BL. Mercedes Prat Y Prat St. Bridget Of Sweden

ஜுலை 23

புனித பிரிட்ஜிட்

mary

ஸ்வீடனின் புனித பிரிட்ஜிட்

பிறப்பிடம் : ஸ்வீடன்
திருவிழா நாள் : ஜூலை 23

கற்பித்தலும் பகிர்தலும்
ஸ்வீடனின் பாதுகாவலி

பிரிட்ஜட் என்பவர் 1303 ஆம் ஆண்டு பிறந்த உயர்குடி பெண் ஆவார். குழந்தையாயிருந்தபோதே, துன்புறும் இயேசு காட்சி தந்து அவர்மீது பக்தி கொண்டவர். 14 வயதில் ஸ்வீடனின் இளவரசரை மணந்து எட்டு குழந்தைகளைப் பெற்று அவர்களது மாளிகையில் வளர்த்து வந்தனர். இவர்களில் ஒருவர் பிற்காலத்தில் ஸ்வீடனின் புனித காத்தரின் ஆனார். அவர்களது திருமணம் மகிழ்ச்சியாக நிறைவேறியது. மேலும், பிரிட்ஜட் அவரது இரக்கத்திற்கும், எளியோருக்கு உதவும் தாராள குணத்திற்கும் பெயர் போனவர். அவரது முப்பது வயதில், ஒழுக்க சீர்கேட்டில் மூழ்கியிருந்த அரச குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் பெற்றார். மனம் போன போக்கில் வாழ்ந்த அரசனையும், ஓடுகாலியான அவரது மனைவியையும் அவர்களது வாழ்க்கையைப் புரட்டிப்போட வழி காட்டியானாள். ஆனால் அவர்கள் இவரைக் கண்டுகொள்ளவில்லை. அரச மாளிகையில் பிரிட்ஜட் ஒரு பயனற்று பேசுபவராகக் கருதப்பட்டார். என்றாலும் அவர் தனது நம்பிக்கைகளில் உறுதியாக இருந்தார். மேலும் பரிட்ஜெட்டும் அவரது கணவரும் கடவுளுக்கு தங்களை அர்ப்பணிக்க உறுதியாய் இருந்தனர்.

பின்னர் சோகம் தாக்கியது. ஒரு திருப்பயணம் மேற்கொண்டு திரும்பும்பொழுது அவரது கணவர் உடல்நலம் குன்றிப்போனார். அவர்கள் ஒரு சிஸ்டெர்சியன் குருமடத்திற்குள் நுழைந்தார்கள். பின்னர் அவர் சில காலத்திற்குப் பின் அங்கு காலமானார். பிரிட்ஜட் இளவரசியான தனது கடமைகளை விட்டுவிட்டு, அடுத்த சில ஆண்டுகளாக ஒரு சாதாரண கன்னியராக வாழ்ந்தார்.

குறிக்கோள் கொண்ட ஒரு பெண் :
பிரிட்ஜட் தான் என்ன செய்யவேண்டுமென்று இப்போது உணர்ந்தார். 1344 ஆம் ஆண்டு, அவள் புதிதாக நிறுவிய சபைக்கு ஒரு துறவி மடம் உரிமையாக வழங்க அரசரை சம்மதிக்கச் செய்தார். வாஸ்டீன் என்று அழைக்கப்பட்ட அந்த துறவி மடத்தில், பிரிட்ஜட்டைன் அம்மையார், எளிமையாக வாழ்ந்து எஞ்சியுள்ள வருமானத்தையயல்லாம் ஏழைகளுக்கு வழங்கினார். ஆனால் அவர் விரும்பிய புத்தகங்களையயல்லாம் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார். பிரிட்ஜட் துறவி மடம் ஸ்வீடனின் அறிவியல் களஞ்சியமாக உருவானது. மற்றவர்களின் கருத்துக்களைப் பற்றி கவலை கொள்ளாமல் அரசர் மற்றும் திருத்தந்தையர் பற்றியும் பயம் கொள்ளாமல் பிரிட்ஜட் தனது சிந்தனைப்படி செயலாற்ற தயங்கியதில்லை. 1373 ஆம் ஆண்டு தனது மரணம் வரும் வரையிலும், நற்செய்தியின் வழியில் மக்கள் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள ஊக்கமளித்தார்.

