St. Alphonsus De Liguori St. Ethelwold St. Peter Julian Eymard

ஆகஸ்ட் 1

புனித அல்போன்ஸஸ் தி லிகோரி

mary

புனித அல்போன்ஸஸ் தி லிகோரி

பிறந்த இடம் : இத்தாலி
திருவிழா நாள் : ஆகஸ்ட் 1

குணமாக்குதலும், உதவுதலும்
இறையியல் பாதுகாவலர் மற்றும் ஒப்புறவு வழங்குபவரும், இதர பணிகள் புரிபவரும்

அல்போன்ஸஸ் ஒரு கடற்பதை அதிகாரியின் மகனாக 1696 இல் பிறந்தார். அவரது தாயார் ஒரு கடமை பேணும் பெண் ஆவார். ஆனால் அவரது தந்தை கண்டிப்பான மனிதர். தனது மகனைப்பற்றி ஓர் உயர்வான பதவியை அடைவார் என்று எதிர்பார்த்தார். சரியான நேரத்தில் அல்போன்ஸஸ் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞராக ஆனார். பின்பு ஒருநாள், ஒரு முக்கியமான வழக்கில் அவர் தோல்வி கண்டார். கடவுளிடமிருந்து வந்த ஒரு தாழ்ச்சியான பாடம் என்று அதை உணர்ந்து தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, அல்போன்ஸஸ் ஒரு குருவாக ஆனார். தினமும் கிறிஸ்துவ கல்வி போதிக்க, அல்போன்ஸஸ் மக்கள் கூட்டத்தை திரட்டினார். ஆனால் இந்த கடினமாக முயற்சியில் அவர் நோய்வாய்ப்பட்டார். பின்னர், ஸ்கேலா என்னுமிடத்தில் நடைபெற்ற தியானத்தில் அல்போன்ஸஸ் தனது அழைப்பை உணர்ந்தார். அங்குள்ள ஏழை ஆட்டு இடையர்கள் ஆன்மீக வாழ்வை இழந்து திரிவதைக் கண்டார். நேப்பிள்‘க்கு திரும்பி வந்து கிராமப்புற மக்களை ஈடேற்று அதிதூய இரட்சகர் சபையை நிறுவினார்.

ஒரு ஆன்மீகக் குரல் :
தொடர்ந்து மும்முரமாக செபிப்பதிலும், போதிப்பதிலும், எழுதுவதிலும் அல்போன்ஸஸ் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தன்னைத்தானே உள்ளாய்வு செய்யும் மனிதராக ஆன்மீகத்திலும், மறையியலிலும் அவர் நிறைய புத்தகங்கள் எழுதினார். அவரது உள் அனுபவமும், அவரது மக்களின் தேவைகளும் அவருடைய ஒழுக்கத் தத்துவயியல் என்ற பெரிய நூலை எழுதத் தூண்டுதலாக அமைந்தன. இன்று அவரது நூல்கள் 72 மொழிகளில் மொழி பெயர்ப்பப்பட்டுள்ளன. ஆன்மீகத்தில் பின்தங்கிய கோத்தின் புனித அகதா மறைமாவட்டத்தின் ஆயராக, திருத்தந்தை அவர்கள் அல்போன்ஸஸை 1762 இல் நியமித்தார். பொதுநிலையினரையும் மக்களையும் மனம்திருப்பி, சமயப் பரப்புக் குழுக்களை ஏற்படுத்தி ஏழைமக்களுக்கு நல உதவித் திட்டங்களை செயல்படுத்தினார். தனது 79 ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டதின் காரணமாக, பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். அவர் தனது தலையைக்கூட தூக்க முடியாத அளவுக்கு அவரது நரம்புத் தளர்ச்சி நோய் கடுமையாக இருந்தது. அவர் படிப்படியாக கண்பார்வையும், கேட்கும் திறனையும் இழந்தார். உணர்வுப்பூர்வமான அல்போன்ஸஸ் தனது முழுவாழ்வையும் கடவுளுக்காக அர்ப்பணித்து, தனது 91 ஆம் வயதில் காலமானார். 1871 ஆம் ஆண்டு அவர், திருச்சபையின் பேரறிஞர் என்று பட்டம் சூட்டப்பட்டார்.

செபம் :
என் கடவுளாகிய இயேசு கிறிஸ்துவே, நான் உம்மை போற்றுகிறேன். இந்த நாளில் நீர் எமக்குத் தந்த அனைத்து அருளிரக்கத்திற்காகவும் நன்றி கூறுகிறேன். இந்த இரவின் ஒவ்வொரு மணித்துளிகளையும், எனது தூக்கத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். இந்த முடிவோடும், அன்னை மரியாளின் ஒளியிலும் நான் உமது தூய இதயத்தின் அருகில் என்னை சமர்ப்பிக்கிறேன். உமது தூய வானதூதர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு என்னை அமைதியில் வைத்திருப்பார்களாக, மேலும் உமது ஆசீர் என்மேல் தங்குவதாக. ஆமென்.

இவர்களது அடிச்சுவட்டில் :
ஏழைகளுக்கும் கைவிடப்பட்டோருக்கும் கடவுளுடைய வார்த்தையைப் பரப்புவதற்காக அல்போன்ஸஸ் மீட்பர் சபையை ஏற்படுத்தினார். இன்று உலகம் முழுவதும் ஏறத்தாள 7,000 மீட்பர் சபைகள் உள்ளன. தேயிலைத் தோட்டங்களில் வேலைக்காகக் குடியேறியவர்கள் நடுவில் எட்டு கோடைகாலங்களில் வடகலிபோர்னியாவில் பின்புற சாலைகளில் குடியேறிய வேலையாட்களை நல்வழிப்படுத்த ஜெரோம் சவார்ரியாவும் ஜோஸ் ­வே‘ம் பயணம் செய்தார்கள். அந்த இரண்டு குருக்களும் சேர்ந்து, விருப்பமுள்ள மக்களுக்கு திருமுழுக்கு, ஒப்புறவு, நற்கருணை அருட்சாதனங்கள் பெறுவதற்கு மறைக்கல்வி வழங்கினார்கள். குடியேறிய மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றினார்கள். அங்குள்ள தல பங்குகளில் அவர்களுக்கு உடைகள் வழங்க ஏற்பாடு செய்தனர்.

விவிலிய கல்வி கற்க, அந்த சிறுவர்களை அருகிலுள்ள கோவில் மண்டபங்களுக்கு அழைத்துச் சென்றனர். சில வேளைகளில் அந்த குடியேறிய மக்களின் வறுமை, விநோதமான பிரச்சனைகளை உருவாக்கின. உதாரணமாக, ஒரு தந்தை தனது நான்கு குழந்தைகளுக்கும் திருமுழுக்கு கொடுக்க மறுத்தார். ஏனெனில், குழந்தைகளுக்கு திருமுழுக்கு உடைகள் வாங்குவதற்கு வசதியில்லை. தாராளமாக உதவும் நன்கொடையாளர்கள் மூலமாக அந்தக் குழந்தைகளுக்கு உடைகள் வழங்க குருக்கள் ஏற்பாடு செய்தனர். அந்த தந்தைக்கும் மனவருத்தமில்லாமல் இதைச் செய்தனர். இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், எப்படி உதவுவது என்று அறியவும் ழழழ.redeதுஸ்ரீமி.லிrஆ என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.

லி.ஜெ. ஜோசப்

 

image