St. Calminius St. John Eudes St. Louis O fAnjou St. Sebald

ஆகஸ்டு 19

J}a

mary

புனித ஜான் ஜுட் (Johannes Eudes CJM)
சபை நிறுவுனர்

பிறப்பு
14 நவம்பர் 1601
அர்கெண்டான் Argentan, பிரான்ஸ்


இறப்பு
19 ஆகஸ்டு 1680
சேன் Caen, பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்: 1909 திருத்தந்தை பத்தாம் பயஸ்
புனிதர்பட்டம்: 31 மே 1925 திருத்தந்தை பதினோறாம் பயஸ்

இவர் ஓர் பக்தியுள்ள கிறிஸ்தவராக திகழ்ந்தார். மிக தாழ்ச்சியோடு ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்று வந்தார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை, தன் சிறுவயதிலிருந்தே, அன்போடு பராமரித்து, தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். சிறுவயதிலிருந்தே அன்னைமரியிடமும், இயேசுவிடமும் மன்றாடி தன் கற்பை காத்து வந்தார். இயேசு சபை குருக்களிடம் கல்வி பயின்று தேர்ந்தார். தான் குருவாகி பணிபுரிய வேண்டுமென்ற ஆர்வம் இவரிடம் கொழுந்துவிட்டு எரிந்ததால் "பிரெஞ்ச் ஆரட்டரி" என்றழைக்கப்பட்ட சபையில் சேர்ந்து, குருத்துவ பயிற்சி பெற்றார். தியானங்கள் கொடுப்பதிலும், செபிப்பதிலும், வல்லவரான இவர் பல மணி நேரம், எவ்வித இடையூறும் இல்லாமல் இறைவனோடு ஒன்றிணைந்து செபித்தார்.

இவர் 1626 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். பின்னர் மறைப்பணியாளராகி பங்குகளுக்கு சென்று பல ஆண்டுகள் பணியாற்றினார். மறைப்பணியாளர்களை உருவாக்கும் பணியை மேற்கொண்டு, சிறந்த மறைப்பணியாளர்களை உருவாக்கினார். வழிதவறி அலைந்த பெண்களை ஒன்றுதிரட்டி, நல்வழிகாட்டி, வாழ்வை மாற்றி அமைத்தார். அவர்களை கிறிஸ்துவ வாழ்வில் ஈடுபடுத்த ஒரு சபையை நிறுவினார். அச்சபைக்கு "இயேசுமரி"(Jesus Mary) என்று பெயர் சூட்டினார். இவர், இன்னும் சில குருக்களின் துணைகொண்டு, சில அநீத கொள்கைகளை எதிர்த்தனர். அவ்வேளையும் மீண்டும் "நல்லாயன் கன்னியர்"(Good Shepherd Sisters) என்ற சபையையும் நிறுவினார்.

இயேசுவின் திரு இதய பக்தியையும், மரியாவின் மாசற்ற இதய பக்தியையும் ஊக்குவித்து வளர்த்தார். புனித மர்கரீத் மரியாள் பிரான்சு நாட்டில் திரு இதய ஆண்டவரிடம் காட்சி பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே, தன் துறவற இல்ல ஆலயத்தில் திரு இதய ஆண்டவரின் விழாவை கொண்டாடினார். இவர் குருமடத்தில் இருந்த காலத்தில் அனைவருக்கும் முன்மாதிரியான வாழ்வை, தன் செபத்தின் வழி வாழ்ந்தார். மறைப்பணியின்போது, பல தியானங்கள் கொடுப்பதன் வழியாக பலருக்கு ஆறுதல்படுத்தும் பணியையும், குணமளிக்கும் பணியையும், நற்செய்திப் பணியையும் ஆற்றினார். இதன் வழியாக எண்ணிடலங்கா மக்களை இறைவழி செல்ல வழிகாட்டினார்.

செபம்:
என்றும் வாழ்பவரே எம் இறைவா! இதயத்தில் தாழ்ச்சியும், சாந்தமும் உள்ளவர் நீர். உமது பக்தியை எம்மில் வளர்த்தருளும். இயேசுவின் திரு இதயத்தையும், அன்னைமரியின் மாசற்ற இதயத்தையும் நாங்கள் பெற்று வாழ, உமது ஆவியினால் எம்மை நிரப்பி வழிநடத்தியருளும்.

 

image