St. Laurence of Brindisi St. Praxendes

ஜுலை 21

தூய லாரன்ஸ்

mary

பிரின்டிசியின் தூய லாரன்ஸ்

பிறப்பிடம் : பிரின்டிசி, இத்தாலி
திருவிழா : ஜூலை 21

ஒரு தலைவனாக
திருச்சபையின் மருத்துவர்

1559 ஆம் ஆண்டு ஜூலை 22 ம் நாள், ஒரு பணக்கார பெற்றோருக்கு, இத்தாலியிலுள்ள கடற்கரை துறைமுகமான நேபிள்ஸ் நகரிலிருந்து அதிக தொலைவிலில்லாத ஒரு ஊரில் ஜிலியோ சீசா ருஸோ என்பவர் பிறந்தார். அவர் சிறுவனாக இருந்தபோதே அவருடைய பெற்றோர் காலமாயினர். இதனால் குருவாக இருந்த அவரது மாமாவுடன் வசிக்கத் தொடங்கினார். 16 வயது ஆனபோது, எளிமையை குறிக்கோளாகக் கொண்ட பிரான்ஸிஸ்கன் சபையின் ஒரு கிளையான கப்புச்சின் சபையில் ஒரு இளங்குருவாகச் சேர்ந்து லாரன்ஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். பழங்கால மற்றும் இக்கால மொழிகளில் புலமைபெற்று விளங்கினார். விவிலியத்தை அதன் மூலமொழியில் கற்று, அதில் சரளமாகப் போதிக்க புலமை பெற்றார். லாரன்ஸ், எபிரேய மொழியில் புலமை பெற்று விளங்கியதை அறிந்த 8 ஆவது கிளெமென்ட் திருத்தந்தை, யூதர்களை மனந்திருப்பும் பணியில் இவரை ஈடுபடுத்தினார்.

கடின உழைப்பாளியான தனி மதகுரு :
ரடால்ஃப் 2 எனும் பேரரசர், லாரன்ஸின் தலைமைத்துவ திறமைகளை கண்டுணர்ந்து, துருக்கி படைகளின் பயமுறுத்துதலை முறியடிக்க, ஜெர்மனி நாட்டின் இளவரசர்களை ஒருங்கிணைக்குமாறு லாரன்ஸைக் கேட்டுக்கொண்டார். லாரன்ஸ் ஜெர்மானிய கூட்டுப் படைகளின் தலைவரானார். மேலும் சிலுவையை உயர்த்திப் பிடித்தவாறு, போரில் வீரர்களை முன்னின்று வழிநடத்தினார். அந்த படையயடுப்பில், அவரது பங்களிப்பு, ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றுத்தந்ததாகக் கருதப்படுகிறது. லாரன்ஸ் தனது 59 ஆவது வயதில், அமைதியான ஜெப வாழ்வுக்காக ஓய்வு பெற்றார். ஆனால் ஒரு வருடத்திற்குப் பின், அவர் ஸ்பெயின் நாட்டுக்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டார். மேலும் நேப்பிள்ஸ் நாட்டில், தொந்தரவு கொடுக்கத் தொடங்கும் ஸ்பானிய தூதரை மாற்றுவதற்கு பிலிப் அரசரை சம்மதிக்கச் செய்ய, ஸ்பெயின் நாட்டுக்கு அனுப்பப்பட்டார். லாரன்ஸ் அதில் வெற்றி கண்டார். ஆனால் திரும்பும் வழியில் உயிர் நீத்தார். அவர் ஒரு நாட்டின் தூதராகவும், தனிமத குருவாகவும் இருந்தாலும், லாரன்‘க்கு விவிலிய படிப்பிலும், போதிப்பதிலுமே அதிக நாட்டம் இருந்தது. அவர் ஒன்பது தொகுப்புகள் கொண்ட விவிலிய போதனைப் பொழிவும் விளக்கவுரைகளையும் வெளியிட்டார். அவரது விவிலிய பாண்டித்துவத்தை கருத்தில் கொண்டு 23 ஆம் யோவான் திருத்தந்தை, 1959 ஆம் ஆண்டு அவரை திருச்சபையின் தத்துவஇயல் ஞானியாக அறிவித்தார்.

செபம் :
அன்புத்தந்தையே இறைவா, நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ, நான் அதனை முழுமையாகச் செய்ய முயற்சிப்பேன். உம்முடைய அருள்பொழிவை நான் ஒரு பெரும் சொத்தாக மதிக்கிறேன். மேலும் உமக்கெதிராகக் குற்றம் செய்யாமல் இருக்க நான் உம்மை வேண்டுகிறேன். அருள் நிறைந்தவரான தந்தையே நான் எனது வாழ்வின் மேன்மையில் இருக்கவும், உமக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கும் தொண்டு செய்யவும் எனக்குக் கற்பித்தருளும். உமது கொடைகளுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

இவர்களது அடிச்சுவட்டில் :
லாரன்ஸைப் போன்று திருநூல்களைக் கற்பதற்கு நிறைய அறிஞர்கள் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கின்றனர். 1880 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதும் அட்லாண்டாவைத் தலைமையிடமாகவும் கொண்ட விவிலிய இலக்கிய சபை, உலக முழுவதும் உள்ள 8000 விவிலிய மற்றும் மறையியல் அறிஞர்கள் ஒன்று கூடும் இடமாகத் திகழ்கிறது. தலைப்புகள் பலவகைப்பட்டதும் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கிறதும் ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட விவிலிய புத்தகங்களும், உரையாடல் பகுதிகளும். விவிலியம் சார்ந்த அகழ்வாராய்ச்சிப் பொருட்களும் செய்திகளும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மத்திய தரை உலகப்பகுதியிலுள்ள மக்களுக்கும் வள ஆதாரம் தருவது. புண்ணிய பூமியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து விவிலிய பகுதிகளுக்கு பொருள் காணுதல். கடவுளுடைய உலகை அதிகமாகப் புரிந்து கொள்ள உதவுபவர்களுக்காக ஜெபித்தலும்.

லி.ஜெ. ஜோசப்
——

 

image