St. Alexis Of Rome St. Nerses Lambronazi St. Pope Leo IV

ஜுலை 17

உரோம் நாட்டின் புனித அலெக்சிஸ்

mary

உரோம் நாட்டின் புனித அலெக்சிஸ்

குணமாக்குதலும் உதவுதலும்
திருப்பயணியர் மற்றும் பிச்சைக்காரர்களின் காவலர்

அலெக்ஸிஸ் என்பவர் அலெக்ஸியஸ் மற்றும் அலெசியோ என்றும் அழைக்கப்பட்டவர் உரோமை நகரிலுள்ள உயர்குடும்ப பெற்றோருக்கு ஒரே மகன். சிறுவயதிலிருந்தே அலெக்சிஸ் மதப்பற்று மிக்கவராக இருந்தார். ஓர் அரசிளங்குமரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அவரை ஆடம்பரமாகத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடைபெற்ற அந்த இரவில் அலெக்ஸின் மனைவி அவரை விடுவிக்க மனிமிசைந்தார். அவர் இரகசியமாக தனது தந்தை வீட்டிலிருந்து விடுவித்துக் கொண்டு சிரியாவுக்கு கால்நடையாகச் சென்றடைந்தார். அவர் அங்கு குடியேறி ஒரு பிச்சைக்காரராக, எடிசா மாதா கோவிலிலருகில், ஒரு குடிசையில் 17 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். அந்த நேர்மையான கிறிஸ்தவர் தனக்குத் தேவையானதை மட்டும் பெற்றுக்கொண்டார். இதற்கிடையில் அலெக்சிஸின் பெற்றோரின் பணியாளர்கள் அவரைத் தேடி சிரியாவுக்கு வந்தனர். அலெக்சி‘க்கு மகிழ்ச்சியும் எதிர்பாராத அதிர்ச்சியுமாக அவர்கள் அலெக்சிஸை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் அவரை பிச்சைக்காரன் என்றெண்ணி அவருக்க பிச்சை போட்டனர்.

கடவுளின் மனிதர் :
கன்னிமரியாள் அலெக்சி‘க்குக் காட்சி தந்து, அதிசயமாக அவரிடம் பேசியதையும் அவரைக் கடவுளின் மனிதர் என்று அழைத்ததையும் கண்டு, அலெக்சிஸ் எல்லோருக்கும் தெரிந்த மனிதராக மாறினார். மறைவாக வாழமுடியாமல், தர்சு நகரிலுள்ள தூய பவுலின் இல்லத்திற்கு செல்ல கப்பலேறினார். ஆனால் இத்தாலியில் உரோம் நகரை நோக்கிக் காற்று வீசியதால், அவர் உரோம் வந்து சேர்ந்தார். அலெக்சிஸ் தனது குடும்பத்தாரின் வீட்டுக்குச் சென்றார். அவரது பெற்றோர் அவரை இனம் கண்டுகொள்ளவில்லை. அலெக்சிஸ் தங்குவதற்கு இடம் கேட்டதின்பேரில், படிக்கட்டுகளின் கீழ் படுத்துறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அங்கேயே மேலும் 17 ஆண்டுகள் தங்கியிருந்து ஜெபிப்பதும் குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுப்பதுமாக வாழ்ந்து வந்தார். இறப்பு தன்னை நெருங்குவதை உணர்ந்த அலெக்சிஸ், அவர் தனது வாழ்க்கைச் சரிதையை பற்றி கதையாகக் கடிதத்தில் எழுதினார். 404 ஆம் ஆண்டு போப் நிகழ்த்திய திருப்பலியில் ஒரு அசரீரீ குரல் கேட்டது. கடவுளின் மனிதரைத் தேடுங்கள், அவர் உரோமுக்காக வேண்டுவார். கடவுள் அவருக்கு செவிசாய்ப்பார். அவர் வெள்ளிக்கிழமையன்று இறப்பார். அந்த வாரம் அலெக்சிஸ் படிக்கட்டின் கீழ் தனது கையில் கடிதத்துடன் இறந்து கிடந்தார்.

செபம் :
உங்களுக்கு ஒரு ஆசிரியர் உண்டு ; நீங்கள் எல்லோரும் சகோதரர்கள். இந்தப் பூவுலகில் யாரையும் தந்தையயன்று அழைக்க வேண்டாம். ஆனால் உங்களுக்கு விண்ணுலகில் உங்களுக்கு மீட்பராகிய தந்தை உண்டு. உங்களுள் மேலானவர் உங்களுக்கு உதவியாளராக இருக்கட்டும். தன்னை உயர்த்துகிறவர் தாழ்த்தப்படுவார். ஆனால் தம்மை தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார்.

இவர்களது அடிச்சுவட்டில் :
சுகபோகமான வாழ்க்கையத் துறந்து, அலெக்சிஸ் ஒரு பிச்சைக்காரராக தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டார். பிறர் கொடுக்கும் தானதர்மங்களைக் கொண்டு தனது புதிய வாழ்க்கையை நடத்திச் செல்ல அவர் முடிவு செய்தார். இன்று பிறரைச் சார்ந்து நில்லாமல், தன்னிறைவு பெற வேண்டுமென்பதே ஏழைகளின் குறிக்கோளாக இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள வணிகர் ஜாண் பிரயான்ட் பிறர்க்கு உதவுவதில் மகத்தான செயலாற்றுகிறார்.
அமெரிக்காவில் முதல்முதலாக இலாப நோக்கமில்லாத முதலீடு வங்கி நிறுவனத்தை நிறுவினார். அதற்கு செயல்படும் நம்பிக்கை  (Hope) என்று பெயர் சூட்டினார். நிதி நிறுவனங்களின் உதவி பெற இல்லாத தனி நபர்களுக்கும் குடும்பங்களுக்கும் தன் நிறைவு ஊக்கம் அளிக்கிறது. இலாப நோக்கமில்லாத வங்கி நிறுவனக் குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நகரங்களுக்கிடையே கனினி சார்ந்த சைபர் (cyber) சிறு நிறுவனங்களும் செயல்படும் நம்பிக்கையின் ((Hope) துணை நிறுவனங்களும் இணைந்த வலைத்தள சேவை மையங்களுக்கும் பிரயான்ந் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். (க்ஷிலிஸ்ரீe) நம்பிக்கை நிறுவனம் செய்துவரும் நிதியுதவி சேவைகள்  பின்வருமாறு,
10 முதல் 20 வயதுடைய இளைஞர்களுக்கு பொருளியல் கல்வி அளித்தல். சிறு சிறு வியாபரம் செய்ய உதவுதல். 260 லட்சம் ஏழை மக்கள் பற்று வரவு அட்டை பழக்கத்துக்குக் கொண்டு வருதல். =

லி.ஜே. ஜோசப்

 

image