St. Clelia Barbieri St. Henry II St. Silas

ஜுலை 13

புனித இரண்டாம் ஹென்றி

mary

புனித இரண்டாம் ஹென்றி

பிறப்பிடம் : அல்பாக், பவாரியா
திருவிழா நாள் : ஜூலை 13

தன்னிகரில்லா தலைவர்
தூயதிரு நேர்ச்சியாளர்களின் பாதுகாவலர், ஊனமுற்ற மக்கள், குழந்தைப்பேறில்லா மக்கள் மற்றும் அரசர்களின் பாதுகாவலர்

கிசேலாவின் பர்கந்தி நகரைச் சேர்ந்த ஹென்றி சிற்றரசன், அங்குள்ள ஹில்தே´ம் என்னும் பேராலயப் பள்ளியில் சேர்க்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் திருச்சபைக்காக உழைக்க, பதிவு செய்யப்பட்டார். 995 ஆம் ஆண்டு அவரது தந்தையைத் தொடர்ந்து, சிற்றரசராக பணியேற்றதினால், அவரது குருத்துவ அருள்பொழிவு தடைப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், ஹென்றியின் சித்தப்பா, மூன்றாம் ஓட்டோ அரசர் காலமானதும், ஹென்றி ஜெர்மனியின் அரசரானார். புனிதமான உரோமை பேரரசு முழுவதும் ஆண்டு வந்த ஹென்றியின் அரசாட்சி, இதற்கு உரிமை கொண்டாடிய சில சிற்றரசர்களால் எதிர்க்கப்பட்டது. மேலும் அவர்கள் ஐரியாவின் அர்டீன் என்பவரை தன்னிச்சையான அரசராக ஏற்றுக்கொண்டார்கள். 1004 ஆம் ஆண்டு, தன்னை எதிர்ப்போரை அடக்குவதற்காக, அவரது படையினருடன் ஹென்றி அரசர் ஆல்ப்ஸ் சிகரத்தைக் கடந்து சென்றனர். மிலான் பேராயர் அவர்களால் இத்தாலியின் அரசராக முடிசூட்டப்பட்டார். மேலும் 1014 ஆம் ஆண்டு தன்னை புனிதமான உரோமை அரசராகவும் எட்டாம் பெனதிக்து திருத்தந்தையால் திருநிலைப்படுத்தப்பட்டார்.

நல்ல அரசர் ஹென்றி :
அவரது சிறுவயது கல்வியினால், ஹென்றி திருச்சபையின் தனித்தன்மையை மதித்தார். பாப்பரசரின் தன்னிகரில்லா மேன்மையையும் அங்கீகரித்தார். இரக்கமும் அறிவுத்திறனும் கொண்ட ஆட்சியாளராகிய இவரும் இவரது மனைவியர் திருமதி குனிகுண்டாவும் கிறிஸ்து அரசர் வளருவதற்குப் பெரிதும் பாடுபட்டனர். திருச்சபையின் ஆதிக்கத்தை விரிவுபடுத்த கொண்டிருந்த ஆவலைப்போன்று தனது அதிகாரத்தையும் பலப்படுத்திக் கொள்ள ஹென்றி அதிகம் தூண்டப்பட்டார்.
1021 ஆம் ஆண்டில் இத்தாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹென்றி, மான்டி கேசினோ என்னுமிடத்தில், பெனதிக்துவிடம் உருக்கமாக வேண்டுதல் செய்தபோது, உடனடியாக தீராத நோயிலிருந்து விடுபட்டார். என்றாலும் கால் ஊனமடைந்தார். பின்னர், தான் ஒரு துறவியாக வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அவரது நற்பணிகளைத் தொடர்வதற்கு அரசராக தொடர வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டார். குனிகுண்டாவை மணந்ததில் அவருக்கு மகப்பேறு கிடைக்கவில்லை. அவரது இறப்புடன் சாக்ஸன் சாம்ராஜ்யம் முடிவுற்றது.

செபம் :
அன்புத்தந்தையே இறைவா, துன்புறுவோருக்காக நாங்கள் உம்மிடம் வருகிறோம். அவர்களது துன்ப துயரங்களைத் தாங்கிக்கொள்ள அவர்களுக்கு திடமளிக்க உம்மை வேண்டுகிறோம். அவர்களை நேசித்து அவர்களைத் தாங்கிக் கொள்ள மனமுள்ள மக்களால் சூழப்பட்டிருக்கச் செய்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக நிறைவேற்றித்தாரும். ஆமென்.

இவர்களது அடிச்சுவட்டில் :
துன்பங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் விடுதலைபெற, உடல் ஊனமுற்ற மக்களுக்கு பாதுகாவலரான புனித ஹென்றியிடம் மக்கள் வேண்டுகின்றனர். நம்பிக்கையின் தேர் என்றழைக்கப்படும் இக்காலத்திய ஒரு நிறுவனம் உடல் ஊனமுற்றோருக்கு உதவிகள் செய்து வருகின்றது. 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இந்த நிறுவனம் உடல் ஊனமுற்று முடங்கிக் கிடக்கும், நம்பிக்கை தளர்ந்த மக்களுக்கு இந்த நற்செயல் பணிக்கு தங்களையே ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பெரியோராவர். இந்த உலகில் 180 இலட்சம் மக்கள் படுத்த படுக்கையாகி இருக்கிறார்கள்.

உலகின் கிழக்குப் பகுதியிலும், முன்னேற்றமில்லாத மூன்றாம்தர நாடுகளிலும் சக்கர நாற்காலி ஒரு விலையுயர்ந்த பொருளாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் நல்வாய்ப்பு அமைப்புகள் விசிறி எறிந்த சக்கர நாற்காலிகளைப் பழுதுபார்த்து திரும்பவும் பயன்படுத்தலாம். எங்கே நம்பிக்கை உள்ளதோ அங்கே வெற்றியுள்ளது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு நல்வாய்ப்பு நிறுவனம், வேண்டாமென்று எறியப்பட்ட சக்கர நாற்காலிகளை தென் ஆப்பிரிக்காவில் ஒரு மருத்துவமனையில் படுக்கையை விட்டு இறங்காத ஒரு 9 வயது பெண் குழந்தை முதன் முறையாக ஒரு சக்கர நாற்காலியினை இலவசமாகப் பெற்றது. நம்பிக்கையின் நாற்காலிகள் இதுபோன்று உதவியவர்களை நினைவில் கொள்கிறது, உலகம் மறந்தாலும் கூட.

லி. ஜே. ஜோசப்

image