St. Bonaventure St. Edit Of Polesworth St. Vladimir OF Kiev

ஜுலை 15

புனித போனவெஞ்சர்

mary

புனித போனவெஞ்சர்

பிறப்பிடம் : பேக்னோரிக்கியோ, இத்தாலி
திருவிழா நாள் : ஜுலை 15

கற்பித்தலும் பகிர்தலும்
ஆயர், கர்தினால் மற்றும் திருச்சபையின் டாக்டர்

1243 ஆம் ஆண்டில் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோது, பிறந்தபோது ஜியோவன்னி டிஃபிடான்ஸா என்று அழைக்கப்பெற்றவர் போனவெஞ்சர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவர் பாரி‘க்குச் சென்று இறையியல் பயின்று பின்னர் ஒரு ஆசிரியர் ஆனார். 1253 ஆம் ஆண்டு போனவெஞ்சர், பாரிசிலுள்ள போனவெஞ்சர் பள்ளியை தனது கண்காணிப்பில் எடுத்துக்கொண்டார். நான்காண்டுகளுக்குப் பின் அவர் அந்த போனவெஞ்சர் துறவற சபைக்குத் தலைவரானார்.
1257 ஆம் ஆண்டு அந்த சபை சகோதனையைச் சந்தித்தது. எவ்வளவு விரைவாக வளர்ந்ததோ அவ்வளவு விரைவாக வீழ்ச்சியுற்றது. அது துறவிகளிடையே பிரிவினையை ஏற்படுத்தியது. ஒரு பிரிவினர் புனித பிரான்ஸ் போன்று எளிமை வாழ்வை குறிக்கோளாக எடுத்துக் கொண்டனர். மற்றவர்கள் பிரான்ஸிஸ்கன் உறுப்பினர் உலகியல் வாழ்வின் உறுப்பினராகி இருந்த போதிலும் சபையைத் தோற்றுவித்தவரின் கொள்கைகளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கலாம் என்று கருதினர்.
போனவெஞ்சர் இந்த இரண்டு கொள்கைகளுக்கும் நடுவழியை தேர்ந்தெடுத்தார். அவர் ஒரு எளிமையான புனிதமான வாழ்வு வாழ்ந்தார். மேலும் அந்த சபையானது, சொத்துக்களைத் தனதாக்கிக் கொண்டு அறிவார்ந்த குறிக்கோளுடன் வாழலாம் என்று வாதிட்டார்.

விருப்பு வெறுப்பற்ற மறையியலாளர் :
போனவெஞ்சர் மதிக்கப்பட்ட மறையியலாளராகவும் மறைஞானியாகவும் இருந்தார். கிறிஸ்தவர்கள், தங்களது நேர்மையான நடத்தையினாலும் செபத்தினாலும் தங்களின் ஆன்மாவை தூயதாக்கிக் கொள்ள வேண்டுமென்று விரும்பினார். செபம் என்பது கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே ஒரு மெய் மறந்த உறவை ஏற்படுத்தும். 1265 ஆம் ஆண்டு, யார்க் நகரின் பேராயர் பதவியை நிராகரித்தார். எட்டு வருடங்களுக்குப் பின்னர் அல்பேனோவின் ஆயர்- கார்டினல் பதவியை ஏற்றுக்கொண்டார். பத்தாம் கிரெகரி திருத்தந்தையின் தூதுவர்கள் போனவெஞ்சரிடம் அவரின் பணிநியமன ஆணையை எடுத்துவரும்போது, தனது குருமடத்தின் தட்டுகளையயல்லாம் கழுவி முடிக்குமட்டும் அவர் இயல்பாகவே அவர்களைக் காத்திருக்க வைத்தார்.
உரோமன் மற்றும் கிரேக்க திருச்சபைகளை ஒன்றிணைக்க ஏற்படுத்தப்பட்ட லாயன்ஸ் கவுன்சிலில் 1274 ஆம் ஆண்டு பணியாற்றினார். மறுபடியும் மாறுபட்ட கருத்துள்ள மறையியலாளரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த, போன்வெஞ்சர் மேலும் பாடுபட்டு ஜூலை 15 ஆம் நாள் லாயன்ஸ் நகரில் உயிர் துறந்தார்.

செபம் :
ஓ, என் இனிய அரசரான இயேசுவே, உமது அன்பரான மகிழ்ச்சியூட்டும் சுகமளிக்கும் காயங்களால் எனது உள்மன ஆன்மா ஏங்குகின்றன. உண்மைçயான, அமைதியான மற்றும் தூய அப்போஸ்தலிக்க நன்மைத்தனம் பெற்றுக்கொள்ளச் செய்தருளும். என் இதயம் மறுபடியும் உமக்காக ஏங்கி உம்மை உணவாகப் பெற்றுக்கொள்ளச் செய்தருளும். இத்தகையோரை வானதூதர்கள் சந்திக்க விரும்புவார்கள். எனது உள்மன ஆன்மா உம்முடைய இனிமையான நினைவுகளினால் நிறைந்திருப்பதாக. ஆமென்.

இவர்களது அடிச்சுவட்டில் :
புனித பிரான்ஸிசுக்கும் அவரது படிப்பினைகளுக்கம் போனவெஞ்சர் தன்னை அர்ப்பணித்திருந்தார். பிரான்ஸிஸ்கன் சபையின் தலைவராக, சபையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளையும், திருச்சபையின் உட்பிளவுகளைச் சரிசெய்யவும் வேண்டிய அரிதான பணிகளை அவர் உணர்ந்திருந்தார். ஆன்மீக செயல்பாடுகளில், ஒற்றுமை என்பது அவ்வளவு எளிதல்ல. அரசியல் மற்றும் மறையியல் வேறுபாடுகள் கிறிஸ்தவ சமூகத்தை பலவிதமான பிரிவினை சபைகளாக மாற்றியிருந்தன. ஆனால் தற்போதைய காலங்களில் பல கிறிஸ்தவர்கள் பொதுவான கொள்கைகளின் அடிப்படையில் இணைந்திருக்கின்றன. 1950 ஆம் ஆண்டில் கிறிஸ்தவ சபைகளிடையே பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க, திருச்சபையின் தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்டது. இன்று இந்த திருச்சபையின் தேசிய கூட்டமைப்பிலுள்ள 36 உறுப்பினர் சபைகளின் பணிகள் வருமாறு :

இன வேறுபாடு, வறுமை மற்றும் அநீதியை எதிர்த்துப் பேராடுவது.
கிறிஸ்தவ கல்வியை மேம்படுத்துவது
பொதுவான வாழ்வியல் தத்துவங்களில் வாதிடுவது
கிறிஸ்துவை முன்னடையாளமாகக் கொண்டு வாழ்வதுதான் பொதுவான குறியீடு, அதிமுக்கியமானது என்பதை அந்த கூட்டமைப்பு உணர்ந்துள்ளது.

image