St. Bernard Of Clairvaux

ஆகஸ்டு 20

J}a

mary

புனித பெர்னார்டு கிலார்வாக்ஸ் Bernhard von Clairvaux
துறவி, மறைவல்லுநர்

பிறப்பு
1090
திஜோன்(Dijion), பிரான்சு

இறப்பு
20, ஆகஸ்டு 1153
கிளார்வாக்ஸ்( Clairvaux), பிரான்சு
புனிதர்பட்டம்: 18 ஜனவரி 1174 திருத்தந்தை 3 ஆம் அலெக்சாண்டர்
மறைவல்லுநராக: 1830, திருத்தந்தை எட்டாம் பயஸ்

பாதுகாவல்: பேய்பிடித்தோர், குழந்தை நோயாளர்கள்

இவர் ஓர் அரசர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் சிறந்த நன்னெறியில் இவரையும், இவரின் உடன்பிறந்தவர்களையும் வளர்த்தெடுத்தார்கள். சிஸ்டர்சியன்(Sistercien) சபையில் சேர்ந்து கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டார். அரசர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து , சாதுவான வாழ்வை வாழ்ந்தவர். கடுமையான ஏழ்மையை தன் துறவற வாழ்வில் கடைபிடித்தார். தன் பெற்றோரின் வளர்ப்பை மறவாமல் செப வாழ்வில் ஈடுபட்டார். பின்னர் தன் உடன்பிறந்த சகோதரர்களும், தந்தையும் இவருடன் வாழ துறவற இல்லம் வந்து சேர்ந்தனர்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து தங்களுக்கென்றிருந்த அனைத்தையுமே விற்று, மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தனர். தனிமையான வாழ்வு, கடுமையான செபம், ஒறுத்தல் இவைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வாழ்ந்தனர். அப்போது பிரான்சு நாட்டில் பரவிய "ஆல்பிஜென்ஸ்" என்ற கொள்கைகளை தைரியமாக எதிர்த்தனர். பெர்நார்டு எச்சவாலையும் தைரியமாக சந்தித்தார். மிக சிறந்த கிறிஸ்துவ மக்களை உருவாக்கினார். சிலுவைப் போரில் பணிபுரிய நல்ல கிறித்தவர்களை உருவாக்கினார். இவர்கள் விசுவாசத்தில் வளர, தன்னை முழுதும் கரைத்தார். பிறகு கிளேர்வே(Clarwo) என்ற ஆதீனத்துக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தன்னுடன் வாழ்ந்த மற்ற துறவிகள் புண்ணியங்களை பேணி வளர்க்கும்படி, போதனைகளாலும், முன்மாதிரியாலும் சிறிய முறையில் வழி நடத்தினார். திருச்சபையில் பிரிவினைகள் அதிகம் தோன்றியதால் ஐரோப்பா நாடு முழுவதும் பயணம் செய்தார். திருச்சபையின் அமைதி நிலவ பெரிதும் உழைத்தார். அச்சமயத்தில் இறையியலைப்பற்றியும், கடுந்தவம் பற்றியும், ஏழ்மை வாழ்வைப்பற்றியும் பல நூல்களை எழுதினார். இவரின் பயணத்தின்பியோது இவரால் தொடங்கப்பட்ட ஆதீன மடத்தில், இறைவேண்டல் செய்யும் வேளையில் இறந்தார்.

செபம்:
மூவொரு இறைவா! புனித பெர்னார்டை, உமது இல்லத்தின் மீதுள்ள ஆர்வத்தால் பற்றி எரிய செய்தீர். உம் திருச்சபையில் அறிவொளியை வீசவும், அடுத்தவரின் மீது அன்பு கொள்ளவும் அவரை ஏற்படுத்தினீர். அவரைப்போல நாங்களும் உம்மால் தூண்டப்பட்டு, உமது தூய ஆவியின் வழிநடத்துதலில் வழிநடக்க இறைவா உம்மருளை தாரும்.

 

image