St. John Lloyd St. Mary Magdalene

ஜுலை 22

தூய மேரி மெக்தலின் (மரிய மதலேனாள்)

mary

தூய மேரி மெக்தலின் (மரிய மதலேனாள்)

பிறப்பிடம் : கலிலேயாவிலுள்ள மெக்தலா

குணப்படுத்துதலும், உதவுதலும்
போதிப்பவருக்கும் இரங்குபவர்க்கும் பாதுகாவலர்

நற்செய்தி நூலில் குறிப்பிட்டபடி, மேரி மெக்தலின் இயேசுவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய சீடராவார். இவர்களுடைய நட்பு மேரியிடமிருந்த பசாசை இயேசு விரட்டியபோது தொடங்கியது. அவரால் ஈர்க்கப்பட்டு, மேரி இயேசுவோடும், 12 திருத்தூதரோடும் அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டே கிராமங்களுக்கெல்லாம் பயணம் செய்தார். இயேசுவோடு இறுதிவரை உடனிருந்தவர்களில் மேரியும் ஒருவராவர். அவர் துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையப்பட்டபோது அவர் அழுது கொண்டே இருந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் கல்லறைக்குத் திரும்ப சென்றபோது கல்லறை காலியாக இருப்பதைக் கண்டார். இயேசு வாக்களித்ததுபோல், உயிர்த்தெழுந்துவிட்டார் என்று வானதூதர் அறிவிக்கும் வரைக்கும், மேரி மிகுந்த வேதனைக்குள்ளாகியிருந்தார். சில நிமிடங்களுக்குப் பின்னர், இயேசு, மேரிக்கு ஆறுதல் கூறினார். மேலும் இயேசுவின் மற்ற சீடர்களுக்கு அவரது உயிர்ப்பு பற்றி அறிவிக்குமாறு மேரியை அனுப்பினார்.

மாறுபட்ட பாரம்பரியம் :
கிழக்கத்திய பாரம்பரியப்பட, மேரி மெக்தலின் பின்னர் திருத்தூதர் யோவானோடும், மரியாவோடும் எபேசுக்குச் சென்றார். மேரி மெக்தலின் அங்கு இறந்ததாகக் கருதப்படுகிறார். மேலும் அவரது உடல் கான்ஸ்தான்டி நோபிளில் வைத்து நூற்றாண்டுகளாக வணங்கப்பட்டது. மேரி, யோவானை மணந்து கொண்டார் என்பது ஒரு பாரம்பரியம் ஆகும். மேரி மெக்தலின், மார்த்தா, லாசரஸ் மற்றும் சிலர், துடுப்பில்லாத ஒரு படகில் ஏறி பாலஸ்தீனம் சென்றடைந்ததாக மேற்கத்திய பாரம்பரியம் கூறுகிறது. அவர்கள், இறுதியாக தெற்கு பிரான்ஸ் நாட்டு கடற்கரைக்கு படகில் அடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் மேரியும் மற்றவர்களும் பிரான்ஸ் நாட்டில் நற்செய்தியைப் பறைசாற்றி அங்கு கிறிஸ்துவ மதம் பரவுவதற்கு மூலாதாரமான பணிகளை மேற்கொண்டனர்.

இவரது வாழ்க்கையின் மகத்தும் :
மேற்கத்திய நாடுகளில் எட்டாவது நூற்றாண்டிலிருந்து மேரி மெக்தலினின் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் இவரது பெயரில் இரண்டு கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டு இவர் பெயர் விளங்கச் செய்துள்ளனர்.

செபம் :
தந்தையே, உமது மகனின் மகிழ்ச்சியான உயிர்ப்புச் செய்தி மேரி மெக்தலினுக்கு வழங்கப்பட்டது. அவரது செபங்களினாலும் முன் மாதிரிகையினாலும், கிறிஸ்துவை எங்களது வாழும் கடவுளாக அறிக்கையிடவும், ஒருநாள் அவரை மகிமையோடு நேரில் காணவும் செய்தருளும். அவர் உம்மோடும் தூய ஆவியோடும் ஒன்றித்து ஒரே கடவுளாக என்றென்றும் வாழ்கிறார்.

இவர்களது அடிச்சுவட்டில் :
மேரி மெக்தலின் தனது இதயத்தில் கடவுளை வரவேற்றார். மேலும் இயேசுவின் வழியாக அவரது வாழ்க்கையைத் தொடுவதற்கு அனுமதித்தார். அவர் இயேசுவை நேசித்தார். மேலும் அவரை முழுமையாக பின்பற்றினார். அவருக்கு பணி செய்வதின் மூலமும் இயேசுவின் உயிர்ப்பு நற்செய்தியை அறிவிப்பதின் மூலமும் அவர் தனது அன்பை வெளிப்படுத்தினார். இயேசு கற்றுக்கொடுத்தபடி வாழ்ந்து நாமும் கடவுள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த முடியும். ஒருவர் மற்றவரை நேசிப்பதின் மூலமும், எவ்வாறு பிறர் நம்மை நடத்த வேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ அவ்வாறே நாமும் பிறரை நடத்தி இயேசுவின் இந்தப் பொன்மொழியை செயல்படுத்துவோம்.

பிறரை மதிப்போம். வீண் பேச்சி பேசாமலும், பிறரை வஞ்சிக்காமலும் பொய் பேசாமலும் இருப்போம்.
உன்னை நேசிக்கச் செய்கிறவர்களை மன்னித்து விடு, மனவெறுப்புக் காட்டாதே.
நேர்மறையான எண்ணம் கொண்டிரு. பொறுமையாயிரு. பிறரைப் புரிந்துகொள், குறிப்பாக கடினமான சூழலில் தாராளமாயிரு. உனது பணத்தை கொடுப்பதில் மட்டுமல்லாது உனது நேரத்தையும் சக்தியையும் உனது கவனிப்பையும் கொடுப்பதிலும்.
உனது பெற்றோருக்கும், வாழக்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் செவிகொடு. தூரத்தில் வாழும் குடும்பத்தார் நண்பர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டிரு.
உனக்கு அன்பு காட்டுவதற்கு பிறரை அனுமதி. உனக்குத் தேவைப்படும்போது உதவி கேட்கத் தயங்காதே.

லி.ஜெ. ஜோசப்
—————

image