St. Clare Of Assisi St. Susanna

ஆகஸ்டு 11

அசிசி நகரின் புனித கிளாரா

mary

அசிசி நகரின் புனித கிளாரா
(Klara von Assisi OSCI) சபை நிறுவுனர்

பிறப்பு 1194 அசிசி, இத்தாலி
இறப்பு 11 ஆகஸ்டு 1253அசிசி, இத்தாலி
15 ஆகஸ்டு 1255
திருத்தந்தை 4 ஆம் அலெக்சாண்டர்

பாதுகாவல்: பார்வையற்றோர்
இவர் ஓர் பிரபு குலத்தில் பிறந்தவர். தனது இளம்வயதிலேயே அசிசியாரின் மறையுரையாலும், அவரின் ஏழ்மையான வாழ்வாலும் ஈர்க்கப்பட்டார். இதனால் அசிசியாரின் மறைபோதனைகளை தவறாமல் கேட்டு வந்தார். மிகவும் அழகான இளம்பெண் கிளாராவை திருமனம் செய்துகொடுக்க, இவரின் தந்தை ஏற்பாடு செய்தார். இதையறிந்த கிளாரா திருமண வாழ்வை விரும்பாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். பிரான்ஸ் அசிசியார் இருக்கும் இடத்தை தேடி ஓடினார். அசிசியாரை சந்தித்ததும் அவரின் அறிவுரைப்படி புனித ஆசீர்வாதப்பர் சபையில் தங்கினார். அப்போது தன்னுடைய அரண்மனை ஆடைகளை களைந்து துறவற ஆடையை உடுத்திக்கொண்டார். தான் ஓர் துறவி என்பதை மனதில் கொண்டு தன் முடியையும் வெட்டிக்கொண்டார்.

கிளாரா அசிசியாரை போலவே மிகவும் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். ஏழைமக்களுக்காக கடுமையாக உழைத்தார். பின்னர் பெண்களுக்கென்று ஓர் துறவற சபையை தொடங்கினார். அசிசியாரின் சபை ஒழுங்குகளையே தானும் கடைபிடித்து தன் சபையினரையும் வாழ வைத்தார். மிகவும் கடுமையான செப, தவ வாழ்க்கையை வாழ்ந்தார். இவரின் சபை ஐரோப்பிய நாடுகளில் பரப்பப்பட்டு, நாளடைவில் உலகம் முழுவதும் பரவியது. அன்றிருந்த கடுமையான ஒழுங்குகள், இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அசிசியாரின் சபை சகோதரர்களும், திருச்சபையிலிருந்து பல திருத்தந்தையர்களும், கர்தினால்கள், ஆயர்கள், குருக்களும் இவரை ஆன்மீக வழிகாட்டியாக தெரிந்துகொண்டு, இவரிடம் ஆலோசனை பெற்று வாழ்ந்தனர்.
இவர் தனது 59 ஆம் வயதில் தனது துறவற இல்லத்தில் இறைவார்த்தைகளை கேட்டபடியே உயிர்திறந்தார். இவர் இறந்த இரண்டே ஆண்டுகளில் புனிதர் பட்டம் பெற்றார்.

image