உம்மைப் பற்றியே, சிந்திக்கும் இதயத்தையும், கேட்கும் செவிகளையும் பார்க்கும் விழிகளையும், பேசும் நாவினையும் உமது அருளினால் தந்தருளும். உமக்கு விருப்பமானவற்றையே உரையாடவும், உமக்காகவே காத்திருக்க பொறுமையையும், உம்மைக் கண்டுணர விடா முயற்சியையும் உமது இரக்கத்தினால் என்மீது பொழிந்தருளும். முழுமையான, பக்தியுள்ள உடனிருப்பையும் தந்தருளும். ஆமென்.

இவர்களது அடிச்சுவட்டில் :
சுபியாகோவின் மலைஉச்சி குகையில் தனிமை கொடுமையாக இருந்திருக்கும். 14 நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் நிலைத்திருக்கும்படியான ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு சபையை நிறுவுவதற்கு பெனதிக்தின் நெடுங்காலத் தவமும் ஜெபமும் ஆழ்ந்த ஈடுபாடும் உதவியாயிருந்தன.

இன்றைய உலகில், பணி நிறைவு காலமும் பொறுப்புக்களும் நெருக்கடியான கால அட்டவணையை கொடுத்திருப்பதால், அமைதியாகக் கழிப்பதற்கான நேரங்களையும் நாம் ஒதுக்கீடு செய்ய வேண்டியதாயிருக்கிறது. உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைகளைக் கேட்பதற்கு, மனம் மற்றும் உள்ளம் திறந்த அமைதியான நேரங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. உங்களது ஆன்மாவைப் பிரதிபலித்து புதுப்பிக்கக் கூடிய தியானத்தில் சில நாட்கள் செலவிடுவதைக் கருத்தில் கொள்வோமாக.

திருமண வார்த்தைப்பாடு புதுப்பிக்கப்பட்டு நம்பிக்கைகளைப் பரிமாறிக்கொள்ளும் தம்பதியருக்கு கொடுக்கப்படும் தியானம்.
குழுக்களுக்கு அளிக்கப்படும் தியானம், புதிதாக ஓய்வு பெறும் மக்கள், இளைஞர் நண்பர்கள் குழு, அல்லது இடறுவதற்கு வாய்ப்புள்ள இளம் வயதினர்.
தவக்காலத்தில் ஆன்மாவை தூய்மைப்படுத்தும் தியானங்கள்.

உயிருள்ள நீரினால் தூய்மை பெறும் கத்தோலிக்க தியான மையங்கள் போன்ற நிறுவனங்கள் தனியார் தியானங்கள் கொடுக்கின்றன.

 

லி. ஜெ. ஜோசப்

image