St. John Plessington St. Macrina The Younger St. Symmachus

ஜுலை 19

புனித மக்ரீனா

mary

இளையவரான புனித மக்ரீனா

பிறப்பிடம் : கப்பதோசியாவின் கசாரியா
திருவிழா : ஜூலை 19
கற்பித்தலும், பகிர்தலும்

போந்தஸ் மடத்தின் அதிபர்
கசாரியா நாட்டில் 330 ஆம் ஆண்டளவில், புகழ்பெற்ற குடும்பத்தில் பத்து பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்தவர் மக்ரீனா என்பவர். இவரது தாயார் எமிலியா என்பவர் இவருக்கு திருமறைநூல் வாசிப்பதிலும் வீட்டுப்பணிகளை மேற்கொள்வதிலும் பயிற்றுவித்திருந்தார். இவரது 12 ஆம் வயதில் மக்ரீனா வுக்கு திருமண நிச்சயம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்க முன், மணஉறுதி செய்யப்பட்ட மணமகன் இறந்து விட்டார். பொருத்தமான வேறு ஒருவரை மணமுடிக்க மணமில்லாமல் அவர் தனது வாழ்வை கடவுளுக்கு அர்ப்பணித்தார். மேலும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் பாடம் கற்பித்து வந்தார். தனித்துவம் மிக்க இந்த கிறிஸ்துவக் குடும்பத்திற்க மக்ரீனா ஆன்மீகத் தலைவியாகத் திகழ்ந்தார். இவரது பாட்டியார் மற்றும் இவரது பெற்றோர் புனிதர்களாய் அறிவிக்கப்பட்டதுபோல, செல்வாக்கு மிக்க ஆயர்களாக விளங்கிய இவரது சகோதரர்கள் பேசில், கிரகோரி மற்றும் பீட்டர் ஆகியோர் பின்னர் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். மக்ரீனாவின் தந்தை இறந்தபோது, தனது தாயாரும் மக்ரீனா போந்தஸ் என்னுமிடத்தில் உள்ள இவரது தோட்டம் உள்ளடங்கிய வீட்டில் குடியேறினார். இவர்களுடன் வேறு ஏழைப்பெண்களும் தங்கியிருந்தனர். மக்ரீனா அவர்களுக்கு உணவு உடைகள் வழங்கி ஆதரித்து வந்தார்.

ஒரு எழுச்சியூட்டும் வாழ்வு :
எமிலியா இறந்தபின்னர் மக்ரீனா பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது குடும்பச் சொத்தில் மிச்சமிருந்ததை விற்று, விற்ற பணத்தை ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, தனது சொந்த உழைப்பில் வாழ்ந்து வந்தார். அவரது குடிவாழ்வுக் குழுமம் அவரது குடும்பமாகத் திகழ்ந்தது. அங்கு ஜெபம், தியானம், கடுந்தவம் மட்டுமே வாழ்வாக இருந்தது. ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று அவர்கள் மக்ரீனாவை அவரது சகோதரர் பேசில் உட்பட முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். பேசில் பிற்காலத்தில் கிழக்குப் பகுதி குருமடத்தை நிறுவினார்.

மக்ரீனா இறக்கும் தருவாயில் இருந்தபோது, அவருக்குப் போர்த்துவதற்குக் கூட ஆடையின்றி ஏழ்மை நிலையிலிருந்தார். என்றாலும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். அவரது சகோதரர் கிராகரிக்கு உற்சாகம் தந்தது. தன்னுடைய இளமைப் பருவத்தில், தாழ்ச்சியைக் கற்றுக்கொடுத்த தனது மூத்த சகோதரிக்கு இறுதி வேளையில் இந்த சகோதரர் ஆறுதல் வழங்கினார். அவர் பிற்காலத்தில், மக்ரீனாவின் வாழ்க்கை என்ற நூலை எழுதினார். அதில் அவரின் அர்ப்பண ஆசிரியர் வாழ்வு பற்றிக் குறிப்பிட்டார். மேலும், அந்தக் குடும்பம் கிறிஸ்துவ வரலாற்றில் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தியது பற்றியும் எழுதியிருக்கிறார். ஏற்கனவே இதே பெயரில் புனிதர் ஒருவர் இருந்ததால், இவர் இளையவரான புனித மக்ரீனா என்று அழைக்கப்படுகிறார்.

செபம் :
ஞானத்தின் மீதுள்ள பற்றினால், என்னுடைய மனம் சிறகடித்துப் பறக்க சிறகுகள் கடனாகத் தந்தீர், மேலும் உலகின் இன்ப நலன்களை மெய்யறிவோடு தவிர்த்திட வைத்தீர். உண்மையான தத்துவ இயலின் இருப்பிடமாகவும் மேலும் உமது கடுந்துறவு வாழ்வினாலும், மீட்பரின் மகத்தான மணப்பெண் ஆனீர். அழுவோர்க்கு ஆறுதல் தருபவராகவும், பரிந்து பேசுபவராகவும் இருக்கின்றீர். கடவுளின் அருள்பெற்ற மக்ரீனாவே, மகிழ்ந்து கொண்டாடு.

இவர்களது அடிச்சுவட்டில் :
தனது சகோதரர் சகோதரிகளுக்கு மக்ரீனா கற்றுக்கொணடத்த நேர்மறையான பாடங்கள், அவர்களது வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்றும், இளம் வயதினரிடம் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தி வரும், பலதரப்பட்ட மக்கள் பலர் உள்ளனர். பராபு, விஸ்க் என்னுமிடத்தில் அல்பெர்மன் என்பவர் ஒரு பள்ளி பேருந்தின் ஓட்டநராக இருந்தார். குழந்தைகள் அதிலும், ஒற்றைப் பெற்றோரைக் கொண்ட பிள்ளைகள், குறைந்த வருமானம் உள்ள குடும்பத்துப் பிள்ளைகளுக்கு எவ்வளவு உதவிகள் தேவைப்படுகின்றன என்று தெரிந்து கொண்டார். அதனால், அவர் ஒரு பாடப்பயிற்சி செயல் திட்டத்தை தொடங்கி, ஒவ்வொரு குழந்தையும் நூல்நிலையத்திற்கு ஒழுங்காக சென்று கற்குமாறு ஏற்பாடு செய்தார். மேலும் பல வழிகளில் உதவிகள் செய்தார். பள்ளிக்காக, தனமாகக் கிடைத்த பழைய எழுது மேசைகளை குழந்தைகள் வீட்டுப்பாடம் கற்பதற்காக, தயார் செய்து கொடுத்தார். குழந்தைகளின் வீடுகளுக்கு நூலகத்திலுள்ள புத்தகங்களை எடுத்துக் கொடுத்து உதவி செய்தார். குழந்தைகளுக்கு நீந்தக் கற்றுக்கொடுத்தார். அருகிலுள்ள பூங்காக்களிலும் இயற்கை சூழலிலும் அறிவியல் விளையாட்டுக்களைப் பயிலச் செய்தார்.

இப்போது ஓய்வு பெற்று விட்டாலும், அருகிலுள்ள தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதும், ஆசிரியர்களுக்கு உதவுவதிலும் நேரத்தை செலவிடுகிறார். பல ஆண்டுகளாக, 100 குழந்தைகளுக்கு மேலாக உதவுவதில் அவரது பங்களிப்பு அங்குள்ள மக்களுக்கு உற்சாகமூட்டுவதாக உள்ளது.
————

 

image