செபம் :
உண்மையுள்ள மனைவியும் தாயும் ஆனவளே, இயேசுவின் பாடுகள் பற்றித் தியானிக்க, நீர் அதிகமாக விரும்பினீர். அதுவே உம்மை வியக்கத்தகுந்த முறையில் பொறுமைசாலியாக ஆக்கியது. ஹங்கேரி நாட்டின் அரசியாகிய எலிசபெத்தைப் போன்று நீர் ஏழைகளுக்கும் உடல் நலம் குன்றியோருக்கும் தாராளமாக கருணை காட்டி பராமரித்தீர். நீர் ஒரு கன்னியர் மடத்தையும் ஏற்படுத்தி அந்த நூற்றாண்டில் ஒரு புகழ்வாய்ந்த புனிதையாக மாறினீர். கடவுள் எங்களுக்கு கொடுக்க இருக்கும் அருள்பணியில் நாங்கள் உண்மையுடன் பணியாற்ற எங்களுக்கு உதவியருளும்.

இவர்களது அடிச்சுவட்டில் :
ஒழுக்கம் என்பது பிரிட்ஜட் வாழ்ந்த காலத்தைப் போன்று இன்னும் கவலை தரக்கூடியதாக உள்ளது. நாம் இப்போது அதனை குடும்ப மதிப்பீடுகள் என்று அழைக்கிறோம். பணமும் பதவியும் வாழ்க்கையின் வெற்றிக்கு திறவுகோல் அல்ல மாறாக அன்பும், நட்பும், மரியாதையும்தான் வாழ்க்கைக்கு அவசியம் என்று நமது குழந்தைகளுக்கு கற்பிக்க நினைக்கிறோம். இங்கே, இந்த மதிப்பீடுகளை வளர்த்தெடுக்க சில யோசனைகள் : முழுநேர உழைப்பாளியாக இல்லாமல், தக்க நேரத்தில் வீட்டிற்கு வந்து, வாழ்க்கைத் துணையுடன் ஒரு நடைப்பயிற்சி செல்லலாம் அல்லது குழந்தைக்கு படுக்கைநேர கதைகள் படித்துக்காட்டலாம். ஒரு வருடம் உன்னுடைய அன்பளிப்புகளை கடையில் வாங்குவதற்குப் பதிலாக நீயே உருவாக்கிக் கொள். இது எளிதான சுடப்பட்ட பொருளாகவோ அல்லது பான்பூரியாகவோ இருக்கலாம். உனக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களையும் ஈடுபடுத்திக்கொள்.

பணத்தை மிச்சப்படுத்தி ஒரு குழந்தை உணவகத்திற்கு அல்லது உனக்கு விருப்பமான தர்ம காரியத்திற்குச் செலவிடலாம்.
குடும்பத்தில் இதுபற்றி விவாதித்து, உதவிகள் குறித்து, முடிவெடுத்து பட்டியலிட்டு குளிர்சாதனப் பெட்டியில் ஒட்டி வைக்கலாம். எப்படி செயல்படுத்துகிறோம் என்பதை ஒழுங்காக பரிசோதித்துக்கொள்.
நமது குறியீடுகளையும், நம்பிக்கைகளையும் செயல்படுத்துவது எப்போதும் அவ்வளவு எளிதல்ல. ஆனால் நீ அந்த நம்பிக்கைகளை செயல்படுத்த முனைந்தால், உனக்கு வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சி கிட்டும்.

லி.ஜெ. ஜோசப்

image