St. Peter Chrysologus St. Rufinus Of Assisi

ஜுலை 30

தூய பீட்டர் கிரைசோலோகஸ்

mary

தூய பீட்டர் கிரைசோலோகஸ்

பிறந்த இடம் : இமோலா, இத்தாலி
திருவிழா நாள் : ஜூலை 30

கற்பித்தலும், பகிர்தலும்
ராவென்னாவின் பேராயர்

இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் பீட்டர் பிறந்தார். அவர் திருமுழுக்கு பெற்று படித்து இமோலா ஆயர் கொர்னிலியஸ் வழியாக உதவிக்குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, 435 ஆம் ஆண்டு தமது 50 ஆவயது வயதில் ராவன்னாவின் ஆயராக ஆனார். ஒரு சொல்திறமிக்க பேச்சாளராகவும், திறமைவாய்ந்த எழுத்தாளராகவும் விளங்கியதோடு, தங்க வார்த்தையாளர் என்னும் பொருள்படும் கிறைஸோலொகஸ் என்ற பட்டப்பெயரும் பெற்றார். வலன்டினியன் 2 பேரரசரின் தாயார், கல்லா பிளேசிதா பேராசிரியின் முன்பாக அவரது முதல் மறையுரையை ஆற்றினார். இந்த இருவரும் பீட்டரின் பலமான ஆதரவாளராக இருந்து, ஈவென்னாவில் பல அழகான ஆலயங்கள் கட்ட நிதியுதவி செய்தனர். பிறச்சமயத் தாங்கங்களை வெற்றி கொள்வதற்கு பீட்டர் தனது மேலான சொற்பொழிவாற்றலைப் பயன்படுத்திக்கொண்டார். உண்மையிலேயே சில வேளைகளில் பேசும் ஆற்றலை இழந்து பரவச நிலையில் லயித்து விடுவார்.

மொழியின் திறன் :
இயேசுவின் இயல்பு தெய்வீகமானது மட்டுமே என்னும் மனித இயல்பு இல்லவே இல்லையயன்ற ஒருதலை கோட்பாட்டை கண்டித்து அதை எதிர்த்த, பெரிய கிரகோரி, கிக்ஸ்தஸ் 3 பெரிய லியோ போன்ற திருத்தந்தையரின் கொள்கையில் பீட்டர் தன்னை இணைத்துக்கொண்டார். ஒருதலைக் கோட்பாட்டைப் பின்பற்றிய தலைமை குரு இட்டிகஸ் என்பவருடன் வாதிட்டு, பழைய சமயக் கோட்பாட்டிற்குத் திரும்பச் செய்தார். எனக்கு கடுங்கோபம் உண்டாக்கியதால் நீ அவமானத்திற்கு உள்ளானாய் என்று அவர் எழுதுகிற பயப்படாதே, இந்த சிலுவை, சாவுக்குரிய ஒரு காயத்தை என்மீது அல்ல மாறாக மரணத்தின் மீது ஏற்படுத்தியுள்ளது. இதே கடிதத்திற்கு மேலும், பீட்டரின் மறையுரைகள் நிலைத்து நிற்கின்றன. அவைகள் குறிப்பானவை ஏனென்றால் அவை, அந்தக் காலத்தில் நிலவிய, யூதர்களுக்கும் பிற இனத்தாருக்கும் எதிரான சுடுசொற்கள் இல்லாது, இயேசுவின் அருளின் கொள்கைகளை வலியுறுத்துகின்றன. அவரது எழுத்துக்களால், திருத்தந்தை 13 ஆம் பெனதிக்து, 1729 ஆம் ஆண்டு பீட்டருக்கு டாக்டர் பட்டம் வழங்கி உயர்த்தினார்.

செபம் :
விண்ணகத் தந்தையே, கடவுளின் அதிகாரம், எங்களுக்கு கொடுப்பவற்றைப் பெற்றுக்கொள்ள எங்களுக்குப் பலம் தாரும். தூய்மை என்னும் ஆடையினால் எங்களை உடுத்தியருளும். கற்பு என்னும் கச்சையினால் சுற்றிக் கட்டியருளும். கிறிஸ்துவே எங்களது தலைக்கவசமாக இருக்கட்டும். எங்களது நெற்றியிலுள்ள சிலுவை, தவறாத பாதுகாப்பாய் இருக்கட்டும். நீங்கள் எங்களுக்குத்தக்க உம்மைப்பற்றிய அறிவு எங்களது மார்புக்கவசமாய் இருக்கட்டும். செபம் என்னும் தூபத்தின் புகை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க அருள்புரியும். எங்களது இதயம் ஒரு பலி பீடம். அதனால் முழு பலத்தோடு எங்களது உடலை தகனம் செய்ய சமர்ப்பிக்கிறோம். - தூய பீட்டர் கிரைசோலாகஸின் மறையுரை.

இவர்களது அடிச்சுவட்டில் :
புறச்சமயம் மற்றும் திருச்சபைக்கு மாறான கருத்து கொண்டவர்களை, பீட்டர் கிரைசோலோகஸ் - ன் தங்கச் சொற்களால் ஆன மறையுரைகள் அவரது பேச்சைக்கேட்டு மனமாற்றம் பெறச்செய்தன. இன்று சகோதரர் ஜேம்ஸ் இ கூடி எனும் அமெரிக்க கறுப்பின கத்தோலிக்க நற்செய்தி அறிவிப்பாளர் இந்த அவரது பாதையையே பின்பற்றுகிறார். சகோ. கூடி ஒரு ஃபிரியார் மைனர் பிரான்சிஸ்கன் சபை குருவானவர். 1974 ல் நிறுவப்பட்ட நியூயார்க் நகரிலுள்ள இமாகுலேட் கன்சப்சன் சபையில், அமெரிக்க கறுப்பின கத்தோலிக்க புதுப்பித்தல் சபைப்பிரிவு ஆகும். சாலிட் கிரவுண்ட் மினிஸ்ட்ரி என்ற சபையினைத் தொடங்கியவராவார். அந்த சபையின் பணிகளாவன :
ஆப்பிரிக்கா அமெரிக்கா குடும்பங்கள், இழந்த மாண்பை மீட்பதற்கு உதவுதல்.
வெள்ளை இன மக்கள் கருப்பின மக்களின் பலத்தை தெரிந்து கொள்ள உதவுதல்.
தாழ்நிலையிலுள்ள ஆப்ரிகன் அமெரிக்கன் கத்தோலிக்கர்களுக்கு பிரான்சிஸ்கன் சமய குரு சார்ந்த இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. பல கத்தோலிக்க நிறுவனங்களில் ஆன்மீக நெறியாளராக பணியாற்றி வருவதற்கும் கூடுதலாக சகோ. கூடி சமூக நீதிக்காக நெடுநாள் பாடுபடும் செயல்வீரர், மேலும் அவர் இயேசு காட்டும் இடம் எதுவானாலும் அங்கு சென்று உழைக்க உறுதி ஏற்கும் உழைப்பாளி.

லி.ஜெ. ஜோசப்

image