St. Anne Bl. Titus Brandsma

ஜுலை 26

தூய ஜோக்கிம், அன்னம்மாள் (அன்னாள்)

mary

தூய ஜோக்கிம், அன்னம்மாள் (அன்னாள்)

பிறப்பிடம் : கலிலேயா
திருவிழா நாள் : ஜூலை 26

ஆறுதல் நாடிச்செல்
குடும்பம் அமைப்பவர்களுக்கும், குழந்தை பெறும் பெண்களுக்கும் கனடா நாட்டு மக்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாவலி

கன்னிமரியாவின் தாயாரும் இயேசுவின் பாட்டியுமான இவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் அன்னாள் என்று அழைக்கப்பட்டார். சரித்திரபூர்வமான பதிவுகள் இல்லாததினால் பாரம்பரியம் வழியாகவே அவரது பெயரும் மற்ற விவரங்களும் நமக்கு தெரிய வருகின்றன. அன்னாள் கலிலேயாவில் வாழ்ந்ததாகவும், யூதா குலத்தில் பிறந்தவராகவும் சொல்லப்படுகிறது. ஜோக்கிம் என்ற தனது கணவரை மணந்தபோது, தனது முதல் குழந்தையை கடவுளின் பணிக்கு அர்ப்பணிப்பதாக அன்னாள் உறுதி  ஏற்றாள். ஆனால் பல ஆண்டுகளாக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க இயலவில்லை. இறுதியாக, குழந்தையில்லாமல் இருப்பதால் ஏமாற்றமும் இகழ்ச்சியும் அடைந்து ஜோக்கிம் ஜெப தவம் செய்தவற்காக தனது உதவியாளçர்கள் சிலருடன் பாலை நிலத்திற்குச் சென்றார். ஜோக்கிம் எங்கிருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் தெரியாமல் தனியாக இருந்த அன்னாள் கவலையோடும் எதிர்பார்ப்போடும் ஐந்து மாதங்கள் மெதுவாகக் கடந்தன.

ஒரு வானதூதரின் குறுக்கீடு :
கடைசியாக ஒரு வானதூதர் அன்னாளுக்குத் தோன்றி, கடவுள் அவரது வேண்டுதலை கேட்டருளினார் என்றும் உலகில் மற்றவரைப்போல அவரும் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பார் என்றும் கூறினார் ஜோக்கிம் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவருக்காக நகரின் தங்கத்தடுப்பு என்னும் நுழைவாயிலில் காத்திருக்க வேண்டும் என்றும் வானதூதர் அவருக்கு செய்தி சொன்னார். இந்த வானதூதரின் குறுக்கீட்டினாலும் அவரின் செய்தியினாலும் அன்னாள் மிகுந்த பயத்திற்குள்ளானாள். என்றாலும், அவள் கீழ்ப்படிந்து, தனது கணவரின் வருகைக்காக காத்திருக்க விரைந்து சென்றாள். ஜோக்கிம் வந்து சேர்ந்தபோது, வானதூதர் அவருக்கும் தோன்றி அறிவித்திருந்ததனால் அவர் ஏற்கனவே அந்த மகிழ்ச்சி தரும் செய்தியை வரப்போகும் குழந்தையை அறிந்திருந்தார்.

அந்த வானதூதர் சொல்லியதுபோல்,அன்னாள் ஒரு மகளைப் பெற்றெடுத்தார். மேலும் அவர்கள் அவளுக்கு மேரி என்று பெயரிட்டனர். அன்னாளும் ஜோக்கிமும் எருசலேமுக்குப் பயணித்து, குழந்தை மூன்று வயதாகியிருக்கும்போது, மேரியை கோவில் பணிகளுக்கு அர்ப்பணித்தனர். குழந்தை மேரி நடந்து சென்று தனியாகவே கோவில் படிகளில் பயமின்றி ஏறி உள்ளே சென்றாள். இந்த அர்ப்பணிப்பின் வழியாக, அன்னாள் ஜோக்கிமை மணந்தபோது கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றினாள்.

செபம் :
எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரே, ஒவ்வொரு உயிரினங்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் வீட்டு விலங்குகளுக்கும் பாம்புகளுக்கும் பறவைகளுக்கும் மீன் இனங்களுக்கும் வழிமரபை உண்டாக்குபவரே, அவை அனைத்தும் தங்களது ஈற்றுக்களின் பேரில் அகமகிழ்ந்து கொண்டாடுகின்றன. உமது அருளுடைமை என்னும் அன்பளிப்பிலிருந்து நீர் என்னை விலக்கினாலும், ஆண்டவரே, நீர் எனது உள்ளத்தை அறிந்திருக்கிறீர். எனது திருமண வாழ்வின் தொடக்கத்திலிருந்து, ஆண்டவரே நீர் எனக்கு ஒரு மகனோ மகளோ அளித்தீர் என்றால் அவர்களை உமது ஆலயத்தின் திருச்சந்நிதியில் காணிக்கையாக ஒப்புக்கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

இவர்களது அடிச்சுவட்டில் :
மேரிக்கு ஒரு நல்ல தாயாக அன்னாள் திகழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. விவிலிய கலைப்பாடங்களை மேரி வாசிக்க அன்னாள் கற்றுக்கொடுத்தார். குழந்தைகளோடு சேர்ந்து படிப்பது அவர்களுக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாகும். அவர்கள் புத்தகங்களை பாராட்டக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல ஆனால் அதிமுக்கியமாக, ஒரு இளைஞரின் சிதறாத நெருக்கமான கவனத்திலிருந்தும் அவர்கள் பயனடைகிறார்கள். உங்களுக்கு உங்கள் குழந்தைகள் இல்லையயன்றால், உங்கள் அருகாமையிலுள்ளவர் அல்லது உறவினர் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க முன் வாருங்கள். பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளும் பொது நூலகங்களும், அருகிலுள்ள சமூகத்திலிருந்து ஒரு பழக்கமான ஆசிரியரை அமர்த்திக் கொள்கிறார்கள். மேலும் கவனத்தில் கொள்க :

ஒரு வழக்கமான படிக்கும் நேரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மனதை இலகுவாக்கும் ஒரு செயல்பாடு - வாசிப்பு ஒரு குழந்தைக்குத் தூங்கச் செல்லுமுன், மனதை ஆறுதல் படுத்தும்.
உற்சாம் தரும் செயல் ஒன்றை தெரிவு செய்யுங்கள். குழந்தைகள் புத்தகத்திலிருந்து படிக்க வேண்டுமென்று அவசியமில்லை. உற்சாகமூட்டும் படங்கள் நிறைந்த பத்திரிக்கை ஒன்று, ஒரு நல்ல விவாதப் பொருளாக அமையலாம். குழந்தைகள் இயற்கையாக, புதிதாகக் கற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள். மேலும் அந்தப் படங்களைப் பற்றி விளக்கிச் சொல்லக் கேட்பார்கள்.
தகுந்த இடைவெளியுடன், அவர்கள் படிக்கும் பகுதியில், அடிக்கடி கேள்விகள் கேட்டு உற்சாகப்படுத்துங்கள்.

லி.ஜெ. ஜோசப்

 

image