St. Eusebius Of Vercelli

ஆகஸ்ட் 2

வெர்சிலியின் புனித இசுபியஸ்

mary

வெர்சிலியின் புனித இசுபியஸ்

பிறந்த இடம் : சார்டினியா
திருவிழா நாள் : ஆகஸ்ட் 2

வீரம் மிகுந்தவர்
வெர்சிலியின் ஆயர்

மத்திய தரைக்கடலின் சார்டினியா தீவில் இசுபியஸ் பிறந்தார். கிறிஸ்தவராக இருந்த இவரது தந்தை, இவரது கிறிஸ்துவ நம்பிக்கைக்காக கொலை செய்யப்பட்ட இவரது மறைவுக்குப் பின் இசுபியஸின் தாயார் அவரது மகனையும் மகளையும் வாழ:வதற்காக உரோமைக்கு அழைத்துச் சென்றார். தொடக்ககால மறையியல் பயிற்சிக்குப் பின்னர், இசுபியஸ் ஆலய வழிபாட்டில் விவிலியம் உரக்கப்படிக்கும் வாசிப்பாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். 344 ஆம் ஆண்டளவில் வெர்சிலியின் ஆயராகவும், தனது மறைவாழ்வில் மறைக்குருக்களோடு வசிக்கும் மேலைநாட்டு ஆயராகவும் வாழ்ந்தார். 354 ஆம் ஆண்டில் திருச்சபைக்கு எதிரான ஏரியன் புரட்சியை முடிவுக்குக் கொண்டுவர எண்ணி, லிபேரியஸ் என்ற திருத்தந்தை ஒரு கவுன்சிலைக் கூட்ட பேரரசர் கான்ஸ்டான்சியன் அனுப்பி வைத்தார். இந்த ஏரியன் புரட்சி கிறிஸ்துவின் இறை இயல்பை மறுத்த ஒரு கொள்கையாகும். லிபேரிய‘ம் பெரும்பாலான மேலைநாட்டு ஆயர்களும் திருச்சபையின் பாரம்பரிய நம்பிக்கையை ஆதரித்தனர். ஆனால் பேரரசர் ஏரியன் புரட்சியை ஆதரித்தார்.

355 ஆம் ஆண்டில் கவுன்சில் கூடியது. இசுபியஸ் ஏரியன்‘க்கு எதிராக தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். ஆர்தடாக்ஸ் திருச்சபையின் நம்பிக்கைகளுக்கு முக்கிய தூதுவராக இருந்த அதானாசியஸின் கொள்கைகளை ஆதரித்தார். இசுபியஸின் இந்த நிலைப்பாட்டைப்பற்றி கான்ஸ்டான்டியூஸ் பேரரசர் கோபங்கொண்டு அந்த ஆயரை சிரியாவுக்கு நாடு கடத்தினார்.

தடுமாற்றமில்லாத நம்பிக்கை :
சிரியாவில், ஏரியர்களால் எசுபியஸ் துன்புறுத்தப்பட்டார். அவர்கள் அவரை தெருக்களின் வழியாக இழுத்துச் சென்று துன்புறுத்தினர். இவர்களுடைய வழியில் வரவேண்டுமென்று கட்டாயப்படுத்தினர். பதிலுக்கு இசுபியஸ் உண்ணாவிரதம் இருந்தார். நான்கு நாட்களுக்குப் பிறகு ஏரியன்ஸ் துன்புறுத்துவதை நிறுத்தினர். ஆனால் திரும்பவும் அவரது அறைக்குள் புகுந்து அவரது உடைமைகளை கொள்ளையடித்து அவரை திரும்பவும் வெளியில் இழுத்துச் சென்றார்கள். எசுபியஸின் நாடு கடத்தல் 361 ல் முடிவுற்றபோது, அவர் எத்தானியூனர் சந்திப்பதற்கு அலெக்ஸாண்டிரியா எகிப்துக்கு சென்றார். திருச்சபையில் அமைதி ஏற்படுத்த, ஒரு வழிகண்டு பிடிக்க, அவர்கள் நம்பினார்கள். எசுபியஸ் பல ஆண்டுகள் கிழக்கு நாடுகளில் செலவழித்தார். மேலும் இத்தாலியில் ஏரியனிஸத்தை எதிர்த்து தொடர்ந்து போராடினார். இறுதியாக அவர் வெர்சிலிக்கு திரும்பினார். அங்கே அவரை அன்புடன் மக்கள் வரவேற்றனர். அங்கு 371 ஆம் ஆண்டில் எசுபியஸ் இறந்தார்.

செபம் :
அன்புள்ள தந்தையே, உம்முடைய பெயரை மகிமைப்படுத்தவும், உமது மகனாகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை விசுவசிக்கவும் எங்களை அழைக்கின்றீர். பிறர் எனது நம்பிக்கையை தளர்த்த சவால் விடும்போது, மிகுந்த பலத்தை எனக்குத் தந்தருளும். சந்தேகங்கள் என்னுள் எழும்போது உமது தூய ஆவியின் அன்பான சுவாசத்தினால் அவற்றை விரட்டியருளும். நான் உமக்காக துன்புறும்போது, எனது ஆன்மாவைத் தொட்டு குணப்படுத்தும். எல்லா நலம் பெறும் என்று நான் நம்புகிறேன். ஆமென்.

இவர்களது அடிச்சுவட்டில் :
எசுபியஸ் அவரது நம்பிக்கைக்காக கொல்லப்படவில்லையயன்றாலும், அதற்காக அவர் துன்பம் அனுபவித்தார். அவரது நம்பிக்கையை நிலைநாட்ட, அவரது உடல் மற்றும் உள்ள பலத்தினால் உண்ணா நோன்பு உட்பட பல துன்பங்களைத் தாங்கிக் கொண்டார். இன்று பலதரப்பட்ட மக்கள், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக போராடும்போது அரசியல் மற்றும் ஆன்மீக நலனுக்காக போராட்டங்கள் அறிவிக்கிறார்கள். 1998 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட திபேத்தியர்கள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை ஆய்வு செய்ய ஐக்கிய நாடுகள் சபை ஒப்புக்கொள்ளாத நிலையில், திபேத்தியர்கள் உணவு உட்கொள்ள மறுத்து போராட்டம் நடத்தினர். 1951 ஆம் ஆண்டு திபேத்தை சீனா கைப்பற்றியபோது, அந்த நாட்டின் புத்தமதம் உண்மையிலேயே முற்றிலுமாக அழிவுற்றது.

ஆறு திபேத்திய புரட்சியாளர்கள் தங்களின் உண்ணா நோன்பை 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி, பண்ணாட்டு கவனத்தையும் ஈர்த்தனர். நாடு கடத்தப்பட்ட திபேத்திய தலைவர் தலாய்லாமா வேலை நிறுத்தம் செய்தவர்களை சந்தித்தார்.
ஐ.நா. சபை பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் வேலை நிறுத்தம் செய்தவர்களை தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். 48 நாட்களுக்குப் பின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுற்று, இந்தியக் காவலர்கள் போராட்டக்காரர்களை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு இரண்டாவது திபேத்தியக் குழு ஒரு புதிய போராட்டத்தை தொடங்கியது. தங்களது நம்பிக்கைக்காக துன்புறும் எண்ணற்ற மக்களுக்காக செபிப்போம்.

 

image