St. Ignatius Loyola

ஜுலை 31

புனித இக்னே´யஸ் லோயோலா (இஞ்ஞாசியார்)

mary

புனித இக்னே´யஸ் லோயோலா (இஞ்ஞாசியார்)

பிறந்த இடம் : ஸ்பெயின்
திருவிழா நாள் : ஜூலை 31

கற்பித்தலும், பகிர்தலும்
தியானங்கள், படைவீரர், ஆன்மீக பயிற்சிகளின் பாதுகாவலர்

1491 ஆம் ஆண்டு இனிகோ டி லோயோலா இக்னே´யஸ் பிறந்தார். வட ஸ்பெயினில் வாழ்ந்த ஒரு பெருமகன் குடும்பத்தைச் சேர்ந்தவர். 16 வயதில் இளவீரப் பெருந்தகையாக இருந்த இவர், அரச வாழ்க்கையின் இன்பங்களைப் பெறுவதை விரைவிலேயே கற்றுக்கொண்டார். அவர் சூழ்நிலை காரணமாக காலாட்படையில் சேர்ந்தார். 30 வயது ஆனபோது போரில் பலமாகக் காயமுற்றார். அவர் குணமடைந்தார். ஆனால் ஒரு கால் ஊனமுற்றும், முட்டுக்குக் கீழ் எலும்புக் கிண்ணம் துருத்திக் கொண்டும் இருந்தது. தனது வீண் தற்பெருமையினால் அந்த எலும்புக் கிண்ணத்தை மயக்க மருந்து இல்லாமல் அறுத்து எடுத்துவிடுமாறும் குட்டையான காலை நிமிர்த்து விடுமாறும் வற்புறுத்தினார். ஆனால் அது கூடாமல் போயிற்று.
அவர் நீண்ட காலம் சிகிச்சை பெற்றபோது, இயேசுவைப் பற்றியும் புனிதர்கள் பற்றியும் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார். இந்தக் காலக்கட்டத்தில் கிறிஸ்துவைப் பற்றியும், புனிதர்கள் பற்றியும் அவரது சிந்தனைகள் திரும்பியபோது, அவர் ஒருவிதமான மன அமைதியையும் சாந்தத்தையும் உணர்ந்தார். அவரது மனமாற்றம் தொடங்கியது.

தெய்வத்திறனுடைய எதிர்படுதல் :
பார்சிலோனாவுக்கு பயணம் செய்தபோது, இக்னே´யஸ், கடவுளைக் காட்சியாகக் கண்டார். இது படைப்புக்களின் மீது ஒரு புதிய பார்வையை அவருக்கு கொடுத்தது. மேலும் கடவுளை எல்லாப் பொருட்களிலும் அறியலாம் என்ற நம்பிக்கைக்கும் வழிவகுத்தது. இந்த புதிய உளக்கிடக்கையோடு, அவர் ஒரு குருவாக இணைந்தார். உரோம் நகருக்குப் பயணம் செய்தபோது அவர் மேலும் ஒரு காட்சி கண்டார். அதில், அவர் ஒருநாள் கிறிஸ்துவோடு இணைந்திருப்பார் என்று கடவுள் அவருக்கு தெரியப்படுத்தினார்.

புதிய சபையைத் தொடங்குதல் :
உரோம் வந்து சேர்ந்தபிறகு அவரும், அவரது தோழர்களும் இயேசு சபையை உருவாக்கினர். இந்த சபை திருத்தந்தையின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தது. இயேசு சபையினர் என்று அழைக்கப்பட்ட அதன் உறுப்பினர் அவர்களின் உதவி தேவைப்படும் இடங்களுக்கெல்லாம் பயணம் மேற்கொண்டனர். அதன் முதல் தலைமைக் குருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காலப்போக்கில் புதிய இயேசு சபைக் குருத்துவப் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டன. பொது நிலையினருக்கும் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்த சபையின் மூலமாக பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கட்டுரைகளும் படிப்பினைகளும் கற்பித்தலும், எப்பொழுதும் கடவுளின் சந்நிதியில் உடனிருக்கவும், இக்னேசியஸ் தனது மீதமுள்ள நாட்களைச் செலவிட்டார்.

செபம் :
நல்ல தந்தையே, நாங்கள் தாராளமாக இருக்க எங்களுக்குக் கற்பியும். உமக்கு உகந்ததுபோல் நாங்கள் உமக்கு சேவை புரிய கற்பித்தருளும். விலையைப் பாராமல் நாங்கள் பிறருக்குக் கொடுக்கவும், போராடவும், காயங்களை முன்னறியாமல் இருக்கவும், உழைக்கவும், ஓய்வைத் தேடாமல் இருக்கவும், பலனை எதிர்பார்க்காமல் வருந்தி உழைக்கவும், உமது எண்ணம் நிறைவேற நாங்கள் தெரிந்து நடக்கவும் செய்தருளும். ஆமென்.

இவர்களது அடிச்சுவட்டில் :
உலகம் முழுவதும் பரவியிருக்கும் 25,000 உறுப்பினர்களைக் கொண்ட இயேசு சபையில் புனித இக்னேசியஸின் ஆன்மீக செயல்பாடு இன்றளவும் பொங்கி வளர்கிறது. கற்பித்தலில் அளவற்ற ஆர்வமும், கடவுளுக்கு சேவை புரிவதும் இலக்காகக் கொண்டு :
46 உயர் பள்ளிகளும், 28 அமெரிக்கக் கல்லூரிகளும், இயேசு சபையினரால் நிர்வகிக்கப் படுகின்றன.
அமெரிக்கா முழுவதிலும் மேலும் 112 கல்லூரிகளிலும் இயேசு சபையினர் பணியாற்றுகின்றனர்.
பெரும்பாலான அவர்களது சமூகத் திருப்பணிகள் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோரின் தேவைகளை நிறைவேற்ற குறியாயிருக்கின்றன. ஆனால் துறவறத்தாருக்கு மட்டும் தொண்டு நிறுவனமல்ல. நீயும் உனது திறமைகளைப் பகிர்ந்து கொண்டு, ஒரு நம்பிக்கை நிறை வாழ்வை வாழ முடியும், தொடர்பு கொள்க :
தொண்டு வாய்ப்புகளுக்காக, இயேசு சபை தன்னார்வ சிறுபடையினம்.
உனது பங்குத்தளம், மறைமாவட்டம், தல தொண்டார்வ நிறுவனங்கள் சூப் அடுப்பங்கரையில் தன்னார்வ உதவியாளர், உள் நகரப்பள்ளி அல்லது சுகமளிக்கும் சிறுமருந்தகம்.
புனித இக்னேசியஸ் நம்பியது போல கடவுளை எல்லா பொருட்களிலும் காணலாம், உங்களில் ஒவ்வொருவரையும் சேர்த்து, உங்களது நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ள, உங்களது சிறிது நேரத்தை செலவிடலாமே.
————

 

image